திரு மந்திரத்தில் அப்பட்டமான செக்ஸ் பாடல்– ஆராய்ச்சிக்  கட்டுரை- 33 (Post No.13,417)

திரு மந்திரத்தில் அப்பட்டமான செக்ஸ் பாடல்– ஆராய்ச்சிக்  கட்டுரை- 33 (Post No.13,417)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,417

Date uploaded in London – 7 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

திரு மந்திரத்தில் அப்பட்டமான செக்ஸ் பாடல்– ஆராய்ச்சிக்  கட்டுரை –33

ரிக் வேதத்தில் ஆண் – பெண் புணர்ச்சி பற்றிய துதியைப் பார்த்தவுடன் வெள்ளைத்  தோல் அறிஞர்களுக்கு ஒரே கிளுகிளுப்பு .ஆனால் அதைப் பாராட்டுவதா அல்லது திட்டுவதா என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ரிக் வேதம் என்ற ஆராய்ச்சியில் அதுகள் எழுதிய எல்லா நூல்களிலும் அந்த துதி இடம்பெறும். துவக்கத்தில் தமிழ் வேதமாகிய திருக்குறளில் காமத்துப் பாலைப் படித்த வெள்ளைத் தோல்களுக்கும் ஒரே கிளுகிளுப்பு . ஆனால் அந்தப் பகுதியைக் கிறிஸ்தவத் தமிழர்கள் மொழிபெயர்க்கவில்லை. அது பற்றி விமர்சிக்கவும் இல்லை. அத்தனை தூ ய் ய் ய் ய் மை மை மை மை !!!!!!!!!!!!

உண்மையில் இந்துக்களைப் பொறுத்த மட்டில் செக்ஸ் / பாலியல் விஷயங்கள் , புணர்ச்சி பற்றிப் பேசுவதை அபசாரம் , அசிங்கம் என்று கருதவில்லை. உலகில் இலக்கணம் முதல் மூலிகை மருத்துவம் வரை, வான சாஸ்திரம் முதல் சோதிடம் வரையுள்ள விஷயங்களில்  எவ்வளவு அக்கறை செலுத்தினார்களோ அவ்வளவு கவனத்தை செக்ஸ் விஷயத்திலும் காட்டினார்கள். இதனால்தான் உலகின் முதல் செக்ஸ் புஸ்தகம் காமசூத்திரம் வாத்ஸ்யாயன மகரிஷியால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டது. அதில் தான்  பெண்கள் கல்விக்கான முதல் சிலபஸ் வெளியிடப்பட்டது. அதில் பெண்கள் கற்க வேண்டிய 64 கலைகள் பட்டியல் உள்ளது. அதைப் படித்தால்  வியப்பாக இருக்கும்;  2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்துப் பெண்களுக்கு இவ்வளவு தெரிய வேண்டுமா? இவ்வளவு எதிர் பார்ப்பா என்று வியப்போம். ஆனால் தர்ம, அர்த்த, காம மோக்ஷ = அறம், பொருள், இன்பம், வீடு — என்ற நான்கு கோட்பாடுகளில் அறத்துக்கும் மோட்சத்துக்கு இடையில் காமத்தையும் பணத்தையும் வைத்து சான்ட் விச் SANDWICH  செய்து சாப்பிடக் கொடுத்தார்கள் அதாவது பொருள் தேடுவதற்கும் காமத்தை நாடுவதற்கும் இரு புறமும் வரம்பு கட்டிவிட்டார்கள் ; அதாவது எல்லைக்கோடு போட்டுவிட்டார்கள்;  இந்த நோக்கில் தமிழில் வரும் செக்ஸ் பாடல்களை நோக்க வேண்டும் 3000 பாடலில் திருமூலர் சொன்னதைப் படித்துவிட்டு அதில் ஒரு புணர்ச்சிப் பாடலை மட்டும்  பார்த்து எவனாவத்து கிளுகிளுப்பு அடைந்தால் அவன் அறிவிலி/ முட்டாள் என்று கண்டுபிடித்து விடலாம்.

ரிக் வேதப் பாடலையும் இதே நோக்கில் காண வேண்டும் ஆயிரத்துக்கும் மேலான துதிகள் — அதாவது 10,000 க்கும் மேலான மந்திரங்களைக் கொண்ட ரிக் வேதத்தில் ஒன்று இப்படி உள்ளது.

சங்க இலக்கியத்தில் அக நானூற்றில் மட்டுமே 2 திருமணப் பாடல்கள் உள்ளன.; அதில் ஒரு பாடல் முதிலிரவு பற்றியது . அதை ஊன்றிப் படித்தால் செக்ஸ் வருணனை புரியும்.

ஆசாரக் கோவை என்னும் நூலில் எந்த நாளில் மனைவியிடம் கட்டாயம் படுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது . அது பதினெண் கணக்கு நூல்களில் ஒன்று.

xxxx

இதோ திரு மந்திர செக்ஸ் பாடல்; தலைப்பு – கருஉற்பத்தி

455: The Tattvas Remained in the Forehead of the Foetus

The penis pierced; the vagina opened,

And together they rushed in

The Tattvas in groups of Five–

The Elements Five,

The tanmatras Five,

The sense organs Five gross,

And the Five Subtle,

And cognizing organs four–Mind, Intellect, Will and Egoity

And in the Centre of Forehead they all lay, concealed

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி

ஒழிந்த முதல்ஐந்தும் ஈரைந்தொ டேறிப்

பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்

ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே.

பொருள்

வாழ்க்கைத் துணைவராங் காதலர் அன்புற்று இன்புறும் வாயிலாம் மகப்பெறுதற் பொருட்டுக் கூடிய கூட்டத்து இலிங்கமாகிய உருவுடம்புக்கு வாயிலாம் வித்துப் புகுந்தது. அதனை ஏற்றுக்கொள்ளும் பொருட்டுக் கருவழியாகிய யோனி விரிந்தது. நுண்ணுடலில் தங்கியிருந்த ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் நுண்மை ஐந்தும் அறிதற் கருவி ஐந்து, செய்தற் கருவி ஐந்து ஆகப் பத்தினுடன் கூடிய மழையாகப் பொழியும் நீர்முதலாகச் சொல்லப்படும் பூதங்கள் ஐந்தும் தோன்றின. அவற்றால் போற்றப்படும் கரணங்களும் கூடின. புருவ நடுவிலும் உச்சியிலும் நின்று உணரும் தொழிலும் இடையறாது நிகழ்வதாயிற்று. அறிதற் கருவி; செவி, மெய், கண், நாக்கு, மூக்கு. செய்தற் கருவி; வாய், கால், கை, எருவாய், கருவாய், கரணம்; எண்ணம், மனம், எழுச்சி, இறுப்பு. அறிவு நிகழ்தற்கு நிலைக்களம் புருவநடுவும் உச்சியும் என்ப.

xxxxx

My Marginal Note in Griffith Rig Veda Book

எங்கெங்கெல்லாம் செக்சி பாடல்கள், மந்திரங்கள் வந்ததோ அ ங்கெங்கெல்லாம் கிரிப்பித் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவில்லை.

வில்சன் போன்றோர் லத்தீன் மொழியில் கொடுத்தனர்

I wrote on 16-12-1996

In the Veda , the igniting of a fire is compared to sexual intercourse. According to Kausika Sutra (35-8), one should recite the Atharva Veda hymn 6-11 in the rite performed for the conception of a so”n.

தீப்பெட்டி, தீக்குச்சி இவையெல்லாம் கண்டு பிடிப்பதற்கு முன், வேத கால யாகங்களுக்கு அரணிக்  கட்டையைப் பயன்படுத்துவார்கள் . கீழேயுள்ள கட்டையைப் பெண் என்றும், மேலேயுள்ள குச்சி வடிவிலுள்ள கட்டையை ஆண் என்றும் கருதி மத்து கடைவது போல கடைவார்கள் அப்போது எழும் தீப்பொறி குழியைச் சுற்றியுள்ள தேங்காய் நாரில் பற்றிக்கொள்ளும். அந்தத் தீயை புனித யாகங்களுக்குப் பயன்படுத்துவார்கள் . இப்படிக் கடைவதை வேத மந்திரம் ஆண் பெண் புணர்ச்சிக்கு ஒப்பிடுகிறது.

See RV for Sexy Poems

1-179

3-29-2

2-10-3

10-79-16,17

Peepal tree- Male, Sami Tree- Woman

Araṇi literally means ‘that which is turned round’.

The fire in which Vedic sacrifices are performed, should be generated by attrition. The two pieces of wood is used for this purpose are called ‘araṇis.’

  • ‘Adharāraṇi,’ – The lower piece is rectangular in shape and has an indentation called ‘devayoni,’ the origin of the god of fire. It should be of the aśvattha (Ficus religiosa) which is softer, the size being 16 aṅgulas long, 12 aṅgulas wide and 4 aṅgulas in height.
  • ‘Uttarāraṇi’ – The upper piece is in the form of a drill, which is inserted into the indentation of the adharāraṇi. It should be made from the wood of the śamī tree (Prosopis specigera) which is hard.

Fire is generated by vigorous churning while chanting of appropriate ṛks.[1] The lower araṇi is sometimes figuratively called the ‘mother,’ the upper araṇi the father and agni the fire, as the offspring.

XXXXXX

இதோ ரிக் வேத செக்ஸ் பாடல் 10-61- 5 to 8

Membrum suum virile, quod vrotentum fuerat, mas ille retraxit. Rursus illud quod in juvenem filiam sublatum fuerat, non aggressurus, ad se rerahit.

परथिष्ट यस्य वीरकर्ममिष्णदनुष्ठितं नु नर्योपौहत
पुनस्तदा वर्हति यत कनाया दुहितुरानुभ्र्तमनर्वा ||

Quum jam in medio connessu, semiperfecto opere, amorem in puellam pater impleverat, ambo discedentes seminis paulum in terrae superficiem sacrorum sede effusum emiserunt.

मध्या यत कर्त्वमभवदभीके कामं कर्ण्वाणेपितरि युवत्याम |
मनानग रेतो जहतुर्वियन्ता सानौनिषिक्तं सुक्र्तस्य योनौ ||

Quum pater suam nilam adiverat, cum eā congressus suum semen supra viram effudit. Tum Dii benigni precem (brahma) progenuerunt, et Vastoshpatim, legum sacrarum custodem, formaverunt.

