துவையலும் கீரையும்- சிவஞான முனிவர் கேட்டது! (Post.11,645)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,645

Date uploaded in London – –  8 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கீரைத் தோட்டத்தை தனது மருந்துப் பெட்டி  என்று பிரபல எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் (Russian writer, novelist Leo Tolstoy) கூறியுள்ளார்

சற்றே துவையல் அரை தம்பிஓர் பச்சடி வை,

வற்றல் ஏதேனும் வறுத்து வை – குற்றமில்லை

காயமிட்டு கீரை கடைகம்மெனவே மிளகு

காயறைக்க  வைப்பாய் கறியே ’

என்று. சிவஞான முனிவர் தன் சமையற்காரனுக்குச் சொன்னதாக  உணவு பற்றிய புஸ்தகத்தில் உள்ளது

பாடலின் பொருள்:

துவையல், வற்றல், தயிர்ப் பச்சடி , பெருங்காயம், மிளகுடன் கீரை- —இன்றைய சமையல்

கீரைக்கு அவ்வளவு பெருமை .

சுமார் 50 வகைக்கீரைகள் உள்ளன. பூமிக்கு அடியில் வளரும் கிழங்கு வகைத் தாவரங்களின்  மேலேயும்  கீரை போன்ற இலைகள் இருக்கும். வட தேசத்து மக்கள் இவைகளையும்  பயன்படுத்துவர் . தமிழர்கள் அவ்வளவாக இவைகளை பயன்படுத்துவதில்லை  அவர்கள் கீரை என்று பெயருடைய 20, 30 வகை களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள் இதோ 50 வகைக் கீரைகள்

அகத்திக் கீரை ,அரைக் கீரை ,கக்டுகுக் கீரை ,கலவன் கீரை ,

கரசணாங் கனிக் கீரை ,கவா கீரை ,காசினிக் கீரை ,காட்டுக் கீரை ,

குப்பமேனிக் கீரை ,கொத்தமல்லிக் கீரை ,கோயாக் கீரை ,கோசுக் கீரை

சக்கரவர்த்திக் கீரை ,சரவல்லைக்  கீரை ,சர்ச்சாக் கீரை ,சாக்வாட் கீரை, சிறு கீரை ,செலரிக் கீரை ,தண்டுக் கீரை ,தூதுக் கீரை ,தூதுவளைக் கீரை, நச்சுக் கொட்டைக் கீரை ,நூல்கோல் கீரை ,பச்சரிசிக் கீரை ,பசலைக் கீரை,

பருப்புக் கீரை , பன்னாக்கீரை , பசரிக்கீரை  , பச்சடி க்கீரை,

புளியாரக்கீரை, புண்ணாக்குக்கீரை, புளிச்சைக்கீரை,

பொன்னாங்கண்ணி க்கீரை, மணத்தக்காளி க்கீரை,

மணல்   கீரை, மின்மினிக்கீரை, முளை க்கீரை,

முள்ளங்கி க்கீரை, முருங்கைக்கீரை, முர்ராயா க்கீரை,

மொடக்கத்தான்  கீரை, வதநாராயணன் கீரை,

வீதி க்கீரை, வேலை க்கீரை, வெள்ள க்கீரை, வெள்ளரிக்கீரை,

லெட்டஸ் கீரை , லூனி க்கீரை, ரேசலிக்கீரை, வேப்பிலை.

வேப்பிலையை ஆராய்ச்சி சாலையில் பரிசோதித்துப் பார்த்து இருக்கிறோம். அமைப்பில் கீரை வகைகளைப் போன்றதாகவே வேப்பிலையும் இருக்கிறது. முற்றிய இலைகளிலும் கொழுந்து இலைகளிலும் புரதங்கள், சுண்ணாம்புச் சத்து , இரும்பு, வைட்டமின் ஏ  ஆகியவை அதிகம் இருக்கின்றன.. இவ்வகையில் கொத்தமல்லிக் கீரைக்கும், தண்டுக்கீரைக்கும், பசலைக்கீரைக்கும் விட இது உயர்வானது. என்று பிரபல உணவு நிபுணர் டாக்டர் அக்ராய்டு கூறியுள்ளார் .

ஒரு நபருக்குத் தினந்தோறும் வைட்டமின் ஏ 5000 இன்டர்நெஷனல் யூ னிட் (I .U .) தேவை. ஒரு வேலை, முருங்கைக் கீரை சாப்பிட்டால், அதில்  வைட்டமின் ஏ 3260 இன்டர்நெஷனல் யூ னிட் (I .U .) கிடைக்கிறது  என்று உணவு நிபுணர்கள் கூறுகின்றனர்.

பச்சைக் கீரைகளை சரியானபடி உபயோகிக்கத் துவங்கிவிட்டால், உணவைப்பற்றி வழக்கமாக இருந்துவரும் அபிப்ராயங்கள் எல்லாம் புரட்சிகரமான மாறுதல் அடைந்துவிடும் . பால் சாப்பிடுவதால் என்ன கிடைக்கிறதோ அதே சத்துக்களைப் பச்சைக்கீரைகள் அளித்துவிடும் – என்று பிரபல ஆங்கில டாக்டர் ஒருவர் தம்மிடம் கூறியதாக காந்தி அடிகள் குறிப்பிட்டுள்ளார் .

ஆதாரம்- உணவு, ஏ.கே செட்டியார் தொகுத்தது., டி .வி.எஸ் . நிறுவனம் வெளியிட்டது ; முதல் பதிப்பு 1967.

XXXX

MY AUTOBIOGRAPHY

கட்டுரையின் நீளம் குறைவாக இருப்பதால் நைஸாக கொஞ்சம்  சுய புராணத்தையும் நுழைக்கிறேன் .

நாங்கள் பணக்காரர்கள் இல்லை. நடுத்தரக் குடும்பம்தான்; கடவுள் புண்ணியத்தில் கடன் வாங்கியதில்லை. பிறருக்குக் கடன் உதவி செய்தே  வாழ்ந்தோம். எனது தந்தை தினமணி மதுரை பொறுப்பாசிரியர் வெ . சந்தானத்தைக் காண எல்லா சாமியார்களும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் வருவார்கள். அப்படி வருபவர்களில் ஒருவர் ஏ.கே செட்டியார்.. நாங்கள் மதுரை வடக்குமாசிவீதியில் கிருஷ்ணன் கோவில் அருகில் வசித்து வந்தோம். அது பழங்கால வாடகை வீடு. இருந்தபோதிலும் சிருங்கேரி மஹாஸன்னிதானம் , புதுக்கோட்டை சாந்தானந்த சுவாமிகள், கோபால கிருஷ்ண பாகவதர் , ஆயக்குடி சுவாமிஜி கிருஷ்ணா முதலிய பல புண்ய சீலர்கள் விஜயம் செய்த வீடு.

ஏ .கே செட்டியார் வந்தாலும் சரி, பிரபல எழுத்தாளர் எழுத்து சி சு. செல்லப்பா வந்தாலும் சரி , மணிக்கொடி  பி.எஸ்.ராமையா வந்தாலும் சரி முதலில் குமரி மலர்எழுத்து பத்திரிகைகளுக்கு வருட சந்தாவை என் தந்தை கொடுத்துவிட்டு, காப்பி சாப்பிடுங்கள் என்று உபசரிப்பார். என் அம்மா போடும் காப்பி உலகப் பிரசித்தம் .

முதல் நாள் இரவு நாங்கள் சகோதர்கள், போட்டி போட்டுக்கொண்டு கையால் அரைக்கும் சின்ன மிஷினில் காப்பிப்பொடி அரைத்து வைப்போம். காலை 5 மணிக்கு எதிர்த்த வீட்டு யாதவர்கள்  வந்து “பால் சொம்பில் தண்ணீர் இல்லை! பாத்துக்கொள்ளுங்கள்! என்று கவிழ்த்துக் காண்பித்துவிட்டு பால் கறந்து கொடுப்பார்கள். இவற்றுடன் அம்மாவின் கை மணமும் சேர்ந்தால் காப்பியின் சுவை குறையுமா?

ஏ கே செட்டியார் மிக உரிமையுடன் , அம்மா, இட்டிலி இருக்கிறதா? என்று வினவுவார். பிராமணர் வீட்டில் இட்டிலிக்கு என்ன குறைவு? என் அம்மா சூடாக வார்ப்பார் . அம்மா, அதில் நல்ல நெய் தடவிக் கொண்டு வாருங்கள் என்று மேலும் உரிமையுடன் கேட்பார் .

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?

இதற்குள் சும்மா இருக்க மாட்டார். எங்கள் வீடோ பழங்கால வாடகை வீடு. எல்லா மூலைகளிலும் ஒட்டடை தொங்கிக்கொண்டு இருக்கும்.

எங்களில் ஒருவரை அழைத்து, “தம்பி ஓட்டைக்கம்பு கொண்டு வா” என்பார். எங்களுக்குப் புரியாது. அவரோ பஞ்சுக்கும் மேலான தூய வெள்ளை வேட்டி , வெள்ளைச் சட்டை அணிந்திருப்பவர். தயக்கத்துடன் மாசும் தூசியும் படைத்த ஒட்டடை கம்பைத் தேடிக் கண்டு பிடித்துக்கொண்டு ஒடி வருவோம் . அவரே ஒட்டடை அடிக்க ஆரம்பிப்பார். நாங்கள் “ஐய்யய்யோ எங்களிடம் கொடுங்கள் நாங்கள் செய்கிறோம்” என்று ஆரம்பிப்போம்.. அதாவது  , இதைச் செய், அதைச் செய்யுங்கள் என்று கட்டளை இடாமல் மற்றவர்க்கும் கற்பிக்கும் காந்தீய வழி அது . இதற்குள் இட்டிலியும் நெய் மணக்க வந்து விடும். காப்பியுடன் சாப்பிட்டு விடை பெறுவார்.

எல்லோரிடமும் நாம் கற்க முடியும். அடுத்த முறை யாராவது வீட்டிற்கு வருகிறார் என்று அறிவிப்பு வந்தால் வீட்டையே தலைகீழாகப் புரட்டிப் போட்டு  சுத்தம் செய்வோம்.

அப்பாடா , யாராவது வந்தால்தான் வீடே சுத்தம் ஆகிறது என்று சொல்லி ஒருவருக்கொருவர் சிரித்துக் கொள்வோம்.

