கானக ஆஸ்ரமம் பற்றி காளிதாசரின் அற்புத வர்ணனை (Post No.14,794)- 1

Written by London Swaminathan

Post No. 14,794

Date uploaded in London –  24 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நூல்கள்

ரகுவம்சம் – ரகு

மேகதூதம் -மேக

குமாரசம்பவம் – குமா

சாகுந்தலம் – சாகுந்த

மாளவிகாக்னிமித்ரம் –  மாளவிகா

விக்ரமோர்வசீயம் – விக்ரம

ருதுசம்ஹாரம் – ருது

ரிஷி முனிவர்களின் ஆசிரமங்கள் , உறைவிடங்கள், பர்ணசாலைகள் பற்றி காளிதாசர் வர்ணித்தது போல வேறு எவரும் வர்ணித்ததில்லை ; இயற்கை எழில் கொஞ்சும் காடுகளுக்கு இடையே அவர்கள் அச்சமின்றி வாழ்ந்தனர். வன விலங்குகள் கூட முனிவர்களின் கட்டளைக்காக கீழ்ப்படிந்தே நடந்தன. விஷப் பாம்புகளும் அவர்களைத் தீண்டியது இல்லை . பாம்பு கடித்து முனிவர் இறந்தார், யானை மிதித்து ரிஷி இறந்தார் என்று நாம் படித்ததில்லை ஆனால் இவை எல்லாம் மனிதர்கள், சாதாரண மனிதர்கள் விஷயத்தில் நடந்தன.

எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு ஒரே துறையில் புலியும் மானும் பகைமையை விடுத்து நீர் குடிக்கும்

காளிதாசரின் சொற்களில் காடுகளைக் காண்போம் :

முனிவர்கள் தங்கு தடையின்றி தவம் இயற்ற காடுகள் துணை புரிந்தன. தபோவனம் என்ற சொல்லால் அவர்  ரிஷிகளின் உறைவிடங்களை அழைக்கிறார்.

இதை குமார 3-24;- ரகு 2-18, 11-13, சாகுந்தல 1-18 விக்ரமோர்வசீய 5-17 ஸ்லோகங்களில் காணலாம்

கிளிகளின் கூடுகளிலிருந்து நீவார அரிசி விழும் காட்சிகளை அங்கே காணலாம் – சாகுந்தல 1-13

அங்கே இங்குடி எண்ணெய் எடுப்பதற்காக பயன் படுத்திய எண்ணெய்க் கறை படிந்த கற்களைக் காணலாம்.

மான்கள் அச்சமின்றி உலாவும் ;தேர் வரும் சப்தமும்கூட அவைகளை ஒன்றும் செய்யாது .

மரக்கிளைகளில் ரிஷி முனிவர்கள் உலர்த்திய ஈரத் துணி  களிலிருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டிருக்கும்

செடிகொடிகளைச்   சுற்றி நீர்பாய்ச்சுவதற்காக வெட்டிவிட்ட பாத்திகளும் காணப்படும்– ரகு

மாலை வேளைகளில் முனிவர்களின் மகன்கள் எல்லோரும் கூட்டமாக யாகத்துக்கான சமித்துக்களைக் கொண்டு வருகிறார்கள் . அவர்கள் கைகளில், குச புல், பழங்கள் பூக்களும் இருக்கும். இந்தப்பணிகளை ரிஷிகளின் இளம் புதல்வர்கள் செய்தனர்

புண்ய சமிதி குச நிர்மித்தம் ரிஷி குமாரகைஹி  – என்று விக். வர்ணிக்கிறது .

பறவைகளையும் மிருகங்களையும் அன்பாக நடத்தினார்கள்

சாகு1-13; 4-13 , ரகு1-50, 1-51

மான்களை பிள்ளைகளாக சுவீகரித்து அவைகளுக்குப் பெயர்களை சூட்டினார்கள் .

 மே புத்ர க்ருதகோ தீர்க்கபாங்கோ நாம மிருக– சாகு 4-13

மான்கள் புற்களை மேயும்போது அவைகளின் முகங்களில் ஏற்பட்ட காயங்களுக்கு இங்குடி எண்ணெயைத் தடவிக் குணப்படுத்தினர்- ரகு 1-50

பர்ணசாலைகளின்  வாசல்களில்  மான்கள்  கூட்டமாக  காத்திருந்தன  . ரிஷிகளின்   மனைவிமார்கள்   அவைகளுக்கு   உணவு  அளித்தனர் ; இது குழந்தைகளுக்குத் தாய்மார்கள் உணவு ஊட்டுவது போல இருந்தது .  சாகு

மாலையில் சூரியன் அஸ்தமிக்கையில் மான்கள் கூட்டமாக யாக மேடைகளை  சுற்றி அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்தன.

குடிசைகளுக்கு முன்பாக நிவார அரிசி குமிக்கப்பட்டிருந்தது.

செடி கொடி மரங்களுக்கு ஆஸ்ரமப் பெண்கள், புதல்விகள் நீர் பாய்ச்சினார். அவைகளைத் தங்கள் குழந்தைகள் என்று அழைத்தார்கள்

Parṇaśālā (पर्णशाला) பர்ண என்றால் இலை; சாலை என்றால் கூடம்

****

சில வருணனைகளைக் காளிதாசனின் சொற்களில் காண்போம் 

परस्पराक्षिसादृश्यमदूरोज्झितवर्त्मसु।

मृगद्वन्द्वेषु पश्यन्तौ स्यन्दनाबद्धदृष्टिषु॥ 1-40

parasparaakShisaadR^ishyamaduurojjhitavartmasu |

mR^igadvandveSu pashyantau syandanaaabaddhadR^iSTiSu || 1-40

மன்னரின் ரதம் வரும் ஒலியைக்கேட்டு இரண்டு ஜோடி மான்கள் சற்று விலகி நின்றன . ஒன்றை ஒன்று கண்களை உற்றுநோக்கி சுதக்ஷிணாவையும் திலீபனையும் பார்த்தன . ஆண் மானும் பெண் மானும் பரஸ்பரம் ராஜா ராணிகளின் கண்களைப்போல தங்கள் துணைவி அல்லது கணவனின் கண்களைப்போல இருப்பதை உறுதி செய்தன.

