300 ராமாயணமா? 3000 ராமாயணமா? –Part 2

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Part 1 was posted yesterday; Source: British Library, London

 kkish1

Compiled  by London swaminathan

Date: 16th September 2015

Post No: 2163

Time uploaded in London :– 9-18 am

(Thanks  for the pictures) 

 

IMG_3416 (2)

IMG_3417 (2)

IMG_3422 (2)

IMG_3423 (2)

IMG_3428 (2)

IMG_3431 (2)

IMG_3434 (2)

k kanda 9

to be continued………………………………

300 ராமாயணமா? 3000 ராமாயணமா? –Part 1

IMG_3381 (2)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Research Article: Written by London swaminathan

Date: 15th September 2015

Post No: 2160

Time uploaded in London :–14-16

(Thanks  for the pictures) 

 

“300 ராமாயணம்” என்று ஆங்கிலத்தில் ஏ.கே. ராமனுஜம் கட்டுரை எழுதிய பின்னர் கடந்த கால் நூற்றாண்டில் பல நூல்கள் வெளியாகிவிட்டன. நானே புறநானூற்றில் உள்ள இரண்டு ராமாயணக் காட்சிகள், ஆழ்வார் பாடல்களில் வரும் அணிலின் உதவி (இலங்கைக்குப் பாலம் கட்ட) முதலிய பல காட்சிகள் ஒரிஜினல் ராமாயணங்களில் இல்லை என்பதை எழுதி இருக்கிறேன். சென்ற வாரம் ராமன்- யமன் சண்டை பற்றி வசந்தன் உயிர்வரு படலம் என்ற சிறிய நூலை பிரிட்டிஷ் லைப்ரரயிலிருந்து எடுத்து இங்கே வெளியிட்டேன். தியாகராஜர் போன்றோரின் கிருதிகளில் வரும் ராமாயணம், ஆழ்வார் பாடல்களில் வரும் ராமாயணம், திரைப்படப் பாடல்களில் வரும் ராமாயணம், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள பலவகை ராமாயணங்கள் என்று தொகுக்கப் போனால் 3000 ராமயணங்களுக்கும் மேல் கிடைக்கும்!! நமக்குத் தெரிந்தது எல்லாம் கம்பன், வால்மீகி, துளசிதாஸ், எழுத்தச்சன்,மற்றும் அஸ்ஸாமிய, வங்காளி மொழி ராமாயணங்கள்தான். கம்பன் குறிப்பிடும் மூன்று ராமாயணங்களில் போதாயன , வசிஷ்ட ராமாயணங்கள் நமக்குக் கிடைத்தற்பாடில.

பிரிட்டிஷ் லைப்ரரியில் ராமாயணக் கும்மி என்று ஒரு பாக்கெட் சைஸ் நூலைப் பார்த்தவுடன் வியப்பு மேலிட்டு இதை எழுதுகிறேன். எத்தனை பேரோ ராமாயணம் எழுதி இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் நாம் மறந்துவிட்டோம். யாரை நம்பி, திருநெல்வேலி ஜில்லா, தென்காசி தாலுக்கா, குருங்களாவனம், வெங்கட்ராமையர் இப்படி ஒரு ராமாயனக் கும்மி எழுதினார்? யாரை நம்பி அதை லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரி 1902-ஆம் ஆண்டு முதல் காப்பாற்றி வைத்திருக்கிறது? – இதை எண்ணும்போதெல்லாம் புல்லரிக்கிறது. காலத்தால் வெல்ல முடியாத காவியமன்றோ ராமகாதை!!

வெங்கட்ராமையருக்கு பன்முறை நமஸ்காரம் சொல்லி அந்த ராமாயணக் கும்மியை இங்கு வெளியிடுகிறேன். 113 ஆண்டுகளுக்கும் மேலாக அதைப் பாதுகாத்துவைத்து வந்து கேட்போருக்கெல்லாம் அரிய, பெரிய, பல்லாயிரம் தமிழ் நூல்களை இலவசமாக வழங்கும் பிரிட்டிஷ் லைப்ரிக்கு நன்றி சொல்லி இதை வெளியிடுகிறேன். ஆணவமும், அஹங்காரமும், பண வெறியும் பிடித்த தமிழ்நாட்டு நூலகங்கள் இவர்களிடம் பாடம் கற்க வேண்டும்—பயிற்சி பெற வேண்டும். கடவுள் காப்பாற்றுவாராக!

IMG_3382

IMG_3383

IMG_3385 (2)

IMG_3386 (2)

IMG_3388 (2)

IMG_3389 (2)

IMG_3392 (2)

IMG_3393 (2)

IMG_3395 (2)

IMG_3396 (2)

IMG_3397 (2)

IMG_3395 (2)

IMG_3399 (2)

IMG_3402 (2)

IMG_3403 (2)

IMG_3404 (2)

IMG_3405 (2)

IMG_3406 (2)

IMG_3407 (2)

IMG_3410 (2)

IMG_3413 (2)

To be contimnued………………..

ஆறே பாடல்களில் பகவத்கீதை! இரண்டே அடிகளில் கீதையின் சாரம்!

894_Bhagwat_Gita_thumb[13]

மஹாபாரத வழிகாட்டி

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Research Article: Written by ச. நாகராஜன்

Date: 15th September 2015

Post No: 2159

Time uploaded in London :–காலை 7-59

(Thanks  for the pictures) 

 

 

.நாகராஜன்

 

 

வியாசரும் வில்லியும்

ஒரு லட்சம் ஸ்லோகங்கள் அடங்கிய வியாசர் அருளிய மஹாபாரதத்தைத் தமிழில் பாக்களாகத் தர எண்ணினார் வில்லிப்புத்தூரார்.

“குறும்பி அளவாக் காதைக் குடைந்து தோண்டி எட்டினமட்டு அறுப்பதற்கோ வில்லி இல்லை” என்று பின்னால் ஒரு புலவர் பாடும் அளவு புலமை இல்லாதவர்கள் பாடத் துணிந்தால் அவர்களின் காதைக் குடைந்து தோண்டி தண்டிக்கும் அளவு புலமை பெற்றவர் வில்லிப்புத்தூரார்.

வியாசர் பாடிய 18 பர்வங்களில் 10 பர்வங்களை மட்டுமே சுமார் 4350 பாக்களில் தன் காவியத்தில் பாடியுள்ளார். தர்மர் முடிசூட்டியதுடன் வில்லி பாரதம் முடிவடைகிறது.

700 ஸ்லோகங்கள் கொண்டது பகவத் கீதை. வில்லிபுத்தூரார் தனது பாரதத்தில் பகவத்கீதையை ஆறே ஆறு பாடல்களில் தந்துள்ளார்.

பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

மாயை என்று ஒருத்தி தன்பால் மனம் எனும் மைந்தன் தோன்றி,          

தூய நல் அறிவன் தன்னைத் தோற்றம் இன்றாக்கி வைத்தான்           

தாயொடு தந்தை, மக்கள் தாரம், என்று இவர் பால் வைத்த                        

நேயமும் அவன் தனாலே நிகழ்ந்தது ஓர் நினைவு கண்டாய்!

மாயை என்னும் ஒருத்தியிடம் மனம் என்னும் மகன் தோன்றினான். பரிசுத்தமான ஞானம் என்பவனை வெளிப்படாமல் ஆகி வைத்தான். தாய், தந்தை, மக்கள், மனைவி ஆகியோர்  மீதான பாசமும் அந்த மனம் என்பவனின் எண்ணத்தாலே  தான் நிகழ்ந்தது!

குயின்ற ஐம் பொறிவாய் நின்று, குறித்த ஐம்பொருளும் தானே                

அயின்று, முக்குணங்களோடும், அறுவகைப் படைகளோடும்,           

பயின்று, அரசாளும் அந்த மனம் எனும் பகைவன் ஆங்குத்             

துயின்ற போது, ஒளித்து நின்ற தோன்றலும் தோன்றும் கண்டாய்!

உடம்பில் பொருந்தியுள்ள மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து இந்திரியங்களும் ஊறு சுவை. ஒளி. வாசனை, ஓசை என்னும் ஐந்து புலன்களையும் தானே அனுபவித்து, சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களோடும் காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம், மாற்சர்யம் என்னும் ஆறு வகை சேனைகளோடு பழகி அரசாட்சி செய்யும் மனம் என்னும் பகைவன் தூங்கிய போது,  (அவனால்) தோற்றமில்லாதவனாய் செய்யப்பட்ட அந்த நல்லறிவன் வெளிப்படுவான்.

gita stamp

அந்த நல் அறிவன் தன்னை அறிந்தவர் அறிஞர் ஆவார்,                     

தந்தையால் வகுக்கப்பட்ட சராசரப் பொருள்கள் தோறும்                         

வந்து, அவன், தீம்பால் நெய்போல் உயிர்க்கு உயிர் ஆகி, வாழும்               

பந்தமது உணர்ந்து, நேரே பார்க்குங்கால், பகை யார்? நண்பு ஆர்?

அந்த நல் அறிவன் தன்னை அறிந்தவர்களே அறிஞர் ஆவார். அந்தப் (பரம்பொருள் என்னும்) தந்தையால் வகுக்கப்பட்ட சஞ்சரிப்பதும் சஞ்சாரியாதனவும் ஆகிய எல்லாப் பொருள்களிலும் பசுவின் பாலில் உள்ளே உறைந்திருக்கும் நெய் போல, உயிர்க்கு உயிர் ஆகி, ஜீவாத்மாக்களின் உள்ளே பரமாத்மாவாக உறைந்து வாழும், (இந்த) சம்பந்தத்தை உணர்ந்து நேரே பார்க்கும் போது பகைவன் யார்? நண்பன் யார்? எவருமில்லை!

