விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-19 (Post No.13,440)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,440

Date uploaded in London – 14 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

வரலாற்று ரகசியங்கள்

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலுள்ள வரலாற்று ரகசியங்கள் குறித்து ஆதிசங்கரர் எதுவும் சொல்லவில்லை. ஆயினும் குப்தஸ்ரீ விஜயஅசோக பிரதர்தன போன்ற நாமங்கள் வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ளதைக் காண்போம்

விக்ரமி – நாம எண் 909-

நடையழகு படைத்தவர் அல்லது மிகுந்த பராக்கிரமம் உடையவர்.

என் கருத்து

இந்தியாவில் விக்ரம அல்லது விக்ரமாதித்யன்  என்ற பெயர்கள் சோழ , பாண்டிய, சாளுக்கிய வம்ச அரசர்களிடையே காணப்படுகிறது  இதற்கெல்லாம் காரணம் உலகப் புகழ்பெற்ற விக்ரமாதித்தன் ஆகும்.அவன் உஜ்ஜைனி நகரிலிருந்து வெளிநாட்டுப் படையெடுப்புகளைத் தோற்கடித்தான். அவன் பெயரில் கி.மு. 57-லிருந்து புதிய சகாப்தம் துவங்கியது, வேதாளம் கதைகளுக்கு மூல காரணம் அவன்தான் ; காளிதாசன் போன்ற பெரும் புலவர்களை ஆதரித்தவன்.

xxxx

அபராஜிதஹ — நாம எண் 716

வெல்ல  முடியாதவர் ; எங்கு கிருஷ்ணன் இருக்கிறானோ அங்கு வெற்றி என்பது மஹாபாரத வாக்கியம்.. அகமும் புறமும் உள்ள எதிரிகளை ஜெயிப்பவன் விக்ரமன்

என் கருத்து

பல்லலவர்களில் ஒரு மன்னன் பெயர் அபராஜித வர்மன் (885-903 CE ).ஆதித்ய சோழனுக்கு அவன் உதவி செய்தபோதும் பின்னர் நடந்த போரில் அவனை ஆதித்ய சோழனே கொன்றுவிட்டான்

XXXXX

தீர்த்தகர — நாம எண் 691-

உலகை  உய்விக்கும் வித்தைகளை உண்டாக்கி உபதேசித்தவர்; ஹயக்ரீவ வடிவம் கொண்டு மது கைடபர்களைக் கொன்ற பின்னர் பிரம்மாவுக்கு சிருஷ்டி துவக்கத்தில்  எல்லா வித்தைகளையும் உபதேசித்தவர் .

யோ ப்ரஹ்மாணம்  விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி  தஸ்மை

தம் ஹ தேவமாத்மபுத்தி ப்ரகாஸம் முமு க்ஷுர்வை  சரணமஹம் ப்ரபத்யே

நினைப்பது நாமத்தை உச்சரிசிப்பது முதலியவை செய்தவுடன் எல்லாப் பாவங்களையும் போக்குவனவாகிய கங்கை, புஷ்கரம் முதலான புண்ணிய தீர்த்தங்களை உண்டுபண்ணியவர். சுருதி ஸ்ம்ருதி முதலிய ஸத் சம்பிரதாயங்களைப் பிரவர்த்திக்கச் செய்தவர். கடல் போல இறங்க முடியாத ஆழமான தம்மிடத்தில் பக்தர்கள் இறங்கும்படி படிகளை உண்டுபண்ணியவர் .

கங்காதி  தீர்த்தஹேதுத்வாத் சுருதி ஸ்ம்ருத்யோ ஹோ ப்ரவர்த்தநாத்

ஆத்ம ப்ரவேஸ சோபானம் க்ருதவா தீர்த்தகர ஸ்ம்ருதஹ – பட்ட பாஸ்கரர் உரை

என் கருத்து

சமண மதத்தின் துறவிகளை தீர்த்தங்கரர் என்பார்கள். 24 தீர்த்தங்கரர்களில் புத்தர் வாழந்த காலத்தில் வாழ்ந்தவர் வர்த்தமான மஹாவீரர். அந்த வர்த்தமான என்ற சொல்லும் வேறு ஓரிடத்தில் விஷ்ணுவின் நாமமாக வருகிறது . பிறப்பு- இறப்பு என்னும் நதியைக்கடந்து செல்ல உதவும் துறை போன்றவர்களை சமணர்கள்,  தீர்த்தங்கரர் என்று அழைப்பார்கள். அதே பொருள் இங்குள்ள வியாக்கியானத்திலும் தொனிப்பதைக் காணலாம். வர்த்தமான மஹா வீரர்  2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்.

xxxx

பஹு சிரஹ — நாம எண் 115-

பல தலைகளையுடைய விராட் புருஷ வடிவினர்

ஸஹஸ்ர சீர்ஷா புருஷஹ- ஆயிரம் தலையுடையவன் என்று ரிக்வேதத்திலுள்ள புருஷசூக்தம் போற்றுகிறது.

என் கருத்து

தமிழில் கொம்பன் என்ற சொல்வழக்கு உள்ளது ; நீ என்ன பெரிய கொம்பனோ என்று சொல்வார்கள் அதன் பொருள் நீ என்ன அவ்வளவு பெரிய தலைவனோ  முக்கியமானவனோ என்று பொருள்; இதற்கு காரணம் அந்தக்காலத்தில் தலைவர்கள் தலையில் எருமைக் கொம்பால் ஆன மகுடத்தை வைத்துக்கொள்வார்கள். இதை சிந்து-சரஸ்வதி நாகரிக பசுபதி சின்னத்தில் காணலாம். அந்த பசுபதி சின்னத்திலும் பல தலைகள் இருக்கின்றன ஆயிரம் தலைகளையும் சிலையில்/ உருவத்தில் வடிக்க முடியாதல்லவா ?

இப்போது கிரீடம், மகுடம், டர்பன், பரிவட்டம் ஆகியன அந்த இடத்தைப் பிடித்துவிட்டது.

XXXX

நைக ச்ருங்கஹ — நாம எண் 763-

ஒரே ஒரு கொம்புமட்டும் உடையவர் அல்ல- ந ஏக ச்ருங்க – நாம எண் 763-

முன்னர் சொன்ன சிந்து-சரஸ்வதி நதி தீர பசுபதி முத்திரையை நினைவிற்கொள்க .

