தமிழர் கடிகாரம்! பழந்தமிழர் அறிவியல்! (Post No.5212)

Compiled by London swaminathan

 

Date: 12 JULY 2018

 

Time uploaded in London – 17-31  (British Summer Time)

 

Post No. 5212

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

இப்பொழுது பயன்படாது என்பது உண்மைதான். மொபைல் போனில் (mobile phone) கடிகாரம்; ஐ பேடில் (I pad) கடிகாரம்; கம்ப்யூட்டரில் கடிகாரம்!

 

பழங்காலத்தில் நாழிகை வட்டில் (Hour Glass)  மூலம் உலகம் முழுதும் மணி கண்டு  பிடிக்கப்பட்டது. ஆனால் தமிழர்கள் ஒரு குச்சியை ஒடித்து அதன் நிழலை வைத்தே மணி கண்டு கொண்டனர். கிராப்புற மக்களுக்கு இது உதவி இருக்கலாம்.

 

இதோ பழைய பாட்டும், விளக்கமும் ‘தமிழ்ப் பொழில்’ பத்திரிக்கையிலிருந்து:–

 

 

–subham–

க்ளோனிங் cloning- அதிசய ஹிந்து விஞ்ஞானம்! (Post No.5198)

Research Article Written by London swaminathan

 

Date: 9 JULY 2018

 

Time uploaded in London – 12-59  (British Summer Time)

 

Post No. 5198

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆண்களும் குழந்தை பெறலாம் என்று ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினேன். மஹாபாரத்திலுள்ள அதிசயக் குழந்தை, சோதனைக் குழாய் குழந்தை போன்ற பத்து விஷயங்களை (26-3-2014) அதில் விளக்கி இரண்டு கட்டுரைகளாக (கீழே இணைப்புகளைக் காட்டியுள்ளேன்) தந்தேன்.

இப்போது மேலும் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சுவையான செய்திகள்

 

‘க்ளோனிங்’ CLONING என்றால் என்ன?

மனிதனை அல்லது உயிரினங்களை அச்சு எடுப்பது ஆகும். அதாவது ஒரு உயிர் அணுவிலிருந்து அந்த உயிரினத்தையே உருவாக்கலாம். இப்படிச் சில ஆடுகளை உருவாக்கி உலகையே வியக்கவைத்தனர் விஞ்ஞானிகள்

உடனே அட! ஆயிரம் காந்திகளை அல்லது ஆயிரம் ஆதிசங்கரர்களை உருவாக்கலாம்; அவர்களுடைய ஒரு உயிருள்ள செல் கிடைத்தால் போதும் என்றனர். ஐய்யயோ, வேண்டாமப் பா; ஆயிரம் ஹிட்லர்களையும் எவனாவது ஒருவன் உருவாக்கி  விடுவான்; இத்தைகைய ஆராய்ச்சிகளுக்கு கட்டு திட்டங்கள் வேண்டும், வரம்பு முறைகள் வேண்டும் என்றெல்லாம் பத்திரிக்கைகளும் டெலிவிஷன்களும் அலறின; நிற்க

 

‘ஸப்ஜெக்டு’க்கு வருவோம்!

இந்து மத இதிஹாச புராணங்களில் பல அதிசய விஷயங்கள் உள்ளன. விஞ்ஞானம் வளர, வளர அவைகள் எல்லாம் விளங்குகின்றன.

 

விஷ்ணுபுராணத்தில் ஒரு கதை வருகிறது:

நிமி என்ற அரசன் விதேக நாட்டை ஆண்டு வந்தான் (தற்போதைய பீஹார்- தெற்கு நேபாளம்); அவன் ஒரு 1000 ஆண்டு யாகத்துக்குத் திட்டமிட்டான்; குல குருவான வசிஷ்டரை அ ணுகி, ‘ஐயனே, அருள் புரியும் என்றான். அவர் சொன்னார்: மன்னர் மன்னா! நான் இந்திரனிடம் ஏற்கனவே ‘அட்வான்ஸ்’ வாங்கிவிட்டேன்; அவன் என்னை 500 ஆண்டு யாகத்துக்கு ‘புக்’ பண்ணிவிட்டான்; அதனால் ஒன்றும் குறைந்து போகாது; முடித்தவுடன் ஓடோடி வருகிறேன்’.

நிமி இதைக் கேட்டு விட்டு ஒன்றும் பதில் சொல்லவில்லை. வசிஷ்டர் நினைத்தார் ‘மௌனம் சம்மதம்’ என்பது பழமொழி. ஆகியால் வந்துவிடுவோம் என்று சென்றுவிட்டார்.

 

 

ஆனால் நிமியோ வேறு ஒரு ரிஷியை அழைத்து யாகத்தை நடாத்திவிட்டார். அந்த ரிஷியின் பெயர் கௌதமர்.

 

ஆசையோடு ஓடி வந்த வசிஷ்டர் அரண்மனையின் கதவைத் தட்டினார்; மன்னர் உறங்கிக் கொண்டு இருப்பதாக வாயில் காப்போன் செப்பினான்.

வந்ததே கோபம், வசிட்டனுக்கு.

பிடி சாபம்! நிமி, நீ இன்று முதல் நிமிர முடியாது; நீ விதேகன் (வி+தேஹ) ஆகக்கடவது! அதாவது உடல் அற்றவன் ஆவாய்.

 

மன்னன் எழுந்தான். ஐயா வசிட்டரே! தூங்கும் போது ஒருவருக்கு சாபம் போட எந்த ஸ்ம்ருதியில் ( இந்துக்களின் சட்டப் புத்தகம்) ‘ரூல்’ இருக்கிறது? இது அநியாயம்; இந்தாரும், பிடி சாபம்!

நீரும் அழிந்து போகக் கடவது!

 

இருவரும் அழிந்தனர். வசிஷ்ட மஹா முனிவன்  ஒரு short cut ஷார்ட் கட் (குறுக்கு வழி) கண்டுபிடித்து வந்துவிட்டார். நிமி, விதேஹன் ஆனதால் அவன் ஆண்ட நாட்டுக்கு விதேஹ நாடு என்று பெயர் ஏற்பட்டது.

 

உடனே அறிஞர் பெருமக்கள் மஹாநாடு கூட்டி புதிய அரசன் யார் என்று தீர்மானித்தனர். நிமியைக் ‘கடைந்து’ ஒரு மன்னனை உருவாக்குவோம் என்று நிமியின் இறந்து கிடந்த உடலைக் ‘கடைந்து’ மிதி என்ற ஒரு மகனை உருவாக்கினர். அவன் ஆண்ட பட்டிணம் மிதிலை ஆகி, அங்கே ஜனகன் ஆண்டு, சீதையை வயல் வெளியில் கண்டு எடுத்து, ராமாயணம் உருவான கதை எல்லோரும் அறிந்ததே.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள வினைச் சொல்லை அப்படியே ‘உடலைக் கடைந்து’ என்று எழுதிவிட்டனர். மொழிபெயர்த்த ஆங்கிலேயர்களும் இந்துக்கள் சரியான முட்டாள்கள் என்று நகைத்துக் கொண்டே  அப்படியே மொழி பெயர்த்து விட்டனர். ஆண்கள் குழந்தை பெறுவதா! என்று அங்கலாய்த்தனர். இப்பொழுது விஞ்ஞானம் வளர்ந்தவுடன் ‘கடைதல்’ என்பது க்ளோனிங்- அச்சு எடுத்தல் – படி எடுத்தல் – என்று விளங்குகிறது. மஹாபாரதத்திலுள்ள பத்து அதிசயங்களையும் இன்னும் பல அதிசயப் பிறப்புகளையும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போதுதான் நான் சொல்வது விஞ்ஞானக் கற்பனைக் கதையோ அல்லது பிதற்றலோ அன்று என்பது தெள்ளிதின் விளங்கும்!

 

இன்னொரு கதை பார்ப்போம்; வேனன் கதை!

 

வேனன் என்றொரு மன்னன் இருந்தான் இவன் கதையும் பல புராணங்கள் மநு ஸ்ம்ருதியின் வியாக்யானம் ஆகியவற்றில் வருகிறது.

வேனன் சொன்னான்

பிராஹ்மனணர்களே!

நான்தான் யாக யக்ஞங்களின் ஆகுதிகளைப் பெற தகுதியுடையவன்; ஆகையால் இந்திரன் சந்திரன் என்று சொல்லி வீணடிக்காமல் எல்லாவற்றையும் எனக்கே நல்குக.

 

ஐயர்மார்கள் சொன்னார்கள்

“மன்னா; கோபித்துக்கொள்ளாது அப்படியெலாம் வழக்கமும் இல்லை; மேலும் நமக்கும் மேலே ஒருவன் உளன்.”

மன்னன், பிடிவாதம் பிடிக்கவே, சரி ‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; ஆடுற மாட்டை ஆடிக் கறக்கனும் பாடுற மாட்டைப் பாடிக் கறக்கனும்’ என்று கருதி பிராஹ்மண மஹாநாட்டு முடிவுப்படி மன்னனை தர்ப்பை புல்லைக் கொண்டே கொன்றுவிட்டனர்.

 

 

இந்து அகராதியில் ‘மன்னன் அற்ற’ (அ+ராஜக) என்றால் சட்ட ஒழுங்கற்ற ‘அ+ ராஅஜக’ என்று பொருள்; நாடு முழுதும் அராஜகம் தாண்டவ மாடியது. மீண்டும் ஐயர்கள் மஹாநாடு கூட்டி வேனனின் உடலைக் கடைந்து, பிள்ளையை உண்டாக்குவோம் என்று பணியைத் துவக்கினர் (ஹரி வம்ஸம் என்னும் நூல் வேனனின் உடலில் வலது கையைத் தேய்த்து……….என்று விளம்பும்). எல்லோரும் உடலைத் தேய்த்தவுடன் அல்லது கடைந்தவுடன் ஒரு கறுப்பு, குள்ள உருவம் வந்தது. நீ இங்கே அமர் நிஷத்த என்றனர். ஸம்ஸ்க்ருதத்தில் ‘நிஷத்த’. அவர்கள் நிஷாதர்கள் ( பழங்குடி வேடுவர்கள் ) ஆனார்கள். அவர்களை விந்திய மலைக்கு அனுப்பிவிட்டனர்.

அதாவது ஐயர்கள் செய்த முதல் க்ளோனிங் ஜ்ராஸ்ஸிக் பார்க் Jurassic Park கதை போல எதிரிடை விளைவை உண்டாக்கிவிட்டது. முதல் எக்ஸ்பெரிமெண்ட் தோல்வி.

