அனைவரையும் கவர ஒரு வழி நூஞ்சி! (Nunchi) (Post No.15,148)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,148

Date uploaded in London –   4 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

16-8-25 அன்று கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

MOTIVATION : NEW TECHNIQUE

அனைவரையும் கவர ஒரு வழி நூஞ்சி! (Nunchi) 

ச. நாகராஜன் 

உடல் பேசும் மொழி வார்த்தைகளை விட சக்தி வாய்ந்தது!

–    ரிக்கி ஜெர்வெய்ஸ்

ஒரு புன்னகை, நண்பரை உருவாக்கும்!  –      ஃப்ராங்க் டைகர்

அனைவரையும் கண் பார்வையினாலேயே எடை போட்டு அவர்களைக் கவர ஒரு வழி இருக்கிறது! அது தான் நூஞ்சி!! 

தென் கொரியாவில் இது இளமைப் பருவத்திலிருந்தே அனைவருக்கும் கற்றுத் தரப்படுகிறது.

 நூஞ்சி என்ற தென்கொரிய வார்த்தைக்கு கண்ணின் ஆற்றல் அல்லது கண்ணின் சக்தி என்று பொருள். கண்ணினால் பார்த்தவுடனேயே ஒருவரை அளந்து விட வேண்டும்! அவர்களின் நடை, உடை பாவனையையும் உடல் பேசும் மொழியையும் வைத்து சுலபமாக ஒருவரைப் புரிந்து கொள்வதோடு அவரை நம் பக்கம் கவர்ந்து இழுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக பெரிய பார்ட்டிகளிலும், சமூக விழாக்களிலும் இது நமக்குப் பெரிதும் உதவும். பல புதிய நண்பர்களை உருவாக்குவதோடு வெற்றிக்கும் வழி வகுக்கும்.

தனிப்பட்ட நபர்களிடம் நட்பும், வேலை பார்க்குமிடத்தில் அனைவரிடமும் நல்லுறவும் நமக்குத் தேவை.

 ஒருவரைப் புதிதாகப் பார்க்கும் போது அவரையே அதிகமாகப் பேசும்படி அவருக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும். இது நூஞ்சியின் அபாரமான உத்தி. அவர்களைப் பற்றிய ஏராளமான விவரங்கள் சிறிதும் முயற்சி இல்லாமலேயே உங்களுக்குக் கிடைக்கும்.

 பேச்சு என்பது உணர்வுகளையும் தகவல்களையும் பெறும் ஒருவிதமான தொடர்பு தான். ஆனால் பேசாமலேயே பேச்சு அற்ற தொடர்புகள் நமக்குத் தரும் விவரங்களும், அறிவுரைகளும் ஏராளம்.

 ஒருவர் சந்தோஷமாக இருக்கிறாரா, உங்களுடன் மேலும் பேச விரும்புகிறாரா என்பதை எல்லாம் அவர்கள் கண்களும் முகமும் உடலுமே காட்டி விடும்.

சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஒரு முறை பார்த்து விட்டு வேகமாக சிந்திக்க நூஞ்சி உதவுகிறது.

 பார்ட்டியில் உள்ள சைகைகள், ட்ரெண்ட்,, புதிய வார்த்தைகள் ஆகியவற்றையும் நூஞ்சியினால் பெற முடியும்.

 எல்லாவற்றிற்கும் மேலாக நம்மைப் பற்றி இன்னும் கொஞ்சம் புரிதல் கூடும்; உள்ளுணர்வு ஆற்றல் அதிகரிக்கும்.

 பேச்சுக்கு வேண்டிய மொழி ஆற்றல் ஒரு பக்கம் என்றால் உணர்ச்சிகளைப் “படிக்கும்” உணர்வு மொழி நமக்குத் தேவை. இது தான் மற்றவர்களுடன் நாம் மகிழ்ச்சியுடன் பழகி வெற்றி பெற உதவும்.

 சுருக்கமாகச் சொல்லப் போனால் நமது அன்புக்குரியவர்கள், நண்பர்கள், உறவினர்கள், சகாக்கள் ஆகியோருடனான நமது உறவு மேம்படுவதோடு நமது சுயமதிப்பையும் நம்மை சமூகத்தில் உயர் அந்தஸ்தும் பெற வழி வகுப்பது நூஞ்சி.

 நூஞ்சியை வளர்த்துக் கொள்வது எப்படி?

இதோ இருக்கிறது வழிகள்:

 முதலில் யாரைப் பற்றியும் நாமாக ஒரு அபிப்ராயத்தை உருவாக்கிக் கொள்ளக் கூடாது. திறந்த மனதுடன் ஒரு பார்ட்டியில் கலந்து கொள்ள வேண்டும். ஒரு புதியவருடன் பழக வேண்டும்.

 ஒரு அறையில் நீங்கள் நுழையும் போது அங்கு ஒரு புதிய ஊக்கமூட்டும அதிர்வலைகளை உண்டு பண்ண வேண்டும்.

 அனைவரையும் கண் பார்வையாலேயே நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும். புன்னகையுடன் கூடிய மலர்ந்த முகம் இதற்குத் தேவை.

 மற்றவர்களை நிறையப் பேசும்படி ஊக்குவிக்க வேண்டும். இதனால் ஏராளமான புதுச் செய்திகள் உங்களுக்குக் கிடைக்கும்.

பேசுகின்ற சொற்களை விடப் பேசாமல் மற்றவர்களது உடலும் உணர்ச்சியும் காட்டும் தகவல்கள் ஏராளம். இதை உன்னிப்பாகக் கவனித்தல் அவசியம்.

 ஒருவரைப் பாராட்டுவதில் அதிக உற்சாகம் கொண்ட ஹீரோவாகவும், ஒருவரை எதிர்மறையாக விமரிசிப்பதில் ஜீரோவாகவும் இருத்தல் வேண்டும்.

 கண்களையும் காதுகளையும் திறந்து வைத்துக் கொண்டு வாயை மட்டும் மூடி வைத்துக் கொண்டால் வாழ்க்கை முழுவதும் நூஞ்சியால் வெற்றி தான்!

 இந்த நூஞ்சியை ஜப்பானிய மொழியில் சாஷி என்கின்றனர்.

 வாஞ்சையுடன் அனைவருடனும் பழக ஒரு வழி நூஞ்சி!

**

மதுரை மீனாட்சி கோவிலில் நவரத்தினக் குவியல்!-2 (Post.15,147)

Written by London Swaminathan

Post No. 15,147

Date uploaded in London –  3 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

SECOND PART

மீனாக்ஷி அம்மனின் தலைப்பாகைக் கிரீடம்

அடுத்ததாக திருவிழா காலத்தில் அம்மன் குதிரை வாகனத்தில் வரும்போது போர் வீரன் போல தோற்றமளிப்பதற்காக குதிரை வாகன தலைப்பாகை கிரீடம் பொருத்தப்படும் . இதை திருமலை நாயக்கர் செய்துகொடுத்துள்ளார் . அதிலும் நவரத்தின கற்கள் இருக்கின்றன

தலைப்பாகைக்  கிரீடத்தின் எடை 113  தோலா

ஒரு தோலா = 11 . 66  கிராம் 

332  நன் முத்துக்களும் 472  சிவப்புக் கற்களும் 158  பலச்ச வைரமும் 27  மரகதங்களும் இந்த கிரீடத்தை அலங்கரிக்கின்றன.