அல்லது நான்கு கொம்புகளை உடையவர்- அதாவது நான்கு வேதங்களையோ அல்லது தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்ற நான்கு பண்புகளையோ, குறிக்கோள்களையோ உடையவர். ஏனெனில் ரிக்வேதத்திலும் சத்வாரி ச்ருங்காஹா – நான்கு கொம்புகளை உடையோனே என்ற வரி வருகிறது – தைரிய ஆரண்யகம் 1-10-17; ALSO RV.

சத்வாரி ஸ்ருங்கா த்ரயோஸ்ய பாதா

த்வே சீர்ஷே சப்த ஹஸ்தாஸோஸ்ய

த்ரிதா பத்தோ வ்ருஷபோ  ரோரவீதீ

மஹா தேவோ  மார்த்யான் ஆவிசேச – RV 4-58-3

எருது/ காளை  ரூபத்தில், பெரிய கடவுள் உறைகிறார் 

அவருக்கு 4 கொம்புகள், 3 கால்கள், 7 கைகள்,

அவை மூன்று இடங்களில் கட்டப்பட்டவை ;

அவை  ஒலியை எழுப்பிக்கொண்டு மனிதர்களுக்குள் புகுந்துவி ட்டது– ரிக் வேதம் 4-58-3

XXXXX

சதுர் மூர்த்திஹி – நாம எண் 765-

ஆதி சங்கரர் சொல்கிறார்  : நான்கு வடிவுடையவர்.விராட், ஸூராத்மா , அவ்யாக்ருதம், துரியம் என்பவை நான்கு வடிவங்கள்  அல்லது வெண்மை , செம்மை, பசுமை, கருமை என நான்கு நிறமுள்ள மூர்த்திகள். இன்னொரு உரைகாரரான பட்ட பாஸ்கரர் கிருஷ்ணனாகிய விபவா அவதாரத்திலும்  அதற்கு காரணமான வ்யுயூஹங்களை  நினைவூட்டுவது போல  பலபத்ரன், வாசுதேவன், பிரத்யும்னன், அநிருத்தன் என்ற நான்கு  மூர்த்திகளை உடையவர்.

நான்கு கொம்புகள் உடைய சொல்லுக்கான  முந்திய  விளக்கங்களையும் காணவும்.

XXXX

ச்ருங்கி- நாம எண் 797-

கொம்புள்ள மீனாக அவதரித்தவர்.

சஹஸ்ரநாமத்தில் இதுவரை கொம்பில்லாத, மற்றும் 4 கொம்புகளையுடைய, ஒரே கொம புள்ள மீனாகக்  கடவுள் வருணிக்கப்பட்டுள்ளார். பிரளய கால மச்சாவதாரத்தை நினைவு படுத்தும்  கதை இது. எல்லா பண்பாடுகளிலும், ப்ரளய கதை உள்ளது

—subham—-

Tags- வரலாற்று ரகசியங்கள், விஷ்ணு சஹஸ்ரநாம, அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள், Part-19

ஹைதராபாத் கோவில்கள் தொடர்ச்சி –7 (Post No.13,439)

Sri Venkateswara Temple.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,439

Date uploaded in London – 14 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேசரிகுட்டா கோவில்

ஹைதராபாத் கோவில்கள் தொடர்ச்சி ……ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – 7

ஹைதராபாத் நகரம் தற்போது தெலுங்கனா மாநிலத்தின் தலை நகரம் ஆகும். அங்குள்ள சில கோவில்களை சென்ற கட்டுரையில் தரிசித்தோம்; 20 கோவில்களில் மேலும் சில முக்கிய கோவில்களை தரிசிப்போம்.

கேசரிகுட்டா கோவில்

இந்த வட்டாரத்திலுள்ள மிகப்பழைய கோவில் இது; ஏனெனில் ஆறாம்  நூற்றாண்டு தெலுங்கு கல்வெட்டும் சிற்பங்களும் கிடைத்துள்ளன. இது ஒரு சிவன் கோவிலானாலும் அனுமன் – ராமனுடன் தொடர்புடைய கோவில். அழகான பசுமை மிக்க சூழ்நிலையில் குன்றின்மீ து கட்டப்பட்டுள்ளது.. ராவணன் ஒரு பிராமணன்; அவனைக்கொன்ற பிரம்மஹத்தி (பிராமணப் படுகொலை) பாவம் அகல ராமபிரான் ஒரு கோவிலைக் கட்டினார் . நல்ல சிவலிங்கத்தைக் காசி மாநகரிலிருந்து கொண்டுவருவதற்காக அனுமனை காசிக்கு அனுப்பினார் ராமன்.

அனுமன் வருவதற்குள் முகூர்த்த நேரம் போய்விட்டதே என்று ராமன் கவலைப்பட்ட நேரத்தில் ஸ்வயம்பூ லிங்கம்  தோன்றியதாம் ; ஸ்வயம்பூ  என்றால் ‘தான்தோன்றி’.

 அனுமன் வருவதற்கு தாமதம் ஏன்?

புடவைக் கடைக்குள் நுழைந்த பெண்மணிகள் எந்தப் புடவையை எடுப்பது என்று திக்குமுக்காடி, ஒரு புடவைக்குப் பதில் 3  புடவைகளை எடுத்துவருவது போல, அனுமனும் நல்லதை ‘செலக்ட்’ பண்ண முடியாமல் 100 லிங்கங்களை எடுத்து வந்தாராம் . முன்னரே லிங்கம் உருவானதால் அவற்றை மலைகளில் தூக்கி எறிந்தாராம் ; இப்போதும் அந்த லிங்கங்களையும் காணலாம்; அவைகளுக்கும் பூஜை புனஸ்காரங்கள் உண்டு. மஹாசிவராத்திரி பண்டிகையின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் படை எடுக்கும் கோவில் இது.

கேசரி பெற்றெடுத்த  பிள்ளை அனுமன் ; ஆகையால் கோவிலின் பெயர் கேசரி குட்ட கோவில்.

