Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Vedic poets give various names to the sun according to the task it accomplished; and each name reproduced the salient feature of the task.
The sun when rising was Mitra= friend.
As it advances in its journey, giving new lie it i Savitar= bringing forth or leading the day; the vivifying sun;
When it collects the clouds and sends rain on the earth it is Indra; indu= drops.
The sun is Vishnu when it makes “three strides” in the vault of heaven, its position in the morning, at noon, and in the evening;
It is Varuna – the all-embracing, when it envelops in clouds as in a shroud, and the sky darkens.
Some phenomena descended on man from above, such as thunder bolts, winds, storms; the storms that came unexpectedly dealing destruction as they passed received the name of Maruts—from the root mar- and with the meaning of those who strike or beat to death; (My comments- Murder is derived from this Sanskrit root)
The thunder was called Rudra= he who roars.
The wind was Vayu= he who blows.
All these names indicated that which could be seen and that which could be heard; the invisible things remained unnamed.
This is Moncalm’s interpretation in his book THE ORIGIN OF THOUGHT AND SPEECH, 1905
He finishes his book with the following lines,
“We are men- but the type of the genus homo been realised ? is it impossible?
It has been undoubtedly proved that the man is free in certain directions, and not in others; happily, he is not free not to be a man.”
He begins his book with the following lines,
“When opening my eyes in the morning , and whilst still struggling with an inclination to sleep, I review the day and what it will have in store for me; but the pictures drawn are confused, and my will takes no part in it.
(When I read the beginning and the end, I browsed through the book and found Vedic Hymns in it.)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வாட் போட்டி, பாட்டுப் போட்டியில் இலங்கைப் பாடகி, வட நாட்டுப் பாடகர்
அந்தக் காலத்தில் பல நாட்டுப் பாடகர்களும் வீரர்களுக்கும் தமிழ் நாட்டுக்கு வந்து அரசவைக்குள் நுழைந்து தைரியமாக சவால் விட்டதை திருவிளையாடல் புராணம் (தி வி பு ) காட்டுகிறது
பாணபத்திரரின் மனைவிக்கு சவால் விடுத்தது இலங்கைப் பாடகி! பின்னர் அவள் தோற்றுப் போனாள்
வாட் போட்டி, பாட்டுப் போட்டியில் இலங்கைப் பாடகி, வட நாட்டுப் பாடகர்
இதே போல கரிகாலன் காலத்துப் புலவன் ஒருவன் ராஜ சேகர பாண்டியன் அவைக்கு வந்து எங்கள் கரிகாலனுக்கு 64 கலைகளும் தெரியும் உமக்குப் பரத சாஸ்திரம் தெரியுமா? என்று கேட்ட செய்தி கால் மாறி ஆடிய படலத்தில் வருகிறது.
வாட்போட்டியில் ஒருவன் சவால் வீட்டு, சிவபிரானே வந்து சண்டையிட்டது அங்கம் வெட்டிய படலத்தில் வருகிறது; சங்க இலக்கியத்திலும் மல்யுத்த வீரர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து மற்போர் புரிந்த செய்திகள் இருக்கின்றன . ஹேமநாத பாகவதர் வரகுணன் அவைக்கு வந்து சவால் விட்டதை திருவிளையாடல் திரைப்படம் மூலம் எல்லோரும் அறிவார்கள்.
****
கணவன் மனைவி பெயர்கள்
அக்காலத்தில் எல்லா ஜாதியினரின் குடும்பத்திலும் கணவன் மனைவி பெயர்கள் ஸம்ஸ்க்ருதப் பெயர்களாக இருந்ததைக் காட்டுகிறது.
மலையத்வஜன் மனைவி – காஞ்சனமாலா ; அவள் சூரசேன நாட்டுப் பெண்மணி;
அங்கயற் கண்ணி கணவன் – சுந்தரேசன் அல்லது சுந்தர பாண்டியன்.
உக்கிரகுமாரன் மனைவி பெயர்- காந்திமதி; அவள் சூரியகுல சோமசேகரனின் புதல்வி ;
உக்கிரகுமாரன் 96 அசுவமேதம் செய்ததாக பரஞ்சோதி சொல்வதால் இவனை முதுகுடுமிப்பெரு வழுதியுடன் ஒப்பிடலாம். ஏனெனில் காளிதாசனும் ரகுவம்சத்தில் சுயம்வர சபையில் பாண்டியமன்னனை அறிமுகப்படுத்தும்போது இவன் அகஸ்திய முனிவருடன் தொடர்புடையவன் என்றும் யாகத்தின் அவப்ருத ஸ்நானத்தால் எப்போதும் நனைந்த துணியுடையவன் என்றும் கூறுகிறாள் தோழி.
இதிலிருந்தது சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்த காளிதாசனுக்கும் பாண்டியன் யாகம் செய்த செய்தி பிரபலமானது தெரிகிறது ;மேலும் ஆலவாய் (உரகபுரம்) என்பதையும் குறிப்பிடுகிறான் காளிதாசன் !
விருத்த குமாரன் பாலன் ஆகிய படலம் ஒன்றினை மட்டுமே நால்வரும் — அப்பர்- சம்பந்தர் சுந்தர், மாணிக்க வாசகர்—பாடினார்கள்; இதில் வரும் பிராமண பெயர் விரூபாக்ஷன்.
