Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
நான்
1992ல் (10-5-1992, Dinamani
Newspaper)தினமணியில்
எழுதிய பின்னர் நிகழ்தது என்ன?
2013-ல் நெல்சன் மண்டேலா இறந்தார். அவருக்கு வின்னி மண்டேலா உள்ப ட மொத்தம் 3
மனைவியர்.
வின்னி
மண்டேலா 2018- ல் இறந்தார். சாகும் வரை எம்.பி.ஆக
இருந்தார். சிறிது காலம் அமைச்சராகவும் இருந்தார்.
பி.பி.சி. தமிழோசையிலும் மண்டேலா பற்றி
நேய்ர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில்
சொன்னேன். அதை 1991ல் வினவுங்கள் விடைதருவோம் என்ற புத்தகமாக
வெளியிட்டேன். அப்போது பி.பி.சி.யில் நான் பேசியதையும் இங்கு இணைத்துள்ளேன்
சாட்டப்பட்டுள்ளது. ஸ்டாம்பியின் கொலைக்கு
correction- not south america, but South Africa
ப்ரூப் பிழை- பிறந்த இடம்-தென் அமெரிக்கா அல்ல, தென் ஆப்பிரிக்கா
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
1992 மே 3ம் தேதி சீனாவில் பரம்பரை ஆட்சி என்ற தலைப்பில் கட்டுரை எழுதினேன். அங்கும் குடும்ப ஆட்சிப் பிரச்சினை இருந்தது. 27 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதைய நிலவரம் தெரியவில்லை.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
பாக்யா 1-11-2019 இதழில் அறிவியல் துளிகள்
தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு பத்தொன்பதாம் கட்டுரை – அத்தியாயம் 435
நோபல் பரிசை வென்றார் இந்தியர் அபிஜித்
விநாயக் பானர்ஜி!
ச.நாகராஜன்
இந்த ஆண்டில் (2019) அறிவிக்கப்பட்ட
நோபல் பரிசுகள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் வியப்பையும் அளித்துள்ளன என்றால் அது
மிகையல்ல.
இந்தியாவில் மும்பையில் பிறந்து கல்கத்தாவில்
வளர்ந்து டெல்லியில் படித்து இப்போது அமெரிக்காவில் வசிக்கும் அபிஜித் விநாயக் பானர்ஜி
பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசைத் தன் மனைவி எஸ்தர் டஃப்லோ மற்றும் சக ஆய்வாளர்
மைக்கேல் கிரெமர் ஆகியோருடன் இணைந்து பெற்றுள்ளார்.
இந்தியாவின் பெருமிதத்திற்கான தருணம்
இது.
ரபீந்திரநாத் தாகூர், சர் சி.வி.ராமன்,
ஹர் கோபிந்த் கொரானா, மதர் தெரஸா, எஸ். சந்திரசேகர், அமார்த்ய சென், வி.ராமகிருஷ்ணன்,
கைலாஷ் சத்யார்த்தி ஆகியோரைத் தொடர்ந்து ஒன்பதாவதாக இந்தப் பரிசை வென்றுள்ள இந்தியர்
என்ற பெருமையைப் பெறுகிறார் அபிஜித்! (பிறப்பு : 1961 பிப்ரவரி 21- வயது 58)
அவர் பரிசு பெற்றதற்கான காரணம் இன்னும்
அதிக பெருமையைத் தரும். உலகளாவிய விதத்தில் வறுமையைக் குறைப்பது எப்படி என்பது பற்றிய
சோதனை பூர்வமான ஆய்வுக்காகவே அவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
பாக்யாவின் வாழ்த்துக்களை உளங்கனிய
நோபல் பரிசை வென்ற அபிஜித் அவர்களுக்கு வழங்குகிறோம்.
அடுத்து, மொபைல் போன், கம்ப்யூட்டர்,
லேப் டாப் உள்ளிட்ட சாதனங்களை வைத்துள்ளோர் அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்படும் வண்ணம்
லிதியம்-அயான் பேட்டரிகளைக் கண்டுபிடித்துள்ள மூன்று விஞ்ஞானிகளுக்கு இரசாயனத்திற்கான
நோபல் விருது வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பேராசிரியரான ஜான் குட்எனஃப்
(John Goodenough)-க்கு வயது 97. நோபல் பரிசைப் பெற்றவர்களிலேயே
மிக அதிக வயதுடையைவர் இவர் தான் என்ற சாதனையும் இவரைச் சேர்கிறது. நோபல் பரிசு பெற
வயது ஒரு தடை இல்லை என்பதை இந்தப் பரிசு நிரூபிக்கிறது!
இவருடன் இந்தப் பரிசைப் பகிர்பவர்கள்
ஸ்டான்லி விவ்விங்ஹாம் (வயது 77) என்ற பிரிட்டிஷ்-அமெரிக்க பேராசிரியரும், அகிரா யோஷினோ
(வயது 71) என்ற ஜப்பானியப் பேராசிரியரும் ஆவர்.
படிம எரிபொருள் பயன்பாட்டை நீக்கி
மறுசுழற்சிக்குள்ளாக்கும் ஆற்றலைக் கண்டுபிடித்ததே இவர்களின் சிறப்பு. நீடித்துழைக்கும்
பேட்டரியினால் ஆற்றல் சேமிப்பு அதிகமாகிறது என்பதோடு எதிர்காலத்தில் இன்னும் அதிக ஆற்றலைச்
சேமிக்கும் கண்டுபிடிப்புகளுக்கு இது அடித்தளமாக அமையும்.
