There are many poems in English about the Hare in the Moon or Hare on the Moon. The black spot on the moon has been interpreted as Deer, Old Woman, Hare etc around the world. No one can miss it on a full moon day. Most of the people see only hare in the moon. The oldest reference is coming from the Hinu Scripture Vishnu Sahasranama. It is part of Mahabharata which is at least 5000-year-old. It came from the mouth of Bhisma, the grandest and the most venerable character in the epic. Unless Krishna, both Kauravas and Pandavas saluted him.
Sasa in hare in Sanskrit. Vishu Sahasranama says Lord Vishnu is Sasabindhu (meaning Moon with hare). So moon is worshipped as Vishnu. Throughout 2000 year Sangam Tamil literature we see Moon Worship, particularly crescent moon worship. Crescent moon is decorating the hair of Lord Shiva and many other goddesses.
Earlier to Tirumanthiram of 8th century CE, we find it in Jataka stories of 3rd century BCE and Panchatantra Stories.
*****
Stamp from Japan.
You Can See Lord Only if You Hold Him in Your Heart
“I shall smite the hare in the moon”
Thus saying
A man unsheaths his jewelled sword;
Unto him are they
Who say,
“We the blue-throated Lord will see,
We know the Way;”
Such shall never see,
As in their hearts they hold Him not -Tirumanthiram
பிறையுள் கிடந்த முயலை எறிவான்
அறைமணி வாள்கொண் டவர்தமைப் போலக்
கறைமணி கண்டனக் காண்குற மாட்டார்
நிறையறி வோம்என்பர் நெஞ்சிலர் தாமே. 1
(புறங்கூறாமை திருமந்திரம்)
In Tamil Veda Tirukkural and other didactic Tamil works it is described as a black spot. But Tirumular, author of 3000 verse Tiru Manthiram and Naladiyar (naaladiyaar) of Jain saints mentioned the moon and hare.
The hare in the moon is worshipped. Because it is in the bright-beamed moon the very hare in heaven’s lofty fair expanse is worshipped. Though scant their worthiness, men obtain worth who share friendship with those firm as a hill.
ஒண்கதிர் வான்மதியும் சேர்தலால் ஓங்கிய
அங்கண் விசும்பின் முயலும் தொழுப்படூஉம்;
குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர்,
குன்றன்னார் கேண்மை கொளின்.
****
2300 year old Buddhist Jataka Story
The story is from the Jataka Tales which tell the story of the Buddha’s previous lives. In the Śaśa Jataka the hare gives up his body for a staving man. In Jataka Tale 316, a monkey, an otter, a jackal and a rabbit try to find food for beggars on the day of Upwasa. In this story, the rabbit sacrifices himself for God.
—subham—
Tags- Hare in the Moon, Tirumular, Tirumanthiram, Naladiyar , Learn Tirumathiram 6, Jataka Story
இலங்கைத் தமிழும் இந்தியத் தமிழும்! கொஞ்சம் கதைப்போமா ? (Post No.13,659)
அவ்வப்போது தமிழ் பத்திரிகைகளில் சில ‘ஜோக்’குகளை படிக்கையில் எனக்கு வெடிச் சிரிப்பு வருகிறது . இது நேற்று அல்லது போன வாரம் மட்டும் இல்லை. 1971-ம் ஆண்டில் தினமணி பத்திரிகையில் சப் எடிட்டராக சேர்ந்ததிலிருந்து சிரிக்கிறேன். லண்டனில் இலங்கை கதாசிரியர்கள் எழுதும் நூல் வெளியீட்டு விழாவில் தலைமை தாங்கும்போதும் சிரிப்பேன்; ஆனால் வெடிச் சிரிப்பு இல்லை; வெறும் புன்சிரிப்பு மட்டுமே..
துக்ளக் பத்திரிக்கையில் தமிழே இல்லை என்பான் ஒருவன்; இன்னொருவன் தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு ர, ற வேறுபாடே தெரியாது என்பான்; அவர்கள் கதைக்கும்போது எனக்கு மேலதிக சிரிப்பு வரும்; கூட்டத்தில் இதை எதிர்த்துக் கதைத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று கருதி நூலை அங்குரார்ப்பணம் செய்வதை அனுமதிப்பேன்; அடுத்த கூட்டத்தில் வளமைபோல சந்திப்போம்; அப்போது இந்தத் தலைப்பில் (இந்தியத் தமிழா ? இலங்கைத் தமிழா ? எது சிறந்தது ?) என்று ஒரு பட்டிமன்றம் ஏற்பாடு செய்யுங்கள். நான் என் பதிலைத் தருகிறேன் என்று சொல்லி தலைமை உரையை முடித்து விடுவேன்.
மதுரை தினமணி அலுவலகத்தில் 16 ஆண்டுக் காலம் சீனியர் சப் எடிட்டராக வேலை பார்த்து பிபிசி என்னை லண்டனுக்கு அழைத்து வந்த பின்னரும் என் ஆராய்ச்சி நிற்கவில்லை. மதுரையில் வாரத்துக்கு ஒரு முறை நைட் ட்யூட்டி வரும்; இரவு 3 மணி வரை உலகில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கு நான் ஒருவனே பொ றுப்பு ; கண்ணில் விளக்கெண்ணெயை விட்டுக்கொண்டு டெலிப்ரிண்டரை பார்த்துக்கொண்டே இருப்பேன். பிளாஷ் பிளாஷ் பிளாஷ் பிளாஷ் என்று டெலெய்ப்ரிண்டர் சப்தம் போட்டாலே ஏதோ முக்கியச் செய்தி வருகிறது என்று பொருள்; உடனே ஓடிச் சென்று அவசரம் அவசரமாக கடைசி செய்தி என்று எழுதிப்போடுவேன் ; விடுதலைப் புலிகள் சென்னை விமான நிலையத்தில் குண்டு வைத்து 26 பேரைக்கொலை செய்தபோது தினமணி முதல் பக்கத்தையே அடியோடு மாற்றும் தேவையும் ஏற்பட்டது.
இரவு எட்டு மணியிலிருந்து 3 மணி வரை முக்கியச் செய்தியே வராத போது , திராவிடக் கழக விடுதலை, தி.மு.கவின் முரசொலி பத்திரிக்கைகளை படித்து அதிலுள்ள ஜோக்குகளை அங்குள்ள சகாக்களுடன் பகிர்ந்து கொள்வேன் அப்போதுதான் வெடிச் சிரிப்பு; கருணாநிதியின் இத்யாதி இத்யாதி ஸம்ஸ்க்ருதச் சொற்கள் முதலியவற்றை பத்திரிகையில் UNDERLINE செய்வேன்; அடிக்கோடு போடுவேன் . விடுதலையிலும் முரசொலியிலும் எத்தனை ஸம்ஸ்க்ருதச் சொற்கள் என்று கணக்குப்போடுவேன் ; நாங்கள் எங்கள் தினமணியை அவர்களுக்கு இலவசமாக அனுப்புவோம். அவர்களும் EXCHANGE COPY எக்ஸ்சேஞ் காப்பி என்ற முறையில் எங்களுக்கு முரசொலி, விடுதலை பத்திரிக்கைகளை அனுப்புவார்கள்; ஆபீஸ் பையன் இவைகளை தினமும் கோப்பில் கோர்த்து வைப்பான்.
லண்டனுக்கு என்னை பிபிசி அழைத்துவந்து தமிழோசையில் வேலைக்கு அமர்த்தியபோது இலங்கைவாசிகள், மலேசியாவாசிகள் வருகையில் அவர்களிடமிருந்து வீர கேசரி, தமிழ் நேசன் பத்திரிக்கைகளை வாங்கி இதே அடிக்கோடு போடும் வேலையைச் செய்வேன்; லண்டனில் வாரம் தோறும் குமுதம், துக்ளக் முதலிய ன வாங்கி இதே மொழி ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன்.
லண்டன் தமிழ்ச் சங்கத்தில் பகுதி நேர வேலை பார்த்த காலத்தில் தினமணி பத்திரிக்கையை வரவழைத்து தினசரி வாசக சாலையைத் தொடங்கினேன். நான் விலை கொடுத்து வாங்கிய பத்திரிக்கைகளையும் படிப்பதற்கு வைப்பேன் இவை அனைத்தும் எனது 50 ஆண்டு மொழி ஆராய்ச்சிக்கு உதவின .
****
ஐயா உங்க சுய புராணம் போதும்/ சப்ஜெக்டுக்கு வாங்க சப்ஜெக்டுக்கு வாங்க ! தலைப்புக்கும் உங்கள் சுய புராணத்துக்கும் என்ன சம்பந்தம்? என்று சிலர் குரல் எழுப்புவது புரிகிறது. இதோ வந்துவிட்டேன்!
