எதைச் செய்யக்கூடாது? இன்னா நாற்பது பொன்மொழிகள் (Post No.4350)

 

Written by London Swaminathan

 

Date: 30 October 2017

 

Time uploaded in London- 13-29

 

 

Post No. 4350

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

நவம்பர் 2017 (ஹே விளம்பி ஐப்பசி/கார்த்திகை) காலண்டர்

 

 

விழா நாட்கள்:- 4 குருநானக் ஜயந்தி, 6- கனகதாசர் ஜயந்தி, 23- சத்ய சாய் பாபா பிறந்த நாள்.

அமாவாசை-18; ஏகாதசி- 14, 29; பௌர்ணமி- 3; சுப முகூர்த்தம்- 2, 9, 24, 30

 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னா நாற்பது என்னும் நூலில் இருந்து 30 பொன்மொழிகள் இதில் உள்ளன. ஒவ்வொரு மாத காலண்டரிலும் 30 அல்லது 31 பொன்மொழிகள் வீதம் இதுவரை ஆயிரத்துக்கும் மேலான பொன்மொழிகள் கடந்த ஈராண்டு காலண்டர்களில் இங்கே பதிவிடப்பட்டுள்ளன.

 

நவம்பர் 1 புதன் கிழமை

 

முக்கண்பகவன் அடிதொழாதார்க்கு இன்னா; சக்கரத்தானை மறப்பு இன்னா (சிவனையும், திருமாலையும், பிரமனையும் வழிபடாதார்க்கு இன்பமே இல்லை)

 

நவம்பர் 2 வியாழக்கிழமை

பந்தம் இல்லாத மனைவியின் வனப்பு இன்னா (மனைவிக்கு அழகு இருக்கலாம்; ஆனால் அன்பில்லாவிடில் இன்பம் இல்லை)

 

நவம்பர் 3 வெள்ளிக் கிழமை

தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா ( நல்ல நடிகர் போல அழகு இருக்கலாம்; ஆனால் தந்தை இல்லாத மகன், கல்வி கற்காமல்,  கட்டுப்பாடின்றி திரிவான்; ஆக அங்கே இன்பம் இல்லை)

 

நவம்பர் 4 சனிக்கிழமை

அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா (அந்தக் காலத்தில் பிராமணர்கள் மனு நீதி சொன்னபடி, சொத்து சுகங்களைத் தேடி வைக்கக்கூடாது; தினமும் யார் வீட்டிலாவது பூஜை செய்து அவர்  அந்த வருமானத்தில் வாழ வேண்டும்; அத்தகைய ஏழைப் பிராமணன் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடக்கூடாது)

 

நவம்பர் 5 ஞாயிற்றுக் கிழமை

பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா (பிராமணர்கள் மிகவும் சுத்த மானவர்கள்; அத்தகையோர் வாழும்    அக்கிரஹாரத்தில் நாய் அல்லது கோழி புகுந்தால் அவர்களுக்கு மகிழ்ச்சி இராது).

 

நவம்பர் 6 திங்கட் கிழமை

ஆர்த்த மனைவி அடங்காமை நன்கு இன்னா ( சில குடும்பங்களில் மனைவி, அடங்காப்பிடாரியாக இருப்பாள்; அங்கும் மகிழ்ச்சி இல்லை).

 

நவம்பர் 7  செவ்வாய்க் கிழமை

நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா ( அந்தக் காலத்தில் ஆற்றுப் பாலங்கள் அதிகமில்லை; சிலர் அசட்டுத் தைரியத்தில் நீந்துவர்; உயிரிழப்பர்; ஆகவே தெப்பமின்றி நீந்தக்கூடாது)

 

நவம்பர் 8 புதன் கிழமை

கடுமொழியாளர்  தொடர்பு இன்னா ( சிடு சிடுவென எப்போது பார்த்தாலும், எரிந்து விழும் அல்லது எதிர்மறை சொற்களைப் பேசும் ஆட்களை நண்பராக வைத்துக் கொள்ளதே; இன்பமே இராது)

 

நவம்பர் 9 வியாழக்கிழமை

எருது இல் உழவர்க்குப் போகு ஈரம் இன்னா (சொந்தத்தில் எருது முதலியன இல்லாத உழவர்கள் உடனே உழ முடியாது; நிலத்தில் நீர்ப்பசை வீணாதலைக் கண்டு துன்பமே மிகும்).

 

நவம்பர் 10 வெள்ளிக் கிழமை

கருவிகள் மாறிப் புறங்கொடுத்தல் இன்னா ( ஒரு அரசனுடைய படைகள் புறங்காட்டித் தோற்று ஓடி வருவது துன்பமே தரும்).

நவம்பர் 11 சனிக்கிழமை

திரு உடையாரைச் செறல் இன்னா (செல்வந்தர்களைப் பகைத்தால் இன்பம் இல்லை)

 

நவம்பர் 12 ஞாயிற்றுக் கிழமை

 

சிறை இல் கரும்பினைக் காத்து ஓம்பல் இன்னா ( வேலி இல்லாத கரும்புத் தோட்டத்தைப் பாது காப்பது இன்பம் பயக்காது; பயிர் செய்தால், விலங்குகள் மேயா வண்ணம் பாதுகாத்தல் அவசியம்)

 

 

நவம்பர் 13 திங்கட் கிழமை

 

உறைசேர் பழங்கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா ( மழைக்காலத்தில் ஒழுகும் கூரை உடைய வீட்டில் வாழ்வது துன்பம் தரும்; அதாவது மழை வரும் முன்னே வலுப்படுத்தல் அவசியம்)

 

நவம்பர் 14 செவ்வாய்க் கிழமை

 

அறம் மனத்தார் கூறும் கடுமொழியும் இன்னா ( அற நெறியில் நிற்கும் நல்லோர் (கோபத்துடன்), சொல்லும் அறிவுரைகள் தீநெறியில் செல்லுவோருக்கு மகிழ்ச்சி தராது)

 

நவம்பர் 15 புதன் கிழமை

மறம் மனத்தார் ஞாட்பில் மடிந்து ஒழுகல் இன்னா (போர்க்களத்தில் (ஞாட்பில்) சோம்பி இருத்தல் வீரம் நிறைந்தவர்க்கு துன்பம் தரும்; பகைவர் தாக்கும் போது சுணக்கம் கூடாது)

நவம்பர் 16 வியாழக்கிழமை

 

இடும்பை உடையார் கொடை இன்னா ( வறுமையில் வாடுவோர், வெளி உலக பகட்டுக்காக, கொடையாளி போல நடிப்பது துன்பம் தரும்)

 

நவம்பர் 17 வெள்ளிக் கிழமை

 

ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா

(திறமை இல்லாதவன் படைக்கலங்களைக் கொண்டு சென்று போரிட்டால், வலிமையுள்ள எதிரி, அதையே பிடுங்கி அடிப்பான்; அப்போது துன்பம் வரும்)

 

நவம்பர் 18 சனிக்கிழமை

 

நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா ( வாசனை இல்லாத மலர்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் இன்பம் தராது; அழகான பெண்கள் குணம் இலாமல் இருந்தால் துன்பம்தான்)

 

நவம்பர் 19 ஞாயிற்றுக் கிழமை

 

தேற்றம் இலாதான் துணிவு இன்னா (திட்டம் இடாமல் காரியத்தைச் செய்பவனுக்கு இன்பம் இல்லை)

 

நவம்பர் 20 திங்கட் கிழமை

 

நகையாய நண்பினார் நார் இன்னா( சிரித்துச் சிரித்துப் பேசுவோர் உண்மை அன்பு காட்டாவிடில் துன்பமே) முகநக நட்பது நட்பன்று

 

நவம்பர் 21 செவ்வாய்க் கிழமை

 

இகலின் எழுந்தவர் ஒட்டு இன்னா ( கீழ் மக்களுடன் கொள்ளும் நட்பு, துன்பம் தரும்)

வள்ளல்கள் இன்மை பரிலர்க்கு முன் இன்னா (வள்ளல்கள் இல்லாத ஊரில் வாழும் புலவர்க்கு இன்பம் கிடைக்காது)

 

நவம்பர் 22 புதன் கிழமை

 

வண்மை இலாளர் வனப்பு இன்னா ( ஈகைக் குணம் இலாதோர் எவ்வளவு சிறப்பான தோற்றம் உடையாராக இருந்தாலும் மற்றவர்க்கு மகிழ்ச்சி தராது)

நவம்பர் 23 வியாழக்கிழமை

 

பொருள் உணர்வார் இல்வழிப் பாட்டு உரைத்தல் இன்னா (பொருளை உணரக்கூடிய அறிஞர்களிடையே கவிதைகளைச் சொல்ல வேண்டும்; மற்றவர்களிடம் உரைப்பது மகிழ்ச்சி தராது)

 

நவம்பர் 24 வெள்ளிக் கிழமை

 

இருள் சுடர் சிறு நெறி தாம் தனிப்போர்க்கு இன்னா ( இருட்டு வழிகளில் தனியே போவது துன்பம் தரும்)

 

நவம்பர் 25 சனிக்கிழமை

 

அருள் இல்லார் தம்கண் செலவு இன்னா (அருள் இலாதவரிடம் உதவி கேட்பது துன்பம் தரும்)

 

நவம்பர் 26 ஞாயிற்றுக் கிழமை

 

உடம்பாடு இலாத மனைவி தோள் இன்னா ( கருத்து ஒற்றுமை இல்லாத மனைவியின் தோள் துன்பமே தரும்)

 

நவம்பர் 27 திங்கட் கிழமை

 

இடன் இல் சிறியாரோடு யாத்த நண்பு இன்னா ( பிழையை மட்டும் பெரிது படுத்தும் நண்பர்களோடு வாழ்வது சுகம் தராது)

நவம்பர் 28  செவ்வாய்க் கிழமை

இடங்கழியாளர் தொடர்பு இன்னா ( காமம், கோபம் மிக்க கீழ்மக்கள் தொடர்பு துன்பமே அளிக்கும்)

 

நவம்பர் 29 புதன் கிழமை

 

இன்னா கடன் உடையார் காணப் புகல் ( கடன் வாங்கியோர், அதைத் திருப்பிக் கொடுக்காதவரை, கடன் கொடுத்தவரைக் காணும் போது எல்லாம் துன்பமே மிகும்)

 

நவம்பர் 30 வியாழக்கிழமை

 

கள் இல்லா மூதூர் களிகட்கு நன்கு இன்னா (குடிகாரர்களுக்கு கள் இலாத ஊர் துன்பத்தைத் தருகிறது)

–சுபம், சுபம்–

 

இது தான் இந்தியா! – ஜிம் கார்பெட்டின் அனுபவம்! – 2 (Post No.4339)

Written by S.NAGARAJAN

 

 

Date: 27 October 2017

 

Time uploaded in London- 7-46 am

 

 

Post No. 4339

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

அதிசய பூமி

இது தான் இந்தியா! – ஜிம் கார்பெட்டின் அனுபவம்! – 2

 

ச.நாகராஜன்

 

நான் அவருக்கு எனது சிகிச்சையால் அவர் நிச்சயம் குணம் அடைவார் என்ற நம்பிக்கையை ஊட்டி விட்டால் வேறு எதுவும் ஒரு பொருட்டல்ல என்று தோன்றியது.