***

திருமுடிச் சாத்து

திருமுடிச் சாத்து  என்ற ஒரு கிரீடத்தையும் திருமலை நாயக்கர் செய்து கொடுத்துள்ளார் .இது அம்மனுக்கு சாத்தப்படுகிறது .பெண்கள் தங்கள் தலைமுடியை உச்சிக்கொண்டை போடாமல் , அப்படியே பின்பக்கமாக வாரி சடையாக பின்னி தொங்கப்போடுவது போன்ற அமைப்பில் இக்கிரீடம் அமைந்துள்ளது . இதன் எடை  83 தோலா; 324 சிவப்புக் கற்களும் 116 பலச்ச வைரமும் மூன்று நீலக் கற்களும், இரண்டு மரகதங்களும் 694 முத்துக்களும் , இரண்டு வைடூரியங்களும் கிரீடத்தில் பதிக்கப்பட்டு உள்ளன

ஆவணி மூல விழாவில் சுந்தரேஸ்வரர்  கூலி  ஆளாக வைகைக் கரைக்குச் செல்வார் அப்போது தலையில் கூடையும் தோளில்  மண் வெட்டியும் தாங்கியிருப்பார் ;இவைகளெல்லாம் தங்கத்தாலானவை

 திருவிளையாடற்புராணத்தில் பரஞ்சோதி முனிவர் சொன்னே கரும்பனும் விரும்ப நின்ற கட்டழகும் என்ற திருமேனி நம் மனக்கண்ணில் தோன்றும்; இவைகளின்  எடை-

கூடை – 25 தோலா  தங்கம் ;

கூடையைத் தாங்கும் சுமையடை – 84  தோலா  தங்கம்;

மண்வெட்டி- 19  தோலா  தங்கம்

அவைகளில்  பலச்ச  வைரங்கள் , மரகதக் கற்கள்  பதித்துள்ளனர்.

***

பொட்டுக்காறை

சிவகங்கையை ஆண்ட பவானி சங்கர் ராஜா சேதுபதி,  அம்மனுக்கு தங்க கொடியுடன் கூடிய பட்டை தீட்டாத மாணிக்கக் கற்கள் , மரகதக் கற்கள் பதித்து செய்யப்பட பொட்டுக்காறையொன்று செய்து கொடுத்துள்ளார்

இதன் எடை  53 தோலா; 331  சிறிய மாணிக்கக்   கற்களும் 116 44  பெரிய மரகதங்களும்  பதிக்கப்பட்டு உள்ளன . இதேபோல ராமநாத புர மன்னர் பாஸ்கர சேதுபதி கோவிலில் உள்ள ஆக்ஞா சித்த மூர்த்திக்கு பெரிய பதக்கம் ஒன்றைத் தங்கள் கொடியில்  கோர்த்து நன்கொடையாக கொடுத்துள்ளனர்; பதக்கத்தின் பின்பக்கத்தில் தமிழில்  இதன் விளக்கம் இருக்கிறது 1893  ஆம்    மூன்றாம் ஆண்டில் கொடுத்துள்ளார். இதிலும் எல்லா வகைக் கற்களும் உள்ளன.

***

பவளக்கொடி பதக்கம்

கடலில் உள்ள பவளக்கொடி போல கிளை கிளையாக அமைக்கப்பட்டுள்ளது;ரத்தினம் பதித்த ஒரு வளையமும் பொருத்தப்பட்டுள்ளது ;அதன் எடை 11 தோலா 6 4 மாணிக்கக் கற்கள் ,25 முத்துக்கள் வளையத்தில் பதிக்கப்பட்டுள்ளன.

பவள தாழ் வடம்

இதைத் தவிர பவள தாழ் வடம் ஓன்றும்  உள்ளது இதை  கர்நாடக திப்பு சுல்தானுக்கு அமைச்சராக பணிபுரிந்த பூர்ணையா என்பவர் மீனாட்சி அம்மனுக்குக் கொடுத்திருக்கிறார் பெரிய உருண்டை வடிவத்தில் முதிர்ந்து விளைந்த பளபள ப்பும் சிவப்பு நிறமும் கொண்ட 28 பவள மணிகளை 27 தங்க குண்டுமணிகளுக்கு இடையிடையே வைத்து அமைத்துகே காட்டியுள்ளனர்  ; இதன் மொத்த எடை 43 தோலா .

***

நளச் சக்ரவர்த்தி பதக்கங்கள் /வாகனப் பதக்கங்கள்

நிடத நாட்டு மன்னன் நளச் சக்ரவர்த்தி கொடுத்த இரண்டு பெரிய பதக்கங்கள் இருக்கின்றன . இவை வெள்ளியும் தங்கமும் கலந்த பொன்னால் செய்யப்பட்டவை .எடை – 69 தோலா, 45 தோலா

ஒரு பதக்கத்தில் பட்டை தீட்டாத 79  பெரிய மாணிக்கக் கற்களும் 18 நீலக் கற்களும்,8 மரகதங்களும் 6 வைடூரியங்களும் இரண்டு கோமேதங்களும் பதித்துள்ளனர் . இன்னும் ஒரு பதக்கத்தில் பட்டை தீட்டாத 83  பெரிய மாணிக்கக் கற்களும் 12 நீலக் கற்களும்,7 மரகதங்களும் 6 வைடூரியங்களும் 3கோமேதங்களும் பதித்துள்ளனர். 

இவையிரண்டும் குந்தன கட்டிட வெளிப்பாட்டில் அமைந்தவை. கோவில் கருவூலப்பட்டியலில் இவைகளை வாகனப்பதக்கண்கள் என்று குறித்து வைத்துள்ளனர்

 திருவிழாக்  காலங்களில் உயரமான குதிரை, யானை, கற்பக மரம், பூதம் ,யாளி  நந்தி தேவர்  ஆகிய வாகனங்களின் சுவாமியை  எழுந்தருளப் பண்ணி வீதி வலம் வரும்போது இப்  பதக்கங்கள்நன்றாகத்  தெரியும் .

***

ரோமானிய காசுமாலை

சங்க  காலத்தில் தமிழ் நாட்டுக்கும் இத்தாலிக்கும்  இடையே பெரிய அளவில் ஏற்றுமதி- இறக்குமதி  வியாபாரம் நடந்ததை சங்க இலக்கியமும் தென்னிந்தியா முழுதும் கிடைத்த ரோமானிய  காசுகளும் காட்டுகின்றன . அந்தக்காலத்தில் கிடைத்த தங்கக்காசுகளை மக்கள் ரகசியமாக உருக்கி தங்க நகைகளாகச் செய்துவிட்டனர் இன்றோ அந்தத் தங்கக்காசு ஒவ்வொன்றின் மதிப்பும் அதிலுள்ள தங்கத்தின் மதிப்பை விட நூறு மடங்கு வி லைக்கு வெளி நாடுகளில் எல்லாம் ஏலம் போகிறது. நல்ல வேளை யாக திருவநந்தபுரம் , மதுரைக் கோவில்களில் ரோமானிய தங்கக்காசு மாலைகள் சுவாமி அம்மன் கழுத்தில் தொங்குகின்றன. அதில் லத்தீன் மொழி வாசகங்களும் உள்ளன; ஒவ்வொரு மன்னரின் பெயரையோ காசின் படத்தையோ வெளியிட்டால் இன்றைய மதிப்பினை அறியலாம். வரலாற்றினை  புதுக்கி எழுதவும் வழிபிறக்கும்

இந்த காசுமாலையில்  48 ரோமானியாக் காசுகளை 50 தங்கமணியுடன்  பட்டு கயிற்றில்  சேர்த்துக்  கட்டியுள்ளார்கள்

இதன் எடை 21  தோலா .

இதேபோல வேறு வெளிநாட்டுக்காரர்கள்  கொடுத்த காசுமாலையும் மீனாட்சிக்கு உண்டு . இங்கிலிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி காயின்ஸ் என ஆங்கில மொழி பொறித்த 73 தங்க காசுகளால் ஆன ஒரு காசு மாலையை ஆங்கிலேயர்கள் வழங்கினர் .  இதன் எடை ஆறு தோலா இந்த காசுமாலையில்  48 ரோமானியாக் காசுகளை 50 தங்கமணியுடன்  பட்டு கயிற்றில்  சேர்த்துக்  கட்டியுள்ளார்கள்

இதன் எடை 21  தோலா .

ஒரு தோலா – 11. 66 க்ராம்

1 tola = 11. 66 grams. More gramsely, it’s 11. 6638 grams

***

அடுத்ததாக தங்க  மிதியடிகள்

அருள்மிகு மீனாட்சியம்மனின் திருவடிகளைத் தாங்கும் இரண்டு மிதியடிகள் கோவிலில் உள்ளன  இதன் பின்னால் ஒரு கதை உள்ளது .1812 ஆம் ஆண்டில் ரோஸ்  பீட்டர் என்ற ஆங்கிலேயர்  மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தார் . அக்காலத்தில் கோவில் மேற்பார்வையும் கலெக்டரிடம் இருந்தது ; பீட்டர் , குதிரை மேலிருந்தபடியே கோவிலை வலம் வருவார் அவருக்கு மீனாட்சி அம்மனின் அருள் கிடைத்தது . அது ஒரு அதிசய சம்பவம் !