அடுத்து இயற்பியலில் 2019ஆம் ஆண்டுக்கான
நோபல் பரிசு பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதை புரிய வைக்கும் முயற்சிகளில் அரிய
சேவை ஆற்றியதற்காகவும் பிரபஞ்சத்தில் பூமி எந்த இடத்தை வகிக்கிறது என்பதை அறிந்து கூறியதற்காகவும்
மூவருக்கு அளிக்கப்படுகிறது.
பரிசில் பாதியை ஜேம்ஸ் பீபிள்ஸ் பெறுகிறார்.
மீதிப் பாதியை மிகேல் மேயரும் டிடியர் க்லாஸும் பெறுகின்றனர். சோலார் வகை நட்சத்திரத்தைச்
சுற்றி ஒரு எக்ஸோ பிளானட் இருப்பதைக் கண்டு பிடித்ததற்காக இவர்கள் இருவருக்கும் பரிசு
வழங்கப்படுகிறது.
(சூரிய மண்டலத்தில் அனைத்து கிரகங்களும்
சூரியனைச் சுற்றியே வருகின்றன. சூரிய மண்டலத்திற்கு அப்பால் இதர நட்சத்திரங்களைச் சுற்றி
வரும் கிரகங்கள் எக்ஸோபிளானட் என்று குறிப்பிடப்படுகின்றன.)
சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள ஒரு கிரகத்தை இவர்கள்
சுட்டிக் காட்ட பால்வீதி மண்டலத்தில் சுமார் 4000 எக்ஸோபிளானட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆகவே தான் இவர்களை நோபல் கமிட்டி பாராட்டி பரிசை அளித்துள்ளது.
அடுத்து சமாதானப் பரிசைப் பெறுபவர்
எதியோப்பியாவின் பிரதம மந்திரியான அபி அஹ்மத்
அலி. எதியோப்பியாவுக்கும் அண்டை நாடான எரிட்ரியாவிற்கும் நடந்து வந்த மோசமான போரை முடிவுக்குக்
கொண்டு வந்ததற்காக இந்த சமாதானப் பரிசு இவருக்கு வழங்கப்படுகிறது. இத்தனைக்கும் இவருக்கு
வயது 43 தான்.
ஆயிரத்திதொள்ளாயிரத்து அறுபதுகளில்
எதியோப்பியா எரிட்ரியாவைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஆனால் எரிட்ரியா மக்கள் ஓட்டெடுப்பில்
தனித்து இருப்பதை விரும்பவே அப்படியே இரு நாடுகளும் 1993இல் தனி நாடுகளாக ஆயின. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் பாட்மே என்ற
எல்லை ஓர நகரின் உரிமை பற்றி கருத்து வேறுபாடு எழுந்தது. பெரும் வன்முறை எழுந்தது.
2000 முதல் 2002க்குள் சுமார் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர். பன்னாட்டு எல்லை கமிஷன்
பாட்மே நகரை எரிட்ரியாவிற்கு வழங்கித் தீர்ப்பளித்தது. ஆனால் எதியோப்பியா அந்த நகரைத்
தரவில்லை. ஆகவே ஒரு போர் சூழ்நிலை நிரந்தரமாக அங்கு உருவானது. எரிட்ரியாவை உலகினர்
‘ஆப்பிரிக்காவின் வடகொரியா’ என அழைக்க ஆரம்பித்தனர். எரிட்ரியாவில் நீடித்த எமர்ஜென்ஸி
அறிவிக்கப்பட்டது. 18 வயது ஆனவுடன் தேசீய சேவைக்காக அனைத்து எரிட்ரியாவாசிகளும் அழைக்கப்பட்டனர்.
பெரும்பாலானோர் ராணுவ சேவைக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் எதியோப்பியாவின் பிரதம
மந்திரியாக அபி அஹ்மத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்டவுடனேயே சுறுசுறுப்புடன்
செயல்பட ஆரம்பித்த அபி நூறு நாட்களுக்குள்ளாகவே பல்லாண்டுகளாக நீடித்து வந்த பிரச்சினைக்கு
ஒரு தீர்வு கண்டார். முதலில் எதியோப்பியாவில் இருந்த எமர்ஜென்ஸியை ரத்து செய்தார்.
ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை விடுதலை செய்தார்.
பன்னாட்டு எல்லை கமிஷன் கூறுவதை ஏற்பதாகவும்
அவர் அறிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே தகவல் தொடர்பு, விமானப் போக்குவரத்து உள்ளிட்டவை
ஆரம்பமாயின.
அதிக உற்சாகத்துடன் இப்படி தீவிரமாக
சமாதானத்திற்காகப் பாடுபட்ட, பாடுபட்டு வரும் அபியை ஊக்குவிக்கும் விதமாக இந்த சமாதானப்
பரிசு தருவதாக நோபல் பரிசுக் கமிட்டி கூறி இருப்பதை உலகில் சமாதானத்தை நிலை நிறுத்த
விரும்பும் அனைவரும் வரவேற்றுள்ளனர்.
என்ற போதும் இந்த சின்ன வயதிலேயே இப்போது
தான் பிரதம மந்திரியான ஒருவருக்கு சமாதான பரிசை அளிப்பது சரிதானா என்றும் சிலர் முணுமுணுக்கின்றனர்.
