VESSEL WITH YAJNA KUNDA DISCOVERED IN SCOTLAND

A crown is coming out of Yaga Fire 

Posted by tamilandvedas.com on 2nd September 2024

The urn was discovered ten years ago, but only now it was opened, and the details are revealed. It is from Persia (now Iran) where Vedic rites were practised. The religion started by Zoroaster around Sixth Century BCE agree with some aspects of the Vedic religion. Till this day, they wear sacred thread like Brahmins and till this day they do fire worship like Brahmins. Vedic Gods like Agni and Varuna are worshipped, but they don’t worship Indra. They mentioned 16 places as their original home and one of them was Sapta Sindhu (seven rivers of Indus Valley). 1000 years ago, they were driven out of Iran by Muslim invaders and the Parsees returned to Gujarat.

Here is the news published by newspapers yesterday and today. Newspapers gave more importance to Viking Robbers, because they did not know much about Zoroastrianism (Religion of Parsees/Persians/ancient Iran)

 Vikings

  1. any of the Scandinavian seafaring pirates and traders who raided and settled in many parts of north-western Europe in the 8th–11th centuries.

*****

The urn shows a Crown emerging from Yaga/Yajna fire

 yajñakuṇḍa (यज्ञकुंड).—n (S) A pit for sacrifice.

*****

Viking-age urn in Galloway Hoard originated in Iran, researchers discover

The vessel was found as part of the hoard uncovered in Kirkcudbrightshire a decade ago. 

Research has revealed the origins of a “remarkable” lidded urn that is more than 1,000 years old.

The Galloway Hoard is a collection of ancient treasures which was discovered 10 years ago.

The lidded vessel, which contained a number of items, has been found to be of west Asian origin.

The urn was found in 2014 wrapped in textiles, which themselves were considered an extremely rare survival.

The hoard is estimated to have been created around 900AD, and was discovered by excavators near Balmaghie in the historical county of Kirkcudbrightshire.

The textiles were studied and retained for further analysis, and laser cleaning has helped reveal further details of the vessel including crowns, fire altars, leopards and tigers.

The imagery is considered unusual in western Europe, with researchers stating it is associated with Zoroastrianism, the state religion of the Sasnian Empire in Iran, before Islam became the more widely practised faith during the 7th and 8th centuries.

New scientific analysis has confirmed the materials used to make the vessel originated in what is now central Iran.

Dr Martin Goldberg, from National Museums Scotland, said: “We had suspected from X-ray scanning the vessel that it may have originated somewhere in central or western Asia, but it’s only now that we’ve carefully conserved and analysed it that we can say this is definitively the case.

“It’s further evidence of the cosmopolitan make-up of the Galloway Hoard. We now know that the Viking-age silver that makes up most of the hoard was melted down from coins and metalwork from early medieval England.

“Some objects, like the lidded vessel, stood out from the rest and the scientific analysis now confirms this.

“It is incredible to imagine how the vessel made its journey halfway round the known world, from Iran to this distant corner of south-west Scotland.”

Dr Jane Kershaw, an expert on Viking-age silver from the University of Oxford, added: “Taking tiny samples from both the vessel body and the niello – the black silver-sulphide inlays that outline the decoration – we assessed the provenance of the silver.

“It was immediately clear that the vessel was unlike any other silver contained in the hoard: instead, the results point to origins in the Sasanian Empire, what is today Iran.

“Elemental analysis using portable X-ray fluorescence revealed that the vessel is an alloy of silver and relatively pure copper, which is typical of Sasanian silver, but not contemporary European silver.

“In addition, the isotopes of the lead contained within the silver metal and niello match ore from Iran. We can even go so far as to say that the niello derives from the famous mine of Nakhlak in central Iran.

“It’s fantastic to have scientific confirmation for the distant origins of this remarkable object.”

Vikings were pirates and robbers; Like British, Spanish and Portugese they plunderd the treasures from different countries.

The vessel will go on display for the first time later this month as part of the British Museum’s forthcoming exhibition, Silk Roads, in London.

Other objects from the Galloway Hoard will go on long-term display at the National Museum of Scotland, in Edinburgh, while a portion will go on show at Kirkcudbright Galleries.

Dr Sue Brunning, from the British Museum, said: “We’re delighted that visitors to Silk Roads will be the first in the world to see this key object from the Galloway Hoard.

“Among its remarkable contents were Scotland’s earliest recorded silk, and so it is a highly appropriate inclusion in the exhibition.

“For the first time it will be displayed alongside a similar vessel found in northern Britain and also used as a Viking-age treasure container, but the Galloway vessel is the only one confirmed as originating beyond Europe, in lands far to the east.

“It was, itself, a long-distance traveller on the Silk Roads’ sprawling networks.”

— subham—

Tags- Persian Urn, Scotland, Fire altar, Zoroaster, Yajna fire, Crown

Magic of Thailand Fair in London -2 (Post.13,622)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,622

Date uploaded in London – 2 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

I went to Magic of Thailand Fair yesterday 31st August 2024 and spent there for three hours. Becauseit was forenoon people were trickling in. I watched two people performing on the stage. Male and female singers sang Thai language songs. Later a woman played on Thai musical instrument. It looked like Thai Dripex Kalimba instrument.

The huge ground at Ealing common had over 200 shops, about 100 selling Thai food and another selling Thail clothes and artifacts.

The musical instrument evoked sweet sounds. Earlier I saw four Buddhist monks walking in the ground. A girl was ringing a bell to announce their arrival. They stopped at a few shops and got some food items. The shop owners saluted them and gave something with great reverence.

Among the artifacts, I saw Ganesh, Hindu Yogi and Buddha dolls and Thai dancers. In the food section, they arranged the food items with decorations.

I took some pictures. please see the attachments.

–subham–

Magic of Thailand-2, , London, Pictures, 31-8-2024, Part 2

அவ்வையாரின் ஆத்திச்சூடியில் மருத்துவ அறிவுரைகள்- 3 (Post No.13,621)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,621

Date uploaded in London – 2 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

88. மனம் தடுமாறேல்.

88.DO NOT BE TROUBLED IN MIND

தற்காலத்தில் அதிகமான பேரைப் பாதிப்பது மன நோய்; தேர்வு முடிவுகள் வந்தவுடன் மன வலிமை இல்லாதோர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்; இதே போல வறுமை , வர்த்தகத்தில் தோல்வி, தேர்தலில் தங்கள் தலைவர் தோல்வி, காதலில் தோல்வி என்ற விஷயங்களும் மனிதர்களுக்கு மோசமான முடிவைக் கொடுக்கின்றன குறுக்கு வழியில், உடனே வெற்றி கிடைக்க வேண்டும் என்ற எண்ணமும் இதற்கு காரணம். பாரதியாரின் பாசிட்டிவ் எண்ணம் உள்ள பாடல்களை மாணவ மாணவியருக்கு பாடமாக வைக்க வேண்டும். தெய்வத்தின் மீது நம் பிக்கையைப்  பரப்ப வேண்டும்.

14. அன்னையை வேண்டுதல்

எண்ணிய முடிதல் வேண்டும்,

நல்லவே எண்ணல் வேண்டும்;

திண்ணிய நெஞ்சம் வேண்டும்,

தெறிந்தநல் லறிவு வேண்டும்;

பண்ணிய பாவ மெல்லாம்

பரிதி முன் பனியே போல,

நண்ணிய நின்முன் இங்கு

நசித்திடல் வேண்டும் அன்னாய்!- பாரதியார்

****

மனதில்  உறுதி வேண்டும்

      வாக்கினிலே இனிமை வேண்டும்;

நினைவு நல்லது வேண்டும்,

      நெருங்கின பொருள் கைப்படவேண்டும்;

கனவு மெய்ப்படவேண்டும்,

     கைவசமாவது விரைவில் வேண்டும்;

தனமும் இன்பமும் வேண்டும்,

     தரணியிலே பெருமை வேண்டும்;

கண் திறந்திட வேண்டும்,

     காரியத்தில் உறுதி வேண்டும்;

பெண் விடுதலை வேண்டும்,

    பெரிய கடவுள் காக்க வேண்டும்;

மண் பயனுற வேண்டும்.

