I went to Madrid, capital of Spain , with my family on 26th August, 2022 and stayed there for three days. We went to the Royal Palace , the major tourist attraction of Madrid. It is huge and twice the size of Buckingham Palace in London. It took more than two hours to go through the building. In London they don’t allow you inside the palace. They allow you to only one hall or section every summer, through a highly priced ticket. In Madrid you buy a ticket and see thousands of treasures at one go.
There are 21 palaces, monasteries, and convents with huge gardens. More than 1,54,000 historic and artistic pieces are listed and most displayed. They allow photography only up to a point in the entrance section. Then your eyes are the cameras. I tried to buy a book with pictures, but only some important objects are covered in the book.
Official halls
Main staircase- families with children must stand in a long queue to use a small lift. Others have to walk through long steps. Good exercise! One should not miss the beautiful paintings on the ceilings. The royal family still lives in one part of the place complex. Depending upon one’s interests, one can spend hours looking at them. Various types of novel clocks, variety of porcelainwares, Chinaware and musical instruments are displayed. Each object would sell for millions of dollars in auction houses. So, every room has a staff with eagle eyes.
The huge collection and their maintenance in perfect condition show Spanish monarchy’s interest in the collection and patronage of art. Even now the palaces continue to host state ceremonies and visiting dignitaries. It has got over 3400 rooms. It is the largest functioning palace in Europe.
The palace has 500 year history. It was called Alcazar, that is the Moorish castle or fortress. Moors were Muslim tribes of north Africa who occupied Spain and Portugal from 8th century to 15th century. But new buildings were constructed 300 years ago.
After passing the staircase, we entered the Hall of Columns with Flemish tapestries and paintings of famous Spanish painters.
Then we see Chares III’ s Anteroom. This was the hall where the king had lunch and received ordinary audiences. The ministers come and greet the king before the meal; when he started eating, they retire to Prince’s room and greet him. Before king finish eating, they come back and stand. It took more than one hour according to a contemporary traveller who visited the palace in 1780s. During the meal king speaks only to Nuncio (Pope’s ambassador to government) who stood a few steps away from the king.
The portraits of famous painters which decorated the palace halls are now in Prado Museum in Madrid.
Then we see Antechamber or Conversation Room where the king had supper. The ambassadors meet the king here.
Chamber of Charles III or Gasparini Room is the hall where the king met special audiences. It is beautifully decorated. This is where the king dressed himself.
Novel clocks and huge chandeliers are seen in every room. Porcelain room has very big vases and cups.
We go to Yellow Room which owes its name to the drapes ordered by Ferdinand VII. He hung them there. Today the walls are covered by various tapestries.
Banqueting hall is very impressive and surprising for its length. The great hall was used for balls and gala dinners. Over 100 people can sit at this dining table.
The ‘Tram Car’ of Charles III
The long and narrow room received its current layout and name in 1880. It improved the access between the Gasparini Room and Banqueting Hall.
Silverware Room was the Queen’s Ante chamber. Though we can see lot of silver vessels there, they were not ancient. Joseph Bonaparte melted down the old set to face necessities of war.
Queens’ Antechambers, Throne room, Royal chapel and King’s Antechamber have golden decorations. Notables are Sphinx Table, Royal Crown and the throne. It is needless to say the Royal Chambers have golden look. Spanish and Portuguese plundered the gold from ancient Aztec and Inca civilisations. Unless the Europeans plundered and exploited the innocent and rich countries around the world, they would not have become major powers today.
If Europeans claim they are developed countries, one can say it happened with the blood and sweat and silver and gold of the innocent, peace loving, rich countries of Asia and South America (later they plundered South African diamonds and gold).
ஒரு முறை ஆபிரஹாம் லிங்கன் ஒரு கூட்டத்தில் தன்னை தீவிரமாக எதிர்த்தவர்களைப் பற்றி திட்டாமல் மிக்க அன்புடன் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த ஒரு பத்திரிகையாளருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
“ என்ன இப்படி உங்கள் எதிரிகளை நீங்கள் புகழ்ந்து பேசுகிறீர்களே! எதிரிகளை இல்லாமல் அல்லவா செய்ய வேண்டும்” என்று கேட்டார்.
உடனே லிங்கன், “அதைத் தானே நான் செய்து கொண்டிருக்கிறேன். எப்போது அவர்கள் எனது நண்பர்களாகி விடுகிறார்களோ அப்போதே எதிரி இல்லை என்று தானே அர்த்தம்” என்றார்.
இது தான் லிங்கனின் வழிமுறை!
2
குழுவில் “நான்” இல்லை!
ஒரு தவளைக்குப் பறக்க ஆசை.
அது இரண்டு புறாக்களைப் பார்த்து தனது ஆசையைச் சொன்னது.
புறாக்களோ, “உன்னை எப்படி நாங்கள் தூக்கிச் செல்ல முடியும். நீ விழுந்து விடுவாயே” என்றன.
தவளை, “நாம் ஒரு குழுவாக செயல்பட்டால் இது முடியும். ஒரு ஐடியா சொல்கிறேன். ஒரு சின்ன குச்சியை உங்கள் வாயில் வைத்துக் கொண்டால் போதும். குச்சியின் ஒரு புறத்தை ஒருவரும் இன்னொரு புறத்தை அடுத்தவரும் வைத்துக் கொண்டு பறந்தால் போது. குச்சியின் நடுவில் என் வாயை வைத்து அதைக் கவ்விக் கொள்கிறேன். பறக்கலாம்” என்றது.
ஐடியா நல்ல ஐடியா என்று கூறிய புறாக்கள் ஆளுக்கு ஒரு பக்கம் குச்சியைக் கவ்விப் பிடிக்க தவளை ஜாம் ஜாமென்று குச்சியின் நடுவில் வாயை வைத்து அதைக் கவ்வியது.
புறாக்கள் பறக்க ஆரம்பித்தன.
மற்ற தவளைகளுக்கும் பறவை இனங்களுக்கும் இதர விலங்குகளுக்கும் ஒரே ஆச்சரியம்! – எப்படி ஒரு தவளை பறக்கிறது என்று!
அதில் கீழே இருந்த ஒரு விலங்கு கூக்குரலிட்டுக் கத்தியது.
“அடடா! இந்த ஐடியாவை யார் சொன்னது!” என்று அது உரக்கக் கேட்டது.
“நான் தான்” என்று கம்பீரமாக தவளை கத்தியது.
அவ்வளவு தான், குச்சியை விட்டு விடவே அது தொபீர் என்று கீழே விழுந்தது.
பாடம்,
குழுவில் ‘நான்” என்பதே கிடையாது!
3
தலைமைப் பண்பு!
லூயிஸ் ஊர்ஸுவா என்பவர் வட சிலியில் இருந்த ஒரு தாமிர சுரங்கத்தில் போர்மனாக வேலை பார்த்து வந்தார்.
2010ஆம் ஆண்டில் ஒரு நாள்.
திடீரென்று சுரங்கம் சரிந்து இடிந்து விழுந்தது, உள்ளே 33 தொழிலாளர்கள் மாட்டிக் கொண்டனர். 700 மீட்டர் ஆழம் கொண்டது சுரங்கம். அதாவது சுமார் 2296 அடி ஆழம்.
ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல 70 நாட்கள் அவர்கள் அதில் சிக்கி இருந்தனர்.