(ஒரு ரகசியத்தைக் காதோடு சொல்கிறேன்; லண்டனில் நான் இப்போதும் அதையேதான் செய்கிறேன். யாராவது வருவதாகத் தெரிந்தால்தான் வீடு வீடாக இருக்கும். மற்ற நேரங்களில் அது ‘மார்க்கெட்’ போல காட்சி தரும் )

-subham–

Tags- துவையல்,  கீரை,  சிவஞான முனிவர், ஏ கே செட்டியார், 50 வகைக்கீரைகள்

மாமனார் வீட்டில் சாப்பிடுவோன் ,  மனைவிக்கு அஞ்சுவோன் மீது அம்பலவாணர் தாக்குதல் (11,644)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,644

Date uploaded in London – –  8 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

அறப்பளீசுர சதகத்தை எழுதிய அம்பலவாணர் , 56, 57 பாடல்களில் சாதாரணமாக உலகறிந்த விஷயங்களைப் பற்றித்தான்  கதைக்கிறார். ஆயினும் வீணர்கள்,– அதாவது வெட்டிப் பயல்கள் —-பற்றியும் கெட்ட விஷயங்கள் (Useless)  பற்றியும் சொல்லி அவைகளுக்கு – மார்க் Mark – மதிப்பெண் போடுகிறார் . அதாவது  எதைவிட எது மோசம் என்று வரிசைப் படுத்துகிறார்.

மாமனார் வீட்டில் உறைவோரும் – 35/100 fail mark

வெட்டி அரட்டையை  விரும்புவோரும் – 30 marks

விருந்தினரைக் கண்டவுடன் மனைவிக்கு அஞ்சி ஓடுவோரும் – 25 marks

படிப்பில்லாதவரும்- 20 marks

கல்லாத பேர்வழிகள் மீது கவிதை பாடுவோனும் – 15 marks ,

மக்களைச் சுமக்கும் பல்லக்கு தூக்கிகளும் – 10 marks

பொருளைத் தேடும் அறிவற்றவர்களும் – 5 marks

வரவவே  இல்லாமல் செலவுசெய்வோரும்- o marks வீணர் (Useless Fellows) 

xxxx

அறப்பளீசுர சதகம் 56. வீணர்

வேட்டகம் சேர்வோரும் வீணரே! வீணுரை

     விரும்புவோர் அவரின் வீணர்!

  விருந்துகண் டில்லாள் தனக்கஞ்சிஓடிமறை

     விரகிலோர் அவரின் வீணர்!

நாட்டம் தரும்கல்வி யில்லோரும் வீணரே!

     நாடி அவர் மேற்கவி சொல்வார்

  நானிலந் தனில்வீணர்! அவரினும் வீணரே

     நரரைச் சுமக்கும் எளியோர்!

தேட்டறிவி லாதபெரு வீணரே அவரினும்

     சேரொரு வரத்தும் இன்றிச்

  செலவுசெய் வோர் அதிக வீணராம்! வீணனாய்த்

     திரியும்எளி யேனை ஆட்கொண்

டாட்டஞ்செ யும்பதாம் புயம்முடியின் மேல்வைத்த

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) வீணனாய்த் திரியும் எளியேனை ஆட்கொண்டு –

வீணனாகத்திரியும் எளியனான என்னை அடிமையாக ஏற்று, ஆட்டம்

செய்யும் பதஅம்புயம் முடியின்மேல் வைத்த அமலனே – நடனம்இடும்

திருவடித்தாமரையை என் தலை மீது வைத்த தூயவனே! அருமை …….

தேவனே!, வேட்ட அகம் சேர்வோரும் வீணரே – மாமனார் வீட்டில்

உறைவோரும் வீணராவர்அவரின் வீண்உரை விரும்புவோர் வீணர் –

அவரினும் வீண்மொழியாடலை விரும்புவோர் வீணர், அவரின் விருந்து

கண்டு இல்லாள் தனக்கு அஞ்சி ஓடிமறை விரகு இலோர் வீணர் –

அவரினும் விருந்தினரைக் கண்டவுடன் மனைவிக்கு அஞ்சி ஓடி மறையும் அறிவு இல்லாதவர் வீணர், நாட்டம்தரும் கல்வி இல்லோரும் வீணரே –

(அவரினும்) (அகக்) கண்ணைத்தரும் படிப்பில்லாதவரும் வீணரே

நானிலந்தனில் அவர்மேல் நாடிக் கவி சொல்வார் வீணர்-(அவரினும்)

உலகில் கல்லாதவரைத் தேடி அவர்மேற் பாக்களைப் புனைவார் வீணர்,

அவரினும் நரரைச் சுமக்கும் எளியோர் வீணரே – அவரினும் மக்களைச்

சுமக்கும் எளியவர் வீணர், தேட்ட அறிவு இலாத பெரு வீணரே அவரினும்

– (பொருளைத்) தேடும் அறிவுஅற்ற பெருவீணரேயான அவரினும், சேர் ஒரு

வரத்தும் இன்றிச் செலவுசெய்வோர் அதிக வீணராம் – வரக்கூடிய எந்த

வரவும் இல்லாமல் செலவுசெய்பவர் பெரிய வீணராவர்.

     (வி-ரை.) வேட்டல் – மணம்புரிதல், விரகு – அறிவு. நாட்டம் – கண்;

இங்கு அறிவைக் குறிப்பதால் அகக்கண் ஆயிற்று;

நான்கு + நிலம் – நானிலம்: முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், உலகம்

இந்த நால்வகையில் அடங்குவதால் நானிலம் எனப்பட்டது, நரரைச்

சுமப்போர் – பல்லக்குத் தூக்குவோர்.

Xxx

மாப்பிள்ளைக்கு — மருமகனுக்கு — எங்குமே கெட்ட பெயர்தான்; அவர்களுக்கு செல்வத்தின் அருமை பெருமை தெரியாததால் அதிக நாள் தங்கிவிடுவர் . இதோ ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகம் :

அதிதிர் பாலகஸ் சைவ ஸ்த்ரீ ஜனோ நிருபதிஸ் ததா

ஏதே வித்தம் ந ஜாநந்தி ஜாமாதா சைவ பஞ்சமஹ

ஜாமாதா= மாப்பிள்ளை /  மருமகன்

ஐந்து பேருக்கு பணத்தின் அருமை தெரியாது:–விருந்தாளி, சிறுவன் பெண், ராஜா, மாப்பிள்ளை

xxxx

விவேக சிந்தாமணி பாடல் சொல்லும்:

34: யார் யார், யார்?

கருதிய நூல் கல்லாதான் மூட னாகும்

கணக்கறிந்து பேசாதான் கசட னாகும்,

ஒருதொழிலும் இல்லாதான் முகடி யாகும்

ஒன்றுக்கும் உதவாதான் சோம்பனாகும்,

பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும்

பேசாமல் இருப்பவனே பேய னாகும்,

பரிவு நழுவினவன் பசப்ப னாகும்

பசிப்பவருக் கிட்டுண்ணான் பாவியாமே.

சான்றோர்கள் உயர்வாகக் கருதிய நூல்களைக் கற்காதவன் மூடன். யாரிடம், எங்கே, எப்படி, எவ்வளவு பேசவேண்டும் என்பதை அறியாமல் பேசுபவன் குற்றவாளி, எந்த வேலையும் செய்யாது வீணே பொழுதைக் கழிப்பவன் மூதேவி. யாருக்கும் பயன்படாதவன் சோம்பேறி. பெரியவர்களை வணங்கி ஆசி பெறாதவன் பேய். வேலையைச் செய்யாமல் அதற்கு காரணம் சொல்லி தட்டிக் கழிப்பவன் பொய்யன். பசித்தவனுக்குக் கொடாமல் தானே உண்பவன் பாவி.

Xxxxx

விருந்தினரைக் கண்டவுடன் மனைவிக்கு அஞ்சி ஓடி மறையும் அறிவு இல்லாதவர் வீணர்

சதகத்தின்  26ஆவது பாடல் விளக்கத்திலேயே கீழ்கண்ட அவ்வையார் கதையைக் கொடுத்துவிட்டேன்

அவ்வையார் பசியுடன் நடந்து கொண்டிருந்தார் ; அதைக் கண்ட   ஒரு  ஆடவனுக்கு கருணை உள்ளம்;

ஏ கிழவி என் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போ என்றான்.; ஆனால் அவன் மனைவியோ அடங்கா பிடாரி; மஹா முரடு; இருந்த போதிலும் அவளைக் கெஞ்சிக் கூத்தாடி அவ்வைக் கிழவிக்கு சோறு போட்டு விடலாம் என்று அவன் தப்புக்கு கணக்குப் போட்டான்; வீட்டுத் திண்ணையில் அவ்வையாரை உட்காரவைத்து விட்டு மனைவியைத் தடவிக்கொடுத்து, தலையை வாரிவிட்டு  பேன்களை எல்லாம் எடுத்துவிட்டு அன்பே ஆருயிரே ஒரு விருந்தாளியை அழைத்து வந்துள்ளேன்; பாவம் அவள் ஒரு கிழவி என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் காளி போல தாண்டவம் ஆடினாள் ; வசை மாறி பொழிந்தாள்; அதுவும் போதாதென்று பழைய முறத்தை  எடுத்து கணவனை அடித்து ஓட ஓட விரட்டினாள் ; அவ்வைக் கிழவிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி; மறு  பக்கம் ஒரே சிரிப்பு ; சும்மாவா விடுவார் ஒரு பாடலையும் பாடினார்:—

இருந்து முகம் திருத்தி ஈரோடு பேன் வாங்கி

விருந்து வந்ததென விளம்ப –வருந்தி

ஆடினாள் … பாடினாள்ஆடிப்பழ முறத்தால்

சாடினாள்  ஓடோடத்தான்.–  தனிப்பாடல்கள்

XXXX

இரண்டாவது அதிர்ச்சி

அவ்வையார் கொஞ்ச தூரம் நடந்து போனார்; பசியோ வயிற்றைக் கிள்ளியது ; ஒரு ஆண் மகனைக் கண்டு ,

அப்பா, ரொம்ப பசிக்கிறது; சாப்பிட ஏதாவது கொடு என்றாள் ; அவனும் அன்போடு வீட்டுக்கு அழைத்துச் சென்றான்; அவன் மனைவியும் முரடு; இருந்தபோதிலும் வேண்டா வெறுப்போடு முகத்தைச் சுளித்துக்கொண்டு உணவு பரிமாறினாள்; கரண்டியை வைத்து அடிக்காத குறைதான்.

வெளியே வந்த அவ்வையார் இரண்டு ,மூன்று

பொன்மொழிகளை உதிர்த்துச் சென்றார்.

காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே
மாணொக்க வாய்திறக்க மாட்டாதே – வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்ற தையையோ
அன்பில்லாள் இட்ட அமுது.

அன்பில்லாத மனைவி இட்ட அமுது அவர் நெஞ்சசத்தைப் பிளந்தது ; கொட்டித் தீர்த்துவிட்டார்

XXX

அத்தோடு நிறுத்தவில்லை; அந்த ஆடவனுக்கு அறிவுரையும் வழங்கினாள் யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறு ; நல்ல குருவைப் பார்த்து சன்யாசம் வாங்கிக்கொள்; உனக்கு நிம்மதியான வாழ்வும் கிட்டும்; அடியார்கள் அன்போடு கொண்டுவரும் உணவும் கிடைக்கும் என்கிறார்.

