அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 9 (Post No.4630)

Date: 18 JANUARY 2018

 

Time uploaded in London- 5-41 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4630

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 9

முந்தைய கட்டுரைகள்: முதல் கட்டுரை எண் 4388- வெளியான தேதி: 12-11-17

இரண்டாம் கட்டுரை எண் 4406 -வெளியான தேதி : 18-11-17

மூன்றாம் கட்டுரை எண் 4445 – வெளியான தேதி : 30-11-17

நான்காம் கட்டுரை எண்  4472  – வெளியான தேதி :    9-12-17

ஐந்தாம் கட்டுரை எண் 4511 – வெளியான தேதி : 18-12-17

ஆறாம் கட்டுரை எண் 4546 – வெளியான தேதி : 26-12-2017

ஏழாம் கட்டுரை எண் 4574 – வெளியான தேதி : 2-1-2018

எட்டாம் கட்டுரை எண் 4597 – வெளியான தேதி : 9-1-2018

 

பரிச்சேதம், வஸ்துக்கள், சத்துக்கு ஆனந்தத்துவம் ஆகியவற்றின் விளக்கம்!

ச.நாகராஜன்

 

 

இனி பரிச்சேதம், வஸ்துக்கள், சத்துக்கு ஆனந்தத்துவம் பற்றித் தெரிந்து கொள்வோம்

*

ஐயா, பரிச்சேதம் என்றால் என்ன?

வரம்பு அல்லது பிரிவு அல்லது பாகம் எனலாம்.

தேச, கால, வஸ்து பரிச்சேதம் மூன்றும் இயற்கையில் தேகத்திற்கே தவிர பரிபூரனணாகிய பிரதியேகாத்மாவுக்கு பரிச்சேத திரயம் (திரயம் என்றால் மூன்று என்று பொருள்) இல்லை.

ஆகவே, தேசத்தினாலாவது,

காலத்தினாலாவது,

வஸ்துவினாலாவது

பிரிக்க அல்லது பாதிக்கப்படாதது எதுவோ அதுவே பிரம்மம்.

ஆத்மா சர்வ வஸ்துக்களுக்கும் ஆத்மாவாக இருக்கின்றபடியால் பரிச்சேதம் இல்லை.

 

வஸ்துக்கள் என்றீர்களே, அவைகள் எவை?

ஸஜாதீய பேதம்,

விஜாதீய பேதம்,

சுவகத பேதம் என்று இப்படி மூன்று வகை வஸ்துக்கள் உண்டு.

 

அவைகளின் விவரம் என்ன?

 

ஒரு மரத்திற்கு மற்றொரு மரம் ஸஜாதீய பேதம் ஆகும்.

மரத்திற்கு கல் என்பது விஜாதீய பேதம் ஆகும்.

ஒரு மரத்திற்கு அதன் இலை, பூ, காய், கனி முதலியன சுவகத பேதம் ஆகும்.

இந்த மூன்று வித பேதங்களும் ஆத்மாவுக்கு இல்லை.

ஆகவே ஆத்மாவுக்கு வஸ்து பரிச்சேதம் இல்லை.

 

அது எப்படி?  ஒரே சைதன்னியமானது பிரம்ம சைதன்னியமாயும், ஈஸ்வர சைதன்னியமாயும், ஜீவ சைதன்னியமாயும் இருக்கும் போது ஸஜாதீய பேதம் இருக்கிறதல்லவா?

மேலும் ஆத்ம ஸ்வரூபம் பிரம்மம் என்றும், அநாத்ம ஸ்வரூபம் பிரபஞ்சம் என்றும் இரண்டு விதமாக இருக்கும் போது விஜாதீய பேதம் இருக்கிறதல்லவா?

அன்றியும், பிரம்மத்திற்கு சத், சித், ஆனந்தம் என்று  மூன்று இருக்கின்றபடியால் சுவகத பேதமும் இருக்கிறதல்லவா?

இப்படி மூன்று வித பேதங்களும் இருக்கும் போது, பேதங்களே இல்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

ஆகாயம் ஒன்றானாலும், உபாதி பேதத்தினால், மேக ஆகாயம் (மேகாசம்), மட ஆகாயம் (மடாகாசம்), கட ஆகாயம் (கடாகாசம்)  என்ற பேதங்களைக் காண்பதைப் போல, சைதன்னியம் ஒன்றானாலும் மாயோபாதியினால் பிரம்மம் என்றும், ஈஸ்வரன் என்றும், அவித்தியோபாதியினால் கூடஸ்தன் என்றும் ஜீவன் என்றும் சொல்கிறோம்.

ஸஜாதீய பேதம் தோற்றமே தான்.

மேலும் கயிறன்றி அதில் பாம்பு என்கின்ற தோற்றம் எப்படி இல்லையோ அப்படி ஆத்மாவன்றி அநாத்மா இல்லை. ஆகவே விஜாதீய பேதம் இல்லை.

அதிஷ்டானத்தைத் தவிர ஆரோபிதம் என்பதெல்லாம் மித்தையே.

அதாவது பொய்யே. (மித்தை என்றால் பொய்)

ஆத்மா சாக்ஷி கூடஸ்தன்.

பாரமார்த்திகன்.

பிராக்ஞன்.

பிரம்மம்.

சச்சிதானந்த நித்தியன்.

ஏகன்.

பூரணன்.

ஆகவே சுவசுத பேதமில்லை.

அப்படியானால் ஆத்மா சத் ரூபன்,  சித் ரூபன், ஆனந்த ரூபன் என்று ஏன் அடிக்கடி சொல்ல வேண்டும்? ஒரே உபதேசம் போதாதா?

ஆத்ம ஸ்வரூபமான சத்துவத்தை ஜகத்திலும்,

சித்துவத்தை ஜடங்களாகிய புத்தி ஆதிகளிலும்

ஆனந்தத்துவத்தை புத்திர, பாரி (மனைவி) ஆதிகளிலும்

அப்படியே, ஜகத் ஸ்வபாவமாயுள்ள அசத்துவத்தையும், புத்தி ஆதிகளிலுள்ள ஜடத்துவத்தையும், புத்திரபாரியாதிகளிலுள்ள துக்கத்துவத்தையும்,

சச்சிதானந்த ஸ்வரூபமான ஆத்மாவினிடத்திலும் பரஸ்பரம் விபரீதமாக  ஆரோபிக்கிறபடியால் இந்த பிராந்தி நிவர்த்தியின் பொருட்டு சொல்லப்பட்டது.

 

நல்லது, சத் தானாகவே விளங்குகிறதா? அல்லது மற்றொன்றினால்  விளங்குகிறதா?

சத்தே சித்தாகும்.

சத்தே சித்து. சித்தே சத்து.

அது தானாகவே விளங்குகிறது.

 

தானாக விளங்குகின்ற சத்துக்கு ஆனந்தத்துவம் எப்படி ஐயா?

சத்துக்கு இரண்டாவது வஸ்து இல்லை.

ஆகவே ஆனந்தத்துவம் பூரணமாக இருக்கிறது.

ஆகவே ஒன்றான சத்துக்கு இரண்டாவது இல்லாததினால் அத்வைதத்துவமும் உண்டாம்.

அதனால் பூரணத்துவமும் சித்தம்.

இப்படிப்பட்ட பரிபூரணானந்த ஆத்மாவுக்கு துக்கம் ஆகந்துகம்.

அந்த துக்கம் சரீரத்தினாலும்,

சரீரம் கருமத்தினாலும்,

கருமம் இராக, துவேஷாதிகளினாலும்,

ராகாதிகள் அபிமானத்தினாலும் வந்தது என்று அறிக!

அப்படி அறிந்து அந்த அஞ்ஞானத்தை ஞானத்தினால் நிவர்த்தியாக்க வேண்டும்.

அந்த ஞானமே விசாரத்தினால் உண்டாகிறதென்றும்,

ஆத்மா சச்சிதானந்த ஸ்வரூபம் என்றும்,

தேகாதி பிரபஞ்சம்  அந்த ஜட துக்க ரூபமானதென்றும்,

இந்த பிரபஞ்சமானது அத்தியாரோப்பியமென்றும்

விசாரித்து, தத்துவம் பத வாக்கியார்த்தத்தினால்  உண்டாகும் ஞானத்தினால்,

“நானே பிரம்மம்” என்னும் தன்னுடைய பரோக்ஷ ஞானானுபவத்தினால்

சாக்ஷாத்காரமாகிய அபரோக்ஷ ஞானம் எதுவோ  அதை அடைகின்றவனே

பரம குரு எனவும் பரமஹம்ஸர் என்றும்  சொல்லப்படுகிறான்.

ஆகவே அனைவரும் ஆத்ம தத்துவத்தைக் கேட்டு, மனனம் செய்து,

தியானித்து, சாக்ஷாத்காரம் செய்து கொண்டு,

நித்திய சுத்த புத்த முக்த சத்திய பரமானந்த அத்துவய பிரம்மஸ்வரூபமாய் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

 

ஐயா! நன்றி. நன்றி. நன்றி. அருமையான அத்வைத சாரத்தை இவ்வளவு நல்ல முறையில் விளக்கியதற்கு மீண்டும் நன்றி.

நன்றி.

***

அத்வைத சார விளக்கம் முற்றிற்று.

***

அன்பர்கள் நிதானமாக, ஒவ்வொரு விஷயமாகப் படித்து, அதை ஆழ்ந்து சிந்தித்து, பல துணை நூல்களையும் படித்து அத்வைத ஆனந்தம் சித்திக்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம்

***

முடிவுரை:

ஒரு சுவாரசியமான புத்தகம்.

சுமார் நூற்றியிருபது ஆண்டுகளுக்கு முன்னர் 1898ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட புத்தகம்.

கோயமுத்தூரைச் சேர்ந்த திரு எஸ்.பி.நரசிம்மலு நாயுடு அவர்கள் எழுதிய  ‘ஹிந்து பைபில்’ என்ற புத்தகம் எனக்குக் கிடைத்தது.

அதில் உபநிடதக் கருத்துக்கள், அத்வைத, த்வைத சார விளக்கம் உள்ளிட்டவை விளக்கப்பட்டுள்ளன.

அதில் இருந்த அத்வைத சார சங்க்ரஹ விளக்கத்தையே சற்று தமிழ் நடையை எளிதாக்கி, சில பிழைகளைத் திருத்தி, இறைவன் அருளால் ஒரு தொடராக அளிக்க முடிந்தது.

இந்தப் புத்தகத்தை வரவேற்று அந்தக் கால பத்திரிகைகள் – சுதேசமித்திரன் உள்ளிட்ட பத்திரிகைகள் – நல்ல மதிப்புரையைத் தந்துள்ளன.

நமது நன்றியை திரு எஸ்.பி.நரசிம்மலு நாயுடு அவர்களுக்குக் காணிக்கை ஆக்குகிறோம்.

புத்தகம் மக்கி மறைந்து போகும் நிலையில் அதன் ஒரு சிறு பகுதியை அளிக்க முடிந்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்தத் தொடரை படித்த அன்பர்களுக்கு எனது நன்றி.

அன்பர்களின் கருத்துக்களை வரவேற்கிறோம்.

அன்பன் ச.நாகராஜன்

***

 

 

சந்யாசியும் பெண்மணியும்- சாணக்கியன் (Post No.4627)

தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின்  பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

Written by London Swaminathan 

 

Date: 17 JANUARY 2018

 

Time uploaded in London  6-58 am

 

 

 

Post No. 4627

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

ஏக ஏவ பதார்தஸ்து த்ரிதா பவதி தீக்ஷிதஹ

குணபஹ காமினீ மாம்ஸம் யோகிபிஹி காமிபிஹி ஸ்வபிஹி

 

–சாணக்கிய நீதி, அத்யாயம் 14, ஸ்லோகம் 16

பொருள்

ஒரே பொருளோ, மனிதரோ பார்வையாளரின் மனப்போக்கிற்குத் தக மூன்றாகத் தோன்றும். ஒரு பெண்ணுடைய உடலானது யோகிகளுக்கு வெறும் உயிரற்ற சடலமாகவும், காதல்வயப்பட்ட ஆணுக்கு பேரழகியாகவும், நாய்களுக்கு வெறும் மாமிஸமாகவும் தோன்றும்.

சாணக்கியன் சொல்லுவது சரியானதுதான் என்பதற்கு மேலும் சில உதாரணங்களைச் சொல்லலாம்

 

ஒரு அழகான இளம் பெண், அவளுடைய சஹோதரனுடன் பஸ்ஸில் அருகருகே உட்கார்ர்ந்து இருந்தால், அவன் என்ன நினைப்பான். ‘அட, நமக்கு எவ்வளவு அழகான சஹோதரி வாய்த்திருக்கிறாள்; இவள் நல்லபடி கல்யாணமாகி, நல்லபடி வாழ வேண்டும்’ என்று கடவுளைப் பிரார்த்திப்பான். சஹோதர வாஞ்சையுடன் இருப்பான்.

 

அதே அழகி, ஒரு இளைஞன் அருகில் உட்கார்ந்து இருந்தால், அந்த இளைஞன் என்ன நினைப்பான்; ‘அடடா, என்ன அழகு! இந்தப் பெண் நமக்கு மனைவியாக இருந்தால் எப்படி இருக்கும்!’ என்று காம உணர்வுடன், காதல் நோக்கில் அவளைப் பார்ப்பான்.