அதேபோல திலீபனும் சுதக்ஷிணாவும் ஒப்பிட்டுப்பார்த்துக் காதல் சிரிப்பு சிரித்தனர்.

श्रेणीबन्धाद्वितन्वद्भिरस्तम्भां तोरणस्रजम्।

सारसैः कलनिर्ह्रादैः क्वचिदुन्नमिताननौ॥ १-४१

śreṇībandhādvitanvadbhirastambhāṁ toraṇasrajam |

sārasaiḥ kalanirhrādaiḥ kvacidunnamitānanau || 1-41 .

வானத்தில் கொக்குகள் மாலை வடிவத்தில் பறந்து சென்ற்ன்.அது மன்னரை வரவேற்கும் தோரணம் போல இருந்தது 

இந்த கொக்கு= மாலை சங்கத் தமிழ் உவமைகளிலும் உளது  .

ग्रामेष्वात्मविसृष्टेषु यूपचिह्नेषु यज्वनाम्।

अमोघाः प्रतिगृह्णन्तावर्घ्यानुपदमाशिषः॥ १-४४

grāmeṣvātmavisṛṣṭeṣu yūpacihneṣu yajvanām |

amoghāḥ pratigṛhṇantāvarghyānupadamāśiṣaḥ || 1-44 .

போகும் வழியில்  யாகப்பசுக்கள் கட்டப்பட்ட யூப ஸ்தம்பங்களையும் கண்டு ஆங்காங்கு நிறுத்தி ஆசி பெற்றனர். வேதத்தில் சிறந்தோர் புனித நீர் தெளித்து ஆசிகூறினர் ; கிராமத்தின் எல்லையில் நின்ற அவை மன்னர் தானமாக அளித்தவை

யூப நெடுந்தூண் சங்க இலக்கியத்திலும் உள்ளது  .

वनान्तरादुपावृत्तैः समित्कुशफलाहरैः।

पूर्यमाणमदृश्याग्निप्रत्युद्यात्यैस्तपस्विभिः॥ १-४९

vanāntarādupāvṛttaiḥ samitkuśaphalāharaiḥ |

pūryamāṇamadṛśyāgnipratyudyātyaistapasvibhiḥ || 1-49

காட்டுக்குள்ளிருந்து ஆஸ்ரமத்துக்கு ரிஷிகள் யாகத்துக்குத் தேவையான மரக்குச்சிகள், பழங்கள், குச புற்கள் ஆகியவற்றைக் கொண்டுவந்த போது வீடு திரும்பும் தந்தையைக் குழந்தைகள் வரவேற்பது போல யாகத் தீ அவர்களை வரவேற்றது.

आकीर्णमृषिपत्नीनामुटजद्वाररोधिभिः।

अपत्यैरिव नीवारभागधेयोचितैर्मृगैः॥ १-५०

ākīrṇamṛṣipatnīnāmuṭajadvārarodhibhiḥ |

apatyairiva nīvārabhāgadheyocitairmṛgaiḥ || 1-50 .

ரிஷி முனிவர்களின் கைகளிலிருந்து உணவினைப் பெறும் வரை மான்கள் வழியை அடைத்து நின்றன ; தாயிடம் உணவினைப் பெற குழந்தைகள் மொய்ப்பது போல இருந்தது அந்தக்காட்சி.

सेकान्ते मुनिकन्याभिस्तत्क्षणोज्झितवृक्षकम्।

विश्वासाय विहङ्गानामालवालाम्बुपायिनम्॥ १-५१

sekānte munikanyābhistatkṣaṇojjhitavṛkṣakam |

viśvāasāya vihaṅgānāmālavālāmbupāyinam || 1-51 .

ஆஸ்ரமத்திலுள்ள இளம்பெண்கள் செடிகளை சுற்றியுள்ள பாத்திகளில் தண்ணீரை விட்டுவிட்டு உடனே அவரமாகப் பின்வாங்கினர். காத்திருக்கும்  பறவைகள்  அச்சமின்றி தண்ணீர் குடிப்பதற்காக இவ்வாறு செய்தனர் . அந்த  அளவுக்கு உயிரினங்கள் மீது அன்பு செலுத்தினர்.

இவை ரகு வம்ச ஸ்லோகங்கள். மேலும் காண்போம்.

To be continued………………….

Tags- அழகான கானகம், ஆஸ்ரமம், காளிதாசரின், வர்ணனை  மான்கள், பறவைகள் அன்பு,  கொக்கு,  மாலை முனிவர், ரிஷிகள், இளம் பெண்கள், சங்க இலக்கியம்  ,

WHY DO YOU ARREST PEOPLE FOR FACEBOOK MESSAGES? LEBDEV IN BRITISH PARLIAMENT (Post.14,793)

Written by London Swaminathan

Post No. 14,793

Date uploaded in London –  24 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

From London Standard Newspaper

LORD LEBDEV delivered a speech in the House of Lords about freedom of speech. London Standard published his speech ; here some points he made:

In November last year a journalist, Allison Pearson, had the police at her door because of a single tweet. In January this year two parents were arrested – by six officers—and detained in a cell for 11 hours for private messages in WhatsApp group. In May this year the heroic human rights campaigner Peter Tatchell was arrested for displaying a placard criticising the terrorist organisation Hamas. Last month the Turkish human rights campaigner Hamit Coscum was found guilty of burning a copy of the Koran.