To be continued………………………

    மதுரை மீனாட்சி கோவில் ,நவரத்தினக் குவியல்!-2 ,

GNANAMAYAM 2nd November 2025 BROADCAST PROGRAMME



TRR

NEWS

Prayer

TRR

NEWS

Prayer

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 12 PM GMT

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer -MRS JAYANTHI SUNDAR TEAM – Akash Ramesh from London.

***

NEWS BULLETIN

VAISHNAVI ANAND from London presents World Hindu News in Tamil

****

Sri S. Nagarajan from Bengaluru speaks on THIRUPPULLANI TEMPLE

****

SPECIAL EVENT-

Talk on Periyapuranam

By

Sri T R RAMESH,

President of Temple Worshippers Association

(Son of ‘ Sekkizar Adippodi’  Dr T N Ramachandran )

 ******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 2nd  November 2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் — திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர் – Akash Ramesh from London.

***

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும்  லதா யோகேஷும் வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் — Sri S. Nagarajan from Bengaluru

சொற்பொழிவு– தலைப்பு    திருப்புல்லாணி தலம்கோவில்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

பெரிய புராணத் சொற்பொழிவுத் தொடர்:

பேசுனர் – திரு T R  ரமேஷ் அவர்கள்,

(சேக்கிழார் அடிப் பொடி டாக்டர் T N  ராமச்சந்திரன் அவர்களின் புதல்வர்)

ஆலயம் செல்லுவோர் சங்கத் தலைவர்

—subham—

Tags-Gnanamayam Broadcast, 2-11- 2025, programme,

ஞானமயம் வழங்கும் (2- 11 -2025)  உலக இந்து செய்திமடல்(Post No.15,146)

Written by London Swaminathan

Post No. 15,146

Date uploaded in London –  3 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்.

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து, வைஷ்ணவி ஆனந்த்  வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் மாதம் இரண்டாம்  தேதி , 2025-ம் ஆண்டு

****

முதலில் தேசீயச் செய்திகள்

சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆர்ய சமாஜம் அமைப்பு வேத பாரம்பரியத்தை பாதுகாத்தது – பிரதமர் மோடி சொற்பொழிவு

சமூக சீர்திருத்தவாதி சுவாமி தயானந்த சரஸ்வதியால் உருவாக்கப்பட்ட ஆர்ய சமாஜம் அமைப்பு இந்தியாவின் வேத பாரம்பரியத்தை பாதுகாத்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆர்ய சமாஜம் அமைப்பு உருவாக்கப்பட்டதன் 150-வது ஆண்டு தினம் மற்றும் தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்த நாளையொட்டி, டெல்லியில் சர்வதேச ஆர்ய சம்மேளனம் என்ற தலைப்பில் 4 நாள் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, ஆர்ய சமாஜம் அமைப்பானது இந்தியாவின் வேத பாரம்பரியத்தை காப்பாற்றுவதில் முக்கியப் பங்காற்றுவதாக தெரிவித்தார்.சமூக சீர்த்திருத்தங்களை முன்னெடுத்ததுடன், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட பல்வேறு தியாகிகளுக்கும் ஆர்ய சமாஜம் அமைப்பு ஊக்கமளித்ததாக கூறிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கு எதிரான சித்தாந்தங்களை ஆர்ய சமாஜம் எதிர்த்து வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

***

காசியில் 10 மாடி தர்ம சத்திரம்: துணை ஜனாதிபதி திறந்து வைத்தார்

பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோரால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாயத்தால் ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்ட 10 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட சத்திரத்தை திறந்து வைத்து பேசிய குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காசிக்கும் தற்போது இருக்கும் காசிக்கும் இடையே மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

இந்த மாற்றம் பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகிய இரு கர்மயோகிகளால் சாத்தியமானது என்று புகழாரம் சூட்டினார்.

திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். அது மீண்டும் வெல்லும். இனி இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அதற்கு ஆதாரமாக தான் இந்த பிரம்மாண்ட கட்டடம் இந்த இடத்தில் எழுப்பி உள்ளது. யாரால் ஆக்கிரமிக்கப்பட்டாலும், அது காலத்தை கடந்து பல வருடங்கள் ஆனாலும் நீதியும் சத்தியமும் மீண்டும் நிலைாநாட்டப்படும் என்பதை தான் இது காட்டுகிறது. 2020 ல் எம்பியாக காசிக்கு வந்தேன்.

பிரதமர் மோடி, காசியின் வேட்பாளராக முதல்முறை போட்டியிட்ட நேரத்தில் தேர்தல் வேலைக்காக இங்கு வந்தேன். கிராமத்தில் ஒரு வாக்காளரிடம் பேசும் போது அவர், ‘இங்கு எந்த மாற்றமும் வரப்போவது இல்லை’ என்றார். ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காசிக்கும், இப்போதுள்ள காசிக்கும் சம்பந்தமேயில்லை. மகத்தான மாற்றங்களுக்கு சொந்தமாக மாறியிருக்கிறது. இதற்கு பிரதமர் மோடியும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் காரணம். மனதும் முயற்சியும் இருந்தால் உலகத்தில் முடியாதது எதுவும் இல்லை.

பெருமை


ரூ.60 கோடியில் தர்மசத்திரம் எழுந்து நிற்கிறது. இதற்கு கடன் வாங்கவில்லை. நன்கொடையால் சாத்தியமாகியிருக்கிறது. அப்படி இனிய கட்டடத்தை கலாசார பிணைப்பை இணைப்பை காசிக்கும், தமிழகத்துக்கும் இணைப்பை உருவாக்கும் இந்த விழாவில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்.

பிரதமரின் முயற்சி


சிவனிடம் இருப்பிடமாக முதலாவதாக வருவது காசிதான். காசி நகரில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன என்பதை பார்க்கும் போது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது.இது மிகவும் அற்புதமானது. இந்த மாற்றம் பிரதமர் மோடியின் பிரியத்தையும் முயற்சியையும் பிரதிபலிக்கிறது. யோகி அரசின் முயற்சி காரணமாக இந்த மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.

****

சமஸ்கிருதத்தை எதிர்ப்பதால் தமிழ் வளர முடியாதுதுணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

கோவை பேரூர் ஆதினம் 24ம் பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின், நூற்றாண்டு நிறைவு புகழரங்கம் விழா, பேரூர் ஆதின மடத்தில் உள்ள முத்தமிழரங்கத்தில் நேற்று நடந்தது. பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை வகித்து ஆசியுரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, பொன்னாடை போர்த்தி, மயில் தோகை மாலை மற்றும் தலைப்பாகை அணிவித்து, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கவுரவித்தார். தொடர்ச்சியாக, 24ம் பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் திருவுருவ படத்தை, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து வழிபட்டார். விழா நிறைவடைந்த பின், பேரூர் திருமடத்தில் உள்ள சாந்தலிங்கர் சன்னதியில் வழிபாடு நடத்தினார்.

இவ்விழாவில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: இறைவன் முன் அனைவரும் சமம். இறைவன் என்பதை உணரத்தான் முடியும். கண்ணால் பார்க்க வேண்டும் என்றால் இந்த யுகம் நமக்கு போதாது. பிரதமர் மோடி, 25 ஆண்டு காலம், முதல்வராக, பிரதமராக இருக்கிறார். நான் பல பிரதமர்களுடன் பழகியுள்ளேன். மோடி எப்போதும், திட்டங்கள் எல்லாம் முறையாக செயல்படுகின்றதா, அவ்வாறு செயல்படும் திட்டங்களின் பயன்கள் சாதாரண குடிமகன்களுக்கு எந்த அளவு சென்றடைகிறது என்பதை பார்க்கிறார்.