கடந்த சில மாதங்களில் “டமிள் பட்டிரிகைகழில்” இரண்டு துணுக்குகளைப் படித்ததால் இந்தக் கட்டுரை! கிருபானந்த வாரியார், கி.வா.ஜ போன்றோர் இலங்கைத் தமிழ் பற்றி புகழ்ந்த செய்திகள் அவை; ஒரு கல்யாண வீட்டுக்குப் போனாலோ, விருந்துக்கு அழைத்தாலோ ஏ தாவது இரண்டு நல்லதைச் சொல்லி பாராட்டுவது இந்துக்களின் சம்பிரதாயம் . அதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. நான் சொல்லுவது என்ன வென்றால்……………………..
1.உலகம் முழுதும் உள்ள POPULAR பாப்புலர் தமிழ் நாளேடுகள் கிட்டத்தட்ட 50 விழுக்காடு ஸம்ஸ்க்ருதச் சொற்களை பத்திரிகைகளில் பயன்படுத்துகின்றன சில்லறைப் பயல்கள் நடத்தும் நாளேடுகளைக் கணக்கில் சேர்க்காதீர்கள்;
2.ஒரு மொழியில் பிற மொழிக் கலப்பு இருப்பதைத் தவிர்க்கவே முடியாது. இதற்கு தெள்ளிய எடுத்துக் காட்டு ஆங்கிலம்; அதில் ஆங்கில சொற்களை விட பிற மொழிச் சொற்களே அதிகம் ! ஆனால் இந்தக் கலப்பு அந்த மொழியின் உருவையே மாற்றி விடக்கூடாது.
3. தமிழில் சர்வகலாசாலை என்று எழுதிவந்ததை இன்று பல்கலைக்கழகம் என்றும், ஜலம் என்று எழுதிவந்ததை இன்று தண்ணீர் என்றும் எழுதுகிறோம்; யாரும் சிரிக்கவில்லை; இவ்வாறு காலேஜ் கல்லூரி ஆனது, கம்பியூட்டர் கணினி ஆனது; வரவேற்கத்தக்கதே; ஆயினும் அத்தனை விஷயங்களையும் தமிழில்தான் எழுத வேண்டும் ஷேக்ஸ்பியரை செகப்பிரியர் என்றும் ஜெர்மனியை செருமனி என்றும் எழுத வேண்டாம். ஏனெனில் உலகில் தமிழன் ஆங்கிலம் பேசும்போது அதிக தமிழ் ஆக்சென்ட்TAMIL ACCENT வருகிறது. வடக்கத்தி ஆட்களிடம் இது குறைவு.
4. தமிழ் ஒரு குறையுள்ள மொழி. இந்தியாவில் ஸ ஷ ஜ ஹ க்ஷ இல்லாத பழைய மொழி இது ஒன்றுதான்; சம்ஸ்க்ருத மொழி ஒன்றில் மட்டுமே உலகிலுள்ள 95 சதவிகித மொழி உச்சரிப்பைக் கொண்டுவர முடியும்.ஜ என்னும் எழுத்து உலகில் எந்தப் பழைய மொழியிலும் இல்லை. ச என்பது பாரசீகத்தில் இல்லாததால் நம்மை எல்லாம் ஹிந்து ன்று சொல்லிவிட்டார்கள். தமிழிலும் ச கிடையாது; சம்ஸ்க்ருதத்தில் எ , ஒ , ழ தவிர எல்லா ஒலிகளும் உண்டு.
அப்படியும் கூட புகழ்பெற்ற HARRYPOTTER ஹாரி/ ஹேரி பாட்டர் உச்சரிப்பை எழுத்தில் கொணர முடியாது. ஆகையால் நம்மவர் வெளி நாடுகளில் பேசும்போது நகைப்புக்குரியவர்கள் ஆகாமல் தடுக்க கம்ப்யூட்டர். மொபைல் போன் போன்றவற்றை அதே மொழியில் புழங்குவது நல்லது.. வெளி நாடுகளில் வாழும் தமிழர்களிடையே ஒரு சர்வே நட்த்தினால் நான் சொல்வது சரி என்பதை உணரலாம்.
5.எல்லா பத்திரிக்கைகளின் பெயர்களும் சம்ஸ்க்ருதம் (தின) ஏன் மாற்றவில்லை ?
எல்லா திராவிட கழிசடைகள் பெயரும் சம்ஸ்க்ருதம்; (நிதி) ஏன் மாற்றவில்லை ?
லண்டனில் எனக்கு இலங்கையர்கள், மலேசியர்கள் நண் பர்களாக உள்ளனர்; அவர்களுடன் கதைக்கும்போது நிறைய ஸம்ஸ்க்ருதச் சொற்களை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துவதை காண்கிறேன்.
*****
உங்களுக்கு ஒரு டெஸ்ட் / சோதனை
ஒரே நாளில் வெளியான இலங்கை, இந்திய, மலேசிய பத்திரிக்கைகளை எடுங்கள்; முதல் பக்கச் செய்திகளை மட்டும் பாருங்கள். ஹைலைட்டர் பேனா அல்லது சிவப்பு நிற பேனா மூலம் தமிழ் இல்லாத மொழிச் சொற்களை அடிக்கோடு இடுங்கள் ; எல்லா பாப்புலர் பத்திரிக்கைகளிலும் ஏறத்தாழ ஒரே விகிதத்தில் வெளி மொழிச் சொற்கள் இருப்பதைக் காண்பீர்கள் .
இன்னும் ஒரு சோதனை
உங்கள் அம்மா, அப்பா, நண்பர்கள் பேசுவதை அவர்களுக்குத் தெரியாமல் ஒரு பத்து நிமிடம் ரிக்கார்ட் செய்யுங்கள்; அதிசயிக்கத்தக்க அளவுக்கு வெளி மொழிச் சொற்கள் இருப்பதைக் காண்பீர்கள்!
(நான் எழுதிய இந்தக் கட்டுரைக்கும் அதே கதிதான்! தமிழ் மொழி(???? !!!!!) வாழ்த்து எழுதிய மனோன்மணீய சுந்தரம் பிள்ளை போலத்தான்; அவரைப் பார்த்து சிரிப்பது போல என்னைப் பார்த்தும் சிரிக்கலாம்.)
****
கடைசியாக
நான் சென்ற ஆண்டு இலங்கைக்குச் சென்று ஐந்து நாட்களுக்கு நால் திசையிலும் பயணம் செய்தேன் ; 5 நாட்களிலும் தினகரன், வீர கேசரி வாங்கிப் படித்தேன்; செய்திகளைவிட நான் ஆகக் கூடிய மேலதிக அவதானம் (கவனம்) செலுத்தியது மொழிப பிரயோகம்தான்./ என் கருத்து சரியே என்பதை அவை காட்டின.
****
முடிவுரை
எல்லா நாளேடுகளும் ஸம்ஸ்க்ருதச் சொற்களை, ஆங்கிலச் சொற்களை பயன்படுத்துகின்றன. அதில் தவறு இல்லை. ஆனால் பாலில் தண்ணீர் கலக்கலாம்; தண்ணீரில் பாலைக் கலக்காதீர்கள் .
இலங்கைத் தமிழ் எந்த விதத்திலும் இந்தியத் தமிழ் மொழியைவிட உயர்ந்தது இல்லை. சில நல்ல பழந் தமிழ்ச் சொற்களை கன்னடம், மலையாளம் , இலங்கை, மலேசியாவில் காணலாம். (எ .கா. அவன், இவன்,உவன் ) அதையே அளவுகோலாகக் கொண்டு அதுதான் சிறந்தது என்று சொல்லுவோரை அரை வேக்காடுகள் என்று கணக்கிற் கொள்ளுங்கள். இதற்கு மேலும் சம்சயம்/ சந்தேகம்/ஐயப்பாடு எழுந்தால் என்னுடன் கதையுங்கள் !
(கதைத்தல்– என்பது வால்மீகி ராமாயணத்தில் அடிக்கடி வரும் ஸம்ஸ்க்ருத வினைச் சொல் என்பது பலருக்கும் தெரியாது !)
******
இன்னும் கொஞ்சம் கதைக்கலாமா ? விளங்குமா ?
லண்டனில் நான் தினமும் பஸ்ஸில் கேட்கும் இலங்கைத் தமிழ் :- எங்க நிக்கற ; இதோ பஸ்ஸில் நிக்கறேன் ; வெம்பிளிலே நிக்கரென் ( ஆனால் பேசும் ஆள் பஸ்ஸில் உட்கார்ந்து இருப்பார்!! நிக்கல்ல !!!)