லூயிஸ் ஊர்ஸுவா (Luis Urzua) நிலைமையை உன்னிப்பாகக் கவனித்துத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
அவர்களை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் காப்பாற்ற உரிய வழிமுறைகளை அவர் மேற்கொண்டார்.
அத்தோடு தரையிலிருந்து அவர்களை மீட்க வந்த குழுவினருக்கு தக்க வழிமுறைகளையும் அவர் கூற ஆரம்பித்தார்.
சுரங்கத்தின் வரைபடத்தைக் கொண்டு அனைவருக்கும் தக்கபடி அறிவுரைகளை வழங்கிக் கொண்டே இருந்தார்.
அனைவரும் 70 நாட்கள் கழித்து பத்திரமாக மீண்டனர். அனைவரும் லூயிஸ் ஊர்ஸுவாவைப் பாராட்டினர்.
அவரோ சர்வ சாதாரணமாக, “இந்த ஷிப்ட் கொஞ்சம் நீண்ட ஷிப்டாக அமைந்து விட்டது!” என்றார்!
ஒரு தலைவருக்கு புத்தி கூர்மையும், வழிகாட்டும் தன்மையும், பொறுமையும் எல்லாவற்றிற்கும் மேலாக அடக்கமும் வேண்டும்.
மாலைமலர் நாளிதழில் 22-3-2022 தொடங்கி வாரம் தோறும் உலகை வலம் வரும் விதமாக ஒவ்வொரு நாடு பற்றியும் எனது ‘உலக வலம்’ தொடர் வெளி வர ஆரம்பித்தது. தொடரில் இடம் பெற்ற முதல் ஒன்பது நாடுகள், ’உலக வலத்தில் ஒன்பது நாடுகள்’ என்ற நூலாக வெளி வந்தது.
இந்த முதல் பாகத்தில் ஸ்விட்ஸர்லாந்து, ஜப்பான், அந்தமான் (இந்தியா), அமெரிக்கா, சிங்கப்பூர், பெல்ஜியம், ஶ்ரீலங்கா, லண்டன் (இங்கிலாந்து), நேபாளம் ஆகிய நாடுகளின் அழகிய இடங்கள், காட்சிகள் மற்றும், வரலாறு பற்றி கண்டோம்.
அதைத் தொடர்ந்து வாரந்தோறும் மாலை மலர் இதழில் அடுத்த ஒன்பது நாடுகள் பற்றிய கட்டுரைகள் 7-6-2022 இதழ் தொடங்கி வெளியிடப்பட்டது.
அந்த அடுத்த ஒன்பது நாடுகள் பற்றிய நூலாக இந்த இரண்டாம் பாகம் அமைகிறது.
மாலைமலரில் உலகநாடுகள் பற்றி ஒரு தொடரை எழுத ஒரு நல் வாய்ப்பை அளித்த திரு பாலசுப்ரமண்யன் ஆதித்தன் அவர்களுக்கும், மாலைமலர் CEO திரு ரவீந்திரன் அவர்களுக்கும், வாசகர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதைக் கூறி என்னை ஊக்குவித்த திரு வசந்த்ராஜ் உள்ளிட்ட மாலைமலர் ஆசிரியக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
கட்டுரைகளைப் படித்து இன்னும் தொடருமாறு என்னை உற்சாகப்படுத்தி ஊக்குவித்த அனைத்து வாசகப் பெருமக்களுக்கும் எனது நன்றி.
இந்தக் கட்டுரைகளை நூலாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
எங்கு பயணம் மேற்கொண்டாலும் உங்கள் பயணம் சிறப்பாக அமைய
எமது உளங் கனிந்த வாழ்த்துக்கள்!
சான்பிரான்ஸிஸ்கோ. 9-8-2022
ச.நாகராஜன்
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
‘புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ! குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய்
05-100
முற்ற உணர்ந்த முதல்வா என்கோ!
செப்டம்பர் 12 திங்கட் கிழமை
காமற் கடந்தோய் ஏமம் ஆயோய் தீ நெறிக் கடும் பகை கடிந்தோய் என்கோ! ஆயிர ஆரத்து ஆழி அம் திருந்து அடி நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன்?’ என்று
செப்டம்பர் 13 செவ்வாய்க் கிழமை
அந்தி அந்தணர் செந் தீப் பேண
பைந் தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப
யாழோர் மருதத்து இன் நரம்பு உளரக்
கோவலர் முல்லைக் குழல் மேற்கொள்ள
செப்டம்பர் 14 புதன் கிழமை
ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன்
பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி
செப்டம்பர் 15 வியாழக் கிழமை
காடு அமர் செல்வி கழி பெருங் கோட்டமும்
சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்
அருந் திறல் கடவுள் திருந்து பலிக் கந்தமும் 06-060
செப்டம்பர் 16 வெள்ளிக் கிழமை
அருந் தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும் ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும் நால் வேறு வருணப் பால் வேறு காட்டி இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன
செப்டம்பர் 17 சனிக் கிழமை
சுடுவோர் இடுவோர் தொடு குழிப் படுப்போர்
தாழ் வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்
செப்டம்பர் 18 ஞாயிற்றுக் கிழமை
மடைதீ உறுக்கும் வன்னி மன்றமும் விரத யாக்கையர் உடை தலை தொகுத்து ஆங்கு இருந் தொடர்ப் படுக்கும் இரத்தி மன்றமும் பிணம் தின் மாக்கள் நிணம் படு குழிசியில்
06-090
விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும்
செப்டம்பர் 19 திங்கட் கிழமை
அழல் வாய்ச் சுடலை தின்னக் கண்டும்
கழி பெருஞ் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து
மிக்க நல் அறம் விரும்பாது வாழும்
மக்களின் சிறந்த மடவோர் உண்டோ?
செப்டம்பர் 20 செவ்வாய்க் கிழமை
இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய் மகள்
புயலோ குழலோ கயலோ கண்ணோ
குமிழோ மூக்கோ இதழோ கவிரோ
பல்லோ முத்தோ என்னாது இரங்காது
கண் தொட்டு உண்டு கவை அடி பெயர்த்து
தண்டாக் களிப்பின் ஆடும் கூத்துக்
செப்டம்பர் 21 புதன் கிழமை
“பார்ப்பான் தன்னொடு கண் இழந்து இருந்த இத்
தீத்தொழிலாட்டியேன் சிறுவன் தன்னை
யாரும் இல் தமியேன் என்பது நோக்காது
ஆர் உயிர் உண்டது அணங்கோ? பேயோ?