இந்த இடத்திற்கு மேலும் இரண்டு சிறப்புகள் இருக்கின்றன ; தெலுங்கனாவின் மிகப்பழைய , அதாவது 1400 ஆண்டுக்கு முந்தைய தெலுங்குக் கல்வெட்டு இங்குதான் கிடைத்தது . அது ஒரு குடைவரைக் கோவிலுக்குள் கிடைத்தது.

அடுத்த சிறப்பு என்னவென்றால், 2014ம் ஆண்டில் தொல்பொருட்த் துறை நடத்திய அகழ்வாய்வில்  நிறைய சமண சமய தீர்த்தங்கரர் சிலைகள் கிடைத்தன.

Opening hours: 6 am to 12:45 pm and 3 pm to 7: 30 pm
Location: Medchal-Malkajgiri district, Hyderabad

xxx

ஷ்யாம் பாபா மந்திர்

இதை காஞ்சி காமகோடி பீடம் ஷ்யாம் பாபா மந்திர் என்று அழைக்கிறார்கள்; இது ஒரு கிருஷ்ணன் கோவில்;அங்கு அழகான சிற்பங்கள், ஓவியங்கள் உள்ளன; ஜன்மாஷ்டமி விழா/ கிருஷ்ணன் பிறப்பு நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நாள் முழுவதும் பஜனைகள் நடக்கும்.

முழு முகவரி :

Opening hours: 6 am to 12 noon and 4 pm to 8:30 pm

 Shri Kanchi Kamakoti Peetham Shri Shyam Baba Mandir

Kachiguda Station Rd, Veeranna Gutta, Barkatpura, Kachiguda, Hyderabad, Telangana 500027

xxx

வெங்கடேஸ்வரா சுவாமி கோவில்- பாஸ்போர்ட்/ விசா பெருமாள் கோவில்

இந்தக் கோவில் ஹைதராபாத் நகரின் மிகப்பழைய கோவில்களில் ஒன்று. ஒரு வாரத்தில் லட்சக் கணக்கான பக்த்ர்களைக் கவர்ந்து இழுக்கிறது. ஏனெனில் இந்தப் பெருமாளை சேவித்தால் பாஸ்போர்ட் அல்லது விசா உடனே வந்துவிடுகிறதாம். இதை சிக்கூர் பாலாஜி கோவில், பாஸ்போர்ட்/ விசா பெருமாள் கோவில் என்று பொது மக்களை அழைக்கிறார்கள் . இதோ முகவரி

Venkateswara Swamy temple

Opening hours: 6 am to 1 pm and 6 pm to 9 pm
Location: Venkateswara Swamy Temple Ln, Sai Ratna Arcade, New Santoshnagar, Santosh Nagar, Hyderabad, Telangana 500059

xxxx

கர்மன்காட் ஹனுமார் கோவில்

ஹைதராபாத் நகரம் தோன்றுவதற்கு முன்னரே கட்டப்பட்ட கோவில். 12 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செலுத்திய காகதீய வம்ச மன்னர்கள் இதைக் கட்டினார்கள் ; நகர் முழுதும் சின்ன சின்ன அனுமார் கோவில்களும் உண்டு. அனுமன் இருக்கும் இடத்தில் ராமன் இருப்பான்; ராமன் இருக்கும் இடத்தில் ராம பக்த ஆஞ்சனேயன் இருப்பான்; ஆகையால் இந்தக் கோவில்களில் ஸ்ரீ ராமரையும் தரிசிக்கலாம்.

 Karmanghat Hanuman Temple

Opening hours: 6 am to 12 noon and 4 pm to 8 pm. Every Tuesday, the temples remain open from 5:30 am to 1 pm and 4 pm to 9 pm
Location: 8-2-61, Padma Nagar Colony, Champapet, Hyderabad, Telangana 500079

xxxx

பெத்தம்மா கோவில்

கிராம மக்களின் முக்கிய தெய்வம் பெத்தம்மா அன்னை ஆவாள் ; பெரிய அம்மன் என்ற பெயருடன் விளங்கும் இந்தக் கோவிலுக்கு பல வண்ண கோபுரம் இருக்கிறது; முக்கியத் திருவிழாக்கள் — போனலு பண்டிகையும் ரத சப்தமி பண்டிகையும் ஆகும்  ஜூன்- ஜூலையில் இந்த விழாக்கள் நடக்கும். ஆண்டு முழுதும் பகதர்கள் வரும் ஆலயம் இது .

Opening hours: 6 am to 1 pm and 3 pm to 8 pm
Location: Jagadish Nagar, Begumpet, Hyderabad, Telangana 500003

To be continued……………………..

–subham—

Tags–ஹைதராபாத்  கோவில்கள், கட்டுரை 7, தொடர்ச்சி, கேசரிகுட்டா

ராமாயணத்தில் சாபங்கள் (41) பார்வதியைப் பார்த்த குபேரனின் கண் பிங்கள நிறமானது! (Post.13,438)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.438

Date uploaded in London – 14 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் சாபங்கள் (41) 

ராமாயணத்தில் சாபங்கள் (41) பார்வதி தேவியைப் பார்த்த குபேரனின் இடது கண் பிங்கள நிறமானது! 

ச. நாகராஜன்

உத்தர காண்டத்தில் பதிமூன்றாவது ஸர்க்கமாக அமைவது, “குபேரனது தூதனைக் கொல்வது”.

லங்கையை ஆளத் துவங்கிய ராவணன் கட்டுக்கடங்காதவனாக தேவர்கள், ரிஷிகள், யக்ஷர்கள், கந்தர்வர்கள் ஆகிய அனைவரையும் துன்பப்படுத்த ஆரம்பித்தான். அங்குள்ள அழகிய நந்தவனங்களை அழித்தான்.

இதையெல்லாம் கேள்விப்பட்ட குபேரன் ஒரு தூதனை ராவணனிடம் அனுப்பினான்.

அவன் ராவணனிடம் சென்று குபேரன் சொன்னதாக, “மனம் போன போக்கில் இதுவரை செய்துள்ள நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும்” என்று கூறினான்.

அத்துடன் குபேரன் தனக்கு ஒரு கண் பிங்கள நிறமான வரலாற்றை ராவணனிடம் தூதன் மூலமாகக் கூறுகிறான்.

