அரைக்கினும் தன் மணம் குன்றாது சந்தனம்–அறப்பளீசுர சதகம் (Post.11,548)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,548

Date uploaded in London – 15 December 2022                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 xxx

குறைந்தாலும் பயன்படல்

Arappalisura satakam Verse 23

தறிபட்ட சந்தனக் கட்டைபழு தாயினும்

     சார்மணம் பழுதா குமோ!

  தக்கபால் சுவறிடக் காய்ச்சினும் அதுகொண்டு

     சாரமது ரங்கு றையுமோ?

நிறைபட்ட கதிர்மணி அழுக்கடைந் தாலும் அதின்

     நீள்குணம் மழுங்கி விடுமோ?

  நெருப்பிடை உருக்கினும் அடுக்கினும் தங்கத்தின்

     நிறையுமாற் றுக்கு றையுமோ?

கறைபட்ட பைம்புயல் மறைத்தாலும் அதுகொண்டு

     கதிர்மதி கனம்போ குமோ?

  கற்றபெரி யோர்மகிமை அற்பர் அறிகிலரேனும்

     காசினி தனிற்போ குமோ?

அறிவுற்ற பேரைவிட் டகலாத மூர்த்தியே!

     ஐயனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

அறப்பளீசுர சதகம் by  அம்பலவாணர்

 (இ-ள்.) அறிவுற்ற பேரைவிட்டு அகலாத மூர்த்தியே –

அறிவுடையோரைப் பிரிந்து செல்லாத தலைவனே!, ஐயனே – முதல்வனே!,

அருமை………..தேவனே!, தறிபட்ட சந்தனக்கட்டை பழுதாயினும் சார்

மணம் பழுது ஆகுமோ – வெட்டப்பட்ட சந்தனக்கட்டை குறைபட்டாலும்

அதனிடம் உள்ள நறுமணம் குறையுமோ?, தக்க பால் சுவறிடக்

காய்ச்சினும் அதுகொண்டு சார்மதுரம் குறையுமோ – நல்ல பால் வற்றிடக்

காய்ச்சினாலும் அதனாலேயே அதனிடம் உள்ள சாரமான இனிமை

வற்றுமோ?, நிறைபட்ட கதிர்மணி அழுக்கு அடைந்தாலும் அதின்

நீள்குணம் மழுங்கிவிடுமோ – நிறைந்த பேரொளியை உடைய மணி

அழுக்குப்பட்டாலும் அம் மணியின் உயர்ந்த ஒளிப்பண்பு

குறைந்துவிடுமோ?, நெருப்பிடை உருக்கினும் அடிக்கினும் தங்கத்தின்

நிறையும் மாற்றுக் குறையுமோ – பொன்னை நெருப்பிலே உருக்கினாலும்

(தகடாக) அடித்தாலும் அதனிடம் நிறைந்த மாற்றுக் குறைந்துவிடுமோ?,

கறை பட்ட பைம்புயல் மறைத்தாலும் அதுகொண்டு கதிர்மதி கனம்

போகுமோ – கருமைபொருந்திய கார்முகிலானது ஞாயிற்றையும்

திங்களையும் மறைத்தாலும் அக்காரணத்தால் அவற்றின் பெருமை

கெடுமோ?, கற்ற பெரியோர் மகிமை அற்பர் அறிகிலரேனும் காசினிதனில்

போகுமோ – படித்த பெரியோரின் மேன்மையை அறிவிலார்

அறியாவிட்டாலும் அதனால் உலகிலே அவர் பெருமை நீங்குமோ?

     (வி-ரை.) பசுமை + புயல் – பைம்புயல். பசுமை இங்குக்

கருமையையே உணர்த்தும், பசுமை நிறமுடைய முகிலே இல்லாமையால்.

இறைவன் வடிவம் அறிவே ஆகையால் அவர், ‘அறிவுற்ற பேரைவிட்டு

அகலாத மூர்த்தி’ ஆனார். கதிர் – ஞாயிறு, மதி – திங்கள்.

     (க-து.) சான்றோர் பெருமை அற்பரால் அழிவுறாது.

Xxxx

ஒப்பிடுக:

அடினும் ஆவின்பால் தன் சுவை குன்றாது

சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது

அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது

புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது

கலக்கினும் தன் கடல் சேறு ஆகாது – வெற்றி வேற்கை

அதிவீர ராம பாண்டியனுக்கு முன்னரே இதே கருத்தை அவ்வையாரும்

வாக்குண்டாம் என்னும் பாடலில் கூறுகிறார்:

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவாய்

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் நன்னுதால்

கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்  – வாக்குண்டாம்

Xxx

ஒப்பிடுக:

பர்த்ருஹரி நீதி சதகம்

பாடல் 63

விபதி³ தை⁴ர்யம் அதா²ப்⁴யுத³யே க்ஷமா

ஸத³ஸி வாக்யபடுதா யுதி⁴ விக்ரம: ।

யஶஸி சாபி⁴ருசிர்வ்யஸனம் ஶ்ருதௌ

ப்ரக்ருதிஸித்³த⁴ம் இத³ம் ஹி மஹாத்மனாம் ॥ 1.63 ॥

विपदि धैर्यं अथाभ्युदये क्षमा

सदसि वाक्यपटुता युधि विक्रमः ।

यशसि चाभिरुचिर्व्यसनं श्रुतौ

प्रकृतिसिद्धं इदं हि महात्मनाम् ॥ 1.63 ॥

தாழ்வு வரும்போது திட உறுதி;

வாழ்வு வருகையில் அடக்கம், பணிவு;

அறிஞர் சபையில் வாக்கு வன்மை ;

புகழில் விருப்பம்;போரில் துணிவு;

கற்பதில் பேரார்வம் ; இவையே அறிஞற்கு இலக்கணம்

XXX

பாடல் 66 பர்த்ருஹரி நீதி சதகம்

सम्पत्सु महतां चित्तं

भवत्युत्पलकौमलम् ।आपत्सु च महाशैलशिला

सङ्घातकर्कशम् ॥ 1.66 ॥

ஸம்பத்ஸு மஹதாம் சித்தம்

ப⁴வத்யுத்பலகௌமலம் ।ஆபத்ஸு ச மஹாஶைலஶிலா

ஸங்கா⁴தகர்கஶம் ॥ 1.66 ॥

உயர்வு வருகையில் நல்லோரின் இதயம் தாமரை இதழ் போல  மென்மையாவும்

துன்பம் வருகையில்  மலைப் பாறை போல கடினமான உறுதியுடனு ம் இருக்கும்

XXX

மேலும் சில ஸம்ஸ்க்ருத  பொன்மொழிகள்/ சுபாஷிதங்கள்

சுதப்தமபி பானீயம் புனர்கச்சதி சீததாம் – பஞ்சதந்திரம்

ஒப்பிடுக: சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

நன்றாகச் சூடேற்றினாலும், நீரின் குணம் குளிர்ச்சிஅடைவதுதான்

பெரியோரின் குணமும் அப்படித்தான்.

Xxxx

ஸ்வபாவம் நைவ முஞ்சந்தி சந்த: சம்சர்கதோ அசதாம்

ந த்யஜந்தி ருதம் மஞ்சு காகசம்பர்கத: பிகா: – த்ருஷ்டாந்த சதகம்

தீயோர் சஹவாசம் இருந்தாலும் நல்லோர் கெடுவதில்லை; காகத்துடன் சம்பந்தம் வைத்திருந்தாலும் குயில்கள் அதன் இனிமையான குரலை விடுவதில்லை

ஒப்பிடுக:-புகைக்கினும் நன்மணம் குன்றாது   …. சங்கு சுட்டாலும் வெண்மைதரும்

Xxx

அனுஹூங் குருதே கனத்வனிம் நஹி கோபாயுருதானி கேசரி – சிசுபாலவதம்

இடியோசை கேட்டால் சிங்கம், பதிலுக்குக் கர்ஜிக்கும்; சிறு மிருகங்களின் சப்தத்துக்கு பதில்தராது.

ஒப்பிடுக: யானையைப் பார்த்து குரைத்த நாய் போல

Xxxx

SAIVAITE SAINT MURTHY NAYANAR USED HIS HANDS TO MAKE SANDAL PASTE

.நஹி கஸ்தூரி காமோத: சபதேன விபாவ்யதே – சமயோசித பத்ய மாலிகா

கஸ்தூரியின் மணத்தை ஒருவர் சபதம் செய்து நிரூபிக்க வேண்டியதில்லை. அது சுயமாகவே சுகந்த மணம் வீசும். நல்லோரும் சுயம் பிரகாசிகள்

(ஒப்பிடு: பல்பொடி வியாபாரி கூவி விற்பான்; வைர வியாபாரியை மக்கள் நாடிச் செல்வர்)

——subham——

Tags–அறப்பளீசுர சதகம், அம்பலவாணர், சந்தனம் , அரைத்தாலும், குறைவுபடாதவை, மேன்மக்கள், பர்த்ருஹரி , நீதி சதகம்

காலத்தைவென்றகவிஞன்கண்ணதாசன் – 4 (Post 11,547)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,547

Date uploaded in London – 15 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் – 4

ச.நாகராஜன்

திரைப்படங்களில் ராமர் பாடல்கள் என்ற எனது புத்தகத்தில் கண்ணதாசனின் ராமர் பாடல்களைப் பற்றி விரிவாகச் சொல்லி இருக்கிறேன். சில பாடல்களின் சில வரிகளை  மட்டும் இங்குபார்ப்போம்.

1968ஆம் ஆண்டு மலர்ந்த படம் லட்சுமி கல்யாணம்.

