வராஹ வடிவ அற்புத    சம்ஸ்க்ருதக்  கல்வெட்டு! (Post No.14,975)

Written by London Swaminathan

Post No. 14,975

Date uploaded in London –  12 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

YAJNA VARAHA/ BOAR SANSKRIT INSCRIPTION

ஏரான் வராஹ கல்வெட்டு(ERAN IN M. P.) மிகவும் அற்புதமான, புதுமையான கல்வெட்டு ஆகும். இது மத்திய பிரதேசத்தில் ஏரான் என்னுமிடத்தில் உள்ளது. சாதாரணமாக கல்வெட்டுகள் பாறைகளிலும் சிலைகளின் அடியிலும் இருக்கும். ஆனால் இந்த வராஹம் என்னும் காட்டுப்பன்றி கல்வெட்டு , அந்த வரஹத்தின் தொண்டைப் பகுதியில் காணப்படுகிறது. குப்தர் காலத்தைச் சேர்ந்த இந்த மிகப்பெரிய உருவம் 1500 ஆண்டுகள் பழமை உடைத்து. இதில் ஒரு தேள் இருப்பது மிகவும் புதிராக உள்ளது. தோரமான என்னும் மன்னர் பற்றிய ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு இது.

இதன் விவரங்களைக் காண்போம் :

பரிபாடல் பதினோராம் எண் பாடல் போலவே இதில் நிறைய வான சாஸ்திரக் குறிப்புகள் உள்ளன .பரிபாடல் நூ லி லுள்ள பாடலில் மிதுன ராசி, பங்குனி போன்ற ஸம்ஸ்க்ருதச் சொற்கள் பயிலப்பட்டுள்ளன . இந்த ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டில் பங்குனி முதலிய விவரங்களுடன் தேள் உருவம் பொறிக்கப்பட்டுள்ளதால் இது விருச்சிக ராசியன்று நிறுவப்பட்டதாக ஊகிக்கப்படுகிறது

பாரத தேசத்திலுள்ள பழமையான முக்கியமான கல்வெட்டு இது.;  ராசிச் சக்கரம் என்பதைக் கிரேக்கர்கள் நமக்குச் சொல்லிக்கொடுத்தார் கள் என்று பிதற்றுவோருக்கு பரிபாடல் நூலும் இந்தக் கல்வெட்டும் மரண அடி கொடுக்கிறது.

எதற்காக வராஹ அவதாரம் ? Geological Science Story

அசுரர்கள் பூமாதேவியைக் கடலில் ஒளித்து வைக்கவே அதைக் கடலில் இருந்து தோண்டி எடுக்க விஷ்ணு பகவான்  மிகப்பெரிய வராஹ அவதாரம் எடுத்தார் வலிமையான மூக்கின் மூலம்  பூமியை தூக்கி நிலை நிறுத்தினார். அது போல மன்னன்  தோரமானன் மாபெரும் வெற்றி அடைந்தான் என்று கல்வெட்டு செப்புகிறது .

மச்ச, கூர்ம, வராஹ அவதாரங்கள் Geological Science Story

பூகர்ப்ப விஞ்ஞான விஷயங்களை பாமர மக்களுக்குச் சொல்லும் கதைகள் ஆகும் பூமி முதலில் நீரால் சூழப்பட்டு இருந்தது பின்னர் நிலம் தோன்றியது அதை விளக்கும்  விஞ்ஞானக்கதை இது .

 கல்வெட்டு விவரம்

மன்னன் குடும்பம் விஷ்ணு பக்தர்கள்; இதனால் வராஹ அவதார வடிவத்தில் தோரமான ராஜா விஷ்ணு பகவானுக்கு கோவில் எடுப்பித்தார் . அவருடைய சகோதரன் தான்ய விஷ்ணு ; அண்ணனைப்போலவே குணங்கள் நிறைந்தவர்; இவர்களுடைய தாத்தா ஹரிவிஷ்ணு . அவருக்கும் முந்தியவர் இந்திரா விஷ்ணு என்னும் பிராமண முனிவர் ஆவார் . நாற்கடலும் புகழ் பரப்பி போமி முழுதையும் வென்ற தோரமானான் பங்குனி தசமி திதியில் இதை ராகின ஏடு  என்னுமிடத்தில் நிறுவினான் .

பூமியை வராஹ வடிவில் தூக்கி நிறுத்திய பகவான் வெற்றி வீரர். அவர் தன்னுடைய பலம் வாய்ந்த முகத்தினால் மலையாள பந்தாடினார் திரிலோக மாளிகையை நிலை நாட்டினார்

கோப்ராஹ்மணர்கள் மக்கள் அனைவரும் நலத்துடன் வாழ்க.

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் என்று வாழ்த்துவது மரபு .

 வாழ்க அந்தணர்

  வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல்

  வேந்தனும் ஓங்குக

ஆழ்க தீயதெல்

  லாம்அரன் நாமமே

சூழ்க வையக

  முந்துயர் தீர்கவே.  1

என்பது சம்பந்தர் தேவாரம் . ஆனால் பார்ப்பனர் என்பது புறநானூற்று வாழ்த்து இதையே சம்ஸ்க்ருதத்தில் கோ / பசு, ப்ராஹ்மண என்று பகர்வர்.

தேள் உருவம் ஏன்?

குப்தர்  கால சிற்பிகள் மகா மேதாவிகள் . அவர்கள் வராஹத்தின் மாலையை மிகவும் நீளமாகச் செய்து பன்றியின் உடல் முழுதும் சுற்ற வைத்துள்ளார்கள்;  அதில்  இருபத்தெட்டு வட்டங்கள் உள. அவற்றில் ஒன்றில் தேள் உருவமும் ஏனையவற்றில் ஆணும் பெண்ணும் அமர்ந்துள்ளனர் 28-ல் மட்டும் தேள் இருப்பதால் அது பங்குனி தசமியில் விருச்ஸிக ராசி அன்று யக்ஞ வராஹ சிலை கோவில் எடுப்பிக்கப்பட்தாக கருதலாம் ஏனையவை 27 நட்சத்திரங்கள்!.

அற்புதமான பன்றி வடிவ கோவில் கல்வெட்டு இந்துக்களின் மகத்தான வான சாத்திர அறிவைக் காட்டுகிறது.

–Subham –

Tags- வராஹ வடிவ,  அற்புத,  சம்ஸ்க்ருதக் கல்வெட்டு, தோரமான மன்னன் , குப்தர் காலம் 

GNANAMAYAM 14th September 2025 BROADCAST PROGRAMME SCHEDULE

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer -Mrs. Jayanthi Sundar Team –

***

NEWS BULLETIN

Vaishnavi Anand and Latha Yogesh from London present World Hindu News in Tamil

****

Brhannayaki Sathyanarayanan from Bengaluru speaks on

ALWAR TIRUNAGARI  Temple

****

Talk by S Nagarajan from Bengaluru

Topic: SURAIKKAY SIDDHAR

****

SPECIAL EVENT-

Talk on IMPORTANCE MAALAYA PAKSHAM  by

Sri A V SWAMINATHA SIVACHRAIYAR , Chief of Mayuram Sivapuram Global Veda  Sivagama Patasala.

Sivapuram Veda Sivagama Patasala was established in the year 1997 in Mayiladuthurai in Tamil Nadu. Sivasri. A.V.Swaminatha Sivachariar is the founder and principal of this Patasalai.

This Patasala is dedicated and persevering for the upkeeping, developing, and spreading the values of Hindu Religion, Culture, Sastras, Vedas and Agamas. It is also conducting various seminars and conferences frequently inviting various spiritual leaders, scholars and gurus.

This Patasala has a small Shiva temple inside and daily morning and evening ritual poojas and havan are performed. During this pooja, Veda parayam is chanted in a big way.

This Patasala is registered under section 12-A of the Income tax Act, 1961.

This Patasala has obtained the 80G exemption certificate from the Income tax Department.

This Patasala is registered as NGO and obtained the Darpan id from the Government of India.

This Veda Patasala is running for the past more than 25 years in the same complex.  The area of this complex is admeasuring about 25,000 sq.ft. This land is given to Sri Swaminatha Sivachariar for the Patasala by the Thiruvaduthurai Aadheenam, on a no-time limit lease agreement, under the prevailing Mutts culture. The Mutt is charging yearly a nominal token amount as lease rent. The land once given to this type of educational/charitable trust, it will not be taken back by the Mutt. In this complex, total built-up area is approx. 7500 sq ft. consisting of 8 rooms, 2 big halls, kitchen, dining room, library, cow Shala, etc.