உம்பரும், முனிவர் தாமும், யாவரும், உணரா ஒன்றை                 

இம்பர், இன்று, உனக்கு நானே இசைவுற உணர்த்தா நின்றேன்,                           

ஐம் பெரும் பூதத்தானும் அமைந்தன உடலம், யார்க்கும்;                        

நம்பனும் ஒருவன்; உள்ளே ஞானியாய் நடத்துகின்றான்!

 

 

தேவர்களும், முனிவர்களும், மற்றும் எல்லோரும் உணராத ஒன்றை, இந்த இடத்தில், இப்போது, உனக்கு நான் பொருந்தும் படி உணர்த்துகின்றேன். எல்லாப் பிராணிகளுக்கும் ஐம்பெரும் பூதங்களால் அமைந்தது உடல். அவற்றினுள்ளே ஞானியாய் இருந்து (ஒப்பற்ற கடவுளாய்) ஒருவன் தானே அனைத்துத் தொழில்களையும் செய்து நடத்துகின்றான்.

வில்லி ப்ஹரதம்

என்னை நீ புகலக் கேண்மோ! எங்கும் ஆய், யாவும் ஆகி                     

மன்னிய பொருளும் யானே; மறைக்கு எலாம் முடிவும் யானே;               

உன்னை யான் பிறிவது இல்லை; ஒரு முறை பிறந்து மேல் நாள் –                     

நல் நிலா எறிக்கும் பூணாய்! – நரனும் நாரணனும் ஆனோம்

 

‘நல்ல சந்திரகாந்தியை ஒத்த ஒளியை வீசும் ஆபரணங்களை அணிந்துள்ள அர்ஜுனா! என்னை யார் என (உனக்கு உணர்த்துமாறு) நான் சொல்வதைக் கேள்! எல்லாப் பொருள்களிலும் பொருந்தி எல்லாப் பொருள்களுமாய் அழியாது நிலை பெற்ற பரம்பொருளும் நானே! வேதங்களுக்கு எல்லாம் முடிவான பொருளும் நானே! உன்னை என்றும் நான் பிறிந்தவன் அல்ல; முன்னொரு சமயம் நரனும் நாராயணனுமாக நீயும் நானும் அவதரித்தோம்!

பின் ஒரு பிறப்பின் யாமே இராம லக்குமப் பேர் பெற்றோம்;             

இந் நெடும் பிறப்பில், நீயும் யானுமாய் ஈண்டு நின்றோம்;

நின்னிடை, மயங்கும் இந்த நேயமும் ஒழிக!” என்று,                                     

 தன் நிலை அவற்குக் காட்டி, தத்துவம் தெளிவித்தானே.

பின்பு ஒரு அவதாரத்தில் நாமே இராமன், இலக்குவனாக அவதரித்தோம். இந்த நீண்ட அவதாரத்தில் நீ அர்ஜுனனாகவும் நான் கண்ணனாகவும் இங்கு இருக்கிறோம். உன்னிடமுள்ள திகைப்பையும் உறவினர், நண்பர் என்ற இந்த அபிமானத்தையும் நீக்குக’ என்று தன் உண்மையான விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டித் தத்துவத்தை அவம் மனம் தெளிவுறும்படி அருளினான்.

ஆஹா! என்ன அருமையான பாடல்கள்! எத்தனை எளிமையாக கீதை ஆறே பாடல்களில் எளிய தமிழில் பொருளாழத்துடனும் சொல் சிக்கனத்துடனும் சூத்திரப் பாங்குடனும் விளக்கப்பட்டுள்ளது.

இதைப் படிப்போர்கள் முழு வில்லி பாரதத்தையும் படிக்க உத்வேகம் பெறுவார்கள் என்பதில் ஐயமுண்டோ!

இந்த விளக்கத்தைப் படித்த பின்னர் மகாகவி பாரதியாரிடம் வருவோம்.

அவசர யுகம் அல்லவா! இரண்டே அடிகளில் அவன் தெள்ளத் தெளிவாக கீதையில் கண்ணன் போதித்ததை இப்படிச் சுருக்கமாகக் கூறி விட்டான்:

rath yatra

பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்;                                  

பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான்

மாம் அனுஸமர (என்னை நினை)

கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன! (கர்மம் புரிவதற்கே உனக்கு அதிகாரம் உள்ளது; அதில் வரும் பயனில் எண்ணம் வையாதே – ஒரு பொழுதும்!)

***********

கோபக்காரர்களை வெல்வது எப்படி?

angry

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Article: Written by London swaminathan

Date: 14th September 2015

Pot No: 2156

Time uploaded in London :– 9-43 am

(Thanks  for the pictures)

வட கேரளத்தில் காஞ்சன்காடு என்ற இடத்தில் ஆனந்தாஸ்ரமம் உள்ளது. அங்கு நடந்த ஒரு சமபவத்தை சுவாமி ராமதாஸ் சுவைபட வருணிக்கிறார் (தமிழில் மொழிபெயர்ப்பு: லண்டன் சுவாமிநாதன்).

ஆனந்தாஸ்ரமம் எல்லா வகை சாமியார்களுக்கும் புகலிடம் கொடுத்து வந்தது. அங்கு தங்கும் சிலர், “என்னைத் தொடாதே, என் மீது படாதே; தீட்டு வந்துவிடும். சுத்தம் கெட்டுவிடும்” — என்றெல்லாம் அங்கலாய்ப்பர்.

ஒரு முறை காவியுடை தரித்த கட்டையான, குட்டையான ஒரு சாமியார் வந்தார். சடை முடியும், தாடியும் உண்டு. முகத்தில் கோபக்கனல் வீசிக்கொண்டே இருக்கும். துர்வாச முனிவரின் மறு அவதாரம்தான். “நான் யார் தொட்டதையும் சாப்பிட மாட்டேன் ஆகையால் எனக்கு சமையல் வசதிகள் வேண்டும்” என்றார். அவரது அறையிலேயே புதிய பாத்திரங்கள், அரிசி, உப்பு, புளி முதலிய பலசரக்குகள் எல்லாம் வழங்கப்பட்டன. அவரே சமைத்து அவரே பரிமாறிக்கொண்டு சாப்பிட்டு விடுவார். அருகிலேயே ஆஸ்ரமம் பயன்படுத்தும் ஒரு வாளியில் பாதி  தண்ணீரும் நிரப்பி வைத்துக் கொண்டு வாழை இலைக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு சாப்பிடுவது அவரது வழக்கம்.

ஒரு நாள், அந்த சாமியார் சாப்பிட எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு வாளித் தண்ணீரை அருகில் வைத்துக் கொண்டு உட்கார்ந்தார். அந்த வாளி, ஆஸ்ரமத்தில் வரும் வேலைக்காரி வழக்கமாக, பாத்திரங்களைக் கழுவப் பயன்படுத்தும் வாளி. ஆகையால், சாமியாரது அனுமதியின்றி அவர் அதைப் போய் எடுத்தார். உடனே அனத சந்யாசி கோபம் பொங்கி வெடிக்க எழுந்தார். சுடு சொற்களைப் பொழிந்தார். தீட்டுப் பட்டுவிட்டதே என்று தகாத சொற்களை மொழிந்தார். அந்த வேலைக் காரிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் ஓடி ஒளிந்தார்.

ஆஸ்ரமத்தில் அன்பே வடிவான மாதாஜி கிருஷ்ணாபாயும் வசித்து வந்தார். அவரது காதுக்கும் இந்தச் செய்தி எட்டியது. அந்த சாமியாரின் கோபத்தைக் கண்ட எவரும், அவர் அருகில் நெருங்கப் பயந்தனர். இதற்குள் இன்னொரு சீடர் ஓடிவந்து சூடான தலைப்புச் செய்திகளை வாசித்தார்: “அந்த சாமியார், தான் சமைத்த உணவுகளை இலைகளில் பரிமாறி நாய்களுக்கு வைத்து விட்டார். குட்டிபோட்ட பூனை போல இங்குமங்கும் நடந்து திரிகிறார்”.

anger

இதை எல்லாம் அமைதியாகக் கேட்ட மாதாஜி, சமையல் அறைக்குள் சென்று பழத் தட்டை எடுத்தார். அதிலுள்ள முலாம் பழம், மாம்பழம், வாழைப்பழம் முதலிய பழங்களை தோலை எல்லாம் எடுத்துவிட்டு அழகிய வடிவங்களில் வெட்டி ஒரு சுத்தமான தட்டில் வைத்தார். ஒரு தொண்டரை அழைத்து “இதைக் கொஞ்சம் தூக்கிக் கொண்டு வாருங்கள். அந்த சாமியாரின் முன் வையுங்கள்; அச்சம் வேண்டேல்; அடியேனும் உடன் வருவேன்” என்று செப்பினார்.

அந்தத் தொண்டரும் அவ்வாறே செய்ய, அந்த சந்யாசி அதை ஏற இறங்கப் பார்த்துவிட்டு தூரப் பார்வை செலுத்தினார். அங்கே மாதாஜி மெல்ல மெல்ல நடந்து வருவதைக் கண்டார்.

மாதாஜி, அன்பான மெல்லிய குரலில், “அந்த வேலைக்கார பெண், உங்கள் வாளியை அனுமதியின்றித் தொட்டது தவறுதான். தாங்கள் இந்தப் பழங்களை மறுக்காமல் உண்ண வேண்டும்” என்றார். அத்தோடு அவர் கொண்டுவந்த சூடான, சர்க்கரை போட்ட இனிய பசும்பாலை ஒரு ‘ஜக்’கு நிறைய கொடுத்து இதையும் அருந்தி பசியாறுக” என்றார். சந்யாசியும் மறுக்காமல் சுவைமிகு பழத் துண்டுகளை ஒவ்வொன்றாகச் சுவைத்தார்; பாலையும் பருகினார். முகத்தில் கோபம் போய் சாந்தம் என்னும் குணம் படரத் துவங்கியது. மாதாஜியும், அவர் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமையுடன் காத்திருந்தார். அவர் சாப்பிட்டு முடித்து விட்டுப் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்தார்.