    வானமிங்கு தென்பட வேண்டும்;

உண்மை நின்றிட வேண்டும்!

ஓம்,ஓம், ஓம்– பாரதியார்

****

91.மீதூண் விரும்பேல்.

91.BE NOT GLUTTONOUS

Do not eat excessive food

You are what you eat ! என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்

இதன் பொருள் : நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதுதான் நீங்கள்! அதாவது உங்கள் மன நிலையும் உடல் நிலையும்  நீங்கள் சாப்பிடுவதைப் பொறுத்தே அமையும்

அம்மா கையால் , அன்புமிக்க உறவினர் கையால் சாப்பிட்டால் நல்ல குணங்கள் பெருகும்; ஹோட்ட்டலில் சாப்பிட்டால் அங்கு சமைப்போர் , பரிமாறுவோரின் எண்ணங்கள் நம்மைப் பாதிக்கும். ராம கிருஷ்ண உபதேச மஞ்சரியில் அவர் ஒரு கதை சொல்கிறார்.

ஒரு சாது சந்நியாசிக்கு கொலைகார எண்ணங்கள் வரவே அவர் என்ன செய்தாலும் அது அகலவில்லை. பின்னர் குருவிடம் சென்று முறையிட்டவுடன், நீ என்ன சாப்பிட்டாய் , எங்கெங்கு  சாப்பிட்டாய்? என்று வினவுகிறார்; அவர் சாப்பிட்ட இடங்களில் ஒன்று வன் முறையில் இறங்குவோர் இடம் ; இனிமேல் அங்கு சாப்பிடாதே என்று அறிவுரை தந்தார் .காம, க்ரோத , லோப எண்ணங்களைத் தவிர்க்க , நல்லோர் கையால் சாப்பிட வேண்டும் ; அப்படிக் கெட்டவர் கையால் சாப்பிட நேர்ந்தால் மனத்தளவில் இறைவனுக்குப் படைத்துவிட்டு சாப்பிட வேண்டும் .

உடல் ரீதியான விளைவுகளை விளக்கவே தேவை இல்லை; சர்க்கரைச் சத்து, கொழுப்புச் சத்து உணவுகளைத் தவிர்த்தால் போதும்; அதாவது அளவுக்கு மீறக் கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்ற பழமொழியை நாம் நினைவிற்கொள்ள வேண்டும் .

நேரம் இருந்தால் பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா சத்வ , ராஜஸ, தாமஸ உணவுகள் எவை என்று கொடுத்த பட்டியலையும் படியுங்கள் (இதே பிளாக்கில் கட்டுரைகள் உள )

****

நீதி வெண்பாவில் வரும் தமிழ் பாட்டு ஒன்று கூறுகிறது:

“ ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே!

இருபோது போகியே யென்ப—திரிபோது

ரோகியே நான்குபோ துண்பா னுடல் விட்டுப்

போகியே யென்று புகல் உண்பான் ”

(ஒருவேளை உண்பான் யோகி, இருவேளை உண்பான் போகி

மூவேளை உண்பான் ரோகி  நான்கு வேளை உண்பான் போகியே போகி (ஆள் அவுட்!) என்பது இதன் பொருள்)..

யோகி போல உண்ணாவிட்டாலும் ரோகி அளவு உண்ணாதீர்கள் !

****

உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு – என்று கொன்றை வேந்தன் கூறுகிறது,

காரணம்? — பெண்கள் சமையல் அறையில் அதிகம் புழங்குவதால் ‘’ருசி பார்க்கும்’’ சாக்கில் அல்லது குழந்தைகளுக்கு ஊட்டும் சாக்கில் அதிகம் சாப்பீட்டுவிட்டு எப்போதும் ‘’கர்ப்பிணி போல’’ காட்சி அளித்தால் நன்றாக இராது.

****

திருமூலரும் திருமந்திரத்தில் நமக்கு உணவு பற்றி நல்ல அறிவுரைகளை வழங்குகிறார் :

அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை

பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்

உண்டி சுருங்கில் உபாயம் பலவுள

கண்டங் கறுத்த கபாலியு மாமே.– திருமந்திரம்

பொருள்

உடலுறவு (புணர்ச்சி) SEX குறைந்தால் , நமக்கு இறைவன் அளித்த மூச்சு எண்ணிக்கை மிகும். அதனால் உடம்புக்கு அழிவில்லை.

உணவு அளவிற் சிறிது குறைத்து உண்டால்,  மூச்சு மிகுதியாகத் தங்கும். அதனால் இன்பம் மிகும்

பொதுவாக மக்கட்கு உள்ளே போகும் மூச்சு பத்து விரல்; வெளியே போகும் மூச்சு  பன்னிரண்டு விரல்;. இம் முறை, முறையே நடக்கும்போது இருபத்துநான்கு விரல், ஓடும் போது நாற்பத்திரண்டு விரல், உண்ணும்போது பதினெட்டு விரல், உறங்கும்போது ஐம்பது விரல், உடலு றவின்போது அறுபது விரல், மூச்சு வெளிச்செல்லும். விரல் – அங்குலம்.;

செக்ஸ், கோபம்,முதலியன நமது உடல் வங்கியிலுள்ள மூச்சு என்னும் பணத்தை வேகமாகச் செலவிடும் ; இறைவன் நம்மை பூமிக்கு அனுப்பியபோது உனக்கு இத்தனை மூச்சுகள் என்று கணக்குப்போட்டு அனுப்பி இருப்பதாக திருமூலர் வேறு ஒரு பாடலில் கூறுகிறார் அதை விரைவாகச் செலவிட்டு எல்லோருக்கும் குட் பை சொல்லிவிட்டுப் போவதும், குறைவாகச் செலவிட்டு கொள்ளுப்பேரனையும் ஆசீர்வத்திது விட்டுப்போவதும் நம் கையில்தான் உள்ளது.

Continence Leads to God-hood

If the seminal seed thickens by sexual abstention

It shall never be destroyed;

If the body is lightened by austere discipline

Long shall the life be;

If food is eaten sparingly

Many the good that flow;

You may verily become

The Lord of Dark-Hued throat.—Tiru manthiram

To be continued……………………………………..

Tags- அவ்வையாரின் ஆத்திச்சூடி, மருத்துவ அறிவுரைகள், part 3, திருமூலர் , பாரதி, உண்டி சுருக்குதல், ஒருவேளை உண்பான், மனதில் உறுதி, ஒருபோது யோகியே

கடவுள் எங்கே இருக்கிறான் ?  அப்பர், திருமுலர், கம்பர் பதில் (Post No.13,620)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,620

Date uploaded in London – 2 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx   

கடவுள் எங்கே இருக்கிறான்? என்ற கேள்விக்கு மூன்று பெரியார்கள் பதில் சொல்லிவிட்டார்கள் ; மக்கள் கேட்ட கேள்விகள் ?

கடவுள் எங்கே இருக்கிறான்?

மனதுக்குள் இருக்கிறானா ? வெளியே இருக்கிறானா ?

அவனுக்கு உருவம் உண்டா? இல்லையா?