ராம பக்தியில் தோய்ந்த கண்ணதாசன். பாடலின் கடைசி வரிகளில் லட்சோப லட்சம் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வைத்தார். முதல் வரிகளிலோ அற்புத பட்டியல் ஒன்றை சித்தரித்து விட்டார். பாடல் இதோ:

ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி – அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி – தேவன்

கல்யாண கோலம் கொண்ட – கல்யாணராமன்
காதலிக்கு தெய்வம் அந்த – சீதாராமன்
அரசாள வந்த மன்னன் – ராஜாராமன்
அலங்கார ரூபம் அந்த – சுந்தரராமன்

தாயே என் தெய்வம் என்ற – கோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்ட – தசரதராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும் – கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் – ஸ்ரீஜெயராமன்


வம்சத்திற்கொருவன் – ரகுராமன்
மதங்களை இணைப்பவன் – சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் – ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் – அனந்தராமன்

ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!!!


இந்தப் பாட்டில் 18 முறை ராமர் வருகிறார்! வேறு எந்த மொழிக் கவிஞரும் இப்படி ஒரு ராமர் மாலையைப் பாடியதில்லை!

வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ
          தேவி வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ

ராமரைப் பாடலில் கொண்டுள்ள திரைப்படங்களில் மூன்று தெய்வங்களும் ஒன்று.

ராமாயணத்தை கம்பன் அரங்கேற்றும் போது பொறாமை கொண்ட சிலர் அவனிடம். ராமருக்கும் சீதைக்கும் எல்லாமும் இருப்பதாகப் புகழ்கிறீர்களே, அவர்களுக்கு இல்லாதது ஒன்றுமே இல்லையா என்று இடக்காகக் கேட்ட போது, உடனே, பளிச்சென்று இருக்கிறதே, “ஐயனுக்கு வசையில்லை; அன்னைக்கு இடையே இல்லை” என்று அவன் பதில் அளித்தானாம்!

மருங்கு இலா நங்கையும், வசை இல் ஐயனும்,

ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்,

நங்கைக்கு இல்லாதது இடை; நம்பிக்கு இல்லாதது வசை!

கவி சக்கரவர்த்தி கம்பனைத் திட்ட வேண்டும் என்று அவனது காவியத்தில் குதித்து அதிலிருந்தும் அதன் சுவையிலிருந்தும் மீள வழி தெரியாமல் திகைத்து பெரும் ஆத்திகனாக மாறி பல ஆயிரம் பாடல்களைப் பாடினார் கண்ணதாசன் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்!

ஆகவே தான் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் தான் அனுபவித்து மகிழ்ந்த கம்பனைத் தமிழ் மக்களுக்குத் தன் பாடல்கள் மூலம் இனம் காட்டி மகிழ்ந்தார்

அவர்.

மருங்கு இலா நங்கையை அவர் இனம் காட்டுவது கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா பாடலில் இப்படி:

உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா

வண்ண கண்ணல்லவா

இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா?

மின்னல் இடையல்லவா?

1976ஆம் ஆண்டு வெளியான ரோஜாவின் ராஜா படத்தில் இடம் பெற்றது.

ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான் 

ராஜாராமன் நினைத்திருந்தான்

அவள் சுயம்வரம் கொள்ள மன்னவர் சிலரும்

மிதிலைக்கு வந்திருந்தார் –

மிதிலைக்கு வந்திருந்தார் .

மணிமுத்து மாணிக்க மாடத்தில் இருந்து ஜானகி பார்த்திருந்தாள்

இரு மைவிழி சிவக்க மலரடி கொதிக்க ராமனைத் தேடி நின்றாள்

நாணம் ஒருபுறம் ஆசை ஒருபுறம் கவலை மறுபுறம்

அவள் நிலைமை திரிபுறம்

1962ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான சுமைதாங்கி திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் டி.கே.ராமமூர்த்தி இசையில் எஸ்.ஜானகி பாடும் பாடலுக்கான கவிஞர் கண்ணதாசனின் வரிகள் இவை:-

ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ

1962ஆம் ஆண்டு வெளியான அன்னை படத்தில் இடம் பெற்ற பாடல்:

அழகிய மிதிலை நகரினிலே

யாருக்கு ஜானகி காத்திருந்தாள்

பழகிடும் ராமன் வரவை எண்ணி

பாதையை அவள் பார்த்திருந்தாள்    

 “ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்

உள்ளத்தை நன்றாய் புரிந்து கொண்டால்

இருவர் என்பது மாறிவிடும்

இரண்டும் ஒன்றாய் கலந்து விடும்

என்ற வரிகளோ

“ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்’  என்ற கம்பனின் காவிய வரியை சுருக்கமாக நவீன வடிவில் தருவதைச் சுட்டிக் காட்டுகிறதல்லவா?!


படம்:- நெற்றிக் கண். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும், மேனகாவும் நடித்த இந்தப் படம் வெளியான ஆண்டு 1981.

ராமனின் மோகனம்

ராமனின் மோகனம்

ஜானகி மந்திரம்

ராமாயணம் பாராயணம்

https://www.youtube.com/watch?v=1eEeW7pYxjA சொல்வதெல்லாம் கண்ணதாசன் -பதாகை32 –

கமெண்ட் ஸையும் பதிவு செய்யலாம்.

நாகராஜன்

தொடரும்

Learn Tamil Verbs Part 33 பிடிக்கும்,பிடிக்காது, Pidikkum,Pidikkaathu Impersonal Verbs (11,546)

Learn Tamil Verbs Part 33 பிடிக்கும்,பிடிக்காது.

Pidikkum,Pidikkaathu Impersonal Verbs (11,546)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,546

Date uploaded in London – 14 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

I am giving more sentences using Impersonal verbs (This is from my  2011 Lessons)

Impersonal verbs use subject in the dative e.g.

எனக்கு,உனக்கு,

அவனுக்கு,ராமனுக்கு unlike English.

If one masters eight Tamil impersonal verbs it will be very useful during

travel. One can express most of one’s needs,likes,dislikes etc. easily

214 எனக்கு தமிழ் பிடிக்கும்

enakku thamiz pidikkum

to me Tamil like (I like Tamil)

215. உனக்கு என்ன பிடிக்கும்?

unakku enna pidikkum?

 to you  what liked? (What do you like?)

216. அவனுக்கு என்ன பிடிக்கும்?

avanukku enna pidikkum?

to him what liked

What does he like?

217. ராமனுக்கு என்ன பிடிக்கும்?

raanukku enna pidikkum?

to Rama what liked

What does Raman like?

218. உனக்கும் தமிழ் பிடிக்குமா?

unakku thamiz pidikkumaa?

to you Tamil liked

Do you like Tamil?

219. எனக்கு தோசையும் வடையும் பிடிக்கும்.

Enakku dosaiyum vadaiyum pidikkum

To me dosai and vadai liked

I like dosai and vadai

220. யாருக்கு தமிழ் பிடிக்கும்?

yaarukku thamiz pidikkum?

to whom thamiz liked?

Who does like Tamil?

221. எனக்கு இறைச்சி பிடிக்காது.

enakku iRaichi pidikkaathu

to me meat not liked

I dont like meat

222. மீனும் பிடிக்காது.meenum pidikkaathu

dont like fish too

223. ஆனால் பழங்கள் பிடிக்கும்.

aanaal pazangkaL pidikkum

But I like fruits.

224. உனக்கு என்ன பிடிக்காது?

unakku enna pidikkaathu?

what is it you dont like?

225. யாருக்கு இறைச்சி பிடிக்காது?

yaarukku iRaichi pidikkaathu?

Who doen’t like meat?

226. அவனுக்கு தோசை பிடிக்காதா?

avanukku dosai pidikkaathaa?

doen’t he like dosa?

227. உங்களுக்கு தமிழ் பிடிக்குமா? பிடிக்காதா?

ungkaLukku thamiz pidikkumaa? pidikkaathaa?

do you like Tamil or not?

228. ராமனுக்கு முட்டை பிடிக்காது.

ramanukku muttai pidikkaathu

Rama doesn’t like egg.

229. என் அண்ணனுக்கு இனிப்பு அதிகம் பிடிக்கும்

en aNNanukku inippu adhikam pidikkum

my older brother likes sweets a lot

230. ஆனால் உரைப்பு பிடிக்காது.                  

aanaal uraippu pidikkaathu

but (he) doesn’t like spicy (dishes)

231. உங்களுக்கு தமிழ் தெரியுமா?

ungkaLukku thamiz theriyumaa?

Do you know Tamil?

232. ஆமாம் எனக்கு தமிழ் தெரியும்.

aamaam, enakku thamiz theriyum

Yes, I know Tamil.

233. இங்கிலீஷும் தெரியுமா?

engilish theriyumaa?

Do you know English?

234. ஆம், இங்கிலீஷும் தெரியும்

aam, engilish theriyum

Yes, I know English

235. எது அதிகம் தெரியும்?

edhu adhikam theriyum?

Which one you know more?

236. இங்கிலீஷ் அதிகம் தெரியும்,தமிழ் கொஞ்சம் தெரியும்.

engilish adhikam theriyum, thamiz konjam theriyum

I know English well, and Tamil a little

237. அவர்களுக்கு இந்தி தெரியாதா?

avarhaLukku inthi theriyaathaa?

Dont they know Hindi?

238. அவர்களுக்கு இந்தி தெரியாது.

avarhaLukku inthi theriyaathu

they dont know Hindi

239. When you use theriyum தெரியும் with human beings

you must use the accusative ‘ai’ e.g.ஒபாமாவை

240. உனக்கு ஒபாமாவைத் தெரியுமா?

unakku obaamaavaith theriyumaa?

Do you know Obama?

241. எனக்கு ஒபாமாவைத் தெரியும்

enakku obaamaavaith theriyum

I know Obama

242. உனக்கு பாடத் தெரியுமா?

unakku paatath theriyumaa?

do you know how to sing?

243. ஆமாம் எனக்கு பாடத் தெரியும்.

aamaam enakku patath theriyum

yes, i know how to sing

244. ஆடவும் தெரியுமா?

aatavum theriyumaa?

Do you know dance too?

245. enakku aataa theriyaathu

எனக்கு ஆடத் தெரியாது.

I dont know to dance

246. கண்ணனையும் ராமனையும் தெரியுமா?

kaNNanaiyum raamanaiyum  theriyumaa?

Do you know Kannan and Raman?