ஒரு முறை குபேரன் கேதாரம் என்ற ஒரு விரதத்தை மேற்கொண்டான். அதற்காக இமயமலைக்குச் சென்றான். அங்கு குபேரனால் உபாசிக்கப்பட்ட பரமசிவன், பார்வதி தேவியுடன் இருக்க அவர்களை குபேரன் பார்த்தான். கண்ணைப் பறிக்கும் ஜோதி கொண்டவராக உமாதேவியின் சுந்தர ரூபத்தைக் கண்ட குபேரன் இவர் யாராக இருக்கலாம் என்று அறிய விரும்பியபோது அவனது இடது கண் அம்மனை நோக்கி வீழ்த்தப்பட, அந்தக் கண் தேவியின் தெய்வ ஒளியால் புழுதியால் மறைக்கப்பட்டு பார்வை சக்தி ஒழிந்ததாக ஆனது. வேறு விபரீத எண்ணத்துடன் குபேரன் பார்வையைச் செலுத்தவில்லை.

பின்னர் மலையின் மற்றொரு விசாலமான சாரலை அடைந்து எண்ணூறு வருடங்கள் மஹா விரதம் ஒன்றை அனுஷ்டித்தான். இதனால் ப்ரீதி அடைந்த பரமேஸ்வரன் குபேரனை நோக்கி, “தேவியின் பிரபாவத்தால் தேவியின் ரூபத்தில் கண் வீழ்த்தப்பட்டதால் எந்த உனது இடது கண் பார்வையை இழந்ததோ அது மண் நிறத்தை அடைந்தது. ஆகவே இந்தக் காரணத்தினால் இனிமேல் நீ ‘ஏகாக்ஷி பிங்களன்’ என்ற பெயரை சாச்வதமாய் அடைவாய்” என்றார்.

திரும்பி வந்த குபேரன் ராவணனது தீச்செயல்களைக் கேட்கவே தூதனை நல்லுரை சொல்ல அனுப்பினான்.

ஆனால் இதைக் கேட்ட ராவணன் கோபம் கொண்டு தூதனையே வெட்டிக் கொன்றான். மூன்று உலகங்களையும் வெல்லக் கருதி குபேரனை நோக்கிக் கிளம்பினான்.

இந்த வரலாற்றில் இந்த ஸர்க்கத்தில் 24வது ஸ்லோகமாக வருவது இது:

தேவ்யா திவ்யப்ரபாவேன துக்தம் மமேக்ஷணம் |

ரேணுத்வஸ்தமிவ ஜ்யோதி: பிங்களத்வமுபாகதம் |\

–    உத்தர காண்டம், 13-ம் ஸர்க்கம், ஸ்லோக எண் 24

தேவ்யா – அம்மனின்

திவ்யப்ரபாவேன – தெய்வ ஒளியால்

மம – எனது

ஜ்யோதி – சக்ஷூரிந்திரியங்களில் ஒன்றாகிற

சவ்யம் – இடது

ஈர்ஷணம் – கண்

ரேணுத்வஸ்தம் இவ – புழுதியால் மறைக்கப்பட்டதென

தக்தம் – பார்வை சக்தி ஒழிந்ததாக

பிங்களத்வம் – பிங்கள (மண்) நிறத்தை

உபாகதம் – அடைந்துவிட்டது.

இங்கு சாபம் எதுவும் தரப்படவில்லை. குபேரனின் இடது கண் பிங்கள நிறம் ஆயிற்று. இது பார்வதி தேவியின் திவ்ய ஜோதியாலா அல்லது சாபத்தினாலா? சாபம் என்று கூற முடியாது, ஏனெனில் எந்த வார்த்தையும் பார்வதி தேவியின் வாயிலிருந்து வரவில்லை.

என்றாலும் குபேரன் ஏகாக்ஷி பிங்களன் ஆன வரலாறு இங்கு தரப்படுகிறது.

**

My Research Notes on V. C. Part 11 (Post No.13,437)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,437

Date uploaded in London – 13 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

From Viveka Chuudamani (VC) of Aadi Sankara

संन्यस्य सर्वकर्माणि भवबन्धविमुक्तये ।
यत्यतां पण्डितैर्धीरैरात्माभ्यास उपस्थितैः ॥ १0 ॥

saṃnyasya sarvakarmāṇi bhavabandhavimuktaye |
yatyatāṃ paṇḍitairdhīrairātmābhyāsa upasthitaiḥ || 10 ||

10. Let the wise and erudite man, having commenced the practice of the realisation of the Ātman give up all works and try to cut loose the bonds of birth and death.

Notes:

[All works—only Sakáma-Karma or works performed with a view to gaining more sense-enjoyment are meant, not selfless work. ]

xxxx

चित्तस्य शुद्धये कर्म न तु वस्तूपलब्धये ।
वस्तुसिद्धिर्विचारेण न किंचित्कर्मकोटिभिः ॥ ११ ॥

cittasya śuddhaye karma na tu vastūpalabdhaye |
vastusiddhirvicāreṇa na kiṃcitkarmakoṭibhiḥ || 11 ||

11. selfless work leads to purification of the mind, not to perception of the Reality. The realisation of Truth is brought about by discrimination and not in the least by ten million of acts.

Notes:

[The idea is, that works properly done cleanse the mind of its impurities, when the Truth flashes of itself. ]

xxx

Works like Yagas and Yajnas to get good things in life are not bad. But they won’t help you  realise the Truth.

Second point Sankara makes is worshipping God for personal benefits is not selfless work.

Following quotations from Swami Vivkananda also clarify this:

SWAMI VIVEKANANDA QUOTES ON WORK

Activity is the manifestation of interior strength, calmness, of the superior.

Never will unhappiness or misery come through work done without attachment.

Work is inevitable, it must be so; but we should work to the highest purpose.

Man works with various motives. There cannot be work without motive.

The  greatest work is done only when there is no selfish motive to prompt it.

The main effect of work done for others is to purify ourselves.

xxxx

Butter challenged Water

Swami Mukundananda comments:

In order to elevate the mind toward God, we need to dedicate some time on a daily basis for secluded sādhanā.