சண்டாளி சூர்ப்பனகை தாடகையைப் போல்வடிவு

கொண்டாளைப் பெண்டென்று கொண்டாயே

தொண்டா செருப்படிதான் செல்லாவுன் செல்வமென்ன

செல்வம் நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்

பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டாணால்
எத்தாலும் கூடி யிருக்கலாம் – சற்றேனும்
ஏறுமா றாகஇருப்பாளே ஆமாயின்
கூறாமல் சந்நியாசம் கொள்.

xxxxxxxxxxxxxxxxxxxxx    

முதியவர் இல்லாத கன்னியின் வாழ்க்கையும்,

(No Protection for Virgins; Manu Smrti said this)

காவல் இல்லாத பட்டினமும், (Danger from Robbers; Tiruvalluvar said this )

அதிகாரிகள் கூடும் இடமும் ( CBI Raids; Income Tax raids)

எதுகைமோனை சேராத செய்யுளும் (Film Songs)

காவல் இல்லாத பூங்காவும் ( Risk of Child Sex; Drug addicts)

கரையில்லாத நீர்நிறைந்த ஏரியும் (Rain Water wasted)

ஆசிரியன் இல்லாத கலைத்தெளிவும்,(Drona- Ekalaiva Anecdote)

புகழ்ந்து கூறாத விறலியர் கூத்தும் ( No appreciation)

ஆற்றோர மரமும் ( Washed away by floods)

சுள்ளாணி இல்லாத தேரும் (Broken Chariot)  are USELESS, WASTE

Xxxx

அழிவன/ கெடுவன பற்றி விவேக சிந்தாமணி

மூப்பிலாக் குமரி வாழ்க்கை,

முனிவிலா அரசன் வீரம்,

காப்பிலா விளைந்த பூமி,

கரையிலா திருந்த ஏரி,

கோப்பிலான் கொண்ட கோலம்,

குருவிலான் கொண்ட ஞானம்,

ஆப்பிலாச் சகடு போல அழியும் என்று உரைக்க லாமே.

மூத்தவர் துணை இல்லாத குமரிப் பெண்ணின் வாழ்க்கை, கோபம் இல்லாத அரசனின் வீரம், பாதுகாப்பு வேலியில்லாத விளைநிலம், உயர்ந்தகரை இல்லாத ஏரி, ஒழுக்கமில்லாதவன் கொண்ட  அழகு, குரு அருள் இல்லாமல் பெற்ற ஞானம் ஆகியவை அச்சாணி இல்லாத வண்டி போல அழிந்து போகும்..

xxxxxx

          அறப்பளீசுர சதகம்  57. கெடுவன

மூப்பொருவர் இல்லாத குமரிகுடி வாழ்க்கையும்,

     மூதரண் இலாத நகரும்,

  மொழியும்வெகு நாயகர் சேரிடமும், வரும்எதுகை

     மோனையில் லாத கவியும்

காப்பமை விலாததோர் நந்தவன மும்,நல்ல

     கரையிலா நிறையே ரியும்,

  கசடறக் கற்காத வித்தையும், உபதேச

     காரணன் இலாத தெளிவும்,

கோப்புள விநோதமுடை யோர்அருகு புகழாத

     கோதையர்செய் கூத்தாட் டமும்,

  குளிர்புனல் நிறைந்துவரும் ஆற்றோரம் அதினின்று

     கோடுயர்ந் தோங்கு தருவும்,

ஆப்பதில் லாததேர் இவையெலாம் ஒன்றாகும்

     ஐயனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஐயனே – தலைவனே!, அருமை …….. தேவனே!, மூப்பு

ஒருவர் இல்லாத குமரி குடிவாழ்க்கையும் – முதியவர் ஒருவர் இல்லாத கன்னியின் இல்வாழ்க்கையும், மூதரண் இலாத நகரும் – பழைமையான

காவல் இல்லாத பட்டினமும், மொழியும் வெகுநாயகர் சேர்இடமும் –

கூறப்பட்ட பல அதிகாரிகள் கூடும் இடமும், வரும் எதுகைமோனை

இல்லாத கவியும் – (இலக்கணத்தில்) எதுகையும் மோனையும் சேராத செய்யுளும், காப்பு அமைவு இலாதது ஓர்

நந்தவனமும் – காவல் பொருந்தியிராத ஒரு பூங்காவும், நல்ல கரைஇலா

நிறை ஏரியும் – நல்ல கரையில்லாத நீர்நிறைந்த ஏரியும், கசடுஅறக் கற்காத

வித்தையும் – குற்றமின்றிக் கல்லாத கல்வியும், உபதேச காரணன் இலாத

தெளிவும் – கற்பிக்கும் ஆசிரியன் இல்லாத கலைத்தெளிவும், கோப்புஉள

விநோதம் உடையோர் அருகு புகழாத கோதையர்செய் கூத்தாட்டமும் –

கோவையான பலவகை விளையாட்டினர் அருகில் இருந்து புகழ்ந்து கூறாத விறலியர் ஆடும் கூத்தும், குளிர் புனல் நிறைந்துவரும் ஆற்றோர

மதில்நின்று கோடு உயர்ந்து ஓங்கு தருவும் – குளிர்ந்த நீர் நிறைந்து

வரத்தக்க ஆற்றோரத்திலே இருந்து வளரும் நீண்ட உயர்ந்த

கொம்புகளையுடைய மரமும், ஆப்பது இல்லாத தேர் – சுள்ளாணி இல்லாத தேரும், இவையெலாம் ஒன்று ஆகும் – இவை யாவும் ஒரேதன்மையுடையன (கெடுவன) ஆகும்.

     (க-து.) எப்பொருளுக்கும் அழகும் ஆதரவும் வேண்டும்.

To be continued………………………….

Tags– வீணர், கெட்டவை , பயனற்றவை, மாப்பிள்ளை

வாயு பகவானின் மூன்று அவதாரங்கள்! (Post No.11,643)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,643

Date uploaded in London –  8 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

வாயு பகவானின் மூன்று அவதாரங்கள்!

ச.நாகராஜன்

வாயு பகவானின் மூன்று அவதாரங்கள்!

வாயு பகவான் மூன்று அவதாரங்களை எடுத்திருக்கிறார்.

1) ஹனுமான் 2) பீமசேனன் 3) மத்வாசாரியார்

ப்ரதமோ ஹனுமான் த்வீதியோ பீம ஏவ ச |

பூரணப்ரக்ஞஸ்த்ரூதியஸ்து பகவத்கார்யஸாதக: ||

–    சர்வதர்சனசங்க்ரஹம் (பூர்ணப்ரக்ஞ)

2) மூன்று விஷயங்கள் எதிரிகளைச் சம்பாதிப்பது போல!

கீழ்க்கண்ட மூன்று விஷயங்களைச் செய்வதானது எதிரிகளைச் சம்பாதிப்பது போலத் தான் என்று விதுரர் கூறுகிறார்.

1) தன்னை அண்டியவர்களுக்கு வரம் தருதல்

2) ஒரு ராஜ்யத்தை ஜெயிப்பது

3) மகனைப் பெறுதல்

இந்த மூன்றும் எதிரியைச் சம்பாதிப்பது போலத் தான்!

வரப்ரதானம் ராஜ்யம் ச புத்ர ஜன்ம ச பாரத |

ஷத்ரோஸ்ச மோக்ஷணம் க்ருச்சாத்த்ரீணி சைகம் ச தத்சமம் ||

–    விதுர நீதி 1.72

–     

3) திருப்தி அடைய வேண்டியவை மூன்று!

கீழ்க்கண்ட மூன்று விஷயங்களில் ஒருவன் திருப்தி அடைய வேண்டும் என்று சுபாஷித ஸ்லோகம் கூறுகிறது.

1) தனது மனைவியிடன்

2) போஜனம் – உணவில்

3) தன்னிடம் இருக்கும் செல்வத்தில்

சந்தோஷஸ்தீரிஷு கர்தவய: ஸ்வதாரே போஜனே தனே |

–    சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் 160/337

–     

4) மூன்று விஷயங்களில் ஒருபோதும் திருப்தி அடையக்கூடாது!

கீழ்க்கண்ட மூன்று விஷயங்களில் ஒருவன் ஒருபோதும் திருப்தி அடையக் கூடாது என்று சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் தனது ஒரு ஸ்லோகத்தில் அறிவுறுத்துகிறது.

1) தானம் கொடுப்பதில்

2) தவத்தில்

3) கற்றுக் கொடுப்பதில்

த்ரீஷு சைவ ந கர்தவ்யோ தானே தபஸி பாடனே!

–            சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் 160/337

–     

5) சூரிய கிரணங்கள் தரும் நன்மைகள் மூன்று!

நமது சாஸ்திரங்களும் அறிவியலும் போற்றும் சூரிய கிரணங்களின் பெருமை சொல்லி மாளாது.

சூரிய கிரணங்கள் மூன்று நன்மைகளைத் தருவதாக நமது அறநூல்கள் கூறுகின்றன.

1) உஷ்ணம்

2) ஆரோக்யம்

3) ப்ரகாசம்

கிரணா ஸ்த்ரீ வித்யா: சூர்யே தாபாரோக்யப்ரகாஷதா: |

க்னந்தி ஸ்வப்ரபாவேண தைன்யம் தாபம் ச பாதகம் ||

6) துக்கத்திற்கான காரணங்கள் நான்கு!

ஒருவன் நிச்சயம் துக்கப்பட வேண்டிய நிலையில் அவனை நான்கு விஷயங்கள் கொண்டு விட்டு விடும். அவை யாவை? விடையை மனு தனது மனு ஸ்மிருதியில் தருகிறார்.

1) குடித்தல்

2) சூதாட்டம்

3) ஸ்த்ரீ சம்போகம் (பெண்களுடனான பாலியல் உறவு)

4) வேட்டையாடுதல்

பானமக்ஷா: ஸ்த்ரீயஸ்சைவ ம்ருகயா ச யதாக்ரமம் |

ஏதத்கஷ்டதமம் வித்யாச்சதுக்கம் காமஜே கனே ||

–    மனு ஸ்மிருதி VII – 50

–     

7) பக்தர்கள் நான்கு விதம்!

பகவத் கீதையில் க்ருஷ்ண பரமாத்மா பக்தர்களை நான்கு விதமாகப் பிரிக்கிறார்.