பிராஹ்மணர்கள் மீண்டும் ஒரு மஹா நாடு கூட்டி இரண்டாவது முதல் தேய்தபோது—உடலை    கடைந்த போது– அற்புதமான, ஒளிவீசும் பிருது தோன்றினான். அவன் ஆண்டதால் பூமிக்கு ஸம்ஸ்க்ருதத்தில் ‘ப்ருத்வீ ‘என்ற பெயரும் நிலைத்தது.

கதையை நிறுத்திவிட்டு சிறிது ஆராய்ச்சி செய்வோம்; புராணங்கள் எவ்வளவு அழகாக உண்மையை உரைக்கின்றன என்று பாருங்கள். முதல் க்ளோனிங் பரிசோதனை தோல்வி அடைந்து அறிவற்ற ஒருவன் வரவே அவனைக் கொல்லாமல் விந்திய மலைக்கு அனுப்ப, அவன் நிஷாதர்களென்ற ஒரு இனத்தை உருவாக்க, பிறகாலத்தில் அவர்களில் ஒருவனாக வால்மீகி எனும் மாமுனிவன் உருவாக வழிவ கடைந்தனர்.

 

இரண்டாவது Kலோனிங் எக்ஸ்பெரிமெண்டில் ப்ருது தோன்ற, உலகம் உய்வு பெற்றது

 

உடலைத் தேய்த்து— உடலைக் கடைந்து- அதாவது செத்துப்போன ஒரு ஆணின் ‘ஸெல்’ (cell) லிலிருந்து ஒரு மனிதனை உருவாக்கினர். அதை அப்படியே எழுதியும் வைத்தனர். விஞ்ஞானம் வளராதபோது செத்துப்போன ஆண் உடலில் இருந்து ஒரு மனிதனா என்று நகைத்தோம்! இப்பொழுது வியக்கிறோம். இதிஹாச, புராணங்களில் உள்ள பெயர்கள் பல்லாயிரம்; அதில் இது போல அதிசயச் செய்திகள் விகிதாச்சரப்படி குறைவே; பெயர் தெரியாமல் இறந்த புராண மனிதர்கள் இன்னும் பல்லாயிரம்; அவர்களையும் கணக்கெடுத்தால் இந்த மாதிரி செய்திகள் குறைவே; ஆகவே இருக்கும் புராணக் கதைகளை அறிவியல் நோக்கில் நாம் பார்க்க வேண்டும்.

 

 

முன்னரே எழுதிவிட்டேன்; அகஸ்த்யர் கடலைக் குடித்தார் என்றால் அகஸ்த்யர் கடல் கடந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்றார் என்று பொருள்

அகஸ்த்யர் விந்திய மா மலையை கர்வபங்கம் செய்தார் என்றால் முதல் முதலில் மலை வழியாக சாலை அமைத்து தென்னகம் வந்தார் என்று பொருள்.

 

 

அதற்கு முன் பஞ்ச பாண்டவர்கள் ராமன், ராவணன் முதலானோர் படகு அல்லது கடலோர வழிகலையே பயன்படுத்தி தென்னகம் வந்தனர்.பகீரதன், பல்லாயிரமாண்டு தவம் செய்து கங்கையைக் கொணர்ந்தான் என்றால் அவன் முன் னோர்கள் செய்ய முயன்று தோல்வியுற்ற கங்கை நதி திசை மாற்றுத் திட்டத்தில் வெற்றி பெற்றான் என்று பொருள்.

 

 

ஆக புராணக்காரர்களின் மொழிகளைப் புரிந்து கொண்டால் இனி வரப்போவதையும் சொல்ல  முடியும். அதை நான் ஏற்கனவே இரண்டு கட்டுரைகளில் தந்துவிட்டேன்.

 

கண்டு மகிழ்க

 

–சுபம், சுபம்-

 

  1. ஆண்களுக்குகுழந்தை | Tamil and Vedas

tamilandvedas.com/tag…

Posts about ஆண்களுக்கு குழந்தை … குழந்தை பெறலாம். … ஆண்களும் …

  1. ஆண்களுக்கும்குழந்தை | Tamil and Vedas

tamilandvedas.com/tag…

Posts about ஆண்களுக்கும் குழந்தை … ஆண்களும் … //tamilandvedas.com/2017/05/23/%e0%ae …

மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம் கிடைத்துவிட்டது!-பகுதி1 …

tamilandvedas.com/2014/03/26…

Gandhari, Draupadi, Kunti. கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன் கட்டுரை எண் 934 தேதி …

Previous Post
பகுதி 2: – மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம் கிடைத்தது

இகிகை – நீண்ட நாள் வாழ ஜப்பானிய ரகசியம்! – 2 (Post No.5185)

Written by S NAGARAJAN

 

Date: 6 JULY 2018

 

Time uploaded in London –   5-09 AM (British Summer Time)

 

Post No. 5185

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

பாக்யா 6-7-18 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியா எட்டாம் ஆண்டு பதினெட்டாம் கட்டுரை

இகிகை – நீண்ட நாள் வாழ ஜப்பானிய ரகசியம்! – 2

.நாகராஜன்

 

இகிகை கொள்கையைக் கடைப்பிடித்து ஏராளமானோர் தங்கள் வாழ்வின் அர்த்தத்தைக் கண்டுபிடித்து வளமாக வாழ்ந்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக ஜப்பானைச் சேர்ந்த  விளையாட்டு வீரரான தடை ஓட்ட சாம்பியன் டாய் தமேசுவைக் (Dai Tamesue) கூறலாம்.  1978இல் ஹிரோஷிமாவில் பிறந்த அவர் வோர்ல்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 2001,2005ஆம் ஆண்டுகளில் வெங்கல மெடலைப் பெற்றார். தொடர்ந்து சிட்னி, ஏதன்ஸ், பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஜப்பானின் சார்பாகக் கலந்து கொண்டார். 2012இல் அவர் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

இப்போது என்ன செய்வது என்ற கேள்வி அவரை திகைக்க வைத்தது. அப்போது தான் அவருக்கு இகிகை ஞாபகத்திற்கு வந்தது.

 

 

தான் சிறந்து விளங்கும் விளையாட்டுத் துறையில் ஈடுபட நினைத்த அவர் விளையாட்டுத் துறை சம்பந்தமான அனைத்து சங்கங்களிலும் ஈடுபட்டு சமுதாயத்தில் விளையாட்டுத் துறையின் மதிப்பை அதிகரிக்கத் தன்னால் ஆனதைச் செய்ய முன்வந்து தன் வாழ்க்கைக்கான அர்த்தத்தைக் கண்டு பிடித்தார். இப்போது அவருக்கும் மன நிம்மதி.சமுதாயத்திற்கும் பலன்!

“விளையாட்டு பற்றிய மக்களின் பார்வையை நேராக்குவது தான் என் நோக்கம். அதற்கு இகிகை உதவுகிறது” என்கிறார் அவர்.

 

பணி ஓய்வுபெறும் அனைவருக்கும் இகிகை ஒரு பெரிய உதவும் சாதனம்.

 

சரி, பணியில் இருப்பவர்களுக்கு? அவர்களுக்கும் இகிகை பெரிய அளவில் உதவுகிறது. வேலையில் ஈடுபட்டு கடினமாகவும் நீண்ட நேரமும் உழைக்க வேண்டும் என்று இகிகை கூறுவதில்லை.

மாறாக, பணியில் நீங்கள் எந்த உணர்வை உணர்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடிக்கச் செய்வதே இகிகை.

ஜப்பானில் மாதத்திற்கு சுமார் 80 மணி நேரம் ஓவர் டைம் பார்த்து உழைப்பவர்களில் கரோஷியால் பாதிக்கப்படுகின்றனர்.

கரோஷி என்றால் அதிக நேரம் வேலை செய்வதால் மரணத்தை அடைவது என்று பொருள்.இப்படி ஓவர் டைம் பார்த்து உழைத்து உழைத்து  வருடத்திற்கு ஜப்பானில் 2000 பேர் இறக்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.

மிச்சிகன் பல்கலைக் கழகம் ஒரு சோதனையைச் செய்தது. அதன் படி போனில் பேசி ஸ்காலர்ஷிப்பிற்காக நிதி திரட்ட உதவ முயற்சித்தவர்களை விட,  மாணவர்களுக்கு உதவ இருப்பவரை நேரில் சந்திப்பதன் மூலம் 171 சதவிகிதம் அதிக நிதியைத் திரட்டினர்.

 

வாழ்க்கையில் எல்லா அம்சங்களிலும் இகிகை உதவும். பெரிதாகத் திட்டம் போட வேண்டாம்; உலகத்தின் பசியைத் தீர்க்க முனைவதற்குப் பதிலாக உங்கள் பகுதியில் பசியோடு வாடுவோரின் பசியைத் தீர்க்க உதவலாம் என்கிறது இகிகை.

 

உங்களின் இகிகை பற்றி நீங்கள் அறிந்து விட்டால் மட்டும் போதாது; உடனே செயலில் இறங்க வேண்டும்.

92 வயதான பெண்மணியான டோமி மேனகாவிற்கு KBG84 டான்ஸ் குழுவில் பாடி ஆடுவது  தான்  இகிகை.

யோகோ டகாடோ என்ற பெண்மணி பெரிய தலைமை நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பவர். அவர் தனது அனுபவத்தால் கூறுவது இது தான்: “மிக அதிகமான தகுதி படைத்த உயர் அதிகாரிகளுக்கு உள்ள பொதுவான ஒரு அம்சம் பணியை இகிகையாகக் கருதுகின்றனர். அவர்களுக்கு வேலை செய்வதில் அதிக உந்துதல் இருக்கிறது; உடனடியாக எதிலும் அவர்கள் செயலில் இறங்குவர்.”

 

 

 

மேலை நாடுகளில் இப்போது இகிகை பற்றிய ஆர்வம் மிகவும் பெருகி இருப்பதால் அது பற்றிய புத்தகங்கள் ஏராளம் வெளி வந்துள்ளன. நேரடியாகப் பார்ப்பதற்காக எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் ஜப்பானிலுள்ள ஒகினாவா நோக்கிச் செல்கின்றனர்.

அங்கு அவர்கள் பார்ப்பது அவர்களை ஆச்சரியத்திற்குள்ளாக்குகிறது. ஒகினாவாவில் (Okinawa) 102 வயதான கராத்தே மாஸ்டர் தனது இகிகையினால் கராத்தே பயிற்சியை தனது மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறார். 100 வயதான மீனவர் ஒருவர் கடலில் சென்று மீன்களைப்பிடித்து வந்து தனது குடும்பத்திற்கு அவற்றைச் சந்தோஷமாக வழங்குகிறார்.