செப்டம்பர் 22 வியாழக் கிழமை
“அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா 06-150
பிணங்கு நூல் மார்பன் பேது கந்தாக
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது
மா பெருந் துன்பம் நீ ஒழிவாய்” என்றலும்
செப்டம்பர் 23 வெள்ளிக் கிழமை
“தேவர் தருவர் வரம் என்று ஒரு முறை
நான்மறை அந்தணர் நல் நூல் உரைக்கும்
மா பெருந் தெய்வம்! நீ அருளாவிடின் 06-170
யானோ காவேன் என் உயிர் ஈங்கு” என
செப்டம்பர் 24 சனிக் கிழமை
நால் வகை மரபின் அரூபப் பிரமரும் நால் நால் வகையில் உரூபப் பிரமரும் இரு வகைச் சுடரும் இரு மூவகையின் பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும் பல் வகை அசுரரும் படு துயர் உறூஉம்
06-180
எண் வகை நரகரும் இரு விசும்பு இயங்கும் பல் மீன் ஈட்டமும் நாளும் கோளும் தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்து
செப்டம்பர் 25 ஞாயிற்றுக் கிழமை
சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்து
நடுவு நின்ற மேருக் குன்றமும்
புடையின் நின்ற எழு வகைக் குன்றமும்
நால் வகை மரபின் மா பெருந் தீவும்
ஓர் ஈர் ஆயிரம் சிற்றிடைத் தீவும்
செப்டம்பர் 26 திங்கட் கிழமை
அந்தரம் ஆறா ஆறு ஐந்து யோசனைத்
தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த
மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம்
அணி இழை தன்னை வைத்து அகன்றது தான் என் 06-214
செப்டம்பர் 27 செவ்வாய்க் கிழமை
மணிமேகலை தனை மணிபல்லவத்திடை
மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி
மணிமேகலை தனை மலர்ப் பொழில் கண்ட
உதயகுமரன் உறு துயர் எய்தி
செப்டம்பர் 28 புதன் கிழமை
“திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு” என
கோவலன் கூறி இக் கொடி இடை தன்னை என்
நாமம் செய்த நல் நாள் நள் இருள்
“காமன் கையறக் கடு நவை அறுக்கும்
மா பெருந் தவக்கொடி ஈன்றனை” என்றே
செப்டம்பர் 29 வியாழக் கிழமை
தளர் நடை ஆயமொடு தங்காது ஓடி
விளையாடு சிறு தேர் ஈர்த்து மெய் வருந்தி
அமளித் துஞ்சும் ஐம்படைத் தாலி
குதலைச் செவ் வாய் குறு நடைப் புதல்வர்க்குக்
செப்டம்பர் 30 வெள்ளிக் கிழமை
வலம்புரிச் சங்கம் வறிது எழுந்து ஆர்ப்பப்
புலம் புரிச் சங்கம் பொருளொடு முழங்கப்
புகர் முக வாரணம் நெடுங் கூ விளிப்ப
பொறி மயிர் வாரணம் குறுங் கூ விளிப்ப 7-16
……
நல் மணி இழந்த நாகம் போன்று அவள்
Tags- மணிமேகலை மேற்கோள்கள், மணிமேகலை, பொன்மொழிகள், செப்டம்பர் 2022 காலண்டர்
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஹெல்த்கேர் ஜூலை 2022 இதழில் வெளியான கட்டுரை
சதகங்கள் கூறும் நோயில்லா நெறி!
ச.நாகராஜன்
ஒவ்வொரு மனிதனும் நூறாண்டு வாழ முயற்சியை எடுக்க வேண்டும் என்று ஹிந்து அற நூல்கள் கூறுகின்றன; அத்தோடு வாழ்கின்ற அந்த நூறாண்டுகளும் நோயற்ற, பயனுள்ள வாழ்க்கையாக அமைய வேண்டும் என்றும் வற்புறுத்துகின்றன.
இப்படிச் சொல்லி விடுவதோடு நிற்காமல் பயனுள்ள ஆரோக்கியமான நூறாண்டு வாழ்க்கை அமைய என்ன செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றன.
இப்படிப்பட்ட நூல்கள் கணக்கற்றவை.
இவற்றில் சதகங்களும் தங்கள் பங்கிற்கு சில வழிகாட்டு நெறிகளைத் தருகின்றன.
சதகம் என்றால் நூறு பாடல்கள் அடங்கிய நூலாகும்.
இங்கு அம்பலவாணக் கவிராயர் பாடிய அறப்பளீசுர சதகம் மற்றும் குமரேச சதகம் ஆகிய இரு நூல்களிலிருந்து ஆறு பாடல்களைப் பார்ப்போம்.
குமரேச சதகம்
இந்த சதகத்தில் வரும் 19ஆம் பாடல் உடல் நலம் பற்றிக் கூறுகிறது.
இதன் பொருள் : பெருந்தவம் புரிந்த மங்கையும் மான் வயிற்றில் பிறந்தவளுமான வேடர் குல வள்ளியம்மையின் மனதிற்கு இசைந்த மணவாளனே! மயிலில் மீது ஏறி திருவிளையாடல் புரியும் குகனே! திருப்புல்வயலில் உயர்ந்த மலையின் மேல் எழுந்தருளியிருக்கும் குமரேசனே!
மாதத்திற்கு இரண்டு முறை பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது
குற்றமற்ற பேதி (வயிற்றுக்கழிவு) மருந்தை வருடத்திற்கு இரு முறை எடுத்துக் கொள்வது
எண்ணெயைத் தலையில் தேய்த்து வாரத்திற்கு இரு முறை குளிப்பது
பேரறிவு கொண்டு தன் வயதினுக்கு இளைய அடர்த்தியான கூந்தலையுடைய ஒரு பெண்ணுடன் சேர்வது (உறவு கொள்வது)
முதிர்ந்த தயிர், காய்ச்சிய பால், நீர் மோர், உருக்கிய நெய், முற்றாத வழுக்கைக் கொண்ட இளநீர், எவ்வளவு உணவானாலும் கூட உண்ட பிறகே தண்ணீரை அருந்துதல்,
உடம்பின் மீது இரக்கம் கொண்டு உண்ட பிறகு உலாவுதல்,
ஆகிய இவற்றை, பெரியோர் உடல்நலம் தருபவை ஆகும் என்று கூறுவர்.
அடுத்து 30ஆம் பாடலில் நோய் வரும் காரணங்கள் பட்டியலிடப்படுவதைக் காணலாம். இவற்றையெல்லாம் தவிர்த்தால் நோயற்ற வாழ்க்கை அமையும் என்பது கவிராயரின் வழிகாட்டு நெறியாகும்.
அரிய மதவேள் அனுதினமும் மனதில் வழிபடும் சதுரகிரியில் உறையும் அறப்பளீசுர தேவனே!
நாடிப் பரீட்சையையும் காலத்தையும் இடத்தையும் உடலின் இயல்பையும் உணர்ந்து,
தன்வந்திரி, கும்பமுனி, கொங்கணரும் சித்தர்களும் எழுதிய மருத்துவ நூலைக் கற்றுணர்ந்து
பல்வகைப்பட்ட பெருமை மிக்க குளிகைகளையும், மருந்துச் சரக்குகளைத் தூய்மை செய்யும் முறைகளையும், மாத்திரைகளையும், பஸ்மத்தையும் கொடுக்கும் தன்மையையும் தவறாது கற்று
மண்டூரம், செந்தூரம் ஆகியவற்றின் இயல்புகளைப் புகழ் பெற்ற மருத்துவ நூலின் வாயிலாகக் கற்றுத் தேர்ந்து
பல வேர் வகைகளின் நிகண்டையும் அறிந்து,
தூய எண்ணெயும், லேகியமும் செய்யும் முறையைச் சொல்லியவாறு அறிந்து,
வரும் நோய்களின் முடிவை வெளிப்பட உணர்ந்து
கை நலம் உடையவனாக
முற்காலத்திலிருந்து வழிவழியாக வரும் கேள்வி அறிவையும் உடையவனே
மருத்துவன் ஆவான்.
அடுத்து 65ஆம் பாடல் உணவில் எவற்றை விலக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது.
ஐம்புலன்களையும் வென்ற முனிவரும் வானவரும் வாழ்த்தும் தூயவனே! அரிய மதவேள் அனுதினமும் மனதில் வழிபடும் சதுரகிரியில் உறையும் அறப்பளீசுர தேவனே!