1) ஆர்த்தா (துன்பத்தில் இருப்பவர்கள்)

2) ஜிக்ஞாஸு (விசாரித்து அறியத் துடிப்பவர்கள்)

3) அர்த்தார்த்தீ – செல்வத்தை விரும்பித் துதிப்பவர்கள்

4) ஞானி

சதுர்விதா பஜந்தே மாம் ஜனா: சுக்ருதிநோர்ஜுன |

ஆர்தோ ஜிஞாஸுரரதார்தீ ஞானி ச பரதர்ஷ்ப ||

–    பகவத் கீதா VII – 16

8) மனதை சந்தோஷமாகவும் அமைதியாகவும் வைத்திருக்க உள்ள நான்கு வழிகள்!

மனதை சந்தோஷமாகவும் அமைதியாகவும் வைத்திருக்க நான்கு வழிகளை  யோக சாஸ்திரம் கூறுகிறது.

1) மைத்ரி : சந்தோஷமான மனிதர்களிடம் நட்பு கொண்டிருப்பது

2) கருணா : சந்தோஷமற்ற மனிதர்களிடம் கருணை காட்டுவது

3) முதிதா – நல்லனவற்றில் சந்தோஷம்

4) உபேக்க்ஷா _ பாவ விஷயங்களில் வெறுப்பு

மைத்ரிகருணாமுதிதோபேக்ஷாணாம் சுகதுக்கபுண்யாபுண்யவிஷயாணாம் பாவ நாதஸ்சித்தப்ரஸாதனம் |

–    யோக சூத்ரம் I – 3

9) தர்ம சாத்யத்திற்கான இரு வழிகள்!

தர்மத்தைச் செய்வதற்கான இரு வழிகள் இதோ

1) த்ரவியம் – செல்வத்தினால்

2) தேஹம் – உடலினால்

இந்த இரண்டினாலும் தர்மம் செய்து உரிய பலன்களை அடையலாம்.

தர்மஸ்ச த்விவித: ப்ரோக்தோ த்ரவ்யதேஹத்வயேன ச |

***

நான் கண்ட சொர்க்கம்: BBC  உணவு விடுதியில் வெஜிட்டேரியன் உணவு (Post.11,642)

london swaminathan in BBC Studio, Bush House, London 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,642

Date uploaded in London – –  7 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

மதுரையில் ‘தினமணி’-யில் 16 வருடம் சீனியர் சப் எடிட்டராக வேலைபார்த்த பின்னர் 1987 ஜனவரியில் பி.பி.சி BBC அழைப்பின்பேரில் லண்டனுக்கு வந்தேன் . என்னை ஹீத்ரோ விமான நிலையத்தில் வரவேற்ற , பி.பி.சி வெளிநாட்டு ஒலிபரப்பின் கிழக்கத்திய சேவையின் துணைத் தலைவர் (David Page, Asst. Head of BBC Eastern Service) டேவிட் பேஜ் என்னைப்பார்த்து வியந்தார் ; நோஞ்சானாக, ஒல்லியாக, ஒரே ஒரு பெட்டி , ஒரே ஒரு கைப்பையுடன் இறங்கிய என்னைப்பார்த்து காரின் பின்பக்கத்தை பூட்- டைத் திறந்து மற்ற பெட்டிகள் எங்கே ? என்றார். ‘இந்த இரண்டு’தான் என்று சொன்னவுடன் சிரித்துக்கொண்டே என் தாத்தாவின் கோட்டைக் கொண்டு வந்திருக்கேன்; இந்த ஊரில் உல்லன் கோட் Woollen Coat இல்லாமல் இந்தக் குளிரில் இருக்கக்கூடாது என்று சொல்லி ‘கோட்’ டைக் கொடுத்தார். அதற்குள் 3 சாமிநாதன்கள் நுழையும் அளவுக்கு இடம் இருந்தது. இந்தியன் இங்கிலீஷில் நான் என் வாழ்நாளில் விமானத்தைப் பார்ப்பதும் வெளிநாட்டுக்கு வருவதும் இதுதான் முதல் தடவை என்றேன். அடுத்த சில  நாட்களில் லண்டனை மூழ்கடிக்கும் அளவுக்குப் பனி கொட்டித் தீர்த்தது பத்திரிகைகள் 130 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு அது என்று எழுதித் தீர்த்தன

டேவிட் பேஜ் என்னிடம் சொன்னார் – இப்பொழுது கிறிஸ்தமஸ் -புத்தாண்டு விடுமுறைக் காலம் என்பதால் பி பி சி ஹாஸ்டல் மூடியிருக்கிறது . கையால் உன்னை பி பி சி தமிழோசையில் உன்னுடன் வேலை பார்க்கும் இலங்கைப் பெண்மணி Mrs ஆனந்தி சூர்யபிரகாசம் வீட்டில் முதல் 3 நாட்களுக்குத் தங்க ஏற்பாடு செய்துள்ளோம் என்றார். எனக்கு வெளி உலகமே தெரியாது. நான் வெஜிட்டேரியன். என்றேன். அதெல்லாம் அவர்களுக்குத் தெரியும் கவலை வேண்டாம் என்றார்.

அங்கே போனவுடன் நான் முட்டை, மீன், மாமிசம் சாப்பிடாத வெஜிட்டேரியன் என்றேன். அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். உன்னை வீட்டில் ‘சாமா’ என்றுதானே கூப்பிடுவார்கள்; அதுவும் தெரியும் என்றனர். இதென்னடா? சி ஐ ஏ CIA , கே ஜி பி KGB  போன்ற உளவு அமைப்புகளை விழுங்கி ஏப்பம் விட்டுவிடுவார்கள் போலிருக்கிறதே என்று பயந்தேன். ஆனால் அன்பே வடிவான, அமைதியி ன் உருவான சூர்யபிரகாசம் (ஆனந்தியின் கணவர்) உனக்காக தனி பாத்திரத்தில் வெஜிட்டேரியன் உணவு ஆக் கி வைத்துள்ளோம் என்றார். மிகவும் சுவையான  உணவு. அன்று மட்டுமல்ல. பி பி சி ஹாஸ்டலில் என்னை விட்ட பின்னரும் கூட,  வாரம் தோ றும்  சனி ஞாயிற்றுக்கிழமைகளில் சூர்யப்பிரகாசம் சமைத்த சுவையான உணவு கிடைத்தது. அவர்தான் அந்த வீட்டில் சமைப்பவர். ஒரே வாரத்துக்குள்  தமிழ் திரைப்பட நடிகை சுஹாசினி, அவருடைய சகோதரி டாக்டர் நந்தினி, அவரது கணவர் ஆகி யோரும் அங்கே வந்தனர். ஒரு புறம் வெஜிட்டேரியன் விருந்து மற்றோர் புறம் அசைவ விருந்து . ஆனால் சுஹாசினி நந்தினி போன்றோரும் சைவ உணவு மட்டுமே சாப்பிவிட்டனர் .

சில வாரங்கள் கழிந்தன. என்னை சென்னையில் இன்டெர்வியு செய்து, தமிழோசை ப்ரொட்யூசராகத் தேர்ந்தெடுத்த, இந்தி – தமிழ் சேவைப் பிரிவின் தலைவர் கைலாஷ் புத்வார் (Kailash Budhwar)  எங்கள் அறைக்குள் நுழைந்தார். என்னைப்பார்த்து திகைத்தார்.

ஆங்கிலத்தில் அளவளாவினார்

உன்னை ஒரு வாரத்துக்கு முன்னர் பார்த்ததைவிட இப்பொழுது சோர்ந்து போயிருக்கிறாயே . என்ன விஷயம்? என்ன நடக்கிறது? என்று வினவினார்.

இல்லை; நீங்கள் என்னைத் தங்க வைத்துள்ள பி பி சி ஹாஸ்டலில் வெஜிட்டேரியன் உணவே கிடையாது. அரை வேக்காடு அரிசி  மட்டும் உள்ளது அத்தோடு வேகவைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, கேரட் மட்டும்தான் ஒரே ஒரு வேளை சாப்பிடுகிறேன். மற்ற நேரம் எல்லாம் ரொட்டி, சான்டவிச்–தான்  என்றேன். பேசாமல் அடுத்த அறைக்குப் போனார். அது வங்காளி ஒலிபரப்புக்காரர்கள்  அறை . அங்கிருந்து பங்கஜ் ஷா என்ற ஒருவரை அழைத்து வந்து, பங்கஜ் இன்று மா லை ஒலி பரப்பு  முடிந்தவுடன் சுவாமிநாதனை இந்தியன் ஒய், எம் சி, ஏ ஹாஸ்டலுக்கு அழைத்துச் சென்று ஒரு அறையில் தங்க வசதி செய். நா ன் இப்போதே அவர்களுக்குப் போன் செய்கிறேன். என்றார். மாலையில் அங்கே சென்றோம். பி பி சி என்று சொன்னவுடன் ராஜ உபசார த்துடன்  ஆறு மாதங்களுக்கு தங்குவதற்கு  அறை ஒதுக்கினார்கள். அங்கே பக்கா இந்திய உணவு கிடைத்தது. ஒரு புறம் வெஜிட்டேரியன் மறு புறம் நான் வெஜிட்டேரியன். ஆறு மாதத்துக்கு சுகபோகம்தான் ; பின்னர் இந்தியாவிலிருந்து மனைவியும் மகனும் வந்து  சேரவே  பி பி சியில் , அவ்வப்போது குரல் கொடுக்க வரும் மைத்ரேயி கணேசன் மூலம் ஒரு படேல் வீட்டு மாடியில் தங்கினோம். நிற்க.

xxx

மீண்டும் பிபிசி உலக சேவைக்கு வருவோம்

500 பேர் எழுதிய தேர்வில் முதன்மையில் நின்ற என்னைத் தேர்ந்தெடுத்த கைலாஷ் புதவார்,  பி பி சி கான்டீன் கமிட்டில்யிலும் மெம்பர்..  என்னை மனதிற்கொண்டு இனி பி பி சி கான்டீனில் தினமும் லஞ்ச் நேரத்தில் குறைந்தது ஒரு வெஜிட்டேரியன்  டிஷ் vegetarian dish இருக்க வேண்டும். அதைத் தனியாக வெஜிட்டேரியன் போர்டின் கீழ் வைக்க வேண்டும். கரண்டியை மிக்ஸ்  mix பண்ணக்கூடாது. வெஜிட்டேரியன் என்பது தெளிவாகத் தெரிவதற்காக மெனு Menu Borad போர்டில் அதை பச்சை வண்ணக் Green Logo குறியில் தெரிவிக்க வேண்டும் என்று சொல்லி ஏற்பாடு செய்துவிட்டு என்னிடமும் தெரிவித்தார். அப்படியே நடந்தது . எனக்கும் மகிழ்ச்சி.