எரிட்ரியாவும் இந்த அளவிற்கு சமாதானத்தில் முனைப்பு காட்டவில்லையே என்பது தான அவர்களின்
அங்கலாய்ப்பு.
ஆனால் போர் நிறுத்தப்பட்டு விட்டது.
தடை செய்யப்பட்டிருந்த ஊடகங்கள் தடை நீங்கிச் செயல்பட ஆரம்பித்து விட்டன.
நல்ல மாறுதலை உலகம் வரவேற்கும் இந்த
நிலையில் அபி அஹ்மதுக்கு உலகமே வாழ்த்துத் தெரிவிக்கிறது – நாமும் தான்.
இன்னும் மருத்துவம் மற்றும் இலக்கியத்திற்கான
நோபல் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நோபல் பரிசு பெற்ற அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்
அறிவியல் அறிஞர் வாழ்வில் :;
சோவியத் விண்வெளி வீரரான அலெக்ஸி லியனோவ்
முதலில் விண்வெளியில் நடந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். 1934ஆம் ஆண்டு மே மாதம்
30ஆம் தேதி பிறந்த லியனோவ் தனது 85வது வயதில் அக்டோபர் 11ஆம் தேதி 2019இல் மரணமடைந்தார்.
1965ஆம் ஆண்டு துணிந்து விண்கலத்திலிருந்து
வெளியே வந்து நடந்து அவர் சாதனை படைத்தார். மனிதனை சுமந்து சென்ற 17வது விண்கலத்தில்
மார்ச் 1965இல் அவர் விண்வெளி ஏகினார். விண்கலத்திலிருந்து வெளியேறிய சில நிமிடங்களிலேயே
அவரது விண்வெளி உடை உப்ப ஆரம்பித்தது. அவரது சகாவான பவேல் பெலயாவாலாலும் உதவிக்கு வர
முடியவில்லை. இப்படி உப்பிய நிலையில் அவரால் மீண்டும் விண்கலத்திற்குள் நுழையவே முடியாது.
துணிந்து தன் விண்வெளி உடையின் அழுத்தத்தைக் குறைக்க அதிலிருந்து காற்றை வெளியேற்ற
ஆரம்பித்தார். இதனால் விண்கலத்தை அடைவதற்குள் அவரது ரத்தத்தில் நைட்ரஜன் கொதிக்க ஆரம்பிக்கும்
என்பது அவருக்கு நன்கு தெரியும். ஒரு வழியாக விண்கலத்திற்கு மீண்டார். 12 நிமிடம்
9 விநாடிகள் விண்கலத்திற்கு வெளியே இருந்து விண்வெளியில் மனிதன் இருக்க முடியும் என்பதை
அவர் நிரூபித்தார். பின்னர் மறுநாள் 19-3-1965 அன்று பூமி திரும்பினார். இதனால் சந்திரனில்
மனிதன் இறங்க முடியும் என்பது நிரூபணமானது.
விண்கலத்திலிருந்து வெளியே வந்தவுடன்
தன் பார்வையை பிரபஞ்சத்தை நோக்கிச் செலுத்திய லியனோவ், “ஆஹா பூமி உருண்டையாக இருக்கிறது.
மேலே நட்சத்திரங்கள். கீழே நட்சத்திரங்கள். இடப்புறமும் வலப்புறமும் நட்சத்திரங்கள்!
சூரியனின் ஒளி என் முகத்தில் அடிக்கிறது” எனக் கூவினார்.
1975இல் மீண்டும் விண்வெளி சென்ற லியனோவ்
அங்கு அபல்லோ விண்கலத்தில் சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்களைச் சந்தித்தார்.
மொத்தத்தில் 113 முறை அவர் பூமியின்
சுற்றுப்பாதையில் வலம் வந்தார். 7 நாட்கள் 32 நிமிடங்கள் அவர் மொத்தமாக விண்வெளியில்
இருந்திருக்கிறார்.
அவரை கௌரவிக்கும் வண்ணம் ஏராளமான விருதுகள்
அவருக்குத் தரப்பட்டுள்ளன.
அவரது மறைவு குறித்து விண்வெளி ஆர்வலர்கள்
தங்கள் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
~கொழுநனனைக் கொளுத்தினால் பொய்யெனப்
பொய்யும் மழை~
கணவனைத் தொழுதால் போதும்; தெய்வத்தைத் தொழ வேண்டாம் என்றான் சநாதனி ஹிந்து, ஹிந்து தீவிரவாதி, பழைய பத்தாம் பசலி திருவள்ளுவன்.
இப்போது ~டேய்,
வாடா, போடா~ என்று
காதலனைக் கூப்பிடும் பெண்கள் வள்ளுவனைப் பார்த்துச் சிரிக்கின்றனர்;பரிகசிக்கின்றனர்.
~கணவனையா? தொழ
வேண்டுமா? மசூதீல வேணும்னா தொழுகை நடக்கும். எங்க
வீட்ல அவர்தான் என்னைத் தொழுவார்; காரணம் என்ன வென்றால். திருவள்ளுவன்
குறளை இலக்கணப்படியே இரண்டு விதங்களிலும் அர்த்தம் சொல்லலாம்~– என்பாள் படிதாண்டாப் பத்தினிகள்!!