 

 

ஒகினாவாவில் வாழ்பவர்களுக்கு சராசரி வயது: ஆண்களுக்கு 81; பெண்களுக்கு 87. இதைத் தாண்டி விட்டால் அவர்கள் நூறு வயது வாழ்வது நிச்சயம்.ஜப்பானில் உள்ள நூறு வயது தாண்டியோரை எடுத்துக் கொண்டால் அந்த எண்ணிக்கையைப் போல ஐந்து மடங்கு அதிகம் பேர் ஒகினாவாவில் வாழ்கின்றனர். கான்ஸர், மாரடைப்பு, மனச்சோர்வு, இதர பயங்கர வியாதிகள் எதுவும் ஒகினாவா மக்களுக்கு ஏற்படுவதில்லை.

காரணம் – இகிகை.

 

 

பரபரப்பான வாழ்க்கை இல்லாமல் நிதானமாக வாழ்க்கையை அணு அணுவாக – சூடான இட்லியை விண்டு விண்டு சட்னி சாம்பாருடன் மெதுவாகச் சுவைத்துச் சாப்பிட்டு பசியைத் தணிப்பது போல – அவர்கள் வாழ்கின்றனர். அவர்கள் ஜிம் போன்ற உடற்பயிற்சி கழகங்களுக்குச் செல்வதில்லை.மாறாக தங்கள் தோட்டத்தில் தோட்ட வேலையில் ஈடுபடுகின்றனர்.தாய் -சி பயிற்சிகளைச் செய்கின்றனர்; சைக்கிள் ஓட்டுகின்றனர்.

அளவோடு சாப்பிடுகின்றனர்.

ஆக இந்த ஜப்பானிய உத்தியைக் கையாண்டு நாமும் வாழலாம் – நூறு ஆண்டுகள்.

இகிகை – இயற்கை மனிதர்கள் நூறாண்டு வாழ ‘உதவும் கை’!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

பிரபல பிரிட்டிஷ் விஞ்ஞானியான பால் டிராக் (Paul Dirac) ஒரு முறை  அவரது நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தார். அவரது மனைவி அன்யா (Anya) அப்போது பின்னல் வேலையில் (kinitting) ஈடுபட்டிருந்தார். அவரது கைகள் லாவகமாகவும் வேகமாகவும் சுழன்று பின்னுவதைப் பார்த்த பால் டிராக் அசந்து போனார்.

அவர் கிளம்பிச் சென்ற சில மணி நேரங்களில் மீண்டும் நண்பர் வீட்டிற்கு வந்தார்.

 

 

அவரது நண்பரின் மனைவியைப் பார்த்து, “இதை இன்னொரு விதமாகவும் செய்யலா

﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽ppy Life)  – The Long and Happy Life)ho’ம்” என்று கூறித் தான் ‘கண்டுபிடித்த’ தனது புது முறையை அவர் அன்யாவுக்குச் செய்து காண்பித்தார்.

மௌனமாக அவர் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்த அன்யா கடைசியில் அவர் நிறுத்தியவுடன், “இது பல நூற்றாண்டுகளாக பெண்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதே! இதன் பெயர் பர்லிங் (purling) – பின்னல் வேலையில் நேர் மாறாகச் செய்யும் முறை – என்றார்.

பால் டிராக்கிற்கு நிட்டிங்கும் புதுமையாக இருந்தது; பர்லிங்கும் புதுமையாக இருந்தது!

***

 

விஞ்ஞான விளக்கம்- பிரம்ம முகூர்த்தம்-2 (Post No.5175)

Written by London swaminathan

 

Date: 3 JULY 2018

 

Time uploaded in London –   11-19 am (British Summer Time)

 

Post No. 5175

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்

புன்மை இருட்கணம் போயின யாவும்

எழுபசும் பொற்சுடர் எங்கனும் பரவி

எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி

 

பாரதியாரின் திருப்பள்ளி எழுச்சி

நேற்றைய கட்டுரையில் பிரம்ம முஹூர்த்தம் பற்றிய தமிழ்ப் பாடல்களைக் கொடுத்தேன். இன்று சில ஸம்ஸ்க்ருத பாடல்களையும் காண்போம்.

 

எல்லா சங்கராச்சார்ய, சாது, சந்யாஸி மடங்களில் அனைவரும் அதிகாலை4-30 மணிக்கு எழுந்து அனுஷ்டானங்களைத் தொடர்கின்றனர். நாடு முழுக்க ஆர். எஸ்.எஸ் காரர்கள் நடத்தும் முகாம்களில் எல்லோரையும் 4-30 மணிக்கு எழுப்பி விடுகிறார்கள். இந்த நேரத்தில் மனம் மிகத் தெளிவாக இருக்கும். படித்ததும், செய்யும் பயிற்சியும் பன்மடங்கு பலன் தரும்.

விஹாங்க யோகம் என்பதை பரப்பிவரும் சத்குரு தரம் சந்திர தேவ்ஜி, அதிகாலையில் எழுந்திருப்பதோடு பிரஹ்ம முஹூர்த்தத்தின் சிறப்பையும் எடுத்துக்காட்டியுள்ளார் அமிர்த வேளை எனப்படும் நேரத்தில் மனதும் தூய்மையாக இருக்கிறது. வெளியிலுள்ள புறச்சூழலும் தூய்மையாக இருக்கிறது; இதனால் புத்துணர்வு பிறக்கிறது. எதையும் எளிதாகச் செய்ய முடிகிறது என்கிறார்.

 

இதை அறிவியலும் ஒப்புக்கொள்கிறது.

மனிதர்கள் நல்ல ஆரோக்கியமாக வாழ உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகள் சில வகை ஹார்மோன்களைச் சுரக்கின்றன. இதில் ஒன்று பிளாஸ்மா கார்டிசால் (PLASMA CORTISOL). இது மன உளைச்சல், மன வடு ஆகியவற்றிலிருந்து விடுபட உதவி செய்கிறது ஏ.ஸி.டி.எச். (ACTH) என்பதன் செல்வாக்கில் ADRENAL அ ட் ரினல் கார்டெக்ஸிலிருந்து இது சுரக்கும். இந்த ஏ.ஸி.டி.எச். காலையில் அதிகமும் மாலையில் குறைவாகவும் சுரப்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகையால் காலையில் படிக்கக்கூடிய விஷயங்களை அதிகம் நினைவு வைத்துக் கொள்ள முடியும்.

 

ஆயுர்வேத கணக்குப்படி காலை நேரம் வாத கட்டுப்பாட்டிலுள்ள நேரம் (வாதம், பித்தம், கபம் என்பன மூன்று வகை தோஷங்கள் அல்லது குணங்கள்)

 

சுவாமி நித்யானஎந்தாவும் பிரஹ்ம முஹூர்த்த்தின் சிறப்பை விதந்து ஓதுகிறார்.

 

பிரஹ்ம முஹுர்த்தே உத்திஷ்டதேத் ஸ்வஸ்தே ரக்ஷார்த்தம் ஆயுஷே

தத்ர ஸர்வதா சாந்த்யர்த்தம் ஸ்மரேச்ச மதுசூதனம்

-அஷ்டாங்க ஹ்ருதயம்

 

பொருள்; ஒவ்வொருவரும் பிரஹ்ம  முஹூர்த்தத்தில் எழுந்திருப்பதானால் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியமான வாழ்வையும் அமைதியையும் பெறலாம். மது சூதனனையும் சிந்திப்பாயாக

ஆயுர்வேத கணக்குப்படி

மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை- கப ஆதிக்கம்

இரவு 10 மணி முதல் இரவு 2 மணிவரை- பித்த ஆதிக்கம்

இரவு 2 மணி முதல் காலை 6 மணிவரை- வாத ஆதிக்கம்

வாதத்தின் ஆதிக்க காலமே யோகப் பயிற்சிகளுக்குச் சிறந்தது.

 

சீக்கியர்களும் பௌத்தர்களும்

 

சீக்கியர்கள் ஒரு நாளை எட்டு, ‘மூன்று மணிக்கூறு’களாக (8×3 = 24) பிரித்து அதி காலை மூன்று மணி நேரமே சிறந்தது என்பர்.

பௌத்தர்கள் இந்து தர்மம் சொன்ன யோகத்தையே பின்பற்றுவதால் அதிகாலையில் எழுந்தே பயிற்சி செய்வர்.

இஸ்லாமும் முதல் பிரார்த்தனை அறைகூவலை சூர்யோதயத்துக்கு முன்பாகவே செய்கிறது.

 

இந்துக்களின் கணக்குப்படி

ஒரு நாழிகை என்பது 24 நிமிஷம்;

ஒரு நாளில் 60 நாழிகைகள்;

ஒரு முஹூர்த்தம் என்பது 48 நிமிஷங்கள்.

 

கட்டுரையாளர்,—- ஆயக்குடி சுவாமிஜி கிருஷ்ணா அவர்கள் செய்துவந்த கணபதி ஹோமங்களுக்குச் செல்வதுண்டு. அவர் வாழ்நாள் முழுதும் சூர்யோதயத்துக்கு முன்னால் – கிட்டத்தட்ட காலை 5 மணி அளவில் ஹோமத்தை முடித்து விடுவார். அந்த நெய்ப்புகை மணம் காற்று ம

ண்டலத்தையும் மனதையும் தூய்மைப் படுத்தும்

 

 

இவ்வாறு பல பலன்களைத் தரும் பிரஹ்ம முஹூர்த்ததில் படிப்பது மாணவர்களுக்கு நன்மை பயக்கும். இதற்கு முதல் படியாக இரவு ஒன்பது மணிக்குத் தூங்கச் செல்ல வேண்டும். அதற்கு முதல் படியாக டெலிவிஷன், மொபைல் போனை அணைத்துவிட்டு புஸ்தகம் வாசிக்கத் துவங்க வேண்டும். நித்திரை தேவி நம்மை ஆட்கொள்வது நிச்சயம். காலை 4 மணிக்கு படுக்கையிலிருந்து துள்ளி எழலாம்! இது எனது 20, 30 ஆண்டு அனுபவம். இரவுச் சாப்பாட்டை இரவு 7 மணிக்குள் முடித்தால்தான் தூக்கமும் வரும்; நேரம் கழித்துச் சாப்பிட்டு உடனே உறங்கப் போனால் ‘துக்கம்’ வரும் தூக்கம் வராது; அனுபவ உண்மை.

பிரஹ்ம முஹூர்த்தம் வாழ்க!

Previous Article:

பிரம்ம முகூர்த்தம்- வைகறை துயில் எழு- அவ்வையார் -Part 1(Post No.5172)

 

–சுபம்–

இகிகை – நீண்ட நாள் வாழ ஜப்பானிய ரகசியம்! – 1 (Post No.5159)

Written by S NAGARAJAN

 

Date: 29 JUNE 2018

 

Time uploaded in London –   6-35 AM (British Summer Time)

 

Post No. 5159

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாக்யா 29-6-18 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு பதினேழாம்) கட்டுரை

இகிகை – நீண்ட நாள் வாழ ஜப்பானிய ரகசியம்! – 1

.நாகராஜன்

 

ஜப்பானில் லட்சக்கணக்கானோர் காலையில் படுக்கையிலிருந்து இகிகை-கொள்கையுடன் (Ikigai) எழுந்திருக்கின்றனர்.