ஒரு வாரம் சென்ற பின்னர் மீண்டும் என் அறைக்கு வந்தார். சுவாமிநாதன் தினமும் 12 மணிக்கு கான்டீன் திறந்தவுடன் நீதான் முதலில் நிற்க வேண்டும். ஏனெனில் சைவ உணவுக்கு நீண்ட கியூ நிற்கிறதாம். நீ முதலில் சாப்பிட்டு விடு ; தாமதமாகப் போனால் கிடைக்காது என்று சொன்னார். நான் சிரித்துக்கொண்டே தமிழ்ப் பழமொழியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொன்னேன் – பந்திக்கு முந்து படைக்குப் பிந்து என்று. அவரும் பலத்த சிரிப்புடன் அறையை விட்டு வெளியேறினார்.

தனி ஒருவனுக்காக பி பி சி கான்டீன் மெனு Menu வையே மாற்றிய கைலாஷ் புதவாரை (Kailash Budhwar) நான் மட்டுமல்ல; வெஜிட்டேரியன் உணவை விரும்பும் வெள்ளைக்காரர்களும் நன்றியுடன் என்றும்  நினைவு கூறுவர்.

1987ல் இலங்கை அகதிகளோ முஸ்லீம் அகதிகளோ குவியத் தொடங்காத காலம். ஒய் எம் சி ஏ Y M C A பக்கத்திலுள்ள ஒன்றிரண்டு வெஜிட்டேரியன் உணவு விடுதிகளுக்கு மேலாக, அதிகம் சைவ உணவு கிடைக்காத நகரம்  லண்டன் . இப்போது இலங்கை அகதிகள் வருகையாலும் இந்திய கம்பியூட்டர் கும்பல் வருகையாலும், தடுக்கி விழுந்தால் சைவ உணவு விடுதியில்தான் விழுவீர்கள்.

(திரு கைலாஷ்  புதவார்,  திரு. சூர்ய பிரகாசம் ஆகியோர் இப்பொழுது சொர்க்கத்தில் வாசம் செய்கின்றனர் )

–subham—tags. பிபிசி தமிழோசை கான்டீன் , கைலாஷ் புதவார், வெஜிட்டேரியன் உணவு, 

தாயே! சப்பாத்தி போடு: தமிழ் நாட்டில் வல்லபபாய் படேல் கெஞ்சல் (Post.11,641)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,641

Date uploaded in London – –  7 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

‘காக்கைக்கும் கூட தன் குஞ்சு பொன் குஞ்சு’. அது போல அவரவர்க்கு சின்ன வயதில் அம்மா, என்ன சமைத்துப் போட்டார்களா அதுதான் அமிர்தம் . இந்தியாவின் இரும்பு மனிதரான (Iron Man of India)  வல்லப பாய் படேல் , இதற்கு விலக்கல்ல . இதோ ஒரு சுவையான சம்பவம்

1929 ஆம் ஆண்டில் வேதாரண்யம் மகாநாட்டிற்குத் தலைமை வகித்தார் வல்லப பாய் படேல் . மகாநாடு முடிந்ததும் , தமிழ்நாட்டில் சுமார் இருபது நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார்.திருப்பூர் வந்து சேர்ந்தார். ராஜாஜியும் படேலுடன் சுற்றுப்பிரயாணம் செய்தார். திருப்பூரில் குடியேறிய பண்பாடுமிக்க  குஜராத்திக் குடும்பம் ஒன்றில் படேல் தங்க ஏற்பாடு செய்திருந்தனர்.

படேல் அந்த வீட்டுக்குச் சென்றதும் , அந்த வீட்டுத் தலைவரைப் பார்த்து, நீங்கள் ஒரு குஜராத்தியா? என்று கேட்டார்..

‘ஆம்’ என்றார் வீட்டுத் தலைவர்.

நீங்கள் கோதுமை சாப்பிடுவது உண்டா? என்று கேட்டார் படேல்.

வீட்டுக்காரர் ‘ஆம்’ என்றார் .

‘இருபது நாட்களாக அரிசிச் சோறு சாப்பிட்டு வந்தேன். தயை செய்து கோதுமை ரொட்டி தயாரித்துக் கொடுங்கள் என்றார் சர்தார் வல்லப பாய் படேல்’.

Xxxx

My story (Part of My Autobiography)

லண்டன் சாமிநாதன் பட்ட பாடு

சந்தடி சாக்கில் என்னுடைய சுய புராணத்தையும் நுழைக்கப் பார்க்கிறேன் .

இதுவரை லண்டனிலிருந்து இரண்டு முறை குடும்பத்தோடு ரோம் (Rome, Florence, Venis) நகருக்கும், பிளாரன்ஸ், வெனிஸ் நகரங்களுக்கும் சென்று வந்துள்ளோம். முதல் தடவை ரோம் நகருக்குச் சென்றபோது என் மகன் 7 நாள் பயணம் ‘புக்’ book செய்துவிட்டான். நாங்களோ சுத்த வெஜிட்டேரியன்கள் .தினமும் பாஸ்தாவும் பிட்சாவும் (Italian Pasta and Pizza) சாப்பிட்டு நாக்கு செத்துவிட்டது. அரிசிச் சோறு கிடைக்காதா என்று ‘கூகுள்’ (google) செய்து விட்டு, ஹோட்டலைத் தேடி, ‘போர்டு போர்ட்டாக’ படித்துக்கொண்டு அலைந்தோம். கிடைக்கவில்லை. ஒரு வேளை தவறான முகவரிக்குச் சென்றிருக்கலாம். இறுதியில் நிறைய இந்திய முகங்கள் (உண்மையில் பங்களாதேஷிகள்) தெரிந்த ஒரு ‘சாலை ஒர’ (Roadside Restaurant) உணவு விடுதிக்குள் நுழைந் தோம் ; ஆனந்தம் ஒரு புறம்; அருவறுப்பு மறுபுறம் . ஏனெனில் பெரிய பெரிய பாத்திரங்களில் ‘ஏதோ ஏதோ’ மிதந்து கொண்டிருந்தது.

இருந்தபோதிலும் ஒரு புறம் கண்களை மறைத்துக்கொண்டு அரிசிச் சோற் றை மட்டும் எடுத்துக்கொண்டு வெஜிட்டேரியன் என்று உரத்த குரலில் அழுத்தம் திருத்தமாகச்  சொல்லி, அவர்கள் கொடுத்த ஏதோ ஒன்றைச் சாப்பிட்டுவிட்டு ஹோட்டல் அறைக்கு வந்தோம் . சில மணி நேரத்தில் இரண்டு  பேருக்கு வயிறு கடமுடா சப்தம். சம்ஸ்க்ருதத்தில் களேபரம் (கலவரம் என்ற சொல்லின் மூலம்) என்று  சொல்லுவார்கள். மாலை நேர  பயணங்களை ரத்து செய்ய மனம் இல்லை. ஆகையால் உடல் நிலை பாதித்தவர்களை விட்டுவிட்டு, இருவர் மட்டும், ரோம் நகரில் பார்க்காத இடங்களை சுற்றிப்பார்த்தோம். மறுநாள் காலையில் அடுத்த இரண்டு பேருக்கு வயிற்றில்  கடமுடா’ சப்தம் . முதல் நாள் பாதிக்கப்பட்ட இருவருக்கு உடல் நிலை முன்னேறிவிட்டது. சரி, போங்கள் ; இன்று உங்கள் ஷிப்ட் shift . நீங்கள் போய் சுற்றிப் பார்த்து வாருங்கள் என்று சிரித்துக்கொண்டே அனுப்பி விட்டோம்

.சில ஆண்டுகளுக்குப்  பின்னர் மீண்டும் ரோம் நகருக்குச் சென்ற பொழுது தீவிர ஆராய்ச்சிகள்  செய்து, வெஜிட்டேரியன் VEGETARIAN உணவுவிடுதிகளைக் குறித்துக் கொண்டு, வெற்றிகரமாக கண்டும் பிடித்தோம். ஒரு அழகிய காஷ்மீரி பெண்மணி நடத்திய ரெஸ்டாரன்டில் வெஜிட்டேரியன் என்றால் என்ன? என்ற இலக்கண வரையறைகளைக் (Definition of South Indian Vegetarian) கற்பித்து ஆர்டர் கொடுத்தோம். நல்ல உணவு கிடைத்தது.

என்ன அம்மணி? உன் கடையை நன்கு விளம்பரம் செய்யக்கூடாதா ? போன  தடவை ரோம் நகருக்கு நாங்கள் வந்தபோது தவியாய்த் தவித்துப் போய்விட்டோம் என்று சொன்னோம். அவர் சிரித்துக் கொண்டே, நானே போன மாதம்தான் இந்த ரெஸ்டாரண்டை ஆரம்பித்தேன் என்றார் . வாழ்க வாழ்க என்று சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.

london swaminathan in Great Barrier Reef, Australia.

New Rule

இபோதெல்லாம் என் மகன்களுக்கு ஒரு கட்டளை போட்டிருக்கேன். வியன்னா, மாட்ரிட் என்று ஏதேனும் ஹாலி டே Holiday  புக் செய்தால் எந்த இடத்திலும் மூன்று இரவுக்கு மேல் ஹோட்டலில் தங்க வேண்டாம். அப்படித் தங்கினால் முதலில் வெஜிட்டேரியன் உணவுவிடுதி பட்டியல் தயாரித்து, அதன் பக்கத்திலுள்ள ஹோட்டலை book புக் செய்ய வேண்டும் என்று விதி செய்தோம்.

இனி ஒரு விதி செய்வோம்அதை எந்த நாளும் காப்போம்தனி ஒருவனுக்கு வெஜிட்டேரியன் உணவு இல்லாவிடில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி பாடலை மாற்றிப் பாடினோம்.

Xxx

Tags – வெஜிட்டேரியன் , ரோம், உணவுவிடுதி, பட்டபாடு , களேபரம்,படேல், வல்லப பாய் ,

‘சம்ஸ்கிருதத்துக்கு மேலான மொழியுமில்லை; பிராமணருக்கு மேலான ஜாதியுமில்லை’- Post 11,640

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,640

Date uploaded in London – –  7 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

ஐயர் வேதம்சம்ஸ்க்ருதம் ஜிந்தாபாத்- அம்பலவாணர் சொன்ன கசப்பான உண்மை!!

அறப்பளீசுர சதகம் இயற்றிய அம்பலவாணர் சொல்கிறார் :

மலையில் உயர்ந்தது பொன்னிற மேரு ;

நதியில் உயர்ந்தது கங்கை;

ஒளியில் சிறந்தது சூரியன் ;

ஜாதியில் உயந்தவர் பிராமணர்;;

மொழிகளில் உயர்ந்தது சம்ஸ்க்ருதம் ;

நூல்களில் உயர்ந்தது வேதம் ;

தானங்களில் சிறந்தது அன்னதானம் ;

தெய்வங்களில் உயர்ந்தவர் அன்னையும் பிதாவும்! 

