இரண்டாம் உலகப் போர் – கிண்டர் டிரான்ஸ்போர்ட்! (Post No.11,921)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,921

Date uploaded in London –   21 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

யுத்தத் துளிகள் – ரத்தத் துளிகள்

புதிய நெடுந்தொடர் 

இரண்டாம் உலகப் போர் – கிண்டர் டிரான்ஸ்போர்ட்!

ச.நாகராஜன்

3 

கிண்டர் டிரான்ஸ்போர்ட்

இரண்டாம் உலக போரில் மனதைப் பதைபதைக்க வைக்கும் ஒரு விஷயம் கிண்டர் டிரான்ஸ்போர்ட்!

கிண்டர் என்றால் ஜெர்மானிய மொழியில் குழந்தைகள் என்று பொருள்.

இந்தக் குழந்தைகளை கொடூரமாகப் பயணப்பட வைத்தான் ஹிட்லர்.

அது தான் கிண்டர் டிரான்ஸ்போர்ட்!

எதற்காக?

நெஞ்சமே நடுநடுங்க வைக்கும், எழுதவே கை நடுநடுங்கும் விதத்தில் யூதக் குழந்தைகளை கொலை செய்வதற்காக!

ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆங்கில மாத இதழில் ஏராளமான உலகப்போர் பற்றிய கட்டுரைகள் வந்துள்ளன.

அவற்றில் கிண்டர் டிரான்ஸ்போர்ட் பற்றிய ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. அதில் ஒரு பகுதி இது:

ஜெர்மானிய நாஜிப் படைகள் கிழக்கு பிரான்ஸைப் பிடித்து ஆக்கிரமித்துக் கொண்டது.

ஒரு நாள் அங்கு ரெட் க்ராஸ் -இல் பணி புரியும் ஒரு பெண்மணி ஒரு ரயில் நிலையத்தில் ரயில் ஒன்றின் அருகே சென்று கொண்டிருந்த போது விசித்திரமான ஒரு சத்தத்தைக் கேட்டாள். ஒரு ரேடியோ சிக்னலில் ஓசை போல அது இருந்தது. மிக மெல்லியதாக வந்த ஓசையால் அந்தப் பெண்மணி திகைத்தாள்.

எங்கிருந்து வருகிறது இந்த ஓசை? எதனால்?

ரயிலில் இணைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே சென்றாள். ஒரு பெட்டியிலிருந்து அந்த ஓசை வந்ததை அவள் கண்டாள்.

என்ன பயங்கரம?!!

அந்த குட்ஸ் வண்டிப் பெட்டியில் 80 யூதக் குழந்தைகள் திணித்து அடைக்கப்பட்டிருந்தன. இடமில்லாமல் ஒன்றை ஒன்று அந்தக் குழந்தைகள் பிடித்துக் கொண்டிருந்தன.

 இரண்டு ரொட்டித் துண்டுகள் ஒரு குடுவை நீர் – இவற்றுடன் அந்தக் குழந்தைகள் ஜெர்மானியரால் பாரிஸிலிருந்து கிளம்பும் வண்டியில்  திணிக்கப்பட்டிருந்தன. 18 மணி நேரப் பயணத்தை அவர்கள் மேற்கொண்டிருந்தனர்.

வண்டி நிற்கும் இந்த இடத்தில் அந்தப் பெண்மணி இதைக் கண்டுபிடித்தாள்.

அந்தக் குழந்தைகள் ‘Reich’-  ஆம் அது தான் ஹிட்லர் தனது சாம்ராஜ்யத்திற்கு அளித்திருந்த பெயர் – THIRD REICH-க்குக்  கடத்திச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தன.

அதில் நான்கு குழந்தைகள் ஏற்கனவே கொடூரப் பயணத்தால் இறந்து விட்டிருந்தன.

மீதிக் குழந்தைகளோ இடமின்மை, கடும் இருள், என்ன நடக்கப் போகிறதோ என்ற பயம் ஆகியவற்றால் மனம் கலங்கி இருந்தன.

பலருக்கு பைத்திய நிலை.

அந்தக் குழந்தைகளின் அடையாள அட்டைகளை ஜெர்மானியர் துண்டித்துத் தூக்கி போட்டிருந்தனர். பலருக்கு தங்கள் பெயரைக் கூடச் சொல்லத் தெரியாத அளவு குறைந்த வயது.

ஒரு புத்திசாலிக் குழந்தை தான் வசித்து வந்த வீட்டின் எண் 16 என்று கூறியது. தெருவின் பெயர் அதற்குத் தெரியவில்லை.

ஆனால் ஒரு விதத்தில் இந்தக் குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகளே.

உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு காப்பாற்றப் பட்டார்கள்.

ஆனால் பிரான்ஸில் ஜெர்மானியர்கள் பிடித்த யூதக் குழந்தைகள் 15000 பேர்கள்.

அவர்கள் பார்சல் கட்டப்பட்டு  ஜெர்மனிக்குக் கடத்தப்பட்டனர்.

எல்லாக் குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்டன.

பின்னார் நடந்த ஆய்வில் அந்தக் குழந்தைகள் போலந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நச்சு வாயு அறையில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

நாஜிக்களால் கொல்லப்பட்ட யூதர்கள் அறுபது லக்ஷம் பேர்கள்.

அதில் குழந்தைகளும் உண்டு, ஆண் பெண் நடுத்தர வயதினர், இளைஞர்கள், முதியோர் என்ற பேதமே இல்லை. அவர்கள் அனைவருக்கும் பொதுவாக இருந்த ஒரே ஒரு அம்சம் – அவர்கள் யூதர்கள் என்பது தான்.

****                                           தொடரும்

Story of Banyan Tree in Hinduism (Post No.11,920)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,920

Date uploaded in London – –  20 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Ficus bengalensis in the botanical name of Banyan tree. This is known as Maha Vrkisham in the Vedas, It has been mentioned in the Rig Veda, Atharvana Veda and Aitareya Brahmana. It was called Naisa Saaka or Nyagrotha – both meaning downward growing. The very word banyan which is derived from the word bania is also of Sanskrit origin. Banias are vendors under the banyan tree. Vanik or Vaanik is the Sanskrit word for vendor, shop owner, business man etc. bania is the corrupted form of Vanika. V=B change is known in all the old languages.

All the poets from Pancha tantra in Sanskrit to Athiveera rama Pandyan in Tamil has sung the glory of this huge tree. It symbolises eternal, immortal, undying, perpetual, deathless, never ending etc. Banyan tree is the only living organism that never dies. Its roots are spreading for ever. It is shown with the Krishna as baby lying on it after the Great floods (Maha Pralaya).

In Sanskrit it is popularly known as Vat or Vata vrksham. The world-famous Cambodian Hindu temple Angkor Vat has also this Vata in its name signifying the presence of banyan tree. It is the National Tree of India and the sthala vrksha in at least six Tamil temples and the famous immortal tree is also in Kurukshetra.

This tree is worshipped by the Hindus from Nepal to Bengal and from Himalayas to Vindhyas during Vata Savitri Vrata. Tamils celebrate the same Vrata as Kardaiyan Nonbu at a different date.

There is no Hindu woman who has not heard about Savitri who was as chaste as Arundhati . Story of Sathyavaan – Saavitri has been taken as feature films at least 40 times and enacted throughout India thousands of times in stage dance dramas . Her life is associated with this Savitri Vrata or Vata Poornima which falls on the 13th, 14th and 15th day of Sukla Paksha of Jyeshta month in Hindu calendar. 15th day is the Full moon/ Poornima day. On that day, Hindu women go to banyan trees in sarees and tie a thread around the banyan tree seven times. This, they believe, will ensure long life for her husband, eventually giving her married status until she dies in ripe old age. That way both husband and wife can look after their children and grand-children, in some cases even great grand-children.

PICTURE OF BANYAN TREE IN KURUKSHETRA

They draw the figures of Sathyavan and Savitri in sandal paste or keep their figures in metal and worship near the banyan tree. Each woman greets another woman Janma Savithri Ho (Long Live like Savithri or Be Another Savithri) जन्म सावित्री हो .

Here is the story of Satyavan in brief from Mahabharata and other Puranas.

Sathyavan was a prince who was looking after his blind father and the mother in a forest. They were dethroned by the enemy kings. Savithri was the beautiful girl born to Asvapathi and Malavi, the king and queen of Madra Desa. They asked Savitri to find her own man and she fell in love with Sathyavan after seeing his devoted service to his father and mother. But the heavenly messenger, inter-continental traveller Narada appeared before them and told that Sathyavan would die within a year. But Savithri decided to marry and live with him.

During the last three days, she prayed to God strongly which allowed her to see Yama, God of death. She followed him and argued with him. At the end of persistent argument Yama yielded to her and was ready to give her a boon. She tricked him and asked for a blessing as Deerga Sumanagli (Never becoming a widow). That is the usual blessing offered to every married woman in India (Deerga Sumangali Bhavah) by the elders and Sadhu Sanyasins. Yama readily said ‘Yes; so that be. Then he realised that he had to revive her husband so that she could be a Sumaangali (married status till her death). This story is known to all Hindus and they name their daughter after Savithri from Himalayas to Kanyakumari. Savithri is the name of goddess Gayathri as well. Brahmins worship Gayathri, Savithri and Saraswati three times a day

But what is the connection between the banyan tree and Savithri?

There are two interpretations:

That Sathyavan died under the banyan tree and she was praying for three days under the tree.

Another interpretation is that the banyan tree symbolises eternal life for her and her husband. It is very true they are remembered until this day. They attained immortality. As I said earlier Banyan tree is the one that lives for thousands of years through its spreading roots. That is the largest tree occupying acres of land.

XXXX

MORE POINTS FROM 100 YEAR OLD BOOK ON HINDU FESTIVALS:

Savitri is regarded as the highest type of conjugal fidelity, and her example is held out to every daughter of the Indian for imitation.