நேரடியாகப் பார்க்கலாமா? அல்லது மறைவாக இருக்கிறானா?

அவன் ஒருவனா ? பல வடிவங்களில் உள்ளானா ?

இந்த எல்லா கேள்விகளுக்கும் அப்பர், திருமுலர் , கம்பர் பதில் சொல்லியிருக்கிறார்கள்

****

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் பதில்

அழுக்கடைந்த கண்ணாடியில் சூரிய கிரணம் பிரதிபலிப்பதில்லை .அது போல மாயைக்குட்பட்ட அசுத்த ஆத்மாக்களின் இருதயத்தில் ஈஸ்வர தேஜஸ் தோன்றுவதில்லை.ஆனால் தெளிவான கண்ணாடியில் சூரியன் பிரதிபலிப்பதைப் போல தூயோரின் மனத்தில் பகவான் தோன்றுகிறான் .

****

ஒரு லிட்டர் பாலில் இரண்டு லிட்டர் நீரைக் கலந்துவிட்டால், அதிலுள்ள தண்ணீர் முற்றும் வற்றி , பால் மட்டும் கிடைக்க நீண்ட நேரம் காய்ச்சவேண்டும் சாதாரண இல்லறத்தானுடைய மனம் , தண்ணீர் கலந்த பால் போன்றது. உண்மையான பக்தனுடைய நிலையை அடைய அவனுக்கு நீண்ட காலமும், நெடிய முயற்சியும் தேவை. (இதற்குப் பின்னர்தான் கடவுள் தரிசனம் )

****

கம்பர் பதில்

ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம்

அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம்

இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம்

நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!

இறைவன் ஒன்று என்று சொன்னால் ஒன்றுதான்; பல என்றால் பலவேதான்; அப்படி அல்ல என்றாலும் அல்லதான்; அப்படித்தான் என்றால் ஆம் அப்படித்தான்; இல்லை என்றாலும் இல்லைதான்; உண்டு என்றாலும் உண்டுதான்; எல்லாம் நமது நம்பிக்கையில்தான் இருக்கிறது. இதனை உணர்ந்து கொண்டால் நம் வாழ்வு நன்று!

****

அப்பர் பதில்

விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே

– திருநாவுக்கரசர்/அப்பர்

விறகில் தீ இருப்பது போலவும், பாலில் நெய் இருப்பது போலவும், மணியில் ஒளி இருப்பது போலவும் இறைவன் மறைந்திருக்கிறான். ஆனால் சோதி வடிவாய் இருக்கிறான். அதிலும் மணிச்சோதியாய் மாமணிச்சோதியாய் உள்ளான்.

                  அப்படியிருந்தும் நம்கண்ணுக்குத் தெரியவில்லையே என்பார் சிலர். குருட்டுக் கண்ணுக்கு உலகியல் பொருள் தெரியாது அதுபோல அறியாமை நிரம்பிய நம்மனோருக்கு அச்சோதி புலப்படாது. நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவாகிய கோலை நட்டு, உணர்வாகிய கயிற்றினால் முறுக வாங்கிக் கடைய முன்னின்றருளுவான் என்கிறார். அப்பர். முறுகக் கடைய விறகில் தீ தோன்றும். வாங்கிக் கடைய பாலில் நெய் தோன்றும் கடைய மணியில் ஒளி தோன்றும். எனவே பக்தியுடன் உறவுடன் முறுக வாங்கிக் கடைந்து இறைவனைக்கண்டு இன்புறுவோமாக.

****

திருமுலர் பதில்

உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்

குள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை

உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்

குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.

பொருள்

பக்தியுடன் வழிபடுவோர், எங்கும் நிறைந்த இறைவனை , உள்ளத்திலும் காணலாம்; வெளியிலும் காணலாம். உள்ளத்தும் இல்லை; புறத்தும் இல்லை என்று கூறும் நாத்தீகர்களுக்கு  உள்ளத்தும் புறத்தும் வெளிப்படாது மறைந்து நிற்பான். 

Existence of God is an Act of Faith

Say, Lord is within you and without you

Then sure my Lord is within you and without you;

To them they say,

He is neither within you or without you

Sure is He nowhere for them.

 –subham—

Tags- கடவுள் எங்கே இருக்கிறான் ? அப்பர், திருமுலர், கம்பர் பதில் , ராமகிருஷ்ண பரமஹம்ஸர் பதில்

குத்தல் மொழி’ எவ்வளவு நேரம் பேசுகிறீர்கள்? (Post No.13,619)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.619

Date uploaded in London – 2 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

குத்தல் மொழி’ எவ்வளவு நேரம் பேசுகிறீர்கள்?

ச. நாகராஜன்

சீரியல் பார்க்கும் நம் தமிழ் மகளிர் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தியை அமெரிக்க ஆய்வு ஒன்று வெளியிட்டுள்ளது.

கீழே உள்ள பத்து கேள்விகளுக்கு தமிழ் இல்லங்களில் உள்ள தலைவனும், தலைவியும் பதிலளித்தால் தங்கள் தலைவிதியுடன் தங்கள் குழந்தைகளின் தலைவிதியையும் சேர்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

கேள்வி 1 : – 25  வயது  முதல் 34 வயது முடிய உள்ள தந்தைமார்கள் வாரத்திற்கு எத்தனை மணி நேரம் டி.வி, பார்க்கிறார்கள்?

அ) 10 மணி ஆ) 15 மணி இ) 20 மணி ஈ) 26 மணி

கேள்வி 2:- வேலைக்குப் போகாமல் இருக்கும் இல்லத்தலைவி வாரத்திற்கு எத்தனை மணி நேரம் டி.வி. பார்க்கிறார்?

அ) 20 மணி ஆ) 25 மணி இ) 30 மணி ஈ) 48 மணி

கேள்வி 3:- 18 வயது முடிந்த நிலையில் சராசரியாக நம் குழந்தைகள் எத்தனை வன்முறைக் காட்சிகளை டி.வி,யில் பார்த்திருக்கிறார்கள்?

அ) 25000 ஆ) 50000 இ) 75000  ஈ) 180000

கேள்வி 4 :-  தன் குழந்தைகளுடன் அர்த்தமுள்ள விஷயங்களை ஆக்கபூர்வமாகப் பேசுவதில் ஒரு தந்தை எவ்வளவு நேரம் செலவிடுகிறார்?

அ) ஒரு நாளைக்கு ஒரு நிமிடம் ஆ) வாரத்திற்கு 10 நிமிடங்கள் இ) வாரத்திற்கு 20 நிமிடங்கள் ஈ) வாரத்திற்கு 30 நிமிடங்கள்

கேள்வி 5 :-  மணமான தம்பதியினர் ஒவ்வொரு நாளும் தங்களுக்குள் ஆக்கபூர்வமான அர்த்தமுள்ள விஷயங்களை எவ்வளவு நேரம் பரிமாறிக் கொள்கிறார்கள்?

அ) நான்கு நிமிடங்களுக்கும் கீழாக ஆ) 15 நிமிடங்கள் இ) சுமார் 20 நிமிடங்கள் ஈ) 30 நிமிடங்கள்

கேள்வி 6 :-  ஒரு மனிதனை வாழ்வில் உயர வைப்பது உளவியல் ரீதியாக அவருக்கு நாம் தரும் ஆக்கபூர்வமான ஊக்கம். இதை VALIDATION என்பர். இதற்கு எதிர்மறையாக அவனை நசுக்கும் விமரிசனங்கள், கேலி, நையாண்டி மொழிகள் அவனது ஊக்கத்தை இழக்கச் செய்து அவனைச் சீரழிக்கும். சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு இளம் வயது டீன் – ஏஜர் தன் பெற்றோர், ஆசிரியர் மற்றும் நண்பர்களிடமிருந்து இப்படிப்பட்ட எத்தனை “குத்தல்” மொழிகளைப் பெறுகிறான்?

