Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சங்கத் தமிழர்கள் கர்நாடக இசையை வளர்த்த செய்தியை பரத முனிவரும் சம்ஸ்க்ருதத்தில் எழுதிவைத்துள்ளார் :
தத்ர தாக்ஷிணாத்யாஸ் தாவத் ப்ஹுந்ருத்த
கீதா வாத்யா கைசிகீ ப்ராயாஹா சதுர
மதுர லலிதாங்காபிநயச்ச………………
தக்ஷிணஸ்ய சமுத்ரஸ்ய ததா விந்த்யஸ்ய சாந்தனே
பொருள்
பல்வகையான நடனங்களும் , மதுரமான வாய்ப்பாட்டும், வாத்திய சங்கீதமும் , லலிதமான அங்க அபிநயங்களும் நிறைந்த இந்நாடு , தெற்கு சமுத்திரத்தால் சூழப்பட்டு விந்திய பர்வதத்துக்குத் தெற்கேயுள்ளது.
–பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி
இதையெல்லாம் ஆதரிக்கும் வகையில் சங்க காலத்தை அடுத்து வந்த மகேந்திர பல்லவனின் (600 CE) குடுமியாமலை இசைக்கல்வெட்டு சப்த ஸ்வரங்களை சொல்கிறது .
அரச்சலூர்கல்வெட்டுகள்
கொங்கு நாட்டில் ஈரோடு—காங்கயம் பாதையில் அரச்சலூர் என்னும் இடத்தில் மூன்று பழைய கல்வெட்டுகள் உள்ளன. இவற்றின் எழுத்தமைதியைக் கொண்டு இவை இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று மதிப்பிடுகின்றனர். இதை எழுதியவன் தேவன் சாத்தன் என்று மூன்றாம் கல்வெட்டில் பெயர் உள்ளது. இது ஒரு இசைக் கல்வெட்டு. முதல் இரண்டு கல்வெட்டுகளில் இடமிருந்து வலமாகப் படித்தாலும் மேலிருந்து கீழாகப் படித்தாலும் ஒரே மாதிரி உள்ளதைக் காணலாம். இதோ முதல் கல்வெட்டு:
த தை தா தை த
தை தா தே தா தை
தா தே தை தே தா
தை தா தே தா தை
த தை தா தை த
****
சங்கத் தமிழ் இலக்கியத்தில் இசைக்குறிப்புகள்
யாழ் என்ற கருவி எண்பது இடங்களுக்கு மேலாகவும் முரசு என்ற கருவி ஐம்பது இடங்களுக்கு மேலாகவும் சங்க நூல்களில் காணக்கிடக்கிறது
விழாக்காலங்களில் மக்கள் ஆடலையும் பாடலையும் கண்டு மகிழ்ந்த செய்தி மதுரைக் காஞ்சியில் உள்ளது ,
உரைகாரர்கள் உரை எழுதுகையில் அந்தந்தப் பிராணிகளை ஏன் அந்த இடத்தில் கவிஞர் சொன்னார் என்று எழுதுகையில் இதைத் தொடர்புபடுத்துகின்றனர்.
****
இப்போது கிடைக்காமல் போன பல இசை நூல்களை உரைகாரர்கள் மேற்கோள் காட்டுவர். அவற்றின் பட்டியல் இதோ:
இறையனார் களவியல் உரை: முதுநாரை, முது குருகு.
அடியார்க்கு நல்லார் உரை: இசை நுணுக்கம், பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம், இந்திரகாளியம்
அரும்பத உரை ஆசிரியர்: பதினாறு படலம்
யாப்பருங்கல விருத்தி உரை: வாய்ப்பியம், குலோத்துங்கன் இசை நூல்
இவைகளுக்கு ஏன் நாரை, குருகு என்று பறவைப்பெயர்களை பயன்படுத்தினர் என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்
****
சிலப்பதிகார உரையில் அடியார்க்குநல்லார் பேரி யாழ், மகர யாழ் சகோட யாழ் செங்கோட்டு யாழ் ஆகிய பல வகை யாழ்களைக் குறிக்கிறார். இவை முறையே 21, 19, 14, 7 நரம்புகளை உடையன.
****
இசைக்கு மயங்கிய யானை
மலைச் சாரல் பகுதியில் தினைப் பயிரைத் திண்ண ஒரு காட்டு யானை வந்தது. அங்குள்ள குறத்தி அழகான குறிஞ்சிப் பண்ணைப் பாடினாள். அதைக் கேட்டு மெய் மறந்து நின்ற யானை பயிரைச் சாப்பிட மறந்து போனதாம்:
ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி
பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக்
குரலும் கொள்ளாது நிலையினும் பெயராது
படாஅப் பைங்கண் பாடுபெற்று ஒய்யென
மறம்புகல் மழகளிறு உறங்கும் (அகம்.102)
****
இசை என்பது கொடுமையை அகற்றி சாந்தத்தை உண்டு பண்ணும்
பாலை நிலத்தில் வாழும் கள்வர்கள் அவ்வழியாகச் செல்வோரை வழிமறித்துத் தாக்கிக் கொன்றுவிட்டு பொருள்களை எடுத்துக் கொள்வர். அப்பேற்பட்ட கல் நெஞ்சுடையோரும் பாலைப் பண்ணைக் கேட்டுக் கொலைத் தொழிலை மறந்தனராம்:
ஆறலை கள்வர் படைவிட அருளின்
மாறு தலை பெயர்க்கும் மறுவின் பாலை (பொருந. 21-22)
****
பேயையும் நரியையும் விரட்டும்
புண் பட்ட போர் வீரர்களை பேய்களிடம் இருந்து காப்பாற்ற காஞ்சிப் பண்ணையும், நரியை விரட்ட விளரிப் பண்ணையும் பாடியதாக புறநானூறு கூறுகிறது (பாடல் 281- 291)
***
தமிழ் மொழியை இசை, இயல், நாடகத் தமிழ் என்று பிரித்து முத்தமிழ் எனப் பெயரிட்டனர். யாழ், பறை, யாழ் பற்றிய நூல் ஆகியவற்றை தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.