She was given three boons by Yama and Savitri asked

1.the restoration of the lost eyesight of father in law and mother in law

2.crown of her father in law (he should become king again)

3.birth of 100 sons

Some versions say that Satyavan died because of snake bite; other versions say he died when the tree branch fell on him. But all agree that he was lying his head on Savitri’s lap at the time of death.

The Savitri Vrata is a fast kept by Hindu women on the last three days of the bright half of Jeshta (June) to avert widowhood.

—- subham —–

Tags- Banyan tree, bania, Vata, vat, Savitri, Poornima, Sathyavan, Yama, Ficus bengalensis , Vrata

MY OLD ARTICLES IN THIS BLOG:

Banyan tree | Tamil and Vedas

tamilandvedas.com

https://tamilandvedas.com › tag › banyan-tree

26 May 2012 — They consider it represents Brahma , Vishnu and Shiva (Tri Murti). They reside in its roots, barks and branches respectively. FAMOUS BANYAN …


banyan | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › banyan

12 Nov 2017 — Huge banyan tree, another Ficus species (Ficus indica), is also worshipped in the same way. This tree is sacred to Vishnu.


SACRED TREES IN JAINISM – JAINS’ LOVE AFFAIR WITH …

Blogger

https://swamiindology.blogspot.com › 2020/01 › sacre…

16 Jan 2020 — Regarding the Banyan tree, a lot of things are in our religion and litrature. It is Vishnu’s name (Nyagrodha); it is worshipped by women …

 —- SUBHAM—

இந்து மதத்தில் ஆலமர வழிபாடு (Post No.11,919)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,919

Date uploaded in London – –  20 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

இந்துக்கள் வழிபடும் ஆல மரம், அரச மரம், அத்திமரம் மூன்றும் ஒரே தாவர  குடும்பத்தைச் சேர்ந்தவை. இவை மூன்றும் மனிதர்களுக்கு பல்வேறு வகையில் பயன்படுவதோடு பறவைகளுக்கும் பயன்படுகின்றன. மஹாபாரதத்தில் வரும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் இந்த மூன்று மரங்களையும் விஷ்ணுவின் அம்சங்களாக தினசரி இந்துக்கள் துதி பாடுகின்றனர். மாமன்னன் அலெக்ஸ்சாண்டர் கண்டு வியந்த இந்த ஆல மரம் ரிக்வேதத்தில் மஹா வ்ருக்ஷம் என்று குறிப்பிடப்படுகிறது.அந்த வேதத்தின் பிராமண நூலான ஐதரேய பிராமண புஸ்தகத்தில் , பின்னர் எல்லா சம்ஸ்க்ருத புராணங்களிலும் இது குறிப்பிடப்படுகிறது. கிருஷ்ணர், ஆலிலையில் அமர்ந்த கோலம் பிரசித்த மானது.

நைஸ சாக , ந்யக்ரோத என்ற இரண்டு சம்ஸ்க்ருத சொற்கள் கீழ் நோக்கி வளரும் மரம் என்பதாம். இதன் விழுதுகள் கீழே சென்று பரவுவதால் இதைத் தமிழர்களும் பல மொழிகளிலும் பாடல்களிலும் குறிப்பிடுகின்றனர் (எனது 2012 ம் ஆண்டு 2020ம் ஆண்டு கட்டுரைகளில் முழு விவரங்களும் உள்ளன.)

இந்தக் கட்டுரையில் பெண்கள் அனுஷ்டிக்கும் வட சாவித்திரி விரதத்தில் ஆல மரத்தின் பங்கினைக் காண்போம். வட என்றால் ஆலமரம் என்று பொருள். அங்கோர் வட் என்னும் உலகப் புகழ்பெற்ற கம்போடியா நாட்டு இந்துக்கோவிலும் ஆலமரம் காரணமாகவே அங்கோர் வாட்’ , ‘வட் ‘ என்று அழைக்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் இதை பானியன் ட்ரீ Banyan Tree என்று அழைப்பதும் ஸம்ஸ்க்ருதச் சொல்லே. பனியா என்றால் வியாபாரிகள். அந்தக் காலத்தில் ஆலமரத்துக்கு அடியில் அவர்கள் கடை விரித்து வியாபாரம் செய்தனர். பணியா இருக்கும் மரம் பானியன் மரம் என்று ஆனது. பணியா  என்பது  வாணிக, என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் மருவு. ப= வ மாற்றம் தமிழ் உள்பட உலகின் எல்லா பழைய மொழிகளிலும் உளது 

சாவித்திரியின் கதையை அறியாத இந்துப் பெண்கள்/ இந்தியப் பெண்கள் இருக்க முடியாது 

தாவரவியலில் இந்த மரத்தை  பைகஸ் பெங்காலின்சிஸ் என்றும் அழைப்பர் பழங்கால புஸ்தகங்களைப் பார்த்தால் பைகஸ் இண்டிகா என்றும் இருக்கும். இப்போது இதை வேறு ஒரு தாவரத்துப்  பயன்படுத்துவதால்  பைகஸ் பெங்காலின்சிஸ் என்ற பெயர் மட்டுமே நிலவுகிறது

Ficus benghalensis, commonly known as the banyan tree.

இந்த மரம் அழிவுக்கு அப்பாற்பட்டது. உலகில் அழியாத ஒரு உயிரினம்  இருக்குமானால் அது ஆல மரம் மட்டுமே. இது விழுது விட்டு வேரூன்றி பரவிக்கொண்டே இருக்கும். ஆகையால் இதை சனாதனசாஸ்வத, அக்ஷய , அழிவே இல்லாத என்ற பொருளில் இந்துக்கள் காண்கின்றனர். எமனுடன் சண்டைபோட்டு, சாவித்திரி என்னும் பெண், தனது கணவன் சத்தியவானின் உயிரை மீட்டுவந்ததால் இந்த மரம் வட சாவித்திரி வீரத்தில் இடம்பெறுகிறது.

ஜேஷ்ட எனப்படும் ஆனி மாத சுக்ல பட்ச 13,14, 15ஆவது நாட்களில் வட இந்தியா , நேபாளம் முழுதும் வட சாவித்திரி விரதத்தை பெண்கள் கடைப்பிடிப்பார்கள்  15 ஆவது நாள் பெளர்ணமி ஆகும். ஆகையால் இதை வட பூர்ணிமா என்பர். அன்றுதான் மூன்று நாள் விரதம் நிறைவு பெறும். இதன் மூலம் அவர்களுக்கு சாவித்திரி போல கணவனை இழக்காத தீர்க்க சுமங்கலித்துவம் கிடைக்கும். மூன்று நாட்களுக்கு விரதம், நோன்பு கடைப்பிடிக்கும் பெண்கள், புடவை, நகை நாட்டுக்குகளை அணிந்துகொண்டு ஆலமரத்தை வழிபடுவார்கள். அவர்கள் சத்தியவான் சாவித்திரி உருவங்களை வைத்து அல்லது சந்தனத்தால் வரைந்துவிட்டு ஆலமரத்தைச் சுற்றி 7 முறை நூல் சுற்றுவார்கள். ஒருவரை ஒருவர் பார்த்து ஜன்ம சாவித்திரி ஹோ “जन्म सावित्री हो என்று வாழ்த்துவர். சாவித்திரி போல நீடூழி வாழ்க என்பது இதன் கருத்து. தீர்க்க சுமங்கலி பவஹ  என்ற வாழ்த்துக்கு இணையானது இது.

மஹாபாரதத்தில் வரும் சாவித்திரி- சத்தியவான் கதையின் சுருக்கம் ,

அஸ்வபதி என்ற பத்ர நாட்டு மன்னனின் மகள் சாவித்திரி. மனைவி பெயர் மாலதி / மாளவிகா. சாவித்ரியை வணங்கியதால் நீண்ட காலத்துப் பின்னர் பிறந்தவள் சாவித்திரி.

உனக்குப் பிடித்த கணவனை நீயே தேர்ந்தெடு என்று அவர் சொல்ல, அந்தப் பெண் காட்டில் சந்தித்த சத்தியவான் மீது காதல் கொள்கிறார். ஏனெனில் சத்தியவான், கண் தெரியாத பெற்றோர்களை நன்றாக கவனித்து வந்ததைக் கண்டவுடன் இப்படிப்பட்ட நல்லவனைத்தான் நான் கல்யாணம் கட்டுவேன் என்று முடிவு செய்கிறாள்.

இடையில் நாரதர் வந்து , பதவி பறிபோன மன்னனின் மகன் சத்தியவான் என்றும் அவன் ஓராண்டுக் காலத்தில் இறந்து விடுவான் என்றும் ஆரூடம் சொல்கிறார். அப்படியே நிகழ்கிறது . அவனை மணந்து கொண்ட சாவித்திரி கணவனின் மரணம் நெருங்குவதற்கு முன்னர் மூன்று நாட்கள் விரதம் அனுஷ்டிக்கிறார். விதிப்படி எமன் உயிரைக் கவர்ந்தபோது தன்னுடைய கற்பின் சக்தியால்  யமனைப் பின்தொடர்ந்து சென்று வாதாடுகிறாள் . அவன் கணவன் உயிரைத் தரமுடியாது , வேறு எந்த வரம்  கேட்டாலும் தருவேன் என்கிறான். என்னை தீர்க்க சுமங்கலி என்று ஆசீர்வதி அது போதும் என்கிறாள். யமனும் அதன் முழு விளைவையும் அறியாது ததாஸ்து (அப்படியே ஆகட்டும்) என்கிறான். பின்னர்தான் யமனுக்கு ஷாக் shock அடித்தது.  அடக்கடவுளே!