அதனால்தான், மகத்தான வெற்றி பெறுகிறார். சமஸ்கிருதத்தில் சொன்னால்தான் செவி கொடுத்து கேட்பாரா, தமிழில் சொன்னால் கேட்க மாட்டாரா என பலருக்கு சந்தேகம் உள்ளது.இறைவன், சமஸ்கிருதத்தில் வழிபடுங்கள் என்று எங்கும் சொல்லவில்லை. தமிழில் வழிபட வேண்டாம் எனவும் சொல்லவில்லை.

சமஸ்கிருதத்தை எதிர்த்துப் பேசுவதன் மூலம், தமிழ் ஒருபோதும் வளர முடியாது. தமிழ் ஒரு தீண்டத்தகாத மொழி என சொல்லி, சமஸ்கிருதம் ஒருபோதும் வளர முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

***

கோயில் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – நீதிமன்றம் கேள்வி!

கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, கோயில் சொத்துகளை அபகரித்தவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வாரந்தோறும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

***

மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா – சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!

மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆயிரத்து 40வது சதய விழா அரசு விழாவாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் நிகழ்ச்சியில் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கலைஞர்களின் நாட்டியாஞ்சலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

2ஆம் நாள் நிகழ்ச்சியில் கோயில் ஓதுவார்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரிய கோயிலில் இருந்து யானை மீது திருமுறைகள் எடுத்து வரபட்டன. இதனை தொடர்ந்து, சோழன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

****

ராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ.3,000 கோடி நன்கொடை

உத்தரப்பிரதேசத்தில்   உள்ள அயோத்தியில் பால ராமர் கோவில் கட்டுமான பணிக்கான நிதி திரட்டும் பிரசாரம் கடந்த, 2022ல் துவங்கியது.

க டந்த ஆண்டு ஜனவரி, 22ல் கோவில் கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டு பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

, நவம்பர் .,25ல் கோவில் கொடியேற்று விழா நடக்கிறது. இதையொட்டி, ராமர் கோவில் கட்டுமான குழு தலைவர் நிரிபேந்திர மிஸ்ரா நேற்று அளித்த பேட்டி:அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிக்கு பொது மக்கள், 3,000 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தனர். கோவில் கட்டுமான பணிகள், 1,800 கோடி ரூபாயில் கட்ட திட்டமிடப்பட்டது. இதில், 1,500 கோடி ரூபாய் இதுவரை செலவிடப்பட்டுள்ளது.

நவ.,25ல் நடக்கும் கொடியேற்ற நிகழ்வில், பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கொடிமரத்தில் கொடியேற்றுவார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டுமான பணிக்கு நன்கொடை கொடுத்தவர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். இதில், 8,000 பக்தர்கள் பங்கேற்கின்றனர் என்று நிரிபேந்திர மிஸ்ரா கூறினார்.

***

நெல்லையப்பர் கோவிலுக்கு உத்தரகண்டிலிருந்து யானையாஅரசு பதிலளிக்க உத்தரவு

‘திருநெல்வேலி நெல்லை யப்பர் கோவிலுக்கு உத்தரகண்டில் இருந்து குட்டி யானையை அழைத்து வர, தடை கோரிய மனுவுக்கு, தமிழக அரசின் வனத்துறை, ஹிந்து அறநிலையத்துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த, ‘பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இருந்த, 55 வயதான பெண் யானை காந்திமதி உடல் நலக்குறைவால் இறந்தது.

இதையடுத்து, இந்த கோவிலுக்கு, உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து, 5 வயது குட்டி யானையை அழைத்து வர, அறநிலையத்துறை மற்றும் வனத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளன.

உத்தரகண்ட் வனத்துறை சரணாலயத்தில் பராமரிக்கப்படும் குட்டி யானை, தாயிடம் இருந்தும், அதன் கூட்டத்தில் இருந்தும் பிரித்து, கொண்டு வரப்பட உள்ளது.

‘யானைகள் வைத்துக்கொள்ள தனி நபர்களுக்கும், கோவில்களுக்கும் உரிமம் வழங்கக்கூடாது’ என, உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளன.

எனவே, உத்தரகண்டில் இருந்து குட்டி யானையை அழைத்து வர தடை விதிக்க வேண்டும். கோவில் விழாக்களுக்கு இயந்திர யானைகளை பயன்படுத்த உத்தரவிட வேண்டும்.

ஆயிரக்கணக்கான கி.மீ., தொலைவில் இருந்து குட்டி யானையை அழைத்து வரும் முடிவை கைவிட கோரி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதத்துக்கு பின், தலைமை நீதிபதி, ”தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள் ளது மகிழ்ச்சி அளிக் கிறது. இது, குறிப்பிடத்தக்க வளர்ச் சிக்கு சமம். இருப்பினும், நாட்டின் பிற மாநிலங்களில் இதுபோன்ற நிலை இல்லை,” என, வருத்தம் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், இந்த மனுவுக்கு, தமிழக வனத்துறை, ஹிந்து அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை தள்ளி வைத்தனர்.

***

கோவில்மடங்கள் சொத்துக்கள் விபரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதில் தயக்கம் ஏன்அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்‘ கேள்வி

 ‘கோவில்கள், மடங்கள் மடங்களின் சொத்துக்கள் தொடர்பான விபரங்களை, இணையதளத்தில் பதிவேற்றுவதில், அறநிலையத்துறை தயக்கம் காட்டுவது ஏன்’ என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.கோவில்கள், மடங்கள், ஹிந்து மத கட்டளைகளின் நிதி மற்றும் சொத்துக்கள் குறித்த அரசாணைகள், டெண்டர் அறிவிப்புகள், அனுமதிக்கான உத்தரவு போன்றவற்றை, உடனுக்குடன் பொது வெளியில், பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவேற்ற செய்ய உத்தரவிட கோரி, சென்னை மயிலாப்பூரை சேர்ந்த, ‘இண்டிக் கலெக்டிவ்’ அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை தரப்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ”டெண்டர் விபரங்கள் அந்தந்த கோவில் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.

”கோவில் சொத்து ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்படுவது இல்லை. அவற்றை கொண்டு ‘சைபர்’ மோசடி நடக்க வாய்ப்பு உள்ளது,” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கூறியதாவது:

தகவல் அறியும் சட்ட பிரிவு 4ன் கீழ், பொது அதிகாரிகள் தாமாக முன்வந்து சில தகவல்களை பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

டெண்டர்கள், தணிக்கை ஆட்சேபனைகள், நில பதிவேடுகள், நிதி தொடர்பான அறிவிப்புகள், சட்டத்தின்படி பொது ஆவணங்கள் என்பதால், அவற்றை பதிவேற்றுவதில் என்ன தயக்கம்.

சைபர் குற்றங்கள் நடக்காமல் தடுக்க, பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன. அவ்வாறு இருக்கும்போது, ஆவணங்களை பதிவேற்ற முடியாது எனக் கூறுவது ஏற்புடையதல்ல.

அறநிலையத்துறை சட்டப் பிரிவு 29ன்படி, சொத்து விபரங்கள், ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு, அனைத்து கோவில்கள் விபரங்களும் பதிவேற்ற வேண்டும்.

இப்பணிகளை செய்ய போதுமான நிதி, உள்கட்டமைப்பு, அறநிலையத்துறையிடம் இல்லையா? இவ்வாறு நீதிபதி கேள்விகளை எழுப்பினார்.

இதையடுத்து, எந்தெந்த தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது; பதிவேற்றம் செய்யாத தகவல்கள் என்ன என்பது குறித்து விபரங்களுடன், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நவ., 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்     வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு நவம்பர் மாதம் ஒன்பதாம்  தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் 12 மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

—SUBHAM—-

Tags – World Hindu News, 2-1I-2025, ஞானமயம் ஒளிபரப்பு, வைஷ்ணவி,

ஆலயம் அறிவோம்! திருப்புல்லாணி திருத்தலம் (Post No.15,145)

திருப்புல்லாணி  ஆலயம் 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,145

Date uploaded in London – –  3 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 2-11-25 அன்று ஒளிபரப்பான உரை!

