நெப்போலியனைக் கொன்றது எப்படி? (Post No.5456)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 22  September 2018

 

Time uploaded in London – 7-13 am (British Summer Time)

 

Post No. 5456

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

பிரிட்டிஷாருக்கு நெப்போலியன் என்றால் சிம்ம சொப்பனம். நெப்போலியன் பிரெஞ்சுப் பேரரசர். ஏறத்தாழ ஐரோப்பா முழுதையும் வென்றவர். ஆனால் ஒரு தோல்வி ஏற்பட்டவுடன் எல்பா (Elba island )தீவில் சிறை வைக்கப்பட்டார். பின்னர் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் ஏறிய போது பிரிட்டிஷ்- பிரஷ்ய சூழ்ச்சிக்கு இரையாகி, வாட்டர்லூ என்னுமிடத்தில் தோல்வியைத் தழுவினார். மாவீரனாகிய நெப்போலியன் யாரும் அணுகமுடியாத செய்ன்ட் ஹெலினா (St Helena) தீவில் சிறை வைக்கப்பட்டார். அவரை மெதுவாகக் கொல்லும் ஆர்ஸெனிக் உப்புகளைக் கொடுத்து பிரிரிட்டிஷார் கொன்று விட்டனர். நீண்ட காலத்துக்குப்பின்னர் அவர் சடலம் பாரீஸ் மாநகருக்குக் கொண்டுவரப்பட்டு (Hotel des Invalides in Paris) அடக்கம் செய்யப்பட்டது.

 

 

இதை எப்படி கண்டுபிடித்தனர்?

ஆர்ஸெனிக் (Arsenic) என்பது 118-க்கும் மேலான மூலகங்களில் ஒன்று. இது மனிதனுக்குத் தேவைதான். ஆனால் மிக, மிகக் குறைவாகவே தேவை. இது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டால் தலை முடியில் சேரும். இறந்த பின்னரும் ஒருவர் தலை மயிரை ஆராய்ந்து இதைக் கண்டு பிடித்துவிடலாம். நெப்போலியனின் சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட முடியை ஆராய்ந்ததில் இது அளவுக்கு அதிகமாக இருந்தது எல்லாப் பத்திரிக்கைகளிலும் வெளியானது.

 

ஆனால் ஒருவரின் தலை மயிரில் ஆர்ஸெனிக் மூலக உப்புகள் சேர வேறு சில வழிகளும் உண்டு. அந்தக் காலத்தில் சுவரில் ஒட்டும் வால் பேப்பர் (Wall Papers)களில் வர்ணம் உண்டாக்க ஆர்செனிக் பயன்படுத்தப்பட்டது. ஈரமான சூழ்நிலையில் இதன் மீது பூஞ்சக் காளான்(fungal gowth) வளர்ந்தால் அது ஆர்ஸெனிக் விஷத்தைக் காற்றில் கலக்கச் செய்யும். இது போல நெப்போலியன் இருந்த அறையிலும் சுவர்களில் பேப்பர் இருந்தது. திட்டமிட்டு நெப்போலியனை அந்த அறையில் அடைத்து சுவாஸிக்கச் செய்தனரா? அல்லது விதியின் வசமா? ஆண்டவனே அறிவான்.

வாரிசுப் பொடி மர்மம்!

 

கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் தலைமை குருவான போப்பாண்டவர்களில் பலர் மர்மமான முறையில் இறந்தனர். இது போல பல பிரபுக்கள், அரசர்களும் மேலை நாடுகளில் இறந்தனர் அல்லது கொல்லப்பட்டனர். இதற்கெல்லாம் காரணம் ஆர்ஸெனிக் உள்ள சில விஷ உப்புகளே. இதனால் இவைகளுக்கு ‘வாரிசுப் பொடி’ (Succession Powder) என்ற கெட்ட பெயர் ஏற்பட்டது. அதாவது அடுத்த வாரிசு யார் என்பதைத் தீர்மானிக்கும் கொலைகாரப் பொடியானது.

 

ஆனால் ஆர்ஸெனிக்குக்கு எவ்வளவு கெட்ட பெயர் உண்டோ அவ்வளவு நல்ல பெயர்களும் உண்டு. சிறிய அளவில் இது  உடலுக்குத் தேவை. இன்றும் சீன மருந்துகளில் வெகுவாகப் பயன்படுகிறது, குறிப்பிட்ட வகை ரத்த புற்று நோய்க்கு இதை மருந்தாகப் பயன்படுத்த அமெரிக்க உணவு மருந்து இலாகாவும் அனுமதிக்கிறது. ஒரு காலத்தில் இதற்கு ஸகல ரோக நிவாரணி (Cure all) என்ற பெயரும் உண்டு. காரணம் என்னவென்றால் இதை சர்க்கரை வியாதி, க்ஷய ரோகமெனப்படும் காச நோய், நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் கொடுத்தனர். காரணம் என்ன வென்றால் இதை மிக சொற்ப அளவில் உட்கொண்டால் ரத்தத்தில் சிவப்பு நிற செல்கள் (red Blood Corpuscles) பெருகி உத்வேகத்தைக் கொடுக்கும். இதை டாக்டர் பௌளர் என்பவர் கண்டு பிடித்ததால் அந்தக் காலத்தில் டாக்டர் பௌளர் திரவம் (Dr Fowlers Solution) மிகவும் பிரஸித்தம்.

 

 

பிரபல  ஆங்கிலக் கதாசிரியர் சார்ல்ஸ் டிக்கன்ஸ் முதலியோரும் சாப்பிட்ட டானிக் அது.

 

சில இடங்களில் பூமியில் ஆர்ஸெனிக் அதிகம். அப்படிப்பட்ட ஓரிடம் மேறு வங்கம். அங்கே நிலத்தடி நீரில் இது அதிகம் இருந்ததால் அரசாங்கம் க்ளோரிம் மாத்திரைகளைக் கொடுத்தது. இது தண்ணீரில் கலக்கும் போது ஆர்ஸெனிக் விஷ உப்புகள் கீழே கசடாகப் படிந்து விடும்.

 

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் 6000 குடிகாரர்கள் இந்த மூலகத்தால் பாதிக்கப்பட்டனர். பீயர் குடிகாரர்களில் 70 பேர் இறந்தனர். இப்பொழுதும் பெயிண்ட், (weed killers) களைக் கொல்லி திரவங்களில் இது பயன்படுகிறது.

ஆர்ஸெனிக் 5000 ஆண்டு வரலாறு உடைய மூலகம். ரோமானிய சக்ரவர்த்தி காலிகுலா (Roman Emperor Caligula) இதைப் பயன்படுத்தி தங்கம் எடுக்கும் திட்டத்தைத் துவக்கினார் என்றும் ஆனால் மிகவும் சொற்ப அளவில் தங்கம் கிடைத்ததால் லாபமில்லை என்று அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதாகவும் ரோமானிய எழுத்தர் ப்ளினி (Pliny) சொல்கிறார்.

 

ஆர்செனிக் என்பது உலோகவகை மூலகம். இதன் அணு எண் 33.

 

இயற்கையில் எரிமலை வாயு முதலியவற்றின் மூலம் இது காற்றில் கலக்கிறது. பந்தயக் குதிரைகளைப் பழக்குவோர் ஆர்ஸெனிக் கலந்த உணவை அவைகளுக்குக் கொடுப்பதால் அவை ‘சிட்’டாகப் பறந்தன. ஆல்ப்ஸ் மலையில் உள்ளோர் இதை தோலில் நல்ல நிறத்தை உண்டாக்கும் என்றும் மலை உயரத்தில் வேலை செய்ய சக்தி கொடுக்கும் என்றும் நம்பினர். உடலில் 100 மில்லிகிராம் ஆர்ஸெனிக் இருந்தால் விஷம் என்று கருதப்படும் . ஆனால் ஆல்ப்ஸ் மலைவாசிகள் வாரத்துக்கு இரு முறை 250 மில்லிகிராம் சேர்த்தனர். இதை முதலில் விஞ்ஞானிகள் நம்பவில்லை. பின்னர் ஆராய்ச்சியாளர் முன்னிலையில் ஒரு குடியானவர் 400 மில்லி கிராம் ஆர்செனிக் உண்டும் பாதிக்கப்படாமல் இருந்ததைக் காட்டியவுடன் விஞ்ஞானிகள் கதையை மாற்றி எழுதினர்.

 

 

இந்தியாவில் கிராமப் புறங்களில் ஒரு சொல் உண்டு. தேள் விஷத்தையோ பாம்பு விஷத்தையோ உடலில் சிறுகச் சிறுக ஏற்றினால் , பின்னர் பாம்பு கடித்தாலும் அவரை பாதிக்காது என்று.

 

இதை ருசுப்பிக்கும் வகையில் மேலும் ஒரு செய்தி. ஆர்ஸெனிக் சாப்பிட்டு பழக்கப்பட்டவர்களை அது அதிகம் பாதிப்பத்தில்லை. தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டு கிராம மக்கள் 600 மில்லிகிராம் ஆர்ஸெனிக் சாப்பிட்டும் அது தொடர்பான விளைவுகள் எதுவுமின்றி சுகமாக வசிக்கின்றனர்!

 

படம்- நெப்போலியன் அடக்கம் செய்யப்பட்ட இடம், பாரீஸ்

ஆர்செனிக் அதிகம் உள்ள நிலங்களில் ஒரு வகை சீன தாவரத்தை வளர்த்தால் அவை ஆர்ஸெனிக்கை உறிஞ்சி அந்த நிலத்தைப் பாதுகாப்பானதாகச் செய்து விடும் என்பதும் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

 

வாழ்க வாரிசுப் பொடி!

 

–சுபம் —

 

பாரதி 97!- PART 1 (post No.5406)

WRITTEN BY S NAGARAJAN

Date: 9 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-23 AM (British Summer Time)

 

Post No. 5406

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

 

மஹாகவிக்கு அஞ்சலி

பாரதி 97!- PART 1

 

ச.நாகராஜன்

 

மஹாகவி பாரதி அமராரான நாள் செப்டம்பர் 11. 1921 ஆம் ஆண்டு அவர் மறைந்தார். 97 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.அவரது சிறப்பியல்புகள் எத்தனையோ. அவற்றில் 97ஐ இங்கு காண்போம். அவருக்கு நமது சிரம் தாழ்ந்த அஞ்சலியைச் செலுத்துவோம். தேச பக்தியிலும் தெய்வ பக்தியிலும் சிறந்துயர்வோம்.

