விண்வெளியில் ‘மூழ்க’ இருந்த வீரர்! (Post No. 3459)

 

Written by S NAGARAJAN

 

Date: 18 December 2016

 

Time uploaded in London:- 5-08 am

 

Post No.3459

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 விண்வெளியில் ‘மூழ்க இருந்த வீரர்!

ச.நாகராஜன்

 

“செவ்வாய் கிரகத்திற்குச் செல்வது என்று தீர்மானித்தால், அதை எதிர்காலத்திற்கான ஒரு முதலீடு என்றே நான் கருதுவேன்” – மைக்கேல் மாஸிமினோ

 

 

     விண்வெளி வீரர்களைப் பற்றிய சுவையான நூல்கள் ஏராளமாக வெளி வந்து விட்டன. என்றாலும் கூட விண்வெளி வீரர் தன் அனுபவங்களைத் தானே சொல்லும் புத்தகங்களுக்கான வரவேற்பே தனி தான். இதுவரை சுமார் முப்பதுக்கும்  மேற்பட்ட புத்தகங்கள் விண்வெளிவீரர்களாலேயே எழுதப்பட்டு மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

 

இந்த வகையில் இப்போது வெளியாகி இருக்கும் ஸ்பேஸ்மென் என்ற புத்தகத்தை மைக்கேல் மாஸிமினோ (Spaceman by Mike Massimino) என்னும் அமெரிக்க விண்வெளிவீரர் (பிறப்பு: 19-8-1962) எழுதி 2016, அக்டோபர் 4 இல் வெளியிட்டுள்ளார்.

 

 

   விண்வெளியிலிருந்து ட்விட்டரில் ட்வீட் செய்த முதல் வீரர் இவர் தான். இவருக்கு ட்விட்டரில் 13 லட்சம் விசிறிகள் இருந்தனர்!

 

    மனிதர் வெளிப்படையாகப் பேசுபவர். லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் (2016, அக்டோபர், இரண்டாம் வாரத்தில்) தன் பயணப் பைகளை சேகரித்துக் கொண்டிருந்த இவரிடம் பிரபல டி.வி. ஒன்றின் பேட்டியாளர் கேட்ட கேள்விக்கு இவர் டாண் டாண் என்று பதில் அளித்தார்  

 

   விண்வெளி சென்று மீண்ட இவரிடம், “நீங்கள் அவசர நிலையில் ஒரு விமானத்தை ஓட்ட முடியுமா?” என்ற கேள்வி கேட்கப்பட்ட போது, கூலாக, “முடியாது.” என்று பதிலளித்தார்.

    தொடர்ந்து விண்வெளியிலிருந்து எதையாவது நீங்கள் திருடிக் கொண்டு வந்தீர்களா என்று கேட்கப்பட்ட போது “உங்களுக்கே தெரியும். நான் நிச்சயம் அப்படிச் செய்திருக்கவேண்டும். ஆனால் நான் எதையும் எடுத்து வரவில்லை” என்றார்.

 

 

“உங்களுக்கு விண்வெளியில் செக்ஸ் உறவு கொள்ள வேண்டும் என்ற ஆசை வரவில்லையா?” என்று கேட்ட போது விண்வெளிப் பயணப் பணியைத் தவிர வேறு எந்த வித எண்ணமுமே வரவில்லை” என்று பதில் அளித்தார்.

 

    ஹப்பிள் டெலஸ்கோப்பை பழுது பார்க்க இரண்டு முறை விண்வெளி சென்ற மாஸிமினோ தனது புத்தகமான ஸ்பேஸ்மேனில் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு தான் ஒரு விண்வெளிவீரர் ஆக முடிந்தது என்பதை விளக்கி உள்ளார்.

அபல்லோ 11 விண்கலம் பறப்பதை ஏழு வயதுச் சிறுவனாக இருந்து பார்த்த மாஸிமினோ விண்வெளிப் பயணத்தில் ஆசை கொண்டார். ஆனால் அபல்லோ விண்கலப் பயணங்கள் முடிந்தவுடன் அவர் ஆசையும் போய் விட்டது.

 

    பின்னால் கல்லூரியில் படிக்கும் போது தி ரைட் ஸ்டஃப் என்ற படத்தைப் பார்த்தவுடன் உடனே விண்வெளி மீது மீண்டும் ஆசை கொண்டார். விண்வெளி வீரர் ஆக கடுமையாக முயற்சி செய்தார். 1996இல் விண்வெளி வீரர் ஆனார்.

 

ஹப்பிள் டெலஸ்கோப்பைப் பழுது பார்க்க 2002ஆம் ஆண்டிலும் 2009ஆம் ஆண்டிலும் விண்வெளிப் பயணம் மேற்கொண்டார்.

 

     இப்போது கொல்ம்பியாவில் பேராசிரியராகப் பணி புரியும் இந்த விண்வெளி வீரர் மனிதன் விண்வெளிக்குச் செல்வதை ஒருநாளும் நிறுத்த மாட்டான் என்று உறுதிபடத் தெரிவிக்கிறார்.

 

    இவர் தனது புத்தகத்தில் விண்வெளியில் பறக்கும் போது ஏற்படும் ஆபத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.    

    அதில் பரபரப்பாக கூறப்படும் ஒன்று நாஸா வடிவமைத்த ஸ்பேஸ் சூட்டில் (விண்வெளி உடை) விண்வெளி வீரர் ‘மூழ்கி’ இறக்கக் கூடும் என்பது தான்!

 

     இது உண்மை தான் என்பதை விளக்கும் சுவையான ஆனால் அபாயம் நிறைந்த ஒரு சம்பவம் நிஜமாகவே நடந்துள்ளது.

 

இத்தாலிய விண்வெளி வீரரான ல்யூகா பர்மிடானோ (Luca Parmitano) 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி விண்வெளியில் நடந்தார்.

 

   சுமார் ஆறரை  மணி நேரம் அவர் நடக்க வேண்டும் என்பது திட்டம். ஆனால் திடீரென்று அவரது விண்வெளி உடையில் தலையில் அணியும் ஹெல்மெட்டிலிருந்து நீர் கசிய ஆரம்பித்தது. தலையின் பின்பக்கம் நனைவது போல இருந்ததை உணர்ந்தார் அவர். அடுத்த சில நிமிடங்களில் அவர் கண்கள், காதுகள், வாய் ஆகிய எல்லா அங்கங்களிலும் நீர் புக ஆரம்பித்தது.

 

    சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. உடனே கஷ்டப்பட்டு தரை நிலையத்திற்கு இதை அவர் தெரிவிக்க உடனடியாக அந்த நடை நிறுத்தப்பட்டது. சாதாரணமாக நீரில் மூழ்குவது பற்றி நாம் அறிவோம். ஆனால் விண்வெளி உடையினால் மூழ்கி இறக்கும் அபாயத்தை இப்போது தான் அறிகிறோம்.

இந்த விண்வெளி ஆடை பற்றி நீண்ட ஒரு ஆய்வும் பின்னர் மேற்கொள்ளப்பட்டது.

 

 

    மைக் மாஸிமினோவும் ரிக் மாஸ்ட்ராச்சியோ என்ற விண்வெளி வீரரும் அதே ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் விண்வெளியில் நடந்தனர். பயந்து கொண்டே இருந்த போதும் நல்ல வேளையாக விண்வெளி உடை லீக் ஆகவில்லை. அவர்கள் விண்வெளியில் ‘மூழ்கவும்’ இல்லை.

 

 

  இது போன்ற பதினாறு விதமான பயங்கர ஆபத்துக்கள் விண்வெளிப் பயணத்தில் உள்ளன என்பதை மைக் மாஸிமினோ  விளக்கியுள்ளார்.

 

விண்வெளி ஆர்வலர்கள் இந்தப் புத்தகத்தை ஆர்வமுடன் படிக்க விரும்புவதில் வியப்பே இல்லை!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

 

ஜெஃப்ரிஸ் மோஸ்லி (Henry Gwyn Jefferys Mosely) என்பவர் ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி (தோற்றம் 29-11-1887 மறைவு 10-8-1915).இளவயது மேதையான இவர் இயற்பியலில் எக்ஸ்ரே ஸ்பெக்டரத்தை அளக்கும் விதியைக் கண்டு பிடித்தார்.

இரசாயனத்திலும் இவரது கண்டுபிடிப்புகள் ஏராளமான உண்மைகளை விளக்கின.

 

 

ஆனால் துரதிர்ஷ்டவசமாக முதல் உலகப் போர் 1915இல் மூண்ட போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த இவர் ராணுவத்தில் சேர வேண்டியது தன் கடமை என நினைத்தார்.

 

பலரும் இதைத் தடுக்கப் பார்த்தனர். ஆனால் பிரிட்டிஷ் ராணுவத்தின் பொறியியல் பிரிவில் இவர் சேர்ந்து துருக்கிக்குச் சென்றார். அங்கு கல்லிபோலி என்ற இடத்தில் 1915 ஏப்ரலில் கொல்லப்பட்டார். மிகுந்த தொலைவிலிருந்து குறி பார்த்து சுடும் எதிரி வீரர் ஒருவர் இவர் தலையில் குண்டைப் பாய்ச்ச ராணுவ தகவல் ஒன்றை தொலைபேசியில் தெரிவித்துக் கொண்டிருந்த போது இவர் மரணமடைந்தார்.

1910, ஆகஸ்ட் 10ஆம் தேதி மரணமடைந்த இவருக்கு வ்யது 27 தான்!

 

 

இவர் உயிருடன் இருந்திருந்தால் அந்த ஆண்டின் நோப்ல பரிசை இவர் பெற்றிருப்பார். (உயிருடன் இருப்பவர்க்கு மட்டுமே நோபல் பரிசு வழங்கப்படும் என்ற விதி இருந்ததால்)

மிகுந்த இளம் வயதில் அசாதாரண்மான மேதையை இழந்த பிரிட்டன் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் மேதைகளும் நாட்டிற்கு இன்றியமையாத விஞ்ஞானிகளும் இது போல ராணுவத்தில் முன்னணி யுத்த களத்தில் பணியாற்ற வேண்டாம் என்ற புதிய விதிமுறையை உருவாக்கியது.

 

 

முதல் உலக மகா யுத்தத்தில் பிரிட்டனுக்கு நேர்ந்த மிகப் பெரிய இழப்பு விஞ்ஞானி மோஸ்லியின் மறைவு தான்!

********

 

 

 

 

காளிதாசன் கவிஞனா? விஞ்ஞானியா? (Post No.3445)

b6570-magnet

Research Article Written by London swaminathan

 

Date: 13 December 2016

 

Time uploaded in London:-16-54

 

Post No.3445

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

உலகப் புகழ்பெற்ற கவிஞன் அவனுடைய ஏழு சம்ஸ்கிருதப் படைப்புகளில் கொடுத்த 1200+ அற்புதமான உவமைகளை உலகமே அறியும். உலகத்திலேயே அதிகமான, பொருத்தமான உவமைகளைப் பயன்படுத்தியதால் “உவமைக்கு காளிதாசன் என்ற  பொன்மொழி உண்டாயிற்று. அவனுடைய 1200க்கும் மேற்பட்ட உவமை, உருவக, உத்திகளில் 200 ஐ சங்க காலத் தமிழ்ப் புலவர்கள் பின்பற்றியதால் காளிதாசன் கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்று என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் நிறுவியுள்ளேன்.