அவர் என்ன பேசிட்டாரு ! (கோபத்தில் என்னை திட்டிவிட்டார் )
அவர் (சின்னக் குழந்தை) நல்லா கதைக்கிறார் ; பொடியன் ( பெரியவன் ) வரமாட்டான் (குழந்தைகளுக்கு அவர், இவர் போடுவார்கள்; பெரியவனுக்கு அவன், இவன் போடுவார்கள்; இந்தியாவில் அப்படி அல்ல ).
*****
எல்லோரும் கிரியா CREA TAMIL DICTIONARY அகராதி வாங்குங்கள் . சுமார் 17, 000 இலங்கைத் தமிழ் சொற்கள் அதில் உள்ளன. எல்லோரும் சங்கத் தமிழ் சொல்லடைவு வாங்குங்கள் ; சங்க காலத்தில் , 2000 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியத் தமிழன் நல்ல தமிழ் பேசினான் என்பது விளங்கும். (புரியும் என்றால் இந்தியன்; விளங்கும் என்றால்- இலங்கையன் .இயலுமா என்றால் இலங்கையன் .; முடியும் என்றால் இந்தியன்.இம்பெர்சனல் வெர்ப்ஸ் சொல்லிக்கொடுக்கும் போது இதையும் கற்பித்தேன் .
நான் 20 ஆண்டுகளுக்கு லண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்பித்தபோது இலங்கைத் தமிழன் கேட்ட முதல் கேள்வி:
நீங்கள் எந்தத் தமிழ் சொல்லிக் கொடுப்பீர்கள் ?
இந்தியத் தமிழா ? இலங்கைத் தமிழா ?
என் பதில் :
தமிழ் ஒரே தமிழ்தான்; பிரிட்டனில் ஸ்காட்லாந்த்து அயர்லாந்து வேல்ஸ், இங்கிலாந்தில் பேசும் ஆங்கிலத்தில் என்ன வேறு பாடு உண்டோ அது தமிழிலும் உண்டு; எப்படி ஆங்கில எழுத்து ஒரே மாதிரி உலகம் முழுதும் உள்ளதோ அதே போல் தமிழுக்கும் எழுத்து ஒன்றே; கவலைப்படாதீர்கள்; நான் கற்பிப்பது பேச்சுத் தமிழ் இல் லை; இலக்கியத் தமிழ்; இந்த அ டிப்படையைக் கற்றால் உலகம் முழுதும் உள்ள தமிழ் உங்களுக்கு விளங்கும் !
தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்-4 கோபம், சினம்(Post.13,658)
தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் கோபம், சினம் (க்ரோதம்) பற்றிப் பாடாத புலவர்கள் யாரும் இல்லை. நரகத்தின் மூன்று வாசல்களில் ஒன்று கோபம்/ க்ரோதம் என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொல்லிவிட்டார்; சிறைக்குச் செல்லுவோர் எல்லோரையும் வகைப்படுத்திப் பார்த்தால் காமம், க்ரோதம், லோபம் (பேராசை) என்ற மூன்றில் ஒன்றைக் காணலாம்.
கோபம் பற்றி ஷேக்ஸ்பியரும் நிறைய பொன்மொழிகளை உதிர்த்து இருக்கிறார்; அவர் அள்ளித்தூவிய தங்க மொழிகளை 37 நாடகங்களிலிருந்து சிலவற்றை மட்டும் காண்போம் .
Come not between the dragon and his wrath –
King Lear1-1-123
சீறும் ராட்சத மிருகத்துக்கும் அதன் கோபத்துக்கும் இடையே வராதே.– கிங் லியர் நாடகம்
****
Let grief convert to anger; blunt not the heart, enrage it-
I understand a fury in your words. But not the words- Othello 4-2-32
உனது சொற்களில் தீப்பொறி பறக்கிறது; ஆனால் சொற்களை புரிந்துகொள்ள முடியவில்லை – ஒதெல்லோ நாடகம்
****
Who is man that is not angry ?
Timon of Athens
கோபப்படாத மனிதன் உண்டா ?
அல்லது கோபப்படாதவான் மனிதனா?- டிமோன் ஆப் ஏதென்ஸ்
****
Come not within the measure of my wrath
The gentlemen of Verona 5-4-125
என் கோபத்துக்கு ஆளாகிவிடாதே- ஜென்டில்மேன் ஆப் வெரோனா நாடகம்
****
My tongue will tell the anger of my heart, or else my heart concealing it will break.–The Taming of the Shrew
கொதிக்கிறது என் இதயம் ; இதோ சொல்லால் சுடுவேன் அல்லது என் இதயமே வெடித்துவிடும். —டேமிங் ஆப் தி ஷ்ரூ நாடகம்
****
Heat not a furnace for your foe so hot that it do singe yourself.
‘Henry VIII’ act 1, sc. 1, l. 140
உன் எதிரியைப் பொசுக்க, கோபப்படாதே ; அது உன்னையே சுட்டுவிடும் – ஏழாவது ஹென்றி நாடகம்
****
Anger’s my meat. I sup upon myself,
And so shall starve with feeding.
– Coriolanus, act 4, sc.2, l.53-4.
கோபம்தான் எனக்கு உணவு கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவேன். பட்டினியும் சாப்பிடுவதும் மாறி மாறி வரட்டும் (கோபத்தில் சாப்பிடாமல் தன்னைத் தானே வருத்திக் கொள்ளல் ) – கொரியாலனஸ் நாடகம்
****
Be wise as thou art cruel, do not press ,My tongue-tied patience with too much disdain: Lest sorrow lend me words and words express, The manner of my pity-wanting pain.-. “Sonnets”,
புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள் ; உன்னை நிந்திக்கும் எனது பொறுமையைச் சோதிக்காதே ஒருவேளை, உள்ளத்தில் உள்ள தாங்க முடியாத துயரத்தை துக்கத்தில் கொட்டிவிடுவேன்.- தனிப் பாடல்
****
She speaks poniards, and every word stabs: if her breath were as terrible as her terminations, there were no living near her; she would infect to the north star. I would not marry her, though she were endowed with all that Adam bad left him before he transgressed.
‘Much Ado About Nothing, act 2, sc. 1, l. [257]
அவளது பேச்சு கத்தி போல என்னைக் குத்துகிறது அவளது மூச்சு போலவே அவள் பேச்சும் இருக்குமானால் அவளுடன் வாழ்வதே கஷ்டம்; அவளது சொற்கள் வட துருவம் வரை விஷத்தைப் பரப்பவல்லன. ஆதாமிடம் கெட்டுப்போவதற்கு முன்னால் இருந்த தூய்மை இருந்தாலும் கூட அவளைக் கல்யாணம் கட்ட மாட்டேன்– மச் அடோ அபவுட் நத்திங்
****
பாரதியும் ‘கோபத்தைக் கொன்றுவிடு’ என்று பாடுகிறான். ஆனால் ‘ரெளத்திரம் பழகு’, என்றும் ‘சீறுவோர்ச் சீறு’ என்றும் ஆத்திச் சூடியில் எச்சரிக்கிறான். யாரேனும் தரும விரோதக் செயல்களைச் செய்தால் கோபம் கொள்ளுவதில் தவறில்லை என்பான்.
“அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்”
என்பது பாரதியின் அருள்வாக்கு
……
“சினங்கொள்வார் தம்மைத்தாமே தீயார் சுட்டுச்
செத்திடுவாரொப்பார் ; சினங்கொள்வார் தாம்
மனங்கொண்டு தம் கழுத்தைத் தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் “
சினம் என்பது ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்ற வள்ளுவன் கருத்தை பாரதி சொன்னதோடு, கோபம் என்பது வலியப் போய் தற்கொலை செய்து கொள்வதற்குச் சமம் என்றும் செப்புகிறான்.
அதே பாடலில் பாரதி,
“கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்;
கொடுங்கோபம் பேரதிர்ச்சி; சிறிய கோபம்
ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியதாகும்;
அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்;
தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்;
கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;
கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான்
கொல்வதற்கு வழியென நான் குறித்திட்டேனே”
. என்பான்.
கோபம் பற்றி திருக்குறள் உள்ளிட்ட பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் நிறைய பாடல்கள் இருக்கின்றன. இந்த வெகுளாமை என்னும் lesson பாடம் அவைகளுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அதர்வண வேதத்தில் இருந்து வந்தது என்பது பலருக்கும் தெரியாது ; வேதத்தில் இல்லாத விஷயம் வெளியில் இல்லை!