தீர்க்க சுமங்கலி என்றால் கணவன் உயிரோடு இருக்க வேண்டுமே என்று கருதி சத்தியவானை உயிர்ப்பிக்கிறான் . கணவனைத் தொழுபவள் பெய் என்றால் மழை பெய்யும் என்ற திருவள்ளுவரின் வாக்கை நம்பும் தமிழ்ப் பெண்கள் அனைவரும் இதை அப்படியே நம்புவதால் தமிழ் நாடு முழுதும் சத்தியவான்- சாவித்திரி நாடகமும், திரைப்படமும் பிரசித்தமாயின..

மாதம் பற்றி ஒவ்வொரு கட்டுரையிலும் எச்சரித்து வருகிறேன். மாதங்களை இரண்டுவிதமாக இந்துக்கள் கணக்கிடுவர். தமிழர்கள் 12 ராசிகள் ஒவ்வொன்றிலும் சூரியன் பிரவேசிக்கும் நாளை மாதம் துவங்குவதாகக் கணக்கிடுவர். ஏனையோர் அமாவாசை முடிந்த மறுநாளைக்கு அந்த மாதம் துவங்குவதக்க கொள்ளுவர். அவரவர் பின்பற்றும் பஞ்சாங்க்கப்படி பண்டிகைகளைக் கடைப்பிடிப்பது உத்தமம்.

xxxx

சாவித்ரி பெளர்ணமி என்று அழைக்காமல் ஆலமர பெளர்ணமி (வட பூர்ணிமா ) என்று அழைப்பது ஏன் ?

ஆலமரம் போன்ற நிலையான, உறுதியான நீண்ட ஆண்டு வாழ்வு கணவனுக்கு இருக்க வேண்டும். அப்போது அந்தப் பெண்ணும் விதவை வாழ்வு வாழ வேண்டியிராது. இருவரும் சேர்ந்து பிள்ளைகளை நன்கு வளர்க்கலாம். இதனால் குல தருமம் செழிக்கும். பெண்களுக்கு மறுமணம் தேவைப்படாது . இப்படி எல்லா குடும்பங்களும் வாழ்ந்தால் சமுதாயம் முன்னேறும்

சாவித்திரி என்ற பெயர் தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு வைக்கப்படுகிறது. மேலும் பழைய தமிழ் நூல்கள் அனைத்திலும் சாவித்திரி விரதம் இருக்கிறது.

தமிழ் ஆண்டின் கடைசியில் காரடையான் நோன்பு இதே  கதையியைக் கூறுவதால் வட சாவித்திரி விரதத்தை தமிழர்கள் வேறு நாளில் கொண்டாடுகிறார்கள் என்றே சொல்ல  வேண்டும்.

சில மாநிலங்களில் அமாவாசை அன்றும் சாவித்ரி விரதம் பின்பற்றப்படுகிறது இந்தியாவில் பல்வேறு மொழிகளில் சத்தியவான் சாவித்ரி பற்றி 40 திரைப்படங்கள் வெளியாயின.

— subham—–

TAGS- இந்து மதம்,  ஆலமர வழிபாடு, வட சாவித்திரி , விரதம் , காரடையான் , நோன்பு ,நைஸ சாக , ந்யக்ரோத ,பனியா

ஆலமரம் மரம் | Tamil and Vedas

tamilandvedas.com

https://tamilandvedas.com › tag

·

 1 Jun 2020 — ஆலமரம் மரம் – 4 பழமொழிகள் … ஆலமரம் பழுத்தால் வேடன் பாடு கொண்டாட்டம்.

ஆலமரம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

27 May 2012 — ஆகவே மக்கள் இரு தரப்பட்டவர்கள்; சிலர் பனை மரம்; சிலர் ஆலமரம்.

இரண்டாம் உலகப் போர் – ஆரம்பமும் முடிவும்! (Post No.11,918)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,918

Date uploaded in London –   20 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

யுத்தத் துளிகள் – ரத்தத் துளிகள்

புதிய நெடுந்தொடர் 

இரண்டாம் உலகப் போர் – ஆரம்பமும் முடிவும்!

ச.நாகராஜன்

டிரான்ஸ்அட்லாண்டிக்

மனித குலத்தில் நமக்குத் தெரிந்து நன்கு ஆவணப்படுத்தப்பட்ட பெரும் போராகத் திகழ்வது இரண்டாம் உலகப் போர்.

இதைப் பற்றியும் இதைத் தொடர்ந்து முதல் உலகப் போர் பற்றியும் பல யுத்தத் துளிகளைச் ‘சிந்தும்’ தொடர் இது.

ரத்தத் துளிகளாக இவை பெரும்பாலும் இருப்பதால் மனதை நிச்சயம் நெகிழ வைக்கும்.

இதை எழுதக் காரணமாக இருந்தது நான் சென்ற வாரம் நெட்ஃப்ளிக்ஸில் பார்த்த TRANSATLANTIC என்ற தொலைக்காட்சித் தொடர் தான்.

7 பகுதிகளைக் கொண்ட இந்தத் தொடர் Anna Winger மற்றும் Daniel Hendler ஆகியோரால் உருவாக்கப்பட்ட தொடர். இது ஜூலி ஓரிங்கர் எழுதிய ‘தி ஃப்ளைட் போர்ட்ஃபோலியோ” (The Flight Portfolio by Julie Orringer)  என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தொடர்.

‘எமர்ஜென்ஸி ரெஸ்க்யூ கமிட்டி’ என்ற அவசர கால மீட்புக் குழு எப்படியெல்லாம் பிரான்ஸிலிருந்து யூதர்களையும் பிரிட்டிஷ் ப்ரிஸனர் ஆஃப் வார் POW – கைதிகளையும் படு பாதகக் கொலையிலிருந்து காத்து அவர்களைத் தப்பிக்க வைத்தது என்பதை சுவாரசியமாகச் சொல்லும் தொடர் இது.

இரண்டாம் உலகப் போரின் ஒரு மிகச் சிறிய பகுதியை ஒரு சிறிய வட்டத்திற்குள் சித்தரிக்கும் இந்தத் தொடரே நம்மை நெகிழ வைக்கிறது என்றால் முழு உலகப் போர் செய்திகள் நம்மை எப்படியெல்லாம் உளவியல் ரீதியாகப் பாதிக்கும் என்பதை எண்ணிப் பார்க்கலாம்.

இன்னும் ஒரு உலகப் போர் நிச்சயமாக உருவாகக் கூடாது என்ற உணர்வு குழந்தைகளிலிருந்து முதியோர் வரை மனதில் வேரூன்ற வேண்டும் என்பதால் தான், இதையும் உலகப் போர் பற்றியும் அறிய வேண்டிய அவசியம் இன்று ஏற்படுகிறது.

2

இரண்டாம் உலகப் போர் ஆரம்பமும் முடிவும்!

1-9-1939 அன்று ஹிட்லர் போலந்து மீது படையெடுத்ததைத் தொடர்ந்து உலகப்போர் ஆரம்பமானது. 3-9-1939 அன்று பிரிட்டனும் பிரான்ஸும் ஹிட்லருக்கு எதிராகப் போரை அறிவித்தன.

1945,ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி அமெரிக்கா ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் காலை 8.15 மணிக்கு  அணுகுண்டைப் போட்டது. உலகில் போடப்பட்ட முதல் நாசகரமான பேரழிவு ஆயுதம் இது தான்.

அது போட்ட அந்தக் கணத்திலேயே 80000 பேர்கள் இறந்தனர்.

அடுத்த அணுகுண்டு அமெரிக்காவினால் ஜப்பானில் உள்ள நாகசாகி நகரின் மீது 1945 ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி போடப்பட்டது. போடப்பட்ட அந்தக் கணத்திலேயே 40000 பேர்கள் இறந்தனர்.

ஜப்பானிய மன்னர் திகைத்தார். உலகமே திகைத்தது.

இதைத் தொடர்ந்து ஜப்பான் சரணாகதி அடைய உலக யுத்தம் முடிவுக்கு வந்தது.

இன்னொரு உலகப் போர் உருவாகி அணுகுண்டுப் போராக அது மாறினால் உலகம் என்ன ஆகும்?

பெர்ட் ரண்ட் ரஸ்ஸல் கூறிய படி மூன்றாம் உலக போர் ஏற்பட்டால் அதற்கு அடுத்த போரில் மனிதர்கள் கற்காலத்திய சண்டை போல கல்லினாலும் கையாலும் தான் சண்டை போட வேண்டி வரும்.

ஆம் நாம் கற்காலத்திய மனித நிலைக்குத் திரும்பி விடுவது உறுதி.

ஆகவே உலகப் போர் பற்றிய இந்த யுத்தத் துளிகளை – அது சிந்திய ரத்தத் துளிகளை அனைவரும் அறிவது அவசியம்.

வாருங்கள் துளிகளைப் பார்ப்போம்.

****               தொடரும்

Interesting story about Balsam and Apaamaarga Plant worship in Hinduism (Post No.11,917)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,917

Date uploaded in London – –  19 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Gauri festival is celebrated on the seventh, eighth and ninth (Saptami, Ashtami, Navami) of Bhadrapada Suklapaksha (bright half of the month). This goddess, wife of Shiva and mother of Ganesh, is considered the goddess of harvest and the protectress of women. Her festival, chiefly observed by women, closely follows Ganesh Chaturthi. Her festival, celebrated especially in Maharashtra, consists of three parts.

1.On the first day a bundle of aghaada (Achyranthes aspera or apamaarga in Sanskrit) is brought into house.

In some parts balsam or touch me not plants are used.

The plants are ceremoniously collected by maid servants, brought home and placed in the veranda on a low stool with the roots towards the main entrance of the house. Under the stool is drawn the Swastika, Devi’s footprint and other auspicious symbols. While the plants are collected, maid servants worship them and wrap them in a silk cloth.