 

இப்பொழுது அவன் தந்த வியத்தகு அறிவியல் உண்மைகளை அலசுவோம்:

 

காளிதாசன் பேசாத பொருளே இல்லை. அவனைப் போல இலக்கிய நயமும், என்சைக்ளோபீடியா போன்ற அறிவு வீச்சும் காண்பதற்கரிது.

 

இரண்டு விஷயங்களை காளிதாசன் எப்படிச் சொன்னான் என்பது இன்று வரை எவருக்கும் புரியவில்லை.

 

குமரசம்பவம் என்னும் காவியத்தில் முதல் பத்துப் பாடல்களில் இமய மலையின் அற்புத அழகை வருணிக்கும் போது அதை உலகத்தின் அளவுகோல் (ஸ்கேல்/ ரூலர்) என்கிறான். இன்று நவீன வசதிகள் இருப்பதால் அதை 1500 மைல் நீளம் உடையது என்பதை நாம் அறிவோம். அது விண்வெளியிலிருந்து தெரியும் விஷயங்களில் ஒன்று என்று விண்வெளிக் கப்பல் விட்டதால் அறிகிறோம். காளிதாசன் கி.மு முதல் நூற்றாண்டில், அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன் வசித்தவன். எப்படி இது இவ்வளவு நீளமானது? உலகின் அளவுகோல் என்று தெரிந்தது? என்பது வியப்பான விஷயமே. தென் அமெரிக்காவிலுள்ள ஆண்டீஸ் மலை சுமார் 4000 மைல் நீளமிருந்தாலும் அதெல்லாம் உலகின் பழைய நாகரீகம் இல்லாத இடங்களில் இருக்கிறது.

ஆனால் இமயமலையோ உலகின் முக்கிய நாகரீகங்களுக்கு இடையில் இருக்கிறது. வேறு யாரும் சொல்லாத விஷயத்தை அவன் போகிற போக்கில் சொல்லிச் செல்லுகிறான்.

 

இவனுடைய பூகோள அறிவுக்கு இது மட்டும் சான்றல்ல. ஈரான் நாட்டில் தேன் அடை போல தாடி வைத்திருக்கும் பாரசீகர் முதல், இந்தோநேஷியத் தீவுகளில் கிடைக்கும் வாசனைத் திரவியங்கள் வரை இவன் காவியத்தில் உள்ளன. தமிழ்நாடு-கர்நாடகத்திலுள்ள சந்தனமரப் பாம்பு முதல் பாண்டியன் – அகஸ்தியன் உறவு வரை பேசுகிறான். சங்கத் தமிழ் இலக்கியத்தில் கூட அகத்திய-பாண்டியன் உறவு பேசப்படவில்லை!

 

 

இவன் சொன்ன இரண்டாவது விஷயம் இமய மலை விஷயத்தைவிட வியப்பானது. விமானம் ஓட்டப் பயிற்சி செய்யும் பைலட் PILOTடுகள் முதல்தடவை பறக்கும்போதும் தரை இறங்கும் போதும் பயந்து விடுவார்கள். பூமியில் விமானம் வேகமாகத் தரை இறங்கும்போது நம் மீது வெகு வேகமாக மோத வருவது போல பூமி நம்மை நோக்கி விரைந்துவரும். இந்தக் காட்சியை காளிதாசன் வருணிக்கிறான். அவனுக்கு எப்படி இந்த அனுபவம் கிடைத்தது? மேலும் இது பற்றியும் மனதினால் இயங்கக் கூடிய விமானம் பற்றியும் பேசுவதால் அவனுடைய காலத்தில் இதுபற்றி நிறையபேருக்கு நல்லறிவு இருந்திருக்கவேண்டும்.

 

ae12d-gems

ஒளிவிடும் மரங்கள், பறவைகள் குடியேற்றம், இரும்பை இழுத்துக் கவரும் காந்தம், சூரிய ஒளியைக் குவித்து நெருப்பு உண்டாக்கும் சூரியகாந்தக் கல் (உருப்பெருக்காடி), பலூனில் பறத்தல் ஆகியவற்றைப் பற்றியும் பாடுகிறான்.

 

உலகில் இன்று ஏதாவது ஒரு நாட்டிற்குப் போக வேண்டும் என்றால் அந்த நாடு அல்லது நகரம் பற்றிய TOURIST GUIDE டூரிஸ்ட் கைட்-ஐ விலைக்கு  வாங்குவோம். இதை வெளியிட பிரபல கம்பெனிகள் இருக்கின்றன. உலகின் முதல் டூரிஸ்ட் கைட் TOURIST GUIDE  காளி தாசனின் மேக தூதம்தான். நூற்றுக்கும் மேலான பாடல்களில் “மேகமே நீ இதைப் பார் அதைப்பார்” என்று வருணிக்கிறான். அதே போல இலங்கையிலிருந்து சீதையை விமானத்தில் அழைத்துவரும்போது ராமன் வாயிலாக திமிங்கிலம் முதலியவற்றை வருணிக்கிறான். சைபீரியாவிலிருந்து வரும் பறவைகள் இமயமலை மீது பறக்க முடியாது. ஏனெனில் 20000 அடிக்கு மேல் உயரமுடையது. அவை எல்லாம் நீதி பாஸ் என்னும் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழையும். இதையெலாம் பாடுகிறான் நம் கவிஞன்! இவனுடைய இலக்கிய நயத்தையும் சாகுந்தல நாடகத்தின் இனிமையையும் உலகம் அறியும். ஆனால் இவனுக்கு எல்லா துறைகளிலும் அறிவு இருந்தது; அவன் சகல கலா வல்லவன் என்பது பலருக்கும் தெரியாது.

 

திருமணமாகி புதுவீட்டுக்குச் செல்லும் பெண்ணுக்கு அவன் சொல்லும் அறிவுரை சாகுந்தலத்தில் உள்ளது . இவனுக்கு சைகாலஜியும் (Psychology)  தெரியும் என்பதற்கு அதுவே சான்று.

 

இரத்தினக் கற்கள், நகைகள், தங்கம், வெள்ளி, முத்து, பவளம் பற்றியும் இவன் பாடுகிறான்.(இவை பற்றியெல்லாம் தனித் தனி கட்டுரைகளை இதே பிளாக்கில் ஐந்து ஆண்டுகளாக வெளியிட்டதால் இங்கு குறிப்புகளை மட்டும் கொடுக்கிறேன்). காளிதாசனைப் படிக்காத ஒருவனுக்கு இந்திய இலக்கியம் பற்றியோ பண்பாடு பற்றியோ பேச 100 சதவிகித அருகதை கிடையாது. 50 முதல் 60 சதவிகித அருகதையே. இதையே நான் வட இந்தியர்களுக்கும் சொல்லுவேன். நீங்கள் காளிதாசனையும் வால்மீகியையும் வியாசனையும் படித்தாலும் சங்கத் தமிழ் இலக்கியத்தையும் அதற்குப்பின் வந்த திருக்குறள்- சிலப்பதிகாரம் ஆகிய இரண்டையும் படிக்காதவரை உங்கள் அறிவு 50 முதல் 60 சதவிகிதமே என்று சொல்லுவேன்.

a7747-best2bbird2bmigration

 

கீழேயுள்ள குறிப்புகளைக் கொண்டு நீங்களே நான் சொன்ன விஷயங்களை ஆராயலாம்:–

 

ரகுவம்சம்- Rv

குமார சம்பவம்- KS

மேகதூதம் -Mega

விக்ரம ஊர்வசீயம்- VU

மாளவிகா அக்னிமித்ரம் – MA

அபிஞான சாகுந்தலம் – AS

ருது சம்ஹாரம் – RS

 

விமான இயல்

Sakuntalam Act 1—9 (Read my article: Did Kalidasa fly in a space shuttle? Posted on 12 Sept.2014)

Sakuntalam Act 7—7/10; Ks2-45;Rv 13-68;13-76;13-79;14-20

 

 

பறக்கும் பலூன்

Rv 16-68

 

வானத்திலுள்ள மூவழிப்பாதை

 

Flight path Rv 13-18, 13-19

xxx

Picture saved with settings embedded.

விண்வெளி இயல்

பால்வெளி மண்டலம் (Milky way) Rv 13-2; 1-78; KS 4-37;1-28; Rv 12-85

 

Chitra constellation Rv 1-46, 13-76, 17-35 pole star 18-34;

Comet KS 2-32; AS 4; Mars vu 5-3

Pusya star Rv 18-32;

Venus KS 3-43;

Stars KS 2-19; RV 7-2;

Meteor Rv 16-83; 14-53;

Algol/Arundhati in Ursa Major Constellation: Rv 1-56

Rohini and Moon:AS 7-22; 3-12; VU 3-4; RV 14-40

 

xxx

பறவைகள் குடியேற்றம்

Kalidasa’s references of swan, cranes and Himalayan geese: Mega. 11,23, 59, 70,81.

Vikra. IV 2,3,4,6,20;31,32,33,3441,54

BIRD MIGRATION :Vikra IV 14 to 17

Kumara. 1-30 (Hamsa mala)

Ragu. IV 19,VIII 59, XIII-33, XVI 33, 56, XVII-75

Malavika.II-2

Rv 1-41

 

xxxx

நிலவியல் Geography and Geology

 

KS 1-10 (Description of the beautiful Himalayas)

Sub marine Fire (Vadamukagni/Badava:- AS 3-3; Rv 9-82; 11-75; 13-4;13-7.

Lot of references about rivers, especially Ganga and Yamuna

 

a99ba-iaf2bplane

xxxx

இரத்தினக் கற்கள்

 

Cat’s eye RS 2-15; Coral  RS 6-16; Conch shell RS 3-4; Crystal Purva Megam 54; Emeralds/Rubies-Rv 13-53; Gems-PM 15, KS 1-38, KS 5-43, KS 5-45, Rv 1-4, Rv 3-18, Rv 10-30, Rv 11-59, Rv 11-68, RV 17-63, VU 2-99, MA 5-18, AS 2-7, AS 2-10, AS 6-6, Sapphire Rv 18-42; Pearl Rv 6-7, UM 46, KS 1-44, KS 3-53, KS 6-6KS 7-89, Rv 6-28, Rv 9-44,Rv 13-54, Rv 16-18; Rubies KS 3-53; Sun stone Rv 11-21; Moon stone VU 5-11; Ivory PM 62

 

லென்ஸ் Magnifying Glass (Lens)

Sun stone Rv 11-21; AS 2-7

 

நாகரத்தினம் (Cobra Jewel)

KS 2-38, 5-43; RV 13-12, 6-49, 11-59, 11-68, 17-63, 10-7, 13-12, 17-63

RS 1-20,

xxxx

 
காந்தம் Magnet –

Rv-18-63; KS 2-59;

xxx

 

சுற்றுப்புற சூநிலையியல் Environmental concern

Don’t Cut even a poisonous tree

KS 2-55

xxxx

 

 

ஒளிவிடும் தாவரம் Bio Luminescent Plants-

KS 1-10; Rv 9-70

 

 

உள்ளவியல்/ மனவியல் Human psychology

Advice to newlyweds: AS 4-20; 4-21;4-22

xxx

 

—Subham—

ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடி! (Post No3408)

Picture of Jimo

 

Written by S NAGARAJAN

 

Date: 2 December 2016

 

Time uploaded in London: 6-12 am

 

Post No.3408

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

 

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடி!

