Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Russians asked men to beat wives two times a day (see yesterday’s post); Ukrainians ask men to beat pretty wives three times a day.
One Thousand Proverbs on Woman, Wife and Daughter –20
Why do I publish 1000 proverbs on women collected from different cultures? This is to teach a lesson to the Anti Manu Smrti idiots in the universities. Millions of women were burnt alive during the witch hunting by Christians. But the world knows only one Joan of Arc. In the whole wide world, greatest Tamil poet Bharati is the only one who never criticised women but praised them sky-high. Next comes Manu Smriti.
Hence men who seek (their own) welfare, should always honour women on holidays and festivals with (gifts of) ornaments, clothes, and (dainty) food.—(59)
(Manu also said women’s all body parts are always pure)
****
381.A woman is no witness against her husband.
382. Woman most often complains without any reason, lies deliberately, weeps visibly and laughs secretly.
383. There is nothing sincere in the weeping of a woman, or the limping of a dog.
384. Beat a woman with a hammer and you will make gold.
385. The wise man only sees in woman’s tears water in the eye.
386. Everyman is a woman’s son.
387. Woman’s span of life is forty years.
388. Woman’s journey is from the oven to the threshold.
389. Do what you like with women and cattle.
390. When hens cackle eggs are laid; when women cackle none are there.
—Russian proverbs
391. Trust not the laughing woman and the weeping man.
392. If a woman is cold, it is her husband’s fault.
393. Mistrust the woman who speaks of her virtue.
394. Wives, razors and hoses should never be lent
395. Do not praise your wife before seven years.
396. If a husband does not beat his pretty wife three times a day, she trains her feet to jump over the house.
397. If a man is too old, it is his wife’s fault
–Ukrainian proverbs
398. It is lesser sin to burn a church than to speak evil of a girl.
399. Speak good of a bad girl and what you like of a good one.
400. When God wants to punish a man, He gives him an only daughter for his wife.
—Serbian Proverbs
–subham—
To be continued…………………………………..
Tags- One Thousand Proverbs, on Woman, Wife and Daughter, part 20
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மிகவும் அதிசயமான விஷயம் உமா என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் அப்படியே சங்கத்தமிழ் நூல்களில் வந்தது ஆகும். காளிதாசன் சங்க காலத்துக்கு முந்திய புலவர் என்று நான் மற்றும் ரெவரென்ட் ஜி யு போப் போன்றோர் சொல்வதற்கு இது மேலும் ஒரு சான்று !
இதற்குக் காரணம் காளிதாசன் எழுதிய அற்புதமான குமார சம்பவம் என்னும் காவியமா!கும் .
அதில் முழுக்க முழுக்க உமாவின் மஹிமை வருகிறது . உ+மா என்றால் நீ (தவம்) செய்யாதே என்று பொருள் கண்டுள்ளனர் . சிவன் என்னும் காதலனை அடைவதற்காக உமா செய்த தவத்தை மிக அழகாக வருணிக்கிறார் காளிதாசன் ; சப்த ரிஷிகளும் அவளைக் கண்டு வியக்கின்றனர் !
சங்க இலக்கியத்தில் ஆயிரக்கணக்கான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் உள்ளன. வேதம், யூபம் காலம், மனம் , காம, உலகம் , வால்மீகி, பிரம்ம , தாமோதரன் கேசவன் வாதுல கோத்ரம் சாண்டில்ய கோத்ரம் கெளசிக கோத்ரம், காப்பிய கோத்ரம் போன்ற சொற்கள் ஆயிரக்கணக்கான இடங்களில் மீண்டும் மீண்டும் வருகின்றன. ஆனால் பெண் தெய்வங்களில் உமா என்ற ஒரு பெயர் மட்டுமே அப்படியே வருகிறது. சம்ஸ்க்ருதத்தில் ஆ என்ற சப்தத்தில் முடியும் சொற்களை தமிழில் ஐ என்ற சப்தத்துடன் முடிப்பது இலக்கண விதி சீதா= சீதை; பகவத் கீதா= கீதை ; அதே போல உமா =உமை !
உலகப் புகழ்பெற்ற கலை வரலாற்று நிபுணர் சிவராம மூர்த்தி சொல்லுவது போல, குப்தர் கால சிற்பங்களிலும் தங்க நாணயங்களிலும் காளிதாசனின் காவியங்களின் செல்வாக்கு பிரதிபலிக்கிறது . பரம பாகவதர்கள் என்று தங்களைக் கல்வெட்டுகளிலும் தங்க நாணயங்களிலும் எழுதிக்கொண்ட குப்தர்களையே குமார குப்தன், ஸ்கந்த குப்தன் முதலிய ஸம்ஸ்க்ருதப் பெயர்களையும் சூட வைத்தது ; 1600 ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டசோர் கல்வெட்டுக்கள் காளிதாசனின் கவிதை பாணியில் எழுதப்பட்டுள்ளன . நிற்க . உமாவின் கதைக்கு வருவோம் .
சங்க இலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் பெண் தெய்வங்கள் உள்ளனர் ; ஆயினும் காளி, துரக்கா , லட்சுமி என்று சொல்லாமல் கொற்றவை, காடுகிழாள், பழையோள், திரு, தவ்வை என்றெல்லாம் சுற்றி வளைத்து மொழிபெயர்த்தனர் ! உமாவுக்கு மட்டும் விதி விலக்கு ! அப்படியே குறைந்தது நான்கு இடங்களில் உமை என்று எழுதிவிட்டனர் !
கயிலை மலையில் – இமய மலையில் — சிவனுடன் உமை அமர்ந்து இருக்கும் காட்சி இது அதைச் சொல்லும்போதும்கூட வேறு அதிசயச் செய்திகளையும் சேர்க்கிறார் நக்கீரர் ; மூன்று கண்கள் இருந்தும் ஒன்றும் இமைக்கவில்லை அதுமட்டுமல்ல வானில் தொங்கிய அரக்கர்களின் மூன்று ஸ்பேஸ் ஷட்டில்களைப் பார்வையிலேயே பஸ்மம் ஆக்கிவிட்ட செய்தியும் உளது
காளிதாசனின் குமார சம்பவம் அற்புதமான இமயமலை வருணனையுடன் துவங்குகிறது ; அதை புறநானூற்றில் உள்ள மிகப்பழைய பாடல்கள் அப்படியே மொழிபெயர்த்துள்ளன. என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் நான் எழுதிய ஒப்பீடுகள், மூன்று நூல்களாக அச்சில் வெளிவந்துள்ளன.