****
பரிபாடல்-12 வையை நதி பற்றிய பாடல்.
ஒத்த குழலின் ஒலி எழ முழவிமிழ்
மத்தரி தடாரி தண்ணுமை மகுளி ஒத்தளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்
என்ற வரிகளில் மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி, முழவு ஆகிய வாத்தியங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
நெல் வயல்களைக் காக்கும் பெண்கள் மன்னன் ரகுவின் புகழைப் பாடினார்கள் ; அவனது இளம் வயது தொடங்கி அவனது நற்குணங்கள் வரை எல்லாவற்றையும் பாடி மகிழ்ந்தார்கள் .
சங்கத் தமிழ் இலக்கியத்திலும் தினைப்புனத்தைக் காக்கும் பெண்கள் பாடிய செய்திகள் வருகின்றன .
ikṣucchāyaniṣādinyastasya gopturguṇodayam|
ākumārakathoddhātaṁ śāligopyo jaguryaśaḥ || 4-20
****
பெண் கள்தான் இசையை வளர்த்தனர் ;திருமண காலங்களில் மங்கள இசைப்பாடல்களை பாடினார்கள்
ஒரு அழகான காட்சியைக் காளிதாசன் வருணிக்கிறார் ன் . பெண்கள் தாளத்துக்கு மயில்கள் ஆடினவாம்
பெண்கள் ஆற்றுத் தண்ணீரில் கைகளை அடித்துத் தாள ஓசையை உண்டாக்கி விளையாடினார்கள் அவர்கள் பாடிய பாட்டுக்கு அது மிருதங்க இசையாக அமைந்தது . அதைக்கேட்ட மயில்கள் மேக முழக்கம் என்று எண்ணி அகவல் ஒலி எழுப்பி ஆடத் துவங்கின
இவ்வாறு இடி ஓசைக்கு மயில்கள் ஆடுவது தமிழிலும் உண்டு; சென்ற பகுதியில் கொடுக்கப்பட்ட கபிலர் பாடலுடன் இதை ஒப்பிடலாம்.
அதுமட்டுமல்ல இந்து வணிகர்கள் பாபிலோனியாவுக்கு மயில்களைக் கொண்டு சென்று மத்தளம் முழக்கி மயில்களை ஆடச் செய்தவுடன் மன்னர்கள் அசந்துபோன செய்தி ஜாதகக் கதைகளிலும் உள்ளது.
ஜாதகக் கதைகளை பாலி மொழியில் சங்க காலத்துக்கு முன்னர் எழுதப்பட்டவை
TO BE CONTINUED……………………….
TAGS– காளிதாசன் .சங்கத் தமிழ், இசை நூல்கள், சங்கீதம் PART2
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
28-5-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!
சிறுநீரகக் கோளாறா? மாலெகைட் இருக்கிறதே!
ச. நாகராஜன்
சிறுநீரகக் கோளாறினால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு மாற்றுவழி மருத்துவம் இருக்கிறது. மாலெகைட் என்ற உபரத்தினத்தை அணிவது தான் அது.
கோளாறு படிப்படியாக நீங்க உடனே வழி பிறக்கும். மூட்டு வீக்கம், ஆஸ்த்மா போன்ற நோய்களையும் நீக்கும் ஆற்றல் படைத்தது மாலெகைட்.
ஆழ்ந்த பச்சை வர்ணத்தில் சுருள் சுருளான வட்டங்களுடன் இருக்கும் இந்த உபரத்தினக் கல் இதை அணிபவரின் வாழ்வில் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தும்.
நாளை என்ன நடக்குமோ என்று கதிகலங்கிப் பயப்படுவர்களுக்கான அதிசயக் கல் இது. அணிந்தவுடன் உள்ளும் புறமும் மாற்றத்தை ஏற்படுத்தும்!
இது எதிர்மறை ஆற்றலை நீக்கி உடனடியாகப் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கும். நம்பிக்கையை உருவாக்கும். செல்வத்தையும் வளத்தையும் ஈர்க்கும்.
மாலெகைட் என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்த வார்த்தை. இதன் பொருள் பச்சை என்பதாகும். மயில்தோகையில் பார்க்கும் பச்சை நிறத்தை இது ஒத்திருக்கும். இது மயிலின் கூரிய கண்களையும் ஒத்திருக்கும்,
பழங்கால எகிப்தியர்கள் இதை ‘ காட் ஸ்டோன்’ – கடவுளின் ரத்தினம் – GOD STONE- என்றே அழைத்தனர்.
அரிதாகக் கிடைப்பது என்பதால் இதன் விலையும் சற்று அதிகம் தான்.
ஆன்மீக சாதகர்களுக்கு இது ஒரு விசேஷமான ரத்தினக் கல். அனாஹத என்ற இதய சக்கரத்தையும் (HEAR CHAKRA) விசுத்தி சக்கரத்தையும் (THROAT CHAKRA) இது தூண்டிவிட்டு ஆன்மீக வாழ்க்கையில் ஒளி ஏற்றும்.
சீன வாஸ்து கலையான பெங்சுயி படி இது உடல் மற்றும் உள்ளரீதியாக பிராண சக்தி எனப்படும் ‘சி’ யை (CHI)தரும்.
மாலெகைட் மோதிரம், மாலெகைட் கங்கணம், மார்பில் சங்கிலியில் பதித்துக் கொள்வது போன்று இப்படி எப்படி வேண்டுமானாலும் இதை அணிந்து கொள்ளலாம்.
அதிகமாகப் பயணப்படுபவர்கள் அதனால் பாதிக்கப்படுபவர்கள் என்றால் அவர்கள் இதை அணிந்து நிவாரணம் பெறலாம்.
ஒருமுனைப்படுத்தும் சக்தி இல்லாதவர்கள் தங்கள் மேஜையில் இதை வைத்துக் கொள்ளலாம். பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
இது நல்ல அதிர்வலைகளை உடனடியாக தோலுக்குள் புகுத்தி விடும்.