 

“நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு மனத்திற்கு மரணம் என்பது அடுத்த ஒரு பெரிய சாகஸ செயல்!” – ஜே. கே. ரோலிங்

 

 

ஒரு மனிதனின் கடைசி விநாடிகளில் என்ன தான் நடக்கிறது? அறிய ஒவ்வொருவருக்கும் ஆசை தான்

இதைப் பற்றி மட்டும் ஆராய்ந்த விஞ்ஞானிகள் ஏராளம் பேர் உண்டு.

 

 

முதலில் இதயத் துடிப்பு நிற்கிறது. மூளை ஆக்ஸிஜனுக்காக ஏங்குகிறது. அப்போது என்ன நடக்கிறது. இறக்கும் தருணங்களில் 20 சதவிகிதம் பேருக்கு “உண்மையைக் காட்டிலும் உண்மையான” காட்சியாக உடலை விட்டு உயிர் நீங்குவதும் பிரகாசமான ஒளியைக் காண்பதும் ஏற்படுகிறது என்கிறது அறிவியல்!

 

 

இது மூளை தரும் காட்சி தானா, அல்லது உடலுக்குப் பின்னால் உள்ள இன்னொரு உலகின் விளிம்பைக் காண்பதன் ஆரம்பமா?

 

மிச்சிகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான ஜிமோ போர்ஜிகின் (Jimo Borjigin) என்ற பெண்மணி இதை ஆராய ஆரம்பித்தார்.

 

முதலில் எலிகள் உள்ளிட்ட மிருகங்களின் மீது சோதனைகளை அவர் நடத்தினார். அவரது லாபரட்டரியில் சில மிருகங்கள் திடீரென இறந்தன. இறக்கும் போது அவற்றின் மூளை சம்பந்தமான சில கெமிக்கல்களின் மின் இயக்கம அதிகமானது.  இதனால் தான் நினைவகத்தில் இருந்த சில அனுபவங்கள் இறக்கும் தருவாயில் உள்ள மனிதர்களுக்குத் தோன்ற அது இறக்கும் போது காணும் காட்சிகளாகச் சித்தரிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இதை உறுதி செய்ய ஒன்பது எலிகளின் மூளைகளில் எலக்ட்ரோடைச் செருகி ஒரு மணி நேரம் மயக்க மருந்தைச் செலுத்தினர். இது சோதனையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அறநெறிகளில் ஒன்று. பின்னர் பொடாசியம் க்ளோரைடை ஒவ்வொரு எலியின் இதயத்திலும் செலுத்தினர்.

அடுத்த 30 விநாடிகளில் எலியின் கடைசி இதயத்துடிப்பு ஏற்பட, மூளை இயக்கமின்றி நிற்கும் போது கடைசியாக மின் சிக்னலகளை வெளியிட அதை ஆய்வாளர்கள் துல்லியமாக ரிகார்ட் செய்தனர்.

 

 

இதை ஆராய்ந்த குழுவினர், தகவல்களை முறைப்படுத்துவது,  விழிப்புணர்வுடன் இருப்பதை விட எட்டு மடங்கு அதிகமாக ஆகிறது என்பதைக் கண்டனர். அது உணர்வின் அதிக உச்ச நிலை என்று அவர்கள் தெரிவித்து, அது தான் இறக்கும் போது பல காட்சிகளைக் காண்பது போன்ற தோற்றத்தை மனிதர்களுக்கு அளிக்கிறது என்ற முடிவுக்கு வந்தனர்.

ஆனால் ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானியான் சாம் பார்னியா மிருகங்கள் கடைசி நிமிடங்களில் என்ன நினைக்கிறது என்பது யாருக்குத் தெரியும்? இது கடைசி நிமிடங்களில் இரத்த ஓட்டத்தின் நிலை என்ன என்பதையும் மூளையின் கெமிக்கல் வெளிப்பாடுகள் எப்படி உள்ளன எனபதையும் அறிய மட்டுமே உதவும் என்கிறார்.

 

 

    சாம் பார்னியா தனது சக விஞ்ஞானிகளுடன் இணைந்து ஒரு பெரிய ஆய்வை நான்கு ஆண்டுக் காலம் செய்தார்.  மாரடைப்பு ஏற்பட்ட 2060 நோயாளிகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களில் உயிர் பிழைத்த 330 பேர்களில் நாற்பது சதவிகிதத்தினர் தாங்கள் இறந்ததாக மருத்துவ ரீதியாக அறிவிக்கப்பட்ட இறுதி விநாடியில் பெரிய விழிப்புணர்ச்சியைப் பெற்றதாக அறிவித்தனர்.

இவர்களின் ஐந்து பேரில் ஒருவர் எல்லையற்ற அமைதி கிடைத்ததாகத் தெரிவித்தனர். மூன்றில் ஒருவர் காலமே இல்லாத  ஒரு உணர்வை அடைந்ததாக அறிவித்தனர்.

இவர்களில் 46 சதவிகிதம் பேர், நினவுகளில் பல மின்னல் வேகத்தில் தோன்றி மறைந்ததாகக் கூறினர். இரண்டே இரண்டு சதவிகிதம் பேர்கள் மட்டும்  “திரும்பி வந்ததை” பார்த்தும் உணர்ந்தும் அனுபவித்ததாகக் கூறினர்.

 

 

பல லட்சம் பேர் இப்படி இறுதி விநாடி அனுபவத்தைப் பெற்று வருகின்றனர். இதை இன்னும் ஆராய்ந்தால் பல உண்மைகள் புலப்படும் என்று ஆய்வுக் குழு தெரிவித்தது.

57 வயதான “இறந்த” ஒரு ராணுவ வீரரின் அனுபவம் சுவையானது. மருத்துவ ரீதியில் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் “இறந்த” அறையில் நடந்ததை எல்லாம் அவர் பிட்டுப் பிட்டு வைத்தார். இதயம் நின்ற பின்னர் மூளை 20 முதல் 30 விநாடிகளில் செயல் இழக்கும். ஆனால் அவரோ இரண்டு ப்ளீப் ஒலிகளைக் கேட்டதாகச் சொன்னார். இது மருத்துவ ரீதியாக அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர் மூன்று நிமிடங்கள் இடைவெளியில்  ஒரு மெஷினிலிருந்து வெளிப்படும் ஒலியாகும்!

 

 

இது நம்ப முடியாத அதிசயம் என்பதைக் கூறிய பார்னியா, இத்னால் ஒருவர் இறந்து விட்ட பின்னர் கூட நாற்பது நிமிடங்கள் வரை மூளை சேதம் அடைவதில்லை என்ற முடிவுக்கு வரலாம் என்று கூறினார். மற்ற விஞ்ஞானிகள் அவரை ஆதரித்து குறைந்த பட்சம் 20 நிமிடம் மூளை சேதமின்றி அப்படியே இருக்கிறது என்கின்றனர்.

 

 

    அதாவது இற்ந்த பின்னர் கூட ஒருவரின் பிரக்ஞை அல்லது உணர்வு சில நிமிடங்களாவது நீடிக்கிறது என்பதையே தங்கள் ஆய்வின் முடிவு கூறுகிறது என்கிறார் அவர்.

      இன்னொரு சுவையான தகவல் உயிரின் எடையைப் பற்றியதாகும்!

 

 

      உயிரின் எடை 21 கிராம் என்று சொல்லப்படுவதன் மூல காரணம் 1907இல் நடந்த ஒரு ஆராய்ச்சியினால் தான்!

மசாசூசெட்ஸில் டங்கன் மக்டௌகால் (Duncan MacDougall)

என்ற ஒரு டாக்டர் இறக்கும் தருவாயில் இருந்த ஆறு நோயாளிகளை (இரகசியமாக மருத்துவ அற நெறிகளையும்  மீறி) மிக துல்லியமாக அளவுகளைத் தெரிவிக்கும் ஸ்பிரிங்குகள் உள்ள படுக்கைகளில் படுக்க வைத்தார். அவர்கள் இறந்தவுடன் மிகச் சரியாக 21 கிராம் எடையில் குறைந்து விட்டது தெரிய வருவதாகத் தெரிவித்தார். ஆகவே உயிரின் எடை 21 கிராம் தான் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

இந்தத் தகவல் உலகில் மிகவும் பிரபலமாகி விட்டது. ஆனால் இதை  மறுத்த இன்னொரு விஞ்ஞானியான டாக்டர் அகஸ்டஸ் பி. க்ளார்க் என்பவர் ‘அப்படியானால் நாய்கள் இறந்த பின்னர் இப்படி எடை குறையவில்லையே, அப்படியானால் நாய்களுக்கு “உயிரே” கிடையாதா!’ என்று பதில் கேள்வி கேட்டார்.

 

 

       ஆனால் ஆன்மா பற்றிய அனைத்து மதங்களின் தத்துவமும் ஒன்று தான். ஆன்மாவுக்கு எடை, காலம், வெளி எதுவும் கிடையாது என்பது தான். பிளேட்டோ காலத்திலிருந்து சொல்லி வரப்படும் உண்மை. ஆன்மா எதையும் கடந்தது என்பதை யார் தான் மறுக்க முடியும்?

 

 

    ஆன்மா அல்லது உயிரின் எடை பற்றிய இன்னொரு ஆராய்ச்சி 1907க்குப் பின்னர் செய்யப்படவே இல்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.

ஆன்மாவிற்கே ஒரு ஆராய்ச்சியா? ஹ, ஹ, ஹா என்கின்றனர் மெய்ஞானிகள்.

அதை கண்டு பிடிக்காமலா இருப்போம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

சபாஷ், சரியான போட்டி! காலத்தின் கையில் தான் விடை இருக்கிறது!

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. …

 

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆலிவர் ஹெவிசைட் (Oliver Heaviside : பிறப்பு 18-5-1850 மறைவு 3-2-1925) பிரபல விஞ்ஞானி. கணித மேதையும் கூட. மின் சர்க்யூட்களைப் பற்றி அபாரமான ஆராய்ச்சிகளைச் செய்தவர் அவர்.

 

அவரது வாழ்க்கை சற்று விசித்திரமானது. பள்ளிப் படிப்பு என்பது ஆரம்ப காலத்தில் மட்டும் அவருக்கு ஒரு சிறிதே இருந்தது. ஆனால் இயற்பியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர் சுயமாகக் கற்றார். உலகப் பிரசித்தி பெற்ற விஞ்ஞானியானார்.

அவருக்கு காது சற்று மந்தம். ஆகவே தன்னைச் சந்திக்க வருவோரை மிகவும் குறைத்துக் கொண்டார். ஏறக்குறைய தனிமையில் வாழும் ஒரு சந்யாசியைப் போல வாழ்ந்தார்.

ஒரு நாள் தற்செயலாக  ஒரு வாயு எரிய அதில் அவரது முகம் பட்டு முற்றிலுமாக வெந்து போனது.