அ) 11 ஆ) 21 இ) 57 ஈ) 113

கேள்வி 7  :-  ஊக்கத்தை இழக்கச் செய்யும் குத்தல், கேலி மொழிகளை ஒரு டீன் – ஏஜர் தன் டீன் – ஏஜ் வயதிற்குள் (13 முதல் 19 வயது) எத்தனை பெறுகிறார்?

கேள்வி 8 :- உங்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்கள் பெறும் குத்தல் மொழிகளுக்கு ஈடு கொடுக்கும் விதமாக எத்தனை ஊக்க மொழிகளை நீங்கள் தருகிறீர்கள்?

கேள்வி 9:- சில உளவியல் நிபுணர்கள் ஒரு ஊக்க மொழி பத்து குத்தல் மொழிகளின் புண்களை ஆற்றிவிடும் என்று நம்புகின்றனர். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடமும், ஊழியர்களிடமும் எத்தனை குத்தல் மொழிகளை நீங்கள் தருகிறீர்கள்? அத்துடன் உங்கள்  முன்பாக மற்றவர்களைத் தர அனுமதிக்கிறீர்களா?

கேள்வி 10:- உங்கள் கீழ் பணி புரியும் ஊழியர்களுக்கு ஆக்க பூர்வமாக அல்லது அவர்களைச் சரி செய்யும் விதமாக நீங்கள் அவர்களுடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்?

அ) ஒரு நாளைக்கு ஒரு நிமிடம் ஆ) வாரத்திற்கு 10 நிமிடங்கள் இ) வாரத்திற்கு 20 நிமிடங்கள் ஈ) வாரத்திற்கு 30 நிமிடங்கள்

கேள்விகளுக்கு விடைகளை எழுதியவர்கள் இங்குள்ள விடைகளைப் பார்த்து ஒப்பீடு செய்து கொள்ளலாம்

========================================================================

விடைகள்

1) ஈ) 26 மணி நேரம் (அடேயப்பா)

2) ஈ) 48 மணி நேரம் (அடேங்கப்பா)

3) ஈ) 200000 – இளம் வயதினருக்கான அமெரிக்க அகாடமி தரும் புள்ளிவிவரம் இது.

4) அ) ஒரு நாளைக்கு ஒரு நிமிடம்

5) அ) நான்கு நிமிடங்களுக்கும் கீழாக (-டைவர்ஸ் ஏன் அதிகமாகாது?)

6) ஈ) 113 (அடேயப்பா, இத்தனை முறையா குத்தல் மொழிகளைப் பெறுவது?)

7) 288715 (நம்பமுடியவில்லையா?)

8) ஒரு நல்ல மானேஜர் அல்லது குடும்பத் தலைவர் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஊக்கமொழிகளைத் தந்து கொண்டே இருப்பார். இவர் தான் காட்ஃபாதர்!

9) ஒரு நல்ல மானேஜர் அல்லது குடும்பத் தலைவர் தன் வாழ்க்கை அகராதியிலிருந்து நச்சு மொழிகளை எடுத்து எறிபவராகவே இருப்பார்.

அதுமட்டுமின்றி தான் இருக்கும் பகுதிக்குள் இப்படிப்பட்ட குத்தல் பேச்சுக்கே இடம் இல்லாமல் செய்து விடுவார்.

10) உங்கள் கீழ் பணிபுரியும் ஒவ்வொருவரும் ஒரு தனிப்பட்ட குணாதிச்யம் உடையவர். ஆகவே நிலைமைக்கும், ஆளுக்கும் ஏற்றபடி ஊக்க மொழிகளை உகந்த முறையில் தர வேண்டியிருக்கும்! இதே போலத்தான் குடும்ப உறுப்பினர்களுக்கும் அவரவர்களுக்குத் தக்கபடி ஊக்க மொழிகளைத் தர வேண்டியிருக்கும். இதில் நேரப் பிரச்சினை இல்லாது தேவையான நேரத்தை ஒதுக்க வேண்டும்.

=======================================================================

ஒரு இல்லத்தலைவி வாரத்தில் 48 மணி நேரம் டி.வி. பார்ப்பதோடு, தன் குழந்தைகளையும் அவர்கள் “ஆளாவதற்குள்” இரண்டு லட்சம் வன்முறைக் காட்சிகளைப் பார்க்க அனுமதித்து, அவர்களுடன் ஒரு நாளைக்கு ஒரு நிமிட நேரம் மட்டுமே அர்த்தமுள்ள மொழிகளைப் பேசினால் அந்தக் குடும்பம் என்ன ஆகும்?

ஸ்டூவர்ட் சேஸ் என்ற பிரபல பொருளாதார நிபுணர் தனது நாட்களை எப்படிச் செலவழிக்கிறோம் என்று பார்க்க எண்ணி ஆராய ஆரம்பித்தார். இதற்காக மனித மதிப்புகளை (அன்பு, கருணை, தர்மம், சாந்தி, அஹிம்சை போன்றவை) எழுதி வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் “வாழ்ந்த காலத்தை”க் கணக்கிட்டார்.

ஒரு வாரத்திற்கான 168 மணி நேரத்தில் “உயிருடன் இருந்து வாழ்ந்தது” எத்தனை நேரம், “இருந்தும் இறந்தது” எத்தனை நேரம் என்று அவர் கணக்கிட்டதில் அவர் கண்டுபிடித்தது என்ன தெரியுமா? சுமார் நாற்பது மணி நேரம் மட்டுமே தான்  வாழ்ந்ததாக அவர் கண்டு பிடித்தார். அதாவது சுமார் 25 சதவிகிதம் மாட்டுமே தான் வாழ்ந்ததைக் கண்ட அவர் தன்னை மாற்றிக் கொண்டார்.

நாமும் கூட வாரத்தில் 168 மணி நேரத்தில் “இருந்து வாழ்ந்தது” எத்தனை மணி நேரம் என்று கணக்கிடலாம்.

வாரம் முழுவது “வாழ” முயற்சி எடுக்கும் தம்பதியினரின் குடும்பம் நாட்டுக்கே முன்னோடியாகத் திகழும் லட்சியக் குடும்பமாக ஆகிவிடும்.

இது இன்றைய அறிவியல் ஆய்வு மூலம் நாம் பெறும் அற்புத உண்மை!

**

சினேகிதி மாத இதழில் 2006, ஏப்ரல் மாதம் வெளியான கட்டுரை.

Magic of Thailand Fair in London -1 (Post No.13,618)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,618

Date uploaded in London – 1 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

I went to Magic of Thailand Fair yesterday 31st August 2024 and spent there for three hours. Becauseit was forenoon people were trickling in. I watched two people performing on the stage. Male and female singers sang Thai language songs. Later a woman played on Thai musical instrument. It looked like Thai Dripex Kalimba instrument.

The huge ground at Ealing common had over 200 shops, about 100 selling Thai food and another selling Thail clothes and artifacts.

The musical instrument evoked sweet sounds. Earlier I saw four Buddhist monks walking in the ground. A girl was ringing a bell to announce their arrival. They stopped at a few shops and got some food items. The shop owners saluted them and gave something with great reverence.

Among the artifacts, I saw Ganesh, Hindu Yogi and Buddha dolls and Thai dancers. In the food section, they arranged the food items with decorations.

I took some pictures. please see the attachments.

To be continued………………………….