கவசம் போன்ற இதை அணிந்தால் நினைக்கின்ற நல்ல விளைவுகளை இது ஏற்படுத்தும் என்பதே இதைப் பற்றிய சுருக்கமான விளக்கமாகும்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
One thousand proverbs on woman, wife- part 22
421.If you want a fine wife don’t pick her on a Sunday.
422. Who hath a wife hath also an enemy.
423. The first wife is a broom, the second a lady.
424. When your wife tells you to jump off a roof, pray God that it is a low one.
425. Wring a wife’s and a hen’s neck if you want them good.
426. A woman and a hen as far as my neighbour’s house.
427. Confide to a woman and to a magpie what you want spreading in the market-place.
428. A woman and a mule must be made handsome by the mouth.
429. The woman and the pear, the one that falls is good.
430. Take heed of an ill woman and trust a good one with nothing.
431. Beware of the wicked woman and trust not at all in the good one.
432. A mule and a woman do that which is expected of them.
433. To tell a woman everything she may not do is to tell her what she can do.
434. For the chaste woman god suffices.
435. Woman is a pill, and she must be gilded when taken in.
436. Woman is as hard to know as melon.
437. Woman is as little to be trusted as a magpie.
438. A nightingale will cease to sing before a woman is in want of words.
439. Woman is like your shadow follow her, she flies; fly from her she follows.
440.The counsel of a woman is not worth much, but he does not take it, is worth nothing.
–Spanish proverbs
*****************************
Why do I publish 1000 proverbs on women collected from different cultures? This is to teach a lesson to the Anti Manu Smrti idiots in the universities. Millions of women were burnt alive during the witch hunting by Christians. But the world knows only one Joan of Arc. In the whole wide world, greatest Tamil poet Bharati is the only one who never criticised women but praised them sky-high. Next comes Manu Smriti.
Hence men who seek (their own) welfare, should always honour women on holidays and festivals with (gifts of) ornaments, clothes, and (dainty) food.—(59)
(Manu also said women’s all body parts are always pure)
To be continued………………………….
Tags– One thousand, proverbs on woman, wife, part 22, spanish
காளிதாசன் எழுதிய ஏழு நூல்களில் குறைந்தது முப்பது இடங்களில் இசைக் கருவிகளின் பெயர்கள் வருகின்றன . இவை தவிர ஆடல்-பாடல் என்ற பல குறிப்புகளும் உள்ளன . குறிப்பாக வீணை, புல்லாங்குழல், மிருதங்கம் பற்றிப் பாடுகிறார் .
சங்கத் தமிழில் பல நூல்களில் இசைக்குறிப்புகள் உள்ளன. சங்க காலத்துக்குப் பின்னர் எழுந்த சிலப்பதிகார காப்பியத்தில் உரைகள் மூலம் நிறைய செய்திகள் கிடைக்கின்றன அரைச்சலுரில் இசைக் கல்வெட்டு இருக்கிறது சிலப்பதிகாரம் நடந்த காலமும் அரைச்சலுர் கல்வெட்டுக் காலமும் இரண்டாம் நூற்றாண்டு என்பதால் அவைகளையும் சங்க காலத்துடன் சேர்த்துக் கொள்ளலாம் வீணை என்ற வாத்தியம் இன்று பிரபலமானாலும் சிலப்பதிகார காப்பியத்தில்தான் முதல் முதலில் நாரதர் வீணை என்ற குறிப்பு வருகிறது அதற்கு முன்னர் அதற்கு இணையான யாழ் மட்டுமே இருந்தது. அதைக் குப்தர் கால சிற்பம் மிக அழகாகக் காட்டுகிறது அதே வடிவ இசைக்கருவிகள் இப்போது மேல்நாட்டில் மட்டுமே வாசிக்கப்படுகின்றன.
முதலில் ஒரு சுவையான விஷயத்தைக் காண்போம் காளிதாசன் குறைந்தது மூன்று இடங்களில் வல்லகி என்ற இசைக் கருவியைப் பாடியுளான் . இது வீணையல்ல; இதுதான் யாழ்; சங்கத் தமிழ் நூல்கள் யாழ் பற்றிக் குறிப்பிட்டாலும் அதன் உருவத்தைக் காட்டும் சிற்பங்கள் கிடைக்கவில்லை .
Yaaz= Vallaki 1700 years ago.
Russian Folk Music Instrument.
மத்தியப்பிரதேசத்திலுள்ள பவாயா (புராதன பத்மாவதி நகரம்) என்னும் இடத்தில் சுடுமண் சிற்பங்கள் கிடைத்துள்ள . இதில் அழகான பெண் யாழ் வாசிக்க மேலும் சிலர் தபேலா போன்ற மத்தளங்களை வாசிக்க ஒரு பெண் நடனம் ஆடுகிறாள்; இன்னும் ஒரு பெண் வாசிக்கும் கருவி சேதமடைந்ததால் முழுவதையும் பார்க்க முடியவில்லை. வல்லகி என்னும் யாழ் கருவியில் ஏழு தந்திகள் உள்ளன. இதை இப்போதும் ரஷ்யர்கள் பாலைலாகா (வலைலாகா ) என்ற பெயரில் பயன்படுத்துகின்றனர் பிராக்ருதத்தில் வல்லகியை வல்லாய் என்றுதான் சொல்லுவார்கள். ஆக ரஷ்ய மொழியில் இது பலாலகா ஆனதில் வியப்பில்லை; ரஷ்யாவில் இதன் கதை 400 ஆண்டுகளுக்குள் அடங்கிவிடுகிறது. அதற்கு முன்னர் என்ன பெயர் இருந்தது, இது எப்படித் தோன்றியது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை
प्रतियोजयितव्यवल्लकीसमवस्थामथ सत्त्वविप्लवात्|
स निनाय नितान्तवत्सलः परिगृह्योचितमङ्कमङ्गनाम्॥ ८-४१
இறந்துபோன இந்துமதியை அஜன் தனது மடியில் வைத்துக் கொண்டான். அவளோ இசை எழுப்ப முடியாத தந்திகள் தளர்ந்த வல்லகி போல இருந்தாள்
இந்தக் குறிப்புகளிலிருந்து காளிதாசனின் இசைப் புலமையும் ஆர்வமும் தெரிகிறது ; இதை குழந்தைகள் பிறக்கும் போதும், மன்னர்களின் அரண்மனைகளிலும், போர் முழக்கங்களிலும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளிலும் உஜ்ஜைனியின் சிவன் கோவில் போன்ற இடங்களிலும் காளிதாசன் பயன்படுத்தியுள்ளான். தமிழர்களைப்போலவே காடுகளில் மூங்கில் ஓட்டைகளில் காற்று புகுந்து எழுப்பும் இசையையும் மயிலின் அகவலில் வரும் ஓசையையும் குறிப்பிடுகிறான் .அவன் சங்கீதப் பிரியன் என்பது தெளிவாகிறது.