இகிகை என்றால் “உயிருடன் இருப்பதற்கான காரணம்” என்ற கொள்கையாகும். அப்படியே மொழி பெயர்ப்பது என்றால் “நீ காலையில் விழித்தெழுவதற்கான காரணம்” என்று சொல்லலாம்.

எதற்காக வாழ்கிறோம் என்ற நம்பிக்கையும்  வாழ்க்கை என்பதற்கு நாம் தரும் மதிப்புகளுமே இகிகை.

இகிகை எதையும் உங்களிடம் வலியச் சுமத்தாது. வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் மதிப்புகள் சுயமாகவே எழும்.

 

ஜப்பானில் உள்ள ஓகினாவா தீவில் தான் இகிகை தோன்றியது. அங்கு தான் உலகில் நூறு வயதை எட்டிய ஏராளமானோர் இருக்கின்றனர். நூறு வயது வாழ்வை அடைய இகிகை தான் காரணமா?

 

உலகில் நூறு வயதை எட்டியோரைப் பற்றி ஆராய்ந்து டான் ப்யூட்னர் என்பவர் ப்ளூ ஜோன்ஸ்: லெஸன்ஸ் ஆன் லிவிங் லாங்கர் ஃப்ரம் தி பீப்பிள் ஹூ ஹாவ் லிவ்ட் லாங்கஸ்ட் (Dan Buettner : Blue Zones: Lessons on Living Longer from the people Who’ve Lived the Longest) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அவர் நூறு ஆண்டு வாழ இகிகை தான் காரணம் என நம்புகிறார்.

 

ப்யூட்னர் தனது புத்தகத்தில் வலியுறுத்தும் ஒரு முக்கிய விஷயம் இகிகை என்பது ஓகினாவா தீவில் உள்ளவர்களுக்காக மட்டுமே உள்ள ஒன்று அல்ல என்பது தான். நீடித்து 100 வயது வாழும் சார்டினா மற்றும் நிகோயா தீபகற்பத்தில் வாழ்பவர்களும் கூட இந்தக் கொள்கையைப் பின்பற்றுபவர்களே, இகிகை என்ற வார்த்தையால் அதை அவர்கள் குறிப்பிடுவதில்லை”  என்கிறார் அவர்.

 

இகிகை என்பது மூன்று விஷயங்களைக் கொண்டது.

  • நீங்கள் உங்கள் வாழ்க்கை என்பதற்குத் தரும் ஆதாரமான மதிப்புகள் 2) நீங்கள் செய்ய விரும்பும் விஷயங்கள் 3) நீங்கள் சிறந்து விளங்கும் விஷயங்கள். இவை இணைவது தான் உங்களின் இகிகை.

 

உங்கள் குறிக்கோளை நீங்கள் வாழ்க்கையில் இழந்து விட்டால் அது மிகவும் மோசமான விளைவுகளை உங்களுக்கு ஏற்படுத்துகிறது என்பது பல ஆய்வுகளின் முடிவுகள்.

 

அமெரிக்க பழங்கால இதிகாச ஆராய்ச்சியாளரான ஜோஸப் காம்பெல், “நான் எனது மாணவர்களிடம் வலியுறுத்தும் ஒரு விஷயம்; உனக்கு அளிக்கப்பட்ட வரங்களைப் பின்பற்று; அவை என்ன என்று கண்டுபிடி; அப்படியே அதைப் பின்பற்று” என்கிறார்.

 

உங்களுக்கு இயல்பாக அமைந்த திறமைகள் தான் உங்களுக்கு (இறைவனால் ) அளிக்கப்பட்ட வரங்கள்!

ஹெக்டர் கார்சியா என்பவர் இகிகை; தி ஜபானீஸ் சீக்ரட் டு  எ லாங் அண்ட் ஹாப்பி லைஃப் என்ற புத்தகத்தின் இணை எழுத்தாளர். (Hector Garcia, Co-author : Ikigai: The Japanese Secret to a Long and Happy Life).

 

“மனிதகுலம் தோன்றியதிலிருந்து பார்த்தால் பொதுவாக பணத்தின் பின்னால் ஓடுவதே வழக்கமாக இருக்கிறது. ஆனால் சிலரோ பணத்திற்கும் புகழுக்கும் ஆசைப்படாமல் அதை விட பெரிய விஷயங்களுக்கு ஆசைப்படுகின்றனர். வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பதைக் கண்டுபிடிப்பதற்கான இந்த விஷயத்திற்கு ஏராளமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு குறிப்பிடப்படுகின்றன” என்கிறார் அவர்.

உங்களுக்கு உங்களின் இகிகை- ஐக் கண்டுபிடிக்க ஆவலாக இருக்கிறதா?

அதற்கு நான்கு முக்கிய விஷயங்கள் உள்ளன:

  • நீங்கள் எதை மிக மிக அதிகமாக விரும்புகிறீர்கள்? (வெறித்தனமான ஆசை என்கிறோமே அது தான்)
  • உலகத்தின் தேவை என்ன? ( அதற்கான உங்களது பணி)
  • நீங்கள் எதில் மிகவும் சிறந்து விளங்குகிறீர்கள்? (உங்களது திறமை)
  • எந்தப் பணியில் நீங்கள் சம்பாதிக்க முடியும்? (உங்கள் தொழில்)

 

இந்த நான்கும் இணைந்தது தான் உங்களது இகிகை!

இதை மட்டும் நீங்கள் கண்டுபிடித்து விட்டால் சந்தோஷமாக நீண்ட காலம் நீங்கள் வாழலாம்.அதாவது உங்கள் இகிகை-ஐ கண்டுபிடிப்பது உங்களின் முதல் காரியமாக இருக்க வேண்டும்!

அதை எப்படிக் கண்டுபிடிப்பது?

 

 

நான்கு கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்:

  • எதை நான் விரும்புகிறேன்?
  • எதில் நான் சிறந்து விளங்குகிறேன்?
  • இப்போது எந்த வேலையில் எனக்குப் பணம் கிடைக்கிறது?
  • உலகத்தின் இன்றைய தேவை என்ன?

இந்த நான்கையும் இணைத்து உங்களின் இகிகை எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

 

 

அதன் வழியில் உங்களின் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ளுங்கள். நீண்டகாலம் அமைதியாக சந்தோஷமாக வாழலாம். இது தான் ஜப்பானிய ரகசியம்!

ஹெக்டர் கார்சியா மற்றும் ஃப்ரான்செஸ்க் மிரல்லெஸ் ஆகியோர் (Hector Garcia & Francesc Miralles : Ikigai – The Japanese Secret to a Long and Happy Life) இகிகை பற்றிய தங்கள் நூலில் இகிகைக்காக பத்து விதிகளைத் தொகுத்துத் தந்துள்ளனர்.

 

 

  • எப்பொதும் செயலூக்கத்துடன் இருங்கள். ரிடையர் ஆகாதீர்கள்.
  • மிக மிக அவசரம் என்பதை விட்டு விடுங்கள்; சற்று மெதுவாக நிதானமாக வாழ்க்கையைக் கொண்டு செலுத்துங்கள்.
  • 80 சதவிகிதம் வயிறு நிறைந்தவுடன் போதும் என்று சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்
  • நல்ல நண்பர்களை உங்களைச் சுற்றி இருக்க விடுங்கள்.
  • உங்கள் உடலை நல்ல உடல் பயிற்சியைத் தினசரி செய்வதன் மூலம் கட்டுக்கோப்புடன் அழகாக வைத்திருங்கள்.
  • புன்சிரிப்புடன் உங்களைச் சுற்றி இருக்கும் அனைவரையும் அரவணையுங்கள்
  • இயற்கையுடன் ஒன்றுங்கள்.
  • நமது நாளை ஜொலிக்க வைக்கும் எதற்கும், நமது வாழ்க்கையை உயிர்ப்புடன் வாழ வைக்கும் எதற்கும் நன்றி தெரிவியுங்கள்.
  • நிகழ்காலத்தில் – இந்தக் கணத்தில் வாழுங்கள்

10) உங்கள் இகிகை படி வாழுங்கள்!

இன்னும் இகிகை பற்றிச் சற்றுப் பார்ப்போம்.

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

..

1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகி நகர்களின் மீது அணுகுண்டு வீசப்பட்டது. அணுகுண்டையும் பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனையும் சம்பந்தப்படுத்தி அவர் தான் அணுகுண்டு வெடிக்கக் காரணம் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் உண்மையில் இதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அவர் நேரடியாக அணுகுண்டு தயாரிக்கும் திட்டத்தில் ஈடுபடவில்லை.

 

 

ஹிட்லர் மின்னல் வேகத்தில் ஆக்கிரமித்து நாடுகளைக் கைப்பற்றும் சமயத்தில் ஜெர்மனியில் அணுகுண்டு தயாரிக்கப்படலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதைப் பற்றிக் கவலைப்பட்ட லியோ ஜிலார்ட் மற்றும் யூஜின் விக்னர் (Leo Szilard and Eugene Wigner) ஆகிய விஞ்ஞானிகள் எதாவது செய்ய வேண்டுமென நினைத்தனர். ஜிலார்ட் அமெரிக்க ஜனாதிபதியான ருஸ்வெல்ட்டுக்கு ஒரு கடிதம் எழுதி அதில் ஐன்ஸ்டீனையும் கையெழுத்திடச் செய்தார். ஜிலார்டுக்கு அதிகாரவர்க்கத்திடம் செல்வாக்கு இல்லை என்பதே இதற்குக் காரணம்.

 

 

அணுகுண்டு சோதனை வெற்றி பெற்றது.

அணுகுண்டுகள் போடப்பட்டு இரண்டாவது உலக மகா யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது.

 

அணுகுண்டு போடப்பட்ட பின்னர் ஒரு வருடம் ஐன்ஸ்டீன் அதைப் பற்றிய கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஒரு வருடம் கழித்து நியூயார்க் டைம்ஸ் அவரது கருத்தாக, “ரூஸ்வெல்ட் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவர் அணுகுண்டு போட அனுமதித்திருக்க மாட்டார்” என்பதை வெளியிட்டது.

 

 

ஐன்ஸ்டீன் பின்னர், “நான் அணுகுண்டை ஜப்பானுக்கு எதிராகப் பயன்படுத்துவதை எப்போதுமே எதிர்த்து வந்தேன்” என்று கூறினார்.