This Vada Patasala is also started partly functioning from one more premises, which is owned by its founder, for the past 3 years. The area of this place is about 6,000 sq.ft. and the built-up are is about 4,000 sq.ft. consisting of 2 big halls, 5 rooms, kitchen, dining room, garden, etc.  In this place (a) Classes for the first 2 years students are taking place; (b) few teachers are staying there; and (c) daily poojas and vedas recitals are taking place.

Over 300 students have graduated from this Veda Patasala over the past 25 years and are working around the world in various professional fields and temples.

This Patasala is running without getting any financial assistance from any State / Central Government bodies.

This Patasala is running purely from (a) the aids / contributions / donations received from the well-wishers of the activities being undertaken here; (b) Old students well settled in India and abroad; and (c) personal income of the founders.

Sri Swaminatha Sivachariar (Founder and Principal)

He studied Vedas, Sastras and Agamas in Dharumapuram Veda Sivagama Patasalai (a Unit of Dharumapuram Aadheenam).  After successful completion, he was awarded “Vedagama praveena” certificate. Later he started working in the same Patasala as a teacher and became its principal. After quitting his job, he started his own Patasala in the year 1996.

Sri Swaminatha Sivachariar is having more than 32 years of experience and is one of the very few experts in Vedas and Saivagama Shastras in Tamil Nadu. He has performed more than 1500 consecrations (“kumbhabhishekam”) of temples till now in various parts of India and abroad.  He is also participating in seminars and conferences being conducted by various Hindu religious organizations. He has been Advisor to the HR&CE Ministry, Government of Tamil Nadu for a couple of terms.

 ******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 14 September 2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் – திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்-

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் —திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

சொற்பொழிவு– தலைப்பு-  திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரி  ஆலயம்

****

பெங்களூருரிலிருந்து எஸ். நாகராஜன்

சொற்பொழிவு

தலைப்பு- ஶ்ரீ சுரைக்காய் சித்தர்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு  ஸ்ரீ ஏ வி சுவாமிநாத சிவாச்சாரியார்மாயூரம்சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவுனர்.

தருமபுரம் சிலவாகம பாடசாலை ஆசிரியர்

மாயவரம் சிவபுரம் குளோபல் சிவாகம அகாடமியின் குரு முதல்வர் .

மாயவரம் கருவாழக்கரை ஶ்ரீ மஹாஸதாசிவபீட அதிபர் சைவசித்தாந்த சரபம்.500க்கும் மேற்பட்ட மாணவர்கள் உலகளாவிய அளவில்.

 40 வருடங்களாக சிவாகமப்பணி. அகாடமியின் குரு முதல்வர் .

மாயவரம் கருவாழக்கரை ஶ்ரீ மஹாஸதாசிவபீட அதிபர் சைவசித்தாந்த சரபம்.500க்கும் மேற்பட்ட மாணவர்கள் உலகளாவிய அளவில்..

 40 வருடங்களாக சிவாகமப்பணி.

தலைப்பு- மாளய பக்ஷத்தின்சிறப்புகள்

 ****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags-Gnanamayam Broadcast, 14-9- 2025, programme

All that glitters is not Gold! (Post No.14,974) Part 4

Written by London Swaminathan

Post No. 14,974

Date uploaded in London –  12 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Proverbs on Gold 4


4851. பூசப் பூசப் பொன் நிறம்.
The more you gild it, the more like gold will it appear.

4869. பூ விற்றவனைப் பொன் விற்கப்பண்ணுவேன்.
I will enable him who sold flowers to sell gold.


4871. பூவுள் மங்கையாம் பொற்கொடியாம் போன இடம் எல்லாம் செருப்படியாம்.
It is said that she is Lakshmi residing in flowers, and she is a golden creeper, yet whithersoever she goes she is beaten with shoes.


5005. பொற் கலம் ஒலிக்காது வெண் கலம் ஒலிக்கும்.
A gold vessel does not sound, a brass one does.


5006. பொற் காப்புக்கு ஆசைப்பட்டுப் புலியின் கையில் அகப்பட்பதுபோல.
Like one whose desire for a gold bracelet, hurried him into the claws of a tiger.

5007. பொற் பூவின் வாசனையும் முருக்கம் பூவின் வாசனையும் சரி.
The smell of a flower of gold and that of the murukku flower are alike.

5008. பொற் பூ வாசிக்குமா?
Does a golden flower diffuse fragrance?

5009. பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
The ornament of reputation is greater than ornaments of gold.

5010. பொன் இரவல் உண்டு, பூ இரவல் உண்டா?
Gold may be lent, can flowers?.

5011. பொன் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
If the word gold be uttered, even a corpse will open its mouth.

5012. பொன் கத்தி என்று கழுத்து அறுத்துக்கொள்ளலாமா?
May one cut his throat with a knife because it is made of gold?

5013. பொன் காத்த பூதம் போலே.
Like the demon that guarded golden treasure.

5014. பொன் செருப்பு ஆனாலும் காலுக்குத்தான் போடவேண்டும்
Though golden slippers, they must be put on the feet.

5015. பொன்மணி அற்றவளை அம்மணி என்பானேன்?
Why should a woman who has no gold beads be called Ammani?

5016. பொன்முடி அல்லது சடை முடி வேண்டும்.
One should wear either a gold crown, or matted hair.

5017 பொன்னம்பலம் உண்டானால் என்ன அம்பலம் கிடையாது ?
If one has a golden house, what house can he not get ?

5018. பொன்னம்பலத்துக்கும் புவனகிரிப் பட்டணத்துக்கும் என்றைக்கும் உண்டான இழவு.
The golden hall of-Chilambaram, and the town Puvanagiri, are always in trouble.

5021. பொன்னான மனதைப் புண்ணாக்குகிறான்.
He ulcerates the golden mind.

5022. பொன்னாலே கலம் உண்டானாலும் மண்ணாலே சுவர் வேண்டும்.
Though one may possess vessels of gold, the wall of his house must be of mud.

5023. பொன்னாலே மருமகளானாலும் மண்ணாலே ஒரு மாமி வேண்டும்.
Though the daughter-in-law is made of gold, she must have a mother-in-law made of earth.

5024. பொன்னின் கலப்பை வரகுக்கு உழப் போனதாம் வரகு சேருக்கு வரகு பட்டதாம். Golden ploughs were used for the cultivation of the millet, and the crop was less than the seed-corn.

5025. பொன்னின் குடத்திற்குப் பொட்டு இட்டுப் பார்க்க வேண்டுமா?
Must a royal mark be inscribed on a golden pot, that it may appear the more beautiful?

5026. பொன்னின் குடம் உடைந்தால் பொன் ஆகும் என்ன ஆகும் மண்ணின் குடம் உடைந்தாக்கால் ?
Though broken to pieces a golden pot will still be gold, of what use is an earthen pot when broken?

5027. பொன்னை வைக்கிற கோயிலிலே பூவையாவது வைக்கவேன்டும்.
Flowers, at least, must be offered in a temple in which gold is offered.

5028. பொன்னை எறிந்தாலும் பொடிக் கீரையை எறியலாமா?
Although you may throw away gold, you may not throw away edible herbs?

5036. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
A contented mind is a specific for making gold.


5042. போலைக்கு ஒரு பொன்மணி கிடைத்ததாம், அதைத் தூக்கக் கண்ணில் தொட்டுத் தொட்டுப் பார்த்ததாம்.
It is said that the hollow-headed woman obtained a gold bead, and that she examined it when she was sleepy.

5057. மகா மேருவைச் சேர்ந்த காகமும் பொன்னிறமாம்.
Even a crow if it arrive at Mahameru is said to assume a golden hue.

5067. மங்கமாரி வந்தார் தங்க மழை பெய்தது.
Montgomery came, and it rained fine gold.

5222. மாப் பொன் இருக்க மக்களைச் சாவக் கொடுப்பேனா?
Whilst I possess a particle of gold, will I allow my children to die?

5226. மாமியார் உடைத்தால் மண்கலம், மருமகள் உடைத்தால் பொன்கலம்.
If broken by the mother-in-law it is an earthen vessel, if by the daughter-in-law, it is a golden vessel.

5274. மின்னுவதெல்லாம் பொன் அல்ல.
All that glitters is not gold.


5468. யானை கறுத்தால் ஆயிரம் பொன் பெறும்பூனை கறுத்தால் என்ன பெறும்?
A black elephant is worth a thousand gold pieces, what will a black cat fetch?