திலீபனும் சுதக்ஷிணையும் சென்ற ரதத்தின் சப்தத்தைக் கேட்டு மயில்கள் தலை நிமிர்ந்து எழுப்பிய அகவல் ஒலியைக் கேட்டுக்கொண்டே அவர்கள் சென்றனர் ;ஆண் மயில் ஒரு குரலிலும் பெண் மயில் வேறு குரலிலும் அகவின. ஷட்ஜ ஸ்வரத்துக்கு ஒப்பானவையும் இனிமையாகவும் அவை இருந்தன.
They have travelled on and on listening to the heart-pleasing screams of peacocks that have raised their faces on listening to the rhythmic rattles of chariot wheelspin and started to scream in two split-pitches, exactly like the SaDja musical notes that will be split into two pitches called chyuta broken; and achyuta unbroken. [1-39]
If an octave contains eight notes, its Indian counterpart also contains eight, but leaving the last one, they are called sapta swara-s – sa, ri, ga, ma, pa, da, ni , but by adding one more sa in next pitch, they total to an octave. These are musically called SaDjama, R^iSabha, gAndhAra, madhyama, pancama, dhaivata, niSAda plus one more SaDja in next scale. Then these peacocks and peahens are said to be screaming in two scales/pitches. On this single verse mallinAtha sUri comments one full A4 page commentary to establish kAlidAsa’s knowledge in music.
–FROM SANSKRITDOCUMENTS.ORG
***
स कीचकैर्मारुतपूर्णरन्ध्रैः कूजद्भिरापादितवंशकृत्यम्।
காட்டில் மூங்கில் மர ஓட்டைகளில் இயற்கையாக எழும் புல்லாங்குழல் ஓசையைத் தமிழில் சம்ஸ்க்ருதத்தில் வல்லவரான பிராமணப் புலவன் கபிலனும் அகநானூற்றில் பயன்படுத்துகிறான்
sa kīcakairmārutapūrṇarandhraiḥ kūjadbhirāpāditavaṁśakṛtyam|
இசைக் கருவிகளை தமிழர்கள் தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி ,கஞ்சக் கருவி என்று பகுத்து வைத்தனர். குழலும் கோடும் தூம்பும் துளைக் கருவிகள் முழவு, முரசு, பறை, பதலை, துடி போன்றன தோல் கருவிகள். யாழ் என்பது நரம்புக் கருவி. பாண்டில் என்பது கஞ்சக் கருவி. (ஜால்ரா போன்றது).
To be continued…………………………..
Tags- காளிதாசன் நூல்கள், சங்கத் தமிழ் நூல்கள், சங்கீதம், இசை வல்லகி, ரஷ்யா
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஜூலை 2025 ஹெல்த்கேர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
உடல்நலம் பேணுவதில் ஏஐயின் தாக்கம்!
ச. நாகராஜன்
நாம் விரும்பியோ விரும்பாமலோ தொலைக்காட்சி நம் வீட்டில் புகுந்து விட்டது; நம்மை ஆக்கிரமித்துக் கொண்டது.
நாம் விரும்பியோ விரும்பாமலோ மொபைல் போன் நம் கையில் குடியேறி விட்டது; நம்மை ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது.
இதே போல யோசித்துப் பார்த்தால் அன்றாட வாழ்வில் பல்வேறு அம்சங்கள் நம்மைக் கேட்காமலேயே நம்முடன் சேர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்த வகையில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ ஐ நம் வாழ்வில் எல்லாத் துறைகளிலும் புகுந்து விட்டது.
ஹெல்த்கேர் துறையை மட்டும் அது விட்டு விடுமா, என்ன? அதிலும் புகுந்து விட்டது!
ஏஐ என்பது கணினி மற்றும் மெஷின் மூலமாக மனித அறிவை அப்படியே உருவாக்கி சிக்கலான விஷயங்களைச் சுலபமாக உடல்நலம் பேணும் துறையில் முடித்து விடுகிறது.
நோய் பற்றிய ஆய்வு, நோயை இனம் கண்டவுடன் அதற்கான சிகிச்சை, சிகிச்சையில் சிறந்த சிகிச்சை எது, கேன்ஸர் போன்ற அபாயகரமான நோய்களிலிருந்து மீள்வது எப்படி உள்ளிட்ட அனைத்திற்கும் இப்போது நம்பகமான ஒரு வழியாக அமைகிறது ஏஐ வழி!
மெஷின் லேர்னிங் : ஏராளமான தரவுகளைக் கொண்டு மாடல்களை உருவாக்கி எந்த சிகிச்சை முறையை மேற்கொள்வது என்பதை இதனால் அறியலாம்.
டீப் லேர்னிங் : அதிகமான தரவுகள், பயிற்சி நேரம், மெஷின் லேர்னிங் மூலமாக பல புதிய வழிகளைக் காணல் – இதுவே டீப் லேர்னிங்!
நேச்சுரல் லாங்குவேஜ் ப்ராஸஸிங்: (என் எல் பி) மனிதன் பேசுகின்ற மொழியை அல்லது எழுத்தைப் புரிந்து கொள்வது தான் என் எல் பி.