 

அவன் அருகில் ஒரு சிறு குழந்தை உட்காந்து இருந்தால், அது மற்ற ஒரு பெண்ணையும் தாய் போலக் கருதி, கட்டிக் கொள்ளும். அங்கே தாய்- மகன் என்ற பாச உணர்வு (Supreme love and affection)  மட்டுமே இருக்கும். உலகிலேயே மிக உன்னதமான உணர்ச்சி அது.

 

இப்போது நமக்குள் ஒரு கேள்வியை எழுப்பிப் பார்க்கலாம். அருகிலுள்ள பெண்ணின் உடல்தான் இந்த உணர்வுகளுக்குக் காரணமா? அல்லது அவளை நாம் பார்த்தவிதமும் மனதின் போக்கும்தான் காரணமா?

 

மனதின் போக்குதான் இதற்குக் காரணம் என்பர் சான்றோர்கள். மேலும் எது இன்பம் என்பதை விளக்கவும் அவர்கள் ஒரு அளவுகோல் (Scale or Touch stone) வைத்துள்ளனர். எது ஒன்று எல்லோருக்கும் எப்போதும் நிரந்தர இன்பம் தருமோ அதுவே இன்பம் என்பர்.

இதனால்தான் “கண்டேன் கண்டேன் கண்ணுக்கினியன கண்டேன்” என்றும் “சேரவாரும் ஜகத்தீரே” என்றும் “யான்பெற்ற இனம் பெறுக இவ்வையகம்” என்றும் சான்றோர்கள் ஆடிப்பாடி கூத்தாடுகின்றனர்.

 

நிரந்தர இன்பம் இது என்று நாங்கள் சொல்லியும், காட்டியும் பின்னர் நீங்கள் அடியார் திருக் கூட்டத்தில் சேராதது ஏன் என்றும் வினவுகின்றனர்.

 

இன்னும்சில யோகியர் வேறு ஒரு எடுத்துக்காட்டை நம்முன் வைப்பர். ஒரு நாய்க்கு எலும்புத் துண்டு ஒன்று கிடைத்ததாம். அது கூரான முனைகளை உடையது. அதை வாயில் போட்டு மென்றவுடன் ரத்தம் வரவே அதற்கு பெரு மகிழ்ச்சி. முன்னைவிட எலும்பை பலமாகக் கடித்துக் குதறத் துவங்கியது. அது நினைத்தது—‘எலும்பிலிருந்து ரத்தம் வருகிறது’ என்று; ஆனால் உண்மையில் எலும்பின் கூரான முனைகள் அதன் வாயைக் கிழிக்க, கிழிக்க ரத்தம் மேலும் மேலும் வெளி ஏறியது. இன்பத்தின் காரணம் என்ன என்பதை அது தவறாகப் புரிந்து கொண்டது.

 

சாணக்கியன் இரண்டே வரிகளில் சொன்னதை சமயச் சான்றோர்கள் மணிக் கண்ணக்கில் உபந்யாசங்களில் விளக்குவர்!!!

 

-சுபம்,சுபம்–

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 13 (Post No.4618)

Date: 15 JANUARY 2018

 

Time uploaded in London- 6–34 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4618

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017; மாக்ஸ்முல்லர் மர்மம் -7 கட்டுரை எண் 4385 – வெளியான தேதி  11-11-17; மாக்ஸ்முல்லர் மர்மம்-8 கட்டுரை எண் 4451 – வெளியான தேதி 2-12-17; மாக்ஸ்முல்லர் மர்மம் – 9 கட்டுரை எண் 4501 – வெளியான தேதி 16-12-17; மாக்ஸ்முல்லர் மர்மம் – 10 கட்டுரை எண் 4538 -வெளியான தேதி 24-12-17 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 11 கட்டுரை எண் 4563 -வெளியான தேதி 30-12-17 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 12 கட்டுரை எண் 4580 -வெளியான தேதி 4-1-18

 

இதனுடைய தொடர்ச்சியாக இந்தக் கடைசிக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 13

 

ச.நாகராஜன்

22

மாக்ஸ்முல்லரைப் பற்றிய பல முக்கிய விவரங்களை இது வரை பார்த்தோம்.

இப்போது மாக்ஸ்முல்லர் மர்மத்தின் பிரதான கேள்விக்கு வந்து அந்தப் புதிரை அவிழ்க்க முயல்வோம்.

மாக்ஸ்முல்லர் இந்தியாவின் நண்பரா அல்லது பிரிட்டிஷாரின் கைக்கூலியா?

மாக்ஸ்முல்லரின் வாழ்க்கையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

ஆதரவின்றி, கையில் காசின்றி, ஏதேனும் செய்து சற்று சம்பாதிக்க வேண்டும் என்கின்ற முதல் நிலை.இது அவரது இளமைப் பருவம்.

2 பிராங்க் செலவழிக்கக்கூட ‘வக்கில்லாத ஏழ்மை நிலையில், ஒரு சாக்லட்டை வாங்கிச் சாப்பிட்டு விட்டு இனி ஒருபோதும் சாக்லட் வாங்கிச் சாப்பிடக் கூடாது என்று தீர்மானித்தேன் என்று 10-4-1845 அன்று தன் டயரியில் எழுதியிருந்த அளவுக்கு ஏழ்மை நிலை.

இந்த காலகட்டத்தில் தான் இந்தியாவை முற்றிலுமாக, நிரந்தரமாக கபளீகரம் செய்ய நினைத்த மெக்காகே ஒரு வழியைக் கண்டுபிடித்தான்.

இந்தியாவில் ஆங்கிலேயரின் நிர்வாகம் சீராக, நிரந்தரமாக இருக்க வேண்டுமெனில் ஹிந்துக்களின் சிலை கும்பிடும் உருவ வழிபாடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, அனைவரும் ஆங்கிலக் கல்வி வழி மூலம் கிறிஸ்தவராக ஆக வேண்டும் என்பதே மெக்காலேயின் திடமான நோக்கமாக இருந்தது.

அவன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் இதை வலியுறுத்துகிறான் இப்படி:

In 1836, while serving as chairman of the Education Board in India, he enthusiastically wrote his father:

“Our English schools are flourishing wonderfully. The effect of this education on the Hindus is prodigious. ..It is my belief that if our plans of education are followed up, there will not be a single idolator among the respectable classes in Bengal thirty years hence. And this will be effected without any efforts to proselytize, without the smallest interference with religious liberty, by natural operation of knowledge and reflection. I heartily rejoice in the project.”

மாக்ஸ்முல்லர் மெக்காலேயை 1851ஆம் ஆண்டு ஒரு பார்ட்டியில் சந்தித்தார். ஆனால் அது சில நிமிடங்களே நீடித்தது. பின்னர் 1855இல் தான் அவர் மெக்காலேயை மீண்டும் சந்தித்தார். மாக்ஸ்முல்லரை மெக்காலேக்கு முதலில் பிடிக்கவில்லை.

மெக்காலேயின் மதமாற்ற எண்ணத்தைத் தன் எண்ணமாக மாற்றிக் கொண்டார் மாக்ஸ்முல்லர். பின்னர் தான் வழி பிறந்தது.

ஆங்கிலக் கல்வி மூலம் இந்தியரை நிரந்தர அடிமைகளாக் ஆக்க முயலும் மெக்காலே ஒரு புறம், எப்படியாவது மதமாற்றம் செய்து ஹிந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றத் துடிகும் பாதிரியார்கள் இன்னொரு புறம் – அவர்களின் மனப்போக்கை  நன்கு புரிந்து கொண்டார் மாக்ஸ்முல்லர். அதை அனுசரித்தார் அவர்.

 

ஒரு வழியாக வேலை கிடைத்தது. என்ன வேலை என்பதும் புரிந்தது.

அந்த வேலை கிடைத்த உற்சாகத்தினால் தன் தாயாருக்கு எழுதிய கடிதத்தில் இந்தியா கிறிஸ்தவ மயமாகப் போகிறது என்று எழுதினார்.

வேதம் ஒரு குப்பை என்பது நிரூபணமாகி விடும் என்றார்.

வேத காலத்தை தனக்குத் தோன்றிய விதத்தில் “ஆராய்ந்து ஒரு காலத்தை நிர்ணயித்தார்.

பாதிரிகள் குஷியில் குதித்தனர்.

ஆனால் அவரது வாழ்க்கையின் இந்த முதல் பகுதி முடிவுக்கு வந்தது. ஐம்பது வயதுக்குப்  பின்னர் அவர் பார்வை மாறியது.

கண்களில் பாதிரிகளுக்காக மாட்டிக் கொண்ட மஞ்சள் கண்ணாடியை அவ்ர் கழட்டிப் போட்டார். ஒவ்வொரு வண்ணமும் தன் இயல்பான நிறத்தை அவருக்குக் காண்பித்தது.

பற்பல இந்திய அறிஞர்கள் வேதத்தை மொழி பெயர்த்து அவருக்கு அனுப்ப அனுப்ப வேதத்தின் மறுக்க முடியாத மிக உயரிய சிந்தனைகள் அவருக்குப் புலப்பட ஆரம்பித்தது. அதனால் வேத சிந்தனைகள்  உயரியதாக இருப்பதை உலகிற்கு உரிய முறையில் வெளிப்படுத்தினார்.

இந்த தீடீர் மாற்றம் பாதிரிகளைத் திகிலுறச் செய்தது. நோக்கத்தில் பிறழ்ச்சி என்று கண்டவுடன் மாக்ஸ்முல்லரை அவர்கள் கண்டிக்க ஆரம்பித்தனர். எதிர்த்தனர். கோபத்துடன் கூவினர். ஆனால் மாக்ஸ்முல்லர் இந்தியாவிற்கு உயரிய புகழாரத்தைத் தனது சொற்பொழிவுகளில் சூட்டினார்.

அது அவரதுIndia What It Can Teach Us –உரைகளாக மலர்ந்தது.

இதனால் அவரது பதவிக்கே வேட்டு வைக்கப் பார்த்தனர்.

 

   ஆனால் அவர் பணத்திற்காக யாரையும் அண்டி இருக்க வேண்டிய நிலையில் இப்போது இல்லை. அதாவது மெக்காலே பயம் அவர் இறந்த 1859ஆம் ஆண்டுடன் போனது. (மாக்ஸ்முல்லருக்கு வயது 36)

1883இல் தனது 60வது வயதில் இந்தியாவின் உன்னத நிலையை உள்ளது உள்ளபடி அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்த நிலையிலிருந்து அடுத்த நிலையை அவர் அடைந்த போது தான் ஸ்வாமி விவேகானந்தர் அவ்ரை 28-5-1896 அன்று அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவருக்கு வயது 73. அதன் பின்னர் அவர் நான்கு ஆண்டு காலமே உயிருடன் இருந்தார்.

இந்தச் சந்திப்பின் போது இந்தியா பற்றிய மாக்ஸ்முல்லரின் எண்ணம் புகழும் நிலையிலிருந்து பரவசத்துடன் தொழுகின்ற நிலைக்கு மாறியிருந்தது.

அதைத் தான் ஸ்வாமிஜி கண்டு அப்படியே தனது கடிதங்களிலும், உரையாடல்களிலும் குறிப்பிட்டுள்ளார்.

 

ஆக மாக்ஸ்முல்லரை பிரிட்டிஷாரின் கைக்கூலி, ஏஜண்ட் என்று திட்டி அதற்கான ஆதாரங்களைக் காட்டுவோர் கூறுவது சரியே. அது அவரது வாழ்க்கையின் முதல் பகுதி. மோசமான் பகுதி. வேதங்களை இகழ்ந்த பகுதி.

அடுத்த நிலையில் அவர் தனது உரைகளில் மிக பிரமாதமாக இந்தியாவைப் புகழ்ந்ததைப் பரவலாக மேற்கோள் காட்டுவோர் கூறுவதும் சரியே. அது அவ்ரது வாழ்க்கையின் அடுத்த பகுதி. அதில் அவர் இந்தியாவைக் கண்டு வியக்கும் ஒருவராக – admirerஆக – மாறி இருந்தார்.

 

இறுதியாக ஸ்வாமிஜி அவரைச் சந்தித்த போது வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் அவர் இருந்தார். ஸ்வாமிஜி அவரைப் பற்றிய தனது கணிப்பைக் கூறியதும் சரியே. அந்த நிலையில் அவர் இந்தியாவை பக்தி பரவசத்துடன் பார்க்கும் நிலையில் இருந்தார்.இந்த நிலையைச் சுட்டிக் காட்டி ஸ்வாமி விவேகானந்தர் அவரைப் புகழ்ந்து கூறியதை மேற்கோள் காட்டுவோர் கூறுவதும் சரியே!

ஆக இந்த மூன்று நிலைகளில் மாக்ஸ்முல்லரைப் பார்க்கும் போது அவர் மாறுப்பட்ட நிலைகளில் இருப்பதை உணரலாம்.

வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் அவரைச் சந்தித்த ஸ்வாமிஜி அவர் மறுபிறப்பு உள்ளிட்ட அனைத்து ஹிந்து மதக் கருத்துக்களையும் ஏற்றுக் கோண்டிருப்பதாகக் கூறுகிறார்.

‘இந்தியா வந்தால் அங்கிருந்து திரும்ப மாட்டேன்; அங்கேயே என்னை எரிக்க வேண்டும் என்று கூறிய நிலையில் மாக்ஸ்முல்லர் இருந்தார் என்றும் ஸ்வாமிஜி தெரிவித்துள்ளார்.