கை விலைக்கு வாங்கும் பால்
ஆட்டுப்பால்
காரா பசுவினிடம் கறந்த வெண்மையான பால்
காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழஞ்சோறு, காந்திக் கரிந்த சோறு, செவ்வை இல்லாத சிறுகீரை, பீர்க்கு, அத்தி, வெள் உப்பு, தென்னை வெல்லம், பிண்ணாக்கு, சிறப்பில்லாத உள்ளிப்பூண்டு, சிறப்பில்லாத வெங்காயம், பெருங்காயம், சிறப்பு இல்லாத வெள்ளைக் கத்தரிக்காய், குற்றம் அற்ற சிவபெருமான் திருக்கோயிலில் இருந்து கழிக்கப்பட்ட பொருள்கள்,
சூரியன் ஒளியும், விளக்கும் இல்லாத காலத்து உணவு
ஆகிய இவை அனைத்தும் ஒழுக்கமுடையோருக்கு
ஏற்கத் தகாதவை என பழமையான அற நூல்கள் கூறும்.
தவிர்க்க வேண்டியவற்றை அறிந்து கொண்டோம். இனி 73ஆம் பாடல் எந்த இலையில் உண்ண வேண்டும் என்ற முறையைக் கூறுகிறது.
நாற்புறமும் கடல் சூழ்ந்த உலகில் வேளாளர் மரபில் சிறப்புற்றவன் ஆகிய எமது அருமை அரிய மதவேள் அனுதினமும் மனதில் வழிபடும் சதுரகிரியில் உறையும் அறப்பளீசுர தேவனே!
அரசு, வனசம், செழும்பாடலம், தாழையிலை, அத்தி, ஆல் ஏரண்ட பத்திரம், சகதேவம், முள்முருக்கு ஆகிய இவையோடு
வெண்மையான பாலை உடைய எருக்கிலை, இச்சில் இலைகளிலும் உண்பது கூடாது.
இடைவிடாத சிற்றுண்டி, நீர் அடிக்கடி பருகல், பல் வகையான சோறுகளை உண்ணுதலும், சிறிதாக உண்ணல், மிகுதியாக உண்ணல் ஆகிய இவை அனைத்தும் உடல் நோய்க்கு இடமாகும்
ஆகவே தவிர்க்க வேண்டிய இவற்றைத் தவிர்த்து உண்ணல் வேண்டும்.
மேலே கண்ட பாடல்களில் பல விஷயங்கள் பெரு நகரங்களில் வாழ்வோருக்கு இன்றைய கால கட்டத்தில் பொருந்தாது. ஏனெனில் அவர்களுக்குப் பாலும் இப்படிக் கிடைக்காது; இலைகளில் சோறு உண்ணுதலும் அரிது.
ஆனால் கிராமங்களில் வாழும் லட்சக் கணக்கானோருக்கு இந்த விதிகள் இன்றும் பொருந்தும்; என்றும் பொருந்தும்.
கூடவே மேலை நாட்டு ஆய்வாளர்கள் நமது பழைய நூல்களை அலசி ஆராய்ந்து ஒவ்வொன்றாக கடைப்பிடிக்க ஆரம்பிப்பதையும் மனதில் கொண்டால், இவற்றை கூடிய மட்டில் நாம் கடைப்பிடிப்பது நமது ஆரோக்கியத்தை உறுதிப் படுத்தும் ஆயுளை நீட்டிக்கும் என்பதை அனுபவத்தால் அறியலாம்.
காலத்தால் அழியாத இப்படிப்பட்ட பாடல்கள் நூற்றுக் கணக்கில் நமது நூல்களில் உள்ளன. அவற்றை அறிவோம். ஆரோக்கியம் பெறுவோம். ஆயுளை நீட்டித்துக் கொள்வோம்
பாரதியார் காலத்தை வென்ற மஹாகவி. அவரது சரித்திரம் ஆதாரபூர்வமாக, முழுமையாக இன்னும் வெளிவரவில்லை. ஆனால் அவரது மனைவி, மகள், அவருடன் பழகியவர்கள், அவரை நேசித்தவர்கள், அவரை அறிந்தவர்கள், அவரது நூல்களைப் படித்தவர்கள் அவ்வப்பொழுது பல செய்திகளைக் கட்டுரைகள் வாயிலாகவும் நூல்கள் வாயிலாகவும் தெரியப்படுத்தி வந்துள்ளனர்.
இந்த பாரதி இலக்கியம் பற்றிய கட்டுரைகளையும் நூல்களையும் படித்தால் அது பாரதியாரை அறிவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
சுமார் அறுபது ஆண்டுகளாகப் பாரதியைப் பயில்பவன் நான். அவருடைய கதைகள், கட்டுரைகள், கவிதைகளைச் சேர்த்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவரைப் பற்றி வந்த கட்டுரைகளையும், கவிதைகளையும், நூல்களையும் சேர்த்து வருகிறேன்.
அவரைப் பற்றி போற்றிப் பாடிய கவிதைகள் ஆயிரத்தைத் தொகுத்து பாரதி போற்றி ஆயிரம் என்று ஒரு தொடரில் அவற்றை வெளியிட்டேன்.
பாரதியார் பற்றிய நூல்கள் என்ற தலைப்பில் www.tamilandvedas.com இல் ஒரு தொடரில் அவரை அறிமுகப்படுத்தும் முக்கிய கட்டுரைகள் மற்றும் நூல்களையும் எழுதி வந்தேன். அவற்றில் முதல் முப்பது அத்தியாயங்களின் தொகுப்பு முதல் பாகமாக வெளியிடப்பட்டது. அடுத்த 30 அத்தியாயங்கள் இரண்டாம் பாகமாக மலர்கிறது.
முதல் பாகம் போலவே இந்த இரண்டாம் பாகமும் பாரதி அன்பர்கள் விரும்பும் நூலாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
இதை வெளியிட்ட லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.
இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக!
இந்தத் தொடர் வெளி வந்த போது ஏராளமான பாரதி அன்பர்களும் தமிழ் இலக்கியத்தில் பற்றுக் கொண்டோரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாராட்டுகளை நல்கினர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
பாரதியைப் பயில உதவும் இலக்கியத்தில் அவரை உரிய விதத்தில் அறிமுகப்படுத்த இருக்கும் மேலும் பல நூல்களை இந்த இரண்டாம் பாகத்தில் காண வாருங்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். நன்றி.
பங்களூர் ச.நாகராஜன்
21-3-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
Full moon day- September 10, New moon Day- 25, Ekadasi Fasting Days- 6, 21. Auspicious days- 1, 5, 7, 8, 9, 12
Sadhu Vaswani (1879 – 1966), an educationist and philosopher, was a sage of modern India. His disciple was J P VASWANI (1918-2018); following quotations are taken from J P Vaswani’s speeches and books.