ஏராளமான ஆவணங்களை, குறிப்புகளை, அறிக்கைகளை இது சரியாகப் புரிந்து கொள்ள வழி வகுக்கும்.
ரொபாடிக் ப்ராஸஸ் ஆடோமேஷன் (ஆர் பி ஏ) சிகிச்சையில் தானாகவே நிர்வாகம் மற்றும் சிகிச்சை வழிமுறையில் உதவுவது தான் ஆர் பி ஏ.
ஏஐ எப்படி உதவுகிறது?
ஏராளமான தரவுகளைக் கொண்டிருப்பதால் அவற்றை அலசி ஆராய்ந்து குறிப்பிட்ட மனிதருக்கு குறிப்பிட்ட வியாதிக்கு என்ன மருந்து என்பதைக் கண்டுபிடிக்கிறது.
தேவையான மருந்தைத் தேர்ந்தெடுக்கிறது.
என்ன வியாதி என்பதை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து விடுவதால் வியாதி முற்றுவதோ நீண்ட கால சிகிச்சையோ ஏராளமான செலவோ, உடல் துன்பமோ இருக்க வாய்ப்பு குறைவாக ஆகிறது.
வரப்போவதைக் கணிக்கும் மாடல்களை அமைத்து இனி வியாதி எப்படி ஆகக் கூடும் என்பதை மாடல் மூலம் அறிந்து அதற்கேற்றபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வழிவகை செய்கிறது.
சோதனை முடிவுகளையும் சிகிச்சை முன்னேற்றத்தையும் ஆராய்ந்து தெளிவுபடுத்தி முடிவைத் தெரிவிக்கிறது.
ஒவ்வொரு மனிதருக்கும் அவரது தனிப்பட்ட உடல்நிலைக்குத் தக்கபடி சிகிச்சைத் திட்டம் உருவாக்க ஏஐ வழி வகுக்கிறது.
எக்ஸ் ரே, எம் ஆர் ஐ, சி டி ஸ்கேன் ஆகியவை துல்லியமாகவும் விரைவாகவும் எடுக்கப்பட வழி செய்கிறது.
ஒரு நோயாளியின் பழைய நோய்க் குறிப்புகளை ஆராய்ந்து விரைவாக தற்போதையை நிலையைச் சுட்டிக் காட்டி இனி என்ன ஆகக் கூடும் என்பதைத் தெரிவிக்கிறது.
மாலிகுலர் ஸ்ட்ரக்சர் மற்றும் மருந்து திறன் ஆகியவற்றை ஆராய்ந்து மருத்துவ உதவியை அளிக்கிறது.
அறுவை சிகிச்சை தேவை என்றால் ரொபாட் உதவியுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாகச் சொல்லப் போனால் டா வின்சி சர்ஜிகல் அமைப்பு, ஏஐ உதவியுடன் 2022ல் மட்டும் 15 லட்சம் அறுவை சிகிச்சையை உலகெங்குமுள்ள இடங்களில் மேற்கொண்டது. 20 சதவிகிதம் இரத்த இழப்பை அது தவிர்த்திருக்கிறது,
இது மட்டுமின்றி மனநல சிகிச்சையில் ஏஐ இனி முத்திரை பதிக்க இருக்கிறது. இதற்காக sentiment analysis, wearable data chatbot interactions மூலமாக ஒருவரின் மனநிலையையும் உணர்வுகளையு,ம் அது கண்காணிக்கிறது.
உணர்வுகள், மனம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் இதன் உதவி ஏராளமானோருக்கு உதவக் கூடும்.
அடுத்து தொடர்ந்து நீண்ட காலமாக அவதிப்படும் நோயாளிகளுக்கு நோயைச் சமாளிக்க உதவி செய்கிறது. எடுத்துக்காட்டாக டயபடீஸ், ஹைபர் டென்ஷன் ஆகியவற்றில் ஏஐயின் அருமையான உதவியைக் காணலாம்.
நோயாளியை நேரில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் இணைய வழியாகவே விவாதித்தல், கலந்துரையாடுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். 50 லட்சம் பேர்கள் இப்படிப்பட்ட இணைய வழியை ஏற்கனவே மேற்கொண்டுள்ளனர்.
மோசடியைக் கண்டுபிடித்தல் : தவறான இன்ஷூரன்ஸ் தொகைக்கான கோரிக்கை, பில்களில் ஏற்படும் தவறுகள் ஆகியவற்றைக் கண்காணித்து மோசடிகளைத் தவிர்க்கிறது.
நோயாளிகளின் மரபணு சார்ந்த தரவுகளைச் சரியாக ஆராய உதவி செய்கிறது.
சிகிச்சைக்காக கட்டாயம் சோதனை மேற்கொள்ள வேண்டியவர்களை இனம் காண உதவுகிறது. அனைவரும் இனி எல்லா சோதனைகளையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
ஆஸ்பத்திரிகளில் சென்று நெடுநேரம் உட்கார்ந்து அங்கிருக்கும் சூழ்நிலைகள் தரும் தொற்றுவியாதிகளைத் தொற்றிக் கொள்ளும் நிலை இனி இல்லை.
ரொபாட்களின் உதவியுடன் பிஸிகல் தெராபியை இனி மேற்கொள்ளலாம்.
தூரத்திலிருந்தே தொடர்ந்து ஒரு நோயாளியை இனி கண்காணிக்க முடியும்.
டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவத்தில் துணை நிலை ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் இனி பயிற்சியை ஏஐ மூலமாகத் தர முடியும்.
மருத்துவமனைகளில் மருந்து ஸ்டாக் இல்லை என்ற நிலை ஏற்படாமல் தேவையை துல்லியமாக நிர்ணயித்து தேவையான அளவு மருந்துகளை ஸ்டாக் செய்ய முடியும்.
வயதானவர்களைக் கண்காணிப்பதன் மூலம் அவர்கள் தடுமாறி விழுவது உள்ளிட்டவற்றைத் தடுப்பதோடு அவசரகால நிலையை உணர்ந்து உடனடி உதவியைச் செய்ய முடியும்.