காரைக்கால் அம்மையார் காலத்தில் புனிதவதி, பரமதத்தன் அப்பர் காலத்தில் திலகவதி தருமசேனர் இருந்ததால் இதில் வியப்பில்லை அவர்கள் பிராமணர்கள் அல்ல.
உலவாக்கோட்டை அருளிய படலத்தில் வரும் பெண்ணின் பெயர் தருமசீலை ; அவள் ஜாதியில் வேளாளர் ;
மாமனாக வந்து வழக்குரைத்த படலத்தில் வரும் செட்டியார் பெயர்கள் தனபதி – சுசீலா;
வங்கிய சூடாமணி காலத்து பிராமணன் பெயர் தருமி; அவனை அப்பரும் தேவாரத்தில் பாடியுள்ளார்
சங்கத்தார் கலக்கம் தீர்த்த படலத்தில் வரும் செட்டியார் பெயர்கள் தனபதி- குணசாலினி
பிட்டு விற்ற கிழவியின் பெயர் வந்தி. இன்னொரு படலத்தில் சுக்லன்- சுகளை என்ற கணவன்- மனைவி பெயர்கள் வருகின்றன
***
காப்பி அடித்த புஸ்தகங்கள்
நம்பி எழுதிய நூலுக்கான மூலம் சாரசமுச்சயம் என்னும் புஸ்தகம் கிடைக்கவில்லை;ஆதிசங்கரர் குறிப்பிடும் சுந்தர பாண்டியமும் கிடைக்கவில்லை.. ஸ்கந்த புராண ஒரிஜினலை வைத்து ஹாலாஸ்ய மாஹாத்ம்யம், சிவலீலார்ணவம் முதலிய சம்ஸ்க்ருத தி வி பு. கள் எழுதப்பட்டன. அதிலிருந்து வந்ததே பரஞ்சோதியாரின் தி.வி.பு. ஆகவே சம்ஸ்க்ருத மூலங்களை ஆராய்வது முக்கியம்.
உலவாக்கோட்டை அருளிய படலத்தில்……
****
உலகின் முதல் சிபாரிசுக் கடிதம்
திருமுகம் கொடுத்த படலம் மிக முக்கியமானது; இதை சம்பந்தரும் குறிப்பிடுவதால் அவருக்கு முந்திய காலத்தில் நடந்த சம்பவம் இது ; இதில்தான் சிவ பெருமான் எழுதிய சிபாரிசுக் கடிதம் வருகிறது. சேராமானுக்கு சிவன் எழுதிய இந்தக் கடிதம்தான் உலகின் முதல் ரெக்கமண்டேஷன் லெட்டர் :இதோ அந்தப் பாடல்
பதினொன்றாந் திருமுறை- திருவாலவாயுடையார் அருளிச் செய்த 1, திருமுகப் பாசுரம்-
1.மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற(கு)
அன்னம் பயில்பொழில் ஆல வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
5.பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்(கு)
ஒருமையின் உரிமையின் உதவி. ஒளிதிகழ்,
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க;
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
10தன்போல் என்பால் அன்பன்; தன்பாற்
காண்பது கருதிப் போந்தனன்;
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.
சிறப்புரை: ‘கூடற் பதிமிசை நிலவு ஆலவாயில் மன்னிய சிவன் யான் மொழிதரும் மாற்றம் சேரலன் காண்க, அம்மாற்ற மாவன, – பாணபத்திரன் தன்னைப் போலவே என்பால் அன்பன் என்பதும் அவன் தன்னைக் காணுதலைக் கருதித் தன்பாற் புகுந்தனன் என்பதும், அவனுக்கு மிகுந்த பொருளைக் கொடுத்து மீண்டு வரும்படி விடை கொடுத்து அனுப்புதல் என்பதுமாகும் ..
முதல் அடி தலச் சிறப்புக் கூறியது. அடுத்த இரண்டடிகள் அத்தலத்தில் உள்ள கோயிற் சிறப்புக் கூறியன. ஐந்து, ஆறாம் அடிகள் சேரலனது கொடைச் சிறப்புக் கூறியன. ஏழு, எட்டாம் அடிகள் அவனது வெற்றிச் சிறப்புக் கூறியன. ஒன்பது, பத்தாம் அடிகள் பாணபத்திரனது அன்புடைமை கூறியன. இறுதி இரண்டடிகள் ஆணை கூறியன.
‘இப் பாசுரத்தில் குறிக்கப்பட்ட சேரலன் யாவன்’ என்னும் ஆராய்ச்சியில் கருத்து வேறுபாடுகள் உள. பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடற் புராணத்துள் இப் பாசுரத்திற்கு குறிக்கப்பட்ட பாணபத்திரை வரகுண பாண்டியன் காலத்தவராகக் கூறினார். ‘சுந்தரர் காலத்துப் பாண்டியன் வரகுணன்’ என்பதற்கு நூற்சான்றோ, வரலாற்றுச் சான்றோ எதுவும் இல்லை.