1954, நவம்பரில், ஐன்ஸ்டீன் இறப்பதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் அவர் அணுகுண்டு தயாரிப்பு பற்றிய தனது முத்தாய்ப்பான கருத்தை இப்படிச் சொன்னார்: “ நான் எனது வாழ்க்கையில் ஒரு பெரிய தவறைச் செய்தேன். ரூஸ்வெல்ட்டிற்கான கடிதத்தில் அணுகுண்டு தயாரிக்கப்படவேண்டும் என்று பரிந்துரை செய்து கையெழுத்திட்டது தான் அது. ஆனால் அதிலும் ஒரு நியாயம் இருந்தது, ஜெர்மானியர்கள் அதை செய்யும் அபாயம் இருந்தது.”

(“I made one great mistake in my life… when I signed the letter to President Roosevelt recommending that atom bombs be made; but there was some justification – the danger that the Germans would make them.”)

ஐன்ஸ்டீன் செய்த தவறு என்று அவரே ஒத்துக் கொண்டது அணுகுண்டு தயாரிப்பு பற்றித் தான்!

***

 

விமான சாஸ்திரம்- சுப்பராய சாஸ்திரி – 1 (Post No.5142)

Written by S NAGARAJAN

 

Date: 24 JUNE 2018

 

Time uploaded in London –  6-56 am  (British Summer Time)

 

Post No. 5142

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

 

பாரத சாஸ்திர ரகசியம்

புராதன சாஸ்திரங்களை உலகிற்கு அறிமுகப் படுத்திய மேதை சுப்பராய சாஸ்திரி – 1

 

ச.நாகராஜன்

 

சுப்பராய சாஸ்திரியின் சரித்திரம் மிகவும் ஆச்சரியமூட்டும் ஒன்று.

 

புராதன சாஸ்திரங்களை எல்லாம் அவர் அறிமுகப்படுத்திய போது இந்தியாவே வியந்தது.

விமான சாஸ்திரம் பற்றி அவர் தந்த விவரங்களைக் கொண்டு ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிக்கும் முன்னரே பம்பாயில் விமானம் ஒன்று செய்யப்பட்டு அதன் சோதனை ஓட்டம் ஒன்று நடந்ததை சமீப காலத்தில் பலரும் பல கட்டுரைகளின் வாயிலாகத் தெரிவித்துள்ளனர்.

 

சுப்பராய சாஸ்திரியின் இளமைப் பருவம் மிகவும் சோகமான ஒன்று.

 

இளமையிலேயே அனாதரவாக கைவிடப்பட்ட அவர் கொடூரமான ஒரு தோல் வியாதியால் பாதிக்கப்பட்டார்.

வியாதியுடன் ஒவ்வொரு இடமாகத் தவழ்ந்து தவழ்ந்து சுற்றி அலைந்தார்.

 

ஒரு நாள் தாகத்தைத் தணிக்க நீரை அருந்துவதற்காக ஒரு குளத்திற்குச் சென்றார். தவறி அந்தக் குளத்தில் அவர் விழுந்த போது ஒரு அற்புதம் நிகழ்ந்தது.

 

அவர் ஒரு குகைக்குள் இருந்தார். ஒரு சாது அவரைக் கண்டு இரக்கப்பட்டு அவரது வியாதியைத் தனது தபோ சக்தியின் மூலம் குணப்படுத்தினார்.

அத்துடன் அவர் நிற்கவில்லை.பாரதத்தின் புராதன சாஸ்திரங்கள் பலவற்றைச் சொல்லலானார். அவற்றை சுப்பராய சாஸ்திரியின் நினைவில் தக்க வைத்தார். அவற்றை நன்கு கற்பித்தார்.

நினைத்த போது அந்த சாஸ்திரங்கள் அனைத்தும் அவருக்கு நினைவுக்கு வரும் படி அவர் அனுக்ரஹித்தார்.

அம்சுபோதினி என்று ஒரு சாஸ்திரம். சூரிய கிரணங்களின் சக்தி பற்றிய சாஸ்திரம் அது.

 

வைமானிக சாஸ்திரம் என்ற சாஸ்திரம் விமானங்களை எப்படி அமைப்பது என்பதைச் சொல்லும் சாஸ்திரம். இது பரத்வாஜ  முனிவரால் இயற்றப்பட்டது.

 

இவை அனைத்தையும் நன்கு  கற்றுக் கொண்ட சுப்பராய சாஸ்திரி பெங்களூர் வந்தார்.

 

அங்கு இவரது ஞானத்தைக் கண்ட பலரும் வியந்தனர்.

மஹா சங்கல்பம் என்ற ஒன்றை பெரிய காரியம் ஒன்றைச் செய்யும் முன்னர் ஹிந்துக்கள் செய்வது வழக்கம்.

இந்த மஹா சங்கல்பம் மிக அழகிய சொற்களால் ஆனது. ஒசை நயம் கொண்டது. அதில் மனித குலத்தின் மொத்த ஞானமும் அடங்கிய பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளடங்கியுள்ளன.

இதைச் சற்று உன்னிப்பாக ஆராய்ந்தாலேயே போதும் புராதன பாரதம் எப்படிப்பட்ட் ஆன்மீக ஞானத்தைக் கொண்டிருந்தது, எத்தனை கலைகளில் சிறந்திருந்தது என்பது தெரிய வரும். அனைத்து விஞ்ஞானமும் அதில் உள்ளது.

 

இதை ஆராய்ந்த மஹரிஷி அனகல் சுப்பராய சாஸ்திரி அதன் மஹிமையை உலகிற்கு எடுத்துரைத்தார்.

சாஸ்திரி அவர்கள் பல சாஸ்திரங்களையும் சொல்லச் சொல்ல அவற்றை அப்படியே பங்களூரைச் சேர்ந்த ஜி.வெங்கடாசல சர்மா எழுதலானார்.

 

சாஸ்திரங்களின் விவரங்களையும் சாஸ்திரி எடுத்துரைத்தார்.

அவரே கன்னடத்திலும் தெலுங்கிலும் அவற்றை விவரித்தார்.

அதை அப்படியே ஆங்கிலத்தில் வெங்கடாசல சர்மா மொழி பெயர்த்தார்.

 

இந்த சாஸ்திரங்களின் பட்டியல் மிக நீண்ட ஒன்று. அவற்றில் சிலவற்றின் சுருக்கத்தை இங்கு பார்ப்போம்:

அக்ஷரலக்ஷ சாஸ்திரம் : இந்த சாஸ்திரம் அகர முதலான எழுத்துக்கள், அதற்குரிய எண், அல்ஜீப்ரா,ஜாமெட்ரி, மற்றும் இதர  கணிதங்கள்,குறியீடுகள் ஆகியவற்றை விளக்கும் ஒன்று. பதினான்கு லோகங்களிலும் உள்ள வெவ்வேறு மொழிகளை எப்படி அமைப்பது என்பன உள்ளிட்ட விவரங்களையும் இது விளக்குகிறது.

லிகித சாஸ்திரம் : இது எல்லா ஸ்லோகங்களையும் எப்படி எழுதுவது என்பதை விளக்கும் கலை.

கணித சாஸ்திரம் : சகல லோகங்களிலும் உள்ள கணிதங்களை விளக்கும் சாஸ்திரம் இது. இதில் 18 சாஸ்திரங்கள் அடங்கி உள்ளன.

 

ஜோதிட சாஸ்திரம் : இது 64 விதமான வானவியல் மற்றும் ஜோதிட ரகசியங்களை விளக்கும் சாஸ்திரமாகும்.

நிருக்த சாஸ்திரம் : வேதங்களின் பாஷ்யங்களாக விளங்கும் ஆறு அங்கங்களை விளக்கும் சாஸ்திரம் இது.

 

 

வைசேஷிக சாஸ்திரம் : இதில் ஏழு சாஸ்திரங்கள் உள்ளன. நியாய சாஸ்திரத்துடன் தொடர்புள்ள சாஸ்திரம் இது.

வேதாந்த சாஸ்திரம் : இதில் 132 வேதாந்த சித்தாந்தங்களை விமரிசித்து அல்லது மறுத்துரைத்துச் சொல்லும் உரைகள் உள்ளன.இது பூர்வ பக்ஷம் எனப்படும். மேலும் இதில் பிரஸ்தான த்ரயம் எனப்படும் வேதாந்தம் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாக சித்தரிக்கப்படுகிறது.

பட்ட சாஸ்திரம் : இதில் 5 விதமான வெவ்வேறு சாஸ்திரங்கள் விளக்கப்படுகின்றன.இவை நியாய சாஸ்திரத்துடன் தொடர்பு கொண்டவை.

 

ப்ரபாகர சாஸ்திரம்:  மூன்று விதமான ப்ரபாகர சித்தாந்தங்கள் உள்ளன. இவை நியாய சாஸ்திரத்துடன் ஒப்பிடக் கூடியவை.

நியாய சாஸ்திரம் : இதில் 84 சாஸ்திரங்கள் உள்ளன. இவை கதாதரி என்ற ஐந்து வேதங்களைச் சொல்பவை.வைகானஸ தர்க்கத்தில் உள்ள 42 வேதங்கள் மற்றும்  கௌட தர்க்கத்தில் உள்ள 60 வேதங்கள் ஆகியவற்றின் விளக்கத்தை இதில் காணலாம்.

 

வியாக்ரண சாஸ்திரம் :இலக்கணம் பற்றியது. ஒன்பது விதமான வியாகரணங்கள் உள்ளது.பாணிணீயம்,மஹா வியாக்ரணம், ஐந்திரம்,சந்திரா,சகதவனம், ஸ்போத்தயானம் போன்றவை இதில் அடங்கும்.

சப்த சாஸ்திரம் :ஒலியின் நுணுக்கங்களை கூறும் சாஸ்திரம் இது. இதில் ஆறு சாஸ்திரங்கள் உள்ளன.

தர்க்க சாஸ்திரம் : லாஜிக் என ஆங்கிலத்தில் கூறப்படும் சாஸ்திரம் இது. தர்க்கம் பற்றிய எட்டு சாஸ்திரங்கள் உள்ளன. விவாதம் பற்றிய 84 சாஸ்திரங்கள் இதில் உள்ளன.

 

– அடுத்த கட்டுரையுடன் முடியும்

***

 

 

விஷக்கடிக்கு பௌத்த மத வைத்தியம் (Post No.5137)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 22 JUNE 2018

 

Time uploaded in London –  5-34 AM  (British Summer Time)

 

Post No. 5137

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாலி மொழி நூல்களில் புத்த மத விஷயங்களுக்கு இடையில் பல மருத்துவக் குரிப்புகளும் உள. சில விஷயங்கள் மிகவும் விநோதமனவை.