–subham–

Magic of Thailand-1, , London, Pictures, 31-8-2024

ராமாயண சிற்பங்கள் உள்ள பச்சல சோமேஸ்வரர் கோவில்-28 (Post No.13,617)

Chaya Someswar Temple.

Pachala Someswar Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,617

Date uploaded in London – 1 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 28

சாயா சோமேஸ்வரர் கோவிலில் நிழல் அதிசயம்

Pachala Temple Pictures

Mohini distributing Amrita 

Jatayu

பனகால் என்றும் பச்சல என்றும் அழைக்கப்படும் சிற்றூர் தெலுங்கானா மாநிலத்தில் நலகொண்டா நகருக்கு வெகு அருகில் இருக்கிறது. ஹைதராபாத்திலிருந்து சுமார் 110 கி.மீ..

இங்குள்ளது சிவன் கோவில்; ஆனால் அற்புதமான ராமாயண ,சிற்பங்கள் நிறைந்த கோவில். சுமார் 900 ஆண்டுகள் பழமையானது.

முதலில் கொஞ்சம் சொல் ஆராய்ச்சியில் இறங்குவோம். பச்சல என்று ஏன் பெயர் வந்தது என்றால் அங்குள்ள சிவன் பச்சை நிறக் கல்லால் ஆனது; ஆனிக்ஸ் Green Onyx எனப்படும் இரத்தின வகைகைக் கல் ; மரகதத்தை வீட மதிப்பு குறைந்தது . நல கொண்டா என்றால் நீலகிரி– நீல மலை ; உண்மைதான் ! ஹைதராபாத்திலிருந்து காரில் சென்றால் ஒரு புறம் நீல மலையைப் பார்த்து ரசித்த வண்ணம் செல்லலாம்.

சிறப்புகள் என்ன?

கோவிலில் சிவன் பிரம்மா, விஷ்ணு மூவரும் இருந்தாலும் சிவன்தான் கர்ப்பக்கிரகத்தில் உள்ளார்; பூஜை புனஸ்காரங்கள் உண்டு . ஆயினும் ராமாயண சிற்பங்கள்தான் அதிகம் ; அவை தவிர சிவ லீலைகளும் , மகாபாரதக் காட்சிகளும் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன ; சுமார் 70 தூண்களை அழகாகச் செதுக்கியுள்ளனர். கோவிலுக்குப் பின்புறத்தில் மியூசியம் உள்ளது. பெரிய ஏக்கர் கணக்கில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள இடமே மியூசியம் ; வரலாற்று ஆய்வாளர்களுக்கு சொர்க்க பூமி.

கோதண்ட ராமன் வில்லை வளைக்கும் காட்சி, சூர்ப்பனகையின் மூக்கை அறுக்கும் காட்சி, ஜடாயுவின் உயிர்த்தியாகம் முதலிய காட்சிகள் உள ; இவைதவிர மணிகள் கட்டிய அலங்கார நந்தி, நடனமாடும் நங்கைகள், மிருதங்க வாத்யம் முழங்கும் காட்சிகள் , ஆகியனவும் புகைப்படம் எடுப்போருக்கு நல்ல விருந்து சமைக்கும் .

வரலாறு

வெளியிலிருந்து பார்த்தால் பாழடைந்த கோவிலாகவே தென்படும்; உண்மையில் பூர்த்தியாகாத கோவில்தான். மூன்று சந்நிதிகளை இணைத்து பிற்காலத்தில் சுவர்களை எழுப்பியுள்ளனர்; உள்ளே அழகிய சிற்பங்கள் உள்ளன ; வெளிப்புறச் சுவர்களிலும் இதிஹாச, புராண சிற்பங்களை அமைத்துள்ளனனர். விஷ்ணுவின் தசாவதாரங்களையும் சிற்பத்தில் காணலாம்.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அருகிலேயே , சுமார் 2 கி.மீ. தொலைவில் அதிசயங்கள் நிறைந்த சாயா சோமேஸ்வரர் கோவில் உளது ; அதன் விவரங்ககளை தனியே காண்போம்.

ஊரில் வெங்கடேசர் கோவிலும் இருக்கிறது.

காகதீய மன்னர்கள் சிவ பக்தர்கள்; அவர்கள் கட்டிய கோவில்தான் இது.

1982- ம் ஆண்டில் கோவிலுக்குப் பின்புறம் மியூஸியத்தை அமைத்தனர். சுமார் மூன்று  ஏக்கர் பரப்பில் 640 பொருட்களைக் காணலாம். அவை அந்தப் பகுதியின் 2000 ஆண்டு வரலாற்றை  நம் கண் முன்னே கொண்டுவரும்.

xxxx

சாயா சோமேஸ்வரர் கோவிலில் நிழல் அதிசயம்

சாயா என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு நிழல் என்று பொருள்; அங்கே விஞ்ஞானிகளுக்கும் விளங்காத அளவுக்கு நிழல் விழுகிறது; இதுவும் ஒரு சிவன் கோவில்தான்.

நல்கொண்டாவிலிருந்து 4 கி.மீ தூரத்திலும், ஐதராபாத்திலிருந்து 107 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.  உதயசமுத்திரம் ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது. கோவிலில் உள்ள லிங்கம் பொதுவாக முழங்கால் அளவு ஆழமான நீரில் உள்ளது.

சாயா சோமேஸ்வரர் கோவிலில் சிவன், விஷ்ணு, சூரிய பகவான் ஆகிய மூவருக்கும் சந்நிதிகள் இருக்கின்றன  அவைகளை மண்டபத்தால் இணைத்திருப்பதால் இதை திரிகூட வகை கோவில் என்பார்கள் ; கோபுரம் பிரமிடு போல காட்சி தரும்; அதுவும் ஒரு புதுமைதான்  மூன்று பிரமிடு வடிவ கோபுரங்களைக் காணலாம்.

கோவிலின் தூண்களில் ராமாயண மற்றும் மகாபாரத காட்சிகளை காணலாம் குண்டூர் தெலுங்குச் சோழர்களின் கைவண்ணம் இது.

இந்தக் கோவிலுக்கான சாசனங்கள் தெலுங்கு மன்னர் பரம்பரையைச் சார்ந்த காகதியர்கள் கி.பி. 1290ல் ஆட்சிக்கு வந்த காலத்தில் எழுதப்பட்டன. அப்போது கோவில் திருப்பணிகளும் நடைபெற்றது. குண்டூர் சோழர்கள் மற்றும் காகதியர்கள் கால கலைகள் ஆலயத்தில் இடம் பெற்றுள்ளன. டெல்லி சுல்தானின் காலத்தில் முஸ்லீம் படைகள் கோவிலை இடித்து நாசம் செய்தன.

நிழல் அதிசயம் என்றால் என்ன ?


Churning the Milky Ocean in Pachala Temple

ஒரு பொருளுக்கு முன்னால் இருந்து சூரிய வெளிச்சம் வந்தால் பின்புறத்தில் நிழல் விழும்; இது இயற்கை நியதி. சூரியன் மேலே போகப்போக நிழலும் மாறிக்கொண்டே வரும்; ஆனால் இந்தக் கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் பின்னால் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதோடு மட்டும் அல்லாமல், சூரியன் மலவாயில் விழுந்த பின்னரும் நிழல் நீடிக்கிறது. இதனால்தான் சாயா / நிழல் என்ற அடை மொழி.

பகல் நேரம் முழுதும் சிவலிங்கத்தின் மீது ஒரு தூணின் நிழல் விழுகின்றது. இந்த தூணின் நிழல் ஒரே இடத்திலேயே இருக்கிறது .  கருவறைக்கு முன்பாக மொத்தம் நான்கு பட்டை வடிவ தூண்கள் உள்ளன கருவறைக்குள் விழும் நிழல் எந்த தூணுக்கானது என்பதை கண்டறிய முடியவில்லை..