 

கோரமான முகத்தைக் காட்ட விரும்பாது ஒரு தலைப்பாவை முகம் முழுவதும் மூடும் படியாகக் கட்டிக் கொண்டு வாழலானார். முகமூடியோ கழுத்துடன் ஒரு கயிற்றினால் இறுகக் கட்டப்பட்டிருக்கும். அவரது கண்கள் மட்டும் பெரிய முகமூடி வழியே மின்னும்!

 

 

உலகம் அவரைப் பாராட்டியபோதும் போதுமான பணமின்றி ஏழையாகவே அவர் வாழ்ந்தார். நண்பர்களோ யாரும் பார்க்க வரவில்லை அல்லது அவர் வரவிடவில்லை!

70 வயது ஆன பிறகு நிலைமை இன்னும் மோசமானது. கரண்ட் பில் கட்டக் கூட பணமில்லை. அவரோ அசரவில்லை. மின்சார இணைப்பு இல்லாமலேயே 15 மாதங்கள் இருட்டில் வாழ்ந்து வந்தார்.   அவரது குறிப்புப் புத்தகங்களும் ஆராய்ச்சி பற்றிய அனைத்து நோட்டுகளும் இன்றும் இன்ஸ்டிடியூஷன் ஆஃப்     எஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியில் காக்கப்பட்டு வருகிறது.

 

விசித்திரமான விஞ்ஞானியாகத் திகழ்ந்தவர் ஆலிவர் ஹெவிசைட்

*********

 

இந்திய, அமெரிக்க, ஜப்பானிய, சீன கம்பெனிகள் (Post No 3392)

Written  by S NAGARAJAN

 

Date: 27 November 2016

 

Time uploaded in London:4-58 AM

 

Post No.3392

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

நாட்டு நடப்பு

 

இந்திய, அமெரிக்க, ஜப்பானிய, சீன கம்பெனிகள் எவைபயனுள்ள ஒரு பட்டியல்!

.நாகராஜன்

 

இந்திய பொருளாதாரம் சிறந்து உயர்ந்து இந்தியா வல்லரசாவது உறுதி. இதற்கு மக்கள் இந்தியப் பொருள்களையே வாங்கி ஆதரித்து ஊக்குவிக்க வேண்டும்.

 

விரிந்து வரும் இந்திய சந்தையை பல நாடுகளும் ஆக்கிரமிக்க எண்ணம் கொள்வது இயல்பே.

 

இந்த நிலையில் இந்திய அமெரிக்க சீன ஜப்பானிய நிறுவனங்கள் எவை என்று தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகி விட்டது.

 

குறிப்பாக சீனா இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் எல்லை  மீது தீய பார்வையைக் கொண்டுள்ளது. ஆகவே சீனப் பொருள்களைத் தவிர்ப்பதற்கு இந்தப் பட்டியல் பெருமளவு உதவும்.

பட்டியல் இதோ:

 

Indian companies

 

Micromax  is an Indian company

IBall is an Indian company

HCL is an Indian company

Intex is an Indian company

Karboun is an Indian company

Virgin is an Indian company

Videocon is an Indian company

XOLO is an Indian company

 

Chinese companies

 

Lenovo is a Chinese company

Coolpad is a Chinese company

Gionee is a Chinese company

Huawei is a Chinese company

Xiaomi is a Chinese company

OnePlus is a Chinese company

Alibaba is a Chinese company

ZTE is a Chinese company

Haier is a Chinese company

Vivo is a Chinese company

LeEco is a Chinese company

Oppo is a Chinese company

 

 

Taiwanese companies

 

Acer is a Taiwanese company

HTC is a Taiwanese company

Asus is a Taiwanese company

 

 

American companies

 

Dell is an American company

Apple is an American company

HP is an American company

Motorola is an American company

Microsoft is an American company

 

Canadian company

 

BlackBerry is a Canadian company

Japanese companies

 

Sony is a Japanese company

Toshiba is a Japanese company

Panasonic is a Japanese company

 

Netherlands company

 

Philips is a Netherlands company

 

South Korean companies

 

Samsung is a South Korean company

LG is a South Korean company

 

Finland company

 

Nokia is a Finland company

 

இந்தத் தகவலைத் தரும் நவீன் என்பவர் ஒரு வேண்டுகோளையும் முன் வைக்கிறார் இப்படி:

Please try to use Indian made products as much as possible and ban or do not use any products manufactured by Chinese companies.

 

தகவல் ஆதாரம் TRUTH வார இதழ் (28-10-2016 இதழ்)

 

சிந்திப்போம்; செயல்படுவோம்!

*****

 

 

 

அற்ப சண்டைகளை விட ஆகாயத்தைப் பாருங்கள்! (Post No.3371)

Written by S NAGARAJAN

 

Date: 20 November 2016

 

Time uploaded in London: 5-51 am

 

Post No.3371

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

 

பாக்யா 18-11-2016 இதழில்  அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

அற்ப சண்டைகளை விட ஆகாயத்தைப் பாருங்கள்!

ச.நாகராஜன்

“அண்ட கோடிகள் வானில் அமைத்தனை;                                         

     அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை;                      மண்டலத்தை அணுவணு ஆக்கினால்,                                             

     வருவது எத்தனை அத்தனை யோசனை                                              கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை,                                        

     கோலமே! நினைக் காளி என்றேத்துவேன்! –ம்காகவி பாரதியார்

 

    2016ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி அஸ்ட்ரோபிஸிகல் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வுக் கட்டுரை பெரும் பிரமிப்பை உலகில் ஏற்படுத்தியுள்ளது.

 

பிரபஞ்சத்தைப் பற்றிய நமது அறிவு கொஞ்சமே என்று கூறும் இந்த ஆய்வுப் பேப்பர், ‘உலகில் நூறு கோடிக் கணக்கான (பில்லியன்) காலக்ஸிகள் உள்ளன என்று முன்னர் நினைத்தோம். அது தவறு. இப்போது கிடைத்துள்ள ஆய்வின் முடிவின் படி  பிரபஞ்சத்தில் இரண்டு டிரில்லியன் காலக்ஸிகள் உள்ளன. அதாவது முன்னர் நினைத்ததை விடப் பத்து மடங்கு அதிகம் காலக்ஸிகள் உள்ளன என்கிறது.

 

ஒரு டிரில்லியன் என்பது ஒன்றுக்குப் பின்னால் 12 பூஜ்யங்களைக் கொண்ட ஒரு பெரிய எண்!  இதை விளக்க ஒரு சிறிய உதாரணம் தரப்படுகிறது. இயேசு பிறந்த அன்றிலிருந்து நீங்கள் ஒரு நாளைக்கு பத்து லட்சம் டாலர்களைத் தினமும் செலவழித்து வந்தால் கூட 2016இல் இன்றைய தினத்தில் நீங்கள் ஒரு டிரில்லியன் டாலரைச் செலவழித்து முடித்திருக்க முடியாது!

 

இன்னொரு விளக்கம்: பத்து லட்சம் விநாடிகள் என்பது 11.5 நாட்கள். ஒரு பில்லியன் விநாடிகள் என்பது 32 வருடங்கள். ஒரு டிரில்லியன் விநாடிகள் என்பது 32000 ஆண்டுகள்!

ஹ்ப்பிள் டெலஸ்கோப் மற்றும் உலகில் உள்ள அதி நவீன சாதனங்களை வைத்துச் செய்யப்படும் ஆய்வின் முடிவாக விஞ்ஞானிகள், “பிரபஞ்சத்தில் உள்ள காலக்ஸிகளில் 90 சதவிகிதம் மிகவும் மங்கலாக உள்ளன. அவை நாம் நம்ப  முடியாத அளவு வெகு வெகு தூரத்தில் உள்ளன என்கின்றனர்!

 

ஒரு காலக்ஸி என்பதில் நூறு நூறு கோடி நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திர மண்டலமும் பல நூறு கிரகங்களைக் கொண்டுள்ளன. வானியல் விஞ்ஞானிகள் ‘இந்த காலக்ஸிகளில் நமது பூமி போல உள்ள  கிரகங்கள் மட்டும் பல பில்லியன்கள் உள்ளன என்கின்றனர். இவை அனைத்தும் உயிரினங்கள் வாழக் கூடிய கிரகங்களே!

 

இப்போது இரண்டு டிரில்லியன் காலக்ஸிகளை எண்ணிப் பார்த்தால் அதில் பூமி போன்ற கிரகங்கள் எத்தனை கோடி கோடி கிரகங்கள் இருக்கும்? நினைக்கவே மலைப்பாக இருக்கிறது, அல்லவா!

பிரபல பத்திரிகையான ஃபோர்பஸ் (Forbes) பூமியில் இருக்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் 200 காலக்ஸிகள் இருக்கின்றன என்று சுருக்கமாகக் கூறுகிறது.

 

 

நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் கான்ஸிலிஸ் (Christopher Conselice of University of Nottingham)  என்பவரே இந்த ஆய்வை முன்னின்று நடத்தியவர். அவர் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள குறிப்பு ஒன்றில், “எதிர்காலத் தலைமுறைகள் கண்டுபிடிக்கும் டெலஸ்கோப்களை வைத்து இவற்றை ஆராயும் போது இன்னும் என்னவெல்லாம் அதிசயக்கத்தக்க செய்திகள் கிடைக்குமோ, யார் அறிவார்? என்று வியந்து கூறுகிறார்!

விஞ்ஞானிகள் எப்படி காலக்ஸிகளின் எண்ணிக்கையைக்  கணக்கிடுகின்றனர்? ஹப்பிள் டெலஸ்கோப் எடுக்கும் படங்களை நுணுக்கமாக ஆராய்கின்றனர். ஹப்பிள் டீப் ஃபீல்ட் என்று அழைக்கப்படும் போட்டோக்களை வைத்து முதலில் நூறு பில்லியன் காலக்ஸிகள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டன. ஆனால் இப்போதோ அல்ட்ரா டீப் ஃபீல்ட் போட்டோக்களை பார்க்கும் போது ஒரு சிறிய புள்ளியை நன்கு ஆராய்ந்து பார்க்கையில்  அதில் பல கோடி காலக்ஸிகள் உள்ளதை அவர்கள் கண்டு வியக்கின்றனர்.

 

 

ஹப்பிள் டெலஸ்கோப் நிறுவி 26 ஆண்டுகள் ஆகிறது. அது தன் ஆயுளின் முடிவை அடையவிருக்கிறது. இதை அடுத்து ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட இருக்கிறது. அதில் பொருத்தப்படும் பெரிய கண்ணாடியும அதி நவீன சென்ஸரும் இன்னும் என்னென்ன விந்தைகளைச் சுட்டிக் காட்டப் போகிறதோ, விஞ்ஞானிகள் பெருத்த கிளர்ச்சியுடன் காத்திருக்கின்றனர்!

 

இந்த பன்னிரெண்டு பூஜ்யங்கள் போதாது, இன்னும் எத்தனை பூஜ்யங்கள் கூடப் போகிறதோ என்று விஞ்ஞானிகள் வட்டாரத்தில் பரபரப்பான விவாதம் நடைபெற ஆரம்பித்து விட்டது.