5475. யானையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி இருப்பு அங்குசத்திற்கு ஏமாந்து நிற்பான் ஏன்?
Having bought an elephant for a hundred pieces of gold, why hesitate to buy its iron goad?

5482. வங்கம் தின்றால் தங்கம்வங்கம் கெட்டால் பங்கம்.
When lead is eaten it becomes gold; when it is spoiled it becomes useless.

5620. வாதி கண்ணுக்கு மட்டம் எட்டு மாற்று.
To the eye of an alchemist, common gold appears as standard gold.

5917. வெள்ளி வட்டிலும் வேண்டும் விளிம்பிலே பொன்னும் வேணடும்.
I must have a silver platter with a rim of gold.

5922. வெறுங்கைத் தட்டான் இரும்பு ஊதிச் செத்தான்.
A money-less goldsmith died by blowing iron.


6035. வேளைக்கு அரைக் காசு ஆயிரம் பொன் ஆகும்.
Half a cash at a time will, in the long run, amount to thousands of gold. 

பொன்  வைக்கும் இடத்தில் பூ வைத்தாற் போல

Flowers in the place of Gold (coins)

—subham—-

Tags—Proverbs, Gold, Part 4

தொல்காப்பியத்தில் சம்ஸ்க்ருதச் சொற்கள்! வகையாக மாட்டினார் த்ருண தூமாக்னி ! (Post.14,973)

Written by London Swaminathan

Post No. 14,973

Date uploaded in London –  12 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தொல்காப்பியத்திலுள்ள ஸம்ஸ்க்ருதச் சொற்களின் பட்டியலைக் கொடுத்துள்ளார் ; ஒவ்வொரு சொல்லும் ஏராளமான இடங்களில் கையாளப்படுகின்றன. குறிப்பாக காமம் , உவமம் என்னும் சொற்களைக் கூறலாம் . மேலும் நிறைய சொற்கள் எந்த மொழி என்றே  கண்டுபிடிக்க முடியவில்லை உதாரணத்துக்கு நிம்பிரி (பொறாமை) என்னும் ஒரு சொல்லைக் கூறலாம் இதிலுள்ள நிம்- சம்ஸ்க்ருத மொழியில் மட்டுமே உள்ளது . யாரும் விளக்க முடியாத இந்த ஒலிக்கு  நிம் = இல்லை பிரி = பிரியம் என்று நானாக யூகம் செய்கிறேன்.

இதே போல ஹார்ட்/HEART என்னும் ஆங்கிலச் சொல் ஹ்ருத் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து சென்று தமிழிலும் ஹ்ருதயம் என்று ஆனது ; இப்படிப்பட்ட முக்கியமான சொல் இல்லாமல் இருக்க முடியாது என்று நினைத்து நானாக  குருத்து என்ற சொல்லைக் கண்டுபிடித்தேன். இருதயம் குருத்து வடிவத்தில் இருப்பதாலும் குருதி என்ற தமிழ்ச் சொல்லுக்கு ரத்தம் என்ற பொருள் இருப்பதாலும் ஊகித்தேன் . இவை எல்லாம் ஊகங்கள் மட்டுமே.

த்ருண தூமாக்கினி  என்பது தொல்காப்பியரின் பெயர் என்றும் அவர் அகத்த்தியரின் மனைவியை தமிழ் நாட்டுக்கு அழைத்து வரும் விஷயத்தில், அவருடன் அகத்தியர்  சண்டை  போட்டார் என்றும் அப்பொழுது ஒருவர் மீது ஒருவர் சாபம் இட்டனர் என்றும் புகழ்பெற்ற உரைகாரர் நச்சினார்க்கினியர் உரையில் கூறுகிறார். சங்க காலத்தில் அகத்தியன் பெயர் இல்லை. பிற்காலத்தில் மணிமேகலையில் வருகிறது அதற்கு முன்னர் காளிதாசன், பாண்டிய மன்னரையும் அகத்திய முனிவரையும் தொடர்பு படுத்திப் பேசுகிறார். இமயமலை போல பொதியமலையிலும் வேள்வித் தீ இருப்பதாகப் புற   நானூற்றுப் புலவர் பாடியதால் அங்கு அகத்தியர் வேள்வி செய்தார் என்பதை யூகித்தறியலாம் . மேலும் தொல்காப்பியருக்கு சர்ட்டிபிகேட் கொடுத்தது நான்கு வேதங்களைப் படித்த திருவிதாங்கூர் ஆசான் என்று பனம்பாயிரானார் தொல்காப்பியப்  பாயிரத்தில் சொல்வதால் தொல்காப்பியரின் பின்னணி ஓரளவுக்குத் தெரிகிறது; அதாவது எல்லாம் பொதிய மலையை ஒட்டியே நடந்தது. 

****

தொல்காப்பியத்தில் 75 சம்ஸ்க்ருதச் சொற்கள்

அமரர்

அந்தம் 

ஆணை 

உவமம் 

காலம்  5

காரம் 

திசை 

கபிலை 

கரகம் 

கருமம்  10

கரணம் 

காமம் 

காயம் 

காரணம் 

களம்  15

குணம் 

சிந்தை 

சின்னம் 

சூதர் 

தா  20

தாரம்

தூது 

தெய்வம்

நாடகம்

நிமித்தம் 25

பதி 

பருவம்

Pali / பலி

Puutham/ பூதம் 

மங்கலம்  30

மண்டிலம்

மதி 

மந்திரம் / MANTRA

மாயம் 

மனம்  35

முகம் 

முரசு 

வருணன் 

வள்ளி 

வாணிகம் 40

கரகம் 

குஞ்சரம்  

நிச்சம் 

வண்ணம்

தேசம் / தேயம்  45

சூத்திரம்

ஆசிரியர்,

இமை,

உரு,

உருவு  50

துணி

இலக்கணம்

சுண்ணம்

அத்தம்,

அம்போதரங்கம், 55

அமுதம்,

அவை,

ஆரம்,

உலகம்,

ஏது,  60

பழி,

அரசன்,

அரணம்,

ஏமம்,

ஐயர், –65

கவரி,

தாமதம்,

தூணி,

பண்ணத்தி,

பார்ப்பனன், –70

பையுள்,

மாராயம்,

பக்கம்,  73

ஒட்டகம் 74

என் கருத்துக்கள்

எழுத்துடன் கரம் சேர்ப்பது சம்ஸ்க்ருத வழக்குக்கு

அ -கரம் — 75

உ- கரம்

சம்ஸ்க்ருதத்தில் எல்லா எழுத்துக்களுக்கும் காரம் என்று சேர்ப்பார்கள்  அ -காரம்

FROM MY 2012 ARTICLE:

13. தொல்காப்பியர் பயன்படுத்தும் சம்ஸ்கிருதச் சொற்கள் பட்டியல் மிக மிக நீண்டதுகீழே காண்க:

எழுத்து அதிகாரம்: உவமம், காலம், காரம், காயம், திசை, பூதம், பூதன், மதி, ஆசிரியர், இமை, உரு, உருவு, துணி (12)

சொல் அதிகாரம்: அத்தம், ஆனை, இலக்கணம், உவமம், கருமம், களம், காரணம், திசை, தெய்வம், பூதம், சுண்ணம், வண்ணம் (12)

பொருள் அதிகாரம்: அத்தம், அந்தரம், அம்போதரங்கம், அமரர், அமுதம், அவை, ஆரம், உலகம், உவமம், உரு, ஏது, கபிலை, கரகம், கருமம், கரணம், காமம், காயம், காரணம், காலம், குணம், குஞ்சரம், சிந்தை, சின்னம், சூதர், தாரம், திசை, தூது, தெய்வம், நாடகம், நிமித்தம், பழி, பருவம், பலி, பூதம், மங்கலம், மண்டிலம், மந்திரம், மதி, மாயம், மானம், முகம், முரசு, வருணன், வள்ளி, வாணிகம் (46)

கீழ்கண்ட வார்த்தைகள் பிராக்ருதம் மூலமாக நுழைந்த சம்ஸ்கிருதச் சொற்கள்: அரசன், அரணம், அவை, ஆசான், ஆசிரியர், ஆணை, இமை, இலக்கணம், உரு, ஏமம், ஐயர், கவரி, சுண்ணம், தாமதம், தூணி, தேயம், நிச்சம், பக்கம்,, பண்ணத்தி, பார்ப்பனன், பையுள், மாராயம், வண்ணம்.