பரஞ்சோதி முனிவர்க்கு ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகட்கு முற்பட்டவராகிய சேக்கிழார், ‘இப்பாசுரத்தில் குறிக்கப் பட்ட சேரலன் சேரமான் பெருமாள் நாயனாரே’ எனத் திட்டமாக வரையறுத்து, இத்திருமுகப் பாசுரத்தைக் கண்டு, சேரர் பெருமான் பாண பத்திரரைப் பெரும் பக்தியோடும், சிறப்போடும் வரவேற்று வழிபட்டுப் பெரும்பொருள் கொடுத்துப் பாசுரத்தில் – வரவிடுப்பதுவே – என்று இருத்தலால் பத்திரரைத் தம்மிடத்தே இருத்திக் கொள்ள மாட்டாது விடை கொடுத்து விடுத்தார்’ என இப்பாசுர வரலாற்றினைக் கழறிற்றறிவார் புராணத்துள் பன்னிரண்டு பாடல்களால் விரித்துரைத்தார். ‘சேரமான் பெருமாள் நாயனார்’ சுந்தரர்க்குத் தோழர் என்பது நன்கறியப்பட்டது.
மறைமலை அடிகளார் தமது, ‘மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்’ என்னும் நூலில், மாணிக்க வாசகர் மூவர்க்கு முற்பட்டவர்’ என்னும் தமது வாதத்தை நிலை நிறுத்தற் பொருட்டுப் ‘பெரிய புராணத்துள் திருமுகங் கொடுத்த வரலாற்றைக் கூறும் பாடல்கள் இடைச் செருகல்; சேக்கிழார் பாடியன அல்ல’ என்றார்.
திருமுகங் கொடுத்த வரலாற்றைக் ‘கல்லாடம்’ என்னும் இலக்கியம் குறிப்பிடுகின்றது. அது மாணிக்கவாசகர் காலத்து நரிபரியாக்கிய திருவிளையாடலைக் கூறிற்று, மற்றும் பல கதைகளைக் குறிப்பிடுகின்றது. ஆயினும் ஞானசம்ந்தர் முதலிய மூவரில் ஒருவரைப் பற்றிய குறிப்பும் அவ் இலக்கியத்தில் இல்லை. ‘ஆகவே, அவ் இலக்கியம் மூவர் காலத்திற்கு முற் பட்டது’ என்றும், அது மாணிக்க வாசகரைக் குறிப்பிட்டு விட்டு மூவரைக் குறியாமையால் மாணிக்கவாசகரது காலம் மூவர் காலத்திற்கு முற்பட்டது என அடிகளார் முதலில் கூறினார்.
(மேற்கூறிய விளக்கவுரை தமிழ் வரச்சுவெல் யுனிவர்சிட்டி T V U உரை)
எனது கருத்து
சேரமான் பெருமாள் என்பது சேர மன்னனைக்குறிக்கும் பொதுப் பெயர் ; ஆகவே சுந்தரர் கால சேரமான் வேறு ஒருவராக இருக்கலாம் . சேக்கிழார் தவறாகப் புரிந்து கொண்டு எழுதி இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது
****
கி பி 600 CE க்கு முந்திய லீலைகள்
அப்பரும் சம்பந்தரும் குறிப்பிடும் தி வி பு நிகழ்ச்சிகள் குறைந்தது 1400 ஆண்டுகாளுக்கு முன் ந டந்திருக்க வேண்டும்
அவையாவன :
சம்பந்தர் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள்
வெள்ளை யானை சாபம் தீர்த்தது
வெள்ளியம்பலத்திற் கூத்தாடியது
வேதத்திற்குப் பொருள் அருளிச் செய்தது
மாணிக்கம் விற்றது
நான்மாடக்கூடல் ஆனது
எல்லாம் வல்ல சித்தரானது
விருத்த குமாரன் பாலரானது
திருமுகம் கொடுத்தது
பலகையிட்டது
பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கியது
திருவாலவாயானது
சங்கப்பலகை தந்தது
பாண்டியன் சுரம் தீர்த்தது
சமணரைக் கழுவேற்றியது
****
அப்பர் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள்
இந்திரன் முடிமேல் வளை எறிந்தது
வேதத்திற்குப் பொருள் அருளிச் செய்தது
நான்மாடக்கூடல் ஆனது
எல்லாம் வல்ல சித்தரானது
விருத்த குமாரன் பாலரானது
வளையல் விற்றது
பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்தது
சங்கப்பலகை தந்தது
தருமிக்குப் பொற்கிழி அளித்தது
இடைக்காடன் பிணக்கு தீர்த்தது
வலை வீசியது
வாதவூரடிகளுக்கு உபதேசித்தது
நரி பரியாக்கியது
மண் சுமந்தது
****
இந்த இரண்டு பட்டியலில் வரும் நிகழ்ச்சிகளால் முதலாவது வரகுணன் ஒருவன் இருந்ததும் , மாணிக்க வாசகர் தேவார மூவருக்கு முந்தையவர் என்பதும் உறுதியாகிறது.
*****
அடுத்த கட்டுரையில்
சுனாமி தாக்குதல்கள் , வறட்சி , புதிய மதுரை உண்டானது ,
ஜனத்தொகை பிரச்சினை
உவமைகளும் பழமொழிகளும்
ரசவாதம்
அஷ்டமா சித்திகள்
மதுரையில் செட்டி தெரு
சீல் / லட்சினை வைக்கும் முறை
அம்புகளில் பெயர்கள்
முதலியவற்றைக் காண்போம்
தொடரும்…………..
–சுபம்—
TAGS—திருவிளையாடல், புராணம், சில அதிசயச் செய்திகள்-3
எப்படி அவற்றிற்குச் சரியான தீர்வுகளைக் காண்பது என்று தெரியாமல் தவிக்கிறோம்.
இதோ அறிவியல் ரீதியான ஒரு வழி இருக்கிறது.