On the first day evening it is placed on the lap of an unmarried girl and she is worshipped as goddess (devi). A priest recites mantras at that time.

The girl who carries the bundle representing Gauri is regarded as her agent for movement and speech, and is lead by the women of the house from room to room, in each being seated on a stool and having lamps waved around her.

In each she is asked: What have you brought? And she answers according to the nature of each room,

Treasure to fill a city,

Delicious food,

Beautiful children and so on.

Balsam Plant with flowers

The woman replies, “Come on golden feet, and stay for ever.” This is believed to bring good fortune to each room. The bundle is then placed on a stool, offered sweets, milk etc. and the night is spent by young girls in singing before her.

Her husband, Shiva is supposed to have followed her secretly, and is represented by a pot of rice and a coconut hidden under a fold of her cloth.

2.On the second day she is offered food, and worshipped, and at noon a big feast is held.  At night there is singing before her, and sometimes dancing in her praise.

3.On the third day she is put into a winnowing tray (Suurpa) and carried by a woman servant to a nearby tank or river. The women are told not to look back. At the water source the plants are taken from the silk cloth and thrown into the water, the winnowing tray and the cloth are brought home and the festival is over.

An important piece of ritual is this :

The woman servant must bring home from the bank of the river or tank a handful of gravel, which is thrown over the house to bring luck and over the trees to protect them from vermin, after being worshipped.

The girl who represented as Gauri is given money and the priest is also given Dakshina/fees. Women who participated get basket full of auspicious objects and sweets.

Number 16

On the middle day of the festival , women take lengths of  cotton cloths sixteen times f their height, fold them into skeins and lay them before the goddess for her to bless.

In some places sixteen knots are made in thread, sixteen Laddus (sweet dish) are offered to Goddes. In Devi hymns Goddess Lalitha is called Shodasi (16). This is explained as her Mantra is 16 syllabled or is ever sweet sixteen in age.

This Gauri festival is celebrated in different parts of the country at different months and in different ways. Slight changes are made from the above ritual.

There is along story about the origin of this festival. A poor man who saw such Pooja could not do it when his little daughter asked him to do it, so that she can also enjoy the fun, but goddess herself came and helped him.

Xxx

My comments on the festival:

Even a small plant like Achyrnthes is given importance and elevated to divine status. This is because of the medicinal properties of Apaamaarga (in Tamil Naayuruvi). Four or five research papers are published in medical journals about the use of this plant.they described that this plant can cure several diseases including cancer Even Charaka and others have referred to this plant and its medical uses.

There is much psychology is also involved in the festival. From young age, children are asked to think positively. They learn it with fun an frolics and singing and dancing.

More over youngsters involvement in this will be in their mind for ever green. It will strengthen their belief in religion.

In those days such festivals with positive thoughts helped Hindus to survive and surmount difficulties and obstacles. It reduced divorces, mental sickness, depression and suicides. And above all, the festivals focussed on one or two medicinal herbs which helped to preserve them. It is not just Tulsi and Bilva but also plants like achyranthes also saved from extinction.

Botanical Information  

Achyranthes aspera (common names: chaff-flower,[1] prickly chaff flower,  devil’s horsewhip,[3] Sanskrit: अपामार्ग apāmārga) is a species of plant in the family Amaranthaceae. It is distributed throughout the tropical world.[ 

–subham—

Tags- Gauri, festival, Balsam, Apamarga plant, Achyranthes, Number 16, Shodasi, girls, positive thought

இந்து மதத்தில் காசித் தும்பை , நாயுருவிச் செடி வழிபாடு! (Post No.11,916)

Picture of காசித் தும்பை (Balsam) 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,916

Date uploaded in London – –  19 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்து மதத்தில் நாயுருவிச் செடி (Achyranthes aspera ; apaamaarga in Sanskrit) பற்றி சுவையான கதை உள்ளது . மஹாராஷ்ட்டிர மாநில  இந்துக்கள்  கெளரியை வணங்கும் ஒரு விழாவை புரட்டாசி மாதம் அனுஷ்டிக்கிறார்கள். சுக்ல பட்ச சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்களில் கெளரியை (Gauri Festival)  வணங்கி வழிபடுவார்கள் . சில இடங்களில் காசித் தும்பை (Balsam)  அல்லது தொட்டாற் சிணுங்கி (Touch me not) செடிகளும்  இந்தப் பண்டிகையில் பயன்படுத்தப்படுகின்றன

கெளரி என்பவள் சிவனின் மனைவியான பார்வதி ஆகும். பெண்கள் கொண்டாடும் பண்டிகை இது . கணேஷ் சதுர்த்தியைக்  கொண்டாடிய பின்னர் இது வரும்.

Picture of நாயுருவிச் செடி (Achyranthes aspera 

பிள்ளையார் சதுர்த்தியில் பயன்படும் 21 இலைகளில் அபமார்க என்று அழைக்கப்படும் நாயுருவிச் செடியும் ஒன்றாகும் . இதை மஹாராஷ்டிரர்கள் அகாத (aghaada) என்று அழைப்பார்கள் .

முதல் நாளன்று நாயருவிச் செடியின் ஒரு கட்டை (கட்டு bundle) எடுத்து வருவார்கள்.. அன்று மாலையில் அதை ஒரு பட்டுத் துணியில் (Silk cloth) கட்டி ஒரு திருமணம் ஆகாத கன்னிப் பெண்ணின் மடியில் வைத்து மந்திரங்களைச் சொல்லுவார்கள் .தரையில் அழகான ரங்கோலி கோலங்களை வரைவார்கள். அதில் சுவஸ்திகாகெளரியின் பாதங்கள் இருக்கும். எந்தப் பெண்ணின் மடியில் நாயு ருவிச் செடிக் கட்டு உள்ளதோ அவள் தேவியின் அம்சம். அவளை ஒவ்வொரு அறைக்கும்  வீட்டுத் தலைவி அழைத்துச் செல்லுவாள். ஒவ்வொரு அறையிலும் அவளை ஆசனத்தில் அமர வைத்து தீபாராதனை காட்டுவார்கள் தீபத்தை வலமாகச்  சுற்றுவார்கள்.

ஒவ்வொரு அறையிலும் அவளை வீட்டுத் தலைவி (Housewife)  கேள்வி கேட்பாள்.

நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய்?

உடனே தேவியின் அம்சமான அந்தப் பெண்,

‘நான் பெரிய பொக்கிஷத்தைக் கொண்டு வந்து இருக்கிறேன்’ என்பாள்.

அவளை சமையல் அறைக்கு அழைத்துச் செல்லுகையில் அவள் ‘நான் சுவையான உணவு வகைகைகளைக்  கொண்டுவந்து இருக்கிறேன்’ என்பாள்.  ‘இன்னும் ஒரு அறைக்கு வருகையில் ‘அழகான குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வந்துள்ளேன்’ என்பாள் .

இவ்வாறு அறைக்குத்  தகுந்தவாறு அந்தப் பெண், நல்ல  விஷயங்களைச் (Positive matter) சொல்லிக் கொண்டே வருவாள்.

உடனே வீட்டுத் தலைவி தங்கக் கால்கள் உடைய பெண்ணே (woman with golden feet)  எந்த நாளும் இங்கே தங்கி இருப்பாயாக என்று சொல்லிக்கொண்டே வருவாள்.

இவ்வாறு செய்வதால் ஒவ்வொரு அறைக்கும் நல்ல செல்வங்கள் வந்து சேரும் என்ற நம்பிக்கையே இதற்கு காரணம் .

வாழ்க்கையே எப்போதும் நல்லபடி நடக்கும் என்ற பாஸிட்டிவ் (Positive thoughts) எண்ணங்களை ஏற்படுத்தும் பண்டிகை இது. இந்துக்கள் இப்படி பல பாஸிட்டிவ் எண்ணங்களை ஏற்படுத்தும் பண்டிகைகளைக் கொண்டாடிய காலத்தில் மண முறிவு (Divorce) , தற்கொலைகள் (Suicides)  , மனத் தொய்வு, மன நோய்கள் (Depression, mental illness) இல்லை. இப்போது பண்டிகைகள் திசை மாறிப்போனதால் பிரச்சனைகள் அதிகமாகிவிட்டன.

அன்றைய தினம் அந்தப்பெண்ணை உட்காரவைத்து நல்ல தெய்வீகப் பாடல்களைப் பாடுவார்கள் . அதற்கு முன்னதாக அவள் கொண்டுவந்த பட்டுத்துணி சுற்றிய நாயுருவிச் செடிக்கட்டை ஒரு ஆசனம் அல்லது ஸ்டூலில் (Stool)  வைத்தது அதற்கு இனிய பண்டங்கள் , பால் முதலியவற்றைப் படைப்பார்கள் /நைவேத்யம் செய்வார்கள்

கெளரி ஒவ்வொரு அறைக்கு வரும்போதும் அவளுடைய கணவன் சிவனும் அவளை ரகசியமாகப் பின்தொடர்ந்து வருவார். இதைக்குறிக்கும் வகையில்  ஒரு பானையில் அரிசியையும் அதற்குள் தேங்காயையும் மறைத்துவைத்து அவளுடைய புடவை மடிப்புக்குள் வைத்துவிடுவார்கள்.

இரண்டாம் நாள் அந்தப் பெண்ணுக்கு விருந்து பரிமாறிவிட்டு குடும்பத்தினரும் நண்பர்களும் பெரிய விருந்தினை உண்டு களிப்பார்கள் . இரவில் ஆடலும் பாடலும் இடம்பெறும்.