மாதாஜியும், மெதுவாக, “எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். “என் கோபமெல்லாம் பறந்து ஓடிவிட்டது. நான் சந்தோஷமாக இருக்கிறேன்” என்று விடை பகர்ந்தார். மாதாஜியும் மெதுவாக தனது அறைக்குப் புறப்பட்டார். அந்த சந்யாசி எல்லோரிடமும் வலியச் சென்று மாதாஜி மிக நல்லவர், மிகப் பெரியவர் என்று புகழ்ந்து தள்ளினார்.

anger cartoon

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்துவிடல் – குறள் 314

ஒருவர் தீங்கு செய்தால், அவரே வெட்கப்படும்படி அவருக்கு நன்மை செய்துவிடுங்கள். இதுவே சிறந்த தண்டனை.

கோபத்தை கோபத்தால் வெல்ல முடியாது; அன்பால்தான் வெல்ல முடியும் – தம்மபதம் 5/ புத்தர் சொன்னது

–சுபம்–

3 ராமர்கள், 3 பரதர்கள், 6 கர்ணர்கள்!

01cp_sampoorna_ram_1129781f

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

WRIITEN BY  ச.நாகராஜன்

Date : 13 September  2015

Post No. 2154

Time uploaded in London: –   காலை 11-19

(Thanks  for the pictures)

 

.நாகராஜன்

விஷய அடுக்கு

எதையும் அடுக்கினாலே அழகு தான். கொலு பொம்மைகளை அடுக்குவதில் தான் எத்தனை ஆயிரம் விதங்கள். வீட்டுக்கு வீடு படைப்பாற்றல் – கிரியேடிவிடி! அது ஒரு அழகு.

வார்த்தைகளையும் விஷயங்களையும் அடுக்குவது இன்னொரு அழகு!

அடுக்கு மொழி என்றாலே ஒரு கவர்ச்சி தான்! (தீயசக்திகள் தமிழகத்தில் தமிழர்களை ஏய்க்கும் அடுக்குமொழி தவிர மற்ற அனைத்தும் நல்லவையே)

ராமன், பரதன், கர்ணன் என்றால் மகிழ்ச்சியுடன் விஷயத்தைச் சற்று அறிந்து கொள்ள ஆவலாக இருக்கும்.

3 ராமர், 3 பரதர் 6 கர்ணர்கள் என்றால்.. ஆவல் பன்மடங்காகும்.

3 ராமர்கள் யார்?

தசரத ராமன், பரசுராமன், பலராமன்!

ராம நாமத்தால் இம்மை மறுமை நலம் பெறலாம். நன்மையும் செல்வமும் பெறலாம். சென்மமும் மரணமும் இன்றி இன்புறலாம்.

தசரத ராமனையா தெரியாது, ராம, ராம, ராம ராமஜயம்!

அடுத்து பரசுராமன். ஜமதக்னி-ரேணுகாவின் புதல்வர்!

பரசுராம பார்கவர்! தசரத ராமன் தந்தை, தாய் சொல்லைத் தட்டவில்லை. ஆனால் பரசுராமன் தந்தை சொல் தட்டவில்லை. தாயின் தலையைத் துண்டிக்க தந்தை ஆணையிட அதை சிரமேற்கொண்டு ஏற்ற தந்தை சொல் தட்டா தனயன் பரசுராமன்!

அடுத்து பலராமன்! கண்ணனின் அண்ணன். மகாபாரதப் போரின் போது தீர்த்த யாத்திரை சென்றவர் கடைசி க்ளைமாக்ஸில் வந்து தன் முத்திரையைப் பதிக்கிறார். துரியோதனன் – பீமன் சண்டையில் கதையை பீமன் துரியோதனனின் இடுப்புக்குக் கீழே துடையில் அடித்தது தவறு என்று ஆட்சேபணை கிளப்பியவர். தரையில் இருந்த போது தான் அடிக்கக் கூடாது, துரியோதனன் ஆகாயத்தில் உயர்ந்த போது கதை அவன் துடையில் பட்டது என்று மாமாயக் கண்ணன் அவரை சமாதானப் படுத்த அமைதியாகிறார். ஆயிரம் சம்பவங்கள் இவரைச் சுற்றி. அறியாமல் இருக்க முடியாதே!

MaharajaRahuganasarcasticallychastisesJadaBharata

பல்லக்கை சுமந்துவரும் ஜடபரதன்

 

மூன்று பரதர்கள் யார்

அடுத்த மூவர் – 3 பரதர்

ராமனின் தம்பி பரதன்

பரத வம்ச பரதன்

ஜட பரதன்

கானகம் வந்த பரதனை முதலில் சந்தேகித்து அவனது உண்மையான ராம பக்தியை அறிந்த பின்னர் குகன் கூறுவது:-

“தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை

தீவினை என்ன நீத்து, சிந்தனை முகத்தில் தேக்கி,

போயினை என்ற போழ்து, புகழினோய் தன்மை கண்டால்

ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியன் அம்மா”

—- (அயோத்தியா காண்டம் குகப் படலம்)

சிந்தனை முகத்தில் தேக்கி, ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, என்றெல்லாம் கம்பரைத் தவிரை வேறு யாரால் தான் சொல்ல முடியும் தெரியன், அம்மா!

அடுத்து பரதன்! பாரத தேசத்தில் பிறந்து பரதனைத் தெரியவில்லை என்றால் அது தேசீய அவமானம். புகழோங்கிய பரதனின் வழித்தோன்றல் என்பதில் தான் நமக்கு என்ன ஒரு பெருமிதம்!

அடுத்து ஜட பரதர். மான் ஈன்ற குட்டி மீது பாசம் வைத்து மறு ஜன்மம் பெற்றவர். பல்லக்கில் மன்னனை எட்டி எட்டி காலை வைத்துத் தூக்க, பல்லக்கு ஆட, மன்னன் கோபப் பட்டு இறங்கி, யார் நீ என்று வினவ, அவனுக்கு அடித்தது யோகம்! ஆன்ம லாபம் பெற வைத்த உபதேசத்தை ஜட பரதர் உபதேசித்த வரலாறு நம்மைப் புல்லரிக்க வைக்கும்.

மூன்று பரதருக்கும் ஒரு ஜே போட்டு 6 கர்ணர்களின் பக்கம் திரும்புவோம்.

karnan

ஆறு கர்ணர்கள் யார்?

 

மஹாரதி கர்ணன்

கௌரவ குலத்தில் பிறந்த விகர்ணன்

க்ஷேத்திரங்களில் சிறந்த கோகர்ண(ம்)

ராட்சஸரில் சிறந்த கும்பகர்ணன்

ஷ்யாம நிறம் படைத்த காதுகள் கொண்ட குதிரைகள்- ஷ்யாம கர்ண (குதிரை)

சரீரத்தில் உன்னதமாக உள்ளுக்குள் இருக்கும் அந்தக் கரண(ம்.

இந்த ஆறின் சிறப்பே சிறப்பு என்று அடித்து, அடுக்கிச் சொல்கிறார்கள் அறிஞர்கள்!

கர்ணனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். குந்தியின் புத்ரன். செஞ்சோற்றுக் கடன் கழிக்கச் சேரக் கூடாதவருடன் சேர்ந்தவன். மஹா ரதி. கொடுத்துச் சிவந்தவன்.

விகர்ணன் கௌரவர் நூற்றுவரில் ஒருவன். திரௌபதியை சபை நடுவே துகில் உரித்த போது யாரும் அதைக் கண்டிக்காத சூழ்நிலையில் வாய் திறந்து கண்டித்த தர்மவான் விகர்ணன். கடைசியில், இவனைக் கொல்ல நேர்ந்ததே என்று மனம் துக்கப்பட்டவாறே பீமன் கொன்றான். விகர்ணன் தீயோருடன் சேர்ந்த பாவத்தால் அழிந்து பட்டான்.

சிவ க்ஷேத்திரங்களுள் துளுவ நாட்டில் உள்ள சிறந்த கோகர்ணம் சிவ ஸ்தலங்களுள் பிரசித்தி பெற்றது. சிவபிரானின் காதுகள் பசுவின் காது போலக் குழைந்து இருப்பதால் இந்த புனிதத் தலம் கோகர்ணம் என்ற பெயரைப் பெற்றது.

இன்ன உரு என்று அறிவு ஒணாதான் காண்

ஏழ்கடலும் ஏழ் உலகும் ஆயினான் காண்

மன்னும் மடந்தை ஓர் பாகத்தான் காண்

மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே

என்பது அப்பர்,,வாக்கு (6ஆம் திருமுறை –சந்திரனும் தண்புனலும் எனத் தொடங்கும் பதிகத்தில் 8ஆம் பாடல் காண்க)

ஆறு சமயங்களும் விரும்பி அடி பேணி அரன் ஆகமம் மிகக்

கூறு மனம் ஏறு இரதி வந்து அடியர் கம்பம் வரு கோகரணமே

என்பது ஞானசம்பந்தர் அருளிய பாடல். (3ஆம் திருமுறை என்றும் அரியான் எனத் தொடங்கும் பதிகத்தில் 6அம் பாடல் காண்க).