पिता यत सवां दुहितरमधिष्कन कष्मया रेतःसंजग्मानो नि षिञ्चत |
सवाध्यो.अजनयन बरह्म देवावास्तोष पतिं वरतपां निरतक्षन ||

Ille tauro similis spumam in certamine jactavit, tunc discedens pusillaximis huc profectus est. Quasi dextro pede claudus processit, “inutiles fuerunt illi mei complexus,” ita locutus.

स ईं वर्षा न फेनमस्यदाजौ समदा परैदपदभ्रचेताः |
सरत पदा न दक्षिणा पराव्रं न ता नुमे पर्शन्यो जग्र्भ्रे ||

xxxx

Rig Veda 10.110.5 “Spacious doors remain wide open like beautiful wives for their husbands. O divine doors, great and all-impellers, be easy of access to the gods.”

Nirukta 8.10 ”Having spaciousness, make yourself wide open as exceedingly beautiful wives do their thighs for their husbands in sexual intercourse. The thighs are the most beautiful parts (of the body)…”

காட்டு ராணிக் கோட்டையிலே கதவுகள் இல்லை இங்கு காவல் காக்கக் கடவுளையன்றி ஒருவருமில்லை, மற்றும்

எலந்தைப்பழம்  எலந்தைப்பழம்  உனக்குத்தான் என்ற திரைப்படப் பாடல்களைப் போல இரு பொருள்படும் வேத மந்திரங்கள் இவை.

XXXXXX

இதோ அகநானூற்று செக்ஸ் பாடல் First Night Scene

I removed her dress saying; please let your thigh get some wind  so that sweating will be dried. Her naked  body  shined like a sword removed from its cover. She bends her head in shame hiding her naked-body with her long hairs-from her head.

மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு

………………………….

மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை, 10

………………………….

உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி!

முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ,    20

பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர்

உறு வளி ஆற்றச் சிறு வரை திற” என

ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,

உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,

மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென   25

நாணினள் இறைஞ்சியோளே பேணி,

பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி,

சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த

இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.

. —விற்றூற்று மூதெயினனார் பாடல் 136

xxxx

எந்தெந்த நாளில் மனைவியுடன் படுத்து செக்சில் ஈடுபட்டால், பிறக்கப்போவது  ஆண் குழந்தையா, பெண் குழந்தையா அலியா என்று கட்டுபிடிக்கலாம் என்பதை திருமூலர் சொன்னார். அதை முன்னரே இந்த பிளாக்கில் கொடுத்துவிட்டேன். அதே போலமுனிசாமி முதலியார் 100 ஆண்டுகளுக்கு முன்னர்  எழுதிய

மூலிகை மர்ம நூலில் இந்துக்கள் கண்டுபிடித்த மூன்று நான்கு வயாக்ரா VIAGRA மாத்திரைகளையும் கொடுத்தேன். மருத்துவ / மூலிகை நூலில் கூட அவர்கள் வயாக்ரா பற்றி எழுதத் தவறவில்லை!

XXXX

பாரதியார் எழுதிய செக்ஸி பாடல்

கண்ணன் பாட்டு
கண்ணம்மா — என் காதலி
யோகம்

இது அதர்வ வேத மந்திரத்தின் தாக்கம் ஆழத்து மொழிபெயர்ப்பு என்று சொல்லலாம்

Atharva Veda 14.2.71 ”O bride, I am Amah and you are Saa I am Saman and you are Rik and I am sun and you earth. Let both of us unite together and procreate progeny.”

பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும்விழி நானுனக்கு;

தோயும்மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு;

வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;

தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!  1

………………………….            

வீணையடி நீ எனக்குமேவும்விரல் நானுனக்கு;
பூணும்வட நீயெனக்குபுதுவயிரம் நானுனக்கு; 2

வானமழை நீ யெனக்குவண்ணமயில் நானுனக்கு;

பானமடி நீ எனக்குபாண்டமடி நானுனக்கு;

ஞானவொளி வீசுதடி, நங்கைநின்றன் சோதிமுகம்;

ஊனமறு நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!    

3

………………………………………………    4

ஆசைமதுவேகனியேஅள்ளுசுவையே! கண்ணம்மா!    

5

………………………………….

போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!

நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!

………………………..

—subham—

Tags- திரு மந்திரத்தில், அப்பட்டமான, செக்ஸ் பாடல்,ஆராய்ச்சிக்  கட்டுரை -33, பாரதியார், ரிக் வேதம், காமசூத்திரம், அகநானூறு, Tirumular

ராமாயணத்தில் சாபங்கள் (34) லங்கா தேவி சாபத்தால் கேடடையும் லங்கையைப் பற்றி ஹனுமாரிடம் கூறியது! (Post.13,416)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.416

Date uploaded in London – 7 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (34) 

ராமாயணத்தில் சாபங்கள் (34) லங்கா தேவி சாபத்தால் கேடடையும் லங்கையைப் பற்றி ஹனுமாரிடம் கூறியது! 

ச.நாகராஜன்

இதுவரை கிஷ்கிந்தா காண்டம் முடிய நான்கு காண்டங்களில் வருகின்ற சாபங்களைப் பார்த்தோம்.

இனி சுந்தர காண்டத்தில் வரும் ஒரே ஒரு சாபம் பற்றிப் பார்க்கலாம்.

சுந்தர காண்டத்தில் மூன்றாவது ஸர்க்கமாக அமைவது –“லங்கா தேவியை ஜெயித்தல்” என்ற ஸர்க்கம்.

சீதா தேவியைத் தேடி லங்கையை அடைந்த ஹனுமார் அதைப் பார்த்தார்.

அப்போது லங்கையைக் காக்கும் லங்கா தேவி ஹனுமார் முன் தோன்றி, “நீ யார்? என்ன காரியமாக இங்கு வந்தாய்?” என்று அரட்டிக் கேட்கவே, ஹனுமார், “நகரைப் பார்க்க வந்தேன்” என்கிறார்.

“ என்னை ஜெயிக்காமல் உன்னால் இந்தப் பட்டணத்தைக் காண முடியாது” என்று கூறிய லங்கா தேவி கோபத்துடன் ஹனுமாரைக் கையினால் அறைந்தாள்.

இதனால் கோபமுற்ற ஹனுமார் கை முஷ்டியால் அவளைக் குத்தவே அவள் அங்கங்கள் சிதறின. பூமியில் அவள் விழுந்தாள்.

உடனே அவள் ஹனுமாரை நோக்கிக் கூறலானாள் :

“வானர ச்ரேஷ்டரே! நானே லங்கா தேவதை. உம்மால் பராக்கிரமத்தால் ஜெயிக்கப்பட்டேன். ப்ரம்ம தேவர் எனக்குத் தானாகவே கொடுக்கப்பட்ட வரபிரதானம் எப்படியோ அப்படியே உண்மையான நான் சொல்லும் விஷயத்தைக் கேளும்!

‘உன்னை ஒரு வானரவீரர் பராக்கிரமத்தோடு எப்போது வசம் செய்து கொள்கிறானோ அப்போதே ராக்ஷஸர்களுக்குக் கேடு வந்தது என்று அறி’ என்றார் அவர். அந்தக் காலம் இப்போது வந்து விட்டது. நீர் இந்த நகருக்குள் புகுந்து விரும்பும் காரியத்தைச் செய்து கொள்ளும்” என்றாள்.

மூன்றாவது ஸர்க்கத்தில் 52வது ஸ்லோகமாக வருவது இந்த ஸ்லோகம்:

லங்கா தேவி ஹனுமாரிடம் கூறுவது இது:-

ப்ரவிஷ்ய சாபோபஹதாம் ஹரீஸ்சர: புரீம் சுபாம் ராக்ஷஸராஜபாலினம்!

யத்யச்சாயா த்வம் ஜனகாத்மஜாம் சரிதாம் விமார்க சர்வத்ர கதோ யதா சுகம்||

ஹரீஸ்சர த்வம் – வானர வீரரான நீர்

ராக்ஷஸராஜபாலிதாம் – ராக்ஷஸ மன்னனால் ஆளப்பட்டதும்

சாபோபஹதாம் – சாபத்தாலே கேட்டை அடைந்ததும்

சுபாம் – நலம் பயப்பதுமாகிய

புரீம் – பட்டணத்தில்

ப்ரவிஷ்ய – நன்றாகப் புகுந்து

யத்யசாயா கத: – இஷ்டப்படி சென்று

சர்வத்ர – எல்லா இடங்களிலும்

யதா சுகம் – வேண்டியமட்டில்

சரிதாம் – கற்பினில் சிறத

ஜனகாத்மஜாம் – ஜனகரின் திருமகளை

விமார்க – ஆராய்ந்து தேடும்.

இப்படியாக சாபம் பெறப்பட்டு கேடடையும் லங்கையைப் பற்றி லங்கா தேவி கூறுகிறாள்

லங்கா தகனம் என்ற 54வது ஸர்க்கத்திலும் இந்த சாபம் திரும்பக் கூறப்படுகிறது இப்படி:

 ஹுதாஷனஜ்வாலசமாவ்ருதா ஸா ஹதப்ரவீரா ப்ரிவ்ருத்தயோதா |

ஹனூமத: க்ரோதபலாபிபூதா பபூவ சாபோபஹதேவ லங்கா ||

-சுந்தர காண்டம் 54வது ஸர்க்கம்,  43வது ஸ்லோகம்

ஸா லங்கா – அந்த லங்கை

ஹனூமத: – ஹனுமாரின்

க்ரோதபலாபிபூதா – கோபத்தின் கொடுமைக்கு இலக்காகி

ஹுதாஷனஜ்வாலசமாவ்ருத – அக்னி ஜ்வாலையால் சூழப்பட்டதாய்

ஹதப்ரவீரா – மாண்டு போன வீரரகளுடையதாய்

ப்ரிவ்ருத்தயோதா – சிதறி ஓடிய வீரர்களையுடையதாய்

சாபோபஹதா இவ – சாபத்தால் அழிக்கப்பட்டது போல

பபூவ – ஆயிற்று.

இங்கு லங்கை நகருக்கு யார், எப்போது எதற்காக சாபத்தைக் கொடுத்தார் என்பது விவரிக்கப்படவில்லை.

ஆனால் சாபத்தால் லங்கை அழிகிறது என்பது மட்டும் இரு முறை சொல்லப்படுகிறது.