இதில் ஒன்றை ஒப்புக்கொண்டால் பிறவற்றையும் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி சூரியனையும், கங்கையையும் , மேருவையும், தாய் தந்தையரையும் சொன்ன நொடியில் ஐயரையும் வேதத்தையும், ஸம்ஸ்க்ருதத்தையும் உயரத்தில் தூக்கிவிடுகிறார் அம்பலவாணர். வள்ளுவரும் அந்தணர் என்போர் அறவோர் என்றும், பார்ப்பானின் பிறப்பொழுக்கம் வேதத்தைவிட முக்கியமானது என்றும் சொல்கிறான். தேவாரம் திருவாசகம் போலவே ஆவினையும்  அந்தணரையும் இணைத்தே பாடுகிறான் . ஆனால் ஜாதியை மறந்துவிட்டு, ஒழுக்கமும் நேர்மையும் நிறைந்தவர்  உயர்ந்தவர் என்று பொருள் கொள்ளலாம். மேலும் சம்ஸ்க்ருத மொழியின் பழமை கருதி அம்பலவாணர் பாராட்டி இருக்கலாம். துருக்கியில் பொகஸ்கோயில் கி.மு 1380 தேதியுள்ள களிமண் கல்வெட்டில் கியூனிபார்ம் லிபியில் சம்ஸ்க்ருதம் உள்ளது. தமிழிலோ அதற்கு 1300 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் கல்வெட்டுச் சான்று கிடைத்துள்ளது. வேதங்களின் பழமையும் கி.மு 1500 என்றும் தமிழின் தொல்காப்பியம் கி.மு முதல் நூற்றாண்டு  என்றும் பெரும்பாலான அறிஞர் கூறுவதை ஒட்டி அம்பலவாணரும் எழுதினார் போலும்.

xxxx

முதல் பாடலில் வள்ளுவர் சொன்ன கருத்தையே சொல்கிறார்; ஊழில் பெருவலி யாவுளவிதியை வெல்ல முடியாதே! என்கிறார். சிலப்பதிகாரத்தின் கருத்தும் அதுவே; ஊழ்வினை உருத்து வந்தூட்டும் என்பதை வலியுறுத்தவே காவியத்தை எழுதியதாக இளங்கோ சொல்கிறார்.

Xxxx

இதை பிறர் சொல்லுவதுட ன் ஒப்பிடலாம் :

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே

வெள்ளைப் பறங்கியை துறை என்ற காலமும் போச்சே – பாரதியார்

xxx

வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே

வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே –பாரதியார்

xxx

உன்னத ஆரிய நாடெங்கள் நாடே

ஓதுவம் இஃதை எமக்கிலை  ஈடே –பாரதியார்

xxx

பிராமணர் பற்றி புத்தர்

ஒருவன் அமைதியான தூய்மையான, தன்னடக்கமான வாழ்க்கை வாழ்ந்து எந்த உயிருக்கும் தீங்கிழைக்காவிடில் அவன்தான் பிராமணன்; அவன்தான் சந்நியாசி; அவன்தான் பிக்ஷு – தம்ம பதம், ஸ்லோகம் 142; புத்தர் செப்பியது

ஒரு சன்யாசியும் பிராமணரும் பூர்வ ஜென்ம பாவங்களில் இருந்து விடுபட்டுவிடுகிறார்கள் . அவர்  தாயாரையும் தந்தையையும் கொலை செய்திருந்தாலும் , இரண்டு நல்ல அரசர்களைக் கொலை செய்திருந்தாலும், ஒரு பெரிய ராஜ்யத்தையே அழித்திருந்தாலும்  அவர்கள் அந்த பாபத்திலிருந்து விடுபடுகிறார்கள் — தம்ம பதம், ஸ்லோகம் 294; புத்தர் செப்பியது .

ஒரு பிராமணனுக்கு தீங்கு செய்யாதே; பிராமணரும் எவருக்கும் தீங்கிழைக்கக்கூடாது அப்படித் தீங்கிழைப்பவனுக்கு என்ன நேருமோ; அடடா , என்ன நேருமோ.- தம்ம பதம், ஸ்லோகம் 389; புத்தர் செப்பியது.

Xxxx

விவேக சிந்தாமணி பாடல்கள்

 மாதம் மும்மாரி பெய்த காரணம்

வேதம் ஓதிய வேதியர்க் கோர்மழை,

நீதி மன்னர் நெறியினுக் கோர்மழை,

மாதர் கற்புடை மங்கையர்க் கோர்மழை,

மாத மூன்று மழையெனப் பெய்யுமே.

xxxx

விதி மாறாதது

முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்,

மடவனை வலியான் கொன்றால் மறலிதான் அவனைக் கொல்லும், தடவரை முலைமா தேயித் தரணியில் உள்ளோர்க் கெல்லாம், மடவனை யடித்த கோலும் வலியனை யடிக்கும் கண்டாய்.

Meaning

இளம் பெண்ணே! முடவன் (எதிர்க்கும் ஆற்றல் இல்லாதவன்) ஒருவனை முரடன் ஒருவன் துன்புறுத்தினால் அவனை அவனினும் வலியவன் வதைப்பான்.  அவ்வலியவனை எமன் கொல்வான். இவ்வுலகில் உள்ள எல்லாருக்கும் இது நியதி. ஏழையைக் அடித்த கோல் ( விதி மாறும்போது) வலியவனையும் அடிக்கும் என்று அறிந்து கொள்வாயாக!

xxxx

வினைமாற்றும்

வாழ்வது வந்த போது மனந்தனில் மகிழ வேண்டாம்,

தாழ்வது வந்த தானால் தளர்வரோ தக்கோர் மிக்க,

ஊழ்வினை வந்த தானால் ஒருவரால் விலக்கப் போமோ,

ஏழையாய் இருந்தோர் பல்லக்கு ஏறுதல் கண்டி லீரோ.

Meaning

நல்ல வாழ்வ வந்த போது மனதில் (அளவிற்கதிகமாக) மகிழ்ச்சி கொள்ளவேண்டாம். விவேகமுள்ளவர் விதியினால் தாழ்வானது வந்தபோதும் மனம் தளரமாட்டார். வினைப்பயனை யாராலே மாற்றமுடியும், பரம ஏழையாய் இருந்தவர் பல்லக்கில் ஏறுவதை பார்த்ததில்லையோ!

Xxxx

அந்தணர் அறம் மாறினால்..

இந்திரன் பதங்கள் குன்றும் இறையவர் பதங்கள் மாறும்,

மந்திர நிலைகள் பேரும் மறுகயல் வறுமை யாகும்,

சந்திரன் கதிரோன் சாயும் தரணியிற் றேவு மாளும்,

அந்தணர் கருமம் குன்றில் யாவரே வாழ்வர் மண்ணில்.

அந்தணர்கள் செய்கின்ற இறைவழிபாடுகள்யாகங்கள் குறைந்து போனால் இந்திராதி தேவர்களின் அருள் குறைந்துபோகும்அரசனின் நல்லாட்சி மாறும்மந்திரங்களின் சக்தி குறையும்நாட்டில் வறுமையும் தீமையும் உண்டாகும்சந்திரனின் சூரியனின் இயல்பு நிலை மாறி கெடுதி உண்டாகும். இவ்வாறு நிகழ்ந்தால் மண்ணில் யார் தான் வாழ முடியும்?

xxxx

ஒழுக்கம் உயர்வு தரும்

ஆசாரம் செய்வா ராகில் அறிவொடு புகழும் உண்டாம்,

ஆசாரம் நன்மை யானால் அவனியில் தேவர் ஆவார்,

ஆசாரம் செய்யா ராகில் அறிவொடு புகழும் அற்றுப்,

பேசார்போல் பேச்சும் ஆகிப் பிணியொடு நரகில் வீழ்வார்.

நல்லொழுக்கத்தோடு வாழ்பவருக்கு நல்ல அறிவொடு புகழும் உண்டாகும். அவரது (ஈகை முதலான) நற்குணங்களால் பலருக்கு நன்மையும் ஏற்படுமாயின் இவ்வுலகில் அவர் தெய்வமாக மதிக்கப்படுவார். ஒருவர் ஒழுக்கம் தவறினால் அறிவொடு புகழும் இழந்து அவச்சொல்லுக்கு ஆளாகி நோயோடு கொடிய நரகத்தில் வீழ்வார்.

Xxxx

சிலப்பதிகாரத்தின் ஒட்டுமொத்த அறிவுரை

1.         அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.

2.         ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.

3.         உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.

xxxxxx

அறப்பளீசுர சதகம் 54. ஊழ்வலி

கடலள வுரைத்திடுவர், அரிபிரமர் உருவமும்

     காணும் படிக்கு ரைசெய்வர்,

  காசினியின் அளவுபிர மாணமது சொல்லுவார்

     காயத்தின் நிலைமை அறிவார்,

விடலரிய சீவநிலை காட்டுவார் மூச்சையும்

     விடாமல் தடுத்த டக்கி

  மேன்மேலும் யோகசா தனைவிளைப் பார், எட்டி

     விண்மீதி னும்தா வுவார்,

தொடலரிய பிரமநிலை காட்டுவார், எண்வகைத்

     தொகையான சித்தி யறிவார்,

  சூழ்வினை வரும்பொழுது சிக்கியுழல் வார்! அது

     துடைக்கவொரு நான்மு கற்கும்

அடைவல எனத்தெரிந் தளவில்பல நூல்சொல்லும்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

இ-ள்.) அண்ணலே – தலைவனே!, அருமை ……. தேவனே!, கடல்

அளவு உரைத்திடுவர் – கடலின் பரப்பைக் கணக்கிட்டுக் கூறுவர்,

அரிபிரமர் உருவமும் காணும் படிக்கு உரைசெய்வார் – திருமால்

நான்முகன் ஆகியவரின் வடிவத்தையும் காணுமாறு விளக்கிக் கூறுவர்,

காசினியின் அளவு பிரமாணமும் சொல்லுவார் – உலகின் எவ்வகை

அளவையும் விளக்குவர். காயத்தின் நிலைமை அறிவார் –

உடற்கூறுபாட்டை உணர்வர், விடல் அரிய சீவநிலை காட்டுவார் –

விடுதற்கரிய உயிரின் நிலையையும் காண்பிப்பர், மூச்சையும் விடாமல்

தடுத்து அடக்கி மேன்மேலும் யோகசாதனை விளைப்பார் – மூச்சை

விடாமல் தடை செய்து அடக்கி மேலும் மேலும் யோகசித்தியைச் செய்வர்,

விண்மீதினும் எட்டித் தாவுவார் – வானத்திலும் எழும்பித் தாவுவர், தொடல்

அரிய பிரமநிலை காட்டுவார் – அடைய இயலாத பிரமத்தின் நிலையையும்

காண்பிப்பர், எண்வகைத் தொகையான சித்திஅறிவார் – எட்டு வகையான

எண்ணிக்கையுடைய சித்தியையும் தெரிவர் (எனினும்), சூழ்வினை

வரும்போது சிக்கி உழல்வார் – சூழும் பழைய வினைப்பயன் வரும்போது

அதனில் அகப்பட்டுத் தவிப்பர், ஒரு நான்முகற்கும் அது துடைக்க அடைவு

அல – ஒப்பற்ற பிரமனுக்கும் அதனை அழிக்கும் வழி இல்லை, என

அளவுஇல் பலநூல் தெரிந்து சொலும் – என்று கணக்கற்ற பலநூல்கள்

அறிந்து கூறும்.