 

ஒரு வியப்பான செய்தி.

இந்தச் செய்தியை நான் (இந்தக் கட்டுரை ஆசிரியர்) பிரபல எழுத்தாளர் மணியன் நடத்திய ஆன்மீக மாத இதழான ஞானபூமியில் படித்தேன்

குருஜி ஹரிதாஸ் கிரி சுவாமிகள் அவர்களின் உரையாடல் 1985 பிப்ரவரி இதழில் 28ஆம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் வரும் பகுதி இது.

அந்தப் பகுதியை மட்டும் அவருடைய சொற்களிலேயே இங்கு பார்ப்போம்:

“ஜெர்மானிய நாட்டைச் சேர்ந்த மாக்ஸ்முல்லர் என்ற பேரறிஞர் தனக்கென்று ஓர் உயில் எழுதி வைத்திருக்கிறார். அதில் அவர் “நான் மீண்டும் இந்த உலகத்தில் பிறக்க விரும்பவில்லை. அப்படிப் பிறந்தாக வேண்டும் என்று ஆண்டவன் விரும்பினால் என்னை இந்தியாவில் இந்துவாகப் பிறக்கச் செய்யட்டும். அதிலும் தென்னிந்தியாவில் வேதம் பயிலும் ஒரு குடும்பத்தில் பிறக்கச் செய்யட்டும்! என்று எழுதி வைத்திருக்கிறார்.

 

இந்த மாக்ஸ்முல்லர் உயில் பற்றி மேலும் அறிய விரும்பி இணையதளத்தில் ஆராய ஆரம்பித்தேன்; இது பற்றி ஏதேனும் புத்தகம் உள்ளதா என்று தேடியும் பார்த்தேன். ஆனால் சரியான தகவல் கிடைக்கவில்லை. இந்தச் செய்தி உள்ளபடி உண்மையாக இருந்தால் மாக்ஸ்முல்லரின் இறுதி நிலையை ஊகித்து உணர்வது வெகு சுலபம்.

ஆக மாக்ஸ் முல்லர் பிரிட்டிஷாரின் கைக்கூலியாக இருந்து இந்தியாவின் நண்பராக மாறி கடைசியில் இந்தியாவின் பக்தராக ஆனார் என்ற முடிவுக்கு வரலாம்.

இது தான் மாக்ஸ்முல்லர் மர்மம்.

 

23

இனி அவர் ஆராய்ச்சிகளைப் பற்றியும் அது விளைவித்த சேதத்தையும் நினைக்கும் போது அதற்கென்ன பதில்?

மாக்ஸ்முல்லர் விளைவித்த சேதம் பெரிது.அதைக் கையில் ஏந்திக் கொண்ட கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதவாதிகள் வேதங்களை இழித்தும் பழித்தும் இன்று வரை கூறி வருகின்றனர்.

ஆனால் இதை மறுத்து ஏராளமான அறிஞர்கள் தங்கள மறுப்புக் குரலை உரிய ஆராய்ச்சிகள் மூலமாக வெளிப்படுத்தி உள்ளனர்; வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒரே ஒரு எடுத்துக் காட்டை இங்கு தரலாம்:

Historical Gleanings from Sankrit Literature  – S.C.Banerji – 1979 (published by Oriental Publishers & Distributors, Daryaganj, New Delhi, India)

மேலே குறிப்பிட்டுள்ள புத்தகத்தில் பக்கம் 5இல் வரும் ஆராய்ச்சி உரை இது:-

Max Muller propounded the theory that Sanskrit literature had a hibernation during the early centuries of the Christian era. According to him, there was a literary interregnum in this period due mainly to continuous foreign invasions. This theory has been proved to be wrong on literary and epigraphical evidences. Also disproved is the hypothesis of a period of Prakrta literature out of which Sanskrit literature grew up.

இது போல மாக்ஸ்முல்லரின் தவறான பல முடிவுகளை வெளிப்படுத்தும் ஏராளமான அறிஞர்களின் உரைகள் உள்ளன. அதை விரிப்பின் ஒரு தனிப் புத்தகமாக  மலரும்.

24

இறுதியாக ஸ்வாமிஜியின் ஒரு கருத்துடன் இந்த மாக்ஸ்முல்லர் மர்மத்தை முடித்துக் கொள்வோம்.

இந்தியாவைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசினாலும் அவ்வப்பொழுது ஒரு குறையையும் மாக்ஸ்முல்லர்  சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்று ஸ்வாமிஜி குறிப்பிடுகிறார். ஆக அவருக்கு மாக்ஸ்முல்லரின் இந்தக் குறை தெரிந்தே இருந்திருக்கிறது.

நாளடைவில் அவர் இன்னும் திருந்துவார் என்று அவரது கருணை உள்ளம் நினைத்தது.

ஆனால் வேத காலம் பற்றி அவர் கூறிய உரையே முத்தாய்ப்பான ஒன்று..

உலகிலேயே மிகப் பழைய நூல் இந்த சிந்தனைக் கருவூலம் தான். இது எப்போது தோன்றியது  என்பது ஒருவருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்; இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம்  வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக இருக்கலாம்.. ஆனால் அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன. ஏன், முன்னை விட புதுப் பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம்

 (ஞான தீபம் மூன்றாம் தொகுதி பக் 219)

இக்கால ஆராய்ச்சியாளர் என்பதில் மாக்ஸ்முல்லரும் அடங்குகிறார். அவரது வேத காலம் பற்றிய கருத்துக்கள் தவறு என்பதை அழுத்தம் திருத்தமாக இப்படி ஸ்வாமிஜியே கூறி விட்டார்.

ஆகவே நமது இறுதி முடிவு இதுவாக இருக்கிறது:

மாக்ஸ்முல்லரில் தள்ளுவனவற்றைத் தள்ளி, கொள்வனவற்றைக் கொள்வோம்.

அவரது கைக்கூலி கருத்துக்களைக் கை கழுவி விட்டு விட்டு அவரது பக்திப் பரவசமான ஹிந்து மதம் பற்றிய கருத்துக்களை ஏற்போம்.

இந்த விஷயத்தில் இன்னும் அதிகம் ஆவல் கொண்டு மேலதிக விவரங்களை அறிய விரும்புவோர் மாக்ஸ்முல்லர் எழுதியவை, அவரைப் பற்றி எழுதியவைஸ்வாமி விவேகானந்தரின் அனைத்து நூல்கள் ஆகியவற்றைப் படிப்பதோடு மெக்காலே, ராஜா ராம் மோஹன் ராய் உள்ளிட்டவர்களைப் பற்றியும் படிக்க வேண்டும். அத்துடன் பாதிரிகளின் மதமாற்றப் பிரச்சாரம் பற்றிய ஏராளமான நூல்களையும் படிக்கலாம்.

இதுகாறும் இந்தத் தொடரைப் படித்து ஊக்குவித்த அன்பர்களுக்கு எனது நன்றி.

இதை வெளியிட்ட திரு . சுவாமிநாதன்www.tamilandvedads.com அவர்களுக்கு எனது நன்றி.

                  ச.நாகராஜன் பங்களூரு 10-1-2018

 

அன்பர்களின் கருத்தை வரவேற்கிறோம்.

ஹிந்து விவேகானந்தர்! (Post No.4607)

Picture from Facebook by Anila Gupta

((எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால்தமிழ் வாழ வேண்டுமானால்இந்து மதம் வாழ வேண்டுமானால்எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. ))

 

 

 

Date: 12 JANUARY 2018

 

Time uploaded in London- 5-59 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4607

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

ஹிந்து மதத்தைப் பற்றி, இந்தியாவைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஸ்வாமி விவேகானந்தரைப் படிக்க வேண்டும்.

அவரது பிறந்த நாள் : 12-1-1863 சமாதி தினம் : 4-7-1902

ஸ்வாமிஜியின் ஜெயந்தி தினத்தை ஒட்டிய சிறப்புக் கட்டுரை!

 

ஹிந்து விவேகானந்தர்!

 

ச.நாகராஜன்

 

1

ஸ்வாமி விவேகானந்தர் ஹிந்து மதத்திற்கு ஆற்றிய தொண்டு பிரமிக்க வைக்கும் ஒன்று.

ஹிந்து மக்களைச் சொந்த நாட்டிலே எழுச்சியுறச் செய்ததோடு அதன் பெருமையை உலகளாவிய விதத்தில் அறியச் செய்தார்.

உலக அறிஞர்களையே வியக்க வைத்தார்.

‘ஹிந்து சைக்ளோன்’ – ஹிந்து சூறாவளி என்று அமெரிக்கப் பத்திரிகைகள் புகழாரம் சூட்டி அவரைக் கொண்டாடின.

வியப்பு கலந்த திகைப்பில் அவரைப் பற்றிய செய்திகளை வெளியிட்ட வந்த வண்ணம் இருந்தன.

அவர் நியூயார்க்கில் இருந்த போது கூறியது இது தான்:

New York, 6 May 1895 :

I did not come to seek name and fame; it was forced upon me. I am the one man who dared defend his country, and I have given them such ideas as they never expected from a Hindu. There are many who are against me, but I will never be a coward..

(Complete Works of Swami Vivekananda Volume 5, pages 81-81)

 

2

ஸ்வாமிஜி நல்லவர்க்கு நல்லவர். வல்லவர்க்கு வல்லவர்.

அவருடன் வாதாட வந்தவர்கள் வாயடைத்துப் போயினர்.

அவருக்குத் தீங்கு செய்ய முனைந்த பாதிரிகள் அதன் மூலம் தமக்குத் தீங்கையே தேடிக் கொண்டனர்.

ஸ்வாமிஜியின் வாழ்க்கையில் கிறிஸ்தவ பாதிரிகளுடன் அவருக்கு நேரிட்ட ‘நேருக்கு நேர்’ மோதல் பல.

அவரைப் பொறுக்கமாட்டாதவர்களைப் பற்றி அவர் கூறினார் இப்படி:

It struck me more than once that I should have to leave my bones on foreign shores owing to the prevalence of religious intolerance.

(Complete Works of Swami Vivekananda Volume 3, page 187)

 

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டத் தயாராக அங்கு உள்ள பாதிரிகள் தயாராக இல்லை. மாறாக அவருக்கு எதிரான சதித் திட்டங்கள் தீட்டி அவரது எலும்பை அங்கேயே புதைக்க அவர்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்!

ஆனாலும் அவர் சளைக்கவில்லை; மலைக்கவில்லை.

அவர்களை எதிர்கொண்டு நின்று சவால்களை ஏற்று வென்றார்.

பிரபல நாத்திகரான ராபர்ட் கிரீன் இங்கர்ஸாலுடனான அவரது சந்திப்பு குறிப்பிடத் தகுந்த ஒன்று!

(இது பற்றி கலைமகள் மாத இதழில் ஏற்கனவே எனது கட்டுரை வெளியாகியுள்ளது; ஆகவே அந்த விவரங்களை மீண்டும் இங்கு தரவில்லை.)

அந்தச் சந்திப்பின் போது இங்கர்ஸால் கூறினார்:

“50 ஆண்டுகளுக்கு  முன்னர் இப்படி போதனை செய்ய நீங்கள் வந்திருந்தால் உங்களைத் தூக்கிலே தொங்க விட்டிருப்பார்கள். உயிரோடு உங்களை எரித்திருப்பார்கள். அல்லது கிராமங்களிலிருந்து கல்லை விட்டு அடித்து உங்களைத் துரத்தி இருப்பார்கள்”

இதை ஸ்வாமிஜியே கூறியுள்ளார். அவரது சொற்கள் இதோ:-

“Fifty years ago,” said Ingersoll to me, “ you would have been hanged in this country if you had come to preach. You would have been burnt alive or you would have been stoned out of the villages.”

(Complete Works of Swami Vivekananda Volume 2, page 27)

3

“மனத்திலே கறுப்பு வைத்து” உலவிய கெட்ட பாதிரிகளுடனான அவரது மோதல்கள் திகிலூட்டுபவை. அதை அவர் எதிர்கொண்ட விதமும் பிரமிப்பூட்டும்.

அந்தப் பாதிரிகள் பத்திரிகைகள் மூலம் தூஷணைப் பிரச்சாரங்களை மேற்கொண்டு பார்த்துத் தோற்றனர்.பின்னர் பல கேள்விகளை கூட்டங்களில் கேட்டு, அதற்கு வந்த உடனடி பதில்களால் வாயடைத்துப் போயினர்.பின்னர் பெருந்தொகை தருவதாகக் கூறி பெண்களை அவரிடம் அனுப்பிப் பார்த்தனர். அந்த வேசிகளோ அருள் அலை மேலே ததும்ப திரும்பி ஓடி வந்தனர். பாதிரிகள் திகைத்துப் பயந்தனர். இறுதி வழியாக அவரைத் தொலைத்துக் கட்டுவதே ஒரே வழி என்று தீர்மானத்திற்கு வந்தனர். அதில்

ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் இங்கு பார்க்கலாம்.