September 1 Thursday
When your mind and heart are uncluttered, when they are filled with light, joy-giving thoughts, your spirit too, can soar high!
xxx
September 2 Friday
“The prayer of a pure heart never goes in vain!”
xxx
September 3 Saturday
Thoughts are things, thoughts are forces, and thoughts are the building blocks of life. Therefore we must keep our thoughts clean. Whatever we think about, we bring about.
xxx
September 4 Sunday
“Wealth does not count; words do not count; actions count!”
xxx
September 5 Monday
When you unclutter your mind and cleanse your thoughts, you will find that confidence, hope and optimism fill your mind and you will achieve success and happiness.
xxx
September 6 Tuesday
A good way to overcome stress is to help others out of theirs.
xxx
September 7 Wednesday
The best sleeping pill is a clear conscience
xxx
September 8 Thursday
“The secret of successful relationships is found in an understanding heart, preferably your own.” xxx
September 9 Friday
“The man of true compassion serves without judgement.”
xxx
September 10 Saturday
All sin and suffering have but one source – man’s denial of his own divinity.
xxx
September 11 Sunday
“It’s wise to burn anger, before anger itself burns your peace and happiness.”
xxx
September 12 Monday
Anger becomes righteous when you use it to defend the rights of another, without nursing any selfish motive.
xxx
September 13 Tuesday
We are so obsessed about external cleanliness that we tend to neglect what’s on the inside, don’t we? And isn’t what’s inside far more important?
September 14 Wednesday
In everything that you do, pour the best that is in you. Therefore, work not for wages, work for love.
Xxx
September 15 Thursday
“Through service of mankind we can wipe away much of our bad karma
Xxx
September 16 Friday
“Whenever you feel tension mounting up, just smile: you will break the force of tension.”
xxx
September 17 Saturday
The Guru is the “eye” surgeon, who can restore our inner vision.
xxx
September 18 Sunday
Ask yourself these things before you speak:
Is it true? Is it necessary? Will it hurt anybody?
xxx
September 19 Monday
If we wish to be happy, we must unclutter our house — the house of our heart. We must throw out all the joy-killers, the negative thoughts of greed, ill will, jealousy, malice and envy. But throwing these out is not enough – we must fill our minds with happy thoughts – thoughts of prayer, love, kindness, prosperity and peace.
xxx
September 20 Tuesday
If the heart be dark, books can teach nothing!
xxx
September 21 Wednesday
“If you want peace of mind, shut the gate behind you. Shut the gate behind you, so that your worries are left behind. Do not touch the past – for remember, the past is dead and gone.”
Xxx
September 22 Thursday
Two passions specially must be combated and conquered. The first is impurity; the second is anger.
Xxx
September 23 Friday
“To be nervous is to lose half the battle; to be nervous is to burn mental energy to no useful purpose.”
Xxx
September 24 Saturday
Many people ‘React’ and then ‘Regret’…Learn therefore to Reflect and then Respond.
Xxx
September25 Sunday
“When you eliminate the ego, you will grow in the realization that all of us are equal in the eyes of God.”
xxx
September 26 Monday
“Faith is illumination, faith is light. Worry, on the other hand, is darkness.”
xxx
September 27 Tuesday
“Keep yourself active all the time. The best of noblest of actions is to bring comfort to the comfortless.”
xxx
September 28 Wednesday
“You cannot cheat others without first cheating yourself.”
xxx
September 29 Thursday
Neither rites nor rituals, neither creeds nor ceremonies are needed to improve the condition of the world. All that is needed is to love one another.
xxx
September 30 Friday
“Silence and solitude are as essential to spiritual growth, as are water and sunshine to a tree.” xxxxx subham xxxx
Tags- J P Vaswani, Quotes, Quotations, September 2022, Calendar
ஸம்ஸ்க்ருதத்தைக் கற்க எளிதான வழி அந்த மொழியில் இருக்கும் வேடிக்கைக் கவிதைகளை கற்பதாகும். ஒரு ஆசிரியர் பதம் பிரித்துச் சொல்லுகையில் அதைப் புரிந்துகொண்டு கவிதையை மனப்பாடம் செய்தால் போதும் .
கிருஷ்ணனுடைய எட்டு மனைவியரில் இருவர் முக்கியமானவர்கள். ருக்மிணி , ஸத்ய பாமா ஆகிய இருவரும் பட்ட மஹிஷிகள் – அதாவது மஹா ராணிகள்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
செப்பு மொழி பத்தொன்பது!
ச.நாகராஜன்
1. நீங்கள் வாய் திறந்து சொல்லப் போகும் சொல் மௌனமாய் இருப்பதை விடச் சிறந்ததா?
2. மௌனம் என்பது காலம் காலமாக ‘அக உண்ணாவிரதம்’ எனக் கருதப்படும் ஒன்று. அது உங்களின் உண்மையை மட்டும் கேட்கும்.
3. சில சொற்களை மட்டும் சொல்பவரே மனிதரில் சிறந்தவர். – ஷேக்ஸ்பியர்
(Men of few words are the best men – Shakespeare)
4. உங்களை அனைவரும் நல்லவர் என்று நினைக்க வேண்டுமா? அப்படியானால் பேசாதீர்கள் – பாஸ்கல்
Do you wish people to believe good of you? Don’t Speak. – Pascal
5. நீ பேசும் சொற்களுக்கு தராசையும் எடைக் கற்களையும் வைத்துக் கொள்வதோடு உன் வாய்க்கு ஒரு கதவை மாட்டி அதற்கு தாழ்ப்பாளையும் போடு – (அபோர்க்ரிபா – எக்லெசியாஸ்டிகஸ்)
Make scales and weights for your words, and put a door with bolts across your mouth. (Apocrypha, Ecclesiasticus)
6. மற்றவர்களுடன் நீ தொடர்பு கொள்ளும் போது அவர்கள் மீது இரக்கம் கொண்டு குறைவாகப் பேசினால் அதன் பெரிய நன்மை அவர்கள் குறைவாக துன்பப்படுவார்கள் என்பது தான்!
7. அன்பாகப் பேச யாருக்கும் காசு கொடுக்க வேண்டாம் – வியட்நாம் பழமொழி’
8. பேசும் போது உரக்கப் பேசாதே; எதிர்மறையாகப் பேசாதே!
9. மௌனம் உன் உள்ளிருக்கும் கர்பக்ரஹத்திற்கான வாயில். அது இதயத்தின் கீதம்.
Silence is the threshold to the inner sanctum. Silence is the song of the heart.
10. சமன்பாடு சின்னது தான். கெட்ட பேச்சு வியாதியைத் தருகிறது. நல்ல பேச்சு ஆரோக்கியத்தையும் ஆறுதலையும் தருகிறது.
It is a simple equation. Wrong speech cause ill-being. Right speech brings about well-being and healing.
11. சந்தேகமாக இருக்கும் போது உண்மையைச் சொல்லி விடு – மார்க் ட்வெய்ன்
When in doubt, tell the truth. – Mark Twain
12. கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் உனக்கு நன்மை தரும்படி எடுத்துக் கொண்டு உன் வாயை மூடிக் கொள்.
Take advantage of all the opportunities to keep your mouth shut.
13. உனக்குப் புரியாததைப் பற்றிப் பேசாமல் இருப்பது உனக்கு மிகவும் நல்லது என்பதை நினைவில் கொள். – லாவோட்சு
Remember that it is better not to speak of things you do not understand. – Lao-tsu
14. நல்ல பேச்சின் இரண்டாவது பகுதி என்னவெனில் புதிதாகக் கண்டுபிடிப்பதிலிருந்தும் பெரிதுபடுத்துவதிலிருந்தும் விலகி இருப்பது தான்!
The Second part of Right speech is to refrain from inventing and exaggerating.
15. பேச்சை மற்றவர்களுக்கு விட்டு விடு!
Leave the talking to others.