And this month there have been reports of police investigation into what one act at Glastonbury said on stage and also calls from elected representatives for the arrest of columnist Red Liddle for what he said about that music festival.  These are all examples of the criminal justice system – the system which is there to defend our freedoms—being deployed to investigate, intimidate and punish those who take dissident positions. You do not need to admire any of the people I have mentioned above to find this deeply concerning. You can think them rude, mistaken or offensive. But the right to free speech means nothing if it doesn’t mean the right to offend. I dislike the symbolism and reality of book burning but to make a man a criminal – to find him guilty of  crime of racially  and religiously aggravated hatred—for an expression of an opinion is to bring back blasphemy laws by the back door.

…..And on average 30 people are arrested every day. In 2014 under the coalition government, something called non hate crime incidents were introduced. These are words uttered which are not in themselves –yet—criminal, but which the police should officially record nevertheless and hold against people.

Since then, more than 133,000 such incidents have been recorded – more than 12,000 each year. Some of those who had their names recorded in police files are children- whose words have been taken down when they were below the age of criminal responsibility and maybe held against hem for the rest of their lives. The innocence of youth has been replaced with the presumption of guilt.

WASTED POLICE TIME

The think tank Policy Exchange has estimated that investigating these incidents has taken up 666,000 hours of police time. Every hour devoted to policing speech is an hour not spent investigating phone theft, shoplifting, burglary or assault.  Juxtaposed with 90 percent of crimes in 2023 and 89 percent of violent or sexual offences in the year to June 2024 going unresolved. It is hard to conceive of a worse waste of police time.

****

Last words

I would like to be given reason to hope that Labour– the party of George Orwell, Michael Foot and Tessa Jowel—still understands how precious free expression is and how important is that we defend it.

(The Title for his Speech given in London Standard “ I grew up in Soviet Russia. I know only too well the value of free speech.”)

–subham—

Tags- Free Speech, Freedom of expression, Lebdev, House of Lords, London Standard article, social media

 அடிக்கு ஒரு குழந்தை அருளிய குழந்தையானந்த ஸ்வாமிகள்! (Post No.14,792)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,792

Date uploaded in London – 24 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

20-5-25 கல்கிஆன்இதழில் வெளியான கட்டுரை!

அடிக்கு ஒரு குழந்தை அருளிய குழந்தையானந்த ஸ்வாமிகள்! 

ச. நாகராஜன்

மதுரை காளவாசல் சந்திப்பில் உள்ள அதிஷ்டானம்

எல்லையற்ற மஹிமை கொண்ட குழந்தையானந்த ஸ்வாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் நூற்றுக் கணக்கானவை. 

அவர் மதுரையில் நான்காவது சமாதி அடைந்தார்.

வெவ்வேறு உருவத்தில் அவரை முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாக பாரத நாடு முழுவதிலுமுள்ள பக்தர்கள் தரிசித்து வந்தனர். முதல் சமாதியை காசியிலும் இரண்டாவது சமாதியை நேபாளத்திலும் மூன்றாவது சமாதியை தென்காசியிலும் நான்காவது சமாதியை மதுரையிலும் அவர் அடைந்தார். 

புதுக்கோட்டையிலும் திருக்கோகர்ணத்திலும் அவர் வாழ்ந்த காலத்தில் நிகழ்த்திய அற்புதங்கள் இதோ: 

ஒரு அடிக்கு ஒரு குழந்தை

புதுக்கோட்டை கீழ மூன்றாம் வீதியில் இருந்த சுப்பையர் வீட்டில் ஸ்வாமிகள் ஒரு வருட காலம் வாழ்ந்து வந்தார். சுப்பையருக்கு இரு மனைவிகள். ஆனால் இருவருக்கும் குழந்தை இல்லை. இருவரும் ஸ்வாமிகள் மீது பரம பக்தி கொண்டவர்கள். வெகுவாக சேவை புரிந்து வந்தவர்கள்.

ஒரு நாள் ஸ்வாமிகள் அவர்கள் இருவரையும் அழைத்து,

“ஏண்டி, உங்களுக்குக் குழந்தைகள் வேண்டுமா?” என்று கேட்டார். அவர்கள் தங்கள் பாக்கியத்தை எண்ணி சந்தோஷப்படும்போதே, “குனியுங்கோடி” என்றார் ஸ்வாமிகள்., இருவரும் குனிந்தனர். இருவர் முதுகிலும் ஓங்கி ஓங்கி அடித்தார் ஸ்வாமிகள். மூத்தாளுக்கு நான்கு அடிகள் விழுந்தன. அவர் நான்கு குழந்தைகளைப் பெற்றார்.

இளையாளுக்கு மூன்று அடிகள் விழுந்தன. அவர் மூன்று குழந்தைகளைப் பெற்றார்.ஒரு அடிக்கு ஒரு குழந்தை என்பது என்ன தெய்வீகக் கணக்கோ?! 

ஜோதிடர் ஆன வேலாயுதம்!

புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள திருக்கோகர்ணத்தில் குருக்கள் வீட்டில் சில காலம் ஸ்வாமிகள் தங்கி இருந்தார். சாலியமங்கலம் சோமசுந்திரம் பிள்ளை ஸ்வாமிகளுக்கு கார் ஓட்டுவது வழக்கம். இவர் பி.வேலாயுதம் பிள்ளை என்பவரின் மாமா. தனது மாமா வீட்டிற்கு வந்த வேலாயுதம் அங்கு ஸ்வாமிகள் ஆற்றும் அற்புதங்களைக் கண்டு பிரமித்தார். சற்று பயப்படவும் செய்தார். ஒரு நாள் வீட்டில் வாசல் திண்ணையில் தனது மாமாவிடம் நான் ஊருக்குப் போகிறேன் என்று கூறினார் வேலாயுதம். அது உள்ளே இருந்த ஸ்வாமிகளால் நிச்சயமாகக் கேட்க முடியாது.