— SUBHAM—

TAGS- தொல்காப்பியம், சம்ஸ்க்ருதம், சொற்கள், த்ருண தூமாக்ணி 

அசாதாரணமான கவிஞர் – மகாகவி பாரதியார்! (Post14,972)

Tamil Nadu Governor garlanding Bharatiyar Picture in Chennai 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,972

Date uploaded in London – 12 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 செப்டம்பர் 11 பாரதியார் நினைவு தினத்தையொட்டி கல்கிஆன்லைன் இதழில் 11-9-25 அன்று வெளியான சிறப்புக் கட்டுரை!! 

அசாதாரணமான கவிஞர் – மகாகவி பாரதியார்! 

ச. நாகராஜன் 

மகாகவியின் வாழ்க்கையில் சில துளிகள் இதோ: 

அமுதன் – அசாதாரணமானவர் பாரதியார்!

மகாகவி பாரதியாரை ‘அசாதாரணமானவர்’ என்று குறிப்பிடுகிறார் அவருடன் புதுவையில் நெருங்கிப் பழகிய டி. ஆராவமுதன் என்னும் அமுதன். அரவிந்தரின் சீடராகி அரவிந்த ஆசிரம மானேஜராக விளங்கியவர்மகாகவி பாரதியார் பற்றிய அதிகாரபூர்வமான தகவல்களைத் தந்தவர் இவர்.

அவர் குறிப்பிடுவது இது:

“பாரதி அசாதாரணமானவர் – ஒரு விதத்தில் அல்ல. பல விதத்தில். வானுலகிலிருந்து கீழிறங்கி மண்ணுலகில் நம்முடன் நடமாடிய தேவன். ஆகவே அசாதாரணமானவன்.

வான் போல் கட்டுக்கடங்காத, பரந்த உள்ளம் படைத்திருந்தவர்; கனிந்த நெஞ்சம்; ஒளி வீசிய தெளிவாகிய அறிவு: உயிரில் எப்போதும் கொழுந்து விட்டெரிந்த தீ. அடிக்கடி பார்ப்பதற்கரியதாகிய அசாதாரணமான பெரியார்.

பாரதி தமிழின் உயிருக்கு உயிராகியவர். தமிழ் உயிர் திரண்டு உருண்டு உருவாகியபோது, பாரதி ஆயிற்று. ஆயினும், தமிழனின் இருள் கட்டுகளுக்கு விலகி நின்றவர் அவர். தமிழகத்தின் பழமையால் கட்டுப்படாது நின்று, தமிழின் பழமைக்கு மேன்மை தந்தவர் அவர். தமிழின் புதுமைக்கு சிசு.

தமிழ்நாட்டின் குரு – ராஜாஜி! 

பாரதியாரை நன்கு அறிந்த ராஜாஜி கூறுவது இது: 

தமிழ்நாட்டுக்குத் தனிக் கவியாகவும் குருவாகவும் அவதரித்த பாரதியார் நினைவு நாள். அனைவரும் ஆண், பெண் குழந்தைகள் அனைவரும் அவரை நினைத்துத் தொழுவோம்

தெய்வாதீனமாக நம்முடைய தமிழ்நாட்டில் நம்முடைய காலத்தில் ஓர் அமரகவி அவதரித்தார். அவர் தேசபக்தியும் தெய்வபக்தியும் இரண்டும் பெற்றவராக அமைந்தார். அவர் பாடிய பாடல்கள் தமிழருக்கு அழையாத செல்வமாயிற்று.

பாரதியார் பாடியுள்ள பராசக்தி நடத்திய நிகழ்ச்சி – கல்கி 

பாரதியார் புகழ் உலகெங்கும் பரவ உத்வேகமூட்டிய ஒரு நிகழ்ச்சி எட்டயபுரத்தில் 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் நாள் நடந்த பாரதி ஞாபகார்த்த மணிமண்டப அஸ்திவார விழாவாகும். 

பிரம்மாண்டமான அளவில் பாரதி ஆர்வலர்கள் கலந்து கொண்ட  அந்த நிகழ்ச்சி கல்கி (திரு ரா.கிருஷ்ணமூர்த்தி) அவர்களின் பெரு முயற்சியால் நடந்தது.

ராஜாஜி அஸ்திவாரக்கல்லை நட கூடியிருந்தோர் மகிழ்ச்சியில் திளைக்க அழகாக நடந்த விழா தமிழக சரித்திரத்தில் முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகும்.

அதைப் பற்றி கல்கி இப்படி கூறுகிறார்

“என்னுடைய சொந்த அனுபவத்தில், மனிதனுடைய புலன்களுக்கும் அறிவுக்கும் எட்டாத சக்தி ஒன்று இருப்பதாக நான் உணர்ந்திருக்கிறேன். அத்தகைய சக்தியானது வெறும் குருட்டுத்தனமான சக்தியல்ல! ஏதோ ஒரு ஒழுங்கின்படி, ஒரு நியதியின் படி, இந்த உலகத்தையும் இதில் நடைபெறும் சகல காரியங்களையும் நடத்தி வருகிறது என்றும் நான் நம்புகிறேன்.

அந்த சக்தியானது தற்சமயம் தமிழ்நாட்டை ஒரு மகோந்நதமான நிலைக்குக் கொண்டுபோகும் மார்க்கத்தில் நடத்திக் கொண்டு வருகிறது என்று நான் பரிபூரணமாய் நம்புகிறேன். பாரதியார் பாடிப் பரவியுள்ள பராசக்தி அதுதான் போலும்.

அந்த மகாசக்தியின் காரணமாகத்தான் எட்டயபுரத்தில் நாம் கண்ட அற்புதம் நிகழ்ந்தது என்று எனக்குத் தோன்றுகிறது. மற்றப்படி மனிதப் பிரயத்தனத்தினால் மட்டும் அவ்வளவு மகத்தான ஒரு வைபவம் நடந்திருக்கக்கூடும் என்று என்னால் நம்ப முடியவில்லை.

கவிதை ரஸாயனம் – கவிஞர் திருலோக சீதாராம்

பாரதியாரின் நூல்கள் தமிழ் மக்களின் பொது உடைமை ஆக வேண்டும் என்பதற்காகக் பெருமுயற்சி எடுத்தவர் கவிஞர் திருலோக சீதாராம். வாழ்நாள் முழுவதும் பாரதியைப் பரப்பும் பணியை அவர் செய்து வந்தார். அவர் பாரதியின் பாடல்களைப் பற்றிக் கூறுவது இது: 

கள்ளையும் தீயையும் சேர்த்து

காற்றையும் வானவெளியையும் சேர்த்து 

தீஞ்சுவைக் கவிதை இயற்றிய தமிழ் கவிஞர் மரபில் பாரதியின் ஸ்தானம் எவ்வளவு மாண்புடையது! அந்த மாண்பைப் போற்றி மகிழும் ரஸத்தேர்ச்சி நமக்கு இருந்தால் அதுவே போதும்!

காந்திஜியும் பாரதியாரும்

பிரபல எழுத்தாளரான வ.ரா. தமிழில்   சாதித்தது    அதிகம். 

அதில் பாரதியைப் பற்றி சிந்தனை செய்து அவர் செயலாற்றியதே 

முக்கியமானதாக அமைந்தது.

1919ம் வருடம், பிப்ரவரி மாதம் சென்னை வந்த மகாத்மா காந்திஜி ராஜாஜி குடியிருந்த கதீட்ரல் ரோடு இரண்டாம் நம்பர் பங்களாவில் வந்து தங்கினார்.

அங்கு யாரையும் உள்ளே விடக் கூடாது என்று வ,ரா.விடம் சொல்லப்பட்டது. அவர் வாயிலில் காவல் காத்தார். 

பிறகு நடந்ததை வ.ரா. இப்படி எழுதுகிறார்:

“நான் காவல் புரிந்த லட்சணத்தைக் கண்டு சிரிக்காதீர்கள். அறைக்குள்ளே பேச்சு நடந்து கொண்டிருக்கிற சமயத்தில் பாரதியார் மடமடவென்று வந்தார்; “என்ன ஓய்!” என்று சொல்லிக் கொண்டே, அறைக்குள்ளே நுழைந்து 

விட்டார். என் காவல் கட்டுக்குலைந்து போய் விட்டது. 

உள்ளே சென்ற பாரதியாரோடு நானும் போனேன். பாரதியார் காந்தியை 

வணங்கி விட்டு, அவர் பக்கத்தில் மெத்தையில் உட்கார்ந்து 

கொண்டார். அப்புறம் பேச்சு வார்த்தை ஆரம்பித்தது: 

பாரதியார்: மிஸ்டர் காந்தி!இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு 

நான் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் 

போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?