 

 

சூள வம்ஸம் என்னும் இலங்கை வரலாற்று நூல் விளம்புவதாவது:- கித்திஸிரிராஜஸீஹ,

(கீர்த்தி ஸ்ரீ இராஜ சிம்ஹன்) பௌத்த பிஷுக்களுக்காக இரண்டு டாக்டர்களையும் நர்ஸ்களையும் நியமித்தான். அரசாங்க கஜானாவிலிருந்து ஆண்டுதோறும் மருத்துவச் செலவை நல்கினான்.

 

 

உபாலி என்ற பௌத்த மத குருவுக்கு மூக்கில் வியாதி வந்தபோது நல்ல மருத்துவ வசதி அளித்தான்.

 

முதலாவது பராக்ரமபாஹு ஒரு பெரிய மண்டபம் கட்டி அங்கு நோயாளிகளைத் தங்கச் செய்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு விஷேச வேலைக்காரன், ஒரு வேலைக்காரியை அமர்த்தி இரவும் பகலும் உணவும் மருத்தும் அளிக்க ஏற்பாடு செய்ததாகவும் சூளவம்ஸம் எனும் சரித்திர நூல் பகரும்.

 

பராக்ரமபாஹு பல்வேறு மூலிகை மருந்துகளைச் சேகரித்து அவைகளை மாட்டு கொம்புக்குள் பாது காத்து வைத்தான். விஷ அம்புகளை எடுப்பதற்காக விஷேச சாமணங்களைச் செய்தான். விஷ அம்புகளை எடுத்து காயங்களுக்கு மருந்திட திறமையான டாக்டர்களை நியமித்தான்.

பாம்புக்கடிக்கோ அல்லது விஷத்தை இறக்கவோ சாணி சாம்பல், மூத்திரம், களிமண், கஷாயம் பயன்படுத்தப்பட்டன. ஒருவருடைய எல்லா உறுப்புகளிலும் விஷம் பாய்ந்து நீலம் ஏறிய பின்னரும் அவனைக் காப்பாற்றிய அதிசயச் செய்திகளை புத்தமத நூல்கள் நுவலும்.

 

அவர்கள் கருகிய அரிசியினால் ஆன கஷாயத்தைக் கொடுத்து விஷத்தை இறக்கிய செய்திகளும் சொல்லப்படுகின்றன.

 

 

மருந்துகளைப் பொறுத்த மட்டில் ஆயுர்வேத மருந்துகளைப் போலவே உள்ளன. ஆனால் கரடி மாமிசம், முதலை மாமிசம், மீன் முதலியவும் உள்ளன.

வியாதிகளின் பட்டியல் பின்வருமாறு:

 

மஞ்சள் காமாலை நோய்க்கு பசு மூத்திரம் கலந்த கஷயம் கொடுக்கப்பட்டது.

தோல் நோய்களுக்கு மூலிகை எண்ணை பயன்படுத்தப் பட்டது.

 

சமிதிகுத்த என்ற பிராஹ்மணனுக்கு குஷ்ட நோய் வந்து உறுப்புகள் அனைத்தும் உதிர்ந்து விழுந்தன.

மொக்கராஜ (மஹாராஜ) என்ற பிராஹ்மணனுக்கு  உடல் முழுதும் பருக்கள் வந்தன. வீட்டில் நோய்க் கிருமிகள் இருப்பதை அறிந்து குளிர் காலத்தையும் பொருட்படுத்தாது வயலில் வசித்தான்

 

ராஜ க்ருஹத்தில் இரண்டு பாங்கு அதிகாரிகள் வீட்டில் பிளேக் நோய் ஏற்பட்டது. முதலில் ஈ போன்ற பூச்சிகளும் பின்னர் பசு போன்ற மிருகங்களும் பின்னர் வேலைக்காரர்களும் பின்னர் வீட்டு எஜமானர்களும் நோயில் விழுந்தனர்.

 

நோய்களின் பட்டியலில் நீரிழிவு, வயிற்றுப் போக்கு, கண், காது, வாய், வயிறு, குடல் நோய்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன. உறுப்பு வாரியாக நோய்கள் பட்டியலிடப்பட்டது விஞ்ஞான அணுகுமுறையைக் காட்டுகிறது.

 

 

Sota Roga = Disease of hearing
Jihva Roga = Disease of tongue
Kaya Roga = Disease  of body
Mukha Roga = Disease of mouth
Dant Roga = Disease of teeth
Kaba =cough
Sasa =asthma
Pinasa= cold in the head
Daha = burning
Kucchi Roga = Disease abdominal trouble.குடல் நோய்
Muchchaa = hysteria உணர்ச்சிக் கொந்தளிப்பு
Pakkhandika=  diarrhoea
Suula = acute pain
Visucikaa = cholera வாந்திபேதி
Kilaasa Roga = a cutaneous Disease
Apasmaara = epilepsy வலிப்பு
Daddu=  ringworm
vitachchikaa=  scabies
Madhu meha=  diabetes சர்க்கரை வியாதி
Lohitapitta=  bile with blood
Bhagandala = fistula இரத்தக்குழாய், குடல் போன்ற உறுப்புகளின் இணைப்பில் கோளாறு
Sannipaatikaa = union of humours
Utuparinaamajaaabaadhaa = change of season disease

சித்த, ஆயுர்வேத முறை  போலவே வாத, பித்த, கப  சமத்தன்மை இழப்பதால் நோய்கள் வருவதாக நம்பினர்.

 

–SUBHAM—

 

மாமன்னன் அசோகன் அமைத்த மருந்துத் தொட்டிகள்! (Post No.5135)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 21 JUNE 2018

 

Time uploaded in London –  14-01  (British Summer Time)

 

Post No. 5135

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

மாமன்னன் அசோகன் அமைத்த மருந்துத் தொட்டிகள்! (Post No.5135)

 

சம்ஸ்க்ருதத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சரக ஸம்ஹிதை, சுஸ்ருத ஸம்ஹிதை போன்ற ஆயுர்வேத நூல்களை நாம் அறிவோம். ஆனால் பாலி மொழியில் உள்ள பௌத்த மத நூல்களில் இருக்கும் மருத்துவக் குறிப்புகளை உலகம் அறியாது. புத்தரோ பௌத்தர்களோ மருத்துவ நூல்களை எழுதவில்லை ஆயினும் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய மருத்துவக் குறிப்புகள் அந்த நூல் ல்களிலும் உண்டு.

சில சுவையான செய்திகளை மட்டும் தருவேன்

ஒரு முறை புத்தர் நோய்வாய்ப்பட்டார். உடனே தேவஹித என்ற பிராஹ்மணனிடம் சென்று சுடு நீர் வாங்கி வரும்படி உபவன என்ற சிஷ்யரை அனுப்பி வைத்தார். உடனே அந்தப் ப்ராஹ்மணன் , புத்தரிடம் வந்து அவரை வெந்நீரில் குளிக்கச் சொன்னார். புத்தர் குளித்தவுடன் அவருக்கு வெல்லப்பாகு கலந்த சுடு நீரை சாப்பிட அருளினார். அதைக் குடித்தவுடனே  வாத, பித்த, கப தோஷ வியாதி போயிற்று.

முதலில் மனிதர்களுக்கு ஆசை மூப்பு, பசி என்ற மூன்று நோய்கள் மட்டும் இருந்தன. பின்னர் இது காலப்போக்கில் 96 நோய்களாகப் பல்கிப் பெருகின என்று சுத்தனிபாத என்ற நூல் செப்பும். சிலர் 98 என்றும் பகர்வர்.

புத்தர் காலத்தில் மகத சாம்ராஜ்யத்தை ஆண்ட மன்னன் பிம்பிசாரன். அவனிடம் புகழ்பெற்ற மருத்துவர் ஜீவகன் இருந்தார். அவர் தக்ஷசீல பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் வாங்கினார். அப்போது மகத சாம்ராஜ்யத்தை ஆட்டிப்படைத்த நோய்கள் குஷ்ட ரோகம், க்ஷய ரோகம் (டி.பி.) , இழுப்பு, ஜூரம் முதலியன ஆகும்

 

கொப்புளங்கள் வந்தால் அதன் மீது கடுகுத் தூளைத் தூவி கட்டுப் போட்டனர்.

தலைவலி தீர பலவித மூலிகை எண்ணைகள் பயன்படுத்தப்பட்டன. மேலும் மூக்கு வழியாக குழாய் மூலம் மருந்து கொடுத்தனர். இரட்டைக் குழாய் வழியாக நாசியின் இரு த்வாரங்கள் வழியே மருந்து தந்தனர். குழாய் வழியாக மருந்துப் புகையும் செலுத்தினர்.

 

மஞ்சள் காமாலை நோய்க்கு பசுமாட்டின் மூத்திரம் கலந்த கஷாயம் தந்தனர்.

மூட்டுவலி முதலிய நோய்களுக்கு ஆவிச் சிகிச்சை தரப்பட்டது. ஆறு அடி குழி ஒன்றில் கரியை நிரப்பினர். அதன்மீது மணலைப் பர்ப்பி அதன் மீது மண்ணாலும் களி மண்ணாலும் பூசினர் அதன் மீது மூலிகைகள் போடப்பட்டன. அதிலிருந்து வரும் புகையில் கை, கால் முதலிய உறுப்பைக் காட்ட வைத்தனர். உடலின் எல்லா உறுப்புகளையும் காட்டி புகை பிடிக்க வைத்தனர்.

அசோகர் காலத்தில் ஒரு புத்த பிக்ஷுவுக்கு நோய் வந்தது. மருந்து கிடைக்காமல் அவர் இறக்க நேரிட்டது. உடனே பாடலிபுத்திர நகரத்தின் நான்கு வாயில்களிலும் நான்கு பெரிய தொட்டிகள் முழுக்க மருந்துகளை நிரப்பி அனைவருக்கும் மருந்து கிடைக்க அசோகர் வசதி செய்தார். புத்தகோசரின் சமந்தபாஸாதிக என்ற புஸ்தகம் இத்தகவலைத் தருகிறது. அவரது கல்வெட்டு ஒன்று மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தனித்தனியே ஆஸ்பத்திரிகள் இருந்த செய்தியைத் தெரிவிக்கின்றன

–SUBHAM–

காலத்தை உறைய வைக்கும் புகைப்பட நிபுணர்! – 3 (Post No.5133)

Written by S NAGARAJAN

 

Date: 21 JUNE 2018

 

Time uploaded in London –  6-45 am  (British Summer Time)

 

Post No. 5133

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாக்யா 22-6-18 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு பதினாறாம்) கட்டுரை

காலத்தை உறைய வைக்கும் அதிசய அறிவியல் புகைப்பட நிபுணர்! – 3

.நாகராஜன்

 

மனிதனின் புலன்கள் வழியாக அவன் பெறும் அறிவு மிகவும் குறைவு என்று கூறுகிறார் மக்யார். அவர்கள் எப்படி சூழ்நிலைக்குத் தக்கபடி இருக்கிறார்கள் என்பதை அவர் உன்னிப்பாகக் கவனித்தார். எதைச் செய்தாலும் கூட நமது அறிவு மிக மிகக் குறைந்த அளவாகவே இருக்கிறது என்பது அவரது அனுபவ உரை.