தன்னைத்தான் காக்கின் சினங் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் — திருக்குறள் 305
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும் — திருக்குறள் 306
பொருள் —
உன்னைப் பாதுகாத்துக் கொள்ள கோபம் வராமல் பார்த்துக் கொள் ; அல்லது அதுவே உன் மரணத்துக்குக் காரணமாகிவிடும் –திருக்குறள் 305
****
கோபம் என்னும் தீ ஒரு மரத்துடன் நட்புகொண்டு அதைத் தழுவினால் மரமும் அழியும்; மரத்துக்குப் பக்கத்திலுள்ள காடே அழியும்.
****
அது போல கோபம் நெருப்பு போல உன்னுடன் சேர்ந்தால் அது உன்னை மட்டும் கொல்லாமல் உனக்கு ‘சப்போர்ட்’ support
கொடுத்த அத்தனை பேரையும் அழிக்கும் — –திருக்குறள் 306
****
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.-129
****
அனுமனும் கூட கோபத்தில் இலங்கைக்குத் தீ வைத்த பின்னர் கோபத்தில் செய்த காரியத்தை எண்ணி வருந்துகிறான் . வால்மீகி அழகாகச் சொல்கிறார்:
தன்யாஸ்தே புருஷ ச்ரேஷ்டோ யே புத்யா கோபமுத்திதம்
நிருந்தந்தி மஹாத்மானோ தீப்த மக்னி மிவாம்பஸா
எவர்கள் சீறி வரும் சினத்தை அறிவைக் கொண்டு பற்றி எரியும் தீயை ஜலத்தால் அணைப்பது போல அடக்கிக் கொள்கிறார்களோ அவர்களே தன்யர்கள்; புருஷர்களில் உயர்ந்தவர்கள்; மஹாத்மாக்கள்.
கோபத்திற்காளாகிய எவன் தான் பாவத் தொழிலைச் செய்யாதிருப்பான்? கோபம் கொண்டவன் பெரியோர்களைக் கூடக் கொலை செய்வான். கோபத்திற்காளான புருஷன் கடுமையான மொழியால் சாதுக்களை எடுத்தெறிந்து பேசுவான்,
****
வாச்யாவாச்யம் ப்ரகுபிதோ ந விஜானாதி கர்ஹிசித்
நாகார்யமஸ்தி க்ருத்தஸ்ய நாவாச்யம் வித்யதே க்வசித்
கோபம் தலைக்கேறியவனுக்கு எது சொல்லத் தகுந்தது எது சொல்லத் தகாதது என்பதைப் பகுத்தறியவே முடியாது. கோபம் கொண்டவனுக்குத் தகாத செயல் என்பது இருக்கவே இருக்காது. அப்படிப்பட்ட நிலையில் தகாத சொல் என்பதும் அவனுக்குக் கிடையாது,
*****
ய ஸமுத்பதிதம் க்ரோதம் க்ஷமயைவ நிரஸ்யதி
யதோரக ஸ்த்வசம் ஜீர்ணாம் ஸவை புருஷ உச்யதே
எவனொருவன் தலைக்கு மேலேறிய கோபத்தை பொறுமையின் மூலம் சர்ப்பம் ஜீரணமான தோலை எப்படி விட்டு விடுகிறதோ அதே போல விட்டு விடுகிறானோ அவனே ஆண்பிள்ளை என்று சொல்லப்படுகிறான்.
(பெங்களூர் எஸ். நாகராஜன் தொகுத்தது)
*****
அதர்வண வேதப் பாடல்
காண்டம் 6; துதி 42 (சூக்தம் 215)
1.வில்லிலிருந்து விடுபட்ட அம்பினைப் போல உன்னுடைய இதயத்திலிருந்து கோபத்தை விரட்டுகிறேன்; நாம் இருவரும் ஒருமித்த மனதுடன் நண்பர்களாக உலா வருவோம்.
2.நாம் நண்பர்களாக நடந்து செல்லுவோம் ; நான் உனது கோபத்தை நீக்குகிறேன் ; நான் உன்னு டைய கோபத்தைக் குழி தோண்டிப் புதைக்கிறேன்
3. நான் உனது கோபத்தை என் கால்களுக்கு அடியில் போட்டு நசுக்குகிறேன் நீ அடங்கி நட ; இனியும் எதிர்த்துப் பேசாதே
இதற்குப் பழைய விளக்கம்:
இரண்டு நண்பர்கள் இடையே இருந்த கோப தாபத்தை நீக்கும் பாடல் என்பதாகும்; இதைப் படித்துவிட்டு பாபநாசம் சிவனின் ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடி’ என்ற பாடலைப் படித்தால், பொருள் இன்னும் நன்றாக விளங்கும்.
–subham—
Tags- தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில், ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்-4 ,கோபம், சினம்.
தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்- தேச பக்தி- ஷேக்ஸ்பியரும் பாரதியும்!
அதர்வண வேதத்தில் பூமி சூக்தத்தில் உலகிலேயே பழமையான தேச பக்தி பாடல் இருப்பதை பூமி சூக்தக் கட்டுரைகளில் கண்டோம் .தற்கால தமிழ் உலகில் தன்னிகரில்லாத கவிஞனா க விளங்கும் சுப்பிரமணிய பாரதியார் பாடிய நூற்றுக்கணக்கான தேச பக் திப் பாடல் களுக்கு அறிமுகம் தேவை இல்லை.
ஷேக்ஸ்பியரும் கூட பாரதியாரைப் போல தேச பக்தியைக் கொண்டாடுகிறார் .
*****
Shakespeare ஷேக்ஸ்பியர் சொல்கிறார்
Dear earth, I do salute thee with my hand.
Richard II 3-2-6
அன்புள்ள பூமியே , நான் என் கைகளால் உன்னை வணங்குகிறேன்
இரண்டாம் ரிச்சர்ட் நாடகம் .
****
Not that I loved Caesar less, but I loved Rome more.
Julius Caesar 3-2-21
சீசரை நான் குறைவாக நேசித்தேன் என்று எண்ணிவிடாதீர்கள் ; ஆனால் எனது
ரோமானிய சாம்ராஜ்யத்தை அவரை விட அதிகமாக நேசிக்கிறேன்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
எங்கள் தாய், சுகமளிப்பவளே, வரமருள்பவளே,
தாயே வணங்குகிறோம்
கோடிக் கோடிக் குரல்கள், உன் திருப்பெயர் முழங்கவும்
கோடிக் கோடிக் கரங்கள், உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்
அம்மா ! ‘அபலா ‘#2 என்று உன்னை அழைப்பவர் எவர் ?
பேராற்றல் பெற்றவள், பேறு தருபவள்
பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள், எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்
அறிவு நீ, அறம் நீ, இதயம் நீ, உணர்வும் நீ,
எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ
எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ
எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்
தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ
தாயே வணங்குகிறோம்.
ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்
அன்னை துர்க்கை நீயே
செங்கமல மலர் இதழ்களில் உறையும்
செல்வத் திருமகள் நீயே
கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே
தாயே வணங்குகிறோம்
திருமகளே, மாசற்ற பண்புகளின் மனையகமே
ஒப்புயர்வற்ற எம் தாயகமே
இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே
கருமை அழகியே, எளிமை இலங்கும் ஏந்திழையே
புன்முறுவல் பூத்தவளே, பொன் அணிகள் பூண்டவளே
பெற்று வளர்த்தவளே, பெருமைகள் அனைத்தும் அளித்தவளே
தாயே வணங்குகிறோம்
B C CHATTERJEE WROTE VANDE MATARAM SONG.
இது போல ஏராளமான பாடல்களில் பாரதத்தாயை வணங்கி தேசபக்தியை பாரதியார் பரப்பினார்
—SUBHAM—
TAGS- தேச பக்தி,ஷேக்ஸ்பியர், பாரதியார்,பாரத நாடு ,பார்க்கெலாம் திலகம், வந்தே மாதரம், தேசிய கீதங்கள், தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள் 3
1907-ம் ஆண்டு எழுதப்பட்ட புத்தகம் How to live 24 Hours a Day!
எழுதி நூறாண்டுகள் ஆன பின்னரும் பயன் தரக் கூடிய விதத்திலே அமைந்திருக்கும் இந்தப் புத்தகத்தை ஆங்கிலம் அறிந்தோர் நிச்சயம் படிக்காமல் இருக்கக் கூடாது.
இதை எழுதியவர் ஆர்னால்ட் பென்னட்.
80 புத்தகங்களுக்கு மேல் எழுதியவர் பென்னட். அவரது ‘The Old Wive’s Tale ‘ என்ற நாவல் மிகவும் பிரசித்தமானது.