ஆனால் திடீரென்று உள்ளேயிருந்து,”ஆத்துரானே, இங்கே வா” என்றார் ஸ்வாமிகள்.

நாகப்பட்டினம் தாலுகா ஆத்தூரில் 1926ம் ஆண்டு அக்ஷய வருடத்தில் பிறந்து கல்லூரிப் படிப்பை முடிக்க முடியாமல் திணறி கடனில் மூழ்கி வேலையும் இல்லாமல் தவித்த வேலாயுதம் ஸ்வாமிகளின் குரலைக் கேட்டு உள்ளே ஓடினார்.

ஸ்வாமிகள் அவரைப் பார்த்து, “ஜோதிடம் படி. அது உனக்கு நன்றாக வரும். பெரிய மனிதர்களின் ஆதரவு உனக்குக் கிடைக்கும். ஆனால் வேலை பத்து வருடங்கள் கழித்துத் தான் கிடைக்கும்” என்று கூறி ஆசீர்வதித்து விபூதியைக் கொடுத்தார்.

ஒரே சந்தோஷம் வேலாயுதத்திற்கு,  ,மணிகண்ட கேரளம் என்ற ஜோதிடப் புத்தகம் தற்செயலாக அவருக்குக் கிடைத்தது. ஜோதிடம் படிக்க ஆரம்பித்தார். அவர் கூறிய ஜோதிடம் வாக்குக்கு வாக்கு பலிக்கவே அவர் பிரபல ஜோதிடர் ஆனார். ஸ்வாமிகள் கூறியபடியே பத்து வருடங்கள் கழித்து நன்னிலம் தாலுகா மூலங்குடி கிராம முன்சீப் வேலையும் அவருக்குக் கிடைத்தது. 

ஸ்வாமிகள் சமாதி அடைந்த செய்தியை அவருக்குத் தெரிவிக்குமாறு ராமலிங்க ஐயர் கனவில் ஸ்வாமிகள் தோன்றிக் கூறினார். அதிலிருந்து அவர் நடத்தி வந்த குருபூஜைக்கு வருடம் தோறும் தவறாமல் சென்று வந்தார் வேலாயுதம்.

“ஸ்வாமிகளை நினைத்து எது செய்தாலும் எனக்கு அனுகூலமாகி வருகிறது” என்று சொல்லிக் கொண்டே இருப்பார் பிரபல ஜோதிடர் மூலங்குடி வேலாயுதம் பிள்ளை. ***ஸ்வாமிகளைப் பற்றிய முந்தைய கட்டுரை 25-4-25 அன்று வெளியாகியுள்ளது. அதையும் படித்து மகிழலாம்

Tags- குழந்தையானந்த ஸ்வாமிகள்

WALKING KUMBHAMELA! MILLIONS OF HINDUS MARCH TO HOLY GANGA RIVER.

THIS IS LIKE KUMBHAMELA ON THE MOVE; IT BEATS THE KERALA SABARIMALA AYYAPPA YATRA, PANDHARPUR HOLY YATRA IN MAHARASHTRA AND GIRI PRADAKSHINA IN TAMIL NADU AND ADHRA PRADESH 

How Kanwar Yatra is helping with the consolidation of Hindu Society

July 22, 2025 HINDU POST

कांवड़ यात्राः सामाजिकआर्थिकआध्यात्मिक और वैज्ञानिक दृष्टिकोण

July 23, 2025

FROM THE HINDU POST

The Kanwar Yatra is a significant annual pilgrimage in India, where millions of devotees, known as Kanwariyas, travel—often barefoot—to collect holy water from the Ganges River and offer it to Lord Shiva. The Kanwar Yatra is a pilgrimage undertaken by devotees of Lord Shiva, known as Kanwariyas, during the Hindu month of Shravan (July–August).

The Yatra is inspired by the legend of Samudra Manthan (churning of the ocean), where Lord Shiva drank the poison (halahala) to save the universe. To cool him down, devotees began offering Ganga water to Shiva lingams.

Another legend involves Ravana, the demon king of Lanka, who is said to have carried Ganga water in a kanwar to offer to Lord Shiva in Kailash.

Pilgrims carry kanwars—decorated slings made of bamboo—on their shoulders, with pots filled with holy water from the Ganges River, which they offer to Shiva temples, especially the Shiva lingam at places like Haridwar, Gaumukh, and Sultanganj.

This religious and social event has grown in scale and visibility over the years and plays a notable role in the consolidation of Hindu society. Here’s a detailed look at how it contributes to that process:

Cultural and Religious Consolidation

1.     Shared Religious Identity – The Kanwar Yatra reinforces a collective Hindu identity by bringing together people from diverse regions, castes, and economic backgrounds under a common spiritual cause.

Example:
A Kanwariya from Uttar Pradesh walking alongside one from Bihar or Delhi creates a sense of unity that transcends regional and linguistic differences.

2.     Revival of Rituals and Traditions – The Yatra revives and sustains ancient Vedic traditions, especially those associated with Shaivism (worship of Lord Shiva), reinforcing cultural continuity.

Social Cohesion and Community Building

1.     Volunteerism and Seva (Service) – Local communities often set up free food stalls (langars), medical camps, and resting places for Kanwariyas. This fosters a spirit of service and mutual support.

Example:
In cities like Haridwar and Meerut, thousands of volunteers—many of them youth—participate in organizing logistics, which strengthens community bonds.

2.     Intergenerational Participation – Families often participate together, passing down values and traditions to younger generations, which helps preserve cultural heritage.

Political and Organizational Mobilization

1.     Grassroots Mobilization – The Yatra is often supported by local religious and cultural organizations, which use it as a platform to engage with the public and promote Hindu values.

Example:
Organizations like the VHP (Vishwa Hindu Parishad) and local temple committees often provide logistical support, which helps them build networks and influence.