மூன்றாம் நாள் கெளரி தேவியை (good bye) வழி அனுப்பிவைப்பார்கள். அப்போது அந்தப் பெண்ணுக்கு பணமும், மந்திரங்களைச் சொன்ன புரோகிதருக்கு தட்சிணையும் வழங்கப்படும்

இதே போல கெளரி பூஜை நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலங்களில் சிற்சில மாறுதல்களுடன் நடத்தப்படுகிறது. அங்கெல்லாம் நோன்புச் சரடில் 16 முடிச்சுகள் போடுவது16 லட்டுகள் படைப்பது, 25 கூடைகளில் பரிசுப் பொருட்களைப் பெண்களுக்கு வழங்குவது, கெளரி உருவத்தை மண்ணால் செய்து மூன்றாம் நாள் ஆற்றிலோ குளத்திலோ விடுவது முதலிய அம்சங்களும் இருக்கின்றன. இது பற்றிய கதைகளும் புழக்கத்தில் உள்ளன.

Number 16,  எண் 16

அம்பாளுடைய மந்திரங்களில் ஒன்று சோடசி மந்திரம் ;இதன் பொருள் 16 எழுத்து. அவுளுடைய பெயர் சோடாசாக்ஷரி – 16 எழுத்து வடிவானவள். இதற்கு விளக்கம் எழுதியோர் அவள் என்றும் 16 வயது இளமை உடையவள் என்றும் எழுதியுள்ளனர். சோடசி என்பதை  ச, ட , சி என்று பிரித்து 16 எண்ணையும் காட்டியுள்ளனர்

இதில் நாயுருவிச் செடி எப்படி வந்தது? என்பதை பண்டிகை பற்றி எழுதியவர்கள் விளக்கவில்லை

xxxx

என் கருத்து

நாயருவிச் செடி பற்றி அண்மைக்காலத்தில் மருத்துவ பத்திரிகைகளில் நல்ல கட்டுரைகள் வந்துள்ளன. சரகர் போன்ற வைத்தியர்களும் சம்ஸ்க்ருத நூல்களில்  விளக்கியுள்ளார்கள். இது சகல ரோக நிவாரணி என்னும் வகையில் அக்கட்டுரைகள் அமைந்துள்ளன. ஒருவேளை இதன் மருத்துவ குணங்கள் மக்களுக்குத் தெரியவேண்டும் என்று கருதித்தான் இதை கெளரி பூஜையில் அறிமுகப்படுத்தினார் போலும் .

இரண்டாவது விஷயம்,

நிறைய ஆடலும் பாடலும் விருந்தும் வேடிக்கையும் உள்ள இது போன்ற பண்டிகைகளில் கல்யாணமாகாத பெண்களையும் ஈடுபடுத்துகையில் வாழ்நாள்  முழுதும் இவைகளை அவர்கள் மறக்க மாட்டார்கள். மதத்தை அவர்களுடைய ரத்தத்தில் கலந்துவிடும். மாதத்துக்குப் பத்து பண்டிகைகளைக் கொண்டாடும் மதம் இந்து மதம் ஒன்றே.

மூன்றாவது விஷயம்,

இது ஒரு உள்ளவியல் / மன இயல் (Psychological) பண்டிகை. பாஸிட்டிவ் / நேர்மறை எண்ணங்கள் இருந்தால் செல்வமும் வெற்றியும் அங்கு தானே வரும். கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை உலகில் எவருக்கும் இல்லை. கோடீஸ்வரர்களின் படாடோபங்களுக்கு அடியில் ஆழமாகவுள்ள துன்பங்கள் , அவர்கள் ஜோதிடர்களிடமும் சாது சந்நியாசிகளிடமும் வரும்போது அம்பலத்துக்கு வருகின்றன. அத்தகையோருக்கும்  இது போன்ற பண்டிகை கள்  ஷாக் அப்சார்பர்களாக (Shock absorbers)  விளங்குகின்றன. வறுமைக் கோட்டுக்குக் கீழே போன சமுதாயங்களில் பிரெஞ்சுப் புரட்சியும், ரஷ்யப் புரட்சியும் வெடித்து ரத்தக் களரியை உண்டாக்கியது. வேறு பல நாடுகளில் ராணுவப் புரட்சி வெடித்தது. இந்தியா மட்டும் புரட்சி வெடிக்காத, உலகின் மாபெரும் ஜனநாயகமாக விளங்குவதற்கு இந்து மதமே காரணம்.. இப்போது வறுமைக் கோட்டைக் கடந்து விட்டதற்கும் மதத்தின் அணுகுமுறையே காரணம் .

வாழ்க பண்டிகைகள் ; வளர்க பாசிட்டிவ் எண்ணங்கள்!

Xxx

Botanical Information 

Achyranthes aspera (common names: chaff-flower,[1] prickly chaff flower,  devil’s horsewhip,[3] Sanskrit: अपामार्ग apāmārga) is a species of plant in the family Amaranthaceae. It is distributed throughout the tropical world.[

My Old Articles  

21 பத்ரம் | Tamil and Vedas

tamilandvedas.com

https://tamilandvedas.com › tag › 21-பத்ரம்

–subham—Tags- நாயுருவி, காசித் தும்பை, வழிபாடு, கெளரி விழா, அபமார்க, எண் 16

வெள்ளிப் பல்லக்கில் ஏற இருந்த சிஷ்யரைத் தடுத்த மஹாசந்நிதானம் (Post No.11,915)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,915

Date uploaded in London –   19 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வெள்ளிப் பல்லக்கில் ஏற இருந்த சிஷ்யரைத் தடுத்த மஹாசந்நிதானம்!

ச.நாகராஜன்

சிருங்கேரியில் நடந்த உண்மைச் சம்பவம் இது.

நாள் :- 1931ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி.

இளம் துறவியான ஶ்ரீ அபிநவ வித்யா தீர்த்தரை பட்டத்து இளவரசராக நியமிக்கும் வைபவம் நடக்கும் தினம்.

ஶ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் 34-வது பீடாதிபதியாகத் திகழ்ந்த ஶ்ரீ சந்திரசேகர பாரதீ மஹா ஸ்வாமிகள் அவரை தனது அடுத்த பீடாதிபதியாக நியமிக்க, அந்த பட்டத்து இளவரசர் வைபவம் நிகழ இருந்தது.

சிருங்கேரியே கோலாகலமாக இருந்தது.

பக்தர்கள் திரண்டனர்.

குருவும் சிஷ்யருமாக  இரு ஆசார்யர்களும் ஊரில் பட்டணப் பிரவேசமாக ஊர்வலமாக வருவதற்கு ஏற்பாடுகள் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன.

இரு ஆசார்யர்களும்  ஶ்ரீ சாரதாம்பாள் கோவிலில் தரிசனம் செய்து பிரதட்சிணமாக கோயிலுக்கு வெளியே வந்தனர்.

மஹா சந்நிதானத்திற்கென தங்கப் பல்லக்கும் சிஷ்யருக்கென வெள்ளிப் பல்லக்கும் அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்தது.

குருவிற்கு வலது புறம் அவரது வலது கை சுட்டு விரலைப் பிடித்தவாறே சிஷ்யர் வந்து கொண்டிருந்தார்.

கம்பீரமான நடை.

பார்த்தவர்கள் பரவசமடைந்தனர்.

வெள்ளிப் பல்லக்கு அருகே வந்ததும் குருவான சந்திரசேகர பாரதீ மஹா ஸ்வாமிகள் தனது கை சுட்டு விரலை டக்கென்று விடுவித்து வேகமாக வெள்ளிப் பல்லக்கில் ஏறி அமர்ந்து விட்டார்.

பார்த்தவர்கள் திகைத்தனர்.

வழக்கமில்லா வழக்கம் இது.

சிஷ்யருக்கு வெள்ளிப் பல்லக்கு. குருவிற்குத் தங்கப் பல்லக்கு.

பாரம்பரிய நடைமுறை இது தான்.

ஏதேனும் தவறாக நடந்து விட்டதோ என்று யாரும் எண்ணுவதற்கு இடம் கொடுக்காமல் மஹா சந்நிதானம் இளையவரை நோக்கி சைகையால் சிஷ்யரை முன்னே சென்று தங்கப் பல்லக்கில் அமருமாறு ஜாடை செய்தார்.

அனைவருக்கும் குழப்பம். சிஷ்யருக்கும் அதே குழப்பம்.

வயதில் மூத்த பக்தர்களும் அதிகாரிகளும் ஓடி வந்து நிலைமையைச் சரிப்படுத்த முயன்றனர்.

மஹாசந்நிதானம் வெள்ளிப் பல்லக்கிலிருந்து எழவே இல்லை.

கடைசியில் ஸர்வாதிகாரி ஶ்ரீ கண்ட சாஸ்திரிகளே மஹா சந்நிதானத்திடம் வந்து விண்ணப்பம் செய்து கொண்டார்.

ஆசார்யரோ, கணீரென்ற குரலில் பிரகடனம் செய்தார் இப்படி:

“இன்றைய வைபவத்தின் நோக்கம் என்ன? அதை முதலில் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். ஶ்ரீ அபிநவ வித்யாதீர்த்தர் என்று பட்டப்பெயர் சூட்டப்பட்டு இதோ இருக்கிறாரே இவருக்கே இன்று முதல் எல்லா மரியாதைகளும் உபசாரங்களும் உரித்தாகின்றன. நான் சுதந்திரமாகத் தனித்து வாழ விரும்புகிறேன்.  என் விருப்பத்திற்கு என்னை வாழ விடுங்கள்”

அனைவரும் விக்கித்துப் போயினர்.

மஹா ஸ்வாமிகள் தன்னில் லயித்து பரமாத்மாவுடன் ஒன்றுபவர்.

பல நாட்கள் அவர் தியானத்திலேயே இருப்பது வழக்கம்.

இது மடத்தின் நிர்வாகத்திற்குச் சில சமயம் சங்கடத்தைத் தந்ததும் உண்டு.