247. அவர்களை நன்றாகத் தெரியும்.

avarhaLai nanRaakath theriyum

I know them very well

248. யாருக்கு தமிழ் தெரியும்?

yaarukku thamiz  theriyum?

who does know Tamil?

249. நான்கு மாணவர்களுக்கு தமிழ் தெரியும்.

 naangu maaNavarhaLukku thamiz theriyum

four students know Tamil

250. யாருக்கு டென்னிஸ் விளையாடத் தெரியும்?

 yaarukku tennis viLaiyatath theriyum?

who does know to play tennis?

251. எனக்குக் கொஞ்சம் தெரியும்.

enakku konjam theriyum

I know a little

252. பெடரருக்கு டென்னிஸ் விளையாடத் தெரியுமா?

Ferererukku tennis viLaiyaatath theriyumaa?

Does Ferderer know how to play Tennis?

253. அவருக்கு டென்னிஸ் நன்றாகத் தெரியும்.

avarukku tennis nanRaakath theriyum

He does know Tennis very well.

254. உன் அக்காவுக்கு சமைக்கத் தெரியுமா?

un akkaavukku samaikkath theriyumaa?

Does your older sister know how to cook?

255. ஆம், அவளுக்கு சமைக்கத் தெரியும்.

aam, avaLukku  samaikkath theriyum

yes, she knows to cook

256. உன் அண்ணனுக்கு சமைக்கத் தெரியுமா?

 un aNNanukku samaikkath theriyumaa?

Does your older brother how to cook?

257. என் அண்ணனுக்கு சமைக்கத் தெரியாது.

en aNNanukku samaikkath theriaathu.

 My older brother doesn’t to cook.

258. Mudiyum முடியும் is an impersonal verb

which takes subject in the instrumental e.g.உங்களால்,

என்னால், ராமனால் . But it can take dative,

nominative and instrumental.

259. உங்களால் தமிழ் பேச முடியுமா?

ungaLaal thamiz peesa midiyumaa?

can you speak Tamil?

260. என்னால் கொஞ்சம் தமிழ் பேச முடியும்.

ennaal konjam thamiz peesa mudiyum

I can speak Tamil a little.

261. நன்றாகப் பேச முடியாதா?

nanRaakap peesa mudiyaathaa?

cant you speak Tamil vey well?

262. கொஞ்சம்தான் தமிழ் பேச முடியும்.

konjamthaan  thamiz peesa mudiyum

I can speak only a little.

263. என்னால் 10 கிலோமீட்டர் ஓட முடியுமா?

ennaal pathu kilometre ooda mudiyaathu.

Can I run 10 kilometres?

264. ராமனால் பத்து கிலோமீட்டர் ஓட முடியாது.

raamanaal pathu kilometre ooda mudiyaathu.

raman cant run ten kilometres.

265. கண்ணனாலும் பத்து கிலோமீட்டர் ஓட முடியாதா?

kaNNanaalum 10 kilometre ooda mudiyaathaa?

cant even Kannan run 10 km?

266. ஆம், கட்டாயம் ஒட முடியாது.

aam, kattaayam ooda mudiyaathu.

Yes, definitely cant run.

267. யாருக்குத் தமிழ் எழுத முடியும்?

yaarukku thamiz ezutha mudiyum?

who can write Tamil?

268. என் ஆசிரியரால் தமிழ் எழுத முடியும்.            

en aasiriyaraal thamiz ezutha mudiyum

My teacher can write Tamil.

269. உங்களுக்கு தமிழ் புரியுமா (விளங்குமா)?

ungaLukku thamiz puriyumaa?

Do you understand Tamil?

270. மெதுவாகப் பேசுங்கள். எனக்குப் புரியும்

methuvaakap peesungaL .enakkup puriyum.

Speak slowly, I (will) understand

271. ஹிந்தி புரியுமா?

indhi puriyumaa?

( Do you ) understand Hindi?

272. எனக்கு ஹிந்தி புரியாது.

enakku inthi puriyaathu

I dont understand Hindi

273. இந்தக் கடையில் தமிழ் புத்தகம் கிடைக்குமா?

inthak kadaiyil thamiz puththakam kidaikkumaa?

Can I get a Tamil book in this shop?

274. ஆம், கிடைக்கும். என்ன புத்தகம் வேண்டும்?

aam, kidaikkum. enna puththakam veNdum?

Yes, it is available. What book do you want?

275. இங்கே சிகரெட் கிடைக்குமா?

ingee cigarete Available?

Can I get cigarettes here ?

276. இந்தக் கடையில் சிகரெட் கிடைக்காது.

inthak kadaiyil sigaret kidaikkaathu.

in this shop cigarets not available

cigaretts are not available in this shop

277. கடைசி கடையில் கிடைக்கும்.

kadaisi kadaiyil kidaikkum

last in the shop available

it is available in the last shop

278. உங்களுக்கு ஒரு தோசை போதுமா?

ungaLukku oru dosai poothumaa?

to you one dosai enoug?

is one dosai enough for you

279. இல்லை, எனக்கு ஒரு தோசை போதாது

illai, enakku oru dosai poothaathu

no to me one dosai not enough

one dosai is not enough for me

280 ராமனுக்கு கொஞ்சம் காப்பி போதுமா?

raamanukku konjam kappi poothumaa?

to raman little coffee enough?

is little coffee enough for Rama?

281. ராமனுக்கு கொஞ்சம் காப்பி போதாது.

raamanukku konjam kappi poothaathu

to raman little coffee not enough

little coffee is not enough for raman

282. எனக்கு இந்த வீடு போதும்.

enakku intha oru viidu Pothum

to me this one house enough

this house is enough for me.

To be continued…………………..

Tamil Hindu Encyclopaedia -37; Durga/ கொற்றவை, துர்கா in Sangam Tamil Corpus (Post No. 11,545)

DURGA FROM INDONESIA, NOW IN MUSEUM

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,545

Date uploaded in London – 14 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Durga is called Kotravai /கொற்றவை in Sangam Tami Literature. She was the goddess of dry and bushy area called.பாலை Paalai. The people who lived were called Maravar and they worshipped Godeess Durga alias Kotravai.

Her features are exactly similar to Durga in Sanskrit. Let us look at her in detail.

Nakkirar, famous poet of Sangam Age called Murugan/Skanda as son of Kotravai. So we can conclude one of Devi Uma’s forms is Kotravai/Durga

வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ

இழை அணி சிறப்பின் பழையோள் குழவி

திருமுருகாற்றுப்படை 258/259

See lines Murugu 258/259. Poet also gave her another name as an ancient lady /Pazaiyol பழையோள்

Xxxx

Forest Dweller

She is also portrayed as the dweller of forest by many poets.

ஓங்கு புகழ் கான் அமர் செல்வி –  அகம்.345 Akam 345

பெருங்காட்டுக் கொற்றி – கலி .89-6 Kali 89-6

விடர்முகை அடுக்கத்து விறல்கெழு சூலி – குறுந்.218-1Kurun 218

Her other names are காடுகிழாள் = காடுகாள்/ Forest Goddess

Xxx

Tri suli

Her image also includes her weapon Soolam. Commentator Nachinarkiniar commented it as Tri Soolam (trident)

The trident in her hand was referred to by more than one poet.

Kurun.218 விறல் கெழு சூலி

The reason given is that she killed Mahisa Asuran with this.

Durga was called Vitorious war woman வெல் போர்க் கொற்றவை. This also confirms that Kotravai was Mahishaasuramardhani

Some interesting scenes are also in Sangam books

Third Eye

DURGA IN AJANTA CAVE

Girls were bathing in the river. One of the girls put one red Tilak on another girls forehead and said this girl has Flame like eye of Kotravai

–Pari.11-99/100

This shows that Durga also got Third Eye like her husband Siva.

Xxx

Strange information about Ghost Riddles

Durga’s Temples were inside forest. Her friends were Ghosts. She spent her time solving the riddles of the ghosts.See Kali89-8

பெருங்காட்டுக் கொற்றிக்கு பேய் நொடித்தாங்கு – கலி 89-8

Xxx

Purananuru verse 247 gives a beautiful scene in front of Durga temple inside the forest

Hunters make bonfire with the wood sticks they gathered through elephants from the forest. Deer herds come and sleep there, but monkeys chase them and clear that area. புறம் 247-  1 / 4

Ghosts are guarding the temple; Wild pigeons are also living there- Pattinappalai Lines 57-59

Xxxx

Chera’s Deity

Chera Kings worshipped Goddess in Ayirai malai. This is similar to Vindhyavaasini- Goddess of Vindhya Mountains. Like Greek heroes wore Olive leaves, Tamil Heroes wore Vaakai flowers when they became victorious. Old commentators associate this with Durga. So she was the Deity of War Heroes

Xxx

Blood and Meat

Raksha bandhan was also mentioned in Kurun.218

After worshipping goddess Durga they wore a Raksha thread in their hands. Even today Hindus wear this Yellow Thread called Kaappu (meaning Protection/ Guard) during religious rituals.

For Durga worship, the hunters offered blood and meat to her. Pathitruppathu, the collection of poems giving the history of Chera kings, described such ceremonies

Pathitrupathu 9-14/18

88-11/12

80-19/21

88-1/5 old commentators say tha this reference is about Vindhyavasini in the Vindhya Hills.

xxxx

Tamil references

Third eye in the form f Red Tilak on the forehead of a girls while bathing in the river- Paripatal 11

பரிபாடல் 11

நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே,

கொற்றவை கோலம் கொண்டு, ஓர் பெண்.  100

xxx

218.பாலை Kurunthokai 218

Worshipping Goddess with Soola/Trident in her hand and then ties Raksha in hand (Raksha bandhan)

விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்குக் 

கடனும் பூணாம்கைந் நூல் யாவாம்;

புள்ளும் ஓராம்விரிச்சியும் நில்லாம்;

உள்ளலும் உள்ளாம் அன்றே தோழி!

உயிர்க்கு உயிர் அன்னர் ஆகலின், தம் இன்று

இமைப்பு வரை அமையா நம் வயின்

மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே.