2.     Symbol of Hindu Assertion
In a pluralistic society, the Kanwar Yatra has become a visible assertion of Hindu identity in public spaces, especially in urban areas.

Digital and Media Amplification

1.     Social Media and Cultural Narratives – The Yatra is widely shared on platforms like Instagram, YouTube, and Facebook, where videos of Kanwariyas dancing, chanting, and performing rituals go viral. This digital presence helps spread awareness and pride in Hindu traditions.

Example:
Hashtags like #KanwarYatra and #HarHarMahadev trend during the season, creating a virtual community of devotees.

Challenges and Criticism
While the Yatra plays a unifying role, it also faces criticism for traffic disruptions, noise, and occasional clashes. However, many state governments have taken steps to manage these issues through better planning and infrastructure. On the other hand, most of the criticism is spread by highly biased and anti-Hindu brigade, who are always at horns with the Hindus.

The Kanwar Yatra is more than a religious journey—it’s a cultural phenomenon that strengthens Hindu social fabric through shared faith, community service, and public expression of devotion. As it continues to evolve, it remains a powerful example of how religious traditions can foster unity and identity in a diverse society.

—SUBHAM—-

TAGS- KANWAR YATRA, HINDU POST, BENEFITS, HINDU CONSOLIDATION, PICTURES

பிரிட்டிஷ் மக்களுக்கு மூளை கெட்டுப் போச்சு! டாக்டர்கள் தகவல்!! (Post No.14,791)

Written by London Swaminathan

Post No. 14,791

Date uploaded in London –  23 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மூன்று சுவையான செய்திகளை பிரிட்டிஷ் இலவச பத்திரிகை மெட்ரோ இன்று 23-7-2025 வெளியிட்டுள்ளது

முதல் செய்தி — பிரிட்டிஷ் மக்களுக்கு மூளை கெட்டுப் போச்சு  ; ஆராய்ச்சியில் கண்ட தகவல்

இரண்டாவது செய்தி — நெப்போலியன் சட்டை பட்டன் ஏலம்

மூன்றாவது செய்தி — சின்னாப்பையன்களின் துப்பாக்கி போட்டி

சீன வைரஸ்சின் அதிகாரபூர்வ பெயர் கோவிட்.19 இது மார்ச்2020  முதல் மார்ச் 2022  வரை உலகையே ஆட்டிப்படைத்து; அச்சறுத்தியது இதில் விந்தை என்னவென்றால் நோய் வந்தவர்களுக்கும் நோயே வராதவர்களுக்கும் ,  இது மூளைப்   பாதிப்பை உண்டாக்கியுள்ளது. ஆயிரம் பேரின் மூளையை படம்பிடித்துப் பார்த்ததில் இந்த உண்மை தெரிந்ததாக நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக மருத்துவப்பள்ளி டாக்டர் தெரிவிக்கிரறார். அதாவது பிரிட்டிஷ் மக்களின் மூளையின் வயது ஐந்தரை மாதம் கூடிவிட்டது; சாதாரண வளர்ச்சியை விட கூடுதல் வேகத்தில் வயதாகிப் போய்விட்டது அதாவது கிழவன் ஆகிவிட்டது. அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வயதானவர்களும், ஆண்களும் ஏழைகளும்தான் .

ஒரு ஆறுதல்தரும் செய்தி! இதை மாற்றிவிட முடியும் என்று நம்புகிறார்கள் ; நாம் வாழும் சூழ்நிலையை ஆரோக்கியமானதாக மாற்றினால் ஐந்தரை மாத  கிழத்தனம் அகன்றுவிடுமாம் . ஆனால் இதை இன்னும் ஆராய்ச்சியில் நிரூபிக்கவில்லை.

பிரிட்டனில் இரண்டரைக்கோடி மக்களை இந்த சீன வைரஸ் பாதித்தது; இரண்டரை லட்சம் மக்களைக் கொன்றது.

****

நெப்போலியன் பட்டன்

Napoleon Bonaparte, later known as Napoleon I, was born on August 15, 1769, and died on May 5, 1821.

நானும் நீங்களும் தங்க பட்டன் போட்டிருந்தாலும்கூட அதை நகைக்கடையில் கொண்டு கொடுத்தால் இன்றைய தங்கத்தின் விலையை விடக் குறைத்துப் பணம் கொடுப்பார்கள் ; அதிலுள்ள அழுக்கை எடுக்கக் காசு, கூலி,  சேதாரம் என்றெல்லாம் சொல்லி பணத்தைக் கழித்துக் கொடுப்பார்கள் ; இதையே பெரிய ஆட்கள் அணிந்திருந்தால் தங்கத்தின் விலையைப்போல நூறு மடங்கு உயர்த்திப் பணம் கொடுப்பார்கள். நெப்போலியன் சட்டையில் அணிந்த கிளிப் ஏலத்திற்கு வந்துள்ளது £ 5000 / ரூபாய் ஐந்து லட்சத்துக்கு  மேல் எதிர்பார்க்கிறார்கள். எப்போதுமே எஸ்டிமேட்டுக்கு மேலாகவே பணம் கிடைக்கும். இது தேனீ வடிவத்தில் உள்ளது.

வாட்டர்லூ  சண்டையில் தோற்றுப்போன பிரான்ஸ் நாட்டின் மாவீரன்  நெப்போலியனை வெள்ளைக்காரர்கள், அட்லான்டிக் பெருங்கடலிலுள்ள செயின்ட் ஹெலனா தீவில் சிறை வைத்து ஆர்செனிக் விஷம் கலந்த உணவைக் கொடுத்துக் கொன்றார்கள்; அப்போது காவலுக்கு இருந்த ஒரு காவலாளி/ சிப்பாய் அவரது பட்டனை எடுத்துக்கொண்டார். இப்போது அவரது சந்ததியில் வந்த ஒருவர் அதை ஆகஸ்ட் 13ம் தேதி ஏலத்துக்கு விடுகிறார் .