 

‘கற்பனைக்கு அப்பாற்பட்ட பெரிய ..  பெரிய ..  பெரிய்ய்ய பிரபஞ்சத்தில் அற்ப சண்டைகள் ஏதுக்கு? இதைச் சுலபமாகப் போக்க ஒரே வழி: ஆகாயத்தைப் பாருங்கள். இந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் நீங்கள் எவ்வளவு அற்பமாக இருக்கிறீர்கள்? இந்த எல்லையற்ற முடிவே இல்லாத பிரபஞ்ச வயதில் நூறு ஆண்டுகள் கூட வாழ முடியாத நீங்கள் எதற்காகவும் தான் இருக்கட்டுமே, சண்டை போடலாமா? கூடாது. இந்த உணர்வைப் பெற ஆகாயத்தில் மின்னும் கோடி கோடித் தாரகைகளைப் பாருங்கள் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

 

இந்தப் புதிய கண்டுபிடிப்பு காட்டும் தத்துவம் உலகை சமாதானத்திற்கு அழைத்துச் செல்வதோடு உள் குடும்ப, பிராந்திய, மொழிச் சண்டைகளுக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைத்து விடும்.

அறிவியலின் வளர்ச்சியில் நாம் அடையப் போகும் மிகப் பெரிய ஆதாயம் நிரந்தர சமாதானம் தானோ! பரஸ்பர ஒற்றுமை, அன்பு,நேசம், ஒத்துழைப்பு, மரியாதை என்று மதங்கள் வலியுறுத்த அதை பௌதிகமாக விஞ்ஞானம் காண்பிக்கையில் மதமும் விஞ்ஞானமும் இணணயப் போகிறதோ!

 

விஞ்ஞானிகளின் வியத்தகு அறிவிப்பைக் கேட்கும் இந்தத் தருணத்தில்,

 

மாணிக்கவாசகர் திருவண்டப்பகுதியில்

“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி

ஒன்றனுக் கொன்று நின்றெழில்  பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

என்று பிரபஞ்ச மர்மத்தை விடுவிப்பதையும்,

மகாகவி பாரதியார்,

“நக்க பிரானருளால் – இங்கு

    நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்!

தொக்கன அண்டங்கள் – வளர்

    தொகைபல கோடிபல் கோடிகளாம்!

இக்கணக்கெவர் அறிவார்? – புவி

 

   எத்தனை உளதென்பது யாரறிவார் “ (நக்க பிரான் – சிவபிரான்)

என்று அன்றே பற்பல கோடி அண்டங்கள் உள்ளது என்று பாடிய பாடலையும் நினைவு கூர்ந்து தமிழனின் தலை நிமிர வைக்கும் பிரபஞ்ச அறிவை எண்ணி எண்ணி பிரமிக்கலாம்!

உலகின் மிகச் சிறப்பான தினங்களை நோக்கி விஞ்ஞானம் நடைபோடுவது நம்மைப் புல்லரிக்க வைக்கிறது!!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில .. …

இயற்பியலுக்கான நோபல் பரிசை பிரபல விஞ்ஞானி ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் (Richard Feynman) 1965ஆம் ஆண்டு பெற்றார். பரிசைப் பெற்றவுடன் அவர் நியூயார்க்கிற்குத் திரும்பினார். திரும்பும் போது, கூட வந்திருந்த இரண்டு விஞ்ஞானிகளுடன் தான் படித்த பழைய பள்ளிக்கூடத்திற்குள் சென்றார். உற்சாகமான வரவேற்பு இருந்தது.  தனது பழைய பள்ளி ரிகார்டுகளை அவர் ஆர்வத்துடன் பார்த்தார். அவரது ஐக்யூ (நுண்ணறிவு  கோஷண்ட்) பற்றி என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று பார்த்த போது மிகவும் குறைவான ஐக்யூவே அவருக்குத் தரப்பட்டிருந்தது.

 

உடனே அவர், “நோபல் பரிசு பெறுவது என்பது அவ்வளவு ஒன்றும் கஷ்டமான விஷயம் இல்லை. ஆனால் இவ்வளவு குறைந்த ஐக்யூ கொண்ட ஒருவன் நோபல் பரிசு பெறுவது என்பது அபூர்வமான விஷயம் தான் என்று கூறினார். அனைவரும் சிரித்தனர்.

 

பள்ளிக் குறிப்பேடுகளில் ‘டல் எனக் குறிப்பிடப்பட்ட பலர் பின்னால் பெரும் மேதைகளாக ஆகி உலகை அசத்தி இருக்கின்றனர். ரிச்சர்ட் ஃபெய்ன்மேனும் அவர்களில் ஒருவர்!

***********

 

கத்திச் சண்டை போட்ட கணித மேதை! (Post No.3360)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 16 November 2016

 

Time uploaded in London:9-09 AM

 

Post No.3360

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

ச.நாகராஜன்

 

 

பிரான்ஸ் நாட்டைச் சேர்நத இவாரிஸ் கலோயிஸ் (Evariste Galois) ஒரு இளவயதுக் கணித மேதை. (தோற்றம் 25-10-1811; மறைவு : 31-5-1832) அருமையான குடும்பத்தில் பிறந்த அவர் இளமையிலிருந்தே இரண்டு விஷயங்களில் அதீத ஈடுபாட்டுடன் இருந்தார். ஒன்று புரட்சி அரசியல் மீது ஈடுபாடு இன்னொன்று கணிதத்தில் ஈடுபாடு. 12 வயதிலேயே அவரது கணிதத் திறமை நன்கு புலப்பட்டது.

 

 

அவரது தந்தை திடீரென்று இறக்கவே மேல் படிப்பு படிக்கக் கையில் பணமில்லாது போனது. கணித டியூஷனுக்கு வருமாறு ஒரு நோட்டீஸை மளிகைக் கடை வாசலில் தொங்க விட்டார். மாணவர்கள் வந்தனர். ஆனால் அவர்களுக்கு கலோயிஸின் உயர் அறிவு புரியவே இல்லை. ஓடி விட்டனர்.

பிரான்ஸோ புரட்சிவாதிகளால் இரண்டாகப் பிரிந்து சண்டையில்  அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது..

அந்தக் காலத்தில் எந்த ஒரு விஷயத்தையும் முடிவு கட்ட டியூயல் எனப்படும்  சண்டை நடைபெற்று வந்தது. நிர்ணயிக்கப்பட்ட விதிகளின் படி பெரும்பாலும் கத்திச் சண்டையில் போட்டியாளர்கள் ஈடுபடுவர். ஒருவர் சாகும் வரை சண்டை தொடரும்!

 

 

கோழி காணாமல் போயிற்று என்றாலும் சரி, அரசியல் கொள்கை பற்றிய முடிவு எடுக்க வேண்டுமென்றாலும் சரி, பிரான்ஸில் டியூயல் தான். முதல் உலக மகாயுத்தம் வரை இந்த டியூயல் பிரான்ஸில் பிரபலமாக இருந்தது.

துரதிர்ஷ்டவசமாக கலோயிஸும் இந்த டியூயலில் ஈடுபட வேண்டி வந்தது. சிலர் இதை காதலுக்காக என்கின்றனர். சிலரோ அரசியல் புரட்சி காரணங்களுக்காக என்கின்றனர்.

இறப்பதற்கு முதல் நாள் முடிக்காத தனது கணித ஆய்வுப் பேப்பர்களை எடுத்து வைத்துக்  கொண்டு இரவு முழுவதும் அவர் எழுதிக் கொண்டே இருந்தார். பல  இடங்களில் பலவற்றை விளக்காமல் மார்ஜினில் நேரம் இல்லை, நேரம் இல்லை என்று எழுதி விடைகளை மட்டும் எழுதிக் கொண்டே போனார்.

 

 

     மறு நாள் இறந்து விடுவோம் என்பதைத் தெரிந்து கொண்டவர் போல இரு கடிதங்களை எழுதி, “நான் நாட்டுக்காக உயிர் விடுகிறேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்’ என்று உருக்கமாக அறிவித்தார். மறுநாள் நிர்ணயித்த படி சண்டை நடைபெற்றது. அதில் அவர் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது  21 தான். க்ரூப் தியரியைக் (Group Theory) கண்டுபிடித்த இந்த இள வயது மேதையின் அகால மரணம் விஞ்ஞான வரலாற்றில் சோகமான ஒன்று!

 

******

 

தானத்தால் பெருகிய நீரும், துக்கத்தால் பெருகிய நீரும்! (Post No.3357)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 15 November 2016

 

Time uploaded in London:13-57

 

Post No.3357

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

by ச.நாகராஜன்

 

 

கடல்.

அதைப் பார்த்து வியக்காத மனிதர் உண்டா, என்ன?

அதைப் பாடாத கவிஞர் உண்டா என்ன?

ஒவ்வொரு கவிஞரும் கடலை ஒவ்வொரு பார்வையில் பார்க்கும் விதமே சுவையானது.

 

 

திருவள்ளுவர், வால்மீகி, கம்பன், திருத்தக்க தேவர், சிறுவெண்தேரையார், பாரதியார், ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட நம் நாட்டுக் கவிஞர்களும் மேலை நாட்டுக் கவிஞர்களும் கடலை பல்வேறு பார்வைகளில் பார்த்துத் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

 

அனைத்துமே அருமை தான்!

இரு பாடல்களை இங்கு பார்ப்போம்.

சிறுவெண்தேரையார் என்ற சங்க காலப் புலவர் பாடிய பாடல் புறநானூற்றில் 362ஆம் பாடலாக மலர்கிறது.

 

 

ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த
மதி உறழ் ஆரம் மார்பில் புரளப்
பலி பெறு முரசம் பாசறைச் சிலைப்பப்
பொழிலகம் பரந்த பெருஞ்செய் ஆடவர்
செருப்புகன்று எடுக்கும் விசய வெண் கொடி
அணங்கு உருத்தன்ன கணங்கொள் தானை
கூற்றத்து அன்ன மாற்றரு முன்பின்
தாக்குரல் காண்பின் அந்தணாளர்
நான்மறை குறித்தன்று அருளாகாமையின்
அறம் குறித்தன்று பொருளாகுதலின்
மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇக்
கை பெய்த நீர் கடற்பரப்ப
ஆம் இருந்த அடை நல்கிச்
சோறு கொடுத்து மிகப் பெரிதும்
வீறு சான் நன் கலம் வீசி நன்றும்
சிறு வெள் என்பின் நெடு வெண் களரின்
வாய் வன் காக்கை கூகையொடு கூடிப்
பகலும் கூவும் அகலுள் ஆங்கண்
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு
இல் என்று இல் வயின் பெயர மெல்ல
இடஞ் சிறிது ஒதுங்கல் அஞ்சி
உடம்பொடும் சென்மார் உயர்ந்தோர் நாட்டே.

 

 

    பாட்டுடைத் தலைவன் சாதாரணமானவன் அல்லன். அவனைப் புகழ வந்த புலவர் சூரியனையும் சந்திரனையும் இணைக்கிறார். ஞாயிறு அன்ன ஆய மணி மிடைந்தவன்.மதி உறழ ஆரம்  மார்பில் கொண்டவன். பலி பெற்ற முரசுகள் போர்க்களப் பாசறையில் முழங்குகின்றன. விஜய வெண்கொடியை ஏந்தி பெரும் செயலைச் செய்யும் வீரர்கள் நாடெங்கும் பரந்துள்ளனர். அவர்களைப் பார்க்கவே கூற்றுவன் போல உள்ளது.