இத்துடன் சுந்தர காண்டத்தில் வரும் ஒரே ஒரு சாபம் முடிவடைகிறது!

****

கோடி லிங்க கோவில், ராஜமஹேந்திரவரம் (Post.13,415)

Bridge over River Godavari

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,415

Date uploaded in London – 6 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ராஜமஹேந்திரவரம் நகரில் அமைந்துள்ள பாகழ்பெற்ற கோவில்கள் :

ஆந்திர மாநிலத்தில் உள்ள 108 கோவில்கள் – கட்டுரை 4

ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ராஜமஹேந்திரவரம்  அமைந்துள்ளது. அங்கு கோடி லிங்கேஸ்வர கோவில் உள்பட பல கோவில்கள் உள்ளன .

கோடி லிங்கேஸ்வர கோவில் The Kotilingeswara Temple in Rajahmundry.

நிறைய லிங்கங்கள் இருப்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது

xxxx

இஸ்கான் அமைப்பின் கிருஷ்ண கோவில் the International Society for Krishna Consciousness (ISKCON),

இங்கு கிருஷ்ணர் சிலை , ராதா கிருஷ்ணர் சிலைகள் உள்ளன

ISKCON | Sri Sri Radha Gopinath Dasavatara Temple

Gowthami Ghat Road, Beside, Godavari Bund Rd · +91 883 244 2288

 xxxx

உமா மார்கண்டேஸ்வர கோவில்

Sri Uma Markandeyeswara Temple

Godavari Bund Rd, near Pushkar Ghat Circle · +91 91771 86220

 மார்கண்டேஸ்வர  கோவில் ஒரு சிவன் கோவில். ஒருகாலத்தில் இதன் மீது மசூதி இருந்தது தொல்பொருட் துறையினர் சர்வே செய்த பின்னர்  இது இந்துக்கோவில்தான் என்பது உறுதியானது 1818ம் ஆண்டில் Gundu Sobhanadriswara Rao.குண்டு சோபனாத்ரி ராவ் இதை புதிய வாசலுடன் புனர் நிர்மாணித்தார் என்றும் 16 வயதுடைய மார்க்கண்டேயன் கதை இந்துக்கள் நன்கு அறிந்த கதையே.

இங்குள்ள சிவன் கோவில்களில் சிவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது

xxxx

ஸ்ரீ ஷியாமளாம்பா  அம்மாவாரி கோவில்

Sri Syamalamba Ammavari Devasthanam, Rajahmundry

இது ராஜமுந்திரி நகரின் மையத்திலேயே உள்ளது இது 100 ஆண்டுப் பழமையான கோவில். அதற்க்கு முன்னர் அங்கு  சோமலம்மா அம்மாவாரு சிலை இருந்ததாம்

 இப்போது சோமலம்மா கோவில் நகரின் கொடியில் இருக்கிறது யுகாதி அன்ரு திதெலுங்கு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது அன்றைய தினம், சோமலம் மாவாரு சிலையை ஷியாமளாம்பா  கோவிலுக்கு கொண்டு வருவார்கள்

இது போல பலதெய்வங்களை ஓரிடத்திற்குக் கொண்டு வந்து சமய ஒற்றுமையை ஏற்படுத்துவது தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம் ,தமிழ்நாடு ஆகிய 4  மாநிலங்களிலும் பெருவாரியாக நடை பெறுகிறது .

xxxx

மேலும் பல சிறிய, புதிய கோவில்களும் இருக்கின்றன

Sri Sarangadhareswara Swamy Devastanam, Rajahmundry

ri Kaleswara Sahitha Sree Balatripura Sundari, Kalikamba , Bhadrakali Temple in Rajahmundry

Sri Satyanarayana Swamy Temple, Rajahmundry

Sri Jagannadha Swamy Temple in Rajahmundry

Sri Rukmini Sameta Panduranga Swamy in Rajahmundry

Venugopala Swami Temple in Rajahmundry

Sri Sanjeevini Anjaneya Swamy and Sri Raghavendra Swamy Temple in Rajahmundry

xxxx

விஷ்ணுவர்தன் என்ற மன்னனின் பட்டம் ராஜ மகேந்திர.919-934 A.D. அவனுக்குப்பின்னர் ஆண்ட ராஜா ராஜ நரேந்திரன் வேண்டுகோளின் Rajaraja Narendra the great (1022-1061 A.D) பெயரில் இது ராஜ மஹேந்திர புரம் ஆயிற்று.

Tags—ராஜமஹேந்திரவரம், கோடி லிங்கேஸ்வர கோவில், ஆந்திர மாநிலத்தில் உள்ள 108 கோவில்கள் – கட்டுரை 4

Money, Money, Money : My Research Notes on VC 5 (Post No.13,414)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,414

Date uploaded in London – 6 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Money, Money, Money : My Research Notes on VC 5 (Post No.13,414) 

Here is the sloka seven from Viveka Chudamani (VC) of Adi Sankara

अमृतत्वस्य नाशास्ति वित्तेनेत्येव हि श्रुतिः ।
ब्रवीति कर्मणो मुक्तेरहेतुत्वं स्फुटं यतः ॥ ७ ॥

amṛtatvasya nāśāsti vittenetyeva hi śrutiḥ |
bravīti karmaṇo mukterahetutvaṃ sphuṭaṃ yataḥ || 7 ||

7. There is no hope of immortality by means of riches – such indeed is the declaration of the Vedas. Hence it is clear that works cannot be the cause of Liberation.

Notes:

[The reference is to Yajnavalkya’s words to his wife Maitreyi, Brihadáranyaka II. iv. 2. Cf. the Vedic dictum, “na karmaṇā na prajayā dhanena tyāgenaike amṛtatvamānaśuḥ”:—‘Neither by rituals, nor progeny, nor by riches, but by-renunciation alone some attained immortality.]

https://www.wisdomlib.org/hinduism/book/vivekachudamani/d/doc144455.html

Sankara in his Bhaja Govindam hymn says


Verse 2(Bhaja Govindam)

मूढ जहीहि धनागमतृष्णां

कुरु सद्बुद्धिं मनसि वितृष्णाम् ।

यल्लभसे निजकर्मोपात्तं

वित्तं तेन विनोदय चित्तम् ॥ २॥

Oh fool ! Give up your thirst to amass wealth, devote your

mind to thoughts to the Real. Be content with what comes through actions already performed in the past.

muda jahihi dhanagamatrsnam kuru sadbuddhim manasi vitrsnam |

yallabhase nijakaramopattam vittam tena vinodaya cittam ||

 It is greed that is the villain that makes one indulge in unlawful means to amass money.  There is no end to one’s greed if it gains a free hand. 

As Nachiketas tells Lord Yama in Kathopanishad (1-1-27) “ Na vithena tarpaneyo manushyaha” meaning ‘ man is not to be satisfied with wealth’.  Mind is always in a restless state and needs something to engage itself.  The mind isolated from greed should be filled with spiritual thoughts, thoughts turned Godward

My comments- My Experience in British Jails

I will tell you what I saw inside prisons in England as a Hindu Prison Chaplain. I remembered two stories of Ramakrishna Paramahamsa who warned repeatedly about Kamini Kanchana- Woman and Gold

In the Bhagavad Gita,  Lord Krishna warned about Three Doors to Hell. This I saw in prison, and I see it even today in daily Newspapers. All the crimes stories in newspapers fall under three categories. Every time I entered five prisons in England to see Hindu prisoners they introduced me other prisoners from other communities. I used to have a chat with hem for a few minutes and then entered Hindu Chapal ; I also covered two plus one detention centres in London Heathrow airport and Gatwick airport. I used to remember the following Gita sloka.

All the offenders came into prison because of Kaama, Krodha or Lobha (Lust, Anger, Greed). Lord Krishna beautifully summarised it in 16-21 Bhagavad Gita. He must have visited prisons 5000 year ago! Bhagavata stories tell us how Krisna’s father suffered inside jail. (we have description of prisons even in Tamil Epic Manimekalai)

त्रिविधं नरकस्येदं द्वारं नाशनमात्मन: |
काम: क्रोधस्तथा लोभस्तस्मादेतत्त्रयं त्यजेत् || 16-21||

tri-vidhaṁ narakasyedaṁ dvāraṁ nāśhanam ātmanaḥ
kāmaḥ krodhas tathā lobhas tasmād etat trayaṁ tyajet

tri-vidham—three types of; narakasya—to the hell; idam—this; dvāram—gates; nāśhanam—destruction; ātmanaḥ—self; kāmaḥ—lust; krodhaḥ—anger; tathā—and; lobhaḥ—greed; tasmāt—therefore; etat—these; trayam—three; tyajet—should abandon

tri-vidham narakasyedam dvaram nashanam atmanah
kamah krodhas tatha lobhas tasmad etat trayam tyajet

Translation

BG 16.21: There are three gates leading to the hell of self-destruction for the soul—lust, anger, and greed. Therefore, one should abandon all three.

Just read today’s crime news in 3 or 4 newspapers and divide them in categories, you will see they are jailed because of lust or anger or greed.

Here in the Sloka 7 of VC , Sankara warns us about Greed.

No Hindu saint said Don’t get married or Don’t Touch money. What they warned us is don’t feel lust or don’t be greedy. R.K.Paramahamsa’s devotees were married and doing business. He did not hate them but warned them about Kaamini- Kaanchana= Lust and Gold.

xxx

Money in Upanishads :Story of Two Wives

The oldest and the biggest Upanishad is the Brihad Aaranyaka Upanishad where we come across the beautiful episode of Mrs Maitreyi and Mrs Gaargi.

Brhadaranyaka Upanishad (aaranyaka) of 850 BCE

Sage Yajnavalkya had two wives, Maitreyi and Gargi. Intending to embrace the monastic life, he expressed his desire to divide his wealth between the two wives before departure. Maitreyi asked him whether she would be immortal if the whole earth full of wealth belonged to her. The sage replied that there was no hope of immortality through wealth, that is, rites performed with wealth Maitreyi therefore refused to accept any wealth ,but desired  to learn the means of immortality from the sage. Yajnavalkya tells her that the knowledge of the self is the only means of the self is the only means of immortality and gives her a grand description of the Self.