The analogy of milk and water can help elucidate this point. If milk is poured into water, it cannot retain its undiluted identity, for water naturally mixes with it. However, if the milk is kept separate from water and converted into yogurt, and then the yogurt is churned to extract butter, the butter becomes immiscible. It can now challenge the water, “I will sit on your head and float; you can do nothing to me because I have become butter now.” Our mind is like the milk and the world is like water. In contact with the world, the mind gets affected by it and becomes worldly. However, an environment of seclusion, which offers minimal contact with the objects of the senses, becomes conducive for elevating the mind and focusing it upon God. Once sufficient attachment for God has been achieved, one can challenge the world, “I will live amidst all the dualities of Maya, but remain untouched by them.”

xxxx

Swami Chinmayanaanda in his commentary on VC sloka 10 says,

Here is a piece of advice given to a man who has all the theoretical knowledge of the science of self -perfection. He is told to renounce all activities motivated by self -aggrandising hopes or disintegrating desires.

This renunciation of the activities of the world is not to be over emphasised and misunderstood, as is generally done, to mean that Vedanta is calling man to a life of lotus eating. It is only asking us to reduce over excitement in life and curb the wasteful expenditure of our mental and intellectual energies.

Swami Chinmayanaanda in his commentary on VC sloka 11 says,

This verse may give a novice the impression of that Vedanta is decrying all the orthodox and accepted methods of religious practice. A child is told by his parents to revise his arithmetic tables every day. The obedient child soon gets into the habit of starting his day with a reading of the tables. But if the child continues habit as a dull and unintelligent routine even in his post graduate classes, it is but natural for his professor to laugh at his stupidity. Similarly in the halls of Vedanta, the seeker is laughed at because of the time worn techniques of self-development to which he has become habituated.

xxxx

Tamil poet Arunagirinathar said

Summaa Iru Sollara= Be quiet; Stop Talking

செம்மான் மகளைத் திருடும் திருடன்

   பெம்மான் முருகன் பிறவான் இறவான்

      ‘சும்மா இருசொல்லற’ என்றலுமே

         அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே!

As soon as Lord Skanda, who knows of neither birth nor death, and who secretly took away Valli- born in the forest, imparted the teaching enjoining me to be in quietude without speaking, what a surprise that all the things of this world vanished!

That is, as soon as Lord Skanda told me this, wisdom dawned upon me.

xxx

Lord Krishna also advised seclusion for meditation:

योगी युञ्जीत सततमात्मानं रहसि स्थित: |

एकाकी यतचित्तात्मा निराशीरपरिग्रह: || 10||

yogī yuñjīta satatam ātmānaṁ rahasi sthitaḥ

ekākī yata-chittātmā nirāśhīr aparigrahaḥ

Translation

BG 6.10: Those who seek the state of Yoga should reside in seclusion, constantly engaged in meditation with a controlled mind and body, getting rid of desires and possessions for enjoyment.

He means No Work, but meditation only in a secluded place.

–subham—

Tags- Viveka  Chudamani, Slokas 10, 11, my research notes.

RARE STATUE UNEARTHED IN ANDHRA PRADESH

RARE STATUE UNEARTHED IN ANDHRA PRADESH

Compiled by London swaminathan

July 12, 2024

Hyderabad: A rare sculpture of Venugopalaswamy with Ashtamahishas has been identified in a temple at Peddapalli’s Garrepalli village in Sultanabad, by Kundarapu Sathish of the Kotha Telangana Charitra Brindam.

This 12th-century Kalyani Chalukya period sculpture showcases Venugopalaswamy holding a flute in both right hands, adorned with a ‘karanda makutam’, a ‘prabhavali’, a necklace, ‘muvvala mekhala’, ‘urudas’, ‘jayamala’, ‘kara kankanas’, and ‘pada manjiras’, standing in ‘Swatik aasana’. Niladevi and Bhudevi are depicted on his right side.

Uniquely, the mayura arch behind Venugopalaswamy features carved statues of Krishna’s Ashtamahishas, contrasting with the typical Dasavatars found in similar sculptures.

In the same sanctum, another significant sculpture, the Yogashayanamurthy, adds to the temple’s historical importance. The findings offer a unique glimpse into the artistic excellence of the Kalyani Chalukya period, enriching the region’s historical narrative, said Sriramoju Haragopal, Convenor, Kotha Telangana Charitra Brindam.

From Telangana today.

–subham—

Rare statue, venugopala, garrepalli village

CARTOONS ARE RECORDS OF CURRENT AFFAIRS 13 JULY 2024

Posted on 13 July 2024

Following cartoons are taken from Deccan Chronicle.

–subham–

cartoons 13-7-2024, dccan chronicle

LONDON KAMBAN FESTIVAL JULY 2024 (Post.13,436)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,436

Date uploaded in London – 13 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

One of the greatest poets of middle period of Tamil lliterature is Kamban. He lived 1000 years ago in Tamil Nadu and composed Ramayana in Tamil.

For the first time a great festival is being held in London on 13 and 14th July 2024. Over 1000 people attended the first day today. Famous tamil speakers from India and Sri Lanka are invited to speak.

I was there for only two hours because of prior commitments. Great donors of London made the event a grand success.

Those who missed today’s event may go there tomorrow Sunday. Free coffee and free food are arranged. Admission is free which is held in Alperton Community school in Wembley.

3 pm starting time 9 pm finishing time.

London Tamils thanked the organisers wholeheartedly.

Please the pictures and the list of donors.

–subham-

Tags- Kamban festival, London, July 2024

திருமந்திரத்தில் ஓம்,  மஹாவாக்கியம்; ஆராய்ச்சிக் கட்டுரை -35 (Post.13,435)

Four Maha Vakhyas

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,435

Date uploaded in London – 13 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

திருமூலர் பயன்படுத்திய சொற்களில் ஞான என்று தொடங்கும் சொற்களைக் கண்டோம். பின்னர் அவருடைய சொல்லாக்கத்தை சென்ற கட்டுரையில் கண்டோம் .

திருமூலர் பயன்படுத்தும் அற்புதச் சொற்கள்திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 34-இன் தொடர்ச்சி இதோ—

1998–ம் ஆண்டில் திருமந்திரத்தைப் படித்து முடித்தபோது நூற்றுக்கணக்கான போஸ்ட்  இட் லேபிளில் POST IT முக்கிய சொற்களை குறித்து வந்தேன்; அவைகளை தொகுத்து அளிக்கிறேன்; ஒவ்வொரு சொல்லும் மேலும் பலஇடங்களில் வந்திருக்கலாம் .