மிக்க நட்புடன் நம்முடன் உரையாட ஆரம்பிப்பது போல ஆரம்பித்து வாழ்வாங்கு வாழ வழி காண்பிக்கிறார் பென்னட்.
அவர் இதோ உங்களுடன் உரையாட விழைகிறார்:-
காலை எழுந்தவுடன் உங்கள் பர்ஸில் 24 மணி நேரங்கள் போடப்படுகிறது. கூடவும் இருக்காது; குறையவும் குறையாது! அதை உங்களிடமிருந்து யாரும் பறிக்கவும் முடியாது. உங்களுக்கே சொந்தமானது! உலகில் உள்ள மற்ற யாருக்கும் கூட இதை விட அதிகமாகவோ அல்லது குறைத்தோ இது தரப்படுவது இல்லை!!
இதை வீணாக ஆக்கி விட்டால் உங்களுக்குத் தண்டனையும் இல்லை; வீணாக்கினாலும் கூட மறு நாள் அதே அளவு தரப்படுகிறது.
இந்த 24 ,மணி நேரத்தால் அழிவற்ற உங்கள் ஆத்மாவை பரிணமிக்க வைக்கவும், ஆரோக்கியத்தை மேம்பட்ட நிலையில் அடையவும், இன்பம் துய்க்கவும், பணம் பெறவும், திருப்தி அடையவும் செய்ய முடியும்!
ஒரு நாளைக்கு உள்ள 24 மணி நேரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்ற கடினமான காரியத்தில் உள்ள சிரமங்களை முதலில் நீங்கள் உணர வேண்டும். இதில் நீங்கள் செய்ய வேண்டிய தியாகங்களையும், முடிவற்ற முயற்சியையும் முதலில் அறிய வேண்டும்.
விஷயத்திற்கு வருவோம். 24 மணி நேரத்தின் செலவுத் திட்டம் என்ன?
எட்டு மணி நேரத் தூக்கம்! எட்டு மணி நேர வேலை! ஓய்வு பெற்று புத்துணர்ச்சி பெற தூக்கம்! வயிற்றுப்பாடுக்கு வேலை!!
மீதி இருக்கும் மூன்றில் ஒரு பங்கான எட்டு மணி நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதில் ஒரு வெறி உங்களுக்கு இல்லை என்றால் உங்களால் எப்படி முன்னேற முடியும்?
சைனா பெட்டிகளில் ஒரு பெட்டிக்குள் இன்னொரு பெட்டியைப் போடுவது போல ஒரு நாளைக்குள் இன்னொரு நாளை அடைக்க உங்களுக்குத் தெரிய வேண்டும்!
போகட்டும். காலையில் எழுந்து அலுவலகம் செல்ல புகைவண்டியில் அமர்ந்து நீங்கள் செய்தித்தாளை ஒரு நாளைக்கு 124 மணி நேரம் இருக்கும் இன்னொரு கிரகவாசி போல மிக மெதுவாக ஓய்வாகப் படிக்க முனைகிறீர்கள். இந்தக் காலை நேரத்தில் இவ்வளவு நேரம் செலவிட என்னால் முடியாது! ஒரு அரை மணி நேரத்தை இதில் ஒதுக்கி விடுங்கள். அப்படி என்றால் எப்போது பேப்பர் படிப்பது என்று அங்கலாய்க்க வேண்டாம். மதியம் உணவு இடைவேளையின் போது அதை வைத்துக் கொள்ளலாமே!
சரி, மாலை வீடு திரும்பியவுடன் களைத்துப் போய் நீங்கள் வீடு திரும்பும் போது உங்கள் மனைவி, ‘என்ன வெளுத்துப் போய் வந்திருக்கிறீர்கள்’ என்று சொல்லி உங்களுக்குக் கொறிக்க ஏதேனும் தருவதை வாங்கிச் சாப்பிடுகிறீர்கள்.
நீங்கள் நிஜமாகவே வெளுத்துப் போய் வரவில்லையென்றாலும் அவள் அப்படிச் சொல்வது இதமாகத் தான் இருக்கும்!
அப்புறம் கொஞ்ச நேரம் ஓய்வான அரட்டை, நண்பர்களுடன் பேச்சு!
அட, கனவு போல நேரம் கரைந்து விட்டதே! இதில் என்ன தப்பு என்கிறீர்களா? தப்பே இல்லை.
ஆனால் இந்த மாலை நேரத்தில் இப்படிப்பட்ட மணிகளில் ஒரு வாரத்திற்கு மூன்று நாட்களில் ஒன்றரை மணி நேரம் உங்களால் ஒதுக்க முடியாதா என்ன?
வாரத்தில் உள்ள ஏழு நாட்களில் ஏழாம் நாள் முற்றிலும் உங்கள் கேளிக்கைக்காக ஒதுக்கி விடுவோம்.
ஆக, காலை வேளைகளில் ஆறு நாட்களில் ஒரு அரை மணி நேரம் வீதம் மூன்று மணி நேரமும் மாலை நேரங்களில் மூன்று நாட்களில் ஒன்றரை மணி நேரம் வீதம் நான்கரை மணி நேரமும் கொஞ்சம் ஒதுக்கி விடுங்களேன்!
இந்த 450 நிமிடங்கள் தான் உங்களின் வாராந்திரக் கோட்டாவாகத் தரப்படும் 10080 நிமிடங்களில் முக்கியமானவை!
உங்கள் நேரக் காட்டிலிருந்து இதைப் பிரித்தெடுக்க முனைவதே ஒரு பெரிய விஷயம் தான்!
இதை வைத்து என்ன செய்வது என்கிறீர்களா? சொல்கிறேன், பொறுங்கள்.
காலை அரை மணி நேரம் இருக்கிறதே, அதை முதலில் பார்ப்போம். வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் போது எதையேனும் பற்றி ஒருமுகப்பட்ட மனதுடன் நினையுங்கள். பத்தடி தூரம் நடக்கும் முன்னரே உங்கள் மனம் இன்னொரு பொருளுக்குத் தாவி விடும். கவலை வேண்டாம். அதை மீட்டுக் கொண்டு வந்து முதலில் நினைத்த பொருளுக்குத் திருப்புங்கள். எதாக வேண்டுமானாலும் இருக்கட்டும், தீர்மானித்ததைப் பற்றி ஒருமுகப்பட்டு சிந்தியுங்கள். இந்த மனப்பழக்கம் எங்கே நீங்கள் இருந்தாலும் சரி, மனதின் மீது உங்கள் ஆதிக்கத்தை நாள் முழுவதும் செய்ய வைத்து விடும். மனம் தளரவே தளர வேண்டாம்!
மனதை ஒருமுகப்படுத்துவது என்ற இந்த வித்தை பியானோவின் கீ போர்ட் மீது கை வைப்பது போலத் தான். நாள் செல்லச் செல்ல அதன் விஸ்தீர்ணம் எங்கெங்கோ நீங்கள் சஞ்சாரம் செய்யும் போது தான் புரியும்!
இனி மாலை நேரத்திற்கு வருவோம். இருக்கும் நான்கரை மணி நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டியது ஏராளம் உள்ளது.
இலக்கியம் பிடிக்கவில்லை என்பதனால் அதனுடைய சிறந்த மாற்று, சோம்பேறித்தனமாக சும்மா இருப்பது தான் என்று நினைத்து விடாதீர்கள்!
கலைகளில் எவ்வளவோ இருக்கின்றன. உதாரணமாக நீங்கள் கச்சேரிப் பிரியர் என்று வைத்துக் கொள்வோம். கச்சேரியில் பீத்தோவனின் சிம்பனியை ஒருவர் இசைப்பதை நீங்கள் பெரிதும் விரும்புகிறீர்கள்! ஒருவேளை ‘நன்கு கச்சேரியை ரசிப்பது எப்படி’ என்ற நூலை மட்டும் நீங்கள் படித்துக் கற்றுக் கொண்டால் சங்கித ஞானத்தை மேம்படுத்திக் கொண்டால் – உங்களின் அடுத்த கசேரி விஜயம் எவ்வளவு ஆர்வத்தைத் தூண்டுவதாக அமையும் என்பதை அனுபவித்துப் பாருங்கள்! உங்கள் ரசனையே மாறி விடும். இதே போலத் தான் நீங்கள் ஓவியப் பிரியர் என்றால் நல்ல ஓவியத்தைப் பார்ப்பது எப்படி என்பதையும் அல்லது நீங்கள் கட்டிடப் பிரியர் என்றால் கட்டிடக் கலை நுட்பங்களை எப்படிப் பார்ப்பது என்பதையும் கற்கலாமே!