சுவாமி ஆசுதோஷானந்தர் எழுதிய, “சுவாமி விவேகானந்தர் – விரிவான வாழ்க்கை வரலாறு, முதல் பாகம், 26 ஆம் அத்தியாயம் எதிர்ப்பு அலைகள் – என்ற அத்தியாயத்திலிருந்து தரப்படும் வரிகள் இவை:

“டெட்ராய்ட்டில் சுவாமிஜியை ஒரு விருந்திற்கு அழைத்தனர். சிற்றுண்டி அளித்தனர். அங்கு அளிக்கப்பட்ட காப்பியைக் குடிப்பதற்காக சுவாமிஜி வாயருகே கொண்டு சென்றார். எப்போதும் உடன் நின்று காக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் அப்போது அங்கே தோன்றினார்; “அந்தக் காப்பியைக் குடிக்காதே.அதில் விஷம் கலந்துள்ளது” என்றார். சுவாமிஜி சுதாரித்துக் கொண்டார்.பாதிரிகளின் கடைசி முயற்சியும் தோல்வி கண்டது.”

4

சுவாமிஜி  ஹிந்துக்களை எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று வெறுமனே வெற்று வேதாந்தம் பேசி செய்ய வேண்டிய செயலைச் செய்யாது விட்டுவிடச் சொல்லவில்லை.

உனது கடமையைச் செய்; ஆனால் அதில் பலனை எதிர்பாராதே என்ற கீதையின் வாக்கை வலியுறுத்திய அவர், ஹிந்து என்றாலே ஒரு சக்தி மின்னலை உன் உடம்பில் பாய வேண்டும் என்றார்.

உத்வேகம் ஊட்டும் உணர்ச்சி மிக்க அவரது சொற்கள் வலிமை வாய்ந்தவை; ஹிந்துக்களை வாழ வைப்பவை; செயலூக்கம் பெற்றுச் செய்ய வேண்டுவனவற்றை உடனடியாகச் செய்யத் தூண்டுபவை.

அந்த மகோன்னதமான விழிப்புணர்ச்சிக்கான குரலை – தெய்வ வாணியை – அப்படியே கீழே தருகிறோம்.

படிப்போம்; அதன் படி நடப்போம்; ஹிந்து மதத்தின் பெருமை உலகின் உச்சியை அடைந்து அனைத்து உலக மக்களும் நலமுடன் வாழ வழியைக் கற்பிப்போம்.

 

Mark me, then and then alone you are a Hindu when the very name sends through you a galvanic shock of strength.

 

Then and then alone you are a Hindu when every man who bears the name, from any country, speaking our language or any other language, becomes at once the nearest and the dearest to you.

 

Then and then alone you are a Hindu when the distress of anyone bearing that name comes to your heart and makes you feel as if your own son were in distress.

 

Then and then alone you are a Hindu when you will be ready to bear everything for them, like the great example I have quoted at the beginning of this lecture, of your great Guru Govind Singh.

Driven out from this country, fighting against its oppressors, after having shed his own blood for the defence of the Hindu religion, after having seen his children killed on the battlefield — ay, this example of the great Guru, left even by those for whose sake he was shedding his blood and the blood of his own nearest and dearest — he, the wounded lion, retired from the field calmly to die in the South, but not a word of curse escaped his lips against those who had ungratefully forsaken him!

 

Mark me, every one of you will have to be a Govind Singh, if you want to do good to your country.

 

You may see thousands of defects in your countrymen, but mark their Hindu blood. They are the first Gods you will have to worship even if they do everything to hurt you, even if everyone of them send out a curse to you, you send out to them words of love.

 

If they drive you out, retire to die in silence like that mighty lion, Govind Singh. Such a man is worthy of the name of Hindu; such an ideal ought to be before us always. All our hatchets let us bury; send out this grand current of love all round.

5

ஸ்வாமிஜியின் ஜெயந்தி தினத்தில் அவரது நினைவைப் போற்றிக் கொண்டாடி தூய்மையான, உறுதியான ஹிந்துவாக வாழ சூளுரை எடுப்போம்; ஹிந்து  மதத்தின் ஏற்றத்தை அறவழியில் உலகில் அனைவரும் உணரும் வகை செய்வோம்.

***

 

 

மஹாராஜா புக்குசாதியின் ஆசை! (Post No.4601)

((எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால்தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால்எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக் கூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்நீயே கவனித்துக்கொள்!))

 

 

 

Date: 10 JANUARY 2018

 

Time uploaded in London- 6-51 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4601

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

புத்த சரிதம்

 

மஹாராஜா புக்குசாதியின் ஆசை!

 

ச.நாகராஜன்

Buddha in Bangladesh; picture sent by Lalitha Malar Maniam

ராஜக்ருஹத்தின் மஹாராஜா பிம்பசாரனுக்கும், தக்ஷசீல மன்னனான மஹாராஜா புக்குசாதிக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது.

 

இரு நாடுகளுக்கும் இடையே நல்ல வர்த்தக உறவு ஆரம்பித்து, மேம்பட்டது.

 

பிம்பசாரன் அந்த நாட்டு வணிகர்கள் மூலமாக தன் நண்பனுக்கு பல பரிசுப் பொருள்களை அனுப்பினான். அந்தப் பரிசுப் பொருள்களுடன் கூடவே ஒரு கடிதமும் சென்றது.

கடிதம் தங்கத் தகட்டில் எழுதப்பட்டிருந்தது.

“அன்பு நண்பரே!, எனது நாட்டில் மூன்று ரத்தினங்கள் உள்ளன. புத்தம், தர்மம், சங்கம்!”

 

கடிதத்தின் வாசகத்தைப் படித்த புக்குசாதிக்கு அதைப் பற்றி அறிய ஆவல் மிகுந்தது.

 

புத்தரைப் பற்றியும் தர்மத்தைப் பற்றியும் சங்கத்தைப் பற்றியும் நன்கு அறிந்து கொண்டான்.

 

புத்தம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

தர்மம் சரணம் கச்சாமி

புத்தரை மானசீகமாகச் சரணடைந்தான்!

 

Picture by Puvana Sarma

எப்படியாவது வாழ்நாளில் ஒரு முறையாவது புத்த தரிசனத்தை அடைய வேண்டுமென்று அடங்காத ஆவல் ஏற்பட்டது அவனுக்கு.

இளவரசன் சித்தார்த்தன் எப்படி ராஜ்யம், பட்டம் ஆகியவற்றைத் துறந்தானோ அதே வழியைக் கடைப்பிடிக்க எண்ணிய அவன், தன்  மகுடத்துடன் அனைத்தையும் துறந்தான். மஞ்சள் ஆடையை அணிந்தான்.

 

நேராக ராஜக்ருஹம் நோக்கிக் கிளம்பினான்.

அவனது உற்றாரும் சுற்றமும், மக்களும் அழுது புலம்பினர்.

ஆனால் புக்குசாதி தன் பயணத்தைத் தொடர்ந்தான். அவன் பின்னால் பலரும் கூடவே வரலாயினர்.

 

சில நாட்களில் 192 யோஜனை தூரத்தைக் கடந்து ராஜக்ருஹத்தை வந்து அடைந்தான்.

புத்தர் எங்கிருக்கிறார் என்று கேட்டான்.

அங்கிருந்த மக்களோ, புத்தர் 45 யோஜனை தூரத்தில் உள்ள சாவட்டி என்னும் இடத்தில் இருப்பதாகக் கூறினர்.

 

அன்றிரவே அந்த இடத்தை அடைவது சாத்தியமில்லை என்பதால் இரவைக் கழிக்க ஏதேனும் இடம் இருக்கிறதா என்று கேட்டான்.

ஒரு குயவனின் குடிசை இருப்பதாகத் தெரிய வந்தது.

குயவனின் அனுமதியைப் பெற்று அவன் அங்கு தங்கினான்.

 

அங்கோ சாவட்டியில் புத்தர் அன்றைய தினத்தில் தன் கருணையை அனுக்ரஹிக்க சத்பாத்திரமான ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தார்.

 

தக்ஷசீல மன்னனான புக்குசாதி தன் அரசையும் சுக போகங்களையும் துறந்து தன்னப் பார்ப்பதற்காக நெடுந்தொலைவு கடந்து வந்துள்ளான் என்பதை அவர் அறிந்தார்.

மறு நாள் காலை அவன் ஒரு விபத்தில் இறக்கப் போவதையும் அவர் அறிந்தார்.

 

என்ன செய்வது? கருணை உள்ளம் ஒரு முடிவுக்கு வந்தது.

சாவட்டியிலிருந்து கிளம்பிய புத்தர் நேராக ராஜக்ருஹத்தை நோக்கி விரைந்து அதை அடைந்தார்.

 

புக்குசாதி தங்கியிருந்த குயவனின் குடிசையை அணுகினார்.

குயவனின் தான் அங்கு தங்க முடியுமா என்று  கேட்டார்.

குயவன் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றான்.

குடிசைக்குள் நுழைந்த புத்தர் புழுதி நிறைந்த குடிசையின் தரையைப் பார்த்தார்.

Picture from Deccan Herald; Budhdha Gaya/Bodhgaya

அதே தரையில் தான் புக்குசாதி அமர்ந்திருந்தான்.

அவரும் அமர்ந்தார்.

 

இப்போது அந்த புழுதித் தரையில் இரண்டு பெரும் சாம்ராஜ்யங்களைத் துறந்த மன்னர்கள் அமரிந்திருந்தனர்.

சித்தார்த்தனாக இருந்து புத்தராக ஆனவர். இன்னொருவர் தக்ஷசீல மன்னன் புக்குசாதி.

 

இருவரும் நெடுதூரம் நடந்திருந்தனர். இருவருக்கும் களைப்பு;

இருவரும் பேச ஆரம்பித்தனர். அர்த்தமுள்ள உரையாடல் ஒன்று ஆரம்பித்தது.

 

புத்தர்: நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?

புக்குசாதி : நான் புக்குசாதி. தக்ஷசீல மன்னன்.

புத்தர்: மஞ்சள் ஆடை அணிந்திருக்கிறீர்கள்! யாரிடம் துறவறம் பெற்றீர்கள்? ஏன் இங்கு வந்திருக்கிறீர்கள்?

 

புக்குசாதி: எனது நண்பர் மஹாராஜா பிம்பசாரன் ஒரு தங்கத் தகட்டில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் இந்த ராஜ்யத்தில் மூன்று ரத்தினங்கள் இருப்பதாகவும் அவை புத்தம், தம்மம், சங்கம் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதைக் கேட்டவுடன் என் ராஜ்யத்தை நான் துறந்தேன். ஒரு கடையிலிருந்து இந்த துவராடையை வாங்கி அணிந்தேன். புத்தரைத் தேடி இங்கு வந்தேன். அவரோ சாவட்டியில் இருப்பதாக அறிகிறேன். இரவு நேரமாகி விட்டது. ஆகவே இங்கு தங்கி இருக்கிறேன். நாளை காலை அவரைத் தரிசிப்பேன்.

 

புத்தர்: அவரை இதற்கு முன்னர் பார்த்திருக்கிறீர்களா?

புக்குசாதி: இல்லை

புத்தர்: அவரைப் பார்த்தால் அவர் தான் புத்தர் என்பதை நீங்கள் உணர முடியுமா?

புக்குசாதி: முடியாது.

அவ்வளவு தான். உரையாடல் முடிந்தது.

 

Picture from Singapore; posted by Puvana Sarma

இருவரும் மௌனமாயினர்.

புலர்காலைப் பொழுது மலர்ந்தது.

புத்தர் புக்குசாதிக்கு உபதேசித்தார்.

அப்போது தான் புக்குசாதிக்குத் தெரிய வந்தது, முதல் நாள் இரவு தன்னுடன் உரையாடிய மகான் புத்தரே தான் என்று!

எல்லையற்ற ஆனந்தம் கொண்ட அவன், புத்தரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினான் முந்திய  இரவு அவரை ‘ஆயுஷ்மத்’ என்று அழைத்தமைக்காக! ஆயுஷ்மத் என்றால் நண்பன் என்று பொருள்.

 

தனக்கு உரிய முறையில் சங்கத்தில் சேர்க்குமாறு அவன் வேண்டினான்.

புத்தரும்  கருணையுடன் அவ்னிடம், ஒரு துவராடையையும் ஒரு பிக்ஷா கலயத்தையும் கொண்டு வரப் பணித்தார்.

புக்குசாதி வெளியில் சென்று குப்பைக் குவியல் ஒன்றில் துவராடை ஒன்றைத் தேடலானான்.

 

 

அநத சமயத்தில் புத்தர் ஜேடவனம் என்ற மடாலயத்திற்குச் சென்றிருந்தார்.

 

குப்பைத் தொட்டியில் துவராடையையும் கலயத்தையும் அவன் எடுக்கும் போது காளை ஒன்று தன் இரு கொம்புகளால் அவனைக் கூர்மையாகக் குத்தியது.

 

அதே இடத்தில் உடனே அவன் மரணமடைந்தான்.

ஏற்கனவே புத்தரின் உபதேசத்தால் அனாகாமி என்ற உயரிய நிலையை அடைந்த அவன் திரும்பி வராத ஒரு உயரிய நிலையைப் பெற்றிருந்தான்.

 

அவிஹா ப்ரம்ம உலகத்திற்குச் சென்ற அவன் அர்ஹாந்த் என்ற அற்புதமான நிலையை அடைந்து விட்டான்.

 

நடந்ததை எல்லாம் கேட்ட மஹாராஜா பிம்பசாரன் புக்குசாதியின் உடலை எடுத்து தக்க மரியாதைகள் செய்து தகனம் செய்தான்.

அவனது அஸ்தியைச் சேர்த்து ஒரு நினைவிடத்தை அமைத்தான்.