16. சொல் என்பது ஒரு செயல் என்பதை நினைவில் கொள்.
Remember that a word is an action.
17. உன்னை நீயே கேட்டுக் கொள் : நிஜமாகவே சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா?
Ask yourself: Does something really have to be said?
18. தப்பாகப் போகும் எந்த ஒரு விஷயத்திற்கும் ஆரம்பமே பேச்சு தான்!
Everything that goes wrong starts with speech.
19. நல்ல ஒரு நேர்மையான இதயத்தை உனது பேச்சு பின் தொடர்ந்து செல்லட்டும்!
வாழ்க்கையில் நாம் காணும் பல அதிசயங்களுள் ஒன்று ஜோதிடம்.
பின்னால் நடப்பதை முன்னாலேயே ஒருவர் சரியாகக் கூறி விட்டால் பிரமிக்கிறோம்.
வேதாங்கம் ஆறு. அவற்றில் ஒன்று ஜோதிடம்.
இது உண்மையா? பலர் கூறுவது பலிப்பதே இல்லை. ஆகவே தான் இந்தக் கேள்வி எழுகிறது.
இதை மனதில் கொண்டு ஜோதிடத்தைப் பற்றி விரிவாக ஆராய ஆரம்பித்தேன்.
ஜோதிடம் உண்மையா?, ஜோதிட மேதைகளின் வரலாறு, நவகிரகங்கள், நட்சத்திர அதிசயங்களும் மர்மங்களும் ஆகிய புத்தகங்களையும் வெளியிட்டேன்.
எனது ஆய்வில் கிடைத்த முடிவு – ஜோதிடம் என்பது உண்மையே. ஆனால் மிக நுட்பமான இந்தக் கலையில் தேர்ச்சி பெற்றோர் மிகவும் குறைவானவரே! ஆகவே ஜோதிடர்கள் என்று கூறிக் கொள்வோரை சற்று கவனியுங்கள்.
பணத்திற்கு ஆசைப்பட்டு இயங்கும் போலி ஜோதிடர்களை அடையாளம் கண்டு ஒதுக்குங்கள்.
தொடர்ந்து ஶ்ரீ ஜோஸ்யம் உள்ளிட்ட இதழ்கள், www.tamilandvedas.com இணைய தள ப்ளாக் உள்ளிட்டவற்றில் பல கட்டுரைகளை எழுதி வந்தேன். அவற்றின் தொகுப்பே இந்த நூல்.
அன்றாடம் மனதில் எழும் பல அடிப்படையான கேள்விகளுக்கு விடை தருவது இந்த நூல்.
இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட ஞான ஆலயம் குழும ஆசிரியரான திருமதி மஞ்சுளா ரமேஷ், லண்டன் திரு சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது உளமார்ந்த நன்றி உரித்தாகுக.
இந்த புத்தகத்தில் வரும் ‘விதி விளக்கம்’ என்னும் நூலை எனக்கு அனுப்பி உதவியவர் எனது சம்பந்தி திரு ஆர்.சேஷாத்திரிநாதன் அவர்கள். ஏராளமான அருமையான எளிதில் கிடைக்காத பழைய நூல்களை அவ்வப்பொழுது எனக்கு அவர் அனுப்புவது வழக்கம். அவருக்கு எனது நன்றி.
இந்தக் கட்டுரைகள் வெளியான போது அவ்வப்பொழுது பாராட்டி மேலும் எழுத ஊக்கம் கொடுத்த அன்பர்களுக்கு எனது நன்றி.
இந்த நூலை அழகுற அமைத்து வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!
சான்பிரான்ஸிஸ்கோ 16-8-2022
ச.நாகராஜன்
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
ராமாயணத்தைப் போற்றும் பல பாடல்கள் உண்டு. அதில் ஒரு பாடல், இந்தப் பூமியில் சூரிய சந்திரர்கள் பிரகாசிக்கும் வரை ராமாயணத்துக்கு – ராம கதைக்கு –அழிவே கிடையாது என்று கூறும்
காரணம் என்ன?
காம, க்ரோத, லோபம் என்ற மூன்று தீய குணங்கள் உடைய எவரும் எப்படி முடிவெடுப்பரோ அதற்கு நேர் மாறாக முடிவு எடுக்கின்றனர் ராமாயண கதாபாத்திரங்கள். இதைவிட ஒரு நல்ல குடும்பம் இருக்கவே முடியாது என்னும் அளவுக்குச் செயல்படும் பல கட்டங்களைக் காண்கிறோம்.
இந்தப் பூவுலகில் எல்லா நல்ல குணங்களும் நிரம்பிய நல்ல மனிதர் எவரேனும் உண்டா? என்று நாரதரிடம் வால்மீகி முனிவர் கேட்டபோது, நாரதர் ராமரின் குணாதிசயங்களை விவரித்து நீண்ட பதில் தருகிறார். பலரும் கேட்ட விஷயங்களே அவைகள் . பின்னர் நாரதர் விடைபெற்றுச் செல்கிறார். வால்மீகி முனிவர் தமஸா நதிக்கரையை நோக்கிச் செல்கிறார். அங்கு தினசரி நடை பெறும் காட்சிதான் நடக்கிறது அதாவது ஒரு வேடன் பறவைகளை நோக்கி அம்பு எய்கிறான். அவை செத்து விழுகின்றன. அதைப் பார்த்த வால்மீகிக்கு சோகம் மிக்க உணர்ச்சிக் கொந்தளிப்பு ஏற்படுகிறது. அதன் வாயிலாக நமக்கு ராமாயணம் கிடைக்கிறது. ஆனால் அதற்கு முன்னர் ஒரு அற்புதமான வருணனை வருகிறது.
இதோ சில அரிய எடுத்துக் காட்டுகள்:-
வால்மீகி முனிவர் தமஸா நதியைச் சுற்றுமுற்றும் பார்க்கிறார் . அற்புதமான, அமைதியான அழகுமிக்க பரத்வாஜ ஆஸ்ரமம் தெரிகிறது .அதைச்சொற்களில் வடிக்கும் போது நாம் சித்திரத்தில் கண்ட காட்சி போல அமைகிறது அந்தச் சொற்சித்திரம் :-
(1)
அகர்தமமிதம் தீர்த்தம் பரத்வாஜ நிசாமய
ரமணீயம் ப்ரசன்னாம்பு ஸன்மனுஷ்ய மனோ ததா
பொருள்
பரத்வாஜரே இந்த தண்ணீரைப் பாருங்கள் ! ஸ்படிகம் போல தெள்ளத் தெளிவாக இருக்கிறது; பார்க்கவே மனதிற்கு இன்பம் தருகிறது; நேர்மையான மனிதனின் மனதுபோல களங்கமற்று இருக்கிறது.
நேர்மையான மனிதனின் மனதுபோல தெளிந்த நீரோட்டம் உடையது அந்த ஆறு. நல்ல உவமை. ரமணீயம் , ப்ரசன்ன , சன் மனுஷ்ய மனஹ (நல்ல மனிதனின் மனது) என்ற சொற்கள் கவனிக்க வேண்டிய சொற்கள்.