 ‘ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று – சூழினும் தான்முந்

துறும்’ என்றார் வள்ளுவர்.

xxxxxxxxxxxxxxxxx

அறப்பளீசுர சதகம் 55. உயர்வு இல்லாதவை

வேதியர்க் கதிகமாம் சாதியும், கனகமக

     மேருவுக்கு அதிக மலையும்,

  வெண்திரை கொழித்துவரு கங்கா நதிக்கதிக

     மேதினியில் ஓடு நதியும்

சோதிதரும் ஆதவற் கதிகமாம் காந்தியும்,

     சூழ்கனற் கதிக சுசியும்

  தூயதாய் தந்தைக்கு மேலான தெய்வமும்,

     சுருதிக் குயர்ந்த கலையும்,

ஆதிவட மொழிதனக்கதிகமாம் மொழியும், நுகர்

     அன்னதா னந்த னிலும்ஓர்

  அதிகதா னமுமில்லை என்றுபல நூலெலாம்

     ஆராய்ந்த பேரு ரைசெய்வார்!

ஆதவன் பிரமன்விண் ணவர் முனிவர் பரவவரும்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே.

     (இ-ள்.) ஆதவன் பிரமன் விண்ணவர் முனிவர் பரவ வரும்

அண்ணலே. கதிரவன் நான்முகன் வானவர் முனிவர் முதலோர் வாழ்த்த

வரும் முதல்வனே!, அருமை…..தேவனே!, வேதியர்க்கு அதிகம்ஆம் சாதியும்

– மறையவர்களுக்கு மேலான சாதியும், கனக மகமேருவுக்கு அதிக மலையும்

– பொன்மயமான மாமேருவினும் பெரிய மலையும், மேதினியில் வெண்திரை

கொழித்துவரு கங்கா நதிக்கு அதிகம் ஓடும் நதியும் – உலகிலே

வெண்மையான அலைகளை வீசி ஓடும் கங்கையாற்றினும் மேலாக ஓடும்ஆறும்சோதிதரும் ஆதவற்கு அதிகம்ஆம் காந்தியும் – ஒளியைத் தரும்

ஞாயிற்றினும் மேம்பட்ட ஒளிப்பொருளும், சூழ்கனற்கு அதிக சுசியும் –

சூழும் தீயினும் மேம்பட்ட தூய பொருளும்,

.தூய தாய் தந்தைக்கு மேலான தெய்வமும் – தூயவரான பெற்றோரினும்

மேலான தெய்வமும், சுருதிக்கு உயர்ந்த கலையும் – வேதத்தினும்

மேம்பட்ட நூல்களும், ஆதி வடமொழி தனக்கு அதிகம்ஆம் மொழியும்,

– முதன்மையான வடமொழியினும் உயர்ந்த மொழியும், நுகர் அன்ன

தானந்தனினும் ஓர் அதிக தானமும் – உண்ணப்படும் உணவுக்கொடையினும்

உயர்ந்த ஒரு கொடையும், இல்லையென்று பலநூல் எலாம் ஆராய்ந்தபேர்

உரை செய்வார் – இல்லையெனப் பல நூல்களையும் ஆராய்ச்சி

செய்தவர்கள் கூறுவார்கள்.

Xxxxx

Tags–பிராமணர், சம்ஸ்க்ருதம், உயர்வு, விதி, ஊழ்வினை , அம்பலவாணர்

S.Nagarajan  Article Index : December 2022 (Post No.11,639)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,639

Date uploaded in London –  7 JANUARY 2023                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

SNR Article Index : December 2022

DECEMBER 2022

  1-12-2022 11491    தன் பெயரையே விருதுப் பெயராகக் கொசுத்த உத்தமச்   

                                       சோழன் – கொங்குமண்டல சதகம் பாடல் 87  புத்தக

                                        அறிமுகம் 128 : Who is more intelligent?              

 2-12-2022 11494     படிக்காசுப் புலவரின் புத்தக அறிமுகம் 129  : இலக்கிய

                                       உலகில் கம்பனின் காட்சி, வில்லியின் மாட்சி, சங்கப்

                புலவர்களின் ஆட்சி

 3-12-2022 11500         SNR Article Index November 2022 –  புத்தக அறிமுகம் 130 :

                                       வாக்கிற்கு அருணகிரி!              

 4-12-2022 11503         வாச பஜனம்!

 5-12-2022 11507        அருள்வாயே – 6 ( 46 முதல் 54 முடிய)

 6-12-2022 11511       நவீன மொபைல் போன், வீடியோ பூதங்கள்!

 7-12-2022 11515        ராமாயணத்தில் நதிகள் – 5

 8-12-2022 11519        எந்த தேசத்தில் வசிக்க வேண்டும்?

  9-12-2022 11523        அருள்வாயே – 7 ( 55 முதல் 64 முடிய)

10-12-2022 11527 ராமாயணத்தில் நதிகள் – 6

11-12-2022 11530     பாரதம் பற்றிய மஹாகவி பாரதியாரின் 8 மற்றும் 9வது

               பாடல்கள் – ஒரு பார்வை (124 முதல் 145 முடிய)

12-12-2022 11534 காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன்-110-12-22                

               உரை                

13-12-2022 11538காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன்- 2 10-12-22 உரை

14-12-2022 11542 காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன்- 3 10-12-22 உரை

15-12-2022 11547 காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் -4 10-12-22 உரை

16-12-2022 11550  காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் -5 10-12-22 உரை

17-12-2022 11554  காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் -6 10-12-22 உரை

 18-12-2022 11558 காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் -7 10-12-22 உரை

19-12-2022 11562  காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் -8 10-12-22 உரை

20-12-2022 11565   31 அப்ஸரஸ்கள்!             

21-12-2022 11569   உங்கள் உடலுக்கு உணவு எப்படி சக்தி ஊட்டுகிறது – 1 

              ஹெல்த்கேர் டிசம்பர் கட்டுரை

22-12-2022 11573    செப்பு மொழி 28 

23-12-2022 11576   செப்பு மொழி 29      

24-12-2022 11580    பவானி ஆற்றில் அணை கட்டிய காளிங்கராயன்! 

              கொங்குமண்டல சதகம் பாடல் 70             

25-12-2022 11584    அருள்வாயே – 7 

26-12-2022 11587   யோக வாசிஷ்டம் கூறும் புஸுண்டோபாக்யானம்

27-12-2022 11589    திருஞானசம்பந்தர் நளிர் ஜுரம் நீங்கப் பாடிய     

                             பாடல்! கொங்குமண்டல சதகம் பாடல் 48

28-12-2022 11594      ராமாயணத்தில் முக்கிய வருடங்கள் 38 – Part 1

29-12-2022 11598      ராமாயணத்தில் முக்கிய வருடங்கள் 38 – Part 2

30-12-2022 11601     பாரத பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்பட்ட  50 முதல்

                                        72 கலைகள் – 1

31-12-2022 11605        பாரத பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்பட்ட 50 முதல்

                                          72 கலைகள் – 2

***                      

PLEASE VISIT STALL NO.499 IN BOOK FAIR, CHENNAI


BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN AND S NAGARAJAN ARE DISPLAYED IN STALL NO.499 AT CHENNAI BOOK FAIR..

ONLY 20 BOOKS  ARE DISPLAYED OUT OF 200++++ BOOKS WRITTEN BY BOTH OF US.

IF YOU WANT PRINTED BOOKS PLEASE LET THEM KNOW WHEN YOU VISIT PUSTAKA.CO. STALL 

ONLY FOR PRINTED BOOKS, YOU HAVE TO INFORM THEM.

YOU MAY GIVE YOUR NAME , E MAIL OR MOBILE PHONE NUMBER WITH THE BOOK NAME/S YOU WOULD LIKE TO BUY.

BOOKS  ARE ALWAYS AVAILABLE ON LINE.

PLEASE NOTE THE BOOK FAIR ADDRESS GIVEN ABOVE.

POSTED ON 6-1-2023

சென்னை புத்தகக் காட்சி 2023 – 

நாள் : 06-01-2023 முதல் 22-01-2023 நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை
இடம்: ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை – 600035.

Tamil Hindu Encyclopaedia -45 ;Tamil Spirits and Ghosts  வருத்தும் தெய்வம் contd…(Post.11,638)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,638

Date uploaded in London – –  6 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Ancient Tamils believed that some of the nymphs, spirits or ghosts are troublesome, bothersome, and annoying.

Even if you look at them, they will give you trouble. They are called Attacking Nymphs தாக்கு அணங்கு.

If it is not causing any trouble the Tamils considered them gods residing there. They even compared it to the Kinnaras in Puranas.

Perum .line 493-494 கின்னரம்‌ முரலும்‌. ௮ணங்குடைச்‌ சாரல்‌. (பெரும்‌.493-494),

Other places :’அணங்கு வீழ்வு அன்ன. பூந்தொடி மகளிர்‌! (madur.மதுரை.446), ‘எம்‌ அணங்கு அன்னோளே: (akamஅ௧.366:16)

Xxx

Attacking nymphs ,particularly ,attack young girls according to Sangam Tamil poets

கண்டார்க்குத்‌ தாக்கு அணங்கு இக்காரிகை

காண்மின்‌!’ (பரி.11 122), pari

தாக்கு அணங்கு ஆவது எவன்கொல்‌ அன்னாய்‌!: (ஐங்‌ 23-4) ainkuru

மூப்புடை முதுபதி தாக்கு அணங்கு உடைய;

காப்பும்‌ பூண்டிசின்‌. கடையும்‌ போகலை! (௮௧.7:4-5)akam

Another name given to such spirits is சூர்  Suur;  they live in mountainous areas. Tamils believed that they even kill people. Even the mountain goats won’t touch the plants grown in such Suur inhabited areas in the hills.