***
அர்த்தநாரீஸ்வரர்
உலகிலேயே பெண்களுக்கு முதலிடம் கொடுத்தவர்கள் இந்துக்கள் மட்டுமே . ஆங்கிலத்தில் THE OTHER HALF தி அதர் ஹாப் — இன்னும் ஒரு பாதி- என்று மனைவியைச் சொல்லுவார்கள் . இது வேதத்தில் உள்ள சொற்கள் .
சிவன் பாதி , பார்வதி பாதி என்பதை ரகுவம்ச முதல் ஸ்லோகத்திலேயே சொல்லும் பொருளும் போல பிரிக்கமுடியாதவர்கள் என்று பாடிய காளிதாசன், ஜகதப்
பிதரெள பார்வதி பரமேஸ்வரெள என்று முதல் ஸ்லோகத்தை முடிக்கிறான்; உலகிற்கே பார்வதி பரமேஸ்வரன்தான் பெற்றோர்கள் என்றும் சொல்கிறான் அதிலும் கூட பார்வதியின் பெயர்தான் முதலில்; இன்று வரை ஆங்கிலத்திலும் கூட முதலில் மனைவியின் பெயரைச் சொல்லி பின்னர் கணவர் பெயரைச் சொல்லுவார்கள் ஹில்லரி கிளிண்டன் என்றுதான் சொல்கிறார்கள் ; இதையெல்லாம் கற்பித்தவன் காளிதாசன் . இதோ சங்க இலக்கிய வரிகள் —
மாயவள் மேனிபோல் தளிர் என – கலி.35-3
சிவபெருமானுடைய செம்மேனிக்கு மாறான கருமையும் பச்சையும் உடையவள் இவள் .
இறைவனுடைய ஒருபாகத்தில் உமை விளங்குதலை
மிக்கு ஒளிர் தாள் சடை மேவரும் பிறைநுதல்
முக்கண்ணான் – கலி 104-11/12
படர் அணி அந்தி பசுங்கட் கடவுள் – கலி 101-24
வரிகளிலும் காணலாம்.
உமா என்னும் பார்வதியை மலைமகள் என்றனர்; இவள் இமவான் புத்ரி ஆதலால்தான் காளிதாசன் குமார சம்பவத்தை இமயமலையின் இயற்கைக்காட்சி வருணனையுடன் துவங்குகிறான் ; இதே போல லெட்சுமியை அலைமகள் சரஸ்வதியைக் கலைமகள் என்றெல்லாம் வருணிப்பதைத் தேவார பாடல்களில் காணலாம் . இவையெல்லாம் சங்க இலக்கியத்திலே துவங்கிவிட்டன
மலைமகள் – முருகு.257
முருகப்பெருமானை வருணிக்கும் பாடல்களில் இவள் மகன்தான் முருகன் என்பதையும் புலவர்கள் சொல்கிறார்கள்.
***
…………………………
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
நாகம் நாணா, மலை வில்லாக,
மூவகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய, 25
மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்
உமையொடு புணர்ந்து, காம வதுவையுள்,
அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி
இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு, 30-
பரிபாடல்-5
சிவன் முப்புரத்தை அழித்தான். அப்போது, பிரமன் (ஆதி அந்தணன்) தேர் ஓட்டினான்.
வேதங்கள் குதிரை. நிலவுலகம் தேர். நாகம் வில்லிலுள்ள நாண். மேரு மலை வில். அழலும் தீ அம்பு.
ஒரே அம்பில் மூன்று கோட்டைகளையும் தீப்பற்றி எரியச்செய்தவன்.
இந்தச் சினம் தணிய, தேவர்கள் வேள்வி செய்தனர்.
அவர்கள் அளித்த வேள்விப் பாகத்தை வாங்கி உண்டவன்.
அவன் இளங்கண் ஒன்றும் கொண்ட பார்ப்பான் (சிவன்).
சிவன் உமையுடன் கூடிக் காமப் புணர்ச்சியில் ஈடுபட்டிருந்தான்.
அது புணர்ச்சி இல்லாத புணர்ச்சி.
அப்போது அவன் நெற்றிக் கண் ஒரு வரம் தந்தது……………..
இந்தப் பரிபாடலில் உள்ள கதைகள் எல்லாம் சம்ஸ்க்ருதத்தில் உள்ளவை.
उ मेति मात्रा तपसो निषिद्धा पश्चादुमाख्यां सुमुखी जगाम॥ १-२६
ஹிமவான் என்னும் இமயமலை அரசனின் புதல்வி என்பதால் – பர்வத ராஜ குமாரி என்பதால்– பார்வதி என்பதுதான் அவளின் இயற்பெயர் ; ஆனால் அவள் காட்டிற்குத் தவம் செய்ய விரும்பியபோது அம்மா சொன்னாள் உ = நீ , மா =செய்யாதே /போகாதே -1-26
u meti mātrā tapaso niṣiddhā paścādumākhyāṁ sumukhī jagāma || 1-26
As a dear child of kith and kin she was affectionately called by her patrilineal name pArvati for she is the daughter of a parvata-rAja; when her mother trying to dissuade this girl with a delicate lineament from high ascesis addressed her as u mA, meaning “oh, girl, don’t do it”; later this sobriquet remained her proper name. [1-26]
2b) Umā (उमा) was named so because “she was prevented from going to forest by Menā” [derived from ‘u’ ‘mā’—‘O (child) do not (practise austerities)’], according to the Śivapurāṇa 2.3.22 (“Description of Pārvatī’s penance”).—Accordingly, after Menā spoke to Pārvatī: “Thus, in various ways, the daughter was dissuaded by her mother. But she did not find any pleasure except in propitiating Śiva. Pārvatī acquired the name Umā since she was prevented from going to forest by Menā and forbidden to perform penance. O sage, on realising that Pārvatī was quite dejected, Menā, the beloved of the mountain, permitted her to perform penance. […]”.
****
உமா என்றால் ஓம் அ +உ+ம
Umā is the combination of three letters of OM – U + M + A, the praṇava. U refers to creation, M refers to destruction and A refers to sustenance. Therefore Umā also means the three acts of the Brahman.