கலை பெரிது தான்; ஆனால் அத்தோடு காரண- காரிய விளைவு அதை விடப் பெரியது! அதை நீங்கள் சற்று ஆழ்ந்து படிக்க முயல வேண்டும்.
நீங்கள் வங்கியில் ஒரு க்ளார்க் தான்! அதனால் இலக்கியமோ அல்லது இசையோ பிடிக்காமல் இருக்கலாம்! ஆனால் முழு வாழ்க்கை என்னும் நிலைக்களம் தனது ஏராளமான சீன்களில் ஆர்வத்தை உள்ளடக்கி உள்ளது. அதை உற்றுப் பார்த்து அனுபவிக்கலாமே!
நீங்கள் இலக்கியப்பிரியரா? நல்ல கவிதையை அனுபவிக்கலாமே!
கவிதை வேண்டாம் என்றால் சரித்திரமும் தத்துவமும் இருக்கவே இருக்கின்றன!
ஆனால் எவ்வளவோ பேர் எத்தனையோ மணி நேரங்களில் எவ்வளவோ பக்கங்களைப் படித்துக் குவிக்கின்றனர். நீங்கள் செய்ய வேண்டுவது படித்ததைப் பற்றி ஒரு 45 நிமிடங்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்! படிப்பது மெதுவாக ஆகி விடுமே என்று பயப்படாதீர்கள்!
இலட்சியத்தை விட்டு என்னவோ செய்கிறோமே என்று நீங்கள் எண்ணும் போதே திடீரென்று ஒரு நாள் அழகிய மலை உச்சி நகரத்தில் இருப்பதைக் காண்பீர்கள்!
இப்படி அற்புதமான நேரங்களிலே அதில் கவனம் கொள்ள வேண்டிய இன்னும் சில இருக்கின்றன!
சற்று நகைச்சுவை உணர்வு, சேணை பூட்டிய குதிரை போல ஒரே பக்கமே பார்க்காமல் பரந்து விரிந்த பார்வை, அதிக வேகமாக போகாமல் இருப்பது இவற்றையும் நீங்கள் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.
கடைசியாக ஒன்றே ஒன்று! எல்லாம் சரி என்று ஆரம்ப சூரத்தனமாக இவற்றை வெறியோடு ஆரம்பித்து அப்புறம் பாதியில் விடாதீர்கள்! மெதுவாக ஆரம்பித்தாலும் தளர் நடை பயின்றேனும் லட்சியத்தை நோக்கி முன்னேறுங்கள்.
உங்கள் லட்சியம் ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் வாழ வேண்டும் என்பது தானே!
Tamil Poet Bharati and Shakespeare on Patriotism (Post No.13,655)
It is true Great Men think alike! Here are some comparative poems on Patriotism.
Shakespeare
Dear earth, I do salute thee with my hand .
Richard II 3-2-6
****
Not that I loved Caesar less, but I loved Rome more.
Julius Caesar 3-2-21
****
Bleed, bleed, poor country
Macbeth 4-3-31
****
Bharati on Patriotism
Let us compare it with the great poet Bharati
Vande Mataram we will sing!
These words throughout our land shall ring!
Vande Mataram we will say! Motherland ,hail! To you we pray!
****
This is the nation whence wafted to the world
The fame of heroes through minstrels matchless!
This is the nation where flourished mighty kings
And saints blemishless, dharma incarnate!
this nation dubbed the ignoble women
who bore not heroes, as nullipara! Ancient is Bharat
and you her children
Forget not Bharat is the tilak of earth
You her children ; forsake this thought .
****
Vande Mataram, Vande Mataram
Vande Mataram Vande Mataram Vande Mataram!
In Arya land men and women
Invoke this brave mantra ! Amen
Mother Bharat Mayou Flourish
You are our refuge and our life
Jaya Jaya Bharat! Jaya Jaya Bharat!
Jaya Jaya Bharat! Jaya Jaya ! Jaya Jaya !
xxx
There are scores of patriotic poems in Bharati Songs Book
Vande Mataram! = Worship Our Motherland.
(Muslims refused to sing these lines giving a severe blow to Mahatma Gandhi)
****
Oldest Patriotic Song in the Vedas
One would be wonderstruck to read the world’s oldest and longest patriotic song in the Atharva Veda. Atharva Veda’s date is only conjectural and it was compiled earlier than 1000 BC. It is amazing to find a very long patriotic song in praise of motherland (earth) in the Veda. Greeks have not even started writing their first book then. Tamil’s oldest book came 1000 years after Atharva Veda. Moses started issuing Ten Commandments around that date. In such a remote period Hindu thinking has reached its pinnacle!
“ Sacred is the earth (motherland). It not only nurtures that which is past and all the objects of the present, it bears the seed of the future as well. Such is our great motherland.
“ Our earth (motherland) is populated with learned men. It is populated by those who are inferior, those who are average and those who are superior. But all such people forget their differences and live together in unity and friendship. This is the land where we will perform deeds and attain fame. This is the land where our intelligence prospers.
“ In our motherland can be found enterprising and hard working farmers and artisans. In every direction that one glances, one finds fields of rice, wheat and other grains. Our motherland nourishes different forms of life. It provides us with cows, food grains and other forms of sustenance.
“The famous warriors of yore performed valorous deeds here. In this land the learned and the brave ones conquered the violent demons.
“Our earth/motherland is the nurturer. In it can be found gold, silver, diamonds, emeralds and other gems. Nuggets of gold and all sorts of objects, all forms of vegetation, and all forms of living beings can be found in our motherland. Our motherland is the best country of all.
“ In the beginning, this land was immersed in the water of the ocean. Vast is the expanse of this land. Its heights reach up to heaven.
“ In this land to be found learned mendicants who roam in every direction. Just as the water attains same level everywhere, these hermits look upon all with equal favour.
“ The Ashvinis look after this land of ours. Brave warriors have measured the length and breadth of our motherland
“O my earth/ Motheland! May the mountains and the snow clad peaks that can be found here NOT bring you unhappiness.
“You are my mother. I am the son of the earth. The water which rains down and nourishes is my father. My I be preserved.
“ In this land the Vedas are revered in every direction. The righteous ones are worshiped here and the land is uplifted through the performances of sacrifices. Wonderful are the words of wisdom that have been uttered in this land.
“ O my Motherland! All of us are your subjects. May all of us be gifted with sweet speech. May we live together in harmony. May trees and plants grow on you in abundance.
“This land is the mother of all trees, shrubs, plants and creepers. It is here that truth, learning, bravery and righteousness flourish. This land will bring us welfare and happiness. May we always serve our motherland.
“O, Motherland! This is the place where we all live in harmony. May you be great and firm. May brave warriors protest you with their valour and intelligence from enemies. May we be enriched. May we prosper.
May we not cause unhappiness to others when we are travelling on this land.
This is the land where the search for the god is made. This is the land that the god has blessed.
May my motherland grant us the riches that we desire. The inhabitants of this land sing and dance. The cities in my motherland have been built by the gods.
“ O earth (my Motherland)! Grant us wisdom so that we can ensure our welfare. May we be learned all the time. May we prosper in your midst.
****
Atharva Veda Kanda 7 also got a hymn on the motherland.
“Heaven is in the motherland. The motherland is our mother. it is our father and son”.
(I have given only half of the verses. It goes on and on about the glory of our holy land. It is full of positive thoughts. It praises nature at length. We must replace our National Anthem “Jana Gana Mana” with the abridged version of this Vedic hymn!!)
****
Swami Vivekananda on Patriotism
· I believe in patriotism, and I also have my own ideal of patriotism. Three things are necessary for great achievements. First, feel from the heart. What is in the intellect or reason? It goes a few steps and there it stops. But through the heart comes inspiration. Love opens the most impossible gates; love is the gate to all the secrets of the universe. Feel, therefore, my would-be reformers, my would-be patriots! Do you feel? Do you feel that millions and millions of the descendants of gods and of sages have become next-door neighbours to brutes? Do you feel that millions are starving today, and millions have been starving for ages? Do you feel that ignorance has come over the land as a dark cloud? Does it make you restless? Does it make you sleepless? Has it gone into your blood, coursing through your veins, becoming consonant with your heartbeats? Has it made you almost mad? Are you seized with that one idea of the misery of ruin, and have you forgotten all about your name, your fame, your wives, your children, your property, even your own bodies? Have you done that? That is the first step to become a patriot, the very first step. I did not go to America, as most of you know, for the Parliament of Religions, but this demon of a feeling was in me and within my soul. I travelled twelve years all over India, finding no way to work for my countrymen, and that is why I went to America. Most of you know that, who knew me then. Who cared about this Parliament of Religions? Here was my own flesh and blood sinking every day, and who cared for them? This was my first step.