தெய்வம் தொழாள்;
கணவன் தொழுது எழுந்திருப்பாள் – என்று!`
இப்போது கூட பல வீடுகளில்
பார்க்கிறோம்.
அம்மா தாயே; பிள்ளைங்கெல்லாம்
ஸ்கூலுக்குப் போகனும்; எனக்கு காப்பி கூட வேனாம். அதுகளுக்கு
உடுப்பைப் போட்டு மத்தியானச் சாப்பாட்டைக் கட்டிக்கொடு; உன்னை
யாரு ராத்ரி ஒரு மணி வரைக்கும் டெலிவிஷன் பாக்கச் சொன்னான் – என்று கணவன்மார்கள் கதறுவதை!!
பிரிட்டனில் 1992-லேயே கொலைகாரிக்கு மாலை போட்டார்கள். இதோ நான் எழுதிய 15-11-1992 அலுவாலியா
கட்டுரை.
அலுவாலியா கட்டுரையைப் படிச்சிட்டு
அழுவலியா?
தெய்வம் தொழாள் கொழுநனனைக்
கொளுத்துவாள்
பொய் எனப் பொய்க்கும் மழை
(கலியுகத்தில்)–
சுவாமிநாதன் எழுதிய அருட்குறள்.
இதோ வள்ளூவன் எழுதிய உண்மைக் குறள்:–
தெய்வம்
தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப்
பெய்யும் மழை (குறள் 55)
தெய்வத்தைத்
தொழாமல் தன் கணவனைத் தொழுது எழுகின்ற ஒரு பெண் பெய் என்றால் மழை பெய்யும்.
எனது
கட்டுரைக்குப்பின்னர் வந்த செய்திகள்………………….
கிரன் ஜித் அலுவாலியா வழக்கு திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதில் ஐஸ்வர்யா ராய் நடித்தார். கிரன் ஜித் தனது வாழ்க்கையை சர்க்கிள் ஆFப் லைட் என்ற தலைப்பில் சுயசரிதையாகவும் எழுதினார்.
3 Jun 2017 – Written by S
NAGARAJAN. Date: 3 June 2017. Time uploaded in London:- 6-29 am. Post No.3966.
Pictures are taken from different sources such as Face book, Wikipedia,
Newspapers etc; thanks. contact: swami_48@yahoo.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
“, ஹலோ யார் பேசறது? என்ன வேணும்?”
“நீங்க யாரு ஸார்? நீங்கதானே கூப்பிட்டீங்க?”
“ஓ அதுவா! இல்ல! நீங்க ஊரிலதான் இருக்கீங்களான்னு கேட்கத்தான்?
என்ன செய்தி?சொல்லுங்க”
ஏன் ? ஏதாவது
ஸம்திங் கடன் கிடன் வேணுமா? கூப்பிட்ட நீங்கதானெ செய்தி
சொல்லனும்……………………………………………
இப்படி நிறைய ‘ஹலோ’க்களைக் கேட்டு
அலுத்துப் போய்விட்டீர்களா? உங்கள் நேரத்தையெல்லாம் வீணடிக்கும்
ஹலோவின் கதையைக் கேளுங்கள் தினமணி 1992 ஏப்ரல் 26
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
போரில் பிறந்த புஸ்தகங்கள் என்ற
என்னுடைய கட்டுரை 1992 பிப்ரவரி 9-ல் தினமணிப் பத்திரிக்கையில் வெளியானது.
அந்தக்காலத்தில் அரசியல் என்பது
சாக்கடையென்றும் அதுதான் அயோக்கியர்களின் கடைசி புகலிடம் (Politics is the last refuge of a scoundrel என்றும் சொல்லுவர். இப்பொழுது அதை பத்திரிக்கை, டெலிவிஷன், திரைப்படம் போன்ற மாஸ் மீடியா (Mass Media people ) பேர்வழிகளுக்குச்
சூட்டலாம். எப்படி ஒரு போரில் அதிகமான பேர் இறக்க, இறக்க
தாக்கியவனுகு சந்தோஷம் வருமோ அது போல அதிகம் பேர் இறக்க, இறக்க
பத்திரிக்கைக் கா ரனுக்குக் கொண்டாட்டம். ஊர் இரண்டுபட்டால் அவர்களுக்கு அதிக Sales ஸேல்ஸ்.
வெளிநாடுகளைத் தாக்கும்போது
பத்திரிக்கையாளர்கள் ஒரு படி மேலே சென்று கூடுதலாகப் பொய் சொல்லுவார்கள்.
இல்லாததையும் பொல்லாததையும் போட்டி போட்டுக் கொண்டு ஜோடித்து எழுதுவார்கள்.