****
उमारूपेण ते यूयं संयमस्तिमितं मनः|
शम्भोर्यतध्वमाक्रष्टुमयस्कान्तेन लोहवत्॥ २-५९
உங்கள் நோக்கம் நிறைவேற வேண்டுமானால் (தாரகாசுரனை அழிக்க முருகன் பிறக்க வேண்டுமானால் ) உமாவையும் சிவனையும் காந்தமும் இரும்பும் கவர்வது போல ஆக்க வேண்டும் (அதாவது இருவரிடையே காமத்தைக் /காதலை உருவாக்க வேண்டும் ) . ஆனால் சிவ பெருமானோ கடும் தவத்தில் இருக்கிறார். 2-56
“In order to achieve your mission you all have to do your best to magnetize Uma, as it were, who in turn can magnetize the iron-like stubborn mind of Shiva which is now wedged into his iron-bound ascesis… [2-59]
கிஷ்கிந்தா காண்டத்தில் அறுபத்தி மூன்றாவது ஸர்க்கமாக அமைவது ‘‘ஸம்பாதியின் இறக்கைகள் முளைத்தலும் வானரர்கள் புறப்படுதலும்’ என்ற ஸர்க்கமாகும்.
சீதாதேவியைத் தேடிச் சென்ற வீரர்கள் ஸம்பாதி என்ற கழுகரசனைச் சந்திக்கின்றனர். சூரியனால் இறகுகள் எரிக்கப்பட்டு கீழே விழுந்து கிடந்த அவர் தனது சரிதத்தை விஸ்தாரமாக அங்கதனுக்கு எடுத்துரைத்தார்.
நிசாசரர் என்ற முனிவர் ஸம்பாதியை அங்கேயே இருக்குமாறும் சீதாதேவியைத் தேடி வானரர்கள் அங்கு வரும் போது அவருக்கு மீண்டும் இறக்கைகள் முளைக்கும் என்றும் கூறுகிறார்.
சீதையை இராவணனன் ஆகாயமார்க்கத்தில் தூக்கிச் சென்ற விஷயத்தை ஸம்பாதி வானரர்களுக்குக் கூறினார்.
அவர் வானரர்களுடன் பேசிக் கொண்டிருந்த போதே அவரது சிறகுகள் மீண்டும் முளைத்தன.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Why do I publish 1000 proverbs on women collected from different cultures? This is to teach a lesson to the Anti Manu Smrti idiots in the universities. Millions of women were burnt alive during the witch hunting by Christians. But the world knows only one Joan of Arc. In the whole wide world, greatest Tamil poet Bharati is the only one who never criticised women but praised them sky-high. Next comes Manu Smriti.
Hence men who seek (their own) welfare, should always honour women on holidays and festivals with (gifts of) ornaments, clothes, and (dainty) food.—(59)
(Manu also said women’s all body parts are always pure)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சூரியனையும் சந்திரனையும் மன்னருக்கு ஒப்பிடுவதை தமிழில் புறம் 6, 38, 56 மற்றும் மதுரைக்காஞ்சி 7,8 , கலி 100 ஆகிய பாடல்களில் காணலாம். மன்னரின் ஆண்மைக்கும் இருள் அகற்றி ஒளி தரும் ஆற்றலுக்கும் சூரியனை ஒப்பிட்டனர். சந்திரனை குளுமையான ஒளிதரும் தன்மைக்கு மன்னர்களை ஒப்பிட்டனர்.
நிலவினை பாம்பு விழுங்குதல்– கிரகணம்–நிலவில் குறு முயல் இருத்தல் போன்றவற்றையும் புலவர்கள் குறிப்பிட்டனர் . ஆயினும் சந்திரனை வழிபடும் வழக்கம் தனிச் சிறப்பானது; சுமேரியாவில் நன்னா என்ற பெயரில் வழிபட்டனர் இந்துக்கள் மட்டும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தனர் அதாவது பிறைச் சந்திரனையும், அதைத் தலை முடியில் சூடிய சிவனையும் ஒரே நேரத்தில் வணங்கினர்.
திங்கள், மதியம், பாற்கதிர் , நிலவு, நிலா என்ற பெயர்களில் சந்திரனைப் போற்றுகின்றனர்
தமிழில் பிறை வழிபாடு பற்றிய பாடல்கள்: குறு.178, நெடும் பல்லியத்தனார்; குறு. 307-கடம்பனூர் சாண்டில்யன்; அகம் 239,எயினந்தை மகன் இளங்கீரனார்; மதுரைக்கஞ்சி.வரி193,மாங்குடி மருதன்; சிலம்பு 2-38; புறம் 1, பாரதம் பாடிய பெருந்தேவனார்; முழு நிலவு-புறம் 60.
****
அயிரை பரந்த அம்தண் பழனத்து
ஏந்தெழில் மலர தூம்புடைத் திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்குஇவள்
இடைமுலைக் கிடந்தும் நடுங்க லானீர்
தொழுதுகாண் பிறையின் தோன்றி யாம்நுமக்கு
அரியம் ஆகிய காலைப்
பெரிய நோன்றனிர் நோகோ யானே.–குறுந்தொகை 178
தொழுதுகாண் பிறை = கன்னிப்பெண்கள் தொழுது காத்திருந்து பார்க்கும் மூன்றாம் பிறை.
****
வளையுடைத் தனைய தாகிப் பலர்தொழச்
செவ்வாய் வானத் தையெனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையேஅன்னோ
மறந்தனர் கொல்லோ தாமே களிறுதன்
உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது
நிலையுயர் யாஅந் தொலையக் குத்தி
வெண்ணார் கொண்டு கைசுவைத் தண்ணாந்
தழுங்க னெஞ்சமொடு முழங்கும்
அத்த நீளிடை அழப்பிரிந் தோரே–.குறுந்தொகை 307
சங்கு வளையல் உடைந்ததைப் போன்ற தோற்றத்தோடு, பலரும் தொழ, சிவந்த வானத்தில், மாலைநேரத்தில், மூன்றாம் பிறை விரைந்து பிறந்து தோன்றியது.
***
திங்கள்/நிலவு அவர் வருகையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது) என் சுணங்கணி மார்பிலுள்ள முத்தாரம் போலவும், சிலம்பில் வழியும் அருவி போலவும் திங்கள் தரும் நிலா வெளிச்சம் உள்ளது என்கிறாள் தலைவி. —அகம் 362
***
மதுரைக்காஞ்சி
அரசியல் பிழையா தறநெறி காட்டிப்
பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது
குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையின்
வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றம்
குணமுதல் தோன்றிய ஆரிருள் மதியின் . . . .[195]
மேற்கில் தோன்றும் பிறைநிலா வளர்வது போல் உனது வெற்றிமுகம் வளரட்டும். கிழக்கில் தோன்றும் முழுநிலா தேய்வது போல உன் பகைவரும் அவர்களின் செல்வமும் தேயட்டும்.
****
புறம் 27.