லிங்கம், நந்தி போன்ற சொற்களை நிறைய இடங்களில் பயன்படுத்துவதால் இவர் மாணிக்கவாசகருக்கு மிகவும் பிற்காலத்தவர் என்பது தெளிவாகிறது . அதே போல ஆதிசங்கரரின் தாக்கமும் இவர் செய்யுட்களில் தொனிப்பதால் அவருக்கும் பிற்பட்டவரே.

ஓம்- 410, 560, 839, 864, 897, 902, 923, 924, 031-934, 936, 941, 949, 988, 1049, 1182, 1188, 1198, 1217, 1257, 1380, 1381, 1516, 1531, 1585, 1680, 1721/22,  2119, 2194, 2435, 2447, 2452, 2455, 2530, 2626-31, 2781

மஹாவாக்கியம்-2287

தத்துவ ஞானம் – 2291

தினமலர்- 1807

அமுதப் பெருங்கடல் 1770

வேதாந்தம், சிவானந்தம் -417,  2746, 1397,2236, ,2280, 1576, 2134,

வேதாகமங்கள்- 2278

சுவர்க்கம் நரகம்- 2274

கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர் -123

ஒப்பீடு – அழுதால்  உன்னைப் பெறலாமே /திருவாசகம்

அடியார் அடியார் அடியார்க்கு அடிமை -2578- தொண்டரடிப்பொடி

சிவமாட , சக்தியுமாட, அவமாட – அருணகிரி/அதல சேந்தனார் ஆட

ஆதிப்புராணன் – 2999

தூய் மணிவண்ணன் -2078

ஐயனார் கோட்டம்- 975- திருவிளையாடல் புராணம்

எண்ணெண் கலை /64 கலை  1434

பேச்சற்ற இன்பம்- 1569, 2280, 2289,,2589 – அருணகிரி/சும்மா இரு சொல்லற

சைவ சித்தாந்தம் – 1396

சுடர்நாகம் – 888, 999

லிங்கம்- 997; மாணிக்கவாசகர் சொல்லாத சொல்

நாழிகையால் எமனை அளப்பார் – 854

வேதப்  பகல் ஒளி – 804

விண்ணவரகம் – 2298, 2300

ஊனங்கள் எட்டு- 2281

XXXX

உபநிஷத் எதிரொலி

தத்வமஸி- 2526- 27,28, 33

அப்பு/ உப்பு-2905

சேயன், அணியன் –2296/ பகவத் கீதை 1515

உன்னை நீ அறிவாய் எனும் கருத்து  -2315, 2290/ உபநிஷத், சாக்ரடீஸ் எதிரொலி

மறை ஈறு= உபநிஷத் = வேத அந்தம்- 2318,2329, 2343-2348, 2353-56, 2746

இரண்டு பறவைகள் – உபநிஷத் கதை 2894, 1969

குருடன் குருடனுக்கு வழிகாட்டுதல் – 2010, 1692

சொற்பதம் கடந்த/ எதிரொலி -2400/402

பசுக்கள் பலவண்ணம் – பாரதி பாடல் காண்க

மந்திர தந்திர உபதேச – 2335,

பதி பசு பாசம் – 2335

XXXX

ஆதி சங்கரருடன் ஒப்பீடு – 2998, 2454, 2270, 2250/51, 1965, 970, 1503, 425, 433, 422, 2203

XXX

திருமந்திரத்தில் திருக்குறள்

2996, 2397, 2400, 2409, 2279, 2071, 1996, 1985, 1839, 1754, 1437, 1103, 983, 568, 536, 429

XXXX

மாணிக்கவாசகர் எதிரொலி – 2417, 2762, 2715, 2697, 2531, 2417, 2025/6, 1882, 1812, 1781, 1747/52, 1665, 1580, 1310, 1055, 893, 997, 688,  594,

XXXX

சாக்ரடீஸ் எதிரொலி- 2315,2325,2564, 2290

ஏழு கோடி மந்திரம் 2193

மேல் கீழ் தாமரை – 2179

அண்ணாந்து பார்க்க அழியும் – அடடா அடடா, அண்ணாமலை, அண்ணாந்து பார்த்தா ஒண்ணுமே இல்லை 2100

XXX

வர்ணங்கள்-

2976,1494, 1282, 1713, 1023,497,392

XXXX

இரத்தினம்        -2975, 1880,  1690,

கண்ணாடி-2183, 1653,

XXXX

கீதை எதிரொலி —               2188- 2953, 2821, 2598, 2536, 2409, 2188, 1611, 1629, 1603, 1439, 1449, 876, 688, 528

XXX

புறநானூறு எதிரொலி           — 1649, 1437

XXX

கதைகள்- 2905, 2250, 1615, 1507, 1083, 496, 337

XXXX

அருணகிரியின் தாக்கம்– 2683, 2337, 2258,2007, 1983, 1509, 1062,

XXXX

பாவை- 2893, 2316, 806, 594          

XXXX

ஒவ்வொரு தலைப்பு பற்றியும் தனியே காண்போம்

TO BE CONTINUED………………………….

TAGS- ஓம், மஹாவாக்கியம், கதைகள், கீதை, திருக்குறள், , மாணிக்கவாசகர்,, ஆதிசங்கரர், சாக்ரடீஸ், தாக்கம், எதிரொலி

ராமாயணத்தில் சாபங்கள் (40) விஸ்ரவஸ் கைகஸீயிடம் கூறியது (Post.13,434)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.434

Date uploaded in London – 13 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (40) 

ராமாயணத்தில் சாபங்கள் (40) விஸ்ரவஸ் கைகஸீயிடம் கூறியது! 

ச. நாகராஜன்.

உத்தர காண்டத்தில் பதினோராவது ஸர்க்கமாக அமைவது, “ராவணன் லங்கையை அடைவது”. பன்னிரண்டாவது ஸர்க்கமாக அமைவது- “ராவணன் முதலியவரது விவாஹம்’.

அகஸ்திய முனிவர் ஶ்ரீ ராமருக்கு ராவணனுக்கும்  மண்டோதரிக்கும் நடந்த விவாகம் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார்.