இதைக் கண்டு அறிமுகப்படுத்தியவர் மரியோ சிட்னி பஸாடர் (Mario Sidney Basadur) என்பவர்.
ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்க்க கீழே உள்ள எட்டு படிகளைக் கடைப்பிடியுங்கள் என்பது அவரது அறிவுரை.
1.பிரச்சினையை இனம் காணுதல்
\முதலில் பிரச்சினை என்ன என்பதைச் சரியாகக் கண்டறிய வேண்டும். உதாரணமாக ஒரு நிறுவனம் என்று எடுத்துக் கொண்டால் அங்கு வாடிக்கையாளர்களும் விநியோகஸ்தர்களும் எதை விரும்புகிறார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும்.
இதற்கு வாடிக்கையாளர்கள் ஏதேனும் யோசனை தருகிறார்களா, இன்னும் எப்படி அவர்களுடன் அதிகம் தகவலைப் பரிமாறித் தொடர்பு கொள்ள முடியும், இப்போது வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் என்ன நடக்கிறது என்பன போன்றவற்றை அலசி ஆராயலாம்.
தனி மனிதப் பிரச்சினைகளிலும் இதே போல பிரச்சினையை முதலில் இனம் காண வேண்டும்.
2. .உண்மையைக் காணுதல்
அடுத்தது பிரச்சினைக்குக் காரணம் என்ன? இது ஏன் தோன்றியது என்பதை ஆராய்வது தான்/\.
3. பிரச்சினையை சரியாக வரையறுத்தல்
அடுத்து பிரச்சினையை சில வார்த்தைகளில் வரையறுத்துக் கொள்வது தான்.
ஏன், எதற்காக என்ற கேள்விகளைக் கேட்டால் பிரச்சினை உருவான காரணமும் அது இன்றைக்கு இருக்கும் நிலையும் தெரிய வரும்.
4. அடுத்து தீர்வுகளைக் காணுதல்
ஏராளமான கருத்துக்களைச் சேர்ப்பது தான் அடுத்த படி. இதற்கு தக்கவர்களுடன் இணைந்து உட்கார்ந்து கருத்துப் பரிமாற்றம் செய்யலாம். இதன் மூலம் பல்வேறு யோசனைகள் கிடைக்கும். யோசனை கூறுபவர்களைக் கண்டிக்கவோ, ஏளனம் செய்யவோ கூடாது. மனதில் தேக்கி வைத்திருக்கும் கருத்தே முட்டாள்தனமான கருத்து. வெளியில் சொல்லப்படும் அனைத்துக் கருத்துக்களும் வரவேற்கத்தக்கவையே என்ற அடிப்படைக் கொட்பாட்டுடன் ‘ப்ரெய்ன் ஸ்டார்மிங்’ எனப்படும் இந்தக் கருத்துப் பரிமாற்றத்தைச் செய்தல் வேண்டும்.
5. உரிய வழிகளைப் பரீசிலித்தல் மற்றும் தேர்ந்தெடுத்தல்
ஏராளமான கருத்துக்களும் தீர்வுகளும் இப்போது கை வசம் இருக்கும் நிலையில் இவற்றில் எது சரியாக அமையும், இதனால் பக்க விளைவுகள் ஏற்படாமல் இருக்குமா, இதற்கு ஆகும் நேரம், பணம், முயற்சி எவ்வளவு வேண்டும் என்பதைச் சீர்தூக்கிப் பார்ப்பது தான் அடுத்த கட்டம்!.
பின்னர் செய்ய வேண்டியதைத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளல் வேண்டும்.
6..அடுத்தது திட்டமிடல்;
இப்போது தீர்வை அமுல் படுத்த ஒரு செயல் திட்டம் தேவை. யார், எதை, எப்படிச் செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பது தான் அடுத்த படி.
7. .தீர்வை அமுல்படுத்த ஆதரவைத் திரட்டல்
நிர்வாகம் என்றால் ஒரு திட்டத்தை அமுல் படுத்த வேண்டுமானால் அங்கு வேலை பார்க்கும் பணியாளர்கள் அதை ஏற்க வேண்டும்.
குடும்பம் என்றால் அதன் உறுப்பினர்கள் தீர்வை ஆதரிக்க வேண்டும்.
8.திட்டத்தை நிறைவேற்றல்
இதுவே தீர்வை அமுல்படுத்த உ:ள்ள்ச் இறுதிக் கட்டம்!.
அமுல்படுத்தும் போது அதை நன்கு மேற்பார்வை பார்த்துக் கொண்டே இருத்தல் வேண்டும். இன்னும் ஒரு முன்னேற்றம் தொடர்ந்து தீர்வினால் வரலாம்.
இதை முடித்த பின்னர் முதல் படிக்குச் சென்று இதை விட இன்னும் சிறந்த வழி மூலம் பிரச்சினைக்குத் தீர்வு உண்டா என்று கேட்டுக் கொள்ளலாம்.
இதை SIMPLEX PROBLEM SOVING PROCESS என்று கூறுவர்.