ராவணனின் தம்பி கும்பகர்ணன்! சீதையைத் தூக்கி வந்தது தப்பு என்று அண்ணனை இடித்து உரைத்தவன். இவன் கூறுவதாக கம்பன் இயற்றிய பாடல் மிகவும் புகழ் பெற்றது. ‘பேசுவது மானம் இடை பேணுவது காமம்’ என்ற இவனது சாட்டையடிச் சொற்கள் ராவணனது அரசவையில் ஒரு நாடகக் காட்சியையே தோற்றுவிக்கிறது.

ஷ்யாம வர்ணம் பொருந்திய குதிரைகள் மிகச் சிறந்தவை என்று அஸ்வ சாஸ்திரம் கூறுகிறது.

சரீர உறுப்புகளில் மிகவும் நுட்பமானது அந்தக் கரணம் – மனச் சாட்சி. இறைவனின் குரலே மனச்சாட்சியின் குரல்.

ஆக இந்த ஆறு கரணங்கள் சிறப்பானவை என்று அழகுற அடுக்கிச் சொல்லும் போது ஏராளமான சிறப்பான விஷயங்களை ஒரு அலசு அலசித் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஹிந்து இலக்கியத்தை சுவைபடப் புரிந்து கொள்ள இப்படி ‘3 ராமர், 3 பரதர், ஆறு கர்ணர்’ போன்ற சொற்றொடர்கள் உதவுகின்றன இல்லையா!

***************

டொண்டொண்டொடென்னும் பறை!

குரல்

வாழ்வியல் அங்கம்

டொண்டொண்டொடென்னும் பறை!

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

WRIITEN BY  ச.நாகராஜன்

Date : 12 September  2015

Post No. 2149

Time uploaded in London: –   காலை 6-37

(Thanks  for the pictures)

 

.நாகராஜன்

வழக்கம் போல திருக்குறளைப் புரட்டினேன். பார்வைக்கு வந்த குறள்:

நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்து இவ் வுலகு (குறள் 336)

நேற்று இருந்தவன் இன்றில்லை என்று சொல்லும் பெருமையைக் கொண்டது இவ்வுலகு.

என்ன இவர், உலகிற்குப் பெருமையாக இதைத்தானா சொல்வது? ஒரு ஐஸ்வர்யா ராயை அல்லது க்ளியோபாட்ரா அல்லது சித்தூர் ராணி பத்மினி போன்ற பிரமாதமான அழகியைப் பெற்றது இவ்வுலகு என்று சொல்லக் கூடாதா, அல்லது நிலவில் கால் பதித்த ஆர்ம்ஸ்ட்ராங் போன்ற ‘மனிதனைக்’ கொண்டது இவ்வுலகு என்றாவது சொல்லக் கூடாதா, காலத்தால் முற்பட்டவர் தான், புரிகிறது! இது போல எதையாவது சொல்லி இருக்கலாமில்லையா,

நாலயிர2

சரி, போகட்டும், பார்வை மேலே போக கண்ணில் பட்ட அடுத்த குறளைப் பார்த்தேன்.

நாளென ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின்   (குறள் 334)
நாள் என்பது கால அளவையைப் போலக் காட்டி உங்கள் உயிரின் வாழ்நாளை அறுக்கும் வாள்!

என்ன ஒரு நெகடிவ் திங்கிங் (Negative thinking) எத்தனை கோர்ஸ்களிலும் செமினார்களிலும் இளைஞர்களையும் இளைஞிகளையும் சந்தித்து, “இன்றைய நாள் பொன்னாள். இது ஒரு வாய்ப்பு! நேர மேலாண்மை – அது தான் டைம் மானேஜ்மெண்ட் கற்றுக் கொண்டு சரியாக அதைப் பயன்படுத்துங்கள் என்று வாய் கிழியப் பேசி இருக்கிறேன்.

இவரோ நாள் என்பதை உயிரைப் போக்கும் வாள் என்று நினை என்கிறார்.

குறளை மூடினேன். பட்டினத்தாரை எடுத்து புரட்டினேன். வந்த பாடல்:

கட்டி அணைத்திடும் பெண்டிரும் மக்களும் காலத்தச்சன்

வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்தி விட்டால்

கொட்டி முழக்கி அழுவார் – மயானம் குறுகி அப்பால்

எட்டி அடி வைப்பரோ? இறைவா, கச்சி ஏகம்பனே!

இதென்னடா சங்கடம் என்று இன்னொரு பக்கத்தைப் புரட்டினால் அங்கு கண்ட பாடல்:

பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி

முத்தும் பவளமும் பூண்டோடி ஆடி முடிந்த பின்பு

செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனி சாம் பிணங்கள்

கத்தும் கணக்கென்ன காண் கயிலா புரிக் காளத்தியே!

அட, வார்த்தைகள் பிரமாதம் தான்!

காலத் தச்சன் வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்தி விட்டால் …

செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனி சாகப் போகும் பிணங்கள் கத்தும் கணக்கு, என்ன கணக்கு!!!!

பின்னால் டி.வியில் வேறு கண்ணதாசன் பாடல் கனமாக, “வீடு வரை உறவு வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ என்று ஒலித்தது.

divyasprabandam1

ஒன்றும் சரிப்படவில்லை?!

பஜகோவிந்தம் நூலில் எடுத்த பாடல்:  புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனீ ஜடரே சயனம் (மீளவும் பிறப்பு; மீளவும் இறப்பு மீளவும் தாயின் குடரிடைப் படுப்பு என்ற அழகிய தமிழ் மொழி பெயர்ப்பு வேறு) என்று வர அதையும் மூடினேன்.

இன்று நேரம் சரியில்லை நமக்கு.

நாலடியாரையாவது ஒரு புரட்டு புரட்டி வைப்போம் என்று அதை எடுத்தால்!!

கணம் கொண்டு சுற்றத்தார் கல்லென்றலறப்

பிணம் கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் –

மனம் கொண்டீண்டு  உண்டுண்டுன் டென்னும் உணர்வினால் சாற்றுமே

டொண்டொண்டொ டென்னும் பறை  (நாலடியார் பாடல் 25)

தூக்கி வாரிப் போட்டது. எங்கோ ஒரு ஓசை கேட்பது போல இருந்தது.

நாலடியார்

டொண் . டொண்.. டொண்..

உண்டுண்டுன்டென்னும் உணர்வினால் சாற்றுமே டொண் டொண் டொண்.. பறைச் சத்தம்!

எங்கேயாவது பறை அடிக்கப்படுகிறதா? இல்லை, இல்லை!

‘மனப்பிரமை தான்!

பறையும் பாடையும் போன நவீன காலம் இது. பாம் பாம் என்று ஹார்ன் அடிக்க ஆம்புலன்ஸே அமரர் ஊர்தி ஆகிச் செல்ல, ஐந்து நிமிடத்தில் எலக்ட்ரிக் க்ரிமடோரியத்தில் சில நொடிகளில் உடலே பிடி சாம்பலாகும் ‘ஒளிமயமான’ காலம்!

பாட்டிகளே பாடையிலே போக என்ற வசவை வாபஸ் வாங்கி, பல்லாயிரம் வாட்ஸில் சாம்பலாகிப் போக என்று மாடர்னாகச் சொல்லும் காலம் அல்லவா இது!

என்ன செய்வது, என்று நெஞ்சம் கொஞ்சம் அஞ்சியது!

எல்லா புத்தகங்களையும் மூட்டை கட்டி மூடினேன். நாலாயிர திவ்ய பிரபந்தம் தொப்பென்று விழுந்தது.

விழுந்த பக்கத்தில் இருந்த பெரியாழ்வாரின் பாடல் இது:-

துப்புடையாரை அடைவ தெல்லாம் சோர்விடத் துத்துணை யாவரென்றே

ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்

எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்தரவணைப் பள்ளியானே

கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுத்த கருணையாளன். எய்ப்பு வந்து பேச முடியாமல் இருக்கும் போது அப்போது உன்னை நினைக்க மாட்டேன். அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் – கொஞ்சம் பார்த்து செய்யப்பா!

ஆழ்வாரின் அற்புதப் பாடல் மின்னலென உள்ளத்தில் பளிச்சிட்டது. மூளையில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் பளிச்சென எரிந்தது!

AZHWARGROUP

நெகடிவ் திங்கிங் இல்லையடா, முட்டாளே, திருவள்ளுவருக்கு! அப்போதைக்கு இப்போதே சொல்லி வை என்று சொல்ல அல்லவா அவர் அப்படிச் சொல்லி இருக்கிறார்.

எல்லாப் பெரியோரும் சொல்ல வந்தது ஒரே ஒரு கருத்தைத் தான்:-

கையும் காலும் கண்ணும் செவியும், மெய்யும் செயல்பாட்டுடன் இருக்கும் போதே நினைக்க வேண்டிய ஒன்றை நினை!!

டொண் டொண் டொண். அப்போதைக்கு இப்போதே! செத்த பிணத்தை இனி சாம் பிணங்கள், காலத் தச்சன் வெட்டி விட்ட மரம் போல!

அட, ஒரு மாதிரியாக நெஞ்சைப் பிசைகிறதே. குரல் எழும்பவில்லை.

அ.. ர..ங்க மாநகருள் ளா ஆ ஆ ஆ …..?!

*****************

உங்களுக்குப் பிடித்த ‘ஐயோ’ பாடல் எது?

IMG_4887 (2)

பாரதி பழகுவோம்

உங்களுக்குப் பிடித்த ஐயோ பாடல் எது?

 

Don’t Reblog it for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

 

Wriiten by S NAGARAJAN

Date : 9 September  2015

Post No. 2141

Time uploaded in London: – காலை 10-10

 

By .நாகராஜன்

 

என்ன கேள்வி இது?