· Our sacred motherland is a land of religion and philosophy — the birthplace of spiritual giants — the land of renunciation, where and where alone, from the most ancient to the most modern times, there has been the highest ideal of life open to man.
· The only religion that is fashionable is patriotism.
· The present enthusiasm is only a little patriotism, it means nothing. If it is true and genuine, you will find in a short time hundreds of heroes coming forward and carrying on the work. Therefore, know that you have really done all, and go on.
· Whether you believe in spirituality or not, for the sake of the national life, you have to get a hold on spirituality and keep to it. Then stretch the other hand out and gain all you can from other races, but everything must be subordinated to that one ideal of life; and out of that a wonderful, glorious, future India will come — I am sure it is coming — a greater India than ever was. Sages will spring up greater than all the ancient sages; and your ancestors will not only be satisfied, but I am sure, they will be proud from their positions in other worlds to look down upon their descendants, so glorious, and so great.
· You must not depend on any foreign help. Nations, like individuals, must help themselves. This is real patriotism. If a nation cannot do that, its time has not yet come. It must wait.
ஒரு புதிய உண்மை வெளிவரும்போது அதை ஆசையோடு ஏற்காமல் வெறுப்படைகிறவன் (வெளிச்சத்தைக்க கண்டும் அஞ்சும்) ஆந்தை
தன் காரியத்தில் விருப்பம் இல்லாமல் பிறருக்குப் பிரியமாக நடந்துகொண்டு , அவர்கள் கொடுத்ததை வாங்கி வயிறு வளர்ப்பவன் நாய்
கண்ட விஷயங்களுக்கெல்லாம் திடீர் திடீரென்று கோபம் அடைகிறவன் வேட்டை நாய் .
பிறன் தன்னை எவ்வளவு அவமதிப்பாக நடத்தியபோதிலும் அக்கிரமத்தை ஹாரி முடியாமல் மந்தமாகப் பொறுத்திருப்பவன் கழுதை
வஞ்சனையாலும் , தந்திரத்தாலும் சமயத்துக்கேற்பப் பலவித கபடங்கள் செய்து வாழ்பவன் நரி .
ஆர்வம் இல்லாமல் எதையாவது நினைத்து ஏங்கிக் கொண்டு , மனஞ்சோர்ந்து , தலை கவிழ்ந்து உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு. —பாரதி
தொகுத்தவர் மரியா ஜான்
நன்றி – மஞ்சரி , நவம்பர் 1968
xxxx
தமிழபிமானி யார் ?
தமிழிலிருந்து பூமண்டலத்திலுள்ள பாஷைகளெல்லாம் பிறந்து நிற்பதாகக் கூவின மாத்திரத்திலேஒருவன் தமிழபிமானியாக மாட்டான்.
பள்ளிக்கூடத்து சாஸ்திரங்களெல்லாம் தமிழ்ப் பாஷையில் கற்றுக் கொடுக்கும்படி முயற்சி செய்கிறவன் தமிழபிமானி. தமிழராகப் பிறந்தோர் கூடியிருக்கும் சபைகளிலேயும் , தமிழராகப் பிறந்தோர் ஒருவருக்கொருவர் பேசும்போதும் , இதர பாஷைகள் பேசாமல் தமிழே பேசும்படி முயற்சி செய்கிறவன் தமிழபிமானி.
தமிழில் புதிய கலைகள், புதிய காவியங்கள், புதிய உயிர், தோன்றும்படி செய்வோன் தமிழபிமானி தமிழபிமானி ஹிந்து தர்மத்தைக் கைக்கொண்டு நிற்பவன். தேவாரத்திலும், திருவாய் மொழியிலும், அன்பு கொள்ளாதவனுக்குத் தமிழபிமானம் உண்மையிலே பிறக்க நியாயமில்லை.– பாரதி
நன்றி- மஞ்சரி டிசம்பர் 1968
xxxxxx
தீபாவளி
“நம் நேயர்களுக்கெல்லாம் கங்கா ஸ்நான பலன் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி அறிவிக்கின்றோம்.
“தற்காலத்திலே ஹிந்து ஜனங்களின் ஆத்மாவைப் பற்றியிருக்கும் அழுக்குகளாகிய பயம், அதைரியம் முதலியவையெல்லாம் அகன்று போய், அவர்கள் ஒளி மிகுந்த உள்ளத்தவர்களாகி விளங்க வேண்டுமென்பதே நமது கோரிக்கை.”
“நமது நாட்டைப் பற்றிய நரகாசுரன் இறந்து போய்விட்டான்.
பகவானுடைய சக்தியும் எல்லா ஐசுவரியங்களுக்கும் ஆதாரமும் ஆகிய லட்சுமிதேவி நம்மீது கருணை கொண்டவளாகி நரகாசுரனை வதைத்துவிட்டாள்.
நாம் எ ல்லோரும் அது பற்றிச் சந்தோஷமடைந்து மங்கள ஸ்நானம் செய்து, நல்லாடைகள் புனைந்து ஆனந்தவசமாகி இருக்கின்றோம்.”
ஆனால் “சிறுகுழந்தைகளைப் போல் விளையாட்டுக்கு ஸ்நானம் செய்தும், தீபங்கள் கொளுத்தியும் சும்மா இருந்துவிடாமல் நாம் செய்யும் செய்கையானது பொருளை நன்றாக அறிந்து காரியங்கள் செய்வதாக வேண்டும்.”
“எத்தனை தரம் கொன்றபோதிலும் மறுபடியும் மறுபடியும் உயிர் தளிர்ப்பது ராக்ஷஸர்களுடைய சுபாவம். அவர்களுடைய மர்ம ஸ்தலத்தை அழித்த பிறகுதான் மடிவார்கள்.
அதுபோலவே லட்சுமிதேவி நரகாசுரனை வதைத்தவுடனேயே நாம் அவனுடைய மர்ம ஸ்தானத்தை ஐந்து
அதைத் தாக்காமல் இருப்போமானால் யாதொரு பிரயோஜனமும் கிடையாது. “தீபாவளி தினத்திலேகூட அந்நிய தேசத் துணிகள் வாங்கும் துரோகிகள் நமது நாட்டிலே இருப்பார்களானால் நரகாசுரன் ப்படி அ ழிவான்? லட்சுமிதேவி எப்படி ஜயமடைவாள்?”
மகாவீரத்தன்மை பெற்று அஷ்டலக்ஷ்மிகளுக்கும் இருப்பிடமாக விளங்குவதற்குரிய வழிகளைத் தேடுங்கள் உங்களுக்கெல்லாம் சர்வாபீஷ்டமும் சித்தியடைவதாக.— பாரதி
வந்தே மாதரம் (இந்தியா )
நன்றி மஞ்சரி, 1968T
—subham—
AGS- தீபாவளி, மனித மிருகங்கள், தமிழபிமானி, சுப்பிரமணிய பாரதி
மஹாகவி பாரதியாரின் கவிதா இலக்கியம் உலகில் பரவி பாராட்டப்படும் அளவில் அதிகமாகப் பேசப்படாதவை அவரது அற்புதமான கதைகள்!
இவற்றில் ஒன்று நவதந்திரக் கதைகள்.
கதைக்குள் கதை சொல்லும் பாணி தொன்று தொட்டு பாரத நாட்டில் இருந்து வரும் ஒரு பாணி. பஞ்ச தந்திரக் கதைகள்,விக்கிரமாதித்தன் கதைகள் போல மஹாகவி அமைத்திருக்கும் ஒரு தொடர் கதை நவதந்திரக் கதைகள்.
சுதேசமித்திரன் இதழில் 10-8-1916 முதல் தொடராக இது வந்தது. சில சமயம் கதைத் தொடர் பிரசுரமாகவில்லை.
மிக நீண்ட தொடராக அமைய வேண்டிய இது முற்றுப் பெறவும் இல்லை. 26-2-1918 இதழுடன் இது நின்று விட்டது.
இந்தக் கதைகள் பாரதி பிரசுராலயத்தாரால் 1928-ம் வருடம் நூலாக வெளியிடப்பட்டது.
இதற்கு தினமணியில் க.நா.சு. அவர்கள் ஒரு விமரிசனத்தையும் எழுதி இருந்தார்.
வேதாரண்யத்தில் விவேக சாஸ்திரி என்ற பிராமணருக்கு மூன்று குமாரர்கள். அவர்களுக்கு உலகியல் ஞானம் இல்லை என்று குறைப்பட்ட சாஸ்திரி தனது ஆயுள் முடிய இன்னும் ஒரு வருடமே இருப்பதால் கவலை மிகக் கொண்டார்.