தூண்களில்  ராமாயணம், மகாபாரத  நிகழ்சசிகளை சிற்பங்களாக சித்தரித்துள்ளனர் ;மானாக உருவம் எடுத்த மாரீசனை ராமன் கொல்லும் காட்சி, மானின் தலை விழுந்ததும், மாரீசன் வெளிப்படுதல் போன்ற காட்சி அருமையாக வடிக்கப்பட்டுள்ளன.

தலை வெட்டப்பட்ட நிலையில்,  பல நந்திகள் கம்பீரமான தோற்றத்துடன் ஆலய வளாகத்தில்  காட்சி அளிக்கின்றன.  இது முஸ்லீம் படைகளின் அழிவு வேலை என்பதை சொல்லத்  தேவை இல்லை. காலத்தால் மன்னிக்கமுடியாத ஈனச் செயல்கள் அவை .

–subham—

ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் Part 28, ராமாயண சிற்பங்கள், ,பச்சல சோமேஸ்வரர் கோவில், சாயா சோமேஸ்வரர் கோவில், நிழல் அதிசயம்

அவ்வையாரின் ஆத்திச்சூடியில்   அருமையான மருத்துவ அறிவுரைகள்-2 (Post No.13,616)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,616

Date uploaded in London – 1 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx   

Part 2

33.காப்பது விரதம்

33.FASTING MUST BE OBSERVED

உண்ணாவிரதம் இருப்பதால் வயிற்றுக்கும் குடலுக்கும் கொஞ்சம் ஓய்வு கிடைக்கிறது. இதனால் உடலும் மனமும் சுத்தமாகிறது. இந்துக்கள் மாதத்துக்கு இரண்டு  முறை வரும் ஏகாதஸி நாட்களை பட்டினி விரதத்துக்கு ஒதுக்கியுள்ளனர். . அந்த நாட்களில் இறைவனையும் நினைக்க வேண்டும்; நாம் உணவில்லாமல் இருக்கும்போதுதான், ,உணவே கிடைக்காமல் கஷ்டப்படுவோரின் நிலையும் நமக்கு விளங்குகிறது.

உடனே வள்ளுவரின் குறள் நினைவுக்கு வருகிறது :

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.–குறள் 322

கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

xxx

54.சோம்பித் திரியேல்

54.DO NOT WANDER ABOUT IN IDLENESS

சோம்பேறியாக வாழ்க்கை நடத்தி, உறவினர்கள் சேர்த்துவைத்த சொத்து சுகங்களை அனுபவித்தால் , பிற்காலத்தில் உடம்பு வேலை செய்ய வணங்காது . மேலும் மன நிலையும் பாதிக்கப்பட்டு சூதாட்ட, சீட்டாட்டங்களில் ஈடுபடும்.. இழப்புகள் வருகையில் மன நிலை  பாதிக்கப்பட்டு மன நோயாளி ஆகிவிட வாய்ப்பு உண்டு.

xxxx

59. துன்பத்திற்கு இடம் கொடேல்.

59.DO NOT GIVE WAY TO TROUBLE

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில்.–குறள் 621

–என்ற வள்ளுவன் குறளை நினைவிற் கொள்ள வேண்டும். துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை. மன நிலை பாதிக்காதபடி இருக்க கவலைப் படுவதை நிறுத்த வேண்டும்.

xxxx

நீர் விளையாடேல்.

69.DO NOT PLAY IN WATER

கடல், ஆறு, குளம்,ஏரி , கிணற்றில் தவறி விழுந்து இறப்போரின் செய்திகள் வாரம் தோறும்  பத்திரிக்கைகளில் வருகின்றன. குறிப்பாக இளைஞர்களும் சிறுவர்களும்தான் இப்படி இறக்கிறார்கள் நீச்சல் தெரிந்தபோதும் அதிக உற்சாகத்தில் எல்லை மீறி நடந்து கொள்கிறர்கள்  ஆகையால் இந்த எச்சரிக்கையை சிறுவர்களிடம் பரப்பவேண்டும்.

xxxx

நுண்மை நுகரேல்.

70.DO NOT EAT DAINTIES/ OR NOT NICE IN FOOD

இதை நொறுக்குத் தீனி கூடாது என்று பொருள் கொள்ளலாம்..

உடலுக்கு அவசியம் இல்லாத, ருசிக்காக தின்னும் உணவுகள் இவை.

குறிப்பாக நொறுக்குத் தீனிகள் எண்ணெய்ப் பண்டங்களாகவோ அல்லது இனிப்புப் பண்டங்களாகவோதான் இருக்கும்; அவை இரண்டும் சர்க்கரை வியாதி, கொழுப்புச் சத்து தொடர்பான இருதய நோய்களை உண்டாக்கும். ஒருவேளை சத்தான உணவானாலும் கூட , முதலில் சாப்பிட்டது செரிமானம் ஆன பின்னரே அடுத்த உணவினை எடுக்க வேண்டும் . இதை வள்ளுவன் அழகாகச் சொல்லுவான்  :

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்–குறள் 942

முன் உண்ட உணவு செரித்த தன்மையை  அறிந்து தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை. என்பது இதன் பொருள்.

xxxx

நைவினை நணுகேல்.

74.DO NOT GO NEAR WHAT IS DANGEROUS/ DO NOT FOLLOW WHAT IS DESTRUCTIVE.

அபாயகரமானது எது , கெட்டது எது என்பதை புஸ்தகங்கள் சொல்லுவதை விட பெரியோர்கள் சொல்லுவதை விட, ஒருவரின் மனச்சாட்சியே சொல்லிவிடும் ; 12 வயத்துக்குக் குறைவான சிறுவர், சிறுமியருக்கு வேண்டுமானால் நாம் சொல்லித் தெரியும். ஏனையோருக்கு சொல்லாமலேயே தெரியும்.

சட்டத்தின் பிடியில் சிக்குவோர் எல்லாம் இப்படி ஆபத்தான அறநெறிக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு அகப்படுவதை , பிடிபடுவதை நாம் அன்றாடம் பத்திரிகைகளில் படிக்கிறோம். அப்படியும் இது நூற்றாண்டுக் கணக்கில் நடைபெறுவதால் அவ்வை நம்மை எச்சரிக்கிறார் ; இது ஒருவரின் மன நிலையை மிகவும் பாதிப்பதோடு அந்தக் குடும்பம், அவரது நெருங்கிய நண்பர்கள் மன நிலையையும் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை

xxx

நோய்க்கு இடம் கொடேல்.

76.DO NOT GIVE OCCASION TO DISEASE

வள்ளலார் ஒருமையுடன் நினது …….என்ற பாடலில் நோயற்ற வாழ்வில் நான் வாழவேண்டும் என்று முருகனை வேண்டுகிறார் . அபிராமி பதிகம் பாடிய அபிராமி பட்டர் கலையாத கல்வியும் …….. என்ற பதிகத்தில் கழுபிணி இலாத உடல் வேண்டும் என்கிறார் . திருப்புகழில் அருணகிரிநாதரோ ஏராளமான பாடல்களில் நோய்களின் பட்டியலைக் கொடுத்து , அவைகள் எல்லாம் வேண்டாம் என்கிறார். திருமூலரும் உடலே கோவில் என்று சொல்லி அதைப் பாதுகாக்க அறிவுறுத்துகிறார். ஏன் ?