லங்கையை குபேரன் ஆண்டு வந்தான். அப்போது ரஸாதல லோகத்திலிருந்து வந்த ஸுமாலி ராவணனை நோக்கி, “குழந்தாய்! நீ பிரம்மாவிடமிருந்து உத்தமமான வரத்தைப் பெற்று விட்டாய். விஷ்ணுவின் மீது ஏற்பட்ட நமது பயம் நீங்கியது.  நீ இலங்கைக்கு மன்னனாக ஆவாய்.” என்றார்.

பிரஹஸ்தனும் அதை ஆதரித்து இலங்கைக்கு மன்னனாக ஆகும்படி தன் கருத்தைத் தெரிவித்தான். உடனே பிரஹஸ்தனையே தனது தூதுவனாக ராவணன் சகோதரன் குபேரனிடம் அனுப்பினான்.

பிரஹஸ்தன் குபேரனிடம் லங்கையை ராவணான் ஆள விரும்புகிறான் என்று சொன்ன போது குபேரன் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.

சரி என்று சொன்னான்.

பிரம்ம ரிஷியும் தனது தந்தையுமான விஸ்ரவஸிடம் சென்று இந்த விஷயத்தில் அபிப்ராயம் கேட்டான்.

அவர், “ராவணன் என்னால் எவ்வளவோ புத்திமதி சொல்லப்பட்டான். ஆனால் தீய தொழிலிலேயே பற்றுடையவனாக இருக்கிறான். அவன் இலங்கைக்கு மன்னனாக ஆகட்டும்” என்கிறார்.

வரப்ரதாநாத்சம்மூடோ மான்யாமான்யான்ஸ துர்மதி: |

ந வேத்தி மம சாபாஸ்ச ப்ரக்ருதிம் தாருணாம் கத: |\

உத்தர காண்டம், பதினோராவது ஸர்க்கம்., ஸ்லோகம் 40

ஸ: – அவன்

வரப்ரதாநாத் – வர ப்ரசாதத்தினால்

சம்மூட: – மதி மயக்கம் கொண்டவனாகியும்

துர்மதி – தீய வழியையே நாடுகின்றவனாகியும்

மம – எனது

சாபாத் – சாபத்தினால்

தாருணம் – கொடுமையான

ப்ரக்ருதிம் – பிறவிக்குணத்தை

கத: ச – அடைந்தவனாகவும்

மான்யாமான்யான் – பெரியோர்களையும் சிறியோர்களையும்

ந வேத்தி – பகுத்தறியாமலிருக்கிறான்”

இவ்வாறு விஸ்வரஸ் கூறுகிறார்.

இங்கு அவர் தந்த சாபத்தைப் பற்றிய குறிப்பைக் காண்கிறோம்.

ராவணன் மகிழ்ச்சியுடன் இலங்கைக்குச் சென்று ஆள ஆரம்பித்தான்.

ஒரு நாள் தனது தங்கையின் திருமணம் பற்றி ஆலோசித்த அவன் வித்யுத்ஜிஹ்வன் என்பவனுக்கு பாணிக்ரஹணம் செய்து கொடுத்தான்.

ஒரு நாள் வனத்திற்குச் சென்ற போது திதியின் புதல்வானாகிய மயனை அவனது புத்திரியான மண்டோதரியுடன் சந்தித்தான்.

அவர்களை யார் என்று ராவணன் கேட்க தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட மயன் மண்டோதரியை தர்மபத்னியாக ஏற்குமாறு ராவணனிட்ம் கூறுகிறான்.

ராவணனும் அதற்கு சம்மதித்தான். கல்யாணமும் நடந்தது.

அகஸ்தியர் ராமனிடம் கூறுகிறார்:

ஸ ஹி தஸ்ய மயோ ராம சாபாபிஞஸ்தபோ தனாத் |

விதித்வா தேன ஸா தத்தா தஸ்ய பைதாமஹம் குலம் ||

–          உத்தர காண்டம், பன்னிரண்டாவது ஸர்க்கம்., ஸ்லோகம் 20

ராம! – ஓ, ராம

ஸ: – அந்த

மய: – மயனானவன்

தஸ்ய – அவனுக்கு

தபோதனாத் – தபோதனரிடமிருந்து

சாபாபிஞ: ஹி – சாபம் இருக்கிறதென்று’ அறிந்தவன் தான்

தஸ்ய – அவனுடைய

பைதாமஹம் – கொள்ளுப்பாட்டனார் (பிரம்மதேவரது)

குலம் – குலப்பெருமையை

விதித்வா – பாராட்டி

ஸா – அவள்

தேன – அவனால்

தத்தா – கல்யாணம் செய்து கொடுக்கப்பட்டாள்

இந்த சாபத்தைப் பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.

ஆனால் ஏன் விஸ்ரவஸ் ராவணனுக்கு சாபத்தைக் கொடுத்தார் என்பது தெளிவாக தரப்படவில்லை. (கொடிய வேளையில் வந்து சேர்ந்தாய் என அவர் கைகஸீயிடம் சொல்வதை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்)

இப்படியாக ராவணன் மண்டோதரியை மணந்தது குறித்து அகத்தியர் ராமரிடம் கூறுகிறார்.

**

ஹைதராபாத்தில் 20 கோவில்கள்; ஆந்திர மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள்- 6

Ratnalayam Temple Fountains with Lord Vishnu

ஹைதராபாத்தில் 20 கோவில்கள் ஆந்திர மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் 6

 தற்போதைய மாநிலப் பிரிவின்படி ஹைதராபாத்தெலுங்கானா மாநிலத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின்  தலைநகரமும் ஆகும். அங்கு  சிறிதும் பெரிதுமாக 20 கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் பெரும்பாலானவை சமீப காலத்தில் கட்டப்பட்டவைதான்.

மிக அருகிலேயே செகந்திராபாத் நகரம் உள்ளதால் இவைகளை இரட்டை நகரங்கள் என்று அழைக்கிறார்கள் .