காந்தி: மகாதேவபாய்! இன்றைக்கு மாலையில் நமது அலுவல்கள் என்ன?

மகாதேவ்: இன்றைக்கு மாலை ஐந்தரை மணிக்கு, நாம் வேறோர் இடத்தில்

 இருக்க வேண்டும்.

 காந்தி: அப்படியானால், இன்றைக்குத் தோதுப்படாது. தங்களுடைய

 கூட்டத்தை நாளைக்கு ஒத்திப் போட முடியுமா? 

பாரதியார்: முடியாது! நான் போய் வருகிறேன். மிஸ்டர் காந்தி! தாங்கள் 

ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்.

பாரதியார் போய் விட்டார். நானும் வாயில்படிக்குப் போய்விட்டேன். 

 பாரதியார் வெளியே போனதும்,‘இவர் யார்?’ என்று காந்தி கேட்டார். தாம் 

ஆதரித்து வரும் பாரதியாரைப் புகழ்ந்து சொல்வது நாகரிகம் அல்ல 

என்று நினைத்தோ என்னவோ,  ரங்கசாமி அய்யங்கார் பதில் 

சொல்லவில்லை. காந்தியின்  மெத்தையில் மரியாதை தெரியாமல் 

பாரதியார் உட்கார்ந்து கொண்டார் என்று கோபங்கொண்டோ என்னவோ 

சத்தியமூர்த்தி வாய்  திறக்கவில்லை. ராஜாஜி தான்,“அவர் எங்கள் 

தமிழ்நாட்டுக் கவி”  என்று சொன்னார்.

 அதைக் கேட்டதும்,“இவரைப் பத்திரம்மாகப் பாதுகாக்க வேண்டும்.

இதற்குத்  தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா?” என்றார் காந்தி. 

எல்லோரும் மௌனமாக \இருந்து விட்டார்கள்.

 அரவிந்தரும் பாரதியாரும்

அரவிந்தர் 1910ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி புதுவை வந்து சேர்ந்தார். பாரதியார் அவரை வரவேற்றார்.

அன்றிலிருந்து ஒரு அற்புதமான நட்பின் அபூர்வ விளைவுகளாக வேத ஆராய்ச்சி, அரவிந்தர் தமிழ்க் கவிதைகளை இரசித்து, ஆண்டாள், பாசுரத்தை (To the Cuckoo, I dreamed a dream) ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது, பாரதியார் அவரை  தினமும் சந்தித்துப் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிததது என்று ஏராளமான நற் பணிகள் நடைபெற ஆரம்பித்தன.

வருடங்கள் ஓடின. புதுவை வாழ்க்கை சகிக்க முடியாத ஒரு நிலை ஏற்படவே பாரதியார் சென்னைக்குத் திரும்ப முடிவு செய்தார்.

 கடைசியாக அரவிந்தரிடமிருந்து விடை பெறும் நாளும் வந்தது.

அந்த நாளைப் பற்றி சகுந்தலா பாரதி தனது நூலில் இப்படி விவரிக்கிறார்:

“கடைசிமுறையாக் என் தந்தை அரவிந்தரிடம் விடை பெறப் போனபோது அவர்கள் தனியறையில் சம்பாஷணை நடத்தியதால் அதன் விவரம் எனக்குத் தெரியாது. ஆனால் விடைபெற்றுத் திரும்புகையில் ஸ்ரீ அரவிந்தரின் சாந்தி நிறைந்த ஞானவொளி வீசும் கண்கள் கண்ணீரால் மங்கியிருந்தன. என் தந்தையின் வீர விழிகளில் கண்ணீர் ததும்பி நின்றது. அது மட்டும் தான் நான் கண்டேன்.

ஸ்ரீ அரவிந்தரது ஆசீர்வாதத்தைப் பெற்று வீடு திரும்பினோம். அவரது சீடர்கள் எங்களுடன் வீடு மட்டும் வந்தார்கள்.நண்பர்கள் யாவரையும் பிரிய மனமில்லாமல் பிரிந்து புதுவையிலிருந்து புறப்பட்டோம்.”

 பாரதியின் புதுவை வாசம் இப்படி உருக்கமுடன் கண்ணீருடன் முடிகிறது.

ஆன்மீக சிகரத்தில் ஏறிய மகா யோகி அரவிந்தரும்

பாட்டுத்திறத்தாலே இந்த வையத்தைப் பாலித்திட வந்த தமிழ்க் கவிஞர் பாரதியாரும் பிரிந்த போது இருவர் கண்களிலும் பிரிவினால் அரும்பியது கண்ணீர் என்றால் அது புனித நீர் அல்லவா!

கொடுத்த வைத்த புதுவை பூமி சரித்திரத்தில் புனித பூமியாக நிரந்தர இடம் பெற்று விட்டது!

 பாரதியாரின் வாழ்க்கைச் சரித்திரம் அபூர்வமான ஒரு புனித வரலாறு.

சில துளிகளை மட்டுமே மேலே கண்டோம். அமிர்தக் கடலில் ஒரு சொட்டு என்றாலும் அது அமிர்தம் தானே! தைரியமாக அந்தக் கடலில் இறங்கி அனைத்தையும் குடிக்கலாம்! பயப்படவே வேண்டாம். ஏனெனில் அது இறவாமையைத் தரும் அமிர்தக் கடல் அல்லவா?!

***

May one cut himself with a Knife because it is made of Gold? (Post.14,971)

Written by London Swaminathan

Post No. 14,971

Date uploaded in London –  11 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Proverbs on Gold- Part 3

3047. ஙப்பன் பிறந்தது வெள்ளிமலை ஙாயி பிறந்தது பொன்மலை.
My father was born in a silver mountain, and my mother was born in a golden mountain.

3237. சிறகிலும் மெல்லிசாய்ப் பொன் அடிப்பான்.
He will beat out gold even thinner than a feather.

3281. சீர் அற்றார் கையிற் செம்பொன் விலை பெறா.
Fine gold in the hands of the unthrifty is of no value.

3529. தங்கமுடி சூட்டினாலும் தங்கள் குணம் விடார் கசடர்.
Though crowned with gold, the base will not abandon their natural dispositions.


3530. தங்கச் சூரிக்கத்தியென்று அறுத்துக் கொள்ளலாமா?
May one cut himself with a knife because it is made of gold?


3531. தங்கத்தைக் குவிக்கிறேன் என்றாலும், தன் புத்தி விடுகிறது இல்லை.
Though I promised to give a heap of gold, he persisted in his own ideas.

3532. தங்கத்தூள் அகப்பட்டாலும் செங்கற்றூள் அகப்படாது.
Though gold-dust is procurable, brick-dust is not.

3533. தங்கத்தை உருக்கி விட்டது போல.
As fine gold was melted and poured out.

3534. தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
Gold scattered on the ground, bran in an earthen vessel.


3535. தங்கம் புடத்தில் வைக்கப்பட்டாலும் தன் நிறம் போகாது.
Though gold is put into the fire to be refined, its hue is not lost.

3536. தங்கம் தரையிலே, ஒரு காசு நாரத்தங்காய் உறியிலே.
Gold scattered on the ground, and a cash-worth of lemons placed on the swinging tray.

3537. தங்கம் எல்லாம் தவிட்டுக்கு மாறுகிறது.
To exchange all his gold for bran.

3552. தட்டான் தாய்ப் பொன்னிலும் மாப்பொன் எடுப்பான்.

A goldsmith will pilfer the gold-dust even of his mother.

3553. தட்டானும் செட்டியும் கண் சட்டியும் பானையும் மண்.
The goldsmith and the Chetty have each two eyes, the chetty and the pot are of earth.

3554. தட்டானும் செட்டியும் போல.
Like the goldsmith and the merchant.

3555. தட்டானைச் சேர்ந்த தறுதலை.
The fool-hardy who associated with the goldsmith.

3557. தட்டாரச் சித்து தறிச்சித்து வண்ணாரச் சித்துக்கு வராது.
The tricks of a goldsmith and of a weaver, are not equal to those of a washerman.

3558. தட்டானிடத்தில் இருக்கிறது, அல்லது கும்பிடுசட்டியில் இருக்கிறது.
It is either in the possession of the goldsmith, or in his vessel.

3752. தாழ்ந்தது தங்கம் உயர்ந்தது பித்தளை.
Gold has become low in estimation, and brass high.