Xxxxx

Purananuru 247

Pandya’s wife Bhutapandyan Devi entered fire after her husbands death/ she did the Sati ceremony infront of Durga temples. Hunters made the fire with the fuel wood gathered by elepants.

பாடியவர்: மதுரைப் பேராலவாயர்
திணை: பொதுவியல் துறை: ஆனந்தப் பையுள்

யானை தந்த முளிமர விறகின்
கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து;
மடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பி,
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்,
நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப்,
பேரஞர்க் கண்ணள், பெருங்காடு நோக்கித்,
தெருமரும் அம்ம தானே- தன் கொழுநன்
முழுவுகண் துயிலாக் கடியுடை வியனகர்ச்
சிறுநனி தமியள் ஆயினும்,
இன்னுயிர் நடுங்குந்தன் இளமைபுறங் கொடுத்தே!

Xxxx

Chera king worshipped Ayirai  Hill Goddess with rice balls smeared with blood

குருதி விதிர்த்த குவவுச்சோற்றுக் குன்றோ(டு)

உருகெழு மரபின் அயிரை பரவி

பதிற்றுப்பத்து 88-11/12

Xxxx

These lines are interpreted as Goddess of Vindhya Hill Goddess

வையகம் மலர்ந்த தொழில்முறை ஒழியாது

கடவுள் பெயரிய கானமொடு கல்உயர்ந்து

தெண்கடல் வளைஇய மலர்தலை உலகத்துத்

தம்பெயர் போகிய ஒன்னார் தேயத்

துளங்(கு)இரும் குட்டம் தொலைய வேல்இட்(டு) 5

—–பதிற்றுப்பத்து 88-1/5

Xxxx

அணங்குடை மரபின்  கட்டில்மேல் இருந்து

தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து

நிற ம்படு குருதி புறம்படின் அல்லது

மட்டை எதிர்கொள்ளா அஞ்சு வருமரபின்

கடவுள் அயிரை ——பதிற்றுப்பத்து 9-14/18

Pattinappalai 57-59

Temple guarded by the Ghosts

 பூதம் காக்கும் புகல் அரு கடி நகர்

தூது உணம் புறவொடு துச்சில் சேக்கும்

முது மரத்த முரண் களரி

Xxxxx

Old article

தொல்காப்பியத்தில் துர்க்கை Durga in Tolkappiam

தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி! – Tamil and Vedas

https://tamilandvedas.com › தொ…

 31 Mar 2014 — முந்தைய கட்டுரைகளில் தொல்காப்பியதில் இந்திரன், வருணன் குறித்தும் …

 Tags- கொற்றவை, துர்கா, விந்தியமலை, அயிரைமலை, சங்கா இலக்கியம், பதிற்றுப்பத்து, Durga, Kotravai, Sangam books

நாய்ப் பாலும், பேய்ச் சுரைக்காயும்  யாருக்கும் பயனில்லை ! (Post.11,544)

 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,544

Date uploaded in London – 14 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

பயனற்றவை யாவை ?அறப்பளிசுர சதகம் தரும் பட்டியல்

22. இருநிலையினும் பயனற்றவை

குணம்அற்ற பேய்முருங் கைத்தழை தழைத்தென்ன?

     குட்டநோய் கொண்டு மென்ன?

  குரைக்கின்ற நாய்மடி சுரந்தென்ன சுரவாது

     கொஞ்சமாய்ப் போகில் என்ன?

மணம்அற்ற செம்முருக் கதுபூத் தலர்ந்தென்ன?

     மலராது போகில் என்ன?

  மதுரம்இல் லாஉவர்க் கடல்நீர் கறுத்தென்ன?

     மாவெண்மை யாகில் என்ன?

உணவற்ற பேய்ச்சுரை படர்ந்தென்னபடரா

     துலர்ந்துதான் போகி லென்ன?

  உதவாத பேர்க்குவெகு வாழ்வுவந் தாலென்ன?

     ஓங்கும்மிடி வரில்என் னகாண்?

அணியுற்ற பைங்கொன்றை மாலிகா பரணனே!

     ஆதியே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!
     (
இ-ள்.) அணியுற்ற பைங்கொன்றை மாலிகா ஆபரணனே –

அழகான புதிய கொன்றைமாலையை அணிகலனாகக் கொண்டவனே!,

ஆதியே – முதல்வனே!அருமை……..தேவனே!,

குணம் அற்ற பேய்

முருங்கைத் தழை தழைத்து என்ன – நல்ல குணம் இல்லாத பேய்

முருங்கை தழைத்தால் என்ன பயன்?, குட்டநோய் கொண்டும் என்ன –

குட்டநோய் அடைந்தாலும் என்ன பயன்?, குரைக்கின்ற நாய் மடி

சுரந்து என்ன – குரைக்கும் நாயின் மடியிற் (பால்) சுரந்தால் என்ன

பயன்?, சுரவாது கொஞ்சமாய்ப் போகில் என்ன – பெருகாமற் கொஞ்சமாக

இருந்தால்தான் என்ன பயன்?, மணம் அற்ற செம் முருக்கது பூத்து

அலர்ந்து என்ன – மணமில்லாத செம்முருக்கின் மலர் நன்கு மலர்ந்து

என்ன பயன்?மலராது போகில்

என்ன – மலராமற் குவிந்திருந்தால்தான் என்ன பயன்?, மதுரம் இல்லா

உவர்க்கடல் நீர் கறுத்து என்ன – சுவையில்லா உப்புக்கடலின் நீர்

கருநிறமாக இருந்தால் என்ன பயன்?, மாவெண்மை ஆகில் என்ன – தூய

வெண்மையாக ஆனால்தான் என்னபயன்?உணவு அற்ற பேய்ச்சுரை

வெண்மையாக ஆனால்தான் என்னபயன்?, உணவு அற்ற பேய்ச்சுரை

படர்ந்து என்ன – உண்ணத்தகாத பேய்ச்சுரைக்கொடி படர்ந்து என்ன

பயன்?, டராது உலர்ந்துதான் போகில் என்ன – படராமல்

காய்ந்துபோனால்தான் என்ன பயன்?, உதவாத பேர்க்கு வெகு வாழ்வு

வந்தால் என்ன – (பிறர்க்குப்) பயன்படாதவர்கட்குச் சிறந்த வாழ்வு வந்தால்

என்ன பயன்?, ஓங்கும் மிடி வரில் என்னகாண் – பெரிய வறுமை

வந்தால்தான் என்ன பயன்?

Xxxx

நாய்ப் பாலும் பேய்ச் சுரைக்காயும் யாருக்குப் பயன் தரும் என்று வினவுகிறார் அம்பல வாண கவிராயர்.

இதை விவேக சிந்தாமணி பாடல்களுடன் ஒப்பிடலாம்

02: பயன்படாதவை

ஆபத்துக் குதவாப்பிள்ளை அரும்பசிக் குதவா அன்னம்;

தாபத்தைத் தீராத் தண்ணீர்; தரித் திரமறியாப் பெண்டிர்;

கோபத்தையடக்கா வேந்தன்; குருமொழி கொள்ளாச்சீடன்;

பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை யேழுந் தானே.

இவை ஏழும் இருந்தும் பயனற்றவை:

அருகில் இல்லாத பிள்ளை, பசியை தீர்க்காத உணவு, தாகத்தை தீர்க்காத தண்ணீர், கணவனின் வருமானத்தை அறிந்து செலவு செய்யத் தெரியாத மனைவி, கோபத்தை அடக்கி சிந்தித்து செயல்பட இயலாத அரசன்,

குருவின் உபதேசத்தைக் கேளாத சீடன், புனிதம் (தூய்மை) இல்லாத நீர்நிலை.

xxxx

69. பயனில்லாதன

திருப்பதி மிதியாப் பாதம் சிவனடி வணங்காச் சென்னி,

இரப்பர்க்கு ஈயாக்கைகள் இனிய சொல் கேளாக்காது,

புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாத்தேகம்,

இருப்பினும் பயனென் காட்டில் எரிப்பினும் பயனில்தானே.

இறைவன் வாழும் திருத்தலங்களை – திருக்கோயில்களை – மிதிக்காத கால்கள், சிவனின் திருவடிவணங்காத தலை, இல்லையென்று கேட்பவர்க்குக் கொடாத கைகள், பெரியோர்களின் அன்பான இனிய சொற்களைக் கேளாத காதுகள், தன்னைக் காப்பவர்களுக்கு ஓர் ஆபத்து வந்து கண் கலங்கும் போது உயிரைக் கொடுத்தாவது காக்காத உடல், இருந்தாலும் சுடுகாட்டில் எரித்தாலும் பயனொன்றுமில்லை.