 

 

  1. சிறந்த சம்ஸ்கிருத விற்பன்னர்

1898 ஜூன் மாதம். பாரதியார் காசிக்குப் பயணமானார். அங்கே ஹிந்து கலாசாலையில் சேர்ந்தார். ஸம்ஸ்கிருதத்தில் நல்ல புலமையைப் பெற்றார்.அத்துடன்  ஹிந்தி பாஷையிலும் தேர்ந்தார்.

  1. பல்மொழி அறிந்தவர்

பாரதியார் இயல்பாகவே பல மொழிகளை அறிந்து கொண்டவர். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.புதுவை வாழ்க்கையில் பிரெஞ்சு மொழியையும் வங்காள மொழியையும் அறிந்து கொண்டார். சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம் என்பதால் அவர் தெலுங்கு மொழியும் அறிந்தவரே. யாம் அறிந்த மொழிகளிலே’ என்ற அவரது பாடல் குறிப்பின் மூலமாக அவரது பன்மொழி அறிவைத் தெரிந்து கொள்ளலாம்.

 

  1. பள்ளி ஆசிரியர்

1903ஆம் ஆண்டு பாரதியார் ஆசிரியத் தொழிலை மேற்கொண்டார்.மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக மூன்று மாதம் பணி புரிந்தார்.

  1. சிறந்த பத்திரிகாசிரியர்

இந்தியா உள்ளிட்ட பல இதழ்களின் ஆசிரியராகத் திகழ்ந்ததோடு தேசபக்தி உணர்வூட்டும் பல கட்டுரைகளை வெளியிட்டு வந்தார்.

  1. சிறந்த பதிப்பாளர்

பல நூல்களை வெளியிட்டவர். மிகத் தரமான முறையில் குறைந்த விலையில் தன் கவிதை நூல்களை வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் அவருக்குண்டு.

  1. கார்ட்டூனை அறிமுகப்படுத்தியவர்

இந்தியா இதழில் கார்ட்டுனை அறிமுகப்படுத்தி சிறந்த கருத்துக்களை சித்திரம் மூலம் வெளிப்படுத்தியவர்

7.சிறந்த கவிஞர்

பல நூறு பாடல்களை இயற்றியவர். இந்தப் பாடல்கள் சாகா வரம் பெற்றவை.

 

  1. சிறந்த கணவர்

தன் மனைவி செல்லம்மாவை உயிரினும் மேலாக நேசித்தார். சம உரிமை தந்து கை கோர்த்து தெரு வீதியில் அந்தக் காலத்திலும் சென்று புதுமை படைத்தார்.

  1. சிறந்த தகப்பன்

தன் குழந்தைகளை உயிரினும் மேலாக நேசித்தார். அவர்களுக்கு அன்பைக் குழைத்து அறிவைத் தந்தார். அவரைப் பற்றி அவரது குடும்பத்தினர் எழுதிய நூல்களில் அவரது அன்பைக் காட்டும் பல சம்பவங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

  1. சிறந்த கதாசிரியர்

ஞான ரதம் உள்ளிட்ட ஏராளமான படைப்புகள் அவர் சிறந்த கதாசிரியர் என்பதை உணர்த்தும்.

  1. சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்.

மகாகவியின் எழுத்துக்களில் ஆங்காங்கே நகைச்சுவை கொப்பளிக்கும்.சின்னச் சங்கரன் கதை நல்ல நகைச்சுவை கதையாக மிளிர்ந்தது.

  1. சிறந்த புதுக் கவிதை இயற்றிய புதுமையாளர்

வசன கவிதைகள் பலவற்றை இயற்றிய புதுமையாளர். காட்சி, புகழ் உள்ளிட்டவை இவரது வசன கவிதை  படைப்புகளை இனம் காட்டுபவையாகும்.

13.சிறந்த சொற்பொழிவாளர்

ஏராளமான மேடைகளில் அனல் பறக்கும் தேசிய உணர்வூட்டும் சொற்பொழிவுகளை ஆற்றியவர். ஆன்மீகச் சொற்பொழிவுகளையும் ஆற்றியவர்;

  1. சிறந்த மேலை இலக்கிய விற்பன்னர்.

ஷெல்லியின் பாடல்களில் தோய்ந்தவர். ஷெல்லி தாசன் எனப் புனைப்பெயரையே கொண்டார்.ஆங்கிலக் கவிஞன் பைரன், வால்ட் விட்மன் உள்ளிட்ட ஏராளமானோரின் கவிதைகளைப் படித்து உணர்ந்து அனுபவித்தவர்.

 

  1. மஹாத்மாவை இனம் கண்டவர்

மஹாத்மா காந்தி பஞ்சகத்தை இயற்றி இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு பாழ்பட்டு நின்ற பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த மஹாத்மா என்று போற்றினார். மஹாத்மாவை சென்னையில் சந்தித்து அவரது தலைமைக்கும் இயக்கத்திற்கும் ஆசி கூறினார்.

  1. திலகரைப் போற்றியவர்

திலகரிம் பக்தியும் ஈடுபாடும் கொண்டவர். வாழ்க திலகன் நாமம் பால கங்காதர திலகர் ஆகிய பாடல்களைப் பாடி அவரைப் போற்றியவர்.

  1. தேசபக்தர்களைப் போற்றியவர்

தாதாபாய் நௌரோஜி, லாலா லஜ்பத்ராய் உள்ளிட்ட பெரும் தலைவர்களைப் போற்றியவர்.

18.வ.உ.சிக்கு நெருக்கமானவர்

‘வ.உ.சி.க்கு வாழ்த்து’ பாடியவர். அவருடன் நெருங்கிப் பழகியவர்.

 

19.நிவேதிதாவைக் குருவாகக் கொண்டவர்

விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவியை 1906ஆம் ஆண்டு நடந்த கல்கத்தா காங்கிரஸில் கலந்து கொண்டு திரும்பும் போது சந்தித்து உபதேசம் பெற்றவர். நிவேதிதா தேவி துதி இயற்றிப் போற்றியவர். தனது இரு நூல்களை அவருக்கு சமர்ப்பணம் செய்தவர்.

  1. அரவிந்தருடன் நெருங்கிப் பழகியவர்

அரவிந்தரின் நட்பு புதுவையில் ஏற்பட்டது. அவருடன் அடிக்கடி அளவளாவி பல கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டவர். வேதத்தை அரவிந்தரிடம் கற்றார். அரவிந்தரும் பாரதியாரும் பரஸ்பரம் கொண்டிருந்த அன்பும் மதிப்பும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.

  1. தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தியவர்

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்று பாடியவர். சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்ய வேண்டும் என அறிவுரை பகன்றவர். தமிழைப் புதிய சிகரத்தில் ஏற்றியவர்.

22.சிறந்த இசை விற்பன்னர்

பல பாடல்களை – கிருதிகளை – தாளம், ராகத்தோடு இயற்றியவர். அவற்றை பலருக்கும் சொல்லித் தந்தவர். தமிழில் உள்ள இசைப் பாடல்களையும் கச்சேரிகளில் பாடுதல் வேண்டும் என முதன்முதலில் முழக்கம் இட்டவர்.

  1. சிறந்த பாடகர்

கணீரென்ற குரலில் தனது பாடல்களை ஆவேசத்தோடு அவர் பாடியதை ஆயிரக்கணக்கான மக்கள் கேட்டு மெய் சிலிர்ப்பது வழக்கம்.

  1. தேவார திவ்ய பிரபந்த விற்பன்னர்

தேவாரத்திலும் திவ்ய பிரபந்தத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அவற்றை அடியொற்றிய பாடல்களையும் இயற்றியவர்.

  1. சங்க இலக்கிய விற்பன்னர்

சங்க இலக்கியங்களைக் கற்றவர். இளங்கோ மீது ஈடுபாடு கொண்டவர். திருக்குறளைப் போற்றியவர்.

 

  1. கம்பனில் ஈடுபாடு கொண்டவர்

எல்லையற்ற தன்மையைக் கொண்டவர் என கம்பனைப் போற்றியவர்.கம்பன் பிறந்த தமிழ்நாடு என கம்பனையும் தமிழ் நாட்டையும் உச்சியில் ஏற்றிப் பாராட்டியவர்

  1. வேதம் புகழ்ந்தவர்

வேதம் உடையது இந்நாடு என வேதத்தைப் பெருமையாகப் பறை சாற்றிய ‘வேத அறிஞர்’ பாரதியார்.  ஏராளமான வேதக் கருத்துக்களை தன் கவிதைகளிலும்,கட்டுரைகளிலும் எடுத்துக் காட்டியவர். அரவிந்தருடன் வேத ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்.

27.ரஷிய புரட்சியை வரவேற்றவர்.

ஜார் மன்னன் வீழ, ஆஹா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி என ரஷிய புரட்சியை அழியாத கவிதை மூலம் பாராட்டியவர்.

இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்து விட்டான் ஜாரரசன் என்று பாடினார்.

28.பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து பாடியவர்

முதல் உலக மகா யுத்தத்தில் ஜெர்மனி பெல்ஜியத்தின் மீது படையெடுத்து அங்கிருந்த சுதந்திர அரசை வீழ்த்தியபோது திறத்தினால் எளியை ஆகிச் செய்கையால் உயர்ந்து நின்றதாக பெல்ஜியத்தைப் பாராட்டினார். துயருண்டோ துணிவுள்ளோர்க்கே என்று தன் கவிதையை முடித்தார்.

29.பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள் படும் பாட்டைக் கண்டு வருந்தியவர்

கரும்புத் தோட்டத்திலே ஹிந்து மாதர் படும் துன்பம் தீர ஒரு மருந்திலையோ என வேதனைப் பட்டார். எங்கு ஹிந்துக்கள் துன்பப்பட்டாலும் தனது வேதனைக் குரலை வெளியிட்டார்.

 

Hindu temple in Fiji

  1. உலக நிகழ்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்தவர்

தனது பத்திரிகை வாயிலாக அறத்தினால் நிமிர்ந்து நிற்கும் அரசுகளுக்கு ஆதரவு தந்தார். புரட்சியை வரவேற்றார். மறத்தினால் ஆளும் ஆட்சிகளை – பிரிட்டிஷ் ஆட்சி உட்பட அனைத்தையும் கண்டித்தார்.

  1. தீர்க்கதரிசி

ஆடுவோமே, பள்ளுப்பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று என்று தீர்க்கதரிசன வாக்குக் கூறியவர்.