ஆலயம் அறிவோம்!

வழங்குவது சந்தானம் நாகராஜன்.

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.

ஞானமயம் நிகழ்ச்சியைச் சிறப்புற அமைத்து நடத்தி வரும் திரு கல்யாண்ஜி அவர்களுக்கும் லண்டன் திரு சுவாமிநாதன அவர்களுக்கும் இதில் சிறப்புரை ஆற்றும் பெருமக்களுக்கும் எனது நமஸ்காரம். வணக்கம்.

எள்கி நெஞ்சே! நினைந்து இங்கிருந்தென்?  தொழுதும் எழு

வள்ளல் மாயன் மணிவண்ணன் எம்மான் மருவும் இடம்

கள் அவியும் மலர்க் காவியும் தூ மடல் கைதையும்

புள்ளும் அள்ளற் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே

                                                                                      – திருமங்கையாழ்வார் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றான திருப்புல்லாணி திருத்தலமாகும்.

இத்தலம் தமிழ்நாட்டில் இராமநாதபுரத்திற்கு தெற்கே கீழக்கரை செல்லும் பாதையில் எட்டு மைல் தொலைவில் உள்ளது.

மூலவர்: ஶ்ரீ ஆதி ஜகந்நாதன் (கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்)

தாயார்: கல்யாணவல்லி, பத்மாஸனி

உற்சவர் : கல்யாண ஜெகந்நாதன்

தீர்த்தம்: ஹேம தீர்த்தம், சக்கர தீர்த்தம், ஹம்ஸ தீர்த்தம், வருண தீர்த்தம், தர்ம தீர்த்தம், ஆதி ஸேது, ராம தீர்த்தம் உள்ளிட்ட பத்து தீர்த்தங்கள் இங்கு உள்ளன.

ஸ்தல விருட்சம் : அரசமரம். இதன் நிழலில் நாகபிரதிஷ்டை செய்வோருக்கு மக்கட்பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

விமானம் : கல்யாண விமானம் (இங்கு உள்ள விமானங்கள் மொத்தம் ஏழு)

இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறுகளும் சரித்திர வரலாறுகளும் பல உண்டு.

வியாஸ பகவான் அருளிய ஆக்கினேய புராணத்தில் இந்த தலத்தின் வரலாற்றை அவர் விவரிக்கிறார்.

இராமபிரானின் தந்தை தசரதனால பூஜிக்கப்பட்ட தலம் இது.

சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனைக் கொல்லும் பொருட்டு இராமபிரான் சேதுக்கரையை அடைந்து கடலைக் கடக்க உபாயம் சொல்லுமாறு கடல் அரசனான வருண பகவானைப் பிரார்த்திக்கிறார்.

இப்படி பிரார்த்தனையை ஏழு நாட்கள் தர்ப்பைப் புல்லான நாணலில் இருந்து இராமர் செய்த தலம் இது. ஆகவே இது தர்ப்பசயனம் என்று சம்ஸ்கிருதத்திலும் புல்லணை என்று தமிழிலும் அழைக்கப்படலாயிற்று. இராமர் தர்ப்பசயன ராமர் எனப் பெயர் பெற்றார்.

இராமரே இத்தலத்துப் பெருமாளை பூஜித்ததால் இங்கு பெருமாள் பெரிய பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.

இங்கு ஆதி ஜெகநாதாரை பூஜித்து அவரால் கொடுக்கப்பட்ட வில்லைப் பெற்று இராவணனை ராமர் வதம் செய்தார்.

பூரி க்ஷேத்திரத்தில் அரூபியாகத் திகழும் பெருமாள் இங்கு சங்கு சக்கரங்களுடன் நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறார்.

இன்னொரு வரலாறும் உண்டு.

புல்லவர், கண்ணுவர், காலவர் ஆகிய மூன்று மஹரிஷிகள் இந்த பூமியில் தவமியற்றினர். அவர்களுக்காக பகவான் வைகுண்டத்திலிருந்து இங்கு வந்து அஸ்வத்தமாக அதாவது அரசமரமாக அவதரித்தார். இந்த அரசமரத்தையே பக்தர்கள் அஸ்வந்த நாராயணன் என்று தியானித்தனர்.

வடமொழியில் புல்லாரண்யம் என்று அழைக்கப்படுகிறது இத்தலம். இச்சொல்லுக்கு மலர்கள் மலர்ந்த காடு என்றும் முனிவர்கள் தவம் செய்த காடு என்றும் இரு பொருள் உண்டு.

இராமன் இலங்கையிலிருந்து திரும்பி வரும் போது இங்கு வந்து பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க பட்டாபிஷேகம் செய்து கொண்டதால் அவருக்கு பட்டாபிராமன் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

இங்கு ஆஞ்சனேயர் தென் திசை நோக்கிக் கூப்பிய கரங்களுடன் இராம தியானத்தில் ஆழ்ந்துள்ள காட்சி குறிப்பிடத்தகுந்த ஒன்று.

இத்தலத்தில் திருமங்கை ஆழ்வார் இருபத்தோரு பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செய்திருக்கிறார்.

திருஞானசம்பந்தர் “அணையில் சூழ்கடல் அன்றடைத்து வழி செய்தவன்” என்று திருப்புல்லாணி பற்றி குறிப்பிடுகிறார்.

திருநாவுக்கரசர், “கடலிடை மலைகள் தம்மால் அடைந்த மால்களும் முற்றி: என்று திருப்புல்லாணித் தலத்தைச் சிறப்பிக்கிறார்.

இத்தலத்தைப் பற்றிய பல விவரங்களை புல்லை அந்தாதி, திருப்புல்லாணி மாலை, தெய்வச்சிலையான் ஸ்துதி, வாசனமாலை, புல்லாணிப் பெருமாள் நலுங்கு உள்ளிட்ட பல நூல்கள் விளக்குகின்றன.


திருப்புல்லாணி, பாண்டிய நாட்டில் கீழ்ச்செம்பி நாடு என வழங்கப்படும் பகுதியைச் சேர்ந்ததாகக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகிறது.

இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தின் சேதுபதிகள் இத்தலத்திற்கு பல்வேறு தொண்டுகளை ஆற்றினர்; ஆற்றி வருகின்றனர்.

கி.பி.1646 முதல் கி.பி.1676 வரை போகலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட திருமலை ரெகுநாத சேதுபதி, திருப்புல்லாணி கோயிலில் காங்கேயம் மண்டபம், நுழைவுவாயில் கோபுரம், கண்ணாடி மண்டபம், தாயார் சந்நிதி, பெருமாள் சந்நிதி, ஆண்டாள் சந்நிதி, திருச்சுற்று மதில்கள், இராஜகோபுரம், சக்கரத்தீர்த்தம், மடைப்பள்ளி ஆகிய கட்டுமானங்களைச் செய்தார் என துளசிங்கமாலை என்ற நூல் கூறுகிறது.

திருப்புல்லாணி தரிசனத்தைச் செய்தவர்கள் இங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆதி சேது என்று அழைக்கப்படும் சேது தரிசனத்தையும் உடனே மேற்கொள்வது வழக்கம். 

ரத்னாகரம் எனப்படும் சேதுவைக் கண்ணால் பார்ப்பவர்க்கு பாவங்கள் இல்லை என்று இராமரே தெரிவித்துள்ளார்.

“திரு அணை காண அருவினை இல்லை” என்பது வழக்கு மொழியாகும்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ ஆதி ஜகந்நாதரும் கல்யாணவல்லியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

**

Ancient Tamil Encyclopaedia -Part 29; One Thousand Interesting Facts -Part 29 (Post No.15,144)

Written by London Swaminathan

Post No. 15,144

Date uploaded in London –  2 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

Akananuru wonders continue………………… 

175

We learnt that Mamular (maamoolar) was the oldest historian in Sangam Tamil literature because he mentioned the Nandas, Mauryas and their southward march with the help of Vadugas (non- Tamils). He praised Pulli, a chieftain of Venkatam Hills. The same Pulli is sung by another poet by name Kalladanar (kallaadanaar).