3781. தான் தேடாப் பொன்னுக்கு மாற்றும் இல்லை உரையும் இல்லை.

3944.தெறிக்க அடித்த தட்டானைப் போலே.
Like the goldsmith who beats off the gold inpieces.

4007. தொண்ணூறு பொன்னோடே துவரம்பருப்பு ஒரு பணம்.
With ninety gold fanams, one for beans.


Gold not acquired by one’s own exertions, has neither standard nor touch.

Hello

4048. நடபடி உண்டானால் மிதியடி பொன்னாலே.
If allowance for a journey is provided, gold sandals will be used.

4054. நடுத்தரமானவருடைய தாங்கல் பொன்னின் பிளவு போலப் பற்றவைத்தால் மாறும்.
A fracture in gold vanishes when exposed to the fire; in like manner the anger of the good passes away.

4119. நல்லாரை நாவில் உரை, பொன்னைக் கல்லில் உரை.
Test the good by the words of the tongue, and gold on a touch-stone.

4584. பள்ளிக்கு வைக்காமற் கொள்ளிக்குக் குறைத்து வைத்தார்.


My father not only neglected to put me to school, but left me to bear the expenses of the fire brand.


Under this proverb a general note on funeral rites may not be out of place. The particulars given relate to Hindu families generally, not to brahmans.
When a person dies, the grief of the females in the family bursts out into loud lamentations. On its being made known by a conch blower that a death has occurred, the neighboring females go to the house, add the expression of their sympathy, and all unite in one general wail. Frequently one of the company, the mother, or it may be a professional person, breaks out into an ascription of praise regarding the deceased uttering a sort of elegy in measured cadence. In this case when a climax is reached, all join in a chorus of grief, and some may smite their breasts and tear their hair. In such elegies, which are often of a touching kind, the personal beauty, the talents, the learning and the prowess of the deceased are diveltion(?).


The body being taken out is bathed and dressed as in life. In the case of females the gold and pearls and precious stones, if she possessed them, will be put on. The sectarian marks will be added. The charpoy on which the corpse bas been laid out is then carried into the house. Again the females seat themselves around it and pour forth a torrent of grief, or at any rate make a loud noise. All kinsman whose business it is to attend to the customary observance spreads a cloth on the charpoy to hold rice, called,-rice for the mouth. The females of the family take a little of the grain and put it on the corpse near the mouth. The same ceremony is performed by the male members of the family at the place of cremation. The family barber appropriates the remaining rice. At the burning ground the kinsman who conducts the ceremonies carries a pot of water round the pyre and the conch-blower follows him and makes an incision on the pot with his conch, when the barber puts four bits of sandal or other wood into the hands of the kinsman and points out the places in the pyre where they are to be inserted. The leaking pot is the taken by the barber to be broken near the head of the corpse. The kinsman hastens away that he may not hear the noise of the pot when broken, nor see the burning pyre. Then the barber receive permission to break the put and to ignite the pyre.


On the next or on an early day the male friends of the deceased assemble at the place of cremation. The skull, the breast-bone and the bones of the hands having been abstracted from the ashes deposited in a convenient place covered with a plantain leaf, and the nearest of kin smeared with oil, ghee and honey and covered in flowers, whilst a priest recites appropriate incantations in the presence of the relatives. A pot of milk having been provided for this ceremony, the relatives take a sprig of coronilla grandiflora and having dipped it, in the milky sprinkle the relics, which are then put into an unburnt earthen vessel, covered with cloth to be cast into the sacred stream or bestowed on the ocean wave. Of course these elaborate rites are dispensed with by the poor.
I have seen Hindus, not by any means in abject circumstances convey a corpse to the seaside, where a grave had been hastily dug and take off the cloth and ornaments, wrap the body in a common mud(?) and bury it with the burial of a dog. In the year 1830 when travelling in Bengal I saw, on the bank of the River Damodar, a sorrowing Brahmin father with two or three attendants dispose of a corpse with but little ceremony. The father himself who was much affected ignited the pyre.


4847. பூ அரசு இருக்கப் பொன்னுக்கு அழுவானேன்?
Why weep for gold while you have the tulip tree?

To be continued………………………..

Tags- Gold, Proverbs, Part 3

சங்க இலக்கியத்தில் தர்ம, அர்த்த, காம மோக்ஷ ! (Post14,970)

Written by London Swaminathan

Post No. 14,970

Date uploaded in London –  11 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருவள்ளுவர்  இந்துமத வாழ்க்கை குறிக்கோள்களான தர்ம- அர்த்த- காம= மோக்ஷ என்பதில் முதல் மூன்றை எடுத்துக்கொண்டு  தனது நூலுக்கு முப்பால் என்று பெயரிட்டார் . அறம் பொருள் இன்பம் என்று மூன்று பகுதிகளாக நூலையே பிரித்தார் அவர் ஒரு பக்கா இந்துத்வா பேர்வழி!

அவருக்கு முன்னால்  தொல்காப்பியரும் சங்கப்புலவர்களும் இதைச் செய்து அவரைப் பின்னுக்குத்தள்ளிவிட்டார்கள்.

தொல்காப்பியத்தில் குறைந்தது இரண்டு இடங்களில் அவர் இதைச் சொல்கிறார் . அவரே மந்திரம், சூத்திரம் உவமை, காமம் ,அதிகாரம் , தேசம், போன்ற சம்ஸ்க்ருத சொற்களை நூல் முழுதும் பயன்படுத்தியதால் இதில் வியப்பு ஒன்றும் இல்லை !அவருடைய பெயர் த்ருண தூம அக்கினி என்று உரைகாரர் மதுரை பாரத்வாஜ கோத்ர நச்சினார்க்கினியர் செப்புவதால் தொல்காப்பியர் சம்ஸ்க்ருத அறிஞர் என்பதையும் நாம் அறிய முடிகிறது . வேதத்தையும் குறிப்பிட்டு மனு நீதி நூல் ஸ்லோகங்களையும் நமக்குத் தமிழில் கொடுத்துள்ளார். மறையோர் தேசம் என்று சொல்லி எட்டுவகைத் திருமணங்களை மனு நீதி நூலில் இருந்து நமக்களித்தார் ; பிராமணர்களின் அறுவகைத் தொழிலையும் குறிப்பிட்டு அரசர்களின் ஐந்துவகை கடமைகளையும் அப்படியே மனுநீதி நூலில் இருந்து கொடுத்தார் . இதோ அவர் சொல்லும் தர்ம அர்த்த காம ! தமிழ் மரபின்படி வீடு என்னும் மோட்சத்தை அவர்கள் தர்மத்தின் அதிகாரத்தில் சேர்த்துவிட்டார்கள்.

தொல்காப்பியத்தில்

தொல்காப்பியம் (சூத்திரம்1038, 1363),

அந்நிலை மருங்கின் ஆறாம் முதலாகிய

மும்முதற் பொருட்கும்  உரிய என்ப 1363

பொருள்

அந்த நான்கு வகைப்பாக்களும் அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருள்களை இயற்றுவதற்கு உரியன என்று பகர்வார்கள்.

***

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்போடு புணர்ந்த ஐங்கிணை மருங்கின்

சூத்திரம் 1038

பொருள்

இன்பமும் பொருளும் அறமும்  என்று சொல்லப்பட்டு அன்போடு புணர்ந்த நடுவண் ஐந்திணையிடத்து  நிகழும் காமக் கூட்டத்தினை ஆராயின், அது மறையவர் நூல்களில் கூறப்பட்ட எட்டுவகை மணங்களுள் இசைக்கு ஏற்ற நல்ல யாழினை  உடைய  கந்தருவர் மணத்தைப் போன்றதாகும்.

MANU 3-20

चतुर्णामपि वर्णानं प्रेत्य चैह हिताहितान् ।
अष्टाविमान् समासेन स्त्रीविवाहान्निबोधत ॥ 3-२० ॥

caturṇāmapi varṇānaṃ pretya caiha hitāhitān |
aṣṭāvimān samāsena strīvivāhānnibodhata || 3-20 ||

Understand briefly these (following) eight forms of marriage of girls, among the four castes,—which are beneficial and not-beneficial here (in this life) and also after death.—(20)

***

புறநானூற்றில் 

பூம் போது சிதைய வீழ்ந்தென, கூத்தர்

ஆடு களம் கடுக்கும் அக நாட்டையே;

அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்

ஆற்றும், பெரும! நின் செல்வம்;

ஆற்றாமை நிற் போற்றாமையே. புறம் 28

***

புறநானூறு 31 Purananuru 31

புலவர் கோவூர் கிழார்.

சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்

அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல,

இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை,

உரு கெழு மதியின், நிவந்து, சேண் விளங்க,

நல் இசை வேட்டம் வேண்டி, வெல் போர்ப்   5

பாசறை அல்லது நீ ஒல்லாயே;

****

திருக்குறளில்

திருக்குறளிலும் (501, 754, 760, முப்பால்) காண்கிறோம்.

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

திறந்தெரிந்து தேறப் படும்– குறள் 501

அறம், பொருள், இன்பம்,   உயிருக்கு அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

***

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள்- 754

சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.

***

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்

ஏனை இரண்டும் ஒருங்கு. குறள் 760

சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒரு சேரக்கைகூடும் எளிய பொருளாகும்.

–SUBHAM—

TAGS- சங்க இலக்கியத்தில், தர்ம, அர்த்த, காம மோக்ஷ, திருக்குறளில், புறநானூற்றில், தொல்காப்பியத்தில் , அறம் பொருள் இன்பம்

பாரதியார் பாடல்களில் நவரசங்கள்! புதிய பட்டிமன்றத் தலைப்புகள்! (Post No.14,969)

Written by London Swaminathan

Post No. 14,969

Date uploaded in London –  11 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 பாரதியார் பாடல்களில் நவரசங்கள்! புதிய பட்டிமன்றத் தலைப்புகள்! (Post No.14,969)

பாரதியார் பாடல்களில் நாம் நவரசங்களையும் காணலாம் .மனிதனுடைய உணர்ச்சிகளை ஒன்பது பகுதிகளாகப் பிரித்து அதை நாட்டியத்தில் புகுத்தியது இந்துக்களின் மகத்தான கண்டுபிடிப்பு!  உலகிலேயே ஸம்ஸ்க்ருதத்தில்தான் நாடகங்கள் அதிகம்; அதற்கு அடுத்தபடியாக கிரேக்க மொழி வருகிறது; தமிழில் பழங்கால நாடகங்களே இல்லை. ஆனால் கூத்து என்று சொல்வது நாடகத்தின் ஒரு பகுதியே ; இன்றும் கூட தெருக் கூத்துகளில் பல புராணக் காட்சி களை கூத்தர்கள் நடித்துக் காட்டுகின்றனர்.

***

அக்காலத்தில் நாடக தியேட்டர்கள் இருந்தது வள்ளுவர் குறளில் இருந்து தெரிகிறது

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று- குறள் 332

பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.

***

நவரசங்கள் என்பது என்ன ?

The nine sentiments (navarasa) are: ஒன்பது வகை உணர்ச்சிகள் ,

ரதி / காதல்  (Love)

ஹாஸ்ய  (Mirth)

சோக  (Sorrow)

க்ரோத / கோபம்  (Anger)

உற்சாக  (Energy)

பய  (Terror)

ஜுகுப்ஸ / வெறுப்பு  (Disgust)

விஸ்மய/ வியப்பு   (Astonishment)

வீர உணர்ச்சி   (heroism)

***

இதுவுமது ; நவரசங்கள்

வீர உணர்ச்சி   (heroism)

சிருங்கார/ காதல்   (eroticism)

அத்புத/ வியப்பு  (wonder)

ரௌத்ர /கோபம்  (fury)

வ்ருதாநக / வெட்கம் , (shame, which is not in other Indian schools)

பீபத்ச / வெறுப்பு  (disgust)

ஹாஸ்ய / நகைச்சுவை  (comedy or humour)

கருணை (pity or compassion)

சாந்தம்  (tranquillity)

***

பாரதி பாடல்களையும் நவரசப் பாடல் பகுதிளாக வெளியிட வேண்டும்; அவைகளைக் கலைஞர்கள் நடித்தும் காட்ட வேண்டும் இதற்குப் பாரதியாரின் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாடல்கள், குருகோவிந்த சிம்மன், வீர சிவாஜி பாடல்கள் உதவும்.

பாரதி பாட்டில் மிகுந்திருப்பது வீரச் சுவையா? காதல் சுவையா ? கோபச் சுவையா? என்று பட்டிமன்றங்களும் நடத்தலாம்.

***

ஒன்பான் சுவைகளுக்கும் ஒருசில எடுத்துக்காட்டுகளை மட்டும் காண்போம்:

1

பாரதியார் பாடல்களில் வீரச்சுவையே அதிகம் என்பது எனது துணிபு

சுதந்திர வேட்கையினால் உந்தப்பட்டு வீர முழக்கம் செய்தவர் வீர சிவாஜியையும் சீக்கிய மத குருவான  கோவிந்த சிம்மனையும் பயன்படுத்தி சிங்கம் போல கர்ஜித்துள்ளார்

இரண்டு பாடல்களையும் படித்துப்பாருங்கள் :. அத்தோடு காலனுக்கு உரைத்தல் போன்ற  பாடல்களையும் சேர்த்துக்கொள்ளலாம்-

காலா, உனை நான் சிறுபுல்லென மதிக்கிறேன் – என்றன் காலருகே வாடா, சற்றே உனை மிதிக்கிறேன்.

**

ஜயஜய பவானி! ஜயஜய பாரதம்!

ஜயஜய மாதா! ஜயஜய துர்க்கா!

வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

சேனைத் தலைவர்காள்! சிறந்த மந்திரிகாள்!

யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்!

**

குருகோவிந்த சிம்மன்

ஆயிரத்தெழுநூற்று ஐம்பத்தாறு

விக்ரமன் ஆண்டு வீரருக்கு அமுதாம்

****

2

சிருங்காரம் காதல் சுவை

கண்ணம்மா பாடல்கள்

காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்”

***

3

உற்சாகம்  (Energy)

ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே

4

பீபத்ச / வெறுப்பு  (disgust)

“கோயில் பூசை செய்வோன் – சிலையைக்
கொண்டு விற்றல் போலும்,
வாயில் காத்து நிற்போன் – வீட்டை
வைத்து இழத்தல் போலும்,
ஆயி ரங்கள் ஆன – நீதி
அவை உணர்ந்த தருமன்,
தேயம் வைத்து இழந்தான் – சீச்சீ!
சிறியர் செய்கை செய்தான்” 

***

5

பயம்  (Terror)

வேள்வித் தீ

ராகம்-நாதநாமக்கிரியை தாளம்-சதுஸ்ரஏகம்

ரிஷிகள் :எங்கள் வேள்விக் கூடமீதில்
ஏறுதே தீ!தீ!-இந்நேரம்,
பங்க முற்றே பேய்க ளோடப்
பாயுதே தீ!தீ!-இந்நேரம்

அசுரர் : தோழரே!நம் ஆவி வேகச்
சூழுதே தீ! தீ!-ஐயோ!நாம்
வாழ வந்த காடு வேக
வந்ததே தீ!தீ!-அம்மாவோ!

ரிஷி: பொன்னை யொத்தோர் வண்ணமுற்றான்
போந்து விட்டானே!-இந்நேரம்,
சின்ன மாகிப் பொய் யரக்கர்
சிந்தி வீழ்வாரே!-இந்நேரம்

அசு: இந்திராதி தேவர் தம்மை
ஏசி வாழ்ந்தோமே!-ஐயோ!நாம்,
வெந்து போக மானிடர்க்கோர்
வேத முண்டாமோ!-அம்மாவோ!

***

6

ரௌத்ரம் /கோபம்  (fury)

வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி;
நாடு முற்றிலும் உள்ளவ வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி;
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அனனை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்

**

பாரத சமுதாயம் வாழ்கவே -பாரதியார்

இனியொரு விதிசெய் வோம்-அதை

      எந்த நாளும் காப்போம்;

தனியொருவனுக் குணவிலை யெனில்

      ஜகத்தினை அழித்திடு வோம்-வாழ்க!