  1. வெள்ளையரை விரட்ட குரல் கொடுத்தவர்

வெள்ளைப் பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே என்று வெள்ளையரை இகழ்ந்து சுதந்திரத்திற்காக வெகு ஜன எழுச்சியைத் தன் பாட்டாலும் செயலாலும் சொற்பொழிவாலும் ஏற்படுத்தியவர். பாரத தேசம் பெற்ற சிறந்த தவப்புதல்வர்.

அடுத்த இரு கட்டுரைகளுடன் இந்தத் தொடர் முடியும்.

 

குறிப்பு: மேலே கண்ட சிறப்புக்களை விளக்கும் விதத்தில் ஏராளமான பாடல்களையும் கட்டுரைகளையும் பாரதியார் படைத்துள்ளார்.பல அரிய சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன.

பாபர் ஆட்சியில் பசுவின் கால் சடங்கு!! (Post No.5346)

WRITTEN by London swaminathan

Date: 21 August 2018

 

Time uploaded in London – 6-54 AM (British Summer Time)

 

Post No. 5346

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

மொகலாய மன்னர்களில் பாபர் (1483-1530) முதலாமவர். அவர் காலத்தில் துருக்கி இனத்தவர்கள் பழைய கால பழக்க வழக்ககங்களை அப்படியே பின்பற்றி வந்தனர். அவை எல்லாம் இஸ்லாமிய மதம் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்னமே இருந்தவை. பாபர், முஸ்லீமாக இருந்த போதும் அந்த வழக்கங்களைப் பின்பற்றியது அவர் பற்றிய பாபர் நாமா புஸ்தகத்தில் உள்ளது.

 

பாபர் தனது சுயசரிதையை அவரது சாகதாய் மொழியில் எழுதினார். அவர்  தைமூரின் கொள்ளுப்பேரன். அக்பரின் தாத்தா. இதனால் அக்பர் காலத்தில் பாபர் நாமாவை ஓவியமாக வரைந்து தர அக்பர் ஆணையிட்டார். அவை இப்பொழுது டில்லியில் தேசீய மியூஸியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் இந்துக்களின் புனித தெய்வமான பசுவைப் பற்றிய ஒரு அதிசயப் படம் உள்ளது. துருக்கி-இராக் பகுதிகள், வேத கால அரசர்களின் கீழ் இருந்ததால் இந்த வழக்கம் வேத கால வழக்கமாகவும் இருக்கலாம். கி.மு 1400 வாக்கில் துருக்கி வரை இந்துக்களின் ஆட்சி பரவி இருந்தது.

 

 

பாபர் நாமாவில் நாலாவது படத்திலுள்ள காட்சி இதோ:

 

“மன்னர் குதிரையிலிருந்து இறங்கினார். அவருக்கு முன்னால் ஒன்பது அலங்காரச் சின்னங்கள் இருந்தன. ஒரு மொகலாய வீரன் பசுவின் காலில் ஒரு வெள்ளைத் துணியைக் கட்டி அதன் மறு முனையை தன் கையில் பிடித்திருந்தான். மேலும் மூன்று வெள்ளைத் துணிகள் ஒன்பது அலங்காரக் கம்பங்களில் மூன்றில் கட்டப்பட்டன. அவைகளில் ஒரு வெள்ளைத் துணியின் மீது பாபர் நின்றார். அப்பொழுது பசுவில் கால் துணியைப் பிடித்திருந்தவன், ஏதோ சில உச்சாடனங்களை அவனது பாஷையில் மொழிந்தான். அப்பொழுது அவன் அந்த ஒன்பது அலங்காரக் கம்பங்களைப் பார்த்து ஏதோ முத்திரைகளைக் காட்டினான். மன்னனும் மற்ற பெரியோர்களும் குதிரையின் பாலை அந்தச் சின்னங்கள் மீது ப்ரோக்ஷனம் செய்தனர் (தெளித்தனர்). உடனே பின்னால் நின்ற படை வீரர்கள் போர்க்கால வெற்றி முழக்கமிட்டனர். இதை அவர்கள் மூன்று முறை செய்தார்கள். அப்பொழுது வாத்தியக் காரர்கள் முரசுகளை அடித்து எக்காளமிட்டனர். இந்த வாத்ய கோஷத்துக்குப் பின்னர் அவர்கள் மீண்டும் கோஷமிட்டவாறே அந்தச் சின்னங்களைச் சுற்றி ஓடி வந்தார்கள்.”

இந்த சடங்கு புதிய மன்னர்களை வரவேற்று அங்கீகாரம் அளிக்கும் சடங்கு ஆகும்.

இந்த வழக்கம் செங்கிஸ்கான் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டதற்கான சான்று உளது.

 

எவ்வாறு கிறிஸ்தவ மதம் பரவிய நாடுகளில் எல்லாம் பழங்கால வழக்கங்கள் அந்த மதத்தில் இணக்கப்பட்டனவோ அவ்வாறே இன்றும் இஸ்லாமிய நாடுகளில் குறிப்பாக வேத கால மன்னர் ஆட்சி நடந்த துருக்கி-இராக்-ஈரான் பகுதிகளில் உள்ளன. முஸ்லீம் மதத் தலைவர்கள் கண்டிப்பதனால் மறைவாக அவைகளைச் செய்கின்றனர். அவை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன.

கிருஷ்ணனின் யாதவ குலத்தில் 12-ஆவது மன்னனான கஜன் என்ற மன்னன் ஸ்தாபித்த நகர்தான் ஆப்கனிஸ்தானத்திலுள்ள கஜினி. அங்கிருந்து முகமது என்ற மன்னன் குஜராத் மீது 17 முறை படையெடுத்து சோமநாத சிவலிங்கத்தை உடைத்து அதன் கீழேயிருந்த தங்கம் வைரம் எல்லாவற்றையும் கொள்ளை அடித்ததை நாம் அறிவோம். அந்த கஜினி நகரம் யாதவ குல மன்னர்களின் கீழ் 101 தலைமுறைக்கு மேல் இருந்தது. அதன் 74ஆவது மன்னன் கஜ சிங். அவனது காலத்தில் அவர்கள் கஜினியிலிருந்து வெளியேற்றப்பட்டு ஹிமாசலப் பிரதேசத்திலுள்ள ஜ்வாலாமுகிக்கு வந்தனர். அதில் ஒருவன் சாலிவாஹனன் என்ற மன்னன். அவன் சாலிவாஹனபுரத்தை ஸ்தாபித்தான். அதன் பெயர் சாலாபுரம் என்றும் சியால் கோட் என்றும் மருவின; இப்பொழுது சால்கோட் (டை) பாகிஸ்தானில் உள்ளது. சாலிவாஹனனனுக்கு பத்து மகன்கள். அவர்களில் ஒருவன் பட்டி.  அந்த பட்டி என்போன் மீண்டும் கஜினியை வென்று 101 தலைமுறை ஆட்சியைக் கொண்டாட ஹரோத் என்னுமிடத்தில் ஒரு கோட்டையைக் கட்டினான்.

 

எவ்வாறு புத்த மதத்தினர், இலங்கையிலுள்ள ராமாயண சின்னங்களை மறைத்தனரோ அவ்வாறே முஸ்லீம்கள் ஆட்சி ஏற்பட்ட ஈரான் முதல்- இந்தோநேஷியா வரை இந்துச் சின்னங்கள் மறைக்கப்பட்டுள்ளன. அவை அந்த நாடுகளின் மியூஸியங்களில் இன்றும் உள. அவைகளை அறவே ஒழித்தால் அந்த நாடுகளின் வரலாறு எல்லாம் முகமது நபிக்குப் பின்னர் என்று ஆகிவிடுமே என்று அஞ்சி, இன்னும் மியூஸியங்களில் பழம்பொருட்களை வைத்துள்ளனர். பாமியன் புத்தர் சிலைகளையும் இராக்கில் உள்ள புனிதச் சின்னங்களையும் சமீப காலங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகள் அழித்ததை நாம் பத்திரிக்கைகளில் படித்தோம். எஞ்சியுள்ளவைகளை விரைவில் புகைப்படம் எடுத்து அவற்றின் வரலாற்றை எழுதுவது இந்துக்களின் கடமை.

 

-சுபம்–

ரிக்வேத ஆராய்ச்சியில் கிடைத்த ஒன்பது விஷயங்கள்! (Post No.5342)

Research Article by London swaminathan

Date: 20 August 2018

 

Time uploaded in London – 7-44 AM (British Summer Time)

 

Post No. 5342

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

கடந்த 150 ஆண்டுகளாக வேதங்கள் பற்றி வெளியான புஸ்தகங்கள் எண்ணிலடங்கா. அவை பெரும்பாலும் ஆங்கிலம், ஹிந்தி மொழியிலோ ஜெர்மானிய பிரெஞ்சு மொழிகளிலோ இருக்கின்றன. கடல் போலப் பெருகிக் கிடக்கின்றன. தமிழில் இத்தகைய ஆராய்ச்சிப் புத்தகங்கள் மிகக் குறைவு; வேத மந்திரங்களின் மொழி பெயர்ப்பு மட்டுமே ஆர். ஜம்புநாதன் முதலியோரால் வெளியிடப் பட்டுள்ளன. ஆனால் அதை ஆராயாமல் அப்படியே மந்திர மொழி பெயர்ப்பையே கொடுத்துள்ளனர். நான் இது வரை படித்த புத்தகங்களில் கண்ட ஒன்பது சுவையான செய்திகளைத் தருகிறேன்.

 

1.மன்னர்களின் தம்பிமார்களில் ஓரிருவர் பிராஹ்மண ரிஷிகளாக மாறி , ரிஷி வம்ஸத்தை ஸ்தாபித்தனர் என்று

புருஷோத்தம் லால் பார்கவா எழுதிய நூலில் சொல்கிறார்:

!

தமிழிலும் இதற்கு உதாரணம் உண்டு; சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோ, துறவியாக மாறி, நமக்கு சிலப்பதிகாரத்தைத் தந்துள்ளார்.