He got this name because he is from a town called Kalladam according to commentators. It is not new. In Ramayana and Mahabharata, we did not know the birth names of many people, particularly women. Pandu’s wife Madri is from Maadra Desa. Gaandhaari is from Gandhara desa / Afghanistan and so we called her Gaandhaari .; now her town is called Kandahar.  Kunti, Yadava princess is called by that name because she was the daughter of Kuntibhoja, a Yadava king. In Tamil, also queens real names are not known. A Pandya queen was called Pandya Mahaa devi, a Choza queen was called Choza Mahaadevi. In fact, women were proud of their origin or their birth place. Maithili/Sita devi was called by that name because she was from the city of Mithila. Her other name Jaanaki shows that she was thee foster child of King Janaka. So Kalladanaar’s real name is not known. Manikkavasagar (maanikkavaasagar), great Saivite poet, also confirms there was a Siva shrine in the town of Kallaadam.

கல்லாடத்துக் கலந்தினி தருளி [oru sivasthalam. kalladathug kalanthini tharuli] (திருவாசகம் [thiruvasagam] 2, 11).

***

The same poet is attributed with another book called Kallaadam/ Kallāṭam (கல்லாடம்) noun < கல்லாடர். [kalladar.] Name of an amatory poem describing the erotic emotions in 100 akaval stanzas by Kallāṭar; கல்லாடரால் அகப்பொருளின் துறையமையநூறு அக வற்பாக்களாற் செய்யப்பட்ட ஒருநூல். [kalladaral agapporulin thuraiyamaiyanuru aga varpakkalar seyyappatta orunul.]

From these we come to know that he was a great Siva devotee. Let us look at his 7 verses in Akananuru (Akam)  9, 83, 113, 171, 199,209, 333. His poems are in other books Purananuru (Puram) and Kuruntokai (Kuru.)

Kalladar mentioned some important historic battles and a mysterious goddess called  KOLLIP PAAVAI.

176

Battle of Talaiyaalangkaanam

தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியன்

Pandya Nedunchelian scored a big victory in a place called Talai Aaalan Kaanam Chera king, Choza king and five  local heroes Titiyan, Ezini, Erumayooran, Ilankovenmaan, Porunan -all the SEVEN joined together and attacked Nedunchezian. The place is near Nannilam in Thanjavur area. One could imagine he came all the way from Madurai chasing the armies of seven other heroes. His victory over these people is praised by many other poets too. The word for war/battle in Tamil is SERU. So he has the epithet one who has won the battle of Talai aalankaanam. தலையாலங்கானத்து செருவென்ற.

Here is a verse in his praise: Akam 209.

209 ‘தோளும் தொல்கவின் தொலைந்தனநாளும்
அன்னையும் அருந்துயர் உற்றனள்அலரே,
பொன்னணி நெடுந்தேர்த் தென்னர் கோமான்,
எழுஉறழ் திணிதோள் இயல்தேர்ச் செழியன்,
நேரா எழுவர் அடிப்படக் கடந்த 5
ஆலங் கானத்து ஆர்ப்பினும் பெரிது என,
ஆழல் வாழிதோழி !- அவரரே,


மாஅல் யானை மறப்போர்ப் புல்லி
காம்புடை நெடுவரை வேங்கடத்து உம்பர்
அறைஇறந்து அகன்றனர் ஆயினும்நிறைஇறந்து 10
உள்ளார் ஆதலோ அரிதே – செவ்வேல்


முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி, 15


நிலைபெறு கடவுள் ஆக்கிய,
பலர்புகழ் பாவை அன்னநின் நலனே. 17

***

177

There are two battles, and one mysterious goddess mentioned in this verse.

This verse is part of a book which deals with love, sex and family life what Tamils classified as Akam. So, all these come in a verse where a conversation is imagined between the lady of the house and her girl friend or female companion.

When she doubted the return of her lover, her friend says how can that man forget your beauty and so he would rush back to you.

In that context, she says,

Don’t worry about the loud gossip. I know the gossip is louder than the uproar when the mighty Pandya king defeated gang of seven at Talai Aalnkaanam .

I know your man has crossed the Venkatam hills under the chieftain Pulli .

***

178

காரி, ஓரி,  கடை எழு வள்ளல்கள், கொல்லிப்பாவை

You know the most beautiful goddess of Kolli hills known as KOLLI PAAVAI, a divinity made by the devas and praised by the world. Your beauty is equal to that goddess of Kolli hills which is famous because Kaari, chieftain and philanthropist of Mullur killed another philanthropist Ori and gave that hill  full of jack fruit trees to the Chera king.

Kolli Pavai is a mysterious goddess because we don’t have any shrine for her now and we never hear about her in other Hindu scriptures. We hear about such Goddesses only in the north such as Vindhyavasini etc.

***

179

In this passage we get some details about KOLLI PAAVAI, fight between two philanthropists. Both Kaari and Ori are prised by many poets as part of the Last

Seven Philanthropists in Hindu literature

In one poem our poet has described two battles and one shrine in the Kolli hills.

In other poems Mr K gives more interesting details about Lizard Astrology or omens

To be continued……………………….

Tags- Kalladanar, Talaialankanam battle, Nedunchezian, Kolli Pavai, Kari, Ori, Seven Philanthropists,Ancient Tamil Encyclopaedia -Part 29; One Thousand Interesting Facts -Part 29 

மதுரை மீனாட்சி கோவிலில் நவரத்தினக் குவியல்! (Post.15,143)-1


Written by London Swaminathan

Post No. 15,143

Date uploaded in London –  2 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

Part 1

மதுரை கோவிலில் உள்ள தங்க நகைகளும், நவரத்தின கற்களும் 

மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் இருக்கின்றன .அவைகளை மன்னர்களும் பிரபுக்களும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே, தானமாக அல்லது காணிக்கையாக வழங்கியுள்ளனர் .அவைகளில் ஆங்கிலேயர்  கொடுத்த நகைகளும் அடங்கும்

பாண்டிய மன்னர்களும் நாயக்க மன்னர்களும் பல  குறுநில மன்னர்களும் ,விஜயநகர  மன்னர்களும் அளவற்ற ஆபரணங்களை அன்னை மீனாட்சிக்கும் , அப்பன் சுந்தரேஸ்வரருக்கும் அணிவித்து மகிழ்ந்தார்கள் ;அவைகள் இன்று கருவூலத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன

பாண்டியநாடு முத்துக்களுக்கு பெயர் போனது பூழியர் கோன்  தென்னாடு முத்துடைத்து – என்று புலவர்கள் பாண்டிய நாட்டை புகழ்ந்து உள்ளார்கள். இந்த முத்துக்களாலான அணிகலன்களை  மீனாட்சி அம்மைக்கு சூட்டி மகிழ்ந்தார்கள். என்ன ஆபரணங்கள் கோவில் உள்ளன என்ற பட்டியலை எழுதியும் வைத்துள்ளார்கள் மு. தங்கவேல் தேசிகர் , கோவில் கும்பாபிஷேக மலரில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் விரிவான கட்டுரையை எழுதியிருக்கிறார்

இப்போது இவைகளை விழாக் காலத்தில் காட்சிக்கு வைக்கின்றனர்.  முத்துச் சொருக்கு , முத்து உச்சிக்கொண்டை, முத்தங்கி ஆகியன அம்மனுக்கு உள்ளன. அப்பனுக்கும் தனித்தனி முத்து அங்கிகள் ,முத்து மாலைகள், முத்து கடிவாளம் இருக்கின்றன. நவராத்திரி காலத்தில்,அன்னை மீனாட்சிக்கு முத்துச்    சொருக்கு ,முத்து உச்சிக்கொண்டை ஆகியவற்றை அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள். இதில் முத்துச் சொருக்கின்  எடை 162 தோலா ; இதில்  4921 முத்துக்களும் ௧௨௦ பலச்ச வைரங்களும்  844 சிவப்பு கற்களும்  29  மரகதங்களும் பதிக்கப் பெற்றுள்ளன