பஸாடரால் பயனடைந்தோர் ஏராளமானோர் உண்டு. தனிநபரும் சரி, நிறுவனங்களும் சரி பஸாடரின் வழிகளைக் கடைப்பிடிக்கலாம்
முயன்று பாருங்கள். தீர்வில்லாத பிரச்சினையே இருக்காது!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 64
Stamps posted today include YEAR 2004, STAMPS,
Pictures of 2500 Indian Stamps,
NEHRU, GANDHI, DOGS OF INDIA, S B I, POST BOXES , LETTERS, RARE PLANTS, ANIMALS P S KAIRON, TIRUPPUR KUMARAN, V LAKSHMINARAYANA, DHEERAN CHINNAMALAI, MURSOLI MARAN, AYOTHIDASAR, KALYANASUNDARANAR, DR T S SOUNDARAM, MADHAV RAO SCINDIA, DR ROERICH, KRISHANKANT, MADRAS TRAVANCORE, P SINGHANIA, PUNJAB 300 YEARS, PEACE YEAR, ROTARY INTERNATIONAL, I N S TARANGINI, CHILDREN S DAY, LOKHANDE, P N PANICKER, DESIKAVINAYAKAM PILLAI,ANSARI
NANI PALKHIWALA, MURUGAPPACHETTIYAR,
–subham—
Tags– Stamps posted today include YEAR 2004, STAMPS,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அகஸ்தியர் என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் (POINTS) சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் (IT MUST MATCH OUR SELECTION GIVEN BELOW ) ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் . ஒவ்வொன்றுக்கும் பத்து மார்க்குகள்.
****
SAMPLE ANSWER –Ten Marks
விடைகள்— 1. அகஸ்தியர் குள்ளமானவர்
2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10…………………………
****
விடைகள்—
1.அகஸ்தியர் குள்ளமானவர் — பத்து மார்க்குகள்.
2.கடலைக்குடித்தார்; (அதாவது கடல் கடந்து பாண்டியர்களை அழைத்துச் சென்று, ஏழு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்து நாகரீகத்தை 1500 ஆண்டுகளுக்கு கொடி கட்டிப்பறக்கவிட்டார் ; மிகப் பழைய பாண்டியமன்னன் திருமாறனின் கல்வெட்டு வியட்நாமில் உள்ளது). பத்து மார்க்குகள்.
3.விந்திய மலையைக் கர்வபங்கம் செய்தார் ; (அதாவது முதல் தடவையாக விந்திய மலைக்கு இடையே சாலை அமைத்து வந்தார்; ராமன் ,அர்ஜுனன் போன்றோர் கடற்கரை சாலையைப் பயன்படுத்தி தென்னிந்தியாவுக்கு வந்தனர்). பத்து மார்க்குகள்.
4.காவிரி நதியை உண்டாக்கினார் ; (அதாவது அகஸ்தியர் மாபெரும் சிவில் என்ஜினீயர் GREAT CIVIL ENGINEER; வடநாட்டில் பகீரதன் கங்கை நதியை இப்போதைய பாதையில் திருப்பி விட்டது போல பல பாறைகளை நகர்த்த வைத்து, காவிரியைத் தமிழ் நாட்டிற்குள் திருப்பி விட்டார் ; இப்படித் திருப்பலாமா, அப்படித் திருப்பிவிடலாமா என்றுBLUE PRINT ப்ளு பிரிண்ட் போட்டுக்கொண்டு இருந்தபோது, ஒரு காகம் வந்து அவரது கமண்டல நீரை கவிழ்த்தது அந்த நீர் ஒடிய திசையில் காவிரி நதியைத் திருப்பிவிட என்ஜினீயர்களை அமர்த்தி வெற்றிகண்டார்0- பத்து மார்க்குகள்.
5.ரிக்வேத அகஸ்தியர், லோபாமுத்ரா என்ற ராணியைக் கல்யாணம் செய்துகொண்டார் –பத்து மார்க்குகள்.
6. தமிழ் மொழிக்கு இலக்கணம் உண்டாக்கினார் (பாரதியார் பாட்டில் உள்ளது ) –பத்து மார்க்குகள்.
7. கடைசியாக இவர் பொதிய மலையில் ஆஸ்ரமத்தை அமர்ந்து தங்கிவிட்டார். –பத்து மார்க்குகள்.
.8.அகஸ்திய நட்சத்திரம், அகத்திக்கீரை முதலிய பல இவர் பெயரில் உள்ளன –பத்து மார்க்குகள்.
9.தமிழ்நாட்டின் தென் பகுதியில் அகத்தியர் பெயரில் ஊர்களும் மழையும் உள்ளன.— பத்து மார்க்குகள்.
10.இவரது பெயரில் நிறைய மருத்துவ, சோதிட நூல்கள் உள்ளன அல்லது இவரது சிலைகள் லண்டன் மியூசியத்திலும் தென் கிழக்கு ஆசியா நாட்டு மியூசியங்களிலும் உள்ளன ஏதேனும் ஒன்று சொன்னால் போதும் — பத்து மார்க்குகள்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
முருகன் ஊமையாகப் பிறந்தது ஏன் ?