2.அடுத்த சுவையான செய்தி ஈரானிலும் சுமேரியாவிலும் பல வேதகாலப் பெயர்கள் காணப்படுவதாகும். ஸுமுகன் என்ற ஒரு கெட்ட மன்னனின் பெயர் இரண்டே இடங்களில்தான் காணப்படுகின்றது. தீய செயல்களினால் அரசாட்சியை இழந்த மன்னர் பட்டியலில் சுமுகன் என்றொரு மன்னனின் பெயரைச் சொல்கிறார் மநு. இது விநாயகர் முதலிய பல கடவுள்களைக் குறிப்பிடும் நாமம். ஆனால் புராதன இந்தியாவில் இப்படி ஒரு மன்னன் பெயர் கிடையாது! சுமேரியாவில் மட்டும் இந்தப் பெயர் காணப்படுகிறது!

 

பழங்காலத்தில் பெண் கொலை புரிந்த நன்னன் என்ற தமிழ் மன்னனைப் போற்றிப்பாட எல்லா சங்கப் புலவர்களும் மறுத்துவிட்டனர். அது போல சுமுகனையும் கிடப்பில் போட்டுவிட்டனர் ஸம்ஸ்க்ருதப் புலவர்கள்.

 

3.மற்றொரு மர்மமான பெயர் நாபாகநேதிஷ்டா. இந்தப் பெயரே ஒரு விநோதமான பெயர். ஸம்ஸ்க்ருத அர்த்தப்படி ‘மநுவுக்கு அடுத்தவன்’ என்பது பொருள். இவன் ஒரு மநுவின் புதல்வன். முறை தவறிய செயல்களில் ஈடுபட்டதால் இவனுக்கு மநுவும் நாபாகனின் சஹோதர்களும் சொத்து விஷயத்தில் பங்கு தர மறுத்து விட்டார்களாம். அந்தக் காலத்திலேயே இப்படி ஒரு குடும்பத் தகராறு!! இந்தப் பெயர் சுமேரிய,அஸீரியப் பெயர்களுடன் தொடர்புடையது. இவனைப் பற்றிய குறிப்புகள் ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் வருகிறது.

அக்நேதன் (Akhenaten of Egypt) போன்று நாபாகநேதிஷ்டானும் சமயப் புரட்சி செய்திருக்கலாம். ஏனெனில் இது போல எகிப்தில் அக்நதனும் (ஏக நாதன்) சுமேரியாவில் ஒரு மன்னனும் புரட்சி செய்தவுடன் அவர்கள் பதவி பறிபோனது அது போல நாபாக நேதிஷ்டன், சுமுகன் போன்றோரும் சமயப் புரட்சி செய்தனரா என்று ஆராய வேண்டும்.

 

4.ரிக் வேதத்தின் எட்டாவது மண்டலம் புதிர்கள் நிறைந்தது. இதில் வரும் பலபூதன் என்ற மன்னன் பிராஹ்மணர்களுக்கு பசுக்களோடு ஒட்டகங்களையும் தானம் செய்தான். இவன் ஈரான் பகுதியைச் சேர்ந்தவன். ரிக்வேதப் பாடல்கள் ஈரான், ஆப்கனிஸ்தான், துருக்கி, தற்போதைய பாகிஸ்தான், இந்தியாவில் விதர்ப தேசம்- கங்கைச் சம்வெளி, மங்கோலிய வம்ஸத்தினர் வசிக்கும் திபெத், சீனா வரையுள்ள விஷயங்களை விவாதிக்கிறது. இது மிகப்பெரிய பகுதி. இவ்வளவு பெரிய பகுதியை உலகில் வேறு எந்தப் பழைய நூலும் பிரஸ்தாபிக்கவில்லை!!!

 

  1. வேதத்தில் வரும் ‘தாஸ’, ‘அநாஸ’ ஆகிய சொற்களுக்கு வெளிநாட்டினர் தவறான பொருள் கொடுத்து, ஆரிய-திராவிடர் என்று பிரித்துப் பொய் சொன்னதால், சிந்துவெளி எழுத்தைப் படிக்க முடியவில்லை. தாசர் என்றால் அடிமை போல வேலை செய்வோர். இது கிரேக்க சாம்ராஜ்யத்தில் உண்டு. பெரிய புராணத்தில் சுந்தர மூர்த்தி நாயனார் சரிதத்தில் உண்டு. இதற்கும் ஆரிய- திராவிட என்ற பிரசாரத்துக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை. இதே போல ‘அநாஸ்’ என்றால் மூக்கு அற்றவர் என்று பொருள். ஜப்பானியர், சீனர் போன்ற மங்கோலிய இன மக்களுக்கு மூக்கு சப்பையாக இருக்கும்; மூக்கு இருப்பதாகவே தோன்றாது ஆகையல் இதை அநாஸ ( மூக்கு அற்றவர்) என்று வேதங்கள் சொல்லும். ஒரு பக்கம் திராவிடர்களுக்கு போண்டா மூக்கு என்று எழுதிய வெள்ளைக்கார்கள் ‘மூக்கற்ற’ என்ற சொல்லையும் திராவிடர் மேல் ஏற்றிவிட்டனர்.

 

  1. மற்றொரு அதிசயம் துருக்கி நாட்டில் கி.மு 1380-ஆம் ஆண்டு மிட்டனி நாகரீக(Mitanni Civilization) களிமன் கல்வெட்டில் வேத காலப் பெயர்கள் சம்ஸ்க்ருதத்தில் இருப்பதாகும்! வேத கால மன்னர்களின் பெயரில் உள்ள ‘பிரதர்தன’ என்ற மன்னர் பெயர் மிட்டனி மன்னர்களின் பட்டியலில் உளது. நாம் தினமும் படிக்கும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலும் ரிக் வேதத்திலும் உளது.

 

7.ரிக் வேதத்தில் ‘சிந்துத்வீப’ என்பது ஒரு ரிஷி/மன்னரின் பெயர். இந்த மாதிரி பெயர் மஹா பாரதத்திலும் வருகிறது. சிந்து தேச ராஜா ஜெயத்ரதன் பற்றி மஹாபாரதத்திலும் காணலாம். ஆக, வேத காலத்தில் இருந்த மன்னர்களின் பெயர்களை பிற்காலத்தவரும் பயன்படுத்தினர். இது ரிக்வேத- சிந்து சமவெளி நாகரீகத்தை உறுதிப் படுத்திகிறது.

8.ரிக் வேதத்தில் பல்வேறு வம்ஸாவளியைச் சேர்ந்த 160 மன்னர்களின் பெயர்கள் உளது. எனது ஆங்கிலக் கட்டுரையில் அனைவர் பெயரும் உள. இவர்களுக்கு வெள்ளைக்காரர் போல 20 ஆட்சி ஆண்டு வீதம் கொடுத்தால் 3000 ஆண்டுகளைக் கடந்து விடும்; ஆனால் ஒரே நேரத்தில் பல தேசங்களில் பல மன்னர்கள் ஆண்டிருக்கலாம். ஆக 500 முதல் 1000

ஆண்டுக் கால வரலாறு இது!

9.மீனவ மன்னன் , துமுசி, சம்மட போன்ற சுமேரியப் பெயர்கள், வெள்ளம் பற்றிய அதர்வன வேதக் குறிப்பு ஆகியனவும் ஒப்புநோக்கதக்கது.

–SUBHAM–

 

மனைவியின் நச்சரிப்பு! மார்க் ட்வைனின் குசும்பு! (Post No.5338)

Written by lonon swaminathan

Date: 19 August 2018

 

Time uploaded in London – 6-54 AM  (British Summer Time)

 

Post No. 5337

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

contact swami_48@yahoo.com

 

மார்க் ட்வைன் (Mark Twain) என்ற புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் எங்கு சென்றாலும், சரியான உடைகளை அணிந்து செல்ல மாட்டார்; இது அவரது மனைவிக்குப் பிடிக்காது.

 

‘வைர நெக்லஸ் வாங்கித் தா’, ‘மாங்கா மாலை பண்ணிப் போடு’, ‘கழுத்துக்கு காசு மாலை வேண்டும்’ என்றெல்லாம் கேட்கவில்லை; ஆனால் ஒழுங்காக ஆடை அணிந்து வாருங்கள் என்பார்.

 

“என்னாங்க, உங்களைத்தான், கல்யாணத்துக்கும் விருந்துக்கும் போகும்போது நல்ல கழுத்தில் காலரோடு நல்ல ‘டை’ ( Tie) கட்டிக் கொண்டு வரக்கூடாதா?” என்பார்.

 

மார்க் ட்வைனும் சளைக்காமல், “ம்ம் அடுத்த முறை பார்போம்” என்று புறப்பட்டு விடுவார்.

 

ஒருமுறை அடுத்த தெருவில் ஒரு  வீட்டில் பெரிய விருந்து நடந்தது.

 

ட்வைனின் மனைவியும் ஏற்கனவே பாடிய வழக்கமான பல்லவியைப் பாடினார்.

அவரும் ஆகட்டும் பார்க்கலாம் பதிலையே தந்தார்.

அடுத்த வீட்டு விருந்திலோ பல பிரமுகர்கள் வந்திருந்தனர். நல்ல கூட்டம்.

 

இருவரும் விருந்து முடிந்து வீடு  திரும்பினர். “நான் சொன்னேனே!” என்று ட்வைனைக் குத்திக் காட்டினார் மனைவி. உடனே ட்வைன்

 

“ஹலோ மை டார்ல்லிங், ஒரு நல்ல (Tie) டை எடுத்துவா என்றார். அவரும் அட, இனிமேல் போட்டுக்கொள்ள தயார் செய்கிறார் என்று எண்ணி ஆவலோடு கொண்டு வந்தார். அதை அழகாக ஒரு பெட்டிக்குள் வைத்து ஒரு கடிதமும் எழுதி வைத்தார்.

 

“அன்புடையீர்,

நானும் என் மனைவியும் சற்று நேரத்துக்கு முன்னர் உங்கள் வீட்டுத் தேநீர் விருந்துக்கு வந்திருந்தாம். அரை மணி நேரம் உங்களுடன் அமர்ந்திருந்தோம். நான் Tie டை கட்டிக்கொண்டு வரவில்லை. ஆகையால் இதை அரை மணி நேரம் உங்கள் வீட்டில் வைத்திருந்து விட்டு பத்திரமாகக் கொடுத்தனுப்பவும்”.

 

இப்படி எழுதிய கடிதத்துடன் அந்தப் பெட்டி சென்றது!

 

யார் இந்த மார்க் ட்வைன் ?

 

மார்க் ட்வைனின் வாழ்க்கையே சுவையானதுதான். அவருடைய உண்மைப் பெயர் சாமுவேல் லெக்ஹார்ன் க்ளெமன்ஸ் (Samuel Leghorne Clemens).