Neti hovaaca yaajnavalkyah; yathaiva upakaranavataam jiivitam tathaiva  te jiivitam  syaat; amrtatvasya  tu na aasaa asti vittena iti

Meaning

No, said yaajnavalkyah; with (wealth) your life will be just like the life of those  who have plenty of material means; there is no hope, however, of immortality (being gained) through wealth

Buddha in Dhammapada says,

The wise do not call a strong fetter that which is made up of iron , of wood or of rope, much stronger is the passion for gold and jewels, for sons or for wives.

–Dhammapada verse 345

xxxx

Tamil Sayings

Most of the quotes on money in Arthasastra of Kautilya and Tirukkural of Tiru Valluvar praise money and encourage people to look for money. Tamil proverbs also do the same.

திரை கடலோடியும் திரவியம் தேடு  (தமிழ்ப் பழமொழி)

SEEK WEALTH THOUGH YOU HAVE TO GO OVER THE TOSSING SEA.

ANOTHER TRANSLATION-

DONT HESITATE TO GO ABROAD, IF YOU CAN GET MONEY- Avvaiyaar’s Kodraiventhan

xxx

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்  (தமிழ்ப் பழமொழி)

Even dead body will open its mouth if you say Money

xxxx

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு.   (குறள் 247)

Arulillaarkku Avvulakam Illai Porulillaarkku

Ivvulakam Illaaki Yaangu- Kural 247

— (Transliteration)

Translation

Even as happiness in the world depends wholly on material possessions

Happiness in the world beyond will surely depend on compassion – 247

Or

This world is not for weathless ones

That world is not for graceless swines Kural 247

Or

As those without riches can have no enjoyments in this world so also are those without compassion denied the blessings of the world above

Valluvar also confirms indirectly that money wont take you to heaven (world above)

xxxx

Great Tamil Poet confirms it in his poem

மஹாகவி பாரதியார் தனது சுயசரிதையில் “பொருட் பெருமை” என்ற தலைப்பில் பொருளின் அவசியத்தையும் கூறியிருப்பார்.

பொருளி லார்க்கிலை யிவ்வுல கென்றநம்

புலவர் தம்மொழி பொய்ம்மொழி யன்றுகாண்.

பொருளி லார்க்கின மில்லைதுணையிலை,

பொழு தெலாமிடர் வெள்ளம்வந் தெற்றுமால்.

பொருளிலார் பொருள் செய்தல் முதற்கடன்.

போற்றிக் காசினுக் கேங்கி யுயிர்விடும்

மருளர் தம்மிசை யேபழி கூறுவன்:

மாமகட்கிங்கொர் ஊன முரைத்திலன்.

xxxx

Power of Money in Shakespeare’s Plays

 “Think’st thou, Hortensio, though her father be very rich, any man is so very a fool to be married to hell?”

— Gremio, Taming of the Shrew, Act 1 Scene 1

This is a version of the “no such thing as a free lunch” truism, but applied to marriage. In other words, it’s not worth it to marry rich if you’re hitched to a disagreeable partner. It’s as bad as eternal damnation.

“Whiles I am a beggar, I will rail and say there is no sin but to be rich; and being rich, my virtue then shall be to say there is no vice but beggary.”

—Bastard, The Life and Death of King John, Act 2 Scene 1

Shakespeare clearly understood that we adapt our views to fit our finances. The observation has relevance in today’s election cycle, where many voters favor their financial interests over a consistent ideology. The classic example: Lower-income supporters of higher taxes and well-funded social programs, who abandon their left-leaning principles when they become wealthy.

Xxxx

Stories and Quotations of Sri Ramakrishna Paramahamsa on Money

There are some stories and quotes on the power of money from Teachings of R K Paramahamsa

Let us look at them

To be continued………………………………………

Tags-Money, Maitreyi, Brhadaranyaka Upanishad, Naciketas, Viveka Chudamani, Sankara, Valluvar, Bharati, Tamil Proverbs, , Shakespeare, Dhammapada, My Prison Visits, three gates to Hell, Gita

S .Nagarajan Article Index June 2024 (Post No.13,413)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.413

Date uploaded in London – 6 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

S Nagarajan Article Index June 2024 

1-6-2024 13293 ராமாயணத்தில் சாபங்கள் (17) விஸ்வாமித்திரர் தனது    புத்திரர்களுக்குக் கொடுத்த சாபம்!                                                                                           2-6-2024 13296ராமாயணத்தில் சாபங்கள் (18) விஸ்வாமித்திரர் தனது புத்திரர்களுக்குக் கொடுத்த சாபம்!                                   3-6-2024 13299 ராமாயணத்தில் சாபங்கள் (19) கோசலை ராமனைப் பிரிய முடியாமல் சாபத்திற்கு நிகர் வார்த்தைகளைக் கூறியது!              4-6-2024 13303 ராமாயணத்தில் சாபங்கள் (20) கைகேயியைப் பார்த்த தசரதன் சாபத்திற்கு நிகர் வார்த்தைகளைக் கூறியது!                                                5-6-2024 13306 SNR Article Index: MAY  2024.                                                                           6-6-2024 13309 விண்ணில் பறந்த முதல் பெண்மணி – வாலண்டினா தெரஷ்கோவா! – 1  29-5-24 மாலைமலர் கட்டுரை                       7-6-24 13312 விண்ணில் பறந்த முதல் பெண்மணி – வாலண்டினா தெரஷ்கோவா! – 2  29-5-24 மாலைமலர் கட்டுரை                         8-6-24 13316 அமெரிக்கா எங்கும் வால் மார்ட் கடைகளை நிறுவிய சாம் வால்டன்! – 1 (5-6-24 மாலைமலர் கட்டுரை)                                  9-6-24 13319 அமெரிக்கா எங்கும் வால் மார்ட் கடைகளை நிறுவிய சாம் வால்டன்! – 2 (5-6-24 மாலைமலர் கட்டுரை).                                                                          10-6-24 133222 ராமாயணத்தில் சாபங்கள் (21) அம்பால் அடிக்கப்பட்ட முனிகுமாரன் தசரதனை நோக்கிக் கூறியது!                                     11-6-24 13326 ராமாயணத்தில் சாபங்கள் (22) தசரதனை முனிவர் சபித்தது! 12-6-24 13330 ராமாயணத்தில் சாபங்கள் (23) பரதன் கைகேயியை நிந்தித்தது!                                                                                                     13-6-24 13333 ராமாயணத்தில் சாபங்கள் (24) குபேரனிடம் விராதன் பெற்ற சாபம்!                                                                                                                                        14-6-24 13336 ராமாயணத்தில் சாபங்கள் (25) ரிஷிகள் ராக்ஷஸர்களுக்கு சாபம் கொடுக்காமல் இருப்பதற்கான காரணம்!                      15-6-24 13340 ராமாயணத்தில் சாபங்கள் (26) அந்தணருக்கு பதில் சொல்லாவிடில் சபிப்பாரோ என்ற சீதாதேவியின் எண்ணம்!                       16-6-24 13343  ராமாயணத்தில் சாபங்கள் (27) ஶ்ரீ ராமர் மலையைப் பார்த்து உன்னை அழிப்பேன் என்று கூறியது!                                                  17-6-24 13346 ராமாயணத்தில் சாபங்கள் (28) ஸ்தூலசிரஸ் முனிவர் கபந்தனுக்குத் தந்த சாபம்!                                                                                            18-6-24 13350 ராமாயணத்தில் சாபங்கள் (29) கபந்தன் இந்திரன் தனக்குத் தந்த சாபத்தை விளக்கியது!                                                                                    19-6-24 13354  ராமாயணத்தில் சாபங்கள் (30) லக்ஷ்மணன் ஹனுமானுக்கு கபந்தன் சாபம் பற்றிக் கூறியது!                                                                                               20-6-2024 13360 ராமாயணத்தில் சாபங்கள் (31) மதங்க முனிவர் வாலியை சபித்தது!                                                                                                                                 21-6-24 13363  ராமாயணத்தில் சாபங்கள் (31) மதங்க முனிவர் வாலியை சபித்தது! (தொடர்ச்சி) & 32 கண்டு முனிவர் வனத்தை சபித்தது        22-6-24 1336ராமாயணத்தில் சாபங்கள் (33) புஞ்சிகஸ்தலைக்கு ஒரு முனிவர் சாபம் கொடுத்தது!                                                                                      23-6-24 13371 அத்தியாயம் 20 இரண்டாம் உலகப் போர் பற்றிய ஆங்கிலத் திரைப்படங்கள்!!                                                           24-6-24 13374 அத்தியாயம் 21 இரண்டாம் உலகப் போர் பற்றிய ஆங்கிலத் திரைப்படங்கள்!!                                                                                                                      25-6-24 13377 அத்தியாயம் 22 இரண்டாம் உலகப் போர் பற்றிய ஆங்கிலத் திரைப்படங்கள்!!                                                    26-6-24 13380 அத்தியாயம் 23 இரண்டாம் உலகப் போர் பற்றிய ஆங்கிலப் புத்தகங்கள்!!                                                                                                                       27-6-24 13383 இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்! அத்தியாயம் 24 28-6-24 13386 நூறு வயது வாழத் தடைகள், பிரச்சினைகள்!  (ஜூன் 2024 ஹெல்த்கேர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை)                     29-6-2413389  மேடம் சி ஜே வாக்கர் – அனாதையாயிருந்து முதல் ஆப்பிரிக்க அமெரிக்க கோடீஸ்வரியானவர் ! – 1  (மாலைமலர் 12-6-24 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை)                                                                               30-6-24 13392  மேடம் சி ஜே வாக்கர் – அனாதையாயிருந்து முதல் ஆப்பிரிக்க அமெரிக்க கோடீஸ்வரியானவர் ! – 2  (மாலைமலர் 12-6-24 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை)

—subham—

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-15 (Post.13,412)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,412

Date uploaded in London – 5 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-15  (Post.13,412)

விஞ்ஞான ரகசியங்கள்

ஹிரண்யகர்பஹ- எண் 411

பிரம்மா தோன்றிய தங்க முட்டை/ ஹிரண்யகர்ப தோன்றக் காரணமானவர்.

அக்ரஜஹ- எண் 891

எல்லாவற்றிற்கும் முன்னர் தோன்றியவர்.அதாவது ஹிரண்யகர்ப

ரிக்வேதம் 10-121- 1 சொல்வதாவது ,

ஹிரண்யகர்பஹ  சமவர்த்ததாக்ரே — ஹிரண்யகர்ப முதலில் வந்தது..