Xxxx

வீண்போகும் 4 விஷயங்கள்:—

சமுத்ரேஷு வ்ருஷ்டி: – கடலில் பெய்யும் மழை

த்ருப்தஸ்ய போஜனம்- சாப்பிட்டவனுக்குப் போடும் சாப்பாடு

சமர்தஸ்ய தானம் – திறமையுள்ளவனுக்கு கொடுக்கப்படும் தானம்

திவா தீபா – பகலில் ஏற்றப்படும் விளக்கு

வ்ருதா வுருஷ்டி: சமுத்ரேஷு வ்ருதா த்ருப்தஸ்ய போஜனம்

வ்ருதா தானம் சமர்தஸ்ய வ்ருதா தீபோ திவாபி ச

-சுபாஷித ரத்ன பாண்டாகரம் 153-26

Xxx

கெட்டதைத் தட்டிக் கேட்காத முதியோர்

வ்ருத்தரஹித சபா- முதியோரில்லா சபை

தர்மாப்ரதிபாதகா வ்ருத்தா – நல்ல குணங்களை எடுத்துரைக்கா முதியோர்

சத்யரஹித தர்ம- உண்மையில்லாத வழிமுறைகள்

சலாப்யுபேதம் சத்யம் – உண்மையை தவறான விஷயங்களுக்குப் பயன்படுத்துவோர்

ந சா சபா யத்ர ந சந்தி வ்ருத்தா ந தே வ்ருத்தா யே ந வதந்தி தர்மம்

நாசௌ தர்மோ யத்ர ந சத்யமஸ்தி ந தத்சத்யம் யச்சலேனாப்யுபேதம்

–விதுரநீதி 3-58

Xxx

பயனற்ற நான்கு விஷயங்கள்:–

பராதீன ஜன்ம – மற்றவர்களை அண்டி வாழும் வாழ்க்கை

ப்ரஸ்த்ரீ சுக- மற்ற பெண்களிடத்தில் துய்க்கும் இன்பம்

பரகேஹே லக்ஷ்மீ –பிறர் வீட்டிலுள்ள செல்வம்

புஸ்தக வித்யா – நூல்களிலுள்ள அறிவு: ஏட்டுச் சுரைக்காய்

பராதீனாம் வ்ருதா ஜன்ம பரஸ்தீஷு வ்ருதா சுகம்

பரகேஹே வ்ருதா லக்ஷ்மீ: வித்யா யா புஸ்தகே வ்ருதா

Xxx

அஜயுத்தம்ருஷிராத்தம் ப்ரபாதே மேகடம்பரம்

தம்பத்யோ கலஹஸ்சைவ பரிணாமே ந கிஞ்சன

அஜயுத்தம் –ஆட்டுச் சண்டை

ரிஷி ஸ்ராத்தம் – ரிஷி முனிவர்களுக்குச் செய்யப்படும் ஸ்ராத்தம்

ப்ரபாதே மேகடம்பரம் – காலையில் இடியுடன் கூடிய மேகம்

தம்பதி கலஹம் – கணவன் –மனைவி சண்டை

 xxxx

நாலு விஷங்கள்:–

அனப்யாச வித்யா- பயன்படுத்தப்பாடாத படிப்பு

அஜீர்ண போஜனம் – செமிக்காத உணவு

தரித்ர சபா- ஏழைகள் சபை

விருத்த தருணீ – வயதான மாப்பிள்ளைக்கு இளம் மணமகள்

அனப்யாஸோ விஷம் வித்யா அஜீர்ணே போஜனம் விஷம்

விஷம் சபா த்ரித்ரஸ்ய வ்ருத்தஸ்ய தருணீ விஷம்

–ஹிதோபதேசம் ALL WASTE

Xxx

TAGS-  பயனற்றவை, யாவை அறப்பளிசுர சதகம் பட்டியல்சம்ஸ்க்ருத சுபாஷிதங்கள்

லண்டன் டாக்டர் அ .நாராயணனின் மார்கழிக் கவிதைகள்(Post.11,543)

WRITTEN BY Dr A. Narayanan, London

Post No. 11,543

Date uploaded in London – 14 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

M argazhiththingal 1-4    

 மார்கழித்திங்கள்  1 to 4

திங்களைப்போற்றுவோம் மார்கழித் திங்களைப் போற்றுவோம்

திங்களில் மார்கழியாய்த் திகழும் திருமாலைப் போற்றுவோம்

திருமாலைப்போற்றுவோம் திருமாலைப் போற்றுவோம்

திருமாலைப் பற்றிய மங்கைக்  கோதையைப்  போற்றுவோம்

கோதையைப் போற்றுவோம் கோதையைப் போற்றுவோம்

கோதை செப்பியத் திருப்பாவையைப் போற்றுவோம்                      1

புன்னகைத் தவழும் பூவிழிக்  கண்ணன்

பொன் நிறக் கோதையின் திருப்பாவையில் சங்கமம்

புவியோர்க் கெல்லாம் இப்பூமகளின் கீதையே                                 2

புன்னெறித் தவிர்க்கும் பக்தி யோகப் பாதையே

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன்

குமரனும் யசோதை இளஞ்சிங்கமும் கார்

முகில் வண்ணணனும் கதிர்மதியம் செங்கண்

முகத்தானுமே பாரோர் போற்றிப் பறைதரும்

நாராயணனே வென முகுந்தனுக்கு

முகவுரை   முதற்பாவில் வரைந்து மார்கழி

முதல் நாளே மதி நிறைந்த நன்னாளாகப்

பாசுரம் துவக்கிய பாவை கோதை வாழியே                                             3

சீரார் செழு நிலம்  சுகந்தம்  கமழும் சோலையிலே

ஊரார் போற்றிய பெரியாழ்வார் கை தவழ்ந்த நாளே  

நாராயணனே வேத பாராயணமாய் தன் நாவினிலே

மாறா மறவா வென்றுமுறவாய்  கொண்ட கோதையே

போறாதொரு  சன்மம் புதிரான இவன் பேர் பாடவென                           

பேராயிரமுடையோனின் பிரிய நாயகியானவளே                                4                  

By

நாராயணன்

DR A NARAYANAN, Ph.D

London , December 2022

XXXX

ON MEENAKSHI AND SIVA

விடி காலை வருமுன்னெழுந்துன் கோயில்

படி வாசல் நின்றுக்  கருவறையிலுள்ளோனை

அடி பணிந்து வேணுவதோ கருப்பையில் மறு 

படியும் தள்ளாது நும் வீடுமெமை கொள்வீரோ                     1

கண்களிரண்டும் கயல் மீனெழிலாய்

கண்டு மையல் கொண்ட கங்காதரனை

துண்டு வலை விழி விசி சிக்கிய சொக்கியே!

கருவறையில் நினது திருவடி கிடந்தோரை

கருப்பையில் தள்ளி பிறவியெனும் பெரும்

கருங்கடலில் ஆசையெனும் அலை ஓசை

ஒழியா வாழ்க்கையில் பழியாயுழல 

திக்கறியா கரை தெரியா நின் நடைவாய்   

தஞ்சமடைவோர் கெஞ்ச அஞ்சுகம் தோள்

கொஞ்சும் வஞ்சிக்கொடி வஞ்சிப்பதேன்                       2

By

நாராயணன்

DR A NARAYANAN, Ph.D

London , December 2022

—subham—tags–லண்டன் டாக்டர் அ .நாராயணன்,  மார்கழிக் கவிதைகள்

காலத்தைவென்றகவிஞன்கண்ணதாசன் – 3 (Post 11,542)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,542

Date uploaded in London – 14 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.youtube.com/watch?v=1eEeW7pYxjA சொல்வதெல்லாம் கண்ணதாசன் -பதாகை32 –

கமெண்ட் ஸையும் பதிவு செய்யலாம்.

நாகராஜன் 

காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் –

ச.நாகராஜன் 

கங்கைக்கரைத் தோட்டம்                                                  

கன்னிப் பெண்கள் கூட்டம் –ஓ                                                   

 கண்ணன் நடுவினிலே                                                        

காலை இளங்காற்று                                                             

பாடிவரும் பாட்டு                                                        

 எதிலும் அவன் குரலே   – படம் : வானம்பாடி

அழகு ரசிப்பதற்கே                                                             

அறிவு கொடுப்பதற்கே                                                        

மனது நினைப்பதற்கே – ஆஹா!                                               

வாழ்க்கை வாழ்வதற்கே   – படம்  வாழ்க்கை வாழ்வதற்கே

வரவு எட்டணா                                                                  

செலவு பத்தணா                                                                        

அதிகம் இரண்டனா –                                                              

கடைசியில் துனா     படம் பாமா விஜயம்

பாட்டுப் பாடவா                                                                           

பார்த்துப் பேசவா                                                                       

பாடம் சொல்லவா                                                           

பறந்து செல்லவா       படம்  தேன்நிலவு

கண்ணெதிரே தோன்றினாள்                                                       /

கனிமுகத்தைக் காட்டினாள்                                                            

நேர்வழியில் மாற்றினாள்                                                    

நேற்றுவரை ஏமாற்றினாள்           படம்  இருவர் உள்ளம்

நீ என்பதென்ன                                                              

நான் என்பதென்ன                 படம் வெண்ணிற ஆடை 

களங்கமில்லா காதலிலே                                                    

காண்போம் இயற்கையெலாம்          படம்   இல்லறஜோதி

நூற்றுக்கணக்காக உள்ள இரு சொற்பாடல்களில் சிலவற்றைப் பார்த்தோம்.

இவற்றில் நவரஸங்களும் ததும்பும்; உணர்ச்சிகள் பொங்கும்; தமிழ் சுருக்கமாக விளையாடும்; விரிவாக அர்த்தத்தைத் தரும்.

இவற்றைத் தொகுத்துப் பாடினாலே

வரும் சுகம்

இது நிஜம்!

தமிழ் நூல்களில் மூன்று சொற்களில் அமைந்துள்ள சொல்லோவியங்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன. ஒவ்வொரு சொற்றொடரும் ஆழ்ந்த கருத்து, இலக்கிய அழகு, இன்சுவை, உணர்ச்சி வெளிப்பாடு போன்ற பல அம்சங்களை இனிதே தரும்.

கண்ணதாசனின் பாடல்களில் மூன்று சொல் முத்துக்களை எடுங்கள் என்றால் சுலபமாக அப்பாடல்களில் உளத்தைக் கொடுத்தோர் முன்னூறு நானூறு பாடல்களை மூச்சு விடாமல் உடனே சொல்லி விடுவர்.

அப்படி ஒரு பரந்த களத்தின் அடிப்படையில் அவரது பாடல்கள் எழுந்துள்ளன.

முதலில் குறளில் மூன்று சொல் முத்துக்கள் சிலவற்றைப் பார்ப்போம்!

செயற்கரிய செய்வார் பெரியர்     குறள்  26

அறத்தான் வருவதே இன்பம்       குறள்  39

பெண்ணிற் பெருந்தக்க யாவுள?      குறள்  54

அன்பின் வழியது உயிர்நிலை    குறள்  80

நன்றி மறப்பது நன்றன்று     குறள்  108

அடக்கம் அமரருள் உய்க்கும்   குறள்  121

யாகாவார் ஆயினும் நாகாக்க   குறள்  127

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை   குறள்  439

அப்பப்பா, ஆழ்ந்த கருத்து மூன்றே சொற்களில்!