 

பிறந்த தேதி – 30 நவம்பர் 1835

 

இறந்த தேதி – 21 ஏப்ரல் 1910

 

இறந்தபோது வயது – 74

 

Publications
1867 The Celebrated Jumping Frog of Calaveras County and Other Sketches
1869 The Innocents Abroad
1872 Roughing It
1876 The Adventures of Tom Sawyer
1881 The Prince and The Pauper
1884 The Adventures of Huckleberry Finn
1894 Pudd’nhead Wilson A Tale

 

அமெரிக்காவின் நகைச் சுவை எழுத்தாளர்களில் பெயர் பெற்றவர். அவர் படைத்த டாம் சாயர், ஹக்கிள்பெரி பின் அகிய இருவரையும் அறியாதோர் இல்லை.

 

அமெரிக்காவில் ப்ளோரிடா (Florida) வில் பிறந்தார்; அவருடைய பெற்றோர்கள் ஈன்ற ஆறு குழந்தைகளில் இவர் ஐந்தாமவர். தந்தைக்கோ உடல்நலக் குறைவு; குடும்பமோ ஏழ்மையில் வாடும் குடும்பம். 1839ல் வேகமாக வளர்ந்து வரும் ஹான்னிபால் ஏன்ற நகருக்குக் குடிபோனார்கள் அங்கேதான் ட்வைனும் பள்ளிக்கூடம் சென்றார்.

 

ட்வைனுக்கு 12 வயதானபோது அவருடைய தந்தை காலமானார். இதனால் ட்வைன் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போனார்.

 

22 வயதில் மிஸிஸிபி (Missisipi) நதியில் படகோட்டி ஆனார். அங்கே நாள்தோறும் சென்ற 1000 படகுகளில் இவரது படகும் ஒன்று. ஆயிரத்தில் ஒருவன்! நாலு ஆண்டுகள் உருண்டோடின; அமெரிக்காவில் உள்நாட்டு யுத்தம் (American Civil War) வெடித்தது. இதனால் படகுப் போக்குவரத்து நின்றது.

 

1862ல் பத்ரிக்கை நிருபர் ஆனார். அபோது முதல் மார்க் ட்வைன் (Mark Twain) என்ற பெயரில் எழுதத் துவங்கினார். கதையும் எழுதினார். 32 வயதில் முதல் கதை அச்சானது. 34வயதில் எழுதிய இன்னோசென்ட்  அப்ராட் (Innocents Abroad) என்ற நாவல் புகழை ஈட்டியது

 

1870ல் ஒலிவியா லாங்டன் (Olivia Langdon) என்ற பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. இதன் பின்னர் ‘டாம் சாயரின் வீரதீரச் செயல்கள்’, ‘ஹக்கில்பெரி பின்னின் சாகசங்கள்’ முதலிய கதைகளை வெளியிட்டார். அவை அமெரிக்கா எங்கும் படிக்கப்பட்டன.

 

40 வயதில் அவருக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. காரணம்; குடும்பத்தில் பேரிழப்பு; வாழ்க்கையின் நிலையாமை.

 

புத்தகங்கள்தான் பழங்கால பொற்காலத்தை நினைவுகூற உதவின. மிஸிஸிபி  நதியில் ஆடிப்பாடி படகோட்டி ஊழியம் செய்த நாட்களை நினைவு கூர்ந்தார் அவரது படைப்புகளில்.

அவரது இந்த இரண்டு புகழ்பெற்ற கதைகளும் மிஸிஸிபி நதியைச் சுற்றி சுழல்பவை. சாகசச் செயல்கள், நகைச் சுவை இரண்டும் கலந்தவை. குறிப்பாக ‘ஹக்கிள்பெரி பின்னின் சாகசச் செயல்கள்’ என்ற நூல் வாலிபப் பருவத்தின் உணர்ச்சிகளை வடித்துக் கொட்டும்; அப்படியே அக்கால வாழ்வை படம்பிடித்துக் காட்டும்.

 

இந்த அமெரிக்க எழுத்தாளரின் நினைவாக பல நாடுகள் தபால் தலைகளை வெளியிட்டுள்ளன.

 

–சுபம்–

2 கதைகள்- பனை விதையும் ஆலம் விதையும் (Post No.5331)

Akbar worshiping Sun

Written by London swaminathan

Date: 17 August 2018

 

Time uploaded in London – 7-34 AM  (British Summer Time)

 

Post No. 5331

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை

வானுற வோங்கி வளம்பெற வளரினும்

ஒருவர்க்கிருக்க நிழலாகாதே –

நறுந்தொகை (வெற்றி வேற்கை)

அதிவீரராம பாண்டியன்

 

இனிமை மிக்க பனையின் ஒரு பழத்தை விதையாக ஊன்றி அது வானோங்கி செழித்து வளர்ந்தாலும் ஒருவர்கூட நிற்கக் கூடிய நிழலை அது தராது.

மொகலாய மன்னனான ஷாஜஹானின் புதல்வனான அவுரங்கசீப் , கல்வி கேள்விகளில் சிறந்தவன்; ஆனால் மஹா மூர்கன். மதவெறியன்; பேராசை பிடித்த கொலைகாரன். தனது மூன்று சஹோதர்களை அவர்களின் புதல்வர்களோடு கூண்டோடு கொலை செய்து சிங்காதனம் ஏறினான். ஷாஜஹானை நீ கட்டிய தாஜ்மஹலை பார்த்துக்கொண்டே செத்துப்போ என்று சாகும் வரை சிறையில் அடைத்தான். ராஜ்யத்தை சரியாக ஆளத் தெரியாமல் குடிமக்களையும் சிற்றரசர்களையும் பகைத்துக் கொண்டான். அனைவராலும் வெறுக்கப்பட்டு, முடிவில் உதவி செய்ய யாரும் இல்லாமல் கஷ்டப்பட்டு செத்தான். அவனோடு மொகலாய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது. பின்னர் பெயரளவுக்கு அரசர் என்று ஓரிருவர் இருந்தனர். அரச சம்பத்து கோடிக்கணக்கில் இருந்தும் அவனோ அவனது குடிமக்களோ மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை. அவன் பனை விதபோல ஓங்கி வளர்ந்தான். ஆனால் ஒருவருக்கும் நிழல் தர முடியவில்லை.

xxx

 

தெள்ளிய வாலின் சிறு பழத்தொரு விதை

தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்

நுண்ணிதே யாயயினும் அண்ணல் யானை

அணிதேர்ப் புரவி ஆள் பெரும்படையொடு

மன்னர்க்கிருக்க நிழலாகும்மே

நறுந்தொகை (வெற்றி வேற்கை)

அதிவீரராம பாண்டியன்

 

தெள்ளி எடுக்கத்தக்க ஆல மரத்தின் சிறு விதையானது, தெளிந்த நீர்க்குளத்தில் உள்ள சிறிய மீனின் முட்டையை விடச் சிறிதானாலும், பெருமை பொருந்திய யானையோடு அழகிய தேரும், குதிரையும் காலாட் படைகளும் கொண்ட மன்னரோடு தங்குவதற்கு நிழல் தரும்.

 

பெரிய விதையுடைய பனை மரம் நிழல் தராது. சிறிய விதையுடைய ஆல மரம் மன்னரின் நாற்படைக்கும் நிழல் தரும். ஆகவே மக்கள் இரு தரப்பட்டவர்கள்; சிலர் பனை மரம்; சிலர் ஆலமரம்.

 

ஹுமாயூன் புத்திரனான அக்பர் நிராதரவற்ற நிலையில், தாயாரான ஹாமிடாவுக்கும் சாப்பாடு போட முடியாத நிலையில் ஸிந்து தேச காட்டுப் பகுதியில் பிறந்தார். அவர் பட்ட கஷ்டம் சொல்லத் தரமன்று; தனது 18ஆவது வயதில் வளர்ப்புத் தந்தையான பைராம்கானை அடக்கிவிட்டு தானே சிங்காதனம் ஏறினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து வட இந்தியா முழுதையும் வசப்படுத்தி ஆட்சி புரிந்தார். அவர் ஆட்சிக் காலத்தில் போர்கள் நடந்தன; ஆனால் மக்கள் கலகம் என்பது கிடையாது. அவரும் ஜாதி மத வேறுபாடின்றி கல்வி, கேள்விகளில் சிறந்தோருக்கு பெரிய பதவிகளைக் கொடுத்தார்.

மக்களின் சௌகரியங்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்தார். எப்போதும் தத்துவ விசாரத்தில் ஈடுபட்ட அறிஞர் குழுவால் சூழப்பட்டு கீர்த்தி பெற்றார். அவர் கூட்டிய தர்பாரில் பொதுமக்கள் யார் சிபாரிசு இன்றியும் மனுக்களைத் தரமுடிந்தது. உடனே அதற்கு நடவடிக்கையும் எடுத்து புகழ் பெற்றார். மக்கள் அவரை பழமரத்தை நாடும் பறவைகள் போல நாடினர்.

 

-SUBHAM-

ஹிந்து ராஷ்ட்ரத்தில் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 2 (Post No.5327)

Written by S Nagarajan

 

Date: 16 August 2018

 

Time uploaded in London – 6-09 AM  (British Summer Time)

 

Post No. 5327

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ஹிந்து ராஷ்ட்ரத்தில் எங்களை நாங்கள் விரும்பும் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 2

 

ச.நாகராஜன்

 

4

கிறிஸ்தவ மதம் எப்படியெல்லாம் பரப்பப்பட்டது என்பதை முதலில் அறிய வேண்டும். அதே சமயம் ஹிந்து மதம் ஒருநாளும் ‘மதமாற்றும் முயற்சியில்’ எந்த நாளும் எந்த தேசத்திலும் எவராலும் செய்யப்படவில்லை என்பதையும் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் இங்கா இனத்தினர் மீது திட்டமிட்ட பிரசாரம் ஒன்று 1524-25இல் மதமாற்றும் பாதிரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஃபிரான்ஸிஸ்கோ பிஜாரோ (Francisco Pizzaro) இதற்கென ஆன்மாக்களை அறுவடை செய்யவும் அதே சமயம் முடிந்த மட்டில் தங்கத்தையும் கூடச் சேர்த்து அறுவடை செய்யவும் புறப்பட்டார்.

இதில் ஒரு முக்கூட்டு அணி  ஒன்று சேர்ந்தது.