ஒரு தோலா – 11. 66 க்ராம்

1 tola = 11. 66 grams. More gramsely, it’s 11. 6638 grams

இதேபோல ஆண்டுதோறும் திருக்கல்யாணத்தின்போது முத்து மேற்கட்டி, திருமண மண்டபத்தின் மேற்கட்டியாக வைக்கப்படுகிறது இது வெல்வெட்டினாலும், பட்டினாலும், சரிகையினாலும் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் . இதன் நான்கு மூலைகளிலும் இருதலை  யாளி, கிளி, புலி, பறவைகள், தாமரைப்பூ, சூரியகாந்தி பூ உருவங்களும் முத்துக்களால் கண்கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன .இதில் உள்ள முத்துக்கள் 71 ,755   சிறிய முத்துக்கள் ஆகும்  அடுத்ததாக பட்டாபிஷேக கிரீடத்தைப் பார்ப்போம்  இதில் பலா கொட்டை அளவுக்கு உள்ள பெரிய முத்துகள் இருக்கின்றன ; சோமாஸ்கந்தர்  வடிவில் இருக்கும் முருகனுக்கு  சிறிய முத்தங்கியும் இருக்கிறது . மீனாட்சி அம்மன் கையில் பிடித்திருக்கும் கிளியும்  முத்துக்களால் ஆனது ;ஆவணி மூலத்திருவிழாவில்  நான்காம் நாள் புறப்பாட்டின்போது  மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும் அடி முதல் முடி வரை முன்னும் பின்னும்  முத்தங்கி மற்றும் முத்துமாலைகளை சாத்தி அலங்கரிக்கிறார்கள்

சித்திரைத் திருவிழாவின்  எட்டாவது நாளிலும் ஆவணி மூலத்திருவிழாவின் ஏழாவது நாளிலும்

முறையே  அம்மனுக்கும் சுவாமிக்கும் நடக்கும்

பட்டாபிஷேகத்தில் சாத்துவதற்காக  பட்டாபிஷேக கிரீடம் இருக்கிறது . இது ஹம்பி அரசரான அப்பாஜிராயர் கொடுத்தது; இதன் எடை  134 தோலா ;920 மாணிக்கங்களும் , 78 பலச்ச  வைரமும் ,11 மரகதமும் ஏழு நீலமும் ,எட்டு  கோமேதகமும் இந்த கிரீடத்தில்  பதித்து வைத்து இருக்கின்றனர் . ரத்தினங்களை பலப்படுத்த இடையிடையே தங்கத்தை சேர்த்துள்ளனர் . இதை குந்தன  கட்டிட வேலைப் பாடு என்று சொல்வார்கள். தமிழகத்திலும் ராஜஸ்தானிலும்  இது நடைமுறையில் உள்ளது.

பட்டாபிஷேகவும்கீரிடம் சாத்திய பின்னர்  திருமலை நாயக்கர் கொடுத்த ரத்தின செங்கோலை   சுவாமி கையில் கொடுக்கிறார்கள் ; அச்  செங்கோலின் எடை  67தோலா .இதில் 761 சிவப்புக் கற் களும் , 74 வைடுரியங் களும் ௨௧ பலச்ச வைரங்களும்  2 69 மரகத ங்களும் , 44 முத்துக்களும் பதிக்கப்பட்டுள்ளன .திருக்கல்யாணத்தன்று எழுந்தருளும்  பெருமானுக்கு வாசு மாலை  கிரீடம் சாத்துவார்கள் . இதில் முன்பக்கமும் பின்பக்கமும்  மூன்று வரிசைகளில் மாணிக்கக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன இதன் எடை 136  தோலா . இதில் 247 கெம்பு, 439 முத்து 39 மரகதம் 300 பவளம் 27 பலச்ச வைரம்  ஆறு நீலம் இரண்டு கோமோதகம்  241 பவளம் பதித்துக் கட்டியிருக்கிறார்கள் . இது பாண்டியர் காலத்து நகை.. 

To be continued…………………………

Tags- Part 1, மதுரை மீனாட்சி கோவில், நவரத்தினக் குவியல் ,தங்க நகைகள், நவரத்தின கற்கள்

Three books on Plato and the Upanishads! (Post No.15,142)

Written by London Swaminathan

Post No. 15,142

Date uploaded in London –  2 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Scholars are attracted to the topic Plato and the Upanishads and there are three books published with the same topic in the past 50 years.

I read all the three books recently and almost similar topics are discussed by the three authors. Indian authors on Upanishads also compared them.

***

Plato and the Upanishads by Vassilis Vitaxis  was published by Arnold Heinermann Publishers (India) Private Limited New Delhi at the price of Rs 20 in 1977.

The review in The Weekly Mail said,

“It has been established that there was contact between India and Greece even long before Alexander’s campaign. Eusebius (315 CE) speaks of a tradition which he attributes to Aristoxenus, the well known wrier on harmonics and a pupil of Aristotle that certain learned Indians actually visited Athens and conversed with Socrates. The similarities between the Greek philosophy and early Indian thought are very close.

The attempt of the author is to show how the philosophy of Plato has much in common with the philosophy of the Upanishads. The quest of the leaders of the Eleatic school for ONE REALITY underlying material phenomena is very much the same as the metaphysical quest of the Upanishadic seers of that ‘knowing which everything else becomes known.’

The Socratic irony may be matched by a passage in the Kena Upanishad which declares with reference to the TRUTH  “it is not understood by those who understand; it is understood by those who do not understand”.

1

The author finds many parallels between the Upanishads and Plato both in method and substance; the dialogue forms are used by both the Upanishads and Plato. Moreover, this serves as a suitable instrument or vehicle of teaching.

2

Indian philosophy insists that the sphere of logical  thought is far exceeded by that of the mind’s possible experience of reality. Similarly, Plato sees ‘Supreme Truth cannot be orally thought or committed to writing. It can only be an object of some inner experience.

3

In the Phaedrus, the image of the chariots used by Plato is almost the same as in Katha Upanishad. Both the Upanishads and Plato use sleeping state as a metaphor to signify the conditions of life lacking philosophy or enlightenment.

4

The sun is used by the Upanishads and Plato as the cause of light and so of vision and visibility. The light of the sun directed at man that is a beam turned towards the inner self, is platonic. This principle “know thyself“ was the foundation on which Plato erected his theories. It is needless to add that it is Upanishadic method also.

5

There are however several differences between Plato’s object and that of the Upanishads. One of them is that Plato seems to believe in the existence of many souls. His is in consonance with certain schools of India philosophy like Sankhya , but not with Advaita which is the major principle expounded by the Upanishads.

6

Further there are many passages in Plato’s RUPUBLIC wherein he refers to God as if He were a person. Nevertheless, he has also evidence that this is only an image or a way of speaking and His true concept about the Absolute and infinite, that Real Being is  anything but a personal God .

7

Both Plato and the Upanishads regard self -perception as a source of purity in information, and stress the importance of thought and need for reflection and contemplation.

8

Plato also speaks of two kinds of knowledge, the lower leading to opinion and the higher leading to knowledge, which is similarly mentioned in the Mandukya Upanishad and the Katha Upanishad.

9

There is also the touch of the principle of MAYA in Plato who states that the empirical world is thought of as a shadow of reality. “our senses perceive only ghosts and appearances, which are in a state of continuous flux. Only the mind (NOUS) can reach the TRUTH by the communion of the soul through whatever immortal quality it possesses with the unchangeable and the real within the world of form which exist in a super celestial state beyond the substance. Both Plato and the Upanishads  agree about the impossibility of defining the Absolute.

10.

These and many other parallels, quoted by the author, are of great interest to the students of comparative religion and philosophy. The ultimate emphasis of Indian thought has always been liberation or Moksha. The ultimate emphasis of Greek thought has always been to expand the norms and forms of life in whatever manner possible.

–Mail Newspaper Interview by S Y K.

***

Two more books

Plato and Vedic Idealism

Swami Paramananda

Anmol Publications, New Delhi, 1990

***

Hindu Influence on Greek Philosophy

J Lomperis, Department of Political Science, Duke University

All the three books mentioned here are available at University of London Library at SOAS, London.

***

My old articles on the same subject

Plato used Hindu Microcosm and Macrocosm!