இங்கு ஒரு முக்கிய விஷயத்தை   கவனிக்க வேண்டும் ஹிரண்யகர்ப என்பது முட்டை / கோளம் வடிவானது இந்தப் பிரபஞ்சம் , பூமி, கிரகங்கள் ஆகிய எல்லாம் வட்ட வடிவானவை . ரிக் வேதத்திலேயே இந்த வடிவம் சொல்லப்பட்டுள்ளது . அப்போது .HUBBLE /ஹப்பிள் டெலெஸ்கோப்போ , GALILEO /கலீலியோ டெலெஸ்கோப்போ இல்லை.

அண்டம், கோளம், மண்டலம் என்ற சொற்கள் எல்லாம் வட்டவடிவத்தையே குறிப்பிடுகின்றன.

xxx

ஸ்வத் ருதஹ — நாம எண் 843

தம்மைத் தாமே தாங்குபவர் .

மேற்குகூறியபடி எதுவும் அவரைத் தாங்கவில்லையானால்  அவர் எப்படி நிற்கிறார் ? இதற்கு சாந்தோக்ய உபநிஷத் விடை பகர்கிறது —ஸ பகவஹ கஸ்மின் ப்ரதிஷ்டித இதி ஸ்வே மஹிம்னி — சாந்தோக்ய உபநிஷத் 7-24-1–ஓ குருவே ! இதற்கு ஆதாரம் என்ன? அவருடைய மகிமையே –இவ்வாறு சங்கரர் கூறுகிறார்.

எனது கருத்து

இதை வானில் உலவும் கிரககங்களுக்கும் ஒப்பிடலாம். கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதும் இல்லை; கீழே விழுவதும் இல்லை. அந்தரத்தில் உலா வருகிறது. எப்படி? அவனது மஹிமை என்று இறைவனையும் கை காட்டலாம். அல்லது அவற்றின் மகிமையே என்றும் சொல்லலாம். அதாவது ஒன்றுக்கு  ஒன்று சரியான ஈர்ப்பு விசையை செலுத்துவதால் அவை அப்படியே அந்தரத்தில் வலம் வருகின்றன. அவைகளை கிரஹம் என்று நாம் சொல்கிறோம்  சூரியனும் சந்திரனும் கிரகங்களே என்று நவக்கிரக ஸ்தோத்திரத்தில் காண்கிறோம் . அது சரியான விஞ்ஞான விளக்கம். ஏனெனில் கிரஹம் என்றால் கிரஹிக்கவல்லது ;அதாவது ஈர்ப்பு விசை உள்ளது. கிராவிடி/ ஈர்ப்பு விசை என்ற சொல்லே கிரஹ என்ற சமஸ்க்ருத  சொல்லிலிருந்தே  வந்தது. பிடி, பிடிமானம், ஈர் , என்ற எல்லாச் சொற்களும் ஸம்ஸ்க்ருதச் சொல்லின் சகோதரர்கள் தான்  grip, gravity, grab=From Sanskrit word ‘graha’. கல்யாணத்திற்கு பாணி கிரஹணம் என்று பெயர்; அதாவது கைப்பிடித்தல் !

XXXX

நக்ஷத்ர நேமி — நாம எண் 440

நக்ஷத்ர மண்டலமாகிய சிம்சுமார சக்கரத்தின் குடம் போன்றவர்.

இந்த பிரபஞ்சமே  வட்ட வடிவானது. ஏனெனில் அவை ஒவ்வொன்றும் தன்னைத்தானே  சுற்றிக்கொண்டு ஒரு மையப்புள்ளியை வலம் வந்து கொண்டு எங்கோ ஓடிக்கொண்டே இருக்கிறது என்று வானவியல் நிபுணர்கள் கூறுகின்றனர் அப்படி தன்னைத்தானே  சுற்றிக்கொண்டால் அது வட்டமாகத்தான் போகும். இதை அறிந்த இந்துக்கள் மண்டலம், சக்கரம் என்ற சொற்களையே பயன்படுத்துவத்தைக் காணுங்கள் .

சங்கரர் காட்டும் ஸ்லோகம் –

நக்ஷத்ர தாரகைஹி சார்தம் சந்த்ர சூர்யாதயோ க்ராஹாஹா

வாயுபாஸ மயைர்  பந்தைர் நிபத்தா  த்ருவ சம்க் நிதே

காற்று என்னும் கயிறு மூலமாக சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் முதலான எல்லாம் துருவன் என்னும் மையப்புள்ளியுடன் கட்டப்பட்டுள்ளது

எல்லாம் ஒரு மையப்புள்ளியை நோக்கிச் சுழல்கின்றன என்று இன்றைய வானவியல் அறிஞர்கள் செப்புவதை,  வேத கால இந்துக்கள்தான் முதலில் கண்டுபிடித்து அறிவித்தனர்!

என்  கருத்து

1920-ம் ஆண்டு முதல்தான் இவையெல்லாம் விஞ்ஞான  பத்திரிகைகளில் அடிபட்டது ; நாமோ பல்லாயிரம் வருஷம் முன்னரே சக்கரம், மண்டலம், துருவ என்னும் மையப்புள்ளி முதலிய சொற்களால் இதை விளக்கிவிட்டோம்! பூமி தன்னைத்தானே சுற்றுகிறது; அத்தோடு சூரியனையும் சுற்றுகிறது ; சூரிய மண்டலமோ பால்வெளி எனப்படும் மில்கி வேயுடன் MILKY WAY சுற்றிக்கொண்டிருக்கிறது. மில்கி வேயோ சுற்றிக்கொண்டு எல்லாவற்றையும் இழுத்துக்கொண்டு எதோ ஒரு மையப்புள்ளியை வலம் வருகிறது. அவை எல்லாம் பலூனில் நாம் வைத்த கரும் புள்ளிகள் ஊத ஊத விரிவடைவது போல விலகிக்கொண்டே போகிறது  என்று பிரபஞ்ச தோற்றவியல் அறிஞர்கள் சொல்லுவார்கள். அந்த பலூன் வெடித்து பிரபஞ்சம் சுருங்கி BIG CRUNCH மீண்டும் பிக் பேங் BIG BANG ஏற்படும் என்பது இந்துக்களின் கோட்பாடு.

xxx

வைகுண்டஹ– நாம எண் 405

சிருஷ்டியின் தொடக்கத்தில் பஞ்ச பூதங்களைச் சிதறிப்போகாமல் ஒன்று சேர்த்துக் கட்டுப்படுத்துபவர் ..

இன்னுமொரு அர்த்தம்- பக்தர்கள் தன்னை அடைய முடியாமல் வரக்கூடிய தடைகள் இடையூறுகள் ஆகியவற்றை விலக்கி எளிதில் தம்மிடம் சேர்த்துக் கொள்ளுபவர் .

மகாபாரத சாந்தி பர்வம் சொல்கிறது 325-15

மாயா ஸம்ஸ்லேஷிதா பூமி-ரத்பிர் -வ்யோம ச வாயுனா

வாயுஸ்ச   தேஜஸா  ஸார்த்தம் வைகுண்டத்வம் ததோ மம

நான், நிலத்தை நீருடன் சேர்த்து வைத்தேன்; வானத்தை ஆகாயத்துடன் சேர்த்து வைத்தேன்; ஆகாயத்தை தீயுடன் சேர்த்தேன்; இதனால் வைகுண்ட அந்தஸ்த்தைப் பெற்றேன்

என் கருத்து

அதிகம் அறியாத எல்லோரும் வைகுண்டம் என்பது விஷ்ணுவின் இருப்பிடம் என்று மட்டுமே அறிவோம். ஆனால் சங்கரரோ பூமியின் வளர்ச்சி  பற்றிய விஞ்ஞான விஷயங்களை விளம்புகிறார். முதலில் இருந்தது பூமி; அதில் மழை கொட்டவே  குளிர்ந்து போய் காற்றுமண் டலம் (ஆகாயம்) வந்தது .பின்னர்தான் பூமியில் அக்கினியை மனிதன் யாகத்துக்கு உணவுக்கும் பயன்படுத்தத் தொடங்கினான்  . இதுபோன்ற விஷயங்கள் பல ஸம்ஸ்க்ருதப் பாடல்களிலும் சங்க இலக்கியப்  பாடல்களிலும் உள்ளன .

புறம் – பாடல் 2

மண் திணிந்த நிலனும்,

நிலம் ஏந்திய விசும்பும்,

விசும்பு தைவரு வளியும்

வளித் தலைஇய தீயும்,

தீ முரணிய நீரும்என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்

…………

என்ற புறநானூற்றுப்   பாடலை முரஞ்சியூர் முடிநாகராயர்  பாடினார் இது மகாபாரத சாந்தி பர்வம் 325-15 பாடலின் மொழிபெயர்ப்பு ஆகும்

THEORY OF EVOLUTION BY CHALRLES DARWIN

தசாவதாரத்தை  எடுத்துக்கொண்டால் முதலில் நீர் வாழ் உயிரினம் (வராக அவதாரம் ) பின்னர் நீர்- நிலம் ஆகிய இரண்டிலும் வாழும் கூர்ம / ஆமை அவதாரம்  பாதி மிருகம்- பாதி மனித நரசிம்மர், வில்லை பயன்படுத்திய ராமர், நவீன ஆயுதங்களைப் பயன்படுத்திய கிருஷ்ணர் , அதி நவீன லேஸர் ஆயுதங்களை பயன்படுத்தப் போகும் கல்கி அவதாரம் என்ற பரிணாம வளர்ச்சியைக் காண்கிறோம்..

விஞ்ஞானம் வளர, வளர, நமக்கு முன்னர் புரிபடாமல் இருந்த விஷயங்கள் சார்ல்ஸ் டார்வினின் புஸ்தகத்தைப்  படித்த  பின்னர்தான் புரிகிறது.

செஞ் ஞாயிற்றுச் செலவும்,

அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,

பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்,

வளி திரிதரு திசையும்,

வறிது நிலைஇய காயமும்என்று இவை

சென்று அளந்து அறிந்தோர் போல,—உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய புற நானூற்று ப் பாடல் 30

அந்தக் காலத்திலேயே சூரியமண்டல கிரக ஆராய்சசி நடந்ததை இந்தப் பாடல் காட்டுகிறது . மண்டிலம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு வட வடிவமான  என்று பொருள்.இந்தப் பிபஞ்சத்திலுள்ள எல்லாப் பொருள்களும் வட வடிவ,ஆனவை என்பதால் இதை அப்படியே இந்துக்கள் பயன்படுத்தினர் .