 

 

ஓ, பிராமணர்களே! தாக்குகின்ற குரல்களைக் (தாக்கி வரும் பகைவர்களின் ஒலிகளைக்) கேளுங்கள்! இது நான்கு வேதங்களிலும் குறிப்பிடப்பட்ட ஒன்று அல்ல! இது அருள் இல்லாதது என்பதால் இது அறம் சார்ந்த ஒன்று அல்ல. இது பொருள் குறித்தது. அறத்திற்கும் அருளுக்கும் சம்பந்தமில்லாத (மெடீரியலிஸம் குறித்த) ஒன்று. மருளும் தீர்ந்தது. மயக்கமும் ஒழிந்தது.

தலைவன் அந்தணர்களின் கையில் நீர் பெய்து வாரி வழங்குகிறான்.

அவன் இப்படிக் கொடுத்து கீழே விழும் நீர் எவ்வளவு தெரியுமா?

“கை பெய்த நீர் கடற் பரப்ப

 

 

அவன் கையிலிருந்து வழிந்த நீர் கடலாக ஆயிற்று.

அவன் வளம் கொழிக்கும் நிலங்களைக் கொடுத்தான். சோறு கொடுத்தான். விலையே மதிக்க முடியாத நல் பரிசுகளை அளித்தான். வெள்ளை எலும்புகள் சிதறிக் கிடக்க, வன் வாய் உள்ள காக்கை மற்றும் ஆந்தைகள் ஆகியவை இருக்கும் பகலிலும் நிரம்பியுள்ள காட்டில் உள்ள அவனது வீடு பேச்சுச் சத்தம் நிறைந்த சுற்றத்தாரால் நிரம்பி உள்ளது. ஆகவே இடம் சிறிது தான் இருக்கிறது என்று பயந்து அங்கிருந்து தன் உடலுடன் கிளம்பி பெரும் வீரர்கள் உள்ள நாட்டை நோக்கிச் சண்டையிட அவன் விரும்பிக் கிளம்புகிறான்.

 

   இந்தப் பாடலில் கடலை உவமையாகச் சொல்ல வருகிறார் கவிஞர். தலைவன் கையினால் நீர் சொரிந்து தானம் வழங்க அந்த நீர் கடல் எனப் பெருகிற்றாம்!

 

கடலைத் தானத்தால் கொடுத்த நீர் பெருக்கிற்கு சங்கப் புலவர் இப்படி ஒப்பிட்டார் என்றால் இன்னொரு புலவர் துக்கத்தால் பெருகிய நீருக்கு கடலை ஒப்பிடுகிறார்.

 

இரு வேறு பார்வைகள்; ஆனால் கடல் ஒன்று தான்!

 

திருத்தக்க தேவர் இயற்றிய சீவக் சிந்தாமணியில் வரும் பாடலைப் பார்ப்போம். பதுமையார் இலம்பகத்தில் அழகியான பதுமைக்கு அவளது தோழி கூறுவதாக அமைந்துள்ள பாடல் இது:

 

“பிரிந்தவர்க்கு இரங்கிப் பேதுற்று அழுத நம் கண்ணின் நீர்கள்

சொரிந்தவை தொகுத்து நோக்கில் தொடுகடல் வெள்ளம் ஆற்றா

முரிந்த நல் பிறவி மேனாள் முற்றிழை இன்னும் நோக்காய்

பரிந்து அழுவதற்குப் பாவாய் அடியிட்டவாறு கண்டாய்!

                          (சீவக சிந்தாமணி பாடல் எண் 1391)

 

 

பேதுற்று – வருத்தமடைந்து

தொடுகடல் – தோண்டப்பட்ட கடல்

ஆற்றா – அள்விடமுடியாது

முரிந்த –  கெட்ட

 

பாடலின் பொருள் :

 

பிரிந்து சென்ற கணவர்களை நினைத்து வருந்தி அழுதவர்கள் விட்ட கண்ணீரைக் கணக்கெடுத்துப் பார்த்தால் விண்ணைத் தொடவிருந்த கடல் நீரும் அதற்கு உவமை சொல்லப் பொருந்தாது. இழைமணி அணிந்தவளே! இன்னும் கேட்பாய்! முற்பிறவியில் அப்படி நாம் அழுது சிந்திய கண்ணீர்ரே, இப்பிறவியில் நாம் அப்படி வருந்தி அழுவதற்கு அடிக்கல் இட்டது போல அமைகிறது என்பதை அறிவாயாக!

 

   ஒவ்வொரு பிறவியிலும் பிரிந்த கணவனை எண்ணி அழுத கண்ணீர் வெள்ளம் கடலை விடப் பெரியது எனச் சொல்லி திருத்தக்க தேவர் கடல் நீரை கண்ணீர் வெள்ளத்திற்கு ஒப்பிடுகிறார்.

 

   அத்தனை பிறவிகள்! அத்தனை கணவர்கள்! அத்தனை பிரிவுகள்! அத்தனை ஆற்ற ஓண்ணா அழுகை ஓலம்!

 

    கடலைக் கண்டவுடன் பிறவிகளின் எண்ண முடியாத் தொடர்ச்சியும் அதில் பிரிவின் வேதனையும் அதனால் விளைந்த கண்ணீரும் கவிஞருக்கு நினைவில் வருகிறது; கவிதை மலர்கிறது.

 

பிறவிப் பெருங்கடல் என்றார் வள்ளுவரும்.

பிற ஆழி நீந்தல் அரிது என்ற அவர் யாருக்குப் பிற ஆழி நீந்த முடியாத ஒன்று என்பதையும் விளக்கமுறச் சொல்கிறார்.

அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தாருக்கு அல்லால் — பிற ஆழி நீந்தல் அரிது.

 

 

அற ஆழி என்பதை தர்ம சக்கரம் என்று விளக்குகிறார் பரிமேலழகர்.

தர்ம சக்கரம் ஏந்திய அறமுடைய இறைவனின் அடி சேர்ந்தவர்க்கு அல்லால் பிற ஆழி நீந்தல் முடியாது..

 

கடலை மட்டும் எடுத்துக் கொண்டு உலக இலக்கியங்களை அலச ஆரம்பித்தால் நாம் தெரிந்து கொள்ளும் உண்மைகள் ஏராளம். நூற்றுக் கணக்கான சுவையான பாடல்கள் உள்ளன.

********

 

 

உலகம் எப்படி அழியும்? எப்போது அழியும்? வள்ளுவன் தகவல் (Post No.3355)

Written by London Swaminathan

 

Date: 15 November 2016

 

Time uploaded in London: 6-26 AM

 

Post No.3355

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

உலகம் எப்படி அழியும்?

பூகம்பத்தால் அழியும்.

எப்போது அழியும்?

பண்புடையவர்கள் இல்லாவிடில் அழியும்.

 

இப்படிக்கூறியது திருவள்ளுவர். பொய்யாமொழிப் புலவன் சொல்லுவது பொய்யாகுமா?

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அது இன்றேல்

மண்புக்கு மாய்வது மன் (குறள் 996)

 

பொருள்:-

நல்ல பண்புகள் (குணங்கள்) உடையோர் வாழ்வதால்தான் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது. சான்றோர் இல்லாவிடில் நிலநடுக்கம் (பூகம்பம்) உண்டாகி எல்லாம் மண்ணுக்குள் புதைந்துவிடும்.

 

அதாவது கலியுகம் முற்றிப்போய், நல்லவர்கள் குறைந்துவிட்டால், உலகம் அழிந்துவிடும். புராணங்களும், மஹாபாரதமும் சொன்ன அதே கருத்தை வள்ளுவனும் இயம்புவதில் வியப்பொன்றுமில்லை.

 

இதற்கு ஆறு குறள்களுக்கு முன், வள்ளுவன் அபாயச் சங்கு ஊதுகிறான்:-

 

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்

தாங்காது மன்னோ பொறை (குறள் 990)

 

பொருள்:-

வேலியே பயிரை மேய்ந்தால் பூமாதேவி பொறுக்கமாட்டாள். சான்றோரின் குணங்கள் நீங்குமானால் இந்தப் பெரிய நிலம் பாரத்தைத் நிச்சயமாகத் தாங்காது.

 

இதையே அவ்வையார் வேறுவிதமாக விளம்புவார்:-

நல்லவர் ஒருவர் இருந்தால் போதும். அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என்று.

 

நல்லவர் இல்லாவிடில் மழை பெய்யாது.

 

அந்தக் காலத்தில் வறட்சி நிலவினால் உடனே ஊருக்குள் முனிவர்களையும், சாது சன்யாசிகளையும் அழைத்து வருவர் என்பதை ராமாயணம் மூலம் அறிவோம். ரிஷ்யசிருங்கர் என்னும் கலைக் கோட்டு முனிவர் வந்தபின்னர் மழை பெய்தது.

 

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை – வாக்குண்டாம்

 

 

ஆயினும் வள்ளுவன் உறுதியாக் கூறுவது என்னவென்றால், எப்போதும் கொஞ்சம் நல்லவர்கள் மிச்சம் இருப்பார்கள்; உலகமே தலைகீழாகப் போனாலும் அவர்கள் நிலைபெயர மாட்டார்கள்!

 

ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படுவார் – குறள் 989

 

உலகம் அழியும் காலத்தில் பெரும் சுனாமி தாக்குதலில் கடல், கரை கடந்து நாட்டிற்குள் புகுந்தாலும், மேன்மக்கள், பாதை மாற மாட்டார்கள்.

 

வாழ்க வள்ளுவன்! வளர்க சான்றோர்!!

 

–subham–

 

 

டைரக்டராக, கவிஞராக உங்களிடம் ‘ஃப்ளோ’ இருக்கிறதா? (Post No.3349)

Written by S NAGARAJAN

 

Date: 13 November 2016

 

Time uploaded in London: 5-15 AM

 

Post No.3349

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

அறிவியல் துளிகள் தொடரில் பாக்யாவில் வெளிவந்துள்ள கட்டுரை

டைரக்டராக, கவிஞராக, எழுத்தாளராக உங்களிடம் ‘ஃப்ளோ இருக்கிறதா?

ச.நாகராஜன்

 

“பெரிய மனங்கள் கருத்துக்களை விவாதிக்கின்றன.சராசரி மனங்களோ நிகழ்வுகளை விவாதிக்கின்றன. அல்ப மனங்களோவெனில் மனிதர்களை விமரிசிக்கின்றன – ஹென்றி தாமஸ் பக்கிள்

     இன்று வாழ்ந்து  கொண்டிருக்கும் மிகச் சிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவரான மிஹாலி சிக்ஸெண்ட்மிஹாலி (Mihaly Csikszentmihalyi) படைப்பாற்றல் பற்றி நன்கு ஆராய்ந்தவர். அதைப் பற்றி உலகில் பேசுவதற்குத் தகுதியான முதல் நிபுணர் இவரே.

இவரது படைப்பாற்றல் பற்றிய புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்று சாதனை படைத்துள்ளன.