Research paper No 1944; Date: 20th June 2015

***

Forty-Six Hindu Discoveries and Indianization of Greek Philosophy (Post No.3837)

Date: 21 APRIL 2017; Post No. 3837

***

Science and Religion in Upanishads

Article No.1925; Date :11th June 2015

***

31 Beautiful Quotations on Upanishads (Post.12,206)

Post No. 12,206; Date  –  30 June , 2023              

***

AUROBINDO’S QUOTATIONS ON THE VEDAS AND THE UPANISHADS (Post No.8000)

Post No.8000; Date– 18 May 2020   

***

List of 121 Upanishads
Post No 1471 ; Dated 9th December 2014

***

यत् पिण्डे तत् ब्रह्माण्डे’ “Your Body is a Miniature Universe” : Upanishad and Charaka Samhita (Post No.14,418)

Post No. 14,418; Date–  21 April 2025

–subham—

Tags- Plato and the Upanishads, three books

S Nagarajan Articles index for OCTOBER 2025 (Post No.15,141)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,141

Date uploaded in London –   2 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

S Nagarajan Articles index OCTOBER 2025 

1-10-25 15042 குரங்கு பிடிக்கும் விதம்! (11-7-25 கல்கிஆன்லைன் இதழில்

            வெளியான கதைகள்)

2-10-25 15045 நீங்கள் தலைவனாக வேண்டுமா? 

3-10-25 15048 S Nagarajan Articles index for SEPTEMBER 2025

4-10-25 15051 இரண்டு லட்சம் மக்கள் வாழ விரும்பும் முதல் விண்வெளி

           தேசம் –  அஸ்கார்டியா! (4-7-25 கல்கிஆன்லைன் இதழ்

            கட்டுரை)

5-10-25 15055 எண்ணத் தெரியும் வண்ணப்பூச்சிகள், பறவைகள்,

            விலங்குகள் (7-7-25 கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

6-10-25 15057 லஸ் மரீஸ்மாஸ் (Las Marismas)– பறவைகளின் புகலிடமான

                                ஒரு சதுப்புநிலம்! (11-7-25 கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

6-10-25 15058 ஆலயம் அறிவோம் – அன்பில் ஆலந்துறை (ஞானமயம்        

            5-10- 25 ஒளிபரப்பு)

7-10-25 15061 சந்திரனுக்கு என்ன நிறம்? (10-7-25 கல்கிஆன்லைன் இதழ்

            கட்டுரை)

8-10-25 15065 அன்றாட வாழ்வில் புகுந்துவிட்ட ஏஐ! (13-7-25

             கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

9-10-25 15068 ஆறு திசைகளுக்கு நமஸ்காரம் செய்தவருக்கு புத்தர்

                                கூறிய அறிவுரை! (15-7-25 கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

10-10-25 15071 வாழ்க்கையில் முன்னேற Backward Law தெரிந்து

              கொள்ளுங்கள்(23-7-25 கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

11-10-25 15074 செல்வம் சேர ஒரு சின்ன வழி! காமதேனு

                                   வழிபாடு;  பசுபதி தலங்கள் ஐந்து! (14-7-25 கல்கிஆன்லைன்

                                    இதழ் கட்டுரை)

12-10-25 15078 சிரிக்கும் மனமே சிறந்த மனம்! (MENTAL FITNESS) (14-7-25

                                    கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

13-10-25 15081 ஜென் எக்ஸ், மில்லென்னியல்ஸ், ஜென் இஸட், ஜென்

                                  ஆல்ஃபா, ஜென் பீடா? என்னங்க இது? இவர்கள் எல்லாம்

                                    யாருங்க?! (14-7-25 கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

13-10-25 15082 ஆலயம் அறிவோம் – தேரழுந்தூர் ஆமருவியப்பன்

             (ஞானமயம் 12-10-25 ஒளிபரப்பு)

14-10-25 15086 எலக்ட்ரிக் கேர்ள் ஆஞ்சலிக் காடின்! (ANGELIQUE COTTIN)    

                                    (27- 7-25 கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

15-10-25 15089 சந்திரனில் மறைந்திருக்கும் மலைகளோ! – ருவென்ஜோரி

                                      (RUWENZORI) (18- 7-25 கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

16-10-25 15092 எகிப்தின் ஜீவ ரத்த ஓட்டம் நைல் நதி! (23- 7-25

                                 கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

17-10-25 15095 பனிப்பாறையின் ஈமச்சடங்கு: சோகம் தரும் எச்சரிக்கை!

                                    (28- 7-25 கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

18-10-25 15098 ஹாலிவுட்டில் ஹிந்து வாழ்க்கைமுறை! (5-10-25 தினமணி

            கதிர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை)

19-10-25 15101 கஷ்டமான தருணங்களைக் கடக்க வைக்கும் ஜப்பானியப்

                                    பண்பாடு கமான்!(GAMAN) (28- 7-25 கல்கிஆன்லைன் இதழ்

                                   கட்டுரை)

20-10-25 15104 மடகாஸ்கர் தீவு:  அபூர்வ மிருகங்களைக் கொண்ட

             உயிருள்ள மியூஸியம்! (1- 8-25 கல்கிஆன்லைன் இதழ்

              கட்டுரை)

20-10-25 15105 ஆலயம் அறிவோம் – தேவப்ரயாகை திருத்தலம்

             (ஞானமயம் 19-10-25 உரை)

21-10-25 15108 இகேபனா! (IKEBANA) வளமான வாழ்க்கைக்கு! (29-7-25

            கல்கிஆன்லைன் கட்டுரை)

22-10-25 15110 சில சின்னப் பழக்கங்கள் – வாழ்க்கையில் முன்னேற…..  

                                   (30-7-25 கல்கிஆன்லைன் கட்டுரை)

23-10-25 15112 அதிசய மனிதர் அப்பே அலெக்ஸிஸ் மெர்மட் (ABBE

                                  ALEXIS MERMET) நிகழ்த்திய ரேடிஸ்தீசியா அதிசயங்கள்!  

             2-8-25 கல்கிஆன்லைன் கட்டுரை)

24-10-25 15114 படைப்பாற்றல் திறனைக் ஊக்குவிக்க மூன்று வழிகள்!

                                   (8-8-25 கல்கிஆன்லைன் கட்டுரை)

25-10-25 15117 செத்த குதிரை மீது சவாரி செய்யாதே!  (4-8-25

            கல்கிஆன்லைன் கட்டுரை)

26-10-25 15120 தரையில் வளராத மரங்களைக் கொண்ட அதிசயமான

             ஒலேபெனோகி ஸ்வாம்ப் (Okefeenokee Swamp) 

27-10-25 15122 கதிர்காமம் – ஆலயம் அறிவோம் (26-10-25 ஞானமயம்

             உரை)

28-10-25 15125 அற்புத மனிதர் மிஹாய் சிக்செண்ட்மிஹாய் (MIHALY

             CSIKSZENTMIHALYI)!  (4-8-25 கல்கிஆன்லைன் கட்டுரை)

29-10-25 15129 என்னைக் கண்டால் தமிழறிஞர்கள் ஏன் சார்

             ஓடுகிறார்கள்?)  (25-8-25 கல்கிஆன்லைன் கட்டுரை)

30-10-25 15132 விண்வெளியின் காலநிலை பூமிக்கு ஏற்படுத்தும்

             அபாயங்கள்! இனி கவலை இல்லை – கண்காணிப்பால்! 

             (10-8-25 கல்கிஆன்லைன் கட்டுரை)

31-10-25 15135 உலகெங்கும் சென்ற இந்திய மருத்துவ.

             ஞானம்!   (அக்டோபர் 2025 ஹெல்த்கேர் இதழில்

             வெளியாகியுள்ள கட்டுரை)

**

TIRUKKURAL CALENDAR , YEAR 1915, PUBLISHED IN COLOMBO

 TIRUKKURAL CALENDAR , YEAR 1915, PUBLISHED IN COLOMBO

POSTED BY LONDON SWAMINATHAN ON 1 11 2025.

–SUBHAM–

TAGS- KURAL, CALENDAR