ஆகவே அவரிடம் அவரை எனது காம்பவுண்டிற்கு கூட்டிக் கொண்டு வந்தது அவர் அங்கு இறப்பதற்காக அல்ல என்று கூறினேன். மேலும் அவர் குணமடைவதற்காகத்தான் அவரை அங்கு அழைத்து வந்தேன் என்றும் அதற்கு அவரது முழு ஒத்துழைப்பு தேவை என்பதையும் தெரிவித்தேன்.

முதல் நாள் இரவு எவ்வளவு கஷ்டப்பட்டு  முயற்சி எடுத்த போதும் கூட அவரால் பிழைக்க முடியாது; இறக்கத் தான் போகிறார் என்று தோன்றியது.

ஆனால் காலை விடியும் போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. அந்தக் கணம் முதல் அவர் வெகுவாக முன்னேறிக் கொண்டிருந்தார். அவருக்கு நல்ல பலம் வரச் செய்வது ஒன்று தான் பாக்கி. காலரா மற்ற எந்த வியாதியையும் விட ஒரு மனிதனின் சக்தியை முழுதுமாக உறிஞ்சி விடும். அந்த வார முடிவில் அவர் தனது முழுக் கதையையும் என்னிடம் சொல்ல முடிந்தது.

அவர் ஒரு லாலா. வியாபாரி. தானிய வியாபாரத்தில் ஒரு காலத்தில் செழிப்போடு இருந்தார். பிறகு இது பற்றி ஒன்றுமே தெரியாத ஒருவரைப் பங்காளியாகச் சேர்த்துக் கொண்டார். அங்கு தான் அவர் தவறு செய்தார். சில வருடங்கள் வியாபாரம் நன்றாகத் தான் நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் ஒரு பெரிய பயணத்தை முடித்து விட்டு ஊருக்குத் திரும்புகையில் தன் கடை காலியாக இருந்ததைப் பார்த்தார்.அவரது பங்காளி ஒடியிருந்தார்.

கையிலிருந்த சொற்ப பணம் கடனை அடைக்கவே போதுமானதாக இருந்தது. காசில்லாத நிலையில் அவர் ஒரு வேலையைத் தான் தேடிக் கொள்ள வேண்டியிருந்தது.

 

அடுத்த பத்து ஆண்டுக் காலம் மாதம் ஏழு ரூபாய் சம்பளத்திற்கு அவர் வேலை பார்த்தார். அந்தப் பணம் அவருக்கும் அவரது மகனுக்கும் போதுமானதாக இருந்தது. அவர் மனைவியோ பங்காளி அவரைக் கவிழ்த்து விட்டு கொள்ளையடித்து ஒடிய சில நாட்களிலேயே இறந்து விட்டாள்.

முஸாபுர்பூரிலிருந்து கயாவிற்கு தனது எஜமானனது வியாபார சம்பந்தமாக அவர் ட்ரெயினில் சென்று கொண்டிருந்தபோது நோய்வாய்ப்பட்டார்.

படகில் ஏறிய போது அவர் நிலை மிக மோசமானது. ஆகவே தவழ்ந்து வந்து நதிக்கரையில் படுத்துக் கொண்டார் – புனிதமான கங்கை நதிக் கரையில் சாவதற்காக.

லாலாஜி – வேறு எந்தப் பெயராலும் அவரை எனக்குத் தெரியாது என்பதால் அவர் எனக்கு லாலாஜி தான் – ஒரு மாத காலம் என்னுடன் தங்கி இருந்தார். ஒரு நாள் கயாவிற்குத் தன் பயணத்தைத் தொடர என் அனுமதியை வேண்டினார்.

ஷெட்டுகளின் வழியே இருவரும் நடந்து சென்று கொண்டிருந்த போது அவர் இந்த கோரிக்கையை வைத்தார்.

வேலைக்கு நான் செல்லும் போது என்னுடன் கூட அவர் சிறிது தூரம் நடந்து வருவதற்கான பலம் அவருக்கு அப்போது வந்திருந்தது.

அவர் கயாவிலிருந்து திரும்பி ஊருக்குப் போகும் போது அவர் வேலை பார்த்த இடத்தில் அவரது எஜமானர் இன்னொருவரை அமர்த்தி இருந்தால் அவர் என்ன செய்வார் என்று நான் கேட்டேன்.  இன்னொரு வேலையைத் தேடிப் போவேன் என்றார் அவர்.

“ஏன் நீங்கள் திரும்பி உங்கள் வியாபாரத்தைத் தொடங்க ஒருவரின் உதவியை நாடக் கூடாது?” என்று நான் கேட்டேன்.

“வியாபாரத்தை மீண்டும் தொடங்குவது, மகனுக்கு நல்ல கல்வியை ஏற்பாடு செய்வது ஆகிய இது பற்றித் தான் நான் இரவும் பகலும் தொடர்ந்து சிந்தித்து வருகிறேன். ஆனால், சாஹிப், இந்த உலகில் என்னை நம்பி உதவி செய்ய யாருமே இல்லை. மாதம் ஏழு ரூபாய் சமபளம் வாங்கும் ஒருவனுக்கு, எந்த விதமான உத்தரவாதமும் தர முடியாத என்னைப் போன்ற ஒருவனுக்கு,  வியாபாரத்தைத் தொடங்கத் தேவையான ஐநூறு ரூபாயை யார் தான் தருவார்கள்?” என்றார் அவர்.

 

அன்று இரவு கயாவிற்கு 8 மணிக்கு ட்ரெயின் புறப்படும் சற்று நேரத்திற்கு முன்னதாகவே எனது பங்களாவிற்கு வந்தேன்.

லாலாஜி புதிதாகத் துணியைத் துவைத்துப் போட்டு உடுத்திக் கொண்டிருந்தார். வந்த போது அவர் கையிலிருந்ததை விட சற்றுப் பெரிதான மூட்டை ஒன்று அவர் கையில் இருந்தது. வாராந்தாவில் என்னிடம் விடைபெற்றுக் கொண்டு போவதற்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

அவரிடம் கயாவிற்குப் போவதற்கான டிக்கட்டையும் ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளையும் நான் கொடுத்த போது திக்பிரமை பிடித்த முகத்தோடு நாக்கு பேச முடியாமல் அவர் தவித்தார்.

அவரால் செய்ய முடிந்ததெல்லாம் என் முகத்தையும் தன் கையிலிருந்த நூறு ரூபாய் நோட்டுக்களையும் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தான்!

இறுதியாக வண்டி கிளம்பும் பெல் அடித்தது. இன்னும் ஐந்து நிமிடத்தில் வண்டி கிளம்பப் போகிறது. அதுவரை அவர் அப்படி என்னையும் பணத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

திடீரென்று என் காலில் விழுந்தார் அவர்.

“இந்த அடிமை இன்னும் ஒரு வருட காலத்தில் இந்தப் பணத்தை உங்களிடம் திருப்பித் தந்து விடுவான்” என்றார் அவர்.

ஆக லாலாஜி என்னிடமிருந்து கிளம்பி விட்டார் – நான் சேமித்து வைத்திருந்ததில் நான் கொடுத்த பெரும் பகுதி பணத்தை எடுத்துக் கொண்டு!

 

அவரை நான் மீண்டும் பார்க்கப்போகிறேன் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை!

ஏனெனில் இந்தியாவில் உள்ள ஏழை மக்கள் ஒரு போதும் தங்களிடம் காட்டப்பட்ட அன்பை – நன்றியை – மறப்பதில்லை.

ஆனால் லாலாஜி எனக்குக் கொடுத்த வாக்குறுதி அவரால் நிறைவேற்றப்படக்கூடிய சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்று என்பதே எனது எண்ணம்.

ஆனால் இந்த என் எண்ணம் தவறான ஒன்று!

 

ஒரு நாள் இரவில் சற்று தாமதமாக என் வீட்டிற்கு வந்த போது அங்கு வாரந்தாவில் வெள்ளை வெளேரென்று ஆடை உடுத்திய ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

அறையில் இருந்த வெளிச்சம் அவருக்குப் பின்னாலிருந்து வந்து என் கண்களில் விழுந்திருந்தது. ஆகையால் அவர் யார் என்பதை என்னால் உணரமுடியவில்லை – அவர் பேச ஆரம்பிக்கும் வரை.

லாலாஜி தான் அவர்.

வாக்குறுதிப் படி தனக்குத் தானே கொடுத்துக் கொண்ட கெடு இன்னும் சில நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில் அவர் அங்கு வந்து நின்றிருந்தார்.

அந்த இரவு எனது நாற்காலியின் கீழே அமர்ந்து அவர் தனது வியாபாரம் பற்றிய முழு விவரங்களையும் என்னிடம் விவரித்தார். தான் எப்படி வெற்றி பெற முடிந்தது என்பதைத் தெளிவாகக் கூறினார்.

சில மூட்டைகளை மட்டுமே எடுத்துக் கொண்டு அவர் தன் வியாபாரத்தை ஆரம்பித்தார். ஒரு  மூட்டைக்கு நான்கு அணா லாபம் வந்தால் போதும் என்பதே அவரது இலக்கு.

கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரத்தை விருத்தி செய்து கொண்டே வந்தவர் 30 டன் எடை கொண்ட சரக்கைக் கையாளும் அளவுக்கு உயர்ந்து விட்டார்.

ஒரு டன்னுக்கு மூன்று ரூபாய் லாபம்!

அவரது மகன் நல்ல பள்ளியில் படிக்கிறான். பாட்னாவைச் சேர்ந்த ஒரு பணக்கார வியாபாரியின் மகளை அவர் மணந்து கொண்டார்.

இந்த அனைத்தையும் அவர் 12 மாதங்களுக்குள்ளாகவே சாதித்திருந்தார்.

தனது ட்ரெயினுக்குச் செல்லும் நேரம் வந்து விட்ட போது என் காலடியில் ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை வைத்தார்.

பிறகு தன்னிடமிருந்த ஒரு பையை எடுத்து என்னிடம் கொடுத்து, “இது வட்டிக்காக. நீங்கள் எனக்குக் கொடுத்த பணத்திற்கு 25 சதவிகிதம் வீதம் வட்டி கணக்கிட்டிருக்கிறேன்” என்று கூறியவாறே பையை நீட்டினார்.

நண்பர்களிடம் வட்டியாகப் பணம் வாங்குவது எங்கள் பழக்கம் இல்லை என்று நான் அவரிடம் சொன்ன போது அவர் சற்று ஏமாற்றம் அடைந்திருக்கக் கூடும்.