 

 

சிறந்த டைரக்டராக, பெரிய கவிஞராக, பிரபல எழுத்தாளராக உங்களுக்குத் தேவையானது ‘ஃப்ளோ (FLOW) – அதாவது ஓட்டம் தான் என்கிறார் இவர்.

ஃப்ளோ பற்றிய அரும் தகவலை இவர் விளக்கும் விதமே அலாதியானது!

 

 

இன்றைய நவீன விஞ்ஞான, தகவல் புரட்சி உலகில் நாம் பெறும் தகவலின் அளவு பிரம்மாண்டமானது. நமது மைய நரம்பு மண்டலம் எவ்வளவு தகவலை உள்வாங்கி முறைப்படுத்த முடியும் என்பது பற்றி இவர் ஆராய்ந்துள்ளார்.

 

 

எந்த மனிதனாக இருந்தாலும் கூட அவனால் ஏழு பிட்ஸ் தகவலை (7 bits of information) மட்டுமே ஒரு நேரத்தில் சமாளிக்க முடியும் என்கிறார் இவர். ஒலியாகட்டும், பார்க்கின்ற காட்சித் தூண்டுதல்கள் ஆகட்டும், அல்லது உணர்ச்சிகள் அல்லது எண்ணங்களாகட்டும் ஏழு பிட்ஸ் தான் மனிதன் ஏற்கக் கூடிய அளவு ஆகும்!

 

 

ஒரு செட் பிட்ஸ் தகவலை இன்னொரு தொகுப்பு பிட்ஸ் தகவலுடன்  ஒப்பிட மூளை எடுத்துக் கொள்ளும் நேரம் வினாடியில் பதினெட்டில் ஒரு பாகமே ஆகும். அதாவது ஒரு வினாடிக்கு நாம் 126 பிட்ஸ் தகவலை மட்டுமே முறைப்படுத்த முடியும். இந்தக் கணக்கில் ஒரு நிமிட நேரத்திற்கு 7560 பிட்ஸ் தகவலை நாம் முறைப்படுத்தலாம்.

 

 

ஒரு மணி நேரத்திற்கு சுமார் ஐந்து லட்சம் பிட்ஸ் என்ற அளவை நாம் இதிலிருந்து பெறுகிறோம்!

ஒரு மனிதனுக்கு 70 வயது என்று சராசரியாக வைத்துக் கொள்வோம். சராசரியாக ஒரு நாளைக்கு ஒருவர் 16 மணி நேரம் விழித்திருப்பார் என்று வைத்துக் கொண்டால் அவர் முறைப்படுத்தக் கூடிய தகவலின் அளவு 185 பில்லியன் என்று ஆகிறது. (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி)

 

 

இந்த 18500 கோடி தகவலிலிருந்து தான் வாழ்க்கையில் நாம் அனைத்தையும் பெறுகிறோம். நம் வாழ்க்கை எப்படி அமைகிறது என்பதும் இதைப் பொறுத்ததே!

 சரி, ஒருவரின் வாழ்க்கையில் விழித்திருக்கும் நேரத்தில் அன்றாடத் தேவைகளுக்கு –  பல் துலக்குவது, ஷேவ் செய்வது, குளிப்பது, சாப்பிடுவது போன்றவற்றிற்கு 15  சதவிகித உணர்வு தேவையாக இருக்கிறது. அவற்றில் ஈடுபடும் போது இதர சிக்கலான விஷயங்களில் மனதை ஒருமைப்படுத்த முடியாது.. மற்ற நேரங்களில்?

 

 விந்தை என்னவெனில் இது போன்ற எதுவும் இல்லாத போதிலும் கூட பெரும்பாலான மனிதர்கள் தங்கள் மனதை எதிலும் ஈடுபடுத்திப் பயன்படுத்துவதில்லை என்பது தான்!

ஓய்வு நேரத்தில் டெலிவிஷன் பெட்டிக்கு முன்னர் அமர்ந்து விடுகிறார்கள் உலக மக்கள்!

 

 

டெலிவிஷன் பார்ப்பதில் தகவல்களை முறைப்படுத்துவது என்பது மிகவும் எளிதாக இருக்கிறது. காணுகின்ற காட்சிகளுக்கு பெரிதாக நினைவாற்றல், எண்ணுதல், முடிவெடுத்தல் போன்ற எதுவும் தேவையில்லை.

பார்ப்பது, பார்த்துக் கொண்டே இருப்பது – அவ்வளவு தான்!

 

 

ஒரு சிக்கலான நேரத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கணிப்பது, தகவல்களை முறைப்படுத்தி மதிப்பிடுவது, உடனே அவசரமாக முடிவெடுப்பது போன்றவற்றிற்கு மனதின் குறைந்தபட்ச முறைப்படுத்தும் திறனே தேவை. எடுத்துக்காட்டாக ஒரு தெருவின் திருப்பத்தில் காரை வேகமாகத் திருப்பும் ஒரு டிரைவர் அப்போது தன் கையில் உள்ள தான் பேசிக் கொண்டிருக்கும் செல் போனை நிறுத்தி விடுகிறார் – இல்லையேல் விபத்து அல்லவா ஏற்படும்!

 

ஒரு சில கணங்களே என்றாலும் கூட தான் செய்வதில் தீவிர கவனம் இருந்தால் மட்டுமே அவரால் விபத்தைத் தடுக்க முடியும்!

ஒரு மனிதன் எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி பெற வேண்டுமெனில் தீவிரமான கவனம் வேண்டும். அத்துடன் தான் செய்கின்ற வேலையில் மனதை முழுவதுமாகச் செலுத்துவதோடு அதை விரும்பிச் செய்ய வேண்டும். அந்த வேலையில் ஒரு விதமான பரவச நிலையினை அடையும் போது அவனது படைப்பாற்றல் முழுமை பெறுகிறது. இன்னதென்று விவரிக்க முடியாதபடி மிதப்பது போன்ற ஒரு நிலை அவனுக்கு ஏற்படுகிறது. அது தான் ஃப்ளோ!

 

 

ஒருவன் எப்போது இந்த அரிய ஃப்ளோ நிலையை எய்துகிறானோ அவன் எந்தத் துறையைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, அவனால் உன்னதமான படைப்பாற்றலைக் கொள்ள முடியும்.

ஒரு கவிஞராக இருந்தால் சிறந்த கவிதை பிறக்கும். ஒரு டைரக்டராக இருந்தால் அவரது காட்சியில் மூழ்கிப் பரவசராகி காட்சியுடன் ஒன்றி ஒரு மிதக்கும் நிலை ஏற்படும். ஒரு எழுத்தாளராக இருந்தால் அவர் தன்னை மறந்து தன் எழுத்தில் மூழ்கி விடுவார்.

 

 

அப்போது படைப்பாற்றல் துள்ளிக் குதிக்க தனது அப்போதைய கவனத்தில் தான் செய்ய விரும்புவதில் அந்தப் படைப்பாளி வெற்றி பெறுகிறார்.

ஒருவர் ஃப்ளோவை அனுபவித்து உணர ஆறு காரணிகள் உண்டு:

  • ஒரு விஷயத்தில் நிகழ்காலத்தில் அந்தக் கணத்தில் அதி தீவிரமான கவனக் குவிப்புடன் கூடிய ஒருமைப்படுத்தப்பட்ட மனம்.
  • விழிப்புணர்வும் செயலும் இரண்டு என்றில்லாமல் ஒன்றாக மாறுதல்
  • தனது சுய உணர்வை முற்றிலுமாக இழந்து செயலில் ஒன்றி இருத்தல்
  • தனது செயல்பாட்டில் ஒரு கட்டுப்பாட்டைத் தான் கொள்ளுதல்
  • அந்தச் செயலைச் செய்யும் போது நேரம் பற்றிய உணர்வை  முற்றிலுமாக இழத்தல். அதாவது பல மணி நேரம் கூட ஒரு சில நிமிடங்களாகத் தோன்றும்
  • அந்த அனுபவம் ஒரு மிகச் சிறந்த பரிசு போன்ற ஒன்றாக படைப்பாளிக்கு அமைதல்

 

ஒருவரது திறமை, ஆர்வம், கவனக் குவிப்பு ஆகிய அனைத்தும் இணைந்து தன் குறிக்கோளை அடையும் போது,  திடீரென்று எதிரில் ஒரு கதவு திறந்து வெட்டவெளியில் மிதப்பது போன்ற உணர்ச்சி ஏற்படுகிறதே அது தான் படைப்பாற்றல் வெற்றிக்கான ஓட்டம் அல்லது ‘ஃப்ளோ ஆகும்.

 

இந்த மெய்மறந்த நிலையை எய்துவது என்பது சுலபமே என்பதை உலகின் தலை சிறந்த படைப்பாளிகள் நிரூபித்துள்ளனர். அவர்களுக்குத் தனிமையில் இருப்பது என்பது ஒரு ஊக்கியாகச் செயல்படுகிறது என்பதே மிஹாலியின் கண்டு பிடிப்பு.

இந்த நிலையை எய்தும் போது ஒவ்வொருவரும் ஒரு சிறந்த படைப்பாளியே!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில .. …

 

அலெக்ஸாண்டர் டி ஸெவர்ஸ்கி (Alexander de Severrsky) என்பவர் ஒரு சிறந்த விமான வடிவமைப்பாளர்.

முதல் உலகப் போரில் அவர் ஒரு காலை இழந்திருந்தார். மரத்தினாலான செயற்கைக் காலைப் பொருத்திக் கொண்டிருந்தார்.

ஆகவே இரண்டாம் உலகப் போரில் ஒரு கை அல்லது ஒரு காலை இழந்த போர்வீரர்களைச் சந்தித்து உற்சாகப்படுத்த ஒரு மருத்துவ மனைக்கு அவர் சென்றார்.

 

 

தனது அனுபவத்தைச் சொல்லி போர் வீரர்களை அவர் உற்சாகப் படுத்தினார். ஒரு காலுடன் இருக்கும் போது குறைந்தபட்சம் ஒரே ஒரு ஆதாயம் நிச்சயமாக இருக்கிறது என்று கூறிய அவர் இழந்த காலில் மரத்தினால் ஆன செயற்கைக் கால் பொருத்தப்பட்டிருப்பதால் அதில் வலியே இருக்காது என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

இதை நிருபித்துக் காட்டும் விதமாக ஒரு போர்வீரரிடம் கம்பு ஒன்றைக் கொடுத்து, “சும்மா காலில் அடியுங்கள் என்றார்.

 

 

அவரும் ஸெவர்ஸ்கியின் காலில் அடித்தார். ஸெவர்ஸ்கி பெரிதாகச் சிரித்தார். அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

பிறகு அறையை விட்டு வெளியே வந்த அவர் ஓவென்று அலறினார்.

மருத்துவமனை அதிகாரிகள் திடுக்கிட்டு, என்ன, என்ன என்று பதறிப் போய் அவரிடம் வினவினர்.

“அந்த ராணுவ வீரர் எனது தவறான காலில் ஓங்கி அடித்து விட்டார் என்றார் ஸெவர்ஸ்கி

 

 

செயற்கைக் காலில் அடிப்பதற்குப் பதிலாக நிஜக்காலில் அடித்தால் வலிக்காதா, என்ன?