நான் 1990- ம் ஆண்டில் வெர்சாய் பாலசுக்குச் சென்றபோது நெப்போலியன் மேஜை, நாற்காலிகள், டப்பா, கரண்டி பானைகளைப் பார்த்தேன்; மதுரையில் வசித்த காலத்தில் விருந்தினர்களை காந்தி மியூசியத்துக்கு அழைத்துச் சென்று காந்தியின் காலணிகள் (செருப்பு) முதலியவற்றைக் காட்டி மகிழ்வேன். வைதீஸ்வரன்கோவிலுக்குச் செல்லுகையில் காஞ்சி பரமாச்சாரியார் பாதுகைகைளை சங்கர மட்டத்தில் கண்டு வணங்குவேன். பெரியோர்களும் புகழ் பெற்றோரும் அணிந்த எல்லாவற்றுக்கும் மதிப்பு; நாம் ஏலம் விடுவதில்லை; வெளிநாட்டில் எல்லாவற்றையும் ஏலம் விட்டு சம்பாதிப்பது பெரிய பிசினஸ். அதை பார்க்க மியூசியம் வைத்து இருபது பவுண்ட் நுழைவுக் கட்டணமும் வைத்துவிடுவார்கள்!! 

***

கிட்டிப்புல், கவண்கல், கவட்டைப் போட்டி 

சின்ன வயசில் பம்பரம் ஆடுதல் , பட்டம் விடுதல் , பாண்டி, கிளியோ கிளி, கண்ணாமூச்சி, கவட்டை, கவாங் கல் , கோலிக் குண்டு, படம் ஜெயிப்பு, பல்லாங்குழி, வில்-அம்பு, கிட்டிப்புல் (Village Cricket) முதலிய பல விளையாட்டுகளை என்னைப்போல நீங்களும் விளையாடி இருப்பீர்கள்; இப்போது எனது பேரக் குழந்தைகளுக்கு இதைப் பற்றி நான் சொன்னாலும் அதிகம் புரிவதில்லை!! ஆனால் வெளிநாட்டில்  பழைய விளையாட்டுகளுக்குப் போட்டியும் நடத்தி, அவற்றைப் பாதுகாத்து, பெருமைப்ப டுகிறார்கள்; அதில் ஒன்று மூங்கில் குழல் செய்து அதில் பட்டாணி அல்லது சிறு கல்லை வைத்துப் பின்னால் கயிற்றின் மூலம் எரிவதாகும் ; இந்த கிராமப்புற மரக்கட்டைத் துப்பாக்கி குண்டுப் போட்டியில் வென்ற சிறுவனின் படம் லண்டன் பத்திரிகைகளில் வந்து இருக்கிறது .

வருடாந்திர பட்டாணி சுடும் / shoot  செய்யும் போட்டி கேம்பிரிட்ஜ் அருகிலுள்ள விட்க்ஷம் என்னும் இடத்தில் நடந்தது. சிறுவர் பிரிவில் ஒன்பது வயது ஸ்டெல்லன் ஸ்மித் வெற்றி பெற்றான்; 52 ஆண்டுகளாக நடக்கும் இப்போட்டிக்கு அவன் அம்மா மட்டும் வந்தாள்; அப்பா வேறு ஒரு போட்டிக்குப் போய்விட்டார் ; பையன் சுட்டது பட்டாணி வடிவ கல்; அப்பாவோ அவர் வளர்த்த நிஜ பட்டாணிச் செடியைக் காட்ட தோட்டக்கலைக் கண்காட்சிக்குச் சென்றுவிட்டார் !

உண்மையான தமிழர்கள் இதைப்படித்தால் ஆண்டுதோறும் கிராமீய விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசு கொடுக்க வேண்டும் ;நான் என்னுடைய பாட்டியுடன் விளையாடிய பல்லாங்குழி ஆட்ட வகைகள் எனக்கே மறந்து விட்டன

ஜாடி சொன்னா சைன் தானா ? என்று சொல்லி பமபரத்தை குத்தி  விளையாடுவோம் அதன் பொருள் ஆண்டவனுக்கே வெளிச்க்கம்; நான் வளர்ந்தது மதுரை வடக்கு மாசிவீதி யாதவர் தெருவில்!!

–subham—

Tags- நெப்போலியன், பட்டன், கிட்டிப்புல், கவண்கல், கவட்டைப் போட்டி,  பிரிட்டிஷ் மக்கள்,  மூளை கெட்டுப் போச்சு,  டாக்டர்கள் தகவல்

Freedom of Speech is in Danger in Britain; 30 People Arrested Everyday (Post No.14,790)

Written by London Swaminathan

Post No. 14,790

Date uploaded in London –  23 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

I thought Tamil Nadu Government run by Anti Hindu DMK party is bad because it arrests people who support Hinduism every day. I read  two excellent articles published in the London Standard dated 17 July 2025.  British Government run by Labour party is worse than the DMK government in India. People can’t speak freely about the Immigration and Refugees in Britain.

****

Here are some bullet points from the first lengthy article:

When it comes to the question of free speech, the Greeks said it best. Parrhesia or uninhibited speech means to speak freely and frankly. Euripides, the dramatist depicts Athens as a place where free males can speak freely on public affairs. in his play The  Phoenician Women, he says,” This is slavery; not to speak one’s thought.”

***

Show me the Book, and then Publish- British King

Henry VIII imposed restrictions on printing in 1538, whereby books had to be approved in advance of publication by the Privy Council to suppress dissent against his own ideological project, the English Reformation.

***

Give me liberty to Speak- John Milton

John Milton’s Areopagitica, published in1644, argued against that control and some of his arguments haven’t been improved on since.