நாம் உணவு விஷயத்திலும் ஒழுக்கம் விஷயத்திலும் கவனம் செலுத்தாவிடில் நோய்க்கு இன்விடேஷன் அனுப்பி என் வீட்டுக்கு/ உடலுக்கு வந்து தங்கி விட்டுப்போ என்று சொல்வதற்குச் சமம் ஆகும் .

அந்தக் காலத்தில் என் மேல் படாதே என்னைத் தொடாதே என்று சொன்னதை எல்லாம் கிண்டல் செய்தவர்கள் கோவிட் என்னும் சீன வைரஸ் பரவிய காலத்தில் படவும் இல்லை; தொடவும் இல்லை; அது மட்டுமல்ல; மூன்றடி விலகி நின்றனர் ; வாயை மூடி கவசம் போட்டனர் ; வெளிநாட்டுத் தலைவர்களும் கைகூப்பி நமஸ்தே சொன்னார்கள் ; நோய்க்கு இடங்கொடேல் என்பதை விளக்க இவை போதும் !

அவ்வையார் போன்றோர் இதே ஆத்திச் சூடியில் உணவு பற்றிதான் நம்மை மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறார்கள்.

இதை மேலும் காணப் போகிறோம்.

தொடரும் …………………………

Tags- அவ்வையார், ஆத்திச்சூடி,  அருமையான மருத்துவ அறிவுரைகள்  பகுதி -2, நோய், உணவு, நீர் விளையாட்டு

வம்புச் சண்டைக்கு வருவோரை சமாளிக்க முடியுமா? (Post No.13,615)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.615

Date uploaded in London – 1 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வம்புச் சண்டைக்கு வருவோரை சமாளிக்க முடியுமா? 

ச. நாகராஜன் 

“நான் பாட்டுக்கு ‘தேமேன்னு’ (தெய்வமே என்று) இருக்கேன்: என்னை வம்புச் சண்டைக்கு இழுக்கறா! இதைப் போக்க எந்தக் கட்டுரையாளராவது வழி சொல்ல முடியுமா என்ன?” என்று அங்கலாய்க்க வேண்டாம்.

சண்டையை நாமாகத் தொடங்காமல் இருக்கலாம்; ஆனால் ‘த்வஜம் கட்டிக் கொண்டு’ தொட்டதற்கெல்லாம் சண்டைக்கு வரும்  மாமியார்களையும், மருமகள்களையும், அண்டை வீட்டுக்காரர்கள் பலரையும் யாரால் சமாளிக்க முடியும் என்று கலங்கவும் வேண்டாம்.

வலிய வம்புச்சண்டைக்கு வருவோரின் எண்ணம் ‘பெருவெடிப்பு’  (BIG BANG ) ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பது தான்!

இதை டி-ப்யூஸ் (De – Fuse) செய்ய வழிகள் உண்டு; முயன்று பாருங்கள்.

பிரபல அமெரிக்க உளவியலாளர் ராண்டால் ஹாரிசன், “35 சதவிகித தகவல் தொடர்பை மட்டுமே மனித வார்த்தைகள் மூலம் சொல்கிறோம். மீதி 65 சதவிகித தகவல் தொடர்பை வார்த்தைகள் அல்லாத உடல் பாவங்கள் மூலமும், குரல் தொனியின் மூலமும் செய்கிறோம்” என்கிறார். சூடாக இருவருக்கு இடையே நடக்கும் முக்கியமான சண்டை ஒன்றை எடுத்துக் கொள்வோம். இரண்டு பேருமே தங்களை அறியாமலேயே தற்காப்பு நிலையை மேற்கொள்வதோடு, அடுத்தவரைத் தாக்கும் நிலைக்கும் தள்ளப்படுவர். இவர்கள் வார்த்தைகள் மூலம் பேசுவதுடன் அல்லாமல் இதர வழிகளிலும் தங்கள் சண்டை நிலையைக் காண்பிப்பர்.

1.   கை விரலை நீட்டிக் காட்டுதல் (நான் மிகவும் கோபமாக இருக்கிறேன்)

2.   உற்றுப் பார்த்தல்

3.   அந்தரங்க பிரத்யேக இடமான நான்கு அங்குலத்தையும் மீறி உடலுக்கு மிக நெருக்கமாக வந்து அச்சுறுத்தல் 

4.   கால்களை அகற்றி தங்கள் நிலைமையை அகலப்படுத்தல் 

5.   கை முஷ்டிகளை ஓங்குதல்

 6.   குரலை உச்ச ஸ்தாயிக்குக் கொண்டு செல்லல்

 வார்த்தைகள் மூலம் இல்லாமல் தங்கள் கோபத்தை இதர வழிகளிலும் காண்பிக்கும் வலுச்சண்டைக்காரரை டி-ப்யூஸ் பண்ண முடியுமா?  முடியும்! அவர்கள் வழியிலேயே சென்று வார்த்தைகள் இல்லாத நிலைகளை மேற்கொண்டு சமாதானக் கொடியை ஏற்ற முடியும்! வழிகளைப் பார்ப்போம்! 

கைகளைத் திறந்து வைத்தல் : வார்த்தைகள் அல்லாத சமாதான சமிக்ஞைகளில் தலையாயதும் மிக முக்கியமானதுமாக இருக்கும் ஒன்று உண்டென்றால் அதுதான் உள்ளங்கைகளை மேல் நோக்கித் திறந்து காட்டி வைத்திருத்தல். நாய்களைப் பாருங்கள்; அது சமாதானத்திற்காக தொண்டை குரல்வளையைக் காண்பிக்கும். அதற்கு ஈடாக மனித குலத்திற்கு சமாதான சமிக்ஞை, உங்கள் உள்ளங்கைகளை மேலே நோக்கிக் காட்டுவது தான்!

இது உடனடியாக சண்டையின் போது நம்மால் செய்ய இயலாது. ஏனெனில் நினைவுக்கு வராது. ஆகவே பயிற்சி மூலம் இதைப் பழகிக் கொள்ள வேண்டும். செய்து பார்த்தால் பலன் தெரியும்! சாதாரணமாகவே இப்படி வைத்துக் கொள்வது உங்கள் நேர்மை, நாணயத்தை மற்றவர்கள் புரிந்து கொண்டு, மதித்து பாராட்ட உதவும்.

முக்கோண நிலையில் உடல் நிலை: வலியச் சண்டை போடுவோர் நேருக்கு நேர் நம் முன்னே நிற்பர். இது அவர்கள் தங்கள் ஆக்ரோஷத்தைக் காட்ட மேற்கொள்ளும் நிலை. அச்சுறுத்தும் அளவில் நம் நெஞ்சுக்கு அருகில் வந்து விடுவர். நாமும் ஆக்ரோஷமாக அவர்களை நெருங்கினால் மோதல் முற்றிவிடும். இதைப் போக்க உங்களை எதிர்ப்பவரின் உடலுக்கு 90 டிகிரி இருப்பது போல உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளுங்கள். அதாவது உங்கள் சண்டைக்காரரின் பார்வையையும், உங்கள் பார்வையையும் ஒரு கற்பனைப் புள்ளியுடன் இணைத்தால் ஒரு  முக்க்கோணம் ஏற்படும் வகையில் நீங்கள் நிற்க வேண்டும். இது தான் முக்கோண நிலை. நண்பர்களுடனும், உறவினர்களுடனும் உல்லாசமாகப் பேசும் போது நாம் மேற்கொள்ளும் நிலை இது தான். இந்த நிலையை எடுத்து மூன்றாவதான முக்கோணப் புள்ளி வழியே சண்டை இல்லாமல் நீங்கள் தப்பி விடலாம்.