கிளம்புவதற்கு முன்னர் லாலாஜி என்னிடம் கூறினார்:” நான் உங்களிடம் தங்கி இருந்த காலத்தில் உங்கள் பணியாளர்களிடமும் வேலைக்காரர்களிடமும் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் மூலமாக ஒரு காலத்தில் நீங்கள் ஒரு சப்பாத்தியும் கொஞ்சம் பருப்பும் சாப்பிடும் நிலைக்கு வந்து அப்படியே சாப்பிட்டுக் கொண்டிருந்தீர்கள் என்று அறிந்தேன்.

அது போன்ற ஒரு நிலை எந்தக் காலத்திலாவது உங்களுக்கு மீண்டும் வந்தால் – அப்படிப்பட்ட ஒரு நிலை உங்களுக்கு எந்தக் காலத்திலும் வரக் கூடாது என்று பரமேஸ்வரரைப் பிரார்த்திக்கிறேன் – இந்த அடிமை தன்னிடம் இருக்கும அனைத்தையும் உங்கள் காலடியில் சமர்ப்பிப்பான்.”

பதினோரு ஆண்டுகள் – அதாவது மொகமேகாட்டிலிருந்து நான் கிளம்பும் வரையில் – ஒவ்வொரு வருடமும் லாலாஜியின் தோட்டத்திலிருந்து மிக அற்புதமான தேர்ந்தெடுக்கப்பட்ட மாம்பழங்கள் அடங்கிய பெரிய கூடை எனக்கு வந்து கொண்டிருந்தது.

அவர் பெரிய வியாபாரியாக வேண்டும் என்ற தனது ஆசையில் வெற்றி பெற்று விட்டார் – அவரது பங்காளி அவரைக் கொள்ளையடித்த போது இழந்திருந்த தன் சொந்த இல்லத்திற்கே அவர் திரும்பி விட்டார்.

*

ஜிம் கார்பெட்டின் அழகிய அனுபவம் இப்படி முடிகிறது.

இந்தியாவில் ஒரு ஏழை கூட நன்றியை  மறக்க மாட்டான்; சொன்ன வார்த்தையைக் காப்பாற்றாமல் இருக்க மாட்டான்.

ஜிம் கார்பெட்டின் நெஞ்சை நெகிழ வைக்கும் அழகிய ஆங்கில நடைக்காக ஏன் நீங்கள் அதை ஒரு தரம் ஆங்கிலத்திலேயே படிக்கக் கூடாது.

JIM CARPETT – MY INDIA

நல்ல ஒரு அழகிய நூல்!

*** (முற்றும்)

 

 

 

 

 

இது தான் இந்தியா! – ஜிம் கார்பெட்டின் அனுபவம்! –1 (Post No.4336)

Written by S.NAGARAJAN

 

 

Date: 26 October 2017

 

Time uploaded in London- 7-42 am

 

 

Post No. 4336

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

அதிசய பூமி

இது தான் இந்தியா! – ஜிம் கார்பெட்டின் அனுபவம்! – 1

 

ச.நாகராஜன்

ஜிம் கார்பெட்டை அறியாத இயற்கை ஆர்வலர் இருக்க முடியாது.

வனங்களைக் காக்க வேண்டும் என்பதில் அயராது உழைத்தவர். அதே சமயம் மக்களுக்குத் துன்பம் விளைவித்த ஆட்கொல்லிகளைச் (Man eating Tigers) சுட்டு வீழ்த்தியவர்.

 

அவர் இந்தியாவை நேசித்தார். இந்திய மக்களும் அவருக்கு உரிய மரியாதை கொடுத்தனர்.

 

அவரது ‘மை இந்தியா’ (Jim Carpett’s My India) மிகவும் அருமையான நூல். அதிலிருந்து ஒரு சம்பவத்தை இங்கு தருகிறோம்.

மொழியாக்கம் சொல்லுக்குச் சொல்; வரிக்கு வரி அப்படியே ஆக்கப்படவில்லை. சரளமான சுருக்கமாக இதைக் கொள்ளலாம்.

இதோ அவரது சொற்களிலேயே அவரது அனுபவம்:

*

பயணிகளை ஏற்றி வந்த நீராவிப் படகு சமாரியா காட்டிற்குச் (Samaria Ghat) சற்று தாமதமாகத் தான் வந்தது. பயணிகள் வேகவேகமாக இறங்கி மரத்தாலான பாலத்தைக் கடந்து ப்ராட்கேஜ் ட்ரெயினைப் பிடிக்க விரைந்ததை படகுத்துறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவர்களுக்காக ட்ரெயினைச் சற்று தாமதமாகப் புறப்படுமாறு ஏற்பாடு செய்திருந்தேன்.

 

கடைசியாக படகிலிருந்து இறங்கியவர் ஒரு ஒல்லியான மனிதர். கண்கள் இடுங்கி இருந்தன. அவரது ஒட்டுப் போட்டிருந்த பேண்ட் ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்திருக்க வேண்டும். கையில் ஒரு வண்ண கர்சீப்பில் முடிச்சிடப்பட்ட மூட்டை முடிச்சு ஒன்று இருந்தது.

கையைப் பிடிக்க ஏதுவாக இருந்த கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு மிக மெதுவாக  நதியிலிருந்து இறங்கினார். மிகவும் மோசமான உடல்நிலை அவருடையது என்பது தெரிந்தது.

கங்கை நீரை முகத்தில் தெளித்து முகத்தை அலம்பிக் கொண்ட அவர், மூட்டையிலிருந்து ஒரு துண்டைக் கீழே போட்டு பரப்பி படுத்துக் கொண்டார் – கால்கள் கங்கை நீரில் இருக்கும்படி!

எஞ்சின் விஸில் சத்தம் ஊதியது. வண்டி கிளம்பும் மணி அடித்தது. ஆனால் அவர் நகரவே இல்லை. ட்ரெயினைப் பிடிக்கும் உத்தேசம் அவருக்கு நிச்சயம் இல்லை என்பது இதிலிருந்து தெரிந்தது.

 

அவரிடம் சென்று நான் அவர் ட்ரெயினைத் தவற விட்டு விட்டார் என்று கூறிய போது, அவர், “எனக்கு ட்ரெயினே தேவை இல்லை, சாஹிப், நான் செத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

 

அது மாம்பழ சீஸன் காலம். உக்கிரமான கோடை காலம்.

காலரா தனது உச்ச கட்ட தாண்டவத்தை நடத்திக் கொண்டிருந்தது. அந்த மனிதர் நடைபாதையில் மெதுவாக் நடந்து வருகையில் அவர் ஒரு வேளை காலராவினால் பீடிக்கப்பட்டிருக்கிறாரோ என்று சந்தேகப்பட்டேன். அவரது நோய்வாய்ப்பட்ட தோற்றத்தைக் கண்டபோது என் சந்தேகம் உறுதியானது.

 

நான் கேட்டதற்கு பதிலாக அவர் தான் தன்னந்தனியாகவே பயணம் செய்து கொண்டிருப்பதாகவும் மொகமே காட்டில் (Mokameh Ghat) அவருக்கு ஒரு நண்பரும் இல்லையென்றும் சொன்னார்.

 

ஆகவே அவரை கையைப் பிடித்து இருநூறு கஜ தூரம் வழி நடத்திச் சென்றேன். எனது பங்களாவையும் கங்கை நதியையும் பிரிக்கும் எல்லை அது.

 

அவரை எனது பங்கா கூலிகள் தங்கும் விடுதியில் அமரவைத்து ஆசுவாசப்படுத்தினேன். அந்த விடுதியில் அப்போது யாரும் இல்லை. காலியாகத் தான் அது இருந்தது. எனது வேலைக்காரர்கள் தங்கும் விடுதியிலிருந்தும் அது தனிப்பட்டுத் தான் இருந்தது.

 

 

மொகமேகாட்டில் தான் நான் கடந்த பத்து வருட காலமாக வாசம் செய்து கொண்டிருக்கிறேன். அங்கு பெரிய ஒரு வேலைக்காரர் பட்டாளத்திற்கு வேலை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். சிலர் நான் அவர்களுக்கென கட்டியிருக்கும் விடுதியில் தங்கி இருக்கின்றனர். அதன் மேற்பார்வையையும் நான் தான் செய்து வந்தேன். மற்றவர்கள் சுற்றுப்புறத்தில் இருந்த கிராமங்களில் வசித்து வந்தனர்.

எனது ஆட்களிடமும் சுற்றுப்புற கிராம மக்களிடமும் காலரா செய்த கொடுமையை நான் கண்ணாரக் கண்டு விட்டேன். அந்த கெட்ட வியாதி ஒருவேளை என்னைப் பிடிக்குமானால் ஒரு நல்ல மனிதர் என் மீது இரக்கம் கொண்டு என் நெற்றியில் ஒரு புல்லட்டை சுடட்டும் அல்லது நினைவை இழக்கும் வண்ணம் கஞ்சாவைத் தரட்டும் என்று நான் வேண்டியவாறு இருந்தேன்.

 

காலராவினால் ஒவ்வொரு வருடமும் இறந்ததாகச் சொல்லப்படும் பல்லாயிரக் கணக்கானோரில் அனைவருமே காலராவினால் இறக்கவில்லை அதில் குறைந்தபட்சம் பாதிப் பேராவது பயத்தினாலேயே செத்து விட்டனர் என்று நான் கூறியதை நீங்கள் உட்பட பலரும் ஆமோதிப்பீர்கள்.

 

வெளிநாட்டிலிருந்து கொஞ்ச காலத்திற்கோ அல்லது நீண்ட காலத்திற்கோ பயணமாக வரும் பயணிகளுக்கு மாறாக இந்தியாவிலேயே வாழும் நாம் அனைவரும் விதியை நம்புபவர்கள் – அதனால் ஒருவனுக்கு ‘வேளை வரும் வரையில்’ அவன் இறக்க மாட்டான் என்று நம்புபவர்கள்.

 

இதனால் நாம் எல்லோரும் கொடூரமான தொத்து வியாதிகளை அலட்சியம் செய்பவர்கள் என்று அர்த்தமில்லை. காலரா நாடெங்கும் படை எடுத்துப் பரவி இருந்தது. அது தொத்து வியாதியாகப் பரவும் சமயத்தில் பலர் பயத்தினாலேயே இறந்தனர் – வியாதி பீடிக்கப்படாமலேயே!

 

என பங்கா கூலிகள் விடுதியில் தங்கி இருந்த அந்த மனிதர் காலராவினால் பீடிக்கப்பட்டிருந்தார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஒரு வேளை அவர் தப்பிப் பிழைக்க வேண்டுமென்றால் அவரது நம்பிக்கையும் என் கத்துக்குட்டி சிகிச்சையும் தான் அவரைக் காப்பாற்ற வேண்டும்.

ஏனெனில் மருத்துவ சிகிச்சை என்பது பல மைல்கள் தள்ளி அப்பால் இருந்தது. அங்கு தான் ஒரு முரட்டு டாக்டர் இருந்தார். அவரது கடுமை அவரது திறமையற்ற தன்மைக்குச் சமமாகவே இருந்தது.