இது என்ன சார், கேள்வியே சற்று விபரீதமாய் இக்கிறது? யாருக்காவது ஐயோ பிடிக்குமா?

 

ஐயோ, ஐயோ. அந்தஐயோவைச் சொல்லவில்லை சார் இந்த ஐயோ கொஞ்சம் வேறு மாதிரி! ஆனாலும் கட்டுரையின் கடைசியில் நீங்கள் நினைக்கும் அந்தஐயோவும் வருகிறது.

 

உங்களுக்குப் பிடித்த ஐயோ பாடல் எது? கீழே அறிஞர்களும் பக்தர்களும் ரசித்த பாடல்கள் பல உள்ளன! பாருங்கள், படியுங்கள், பின்னர் தேர்ந்தெடுங்கள்!

 

 

அழியா அழகுடையான்

முதலில் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் பாடல். இதன் சிறப்பை எடுத்துக் கூற ஒரு பெரும் நூலே எழுத வேண்டும். சந்த அமைப்பு, பொருளின் ஆழம், நாடகக் காட்சி, சொல்லாட்சி, உவமைத் திறன், அடுக்கிக் கொண்டே போய் க்ளைமாக்ஸ் காண்பிப்பது என இப்படி இந்தப் பாடலைத் திறனாய்வு செய்வதற்கான அம்சங்களைக் கூறிக் கொண்டே போகலாம்! ரசிக்கும் வரை ரசியுங்கள்.

 

 

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், தமிழ் இலக்கியத்தின் சிகரமான பாடல்களில் சத்தியமாக இதுவும் ஒன்றுஏன், உயர்வு நவிற்சி அணி இல்லாமல் தமிழ் இலக்கியத்தின் என்பதை உலக இலக்கியத்தின் என்று கூட சுலபமாக மாற்றிச் சொல்லி விடலாம். அப்படி ஒரு தகுதி கொண்ட பாடல் இது.

 

 

வெய்யோனொளி தன் மேனியின் விரிஜோதியின் மறையப் 

 பொய்யோவெனும் இடையாளொடும் இடையானொடும் போனான்    

 மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ                                 

ஐயோ இவன் வடிவென்பதொர் அழியா அழகுடையான்!

 

லட்சுமணன் சீதையுடன் ராமபிரான் சென்ற காட்சி! சூரியனின் ஒளியே வேத புருஷனான ராமனின் மேனி ஒளியில் மங்கியதாம். அவன் மை வண்ணனா, மரகத நிறத்தவனா? அவனுக்கு உவமையாகக் கடலைச் சொல்வதா, மழை முகிலைச் சொல்வதா, பொறுக்க முடியாத வர்ணனை நிலையில் ஐயோ என்று கம்பன் மயங்குகிறான். இதன் அருமையை எழுத சில வரிகள் போதாது; இடம் கருதி அடுத்த பாடலுக்குப் போவோம்.

 

 

சிந்தை கவர்ந்த செய்யவாய்

 

திருப்பாணாழ்வார் ஜாதியில் தாழ்ந்தவர் என்று மக்களால் ஒதுக்கப்பட்டாலும் கூட இறைவனின் நீதியால் உயர்ந்தவர். ஶ்ரீரங்கத்தில் லோகசாரங்கர் என்னும் கோவில் பட்டர் அவரை ஒதுக்கித் தள்ளுகிறார். பக்தர் என்பதால் அவர் மீது பட்ட அடியை இறைவன் தானே ஏற்க, லோகசாரங்க பட்டர் மனம் வருந்தி அவரை இறைவன் சந்நிதிக்கு அழைத்துச் செல்கிறார். இறைவனைத் தரிசித்த ஆழ்வார் உணர்ச்சிப் பெருக்கால் பாடல் மழை பொழிகிறார். அவற்றில் இரு பாடல்கள்!

 

கையினார் சுரிசங்கனலாழியர் நீள்வரைபோல்                              

மெய்யனார் துளப விரையார் கமழ் நீள்முடியெம்                                  

 ஐயனார் அணியரங்கனார் அரவினணை மிசை மேய மாயனார்                  

செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே!

 

vatapatra sayi

இன்னொரு பாடல்:-

ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்                            

ஞாலமேழும் உண்டான அரங்கத்தரவினணையான்                                  

கோலமா மணியாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில்                        

நீலமேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே

 

மாயனார் செய்யவாய் சிந்தை கவர்ந்ததையும் நீலமேனி நெஞ்சினில் நிறை கொண்டதையும் உணர்ந்த ஆழ்வார் அதைச் சொல்ல வார்த்தையின்றி ஐயோ என வர்ணனையின் உச்சிக்குச் செல்கிறார்.

 

கம்பனின் கவித்திறத்தின் முடிவும் ஒரு ஐயோ! ஆழ்வார் இறைவனை நெஞ்சில் ஏற்றிய உணர்ச்சிப் பெருக்கின் முடிவும் ஒரு ஐயோ!

 

கருட உற்சவமும் எலி மேல் அமர்ந்த யானையும்

 

இனி கவிமழை பொழியும் காளமேகப் புலவரின் பாடல்களுக்கு வருவோம்.

கருட உற்சவத்தைச் சேவித்து அவர் இகழ்வது போலப் பாடிய பாடல் இது:-

 

பெருமாளும் நல்ல பெருமாள்! அவர் தம்                                                  

திருநாளும் நல்ல திருநாள்! – பெருமாள்                                             

இருந்திடத்தில் சும்மா இராமையினால் ஐயோ!                                

பருந்து எடுத்துப் போகிறதே பார்!

 

அவரே காஞ்சிபுரம் விநாயகர் உற்சவத்தைப் பழிப்பது போலப் புகழ்ந்து பாடிய பாடல் இது:-

மூப்பான் மழுவும், முராரி திருச் சக்கரமும்                                        

பார்ப்பான் கதையும் பறிபோச்சோ? – மாப்பார்                                           

வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை ஐயோ!                                        

எலி இழுத்துப் போகின்றது, ஏன்?

 

பருந்து எடுத்துப் போன விதத்திற்கும் எலி இழுத்துப் போனதற்கும் ஒரு ஐயோ போடும் போது பாடலின் சுவை கூடி விட்டது, இல்லையா?

இப்படி ஐந்து ஐயோ பாடல்களைப் பார்த்து விட்டோம்.

 

 IMG_5157 (2)

இன்னும் ஒரு ஐயோ பாடலை உலக நலத்தையே சிந்திக்கும் தாயுமானவர் பாடி இருக்கிறார். இதோ அது:-

காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டாகார சிவ,                            

போகமெனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமா                  

ஏக உருவாய்க் கிடக்குதையோ, இன்புற்றிட நாம் இனி எடுத்த                         

தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும் செகத்தீரே!

சிவ வெள்ளம் பொங்கித் ததும்புகையில் சவ வெள்ளமாகக் குவிகிறீர்களே! எடுத்த தேகம் விழும் முன் அகண்டாகார சிவ வெள்ளத்தில் சேர வாரும் ஜெகத்தீரே, பூரணமாய் ஏக உருவாய் கிடக்குது ஐயோ! என்று புலம்பி நம்மைக் கூவி அழைக்கிறார். இரக்கம் மேலிட்டு அவர் கூவும் கூவலைப் போன்று நலம் ததும்பும் கூவல் இன்னும் ஒன்று மாதிரிக்குக் கூட இல்லையே!

 

இப்படி ஆறு ஐயோ பாடல்களைப் பார்த்து விட்டோம்.

 

சூதும் பாவமும் பண்ணினால் ஐயோவென்று போவான்!

 

இன்னொரு பாடல். மகாகவி பாரதியாரின் புதிய கோணங்கிப் பாடல்.

பெரிய பாடல் முழுவதுமாக இங்கு தரப்படவில்லை. முக்கியமான சில வரிகளை மட்டும் இங்கு பார்ப்போம்:-

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு

நல்ல காலம் வருகுது, நல்ல காலம் வருகுது;                                       

சாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது                                          

சொல்லடி சொல்லடி சக்தி மா காளி,                                        

வேதபுரத்தாருக்கு நல்லகுறி சொல்லு!                                                 

தரித்திரம் போகுது; செல்வம் வளருது;                                           

படிப்பு வளருது; பாவம் தொலையுது;                                                   

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்                                         

போவான் போவான் ஐயோவென்று போவான்                                         

வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது

உங்கள் முன் ஏழு ஐயோ பாடல்கள் உள்ளன. ஒன்று கவிதா நயத்தின் சக்கரவர்த்தியான ராம பக்த கம்பன் பாடியது. இலக்கிய சிகரத்தின் ஏற்றத்தைக் காண்பிக்கும் ஐயோ அது

இன்னொரு உத்தம பக்தன் கண்ணாரத் தன் தெய்வத்தை தரிசித்து நெஞ்சு நெகிழ்ந்து உள்ளம் கசிந்து உணர்வூறச் சொன்ன இரண்டு ஐயோ. அது பக்தி பரவசத்தின் உச்ச உணர்வின் வெளிப்பாட்டைக் காண்பிக்கும் ஐயோ!

அடுத்து கவிஞனான சிலேடைப் புலவன் காலத்திற்கேற்ப இகழ்கிறார்போலப் புகழ்ந்து அனைவரையும் ரசிக்க வைத்து ரஸனையின் உச்சத்தில் இறை நினைப்பைத் தந்த இரண்டு ஐயோ! கவிதா மேதா விலாசமும் அனைவரையும் ஈர்க்கும் வேடிக்கை விநோதமும் கலந்த ஐயோ அது.