தேய்த லுண்மையும் பெருக லுண்மையும்
மாய்த லுண்மையும் பிறத்த லுண்மையும்
அறியா தோரையு மறியக் காட்டித்
திங்கட் புத்தே டிரிதரு முலகத்து
வல்லா ராயினும் வல்லுந ராயினும் —என்ற வரிகள் மூலம்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார், வாழ்க்கையின் உண்மை இயல்பினை எடுத்துரைக்கிறார் . இதில் புத்தேள் என்ற அடைமொழி மூலம் சந்திரனின் தெய்வத் தன்மையையும் எடுத்துக்காட்டுகிறார்.
சூரியனின் கதிர்கள் பட்டு நிலவின் பிறை நாளுக்கு நாள் வளருவது போல தந்தை திலீபனின் கவனிப்பால் அஜன் வளர்ந்தான் ; இதை மேலே சொன்ன முதுகண்ணன் சாத்தனார் பாடலுடன் ஒப்பிடலாம்
தமிழ் இலக்கியத்திலும் காளிதாஸனிலும் பெண்கள்தான் பிறையை வழிபட்ட செய்தி வருகிறது ; காளிதாசன் எழுதிய விக்ரம ஊர்வசீயத்தில் மஹாராணி நிலா வழிபாட்டுக்கான பூஜைப் பொருட்களைக் கொண்டுவரச் சொல்கிறாள் ; தோழிமார் சந்தனம் , பூ, இனிப்புகளைக் கொண்டுவருகிறார்கள். பூஜை முடிந்தவுடன் இனிப்புகளை மாணவகன் என்பவரிடம் கொடுக்கச் சொல்கிறாள் – (விக்ரம ஊர்வசீயம்- மூன்றாவது காட்சி)
***
सुते शिशावेव सुदर्शनाख्ये
दर्शात्ययेन्दुप्रियदर्शने सः।
मृगायताक्षो मृगयाविहारी
सिंहादवापद्विपदम् नृसिंहः॥ १८-३५
இந்துக்கள் உள்ளதை உள்ள படியே எழுதுவார்கள். த்ருவஸந்தி என்ற மன்னனை சிங்கம் அடித்துக் கொன்றுவிட்டது இதே போல வீர பாண்டியன் என்ற மன்னனை புலி அடித்துக் கொன்றதைத் திருவிளையாடல் புராணத்தில் காண்கிறோம் பரீட்சித் மன்னனை பாம்பு கடித்து இறந்ததாக பாகவத புராணம் சொல்கிறது . இந்த ரகுவம்ச பாடலில் வேட்டையாடும்போது த்ருவஸந்தி என்ற மன்னனை சிங்கம் கொன்றதைச் சொல்லும்போது அவனுக்கு அப்போதுதான் காணுதற்கினிய பிறை சந்திரன் போல ஒரு மகன் பிறந்தான் என்று காளிதாசன் சொல்கிறான் . இது சுக்ல பக்ஷ பிறை தரிசனத்தைக் காட்டுகிறது
sute śiśāveva sudarśanākhye
darśātyayendupriyadarśane saḥ |
mṛgāyatākṣo mṛgayāvihārī
siṁhādavāpadvipadam nṛsiṁhaḥ || 18-35
இதே கருத்து ரகுவம்ச 2-73 பாடலிலும் உள்ளது
****
குமார சம்பவத்தில் உமையம்மையை வருணிக்கையில் சந்திரனுடன் ஒப்பிடுகிறார் ; அங்கே சிவ பெருமானிடத்தில் ஏற்கனவே ஒருபிறைச் சந்திரன் இருப்பதையும் குறிப்பிடுகிறார்.
உமாவுக்குத் திருமண அலங்காரம் செய்யும் தோழி காலில் செந்நிறச் சாயம்பூசி விட்டு உன் கணவன் சிவன் தலை மீதுள்ள சந்திரனை இதனால் அடி/ தொடு என்று ‘ஜோக்’ JOKE அடிக்கிறாள் . உடனே உமா அவளை ஒரு மலர்ச் சீண்டினால் அடிக்கிறாள் — குமார சம்பவம் 7-19
Here both of the śloka says that the genesis of moon from the eyes of Atrī and the oceans.
சந்திரன் என்பது அத்ரி முனிவரின் கண்களிலிருந்து பிறந்ததாகவும் கடல் கடைந்த போது பாற்கடலிலிருந்து தோன்றியதாகவம் இரண்டு கதைகள் உண்டு இரண்டினையும் பாடல்களில் குறிப்பிடுகிறான் கவி; இவைகளும் நிலவின் தெய்வீகத் தோற்றத்தைக் காட்டுகின்றன
****
பெண்களை வருணிக்கும் போது அவளுடைய முகம் சந்திரன் போல இருந்ததாக வருணிப்பது சங்கத் தமிழ் மற்றும் காளிதாசன் நூல்களில் வருகிறது
தமிழ் :-கலி. 55, 56 ; இந்தக் குறிஞ்சிக் கலியை கபிலன் பாடியுள்ளார்
***
சந்திரனுக்கு நெருக்கமான பெண் ரோகிணி என்றும் தமிழர்கள் அந்த நாளில் கல்யாணம் செய்ததாகவும் அகநானூற்றில் காண்கிறோம். இதையும் காளிதாசன் விக்ரம ஊர்வசீயத்தில் சொல்கிறான் ; ஆக நல்ல நாள் பார்த்துக் கல்யாணம் செய்வது அந்தக்காலத்திலேயே இருந்துள்ளது. இவையெல்லாம் நிலவினை தெய்வ நிலைக்கு உயர்த்தியத்தைக் காட்டும் சான்றுகள் ஆகும்
***
சுமேரியர்கள் நன்னா என்று பெயரில் சந்திரனை வணங்கினர் . சங்கத் தமிழ் நன்னன் என்ற மன்னர் பெயர் இருக்கிறது 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ராஷ்டிர கூட மன்னரின் பெயர் நன்ன ராஜன் !
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
புதிய தொடர்!
அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! –13 (Last Part)
ச. நாகராஜன்
மதுரையில் உள்ள ஸத்சங்கங்களுக்கு ஆதரவு!
17
மதுரையில் ஏராளமான ஸத்சங்கங்களும், ஆன்மீக சபைகளும், மன்றங்களும், பஜனா மண்டலிகளும் உள்ளன.
இவை அனைத்தையும் தந்தையார் ஆதரித்து ஊக்குவித்ததால் இவற்றை நடத்தும் நல்லோர்கள் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவது வழக்கம். நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதற்காக, உரை நிகழ்த்த அல்லது தலைமை தாங்குவதற்காக அல்லது நிகழ்ச்சி முடிந்தவுடன் அந்தச் செய்தியை தினமணியில் பிரசுரிப்பதற்காக இவர்கள் வருவது வழக்கம். பிரசாதங்களைத் தருவதற்காக கோவிலிலிருந்து பட்டர்கள், பூசாரிகள் வருவர்.