போர் தொடுக்கும் நாடு பொருளாதார
லாபத்துக்காகவும், அந்த நாட்டு வணிக கான்ட்
ராக்டுகளுக்கும், அங்கேயுள்ள பெட் ரோ லியம், யுரேனியம், தங்கம், வைரம்
ஆகியவற்றைக் கொள்ளையடிக்கவும் திட்டம் போடும். மாஸ் மீடியாவுக்கு இதில் பங்கு
கிடைக்காது. ஆனால் அரசு விளம்பரங்கள் கிடைக்கும். அவர்கள் புஸ்தகமும் கட்டுரைகளும்
எழுதி காசு சம்பாதிப்பர். சுருக்கமாகச் சொல்லபோனால் பிணம் தின்னிக் கழுகுகள். இதோ 1992ல் குவையத் – இராக் போர் நடந்த பின்னர் எழுந்த புஸ்தகங்களைப்
பாருங்கள்:–
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
இப்பொழுது இந்திய கலைப் பொக்கிஷங்கள் , கோவில் சிலைகள் ஆகியன திருடு போவதும், பெரும்பாலானவை வெளிநாட்டுத் தனியார் வீடுகளிலும் மியூஸியங்களிலும் இருப்பதும் புதுப் புதுச் செய்தியாக தினமும் வெளியாகின்றன. புகழ் பெற்ற ஏல நிறுவனமான ஸதபிஸ்ஸின் ஒரு அதிகாரி மட்டும் 1992ல் மாட்டிக் கொண்டு சிறைக்குச் சென்றார். ஆயிரம் களவாணிகளில் அகப்பட்ட ஒரே களவாணி அவர். ஆனால் தப்பித்தோரோ லட்சம் பேர். ஏனெனில் பிரிட்டிஷ் சுங்க இலாகாவினர் கடத்தல் பொருட்களைப் பிடிக்க சட்டம் இல்லை. இந்தியக் கலைப் பொக்கிஷம் என்று தெரிந்தே அவர்கள் உள்ளே விட்டனர். இதோ நான் 1992ல் தினமணியில் எழுதிய கட்டுரை.
Date of Sale 8th December 1969 Dinamani, 9-2-1992; written by london swaaminathan
29-10-19 news
தங்கம் விலை உயரும்!!
Sunday February 9, 1992 (Dinamani Newspaper)
அவ்வப்பொழுது தங்கம் விலை பற்றியும் எழுதி வந்தேன். செட்டியார் போல புத்திசாலியாக வீட்டு மனைகளிலும் தங்கத்திலும் மட்டும் முதலீடு செய்தால் காலமோ, ஷேர் மார்க்கெட்டோ, பருவமோ அவைகளை அழிக்கவே முடியாது. வாழ்க செட்டியார் பாலிஸி.
Date: 21 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 11-52 am Post No. 7120
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
1992 ம்ஆண்டில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில். தினமணிப்
பத்திரிக்கையில் ‘உலகப் பலகணி’ என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி
வந்தேன். இதோ 6-9-1992ல் வெளியான 3 கட்டுரைகளின் பறவைக் கண் பார்வை (Bird’s Eye View) . ஆனால் காலத்தினாலும் சுவை
குன்றாத கட்டுரை ‘காட்டுராணி பூலான்
தேவி’ அதை மட்டும் பெரிது படுத்திக்
காட்டுகிறேன். பழைய குப்பைகளை (Old
Paper Cuttings) தூக்கி எறிந்துவருகிறேன். பயனுள்ள விஷயத்தை மட்டும் பகிர்வேன்.
முதலில் புல்லட் பாயிண்ட்ஸ் bullet points –
எனது
தினமணிக் கட்டுரைக்குப் பின்னர் பூலான் தேவி இரு முறை எம்.பி.ஆனார்.
அவரைப்
பற்றி நிறைய புஸ்தகங்கள் வெளியாகின. திரைப்படமும் வெளியானது.
2001ம் ஆண்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவரால் சுடப்பட்ட உயர் ஜாதி மக்களின்
ஆதரவாளர்கள் அவரைச் சுட்டுகொன்றனர்.
கர்ம
வினை எல்லோரையும் நிழல் போலத் தொடர்ந்து வந்து அடிக்கும் என்பதற்கு பூலான்
தேவியின் வாழ்க்கை ஒரு சான்று.
கொலைகளையும் கொள்ளைகளையும் நியாயப்படுத்தி காசு செய்த எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், திரைப்படக்காரர்களுக்கு விழுந்த மரண அடி இது.
written by s swaminathan from london
More from
Wikipedia
கைதும் விடுதலையும்
பல கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட பூலான்தேவி, 1983_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12_ந்தேதி மத்தியபிரதேசத்தில் அப்போதைய
முதல்_மந்திரி
அர்ஜூன்சிங் முன்னிலையில் சரண் அடைந்தாள். முதலில் குவாலியர் ஜெயிலில் பூலான்தேவி
அடைக்கப்பட்டாள். பின்னர் புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக டெல்லி திகார்
ஜெயிலுக்கு மாற்றப்பட்டாள்.
11 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயில் தண்டனை
அனுபவித்ததும் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டு வந்ததால் தன்னை விடுதலை
செய்யவேண்டும் என்று பூலான்தேவி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்து இருந்தாள்.
இதற்கிடையில் உத்தரபிரதேசத்தில் பதவி ஏற்ற முலாயம்சிங் யாதவ் தலைமையிலான கூட்டணி
அரசு, பூலான்தேவிக்கு
எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற்றது. மத்தியபிரதேச மாநிலத்திலும் அவள்
சம்பந்தப்பட்ட வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை. இந்த சூழ்நிலையில் பூலான்
தேவியை பிணையத்தில் விடுதலை செய்து உச்ச நீதிமன்ற கோர்ட்டு நீதிபதிகள் 18_2_1994 அன்று உத்தரவிட்டனர். விடுதலையாகும்
பூலான் தேவிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டு
இருந்தனர்.