 

 

என்னால் வழக்கமாக ட்ரெயினில் அனுப்பப்படும் பயிற்சிகால க்ளர்க் (Probational Clerk) ஒருவர் என்றோ ஒரு நாள்அவரது கர்ண கடூரமாகப் பேசும் தொண்டையை அறுத்து அவரை இலேசான இந்தக் கொடுமை மூலம் ‘விடுவித்து’ விடுவார் என்றே நான் நம்பிக் கொண்டிருந்தேன். அந்த அளவுக்கு அவர் அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்து வைத்திருப்பவர்!

 

எனது க்ளர்க், டாக்டர் மற்றும அவரது மனைவியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக ஆகி இருந்தார். அவர்கள் இருவரும் நடத்தை கெட்டவர்கள். எகிப்திய சுக போகங்களையும் இந்தியாவில் மொகமேகாட்டிற்கு வருவதற்கு முன்னர் தாங்கள் அனுபவித்த இன்ப சுகங்களையும் இப்போது இழந்து விட்டோம் என்றும் க்ளர்க்கிடம் அவர்கள் கூறி இருந்தனர். இந்த தகவல் க்ளர்க்கைச் சிந்திக்க வைத்தது.

 

சில நாட்கள் கழிந்தன. நீராவிப் படகு மொகமேகாட்டிலிருந்து கடைசியாகப் புறப்படுவதற்குச் சற்று முன்னர் டாக்டருக்கு ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது.

 

அதைப் படித்த டாக்டர் தன் மனைவியிடம் சமாரியா காட்டிற்கு அவசரமாக ஒரு கேஸைப் பார்ப்பதற்குச் செல்ல வேண்டும் என்றும் இரவு முழுவதும் அங்கு இருக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்தார்.

 

வீட்டை விட்டு வெளியே மரங்கள் அடர்ந்த இடத்தில் அவரை க்ளர்க் சந்தித்தார். மிக மிக இரகசியமாக அவர் ஒரு கட்டிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அதில் இருந்த காலியான அறைக்கு அவர் கூட்டி வரப்பட்டார். அந்தக்  கட்டிடத்தில் தான் எனது வேலையாட்களில் ஒருவன் சில நாட்களுக்கு முன்னால் நிலக்கரி வாயுவினால் ஏற்பட்ட விஷத்தால் செத்திருந்தான்.

 

அந்த அறையில் டாக்டர் சற்று நேரம் காத்திருந்தார். அந்த அறையில் ஒரு கனமான கதவு இருந்தது. ஒரே ஒரு ஜன்னலும் இருந்தது.

 

சிறிது நேரம் கழித்து அறைக் கதவு திறந்தது. முகத்திரை இட்ட ஒரு ஆள் அறையில் நுழைந்தான், பிறகு கதவு வெளியில் பூட்டப்படும் சப்தம் கேட்டது.

 

அன்று குட்ஸ் ஷெட் வழியாக இரவு சற்று தாமதமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.

அப்போது க்ளர்க்கும் அவரது டியூடியை அடுத்து ஏற்க வரும் சகாவும் மிகவும் கிளர்ச்சியூட்டப்பட்ட விதத்தில் பேசுவதைக் கேட்டேன்.

 

மறு நாள் காலை நான் வேலைக்கு வரும் வழியில் அந்த அறையின் முன் பெருங்கூட்டம் ஒன்று கூடி இருப்பதைக் கண்டேன்.

 

அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு அப்பாவி மனிதர் அங்கு யாரோ ஒருவர் அடைக்கப்பட்டிருப்பதாகவும் வெளியில் பூட்டு போடப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

 

உடனே எனது ஆட்களில் ஒருவரை அழைத்து ஒரு சுத்தியலைக் கொண்டு அந்தப் பூட்டை உடைக்குமாறு கூறி விட்டு என் வ்ழியில் விரைந்தேன். ஏனெனில் அது உடைக்கப்படும் போது அதில் இருப்பவர் படும் பாட்டைக் காண நான்

ஆசைப்படவில்லை. சட்டபூர்வமான எனது வேலைக்குச் சென்று விட்டேன்.

அன்றைய எனது டயரியில் மூன்று குறிப்புகள் என்னால் எழுதப்பட்டன.

 

 

  • டாக்டரும் அவரது மனைவியும் அவசரமான சொந்த விஷயம் காரணமாக வெளியூர் சென்று விட்ட்னர்.
  • பயிற்சி காலத்தில் வேலை பார்த்து வந்த க்ளர்க் ஷிவ் தேவ் டேலி க்ளர்க்காக (Tally Clerk) (நிரந்தர வேலை) மாதம் இருபது ரூபாய் ஊதியத்தில் நியமிக்கப்பட்டார்.
  • கதவில் இருந்த பூட்டு, பாட் லாக் எஞ்சின் ஏறி சேதம் அடைந்ததால் புதிய பூட்டு, புதிய பாட் லாக் அறைக்குப் போடப்பட்டன,

மொகமேகாட் பகுதி கடைசி கடைசியாக அந்த டாக்டரையும் அவர் மனைவியையும் பார்த்தது அப்போது தான். மருத்துவப் பதவிக்கு களங்கம் விளைவிக்கும் அந்த மனிதரை அதற்குப் பின்னர் அந்தப் பகுதியிலேயே யாரும் பார்க்கவில்லை!

 

 

என்னிடம் ஏற்கனவே காலரா நோயால் பாதிக்கப்பட்டிருந்த மூன்று நோயாளிகள் இருந்ததால் புதிதாக வந்த மனிதருக்கு சிகிச்சை அளிக்க எனக்குப் போதுமான நேரம் இல்லை. என் வேலையாட்களிடமிருந்தோ நான் எந்த ஒரு விதமான உதவியையும் எதிர்பார்க்க முடியாது,. ஏனெனில் அவர்கள் ஜாதி வேறு, வந்தவரின் ஜாதி வேறு. அத்துடன் அவர்களை உதவி செய்ய அழைத்தால அவர்களுக்கு இந்த தொத்து வியாதி வந்தால், அதுவும் சரியாக இருக்காது.

என்ன செய்வது?

*** (தொடரும்)

 

கர்ப்பூரமாமோ கடலுப்பு? (Post No.4321)

Written by London Swaminathan

 

Date: 21 October 2017

 

Time uploaded in London- 6-17 am

 

 

Post No. 4321

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கர்ப்பூரமும் வெள்ளை நிறம்; கடலுப்பும் வெள்ளை நிறம்.

இயற்கையில் கிடைக்கும்போது இரண்டும் ஒரே தோற்றம்.

ஆயினும் கர்ப்பூரமும் கடலுப்பும் ஒன்றாகுமா?

 

நான் மதுரையில் இருந்தபோது ஒரு பெரிய மில்லின் (நெசவாலை) ஒரு பெரிய அதிகாரியை எனது நண்பர் ஒருவர் கிண்டல் செய்வார். “அவன் யார் தெரியுமா? என் கூடப் படித்த காலத்தில் நசுங்கிய பித்தளைப் பாத்திரத்தில் தினமும் தயிர் சோறு கொண்டு வருவான்; பரம ஏழை; இன்று பார்! அவன் காரில் போகிறான்; நான் இங்கே உன்னுடன் உடகார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருகிறேன்” என்பார்.

 

அவரே இன்னொரு விஷயமும் சொல்லுவார்– ” பார் என் பாட்டியும் விக்டோரியா மஹாராணியாரும் ஒரே நேரத்தில் ஒரே வருடத்தில் பிறந்தவர்கள்; இதோ பார்! ஜாதகம்! என்று காட்டுவார். பாராண்ட விக்டோரியா மஹாராணி எங்கே? பார்வை இழந்த மதுரைக் கிழவி எங்கே?

 

ஆக, நம்மில் பலரும் அறியாமையின் காரணமாகவோ, பொறாமையின் காரணமாகவோ உயர்ந்த பதவியில், உயர்ந்த நிலையில் உள்ளவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் கொள்வோம். அவர்களுடைய முயற்சி, உழைப்பு முதலியவற்றை மறைத்துவிட்டு நம்மை அவர்களுக்குச் சரி சமமாக காட்ட முயல்வோம். இது தவறு என்பதை விளக்க சில அழகான தமிழ்ப் பாடல்கள் உள.

 

கர்ப்பூரம் போலக் கடலுப் பிருந்தாலுங்

கர்ப்புர மாமோ கடலுப்புப் — பொற்பூரும்

புண்ணியரைப் போல இருந்தாலும் புல்லியர்தாம்

புண்ணியரா வாரோ புகல்

–நீதி வெண்பா (எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை)

 

பொருள்:

கடல் நீரில் உண்டாகும் உப்பு,   கர்ப்பூரத்தைப் போலவே இருந்தாலும், அந்த உப்பு, கர்ப்பூரம் ஆகி விடுமா?

ஒருக்காலும் ஆகாது, அது போல,

 

தீச்செயல் புரிவோர், தோற்றத்தில், அழகு மிக்க நல்வினையாளர் போலத் தோன்றினாலும்,  அவர்கள் புண்ணியர் ஆகிவிடுவரோ? நீயே சொல்.

கான மயிலும் வான் கோழியும் ஒன்றா?

 

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானு மதுவாகப் பாவித்துத் — தானுந்தன்

பொல்லாச் சிறகைவிரித்  தாடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கவி – வாக்குண்டாம்

 

முறையாக யாப்பிலக்கணம் கற்காதவன், கற்றறிந்தோர் சபையில் கவி பாடுவதானது காட்டில் உள்ள மயில் தன் அழகிய தோகையை விரித்தாடியதைக் கண்ட வான் கோழி, தன்னையும் அந்த மயில் என்று எண்ணிக் கொண்டு, அதுவும் தன் அழகில்லாத சிறகுகளை விரித்தாடியது போலாகும்.

 

கல்லாதவன்= வான் கோழி

கற்றவன்= கான மயில்

 

தவறான கவிதைகள் = வான் கோழிச் சிறகு

இலக்கணக் கவிதைகள்=  மயில்தோகை

நாம் வான் கோழியைப் பின்பற்றமல் இருப்போமாக!

 

TAGS:–கற்பூரம், கர்ப்பூரம் உப்பு, மயில், வான்கோழி

சுபம்–

குரங்கு கையில் கொடுத்த பூ மாலை போல! (Post No.4285)

Written by London Swaminathan

 

Date:9 October 2017

 

Time uploaded in London- 7-14

 

Post No. 4285

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

எனது தபால் தலை ஆல்பத்தில் பறவைகளுக்கு பூக்களுக்கு, மிருகங்களுக்கு என்று பல தனித்தனி ஆல்பங்கள் வைத்திருக்கிறேன். அதில் குரங்குகள் படங்கள் உள்ள அஞ்சல் தலைகளைப் பார்த்   தவுடன் குரங்குப் பழமொழிகள் ஞாபகம் வந்தது. கூடவே கொஞ்சம் புத்தகத்தையும் பார்த்து எடுத்தேன். பழமொழிகள் பற்றி எனது பிளாக்கில்(BLOGS) 50-க்கும் மேலான கட்டுரைகள் உள. அத்துடன் இதுவும் சேரட்டுமே!