ஃபாதர் ஃபெர்னாண்டோ டி ல்யுக் (Father Fernando de-lugue) என்பவர் ஒரு ரோமன் கத்தோலிக்க பாதிரியார். இவர் பிஜாரோவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி அவரது பயணத்திற்கு ஆதரவு தருவேன் என்றும், வளைகுடாவிற்குத் தெற்கே பெரு சாம்ராஜ்யத்தில் உள்ள மாகாணங்களில் இடம் பார்த்து பிடித்து அவர்களை தமக்கென ஆக்குவது என்றும் ஜெயித்த இடங்களை பாதிக்குப் பாதியாக பங்கு போட்டுக் கொள்வது என்றும்  ஃபெர்னாண்டோ ஒப்பந்த உடன்படிக்கை செய்து கொண்டார். இதில் உதவ முன்வந்த இன்னொரு பாதிரியார் ஃபாதர் வெல்வர்ட் ((Father Velverde)  கிறிஸ்தவத்திற்கென ஆன்மாக்களை அறுவடை செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

 

திட்டப்படி தாங்கள் நுழைந்த இடங்களில் எல்லாம் கொள்ளையடித்தனர். பூர்வ குடியினர் அனைவரையும் கொன்று குவித்தனர். என்றாலும் கூட மிக எளிமையாகவும் அஹிம்சை வழியில் இருந்ததாலும், பரந்த மனதுடன் இருந்த இங்கா அரசு அவர்களை மன்னித்தது. தங்களது இனத்தின் மீது இங்கா அரசு மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தது.

 

இங்கா சக்கரவர்த்தி அனுமதியின்றி அரசவையில் நுழைந்த போதிலும் கூட ‘அன்னியர்களை’ வரவேற்றார். அத்தோடு மட்டுமன்றி அவர்களுக்குச் சில பரிசுகளையும் அளித்தார்.

இங்கா சக்கரவர்த்தியிடம் பிஜாரோ தாங்கள் கடல் கடந்த ஒரு நாட்டிலிருந்து வ்ந்திருப்பதாகவும் இங்கா நாட்டின் எதிரிகளைச் சமாளிக்க உதவி புரிய வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Holy Kailash is in China now!

 

1532ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதி பிஜாரோவுக்கும் சக்கரவர்த்தி அடாஹுவால்பாவுக்கும் (Atahualpa) s இடையே ஒரு சந்திப்பு கஜமார்க்கா (Cajamarca) நகரில் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

ஸ்பெயினில் இருக்கக்கூடிய எந்த அரங்கத்தையும் விட மும்மடங்கு பெரிதான ஒரு அரங்கத்தில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது.

 

சக்கரவர்த்தி தனது சபையினருடன் நிராயுதபாணியாக அங்கு நுழைந்தார். ஆனால் பிஜாரோவோ ஆயுதம் தாங்கிய தனது வீரர்களை அங்கே சுற்றியிருந்த வீடுகளில் ஒளித்து வைத்திருந்தார்.

அரங்கத்திற்குள் நுழைந்த சக்கரவர்த்தி அங்கே யாரையும் காணாமல் வந்திருந்த அன்னியர்கள் எல்லாம் எங்கே என்று கேட்டார்.

 

அப்போது வெல்வெர்ட் பாதிரியார் ஒரு கையில் சிலுவையுடனும் இன்னொரு கையில் பைபிளுடனும் உள்ளே நுழைந்தார். வந்தவர் சக்கரவர்த்தியிடம் அவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்காகவே தாங்கள் வந்துள்ளதாக அறிவித்தார்.

 

கிறிஸ்தவ மதக் கொள்கைகளை விவரித்த வெல்வெர்ட் சக்கரவர்த்தியை கிறிஸ்தவ மதத்திற்கு மாறி ஸ்பெயின் அரசருக்கு கீழ்ப்படிந்த அரசராக இருக்குமாறு கூறினார்.

அடாஹுவால்பா தான் எந்த அரசருக்கும் கீழ்ப்படிந்து இருக்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

“உங்கள் மன்னர் பெரிய மன்னராக இருக்கலாம். இப்படி கடல் கடந்து உங்களை அனுப்பி இருப்பதால் அதில் எனக்குச் சந்தேகம் இல்லை. அவரை எனது சகோதரராக என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். மத நம்பிக்கையைப் பொறுத்த வரை அதை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது. உங்களது கிறிஸ்து அவரால் உருவாக்கப்பட்டவராலேயே சாகடிக்கப்பட்டார். ஆனால் எங்கள் கடவுளோ சொர்க்கத்தில் இருந்து கொண்டு குழந்தைகளாகிய எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்றார் அடாஹுவால்பா.

 

இதைக் கேட்டவுடன் வெல்வெர்ட், பிஜாரோ ஒளிந்திருந்த இடத்திற்குச் சென்று, “இந்த நாய்க்காக நாம் நமது சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.” என்றார்.

உடனே பிஜாரோ சமிக்ஞையைக் காட்ட ஒளிந்திருந்த வீரர்கள் அங்கு நிராயுதபாணியாக இருந்த அனைவரையும் கொன்று குவித்து, அடாஹுவால்பாவைச் சிறைக் கைதியாகப் பிடித்தனர்.

 

உடனே அடாஹுவால்பா அவரிடம் தன்னை விடுவித்தால் அவரது அறை முழுவதையும் தங்கக் கட்டிகளால் நிரப்புவதாகக் கூறினார்.

அப்படியே பிஜாரோ அறை முழுவதும் தங்கக் கட்டிகளால் நிரப்பப்பட்டது.

 

என்ற போதிலும் அடாஹுவால்பா விடுவிக்கப்படவில்லை.

மற்றவர்களுடன் இணைந்து கிறிஸ்தவ மிஷனரி  கிறிஸ்தவ மதத்தைத் தழுவாததன் காரணமாக அடாஹுவால்பாவை உயிருடன் எரிப்பது என்று கையெழுத்திட்டது.

அடாஹுவால்பா மிகப் பெரிய சக்கரவர்த்திக்கே உரித்தான பண்புடன் நடந்த அனைத்தையும் அமைதியாக ஏற்றுக் கொண்டார்.

 

சங்கிலியால் கட்டப்பட்டு சிதையில் அடாஹுவால்பா கிடத்தப்பட்டார்.

வெல்வெர்ட் பாதிரியார், கொள்ளையடிக்கப்பட்டதில் சம பங்கு கேட்டவர், இறுதி முயற்சியாக அடாஹுவால்பாவின் ஆன்மாவைக் கடைத்தேற்ற அவரை கிறிஸ்தவ மதம் தழுவுமாறு கேட்டார்.

 

மதம் மாறுமாறு மீண்டும் கேட்கப்பட்ட போது மன்னர் திடமாக அதை மறுத்து விட்டார்.

மதம் மாறினால் அவர் உயிருடன் எரிக்கப்பட மாட்டார் என்று வெல்வெர்ட் மீண்டும் கூறவே அந்த இக்கட்டான நிலையில் அடாஹுவால்பா மதம் மாற ஒப்புக் கொண்டார்.

 

கிறிஸ்தவ பாதிரிகள் சொன்ன வார்த்தையை மீறவில்லை.

அடாஹுவால்பா உயிருடன் எரிக்கப்படவில்லை. அவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டார்.

இது தான் முதல் அமெரிக்க கிறிஸ்தவரின் கதை.

  • சோகக்கதை!

வரலாறு முழுவதும் எடுத்துப் பார்த்தால் அடாஹுவால்பா பிஜாரோவுக்குக் கொடுத்த பிணைத் தொகை தான் மிகப் பெரியது என்பது கின்னஸ் புக் ஆஃப் வோர்ல்ட் ரிகார்ட்ஸை எடுத்துப் பார்த்தால் தெரிய வரும்.

இந்தப் பிணைத் தொகையை இன்றைய பணமதிப்பில் மாற்றிப் பார்த்தால் அது 1700 லட்சம் டாலர் ஆகும்.

(இந்திய ரூபாய் மதிப்பில் 113900 லட்சம் ரூபாய் ஆகும்!)

இப்படித்தான் தென் அமெரிக்காவில் கிறிஸ்தவ மதம் பரவ ஆரம்பித்தது.

 

அற்புதமான தங்கச் சிலைகள் உருக்கப்பட்டன. அவற்றை கப்பலில் ஏற்றி ஸ்பெயினுக்கு அனுப்பினர். இங்கா நாடு முற்றிலுமாக காலியானது. செல்வத்தை இழந்தது.

இதைப் பார்த்த பிரிட்டிஷ் அரசு தனது கொள்ளைக்காரர்களை அனுப்பி கப்பலில் ஏற்றி வரப்பட்ட கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை கொள்ளையடிக்க முயற்சித்தது.

 

ஃபிரான்ஸில் ட்ரேக் (Francis Drake), ஹாகின்ஸ் (Hawkins) போன்றவர்கள் இதற்காக அனுப்பப்பட்டனர்.

இந்த கொள்ளைக்காரர்களைத் தான் இன்றைய பிரிட்டிஷ் பள்ளிக் குழந்தைகள் பெரும் ஹீரோவாக கொண்டாடுகின்றனர்.

 

அமெரிக்காவின் பூர்வ குடியினர் இன்று ஏழ்மையில் வாடுகின்றனர். 98 சதவிகிதம் நிலப்பரப்பு சில குடும்பங்களைச் சேர்ந்ததாக இன்று இருக்கிறது. இந்த நிலப் பிரபுக்கள் ஸ்பானிஷ் கொள்ளைக்காரர்களின் வமிசாவளியினர். மிகுந்த துயரமான நினைவுகளுடனும் ஏழ்மையுடனும் தங்கள் சொந்த மொழியைப் பேசிக் கொண்டு தங்கள் நம்பிக்கை வழியில் நடக்கிறார்கள் ஒரிஜினல் பூர்வ குடியினர்.

 

 

இவர்களுக்கு துயரத்திலிருந்து என்று விடுதலை கிடைக்கும் என்பது தெரியவில்லை!

காலம் அவர்களுக்குக் கை கொடுத்து அவர்களை உயர்த்துமா?

– தொடரும்

***

 

நடுநிலை கடைப்பிடித்த நல்லவர்! (Post No.5322)

Sri Venkataraman Santanam and Srimati Rajalakshmi Santanam

Written by S Nagarajan

 

Date: 15 August 2018

 

Time uploaded in London – 6-15 AM  (British Summer Time)

 

Post No. 5322

 

Pictures shown here are taken from various sources saved by my brothers S Srinivasan, S Suryanarayanan, S.Meenakshisundaram and articles written by S Nagarajan (posted by S Swaminathan)

 

 

நல்லவருக்கு அஞ்சலி

நடுநிலை கடைப்பிடித்த நல்லவர்!