ஹைதராபாத் நகரத்தின் வரலாறே சுமார் 500 ஆண்டுகள்தான்.1591-ஆம் ஆண்டில் முஸ்லீம் மன்னர் ஒருவரால் நிறுவப்பட்டது ; பின்னர் முகலாயர் வசம் வந்தது ; நிஜாமின் சொத்து, கட்டிடங்கள், மியூசியங்களால் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்தது. முசி நதிக்கரையில் அமைந்த இந்த நகரத்தை முத்து நகரம் என்று அழைப்பார்கள்.

xxxxx

முக்கிய கோவில்கள்

1.Jagannath Temple ஜெகன்நாத் கோவில்

2.Ratnalayam Temple ரத்தநாலயம்

3. Venkateswara Swamy Temple வெங்கடேஸ்வர சுவாமி கோவில்

4. Birla Temple பிர்லா கோவில்

5. Shyam Temple ஷ்யாம் மந்திர கோவில்

6. Sri Gnana Saraswati Temple ஸ்ரீ ஞான சரஸ்வதி கோவில்

7. Peddamma Temple பெத்தம்மா கோவில்

8. Karmanghat Hanuman Temple கர்மன்காட் ஹனுமான் கோவில்

9. Sri Adinatha Temple சமணர்களின் ஆதிநாத் கோவில்

10. Keesaragutta Temple கீசரகுட்டா கோவில்

11. ஸ்ரீ காஞ்சி  காமகோடி பீடம் ஸ்ரீ ஷியாம் பாபா மந்திர்;

12. பல்காம்பேட்டை எல்லம்மா, போச்சம்மா கோவில்;  

13. ஹரே கிருஷ்ணா பொற்கோவில்;

ஸ்ரீ பாக்யலட்சுமி கோவில் , சார்மினார்;

14, சாயிபாபா கோவில்;  

15. அஷ்டலெட்சுமி கோவில்;

16.  சக்தி கணேஷ் கோவில்;  

17. ஸ்வயம்பு சென்னகேசவ கோவில்;

18. சிவ பெருமான் கோவில்;

19. சூரியன் கோவில்;  

20. நரசிம்ம சுவாமி கோவில்;

21. தத்தாத்ரேயர் கோவில்;

Shri Kanchi Kamakoti Peetham Shri Shyam Baba Mandir. …

Balkampet Yellamma Pochamma Temple. …

Hare Krishna Golden Temple. …

Shri Bhagya Laxmi Mandir, Charminar. …

Sai Baba Temple Dilsukhnagar. …

Ashtalakshmi Temple, Hyderabad. …

Shakthi Ganesh Temple. …

Swayambhu Chennakesava Swamy Temple.

Sri Jagannath Mandir, Banjara Hills

Hindu temple

Plot No- 1269, Road No. 12

Ornate Hindu site with colorful carvings

Sri Peddamma Talli Temple

(73K) · Hindu temple

CCJ3+9X3, Road Number 55

Colorful tower with a golden effigy;

Shri Ashtalakshmi Temple

Plot No.52, 55, W Road No. 4

Ornate architecture, idols & lights

xxxx

ஒவ்வொரு கோவில் பற்றியும் சுருக்கமான விவரம்; எல்லா கோவில்களையும் காலை ஆறு மணிக்குத் திறந்துவிடுகிறார்கள்

பஞ்சசரா ஜெகந்நாத் கோவில்

ஜெகந்நாத கோவிலை ஒரிஸ்ஸா (ஓடியா) மாநில மக்கள் கட்டினார்கள். நகரிலுள்ள கோவில்களில் மிகவும் புகழ்பெற்றது இது. பஞ்சரா குன்றின் மேல் அமைந்துள்ளது ;கலை அழகு  மிக்கது பலராமா , சுபத்ரா, ஜகன்னாதா விக்கிரகங்கள் பிரதானமானவை ஹனுமான், பார்வதி, சிவன், கணபதி சந்நிதிகளும் உள்ளன புரி மரத்திலுள்ள பெரிய ஜகந்நாதர் கோவிலைப் போலவே இங்கு கட்டப்பட்டுள்ளது 70 அடி உயர கோபுரம் கம்பீரமாகக் காட்சி தருகிறது

xxxx

ரத்தினாலயம் கோவில்

இது வெங்கடேஷ்வரர் கோவில்; அலமேலு மங்கை, பத்மாவதி சகிதம் பெருமாள் காட்சி அளி க்கிறார். அமைதி தவழும் நந்தவனம் இருப்பதால் மக்கள் மவுனமாக நாம ஜபம் செய்யலாம்; தியானம் செய்யலாம்; அல்லது யார்கையை அனு பவிக்கலாம் ; விஷ்ணு ஆதி சேஷன் மீது பள்ளி கொண்டிருக்கும் பெரிய நீர் ஊற்று ஆலயத்தின் சிறப்பு அம்சம் சங்கு சக்ர ஊற்றுகளும் உண்டு  கல்யாண கட்டம்,  பெரிய மண்டபம், கான்டீன், சிறுவர் விளையாடும் இடம், யாக சாலை, வாகனம் நிற்கும் வசதி அனைத்தும் உள்ளதால் பக்தர்கள் அதிகம் வருகின்றனர்  இரவு எட்டு மணி வரை திறந்திருக்கும்.. நகருக்கு வெளியே இருந்தாலும் பஸ் வசதி உள்ளது .

Ratnalayam Temple Picture

.

xxxx

பிர்லா மந்திர்

நகரின் நடுவில் வெள்ளை பளிங்கால் அமைந்த வெங்கடேசுவரர் சுவாமி கோவிலான பிர்லா மந்திர் உள்ளது.

பிர்லா பவுண்டேஷன் இதை 1976-ம் ஆண்டில் கட்டியது . திருப்பதி பாலாஜி கோவில் மாதிரியில் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் வெங்கடாசலபதி உருவம் வழிப்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளது .

280 அடி உயர குன்றின் மேல் கோவில் கட்டப்பட்டுள்ளது நகரத்தை இங்கிருந்து காண்பதற்கு நிறைய பேர் வருகிறார்கள். மேலும் வெங்கடாசலபதி தவிர சிவன், கணபதி, ஹனுமான் , பிரம்மா சரஸ்வதி விக்கிரகங்களும் உள்ளன. காலை ஏழு மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்; பகலில் சில மணி நேரத்திற்கு கோவில் மூடப்பட்டிருக்கும்

xxxx

தொடர்ந்து மேலும் பல கோவில்களை தரிசிப்போம்

—subham—

Tags- ஹைதராபாத், 20 கோவில்கள், ஆந்திர மாநிலத்தில், 108 புகழ்பெற்ற கோவில்கள், Part 6