***

7

ஹாஸ்யம்  (Mirth)

“குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது;
ஜாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது;
சொல்லடி, சொல்லடி சக்தி மாகாளீ,
வேதபுரத்தாருக்கு நல்லகுறி சொல்லு!
தரித்திரம் போகுது, செல்வம் வருகுது;
படிப்பு வளருது பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான், போவான்; ஐயோவென்று போவான்.
வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது;
தொழில் பெருகுது தொழிலாளி வாழ்வான்
சரித்திரம் வளருது; சூத்திரம் தெரியுது;
யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது;
மந்திர மெல்லாம் வளருது. வளருது!
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
சொல்லடீ, சொல்லடீ, மலையாள பகவதீ.
அந்தரி, வீரி, சண்டிகை சூலி!
குடுகுடு குடுகுடு”

****

8

சோகம்  (Sorrow)

நல்லதோர் வீணைசெய்தே-அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி, சிவசக்தி;-எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,

வல்லமை தாராயோ,-இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

சொல்லடி,சிவசக்தி!-நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? 1

விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,

நசையறு மனங்கேட்டேன்-நித்தம்

நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,

தசையினைத் தீசுடினும்-சிவ

சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,

அசைவறு மதிகேட்டேன்;-இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? 2

****

9

விஸ்மய/ வியப்பு   (Astonishment)

கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்,

காளி தாசன் கவிதை புனைந்ததும்,

உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்

ஓர்ந்த ளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும்,

நம்ப ருந்திற லோடொரு பாணினி

ஞால மீதில் இலக்கணங் கண்டதும்

இம்பர் வாழ்வின் இறுதிகண் டுண்மையின்

இயல்பு ணர்த்திய சங்கரன் ஏற்றமும், 24

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்,

தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்,

பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்

பார ளித்துத் தர்மம் வளர்த்ததும்,

பேர ருட்சுடர் வாள்கொண் டசோகனார்

பிழை படாது புவித்தலங் காத்ததும்,

வீரர் வாழ்த்த மிலேச்சர்தந் தீயகோல்

வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும், 25

இவை அனைத்தும் ஒரு ‘சாம்பிள்’தான் ; அறிஞர்கள் கூடி நவரசக் கவிதைகளைப் பிரித்து வெளியிட்டால் பாரதியைப் புதிய கோணத்தில் பார்க்கலாம் .

–சுபம் —

பாரதியார் , பாடல்கள், நவரசம் , பட்டிமன்றத் தலைப்புகள், nine moods, nine sentiments

ஸ்வாமி விவேகானந்தரின் ஊக்கமூட்டும் வீர மொழிகள்! (Post.14,968)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,968

Date uploaded in London – 11 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

10-6-25 அன்று கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

MOTIVATION 

ஸ்வாமி விவேகானந்தரின் ஊக்கமூட்டும் வீர மொழிகள்! 

ச. நாகராஜன்                            

 ஸ்வாமி விவேகானந்தரின் ஊக்கமூட்டும் உரைகளிலிருந்து தொகுக்கப்பட்டவை.

அறிவை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கை வேண்டும்!

மனிதனுக்கு நம்பிக்கை மட்டும் போதாது. அது அறிவில் வேரூன்றி இருக்கவும் வேண்டும். காணும் எல்லாவற்றையும் ஒருவன் நம்ப வேண்டும் என்று சொல்வது அவனைப் பைத்தியமாக்கி விடும்.

எண்ணத்தின் ஆற்றலும் அன்பின் சக்தியும் வேண்டும்!

உங்கள் எண்ணத்தின் ஆற்றலையும் அன்பின் சக்தியையும் ஊக்கப்படுத்துங்கள்.

உங்கள் தாமரையை மலர விடுங்கள். தேனீக்கள் தாமே வந்து சேரும்.

முதலில் உங்களிடம் நம்பிக்கை வையுங்கள். பிறகு கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்

உலகம் கோழைகளுக்காக அல்ல! 

இந்த உலகம் கோழைகளுக்காக அல்ல. தப்பியோட முயற்சிக்காதே. 

செயல் வெறி என்னும் சுழலில் நின்று, மையத்தைச் சேர். மையத்தை அடைந்து விட்டால், உலகில் உன்னை எதுவும் அசைக்க முடியாது. 

நல்ல இதயம்சிந்திக்க மூளைவேலை செய்யக் கரங்கள்! 

ஆற்றல் மிக்க சிலர் இந்த உலகத்தையே ஆட்டி வைக்க முடியும். நமக்கு வேண்டியது உணர ஓர் இதயம், சிந்திக்க ஒரு மூளை., வேலை செய்வதற்கு வலிய கைகள். வேலை செய்வதற்குத் தகுந்த ஒரு கருவியாக உங்களை ஆக்கிக் கொள்ளுங்கள். 

மூன்று விஷயங்கள் நமக்கு வேண்டும். 1) உணர்வதற்கான இதயம் 2) சிந்தனைத் திறனுள்ள மூளை 3) வேலை செய்யக் கூடிய கைகள் 

சேவை செய்பவனே மனிதன்!

 மற்றவனுக்காக வாழ்பவனே மனிதன். மற்ற அனைவரும் உயிருடன் இருந்தாலும் அவர்கள் நடைப்பிணங்களே!

 அடுத்தவர் தவறைக் கவனிக்காதே! 

பிறருடைய குற்றங்களைக் கவனிக்காதே. ஒரு மனிதனின் தவறுகளைக் கொண்டு அவனை எடை போட முடியாது. கீழே விழுந்து அழுகிப் போன ஆப்பிள்களை வைத்து நாம் ஒரு ஆப்பிள் மரத்தை நிர்ணயித்தால், அந்த முடிவு சரியானதாக இருக்காது. அது போலவே ஒரு மனிதனுடைய தவறுகள் அவனுடைய குணத்தைக் காட்டாது.

உங்களது நல்ல கருத்தில் ஊன்றி நில்லுங்கள்

இதோ ஓர் உபதேசம்: எல்லா மலர்களிலிருந்தும் தேனை அருந்துங்கள். மரியாதையுடன் எல்லோரிடமும் பழகுங்கள். எல்லோருக்கும் ‘ஆம்,ஆம்’ என்று தலையாட்டுங்கள் ஆனால் உங்கள் சொந்த இடத்திலிருந்து விலகாதீர்கள்.

இப்படி சொந்த இடத்திலிருந்து அதாவது சொந்தக் கருத்திலிருந்து விலகாமல் இருப்பதே நிஷ்டை என்று அழைக்கப்படுகிறது. 

இறைவனை அடைய இசை! 

இறைவனைத் தொடர்ந்து ஞாபகம் வைத்துக் கொள்ளும் பயிற்சிக்கு மிகச் சிறந்த வகையில் உதவியாக இருப்பது இசை என்று சொல்லலாம்.

 கடமையைச் செய்! ஞான ஒளி வரும்!! 

விதியின் காரணமாகத் தனக்குக் கிடைத்துள்ள சிறிய ஒன்றிற்காக முணுமுணுப்பவன் எதற்குமே முணுமுணுக்கத் தான் செய்வான். எப்போதும் எதற்கெடுத்தாலும் குறை கூறிக் கொண்டு அவனது வாழ்க்கை துன்பமயமாகவே இருக்கும். அவன் தொடும் ஒவ்வொன்றும் தோல்வியிலேயே முடியும். யார் தன் பங்கிற்கு வந்த கடமையைத் தயங்காமல் முனைந்து செய்கிறானோ, அவனுக்கு நிச்சயம் ஞான ஒளி உண்டாகும். சிறந்த கடமைகள் தாமாகவே அவனைத் தேடி வரும்.

 ***

தமிழ் மழை பொழிந்த நாவினான்; பார் வியக்கும் புகழ் மேவினான்! (Post.14,967)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,967

Date uploaded in London – 11 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

செப்டம்பர் 11 பாரதி நினைவு தினம்!

அவன் புகழ் போற்றுவோம்!

தமிழ் மழை பொழிந்த நாவினான்; பார் வியக்கும் புகழ் மேவினான்!

ச. நாகராஜன்

தமிழ்த் தாயின் கோலமே

பாரதி சொல் ஜாலமே

வியக்கு திந்த ஞாலமே

நிலைக்கும் பல காலமே                     (1)

தமிழோங்கப் பாடலைப் பாடினான்

வெள்ளையர் சூழ்ச்சியைச் சாடினான்

சுதந்திரம் பெற்றோமென ஆடினான்

நல்லத னைத்தையுமே நாடினான்    ̀̀             (2)

ஜாதிகள் இல்லையெனக் கூவினான்

பலகலைகள் கற்க என ஏவினான்

தமிழ்மழை பொழிந்த நாவினான்

பார்வியக்கும் புகழ் மேவினான்               (3)

பாரதி நாமம் வாழ்க

பாரத தேசம் வெல்க

தமிழ் மொழி ஓங்குக

தரணியை நிதம் தாங்குக!                (4)

**