 

ச.நாகராஜன்

நடுநிலை நாளிதழ் என்று போட்டுக் கொண்டு ஒரு பக்கமாய் சார்ந்து எழுதுவது ஊடகங்களின் இன்றைய போக்காக மாறி விட்டது.

 

ஆனால் நடுநிலை நாளிதழான தினமணியின் மதுரைப் பதிப்பின் பொறுப்பாசிரியராக நீண்ட காலம் பணியாற்றிய எனது தந்தையார் திரு வெ.சந்தானம் நடுநிலை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்.

அலுவலகப் பணியில் மட்டுமல்ல, அன்றாட வாழ்விலும் அவர் கடைப்பிடித்த எள்ளளவும் பிசகாத, தராசு நுனி போன்ற நடுநிலை வியக்க வைக்கும் ஒன்றாகும்.

வீட்டிலும் சரி நாட்டிலும் சரி உரிய முறையில் உரிய விஷயத்தில் நடுநிலையுடன் நடக்கும் பாங்கு அவருக்கு இயல்பாகவே இருந்தது.

 

நூற்றுக்கணக்கான சம்பவங்கள் மனதில் நிழலாடினாலும் சில சம்பவங்களை இங்கு  குறிப்பிடுகிறேன்.

அரசியல் கட்சியில் எல்லா அணிகளையும் சம நோக்குடன் பார்ப்பார் அவர்.

 

 

With Swamiji Krishna of Aykkudi, near Tenkasi

காமராஜர் முதல் அமைச்சர்.

சுதந்திர தியாகிகளை அங்கீகரிக்க அவர்களுடன் சிறையில் கூட இருந்த ஒருவர் யாரேனும் அப்படி கூட இருந்ததைக் குறிப்பிட வேண்டுமென்ற விதி வந்தது.

 

இப்படி ஒருவரிடம் கடிதம் வாங்க வேண்டுமென்ற ஆசையோ அல்லது நினைவோ கூட இல்லாமல் இருந்தார் என் தந்தை.

ஆனால் பல தியாகிகளும் இதை ஏன் இன்னும் வாங்கவில்லை என்று கேட்ட வண்ணம் இருந்தனர்.

 

மதுரையில் காங்கிரஸ் கட்சியின் மாபெரும் மாநாடு தமுக்கம் மைதானதில் நடந்தது.  இரவு நேரம்.

 

தினமணி நிருபராக வெகு காலம் பணியாற்றியவரும் என் தந்தையின் பால் மிக்க மரியாதையும அன்பும் கொண்டவரான திரு திருமலை மைதானத்தில் ஏற்பாடுகளைப் பார்வையிட வந்த காமராஜரிடம் இந்தக் கடிதம் பற்றிக் குறிப்பிட்டார்.

 

இப்படி யார் வேண்டுமென்கிறார்கள் என்று கேட்டார் திரு காமராஜர். இது அரசால் கொண்டுவ்ரப்பட்ட ஆணை என்றவுடன் சிரித்தவாறே அந்த மைதானத்திலேயே அந்தக் கணமே ஒரு டைப்ரட்டரைக் கொண்டுவரச் சொல்லி அதில் ஒரே ஒரு வரி ஆங்கிலத்தில் அடிக்கச் சொன்னார்.

திரு வெ.சந்தானம் என்னுடன் சிறையில் இருந்தார் என்பதே அந்த ஒரு வரி.

என் தந்தை அந்தக் கணமே அரசின் கணக்கின் படி ‘சுதந்திரப் போர் தியாகி’ ஆனார்.

ராஜாஜிக்கு என் தந்தை பால் பரிவும அன்பும் உண்டு. கல்யாண ரிஸப்ஷனில் என் தந்தையும் தாயும் நாற்காலியில் அமர்ந்திருக்க அந்தப் பெரிய்வர் பின்னால் நிற்கும் காட்சியைக் காண்பிக்கும் அதிசய போட்டோ எங்கள் இல்லத்தில் இன்றும் இருக்கும் ஒரு பொக்கிஷம்.

 

முத்துராமலிங்கத் தேவரின் தேச பக்தியும் தெய்வ பக்தியும் நாடறிந்த விஷயம். அவரது கூட்டங்களுக்கு மதுரையில் என் தந்தையார் தலைமை வகிப்பதுண்டு. அவர் என் தந்தையிடன் கொண்டிருந்த பேரன்பும் மரியாதையும்  வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

 

அரசியலில் மட்டுமல்ல காஞ்சி பெரியவாள், சிருங்கேரி ஆசார்யாள் உரைகளை அவ்வப்பொழுது தினமணி ஏடு தாங்கி வரும்.

 

சிருங்கேரி ஆசார்யாளின் பக்தர்கள் எழுத்தை எண்ணிக் கொண்டு வருவார்கள். ஏன் காஞ்சி பெரியவருக்கு மட்டும் இரண்டு காலம் இருக்கிறது, ஏன் இத்தனை எழுத்துக்கள் சிருங்கேரி பெரியவரின் உரைக்கு குறைந்திருக்கிறது என்றெல்லாம் தீவிர பக்தியில் கேட்பார்கள்.

 

 

 

 

 

 

அவர்களுக்கு முக்கியத்திற்கு முதலிடம், விஷயத்தின் முக்கியம் போன்றவற்றை எடுத்துச் சொல்லி அவர்களின் மனத்தை மகிழ்விப்பார். நடுநிலையுடன் எதையும் அணுகும் மனப்பாங்கை நாளடைவில் அனைவரும் புரிந்து கொண்டு வெகுவாகப் பாராட்ட ஆரம்பித்தனர். இரு ஆசார்யர்களின் அனுக்ரஹமும் எங்கள் குடும்பத்திற்கு ஏராளம் உண்டு.

சிருங்கேரி ஆசார்யர் வீட்டிற்கே வந்து அனுக்ரஹம் புரிந்த நிகழ்ச்சி மிக சுவாரசியமான ஒன்று.

 

ஸ்ரீ சத்ய சாயிபாபா என் தந்தையார் மீது மிகுந்த அன்பு கொண்டு அனுக்ரஹம் புரிந்தார். ஆபஸ்ட்பரியில் நடந்த கூட்டத்தில் உரையாற்ற பிரத்யேகமாக அழைப்பு விடுத்தார்.

அரசியல், ஆன்மீகம் மட்டுமல்ல, அன்றாடப் பொழுது போக்குகளுக்கும் கூட அவர் உரிய இடத்தைத் தருவார்.

இசை நிகழ்ச்சிகள் தவறாமல் தினமணியில் இடம் பெறும். இசைக் கலைஞர்கள் வெகுவாக மதிக்கப்படுவர் தினமணியில்.

 

கிங்காங் மல்யுதத நிகழ்ச்சிக்கென மதுரை வந்தவர் என் தந்தையைப் பார்க்க நேரில் வந்தார். அவருக்கு ஒரு பிரம்பு நாற்காலி போட அதில் உட்கார ஆரம்பித்தவுடன் அந்த நாற்காலி முறிந்து போக உடனே ஸ்ட்ராங்கான கட்டிலில் சிரித்தவாறே அமர்ந்து உரையாட ஆரம்பித்தார்.

 

தினமணியில் சென்னை ஆபீஸில் ஸ்ட்ரைக். சென்னைப் பதிப்பு சித்தூரிலிருந்து சில காலம் வந்தது.

எழுத்தாளர்களின் கதை, கட்டுரை படைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மதுரைக்கு வந்தது.

அந்தக் கால கட்டத்தில் ஏராளமான புது எழுத்தாளர்கள் அறிமுகமாயினர்.

Kanchi Paramacharya in Madurai Dinamani office.

 

யார் எழுதினார்கள் என்று பார்க்காமல் எழுத்து எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்பார் என் தந்தை.

ஜியாவுடீன் என்ற இஸ்லாமிய இளைஞர் ஃபாரஸ்ட் ரேஞ்சராகப் பணியாற்றி வந்தார். அழகுற கதைகள் எழுதுவார். அவர் எழுத்து பிரசுரிக்கப்ப்ட்டவுடன் அவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. பொங்கிய மகிழ்ச்சியுடன் ஓடோடி வந்து தந்தையிடன் தன் வியப்பையும் அன்பையும் ம்கிழ்ச்சியையும் தெரிவித்தார்.இதே போல அலுவலகம் ஒன்றில் கணக்குப் பிரிவில் பணியாற்றிய சங்கர ராம் என்பவர் புனைபெயரில் நல்ல எழுத்தாளரானார். சேதுபதி பள்ளியில் கணக்குப் பிரிவில் பணியாற்றிய திரு ராமகிருஷ்ணன் அற்புதக் கவிஞர் ஆனார்.

 

நா.பார்த்தசாரதி அவருடன் கூடவே வரும் பட்டாபிராமன் ஆகியோரின் படைப்புகள் வெளி வரலாயின.

சாலமன் பாப்பையா உள்ளிட்ட பட்டிமன்றப் பேச்சாளர்கள் எங்கள் இல்லத்தில் அமர்ந்து தினமணி பட்டிமன்றம் தலைப்பு குறித்து விவாதிப்பர். தினமணி பட்டிமன்றம் என்பது பட்டிமன்றத்திற்கான ‘ஸ்டாண்டர்ட்’ ஆனது!

Kanchi Shankaracharya Sri Jayendra Swamikal with Dinamani Team

இப்படி இசைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், பட்டி மன்றப் பேச்சாளர்கள், தலைவர்கள், ஆன்மீகவாதிகள் உள்ளிட்ட அனைவருமே இறுதி வரை தந்தையின் பால் நேசத்தையும் பாசத்தையும் கொட்டினர்.

 

ஒரு பெரியவருடன் கூடப் பழகும் போது நாளுக்கு நாள் அது மெருகேறி வளர்பிறை போல வளர்ந்து கொண்டே போகும் என்பதை பற்பல ஆண்டுகள் பழகிய அனைவரும் அனுபவத்தில் கண்டு மகிழ்ந்தனர்.

 

அவரின் நினவைப் போற்றும் நாள் ஆகஸ்ட் 15.

சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர், 1998ஆம் ஆண்டு., ஆகஸ்ட் 15ஆம் தேதி.