அடுத்து இரக்கக் கடலில் ஊறி இருக்கும் தாயுமானவர் கூறுவது. சிவ,                            

போகமெனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமா                  

ஏக உருவாய்க் கிடக்குதையோ, அதை அனுபவியுங்களேன் என்று

இரக்கம் ததும்பக் கூறும் ஐயோ அது.

அடுத்து தேசம் ஒன்றையே தன் தெய்வமாகப் பார்த்து பாவித்து தேசபக்தி ஒன்றையே உடலாக உயிராகக் கொண்ட கவிஞன், நாட்டின் தரித்திரத்திற்கும் இன்ன பிற தாழ்வுகளுக்கும் காரணத்தை ஆராய்ந்த ஆய்வின் முடிவுபடித்தவர் செய்யும் சூதிற்கு மன்னிப்பே இல்லை என்பது அவனது முடிவு. படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் எப்படிப் போவான் என்பதைச் சுட்டிக் காட்டும் ஐயோ அது. கவிதாசக்தி தெய்வீகம் கலந்த தேசபக்தியாக மாறி, கெட்ட கலியின் போக்கை மாற்ற, படிச்சவன் செய்யும் சூதிற்கு தரும் தண்டனை அந்த ஐயோ!

இதில் எமக்குப் பிடித்தது தேசத்தை முன்னேற்ற வழி சொன்ன கவிஞனின் ஐயோ! அந்த ஐயோ என்ற தீயினில் தீமைகள் தூசாகி அழியும்; புதிய கிருத யுகம் மலரும்; அப்போது அழியா அழகுடைய அண்ணலையும், நெஞ்சு நிறை கொண்ட நீலமேனியையும், கருட உற்சவ பெருமாளையும் எலி சுமந்த பிள்ளையாரையும் துதிப்பது எளிது; சிவானந்த வெள்ளத்தில் நீந்தித் திளைப்பதும் சுலபம் தான்!

தீய சக்திகள் ஐயோ என்று போகட்டும்; தெய்வத் திருநாடு செழிக்கட்டும்.

எமது தேர்வு ஒரு புறம் இருக்கட்டும்; உங்களுக்குப் பிடித்த ஐயோ பாடல் எது? ஏன்??

தேர்ந்தெடுத்து விட்டீர்களா!

ஒரு வரி எழுதிப் போடுங்களேன்விமரிசனப் பகுதியில்!

*********

 படங்களுக்கு நன்றி; முக நூல் மற்றும் மலர்களிலிருந்து எடுக்கப்பட்டவை.

அப்பரின் ஹஹ்ஹஹ்ஹா சிரிப்பு!

IMG_3255

Written by Santanam Nagarajan

Date : 8 September  2015

Post No. 2136

Time uploaded in London: – 6-10 AM

 

Don’t Reblog it for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

 

தேவார சுகம்

.நாகராஜன்

 

 

சிரிப்பில் இருக்குது நூறு வகை!

மனித குலத்துக்கே சொந்தமானது சிரிப்பு. சிரிப்பை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? ஒன்று, இரண்டு? அட பத்து விதமாகப் பிரிக்கலாமா?

ஹூம்!

தத்துவ என்சைக்ளோபீடியா ஒன்று நூறு வகையாகச் சிரிப்பு சம்பந்தமான கொள்கைகள் பிரிக்கப்படுகிறது என்கிறது. ஃப்ராய்ட் வகைப்படுத்திய சிரிப்பு ரிலீஃப் தியரி (Relief Theroy) எனச் சொல்லப்படுகிறது. இன்னும் பல்வேறு சிரிப்பு ஆராய்ச்சியாளர்கள் (Thomas Hobbes- இன்) சுபீரியாரிடி சிரிப்பு, (Robert Solomon—இன்)  இன்ஃபீரியாரிடி சிரிப்பு என்றெல்லாம் சிரிப்பை வகைப்படுத்துகிறார்கள்.

சிரிப்பதை விட்டு விட்டுச் சிரிப்பு பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினால் சிரிப்பு வருமா, என்ன!

பகலும் இருள் தான் சிரிக்காதவர்களுக்கு

தெய்வப் புலவர் திருவள்ளுவர் சிரிக்கத் தெரியாதவர்களுக்கு இந்தப் பெரிய உலகம் பகல் பொழுதிலும் கூட இருளில் மூழ்கிக் கிடப்பதாகவே தோன்றும் என்கிறார் இப்படி:-

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் 

பகலும்பாற் பட்டன்று இருள் (குறள் 999)

யாரைப் பார்த்துச் சிரிக்க வேண்டும் என்பதை எபிக்டெடஸ் என்ற அறிஞர் இப்படிச் சொல்லி விட்டார் தெளிவாக:-

“He who laughs at himself never runs out of things to laugh at.”

தன்னைப் பார்த்துச் சிரிப்பவனுக்கு சிரிக்க ஏராளமான விஷயங்கள் இருக்குமாம்!தமிழ் வரலாற்றில் தன்னைப் பார்த்துப் பொருள் பொதிந்து சிரித்ததோடு அதை அதிகாரபூர்வமாகப் பதிவு செய்தவர் யாராவது இருக்கிறார்களா?இருக்கிறார்கள்!

IMG_3253

முதலாமவர் அப்பர்! இரண்டாமவர் ஒரு ஆழ்வார்!

அப்பரின் சிரிப்பு

அப்பர் ஒரே ஒரு வேலையைத் தான் முழு நேர வேலையாகக் கொண்டிருந்தார். அது தான் – இறைவனை அறிவது.

வால் அறிவனை அறிந்து விட்டால் மற்ற அறிவெல்லாம் வந்து விடாதா என்ன?

காட்டிலே, மேட்டிலே, கழனியிலே, கோவிலிலே என அங்கிங்கெனாதபடி கடவுளைத் தேடியவர் அவரைக் கண்டே விட்டார்.

எவ்வளவு உழைப்பு; எத்தனை காலம்!

கடவுளின் இருப்பிடத்தை அறிந்தவுடன் அவருக்கு சிரிப்புத் தான் வந்தது. அதை அப்படியே தமிழில் பாடலாகப் பதிவு செய்து விட்டார்.

பாடல் இது தான்:-

கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித்

தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்

உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று

வெள்கினேன் வெள்கி நானும் விலா இறச் சிரித்திட்டேனே!

கள்ளத் தொண்டில் நெடுங்காலத்தை அங்கும் இங்குமாய் அதிலும் இதிலுமாய்ப் போக்கினார் அப்பர். கள்ளத் தன்மை போய் தெளிவுற்றவன் ஆனார். அந்த நல்ல நிலையில் அவர் நாடியதைக் கண்டே விட்டார்.

நினைப்பவர்களில் உள்ளே இருந்து அவர்கள் நினைப்பதை எல்லாம் (உடனுக்குடன்) நீ அறிவாய் என்பதை கண்டு கொண்டேன் என்கிறார் அப்பர். இதை நினைத்தவுடன் அவருக்குச் சிரிப்பு தான் வந்தது. ஹஹ்ஹஹ்ஹாவென்று விலாப் புடைக்கச் சிரித்தாராம்.

உள்ளே இருப்பவனை வெளியில் தேடியதற்கு ஒரு சிரிப்பு; உள்ளே இருந்து ஒவ்வொரு கணமும் எண்ணுவதை அறிந்தவனை கள்ள மனத்துடன் யாரும் இதை அறிய மாட்டார்கள் என்று அனைத்தையும் செய்ததற்கு ஒரு சிரிப்பு…..

பாடலைப் படித்து சற்று சிந்தனையுடன் ஆழ்ந்து யோசித்தால் நம் சிரிப்பின் கொள்கை வகைகள் நூறையும் தாண்டி விடும்.

கஸ்தூரி மான் ஒன்று கஸ்தூரி வாசனை தன்னிடமிருந்தே வருகிறது என்பதை அறியாது வாசனையைத் தேடி ஒரு அடி முன்னே வைக்கும். அதன் உடலில் இருக்கும் வாசனையும் ஒரு அடி முன்னேறும். இப்படி அடி அடியாய்ப் பாய்ச்சல் பாய்ச்சலாய் அது கஸ்தூரியைத் தேடுமாம் – வாழ்நாள் முழுதும்!

அப்படி கஸ்தூரி மான் போல நெடுங்காலம் உத்தமனைத் தேடிய அப்பர், இறுதியில் இறைவன் அருளால் உள்ளேயே கண்டு கொண்டார் உத்தமனை! அப்போது தான் ஹஹ்ஹஹ்ஹா என்ற விலா எலும்பு ஒடியும்படியான சிரிப்பு வந்தது!

haha-logo

உடம்பு என்னும் மனை அகத்து

உள்ளமே தகளி ஆக

மடம்படும் உணர் நெய் அட்டி

உயிர் எனும் திரி மயக்கி

இடம் படு ஞானத்தீயால்

எரிகொள இருந்து நோக்கில்

கடம்பு அமர் காளை தந்தை

கழல் அடி காணல் ஆமே

இதை விடத் தெளிவாக இறையைக் காணும் வழியை உரைக்க முடியுமா?

“உள்குவார் உள்ளத்தானை உணர்வு எனும் பெருமையான

உள்கினேன் நானும் காண்பான் உருகினேன்”

என்று நமக்காகத் தம் அனுபவத்தை அப்பர் இப்படி பதிவு செய்கிறார்.

அப்பரின் ஹஹ்ஹஹ்ஹா சிரிப்பைப் போல அதே சிரிப்பைச் சிரித்தவர் ஒரு ஆழ்வாரும் கூட!

haha

ஆழ்வாரின் சிரிப்பு

அவர் தான் ‘திருமாலை’யைப் படைத்த  தொண்டரடிப்பொடி ஆழ்வார்.