“உருமும்‌, சூரும்‌, இரைதேர்‌ அரவமும்‌,

வழுவின்‌ வழாஅ விழுமம்‌, அவர்‌

குழுமலை விடரகம்‌, உடையவால்‌ எனவே”

(குறிஞ்சி.255-261) kurinjip

Xxxx

Mountain goats won’t eat the plants

“வாடல கொல்லோ தாமே –அவன்‌ மலைப்‌

போருடை வருடையும் (mountain goats) ‌ பாயா,

கூருடை அடுக்கத்த கொயற்கு அருந்‌ தழையே?’

(நற்‌.359:7-9) natri

xxxx

They also scare you to such an extent that you would shiver and shake at the sight of them

சூர்ப்பனிப்பு அன்ன தண்வரல்‌.

ஆலியொடு(அ௧.304:3)

Xxx

KARAIKKAL AMMAIYAR

One man compares his lady love to Suurara Makalir (Suur Nymphs) who is not only a rare being but also troublesome

நேர்கொள்‌ நெடுவரைக்‌ கவாஅன்‌

சூரர் மகளிரின்‌ பெறற்கு அரியோளே’ (௮௧.162:: 24-26),

‘சூரர மகளிரின்‌ நின்ற நீ மற்று

யாரையோ? எம்‌ அணங்கியோய்‌! உண்கு. (௮௧.32: 7-8).

xxxx

Tamil men used such divine women to make vows or promises . A man holding his lady love’s hand and says I swear in the name of Suur Nymphs

“எக்கர்‌ நண்ணிய எம்ஊர்‌ வியன்‌ துறை,

நேர்‌இறை முன்கை பற்றி,

சூரர மகளிரோடு உற்ற சூளே (குறுந்‌.53:5-7)

xxx

One may be reminded of the great Saivite Woman Saint Karaikkal Ammaiyar (Madame of Karaikkal- previously French ruled territory in Tamil Nadu). When she got one mango fruit in a miraculous way,  her husband refused to live with her saying she is a divine woman. Then she assumed the form of an ugly woman and called herself Peyaar= Miss Ghost.

Xxxxx

They live in ponds in the mountain creeks

“ஆஅய்‌ நல்நாட்டு அணங்குடைச்‌ சிலம்பில்‌,

கவிரம்‌ பெயரிய உருகெழு கவாஅன்‌

ஏர்மலர்‌ நிறை சுனை உறையும்‌:

குர்மகள்‌ மாதோ என்னும்‌’- என்‌ நெஞ்சே (akamஅக.197:14-17)

xxx

DANCING BEAUTIES

Tamils gave us detailed description of the Suur Ladies’ appearance as well. They wear red colour Kanthal flowers and blue colour Kuvalai flowers on their hair and dance to the tune of thundering waterfalls.

“கடவுட்‌ கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த

பறியாக்‌ குவளை மலரொடு காந்தட்‌

குருதி ஒண்பூ உருகெழக்‌ கட்டி,

பெருவரை அடுக்கம்‌ பொற்பச்‌ சூர்மகள்‌

அருவி இன்‌ இயத்து ஆடும்‌ நாடன்‌’ (நற்‌.34:1-5),

xxxx

Tiru murugatrupadai gives us more details about their dance. They wear red sarees, and body full of jewels from head to foot. The scene is an enthralling one according to poet Nakkirar.

மால்‌ வரை நிவந்த சேண்‌ உயர்‌ வெற்பில்‌

கிண்கிணி கவைஇய ஒண்செஞ்‌ சீறடி,

கணைக்கால்‌, வாங்கிய நுசுப்பின்‌. பணைத்தோள்‌.

கோபத்து அன்ன தோயாப்‌ பூந்துகில்‌:

பல்‌ காசு நிரைத்த சில்காழ்‌ அல்குல்‌.

கைபுனைந்து இயற்றாக்‌ கவின்பெறு வனப்பின்‌,

நாவலோடு பெயரிய பொலம்புனை  அவிர்  இழை.

சேண்‌ இகழந்து விளங்கும்‌ செயிார் தீர்‌ மேனி

குரர மகளிர்‌ ஆடும் சோலை   — (முருகு Murugu. 12-41)

To be continued…………………………………………………………

Tags-  Attacking, troublesome, Nymphs, Sur Women, attacking women, வருத்தும் தெய்வம், தாக்கு அணங்கு, சூரர மகளிர்

ஞானிக்கும் அஞ்ஞானிக்கும் என்ன வேறுபாடு? – ரமணர் யார்? – Post.11,637

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,637

Date uploaded in London –  6 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

ஜனவரி 6, 2023 – ஆருத்ரா தரிசன நன்னாள்.

1879ஆம் ஆண்டு ஆருத்ரா தரிசன நன்னாளன்று (புனர்வசு நக்ஷத்திரத்தில்) அவதரித்த  மஹரிஷி ரமணர். அவரை வணங்கிப் போற்றுவோம்.

ஞானிக்கும் அஞ்ஞானிக்கும் என்ன வேறுபாடு? – ரமணர் யார்? – மஹரிஷியின் விளக்கம்!

ச.நாகராஜன்

பகவான் ரமண மஹரிஷி படைத்த அற்புதமான ஒரு நூல் உள்ளது நாற்பது.

இதில் நாம் அறிய வேண்டிய ரகசியங்கள் அனைத்தும் இருப்பதால் இதை ஓர்ந்து படித்து உணரல் வேண்டும்.

இதில் ரமண மஹரிஷி ஞானிக்கும் அஞ்ஞானிக்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவு பட விளக்குகிறார் – 17ஆம் பாடலில்

பாடல் இதோ:

உடனானே தன்னை யுணரார்க் குணர்ந்தார்க்

குடலளவே நான்ற னுணரார்க் – குடலுள்ளே

தன்னுணர்ந்தார்க் கெல்லையறத் தானொளிரு நானிதுவே

யின்னவர்தம் பேதமென வெண்

பாடலின் பொருள்;

தன்னை உணரார்க்கு – தன்னை உணராத அஞ்ஞானிக்கும்

உணர்ந்தார்க்கு – தன்னை உணர்ந்த ஞானிக்கும்

உடல் நானே – இந்த தேகமானது நானேயாகும்.

     அதாவது தேகமே ஆத்மா ஆகும்.

தன் உணரார்க்கு – தன்னை அறியாத அஞ்ஞானிக்கு

நான் உடலளவே – நான் என்னும் ஆத்ம உணரு உடலின் அளவேயாகும்.

உடல் உள்ளே தன் உணர்ந்தார்க்கு – உடலின் உள்ளே தன்னை அறிந்து உணர்ந்த ஞானிக்கு ( ஜீவன் முக்தனுக்கு)

நான் தான் எல்லை அற ஒளிரும் – நான் என்னும் ஆன்மா எல்லையற்றுத் தன்மயமாய்ப் பிரகாசிக்கும்

இதுவே இன்னவர் தம் பேதம் என எண் – இந்த இருவருக்கும் இடையே உள்ள வேறுபாடு இது தான் என்று அறிவாயாக.

ஞானிக்கும் அஞ்ஞானிக்கும் பொதுவாக உள்ளது தேஹமே.

இந்த தேகமே நானே ஆகும்.

தேகமே ஆன்மா ஆகும்.

ஆனால் தன்னை அறியாத அஞ்ஞானிக்குஅதாவது சாமானியனுக்குநான் என்ற சொல்லின் உணர்வு தனது உடல் அளவுடன் நின்று விடுகிறது.

ஆனால் தன்னை அறிந்து உணர்ந்த ஞானிக்கோ நான் என்பது எல்லையற்று எங்கு தன்மயமாய் ப்ரகாசிக்கும் ஆன்மா ஆகும்.

இருவருக்கும் உள்ள வேறுபாடு இது தான்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் அஞ்ஞானிக்கு உடலே நான்.

ஆனால் ஒரு ஞானிக்கோ உடலும் நானே!

ஒருமுறைபகவான் ரமணரிடம் அமிர்த நாத யதீந்திரர் என்னும் பெரியவர் ஒருவர் வந்தார்.

ரமணன் யார்?’ என்று கேட்டு ஒரு பாட்டை எழுதிக் கொடுத்தார்.

அதற்கு ரமணர் உடனடியாக அருளித் தந்த பதில் இது:

அரியாதியி தரசீவர தகவாரிச குகையில்

வறிவாய்ரமி பரமாத்தும னருணாசல ரமணன்

இப்படி எங்கும் ஒளிரும் பரமாத்மனே தானாய் ஒளிர்வதை அவரே இந்தப் பாடல் மூலம் விளக்கி அருளி விட்டார்.

ஆனால் அன்றாடம் அன்பர்கள் வந்து பேசும் போது அவர், ‘நான் இதைக் கேட்டேனேநான் அதை எழுதினேனே’ என்பார்.

இங்கு அவர் குறிப்பிடும் நான் என்ற சொல் அன்றாட வாழ்க்கைக்கு உரியதான நடைமுறை வழக்கில் இருக்கும் விவகாரச் சொல்.

ஆனால் உண்மையில் அவர் நான் என்று எப்போதும் தன்மயமாய் பிரகாசிக்கும் ஆன்மாவிலேயே உறைந்திருந்தார் என்பதுவே உண்மை.

பிரம்மத்தை அறிந்த ஞானி அதற்குப் பின்னர் நாம் கண்ணால் காணும் உலகைக் காண மாட்டான்.

ஆனால் ஒரு அஞ்ஞானியோ தனது கற்பனா உலகையே உண்மை என்று எண்ணுவதால் ஆதாரமான உலகை அறிய மாட்டான்.

இதுவே ஞானிக்கும் அஞ்ஞானிக்கும் உள்ள வேறுபாடு.

ஒரு அஞ்ஞானி ஞானியாக முடியுமா?

முடியும் என்று அருளினார் மஹரிஷி.

எப்படி என்ற கேள்விக்கும் அவர் விடையைத் தெளிவாகத் தந்துள்ளார்.

நான் யார்’ என்ற விசாரத்தைப் பயிற்சியாக மேற்கொள்.

அப்போது உன்னை நீ யார் என்று உணர்வாய்”

இதுவே அவரது உபதேசம்.

இதில் ஒரு பெரிய அதிசயம் என்னவெனில் இந்தப் பேருண்மையைஅறிதற்கு அரிய ரகசியத்தை அவர் எந்த நூலையும் படித்து அறியவில்லையாரையும் நாடித் தெரிந்து  கொள்ளவில்லை.

அருணாசலனின் கருணையால் தன் அனுபவத்தால் சுயமாக உணர்ந்து கொண்டார்.

அதை கருணை மனத்துடன் உலகினர் அனைவருக்கும் எடுத்துரைத்தார்.

ரமண மஹரிஷி பிறந்த நாள் ; 30-12-1879 – திருவாதிரை நன்னாள்

ரமண மஹரிஷி சமாதி தினம் : 14-4-1950

ரமண மஹரிஷியின் ஜன்ம நக்ஷத்திரம் : புனர்பூசம் 

***

Tags- ரமண மஹரிஷி