தனது ஸ்கேனர், கேமரா ஆகியவற்றை அவரே தயாரித்துக் கொள்ள ஆரம்பித்தார். ஒரு மனிதரின் உடல் பாகங்களை பல முறை துண்டு துண்டாகப் போட்டோ எடுத்து அதைப் பின்னர் முழு மனிதனாக அசெம்பிள் செய்ய ஆரம்பித்தார். மக்கள் கூட்டம் அலை அலையாக ஊர்ந்து செல்லும் போது அவரது ஸ்கேனரும் கேமராவும் விளையாட ஆரம்பித்தது.

ஒலிம்பிக் போட்டிகளில் இறுதியாக வென்றவரைக் கண்டு பிடிக்கும் ‘ஸ்லிட் ஸ்கேன்’ கேமரா பல்லாயிரம் டாலர் விலை கொண்டது. இதைத் தானே தயாரிக்க எண்ணினார் மக்யார். மீடியம் ஃபார்மட் கேமரா லென்ஸுடன் இன்னொரு சென்ஸரை இணைத்து அதற்கான கணினியின் மென்பொருளைத் தானே எழுதித் தயாரித்தார் அவர். மொத்தச் செலவு ஐம்பதே டாலர் தான்!

ஸ்கேன் செய்ய வேண்டிய ஒரு ஆவணத்தை ஸ்கேனரில் நிலையாக வைத்து விட்டு ஸ்கேனர் அந்த ஆவணத்தின் மீது ஊர்ந்து செல்லும். இது தான் சாதாரணமான ஸ்கேனரின் செயல்பாட்டு முறை. ஆனால் மக்யாரோ இதை மாற்றி, சென்ஸரை நிலையாக வைத்து ஸ்கேன் செய்யப்பட வேண்டிய விஷயத்தை இயக்கத்தில் இருக்கும் படி மாற்றினார்.

ஷாங்காய் நகரத்தில் அவர் சாலை வழியே செல்லும் பயணிகளை இப்படி ஸ்கேன் செய்ய ஆரம்பித்தார். ஒரு லட்சம் தொடர் காட்சிகளை துண்டு துண்டாக எடுத்து அதை ஒரு முழுப் புகைப்படமாக்கினார். இதன் விளைவாக அர்பன் ஃப்ளோ (Urban Flow) என்ற ஒரு அடி உயரமும் எட்டு அடி நீளமும் உள்ள போட்டோக்கள் உருவாக ஆரம்பித்தன. இதில் வேகமாகச் செல்லும் பஸ்கள் கார்களாக சுருங்கின. பஸ்களோ மெட்ரோ ரயில் போல நீளமானது. மெதுவாக நடந்த மனிதர்களின் கால்கள் பெரிதாக ஆனது.

ஷாங்காய் நகரில் மக்யாரைச் சந்தித்த தோர்குல் என்பவர் இப்படிப்பட்ட போட்டோ விசித்திரங்களைக் கண்டு மயங்கிப் போனார். மக்களோ அசத்தலான போட்டோக்களை போட்டி போட்டு வாங்கலாயினர். நம்ப முடியாத விலையான 700 டாலர் (சுமார் 46900 ரூபாய்கள்) முதல் 1400 டாலர் வரை கொடுத்து ஒவ்வொரு போட்டோவையும் அனைவரும் வாங்கினர்.

இதனால் உற்சாகமடைந்த மக்யார் தனது அடுத்த ப்ராஜெக்டாக ஸ்டெயின்லெஸ் என்ற திட்டத்தைத் தொடங்கி பாரிஸ், டோக்யோ, நியூயார்க் முதலிய நகரங்களில் உள்ள சப்-வே ஸ்டேஷன்களில் படம் எடுக்கலானார். இதில் பிரம்மாண்டமானஒரு உண்மை வெளியானது. எந்த நாடானாலும் சரி, எந்த ஸ்டேஷனாலும் சரி மக்கள் ஒரே விதமான உருவத்துடனும், ஒரே விதமான முக பாவத்துடனும், அணுகு முறையுடனும் இருக்கின்றனர். நாடு, இனம்.மொழி இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒற்றுமையைக் காண முடிகிறது என்பதே அந்த உண்மை!

தனது படப்பிடிப்பிற்காக சரியான வெளிச்சத்தை நிர்ணயிக்க தனது லைட்-மீட்டருடன் 290 ஸ்டேஷன்களிலும் அவர் ஒரு வாரம் அலைந்தார். ஐந்து ஸ்டேஷன்களில் மட்டுமே ஹை – ஃப்ரீக்வென்ஸி லைட் இருந்தது.அங்கு தன் வேலையை அவர் தொடங்கினார். ரயிலுக்குள் அவரது போட்டோவிற்கான போதுமான வெளிச்சம் இல்லை; அதற்காக மூன்று மாத காலம் ஆராய்ந்து ஒரு மென்பொருளைத் தயாரித்தார். பிறகு வெற்றி பெற்றார். இவரது நலம் விரும்பியான தோர்குல், “ ஜென் புத்தமதப் பிரிவில் ஐந்து வருட காலப் பயிற்சிக்குப் பின்னரே ஒரு அம்பை குறி பார்த்து விட அனுமதி கிடைக்கும். ஐந்து வருட காலம் குறி பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியது தான்! அதுவரை பயிற்சி பெற வேண்டியது தான்!! அது போலத்தான் மக்யாரும்! நன்கு தயாரான பின்னரே அவர் களத்தில் இறங்குவார்” என்கிறார்.

தனது ஸ்டெயின்லெஸ் திட்டத்திற்கு அடுத்தபடியாக ஜெர்மானிய கேமரா உற்பத்தியாளரான ஆப்ட்ரானிஸ் என்ற நிறுவனத்தை அணுகிய மக்யார் 16000 டாலர் பெறுமான ஒரு இண்டஸ்ட்ரியல் வீடியோ கேமராவைக் கடனாகத் தருமாறு கேட்டார். ஆப்ட்ரானிஸ் நிறுவனக் கேமராக்கள் ஒரு வினாடிக்கு ஒரு லட்சம் ப்ரேம்களை எடுக்கும் வேகத் திறன் படைத்தவை. சாதாரண கேமராக்களால் ஒரு வினாடிக்கு 24 ப்ரேம்கள் மட்டுமே எடுக்க முடியும்.

அதை வைத்து படங்களை எடுத்தார். மக்யார் சாதாரண வேகத்தை விட 56 மடங்கு அதிக வேகத்தில் தனது படங்களைப் பிடிப்பது வழக்கம். இதனால் 12 வினாடி படங்களை 12 நிமிட படங்களாக நீட்டிக்க முடியும். போனை உதடுக்குக் கொண்டு செல்லும் போது உதடு சுழலும் அசைவு கூட அவரது கேமராவில் துல்லியமாகப் பதியும்.

மில்லி செகண்ட் படப்பிடிப்பு அவருடையது. நிகழ்காலத்தை தத்ரூபமாகக் காட்டுகிறேன் என்கிறார் அவர்.

இப்போது அவரது படங்கள் ஒவ்வொன்றும் 14000 டாலர் (சுமார் 9,24000 ரூபாய்) என்ற விலையை எட்டி விட்டது.

காலத்தை உறைய வைத்து அனைவரையும் குதூகலப்படுத்தும் அற்புத புகைப்பட நிபுணராக இருக்கும் மக்யார் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்துவார் என்பதில் ஐயமில்லை!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

வில்லியம் ஹால்ஸ்டெட் (William Halsted) என்பவர் அமெரிக்காவில் ஜான் ஹாப்கின்ஸ் மெடிகல் ஸ்கூலில் தலைமை அறுவைசிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வந்தார். 33 ஆண்டு அனுபவத்தால் அனைவராலும் மதிக்கப்பட்டு வந்த அவர் சற்று கண்டிப்பானவர். நர்ஸ்கள் மற்றும் டாக்டர்கள் அனைவரும் மருத்துவ மனையில் பணியாற்றும் சமயம் தங்கள் கைகளை மெர்குரிக் க்ளோரைட் கரைசலால் நன்கு கழுவிக் கொண்டே ஆபரேஷன் செய்யத் தயாராக வேண்டும் என்று அறிவுறுத்தி வந்தார். ஆபரேஷன் செய்யப்படும் நோயாளிகளுக்கு இவர்கள் மூலமாக எந்த விதமான தொற்றும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதாலேயே அவர் இதை வற்புறுத்தி வந்தார்.

1889ஆம் ஆண்டு ஒரு நாள் கரோலின் ஹாம்ப்டன் என்ற நர்ஸ் தனக்கு அந்த கரைசலைப் பயன்படுத்தினால் கையில் அரிப்பு ஏற்படுகிறது என்று அவரிடம் வந்து புகார் செய்தார். உடனே ஹால்ஸ்டெட் குட் இயர் ரப்பர் கம்பெனியிடம் ஒரு ரப்பர் க்ளவ்ஸை – கையுறையை – தயாரித்துத் தருமாறு கேட்டுக் கொண்டார். கையுறையும் வந்தது. நர்ஸின் பிரச்சினையும் தீர்ந்தது.

இதைப் பார்த்த மற்ற நர்ஸ்கள் அனைவரும் தங்களுக்கும் அது போன்ற க்ளவ்ஸ் தேவை என்றனர். ஆகவே ஹால்ஸ்டெட் அனைவருக்கும் அதை ஆர்டர் செய்து வாங்கித் தந்தார். இந்தப் பழக்கம் தொடர ஆரம்பித்தது. இதை அறிந்த ஏனைய மருத்துவ மனைகளும் இந்த நடைமுறையைப் பின்பற்ற ஆரம்பித்தன.

சர்ஜிகல் க்ளவ்ஸ் நாளடைவில் பிரசித்தமாயிற்று. இன்றோ ரப்பர் க்ளவ்ஸ்கள் ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பல் டாக்டர்கள், சாதாரண நோயாளிகளுக்குச் சிகிச்சை தரும் டாக்டர்கள் என்று அனைவராலும் பயன்படுத்தப்படும்  இன்றியமையாத ஒன்றாக ஆகி விட்டது!