வலை வீசின படலத்தில் சாபங்கள் பற்றிய சுவையான கதை வருகிறது . சிவபெருமான் மதுரையில் அங்கையற்கண்ணிக்கு வேதப்பொருளை சொல்லிக்கொண்டிருந்தபோது அவள் கவனக்குறைவாக இருந்ததால் கோபம் அடைந்த சிவன் அவளை மீனவப் பெண்ணாக பிறக்கச் சாபமிட்டார் ; மீனாட்சி அம்மை தனது செயலுக்கு வருந்தியபோது, “கவலைப்படாதே போ! நானே மீனவனாக வந்து உன்னைத் திருமணம் செய்து கொள்வேன்” என்றார் . அம்மாவுக்கு கிடைத்த சாபச் செய்தி முருகனையும் பிள்ளையாரையும் எட்டியது இருவரும் ஒடி வந்து இந்தப் புஸ்தகங்களால்தானே இதெல்லாம் வந்தது என்று புஸ்தகங்களை வாரிக் கடலில் வீசினர் அவர்களை உள்ளே அனுமதித்த குற்றத்துக்காக நந்தி தேவரை சுறாமீனாகப் பிறக்கச் சாபமிட்டார்; முருகனை செட்டியார் வீட்டில் ஊமையாகப் பிறக்க சாபமிட்டார் ; விநாயகப் பெருமானுக்குச் சாபமிட்டால் அது தன்னையே வந்தடையும் என்பதால் சிவன், பேசாமல் இருந்து விட்டார் – தி.வி.பு , வலை வீசின படலம்
எனது கருத்து
விநாயகப் பெருமானின் மஹிமை இதில் தெரிகிறது ; அச்சது பொடி செய்த அதி தீரா என்று அருணகிரிநாதர் விநாயகரைப் புகழந்து இருக்கிறார்; பிள்ளையார் அனுமதி இல்லாமல் சிவன் புறப்பட்டபோது அவருடைய தேரின் அச்சையே முறியச் செய்தார் கணபதி என்று அருணகிரி பாடியுள்ளார் .
இரண்டாவது கருர்த்து — வாத்தியார் பாடம் சொல்லும் போது, குரு உபதேசம் செய்யும்போது, கவனக்குறைவாக இருப்பது தண்டனைக்குரிய குற்றம் .
மூன்றாவது , வாயிற்காப்போன் கடமையில் தவறக்கூடாது ; மனைவியே வந்தாலும், மகனே வந்தாலும் அனுமதி பெற்ற பின்னரே உள்ளே வரவேபண்டும்; இது முக்கிய பாடம். நாம் எந்த வீட்டுக்குச் செல்வதானாலும் முன்னரே போன் செய்து அனுமதி பெற்ற பின்னரே, சந்திக்கச் செல்ல வேண்டும் எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் இது முக்கியம்; திறந்த வீட்டில் நாய் நுழைந்த மாதிரி நுழையக்கூடாது.
****
எந்த திசையில் எந்த காவல் தெய்வம் இருக்கவேண்டும்?
திசைத் தெய்வங்கள் யார் என்றும் பரஞ்சோதி முனிவர் சொல்கிறார்.
நகரின் கிழக்குப்பகுதியில் அய்யனார் சிலையும் , தெற்குப்பகுதியில் சப்த மாதா கோவிலும் மேற்குப் பகுதியில் விஷ்ணு கோவிலும் வடக்குப் பகுதியில் துர்கா கோவிலும் இருக்க வேண்டும் என்று பரஞ்சோதி முனிவர் சொல்கிறார் . பழைய மதுரையில் இப்படி இருந்தது; இப்போதும் வடக்கில் செல்லத் தம்மன் கோவில் என்னும் துர்கா கோவில் இருக்கிறது ; அதே போல தெற்கில் சப்த மாதா கோவில் உள்ளது ; ஒருவேளை கண்ணகி எரித்த பின்னர், மதுரையின் அமைப்பு மாறியிருக்கலாம் ;மதுரை பல முறை மாற்றியமைக்கப்பட்டது தி வி பு வில் சில படலங்களில் வருகிறது; பிளினியும் மதுரைத் தலை நகர் மாற்றம் பற்றி முதல் நூற்றாண் டில் குறிப்பிட்டுள்ளார்.
கெளடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரத்திலும் திசைத் தெய்வங்கள் வருகின்றன ; இதை ஒப்பிட்டு ஆராய வேண்டும்
மகாபுருடனின் அளவினைச் சொல்லி முடியாது ; அப்புருடனுக்குத் திருவாரூர் மூலாதாரம்; திருவண்ணாமலை சுவாதிட்டானம் , திருவானைக்கா மணிபூரகம்; சிதம்பரம் அனாகதம்; திருக்காளத்தி விசுத்தி; காசி ஆக்ஞய் ;கயிலை பிரமரந்திரம்; மதுரை துவாதசாந்தம் (அதாவது விராட புருஷனின் தலைக்கும் மேலாக அமைந்த தலம் ) .எனது கருத்து
துவாதசாந்தம் என்றால் எண் 12 (ஏன் பன்னிரெண்டு என்று தனிக்கட்டுரையில் விளக்கி இருக்கிறேன் )
இமயம் முதல் குமரி வரை என்ற கருத்து புற நானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் உளது ;இங்கும் மதுரைமுதல் கயிலை வரை விவரிக்கப்பட்டது; இது மகாபுருஷன் என்பவனின் உடல் என்ற உருவகமும் வருகிறது. ஆனால் இன்னும் சில அறிவிலிகள் வெள்ளைக்காரன் வந்துதான் இந்தியா என்பது ஒரு நாடு என்று காட்டினான் என்று உளறிக்கொண்டிருக்கின்றன இந்தியா என்பது 56 பிரிவுகளை உடையது அனைத்து 56 நாடுகளுக்கும் மீனாட்சி கல்யாண லெட்டர் / திருமுகம் அனுப்பப்பட்டது என்று தி வி பு கூறுகிறது இந்த 56 தேச விஷயம், நிறைய சம்ஸ்க்ருத நூல்களிலும் உளது; அவர்கள் அனைவரையும் எல்லா விழாக்களுக்கும் அழைத்ததும், அவர்கள் வந்ததும் இந்தியா — அகண்ட பாரதம் — ஒரே நாடு என்று காட்டுகிறது ; வெள்ளைக்காரன் ஆட்சிக்கும் துலுக்க ஆட்சிக்கும் முன்னதாக அப்பரும் ஆதிசங்கரரும் சென்ற வரைபடத்தைப் பார்த்தால், ராமன் சென்ற வரை படத்தைப் பார்த்தால், சுந்தரரும் சேரமானும் கயிலை சென்ற வரை படத்தைப் பார்த்தால், அகண்ட பாரத்தைத்தைக் காணலாம்.