எ..கா.– கிரக மண்டலம், நட்சத்திர மண்டலம் , சூரிய மண்டலம்

ஞாயிறு செல்லும் பாதையையும்,

அந்த ஞாயிறு தாங்கிக்கொண்டிருக்கும் சுமைகளையும்,

அந்தச் சுமைக்குள் சூழ்ந்திருக்கும் உருண்டை மண்டலங்களையும்,

காற்று திரியும் திசையையும்,

ஒன்றுமில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் ஆகாயத்தையும்

தாமே நேரில் சென்று அளந்து அறிந்தவர் போல

இன்னது என்று அளவு கூறுவாரும் உளர்.

XXX

ஸஹஸ்ராம்ஸுஹு – நாம எண் 483

ஆயிரக் கணக்கான கிரணங்களை உடையவர்.

தைத்ரீய பிராமண நூல் 3-12-79-7 சொல்வதாவது ,

யேன ஸூர்யஸ் தபதி தேஜஸேத் தஹ — எவர் ஒருவரின் ஒளியால் சூரியன் பிரகாசிக்கிறானோ ….

பகவத் கீதை 15-12 லும் இதைக் காணலாம்:

यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलम् ।

यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम् ॥१५- १२॥

யதா³தி³த்யக³தம் தேஜோ ஜக³த்³பா⁴ஸயதேகி²லம் |

யச்சந்த்³ரமஸி யச்சாக்³நௌ தத்தேஜோ வித்³தி⁴ மாமகம் || 15- 12||

சூரியனிடமிருந்து எந்த  ஒளி அனைத்தையும்  பிரகாசிக்கச் செய்கிறதோ அந்த ஒளியும் சந்திரனிடத்துள்ளதும் தீயிலுள்ளதும்,  என்னுடையதே யென்று அறிவாயாக .– பகவத் கீதை

வான சாஸ்திர ஆய்வுப்படி, சூரியன் ஒரு நடுத்தர ஒளியுடைய நட்சத்திரம். திருவாதிரை போன்ற நட்சத்திரங்களோ அதை வீட பல ஆயிரம் மடங்கு சக்தி கொண்டவை. ஆனால் நம்முடைய பூமியைப் பொறுத்தவரை சூரியனுக்கு மிஞ்சிய சக்தி எதுவுமில்லை ஆகையால் கடவுள் என்பவரின்  சக்தியை ஒப்பிட நம் கண்ணுக்கு முன்னால் தோன்றும் சூரியனைக் காட்டி  இறைவன் அப்பேற்பட்ட சக்தி உடைய வன் என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள்.

கடல் என்பதைக் காணாத ஒரு சிறுவனுக்கு அவன் தந்தை கடலை எப்படி விளக்க முடியும்?  அந்த ஊரில் உள்ள ஏரி அல்லது குளத்தைக் காட்டி இதைப்போல பல்லாயிரம் மடங்கு பெரியது; மறு கரையே தெரியாது என்றுதான் சொல்லுவார். கடற்கைரையையே காணாத அந்தச் சிறுவனுக்கு கடல் பற்றி எவ்வ்வளவு புரியுமோ அவ்வளவுதான் நமக்கும் இறைவனின் சக்தி புரியும் . கையில் உள்ள கால்குலேட்டரைப் போல பல்லாயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது சூப்பர் கம்பியூட்டர். இறைவனோ பல்லாயிரம் சூப்பர் கம்பியூட்டர் போன்றவன் . இதை விளக்க அமெரிக்காவில் சிகாகோவில் பேசிய சுவாமி விவேகானந்தர் ஏரித் தவளை – கிணற்றுத்தவளை விவாதத்தை விளக்கிச் சொன்னார்.

பெளதீக விதிகளைக் கண்டுபிடித்துச் சொன்ன ஐஸக் நியூட்டன் கூட, தான் கண்டுபிடித்தது கடற்கரையில் உள்ள கூழாங் கற்களுக்குச் சமம் என்றும் கடல் அளவுக்கு இன்னும் கண்டுபிடிக்க உள்ளது என்றும் சொன்னார். கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு என்று சரஸ்வதியே (  (ஔவையார்).கூறினார் என்றல்லவோ நாம் படிக்கிறோம்.

கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த
வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன் கையாலெண் சாண்

—subham—

Tags- விஷ்ணு சஹஸ்ரநாம, விஞ்ஞான ரகசியங்கள் , ரகசியங்கள், மேற்கோள்கள்-15  , கற்றதுகைம் மண்ணளவு

Incredible Numbers – My Research Notes on VC 4 (Post No.13,411)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,411

Date uploaded in London – 5 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Hindus are great mathematicians. If one reads the Rig Veda, the oldest book in the world, one could see No.1000 in hundreds of Mantras. One would see incredible numbers everywhere. Adi Snakara in Viveka Chudamani (adi=aadi; chudamani= choodaamani) also gives big numbers. In 60,000 Sumerian inscriptions we see only small numbers.

वदन्तु शास्त्राणि यजन्तु देवान्
कुर्वन्तु कर्माणि भजन्तु देवताः ।
आत्मैक्यबोधेन विनापि मुक्तिः
न सिध्यति ब्रह्मशतान्तरेऽपि ॥ ६ ॥

vadantu śāstrāṇi yajantu devān
kurvantu karmāṇi bhajantu devatāḥ |
ātmaikyabodhena vināpi muktiḥ
na sidhyati brahmaśatāntare’pi || 6 ||- Viveka Chudamani (VC)

6. Let people quote the Scriptures and sacrifice to the gods, let them perform rituals and worship the deities, but there is no Liberation without the realisation of one’s identity with the Ātman, no, not even in the lifetime of a hundred Brahmas put together. Viveka Chudamani (VC)

Notes:

[Lifetime &c.—i. e., an indefinite length of time. One day of Brahma (the Creator) is equivalent to 432 million years of human computation, which is supposed to be the duration of the world. ]

https://www.wisdomlib.org/hinduism/book/vivekachudamani/d/doc144454.html

(Please go to wisdomlib.org for anything in Sanskrit)

My Comments

Even if one believes that Sankara lived in 732 CE, this calculation will amaze any one in any part of the world. One day of Brahma (the Creator) is equivalent to 432 million years of human computation, which is supposed to be the duration of the world. ]

Hindus only can think of high numbers. They know what time is. Even before modern astronomers wrote about billion galaxies, our Puranas said it. Manikka vasagar and Tirumular said it in Tamil hymns 1500 years ago.

(please see the details in my research articles on Age of Adi Sankara and Age of Manikkavasagar (maanikkavaasagar))

When they say some numbers, they mean it. Tamil poet Tiru Valluvar used the expression “it is like counting the dead-on earth” to mean incredible number. Purananuru poet says that we know “Seven Kings in one day”. It actually happened in Egypt. So they know history of the world and history of the earth. You don’t need to read voluminous

The Story of Civilization by C E M Joad

Or

The Story of Civilization (1935–1975), by husband and wife Will and Ariel Durant, is an 11-volume set of books.

Our Puranas has a compulsory section on history and geography. It is one of the Five Definitions of a Purana. No where in the world you see such mandatory rule for a mythology.

I wanted to remind you  at this stage we are talking about religious books. What we wrote on History and Geography were lost during Muslim Invasions. Fortunately , we have a few books written by research scholars such as the The Geography of Puranas, The History of Puranas.

English authors credited history to Egyptians, Babylonians, even Mayans and said they all ruled from 3000 BCE. When it came to Hindus they said Nandas in 600 BCE were the first known kings . They rejected 140 kings in the Puranas.

Thanks to Adi Sankara and Tamil poets we know that we had thousands of kings. Tamil and Sanskrit use two similes:

As many as the sand particles on the river bank

As many as the stars in the sky.

A man can see only 6000 stars with the naked eye. But without binoculars and telescopes they knew that there were billions of stars. The proof for this is in Manikavasagar’s Tiruvasagam (tiru vaasagam). Even Bharatiyar who died in 1921 sang about it.

xxxx

Now coming back to VC sloka 6, my marginal note says,

100 Brahma’s life time:

432 million years X365 days X100 X1 00= 157680000 crore years

One crore is ten million in English language.

Crore is a Sanskrit word; derived from KOTI.

Swmi Chinmayananda says

It is 311,040,000, 000, 000, 000 years.

Let us forget the huge numbers and read it between the lines.

Hindus say two things here:

1.There are billions of galaxies where the TIME is different. Even before Einstein said Time is fourth dimension and you can’t separate it from other three dimensions, we said it.

2.The second thing Hindus said even before NASA and others is, there are alien  worlds where the time is different.

In 2000 year old Sangam Tamil literature we read the life of a fly is one day; Let us imagine two ants discussed about it. Mother ant said to its baby ant, Hey! look at the man we are sitting on now. They live 365 X 100 times of our life. If we understand this, then we will understand our puranas  saying. One day of Brahma (the Creator) is equivalent to 432 million years of human computation, which is supposed to be the duration of the world.

Simple illustration

  • In 24 hours, the space station makes 16 orbits of Earth, traveling through 16 sunrises and sunsets. says NASA
  • This means it is one day for us, but 16 days for space station crew
  • Imagine we live on Pluto, it will be very different when you compare it with  a day on earth.
  •  

My articles are about the secular matter in VC and not philosophy of Adi Sankara.

To be continued……………………………..

Tags- incredible number, Brahma, My Research Notes on VC 4, Viveka Chudamani, Sankara, Brahma’s Age, Day

இமயமும் இராமாயணமும்!–3 (Post No.13,410)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.410

Date uploaded in London – 5 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx 

6-6-2024 தேதியிட்ட குமுதம் பக்தி ஸ்பெஷல் Supplemnt-ஆக வெளிவந்த இணைப்புப் புத்தகத்தில் வெளியான கட்டுரை. இங்கு மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது. 

இமயமும் இராமாயணமும்! – 3 

ச .நாகராஜன்

ரிஷிகேசம்  – லக்ஷ்மண் ஜூலா 

ரிஷிகேசத்திற்கு வடகிழக்கே ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் 450 அடி அகலமுள்ள ஒரு சஸ்பென்ஷன் பாலம் கங்கைக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது இப்போது மூடப்பட்டு விட்டது.