இப்படிப்பட்ட நல்ல மனிதர்களின் மனதுதான் அற்புதங்களைச் செய்யும். முத்து சுவாமி தீக்ஷிதர் அமிர்த வர்ஷனி ராகம் பாடினால் மழை பெய்யும் ; ஆதிசங்கரர் கனக தாரா தோத்திரம் பாடினால் தங்க நெல்லிக்காய் மழை பெய்யும். ஞான சம்பந்தர் தேவாரம் பாடினால் அஸ்திச் சாம்பலிலிருந்து பூம்பாவை உயிர்பெற்று எழுவாள்; கூன் பாண்டியன் நின்ற சீர் நெடுமாறனாகக் காட்சி தருவார். இதெல்லாம் தெளிந்த நீரோடை போன்ற மனது உடையோர் சாதிக்கக் கூடிய காரியம். நமக்கும் அப்படி இருக்குமானால் அற்புதங்களை சாதிக்கலாம்.
XXX
(2)
சீதா தேவி ஓராண்டுக் காலத்துக்கு ராவணனால் சிறைவைக்கப்பட்டு அசோக வனத்தில் வாடுகிறாள். உயிர்விட எண்ணிய தருணத்தில் ராமனின் கணையாழியுடன் வந்து காட்சி தருகிறான் அனுமன். இருண்ட வானத்தில் ஒரு ஒளிக்கீற்று தோன்றுகிறது. ராம- ராவண யுத்தம் முடிந்த பின்னர் மீண்டும் வெற்றிச் செய்தியுடன் சீதையை சந்திக்க அனுமன் வருகிறான்.
“தாயே உங்களுக்குத் தீங்கு விளைவித்த அசோக வன ராட்சச , ராட்சசிக்களை ஒழித்துக்கட்டவா?” என்று கேட்கிறான் . பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே என்ற பாரதியின் வாக்கிற்கு இணங்க கருணையே வடிவான ஸீதை சொல்கிறாள் :-
பாபானாம் வாசுபானாம் வா வதார்ஹானாம் ப்லவங்கம
கார்யம் கருணமார்யேண ந கஸ்சின்னாபராத்யதி
சீதை சொல்கிறாள் –
“இது போன்ற சிறியோர் மீது நாம் பழிவாங்குதல் அழகல்ல. அவர்களுடைய அரசர் சொன்னதையே அவர்கள் செய்தார்கள். உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் குணம் கருணையே ; அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களோ, தீய குணங்களை உடையோரை தண்டித்தல் சரியாக இருக்கலாம்; ஆயினும் எப்படி ஒரு மனிதன், மற்றொரு மனிதனை எடைபோட முடியும் முடியும்?”
XXX
(3)
வால்மீகி , மனிதர்களை வருணிப்பதோடு இயற்கையையும் அற்புதமாக வருணிக்கிறார். காட்டில் இரவு நேரம் எப்படி இருக்கும்?
“மரங்கள் எல்லாம் அசைவற்று நிற்கின்றன. பிராணிகளும் பறவைகளும் அங்கே மறைந்து நிற்கின்றன. மெதுவாக மாலை நேரம் விடை பெற்றுப் புறப்படுகிறது . வானத்தில் கண்கள் (நட்சத்திரங்கள்) முளைக்கின்றன. எங்கு நோக்கினும் நட்சத்திரங்களும் ராசி மண்டங்களும் பிரகாசிக்கின்றன அப்போது குளிர்ந்த கிரணங்களை வீசும் சந்திரன் உதயமாகி இருளை விரட்டுகிறான். பூமியில் வாழும் உயிரிங்களின் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. இரவுநேரத்தில் வலம் வரும் ஜந்துக்கள் நகரத் துவங்குகின்றன. பிற பிராணிகள் கொன்ற எச்ச சொச்சங்களைத் தின்னும் நரிகளும் யக்ஷ ராக்ஷசர்களும் நடைபோடுகின்றன”.
இது பாலகாண்டத்தில் வரும் வர்ணனை ; ராமனுக்குச் சொல்லப்படும் விஷயம். ஒரு சிறுவனுக்கு எவ்வளவு திகிலும், பின்னர் அச்சம் நீங்கிய உணர்வும் ஏற்பட்ட வேண்டுமோ அப்படி வால்மீகி அமைத்துள்ள சொற்றொடர்கள் இங்கே உள்ளன
இப்படி நிறைய செய்திகளை நாம் பல்வேறு கோணங்களில் காணலாம் . அப்போதுதான் வால்மீகியின் பெருமையை நாம் உணரமுடியும். இவைதான் எத்தனை முறை படித்தாலும் எத்தனை முறை கேட்டாலும் ராமாயணத்தை அலுக்காமல் கேட்க வைக்கிறது.
காலத்தால் அழியாத, அழிக்க முடியாத காவியம் ராமாயணம்!
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
(மூட) நம்பிக்கைகள்?!
ச.நாகராஜன்
ஒவ்வொரு நாகரிகத்திலும், ஒவ்வொரு இனத்திலும், ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு நம்பிக்கைகள் காலம் காலமாக இருந்து வருகின்றன.
இவற்றை மூட நம்பிக்கைகள் என்று பொதுவாகச் சொல்லி விடுவார்கள். ஆனால் கடைப்பிடிப்பதை என்னவோ குறிப்பிட்ட இனத்தையோ இடத்தையோ மதத்தையோ சார்ந்தவர்கள் விடுவதில்லை.
ஐயோனா ஓபி (Iona Opie)மற்று மரியா டாடெம் (Moria Tatem) ஆகிய இரு பெண்மணிகள் உலகெங்கும் கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைகளைத் தொகுத்து டிக்ஷனரி ஆஃப் சூபர்ஸ்டிஷனஸ் என்ற நூலை வெளியிட்டுள்ளனர்.
உலகெங்கும் கடைப்பிடிக்கப்படும் இந்த (மூட) நம்பிக்கைகளைப் பார்த்து வியக்கிறோம். அதைக் கடைப்பிடிக்காவிடில் ஏற்படும் ஆபத்துக்கள், விபத்துக்கள், மரணங்கள் பற்றியும் விளக்கங்களைக் காண்பிக்கும் போது பிரமிக்கிறோம்.
அவற்றைக் கடைப்பிடிக்காததால் ஏற்பட்ட விபத்துக்களையும், மரணங்களையும் பற்றிய விவரங்களும் கூட சில இடங்களில் இந்த நூலில் தரப்பட்டுள்ளது.
சில நம்பிக்கைகள் இதோ:
1) திங்கள் கிழமை : திங்களன்று எதையும் ஆரம்பிக்காதே. அயர்லாந்தில் எந்தக் கிழமையில் காலை நேரத்தில் எதை வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். ஆனால் திங்கள் கிழமையன்று மட்டும் எதையும் ஆரம்பிக்கக் கூடாது!
2) திங்கள் கிழமை என்று ஒரு பெண்மணி ஒரு கம்பெனியில் சொல்லி விட்டால் அந்தக் கம்பெனிக்கு துரதிர்ஷ்டம் தான்; அதையே ஆண் சொல்லி விட்டாலோ அந்த கம்பெனிக்கு அதிர்ஷ்டம் தான்!
3) செவ்வாய் : உழுதல், நடுதல், அறுவடை செய்தல் எல்லாவற்றிற்கும் உகந்த நாள் செவ்வாய்கிழமை தான்!
4) ஞாயிற்றுக்கிழமை செய்யும் எந்த வேலையும் திங்களோடு முடிந்து போகும். எதையும் ஞாயிறு அன்று செய்யாதே.