தெற்காடிவீதியில் உள்ள திருப்புகழ் சபையைப் பற்றிப் பார்த்தோம்.
அடுத்து அங்கு மிக நன்றாக இயங்கி வந்த தெய்வ நெறிக் கழகம் பற்றிப் பார்ப்போம்.
தெய்வநெறிக் கழகம்
ரிஷிகேசத்தில் உள்ள சிவானந்த ஆசிரமத்தை அமைத்து அங்கிருந்து தெய்வ நெறியைப் பரப்பியவர் சுவாமி சிவானந்தர். இவர் பத்தமடையைச் சேர்ந்தவர். இவர் பால் ஈடுபாடு கொண்ட எனது தந்தையார் இவரது புத்தகங்களை அனைத்தையும் கரைத்துக் குடித்தார். வாரந்தோறும் தெற்காடிவீதியில் ஞாயிறு அன்று நடக்கும் சத்சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்; பேசுவார்.
அதை நடத்தி வந்த திருநெல்வேலி சகோதரர்களான திருவாளர்கள் வானமாமலை, சேஷன், தி.கி. நாராயணன், சுந்தரம் ஆகியோர் மதுரைக்கே வந்து குடிபுகுந்தனர். வானமாமலைக்கு தினமணியின் உதவி ஆசிரியர் வேலையைக் கொடுத்தார் என் தந்தையார். சில காலம் தினமணியில் வேலை பார்த்த இவர் பின்னர் முழுநேர ஆன்மீகப் பணியில் ஈடுபடலானார். பின்னர் துறவியாக ஆனார்.
செப்டம்பர் முதல் வாரத்தில் நடக்கும் ஜெயந்தி விழாவில் நிச்சயமாக என் தந்தையார் ஒரு நாள் தலைமை உரை ஆற்றுவார்.
இங்கு ஹிந்தி வகுப்புகளும் சம்ஸ்கிருத வகுப்புகளும் இலவசமாக மாலை வேளைகளில் நடக்கும். திருமதி சந்தானம்ஜி என்பவர் மிகவும் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் பல வருடங்கள் இதை நடத்தி வந்தார்.18
பன்னிருதிருமுறை மன்றம்
அடுத்து தெற்கு ஆடி வீதியில் சைவ நெறி பரப்பி சிறப்பாகச் செயல்பட்ட மன்றம் பன்னிருதிருமுறை மன்றம் ஆகும். இதை நடந்த்தி வந்த ந.சீ.சுந்தரராமனும் அவரது தகப்பனாரும் என் தந்தை மீது அன்பும் மரியாதையும் கொண்டவர்கள்.
பன்னிருதிருமுறை மன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதோடு மன்றத்திற்கு உரிய ஆதரவையும் தந்து வந்தார் எனது தந்தையார்.
19
திருப்பாவை இசைப்பள்ளி
ராஜம்மாள் சுந்தரராஜனிடம் பயிற்சி பெற்ற விசாலாக்ஷி தெற்காடிவீதியில் திருப்பாவை இசைப்பள்ளி நடத்தலானார். இதற்கும் உரிய ஆதரவை வழங்கினார் எனது தந்தையார்.
20
சேதுராம் பஜனை மண்டலி
தானப்பமுதலித் தெருவில் சேதுராம் பஜனை மண்டலி நடந்து வந்தது.
வாரந்தோறும் ஒரு நாள் இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பித்து நெடுநேரம் நடக்கும் பஜனையில் உற்சாகமாக எங்கள் குடும்பம் ஈடுபடும். இதை சிறப்பாக நடத்திய குண்டுராவ் ஒரு வங்கியின் உயர் அதிகாரி
21
இது தவிர மதுரையின் தெற்குப் பகுதியில் உள்ள ஏராளமான சத்சபைகள் பக்தியில் சிறந்த சௌராஷ்டிரப் பெருமக்களால் நடை பெற்று வந்தன. அதில் ஏராளமானோர் பங்கு பெறுவது வழக்கம்.
மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் நடன கோபால நாயகி மந்திர் சிறப்பாக அமைந்திருந்தது.
இதையெல்லாம் நடந்தி வந்த பெருமக்கள் அடிக்கடி எங்கள் இல்லத்திற்கு வருவது வழக்கமானது.
பிரசாதங்களை சிரத்தையுடன் கொண்டு வந்து தருவதில் முன்னணியில் இருந்தார் மொட்டை கோபுர முனியாண்டி கோவில் பூசாரி.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தலைமை பட்டர் திரு ம.க.சுந்தரேச பட்டர் .அடிக்கடி எங்கள் வீட்டில் பார்க்கப்படும் முக்கியஸ்தர்.
தினமும் மீனாட்சிஅம்மன் கோவில் போவது எங்களுக்கு வழக்கமானது. அதே போல் வடக்குமாசிவீதி மேலமாசிவீதி தெருமுனை சந்திப்பில் அமைந்துள்ள நேருஆலால சுந்தர விநாயகர் கோவிலுக்கும் தினமும் போவது கட்டாயப் பழக்கமானது.
மொத்தத்தில் மதுரையை ஆன்மீக மதுரையாக ஆக்கியதில் ஒரு சிறப்பான பங்கு எனது தந்தையாருக்கு உண்டு.
ஒரே ஒரு கட்டுரை எழுதலாம் என்று எண்ணி ஆரம்பிக்கப்பட்டது இது.
இப்போது 21 பகுதிகளை அடைந்து விட்டது.
ஒரு அதிசய புருஷரைப் பற்றி விவரிப்பதென்றால் இது சரிதானே!
இதைப் பொறுமையுடன் படித்த அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.
Sheldon Pollock has translated the Sanskrit poem into English The inscription shows Kalidasa’s influence.
This epigraph and earlier Kumara Gupta’s Sanskrit epigraphs clearly show Kalidasa’s influence over a vast area from Madhya Pradesh to Nepal. More over irt shows that Kalidasa must have lived several centuries before these poems. Tha proved Art Historian Sivaramamurti’s view that Kalidasa lived before Gupta period because we could see his influence in Gupta sculptures.
The important points to be noted here are similes used by the poet. Kalidasa used similes mostly in good auspicious context. Here similes are not missed even it is about king’s death and queen’s grief.
Around the same time, we have over 1000 Sanskrit inscriptions from Central Asia to Southeast Asia. We know that Sanskrit is spoken or understood over a vast area. Moreover, Vedic sacrifices and Vedic Gods are also mentioned in those inscriptions.