இங்கு ஒரு கயிறைக் கட்டி கங்கையை லக்ஷ்மணன் கடந்தான் என்பது வரலாறு.

இங்கு தான் லக்ஷ்மணன் மேகநாதனை வதம் செய்த பாவத்தைப் போக்க பல வருடங்கள் தவம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இங்கு லக்ஷ்மணனுக்கு தனிக் கோவில் ஒன்று பாலத்தில் அருகேயே உள்ளது.

வசிஷ்ட குகை

இராமாயணத்தில் அனைவராலும் போற்றி வணங்கப்படும் மஹரிஷி வசிஷ்டர் ஆவார். சப்த ரிஷிகளில் இவர் ஒருவர். பிரம்மாவால் தோற்றுவிக்கப்பட்டவர். சூரிய வம்சத்தின் குல குரு இவரே.

இவர் தவம் செய்து அரிய ஆற்றல்களைப் பெற்ற இடம் வசிஷ்ட குகை என அழைக்கப்படுகிறது.

இது ரிஷிகேசத்தில் அமைந்துள்ளது. ரிஷிகேசத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த இடத்தை பூலோக சொர்க்கம் என்று கூறுகின்றனர்.

இந்த குகை கங்கை நதிக் கரையில் அமைந்துள்ளது;  பிரதான சாலையிலிருந்து 120 அடி கீழே உள்ளது. இங்கிருந்து 5 நிமிட நடை நடந்தால் அருந்ததி குகையை அடையலாம்.

 இந்த வசிஷ்ட குகையில் பல விசேஷ அம்சங்களை பக்தர்கள் காண்கின்றனர்.

ஆன்மீக அதிர்வலைகளை உணரும் பக்தர்கள் கோடியில் உள்ள சிவலிங்கத்தை தரிசிக்கலாம். அதற்குப் பின்னர் உள்ள ஒரு சிறிய துவாரத்தில் கையை விட்டால் அது மூடி இருப்பது தெரிய வருகிறது. இந்த குகை சுமார் 20 கிலோமீட்டர் நீளத்தைக் கொண்டதாக இருந்திருக்கிறது. ஆனால் இது சமீப காலத்தில் மூடப்பட்டு விட்டது. ஏராளமான சித்தர்களும் யோகிகளும் மகான்களும் இங்கு தவம் செய்து அரிய சித்திகளைப் பெற்றுள்ளனர்; பெற்று வருகின்றனர்.

கைலாய மலை

ராமாயணத்துடன் தொடர்பு கொண்ட ஒரு இடமான கைலாயம் அமைந்துள்ள இடமும் இமயமலையே.

21778 அடி உயரமுள்ள இந்த மலையின் மீது இதுவரை ஏறியவர் யாருமில்லை. சிந்து, சட்லெஜ், பிரம்மபுத்திரா, கர்னாலி ஆகிய நதிகள் இந்த கைலாய மலைப் பகுதியில் ஓடுகின்றன.

சிறந்த சிவ பக்தனான ராவணன் கைலை மலையை அடியோடு பிடுங்க முயற்சி செய்ய, கோபமடைந்த சிவபிரான் தனது வலது பெருவிரலை மலையின் மீது அழுத்தி ராவணனை நசுக்கவே அவன் ஓலமிட்டு ஓவென்று கதறினான் என்பது புராணச் செய்தியாகும்.

தேவாத்மா, தேவபூமி என்று ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களும் கவிஞர் காளிதாசன் உட்பட்ட பெரும் கவிஞர்களாலும் போற்றப்படும் இதன் எழிலை வர்ணிக்க எந்த மொழியிலும் வார்த்தைகளே இல்லை.

 கண்வ குகை, உத்தாலக குகை என்று ரிஷிகள் தவம் செய்த குகைகள் ஒரு புறம்; கங்கை உள்ளிட்ட நதிகள் பாயும் செழிப்பான பிரதேசம் ஒரு புறம;, அமர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட புண்யத் தலங்கள் ஒரு புறம்; இயற்கை எழில் கொஞ்சும் தாவரங்கள் மற்றும்  வன விலங்குகள் ஒரு புறம் என ஏராளமான அம்சங்களைக் கொண்டு விளங்கும் இமயமலை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பாரதத்தின் அரணாகத் திகழ்ந்து வருகிறது.

தூய வெண்மையுடன் கூடிய இந்தப் பனிமலை உலகத்தினர் அனைவராலும் பிரமிப்புடனும் ஆச்சரியத்துடனும் பார்க்கப்படும் தெய்வீக மலையாகும்.

இந்த மலைத் தொடருடன் மஹாபாரத பாத்திரங்கள் தொடர்பு கொண்ட இடங்களைப் பார்த்தால் பிரமிப்பின் எல்லைக்கே சென்று விடுவோம்.

 துரோணகிரி – சஞ்சீவனி மூலிகை உள்ள மலை 

சின்னச் சின்ன வேறுபாடுகள் ஏன்?

இமயமலைத் தொடருடன் ஏராளமான சம்பவங்கள் கூறப்படும் போது ஒரு சந்தேகம் எழுவது இயல்பே.

ஒரே சம்பவம் இரு இடங்களுடன் தொடர்பு படுத்தி கூறப்படுகிறதே என்று.

ராமாயணம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த யுகம் கடந்த ஒரு உண்மை வரலாறு.

காலப் போக்கில் சில சிறிய சம்பவங்களைப் பெருமை கருதி தங்கள் இடங்களுடன் தொடர்பு படுத்தி ஆங்காங்குள்ள மக்கள் கூறிக் கொள்வது இயல்பே.

அடுத்து ஊழிச் சுழற்சி என்ற அடிப்படையில் ராமாயணம் யுகம் தோறும், ஒவ்வொரு தடவையும் நடைபெறும் போது யுகதர்மப்படி சில சிறு சிறு மாறுதல்கள் ஏற்படுவது இயல்பே.

அடுத்து சுமார் 75க்கும் மேற்பட்ட ராமாயணங்கள் பல்வேறு மொழிகளில் உண்டு. அவற்றின் கதைப் போக்கிலும் சில சிறு வேறுபாடுகளைக் காணலாம்.

ஆனந்த ராமாயணத்தில், சீதையை வனத்திற்கு வர வேண்டாம் என்று ராமர் கூறும் போது சீதை பதிலாக, “முந்தைய எந்த ராமாயணத்திலும் சீதை இல்லாமல் ராமர் வனம் சென்றதில்லையே” என்று பதில் கூறுவதை எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

அடுத்து ஆயிரக் கணக்கான தலங்கள் ராமருடன் தொடர்பு கொண்டு காஷ்மீர், உத்தர்காண்ட், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஆந்திரா, கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் இருப்பதும் இயல்பே.

ராமேஸ்வரம், திருப்புல்லாணி, ராமநாதபுரம் தொடங்கி வரிசையாக தமிழ்நாட்டில் ராமர் கோவில்கள் ஏராளம் உள்ளன. திருத்தல வரலாறுகளும் உள்ளன. ஆழ்வார்கள் பாடி அருளிய திவ்ய பிரபந்தம் நான்காயிரம் உண்டு.

ராமாயணத்தில் வரும் ஜீவனுள்ள கதாபாத்திரங்களும் காலத்தை வென்ற ‘அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்ற ஆதாரமான தர்ம நெறியை உலகிற்கே போதிப்பதை உணர முடியும்.

பாரத தேசத்தை ஓரிழையில் ஒன்று படுத்தி நிறுத்தி வைத்திருக்கும் ராமாயணம் காலத்தை வென்ற காவியம் என்பது மட்டும் உண்மை.

***

தெலுங்கானாவில் ஞான சரஸ்வதி கோவில் (Post No.13,409)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,409

Date uploaded in London – 4 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ஆந்திரத்தில் உள்ள 108 புகழ்பெற்ற கோவில்கள் -3

தெலுங்கானா மாநிலத்தில் பாசர என்னும் இடத்தில் ஞான சரஸ்வதி கோவில்  இருக்கிறது . கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள இந்தக் கோவில் நிஜாமாத் நகரிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது., தமிழ்நாட்டின் கூத்தனுர் சரஸ்வதி  கோவில் போல இதுவும் புகழ்பெற்றது

ஏனைய சாஸ்வதி கோவில்களைப் போலவே அக்ஷர அப்யாசம் /  வித்யாரம்பம் சடங்கிற்காக பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வருகிறார்கள். பள்ளிப் படிப்பு துவங்குவதற்கு முன்னர் அக்ஷர அப்யாசம் என்ற பெயரில்  குழந்தைகளுக்கு கடவுளின் பெயரைச் சொல்லிக் கொடுத்து , தானியம் நிரம்பிய தட்டில் கைவிரல்களால்  இறைவன் திருநாமத்தை எழுதச் சொல்வது அக்ஷர = எழுத்து, அப்பியாசம்= பயிற்சி எனப்படும். இப்போது கேரளம், ஆந்திரம் , கர்நாடகம் போன்ற மாநிலங்களில் பரவலாக நடக்கும் இந்தப் பயிற்சி 100 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டிலும் பரவலாக நடந்தது.

வேத வியாசர், மஹா பாரத  போருக்குப் பின்னர், தெற்கு நோக்கி யாத்திரை வந்த போது கோதாவரிக் கரையில் இந்த ஆலயத்தை நிறுவியதாக ஐதீகம். அவர் தவம் இருந்த குகை  குமாரசலத்தில் இப்போதும் இருக்கிறது. அவர் தவம் செய்த போது கனவில் பிறந்த கட்டளைப்படி தினமும் மூன்று பிடி மணலைக் கொ ண்டுவந்ததாகம் அவை பின்னர் துர்கா லெட்சுமி சரஸ்வதி  என்று  உருப்பெற்றதாகவும் சொல்லுவார்கள்.  அவர் வாசம் செய்த இடம் என்பதால் தெலுங்கில் வாசரா என்று அழைக்கப்பட்டது. அது மருவி இன்று பாசர  என்று அழைக்கப்படுகிது.

இங்கு 8 திசைகளில் எட்டுப் புனித கிணறுகள் இருக்கின்றன முஸ்லீ ம் மன்னர்கள் ஆண்ட காலத்தில் சிலையை தகர்க்க பல முயற்சிகள் நடந்தன . ஆனால் பக்தர்கள் சிலைகளை பாதுகாத்தனர்.