 

 

1.குரங்கானாலும் குலத்திலே கொள்ள வேண்டும்

2.குரங்கின் கை பூ மாலை

3.குரங்கின் கையில் கொள்ளி அகப்பட்ட கதை

4.குரங்கின் கையில் சிக்கிய பாம்பு போல

 

5.குரங்கின் தலையில் கரகம் வைத்து காளி கும்பிட்டது போல

6.குரங்கின் பீயை மருந்துக்குக் கேட்டால் கொடுக்குமா? அடித்து வாங்க வேண்டுமா?

7.குரங்கின் வயிற்றிலே குஞ்சரம் பிறந்த்து போல

8.குரங்கு எல்லாம் கூட்டம் கூட்டமாக இருக்கும்

9.குரங்கு ஏறாத கொம்பு உண்டா?

 

10.குரங்கு கள்ளும் குடித்து, பேயும் பிடித்து, தேளும் கொட்டினால் என்ன கதி ஆகும்?

 

 

11.குரங்கு கையில் குட்டிக்குக் கள் வார்தாற்போல

12.குரங்கு கையில்பூமாலை அகப்பட்டது போல

13.குரங்குக்குப் புத்தி சொல்லி தூக்கணாங் குருவி கூடு இழந்தது (பஞ்ச தந்திரக் கதை)

 

14.குரங்குக்கும் தன் குட்டி பொன் குட்டி (காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு)

 

 

15.குரங்கு தன் குட்டியின் கையைக் கொண்டு பதம் பார்க்கிறது போலப் பார்க்கிறான்.

 

16.குரங்குப்பிடி போல பிடிக்க வேண்டும்

17.குரங்குப் பிடியே பிடி

18.குரங்குப் பிணமும் குறவன் சுடுகாடும் கண்டது இல்லை

19.குரங்குப் புண் ஆறாது

20.குரங்குப்புண் பிரம்மாண்டம்

21.குரங்கு முகமெல்லாம் ஒரு முகம்

 

22.மரத்தில் அறைந்த முளையை மர்க்கடம் பிடுங்கினாற்போல

 

23.மந்தி மயிரை மருந்துக்குக் கேட்டால் மரத்துக்கு மரம் தாவும்

 

24.உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு- கம்பன்

25.மூஞ்சியைப் பாரு, முகரையைப் பாரு, குரங்கு மூஞ்சி!

26.குற்றாலத்துக் குரங்கே, மரத்தை விட்டு இறங்கு

27.அவன் தம்பி அங்கதன்

 

FROM SANSKRIT :–

28.மற்கட (குரங்கு வழி) நியாயம், மார்ஜர ( பூனை வழி) நியாயம்

குரங்கானது குட்டியைத் தூக்காது; குட்டிதான் பிடித்துக்கொள்ளும்; பூனையின் குட்டியை பூனையே வாயில் தூக்கிச் செல்லும்.

 

–SUBHAM–

 

உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர் மீட்கப்படுமா? – 1 (Post No.4254)

Written by S.NAGARAJAN

 

Date: 29 September 2017

 

Time uploaded in London- 6-10 am

 

Post No. 4254

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பாக்யா 28-9-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் (ஏழாம் ஆண்டு 32வது கட்டுரை)  வெளியாகியுள்ள கட்டுரை

 

 

உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 1

 

 

 ச.நாகராஜன்

 

 

“இயற்கையில் கிடைப்பதில் மிகவும் கடினமானது வைரமே. வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும் – அறிவியல் தகவல்

      இயற்கை நமக்கு அளிக்கும் செல்வத்தில் தங்கத்திற்கு அடுத்தபடியாக அனைவரும் விரும்புவது வைரத்தையே. இதில் மதம், ஜாதி, மொழி, நாடு, இனம், பால் என்ற பாகுபாடே இல்லை.

அனைவரும் விரும்பும் ஜொலிக்கும் வைரத்தைக் கண்டு அறிவியல் கூட வியக்கிறது.

வைரம் பல பில்லியன் ( ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி) ஆண்டுகள் பழமையானவை. சில சமயம் 300 கோடி ஆண்டுகள் பழமையான வைரங்கள் கிடைக்கின்றன.

நூறு மைல் ஆழத்தில் பூமியில் புதைந்து கிடைக்கும் வைரம் எரிமலை வெடிப்புகளினால் மேலே வருகிறது.

வைரத்தில் இருப்பது ஒரே ஒரு பொருள் தான் – கார்பன் தான் அது. நூறு சதவிகிதம் கார்பன்!!

பூமியின் கீழே உள்ள அதீத வெப்பத்தினாலும் அழுத்தத்தினாலும் கார்பன் அணுக்கள் தனித்தன்மையினால் ஒன்றிணைகின்றன. அதிசயமான வைரமாக ஆகின்றன.

அடமாஸ் (adamas) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து உருவான ஆங்கில வார்த்தை தான் டயமண்ட். இதன் பொருள் அழிக்க முடியாதது, ஜெயிக்க முடியாதது என்பதாகும். வைரத்தை முதன் முதலில் உலகில் கொண்டிருந்த ஒரே நாடு இந்தியா தான்.

கிறிஸ்துவுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே வைரத்தை இந்திய மக்கள் அணிந்திருந்தனர். தாங்கள் வணங்கும் தெய்வச் சிலைகளிலும் அதை அணிவித்திருந்தனர்.

      வைரத்தை அணியாத பெரிய மன்னனே கிடையாது. ஆடைக்கும் மேலாக வைரத்தை மன்னர்கள் மதித்து அதை அணிந்து வந்தனர். அரசவைகளில் எந்த அந்தஸ்து உள்ளவர் எப்படிப்பட்ட நவரத்ன மணியை எந்த விதத்தில் பதித்து அணிய வேண்டும் என்பதற்கு கடுமையான விதி முறைகள் இருந்தன.

   வைரத்தைப் பற்றி அக்னி புராணம் உள்ளிட்ட பல நூல்கள் பல அரிய, இரகசியமான கருத்துக்களைத் தெரிவிக்கின்றன.

     இந்திய வைரங்களை உலகினர் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். வைர நாடு என்றே இந்தியா அழைக்கப்பட்டது. வெனிஸ் நகரிலும் ஐரோப்பாவில் பல நகரங்களிலும் இந்திய வைரங்களை விற்கும் வைரச் சந்தைகள் இருந்தன.

1725ஆம் ஆண்டு தான் பிரேஜிலில் ஒரு வைரச் சுரங்கம் கண்டு பிடிக்கப்பட்டது.

ஆயிரத்தி எண்ணூறுகளில் தான் தென் ஆப்பிரிக்காவில் வைரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இப்போது கனடா, போட்ஸ்வானா, நமீபியா, ரஷியா உள்ளிட்ட நாடுகளிலும் வைரம் கிடைக்கிறது.

     உலக வைரங்களில் பெரிய வைரம் தென் ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட கல்லினன் வைரம் தான். இதன் எடை 3106 காரட், (ஒரு காரட் என்பது 0.2 கிராம்). இது எட்வர்ட் மன்னனுக்கு அளிக்கப்பட்டது. பின்னர் இது ஒன்பது பெரிய துண்டுகளாகவும் நூறு சிறிய துண்டுகளாகவும் வெட்டப்பட்டது. மூன்று பெரிய துண்டுகளை டவர் அஃப் லண்டனில் உள்ள கண்காட்சியில் காணலாம்.

    ஆனால் இந்த வைரங்களில் எல்லாம் மிகச் சிறந்த வைரமாக இந்தியர்களின் உரிமைச் சொத்தாகக் கருதப்படுவது கோஹினூர் வைரம் தான்.

அதன் கதையே விசித்திரமானது; சுவையுடன் சோகம் கலந்த ஒன்று.

கோஹினூர் வைரம் இந்தியாவின் பரம்பரைச் சொத்து. அது இன்று இங்கிலாந்தில் இருக்கிறது.

வெள்ளையர் அடித்த கொள்ளையில் கோஹினூரும் ஒன்று. அதை மீட்டு இந்தியாவிற்குக் கொண்டு வர வேண்டும் என்று நீண்ட காலமாகப் பெரும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

 

கோஹினூர் என்றால் பாரசீக மொழியில் ஒளி மலை என்று பொருள்.

இது எவ்வளவு பழமையானது என்பது யாருக்கும் தெரியாது.

இதன் பழைய காலப் பெயர் ஸ்மயந்தக மணி.சம்ஸ்கிருத நூல்கள் பலவற்றிலும் இதன் புகழ் மற்றும் அருமை பெருமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பகவான் கிருஷ்ணர் உள்ளிட்டோரால் இந்த மணி மதிக்கப்பட்டது என்பது பரம்பரையாக வழங்கி வரும் ஐதீகம்.

   அத்துடன் இந்த கோஹினூருடன் கூடவே ஒரு சாபமும் உண்டு என்று நம்பப்படுகிறது.

   ஆண்களிடம் இது இருந்தால் அது அவர்களுக்கு ஆபத்தையே தரும். பெண்கள் இதை அணியலாம். இது தான் சாபம்.

  இதன் பழைய கால எடை 793 கிராம். இன்றோ வெட்டப்பட்டு வெட்டப்பட்டு சுமார் 105 கிராமாகச் சுருங்கி விட்டது.

   காகதீய வம்சம் இந்தியாவில் ஆட்சி புரிந்த போது ஆந்திர பிரதேச்த்தில் கோல்கொண்டா பிரதேசத்தில் இது மீண்டும் கிடைத்ததாக ஒரு வரலாறும் உண்டு.

மத்திய ஆசியாவிலிருந்து கைபர் கண்வாய் (இன்றைய ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ளது இது) வழியே இந்தியாவினுள் 1526ஆம் ஆண்டு நுழைந்த பாபர் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார். அதிலிருந்து சுமார் 300 ஆண்டுகள் இந்த முகலாய ஆட்சி தொடர்ந்தது.

    முகலாய அரசரான ஷாஜஹான் 1628ஆம் ஆண்டு தனது சிம்மாசனத்தில் வைரங்களைப் பதித்தார். இதைச் செய்ய சுமார் ஏழு ஆண்டுகள் பிடித்தது.

இதன் விலையோ தாஜ்மஹாலுக்கு ஆன செலவைப் போல நான்கு ம்டங்கு அதிகம்! தாஜ்மஹால் கட்டப்பட்டு வந்த அதே காலகட்டத்தில் தான் இந்த சிம்மாசனமும் உருவாகிக் கொண்டிருந்தது. இந்தச் செய்தியை அரசவை குறிப்புகளை எழுதி வந்த அஹ்மத் ஷா லாகூர் எழுதி வைத்துள்ளார்.

                        (கோஹினூரின் கதை தொடரும்)

அறிவியல் அறிஞர் வாழ்வில் . ..