His defence of authors should give us pause: As good almost kill a man as kill a good book. Who kills a man kills a reasonable creature, God’s image; but he who destroys a good book, kills reason itself.”

“Give me liberty to know, to utter, and to argue freely according to conscience, above all liberties.”

These battles seemed to have been won when the Human Rights Act of 1998 incorporated article 10 of the European convention on Human Rights into U K Law, guaranteeing freedom of expression.

But this article has not in fact been useful as we thought. During times of war, governments naturally censor the press and the press meets it halfway. During the Covid pandemic, the government of the day went out of its way to suppress dissident views on ways of dealing with it.

****

£20,000 Fine for standing with a placard!

There is, in fact, one area, where free speech is very much not allowable, that is on abortion and within 150 metres of an abortion clinic. There are punitive legal restrictions on anyone even standing silently within this area. Recently one woman was arrested and fined £20,000 for holding a placard saying, “Here to talk if you want” near a clinic. How is it intimidatory or threatening? And if it is simply a silent protest, why should it be banned at all?

Earlier this year we found that the police are making more than 30 arrests a day over offensive posts on social media and other forums, which are in effect, the modern equivalent of a pub discussion.

(before this para, the author discussed, Ban on Salman Rushdie’s book The Satanic Verses, Hate Speech, Islamophobia etc.)

In face of all this, you know what we need? A return to the enlightened and liberal values of the fifth century before Christ. Bring back the Athenian concept of parrhesia or uninhibited speech. Right now, we are running away from it.

Melanie McDonagh, The London Standard, July 17, 2025.

****

MY COMMENTS

Melanie McDonagh, perhaps, don’t know what happened in ancient India. Just because a washerman doubted Sita Devi’s integrity, Rama sent her to the forest. So much freedom of speech was there in Rama Rajya. And so much value given to public opinion. Caesar’s wife must be above suspicion, was followed.

Kannagi, wife of wrongly accused and executed husband Kovalan, entered Pandyan King’s assembly and presented her case. No one prevented her. Her forceful challenge to the Tamil king shows that even a woman can speak freely. In ancient Greece, women had no such right. Stories of Satyavan Savitri, and the boy Nachiketas show that even God can be challenged.

Earlier a cow whose calf was run over by the king’s son during  rash driving, came to the assembly and rang the distress calling bell. After knowing the incident, the Tamil king ran over his son with his chariot to deliver justice to the cow. The king Manu Neethi Chozan’s statue in Madras High Court now. Even animals had the right to “speak” 2000 years ago in India. This Distress Calling Bell was installed at the gates of palaces in India according to Mahabharat.

There are many more such anecdotes in Tamil Thiru Vilayadal Puranam and other Hindu scriptures.  People had the right to talk under the Banyan Tree in the village in ancient India. Probably Greeks followed Hindus.

–Subham—

Tags: Freedom of speech, Britain, India, John Milton, Henry VIII, abortion, everyday arrests, Manu Neethi Choza, Kannagi

சிருங்கேரி பீடாதிபதி ஶ்ரீ சந்த்ரசேகர பாரதீ மஹாஸ்வாமிகள் – Part 2 (Post.14,789)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,789

Date uploaded in London – 23 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

20-7-25 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

ஶ்ரீ சந்த்ரசேகர பாரதீ மஹாஸ்வாமிகள் ! – 2

ச. நாகராஜன்

இதே சமகாலத்தில் காஞ்சி பீடாதிபதியாக ஶ்ரீ சந்த்ர சேகர சரஸ்வதி ஸ்வாமிகள் இருந்து அனைவரையும் அனுக்ரஹித்து வந்தார்.

இரு பீடாதிபதிகளும் ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்கவில்லை என்றாலும் முக்கியமான விஷயங்களில் இருவரும் பரஸ்பரம் கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருந்தனர்.

ஒரு சமயம் இருவரும் அருகருகே இருந்த ஊர்களில் இருந்த போது தனது பல்லக்குத் தூக்கிகளை காஞ்சி பீடாதிபதியின் பல்லக்கைத் தூக்க அனுப்பினார் சிருங்கேரி பீடாதிபதி.

காலம் வேகமாக நகர, 1931ம் ஆண்டு மே மாதம் 22ம் நாளன்று தனது வாரிசாக சீனிவாச சாஸ்திரி என்ற சீடருக்கு அபிநவ வித்யாதீர்த்தர் என்ற பட்டப் பெயருடன் அவரை தனக்கு அடுத்த மடாதிபதியாக அவர் நியமித்தார்.

1945ம் ஆண்டு முதல் அவர் சகல விஷயங்களிலிருந்தும் ஒதுங்கி உள்முக நிலையில் இருக்கலானார்.

இவர் உள்முக நிலையில் அடிக்கடி இருந்து சமாதியை அனுபவித்ததால் மட நிர்வாகம் சரிவர நடைபெறவில்லை என்ற புகார் எழும்ப அதை விசாரிக்க அரசு சார்பில் நேரடியாக அதைக் கவனித்து விசாரிக்க வந்தார் ஒரு அதிகாரி. அவர் சில நாட்கள் தங்கித் திரும்பிச் செல்லும் போது பஹிர்முக நிலையில் அனைவருக்கும் தீர்த்தம் கொடுத்து ஆசீர்வதித்துக் கொண்டிருந்தார் ஸ்வாமிகள்.

அவரிடம் தீர்த்தம் பெற வந்தார் அரசு அதிகாரி.


“என்ன எல்லாம் நல்லபடி முடிந்தததா? அறிக்கை ரெடியா?” என்று அவரிடம் ஸ்வாமிகள் கேட்க அவர் அசந்து பயந்து போனார். ஒரு சில சொற்களில் தனது நிலையை அவர் அதிகாரியிடம் கூற அவர் அரசாங்கத்திற்கு அனுப்பிய அறிக்கையில் மகான்களின் போக்கு யாரும் அறிய முடியாதது என்ற தொனியில் அறிக்கையை அனுப்பி வைத்தார்.