அதிகாலையில் கோவில் திறக்கப்படுகிறது மஹா சிவராத்திரியின் பொழுது 15 நாட்களுக்கு விழா நடக்கும்.; நவராத்ரி காலத்தில் பெரிய விழா நடக்கும். சரஸ்வதி கோவில் சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது சரஸ்வதி அருகில் லெட்சுமியும் அருகிலுள்ள கட்டிடத்தில் காளி சிலையும் உள்ளன.

அக்ஷர அப்யாசம் (வித்யாரம்பம்) நேரம் – காலை 7-30 முதல்

Basara Temple Aksharabhyasam Timings General Aksharabhyasam: Morning- 7:30 AM to 12:30 PM Evening- 2 PM to 6 PM The ticket cost in general Pooja is Rs. 100 per kid and parents. If other than these, then you need to pay Rs. 100 for each person.

XXX

பார்க்கவேண்டிய இடங்கள்-

ஸ்ரீ மஹாலக்ஷ்மி கோவில்

ஸ்ரீ தத்தாத்ரேயர் கோவில்

வியாச மகரிஷி குகை

வேதவதி கல்

கோதாவரி நதி

கோதாவரி நாத்திக கரையில் உள்ள சிவன் கோவில்

xxx

கோவில் திருவிழாக்கள்

வியாச பெளர்ணமி

நவராத்ரி/ தசரா

வசந்த பஞ்சமி

மஹா சிவராத்திரி

XXX

தங்கும் வசதிகள்

திருப்பதி தேவஸ்தான  விடுதி அறைகள் குறைந்த வாடகையில் கிடைக்கும்

இது தவிர ஒரு அறைக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல்  வாடகை உடைய பல விடுதிகள் உள்ளன.

எப்படிப் போவது?

ஹைதராபாத்திலிருந்து 210 கிலோமீட்டர்

பாசர ரயில் நிலையம் உள்ளது

மேலும் விஜயவாடா, ஹைதராபாத், வாரங்கல் , நிஜாமாபாத்திலிருந்து அடிக்கடி பஸ்கள் செல்கின்றன.

தொடர்பு முகவரி

Contact :

Executive Officer

Sri Gnana Saraswathi Devasthanam,

Basara – Village: Mudhole – Mandal. Adilabad.

Pin – 504101, Telangana State, India.

Temple Phone Number:

(91) 08752 – 243503

Executive Officer (Office):

(91) 08752 – 243550

–SUBHAM—

Tags-  .தெலுங்கானா, ஞான சரஸ்வதி கோவில், அக்ஷர அப்யாசம்,  வித்யாரம்பம், பாச

My Research Notes on V C -3 Three things are Rare! (Post No.13,408)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,408

Date uploaded in London – 4 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

VC= Viveka Chudamani

Let us see what Bharatiyar, Tiru Valluvar and Tirumular say!

दुर्लभं त्रयमेवैतद्देवानुग्रहहेतुकम् ।
मनुष्यत्वं मुमुक्षुत्वं महापुरुषसंश्रयः ॥ ३ ॥ -Viveka Chudamani (V C )

durlabhaṃ trayamevaitaddevānugrahahetukam |
manuṣyatvaṃ mumukṣutvaṃ mahāpuruṣasaṃśrayaḥ || 3 ||

3. There are three things which are rare indeed and are due to the grace of God –namely, a human birth, the longing for Liberation, and the protecting care of a perfected sage.

Rare Three: Human Birth, Longing for Liberation and Guru’s grace

लब्ध्वा कथंचिन्नरजन्म दुर्लभं
तत्रापि पुंस्त्वं श्रुतिपारदर्शनम् ।
यस्त्वात्ममुक्तौ न यतेत मूढधीः
स ह्यात्महा स्वं विनिहन्त्यसद्ग्रहात् ॥ ४ ॥

labdhvā kathaṃcinnarajanma durlabhaṃ
tatrāpi puṃstvaṃ śrutipāradarśanam |
yastvātmamuktau na yateta mūḍhadhīḥ
sa hyātmahā svaṃ vinihantyasadgrahāt || 4 ||

4. The man who, having by some means obtained a human birth, with a male body and mastery of the Vedas to boot, is foolish enough not to exert himself for self-liberation, verily commits suicide, for he kills himself by clinging to things unreal.

After getting the Rare Three, Don’t Cling to Unreal; that amounts to suicide.

इतः को न्वस्ति मूढात्मा यस्तु स्वार्थे प्रमाद्यति ।
दुर्लभं मानुषं देहं प्राप्य तत्रापि पौरुषम् ॥ ५ ॥

itaḥ ko nvasti mūḍhātmā yastu svārthe pramādyati |
durlabhaṃ mānuṣaṃ dehaṃ prāpya tatrāpi pauruṣam || 5 ||

5. What greater fool is there than the man who having obtained a rare human body, and a masculine body too, neglects to achieve the real end of this life?

You are a Fool, if you don’t use your Rare Things

xxx

TIRUMULAR in TIRU MANTHIRAM

Tamil saint of eighth century CE, Tirumular also said it:

2090 Human Birth is Rare; Yet They Seek Not Lord’s Feet

Rare is human birth,

Yet they seek not Lord’s Feet,

So rare to reach;

They attained the rare human birth,

Yet missed this Treasure Rare,

They are but crawling creatures, indeed.

பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்

பெறுதற்கு அரிய பிரானடி பேணார்

பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்

பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே. 

2089 They Pursue not the Way of Bliss

Born in bliss, grown in bliss

Steeped in thoughts of bliss

This way, they forget;

Instead,

Hankering after food and raiment

In sorrow steeped they are;

And in sorrow steeped, they insensible slumber.

2089. இன்பத்து ளேபிறந்து இன்பத்து ளேவளர்ந்து

இன்பத்து ளேநினைக் கின்றது இதுமறந்து

துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்று

துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே. 6

xxxx

Valluvar says

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.- குறள் 2:

Transliteration(Tamil to English):

Katradhanaal aaya Payanen kol VaalaRivan
natraal Thozhaaar enin

Meaning

Learning and scholarship are of no avail if they do not lead

One to worship at the wise one’s divine feet- Tiruk Kural 2

Or

Of what avail is a man’s learning if he does not pray to God- Kural 2

Or

What use is lore, if the learned will not bow

Before the feet of Him – the All Wise One?- Kural 2

0r

No fruit have men of all their studied lore,
Save they the ‘Purely Wise One’s’ feet adore- Kural 2

xxxx

Krishna in Bhagavad Gita says

Bhagavad Gita 2-61

तानि सर्वाणि संयम्य युक्त आसीत मत्पर: |
वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता || 2-61||

tāni sarvāi sanyamya yukta āsīta mat-para
va
śhe hi yasyendriyāi tasya prajñā pratihhitā

BG 2.61: They are established in perfect knowledge, who subdue their senses and keep their minds ever absorbed in Me.

xxxx

Subrahmanya Bharati says

Bharatiyar, Greatest of the Tamil Poets of Modern Age, sang about Liberation from British Rule. The same poem fits very well in the Liberation of Soul:

Liberty

Those that set their brave hearts on liberty

Will they take aught else thereafter?

Thirsting for the nectar of Gods,

Would they think of today?- 1

Dharma alone lives; All else is transient.

Those that have seen this truth,

Would they seek to live thereafter

In servitude dishonourable? – 2

Everyone that is born must surely dies;

Those that have realised this law,

Would they deem to pleasure to live,

Disregarding honour and duty? – 3

To be born as man is rarest privilege:

Those that have realised this truth;

Would they agree to enslave their souls,

Even if their bodies be thrown into fire?- 4

Would you barter the sun that shines in the sky

For a glow worm to play with?

Losing freedom dearer then eyesight

Can you live in servitude bowing? – 5

Thinking to enjoy comforts

Would you give up freedom?

is it not foolish to buy a picture,

selling both your eyes for the price? – 6

Having said Vande Matarm and bowed to the Mother

Can you offer worship to Maya?

How can you ever forget that Vande Matarm

Is the true song of salvation? – 7

Translated by C Rajagopalachariar (Rajaji, First Governor General of India)

(maayaa= illusion, unreal)

My comments

Bharatiyar was influenced by the Upanishads and teachings of Sri Adi Sankara. He himself praised Sankara in another poem.

Personal note:

My father V Santanam, News Editor of Dinamani, Madurai was arrested by the British police in Madras during the Independence Struggle. My mother used to tell us, he along with other freedom fighters, went in procession along the Mount Road Madras, singing this song Veera Suthanthiram………. When the police found a note on my father that ‘Kill the British Rulers’, he was arrested in Marina Beach and sent to Vellore Jail. He was there with Freedom fighter K Kamaraj for six months. India became free in 1947. in the 1960s when Kamaraj came to Madurai , he wrote two lines on a paper saying that Thiru Santanam was with me in Vellore Jail. When it was shown to the Collector of Madurai , he gave my father a copper plate meant for Thyaagis. That enabled my father to get a monthly pension for freedom fighters. After my father’s death my mother received the pension. After her death my sister is receiving it till this day.

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்

வேறொன்று கொள்வாரோ?-என்றும்

ஆரமு துண்ணுதற் காசை கொண்டார் கள்ளில்

அறிவைச் செலுத்துவாரோ? (வீர)

புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்எவறும்

கொய்யென்று கண்டா ரேல்-அவர்

இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு

இச்சையுற் றிருப்பாரோ? (வீர)

பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும்

பெற்றியை அறிந்தா ரேல்-மானம்

துறந்தறம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது

சுகமென்று மதிப்பாரோ? (வீர)

மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும்

வாய்மையை உயர்ந்தா ரேல்-அவர்

ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற

உடன்படு மாறுள தோ? (வீர)

விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய்

மின்மினி கொள்வா ரோ?

கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்

கைகட்டிப் பிழைப்பா ரோ? (வீர)

மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்

மாண்பினை யிழப்பாரோ?

கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்

கைகொட்டிச் சிரியாரோ! (வீர)

வந்தே மாதரம் என்று வணங்கியபின்

மாயத்தை வணங்குவ ரோ?

வந்தே மாதரம் ஒன்றே தாரகம்

என்பதை மறப்பாரோ? (வீர)

 —பாரதியார்

To be contined…………………….

Tags- Research Notes, Viveka Chudamani, Part 3, Human birth, Bharati, Tirumular, Valluvar, Veera Suthanthiram song, My father, V Santanam, Vellore Jail, K Kamaraj