எல்லா பரிந்துரைகள் பற்றிய பேச்சுக்கள், டாக்டர் – நோயாளி உரையாடல் ஆகிய அனைத்தும் பதிவு செய்யப்படும்.
சமூகத்தில் பரவக்கூடிய அபாய வியாதிகளைப் பற்றி முன்பாகவே உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இனி சாத்தியமாகும்.
ஆக ஏஐ நம் வாழ்வில் மருத்துவத் துறையில் மட்டும் இப்படிப் பல்வேறு வழிகளில் உதவ இருக்கிறது.
இதை மக்கள் வரவேற்று அங்கீகரித்து விட்டார்கள் என்றே சொல்லலாம்! குறைகள் ஏஐயில் உண்டு; என்றாலும் அவை நீக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதால் பயமில்லை!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
One Thousand Proverbs on Woman, Wife and Daughter– 21
Why do I publish 1000 proverbs on women collected from different cultures? This is to teach a lesson to the Anti Manu Smrti idiots in the universities. Millions of women were burnt alive during the witch hunting by Christians. But the world knows only one Joan of Arc. In the whole wide world, greatest Tamil poet Bharati is the only one who never criticised women but praised them sky-high. Next comes Manu Smriti.
Hence men who seek (their own) welfare, should always honour women on holidays and festivals with (gifts of) ornaments, clothes, and (dainty) food.—(59)
(Manu also said women’s all body parts are always pure)
****
PART 21.
401.It is sometimes right even to obey a sensible wife.
402.The first wife fears her husband, the husband fears the second wife.
403. A wife is an evil that you can’t do without.
404. Don’t trust your crop till you put it in the granary, nor your wife till you put her in the grave.
405. A lucky man’s wives die; an unlucky one marries.
406. Where the devil fails, he sends an old woman.
407. Fire, woman and the sea, who can tell the worst of the three.
408. A woman reflects her husband in her face and a man’s wife is known by his shirt.
409. Woman’s love is a devil’s net.
—Serbian proverbs
410. In buying wives and melons there is always a danger.
412. The best women are those of which one speaks the least.
—Silesian proverbs
413. Everything for a time, but a wife till death, and God for ever.
414. He whose wives die and bees swarm will assuredly become rich.
415. Two old women and a goose—a market.
416. Women will keep silent only those things which they do not know.
—Slovakian
417. The wife is three walls, the husband one.
418. Woman is a necessary evil.
–Slovenian
419.A man’s best or worst fortune is his wife
420.Hast thou a mind to quarrel with thy wife, bid her bring water to thee in the sunshine.
The book cover shows some Divine Sports of Lord Shiva of Madurai Temple.
Foreword
This book is titled ‘Unsolved Mysteries of Pandya Kings and Tamil Saints!’
In fact, it has solved many mysteries about the dates of Tamil Saint Manikkavasagar and the kings of early Pandya Dynasty. One blunder committed by one author, knowingly or unknowingly, caused a big confusion in the history of Tamil Nadu. This created several knots in the thread, and I spent forty years to untie them. I hope I have succeeded in my effort, but I am open to criticism. Any positive suggestions or newer solutions are welcome from the readers.
Let me add a few more words about the contents. It is a mixture of a few different topics dealing with history, astronomy,religion and patriotism. First seven articles are about Pandya history and other articles are about Gods, Zodiac system and a lengthy article on patriotism. These articles were published in my blogs in the recent months. Readers may start anywhere in the book and finish it. I have also requested to convene a conference of scholars representing different fields to pass a final judgement on the problems of Pandya history and the dates of Tamil saints. Now the ball is in their court.
Title – Hindus on Gods and Words! Proverbs and Speeches!
Author – London Swaminathan (Santanam Swaminathan)
Language- English
Published – August 2025
Subject – Literature
xxx
AUTHOR’S PROFILE
Santanam swaminathan (London swaminathan)
Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)
Higher Diploma in French and Sanskrit
DOB 6-11-1948
Work Experience- Now retired.
Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,
BBC Tamil Producer in London 1987-1991,
Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam;
Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.
Living with his wife and two sons in London from 1987.
xxx
Blog Details
tamilandvedas.com
swamiindology.blogspot.com
xxx
Contact Details
swami_48@yahoo.com
swaminathan.santanam@gmail.com
Mobile Number in London
07951 370 697
Published Works
Over 9500 articles in English and Tamil and 150 Tamil and English Books.
Of these, 148 books were published by Pustaka.co.in
Visited 16 Countries
India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malaysia, Singapore, Italy and Greece
*****
Hindus on Gods and Words! Proverbs and Speeches!- book title
Contents
1.Mend Your Speech a Little, lest it Mar Your Fortune – Shakespeare, King Lear
2.Interesting Language Anecdotes; Mend Your Speech! Valluvar and Shakespeare
3.Shakespeare, Dryden and Dravidian fanatics on Languages
4.Whole World follows Tamil Saint Sambandar : Men are from Mars, Women are from Venus!
5.Divine Origin of Sanskrit, Tamil and other Ancient Languages
6.Inglis, The Baddest Language; (English, the Worst Language)
7.Two Beautiful Self Introductions in Ancient Tamil Literature -1
8.Two Beautiful Self Introductions in Ancient Tamil Literature- Part 2
9.God did not join Brains with Beauty! Proverbs on Gods
10.God forgives sins, otherwise heaven will be empty! Proverbs on Gods
11. If wives were good, God would have one!
12.The first wife is from God, the second from Men, the third from the Devil
13.Sanskrit Words in Southeast Asian Languages
14.Forty Thousand Proverb Treasure of Hindus!- Part 1
15. Forty Thousand Proverb Treasure of Hindus!- Part 2
16.Tamil Proverbs on Heaven and Hell and Temple
17.Tamil Proverbs on God
18.Excuses are of no avail before God
19.Know God when you are young
20. Freedom of Speech is in Danger in Britain; 30 People Arrested Everyday
21.Why do you arrest People for Facebook Messages? Lebdev in British Parliament
22.Rig Veda, Panini, Manu, Tolkappiar and Tiruvalluvar on Speech
****
Book Cover shows Goddess of Learning Sarasvati
FOREWORD
When I had read over 20,000 proverbs in Tamil and thousands more Subhasitas in Sanskrit, I was wonderstruck about the literary wealth of Hindus. I have already published over thousand of proverbs and thousand slokas from Chanakya to Bharatiyar’s New Athichudi.. In this book, I am dealing with proverbs from foreign sources to compare them with that of Hindus. Great men think alike is very true. Hindus are far advanced in producing grammar, dictionaries, thesaurus, four types of speech, theories on origin of speech, etymology in Yaska’s Nirukta etc. Hindus stood first in everything This study made me to write about language, speech and freedom of speech in my blogs. The anecdotes, facts and figures about these will make very interesting reading to anyone, even laymen.