பிரபல கணித மேதையான் ஆட்ண்ரூ வைல்ஸ் (Andrew Wiles)  358 ஆண்டுகளாக யாராலும் தீர்க்கப்பட முடியாமல் இருந்த ஃப்ரெமெட்டின் லாஸ்ட் தியரம் (Fermet’s Last Theorem) என்ற கணிதப் புதிரை விடுவித்தது உலகையே வியப்பில் ஆழ்த்திய ஒரு சம்பவம்.

1637ஆம் ஆண்டு  பிரான்ஸை சேர்ந்த சட்ட வல்லுநரும் கணிதத்தைப் பொழுதுபோக்காகக் கொண்டவருமான ஃபெர்மெட் ஒரு சாதாரணப் புதிர் கணிதத்தை கணித மேதைகள் முன்னர்  சவாலாக தீர்வுக்காக வைத்தார். அதை யாராலும் தீர்க்க முடியவில்லை.

ஆண்ட் ரூ வைல்ஸ் பத்து வயதில் சிறுவனாக இருந்த போதே இந்த தீர்க்கப்பட முடியாமல் இருந்த புதிர் மீது ஒரு கண்ணை வைத்தார். அதற்கான விடையை எப்படியாவது கண்டு பிடித்து விடுவது என்று தணியாத வெறியைக் கொண்டார். 1986ஆம் ஆண்டு பிரின்ஸ்டனில் கணிதத்துறையில் சேர்ந்தவுடன் மிகவும் இரகசியமாக இந்தப் புதிரை ஆராய ஆரம்பித்தார்.ஏழு வருடங்கள் ஓடின.

இங்கிலாந்தில் 1993இல் நடந்த ஒரு கணித மாநாட்டில் திடீரென்று தனது உரையின் மூன்றாவ்து பகுதியில் இந்தக் கணிதப் புதிரை தான் விடுவித்து விட்டதாகக் கூறவே உலகமே பரபரப்படைந்தது. மறு நாளே நியூயார்க் டைம்ஸ் இதைப் பெரிதாக வெளியிட்டது.

தனது 200 பக்க உரையை அவர் வெளியிடவே அது சரிதானா என்று ஆராய ஆறு மதிப்பீட்டாளர்கள் நியமிக்கப்பட்டனர். அனைவரின் சந்தேகங்களுக்கும் பொறுமையாக் விடையளித்தார் வைல்ஸ். உலகமே அவரைக் கொண்டாட ஆரம்பித்தது. எந்த ஒரு விஷயத்தையும் தணியாத ஏகாக்கிர சிந்தையுடன் அணுகினால் அதில் வெற்றி பெறலாம் என்பதை நிரூபித்து விட்ட மாமேதையாக இலங்குகிறார் வைல்ஸ்

***

கழுதைக்கும் ராஜா மகளுக்கும் கல்யாணம்; இந்திரன் மகன் பற்றி சுவையான கதை (Post No.4214)

கழுதைக்கும் ராஜா மகளுக்கும் கல்யாணம்; இந்திரன் மகன் பற்றி சுவையான கதை (Post No.4214)

 
Written by London Swaminathan

 

Date: 15 September 2017

 

Time uploaded in London- 6-33 am

 

Post No. 4214

 

Pictures are taken from various sources; thanks.

 

 

இந்திரலோகத்தில் ஒரு கொண்டாட்டம்; எல்லா தேவர்களும் வந்திருந்தனர். ஆட்டம் பாட்டம் அதிகரித்தது; அப்சரஸ் என்னும் அழகிய தேவதைகள் நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர். இந்திரனுக்கு ஒரு மகன் உண்டு. அவன் பெயர் கந்தர்வசேனு. அவன் ஒரு அப்சரஸ் மீது கை வைக்கவே இந்திரனுக்கு மஹா கோபம்.

“சீ! கழுதை! நீ பூலோகத்தில் கழுதையாகப் போகக்கடவது” என்று சபித்துவிட்டார்.

 

 

உடனே வாயுதேவன், அக்கினி தேவன், யமன் , சூரியன், வருண தேவன் முதலானோர், ” அடக் கடவுளே! இளம்சிட்டு அறியாமல் பருவக் கோளாறினால் செய்த செயலுக்கு இவ்வளவு கடும் தண்டனையா? ரத்து செய்யுங்கள்” என்று மன்றாடினர்.

 

ஆனால் உலகிலேயே அற்புதமான இந்துமதம் உண்மை- ஸத்யம் என்னும் அஸ்திவாரத்தின் மீது அமைந்தது; கடவுளே ஆனாலும் இதை மீற முடியாது. ஒரு வரமோ சாபமோ கொடுக்கப்பட்டுவிட்டால் அதில் பின்வாங்குதல் என்பதே கிடையாது. இதிஹாச, புராணங்கள் அ னைத்திலுள்ள கதைகளிலும் இந்த அற்புதமான கொள்கையைக் காணலாம். ஆனால் வருத்தப்படுவோருக்கு சாப விமோசனம் கொடுக்கலாம். ஆகவே இந்திரனும், “சரி, போ! பகல் முழுதும் கழுதையாக இரு; இரவு நேரத்தில் அழகிய இளைஞனாக இரு” என்று ஒரு துணை விதியை நுழைத்தார்.

 

 

இந்திரன் மகன் என்றால் என்ன கொக்கா? கொம்பனா? சாபத்தின் படியே பூமியில் கழுதையாக விழுந்தார். அப்போது ஒரு பிராமணன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார். அன்பரே எனது கதையைக் கேளும் என்று ஆதீயோடு அந்தமாக நடந்தவற்றைச் சொல்லிவிட்டு, இந்த நாட்டு மன்னனான தாரு என்பவரின் மகளை—இளவரசியை– எனக்கு மணம் முடிக்க அருள் செய்க” என்று வேண்டினான்.

 

அந்தப் பிராமணனும் அரசன் தாருவிடம் சென்று எல்லாவற்றையும் சொல்லி கல்யாணம் செய்து கொடுங்கள் என்றார்.

கழுதைக்கு என் மகளைக் கல்யாணம் முடிப்பதா? அவன் சொல்லுவது உண்மையானால் ஒரு அற்புதத்தையாவது செய்து காட்டட்டும்; அப்போதுதான் நான் நம்புவேன் என்றார்.

 

இந்திரன் மகன் கந்தர்வ சேனு கழுதை உருவத்தில் இருந்தபோதிலும் ஒரு பெரிய இரும்புக் கோட்டையை இரவோடிரவாக கட்டிக் காட்டினான். அரசனுக்கு நம்பிக்கை பிறந்தது.

மன்னரே! மனிதனின் உருவம் என்பது மேல் சட்டை போன்றது. அதைக்கண்டு ஏமாறக்கூடாது; ஆளைக் கண்டு ஏமாறாதேடா ஊது காமாலை என்றும் ஆள் பாதி ஆடை பாதி என்றும் பழமொழிகள் இருப்பதை நீங்கள் அறியவில்லையா? என்றெல்லாம் கந்தர்வசேனு மன்னனிடம் சொல்லி அவரை அமைதிப்படுத்தினான்.

 

 

 

உடனே அரசனுக்கு நம்பிக்கை பிறந்தது. கல்யாணத்திற்கு, பிராமணர்களைக் கொண்டு தேதி நிச்சயித்தார். வெளி நாட்டு அரசர்களுக்கும் உள்நாட்டு அரசர்களுக்கும் அழைப்புகள் பறந்தன. ஊரெல்லாம் கொண்டாட்டம்; அலங்காரம்.

 

இள்வரசி தேவதை போல உடுப்பு அணிந்து அலங்கார பவனி வந்தாள். கழுதை மாப்பிள்ளையிடம் இளவரசியை ஒப்படைத்தான் மன்னன் தாரு. கழுதைக்கு ஏக குஷி; ‘காழ் காழ்’ என்று கழுதை போலக் கத்தியது

 

கழுதையைப் பார்த்தவுடன், அதன் குரலைக் கேட்டவுடன்,  மற்றவர்களுக்கு ஒரே சிரிப்பு; முகத்தை மறைத்துக் கொண்டு இளி இளி என்று இளித்தனர். பல இளவரசர்களுக்கு வருத்தம். நமக்கு இந்த தேவதை– பேரழகி கிடைக்க வில்லையே! ஒரு கழுதைக்கு அடித்ததே யோகம் — என்று அங்கலாய்த்தனர்.

 

பிராமணர்களோவெனில் ஒருகாலத்தில் ஒட்டகத்துக்கும் கழுதைக்கும் நடந்த கல்யாணக் கதைகளைச் சொல்லி மன்னனை ஊக்குவித்தனர். அவர்களுக்கு நல்ல தட்சிணை கிடைத்தது.

 

 

அரண்மனைப் பெண்களுக்கும் தோழிகளுக்கும் ரொம்ப வருத்தம். மன்னரே இப்படிச் செய்வது நல்லதா? உமக்கே அடுக்குமா? இது என்ன அநியாயம்? என்றார்கள்.

 

ஆனால் அன்றிரவு ஒரு அற்புதம் நடந்தது; கழுதையானது அழகிய இளவரசன் ரூபத்தில் தோன்றியது. மன்ன னுக்கும் இளவரசிக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

 

 

அரசனுக்கு ஒரு யோஜனை உதித்தது. ஒன்றிரண்டு நாள் இதைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் செத்துப்போன கழுதையின் உடல் வெளியே இருப்பதைப் பார்த்தான். இந்த கழுதை உடலை எரித்துவிட்டால் இளவரசன் எப்போதும் இளவரசனாகவே இருப்பானே என்று கருதி ஒரு நாள் இரவில் கழுதையின் உடலை எரித்துவிட்டான்.

 

அன்று முதல் கந்தர்வ சேனு சாபம் நீங்கி என்றும் இளவரசனாக விளங்கினான்.

 

இந்தக் கதை நூறு ஆண்டுகளுக்கு முன் பாதிரியார் ஆஸ்பார்ன் மார்டின் எழுதிய இந்தியக் கடவுள்கள் என்ற புத்தகத்தில் உள்ளது; மொழி பெயர்ப்பு லண்டன் சுவாமிநாதன்.

—சுபம்—

இந்துக்களின் மூன்று உலக மஹா கண்டுபிடிப்புகள்!!! (Post No.4200)

Written by London Swaminathan

 

Date: 10 September 2017

 

Time uploaded in London- 17-10

 

Post No. 4200

 

Pictures are taken from various sources; thanks.

 

வேதத்தில் இந்துக்கள் கேட்பது என்ன?

 

ரிக் வேதத்தில் ஆயிரத்துக்கும் மேலான துதிகள் உண்டு. சில துதிகளைப் படித்தால் அவர்கள் (ரிஷிகள்) என்ன வேண்டினார்கள் என்பது தெரியும்:

 

ஒவ்வொரு துதியும் இறைவனின் மகத்தான சக்தியைப் போற்றும் . இறைவனின் சாதனைகளைப் பட்டியலிடும். பின்னர் செல்வம், நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள், நல்ல பிள்ளைகளை வேண்டும். சில நேரங்களில் பாவ மன்னிப்பு, நோயிலிருந்து விடுதலை ஆகியனவும் இடம்பெறும்; இதோ சில எடுத்துக் காட்டுகள்:–

இந்திரனுக்கு (கடவுளுக்கு) துதி:

ஓ இந்திர த்யௌஸ் அசுரன் உனக்கு அடி பணிந்தான்; நீண்ட நிலப்பரப்புடைய பிரம்மாண்டமான பூமி உன் வசமாயின.