தன் குமாரர்களை லௌகீக ஞானம் பெறும் பொருட்டு சில கதைகளைக் கூறலானார்.
அதுவே நவதந்திரக் கதைகள்.
இந்தக் கதைகளில் நுட்பமான செய்திகள் மஹாகவியால் ஆங்காங்கே தரப்பட்டுள்ளன.
கதைகளில் மனிதர்களோடு பறவைகளும், விலங்குகளும் கதாபாத்திரங்களாக வருகின்றன.
எளிய நடை, ஆங்காங்கே தனக்கே உரித்தான நகைச்சுவை, படிக்கத் தூண்டும் கதை அமைப்பு ஆகியவற்றால் இது சிறந்து விளங்குகிறது.
தெய்வ பக்தி எதையும் சாதிக்கும். விவேகம் வெற்றி தரும். துரோகம் செய்வது பாவம். தன் தவறை உணர்ந்தவனை மன்னிக்கலாம். நேர்மை, அன்பு, விவேகம், இறை பக்தி இவை அனைத்தும் நல்லனவற்றை நல்கும் என்பன போன்ற நீதிகளை இந்தக் கதைகளை ஊன்றிப் படித்து அறியலாம்.
விவேக சாஸ்திரி தனது பிள்ளைகளுக்குக் கூறுவது போல மஹாகவி அனைத்து மக்களுக்கும் நீதிகளைச் சொல்கிறார்.
ஆனால் மிக பிரம்மாண்டமாக அமைய வேண்டிய இந்தத் தொடர் டக்கென்று முடிந்தது தமிழ் மக்களின் துரதிர்ஷ்டமே!
கதையின் சில பகுதிகளை இங்கு பார்க்கலாம். இவை முழுக் கதையையும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும்.
இந்தக் கதைகளை இணைய தளத்தில் இப்போது படிக்கலாம்; தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.
1
ஆராய்ந்து காரியத்தில் இறங்கு!
கேளீர், மக்களே! ஒரு காரியம் தொடங்கும்போது அதன் பயன் இன்னதென்று நிச்சயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பயன் நமக்கு வேண்டியதுதானா என்பதையும் ஆராய்ந்து செய்யவேண்டும். பயன்படாத காரியத்திலே உழைப்பவன் சங்கீதம் படிக்க போன கழுதை போலே தொல்லைப்படுவான்?
2
மானி அய்யன் மாணிக்கஞ் செட்டியிடம் கூறுவது:
மானி அய்யன் : “கதையில்லை, செட்டியாரே, காரியம்.
இனி மூன்றாவது விஷயம் யாதெனில் இந்த வியாபாரிகளுக்குக் குமாஸ்தாக்களிடம் சரியாக வேலை வாங்கத் தெரியவில்லை. ஏனென்றால், முதற் காரணம், சம்பளம் நேரே கொடுக்க மனம் வருவதில்லை. ஒரு மனிதனால் நாம் லாபமடைய விரும்பினால் அவனுக்கு வயிறு நிறையச் சோறு போட வேண்டும். வெளியிலிருந்து வரும் புத்திசாலியைக் காட்டிலும் குடும்பத்தைச் சேர்ந்த மூடனே விசேஷமென்று நினைக்கக்கூடாது. மூடனிடம் உன்னுடைய காரியத்தை ஒப்புவித்தால் அவன் அதைக் குட்டிச்சுவராக்கிப் போடுவான். தவிரவும், முகஸ்துதி செய்பவனையும், பொய் நடிப்புக் காட்டுவோனையும், தலையிலே வைத்து, சாமர்த்தியமுள்ளவனையும், யோக்கியனையும் கீழே போடக் கூடாது. ஒரு நாளில் இத்தனை நாழிகைதான் வேலையுண்டு என்ற கட்டுப்பாடிருக்கவேண்டும். அதிக நேரம் வேலை வாங்குவதும், நினைத்த பொழுதெல்லாம் ஆள்விட்டு அழைப்பதும் குற்றம். இன்னும் சொல்லவா?”
3
ஏமாற்றுபவன் ஏமாற்றப்படுவான்!
சாமி : இப்போது ஒரு ஸூத்ரம் மாதிரியாகச் சொல்லி விட்டுப் போகிறேன். திருவாரூருக்குப் போய் திரும்பி வந்தவுடனே அதை விளக்கிச் சொல்லுகிறேன். அதற்கு முந்தி உமக்கே பொருள் விளங்கினாலும் விளங்கிப் போகும் அந்த ஸூத்ரம் எப்படி என்றால்:- “ம யே ம ஏ” . இவ்வளவுதான். இது கிரந்தம். எழுதி வைத்துக்கொள்ளும்.”
நான் தங்களிடம் சொல்லிய ஸூத்திரத்துக்குத் தாத்பர்யம் என்னவென்றால், “மற்றவனை யேமாற்றியவனை மற்றவன் ஏமாற்றுவான்”
4
பக்தியுடன் விவேகம் சேர்ந்தால் வெற்றி!
விவேக சாஸ்திரி சொல்லுகிறார்: “தெய்வபக்திக்கு நல்ல பயனுண்டு. ஆனால் அதனுடன் விவேகம் சேர்ந்திருக்க வேண்டும். விவேகமில்லாதவனுடைய தெய்வபக்திக்கு உறுதி கிடையாது. தெய்வத்தினிடம் ஒருவன் வரங்கேட்கப் போகையிலே முதலாவது விவேகம் கேட்கவேண்டும். விவேகமே இந்த உலகத்தில் எல்லாவிதமான செல்வங்களுக்கும் ஆரம்பம். விவேகமில்லாதவன் குருடன். விவேகத்துடன் சேர்ந்த தெய்வபக்தியே உண்மையானது. அவ்விதமான தெய்வ பக்தியினால் ஒருவன் எடுத்த காரியத்தில் ஜயமடையலாம். இதைக் குறித்து ஒரு கதை சொல்லுகிறேன்” என்றார்.
5
தெய்வ பக்தி மேன்மையான பலன்களைத் தரும்!
இதுவரை சொன்ன பகுதி ‘பயனறிதல்’ எனப்படும். இனிமேலே சொல்லப் போகிற பகுதிக்கு ‘நம்பிக்கை’ என்று பெயர். உங்களுடைய வினாவிற்கு விடை கதை மூலமாகச் சொல்லாமல் நேரே சொல்லி விடுகிறேன். மூடனுக்குச் சங்கடமுண்டாக்கி வேடிக்கை பார்ப்பவன் பாவி. அவனுக்கு இந்த ஜன்மத்தில் பலவிதமான தீங்குகள் விளையும். விவேகமில்லாதவன் கூட தெய்வபக்தி செய்வதனால் அவனுக்கு நன்மை ஏற்படாமல் போய்விடாது. ஆரம்பத்திலே பலவித இடையூறுகளுண்டாய், அவற்றிலிருந்து கடைசியாக விவேகம் உண்டாகும், பிறகு தெய்வபக்தி மேன்மையான பயன்களைத் தரும்” என்றார்.
6
பக்தியும் கர்மமும்
“பக்திமான் பிழைகளும் செய்வானோ?”
விவேக சாஸ்திரி: “மனதறிந்து செய்யமாட்டான். கர்ம வசத்தால் பிழைகள் ஏற்படலாம்.”
ஆஞ்சநேயன்: “கர்மம் பக்தியை மீறிச் செல்லுமோ?”
“விவேக: “பக்தி பரிபூரணமான பக்குவம் பெறும் வரையில், கர்மத் தொடர் மனிதனை விடாது. பழஞ்செய்கை பயன் விளைவிப்பதை அழிக்க வேண்டுமானால், பக்தியாகிய கனல் அறிவாகிய வேதிகையிலே புகையில்லாதபடி எரிய வேண்டும்.
இது போன்ற ஏராளமான அருமையான அறநெறி உபதேசப் பகுதிகளை இந்த நவதந்திரக் கதைகளிலிருந்து நாம் பெறுகிறோம்.
பாரதியார் இலக்கியத்தை மூன்று வகையாக அணுகலாம்.
கவிதை
கட்டுரை
கதைகள்.
இதில் கவிதை பற்றி ஏராளமான நூல்கள் வெளி வந்து விட்டன.
கட்டுரை மற்றும் கதைகள் பற்றி அவ்வளவாக நூல்கள் வெளியாகவில்லை.
இனி வரும் காலத்தில் இவை குறித்தும் அதிக நூல்கள் வெளிவரும் என்று நம்புவோம்!