அடுத்து மகாகவி பாரதியாரின் கவிதைகளில் மிகச் சில எடுத்துக்காட்டுக்களைப் பார்ப்போம்.

அன்பென்று கொட்டு முரசே!

பெரிதினும் பெரிது கேள்

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே

வீணையடி நீ எனக்கு!

ஆசை முகம் மறந்துபோச்சே!

இப்படி ஏராளமான எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த வகையில் கவியரசரின் கவிதைப் பூங்காவில் நுழைவோம்; கண்ணுக்கினிய சில நல்ல மலர்களைப் பார்ப்போம்.

செந்தமிழா எழுந்து வாராயோ – உன்                                       

சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ                                          

அன்பு நெறியிலே அரசாள – இந்த                                              

அகிலமெல்லாம் தமிழர் உறவாட                                                       

துன்பங்கள் யாவும் பறந்தோட                                                                     

 தூய மனங்கொண்டு கவிபாட                 படம்: மதுரை வீரன்

தமிழனின் தாய்மொழியைப் பாராட்டி, அகில உலக தமிழரை ஒன்று கூட்டி, தூய மனம் கொண்டு, கவி பாடி, துன்பங்கள் யாவும் பறந்தோடச் செய்வோம் என்ற கற்பனையில் உயர்ந்த சிந்தனையைப் பார்க்கலாம்!

துள்ளித் திரிந்த பெண்ணொன்று                                             

துயில் கொண்டதேன் இன்று                                                          

தொடர்ந்து பேசும் கிளியொன்று                                                                    

பேச மறந்ததேன் இன்று                       படம்: காத்திருந்த கண்கள்

!

மயக்கம் எனது தாயகம்                                                              

மௌனம் எனது தாய்மொழி                                                           

கலக்கம் எனது காவியம்  –  நான்                                                   

கண்ணீர் வரைந்த ஓவியம்                      படம்: குங்குமம்

சோகம் ஒலிக்கும் குரலில் கலக்கம் வந்த காரணத்தையும் கவிஞர் கூறி விடுகிறார்.

நானே எனக்குப் பகையானேன் –என் நாடகத்தில் நான் திரையானேன் என்று.

ஆத்மைவ ஆத்மனோ பந்து: ஆத்மைவ ரிபுராத்மன: (உனக்கு நீயே நண்பன்; உனக்கு நீயே பகைவன் என்ற கீதையின் கருத்து சாதாரணமாக இங்கு வந்து விழுவதைப் பார்க்கலாம்)

போனால் போகட்டும் போடா – இந்த                                         

 பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?                                      

போனால் போகட்டும் போடா         படம்: பாலும் பழமும்

வாழ்க்கை கணக்கை சில வரிகளில் போட்டு வாழ்க்கை என்பது வியாபாரம், வரும் ஜனனம் என்பது வரவாகும், அதில், மரணம் என்பது செலவாகும் என்று வரவு செலவு கணக்கை இவ்வளவு கச்சிதமாக மூன்று மூன்று சொல் அடுக்குகளில் காண முடிகிறதே! நமக்கும் மேலே ஒருவன், அவன் நாலும் தெரிந்த தலைவன், அவன் தான் அனைத்தையும் இரவல் தந்தவன், அதை இல்லை என்றால் அவன் விடுவானா?

கவிஞரின் ஆணித்தரமான கேள்விகள் எவ்வளவு சிந்தனையைக் கிளப்பி விடுகிறது? 

தொட்டால் சுடுவது நெருப்பாகும்                                                       

தொடாமல் சுடுவது சிரிப்பாகும்!                                                   

 தெரிந்தே கெடுப்பது பகையாகும்                                                   

தெரியாமல் கெடுப்பது உறவாகும்

 படம்: படித்தால் மட்டும் போதுமா – (அண்ணன் காட்டிய வழியம்மா பாடலில்)

எப்படி இருக்கிறது புது வியாக்கியானம்?

பிறக்கும் போதும் அழுகின்றான்                                           

இறக்கும் போதும் அழுகின்றான்                                                   

ஒருநாளேனும் கவலை யில்லாமல்                                                 

 சிரிக்க மறந்தாய் மானிடனே                படம்: கவலை இல்லாத மனிதன்

தத்துவப் பாடல்களின் மன்னன் என்பதை நிரூபிக்க எத்தனை பாடல்கள் வேண்டும்?

உள்ளம் என்பது ஆமை – அதில்                                                  

உண்மை என்பது ஊமை!                                               

சொல்லில் வருவது பாதி – நெஞ்சில்                                                 

தூங்கிக் கிடப்பது நீதி!              படம்: படித்தால் மட்டும் போதுமா

 TO BE CONTINUED……………………………

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

Hinduism around the World: Evidence from My English Books (Post No.11,541)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,541

Date uploaded in London – 13 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Please read the following books for the evidence of Hindu influence and impact in different parts of the world:

Hindu Influence in Mesopotamia and Iran

Contents

1.Similarities in Gilgamesh – Hindu Scriptures

2. Gilgamesh -Two Thirds Divine, One Third Human

3.More on Gilgamesh – Hindu Connection

4.Did Indra attack Ur in Sumeria?

5.Stars Show India’s  Link with Greece and Iran in Vedic Period

6.River Ganges in Sumerian Culture

7.Sapta Rishis in Sumeria! Similar to Hindus!

8.More on  Sumukan , Sumeria  & Indus Mystery

9.Two Tamil Words show Akkadian, Sumerian Link

10.Similarities between Sumerian and Hindu Marriages

11.Rig Vedic King and Sumerian King 2600 BCE!

12.Sanskrit Interpreter in Sumerian Sculpture

13.What is Meluha? Where is it?

14.Strange Word for Poison! Mahaa- Hailikila

15. Another Strange Word ‘GONI’

16.Oldest Sanskrit Word in Inscription!

17.Sanskrit Names in Kassite Dynasty in Sumeria

18. Mushika / Phyrgian research

19.Woman comes from  Vamana, i.e. Leftist

20.‘UR’ in Rig Veda and Tamil Literature

21.Kishkinda in Patanjali

22.Vishnu in Mesopotamia

23.Sanskrit words in Sumerian Culture:

Sumukan Mystery

24.Hindu Kings Who Ruled Syria and Turkey

25.SuMeru, Ku Meru, Pa Meru, Meru

26.Bernier’s Description of Peacock Throne

27.Rs.1000 Crore Indian Gem Wonder

28.India needs an Indiana Jones !

29.Parsu Mystery in Rig Veda

30.Yadava- Iran Connection

31.Parasurama – Persia/ Iran Connection

32.“Why Did Parsees ‘Return’ to Gujarat?”

33.India- Iran Vedic Connection



XXXX

Hindu Wonders in Muslim Countries (book title)

Contents

1.Hindu Wonders in Indonesia!

2.Madagascar –India Link via Indonesia

3.Ancient Sanskrit Inscriptions in Strange Places

4.Mulavarman Sanskrit Inscription of Indonesia

5.Durga, Agastya, Tamil and Sanskrit in Indonesia!

6.Pallankuzhi (Mancala) Mystery

7.Tolkappiar Statue in Indonesia?

8. Naga Rani Soma – Kaundinya Marriage Story in Vietnam

9.Hindu Temples in Vietnam

10.New Siva, Agastya statues discovered in Vietnam

11.The Mysterious link between Karnataka and

Cambodia

12.Mitanni Wonders; Every Hindu Must Know!

13.Nayan Tara Temple in Syria with Mysterious Foot Prints!

14.Hittite Mystery! Were they Hindus?

15.Ghost busting-Hittite Style!

16. Sanskrit Wonders in Thailand!

17.Rare Sanskrit Inscriptions with Medical Information

18.Hindu Sankaranti Festival in Thailand and Laos!

19.Beatiful Hindu Temple in Thailand

20.Vedic Gods Indra, Varuna, Yama in Thailand

21.Ramayana 304 sculptures in two temples alone!

22.Hundred Sanskrit Names from 1800 BCE to 1400 BCE!

23.Creation: Vedic Hymn and Babylonian Hymn

24.Peacock Mystery: Hindu Bird in Turkey/Syria around 1400 BCE- Part 1

25.Peacock Mystery: Hindu Bird in Turkey/Syria around 1400 BCE- Part 2

Xxxxxxx

(4).DID INDIANS BUILD EGYPTIAN PYRAMIDS?

CONTENTS

1.Did Indians build Egyptian Pyramids?

2.Vedas and Egyptian Pyramid Texts

3.Vishnu in Egyptian Pyramids

4.Hindu Gods in Egyptian Pyramids

5.Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda

6.More Tamil and Sanskrit Names in Egypt

7.RAMA’S MARCH TO EGYPT AND SUMERIA!

8.Vedic Echo in Sumer and Egyptian Concept of Dreams

9.Hindu Mudras in Egyptian and Sumerian Statues

10.Eleven Egyptian Kings with Same Name: Ramesses!

11.URUGULA!!! EGYPT- SUMERIAN- TAMIL- ATHARVANA VEDA- GREEK LINK !

12.Flags: Indus Valley-Egypt similarity

13.The Great Scorpion Mystery in History-1

14.The Great Scorpion Mystery in History-2

15.Human Sacrifice in Indus Valley and Egypt

16.Eagle in the Rig Veda and Egyptian Civilization

17.Sanskrit Words in Egypt (Amarna Letters)

18.First Homosexual King in History!

19.Hindu Eagle Mystery deepens!

XXX

HOW CAN YOU GET THE ABOVE BOOKS ?

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels for readers

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

Tags – My books, Hinduism, Around the world, Evidence

Learn Tamil Verbs -Part 32; புரியும் , விளங்கும் (1000 Verbs ) Impersonal Verbs – Post No.11,540

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,540

Date uploaded in London – 13 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

TAMIL Impersonal Verbs are very useful and easy to use.