Picture:–கால்மாறி ஆடின படலம்
*****
அடுத்த கட்டுரைகளில் வரும் செய்திகள் இதோ :
வாட் போட்டி,
பாட்டுப் போட்டியில் இலங்கைப் பாடகி, வட நாட்டுப் பாடகர்
கணவன் மனைவி பெயர்கள்
காப்பி அடித்த புஸ்தகங்கள்
உலகின் முதல் சிபாரிசுக்கு கடிதம்
உவமைகளும் பழமொழிகளும்
ரசவாதம்
அஷ்டமா சித்திகள்
மதுரையில் செட்டி தெரு
சீல் / லட்சினை வைக்கும் முறை
அம்புகளில் பெயர்கள்
சுனாமி தாக்குதல்
கி பி 600 CE க்கு முந்திய லீலைகள்
தொடரும்………………………………………..
Tags– திருவிளையாடல் புராணம், அதிசயச் செய்திகள் பகுதி -2 சாபங்கள், முருகன் ஊமை பிறப்பு
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மௌலானா அபுல்கலாம் ஆஜாத் உள்ளிட்டோரின் கல்வித் தொண்டு! – 8
ச. நாகராஜன்
2025 மே மாதம்1ம் தேதியிட்ட ஸ்வராஜ்யாஇதழில் திரு எம். நாகேஸ்வர ராவ் எழுதியுள்ள கட்டுரையை இது வரை படித்தோம்.
நீண்ட கட்டுரையில் இதுவரை சொல்லப்படாத புதுக் கருத்துக்களை மட்டும் இங்கு காண்போம். திருப்பிச் சொல்லப்பட்ட கருத்துக்களை சேர்க்காமல் நீண்ட கட்டுரை சுருக்கமாகத் தரப்படுகிறது.
ரிக்வேதம், மஹாபாரத்ம் உள்ளிட்ட பொக்கிஷங்கள் ஒதுக்கப்பட்டன. உலகின் மிக நீண்ட இதிஹாஸமான மஹாபாரதத்தின் புகழ் சொல்லப்படவில்லை. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் போன்ற உருது கல்விக்கூடங்கள் ஆதரிக்கப்பட்டன.
காஷ்மீர் ஹிந்துக்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஹம்பி ஆலயம் அழிக்கப்பட்டது. இவை குறிப்பிடப்படவில்லை.
ஹிந்து விரோதப் போக்கு ஊடகங்களிலும் சினிமாக்களிலும் பரவச் செய்யப்பட்டது.
இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் நேருவின் சோஷியலிஸ அமைப்பின்படி கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் தாஜா செய்யும் போக்கு பரவியது.
பின்னால் வந்த பிஜேபி அரசும் பாடபுத்தகங்களைத் திருத்தத் தவறி விட்டது. பிரகாஷ் ஜாவேத்கர் என்ற பிஜேபி கல்வி அமைச்சர் தாங்கள் ஒரு அத்தியாயத்தைக் கூட திருப்பி எழுதவில்லை என்று பெருமை அடித்துக் கொண்டார்.
நாம் எதைப் படிக்கிறோமோ அதாகவே நாம் ஆகிறோம்; எதைச் சாப்பிடுகிறோமோ அதாக ஆவதில்லை – என்ற பழமொழி ஒரு மக்களின் குணாதிசயங்களையும் எதிர்காலத்தையும் சுட்டிக் காட்டுகிறது.
தானே ஏற்படுத்திக் கொண்ட இந்தக் காயமானது வெளிநாட்டு சக்திகள் நம்மை உருவாக்க வழி வகுத்து விட்டன. “பெயருக்கு மட்டும் ஹிந்து” Hindus in name only என்ற நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
ஹிந்துக்களான கல்வி அமைச்சர்கள் வி.கே.ஆர்.வி. ராவ் (1971) அர்ஜுன் சிங் (1991-1994, 2004-2009) ஆகியோர் இடதுசாரிப் போக்கைக் கொண்டிருந்தார்கள், மேலும் முஸ்லீம்களை தாஜா செய்யும் போக்கைக் கொண்டிருந்தார்கள்.
கல்வித் துறை முக்கியமான ஒரு துறையாகவே கருதப்படவில்லை.
உள்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகியவற்றிற்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கல்வித் துறைக்குக் கொடுக்கப்படவில்லை.
இவையெல்லாம் சேர்ந்து ஹிந்துக்கள் தங்கள் புகழோங்கிய காலம் பற்றி அறிய முடியாமல் செய்து விட்டது.
இவற்றை உணர்ந்து இந்தியாவின் உண்மை வரலாற்றைச் சொல்ல வேண்டிய காலம் வந்து விட்டது.