மஹான்களின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் ஒரு ஸ்லோகம் மஹாபாரதம் சாந்தி பர்வத்தில் உள்ளது. அது இது தான்:

சகுனானீனாமிவாகாசே ஜலே வாரிசரஸ்ய ச |

பதம் யதா ந த்ருச்யேத ததா  ஞானவதாம் கதி: ||

இதன் பொருள் : பறவைகள் வானத்தில் பறந்து போகும் மார்க்கம் எவ்விதம் கண்ணிற்குத் தெரிவதில்லையோ, ஜலத்தில் ஜல ஜந்துக்கள் சஞ்சரிக்கும் மார்க்கம் எவ்விதம் நாம் காண்பதில்லையோ அதேபோலவே ஞானிகளின் செய்கைகளையும் நம்மால் அறிவது அசாத்தியமானது.

இந்த ஸ்லோகம் கூறுவது போலவே அவர் வாழ்வு அமைந்திருந்தது.

அவரது விதேக முக்தியும் நம்மால் புரிந்து கொள்ள முடியாதபடியே அமைந்தது!

1954ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் நாளன்று அதிகாலையில் எழுந்த அவர் நேராக துங்கபத்ரா நதிக்குச் சென்றார்.  அவருடன் ஒரு பணியாளர் பின்னே சென்றார். ஆற்றில் ஆழம் அதிகம் என்பதால் இறங்க வேண்டாம் என்று பணியாளர் கூறினாலும் அதை மீறி ஆற்றில் இறங்கிய அவரை வெள்ளம் அடித்துச் சென்றது.. அவரைக் காப்பாற்றச் சென்ற அவரது பணியாளரின் குரல் கேட்டு வந்தவர்கள் இருவரையும் கரைக்குக் கொண்டு வந்தனர். பணியாளர் உயிருடன் மீட்கப்பட்டார். பிராணாயாமம் செய்த நிலையில் அமர்ந்த நிலையில் மஹாஸ்வாமிகளின் உடல் மீட்கப்பட்டது. அவரது குருவின் பக்கத்திலேயே அவரது மஹாசமாதியும் எழுப்பப்படது. அவர் பிறந்த தினம், உபநயன தினம், சந்யாசம் ஏற்ற தினம் விதேக முக்தி அடைந்த தினம் ஆகிய அனைத்துமே ஞாயிற்றுக்கிழமைகள் என்பது ஒரு குறிப்பிடத்தகுந்த அதிசய ஒற்றுமையாகும்.

அவரே கூறியபடி அவரை நினைக்கும் போது அவர் நம்மிடையே இருந்து அருள்பாலிக்கிறார் என்பதே பக்தர்களின் அனுபவமாகும்.

ஶ்ரீ மஹாஸ்வாமிகளைப் பற்றி ஒரு சில துளிகளையே இப்போது குறிப்பிட்ட நேரத்தில் கூற முடிந்தது. அவரைப் பற்றி விரிவாக அறிய ஏராளமான நூல்கள் உள்ளன.

அவரது திவ்ய மஹிமைகளை எடுத்துக் காட்டும் வண்ணம் பல பெரியோர்கள் தங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் கூறும் நூலாக அமைகிறது ஶ்ரீ குருகிருபா விலாஸம் என்ற மூன்று பாகம் கொண்ட நூல் தொகுப்பு.

அற்புதமான இந்த நூலை ஶ்ரீ சந்திர சேகர பாரதீ ப்ரஹ்ம வித்யா டிரஸ்ட் வெளியிட்டுள்ளது. நூலை சிருங்கேரி மடத்திலிருந்து பெறலாம்.

ஶ்ரீ மஹாஸ்வாமிகளின் அடி போற்றி வணங்குவோம்!   என்று கூறி விடைபெறுகிறேன்.

நன்றி வணக்கம். 

–Subham— 

Tags- ஶ்ரீ சந்திர சேகர பாரதீ, சிருங்கேரி, Part 2

ENJOY THE BEST CARTOONS OF INDIA UPTO 22–7–2025

 DECCAN CHRONICLE NEWSPAPER PUBLISH THE BEST CARTOONS IN INDIA.

HERE ARE SOME CARTOONS PUBLISHED UNTIL 22 JULY 2025.

POSTED BY LONDON SWAMINATHAN

—SUBHAM—-

TAGS- CARTOONS, UP TO 22–25, DECCAN CHRONICLE.

ENJOY MANY RADHA KRISHNAS OF LONDON RATH YATRA

2025 RADHA KRISHNA.

2024 RADHA KRISHNA

2015 RADHA KRISHNA

2017 RADHA kRISHNA

FLUTE KRISHNA

–SUBHAM—

TAGS- RADHA KRISHNA, RATH YATRA , LONDON, HARE KRISHNA, FLUTE KRISHNA.

London Rath Yatra 2025 (Post No.14,788)

Written by London Swaminathan

Post No. 14,788

Date uploaded in London –  22 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

On Sunday the 20th July 2025, thousands of people marched along with the three Rathas/Chariots of Gods from Hyde Park Corner to Trafalgar Square Hare Krishna Movement have been doing it for over four decades. Since the Ratha route covers the heart of London thousands of tourists also watched the march of the raths. At the Trafalgar Square all the devotees and the tourists had te lunch. Three or four different bands of singers were playing the music and the devotees danced,

Every year we see at least one set of Radha and Krishna with a  flute in hand . All the people rushed towards the Radha Krishna pair to take pictures and selfies. The crowd is increasing year by year. Devotees fell on road to do prostration before the Rathas (This year I could stay with the Rathas only for a very short duration and the Rathas also had a delayed start.)

Please see the pictures.

–Subham—

Tags. London, Rath Yatra, Hare Krishna, Pictures