***
The Cangu Narayan Pillar Inscription is a significant ancient inscription found in Nepal, primarily documenting the reign of King Mānadeva and his lineage. It is located at the Cangu Narayan Temple, a UNESCO World Heritage site. The inscription is divided into three sections, each etched on a different side of the pillar. These sections provide insights into the political, social, and religious landscape of the Licchavi period in Nepal.
Key aspects of the inscription:
King Mānadeva’s Reign:
The inscription details King Mānavanadeva’s lineage, his mother Queen Rājyavatī, and his accomplishments.
Social and Religious Context:
It sheds light on the social structure, religious beliefs, and practices of the time, including references to deities like Vishnu (Hari), Lakshmi, and the concept of sati (widow immolation).
Political Events:
The inscription also records military campaigns and territorial conquests during Mānadeva’s reign, particularly his western expedition.
Licchavi Dynasty:
The inscription provides valuable evidence about the Licchavi dynasty, which played a crucial role in Nepali history.
Specific details from the inscription sections:
East Side:
Describes King Vṛṣadeva, his virtues, and his rule, highlighting his prowess and the well-behaved nature of his sons.
North Side:
Focuses on Queen Rājyavatī, her grief over her husband’s death, and her son Mānadeva’s ascension to the throne.
West Side:
Narrates Mānadeva’s military expedition to the western lands, his victory over a rebellious feudatory, and his generosity towards Brahmins.
The inscription is a crucial historical document for understanding the Licchavi period in Nepal, offering valuable information about the political, social, and religious landscape of the time.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நேபாளநாட்டில் அற்புத ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு ஒன்று இருக்கிறது அதை சங்கு நாராயணன் தூண் கல்வெட்டு என்று அழைப்பர். 1600 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருத மொழியில் கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ளது இதே காலத்தில் இந்தோனேஷியாவின் போர்னியோ தீவின் அடர்ந்த காட்டிற்குள் பூர்ண வர்மனின் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டும் மத்திய ஆசியாவில் பல கல்வெட்டுகளும் வியட்நாமில் இதற்கு முன்னரே ஸ்ரீமாறன் என்ற பாண்டியனின் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டும் இருக்கின்றன. 1600 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருத மொழிக் கல்வெட்டு உலகின் பெரும்பகுதியில் இருப்பதால் பல லட்சம் சதுரமைல் பரப்பில் சம்ஸ்க்ருத மொழி அறிவு இருந்தது தெளிவாகிறது; சுமார் இருபது நாடுகளில் அப்போது சம்ஸ்க்ருத மொழி பேசப்பட்டிருக்கிறது அலெக்ஸ்சாண்டர் ஆக்கிரமித்த கிரேக்கப் யிரதேசங்களில் கூட இவ்வளவு கிரேக்கக் கல்வெட்டுகள் கிடையாது!
தென் கிழக்காசியாவில் ஏழு நாடுகளில் மட்டும் 800 கல்வெட்டுகள் கிடைத்து நூலாகவும் வெளிவந்துள்ளதால் கல்வெட்டு இலக்கியத்தில் ஸம்ஸ்க்ருதத்தை மிஞ்சும் மொழி உலகில் இல்லை. தமிழ் மொழியில் 60,000+++ கல்வெட்டுகள் இருப்பது உண்மைதான்; ஆனால் அவை காலத்தால் பிந்தியவை; பெரும்பாலும் கோவிலில் உள்ள இந்து சமயக் கல்வெட்டுகள்தான். ஒரு வரி இரண்டு வரிகளில் உள்ள 30, 40 பிராமி எழுத்துக் கல்வெட்டுகள் சுத்தத் தமிழில் இல்லாமல் பிராகிருதம் கலந்த கொச்சை மொழிக் கல்வெட்டுகளாகவே உள்ளன
இதோ சங்கு நாராயண கல்வெட்டில் மஹாராணிக்கும் இளவரசனுக்கும் இடையே நடந்த உரையாடல்:
“அவரது மனைவியோ மாண்புமிகு மஹாராணி ராஜ்யவதீ,
உயரகுலப் பெண்மணி , லெட்சுமி போன்ற அவரது குணநலங்கள் விஷ்ணுவுக்கு (அரசனுக்கு) வாய்த்தது. அவரோ உயிரினும் மேலாக அவளை நேசித்தான்.
அவர் தனது புகழ ஒளியை பூமி முழுதும் பரப்பினார் , பின்னர் இறைவன் உலகத்துக்குச் சென்றுவிட்டார் – அமைதியான பயணம் அது- தேவலோக நந்தவனத்துக்குச் செல்வது போல — ஆயினும் மனைவியோ மூர்ச்சித்து விழுந்து விட்டாள்.
துயரம் எனும் நோய் அவளைப் பீடித்தது – செயலிழந்து போனாள்
கணவனைப் பிரிவதற்கு முன்னர் செயல் வீரர் அவள் ; அல்லும் பகலும் இறைவனுக்குரிய சடங்குகளில் நேரம் செலவிட்ட பெருமகள்!
இப்போது மஹாராணி என்ற இந்த ராஜ்யவதீ,
அவர் விட்டுச் சென்ற ராஜ்யத்துக்கு அதிபதி ,
அவரைப் பின்தொடர்ந்து செல்ல மேலுகத்தின் மீது
சிந்தனையைத் திருப்பினாள்.
மகன் மானதேவனிடம் வந்தாள்; அவன் மாசுமருவற்ற தூய ஒழுக்க சீலன்; சரத் சந்திரகால நிலவு போன்ற முகமுடையோன்; நிலவு போலவே காண்போருக்கு மகிழ்ச்சியும் தந்தோன் .
வார்த்தைகள் தொண்டையை அடைத்தன;பெருமூச்சு எழுந்தது,
கண்ணீர் ததும்பிய முகத்துடன் செப்பினாள்:
“என்னருமை மகனே ! இனி நான் வாழ்வதற்கு இயலாது ;
உனது தந்தை மேலுலகம் சென்றுவிட்டார் ,
என் இனிய மகனே; நாட்டை ஆள்வாயாகுக; நானும் அவர் சென்ற பாதையில் செல்வேன். பொழுது விடிவதற்குள் புறப்படப் போகிறேன் .கணவன் இல்லாதபோது காரிகை வாழ்வது முடியாது . நீண்ட காலம் இணைந்து நடாத்திய இன்பமயமான இல்லற வாழ்வு கானல் நீராகி விட்டது;கனவாகப் போய்விட்டது ;
இதோ போகிறேன் — உறுதியான சொற்களை உதிர்த்தாள்.