ஆனால் அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரி வந்து இதைச் சோதிக்க நேர்ந்த போது அவர் விடை பெறும் சமயம் மஹா சந்நிதானம் அவரிடம் ‘வந்த வேலை முடிந்ததா’ என்று கேட்டு ‘அவர் வந்த வேலை என்ன’ என்பதையும் சுட்டிக் காட்டினார்.

அதிர்ந்து போனார் அரசு அதிகாரி.

ஒரு பெரும் மஹானின் முன்னிலையில், பரப்ரஹ்மத்துடன் ஐக்கியமாகி நிற்கும் நிலை கொண்டவரின் முன்னிலையில், தான் இருப்பதை உணர்ந்த அவர் அரசுக்கு இப்படிப்பட்ட மகானைத் தான் கண்டதே இல்லை என்று எழுதி அனுப்பினார்.

மஹா சந்நிதானத்தின் வரலாறை அனைவரும் படிக்க வேண்டும். சம காலத்தில் வாழ்ந்த அவரைப் பற்றி அறிவது நமது பாக்கியமே.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

***

This picture is from Dharmapuram in Tamil Nadu

ஆதாரம், நன்றி ஶ்ரீ குரு கிருபா விலாஸம் மூன்றாம் பாகம்.

கிடைக்குமிடம் ஶ்ரீ சந்திரசேகர பாரதீ ப்ரஹ்ம வித்யா டிரஸ்ட் 5, பிருந்தாவன் தெரு,  மைலாப்பூர், சென்னை – 4

Coconut tree in Hinduism; Why do we break coconut in temples? (Post No.11,914)

 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,914

Date uploaded in London – –  18 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Coconut is considered an auspicious symbol in Hinduism. They see it as goddess Lakshmi or Varuna. When placed on the top of a metal pot it is seen as Varuna, the god of rain.

The tradition runs that the coconut tree is the Kalpaka Vriksha meaning wish granting tree. Its stems supply beams for cottages or when scooped out it serves as a boat.  The leaves cover huts as roof, the coconut yields sweet water for a thirsty mouth. The coconut itself is used in many food items. Coconut oil and milk juice are also used for preparing delicious items . The shell of the coconut is used as fuel. The husks supply ropes for building huts. Coconut chutney is also used as side dish. No part of this tree goes waste.

In Ganapati Homam (havan) copra is the main offering. Ganesh favourite Modaka is made with coconut. South India is peninsular and so they get coconuts easily. So every temple use them for Puja/worship.

It is part of Poorana Kumbha (metal pot decorated with mango leaves and coconut. That is offered to elders, famous people visiting towns. It is part of purification ceremony. Water in such a metal pot is used as purification liquid after Varnua Japa recited from the Vedas.

It is sold in millions in temples and so it gives money to small farmers and vendors.

It is exchanged as auspicious symbols in Hindu Engagement (betrothal) ceremonies before wedding. Both the bride and bride groom families exchange turmeric smeared coconuts and keep them till the wedding is over. It is the witness for their marriage. The exchange takes place only after announcing the wedding of X with Y three times in front of a big audience of elders. All the father, grand father, would be father in law’s names are repeated three times to show who is the bride and bridegroom. Then only each side gives two turmeric coloured coconuts to the other side. It is followed by South Indian Brahmins even today.

xxxx

In Maharashtra

It plays a main role in Gauri Puja and Ganesh Chaturthi.

Women desiring children secretly drop a coconut into some vessel in a Brahmin’s house. This is known as Avachita fal (Secret Fruit)

A woman throws two coconuts into a neighbour’s house  and begs for two in exchange saying “Kelte  gyaa raaangate dhyaa (Take a toy and give a child)

Another version is . एक खेळणी घ्या आणि मुलाला म्हण द्या Ēka khēḷaṇī ghyā āṇi mulālā mhaṇa dyā

Xxx

Why do we break coconuts in temples?

In Tamil Nadu, people break coconuts by forcefully hitting it on a stone platform in the temple. It is done in all Ganesh (Pillaiyar in Tamil) temples. It is also done before a religious procession starts. There are some explanations given by religious speakers. If one looks at coconut one can see Three Eyes on top. These three represent the three bad qualities Kaama, Krodha and Lopa, which Lord Krishna described as Three Gates of Hell in the Bhagavad Gita. So these three Amorous desire, Anger and Greediness must be broken or thrown out to see God. That is the reason to forcefully throwing coconuts on the stone. It is called Sathir Thengaay in Tamil. Some vow to break 108 coconuts if their wishes are fulfilled. (We do it very often in Madurai Ganesh temple known as Nehru Aalaalasundara Vinaayakar temple)

Saiva siddhaantis name the three bad qualities as Aanava, Kanma, Maayaa malas.

Another explanation is that you have to remove the outer shell of hard and fibrous part to see the inner soft pure white coconut fruit with sweet water which means remove your bad desires to see God. Whatever the meaning is breaking coconuts gives a lot of money to small vendors and enough coconut to restaurants to make Chutney and Side dishes.

Naarali Poornima (Coconut Full moon Day)is celebrated in the month of Shraavan (Aavani in Tamil) in Hindu calendar. It corresponds with July/August in English calendar. In Maharashtra and along the western/ Konkan coast, great fairs are held on the sea shore. The ocean is worshipped, and coconuts are thrown into it as offerings, hence the name Naarali from Naaral- a coconut. In Sanskrit it is Naarikela. In botanical term it is coconut  nucifera.

xxxx

Narali Poornima Festival Maharashtra

Narali Poornima or Coconut Festival is celebrated by the Hindus of fishing community of Maharashtra with a lot of fervour and on the full moon day or Poornima of the month of Shravan, which also happens to be one of the auspicious months of the Hindu calendar. The festival also goes by the name of Raksha Bandhan, Rakhi Poornima, and Shravani Poornima.

Naral means coconut and on the full moon day in the month of Shravan, coconut is offered to the sea and hence, the name.

The festival is celebrated to mark the end of the monsoon season, as the fishermen now can begin fishing safely and start-off with their trade. Apart from offering coconut to Varuna, the sea-God, people also worship the sea and offers prayers so that the God keeps them safe while they are out in the sea, fishing.

No fishing is done during this period and no fish is consumed as well. It’s only after Narali Poornima, after a coconut has been offered to the God at high tide that people can start fishing and consume fish. The traditional food of this festival is a sweet curry made from coconut.

Raksha Bandhan is also celebrated on the same day. Sisters tie rakhi on the wrist of their brothers that is also known as the thread of protection. Brahmins do Upakrama on that day to change their sacred thread and start the Vedic studies anew.

Xxx

Poets on Coconut trees

Tamil poetess Avvaiyar and Bhartruhari in his Neetisataka praise the sacrifice of the coconut tree. They say ‘Look at that tree and its message. It sucks water from the ground, stand in scorching sun to give human beings sweet water’

Another poet in Neethi neri venba classified the entire humanity into three kinds.

First type of men is higher in the ladder. They are like palmyra trees. Even if you don’t water it, palmyra gives you fruits. Men with fine qualities don’t expect anything from you and yet they help you.

Next below in the ladder are middle class type. The coconut trees need periodical watering. Some people will help you only when you praise them sky high. Or they expect something from you as reciprocation.

The lowest type of people is like the betelnut tree or banana/ plantain trees. They need continuous watering and then only they give you their yields. Lowest people always expect something from you and then only come forward to help you.

These are the messages or lessons from the trees according to Bhartruhari and Tamil poets.

xxxx

MY OLD ARTICLES

INTERESTING STORY ABOUT COCONUT! (Post No.6500)

tamilandvedas.com

https://tamilandvedas.com › interesti…

6 Jun 2019 — A blog exploring themes in Tamil and vedic literature. INTERESTING STORY ABOUT COCONUT! (Post No.6500). Written by London swaminathan.

coconut tree

https://tamilandvedas.com › tag › c…

6 Jun 2019 — A blog exploring themes in Tamil and vedic literature. Tagged with coconut tree. INTERESTING STORY ABOUT COCONUT! (Post No.6500).

Tags- Coconut, breaking, types of men, Naral festival, Purana kumbha, trees, auspicious,

இந்து மதத்தில் தென்னை மரம்; தேங்காய் உடைப்பது ஏன் ? (Post No.11,913)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,913

Date uploaded in London – –  18 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்துக்கள் பல மரங்களை இந்தியா முழுதும் வழிபட்டு வருகின்றனர். தமிழ் இந்துக்கள் ஒவ்வொரு தலத்துக்கும் ஒரு மரம் அல்லது செடியை தெய்வ அம்சமாகக் கருதி தல விருட்சம் என்றும் குறித்துள்ளனர். மரங்களில் தென்னை மரத்துக்கு உள்ள சிறப்பு தனிப்பெருமை வாய்ந்தது. தென்னிந்தியாவின் நிலப்பரப்பு கடற்கரையை ஒட்டிய தீபகற்பப்  பகுதி என்பதால் இங்கு தேங்காய்க்கு குறைவே இல்லை ; இதனால் தேங்காய் (Coconut) உடைக்கும் வழக்கம் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு தமிழ் நாட்டில் உள்ளது. தென்னை மரத்தைத் தமிழ்ப்புலவர்களும் பாடிப் பரவியுள்ளனர்

பிள்ளையார் கோவிலில் சதிர்த் தேங்காய் போடுவது, முக்கிய தேர் அல்லது சுவாமி ஊர்வலம் புறப்படும் முன்னர் சதிர்த் தேங்காய் போட்டு உடைப்பதைக் காண்கிறோம். கோவிலின் உள்ளேயும் சுவாமிக்கு தேங்காய், பழம் வெற்றிலையை சமர்ப்பிக்கிறோம் . தீவு நாடான இலங்கையிலும் தென்னை மரம் அதிகம் என்பதால் கோவில்களில் . விசேஷங்களில் தேங்காய் முன்னிடம் பெறுகிறது. கேரளத்தில் தேங்காய் இல்லாத சமையலே இராது. அவர்களுக்குத் தேங்காய் இல்லாமல் சமைக்கத்  தெரியாது.

xxxx

தேங்காய் உடைப்பது ஏன் ?