நமது தியாகங்கள், நமது வெற்றிகள் ஆகியவை கல்லறைக்குள் புதைத்து வைத்துவிடப்படக் கூடாது.
குறிப்பு : இந்தக் கட்டுரையை ஸ்வராஜ்யா இதழில் எழுதியுள்ள திரு எம். நாகேஸ்வர ராவ் ஓய்வு பெற்ற ஐபிஸ் அதிகாரி ஆவார். அத்துடன் அவர் முன் நாளைய சிபிஐ டைரக்டருமாவார். அவரது கருத்துக்கள் அவருடைய சொந்தக் கருத்துக்களே.**
இவற்றில் இருக்கின்ற உண்மைகளை எடுத்துப் பார்த்து தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றே அனைவரும் எதிர்பார்க்கலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 63
Stamps posted today include YEAR 2004, STAMPS,
Pictures of 2500 Indian Stamps, PANINI, SIDDHAR SWAMIGAL, NAIN SINGH,
TAJ MAHAL, TENNETI VISWANATHAM,
S S VASAN, K SUBRAHMANYAM, BHASKARA SETHUPATHY, ACHARYA BIKSHU, NEERJA BHANOT, R P VERMA, GREETINGS, CHILDRENS DAY 2004, AGAKHAN AWARD, AGRA FORT, IISBWM KOLKATA, SAHITYA AKADEMY, DULA BHAYA KAG, NUPEE LAL, RAJIV GANDHI,
INDIAN SOLDIERS OF PEACE,C D DESHMUK, BAJI RAOPESHWA, DR B D GARWARE , TRIGNOMETRICAL SURVEY, M C CHAGLA, INDRA CHANDRA SHASTRI, JYOTIPRASAD AGARWALLA, WALCHAND HIRACHAND, WOODSTOCK SCHOOL
–subham—
Tags– Stamps posted today include YEAR 2004, STAMPS,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
குறுக்கே
1. (7 letters) -மதுரை நகரம் உருவாகும் முன் இந்தப்பெயரில் காடாக இருந்தது
2. (6) –நான்கு அல்லது ஐந்து மாதம் விளையும் நீண்ட கால நெற்பயிர்
4. (2) — ← நீண்ட, கயிறு
5. (4) –மாட்டுச் சாணத்தின் காய்ந்த பகுதி
5. (4)– தெற்குக்கு எதிர் திசை
*****
கீழே /மேலே coloured
1. —சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்த விழா; இது, ஐப்பசி மாதத்தில் வளர்பிறையில் பிரதமை முதல் ஆறு நாட்கள் கொண்டாடப்படும்.
3. ↑ பாண்டவர் – கெளரவர் சண்டையைக்கூறும் நூல்; இந்தியாவின் ஒரிஜினல் பெயர்
3. –பெண், பொம்மை; மார்கழிமாத நோன்பு
4. —↑ யானை, சேவல்
4. – சொல், உறுதி மொழி
6. —↑ காகம் குருவி கொக்கு ஆகியவற்றின் பொதுப்பெயர்
7. —↑ சங்ககாலத்தில் பெரும்பூட்சென்னி என்பவன் ஆட்சிக்குட்பட்டிருந்த அழும்பில், ******* ஆகிய இரு ஊர்களும் நெல்வயல்களுடன் இன்பம் நல்கும் ஊர்களாகத் திகழ்ந்தன.
1
2
3↑
↑←4
5
6↑
7↑
விடைகள்
குறுக்கே
1.க ட ம் ப வ ன ம் (7 letters) -மதுரை நகரம் உருவாகும் முன் இந்தப்பெயரில் காடாக இருந்தது
2.சம்பா பயிர்(6) –நான்கு அல்லது ஐந்து மாதம் விளையும் நீண்ட கால நெற்பயிர்
4.வார் (2) — நீண்ட, கயிறு
5.வறட்டி(4) –மாட்டுச் சாணத்தின் காய்ந்த பகுதி
5.வடக்கு (4)– தெற்குக்கு எதிர் திசை
*****
கீழே /மேலேcoloured
1.கந்த சஷ்டி —சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்த விழா; இது, ஐப்பசி மாதத்தில் வளர்பிறையில் பிரதமை முதல் ஆறு நாட்கள் கொண்டாடப்படும்.
3.பாரதம்– பாண்டவர் – கெளரவர் சண்டையைக்கூறும் நூல்; இந்தியாவின் ஒரிஜினல் பெயர்
3.பாவை –பெண், பொம்மை; மார்கழிமாத நோன்பு
4.வாரணம் — யானை, சேவல்
4.வாக்கு – சொல், உறுதி மொழி
6.பறவை –காகம் குருவி கொக்கு ஆகியவற்றின் பொதுப்பெயர்
7.குடவாயில் –சங்ககாலத்தில் பெரும்பூட்சென்னி என்பவன் ஆட்சிக்குட்பட்டிருந்த அழும்பில், ******* ஆகிய இரு ஊர்களும் நெல்வயல்களுடன் இன்பம் நல்கும் ஊர்களாகத் திகழ்ந்தன.
க1
ட
ம்
ப
வ
ன
ம்
ந்
த
ண
த
ர
ல்
ர
ச2
ம்
பா3↑
ப
யி
ர்
↑வா←4
ஷ்
வை
வா
க்
டி
ட்
ற
வ5
ட
க்
கு
ப6↑
கு7↑
–subham—
Tags—லண்டன், தமிழ், குறுக்கெழுத்துப் போட்டி,172025