மனமுடைந்து போன மகன் பயபக்தியுடன் அவனது தலையைத் தாழ்த்தி அவளது பாத கமலங்களைத் தொட்டான்.
அம்மா உன்னைப் பிரிந்து நான் என்ன சுகம் காணப்போகிறேன் ; பிரிந்த பின்னர் என்ன இன்பம் கிடைக்கப் போகிறது ? முதலில் நான் உயிர் துறக்கிறேன் ,அதற்குப் பின்னர்தான் நீ சுவர்க்கத்துக்குச் செல்ல முடியும் என்று அவன் புலம்பவும் அவனது தாமரைக் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் உதிர்ந்தன ;அவையே பறவைகளை பிடிக்க உதவும் வலையாக மாறி அந்தப் பெண்மணியையும் சிக்க வைத்தது; அவள் (பூவுலகில்) தங்கிவிட்டாள்.
(ஷெல்டன் பொல்லாக் என்ற சர்ச்சைக்குரிய அமெரிக்க சம்ஸ்க்ருத அறிஞர் இந்தக் கவிதைக் கல்வெட்டினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்._
இந்தக் கல்வெட்டு நேபாள நாட்டு ராஜ வம்சத்தினரின் ஸம்ஸ்க்ருதப் புலமையைத் தெரிவிப்பதோடு குடும்ப உறவுகளையும் காட்டுகிறது ;பூதப் பாண்டியன் தேவி என்ற மஹாராணி, கணவன் இறந்தபோது தீப்பாய முனைந்தாள்; அறவோர் பலர் தடுத்துப்பார்த்தனர் ; அவள் கேட்கவில்லை அந்தப் பாண்டிய மஹாராணி தீப்பாய்ந்து உயிர்நீத்த செய்தியைப் புறநானூற்றுக்குப் பாடல்கள் நமக்குத் தெரிவிக்கின்றன . இப்போது எனக்கு ஒரு கருத்து தோன்றுகிறது; தசரதன் இறந்தபோது அவனது மனைவிகள் உயிர் துறக்கவில்லை; மஹாபாரதத்தில் குந்தி தேவியும் சதி முறையில் தீப்பாய்ந்து இறக்கவில்லை; ஆகையால் மகன்கள் இருந்தால் அவர்களுக்காகத் தாய்மார்கள் உயிர் வாழ்ந்தது தெரிகிறது பூதப் பாண்டியனைத் தீப்பாயாதே என்று சொன்னவர்கள் பட்டியலில் மகன் பற்றிய குறிப்பு இல்லை.
–subham—
Tags- நேபாள கல்வெட்டு, சங்கு நாராயணன் தூண் கல்வெட்டு, சம்ஸ்க்ருத மொழி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
MaduraiV.Santanam, Freedom Fighter and News Editor Dinamani News paper, passed away on the Independence Day 15-8-1998, after the Flag Hoisting ceremony opposite his house in Madurai. A series of articles will appear here in his memory.
புதிய தொடர்!
அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! –12
ச. நாகராஜன்
ஶ்ரீ கோபாலகிருஷ்ண பாகவதரின் ராதா கல்யாணம்!
V Santanam and Sri Gopalakrishna Bhagavathar
14
சைவ சமயத்தை வளர்க்கும் எல்லா ஆதீனங்களின் ஆதீனகர்த்தர்கள் எனது தந்தையாரிடம் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தார்கள். முக்கியமாக திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், மதுரை ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் ஏராளமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது வழக்கம்.
இவற்றில் திருமந்திர மாநாடு நடக்கும் போது அதைத் துவக்கி வைத்தும் சொற்பொழிவு ஆற்றியும் வருவது எனது தந்தையாரின் வழக்கம்.
அவரது உரைகள் திருமந்திர மாநாட்டு மலரில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
நானும் எனது தந்தையுடன் கூடவே செல்வேன். அந்தக் காலத்தில் ரயில் பயணம் மிக மெதுவாக இருக்கும். ஒரு பை, ஒரு கூஜாவில் தண்ணீர், ஒரு பெட்ஷீட், தலையணை ஆகியவற்றுடன் பயணம் சொகுசாக இருக்கும்.
ஆதீனங்களில் மிக நல்ல வரவேற்பு கிடைக்கும்.
நிறைய புத்தகங்களை எனது தந்தையார் வாங்குவது வழக்கம்.
அது இன்றளவும் எங்கள் வீட்டின் புத்தக அலமாரியில் சிறந்த பொக்கிஷங்களாக உள்ளன.
15
மதுரை ஆதீன கர்த்தர் ஶ்ரீ சோமசுந்தர தேசிகர் சைவ சித்தாந்த விளக்கத்தில் தேர்ந்தவர். மீனாட்சி அம்மன் கோவிலில் அவர் கூட்டு வழிபாடு நடத்துவது வழக்கம்.
அவர் எனது தந்தையாருக்குச் சிறந்த பட்டம் அளித்து கௌரவித்தார்.
அவருடனான எனது தொடர்பு வெகுவாக வலுப்பட்டது.
யாரையும் உணவருந்தும் போது அவர் அனுமதிப்பதில்லை. ஆனால் அவர் என்னை வரச்சொல்லி நீ எல்லாம் வரலாம் என்றார். அப்படி ஒரு கருணை. அவரை சேலத்தில் நடந்த ஹிந்து ஆலயப் பாதுகாப்பு மாநாடு விஷயமாக அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அந்த மாபெரும் மாநாட்டில் அவர் கலந்து கொண்டார்.
என்னை கவலூரிலிருந்த நாடி ஜோசியருக்கு அவர் மடத்திற்கு வந்த போது அறிமுகப்படுத்தி என்னை அவரைப் பார்க்குமாறும் அறிவுறுத்தினார்.
விருதுநகர் அருகே உள்ள கவலூருக்குச் சென்றேன். ஒரே கூட்டம்.
ஆனால் நாடி ஜோதிடர் என்னைக் கண்டவுடன் அருகில் அழைத்து எனது முன் ஜென்மம் உள்ளிட்ட பல அரிய விஷயங்களைக் கூறி கடுக்காய் மையில் எழுதியும் தந்தார்.
‘அன்னை அணிவிரல் மோதிரம் மால் உறங்கும் பஞ்சணை அரசன் என்னும் திருநாமம் – நாகராஜன் – ‘என்று என் பெயரைக் கூறிய அவர் தீர்க்கமாக நான் பிறந்த வருடம் மற்றும் முன் ஜென்மம் பற்றி விரிவாகக் கூறினார். இது அதிசயமாக இருந்தது.