 

புத்தரின் எல்லையற்ற கருணை எப்படி இறக்கப் போகும் விதியுடைய ஒருவ்னையும் சென்று சேரும் என்பதற்கு புக்குசாதியின் வாழ்க்கை நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

தன்னை அண்டி வந்த எவரையும் புத்தர் கைவிட்டதே இல்லை!

***

பிராமணர்கள் ஜாக்கிரதை! தமிழ் கவிஞர் எச்சரிக்கை! (Post No.4599)

Written by London Swaminathan 

 

Date: 9 JANUARY 2018

 

Time uploaded in London 11-13 AM

 

 

 

Post No. 4599

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

((எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக் கூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்; நீயே கவனித்துக்கொள்!))

 

பிராமணர்கள் தீ போன்றவர்கள்; மிகவும் பக்கத்தில் போனால் சுடும்; மிகவும் விலகிச் சென்றால் குளிரும்; நீங்கள் கஷ்டப்படுவீர்கள்- என்று ஒரு தமிழ்க் கவிஞர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எச்சரித்தார்.

உலக மஹா புத்திமான், பேரறிவாளன், உலகின் முகல் பொருளாதார நூல் எழுதிய நிபுணன், சாணக்கிய நீதி, அர்த்த சாஸ்திரம் முதலிய நூல்களை யாத்த பெரு மகன், மகத சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பின்னரும் குடிசையில் வாழ்ந்த உத்தமன், ஏழைப் ப்ராஹ்மணன் ஆகிய சாணக்கியன் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் ப்ராஹ்மணாள் பற்றி இதை விட ஒரு பெரிய எச்சரிக்கை விடுக்கிறான்.

 

இரண்டு பிராமணர்கள் நின்று கொண்டிருந்தால் குறுக்கே போகாதே!

 

பிராமணன் இருந்தால் அவனுக்கு எதிரே கால் நீட்டாதே.

 

இதோ தமிழ், ஸம்ஸ்க்ருத கவிதைகள்!!!

 

விப்ரயோர்விப்ரவஹ்ன்யோஸ்ச தம்பத்யோஹோ ஸ்வாமிப்ருத்யர்யோஹோ

அந்தரேண ந கந்தவ்யம் ஹலஸ்ய வ்ருஷபஸ்ய ச

சாணக்கிய நீதி, அத்தியாயம் 7, ஸ்லோகம் 5

 

பொருள்—“இரண்டு பிராமணர்களுக்குக் குறுக்கே போகாதே; ப்ராஹ்மணனுக்கும்   அக்னிக்கும் (தீ) குறுக்கே போகாதே போகாதே; அவ்வாறே கணவன்– மனைவி, எஜமானன்–சேவகன் (முதலாளி- தொழிலாளி), உழுகலன் (ஏர்)- காளை மாடு இவர்களுக்கு இடையிலும் செல்லாதே.

 

பாதாப்யாம் ந ஸ்ப்ருசேதக்னிம் குரும் ப்ராஹ்மணமேவ ச

நைவ காம் ந குமாரீம் ச ந வ்ருத்தம் ந சிசும் ததா

சாணக்கிய நீதி, அத்தியாயம் 7, ஸ்லோகம் 6

 

பொருள்

அக்னி, ஆசிரியர், ப்ராஹ்மணன், பசு மாடு, இளம் பெண், முதியவர், குழந்தை ஆகியோருக்கு முன்னால் காலை நீட்டி உட்காராதே, படுக்காதே.

சாணக்கியன் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் ஆராய்ந்து பார்க்கில் பல விஷயங்கள் நமக்கே புரியும்; உதாரணங்கள் மனக் கண் முன் சித்திரம் போலச் செல்லும்.

 

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகு!

 

அந்தக் காலத்தில் ப்ராஹ்மணர்கள் தூய ஒழுக்கத்தின் சின்னமாக விளங்கினர்; அந்தக் காலத்தில் மூவேந்தர்களும் கூட ப்ராஹ்மணர்களைக் கண்டு அஞ்சினர். சங்க இலக்கியத்தில் அதிகமான பாடல்களை இயற்றிய கபிலரையும் பரணரையும் கண்டு சேர சோழ பாண்டியர்கள் மரியாதையுடன் கூடிய பயம் கொண்டனர். ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என்று தமிழ்ப் பார்ப்பான் கபிலனை சங்கப் புலவர்கள் புகழ்ந்து, தலைமேல் வைத்துக் கூத்தாடினர்.

 

‘’குணம் என்னும் குன்று ஏறி நிற்கும் பார்ப்பனர்கள் வெகுளி கணம் ஏயும் காத்தல் அரிது’’ என்பதால் பயந்தனர். அந்தக் காலத்தில், அவர்கள் வாயில் நல்ல சொற்கள் வந்தால் அது பலிக்கும்; சுடு சொற்கள் வந்தால் அது ஒருவனுடைய குலத்தையே வேர் அறுக்கும் என்பது உண்மையாக இருந்தது.

 

இதனால் வேளாண் குடி மக்களுக்கு திரிகடுகம் ஆசிரியர் நல்லாதனார், ஒரு நல்ல புத்திமதி செப்பினார்:

சூதாட்டத்தில் பணம் கிடைக்க வேண்டும் என்று காத்திராதே; விரும்பாதே; பார்ப்பனர்களை தீ என்று கருது;

அகலாது அணுகாது குளிர் காய்பவர் போல இரு;

உழவுத் தொழிலை கடனே என்று செய்யாமல், விரும்பிச் செய்.

 

வேளான்குடிக்கு அழகாவன

 

 

கழகத்தால் வந்த பொருள் காமுறாமை

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல்- ஒழுகல்

உழவின்கண் காமுற்று வாழ்தல் இம்மூன்றும்

அழகென்ப வேளாண் குடிக்கு

–திரிகடுகம், நல்லாதனார்

 

முற்காலத்தில் இதே தீ உவமையை வள்ளுவர், அரசர் பெருமக்களுக்கு உவமித்தார். தமிழ் வேதமாகிய திருக்குறள் சொல்லும்:–

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார்– குறள் 691

 

அரசர் கூட வேலை செய்வோர், ராஜாவை மிகவும் நெருங்காமலும், விலகிப் போகாமலும், குளிர் காய்பவன் போல, தம் கடமையைச் செய்ய வேண்டும்.

 

பிற்காலத்தில் நன்னூல் எழுதிய பவணந்தி போன்றோரும் இதைப் பயன் படுத்தினர்.

 

 

உண்மையில் இந்த தீக்காயும் உவமையை முதல் முதலில் பயன்படுத்தியவர் ஆதி சங்கரர் ஆவார். அவர் எழுதிய பாஷ்யங்களில் இந்த உவமை வருகிறது.

 

பகவத் கீதை 9-29 ம் ஸ்லோகத்துக்கு அண்ணா எழுதிய உரையில் இதை மேற்கோள் காட்டுவார்:

அக்னியைப் போல் நான் உளேன்; எட்டி நிற்பவர் குளிரை அக்னி போக்குவதில்லை; ஸமீபித்து வருவோர் குளிரைப் போக்குகிறது. இது அக்னியின் பாரபக்‌ஷமன்று. அது போலவே பக்தர்கள் என் அருள் பெறுவதும். மற்றவர் பெறாததும்- சங்கரர்

விஷ்ணுஸர்மன் எழுதிய பஞ்ச தந்திரத்திலும் இந்த தீ உவமையைக் காணலாம்.

 

–Subham–

கோசம், ஆத்மா சித் ரூபன், விளக்கம்! (Post 4597)

Date: 9 JANUARY 2018

 

Time uploaded in London- 6-49 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4597

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 8

முந்தைய கட்டுரைகள்: முதல் கட்டுரை எண் 4388- வெளியான தேதி: 12-11-17

இரண்டாம் கட்டுரை எண் 4406 -வெளியான தேதி : 18-11-17

மூன்றாம் கட்டுரை எண் 4445 – வெளியான தேதி : 30-11-17

நான்காம் கட்டுரை எண்  4472  – வெளியான தேதி :    9-12-17

ஐந்தாம் கட்டுரை எண் 4511 – வெளியான தேதி : 18-12-17

ஆறாம் கட்டுரை எண் 4546 – வெளியான தேதி : 26-12-2017

ஏழாம் கட்டுரை எண் 4574 – வெளியான தேதி : 2-1-2018

 

கோசம், ஆத்மா சித் ரூபன், விளக்கம்!

ச.நாகராஜன்

 

 

 

இனி கோசம், ஆத்மா பற்றித் தெரிந்து கொள்வோம்

*

ஐயா, கோசம் என்றால் என்ன?

சொல்கிறேன்.

கத்திக்கு உறை இருப்பது போல,

மாம்பழத்திற்கு தோல் இருப்பது போல,

மனிதனை சட்டை மறைப்பது போல,

ஆத்மாவை, அன்னமய கோசம், பிராணமய கோசம்,  மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம். ஆனந்த மய கோசம் என்று ஐந்து கோசங்கள் மறைக்கிறது.

 

இந்த கோசங்களுக்கு ஆத்மா அன்னியன் என்பது எப்படி?

அக்கினியை அனுசரித்திருக்கும் புகைக்கு அந்த அக்கினியைத் தவிர வேறு இருப்பு இல்லை.

 

என்றாலும் கூட அந்தப் புகை அக்கினியை மறைக்கிறது.

அதே போல ஆத்மாவின் இருப்பையே இருப்பாகக் கொண்ட கோசங்கள் ஆத்மாவை மறைப்பதாக ஆரோபிக்கப்படுகின்றன.

ஆனால் மண்ணினிடத்தில் ஆரோபிக்கப்பட்ட ஒரு குடத்தினுடைய ரூபமும், பெயரும் பாதிக்கப்படும் போது  வாஸ்தவமாய் மண் மாத்திரம் எப்படி மிஞ்சுகிறதோ, அதே போல ஆத்மாவினிடத்தில் ஆரோபிக்கப்பட்ட  ஐந்து கோசங்களும் ஆத்ம ஞானத்தினால் பாதிக்கப்படுகிறது.

 

சச்சிதானந்த ஸ்வரூபமான ஆத்மா ஒருவனே மிஞ்சுகிறான்.

 

நல்லது, ஐயா, ஆத்மாவின் சச்சிதானந்த ரூபத்துவம் என்னும் ஸத் ரூபம், சித் ரூபம், ஆனந்த ரூபம்  ஆகியவற்றிற்கான லக்ஷணம் எது?

முக்காலத்திலும், ஒன்றினாலும் பாதிக்கப்படாமல் இருந்து கொண்டு ஒரே ரூபமாக இருப்பது தான் ஸத் லக்ஷணம்.

 

 

ஆத்மா சித் ரூபன் என்பதற்கு என்ன பிரமாணம்?

தனது இருப்பை வெளிக்காட்ட சூரியன் முதலான சாதனங்களை நாடாமல், தானே விளங்கிக் கொண்டும் தன்னிடத்தில் ஆரோபிக்கப்பட அனைத்து ஜட பதார்த்தங்களையும் பிரகாசிப்பித்துக் கொண்டும் இருக்கின்றபடியால் சித் ரூபன் எனப்படுகிறான்.

 

 

இனி ஆனந்த ரூபத்துவம் எது?

நித்தியமாயும், நிருபாதிகமாயும், நிரசதியமாயும் இருக்கின்ற சுகம் எதுவோ அதுவே

ஆனந்த ரூபத்துவம்.

 

அதெப்படி ஐயா?

சுஷூப்தி ஆநந்தத்தில் சுக லக்ஷணம் இருப்பதனால் அந்த ஆனந்தமே “நான்” என்று அறிந்து கொள்ளத்தக்கது.

 

சுஷூப்தியில் துக்க நிவர்த்தி மட்டும் காணப்படுகிறதேயன்றி ஆனந்தத்துவத்தை அனுபவிப்பதைக் காணவில்லையே?

நல்ல தூக்கத்தில் இருந்த ஒரு மனிதன் எழுந்திருந்த பின்னர், “நான் சுகமாகத் தூங்கினேன்” என்று சொல்கிறான் இல்லையா, அப்படிச் சொல்வதால், ஆத்மாவுக்கு சுஷூப்தியில் சுகத்தின் இருப்பைச் சொல்கிறான்.

 

நிருபாதிக்கத்துவம் எது?

புஷ்பம், சந்தனம், பெண் ஆகியவை உபாதிகள்.இவற்றால் உண்டாகும் சுகம் ஔபாதிகம். சுஷூப்தியில் இந்த உபாதிகள் எதுவும் காணப்படுவதில்லை.

அப்படியிருந்தும் சுகமானது எல்லோராலும் அனுபவிக்கின்றபடியால் சுஷூப்தியில் நிருபாதிகத்வ ஆனந்தம் இருக்கிறது.

 

நிரதிசயத்துவமாவது எது?

மனுஷ்ய ஆனந்தம் முதல் ஹிரண்யகர்ப்ப ஆனந்தம் வரை பதினோரு ஆனந்தம் இருக்கிறது.

ஆகையால்  அவற்றிற்கு அதிசயத்துவம் உண்டு.

ஆனால் பிரம்மானந்தம் ஒன்றே எல்லையற்றதாயும், ஒப்புயர்வு அற்றதாயும் உள்ளபடியால் சுஷூப்தி ஆனந்தமாகிய பிரம்மானந்தமே நிரதிசயம் ஆகும்.