அவர் அனுபவத்தை இப்படிக் கூறுகிறார்:-

உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வொன்றில்லா

கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு

உள்ளுவார் உள்ளிற்றெல்லாம் உடனிருந்து அறிதியென்று

வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே

அப்பரின் வார்த்தைகள் பல அப்படியே வருவதைப் பார்க்கலாம். அனுபவம் ஒன்று தானே!

அப்பர் கண்டது சிவனை; ஆழ்வார் கண்டது ஹரியை.

அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயிலே மண்ணு.

அனுபவம் ஒண்ணு; விளைந்த ஹஹ்ஹஹ்ஹாவும் ஒண்ணு தான்!

******************

அசலாம்பிகையின் அற்புதக் கவிதை!

narsimehtha

Don’t Reblog it for at least for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

Compiled by லண்டன் சுவாமிநாதன்

Date : 7 September  2015

Post No. 2133

Time uploaded in London: – 15-40

1910, 1920 ஆம் ஆண்டுகளில் பல ஆன்மீக நூல்களையும், சொற்பொழிவுகளையும் செய்தவர் திருமதி பண்டிதை அசலாம்பிகை. அவரைப் புகழ்ந்து திரு.வி.க. போன்ற தமிழ் அறிஞர்களும் சித்தாந்த தீபிகை போன்ற பத்திரிக்கைகளும் எழுதியிருப்பதிலிருந்தே அவர் புகழ் குன்றின் மேலிட்ட விளக்கு போலப் பிரகாசிக்கிறது. அவர் காந்தி புராணம் என்று காந்தியின் வாழ்க்கை வரலாற்றை கவிதை வடிவில் எழுதி மூன்று பகுதிகளாக நூல்களாக வெளியிட்டுள்ளார். நல்ல கவி உள்ளம் படைத்தவர் என்று தெரிகிறது. முதல் முன்று பகுதிகள் காந்தியின் 1924 ஆம் ஆண்டுவரையுள்ள வாழ்க்கைச் சம்பவங்களை விவரிக்கிறது. அதற்குப் பின்னுள்ள காந்தியின் வரலாற்றை இவர் எழுதினாரா என்று தெரியவில்லை (பிரிட்டிஷ் லைப்ரரியிலுள்ள புத்தகங்களை அடிப்படையாக வைத்து இதை எழுதுகிறேன்).

காந்திஜிக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று குஜராத் மகான் நரசிம்ம மேத்தா எழுதிய “வைஷ்ணவன் யார்?” என்ற கவிதையாகும். இதை இந்து யார்? என்ற கேள்விக்கு விடையாகவும் கொள்ளலாம். இதைப் பிற்காலத்தில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை மொழி பெயர்த்ததை நாம் அறிவோம். ஆனால் அதற்கு முன்னரே காந்தி புராணத்தில் அசலாம்பிகை அம்மையார் கவிதையாக மொழி பெயர்த்துள்ளார். அதில் இவருடைய செஞ்சொற் கவி நயத்தைக் காணலாம். இதோ இத்துடனுள்ள இணைப்பில் அதைக் காணுங்கள். அதைத் தொடர்ந்து நாமக்கல் கவிஞரின் மொழிபெயர்ப்பையும் கொடுத்துள்ளேன்

narsimehta1 (2)
IMG_3996 (2)

IMG_3995 (2)

IMG_3991 (2)

வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்)

வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேட்பின்
வகுப்பேன் அதனைக் கேட்பீரே! (வைஷ்)

பிறருடைத் துன்பம் தனதென எண்ணும்
பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம் ;
உறுதுயர் தீர்த்ததில் கர்வங் கொள்ளான்
உண்மை வைஷ்ணவன் அவனாகும் ;
உறவென மனிதர்கள் உலகுள யாரையும்
வணங்குவன் உடல்மனம் சொல்இவற்றால்
அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்
அவனைப் பெற்றவள் அருந்தவத்தாள். (வைஷ்)

விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை
விளங்கிட ஆசைகள் விட்டவனாய்
ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென
உணர்வோன் வைஷ்ணவன் தன்நாவால்
உரைப்பதிற் பொய்யிலன் ஒருபோதும்அவன்
ஊரார் உடைமையைத் தொடமாட்டான்
வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ
அவனே உண்மை வைஷ்ணவனாம். (வைஷ்)

மாயையும் மோகமும் அணுகா தவனாய்
மனத்தினில் திடமுள வைராக்யன்
நாயக னாகிய சிறீரா மன்திரு
நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து
போயதில் பரவசம் அடைகிற அவனுடைப்
பொன்னுடல் புண்ணிய தீர்த்தங்கள்
ஆயன யாவையும் அடங்கிய சேத்திரம்
ஆகும்அவனே வைஷ்ணவனாம். (வைஷ்)

கபடமும் லோபமும் இல்லாதவனாய்க்
காம க்ரோதம் களைந்தவனாய்த்
தபசுடை அவனே வைஷ்ணவன் அவனைத்
தரிசிப் பவரின் சந்ததிகள்
சுபமுடை வார்கள் எழுபத் தோராம்
தலைமுறை வரையில் சுகமுறுவர்
அபமறப் புனிதம் அடைகுவர் பிறப்பெனும்
அலைகடல் நீந்திக் கரை சேர்வார். (வைஷ்)

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை

மூலம்: நரசிம்ம மேத்தா

1969gandhi

வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே
பீட பராயே ஜானேரே
பரதுக்கே உபகார் கரே தோயே
மன் அபிமான் ந ஆனே ரே
(வைஷ்ணவ)

சகல லோக மான் சஹுனே வந்தே
நிந்தா ந கரே கேனீ ரே
வாச் கச்ச மன் நிஸ்சல ராகே
தன் தன் ஜனனீ தேனே ரே
(வைஷ்ணவ)

சம்திருஷ்டி நே த்ருஷ்ணா த்யாகீ
பரஸ்த்ரீ ஜேனே மாத ரே
ஜிஹ்வா தகி அஸத்ய ந போலே
பர தன் நவ் ஜாலே ஹாத் ரே
(வைஷ்ணவ)

மோஹ மாயா வ்யாபே நஹீ ஜேனே
த்ருட வைராக்ய ஜேனா மன்மாம் ரே
ராம் நாம் சூன் தாலீ லாகீ
சகல தீரத் தேனா தன்மாம் ரே
(வைஷ்ணவ)

வண லோபீ நே கபட-ரஹித சே
காம க்ரோத நிவார்யா ரே
பனே நரசய்யொ தேனுன் தர்ஷன் கர்தா
குல் ஏகோதேர் தார்யா ரே

நரசிம்ஹ மேதா
(கிபி. 1500)

1947 Gandhi Rs 10 Service

वैष्णव जन तो तेने कहिये जे पीड परायी जाणे रे।
पर दुःखे उपकार करे तो ये मन अभिमान न आणे रे॥
सकळ लोकमां सहुने वंदे, निंदा न करे केनी रे।
वाच काछ मन निश्चळ राखे, धन धन जननी तेनी रे॥
समदृष्टि ने तृष्णा त्यागी, परस्त्री जेने मात रे।
जिह्वा थकी असत्य न बोले, परधन नव झाले हाथ रे॥
मोह माया व्यापे नहि जेने, दृढ़ वैराग्य जेना मनमां रे।
रामनाम शुं ताळी रे लागी, सकळ तीरथ तेना तनमां रे॥
वणलोभी ने कपटरहित छे, काम क्रोध निवार्या रे।
भणे नरसैयॊ तेनुं दरसन करतां, कुळ एकोतेर तार्या रे॥

சார்! நீங்க வெறும் தாஸா? லார்ட் லபக்தாஸா! -1

mahabharatham-pesukerathu

எழுதியவர்: ச.நாகராஜன்

Date : 6 September  2015

Post No. 2129

Time uploaded in London : – காலை 6-36

 

மஹாபாரத வழிகாட்டி

விஷயம் மிகவும் சீரியஸானது. அதனால் தான் கட்டுரை ஒரு காமடி காட்சியுடன் ஆரம்பிக்கிறது. படைப்பு பற்றிய விஷயம் ஸ்டீபன்ஹாகிங் ரேஞ்சில் இருப்பவர்களுக்கே புரியாத போது கந்தர்வன் விஸ்வாவசுவுக்குப் புரியுமா?

 

.நாகராஜன்

 

 

விவேக்கின் கேள்வி

சரியான கேள்விகள் கேட்கவே நமக்குத் தெரியவில்லை என்பது தான் உண்மை.

இதை நாம் விளக்குவதை விட பாலக்காட்டு மாதவன் படத்தின் மூலமாக விவேக் விளக்குவது தான் சரி!

டெலிபோன் மணி நள்ளிரவு 12 மணிக்கு ஒலிக்கிறது

விவேக் – புரபஸர் சார் இருக்காரா?

தூக்கத்திலிருந்து விழிக்கும் புரபஸர் மனைவி – யார் பேசறது?

அவர் ஸ்டூடண்ட் பேசறேன். ஒரு சந்தேகம். எப்ப வேணும்னாலும் கேக்கலாம்னு சொல்லி இருக்கார்.

“இந்தாங்க, ஏதோ சந்தேகமாம். உங்க ஸ்டூடண்ட்”

மனைவி எழுப்பி விடவே புரபஸர் தாஸ் – “இந்த நேரத்திலா! உடம்பே புல்லரிக்குதே”

புரபஸர் – “சொல்லுப்பா, என்ன சந்தேகம்?”

“சார், இந்த நேரத்தில கேக்கலாமா, என் ஃப்ரண்டும் வேற கேக்கணுங்றான்”

“கேளுப்பா, ஒவ்வொருத்தரா கேளுங்க!”

“சார்! நீங்க வெறும் தாஸா? லார்ட் லபக்தாஸா!”