They are called impersonal verbs because there is no PGN (Person,, Gender, Number).

Generally used in present tense context.

Take the subject in the dative case

Xxx

What is dative case?

It is To; in Tamil we call it Fourth Case நான்காம்  வேற்றுமை

Examples :

To Rama, To James, To July, To Latha, To Samantha, To Mary, To David

You can form thousands of useful, every day sentences.

Xxx

The often used impersonal Verbs are

புரியும் PURIYUM, UNDERSTAND

THERIYUM தெரியும், KNOW

KIDAIKKUM கிடைக்கும், AVAILABLE

POTHUM போதும்,ENOUGH

VILANGUM விளங்கும், UNDERSTAND

XXX

FOLLOWING ARE  USED SIGHTLY IN A DIFFERENT WAY

VENDUM வேண்டும்,NEED, WANT

MUDIYUM முடியும் CAN, POSSIBLE

XXX

NOT MUCH USED

MAATTUM மாட்டும் , POSSIBLE, CAN

XXX

Now let us look at the examples

புரியும் PURIYUM, UNDERSTAND= VILANGUM விளங்கும், UNDERSTAND

Indian Tamils use Puriyum and Sri Lankan Tamils use Vilangum

Enakku thamiz Puriyum= to me Tamil understand= I understand Tamil

எனக்கு தமிழ் புரியும்

xxxx

Avanukku hinthi Vilangum = To him Hindi understand= He understands Hindi

அவனுக்கு ஹிந்தி விளங்கும்

xxxx

Jamesukku aangkilam puriyum= James understands English

ஜேம்ஸுக்கு ஆங்கிலம் புரியும்

xxx

Julykku singalam Vilangum = July understands Sinhalese

ஜூலீக்கு  சிங்களம் விளங்கும்

xxx

Inge Ellorukkum thamil puriyum = Here –to all—Tamil—understand= all here understand Tamil

இங்கே எல்லோருக்கும் தமிழ் புரியும்

Xxx

You can change them into interrogative / Questions – sentences by adding ஆ

 AA in Tamil

புரியும்+ ஆ= புரியுமா = Does/ Do ——- understand?

விளங்கும் +ஆ = விளங்குமா Does/ Do ——- understand?

Examples

உங்களுக்கு ஆங்கிலம்/ தமிழ் புரியுமா ?= ungalukku Aangkilam/ Thamiz—puriyumaa? = To you English/ Tamil understand?=  Do you understand English/ Tamil?

Xxx

அவர்களுக்கு பிரெஞ்சு விளங்குமா ?== Avargalukku pirenju Vilangumaa?= To them French Understand? + Do they understand French?

Xxx

Negatiives

Negatives are formed by adding AATHU ஆது to infinitive

ஆது -aathu

Puriyaathu புரியாது,

Vilangaathu விளங்காது

புரிய+ ஆது – don’t or doesn’t understand

விளங்க+ ஆது –don’t or doesn’t understand

In the next lesson , we will look at other Impersonal Verbs.

To be continued…………………………..

 Tags – Impersonal verbs, Puriyum, Vilangum, Understand

லெட்சுமியும் அவள் அக்காளும் வசிக்கும் இடங்கள் பற்றி அம்பலவாணர் (11,539)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,539

Date uploaded in London – 13 December 2022                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

ARAPPALISURA SATAKAM VERSES 20 AND 21 ON LAKSHMI AND HER ELDER SISTER

20. திருமகள் இருப்பிடம்- அறப்பளீசுர சதகம்

நற்பரி முகத்திலேமன்னவர் இடத்திலே,

     நாகரிகர் மாமனை யிலே,

  நளினமலர் தன்னிலேகூவிளந் தருவிலே,

     நறைகொண்ட பைந்துள விலே,

கற்புடையர் வடிவிலேகடலிலேகொடியிலே,

     கல்யாண வாயில் தனிலே,

  கடிநக ரிடத்திலேநற் செந்நெல் விளைவிலே,

     கதிபெறு விளக்க தனிலே,

பொற்புடைய சங்கிலேமிக்கோர்கள் வாக்கிலே

     பொய்யாத பேர்பா லிலே,

  பூந்தடந் தன்னிலேபாற்குடத் திடையிலே

     போதகத் தின்சிர சிலே

அற்பெருங் கோதைமலர் மங்கைவாழ் இடமென்பர்

     அண்ணல்எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

      (இ-ள்.) அண்ணல் – தலைவனே!, எமது………..தேவனே!, நல் பரி

முகத்தில் – அழகிய குதிரையின் முகத்திலும், மன்னவர் இடத்தில் –

அரசரின் இடத்திலும், நாகரிகர் மாமனையில் – நாகரிகம் அறிந்தவர்களின்

வீட்டிலும், நளின மலர் தன்னில் – தாமரை மலரிலும், கூவிளந் தருவில் –

வில்வ மரத்திலும், நறைகொண்ட பைந்துளவில் – மணமுடைய பசிய

திருத்துழாயிலும், கற்புடையர் வடிவில் – கற்புடைய மங்கையரின்

வடிவத்திலும், கடலில் – கடலிலும், கொடியில் – துகிற்கொடியிலும்,

கல்யாணவாயில் தனில் – திருமண வீட்டின் வாயிலிலும், கடிநகர் இடத்தில்

– காவலுடைய நகரத்திலும், நல்செந்நெல் விளைவில் – நல்ல செந்நெல்

விளைவிலும், கதிபெறு விளக்கதனில் – ஒளிவீசும் விளக்கிலும், பொற்பு

உடைய சங்கில் – அழகுறும்சங்கிலும், மிக்கோர்கள் வாக்கில் – பெரியோர் மொழியிலும், பொய்யாத

பேர்பாலில் – பொய் மொழியாதவரிடத்திலும், பூந்தடந்தன்னில் – மலர்ப்

பொய்கையிலும், பாற்குடத்திடையில் – பாற் குடத்திலும், போதகத்தின்

சிரசில் – யானையின் தலையிலும், அல்பெருங்கோதை மலர்மங்கை

வாழ்இடம் என்பர் – இருண்ட நீண்ட கூந்தலையுடைய திருமங்கை வாழும் இடம் என்பர் அறிஞர்.

நீண்ட பட்டியல் ; எளிய தமிழ்; விளக்கமே தேவை இல்லை . பல வீடுகளில் வலம்புரிச் சங்கை பூஜை அறையில் வைத்திருப்பதற்கும், தோட்டத்தில் வில்வ மரம், துளசி மாடம் வைத்திருப்பதற்கும் இப்போது காரணம் தெரியும் .

தாமரை மலர் கொண்டு தேவியரை பூஜிக்கவேண்டும். கற்புடைய மங்கையரைப் போற்ற வேண்டும். சினிமாக்காரிகளை அல்ல..

மூ தேவி  வசிக்கும் இடங்களை அறிந்து தவிர்க்க வேண்டும்  இதே கருத்தை வேறு புலவர்கள் எப்படி விளம்புகிறார்கள் என்று ஒப்புநோக்குவோம்.

XXXXX

          21. மூதேவி இருப்பிடம்- அறப்பளீசுர சதகம்

மிதம் இன்றி அன்னம் புசிப்போர் இடத்திலும்,

          மிகுபாடையோர் இடத்தும்,

     மெய் ஒன்றிலாமலே பொய் பேசியே திரியும்

          மிக்க பாதகரிடத்தும்,

கதி ஒன்றும் இலர் போல மலினம் கொளும் பழைய

          கந்தை அணிவோர் இடத்தும்

     கடிநாய் எனச் சீறி எவரையும் சேர்க்காத

          கன்னி வாழ் மனைஅகத்தும்,

ததிசேர் கடத்திலும், கர்த்தபத்து இடையிலும்,

          சார்ந்த ஆட்டின் திரளிலும்

     சாம்பிணம் முகத்திலும் இவை எலாம் கவலை புரி

          தவ்வை வாழ் இடம் என்பர் காண்!

அதிரூப மலை மங்கை நேசனே! மோழைதரும்

          அழகன் எமது அருமை மதவேள்

     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்

          அறப்பளீசுர தேவனே!

(இ-ள்.) அதிரூப மலைமங்கை நேசனே – பேரழகுடைய

மலைமகளின் கணவனே! மோழை தரும்அழகன் – மோழையென்பான்

பெற்ற அழகனான, எமது…………தேவனே!, அன்னம் மிதம் இன்றிப்

புசிப்போரிடத்திலும் – சோற்றை அளவின்றி உண்பவரிடத்திலும், மிகு

பாடையோரிடத்தும் – மிகைபடப் பேசுகின்றவரிடத்திலும், மெய் ஒன்று

இலாமலே பொய் பேசியே திரியும் மிக்க பாதகரிடத்தும் – ஒரு மெய்யும்

கலவாமல், எப்போதும் பொய்யையே கூறியலையும் மிகவும்

கொடியவரிடத்திலும், கதியொன்றும் இலர்போல மலினம் கொளும் பழைய

கந்தை அணிவோரிடத்தும் – சிறிதும் வழியற்றவரைப்போலக் கிழிந்த

பழைய கந்தையை உடுப்பவரிடத்திலும், கடி நாய் எனச் சீறி எவரையும்

சேர்க்காத கன்னிவாழ் மனையிடத்தும் – கடிக்கின்ற (வெறி) நாய்போலச்

சினந்து பேசி ஒருவரையும் அணுகவிடாத பெண்ணொருத்தி வாழும்

இல்லத்திலும், ததிசேர் கடத்திலும் – தயிர்ப்பானையிலும், கர்த்தபத்

திடையிலும் – கழுதைகளின் குழுவிலும், சார்ந்த ஆட்டின் திரளிலும்

– கூடிய ஆட்டுமந்தையிலும், சாம்பிணம் முகத்திலும் – இறந்த பிணத்தின்

முகத்திலும், இவையெலாம் கவலை புரி தவ்வை வாழ் இடம் என்பர் –

இவை யாவும் கவலையை யுண்டாக்கும் மூத்தவள் வாழும் இடம் என்று

அறிஞர் கூறுவர்.