 

நித்தியத்துவமாவது எது?

ஜாக்ரத ஸ்வப்னங்களில் அநேக விஷயங்களில் அநேக ரூபமான  சுகத்தைத் தனித்தனியாக அனுபவிக்கலாம்.

ஆனால் சுஷூப்தி சுகம் மாத்திரம் ஒரே ரூபமுடையதாகவும் பூர்ணமாயும் இருக்கிறது.

 

சச்சிதானந்த ஸ்வரூபம் என்ற அனுபவம் எப்படி வரும்? அது எப்படிப்பட்டது?

வேதாந்த, சாஸ்திர தாத்பரிய நிச்சய ரூபமாகிய சிரவணத்தை (சிரவணம் = கேட்பது) குரு முகத்தால் கேட்டும்,

அதற்கு அனுசாரமாய் மனனமும்,

மனனனுக்கு அனுசாரமாய் நிதித்யாசனமும் செய்தால்,

பிறகு சச்சிதானனந்த பிரம்மமே “நான்” என்ற ஞானம் உண்டாகும்.

இதுவே பரோக்ஷ ஞானம்.

இந்த பரோக்ஷ ஞானத்தைப் பற்றிய காரியங்களைச் செய்யாதவனாகவும்,

 

 

நான் கர்த்தா என்றாதி அபிமானத்தை விட்டவனாகவும்,

பிரம்மமே நானாக இருக்கிறேன் என்ற அனுபவத்தையும், அது விஷயமான முயற்சியையும் கர்த்ருவத்தையும் விட்டவனாயும், சகலத்திலும் சுஷூப்தியில் இருப்பது போல பற்றற்ற சுபாவமாகிய தூஷணீம் அவஸ்தையில் நீரில் உப்பு கரைந்தால் எப்படியோ அப்படி பிரம்மத்தில் கலந்து போன அந்தக்கரணத்தை உடையவனாகியும், நிர்விசேஷ நிலையில் இருப்பவனுக்கு நிர்விசேஷ ஞானம் எதுவோ அது தானாகவே உண்டாகிறது.

 

இது தான் அபரோக்ஷானுபவம்.

இந்த அனுபவம் எப்போது உண்டாகிறதோ அப்போது அவன் சுவானுப ரூபன்.

அப்போது தான் ஆனந்த ரூபன்.

அந்த ஆனந்த வைபவத்தை அவனேஅறிவானன்றி மற்றவர்கள் அறிய மாட்டார்கள்.

அந்த ஆனந்தத்தை அறிவிக்க எந்த வேத, வேதாந்த சாஸ்திரங்களினாலும் முடியாது.

மனோ வாக்குகளினாலும் முடியாது.

இப்படி வாக்கு, மனதுக்கு எட்டாத அகண்டானந்த பிரம்ம சுவரூபானுபவத்தில் இருக்கின்றபடியால் தன்னுடைய ஆனந்தத்தைத் தானே அனுபவிக்க சக்தியை உடையவனாகிறான்.

 

ஆத்மாவின் அகண்டார்த்தத்தைச் சொல்லுங்களேன்.

தேக பரிச்சேதம்,

கால பரிச்சேதம்,

வஸ்து பரிச்சேதம்

என்கின்ற மூன்று பரிச்சேதங்கள் அற்றதாகிய அபரிச்சின்னார்த்தம் தான் ஆத்மாவின் அகண்டார்த்தம்.

 

ஐயா, மிக்க நன்றி, நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டோம். என்றாலும் பரிச்சேதம் என்று சொன்னீர்களே அது பற்றித் தெரிந்து கொள்ள ஆவல்.

கேட்கலாமா?

தாராளமாகக் கேளுங்கள். பதில் சொல்கிறேன்.

***

அடுத்த கட்டுரையுடன் இந்த அத்வைத ஸார விளக்கம் முடியும்.

 

சகல வியாதிகளையும் போக்கும் சூரிய ஸ்துதிகள் (Post No.4583)

Date: 5 JANUARY 2018

 

Time uploaded in London- 5-41 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4583

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

ஞான ஆலயம் ஜனவரி 2018 இதழில் வெளியாகியுள்ள

மகர சங்கராந்தி சிறப்புக் கட்டுரை.

ஞான ஆலயம் வருட சந்தா ரூ300. சந்தா அனுப்ப வேண்டிய முகவரி :திருமதி மஞ்சுளா ரமேஷ், பழைய எண் 7, புதிய எண் 32, அருணாச்சலபுரம் இரண்டாவது தெரு, அடையாறு, சென்னை, 600020

 

குஷ்ட ரோகம், கண் வியாதிகள் உள்ளிட்ட சகல வியாதிகளையும் போக்கும் சூரிய ஸ்துதிகள்

 

ச.நாகராஜன்

1

உலகின் எல்லா நாகரிகங்களும் சூரியனைக் கண்டு பிரமித்து வியப்பவை. ஆனால் ஹிந்து நாகரிகமோ சூரியனின் அபார வல்லமையை ஆய்ந்து கண்டு பிடித்து அதை மனித குலத்தின் நன்மைக்காகப் பெறுவதற்குள்ள அனைத்து வழிகளையும் தந்திருக்கும் நாகரிகமாக அமைகிறது.

ஏராளமான சூரிய ஸ்துதிகள், சூரிய வழிபாட்டு முறைகள் ஹிந்து பாரம்பரியத்தில் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம்.

2

ஏழாம் நூற்றாண்டில் ஹர்ஷவர்த்தனனின் சாம்ராஜ்யம் மிகப் பெரிதாக விளங்கியது. ஹர்ஷவர்த்தனனும் அவனது தந்தை ப்ரபாகரவர்த்தனனும் சூரிய தேவனை உபாசிப்பவர்கள்.

 

அவனது அரசவையில் மிகப் பெரும் கவிஞராக மயூர பட்டர் என்பவர் இருந்தார். அபாரமான சம்ஸ்கிருத சொல் வன்மை உடையவர் அவர். அவருக்கு அதிரூபலாவண்யம் கொண்ட பேரழகியாக ஒரு மகள் இருந்தாள்.

அவளது அழகு அனைவரையும் சொக்க வைக்கும் அழகு.

அப்படிப்பட்ட அழகைப் பார்த்த மயூர பட்டர் அதைத் தன் அழகிய சொற்களினால் வர்ணித்துக் கவிதை இயற்றினார்.

இந்தப் பாடல்களைக் கேட்ட மகள் பெரிதும் வருத்தமடைந்தாள். சொந்தப் பெண்ணின் அழகை எந்தத் தந்தையாவது வர்ணிப்பானா? இது முறையா என்று அவள் வெகுண்டாள்.

மிகுந்த ஒழுக்க சீலமும் ஞானமும் வாய்ந்த அவள் பெரும் தபஸ்வினியும் கூட.

தந்தையை நோக்கி, “இப்படி நீங்கள் தகாத ஒரு செயலைச் செய்ததற்காக என்னை வர்ணித்த அந்தக் கண்கள் பார்வையை இழக்கட்டும். உங்கள் உடலைக் கொடிய குஷ்டம் தாக்கட்டும்” என்று சாபம் கொடுத்தாள்.

பெரும் சக்தியைக் கொண்டிருந்த அவளது சாபம் உடனே பலித்து விட்டது.மயூர பட்டர் பார்வையை இழந்தார். அவரது உடலோ குஷ்ட ரோகத்தால் பீடிக்கப்பட்டு சோபையை இழந்தது.

மயூர பட்டர் துக்கத்தினால் அழ, அவரது நிலையைக் கண்டு பரிதாபப்பட்ட மகளும் தன் சாபம் அவருக்குச் செய்த கெடுதியைக் கண்டு நொந்து போனாள்.

பின்னர் மனத்தெளிவு பெற்று தந்தையிடம், “தந்தையே! கவலைப்பட வேண்டாம். அனைத்து ரோகங்களையும் போக்கி ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரும் சூரியனைக் குறித்து உங்கள் வாக் வன்மையால் நூறு செய்யுள்களைக் கொண்ட சூர்ய சதகம் ஒன்றை இயற்றி அவனை வழிபடுங்கள். வழி பிறக்கும்” என்றாள்.

மகளின் அமிர்தம் போன்ற வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்த மயூர பட்டர் மனமுருக சூரியனை நோக்கி நூறு மந்திர சக்தி வாய்ந்த அபூர்வமான பாடல்களைப் பாடலானார்.

என்ன ஆச்சரியம்! பாடல்கள் முடிந்த போது அவர் மேனி குஷ்ட ரோகம் நீங்கிப் பளபளத்தது. கண் பார்வை தீர்க்கமாக வந்தது.

ஹர்ஷவர்த்தனன் உள்ளிட்ட அனைவரும் ஆச்சரியத்தால் பிரமித்தனர்.அவரையும் அவர் மகளையும் உலகமே போற்றியது.

 

SUN TEMPLE AT MODHERA IN GUJARAT

அந்த நூறு பாடல்களைக் கொண்ட சதகம் சூர்ய சதகம் என்றும் மயூர சதகம் என்றும் அனைவராலும் போற்றப்பட்டு இன்று வரை ஓதப்பட்டு வருகிறது.

குஷ்டரோகம், கண்பார்வை இல்லாமை உள்ளிட்ட ரோகங்களால் வருந்தும் யாரானாலும் சரி, அவர்கள் இந்த நூறு ஸ்லோகங்களையும் ஒதியோ அல்லது ஓதக் கேட்டோ சூரியனை பயபக்தியுடன் வழிபட்டால் அவர்கள் ரோகம் நீங்கி ஆரோக்கியம் பெறுர். இதை வரலாறு கூறும் ஏராளமான சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

சுமார் 12 பேரறிஞர்கள் இந்த சூர்ய சதகத்திற்கு விரிவுரை என்னும் பாஷ்யத்தைச் செய்திருப்பதிலிருந்தே இதன் மஹிமையைச் சுலபமாக அனைவரும் அறியலாம்.

சமீபகாலத்தில், காஞ்சி பரமாசார்யாள் இதை பிரபலப் படுத்தியது குறிப்பிடத் தகுந்தது.

இதை இன்று சுலபமாக நெட்டிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

3

முக்கோடி வாழ்நாளும் , முயன்றுடைய பெரிய தவமும், எக்கோடியாராலும் வெல்லப்படாய் என்ற வரத்தையும் பெற்ற இராவணனை எப்படி வதம் செய்வது என்று ராமன் சற்று திகைத்து நின்ற போது அவனுக்கு எதிரில் தோன்றிய அகஸ்திய மாமுனி ஆதித்ய ஹ்ருதயம் என்ற அற்புதமான சூரிய வழிபாட்டு மந்திரத்தைக் கற்பித்தார்.

இன்று வரை அனைவருக்கும் பலன் தரும்  மஹா மந்திரம் இது.

 

 

“இவனே பிரம்மா; இவனே விஷ்ணு; இவனே சிவன், ப்ரஜாபதி” (ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணுஸ்ச, சிவ ஸ்கந்த:ப்ராஜாபதி) என்ற அபூர்வமான ரகசியத்தை விண்டுரைத்த அகஸ்தியர் அவனை வழிபடும் பெயர்களை ஆதித்ய ஹ்ருதயத்தில் தந்துள்ளார்.

அதைச் சொல்லி விட்டு அகஸ்தியர், “இதோ, இந்தக் கணத்திலேயே ராவணனை வதம் செய்”  (அஸ்மின் க்ஷணே, மஹா பாஹோ, ராவணம் த்வம் வதிஷ்யஸி) என்று அருளினார்.

இந்த வார்த்தை அன்னை ஜானகிக்கு பொருள் பொதிந்த ஒன்றாக அமைந்திருப்பதை சுந்தர காண்டம் ஓதும் அனைவரும் உணர்வர்.

 

SUN SCULPTURE IN BATH IN ENGLAND, UK

அசோக வனத்தில், கோர ராக்ஷஸிகள் அன்னையைச் சூழ்ந்திருக்க அவர்களில் ஒருத்தி, “என் வார்த்தையை அங்கீகரித்து நடக்காவிட்டால் இந்த க்ஷணத்தில் நாங்கள் எல்லோரும் உன்னைக் கொன்று தின்று விடுவோம் (அஸ்மின் முகூர்த்தே ஸர்வாஸ்த்வாம் பக்ஷயிஷ்யாமஹே வயம்) என்று பயமுறுத்தியதற்குப் பதிலடியாக வந்த மந்திர வார்த்தையாக அஸ்மின் க்ஷணே ராவணனை வதம் செய் என்ற அகஸ்தியர் வார்த்தை அமைவதை உணரலாம்.

கண் வியாதி, கண் பார்வைக் குறைவு உள்ளிட்ட அனைத்து வியாதிகளையும் போக்கும் சூரிய மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம். எதிரிகளை ஒழிப்பது; பரம மங்களமானது; சர்வ மங்களத்தையும் அருள்வது; அனைத்துக் கவலையையும் ஓட்டுவது, ஆயுளைத் தருவது என்பதை ஆதித்ய ஹ்ருதயமே உறுதி செய்கிறது.

(ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாஸனம் I

ஜயாவஹம் ஜபேந் நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம் II

ஸர்வ மங்கள மாங்கள்யம் ஸர்வபாப ப்ரணாஸனம் I

சிந்தாஸோக ப்ரஸமனம் ஆயுர்வர்த்தந முத்தமம் II ஸ்லோகம் 4, 5)

இதை இரண்டு தரமோ மூன்று முறையோ தினமும் பாராயணம் செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாக இருந்து வருகிறது.

வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் சொல்லப்படும் ஆதித்ய ஹ்ருதயம் பற்றி மேலே பார்த்தோம்.

இன்னொரு ஆதித்ய ஹ்ருதயம் (சற்று நீளமானது) ஸ்ரீ பவிஷ்யோத்தர புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக – கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடக்கும் உரையாடலாக – அமைகிறது.)

சிவபிரானால் அருளப்பட்ட சூர்யாஷ்டகம், “ஆதி தேவ நமஸ்துப்யம்” என்று ஆரம்பிக்கும் எட்டு ஸ்லோகங்களைக் கொண்டது. சுலபமாக சில வினாடிகளில் அன்றாடம் அனைவரும் கூறும் அஷ்டகம் இது. பெரிய பலனைத் தர வல்லது.

இன்னொரு சூர்யாஷ்டகம் ஸ்ரீ பண்டித ரகுநாத சர்மாவினால் அருளப்பட்டுள்ளது. ப்ரபாதே என்று இது ஆரம்பிக்கும்.

சூரியனை கவசமாகக் கொள்ள விரும்புவோர் ஓதுவதற்கு உரிய சூர்ய கவசம் ஸ்ரீ சூர்ய உவாச என்று ஆரம்பிக்கும்.

ஸ்ரீப்ரஹ்ம யாமளத்தில் உள்ள இது ‘த்ரைலோக்ய மங்களம் நாம சூர்ய கவசம்’ என்று அழைக்கப்படுகிறது

 

4

வேதங்கள் சூரியனை ‘ரோக நாசகன்’ என்று புகழ்கின்றன. ரிக் வேதம் முதலாம் மண்டலத்தில் நாற்பதாம் சூக்தத்தில் சூரியனைப் பற்றிய அனைத்து இரகசியங்களையும் பற்றி அறியலாம். நண்பர்களின் நண்பனான சூரியனே என்று இது சூரியனை விளிக்கிறது. உனது சிவப்புக் கிரணங்களினால் எனது பீடைகள் தூர விலகுகின்றன என்று அது கூறுகிறது.

ரிஷிகள் சூரியனின் மகத்தான சக்தியை உணர்ந்தவர்கள்.  ஆகவே சூரியனுக்கு என ஒரு தனி உபநிஷத்தே உள்ளது. சூர்யோபநிஷத் என்னும் உபநிடதத்தில் சூரியனே ஞான விஞ்ஞான ஆனந்த ரூபன் என்று வர்ணிக்கப்படுகிறான்.

சூர்ய காயத்ரியின் மஹிமையோ எல்லையற்றது.

“ஓம் பாஸ்கராய வித்மஹே, திவாகராய தீமஹி, தன்னோ சூர்ய ப்ரசோதயாத்” என்பதே சூர்ய காயத்ரி.

(“ஒம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி, தன்னோ சூர்ய ப்ரசோதயாத்” என்றும் சூர்ய காயத்ரி சொல்லப்படுகிறது)

ஆரோக்கிய ப்ராப்தி, சக்தி, புகழ், தேஜஸ் உள்ளிட்ட சகல நலன்களையும் பெற சூர்ய சூக்தத்தை பாடம் செய்யுங்கள் என்பது ரிஷிகளின் அருளுரை. சூர்ய சூக்தம் 47 அபூர்வமான சக்தி வாய்ந்த மந்திரங்களைத் தன்னுள் கொண்டுள்ளது.

சூரிய மந்திரத்துடன் சூர்ய ஸ்தவராஜத்தின் ஐந்து பாடங்களையும் சிரத்தையுடன் ஒருவன் சொன்னால் எப்பேர்ப்பட்ட ரோகமும் போய் விடும் என்பது முனிவர்களின் அருள் வாக்கு.

சாந்தோக்ய உபநிஷத் (1-4-1&2) புத்ர ப்ராப்திக்கு சூரியனை வழிபடுமாறு அருளுரை பகர்கிறது.

மைத்ராயண்யுபநிஷத் சூரியனுக்கும் ஓம்காரத்திற்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது.

சூரிய ஜப விதிகளை வல்லார் வாய் கேட்டு, குரு மூலம் ஆசி பெற்று அனுஷ்டிப்பதே உசிதம்.

 

5

இன்னும் யாக்ஞவல்க்யர் அருளிய சூர்யகவச ஸ்தோத்திரமும், மஹாபாரதத்தில் வரும் சூரிய அஷ்டோத்தரமும் பக்தர்களுக்கு சூரியனின் அருளைப் பொழிவதற்காகவே உள்ளன.

யுதிஷ்டிரர் அருளியுள்ள சூர்ய ஸ்தோத்ரமும் மஹாபாரதத்தில்  உள்ளது.

ஆயிரம் நாமங்களால் ஆயிரமாயிரம் கிரணம் கொண்ட சூர்யனை வழிபடுவதற்கெனவே சூர்ய ஸஹஸ்ரநாமமும் பிரபலமாக உள்ளது.

எட்டாம் இடத்தில் தோஷத்துடன் சூரியன் ஒரு ஜாதகத்தில் அமைந்திருந்தால் எதிர்கால விபரீதங்களைத் தடுக்க சூரியனின் அருள் வேண்டி சூரிய வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

அன்றாட ஆரோக்கியத்தை உறுதி செய்து நீண்ட ஆயுளைப் பெற விரும்புவோர் காலம் காலமாக செய்யப்பட்டு அனுபவத்தால் உண்மை என்று அறியப்படும் சூரிய நமஸ்காரத்தை உரிய மந்திரங்களுடன் தினமும் செய்து சூரியனை காலை நேரத்தில் வழிபடலாம்.

6

இன்னும் மந்திர மற்றும் தந்த்ர சாஸ்திரங்கள் அருளும் விவரங்கள் அபாரமானவை.

இந்த மந்திர,தந்திர பிரயோகங்களை நன்குணர்ந்த குருமார்கள் மூலமாகவே பெற வேண்டும் என்பதால் இங்கு குறிப்பிடவில்லை.

சூரியனுக்கு உரிய யந்திரமாக அமைவது கீழே தரப்பட்டுள்ள யந்திரம்:

 

6 7 2
1 5 9
8 3 4

சூரியனுக்கு உரிய நவக்ரஹ ஸ்துதி:

ஜபாகுஸும ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம் I

தமோரிம் ஸர்வ பாபக்நம் ப்ரணதோஸ்மி திவாகரம் II

சூரியனுக்குரிய ஸ்தலம் : சூரியனார் கோவில் (மாயவரத்திலிருந்து திருவையாறு செல்லும் பாதையில் சுமார் 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது)

இதர தலங்கள் : கோனார்க் உள்ளிட்ட ஏராளமான தலங்கள்

சூரியனின் மனைவி : உஷா ப்ரத்யக்ஷா

சூரியன் அதிபதியாக உள்ள ராசி : சிம்மம்

நவக்ரஹங்களுக்கு நடுவில் உள்ளவர்.

அதி தேவதை:அக்கினி

ப்ரத்யதி தேவதை: ருத்ரன்

நிறம்: சிவப்பு

தானியம் : கோதுமை

மலர் : செந்தாமரை, எருக்கு

வஸ்திரம்: சிவப்பு ஆடை

ரத்தினம் : மாணிக்கம்

சமித்து: முருக்கு

7

சூரியனை வழிபடுவதற்கான விசேஷ தினங்கள் ஏராளம் உள்ளன. மகர சங்கராந்தி (பொங்கல்) அன்று விசேஷமாக சூரிய நாராயண பூஜை செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் மரபு. பாரதமெங்கும் இதைக் கொண்டாடாமல் யாரும் இருப்பதில்லை.

சூரியன் பிறந்த தினமான ரத சப்தமி தை மாதம் அமாவாசை கழிந்த ஏழாம் நாளன்று வருகிறது. அன்று தெற்கு நோக்கிச் சென்ற சூரியன் தன் பயணத்தை முடித்துக் கொண்டு வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்குகிறான். அன்று சூரியனை வழிபடுவதன் மூலமாக நீடித்த ஆயுளையும் நல்ல உடல் நலத்தையும் பெறலாம். புதிய தொழில் துவங்க ரத சப்தமி நல்ல நாள். பெண்கள் இந்த நாளில் சூரியனை வழிபடுவதன் மூலமாகச் சிறப்பான மேல் நிலையை அடைவர்.

ரத சப்தமிக்கான ஒரு அருமையான நீண்ட கதை உண்டு,

அதில் ஒரு அந்தணன் ஒரு மரத்தடியில் தினமும் சூரியனின் 12 நாமங்களைச் சொல்லி வழிபட மரத்திலிருந்து ஒரு குரல் ஏதேனும் கேள் என்று தினமும் ஒலிக்க, அதை அவன் தன் மனைவியிடம் கூற, அவள் சிறிது அன்னமும் செல்வமும் அருளும் படி கேட்கச் சொல்ல, அதை அந்தணன் கூறி வழிபட,  வீ ட்டிற்குத் திரும்பி வந்தவன் வீடு முழுவதும் மலை போல அன்னமும், ஏராளமான செல்வமும் குவிந்து கிடப்பதைப் பார்த்துத் திகைக்க, பின்னர் அவனும் அவன் மனைவியும் அனைவருக்கும் அன்ன தானமும் செல்வ தானமும் தினமும் செய்து பெரும் புகழ் பெற்றனர் என்று வருகிறது.

சூரியனின் வழிபாடு ஹிந்து வாழ்க்கை முறையில் இரண்டறக் கலந்த ஒரு அன்றாட வழிபாடு.

சூரியனின் பெருமையில் இது வரை நாம் பார்த்தது எழு கடல் மணலில் ஒரு சிறு  மணல் துளியைத் தான்.

சகல சௌபாக்கியங்களையும் பெற பிரத்யக்ஷ தெய்வமாக – அன்றாடம் நாம் காணக் கூடிய தெய்வமாக – அறிவியலும் வியந்து ஆமோதிக்கும் பெரும் சக்தியாக – விளங்குவது சூரியனே.

அவனை வழிபட்டு உயர்வோம்; உய்வோம்!

****

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 12 (Post No.4580)

Date: 4 JANUARY 2018

 

Time uploaded in London- 6-24 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4580

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017; மாக்ஸ்முல்லர் மர்மம் -7 கட்டுரை எண் 4385 – வெளியான தேதி  11-11-17; மாக்ஸ்முல்லர் மர்மம்-8 கட்டுரை எண் 4451 – வெளியான தேதி 2-12-17; மாக்ஸ்முல்லர் மர்மம் – 9 கட்டுரை எண் 4501 – வெளியான தேதி 16-12-17; மாக்ஸ்முல்லர் மர்மம் – 10 கட்டுரை எண் 4538 -வெளியான தேதி 24-12-17 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 11 கட்டுரை எண் 4563 -வெளியான தேதி 30-12-17

 

இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 12

ச.நாகராஜன்

 

21

சென்ற அத்தியாயத்தில் தமிழில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்வாமிஜியின் கருத்துக்களை ஆங்கில மூலத்தில் கீழே அப்படியே தருகிறோம்.

 

The Complete Works of Swami Vivekananda/Volume 6/Conversations and Dialogues/IX

 

IX

(Translated from Bengali)

(From the Diary of a Disciple)

(The disciple is Sharatchandra Chakravarty, who published his records in a Bengali book, Swami-Shishya-Samvâda, in two parts. The present series of “Conversations and Dialogues” is a revised translation from this book. Five dialogues of this series have already appeared in the Complete Works,Volume 5)

[Place: Calcutta. year: 1897.]

 

 

While our study had proceeded thus for a while, Swamiji raised the topic about Max Müller and continued thus: Well, do you know, my impression is that it is Sayana who is born again as Max Müller to revive his own commentary on the Vedas? I have had this notion for long. It became confirmed in my mind, it seems, after I had seen Max Müller. Even here in this country, you don’t find a scholar so persevering, and so firmly grounded in the Vedas and the Vedanta. Over and above this, what a deep, unfathomable respect for Sari Ramakrishna! Do you know, he believes in his Divine Incarnation! And what great hospitality towards me when I was his guest! Seeing the old man and his lady, it seemed to me that they were living their home-life like another Vasishtha and Arundhati! At the time of parting with me, tears came into the eyes of the old man.

 

Disciple: But, sir, if Sayana himself became Max Müller, then why was he born as a Mlechchha instead of being born in the sacred land of India?

 

Swamiji: The feeling and the distinction that I am an Aryan and the other is a Mlechchha come from ignorance. But what are Varnâshrama and caste divisions to one who is the commentator of the Vedas, the shining embodiment of knowledge? To him they are wholly meaningless, and he can assume human birth wherever he likes for doing good to mankind. Specially, if he did not choose to be born in a land which excelled both in learning and wealth, where would he secure the large expenses for publishing such stupendous volumes? Didn’t you hear that the East India Company paid nine lakhs of rupees in cash to have the Rig-Veda published? Even this money was not enough. Hundreds of Vedic Pundits had to be employed in this country on monthly stipends. Has anybody seen in this age, here in this country, such profound yearning for knowledge, such prodigious investment of money for the sake of light and learning? Max Müller himself has written it in his preface, that for twenty-five years he prepared only the manuscripts. Then the printing took another twenty years! It is not possible for an ordinary man to drudge for fortyfive years of his life with one publication. Just think of it! Is it an idle fancy of mine to say he is Sayana himself?