புரபஸருக்கு மயக்கம் வர நமக்குச் சிரிப்பு வருகிறது!

நம்முடைய சந்தேகங்களெல்லாம் கூட லார்ட் லபக்தாஸ்

வகையறாக்களாகவே இருக்கின்றன – பெரும்பாலும்!

ஆனால் பழைய காலத்தில் பெரியவர்களை, பதில் சொல்லத் தெரிந்த ஞானஸ்தர்களைப் பார்த்தால் அவரிடமிருந்து விஷயங்களைக் கறப்பதற்கான கேள்விகளைக் கேட்பது வழக்கம்.

Rajaji mahabharatham

அர்த்தமுள்ள உரையாடல்கள் (சம்வாதங்கள்)

வல்லவர் இருவர் கூடினால் அங்கு அர்த்தமுள்ள உரையாடல்கள் அமையும். இவை சம்வாதங்கள் என கூறப்படுகின்றன! கேள்வி கேட்க வல்லவர் கூர்மையான வினா அம்புகளை விட பதில் சொல்ல வல்லவர் யாருமே அறிந்திராத அற்புத உண்மைகளை பதிலாகத் தருவர்.

இப்படி நூற்றுக் கணக்கான கேள்வி பதில்களைத் தருவது நமது இதிஹாஸ புராண உபநிடதங்கள் தாம்! கூடவே ஒரு ‘மட்டும்’ சேர்க்க வேண்டும்.

நமது இதிஹாஸ புராண உபநிடதங்கள் மட்டும் தாம்!

ஒரு உதாரணம் சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பினால் அது நியாயமான  நல்ல கேள்வி தான். கேள்வி- பதில் விஷயத்தை முதல் பாராக்களிலேயே கப்பென்று பிடித்து விட்டீர்கள்; பதில் சொல்லித் தான் ஆகவேண்டும்.

கந்தர்வனின் 24 கேள்விகள்

மஹாபாரதத்தில் ஒரு காட்சி.

விசுவாவசு என்ற கந்தர்வன் மஹரிஷி யாக்ஞவல்க்யரைப் பார்க்கிறான்.

சரியான மஹரிஷி கிடைத்தார் என்று பிரம்மாண்டமான, சுலபத்தில் பதில் கூற முடியாத 24 கேள்விகளைக் கேட்டான்.

மஹரிஷியும் புன்னகையுடன் பதில் சொன்னார்.

இந்தக் கேள்விகள் இருபத்திநான்கும் சாந்தி பர்வம் 323ஆம் அத்தியாயத்தில் உள்ளன.

மிகுந்த சிரத்தையுடன் ஊன்றி தக்கவர் துணையுடன் படித்தால் முதலில் கேள்விகள் புரியும்?

பின்னர் இன்னும் சிரத்தையுடன் படித்தால் பதில்களும் ஒரு சிறிது புரியும்.

ஒரு சோதனை ஓட்டம் போல இதைப் படிப்பதில் தப்பில்லையே! இது போன்ற கேள்விகள் கேட்பதை நினைத்தாலே பயம் வரும் என்றாலும், லார்ட் லபக்தாஸ் கேள்வியையாவது கேட்காமல் ‘மௌனமாக’ இருக்கலாமே!

கேள்விகளும் பதில்களும் – படிப்பவர்களின் சௌகரியத்திற்காக – ஆங்கிலத்தில், இதோ:-

MBH kamala

கேள்விகள் 1 & 2

What is universe and what is not-universe?

விடைகள்   I now turn to the question, which, O Gandharva, thou askest, viz., What is Universe and what is not-universe? The Universe is Unmanifest and original Prakriti endued with the principles of birth and death which are terrible (to those that are desirous of Emancipation). It is, besides, possessed of the three attributes (of Sattwa, Rajas, and Tamas), in consequence of its producing principles all of which are fraught with those attributes.  That which is Not-universe is Purusha divested of all attributes.

கேள்விகள் 3 & 4

What is Aswa and what Aswa?

விடைகள்  By Aswa and Aswa are meant the female and the male, i.e., the former is Prakriti and the latter is Purusha.

கேள்விகள் 5 & 6) What is Mitra? What is Varuna?

விடைகள்  Similarly, Mitra is Purusha, and Varuna is Prakriti.

கேள்விகள் 7 & 8) What is Knowledge? What is Object of knowledge?

விடைகள்  Knowledge, again, is said to be Prakriti, while the object to be known is called Purusha.

கேள்விகள் 9 & 10) What is Unintelligent? What is Intelligent?

விடைகள்  The Ignorant (Jiva), and the Knowing or Intelligent are both Purusha without attributes (for it is Purusha that becomes Jiva when invested with Ignorance).

MBH EPIc

சார்! நீங்க வெறும் தாஸா? லார்ட் லபக்தாஸா! -2

.நாகராஜன்

கேள்விகளும் பதில்களும் தொடர்கின்றன:-

கேள்விகள் 11) to 24)

Who is Kah? Who is possessed of the principle of change? Who is not possessed of the same? What is he that devours the Sun and what is the Sun? What is Vidya and what is Avidya? What is Immobile and what Mobile? What is without beginning, what is Indestructible, and what is Destructible?

விடைகள் Thou hast asked what is Kah, who is endued with change and who is unendued therewith. I answer, Kah is Purusha.  That which is endued with change is Prakriti. He that is not endued therewith is Purusha. Similarly, that which is called Avidya (the unknowable) is Prakriti; and that which is called Vidya is Purusha. Thou hast asked me about the Mobile and the Immobile. Listen to what my answer is. That which is mobile is Prakriti, which undergoing modification, constitutes the cause of Creation and Destruction. The Immobile is Purusha, for without himself undergoing modifications he assists at Creation and Destruction. (According to a different system of philosophy) that which is Vedya is Prakriti; while that which is Avedya is Purusha. Both Prakriti and Purusha are said to be unintelligent, stable, indestructible, unborn, and eternal, according to the conclusions arrived at by philosophers conversant with the topics included in the name of Adhyatma. In consequence of the indestructibility of Prakriti in the matter of Creation, Prakriti, which is unborn, is regarded as not subject to decay or destruction. Purusha, again, is indestructible and unchangeable, for change it has none. The attributes that reside in Prakriti are destructible, but not Prakriti herself. The learned, therefore, call Prakriti indestructible. Prakriti also, by undergoing modifications, operates as the cause of Creation. The created results appear and disappear, but not original Prakriti. Hence also is Prakriti called indestructible. Thus have I told thee conclusions of the Fourth Science based on the principles of ratiocinative inference and having Emancipation for its end. Having acquired by the science of ratiocinative inference and by waiting upon preceptors, the Rich, the Samans, and the Yajushes, all the obligatory practices should be observed and all the Vedas studied with reverence, O Viswavasu! O foremost of Gandharvas, they who study the Vedas with all their branches but who do not know the Supreme Soul from which all things take their birth and into which all things merge when destruction comes, and which is the one object whose knowledge the Vedas seek to inculcate, Indeed, they, who have no acquaintance with that which the Vedas seek to establish, study the Vedas to no purpose.

rajajai MBH

ப்ரக்ருதி, புருஷா இரண்டைப் பற்றிய விளக்கம் தான் இது.

பிறப்பில்லாதது ப்ரக்ருதி. ஆகவே அழியாதது. ஆனால் படைப்புக்குக் காரணம் ப்ரக்ருதி.. ஆகவே படைக்கப்பட்டவை அழியும் மாறும் மீண்டும் உருவாகும்! படைப்புக்கு உதவுவது புருஷா!

இரண்டும் அழிவற்றவை! படைப்பின் இரகசியம் எளிதாகச் சொல்லப்பட்டு விட்டாலும், அழியாக ப்ரக்ருதி, புருஷா தத்துவம் பற்றித் தெரிந்து கொள்ள அடிப்படை குருகுல அறிவு தேவை.

பல்வேறு சாஃப்ட்வேரை ப்ரக்ருதி தரும் புருஷா உதவியுடன். மென்பொருள்கள் மாறினாலும் அதைத் தரும் ப்ரக்ருதியும் புருஷாவும் மாறுவதில்லை.

படைப்புகள் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் படைப்பவன் மாற மாட்டான். சாஸ்வதம் தான்.

சற்று யோசித்தால் தான் கேள்விகளும் விடைகளுமே மனதில் ஏறும்.

மஹாபாரதத்தில் இந்த மாதிரி 8000 இடங்களில் விநாயகரே சற்று யோசித்த பின்னர் தான் வியாசர் சொன்னதைப் புரிந்து கொண்டார் என்றால் சாமான்யரான நாம் எவ்வளவு தவம் செய்ய வேண்டும் இப்படிப்பட்ட விஷயங்களைச் சரியாகப் புரிந்து கொள்ள?!

குறிப்பு: மஹாபாரதம் முழுவதையும் 1896ஆம் ஆண்டு K M கங்குலி அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். முழு மஹாபாரதத்தையும் இலவசமாக இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலே கண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் சாந்தி பர்வம் (ஆங்கில மொழிபெயர்ப்பு) 319ஆம் அத்தியாயத்திலிருந்து எடுத்து தரப்பட்டுள்ளது.

தமிழில் ம.வீ.ராமானுஜாசார்யாரால் பதிக்கப்பட்ட பதிப்பில் சாந்தி பர்வத்தில் 323ஆம் அத்தியாயத்தில் இந்த 24 கேள்விகளையும் விடைகளையும் காணலாம். சம்ஸ்கிருத பதங்கள் நிரம்பியு:ள்ள விடைகளை சம்ஸ்கிருதம் நன்கு அறிந்தவர்களே புரிந்து கொள்ள முடியும்.

**************