     கற்புள்ள பெண்களுக்கு நேர் எதிரி= வீட்டிற்குள் எவரையும் வரவிடாமல் எரிந்து விழும் பெண்கள். கணவனைத் திட்டும் பெண்கள் = கழுதை =ஆட்டுமந்தை= கந்தலாடை தரித்திரன்= பிணம்= பொய்யன்= வாயாடி= வயிறா வண்ணான் தாழியா என்று வியக்கும் வண்ணம் சாப்பிடும் சாப்பாட்டு ராமன்கள்= மூதேவி

XXX


இதோ இன்னொரு லெட்சுமி பாடல்:–

பதுமம் கொடி நகர் மின் பைந்துளவு வில்வம்

கதிர் விளைவு சங்கு கடறீபம் –வதுவை மனை

நற்பரிபாற் பாண்டமிவை நாண் மலரா ணீங்காது

நிற்பிட நல்லோர் நெஞ்சுமே

–உவமான சங்கிரகம், ரத்தினச் சுருக்கம்

பொருள்

லெட்சுமி வசிக்கும் இடங்கள்:-  பதுமம்= தாமரை; கொடி – த்வஜம்;  நகர் = நகரம்;  மின் = மின்னல் ஒளி;  பைந்துளவு = பச்சைத் துளசி;  வில்வம் = வில்வம்; கதிர் விளைவு = நெற்கதிர்/ தானியம்; சங்கு = சங்கு (வலம்புரிச் சங்கு);; கடல் = சமுத்திரம்; தீபம் = விளக்கு; வதுவை மனை = கல்யாண வீடு; நற் பரி = நல்ல குதிரை; பால் பாண்டம் = பால் பொங்கும் பானை. இவை = இவை எல்லாம், நாண்மலராள் = மஹலெட்சுமி,  நிற்பிடம் = நிலைத்து நிற்கும் இடங்களாம். நல்லோர் நெஞ்சுமே = நல்லவர்கள் உள்ளத்திலும் கூட (வசிக்கிறாள்)

xxxx

பழங்காலத்தில் லக்ஷ்மி வாசம் செய்யும் இடங்களைப் பற்றி ஒரு நல்ல ஸ்லோகம் இருக்கிறது.

ஹரித்ரா குங்குமம் ச ஏவ ஸிந்தூரம் கஜ்ஜலம் ததா

கூர்பாஸகம் ச தாம்பூலம் மங்கள்யாபரணே ததா

கேசஸம்ஸ்கார கபரீ கர்கணாதி பூஷணம்

பர்துர்ராயுஷ்மிச்சந்தி தூஷயேன்ன பதிவ்ரதா

பொருள்

மஞ்சள் பூசிக் குளிப்பது

குங்குமம்,ஸிந்தூரம் தரிப்பது

கண்ணுக்கு மை தீட்டுதல்

ரவிக்கைதாம்பூலம் (வெற்றிலை பாக்கு)

காதுமூக்குகளில் நகை அணிதல்

வாரின தலை

முதலியன கணவர்களுக்கு ஆயுளைத் தரும் பெண்களின் அலங்காரங்கள்.

Xxx

இன்னொரு ஸ்லோகத்தையும் காண்போம்

யத் க்ருஹம் ராஜதே நித்யம் மங்களைரனுலேபனைஹி

தத் க்ருஹே வசதே லக்ஷ்மீ: நித்யம் பூர்ணகலான்விதா

எவள் வீட்டைப் பெருக்கி மெழுகி,  கோலமிட்டு  அலங்கரிக்கிறாளோ அங்கே லக்ஷ்மீ பூரண கலைகளுடன் வசிக்கிறாள்.

அது என்ன பூரண கலை?

நாம் அஷ்ட லக்ஷ்மீ என்று சொல்லும்போது வளத்தை, தனம், தான்யம், வீரம், ஸந்தானம் (மகப்பேறு), ஐஸ்வர்யம், சௌபாக்கியம் என்று எல்லாம் பிரித்துப் பார்க்கிறோம். இவை அனைத்தும் இருந்தால் அது லக்ஷ்மீயின் பூரண அம்சம் ஆகும்.

Xxxx

: புறநானூறு தகவல் (Post No.3560)

பருதி சூழ்ந்த இப்பயங்கெழு மாநிலம்

ஒருபகல் எழுவர் எய்தியற்றே!

வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு

ஐயவி அனைத்தும் ஆற்றாது; ஆகலின்

கைவிட்டனரே காதலர்; அதனால்

விட்டோரை விடா அள்திருவே;

விடாஅதோர் இவள் விடப்பட்டாரே

–வான்மீகியார், புறம் 358

பொருள்:

இந்தப் பாட்டில் பல சுவையான செய்தி-

கதிரவன் சுற்றும் இந்த வளம் செறிந்த பூமிக்கு ஒரே நாளில் 7 பேர் அரசனானதும் உண்டு. இல்லறத்தையும், துறவறத்தையும் ஒப்பிட்டால் துறவறமே சிறந்தது. தவம் மலை என்றால், இல்லறம் சிறு வெண்கடுகு (ஐயவி) போன்றதாகும். தவம் செய்ய முடியாததால்தான், காதலர்கள் இல்லறத்துக்கு வந்தனர். வீடு பேற்றை விரும்பியோர் இல்லறத்தைக் கைவிட்டனர். யார் வருந்தி வருந்தி அழைக்கவில்லையோ அவளிடம் லெட்சுமி போய் ஒட்டிக்கொள்வாள். இல்வாழ்வில் அழுந்தியோரிடம் தங்க மாட்டாள்.

லெட்சுமி இல்லறத்தாரிடம் இருப்பதைவிட துறவறத்தாரிடமே அதிகம் இருப்பாள்.

Xxxx

முகடி= தவ்வை= மூதேவி= Lakshmi’s Elder Sister=Alakshmi

கருதிய நூல் கல்லாதான் மூடன் ஆகும்

கணக்கு அறிந்து பேசாதான் கசடன் ஆகும்

ஒரு தொழிலான் இல்லாதான் முகடி ஆகும்

ஒன்றுக்கும் உதவாதான் சோம்பன் ஆகும்

பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும்

பேசாமல் இருப்பவனே பேயனாகும்

பரிவு சொல்லித் தழுவினவன் பசப்பனாகும்

பசிப்பவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே

–விவேக சிந்தாமணி, ஆசிரியர் பெயர் எவருக்கும் தெரியாது

xxxxx

செய்யாள், தவ்வை பற்றி வள்ளுவன் (from S Nagarajan’s post in my blogs)

திரு எனப்படும் லக்ஷ்மி தேவி

குறள் எண்கள் 179519617920

அறன் அறிந்து வெஃகா அறிவுடையார்ச் செரும்

திறன் அறிந்தாங்கே திரு   (குறள் 179)

அற நெறி இதுவே என்று அறிந்து பிறர் பொருளை கவர நினைக்காதவர்களிடம் தானே சென்று சேர்வாள் திரு என்னும் லக்ஷ்மி தேவி.

வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக

நினைப்பானை நீங்கும் திரு  (குறள் 519)

தான் மேற்கொண்ட வினையைக் கண்ணும் கருத்துமாகச் செய்யும் ஒருவனது நட்பை மதிக்காது வெறு விதமாக நினைக்கும் தலைவனை விட்டுத் தாமாகவே திருமகள் நீங்கி விடுவாள்.

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாளுளாள் தாமரையினாள்  (குறள் 617)

தாமரையினாள் என்று அழகுற திருமகளைக் குறிக்கிறார் வள்ளுவர். அவளது அக்காவான முகடி என்னும் மூதேவியையும் இக்குறளில் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

ஒருவனது சோம்பலிலே தான் மூதேவி (மாமுகடி – கரிய மூதேவி) வாழ்கிறாள். முயற்சி உடையவனிடத்தில் தாமரை உறையும் திருமகள் வாழ்கிறாள்.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திரு நீக்கப் பட்டார் தொடர்பு (குறள் 920)

இருமனப் பெண்டிர் என்றால்  பொது மகளிர் – வேசிகள்!  பொது மகளிர்கள்சூது ஆகிய இந்த  மூன்றும் திருமகளால் கைவிடப்பட்டாரின்  தொடர்பு ஆகும்.

Xxx

மூதேவி

குறள் எண்கள் 617936

குறள் 617ஐ மேலே கண்டோம்.

அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூதென்னும்

முகடியால்  மூடப் பட்டார்

சூது என்னும் மூதேவியால் விழுங்கப்பட்டவர்கள் வயிறு நிறைய உண்ண உணவு இல்லாமல் பல வகைத் துன்பம் அடைந்து வருந்துவர்.

செய்யவளும் தவ்வையும்!

லக்ஷ்மி தேவியியும் மூதேவியையும் சேர்த்து இன்னொரு குறளிலும் வள்ளுவர் குறிப்பிடுகிறார். குறள் எண் 167இல் திருமகளை செய்யவன் என்றும் மூதேவியை திருமகளின் அக்கா எனப் பொருள்படும் தவ்வை என்ற சொல்லாலும் குறிப்பிடுகிறார். இங்கு வள்ளுவரின் நகைச்சுவையையும் நாம் காண்கிறோம். தான் வராமல் தன் அக்காளுக்கு வழி விடுகிறாளாம் இலக்குமி!

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்.

பொறாமை கொண்ட ஒருவனைத் திருமகளுக்குப் பிடிக்காது. அவள் தனது அக்கா மூதேவியைக் (தவ்வையை) காட்டி விட்டு விலகி விடுவாள்.

இப்படி பல்வேறு குறள்களில் லக்ஷ்மியையும் மூதேவியையும் வள்ளுவர் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

—- subham—-

Tags லெட்சுமி பற்றிவள்ளுவன்அம்பலவாணர் அறப்பளீசுர சதகம்புறநானூறுசெய்யாள்தவ்வைமூதேவி உவமான சங்கிரகம்வசிக்கும் இடங்கள்