***

 

காலத்தை உறைய வைக்கும் புகைப்பட நிபுணர்! – 2 (Post No.5111)

Written by S NAGARAJAN

 

Date: 15 JUNE 2018

 

Time uploaded in London –  7-29 am  (British Summer Time)

 

Post No. 5111

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாக்யா 15-6-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு பதினைந்தாம்) கட்டுரை

காலத்தை உறைய வைக்கும் அதிசய அறிவியல் புகைப்பட நிபுணர்! – 2

.நாகராஜன்

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எகிப்தைச் சேர்ந்த வண்ண ஓவியர்கள் பாலைவன மணல். சுண்ணாம்புக் கல், பொடாசியம், தாமிர கார்பனேட் ஆகியவற்றை உலையில் வைத்துச் சூடாக்கி ‘எகிப்திய நீலம்’ என்ற  ஒரு விசேஷ வண்ணத்தை உருவாக்கினர். இது மிகவும் பிரபலமாகி பல நூற்றாண்டுகள் ஓவியர்கள் விரும்பும் வண்ணமானது.

15ஆம் நூற்றாண்டு வாக்கில்  வால்நட் மற்றும் லின்ஸீட் எண்ணெயால் உருவாக்கப்பட்ட வண்ணங்கள் பிரபலமாயின. பத்தொன்பதாம் நூற்றாண்டிலோ நவீன தொழில்நுட்பம் மூலம் புதுப் புது வண்ணங்கள் உருவாயின. லூயி டாகர் தாமிரத்துடனான வெள்ளிப்பூச்சு தக்டுகளில் ஐயோடின் ஆவி சேர்த்துப் பார்த்தார்; போட்டோக் கலை உருவானது!

1950-களில் எமல்ஷன் பெயிண்ட் உருவானது. நியூ வேவ் சினிமாவும் உருவானது. திரைப்பட போட்டோகிராபி புதுப் பரிமாணங்களை ஏற்படுத்தியது.

1970-களில் உருவான டிஜிடல் போட்டோ இருவிதமாக சித்திரங்களைப் பதிவு செய்ய உதவியது. ஒன்று, சாதாரணமாக இன்று காணப்படும் டிஜிடல் கேமராக்கள் மற்றொன்று ஸ்கேனர்கள். இதில் முதலாவதாக இருந்த டிஜிடல் கேமரா ஒரு காட்சியை அப்படியே ஒரே கணத்தில் படம் பிடித்தது. ஆனால் ஸ்கேனரோ இதற்கு மாறாக ஒரு உருவத்தை தொடர்ச்சியாகப் படமாகப் பிடித்தது. ஸ்கேனரில் உள்ள சென்ஸர் படத்தின் மேலாக அல்லது ஒரு பிரிண்ட் செய்யப்பட்ட ஆவணத்தின் மேலாக நகர்ந்து சென்று ஒவ்வொரு வரியையும் படம் பிடித்து அதைப் பின்னர் முழுப் படமாக ஆக்கித் தந்தது.

இதைத் தொடர்ந்து ஸ்கேனர்கள், கிராபிக்-எடிடிங் புரொகிராம்கள், ஹை-ஸ்பீட் இண்டஸ்ட்ரியல் வீடியோ கேமராக்கள் ஆகியவை, தொழில்நுட்ப ஓவியர்களை  சம்பிரதாய வழியிலிருந்து மாற்றி தங்கள் மனோதர்மத்தின் படி படமெடுக்கும் நுட்பமான போட்டோக் கலையை உருவாக்கிக் கொள்ள வழி வகுத்தது.

டோரிஸ் மிட்ஸ் என்பவர் வட கலிபோர்னியாவில் தாவர இனங்கள், பூச்செடிகள், கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றை நவீன தொழில்நுட்பமான போட்டோஷாப் மூலமாக அழகுறப் படமாக்கி உலகத்தையே அசத்துகிறார். பெனிலோப் அம்ப்ரிகோ என்ற பெண்மணி 541,795 சூரியன்கள் என சூரிய அஸ்தமனக் காட்சிகளை 2006ஆம் ஆண்டு உருவாக்கி அனைவரையும் அசத்தினார். இப்படி நாளுக்கு நாள் போட்டோக் கலை புதிய பரிமாணங்களைக் கொண்டு விஸ்வரூப கலையாகப் பெரிதாகி வருகிறது.

மனோதர்மத்தில் எழும் கற்பனை மூலம் உருவாகும் போட்டோ ஒரு கவிதை எழுதுவதைப் போல இருக்கும் என்கிறார் போட்டோக் கலை வல்லுநரான கார்டின் என்பவர்.

இந்த நிலையில் போட்டோக்கலையில் புதிய பரிமாணங்களைக் காட்டி வரும் மக்யாரை நேரில் பேட்டி கண்டு அவரைப் பற்றி நன்கு வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார் ஜோஷுவா ஹாமர் (Joshua Hammer) என்ற பிரபலமான பத்திரிகையாளர்.

2008ஆம் ஆண்டிலிருந்து கிழக்கு பெர்லினில் தனது தோழியான ஜாஜி போர்க்சால்மியுடன் வாழ்ந்து வருகிறார் மக்யார். ஜாஜி ஆரம்பப் பள்ளியிலிருந்து அவருடன் படித்த சின்ன வயதுத் தோழி. இப்போது அவருக்காக மொழி பெயர்ப்புப் பணி உள்ளிட்ட அனைத்தையும் கூடவே இருந்து செய்து வருகிறார்.

ஹங்கேரியில் உள்ள டெப்ரெசென் என்ற நகரில் பிறந்து வளர்ந்தவர் மக்யார். அவரது தாயார் ஒரு பல் டாக்டர். தந்தையோ ஒரு கட்டிடக் கலை ஆர்கிடெக்ட். ரெஸ்டாரண்ட், பார் போன்றவற்றை டிசைன் செய்பவர். ஆகவே தந்தையின் ஒர்க்‌ஷாப்பில் வளர ஆரம்பித்தார் மக்யார். பள்ளியில் அவரால் சரியாகக் கவனம் செலுத்த முடியவில்லை. பாதியில் அப்படியே படிப்பை விட்டார். இரண்டு வருடம் கணினியில் கிராபிக் டிசைன் வேலையைச் செய்தார்.

இளமையிலிருந்தே பல புதிய இடங்களுக்குப் பயணம் செய்வதில் அவருக்கு ஆர்வம் இருந்தது. ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்தார்.

இந்தியா அவரை வெகுவாகக் கவர்ந்தது. வருடா வருடம் வர ஆரம்பித்தார்.

காசிக்கு வந்த அவர் ஆறு மாத காலம் கங்கை நதிக் கரையோரம் வந்து அமர்ந்தார். கங்கை நதியின் பொங்கும் பிரவாகத்தைப் பார்ப்பதே அவரது ஒரே வேலை. அலை அலையாக நீர் கொப்பளித்துச் செல்வதைப் பார்த்துக் கொண்டே இருந்த அவர் ஒரு நாள் தன் தோழியான ஜாஜியிடம் போட்டோக் கலையின் ஆரம்ப புத்தகத்தைக் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டார். அது அவரது ஆரம்ப காலப் பள்ளி வாழ்க்கையில் ஒரு போட்டியில் வென்றதற்காகப் பரிசாக அளிக்கப்பட்ட புத்தகம். அதைப் படிக்க ஆரம்பித்தார்; அவ்வளவு தான் போட்டோகிராபி மேல் ஒரு புதிய ஆர்வம் பிறந்தது. இமயமலையில் உள்ள டார்ஜிலிங்கில் ஒரு தனியார் பள்ளியின் அன்றாட வாழ்க்கை முறையை படம் பிடித்தார். அது ஹங்கேரி பத்திரிகை போட்டோ போட்டியில் முதல் பரிசை வென்றது. அது அவரை நன்கு உற்சாகப் படுத்தி அவரைத் தீவிரமாக போட்டோ கலையில் ஈடுபடுத்தியது.

ஒரு படத்தை எடுப்பது நமக்கு ஒரு விநாடி வேலை. ஆனால் மக்யாரோ பல மணி நேரம் எடுத்துக் கொள்வார்.

வாரணாசியில் (காசியில்) தனக்கென ஒரு மூவி தியேட்டரை நிர்மாணித்துக் கொண்டார். நல்ல இருட்டில் ஆடியன்ஸை படம் பிடித்தார். கல்கத்தாவில் டாக்ஸிகளில் பின் சீட்டில் அமரும் பயணிகளைப் படம் பிடித்தார். டாக்டர்களின் க்ளினிக்குகளில் வெயிடிங் ரூமில் இருக்கும் நோயாளிகளைப் படம் பிடித்தார். ஷாங்காய் சென்று பயணிகள் எலிவேட்டரில் ஏறுவதைப் படம் பிடித்தார்.

வித்தியாசமான இவரது போட்டோக்கள் ஹன்னா ஃப்ரீஸர் என்ற ஒரு கலைஞரைக் கவர்ந்தது. அவர் மூன்று கண்காட்சிகளை மக்யாருக்காக ஏற்பாடு செய்தார்.

 

தொடரும்

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ராணுவத்தில் ராடாரின் பயன்பாட்டுக்காக இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பதுகளில் மாக்னெட்ரான் என்ற எலக்ட்ரானிக் டியூப் உருவாக்கப்பட்டது. இதைத் தயாரிப்பதில் அமெரிக்காவைச் சேர்ந்த ரேதியான் என்ற கம்பெனியும் ஒன்று. இதில் பணியாற்றி வந்த எஞ்ஜினியர்களுள் ஒருவரான பெர்ஸி ஸ்பென்ஸர் (Percy Spencer) என்பவர் ஒருநாள் மாக்னெட்ரான் டியூபை சோதனை செய்து கொண்டிருந்தபோது சாக்லெட் சாப்பிடுவதற்காகத் தன் பையில் கையை விட்டார்.சாக்லட்டோ கெட்டியாக இல்லாமல் உருகி வழவழப்பாக மெதுவாக இருந்தது. ஆனால் அதில் வெப்பமே இல்லை. மாக்னெட்ரான் டியூபிலிருந்து வெளிவந்த ரேடியேஷனால் தான் அது உருகி விட்டதோ என்று அவர் சந்தேகப்பட்டார். சோளத்தைக் கொண்டு வந்து மாக்னெட்ரான் எதிரில் வைத்தார். சோளம் படபடவென்று பொறிந்தது. ஒரு முட்டையை அதன் எதிரில் வைத்தார். முட்டை படீரென்று வெடித்தது. ஆஹா, உடனடி சமையலைக் கண்டு பிடித்துவிட்டேன் என்று அவர் குதித்தார். Instant Cooking பிறந்த கதை இது தான்! நிறுவனம் அவரைப் பாராட்டி உலகின் முதல் மைக்ரோ ஓவனைத் (Micro Oven) தயாரித்தது. இதன் முக்கிய பாகமாக விளங்குவது மாக்னெட்ரான் தான்! இன்று இல்லத்தரசிகள் சந்தோஷமாக இதைப் பயன்படுத்தி வருகின்றனர்!

***