 கீழே பார்த்தல்: நேருக்கு நேர் உற்றுப் பார்க்கும் போது நீங்கள் உங்கள் பார்வையைக் கீழே தாழ விடுங்கள். “உன் கூட சண்டை போட நான் தயாரில்லை” என்பதைச் சொல்லும் நிலை இது.

 குரலைத் தணித்தல்: எதிரில் இருப்பவர் உரக்கப் பேசப் பேச உங்கள் குரலைத் தாழ்த்திக் கொண்டே வாருங்கள். மெதுவாக, அளவெடுத்தது போல ஆறுதல் அளிக்கும் குரலைப் பயிற்சி மூலம் பெற்றுப் பயன்படுத்துங்கள். ஒன்றுமே காதில் விழவில்லை என்ற நிலைக்குச் சற்று மேலாக, கேட்கும் அளவில் குரல் இருந்தால் போதும்.

 தலையைத் திருப்புதல்: மிருகங்கள் மற்றும் மனிதர்களுக்கு கழுத்து மிக முக்கியமான அங்கமாகும். ஆண்டவன் படைப்பில் ஆபத்து நேரும் போது மிருகங்களும், மனிதர்களும் கழுத்தைத் தான் பாதுகாப்பர். நாய்கள் சண்டை போடும் போது பார்த்தால் அது ஒன்று மற்றொன்றின் குரல்வளையையே குறி பார்ப்பதைக் காணலாம். தலையைத் திருப்புவது சமாதானத்திற்கான அறிகுறி. தலையைத் திருப்புவதன் மூலம் உங்கள் கழுத்தை உங்கள் எதிரில் இருப்பவருக்குக் காண்பிக்கிறீர்கள். நீங்கள் அச்சுறுத்தி சண்டைக்கு வருபவர் இல்லை என்பதை உங்கள் கழுத்தைக் காண்பிப்பதன் மூலம் சொல்வதோடு நீங்கள் நிராயுதபாணி என்பதை நிரூபிக்கவும் இது உதவும்.

 இந்த அனைத்தையும் சேர்த்துச் செய்தால் வலியச் சண்டை போடுபவர் கூட நொந்து போய் சண்டை போட முடியாமல் திரும்பிச் சென்று விடுவார்கள். இது அறிவியல் நமக்குக் கற்றுக் கொடுக்கும் லேட்டஸ்ட் டிப்ஸ்!**

சினேகிதி மாத இதழில் 2006, மே மாதம் வெளியான கட்டுரை.

Learn Tiru manthiram through Pictures – Part 4 (Post No.13,614)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,614

Date uploaded in London – 31 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

One of the longest living animals on earth is Tortoise; records show that it can live up to 300 years, thrice the life span of human beings. Hindus discovered the secret before the biologists. Lord Krishna and Manu of Rig Vedic age used it in their books. Tamils copied it from them. Tirumular gives more details in his Tiru manthiram, book of 3000 Tamil verses. Tirumular, from Kashmir, Himalayas migrated to Tamil Nadu just 1200 years ago.

Here are some stanzas from Tiru manthiram of Tiru mular

பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்

அருமை எளிமை அறிந்தறி வாரார்

ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி

இருமையுங் கெட்டிருந் தார்புரை அற்றே.

Senses Controlled, They Saw This World and Next

Who there be who, like our Lord, distinct know

The great and the small, the difficult and the facile?

They, unto tortoise, drawing in senses five under the shell,

They heard and saw This and Next, all impurities dispelled.

xxxx

ஊமைக் கிணற்றகத்துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே யழுவைகள் ஐந்துள
வாய்மையினுள்ளே வழுவா தொடுங்குமேல்
ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே

(திருமந்திரம் 2264, 2304)

Merge in Silentness, Senses Withdrawn

Deep in the Well of Silentness (Mauna)

Is a turtle–Jiva–(with Malas Five withdrawn)

If from Truth you deviate not,

And in (It) merge entire,

You shall indeed live

A thousand years beyond the turtle.

Xxx

ஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில்

ஆமை அகத்தினில் அஞ்சம் அடங்கிடும்

ஓமயம் உற்றுஅது உள்ளொளி பெற்றது

நாமயம் அற்றது நாம்அறி யோமே. 17

 Turiyatita Experience

When with silent letter “M”

The articulate letters “A” and “U” conjoins,

The Five Senses are withdrawn,

As limbs within the tortoise;

Then Jiva is by “Aum” pervaded;

The light Divine beams from within;

The Self its sentience loses;

–This we know not.

xxxx

Breath Control Explained

திருமூலர் தனது பாடலில்:-

விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே

Breath Control For Ridding Malas

If ten times three hundred and thirty

The breath twelve finger-length

As Prana ascends upward,

The Malas Five subdued are;

So do the Tattvas, according.

Normally a man breaths 26,000 times a day. God has sent us with a specific number of breaths. When you exhaust them, you are no more. Tortoises and turtles use very less number of breaths compared to humans. Tiru mular says, do Yoga and control your breath , you can live longer. Brahmins are taught the breath control called Praanaayaama from the age of 5; Kshatrias from thee age of seven and Vaisyas from the age of 9 says our law books called Smritis. If you use less breaths every day, you get more time to live.

xxxx

Tortoise in Bhagavad Gita

. Bhagavad Gita: Chapter 2, Verse 58

यदा संहरते चायं कूर्मोऽङ्गानीव सर्वश: |
इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता || 58||

yadā sanharate chāya kūrmo gānīva sarvaśha
indriy
āīndriyārthebhyas tasya prajñā pratihhitā

yadā—when; sanharate—withdraw; cha—and; ayam—this; kūrma—tortoise; agāni—limbs; iva—as; sarvaśha—fully; indriyāi—senses; indriya-arthebhya—from the sense objects; tasya—his; prajñā—divine wisdom; pratihhitā—fixed in

yada sanharate chayam kurmo ’nganiva sarvashah
indriyanindriyarthebhyas tasya prajna pratishthita

Translation

BG 2.58: One who is able to withdraw the senses from their objects, just as a tortoise withdraws its limbs into its shell, is established in divine wisdom.

xxx

Tortoise in Manu Smriti

Manu took it from Mahabharata. We find 200 Manu Smriti slokas in Mahabharata.

नास्य छिद्रं परो विद्याद् विद्यात्छिद्रं परस्य च ।
गूहेत् कूर्म इवाङ्गानि रक्षेद् विवरमात्मनः ॥ Manu 7-१०५ ॥

nāsya chidraṃ paro vidyād vidyātchidraṃ parasya ca |
gūhet kūrma ivāṅgāni rakṣed vivaramātmanaḥ || Manu 7-105 ||

His enemy should hot know his weak points, but he must know the weak points of the enemy; he should hide the departments (of government) as the tortoise does its limbs; and he should guard his own weak points.—(7-105 Manu Smriti)

Xxx

It is Tamil Divya Prabandham of Alvars too (2360)

xxx

Tortoise in Tamil Veda Tirukkural of Tamil Saint Tiru Valluvar

தமிழர்கள் கண்டுபிடித்த ஆமை அதிசயம்!

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்புடைத்து (குறள் 126)

Like a tortoise, if one is able to restrain the five senses

It will give lasting strength through all his seven births- 126

Or

English Couplet 126:

Like tortoise, who the five restrains
In one, through seven world bliss obtains

Or

If a man learns to control his five senses in one birth as the tortoise, that power will stand by him in his seven future births.

Or


Couplet Explanation:

Should one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove a safe-guard to him throughout the seven-fold births.

—-subham—-

Tags- Tortoise, Breath control, Bhagavad Gita, Manu Smriti, Tirukkural, Tirumular, Learn Tiru manthiram through Pictures – Part 4