மதுரை ஆதீனகர்த்தரிடம் சென்று என் நன்றியைத் தெரிவித்தேன்.
அவர் இறந்தவர்களுடன் பேசும் பிளாஞ்செட் பேப்பரையும் அதில் ஆர்வமுள்ளவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
எங்களுக்கும் அதில் ஆர்வம் பிறக்கவே மிகத் தீவிரமாக அதில் ஈடுபடலானோம்.
தினமும் இறந்த ஒருவரிடம் பேசலானோம். நூற்றுக்கணக்கான சம்பவங்கள் உண்டு.
இரண்டை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
ஒரு முறை என் தாயாரின் தந்தையாரை – எனது தாத்தாவை அழைத்தோம். ஒரு குறிப்பிட்ட கருத்தைச் சொன்ன போது அவர், “அசட்டு பிசட்டுன்னு பேசாதே” என்றார்
இதைக் கேட்ட எனது தாயார் இது என் அப்பா வழக்கமாகச் சொல்லும் வார்த்தை” என்று குறிப்பிட்டார். எங்கள் அனைவருக்கும் இந்த வார்த்தையே தெரியாது. ஆக வந்தவர் எனது தாத்தாவே என்பது தெரிந்தது.
இன்னொரு சம்பவம்.
எனது தந்தையாரின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவர் எஸ். ராமகிருஷ்ணன். தீவிர கம்யூனிஸ்ட். பல நூல்களை எழுதி இலக்கிய உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர்.
நாங்கள் சிறுவர்களாக இருந்த போது அவர் வீட்டில் விளையாடப் போவோம் அடிக்கடி.
ஒரு நாள் அவர் வீட்டு வாசலில் நின்று எங்களை அழைத்திருக்கிறார்.
நாங்கள் உள்ளே வாசலே தெரியாத ஒரு இடத்தில் இருந்து பிளாஞ்செட்டில் பேசிக் கொண்டிருந்தோம்.
திடீரென ஒரு செய்தி வந்தது பிளாஞ்செட்டில்.
“வாசலில் எஸ்.ஆர். கே நிற்கிறார் பார். அவரை உள்ளே வரச் சொல்” எஸ். ஆர். கே என்பது எஸ்.ராமகிருஷ்ணனை சுருக்கமாக உலகம் அழைக்கும் விதம்.
ஆச்சரியப்பட்ட நாங்கள் வாசலுக்கு விரைந்தோம். அவர் நின்று கொண்டிருந்தார்.
:என்னடா செய்றீங்க” என்று கேட்டவாறே உள்ளே நுழைந்தார்.
நாங்கள், “இதோ பாருங்கள் பிளாஞ்செட். நீங்கள் வருவதைக் கூட இப்போது இதில் தான் செய்தி வந்தது” என்று வியப்புடன் கூவினோம்.
“இதெல்லாம் வைக்கக் கூடாதுடா” என்று அவர் எங்களிடம் கூற பிளாஞ்செட்டில் செய்தி வந்தது.
“முதலில் அவரை வணக்கம் சொல்லச் சொல்”
இதைப் பார்த்த அவர் வெளியே சென்று விட்டார். அவருக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை.
இப்படி ஏராளமான அனுபவங்கள்.
மதுரை ஆதீனம் சிறந்த பேச்சாளர். நுணுக்கமான தெய்வீக தத்துவங்களை காலத்திற்கேற்றபடி விளக்குபவர். அவரது பேச்சுக்கள் தினமணியில் வெளியாகும். தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள அவரது மடத்திற்கு அடிக்கடி போவது வழக்கமானது.
V Santanam Speaking; P T Rajan is also in the picture.
16
ஆவியுடன் பேசிய அனுபவத்தைக் கூறும் போது இன்னொரு சம்பவத்தின் நினைவும் வருகிறது.
மதுரையில் தெற்கு ஆடி வீதியில் முதலில் உள்ள சபை திருப்புகழ் சபை, இதைத் திறம்பட நிர்வகித்து ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தியவர் திருப்புகழ் தியாகராஜன். இவர் தந்தையாரின் மிக் மிக நெருங்கிய நண்பர்.
திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவை இவரே ஏற்பாடு செய்வார். பல்லாயிரக் கணக்கில் மக்கள் திரள் திருப்புகழ் சபை மண்டபத்தில் ஆடி வீதியில் கூடும். பல நிகழ்ச்சிகளுக்கு என் தந்தையார் தலைமை வகித்திருக்கிறார்.
வாரியார் சுவாமிகள் தந்தைக்கு நெருக்கமானவர். அவரது நீண்ட சொற்பொழிவுகளும் தினமணியில் தவறாது இடம் பெறும்.
வாரந்தோறும் தவறாமல் வெள்ளிக்கிழமை அன்று திருப்புகழ் சபையில் திருப்புகழ் பஜனை மிக மிக அருமையாக நடைபெறும் இதில் தவறாது எனது தந்தை, தாய், சகோதரர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
நிறக, ஒரு சோகமான சம்பவம் நடந்தது. திருப்புகழ் தியாகராஜனின் மூத்த குமாரர் – வயதில் இளைஞர் திடீரென மரணமடைந்தார்.
இதை அவரால் தாஙகவே முடியவில்லை.
அவரது துக்கத்தைத் தணிக்க யாராலும் முடியவில்லை.
இரவு சுமார் ஒன்பது மணிக்கு கோபாலகொத்தன் தெருவில் இருந்த அவர் வீட்டிற்கு அடிக்கடி செல்வது என் தந்தையாரின் வழக்கம். அவருக்கு ஆறுதல் கூறச் சென்ற போது இந்த பிளாஞ்செட் அனுபவம் அவருக்குத் தெரிய வரவே தனது மகனுடன் அவர் பேசலானார். இதனால் அவருக்குப் பெரிய் ஆறுதல் கிடைத்தது.
எனது தந்தையுடன் நானும் சென்றதனால் இதைப் பார்க்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.
நீண்ட காலம் திருப்புகழ் பாடுவதிலும் அதைப் பரப்புவதிலும் ஈடுபட்ட நல்லவர் திருப்புகழ் தியாகராஜன்.
பின்காலத்தில் ஆவிகளுடன் அதிகத் தொடர்பு கூடாது என்று பல பெரியோர்களும் கூறவே நாங்கள் பேசுவதை விட்டு விட்டோம்.
அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடரின் ஒரு பாகத்தை நிறுத்திக் கொள்ளலாம் என்றே எண்ணுகிறேன்.
ஓரிரு கட்டுரை எழுதப் போய் இப்போது 12 கட்டுரைகள் ஆகி விட்டன.