5) ஞாயிற்றுக்கிழமை எதையும் செய்யாதே; செய்தால் அதில் ஒவ்வொரு முறையும் ஒரு கோளாறு ஏற்படும்.
6) வெள்ளிக்கிழமை வந்தது என்றால் போதும், பெண்மணிகள் எல்லோரும் வாரத்தின் துரதிர்ஷ்டமான நாள் வந்து விட்டது என்று கூறுவார்கள்.
7) வெள்ளிக்கிழமை பயணத்தைத் தொடங்காதே. தொடங்கினால் எந்த உல்லாசப் பயணமும் வெற்றி பெறாது.
8) சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் துரதிர்ஷ்டமான நாட்கள். வேலைக்காரர்கள் தங்கள் இடங்களுக்குப் போகவே மாட்டார்கள். அதனால் தான் பழமொழியே வந்தது இப்படி – Saturday servants never stay ; Sunday servants runaway!
9) 13 என்பது மிகவும் மோசமானது. ஒரு அறையில் 13 பேர் கூடினார்கள் என்றால் அதில் ஒருவர் ஒரு வருடத்திற்குள் இறந்து போவார்.
10) ஒரு டேபிளில் பதிமூன்றாவது ஆளாக உட்காராதே; உட்கார்ந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
11) பச்சை: பச்சை நிறம் மிகவும் துரதிர்ஷ்டமான நிறம். புது மணத் தம்பதிகள் நீல உடையையே தேர்ந்தெடுக்க வேண்டும். பச்சை நிறம் இடம் பெற்றாலோ, அவ்வளவு தான்!
12) பெண்மணிகளைப் பாதுகாப்பது நீல நிறம் தான். பெண்மணிகள் அனைவரும் கழுத்தைச் சுற்றி நீல நிற கம்பளித் துணியைச் சுற்றிக் கொள்வர். நீல நிற நெக்லஸ் மாலைகள் பெரும் பாதுகாப்பைத் தரும்.
13) மணப்பெண் ஒரு போதும் திருமண நாளன்று அழக்கூடாது; சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு திருமணம் நடந்தால் வாழ்வில் இன்பம் இருக்காது; குழந்தைகள் நிலைக்காது.
14) மூன்று முடிச்சுகள் போடுவது உண்மை அன்பிற்கு அடையாளம். மெதுவாக அவள் காதில் இப்படி முணுமுணுத்துச் சொல் : She will, or She will not”
15) மே மாதம் மிகவும் ஆபத்தான மாதம்; அந்த மாதத்தில் தான் மந்திரவாதிகளும் ஆபத்தான பெண்மணிகளும் தங்கள் மாய வித்தைகளைக் காண்பிப்பர்.
16) மே மாதம் கல்யாணம் செய்து கொள்ளாதே; விதவையாகத் தான் போவாய். பழமொழி கூட உண்டு – Marry in May, rue for aye’ ; Of all the months It is worst to Wed in May; Of the marriages in May, The bairns die of a decay. ஏப்ரலிலும் ஜுனிலும் கல்யாணம் செய்யலாம்.
17) மூக்கு அரிக்கிறதா, உடனே ஒய்னைக் குடி.
18) சர்ச்சில் வடக்குப் புறம் உள்ள வாயில் பிசாசின் வாயில். பாப்டிஸம் சடங்கு நடக்கும் போது மட்டும் அது திறக்கப்படும். மற்ற வேளைகளில் மூடியே இருக்கும். திருமண தம்பதிகள் தெற்கு வாயிலின் வழியே தான் உள்ளே வர வேண்டும். ஒரு போதும் வடக்குப் பக்கத்திலிருந்து வரக் கூடாது.
19) உப்பு என்ற வார்த்தையை ஒரு போதும் கடலில் சொல்லக் கூடாது. உப்பு வேண்டுமென்றால் அந்தச் சொல்லக் கூடாத வார்த்தையை எடுத்துக் கொண்டு வா என்று தான் சொல்ல வேண்டும்.
20) கண் அரிக்கிறதா? ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியான நம்பிக்கை!
இடது கண் அரித்தால் அன்புக்குரியவரைப் பார்க்கலாம். இன்னொரு இடத்தில் வலது கண் அரித்தால் அதிர்ஷ்டம்!
ஷேக்ஸ்பியர் – ஒதெல்லோ – iv – iii – Mine eyes do itch; Doth that boade weeping?
N. Homes Daemonologie – “If their right eye itchth, it betokens sorrowful weeping, if the left …. Joyful laughter!
21) மூட நம்பிக்கைகள் பற்றிப் பலரும் பலவிதமாகச் சொல்லி இருக்கிறார்கள்!
A whole universitie of Doctors cannot roote these superstitious observations out of their minde. – John Milsot, Astrologer
Freedom from superstition is not necessarity a form of Widson – Robert Lnd, Solomon in All His Glory
***
புத்தக அறிமுகம் – 40
மஹாகவி பாரதியார் பற்றி அறிய உதவும் நூல்களும் கட்டுரைகளும்
பாரதியார் காலத்தை வென்ற மஹாகவி. அவரது சரித்திரம் ஆதாரபூர்வமாக, முழுமையாக இன்னும் வெளி வரவில்லை. ஆனால் அவரது மனைவி, மகள், அவருடன் பழகியவர்கள், அவரை நேசித்தவர்கள், அவரை அறிந்தவர்கள், அவரது நூல்களைப் படித்தவர்கள் அவ்வப்பொழுது பல செய்திகளைக் கட்டுரைகள் வாயிலாகவும் நூல்கள் வாயிலாகவும் தெரியப்படுத்தி வந்துள்ளனர்.
இந்த பாரதி இலக்கியம் பற்றிய கட்டுரைகளையும் நூல்களையும் படித்தால் பாரதியாரை அறிவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
சுமார் அறுபது ஆண்டுகளாகப் பாரதியைப் பயில்பவன் நான். அவருடைய கதைகள், கட்டுரைகள், கவிதைகளைச் சேர்த்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவரைப் பற்றி வந்த கட்டுரைகளையும், கவிதைகளையும், நூல்களையும் சேர்த்து வருகிறேன்.
அவரைப் பற்றி போற்றிப் பாடிய கவிதைகள் ஆயிரத்தைத் தொகுத்து பாரதி போற்றி ஆயிரம் என்று ஒரு தொடரில் அவற்றை வெளியிட்டேன்.
பாரதியார் பற்றிய நூல்கள் என்ற தலைப்பில் www.tamilandvedas.comஇல் ஒரு தொடரில் அவரை அறிமுகப்படுத்தும் முக்கிய கட்டுரைகள் மற்றும் நூல்களையும் எழுதி வந்தேன். அவற்றில் முதல் முப்பது அத்தியாயங்களின் தொகுப்பே இந்த நூல்.
இதை பாரதி அன்பர்கள் படித்தால் ஒரு பேரின்பத்தை அடைவது நிச்சயம். மூல கட்டுரைகளையும் நூல்களையும் வாங்கிப் படிப்பதும் நிச்சயம்.
இதை வெளியிட்ட லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.
இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக!
இந்தத் தொடர் வெளிவந்த போது ஏராளமான பாரதி அன்பர்களும் தமிழ் இலக்கியத்தில் பற்றுக் கொண்டோரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாராட்டுகளை நல்கினர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
பாரதியைப் பயில உதவும் இலக்கியத்தைக் காண வாருங்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். நன்றி.
பங்களூர் ச.நாகராஜன்
3-3-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.