முதலில் தேங்காய் உடைப்பது ஏன் ? என்ற கேள்வியை எடுத்துக்கொள்வோம். இதற்கு சமயச் சொற்பொழிவு ஆற்றுவோர், உபன்யாசம் செய்வோர் சில விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். தேங்காய்க்கு மூன்று  கண்கள் இருக்கும். அவை காமம்க்ரோதம் மோகம் என்ற மூன்றைக் குறிக்கும். அவற்றை  விலக்கினால்தான் இறைவனைக் காண முடியும் என்பதை மூன்று கண்ணுள்ள தேங்காயை உடைப்பது காட்டுகிறது. சதிர்த் தேங்காய் போட்டு உடைப்பது ஆணவகண்வ மாயா மலங்களை அகற்றுவதைக் குறிக்கிறது

இன்னொரு விளக்கமும் சொல்லப்படுகிறது. பரமாத்மா என்னும் தூய வெள்ளை நிற பருப்பையும் இனிப்புச் சுவையுள்ள இளநீரையும் சுவைப்பதற்கு ஓடு போலுள்ள ஜீவாத்மா உடைய வேண்டும், அதாவது பக்குவப்பட வேண்டும் என்பதாலும் தேங்காய்களை உடைக்கிறோம்.

xxxx

தேங்காய் மங்களச் சின்னம்

தென்னிந்தியக் கல்யாணங்களில் தேங்காய் முக்கிய இடம்பெறும். ஏன் எனில் இது ஒரு மங்களச் சின்னம் . நிச்சயதார்த்தம் சடங்கில் இரு தரப்பினரும் இன்னாரின் பேரனும், இன்னாரின் மகனுமான இந்த ஆண்மகனை இன்னாரின் பேத்தியும் , இன்னாரின் மகளுமான இந்தப் பெண்ணை மணம் முடிக்கப் பெரியவ்ர்கள் நிச்சயித்து இருக்கிறார்கள் என்று மூன்று முறை அறிவித்தவுடன் கெட்டி மேளம் கொட்டுவார்கள். அப்போது மஞ்சள் தடவிய தேங்காய்களை பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் மாற்றிக்கொள்ளுவார்கள். அதை கல்யாணம் முடியும் வரை வைத்துப் பாதுகாப்பார்கள். இது மங்களத்தின் சின்னம்.

எந்த ஒரு இடத்தையும் அல்லது எந்த ஒரு மனிதனையும் புனிதப்படுத்த தண்ணீரைக் குடத்தில் வைத்து வருண மந்திரம் சொல்லுவார்கள் . பின்னர் அந்த நீரை புரோகிதர்கள் எடுத்து மனிதர்கள் மீது தெளிப்பார்கள் அல்லது அபிஷேகம் செய்வார்கள். அந்த பூரண கும்ப குடத்திலும் மேலே தேங்காயும் மாவிலையும் தான் இருக்கும் . ஏனெனில் இரண்டும் மங்களச் சின்னங்கள் .

ஊருக்கு யாரேனும் பெரியோர் வந்தால், சாது சன்யாசிகள் வந்தால் அவர்களையும் தேங்காயுள்ள பூரண கும்பத்துடன்தான் வரவேற்பார்கள்.

xxx

தென்னை மரம் = கற்பக விருட்சம்

ஒரு வேளை,  சமய நம்பிக்கையே இல்லை என்றாலும் அவர்களுக்கும் தே ங்காயின் பயன்கள் நன்கு தெரியும். தென்னை மரத்தை கற்பக விருட்சம் என்று அழைக்கிறார்கள். ஏனெனில் தென்னை மரத்தின் எல்லாப்பகுதிகளும் ஆதிமனிதனுக்குப் பயன்பட்டன. அதன் மரத்தைத் தூண்களாக நட்டு அதன் ஓலைகளை கூரையாக வேய்ந்து வீடு கட்டி வாழ்ந்தான், அதன் தேங்கா யையும் இளநீரையும் உணவாகப் பயன்படுத்தினான். ஓடுகளையும் கட்டையையையும் அடுப்பு எரிக்கப் பயன்படுத்தினான் . ஓலை , நார் ஆகியவற்றைப் பயன்படுத்தி கயிறு திரித்து வீடு கட்டப் பயன்படுத்தினான். கூடைகளைச் செய்து பண்டங்களை எடுத்துச் சென்றான். இளநீர் மட்டையையும் தேங்காய் ஓடுகளையும் கூட வீணடிக்காமல் பயன்படுத்தினான். இதனால் எல்லாவற்றையும் நல்கும் கற்பக மரமே என்று போற்றினான். தேங்காய் எண்ணெய் ,  தேங்காய் சட்னி இல்லாத இடம் இல்லை

தேங்காய் என்பதன் ஸம்ஸ்க்ருதப் பெயர் நாரி கேளம் ; அதிலும் கூட நார் என்ற தமிழ்ச் சொல் இருப்பது ஆராய்ச்சிக்குரியது ;

coconut  nucifera என்பது தாவரவியல் பெயர்

இன்றும் கேரளத்திலும், தமிழ் நாட்டில் கோவில் முன்புறக் கடைகளிலும் ஏராளமான வியாபாரிகளுக்கு வாழ்வூதியம் தருவதும் இந்த கற்பக விருட்சம்தான் .

கணபதி ஹோமம் எங்கு நடந்தாலும் அதில் கொப்பரை போடுவது வழ க்கம் ; யானைக்குப் பிடித்தது தேங்காயதானே .

xxxx

தேங்காய்த் திருவிழா

ஆவணி மாத பெளர்ணமி தினத்தை இந்துக்கள் பல்வேறு விதமாகக் கொண்டாடுவார்கள். இருபிறப்பாளராக இருந்தால் (பூணுல் போடும் ஜாதிகள்) அன்றைய தினம் பூணுலை மாற்றிக்கொண்டு புதிதாக வேத அத்தியயனத்தைத் துவங்குவார்கள்.

நாடு முழுதும் சகோதர சகோதரிகள் ரக்ஷை காட்டும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படும்.

மஹாராஷ்டிரா, கொங்கணக் கடற்கரையில் வாழும் மீனவ மக்கள் கடலில்  தேங்காய்களை வீசி எறிந்து கடல் தெய்வத்தை, வருண பகவானை வணங்குவார்கள் . இங்கும் தேங்காய்தான் பூஜைக்குரிய பொருள்.

மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள சில வழக்கங்களை 100 ஆண்டுப் பழ மையான புஸ்தகம் கூறுகிறது. குழந்தை இல்லாத பெண்மணிகள் ஒரு பிராமணர் வீட்டிலுள்ள பாத்திரத்தில்/ குடத்தில் ரகசியமாக  ஒரு தே ங்காயைப்  போடுவாராம் இதை அவசித்த பல  (ரகசியப் பழம் ) என்று அழைப்பர் .

மற்றொரு வழக்கம்; பக்கத்து வீட்டில் இரண்டு தேங்காய்களைப் போட்டுவிட்டு இரண்டு தேங்காய்களைப்  பிச்சையாகக் கேட்பார்கள் . கேளதே க்யா ராங்கதே த்யா = ஒரு பொம்மையை எடுத்துக்கொண்டு ஒரு பிள்ளையைத் தா என்பது இதன் பொருள். एक खेळणी घ्या आणि मुलाला म्हण द्या Ēka khēḷaṇī ghyā āṇi mulālā mhaṇa dyā என்றும் சொல்லலாம்

கெளரி பூஜைகளிலும் தேங்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது. தேங்காய் தானம் தந்தால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

xxx

தென்னை மரத்தின் தியாகம்! 

பர்த்ருஹரி என்னும் சம்ஸ்கிருதப் புலவனும் அவ்வையாரும் தென்னை மரத்தை உவமையாக்கி ஒரு கவிதை புனைந்துள்ளனர்.

 தென்னை மரத்தைப் பார்! பூமிக்கடியில் இருக்கும் வெறும் தண்ணீரை உறிஞ்சி எடுத்து அதைத் தலையால் (இளநீரால்) இனிய இளநீராக்கித் தருகிறது ஒருவருக்கு உதவி செய்தால் ஒருநாள் அவரும் இளநீர் போலத் திருப்பித் தருவர்.:-

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தரும் கொல்லென வேண்டா – நின்று

தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான் தருதலால்

–வாக்குண்டாம்

Xxxx

மனிதர்கள் மூன்று வகை

உத்தமர்தாம் ஈயுமிடத்தோங்கு பனை போல்வரே

மத்திமர்தாந் தெங்குதனை மானுவரே  – முத்தலரும்

ஆம் கமுகு போல்வராம் அதமர் அவர்களே

தேங்கதலியும் போல்வார் தேர்ந்து

–நீதிநெறிவெண்பா

பனைமர மனிதர்கள்

பனைமரத்துக்கு தண்ணீர்விடவே வேண்டாம்; அது தண்ணீர் விடாமலே  பலன் தரும்; உத்தம மனிதர்களும் அவ்வகையே. பலனை எதிர்பாராமல் பலன் தருவர்.

தென்னைமர மனிதர்கள்

தென்னை மரத்துக்கு அவ்வப்பொழுது தண்ணீர் விட்டால்தான் பலன் தரும். அது போல நடுத்தர (மத்திம) மனிதர்கள், பிறர் உதவி செய்தால் அந்த அளவுக்கு திருப்பி உதவி செய்வர்.