Hindus on Gods and Words! Proverbs and Speeches! is a collection of my articles published in my blogs recently. Just read the contents page and find out what you are going to get. Surprise! Surprise!
London Swaminathan
swami_48 @ yahoo.com
swaminathan.santanam@ gmail.com
August 2025
ENGLISH BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN
(1) Is Brahmastra a Nuclear Weapon?
(2). AMAZING TIME TRAVEL by HINDU SAINTS
(3).Famous Trees of India
(4).DID INDIANS BUILD EGYPTIAN PYRAMIDS?
(5).ALL ABOUT DRAVIDAS, TAMIL SANGAMS,
KUMARIK KANDAM AND TOLKAPPIAM
(6).STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS
(7). Interesting Anecdotes from the World of Music
(8).KALIDASA’S SIMILES IN SANGAM TAMIL LITERATURE: NEW CLUE TO FIX HIS AGE
(9).BIRDS AND GODS- OMENS, VAHANAS AND STRANGE STORIES FROM HINDU SCRIPTURES
(10).Animal Einsteins: Amazing Intelligence of Creatures in Nature
(11) THE WONDER THAT IS HINDU TEMPLE
(12). KALKI AVATAR SOON! KALI YUGA FINITO!
(13). Date of Mahabharata War & other Research Articles
(14).Miracles of Hindu, Parsi, Jain & Buddhist Saints
(15). HINDU STORIES ABOUT MONKEYS,
DONKEYS AND ELEPHANTS
16.VALLUVAR, EINSTEIN AND SHAKESPEARE
17. Mayan Civilization and Hindu Nagas
Asuras, Rishis and Gandharvas
18.Hindu Wonders in Muslim Countries
19.Hindu Influence in Mesopotamia and Iran
20. Hinduism in Sangam Tamil Literature
21.Interesting Titbits from Bhagavad Gita
22.Om in Rome; Manu Smriti in London Church
23.Tamil Hindus 2000 Years Ago!
24.Rewrite Indian History
25. Beautiful Hindu Women and
Wonderful Weddings
26.Woman is an Adjective, Man is a Noun2
27.Amazing and Unknown Names of Hindu Gods,
Himalaya, Water and Sea!
28. 1000 Hindu Quotations for Speakers and Students
29. History is a Mystery in India
30.Thousand More Hindu Quotations for Speakers and Students
31. Controversial and interesting Laws in Manu Smriti
(First Part)
32. Controversial and interesting Laws in Manu Smriti
(Second Part)
33. Linguistic and Language Wonders in India- Old Theories Binned
34. Interesting Anecdotes for Partygoers and Essay Writers
35.More Interesting Anecdotes for Partygoers
36.Third Book of Anecdotes for Students and Speakers
37. Brahmins in Tamil and Sanskrit Literature
38.Gandhiji’s Views on Controversial Matters
39.Guide to Hindu Homa (Havan) and Festivals
40.Guide to 108 Famous Temples in Maharashtra
41.Tamil Hindu Encyclopaedia
42.Strange Stories about Hindu Saints Temples and
Historical Atrocities
43. Nagarjuna’s Sex Tips from China and Hinduism in Burma & Thailand
44.Medical Wonders in Hindu Scriptures
45.Hidden Secrets in Vishnu Sahasranama
46.My Research Notes on Viveka Chudamani
47.Greatest Tamil Book Tirukkural & Oldest Language Sanskrit
48.Country of Kangaroos and Koalas! Amazing Australia!!
49. Dreams in Hindu Literature
50.History: A Bundle of Facts and Fabrications
51.Tamil and Sanskrit Proverbs around the World
52.Hindu Beliefs in Shakesperean Plays
****
TAMIL BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN
லண்டன் சுவாமிநாதன் எழுதி வெளியிட்ட நூல்கள்:
1.உலகம் முழுதும் பாம்பு வழிபாடு!
2.தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவில் தமிழ் முழக்கம்
3.தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்
4.பெண்கள் வாழ்க –
5.சுமேரியர்- இந்தியர் தொடர்பு
6.இந்து மத நூல்களில் வெளி உலக வாசிகளும், காலப்பயணமும்
7.தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன் ?
8.பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா?
9.தமிழ் மொழி அதிசய மொழியே? இதோ சான்றுகள்!
10.திருப்பதி பாலாஜி தமிழ்க் கடவுள் முருகன்! அருணகிரிநாதர் போடும் புதிர்!!
11.திருவாசகத் தேன் ! திருமந்திர ஜுஸ் !!
12. தொல்காப்பியர் முதல் பாரதி வரை
பெரியோர்களுடன் ஒரு நிமிடப் பேட்டி
13.எலும்பு வலுப்பட கால்சியம்; குழந்தை பிறக்க செலீனியம் ; பல் பளபளக்க ப்ளூரைட்
14.ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்
15.வெள்ளி, அலுமினியம், யுரேனியம் பற்றிய சுவையான கதைகள்
16.கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்!
கிரேக்க நாட்டில் இந்துமத சடங்குகள், கதைகள்!!
17.சிங்கப்பூரில் சிவபெருமான் !
சிந்து சமவெளியில் சிவலிங்கம் !!
18.திராவிடர்கள் யார்? குமரிக் கண்டமும் 3 தமிழ்ச் சங்கங்களும் உண்மையா?