 

 

****

 

 

COMPLETE WORKS OF SWAMI VIVEKANANDA  VOLUME 4

ON PROFESSOR MAX MÜLLER

(Written for the Brahmâvadin, from London, June 6, 1896.)

 

Do you know that Prof. Max Müller has already written an article on Shri Ramakrishna for the Nineteenth Century, and will be very glad to write a larger and fuller account of his life and teachings if sufficient materials are forthcoming? What an extraordinary man is Prof. Max Müller! I paid a visit to him a few days ago. I should say, that I went to pay my respects to him, for whosoever loves Shri Ramakrishna, whatever be his or her sect, or creed, or nationality, my visit to that person I hold as a pilgrimage. “मद्भक्तानां च ये भक्तास्ते मे भक्ततमा मताः — They who are devoted to those who love Me — they are My best devotees.” Is that not true?

The Professor was first induced to inquire about the power behind, which led to sudden and momentous changes in the life of the late Keshab Chandra Sen, the great Brâhmo leader; and since then, he has been an earnest student and admirer of the life and teachings of Shri Ramakrishna. “Ramakrishna is worshipped by thousands today, Professor”, I said. “To whom else shall worship be accorded, if not to such”, was the answer. The Professor was kindness itself, and asked Mr. Sturdy and myself to lunch with him. He showed us several colleges in Oxford and the Bodleian library. He also accompanied us to the railway station; and all this he did because, as he said, “It is not every day one meets a disciple of Ramakrishna Paramahamsa.”

 

 

The visit was really a revelation to me. That nice little house in its setting of a beautiful garden, the silverheaded sage, with a face calm and benign, and forehead smooth as a child’s in spite of seventy winters, and every line in that face speaking of a deep-seated mine of spirituality somewhere behind; that noble wife, the helpmate of his life through his long and arduous task of exciting interest, overriding opposition and contempt, and at last creating a respect for the thoughts of the sages of ancient India — the trees, the flowers, the calmness, and the clear sky — all these sent me back in imagination to the glorious days of Ancient India, the days of our Brahmarshis and Râjarshis, the days of the great Vânaprasthas, the days of Arundhatis and Vasishthas.

 

 

It was neither the philologist nor the scholar that I saw, but a soul that is every day realising its oneness with the Brahman, a heart that is every moment expanding to reach oneness with the Universal. Where others lose themselves in the desert of dry details, he has struck the well-spring of life. Indeed his heartbeats have caught the rhythm of the Upanishads  “तमेवैकं जानथ आत्मानमन्या वाचो विमुञ्चथ — Know the Atman alone, and leave off all other talk.”

 

 

Although a world-moving scholar and philosopher, his learning and philosophy have only led him higher and higher to the realisation of the Spirit, his अपरा विद्या (lower knowledge) has indeed helped him to reach the परा विद्या (higher knowledge). This is real learning. विद्या ददाति विनयम् — “Knowledge gives humility.” Of what use is knowledge if it does not show us the way to the Highest?

 

 

And what love he bears towards India! I wish I had a hundredth part of that love for my own motherland! Endued with an extraordinary, and at the same time intensely active mind, he has lived and moved in the world of Indian thought for fifty years or more, and watched the sharp interchange of light and shade in the interminable forest of Sanskrit literature with deep interest and heartfelt love, till they have all sunk into his very soul and coloured his whole being.

 

 

Max Müller is a Vedantist of Vedantists. He has, indeed, caught the real soul of the melody of the Vedanta, in the midst of all its settings of harmonies and discords — the one light that lightens the sects and creeds of the world, the Vedanta, the one principle of which all religions are only applications. And what was Ramakrishna Paramahamsa? The practical demonstration of this ancient principle, the embodiment of India that is past, and a foreshadowing of the India that is to be, the bearer of spiritual light unto nations. The jeweller alone can understand the worth of jewels; this is an old proverb. Is it a wonder that this Western sage does study and appreciate every new star in the firmament of Indian thought, before even the Indians themselves realise its magnitude?

 

 

“When are you coming to India? Every heart there would welcome one who has done so much to place the thoughts of their ancestors in the true light”, I said. The face of the aged sage brightened up — there was almost a tear in his eyes, a gentle nodding of the head, and slowly the words came out: “I would not return then; you would have to cremate me there.” Further questions seemed an unwarrantable intrusion into realms wherein are stored the holy secrets of man’s heart. Who knows but that it was what the poet has said—

 

 

तच्चेतसा स्मरति नूनमबोधपूर्वं ।
भावस्थिराणि जननान्तरसौहृदानि ॥

—”He remembers with his mind the friendships of former births, firmly rooted in his heart.”

His life has been a blessing to the world; and may it be many, many years more, before he changes the present plane of his existence!

 

 

மாக்ஸ்முல்லர் பற்றிய இன்னும் பல கருத்துக்களை ஸ்வாமிஜி கூறியுள்ளதை COMPLETE WORKS OF SWAMI VIEVEKANANDA நூலில்

எட்டாம் தொகுதி உள்ளிட்டவற்றில் காணலாம்.

தொடரின் இறுதிப் பகுதிக்கு வருவோம்

****                     தொடரும்

பிராணன், மனம், புத்தி, சித் ரூபம், ஆனந்த ரூபம் விளக்கம்! (Post No.4574)

 

Date: 2 JANUARY 2018

 

Time uploaded in London- 5-23 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4574

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 7

 

பிராணன், மனம், புத்தி, சித் ரூபம், ஆனந்த  ரூபம்  விளக்கம்!

.நாகராஜன்

 

 

இனி பிராணன், மனம், புத்தி பற்றித் தெரிந்து கொள்வோம்

*

 

ஐயா, பல விஷயங்கள் பற்றிய விளக்கங்களை நன்கு சொல்லி விட்டீர்கள். நன்றி,

பிராணன் என்பது என்ன? அது எத்தனை வகைப்படும்?

நல்ல கேள்வி!

உச் ச்வாஸம் நிச் ச்வாஸம் முதலியவற்றின் வியாபாரங்களினால் சரீரத்தைத் தரிக்கின்ற சக்தியைக் கொடுப்பதுவே பிராணன் எனப்படும்.

அது, பிராணன், அபானன், விதானன், உதானன், சமானன் என இப்படி ஐந்து வகைப்படும்.

 

மனம் என்றால் எது?

விசாரணை ஸ்வரூபமான அந்தக்கரண விருத்தி தான் மனம்.

 

புத்தி என்றால் எது?

நிச்சய ஸ்வரூபமான அந்தக்கரண விருத்தி தான் புத்தி.

 

ஆத்மா சச்சிதானந்த ஸ்வரூபன் என்று சொன்னீர்கள் அல்லவா, அதன் பொருள் என்ன?

சத் என்றால் பாதிக்கப்படாதது.

 

சித் என்றால் சுயம் பிரகாசமானது (அதாவது தானே பிரகாசிப்பது)

ஆனந்தம் என்றால் சுவானுபவமே.

 

அப்படியா, நன்றி, ஐயா. சித்திற்கும் ஜடத்திற்கும் விலக்ஷணம் எவை?

சித் என்பது சூரியன் போன்ற அன்னிய பிரகாசத்தை வேண்டாமல் தன் இயற்கை பிரகாசத்தினாலேயே தானே பிரகாசிப்பது.

அப்படி பிரகாசித்துக் கொண்டும்,தன்னிடத்தில் ஆரோபிக்கப்பட்ட ஜடத்தையும்  பிரகாசிப்பதாயும் இருப்பது எதுவோ அது தான் சித்.

ஜட லக்ஷணமாவது,  இயற்கையாக பிரகாசம் அற்றதாகவும், இதர வஸ்துக்களை பிரகாசிக்க வைக்கும் சக்தி அற்றதாகவும் இருப்பது எதுவோ அது தான் ஜடம்.

 

ஆனந்தத்திற்கும் துக்கத்திற்கும் விலக்ஷணம் என்ன?

ஆனந்தம் எது என்றால், உபாதி அற்றதாகவும், நிரதிசயமாயும், நித்தியமாகவும் இருக்கின்ற அமிர்தம் போன்ற சுகமே ஆகும்.

இதற்கு எதிர்மறையாக எது இருக்கிறதோ அதுவே துக்கம்.

ஆத்மாவுக்கு அவஸ்தா த்ரயம் லக்ஷணம் எப்படி?

ஜாக்ரதம்,

ஸ்வப்னம்,

சுஷூப்தி என இப்படி மூன்று அவஸ்தைகள் ஆத்மாவுக்கு உண்டு.

 

இந்த மூன்று அவஸ்தைகளும் ஆத்மாவிற்கு எப்படி வந்தது?

ஆத்மாவிடம் சாக்ஷி லக்ஷணம் இருப்பதால் வந்தது.

 

சாக்ஷி லக்ஷணம் என்றால் என்ன?

ஒருவன் இன்னொருவனையும், அந்த இன்னொருவனின் அவஸ்தையின் வியாபாரங்களையும்  தான் விகாரம் அடையாமல் – வேறுபாடு அடையாமல் –  நோக்கபட்டது போலாம்.

ஜீவாத்மாவும் ஸ்தூல சரீரத்தின் அபிமானியாகி,  ஜாக்ரதா அவஸ்தையில் மூன்று வித கரணங்களின் வியாபாரத்துடன் கூடி, விசுவன் என்ற பெயரையும்,

சூஷ்ம சரீரத்தின் அபிமானியாகி,  ஸ்வப்னா அவஸ்தையில் மனோமயமான மூன்று வித கரணங்களுடைய வியாபாரத்தினால் தைஜஸன் என்ற பெயரையும்,

பிறகு காரண சரீரத்தின் அபிமானியாகி, சுஷூப்தி அவஸ்தையில்  மூன்று கரணங்களை அடக்கிக் கொண்டு பிராக்ஞன் என்ற பெயரையும் பெறுகிறான்.

இப்படி ஆத்மாவானவன், கூடஸ்தனாகவும், ஆகாயம் போல ஒட்டாதவனாகவும், மூன்று அவஸ்தைகளின் பிரதியக்  சைதன்யமாக இருப்பதுவே சாக்ஷி லக்ஷணம் ஆகும்.

 

அவஸ்தையை அனுபவிப்பனிடம் தான் சாக்ஷித்துவம் காணப்படுகிறது. அப்படி இருக்கும் போது, அவஸ்தா சாக்ஷித்துவம் அந்நியனிடம் இருப்பது போல அல்லவா காணப்படுகிறது! இது எப்படி?

இந்த அவஸ்தையை உடையவன், அந்தக் கரணத்தில் பிரதிபிம்பித்த சைதன்யபாசனே!

அவன் பொய்யானவன்.

அவன் ஜீவன் என்று சொல்லப்படுகிறான்.

ஜீவனோ விகாரி. ஆத்மாவோ நிர்விகாரி.

ஆகவே ஆத்மாவுக்கே சாக்ஷித்துவம் பொருந்தும். விளங்குகிறதா?

 

ஆத்மா நிர்விகாரி என்பது எப்படித் தெரியும்?

அந்தக்கரண பிரதிபிம்பத்தினால் அறியக்கூடும்.

 

இந்த அந்தக்கரணமும் இதன் பிரதிபிம்பமான ஜீவனும் ஆத்மாவை அறியாதோ?

அறியாது. ஏனெனில் அறியப்படுவதாகவும், த்ருஷ்யம் எனப்படுவதாகவும் அதாவது பார்க்கப்படுவதாகவும் உள்ள ஆத்மா த்ருக்ரூபன். அதாவது பார்க்கின்ற சுபாவமுடையவன்.

அது எப்படி ஐயா?

சொல்கிறேன், கவனமாகக் கேளுங்கள்.

காணப்படுகின்ற கடம் காண்பவனை அறியாது.

ஆனால் காண்பவனோ ஸ்வயம்பிரகாசமுடையவன் ஆதலால் தன்னைத் தான் அறிகிறான்.

ஆகவே காணப்படுகின்ற அகங்காரமும், அதன் அவஸ்தை, மற்றும் வியாபாரங்கள் ஆத்மாவைத் தொடமாட்டா.

இப்படி ஆத்மாவை எவன் ஒருவன் அவஸ்தா த்ரய சாக்ஷியாகக் காண்கிறானோ அவனே ஜீவன் முக்தன்!

 

ஐயா,நன்றி. கோசம், ஆத்மா சித் ரூபன் என்பதற்கு பிரமாணம் என்ன என்பன போன்ற கேள்விகள் மனதிலே தோன்றுகிறது. கேட்கலாமா?

 

நன்றாகக் கேளுங்கள், பதில் சொல்கிறேன்!

xxxx

முந்தைய கட்டுரைகள்: முதல் கட்டுரை எண் 4388- வெளியான தேதி: 12-11-17

இரண்டாம் கட்டுரை எண் 4406 –வெளியான தேதி : 18-11-17

மூன்றாம் கட்டுரை எண் 4445 – வெளியான தேதி : 30-11-17

நான்காம் கட்டுரை எண்  4472  – வெளியான தேதி :    9-12-17

ஐந்தாம் கட்டுரை எண் 4511 – வெளியான தேதி : 18-12-17

ஆறாம் கட்டுரை எண் 4546 – வெளியான தேதி : 26-12-2017

 

 

****