 

எல்லா கடவுளரும் இந்திரனை முன்னிலையில் வைத்தனர்-1-131-1

 

உனக்கு இரண்டாவது (ஈடு, இணை) என்பதே இல்லை 1-32-12

 

முப்பது சால்களில் இந்திரன் சோமபானம் குடித்தான்.7-66-4

பின்னர் இந்திரன் சொல்கிறான்:

நான் ஆகாயத்தையே தூக்கினேன்; மஹா பலசாலிகளில் மிகப்பெரியவன்; நான் சோம பானத்தைப் பருகவில்லையா?

 

சோமபானத்துக்கு அவ்வளவு சக்தி! (சுரா பானம் என்பது மதுபானம்; அதை வேதம் நிந்திக்கிறது)

 

அக்னிக்கு ஒரு துதி:

 

அக்னியே! நீ ஒரு தூதன்; நன்மை செய்பவன்; கருணையின் வடிவம்;  பலத்தின் மகன்; உனக்கு உயிர்வாழும் அனைத்தையும் தெரியும்.

அக்னிக்கு, நான் ஒரு புதிய சக்திவாய்ந்த துதிப் பாடல் பாடுவேன்; என்னுடைய சொற்களையும் பாடலையும் கொண்டுவருகிறேன்.

விலை மதிப்புடைய பொருட்களை உடைய தண்ணீரின் மகனே!

நீ பூமியின் மீது உரிய பருவத் தி ல் அமர்ந்து இருக்கிறாய். 1-143-1

 

மருத் (காற்று) தேவனுக்கு ஒரு துதி:

மின்னலைச் சுமக்கும் தேர்களில் விரைந்து வருவாயாக; குதிரைகளில் ஈட்டிகளை ஏந்தி, இனிய பாடல் பாடிக்கொண்டு வருக  1-88-1

 

கடவுளின் அழகையும் ரிஷிகள் போற்றினர்:

இந்திரனின் ஒரு அடைமொழி சுசிப்ரா= அழகான கன்னம்/ மூக்    குடையோன்

 

அக்னியின் ஒரு அடைமொழி= அழகிய தோற்றம் உடையோன்

சீனிவாலி என்னும் தேவி மீதான துதி:

அழகிய விரல்கள், அழகிய கைகள், பல மகன்களை ஈன்றெடுத்த தாயே! அகலமான கூந்தல் உடையோய்! ஆண்களின் ராணியே! அந்த சீனீவாலிக்கு புனித அன்பளிப்புகளைத் தருவோம் 2-32-7

 

செல்வம் வேண்டும்1

எல்லோரும் விரும்புவது செல்வமே.

இதோ சில துதிப்பாடல்கள்

 

எங்களுக்குச் செல்வத்தைக் கொணர்க; அதையே விரும்பி நிற்கிறோம் 8-45

 

இந்திரனுக்கு ஒரு துதி:

ஓ, சோமபானப் பிரியனே! உங்கள் உண்மையுள்ள, ஆனால் ஒன்ர்ருக்கும் உதவாதவர்கள் நாங்கள்

ஆயிரக்கணக்கில் அழகான குதிரைகளை அளிப்பாயாக! ஓ செல்வச் சீமானே!

பலத்தின் தேவதையே! உனது தாடைகள் வலுவானவை; சக்திவாய்ந்தவன் நீ.

ஆயிரக்கணக்கான அழகான குதிரைகளையும் பசுமாடுகளையும் அருள்வாயாக 1-29

மேலும் ஒரு துதி

ஓ!இந்து, சோமா! எல்லா பக்கங்களிலும் செல்வத்தைக் குவிப்பாயாக

ஆயிரக்கணக்கான மடங்கு பொக்கிஷங்களை அள்ளித் தருக–9-40

அளவற்ற தனத்தை அருள்க; ஓ இந்து செல்வத்தைத் தா.

தங்கத்தையும் குதிரைகளையும் பசுக்களையும் தா 9-41-4

 

ஓ மருத்துக்களே! செல்வத்தை அருள்க; நிலயான, குன்றாத செல்வத்தை அருள்க

நூறு ஆயிரம் படங்கு, இன்னும் எப்போதும் பெருகட்டும் 1-64-15

 

 

ஓ அக்னி எங்கள் பிரபுக்களுக்கு அதிகம் செல்வத்தைக் கொடு 8-1-24

அற்புத இந்திரனே! அற்புதமான செல்வத்தை எங்களுக்குக் கொண்டு வா 7-20-7

 

நிலத்தை உழுவதற்கு முன் சொல்லும் மந்திரம்:

சுபமான உழுகலனே( சீதாவே), அருகில் வருக; உன்னை மதிக்கிறேன்; உன்னை வணங்குகிறேன்

 

நீ எங்களை ஆசீர்வதி; எங்களுக்கு வளத்தைக் கொடு; அளவற்ற உணவுதானியங்களை அள்ளிக் கொடு 7-57-6

வருணனுக்கு ஒரு துதி:

பாவத்திலிருந்து எங்களை விடுவி

அரசனே! எனக்கு என்றும் திடமான செல்வம் குறையவே கூடாது 2-2-8

 

வேதங்களில் உள்ள துதிகள் இந்துக்களின் மகத்தான மூன்று கண்டுபிடிப்புகளைக் காட்டும்!

மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு அடித்தளமிட்ட அரிய பெரிய கண்டு பிடிப்புகள் அவை!

வேதத்தின் எல்லா துதிகளிலும் இவை இழையோடி நிற்கும்!

 

மனித இனத்தையே மாற்றிய மூன்று இந்துக்களின் கண்டு பிடிப்புகள்

1.பசு மாடு

காட்டில் எவ்வளவோ மிருகங்கள் பால் கொடுத்தும் தாய்ப்பாலுக்கு நிகரான ஒரே மிருகம் பசு என்பதைக் கண்டுபிடித்து அதற்கு வேத காலத்திலேயே கோ மாதா, காம தேனு என்று பெயரிட்டு மனித குலத்துக்கு அளித்தான்

உலகில் எகிப்திய, பாபிலோனிய, மாயன் நூல்களில் எங்குமே இப்படி ஒன்றைக் காண இலயவில்லை.

2.குதிரை

காட்டில் வேகமாகச் செல்லும் சிறுத்தை முதலியன இருந்தும் சாக பட்சிணியான குதிரையே மனிதனுக்குப் பயன் படும் என்று அதை வசமாக்கி தேரில் பூட்டி உலகிற்கு அளித்தவன் இந்து!

வேதத்தில் துதிக் குத் துதி பசுவும் குதிரையும் பாய்ந்தோடும்!

உலகில் எந்த நாட்டு பழைய நூல்களில்ம் இத் தகைய போற்றுதலைக் காண இயலவில்லை.

 

3.டெசிமல் சிஸ்டம்! தசாம்ச முறை

 

மனித குல அறிவியல் முன்னேற்றத்துக்கு, ராக்கெட்டுகள் பறந்ததற்கு, கம்ப்யூட்டார்கள் செயல்பாட்டூகு எல்லாம் அடித்தளமிட்டது தசாம்ச முறை! இந்துக்கள் உலக மஹா மேதாவிகள்! அதி சூர கணிதப் புலிகள்! வேதத்தில் துதிக்குத் துதி 100, 1000, 10000, 1000000, கோடி என்று அடுத்தடுத்து வரும்.

உலகம் காணாத விந்தை இது. நாம் இல்லாவிடில் உலகம் விஞ்ஞானத்தில் ஒரு அங்குலம் கூட முன்னேறியிராது.

 

இன்றுவரை உலகில் பசும்பாலோ, பால் பொருட்களோ இல்லாவிடில் மனித இனம் மறு நிமிடமே நோயில் வாடி அழியும்.

 

இந்துக்கள் வாழ்க! வேதங்கள் வெல்க!!

NUMBERS IN SANSKRIT

एकं सत् विप्रा बहुधा वदन्ति

एकम् = 1

दशकम् = 10

शतम् = 100

सहस्रम् = 1000

दशसहस्रम् = 10000

लक्षम् = 100000

दशलक्षम् = 10^6

कोटि = 10^7

अयुतम् = 10^9

1010 से अधिक परिमाण

नियुतम् = 10^11

कंकरणम् = 10^13

विवर्णम् = 10^15

परार्धः = 10^17

निवाहः = 10^19

उत्संगः = 10^21

बहुलम् = 10^23

नागबलः = 10^25

तितिलम्बम् = 10^27

व्यवस्थान – प्रज्ञापतिः = 10^29

हेतुहीलम् = 10^31

कराहुः = 10^33

हेतविन्द्रीयम् = 10^35

सम्पत-लम्भः= 10^37

गणनागतिः= 10^39

निर्वाद्यम्= 10^41

मुद्राबलम्= 10^43

सर्वबलम्= 10^45

विषमग्नागतिः= 10^47

सर्वाग्नः= 10^49

1050 से अधिक परिमाण

विभूतांगम्= 10^51

तल्लाक्षणम्= 10^53

ஏகம் = 1

த³ஸ²கம் = 10

ஸ²தம் = 100

ஸஹஸ்ரம் = 1000

த³ஸ²ஸஹஸ்ரம் = 10000

லக்ஷம் = 100000

த³ஸ²லக்ஷம் = 106

கோடி = 107

அயுதம் = 109

1010 ஸே அதி⁴க பரிமாண

நியுதம் = 1011

கங்கரணம் = 1013

விவர்ணம் = 1015

பரார்த⁴​: = 1017

நிவாஹ​: = 1019

உத்ஸங்க³​: = 1021

ப³ஹுலம் = 1023

நாக³ப³ல​: = 1025

திதிலம்ப³ம் = 1027

வ்யவஸ்தா²ன – ப்ரஜ்ஞாபதி​: = 1029

ஹேதுஹீலம் = 1031

கராஹு​: = 1033

ஹேதவிந்த்³ரீயம் = 1035

ஸம்பத-லம்ப⁴​:= 1037

க³ணனாக³தி​:= 1039

நிர்வாத்³யம்= 1041

முத்³ராப³லம்= 1043

ஸர்வப³லம்= 1045

விஷமக்³னாக³தி​:= 1047

ஸர்வாக்³ன​:= 1049

1050 ஸே அதி⁴க பரிமாண

விபூ⁴தாங்க³ம்= 1051

தல்லாக்ஷணம்= 1053

-Mahabharat according to Kurukkal

एकं पङ्क्तिशतं सहस्रमयुतं लक्षंप्रपूर्वायुतं

कोटिश्चार्बुदकञ्च पद्मकमधो खर्वंनिखर्वं तथा |

बृन्दञ्चैव महासरोजमपरश्शङ्खस्समुद्रोन्तिमो

मद्ध्यञ्चैव वरार्द्ध संज्ञकमिमा संख्यां विदुः पण्डिताः ||1.25

एकं पङ्क्तिशतं सहस्रमयुतं लक्षंप्रपूर्वायुतं

कोटिश्चार्बुदकञ्च पद्मकमधो खर्वंनिखर्वं तथा |

बृन्दञ्चैव महासरोजमपरश्शङ्खस्समुद्रोन्तिमो

मद्ध्यञ्चैव वरार्द्ध संज्ञकमिमा संख्यां विदुः पण्डिताः ||1.25

ekam1

dasam 10

satam 100

sahasram 1000

ayutham10,000

laksham 100000

parapurvayutham10,00,000

koti 10000000

arpudham 100000000

padmakam 1000000000

karvam 10000000000

nikarvam 100000000000

bruntham 1000000000000

mahasarojam 10000000000000

sangam 100 00 00 00 00 00 000

avaramahasanagam

samudram 1 00 00 00 00 00 00 00 00

madhyam

parartham

samnjak imam sankhyaam vidhu: Pandithaa;

–SUBHAM—

இலங்கை பற்றி சம்பந்தர் தகவல் (Post No.4194)

Written by London Swaminathan

 

Date: 8 September 2017

 

Time uploaded in London- 18-28

 

Post No. 4194

 

Pictures are taken from various sources; thanks.