சிரிப்பதா, வேதனைப்படுவதா என்று புரியாமல் மருத்துவமனை அதிகாரிகள் திகைத்தனர்!

ஸெவர்ஸ்கியோ சிரித்துக் கொண்டே வலியுடன் வெளியேறினார்!

******

 

அறிவியலின் ‘ஹார்ட் ப்ராப்ளம்’! (Post No.3327)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 7  November 2016

 

Time uploaded in London: 5-34 AM

 

Post No.3327

 

 

Pictures are taken from various sources. Thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

பாக்யா 4-11-2016 தீபாவளி இத்ழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

அறிவியலின் ‘ஹார்ட் ப்ராப்ளம்!

ச.நாகராஜன்

 

 

‘ஒருவரின் உணர்வில் உள்ள மொத்த நிலைகளையும் பிரக்ஞை என்று குறிப்பிடலாம் – ஆங்கில அகராதி கான்ஸியெஸ்னெஸுக்குத் தரும் விளக்கம்

     பிரபல இயற்பியல் விஞ்ஞானியான எட்வர்ட் விட்டன் (Edward Witten) சமீபத்தில் அறிவியல் உலகில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்

 

“நான் நினைக்கிறேன், பிரக்ஞை என்பது ஒரு பெரிய மர்மமாகவே தொடர்ந்து இருக்கும். பிக் பேங் என்பது எப்படி இருக்கும் என்பதை என்னால் ஒருவாறு கற்பனை செய்து பார்க்க முடிகிறது. ஆனால் பிரக்ஞை என்பதைப் புரிந்து கொள்ள  முடியும் என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை என்றார் அவர்.

அறிவியலுக்குள்ள ஹார்ட் ப்ராப்ளம் (Hard Problem) சிக்கலான பிரச்சினை இன்றைக்கு இது தான்!

 

விட்டன் ஒரு சாதாரண விஞ்ஞானி இல்லை.இன்றைய கால கட்டத்தில அவரை ஐன்ஸ்டீனுக்கும் நியூட்டனுக்கும் ஒப்பிட்டுப் பேசுமளவு அவர் ஒரு மாமேதை. ஸ்ட்ரிங் தியரி என்ற கொள்கையை முன் வைத்து அவரைப் போல வேறு யாராலும் பேச முடியாது.

 

“மூளையின்  இயக்கம் பற்றி உயிரியல் நிபுணர்களும் விஞ்ஞானிகளும் ஒருவேளை இப்போது இருப்பதை விட இன்னும் அதிகமாக அறிந்து கொள்ளலாம். ஆனால் பிரக்ஞை என்பது நீடித்த மர்மமாகவே இருக்கும் என்ற அவரது உரை அறிவியல் உலகில் ஒரு சலசலப்பை எற்படுத்தி இருக்கிறது.

 

Consciousness  அல்லது பிரக்ஞை அல்லது உணர்வு என்பதைப் பற்றிய ஒரு சிக்கல் இன்றைக்குச் சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்னால் அறிவியலுக்கு ஆரம்பித்தது.

 

அரிஜோனாவில் உள்ள டஸ்கானில் உள்ள பல்கலைக் கழகத்தில் ஒரு நாள் காலை நேரத்தில் அறிவியல் அறிஞர்கள் ஒரு கூட்டத்தில் குழுமி இருந்தனர். ஸ்டூவர்ட் ஹாமராஃப் என்ற பேராசிரியர் தான் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர். முதலில் பேசியவர்  போரடித்தார். அடுத்துப் பேசியவர் அதை விட போர்! எல்லோரும் முழித்தனர்.

 

பேராசிரியருக்கோ சங்கடமாகப் போய் விட்டது. இந்தக் கூட்டம் உருப்படியாய் ஒப்பேறுமா?

திடீரென ஒரு ஆஸ்திரேலிய இளைஞர் பேசுவதற்கு வந்தார். 27 வயதான் அவர் பெயர் டேவிட் சால்மர்ஸ். டேவ் என்று செல்லமாக அழைக்கப்படும் அவர் பேச ஆரம்பித்தவுடன் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் முழித்துக் கொண்டனர்.

 

“மூளை எல்லாவிதமான பிரச்சினைகளையும் விஞ்ஞானிகளுக்கு ஏற்படுத்தப் போகிறது. எப்படி நாம் கற்கிறோம், எப்படி எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கொள்கிறோம், விஷயங்களை ஊடுருவிப் பார்க்கிறோம்? கூட்டம் நிறைந்த ஒரு அறையில் உங்கள் பெயரை ஒருவர் கூப்பிடும் போது அந்த சத்தத்திலும் கூட நீங்கள் எப்படித் திரும்பிப் பார்க்கிறீர்கள்? என்று ஆரம்பித்துக் கடகடவென்று கேள்வி மேல் கேள்வியாக அவர் கேட்டுக் கொண்டே போனார்.

 

“ஒரு கட்டத்தில் இவையெல்லாம் கூட அறிந்து கொள்வதற்கு சுலபமான பிரச்சினைகளாகி விடலாம்! ஆனால் உண்மையில் சிக்கலான பிரச்சினை என்னவென்றால் பிரக்ஞை (உணர்வு) பற்றி அறிவது தான். அது தான் உண்மையிலேயே ஹார்ட் ப்ராப்ளம் (சிக்கலான பிரச்சினை) என்று நிறுத்தினார் அவர்.

கூட்டத்தினர் ஒருவர் இன்னொருவரை நோக்கி ஹார்ட் ப்ராப்ளம் என்று சொல்லிக் கொண்டனர்.

 

விஷயத்தின் தீவிரத்தன்மையை அனைவரும் புரிந்து கொண்டனர். ஹார்ட் ப்ராப்ளம் ஹார்ட் ப்ராப்ளம் ஹார்ட் ப்ராப்ளம் என்று பல்கலைக் கழகம் முழுவதும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டே இருக்க உலகம் முழுவதும் ஹார்ட் ப்ராப்ளம் என்ற சொற்றொடர் பரவி இன்று வரை ஒலித்துக் கொண்டே இருக்கிறது! 

 

சிறிய வயதாக இருந்த போது டேவிட்டுக்கு தூரத்தில் இருப்பது தெரியாது, பார்வைக்காக கண்ணாடியைப் போட்டுக் கொண்டார். உடனே கண் பார்வை பைனாகுலர் விஷனாக பளிச்சென்று தெரிந்தது. உலகமே முப்பரிமாணத் தோற்றம் போல அவருக்குக் காட்சி அளித்தது. இதை பலமுறை பலகாலம் யோசனை செய்து கொண்டே இருந்தார்.

 

பார்வை எப்படி சரியானது என்ற விளக்கம் மெக்கானிகலாகத் தரப்பட முடியும் தான்! ஒரு கண்ணாடி, மூளை, கண், உலகம் – சரி, பிரச்சினை தீர்ந்து விட்டது.

 

ஆனால் திடீரென்று முப்பரிமாண உலகைக் காண்பிப்பது எப்படி? யார்?

அப்போது உணர்வு பற்றி அவருக்குப் பெரும் உணர்வு ஏற்பட்டது.

இப்போது உலகமே அவர் கூறிய் உணர்வு என்ற சிக்கலான பிரச்சினை பற்றிப் பேசுகிறது.

 

ஆனால் இது பிரச்சினையே இல்லை என்று சொல்லும் விஞ்ஞானிகளும் உண்டு.

பாஸ்டனுக்கு அருகில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழக (Tufts University, Boston)  பேராசிரியர் டேனியல் டென்னட் (Daniel Dennett), “ பிரக்ஞை என்று ஒன்று இல்லவே இல்லை. அது ஒரு மாயை. மூளையானது உணர்வு என்ற ஒன்றைத் தோற்றுவிக்கவில்லை என்கிறார்.

 

“உணர்வு என்பது மந்திரவாதி செய்யும் வித்தை போலத் தான்! சாதாரண மூளையின் இயக்கமே கண்ணில் தோன்றாத ஏதோ ஒன்று இருப்பது போல நம்மை நினைக்கச் செய்கிறது என்பது அவர் வாதம்!

 

இந்த நிலையில் தான் சமீபத்தில் எட்வர்ட் விட்டன், “அறிவியல் ஒருநாளும் பிரக்ஞை பற்றிய மர்மத்தை விடுவிக்காது என்று ஒரே போடாகப் போட்டு விட்டார். இதனால் இன்று அறிவியல் உலகம் பரபரப்பாக உணர்வு பற்றி உணர்வுடன் பேசுகிறது.

சரி, பிரக்ஞை என்று ஒன்று இருக்கிறதா?

 

இந்தக் கேள்விக்கு விளையாட்டான பதில் “இதை  பிரக்ஞையுடன் கேட்கிறீர்களா? அல்லது பிரக்ஞை இல்லாமல் கேட்கிறீர்களா?”!!!!\

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரபல அமெரிக்க இரசாயன இயல் மேதையான ஜேம்ஸ் சம்னர் (James B.Sumner தோற்றம்: 19-11-1887  மறைவு:12-8-1955) இரசாயனத்திற்கான நோபல் பரிசை 1946ஆம் ஆண்டு பெற்றார். இந்தப் பரிசை அவர் பெற்றது ஒரு சுவையான வரலாறு. இளமையில் அவரது 17ஆம் வயதில் ஒரு நாள் அவர் பறவைகளை வேட்டையாட நண்பர்களுடன் சென்றார். அதில் தவறுதலாக ஒருவர் அவரைச் சுட்டு விடவே அவர் தனது வலது கையை இழந்தார்.

 

படிக்கும் போது அவர் இரசாயனத்தைத் தேர்ந்தெடுத்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஊட்டியது. எப்படி ஒரு கையினால் ஒருவர் சோதனைகளைச் செய்ய முடியும்? ஆனால் தளரா மனம் கொண்ட சம்னர் பி.ஹெச்.டி பட்டம் பெற்று என் ஜைம்களைத் தனிமைப் படுத்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அனைவரும் சிரித்தனர். ஏனெனில் அந்த முயற்சியில் வெற்றியே பெற முடியாது என்பது அனைவரின் எண்ணமாக இருந்தது.

 

ஆனால் 1926ஆம் ஆண்டு யுரிஸ் (Urease enzyme)  என் ஜைமை கிறிஸ்டல்களாக்கும் முயற்சியில் அவர் வெற்றி பெற்றார். ஆனால் இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்னொரு உயிரியல் நிபுணரான ஜான் நார்த்ராப்  1935ஆம் ஆண்டு பெப்ஸின் என் ஜைமின் கிறிஸ்டல்களைப் பெறுவதில் வெற்றி பெற்றார். அப்போது தான் அனைவரின் கவனமும் சம்னர் மீது திரும்பியது. அனைவரும் அவரை வியப்புடன் பார்த்தனர். இடது கை வீரர் கடைசியில் விஞ்ஞான உலகத்தில் நோப்ல பரிசு பெற்று அனைவரின் நன்மதிப்பையும் பெற்று  உயர்ந்தார்.

 

உத்வேகமூட்டும் வரலாறு கொண்ட பெரிய விஞ்ஞானி சம்னர்!

**********