பாக்கு மரமனிதர்கள்

பாக்கு மரமும் வாழை மரமும் எப்பொழுதும் தண்ணீர் விட்டால்தான் பலன் தரும்; அது போன்ற மனிதர்கள் கடைத்தர மனிதர்கள். எப்பொழுதும் பாராட்டினாலோ, பலன் கிடைக்கும் என்று தெரிந்தாலோதான் உதவி செய்வார்கள்.

xxxxx

MY OLD ARTICLES

தென்னை மரம்

tamilandvedas.com

https://tamilandvedas.com › tag › த…

7 Jun 2019 — தென்னை மரம் பற்றிய சுவையான கதை! (Post No.6503) … ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co.

தென்னை மரம் பற்றிய சுவையான கதை! (Post No. …

https://tamilandvedas.com › தெ…

·7 Jun 2019 — தென்னை மரம் பற்றிய சுவையான கதை! (Post No.6503). Written by London Swaminathan. swami_48@yahoo.com.

இளநீர் மகிமையும் தென்னையின் பெருமையும்

https://tamilandvedas.com › இளந…

·Translate this page

28 May 2012 — பொருள்: தென்னை மரம் நிலத்திலிருந்து குடித்த தண்ணீரை சுவையுடைய இளநீராக தலை …

—-subham—

Tags – தென்னை மரம், இந்து மதம் , தேங்கய் , உடைப்பது ஏன் ?, மூன்று கண்கள் , கற்பக விருட்சம் , மராத்தி பழமொழி, மங்கள சின்னம் , பூரண கும்பம்

தங்கப் பல்லக்கில் ஏற மறுத்த ராஷ்டிரபதி! (Post No.11,912)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,912

Date uploaded in London –   18 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தங்கப் பல்லக்கில் ஏற மறுத்த ராஷ்டிரபதி!

ச.நாகராஜன்

ஆதி சங்கரர் ஸ்தாபித்த சிருங்கேரி மடத்தின் பெருமை சொல்லுக்கு அப்பாற்பட்டது. அதன் பீடாதிபதிகளாகத் திகழ்ந்த மகான்களின் பெருமை சொல்லுக்கும் வர்ணனைக்கும் அப்பாற்பட்டது.

ஶ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் 34-வது பீடாதிபதியாகத் திகழ்ந்த ஶ்ரீ சந்திரசேகர பாரதீ மஹா ஸ்வாமிகளின் மஹிமைகள் அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியவை.

இவரைப் பற்றி சிருங்கேரி மடத்தைச் சார்ந்த பக்தர்கள் மூன்று பாகங்களாக ஶ்ரீ குருகிருபா விலாஸம் என்ற தலைப்பில் புத்தகங்களை வெளியிட்டுள்ளனர்.

பல ஆச்சரியகரமான சம்பவங்களை அற்புதமாக பல அறிஞர்கள் தருவதை இவற்றில் காணலாம்.

அவற்றில் ஒன்று இது.

பாரத நாட்டின் முதல் ராஷ்டிரபதியாகப் பதவி ஏற்றவர் பாபு ராஜேந்திர பிரசாத்.

நன்கு கற்றவர். நமது பண்பாட்டை மதிப்பவர். தேச விடுதலைக்காக உழைத்தவர். அனைத்தையும் அதற்கென தியாகம் செய்தவர்.

1954ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சிருங்கேரிக்கு அவர் தரிசனத்திற்காக வந்தார்.

அவரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அவர் வருகைக்கு முதல் நாள் அன்று  மடத்தில் இருந்த வெள்ளிப் பல்லக்கு வெளியே எடுக்கப்பட்டது. அது சுத்தம் செய்யப்பட்டு தயாராக்கப்பட்டது.

ஆம், அதில் தான் பாரத ராஷ்டிரபதியை அமர வைத்து ஊர்வலமாக அழைத்துச் செல்ல மடத்தின் நிர்வாக அதிகாரிகள் தீர்மானித்திருந்தனர்.

அப்போது ஶ்ரீ ஶ்ரீ சந்திரசேகர பாரதீ மஹா ஸ்வாமிகள் சாதுர்மாஸ்ய விரதத்திற்காக சந்திரமௌலி தொட்டி என்ற கட்டிடத்தில் தங்கி இருந்தார்.

அங்கு இரு கூடங்களை இணைக்கும் பாதை வழியே அன்று அவர் நடந்து வந்தார்.

சுவரில் இருந்த சாளரத்தின் வழியே அவர் வெளியே பார்த்த போது வெள்ளிப்பல்லக்கு வெளியே எடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுவதை அவர் பார்த்தார்.

அந்த சாளரத்தின் வழியாகவே அவரது அந்தரங்க காரியதரிசியான ஶ்ரீ

S.G.நரஸிம்மய்யாவுடன் பேசத் தொடங்கினார்.

எதற்காக வெள்ளிப் பல்லக்கு சுத்தம் செய்யப்படுகிறது என்ற காரணத்தைத் தெரிந்து கொண்ட அவர் ராஜேந்திர பிரசாத்தைப் பற்றிக் கேட்கலானார்.

அவரது பெருமைகள் விரிவாகச் சொல்லப்பட்டன.

இதைக் கேட்ட ஆசார்யர் உடனே, “அப்படிப்பட்ட உயர்ந்த மனிதர் அவர் எனில் அவரைத் தங்கப் பல்லக்கிலேயே அழைத்து வரலாமே” என்றார்.

ஆசார்யாளின் ஆணைக்கு இணங்க, உடனே தங்கப் பல்லக்கு வெளியில் எடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது.

சிருங்கேரியின் பிரதான நுழைவு வாயிலில் ஒரு அலங்காரப் பந்தல்!

 ராஷ்டிரபதி காரில் வந்து இறங்கினார். அவருக்கு பூர்ண கும்ப மரியாதை பிரமாதமாக அளிக்கப்பட்டது. உள்ளூர் பிரமுகர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

பின்னர் தங்கப் பல்லக்கு அவரிடம் காண்பிக்கப்பட்டது.

“இதில் நீங்கள் ஏறி அமர வேண்டும். ஊர்வலமாகச் செல்லலாம்” என்று அவரிடம் சொல்லப்பட்ட போது அவர் சற்றுத் தயங்கினார்.

“அதில் யார் அமர்ந்து செல்வது வழக்கம்?” என்று கேட்டார் அவர்.

சிருங்கேரி மடத்தின் மடாதிபதிகள்  மட்டுமே அதில் ஏறி அமர்ந்து செல்வது வழக்கம் என்று பதில் வந்தது.

“ஆஹா! விஷயம் அப்படி இருக்கும் போது என்னைப் போய் அதில் ஏறி அமரச் சொல்கிறீர்களே” என்ற அவர் அதில் ஏற மறுத்து விட்டார்.

“இல்லை, இல்லை, ஜகத்குரு அவர்களே இதைச் சொல்லி இருக்கிறார்” என்று சொல்லப்பட்ட போதும் பாபு ராஜேந்திரபிரசாத் திட்டவட்டமாக அதை மறுத்து விட்டார்.

தன் உள்ளங்கைகளை பல்லக்கின் மேல் வைத்துத் தொட்டுக் கும்பிட்டார்.

“பல்லக்கு முன்னே போகட்டும். நாம் பின்னால் போவோம்” என்று மென்மையாகச் சொன்ன அவர் தனது காருக்குச் சென்று அதில் ஏறிக் கொண்டார்.

அவர் தங்குமிடமாக சந்திரமௌலி தொட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு வந்த அவர்,  “இங்கு யார் தங்குவது வழக்கம்?” என்று கேட்டார்.

சாதுர்மாஸ்ய காலமாக இருப்பதால் ஶ்ரீ சிருங்கேரி பீடாதிபதி மஹா ஸ்வாமிகள் அங்கு வந்து தங்கி இருப்பதையும் அவர் அதே கட்டிடத்தில் உள்ள  பின் அறையில் இருப்பதாகவும் சொல்லப்பட்ட போது அவர் திடுக்கிட்டார்.

“என்ன இது, இப்படிப்பட்ட புனிதமான கட்டிடத்தில் நான் எப்படி சாப்பிடுவது? தூங்குவது?’ என்று அவர் கேட்டார்.

அவர் அங்கு தங்குவதே ஜகத்குருவிற்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்று அவர் சமாதானம் செய்யப்பட்ட பின்னரேயே அவர் அங்கு தங்கினார்.

இரு முறை இரு ஜகத்குருக்களும் தரிசனம் தர, அம்பாளுக்கு ஒரு விசேஷ அர்ச்சனை செய்யப்பட அந்த நாள் வேகமாகக் கழிந்தது.

எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்த ராஷ்டிரபதி, “மஹா புருஷர்கள் இருக்கும் இந்த இடத்திற்கு நான் முன்பே வந்திருக்க வேண்டும்” என்று கூறி பிரியா விடை பெற்றார்.

இந்த சம்பவத்திற்கு ஒரு மாத காலமே கழிந்த நிலையில்  1954ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி அதிகாலையில் ஶ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் 34-வது பீடாதிபதியாகத் திகழ்ந்த ஶ்ரீ சந்திரசேகர பாரதீ மஹா ஸ்வாமிகள் ஜல சமாதி அடைந்தார்.

சமகாலத்தில் வாழ்ந்து வழிகாட்டி தரிசனம் தந்து, அருளுரைகள் தந்த மகான்களுள் முக்கியமானவர் ஶ்ரீ சந்திரசேகர பாரதீ மஹா ஸ்வாமிகள்!

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

***

ஆதாரம், நன்றி ஶ்ரீ குரு கிருபா விலாஸம் மூன்றாம் பாகம்.

கிடைக்குமிடம் ஶ்ரீ சந்திரசேகர பாரதீ ப்ரஹ்ம வித்யா டிரஸ்ட் 5, பிருந்தாவன் தெரு,  மைலாப்பூர், சென்னை – 4