 

 

குன்றினுச்சி மேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை

அன்றிநின்ற அரக்கர்கோனை யருவரைக்கீழ் அடர்த்தாய்

என்றுநல்ல வாய்மொழியா லேத்திராப் பகலும்

நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே

 

–திருநெடுங்களம், சம்பந்தர் தேவரம் முதல் திருமுறை

 

பொருள்

உச்சிமேல் விளங்கும் இலங்கைக் குன்று; அதைக் கொடிய மதில் சூழ்ந்துள்ளது அன்று உன்னை எதிர்த்த இராவணனை அடர்த்தாய் – என்று துதித்து, இராப்பகலாக உருகித் தொழுகின்ற அடியார்களின்  இடரினைக் களைவாயாக. திரு நெடுங்களத்து இறைவா!

அன்றி= கோபித்து, பகைத்து

வாய்மொழி= தோத்திரம், துதி

நைவார் = மனங்கனிவார்

 

ஒரு காலத்தில்,  மேரு மலையிலிருந்து, வாயு தேவனால் பெயர்த்து வீழ்த்தப்பெற்ற மூன்று சிகரங்களுல் ஒன்றாகிய இலங்கைக் குன்று.

இந்தப் பாட்டிலிருந்து கிடைக்கும் புவியியல் செய்திகள்

 

1.ஒரு காலத்தில் பெரிய சுனாமி அல்லது கடலடி பூகம்ப வெடிப்பில் இலங்கைக் குன்று. தோன்றியது.

 

2.அதன் உச்சியில் இலங்கை இருந்தது

 

 

  1. 1400 ஆண்டுகளுக்கு முன்னர், சம்பந்தர் காலத்தில் கூட, இலங்கை பற்றி தெளிவான தகவல் மக்களுக்குத் தெரிந்திருந்தது.

 

  1. நூற்றுக் கணக்கான தேவாரப் படல்களில் கடல் சூழ் இலங்கை என்று வருவதால், அது ஆதி காலம் முதல் தீவு நாடாக இருந்தது.

 

  1. அந்த எழில் மிகு, பொன்னால் வேயபட்ட குன்று மேல் இருந்த இலங்கை, எப்படித் தோன்றியதோ அப்படியே கடலுக்குள் மறைந்திருக்க வேண்டும்

 

  1. கடலடி ஆராய்ச்சி மூலம், இந்த அழிவு ஏற்பட்ட காலத்தைக் கணக்கிடுவது, ராமாயண காலத்தை அறிய உதவும்

 

7.நமக்குத் தெரிந்தவரை கி.மு1600ல் கிரேக்க Santorini/ Theraசான்தொரினி (தேரா) யில் ஏற்பட்ட வெடிப்பு உலக மஹா நில- கடல் மாற்றங்களை ஏற்படுத்தியது.

 

–subham–

 

உலகிலேயே மிகப்பெரிய கணக்குப் புத்தகம்: மேலும் ஒரு கர்நாடக அதிசயம்! (Post No.4172)

830 ft Jog Falls

 

Written by London Swaminathan

 

Date: 29 August 2017

 

Time uploaded in London- 9-22 am

 

Post No. 4172

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

உலகிலேயே மிகப்பெரிய வீணை சிருங்கேரி மடத்தில் இருப்பது பற்றி எழுதினேன்.

 

உலகிலேயே மிகப்பெரிய ஒற்றைக் கல் சிலைகளில் ஒன்றான கோமடேஸ்வர் (சமண சமய சாது) 57 அடி உஅயர்த்துக்கு மலை மீது நிற்பது பற்றி எழுதினேன்.

 

 

இந்தியாவிலேயே மிகப்பெரிய (Bulls) நந்திகள் கர்நாடகத்தில் பல இடங்களில் உள்ளன.

மைசூர் சாமூண்டீஸ்வரி கோவிலில் ஒரு நந்தி

துருவகரே கோவிலில் ஒரு நந்தி

ஹளபீடுவில் ஒருநந்தி

 

சிவமுகா (ஷிமோகா) வில் உள்ள அரசாங்க மியூசியத்தில் அபூர்வ நாணயங்களும் 18-29 மீட்டர் நிளமுள்ள பழங்கால கணக்குப் புத்தகமும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

உலகிலேயே மிகப்பெரிய தங்க  சிம்மாசனம் (200 கிலோ) மைசூர் அரணமனையில் உள்ளது.

 

பேலூர், ஹளபீடு, சோமநாத்பூரிலுள்ள ஹோய்சாள வம்ச சிற்பிகளின் அற்புதப் படைப்புகள் பற்றியும் பார்த்தோம்.

Badami  Caves

உலகிலேயே அதிக சிற்பங்களை ஒரு சிறிய பரப்பில் காணும் அதிசயம் ஹளபீடில் இருக்கிறது. நட்சத்திரவடிவக் கோவிலில் 35000 சிற்பங்கள்! ராமாயண, மஹாபாரத, தசாவதார, கண்ணன் லீலைகளை தத்ரூபமாகச் செதுக்கியுள்ளனர்.

 

அணிவகுத்துச் செல்லும் யானைகளில் ஒரு யானை போல மற்றொரு யானை இல்லாத வகையில் செதுக்கியுள்ளனர்.

 

இந்தியாவிலேயே மிக உயரமான ஜோக் பால்ஸ் (830 feet) எனப்படும் நீர்வீழ்ச்சி கர்நாடகத்தில்தான் உள்ளது.

 

இந்துக்கள் போற்றும் கொல்லூர் மூகாம்பிகை, உடுப்பி க்ருஷ்ணன்,

குகே சுபரமண்யர்கோவில், சிருங்கேரி சாரதாம்பாள், காவிரி தோன்றும் தலைக் காவேரி,  மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில்,  மருதேஸ்வர் கோவில், தர்மஸ்தமலம், உலகப் புகழ்பெற்ற ஹம்பி நகர சிதைவுகள், பாதாமி குகைக் கோவில்கள், ஐஹோல், தென்னாட்டுக் காசி என வழங்கும் மூடபித்ரி கோகர்ணம், மஹாபலேஸ்வர் கோவில்கள்

– ஊருக்கு ஊர் பிரசித்திபெற்ற கோவில்கள் இருக்கும் மாநிலம் கர்நாடகமே.

 

2300 ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் மௌரிய சாம்ராஜ்ய அரசர் பதவியைத் துறந்து சமண மத துறவியான சந்திர குப்த மௌர்யனின் சந்த்ரகிரி முதல், ஏராளமான சமண மத புனிதத் தலங்கள் நிறைந்த பூமி இது.

Marudeshwar Temple

கோவிலகளுக்கோ, தொல் பொருட் துறைச் சின்னங்களுக்கோ நுழைவுக் கட்டணம் கிடையாது! இது ஒரு பெரிய அதிசயமே

 

சென்னகேசவ பெருமாள் கோவில் முதலியவற்றில் 880 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பூஜை நடக்கிறது. தமிழ் நாட்டில் முஸ்லீம் படையெடுப்புகளால் பல கோவிலகளில் பூஜை தடைப் பட்டது. மாலிக்காபூர் என்னும் முஸ்லீம் கொள்ளைகாரன் தங்கத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கோவில்களை விட்டு விட்டான்

 

 

ஹோய்சாள சிற்பிகளுக்கு எதையுமே பெரிதாக, கலைவண்ணத்துடன் படைப்பதே குறிக்கோள்

 

 

உத்தர கன்னட மாவட்டத்திலுள்ள ஓம் வடிவ பீச் (கடற்கரை) ஒரு இயற்கை அதிசயம்.

 

நாடு முழுதும் உடுப்பி ஹோட்டல்களை திறக்கும் அளவுக்கு புகழ்பெற்ற சமையல்காரகள்.

மணிப்பால் முதலிய புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள்

 

ஏராளமான நீர்வீழ்ச்சிகள்,பறவைகள் சர ணாலயங்கள், வனவிலங்குப் புகலிடங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையின் எழில்பொங்கும் இயற்கைக் காட்சிகள், ஆகும்பே என்னும் இடத்திலுள்ள மழைவனக் காடுகள், காவிரி, ஷராவதி, துங்கபத்திரா நதிகளின் சமவெளிகள் என எங்கும் இயற்கை அன்னையின் அருள்பாலிப்பு.

மாத்தூர் முதலிய கிராமங்களில் சம்ஸ்கிருதத்திலேயே பேசும் மக்கள் கூட்டம் மற்றும் ஒரு அதிசயம்!

World famous Hampi Ruins

கோலார் தங்கச் சுரங்கம், காவிரியின் குறுக்கேயுள்ள சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, மைசூர் பிருந்தாவனம், கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டு, 12 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் கோமடேஸ்வரின் மஹா மஸ்தக அபிஷேகம், ஈராண்டுக்கு ஒரு முறை நடக்கும் உடுப்பி பர்யாய உற்சவம், ஆண்டுதோறும் நடைபெறும் மைசூர் தசரா அலங்கார அணிவகுப்பு ஆகியவற்றைக் காண ஆயிரக் கணக்காணோனோர் கூடுகின்றனர்.

 

கூடுதல் விவரம் வேண்டுவோர் நான் ஆங்கிலத்தில் எழுதிய ஐந்து பகுதி கட்டுரைகளைப் படிக்கவும்.

Om shaped beach

TAGS:-பெரிய கணக்குப் புத்தகம், உயரமான நீர்வீழ்ச்சி, ஓம் வடிவ பீச்

–சுபம்–