மக்களவை உறுப்பினர்
கொள்ளைக்காரியாக இருந்து மனம் திருந்தி
சரண் அடைந்த பூலான்தேவி, பாராளுமன்ற
தேர்தலில் போட்டியிட்டு, 2 முறை
“எம்.பி” ஆனார். 1991_ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த சமயத்தில் பூலான்தேவி
சிறையில் இருந்தார். என்றாலும் சிறையில் இருந்தபடியே டெல்லி பாராளுமன்ற தொகுதியில்
போட்டியிட்டார்.
நடிகர் ராஜேஷ் கன்னாவை (காங்.)
எதிர்த்து நின்றார். ஆனால் பூலான் தேவிக்கு வெற்றிக்கனி கிட்டவில்லை. தோல்வி
அடைந்தார். இருப்பினும் அரசியல் மீது அவருக்கு ஒரு கண் இருந்தது. 1994_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில்
இருந்து விடுதலை ஆனார். 1994_ம் ஆண்டு
ஜுலை மாதம் 5_ந்தேதி
உமத்சிங் என்பவரை பூலான்தேவி திருமணம் செய்து இல்லற வாழ்வில் நுழைந்தார்.
சமூக சேவையில் அவருக்கு அதிக ஆர்வம்
உண்டாகியது. இதனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக ஒரு சேவை அமைப்பை
தொடங்கினார். பின்னர் முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில்
சேர்ந்தார். 1996_ம் ஆண்டு
பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள மிர்சா பூர் தொகுதியில் சமாஜ்வாடி
கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக
பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார். பழைய வழக்குகள் பூலான் தேவிக்கு தொல்லை
கொடுத்துக் கொண்டே இருந்தன. கோர்ட்டு படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டியது
இருந்தது. இதற்காக பாராளுமன்றம் முன்பு தர்ணா நடத்தினார். பிறகு 1999_ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலிலும்
அதே மிர்சாபூர் தொகுதியில் 2_வது முறையாக நின்று அபார வெற்றி பெற்றார்.
“நான் பூலான்தேவி” என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாறு பற்றிய சுய சரிதையை பூலான்தேவி எழுதினார்.
“
கொலை
2001 சூலை 25 இல், பூலான் தேவி புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து
மகிழுந்தில் ஏறிப் புறப்படும் போது முகமூடி அணிந்த மூவரால் சுடப்பட்டு இறந்தார்.
அவரது தலையில் மூன்று தடவைகளும், உடம்பில் இரண்டு தடவைகளும் சுடப்பட்டன. சுட்டவர்கள் மாருதி வாகனத்தில்
ஏறித் தப்பிச் சென்றனர்.[1] உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச்
செல்லப்பட்டாலும், அவர்
இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுத்
தேடப்பட்டு வந்த சேர் சிங் ராணா என்பவர் பின்னர் காவல் துறையினரிடம் சரணடைந்தார்.[2] பெக்மாய் படுகொலைகளில் பூலான் தேவி
உயர் வகுப்பைச் சேர்ந்த நபர்களைக் கொலை செய்தமைக்காக பழி வாங்கவே தாம் கொலை
செய்ததாக ராணா கூறினார்.[3]. இது தொடர்பான வழக்கில் ராணா
குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து அவருக்கு 14-8-2014ல் நீதிமன்றம் ஆயுள்தண்டனையும், அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.[4]
சாக்லெட் நாடு பெல்ஜியம்! (Post No.7097)Written by S Nagarajan swami_48@yahoo.comDate: 15 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 14-19 Post No. 7097
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.ச.நாகராஜன்கோகுலம் கதிர் அக்டோபர் 2019 இதழில் உலக உலா பகுதியில் வெளியாகியுள்ள கட்டுரை! பெல்ஜியத்திற்கும் தமிழுக்கும் ஒரு தொடர்பு உண்டு. பெல்ஜியம் அறத்திற்காகப் போராடி வீழ்ந்த போது அதைப் பாராட்டிக் கவலைப்படாதே என்று சொன்னது ஒரு தமிழ்க் கவிதை தான்! பாடியவர் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார். ‘பெல்ஜியத்திற்கு வாழ்த்து’ என்ற தலைப்பில் கவிதை புனைந்த பாரதியார் ஆரம்பத்திலேயே அற்புதமாக பெல்ஜியத்தை இப்படிப் புகழ்ந்தார்: “அறத்தினால் வீழ்ந்து விட்டாய்; அன்னியன் வலிய னாகி மறத்தினால் வந்து செய்த வன்மையைப் பொறுத்தல் செய்யாய் முறத்தினால் புலியைக் தாக்கும் மொய்வரைக் குறப்பெண் போலத் திறத்தினால் எளியை யாகிச் செய்கையால் உயர்ந்து நின்றாய்” இந்தப் பாட்டின் பின்னணி என்ன? மிகப் பெரும் பழைய சரித்திரத்தைக் கொண்ட பெல்ஜியம் 1830இல் சுதந்திரம் பெற்றது. அதற்கு முன்னால் ஜூலியஸ் சீஸர் அங்கு வந்த போது அதன் பெயர் பெல்கே. 