மதுரை எல்லிஸ் நகரில் கொடி ஏற்றியாகி விட்டதா என்று கேட்ட பின் தன் இன்னுயிரை விண்ணுலகம் நோக்கி ஏக விட்டார்.

 

அவரை நினைத்து அஞ்சலி செய்வதில் ஒரு தனி அர்த்தம் இருக்கத்தானே செய்யும்?!

 

ARTICLES ON SANTANAM POSTED EARLIER:-

  1. திருவெ.சந்தானம் | Tamil and Vedas

tamilandvedas.com/tag/திரு-வெ…

Posts about திரு வெ.சந்தானம் written by Tamil and Vedas

  1. வெ.சந்தானம்| Tamil and Vedas

tamilandvedas.com/tag/வெ…

Posts about வெ.சந்தானம் written by Tamil and Vedas

–subham—

***

சுதந்திரம் பற்றி பாரதி (Post No.5321)

Compiled  by London swaminathan

Date: 14 August 2018

 

Time uploaded in London –18-44 (British Summer Time)

 

Post No. 5321

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே!

நரகமொத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே!

ஏலு மனிதர் அறிவையடர்க்கும் இருள் அழிகவே

எந்த நாளும் உலகம் மீதில் அச்சம் ஒழிகவே!பாரதி

 

வந்தே மாதரம் என்றுயிர் போகும் வரை

வாழ்த்துவோம்;- முடி தாழ்த்துவோம்

எந்தம் ஆருயிர் அன்னையைப் போற்றுதல்

 ஈனமோ?- அவமானமோ?– சுதந்திரம் பற்றி பாரதி

 

 

 

ஒற்றுமை வழியொன்றே வழியென்பது

ஓர்ந்திட்டோம்;- நன்கு தேர்ந்திட்டோம்

மற்று நீங்கள் செய்யுங் கொடுமைக்கெல்லாம்

மலைவுறோம்; – சித்தம் கலைவுறோம் சுதந்திரம் பற்றி பாரதி

 

 

ஜய ஜய பவானி! ஜய ஜய பாரதம்!

ஜய ஜய மாதா! ஜய ஜய துர்கா!

வந்தே மாதரம்! வந்தே மாதரம்!  பாரதி

 

 

ஏழையென்றும் அடிமையென்றும்

எவனும் இல்லை ஜாதியில்

இழிவு கொண்ட மனிதரென்பது

இந்தியாவில் இல்லையே! பாரதி

 

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

என்றெமதன்னை கை விலங்குகள் போகும்?

என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்? சுதந்திரம் பற்றி பாரதி

 

 

 

இதந்தரு மனையின் நீங்கி

இடர்மிகு சிறைப்பாட்டாலும்

பதந்திரு இரண்டும் மாறிப்

பழிமிகுத் திழிவுற்றாலும்

விதந்தரு கோடி இன்னல்

விளைந்தெனை அழித்திட்டாலும்

சுதந்திர தேவி! நின்னைத்

தொழுதிடல் மறக்கிலேனே சுதந்திரம் பற்றி பாரதி

 

 

தண்ணீர் விட்டோம் வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்

கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?

 

ஓராயிர வருடம் ஓய்ந்துகிடந்த பின்னர்

வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?– சுதந்திரம் பற்றி பாரதி

 

 

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்

வேறொன்று கொள்வாரோ? – என்றும்

ஆரமுதுண்ணுதற் காசை கொண்டார் கள்ளில்

அறிவைச் செலுத்துவாரோ?– சுதந்திரம் பற்றி பாரதி

 

வந்தே மாதரம் என்று வணங்கிய பின்

மாயத்தை வணங்குவாரோ?

வந்தே மாதரம் ஒன்றே தாரகம்

என்பதை மறப்பாரோ?– சுதந்திரம் பற்றி பாரதி

 

 

எல்லாரும் அமரநிலை எய்தும்நன்முறையை

இந்தியா உலகிற்களிக்கும்- ஆம்

இந்தியா உலகிற்களிக்கும்- ஆம், ஆம்

இந்தியா உலகிற்களிக்கும் வாழ்க! பாரதி

 

 

 

பாரத சமுதாயம் வாழ்கவே– வாழ்க வாழ்க!

பாரத சமுதாயம் வாழ்கவே- ஜய ஜய ஜய பாரதி

 

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்

முழுமைக்கும் பொது  உடைமை

ஒப்பிலாத சமுதாயம்

உலகத்துக்கொரு புதுமை- வாழ்க

பாரத சமுதாயம் வாழ்கவே– வாழ்க வாழ்க!

பாரத சமுதாயம் வாழ்கவே- ஜய ஜய ஜய பாரதி

 

 

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்- அதன்

உச்சியின்மேல் வந்தே மாதரம் என்றே

பாங்கின் எழுதித் திகழும்- செய்ய

பட்டொளி வீசிப் பறந்தது பாரீர் பாரதி

 

 

பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்- மிடிப்

பயங்கொல்லுவார் துயர்ப் பகை வெல்லுவார்

 

ஆடுவோமே- பள்ளுப் பாடுவோமே;

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று

 

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம்

எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு;

சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே

தரணிக்கெல்லாம் எடுத்து ஓதுவோமே

 

எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே- பொய்யும்

ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே- இனி

நல்லோர் பெரியாரென்னும் காலம் வந்ததே – கெட்ட

நயவஞ்சக் காரருக்கு நரகம் வந்ததே

 

நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம் – இது

நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்- இந்தப்

பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்- பரி

பூரணனுக்கே யடிமை செய்து வாழ்வோம்.

 

–subham–

ரஜபுத்ரர்களைக் கண்டால் புலியும் நடுங்கும்! (Post No.5253)

Written by London swaminathan

Date: 24 JULY 2018

 

Time uploaded in London – 8-02 am  (British Summer Time)

 

Post No. 5252

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

அவுரங்கசீப் என்ற மொகலாய மன்னன் ஒரு முரடன்; அசடன்; முஸ்லீம் வெறியன்; இந்துக்கள் மீது வரி போட்ட நரியன்; சொறியன்; கரியன்.

 

முகந்த்தாஸ் என்ற ரஜபுத்ர தளபதி அவுரங்க சீப்பை துச்சமாக மதித்து தனது கருத்துகளை வீரன் போல முழங்கி வந்தான். அவன், அவுரங்க சீப்பின் அரசவைக்குள் நுழைந்தவுடன், இந்த ஆளை புலியின் கூண்டுக்கள் தூக்கி எறியுங்கள்; கடித்துக் குதறுவதைப் பார்க்க ஆசை என்றான். உடனே சேவகர்களும் அவனை புலி இருக்கும் வட்டத்துக்குள் தூக்கி எறிந்தார்கள்; அவன் புலியைப் பார்த்தான்; உற்று நோக்கினான்; கோபக் கனலை வீசினான்.

 

“ஏய், டில்லிப் புலியே! இது ரஜபுத்ரப் புலி, இது எனது அரசன் ஜஸ்வந்த்   அனுப்பிய புலி.தெரியுமா?” என்றான்.

புலியும் பார்த்தது. ஆமாம் உண்மைதான் என்று வாய்திறந்து சொல்லாமல் தலையால் ஒரு சலாம் போட்டது. அது  தன் வேலையைப் பார்க்கத் திரும்பிப் போனது.

பார்த்தான் அவுரங்க சீப். இது போன்ற ஆட்கள் நமது தரப்பில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று அவனுக்குப் பரிசுகள் கொடுத்தான்.

 

 

அடடா! என்ன வீரம்; இந்த வீரத்தை எல்லாம் உன் மகனுக்கும் அளித்தாயா? என்று கேட்டான் அவுரங்க சீப்.

“போடா போக்கத்த பயலே! உன்னைப் போன்றவர்கள், எங்களை எந்நேரமும் சண்டைக்கு இழுக்கும்போது மனைவியுடன் படுக்கையில் படுக்க நேரம் ஏது? என்று பதில் கொடுத்தான்.

அவன்தான் பெரிய வீரன்.

 

XXX

மன்னனுக்கு ‘கால்’ மரியாதை

 

தேவ்ரா இளவரசனை முகுந்த் தாஸ் அவுரங்க சீப்பிடம் அழைத்துச் சென்றான். அவர்களுக்கு எல்லாம் ராஜாவான ஜஸ்வத் சிங், ‘போய் வா, உனக்கு தக்க மரியாதைகள் கொடுக்கச் சொல்லி இருக்கிறேன்’ என்றான். அவனை அழைத்துச் சென்ற முகுந்தாஸோ, மொகலாய மன்னனுக்கு முன்னால் அனைவரும் சிரம் தாழ்த்தி மண்டியிட்டு வணக்கம் செய்தல் வேண்டும்; யாருக்கும் இதில் விதி விலக்கு என்பதே இல்லை’ என்றான்

 

இளவரசன் பதில் சொன்னான்

‘’ஹா ஹாஹ் ஹா! என் உயிர் வேண்டுமானால் மன்னன் கையில் இருக்கலாம்; என் மானம் அனைத்தும் என் கையில்தான்; ஒரு பயலும் தொட முடியாது என்றான்.

அரசனுக்கு முன்னால் இந்த ஆள் தலை வணங்க மாட்டான் என்பதால் ஒரு விஷேச ஏற்பாடு செய்தார்கள். இவன் குனிந்து வருவதற்காக ஒரு சிறிய நுழை வாயிலை அமைத்தார்கள்; அதில் மன்னனே நுழைந்தாலும், தலை குனிந்துதான் நுழைய வேண்டும்!

 

 

தேவ்ரா இளவரசன் சொன்னான்,

டேய்! நான் கள்ளனுக்கும் குள்ளன்; நீ பாய்க்கு அடியில் புகுந்தால் நான் கோலத்துக்கு அடியில் புகுவேன் என்று சொல்லி விட்டு அந்த குட்டி நுழைவாயில் முதலில் காலை விட்டான். பின்னர் ஊர்ந்து முன்னேறி தலை பின்னால் வரும்படிச் சென்றான். அதாவது மன்னனுக்கு ‘கால்’ மரியாதை!

 

மன்னன் அதைக் கேட்டுவிட்டு மலைத்துப் போனான்

 

ரஜபுத்ர வீரர்கள் அஞ்சாத சிங்கங்கள்! அ வர்களுடைய மனைவியர், மாற்றான் படைகள் தொடுவதற்குள் தீப்பாய்ந்து மானம் காப்பார்கள். சித்தூர் ராணி பத்மினி கதை அனைவரும் அறிந்ததே!

 

XXXX