19.தொல்காப்பிய அதிசயங்கள்
20.கம்பராமாயணத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள்
21.ரிக் வேதத்தில் தமிழ்ச் சொற்களும் அதிசயச் செய்திகளும்
22.எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு
23..சுமேரியாவில் தமிழ் யாழ்! ஜப்பானில் சாம வேத இசை!!
24.மனைவி ஒரு மருந்து
25.தமிழ் ஒரு கடல்! முத்துக் குளிப்போம் வாருங்கள்!
26.சங்கத் தமிழ் நூல்களில் காளிதாசன் உவமைகள்
27.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்
28.பறவைகள் சகுனம் உண்மையா?
கடவுளுக்கு வாகனம் எதற்காக?
29.கணவர் மேல் 44 காதல் கவிதைகள்! இறந்த பின்னர்
பெட்டிக்குள் 2000 கவிதைகள் !!
30.கடவுளை மறுத்த இங்கர்சால்! இந்துமத ஆதரவு
யேட்ஸ் , ரொமைன் ரோலண்ட், வால்ட் விட்மன்!
31.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
32.தமிழ், சம்ஸ்க்ருத கல்வெட்டுகள்
தரும் சுவையான செய்திகள்
33.மொழியியல் ஆய்வில் விஷமங்கள், விசித்திரங்கள், விநோதங்கள்
34.முப்பது கட்டுரைகளில் இந்துமத அதிசயங்கள்
35.ரிக்வேதத்தில் மேல் நாட்டினரை
திகைக்கவைக்கும் கவிதைகள் !
36.முக்கிய கோவில்கள், சமாதிகளை
தரிசிக்க உதவும் கையேடு
37. தீயோரை அழிக்க கல்கி வருகிறார்!
38.சுவையான யானை பூனை கதைகள்,
உண்மைச் சம்பவங்கள்
39.மகாவம்ச நூலில் தமிழர்கள் பற்றி வியப்பூட்டும் செய்திகள்
கிஷ்கிந்தா காண்டத்தில் அறுபத்தி ஆறாவது ஸர்க்கமாக அமைவது ‘‘ஸமுத்திரத்தைத் தாண்ட ஜாம்பவான் ஹனுமாரைத் தூண்டுவது’ என்ற ஸர்க்கமாகும்.
ஸமுத்திரத்தின் அருகில் வந்த வானர சேனை அதை எப்படித் தாண்டுவது என்று தங்களுக்குள் விவாதித்தனர். ஒவ்வொருவரும் தம்மால் தாண்டக் கூடிய தூரத்தைச் சொன்னார்கள். ஜாம்பவான் இதையெல்லாம் கேட்டார்.
பின்னர் தனியே உட்கார்ந்திருந்த ஹனுமானிடம் வந்தார். ஹனுமானின் வரலாற்றைத் ஹனுமானுக்குத் தெரிவிக்கிறார்.
இங்கு ஹனுமானின் பிறப்பைக் குறித்த வரலாறு நமக்குக் கிடைக்கிறது.
ஒரு சமயம் வாயு பகவான் அஞ்சனையின் அழகைக் கண்டு மயங்கி அவளைக் கட்டித் தழுவினான். அஞ்சனா தேவி இதனால் திகைத்தாள்.
ஆனால் வாயுவோ, “ இதனால் உன் கற்புக்கு எந்த பங்கமும் வரவில்லை. தர்மாதர்ம விசாரணையுடனேயே நான் வியாபித்தேன். ஆகையால் உனக்கு வீர்யவானான ஒரு புத்திரன் பிறப்பான்” என்றார்.
அஞ்சனா தேவி ஹனுமானைப் பெற்றாள். குழந்தையாக இருந்த போது, ஹனுமான் சூரியனைப் பழம் என்று நினைத்து வேகமாக ஆகாயத்தில் சென்றார். அப்போது இந்திரன் அவரது கன்னத்தில் வஜ்ராயுதத்தால் அடிக்க அவரது கன்னம் காயப்படுத்தப்பட்டது. ஆகவே அவர் மென்மையான கன்னத்தை உடையவர் என்ற பொருளில் ஹனுமான் என்று அழைக்கப்படலானார்.
ஹனுமான் காயப்படுத்தப்பட்டதைக் கண்ட வாயு கோபம் கொண்டு காற்று வீசாமல் அசைவற்று இருந்து விட்டார். உடனே திக்பாலர்களும் தேவர்களும் அவரை சாந்தப் படுத்தினார்கள். அப்போது வாயு சாந்தமடைந்ததைக் கண்ட பிரம்மா ஹனுமானுக்கு யுத்தத்தில் எந்த ஆயுதத்தினாலும் மரணம் நேராது என்ற வரத்தை அருளினார்.
அதைக் கூறும் ஸ்லோகம் இது:
ப்ரஸாதிதே ச பவனே ப்ரஹ்மா வரம் ததௌ |
அஷசஸ்த்ரவத்யதாம் தாத சமரே சத்யவிக்ரம: ||
கிஷ்கிந்தா காண்டம், 66வது ஸர்க்கம் ஸ்லோக எண் 29
சத்யவிக்ரம – சத்தியமான பராக்ரமம் உள்ளவரே!
தாத – ஓ, அப்பனே!
பவனே – வாயு
ப்ரஸாதிதே – சாந்தமடைந்தபோது
ப்ரஹ்மா – பிரம்மா
துப்யம் – உமக்கு
சமரே – யுத்தத்தில்
அஷசஸ்த்ரவத்யதாம் ச – எந்த ஆயுதத்தாலும் மரணமில்லாமையை
வரம் – வரமாக
ததௌ – தந்தார்
இங்கு பிரம்மா ஹனுமானுக்கு எந்த ஆயுதத்தாலும் மரணம் ஏற்படாது என்ற வரத்தை அருளியதைக் காண்கிறோம்.
இப்படியாக ஜாம்பவான் ஹனுமானின் பலத்தைப் பற்றி அவருக்கு விளக்கமாக எடுத்துரைக்கிறார் இந்த ஸர்க்கத்தில்!