1839இல் பிரிட்டனுடன் ஏற்பட்ட ஒரு உடன்படிக்கையின் படி அதன் மீது யாரேனும் வலியப் போர் தொடுத்தால் பிரிட்டன் உதவிக்கு வரும் என்ற ஷரத்து ஏற்பட்டது. போரை விரும்பாத பெல்ஜியம் தனது நடுநிலைத் தன்மையை எப்போதுமே உறுதிப் படுத்தி வந்தது. 1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி திடீரென்று ஜெர்மானியப் படை பெல்ஜியத்தின் வழியே தன் படை செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றது. 3ஆம் தேதி இதை பெல்ஜியம் உறுதியாக மறுத்தது. 4ஆம் தேதி ஜெர்மனி பெல்ஜியத்தின் மீது போர் தொடுத்தது. அன்று தான் முதலாம் உலகப் போர் தொடங்கியது. அதன் விளைவு பெரும் விபரீதத்தில் பெல்ஜியத்தை அழிக்கும் அளவு சென்றது. The Rape of Belgium -பெல்ஜியத்தின் கற்பழிப்பு என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுமளவு அந்த தேசம் பாதிக்கப்பட்டது. அறத்திற்கென தலை நிமிர்ந்து நின்று, ஜெர்மனியின் படையை உள்ளே வரக் கூடாது என்று துணிந்து சொல்லி அதன் விளைவாக அல்லல் பட்ட நாட்டை வியப்புடன் பார்த்துத் தான் மஹாகவி இந்தப் பாடலைப் புனைந்தார்.. முறத்தினால் புலியை விரட்டி செய்கையால் உயர்ந்து நின்ற புறநானூற்றுத் தமிழ்ப் பெண்ணை உவமையாகக் காட்டி ‘முறத்தினால் புலியைக் தாக்கும் மொய்வரைக் குறப்பெண் போலத் திறத்தினால் எளியையாகிச் செய்கையால் உயர்ந்து நின்றாய்” என்று பாராட்டினார். பாரதியாரின் அருமையான முழுப் பாடலையும் படித்தால் பெல்ஜியத்தின் பெருமை விளங்கி விடும். ‘லீஜ் போர்’ எனப்படும் Battle of Liege லீஜ் நகரில் தொடங்கி பல இடங்களுக்குப் பரவியது. போர், போர், போர்! அந்தப் போரில் அடிபட்டுத் துவண்டு மீண்டும் எழுந்து இன்று கம்பீரமாக நிற்கும் பெல்ஜியம்.இன்று உலகின் பணக்கார நாடுகளில் இருபதாவது இடத்தை வகிக்கிறது. மக்கள் இயல்பாகப் பழகும் தன்மை உடையவர்கள். இதன் தலைநகரான ப்ரஸ்ஸல்ஸின் (Brussels) தெற்கே உள்ள வாட்டர்லூ நகரில் தான் நெப்போலியன் தோல்வியுற்றான். இதே ப்ரஸ்ஸல்ஸில் தான் வாஷிங்டனில் இருக்கும் அளவு பல நாடுகளின் ராஜதந்திரிகள் இன்று உள்ளனர். வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் உலகின் எந்த நகரில் ஏராளமாக உள்ளனர் என்று கேட்டால் ப்ரஸ்ஸல்ஸ் என்ற பதிலே வரும். அப்படிப்பட்ட புகழைக் கொண்டது ப்ரஸ்ஸல்ஸ்! உலகின் முதல் இரு செய்தித்தாள்களை 1605இல் அச்சிட்டது பெல்ஜியம் தான்! டச்சு, ப்ரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மூன்று மொழிகளை அதிகாரபூர்வ மொழிகளாகக் கொண்டுள்ளது பெல்ஜியம். உலகின் எல்லா நாடுகளின் நகர்களிலும் – சென்னை உட்பட – ஓய்வெடுக்க என இயங்கும் – Spas – ஸ்பாக்கள் அந்தப் பெயரைக் கொள்ளக் காரணம் பெல்ஜியமே. பெல்ஜிய நகரான ஸ்பாவிலிருந்து உருவானவையே இந்த ஸ்பாக்கள்! ஒரு சதுரகிலோமீட்டர் பரப்பு என்று எடுத்துக் கொண்டாலும் கூட உலகின் அதிக கோட்டைகளைக் கொண்டதும் பெல்ஜியமே. குழந்தை இல்லையா, அதிகம் வருமானவரி செலுத்த வேண்டும். உலகின் அதிக வருமானவரி இவர்களுக்குத் தான்! பொழுது போக்கு அம்சங்களும் விளையாட்டுக்களும் அதிகம் உள்ள இந்த நாட்டில் தான் டின் டின் போன்ற பல காமிக் புத்தகங்கள் உருவாயின. அகில உலக கால்பந்தாட்டப் போட்டியும் 1904இல் ப்ரஸ்ஸல்ஸில் தான் முதன் முதலில் நடந்தது. இந்தக் குட்டி நாடு ஒரு முறை தனது அரசை அமைக்க, அனைத்துக் கட்சிகளும் 541 நாட்கள் ஆலோசனை நடத்தவும் இன்னும் ஒரு 200 நாட்களை 65 நிர்வாக வேலைப் பொறுப்புக்கான நபர்களை நியமிக்கவும் எடுத்துக் கொண்டது அதிசயமே! இப்போது இங்கு ஓட்டுப் போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 1953இல் டி.வி. நிகழ்ச்சிகளைத் தொடங்கியது பெல்ஜியம். 97 சதவிகிதம் வீடுகளில் கேபிள் டி.வி. உண்டு. நம் தமிழ்நாட்டுப் பெண்மணிகள் போலவே சீரியல்களுக்கு இங்குள்ள பெண்களும் அடிமைகள். முக்கியமான சீரியல் முடிந்த பிறகு தான் சாப்பாடு – இங்குள்ளது போலவே! பெண்களுக்குப் பிடித்த இன்னொரு விஷயமான வைரத்தின் உலகத் தலைநகரமான அன்ட்வெர்ப்பும் பெல்ஜியத்தில் தான் உள்ளது. பெல்ஜியம் கண்ணாடி என்றால் கேட்கவே வேண்டாம். பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம்பளத்தில் இங்கு வேறுபாடே இல்லை. சமத்துவமான சம்பளம் தான்! உலகில் ஆயிரக்கணக்கில் சுவையான உணவு வகைகளை அறிமுகப்படுத்துவதும் பெல்ஜியமே! நமது காமராஜரை நினைவு படுத்தும் படி அனைவரும் படிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட இந்த நாட்டில் 18 வயது வரை கல்வி என்பது அனைவருக்கும் கட்டாயமான ஒன்று. குளிர் மிகுந்த நாட்களில் நாம் பேசினாலே புகை வரும். அப்படி ஒரு நடுக்கும் குளிர். தொழிலகமெல்லாம் நன்கு அடைக்கப்பட்ட கட்டிடங்களில் வெப்பமூட்டும் சாதனங்கள் பொருத்தப்பட்டே இயங்குகின்றன. தொழிலாளிகள் ஜாலியாக ரிலாக்ஸாக, ஆனால் திறம்பட, கொடுத்த வேலையை குறித்த நேரத்தில் தரத்துடன் முடிக்கின்றனர். பெல்ஜியம் பெண்களின் நாடு மட்டுமல்ல; குழந்தைகளுக்கும் பிடித்த நாடு. ஏனெனில் இங்கு தான் வருடத்திற்கு 2,20,000 டன்கள் சாக்லட் உற்பத்தியாகிறது. ப்ரஸ்ஸல்ஸில் உள்ள பன்னாட்டு விமானநிலையத்தில் தான் உலகில் அதிக அளவு சாக்லட் விற்பனை ஆகிறது. பெல்ஜியம் பீருக்கு ஏகப்பட்ட டிமாண்ட் உண்டு. 800 வகையான பீர்கள் இங்கு தயாராகின்றன. சில பீர் பிரியர்களோ, இது தப்பு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பீர்கள் இங்கு தயாராகின்றன என்கின்றனர். ஒவ்வொரு பீரின் வகைக்கும் தக்கபடி ஒவ்வொரு வகையான பாட்டில் தயாரிக்கப்படுகிறது! டுமாரோலேண்ட் என்ற இடத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் எலக்ட்ரானிக் இசை மற்றும் நடனத் திருவிழா உலகினரைப் பெருமளவில் கவர்கிறது; அத்தோடு பெல்ஜியத்திற்கு திருவிழாக்களின் நாடு என்ற செல்லப் பெயரும் உண்டு! ஏனெனில் அன்றாடம் தெருக்களிலும் அரங்கங்களிலும் இசை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கும். உலகின் முதல் லாட்டரிச் சீட்டை அறிமுகப்படுத்தியதும் பெல்ஜியமே. ஆனால் இந்த லாட்டரியில் கிடைக்கும் நிதியை ஏழைகளுக்குக் கொடுக்கவே அது லாட்டரியை நடத்தியது! இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா மீது போடப்பட்ட அணுகுண்டைத் தயாரித்த அமெரிக்கா அதில் எந்த நாட்டு யுரேனியத்தைப் பயன்படுத்தியது தெரியுமா? சமாதானத்தை என்றும் நிலை நிறுத்த விரும்பும் பெல்ஜியத்திலிருந்து வந்த யுரேனியத்தைத் தான்! காங்கோ அதன் காலனியாக இருந்த போது பெல்ஜியம் தரவழைத்தது இந்த யுரேனியம். இங்குள்ள எஞ்ஜினியர்கள் திறமைசாலிகள். ஆகவே தான் உலகின் பெரிய கட்டிடமான பர்ஜ் துபாய் கட்டிடத்தைக் கட்ட துபாய் தேர்ந்தெடுத்த நான்கு கம்பெனிகளுள் பெல்ஜியம் கம்பெனியும் ஒன்றாக அமைந்தது. இங்குள்ள நீதி மன்றம் போல பெரிய அளவிலான கட்டிடம் கொண்ட ஒன்று உலகிலே எங்குமே இல்லை. 26000 சதுர மீட்டர் பரப்புள்ள கட்டிடம் நீதியை நிலை நாட்டுவதில் குறியாக உள்ளது. ஐரோப்பாவின் யூரோ கரன்ஸியை முன் வைத்தது முதன் முதலில் பெல்ஜியம் தான். அது மட்டுமல்ல, அதற்கான யூரோ சின்னத்தை – € – வடிவமைத்துத் தந்ததும் அது தான்! இந்த நாட்டைப் பற்றி ஒரு வரி சொல் என்று சின்னக் குழந்தையைக் கேட்டால் கூட அது சொல்லும் – சாக்லெட் நாடு என்று! ***
Date: 6 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 17-31 Post No. 7064
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.