மரங்கள் மடியும் அபாயம்! விழிப்புணர்வு தேவை !! (Post No. 2356)

GREEN, BEAUTY

Radio Talk written by S NAGARAJAN

Date: 24 November 2015

Post No. 2356

 

Time uploaded in London :– 6-05 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

உலகெங்கும் மரங்கள் இன்று மடிய ஆரம்பித்துள்ளன.இதற்கு கனடாவிலும் ரஷியாவிலும் உள்ள அழிந்து வரும் காடுகளை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

கிரேக்க நாட்டிலோ பைன் (Pine) மரங்கள் அழிந்து வருகின்றன.ஆப்பிரிக்காவிலோ செடார் (Cedar) மரங்கள் அழிந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவில் யூகலிப்டஸ் (Eucalyptus)  மரங்கள் உள்ள காடுகள் தீப்பற்றி அந்த மரங்கள் அழிந்துள்ளன. அற்புதமான அமேஸான் பிராந்தியமோ இரு முறை பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளது!

 

28tv_elephant_jpg_2324750g

இதையெல்லாம் கருத்தில் கொண்டுள்ள விஞ்ஞானிகள் ஏன் இப்படி மரங்கள் மடிகின்றன என்று ஆராயப் புகுந்தனர். தங்கள் ஆய்வின் விளைவாக நீர் பற்றாக்குறை, பூச்சிகளின் தாக்கம் மற்றும் உலக வெப்பமயமாதல் ஆகிய காரணங்களே மரங்களின் அழிவுக்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

 

 

இந்த மரங்களின் ஆய்வில் பெரும் விஞ்ஞானியும் நிபுணருமான மக்டவல் ஈடுபட்டுள்ளார்.உலகின் பிரம்மாண்டமான மர ஆய்வு மையம் ஒன்றை லாஸ் அலாமாஸில் (Los Alamos) நிறுவி பட்டுப் போகும் மரங்களுக்கான சிகிச்சையையும் அவர் அளித்து வருகிறார். 63 பின்யான் (Pinyon) மற்றும் ஜுனிபர் (Juniper) மரங்கள்  இந்த மையத்தில் விசேஷமாக அமைக்கப்பட்டுள்ள  12 தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு உஷ்ணநிலை இனி வரப்போகும் ஆண்டுகளில் உயரப்போகும் 7 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

 

 

இது தவிர உலகெங்கும் உள்ள 81 இடங்களில் உள்ள காட்டில் வளரும் 226 தாவரங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

 

 

ஆய்வு மையத்தில் உள்ள அனைத்து மரங்களிலும் அதி நவீன சென்ஸர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பத்து நிமிடத்திற்கு ஒரு முறை  சோதனை அளவுகளும் எடுக்கப்படுகின்றன. சில அளவுகள் மாதம் ஒரு முறை எடுக்கப்படுகின்றன.

இந்த பிரம்மாண்டமான ஆய்வை மேற்கொண்டுள்ள மக்டவல் மரங்களும் தாவரங்களும் பசியால் தண்ணீரின்றி மடிகின்றன என்ற வருத்தமூட்டும் செய்தியை அறிவித்துள்ளார்.

 

 

காட்டுச் செல்வமும் அதற்கு ஆதாரமான நீரும் எவ்வளவு இன்றியமையாத தேவை என்பதை இந்த ஆய்வு உணர்த்துவதோடு புவி வெப்பமாகும் போது என்ன விபரீதம் ஏற்படும் என்பதையும் அறிவியல் ரீதியாக உணர்த்துகிறது. ஆகவே புவி வெப்பமாதல் என்ற மாபெரும் அபாயத்தைத் தடுக்க ஒவ்வொரு மனிதனும் முயல வேண்டும் என்பது தெளிவாகிறது.

 

****

 

கார்பன் தரும் சவால்! Post No. 2353

factory-smoke-pollution-g-001

Radio Talk written by S NAGARAJAN

Date: 23 November 2015

Post No. 2353

 

Time uploaded in London :– 6-14 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

ஒளிச்சேர்க்கை எனப்படும் PHOTOSYNTHESIS மூலமாகவே ஆக்ஸிஜன் அதிகம் உள்ள பூமியின் வளி மண்டலம் அமைந்துள்ளது ஆனால் அற்புதமான இந்த வளி மண்டலத்தை நச்சுப் புகையை அதிகமாகக் கக்குவதன் மூலம் மாசு படுத்துகிறோம்.மரங்கள் இயற்கையாகவே கார்பனை உறிஞ்சி ‘இயற்கைச் சமநிலையை’ ஏற்படுத்தினாலும் கூட  செயற்கையாக மனிதன் வெளிப்படுத்தும் கார்பன் இந்தச் சமநிலையை சீர்குலைக்கும் அளவு அதிகமாக இருக்கிறது.

 

 

கார்பன் CARBON அளவை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதை ஆராய பன்னாட்டு விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு குழுவை ஐரோப்பிய கமிஷன் அமைத்துள்ளது. இந்தக் குழு ஆப்பிரிக்காவில் வளரும்  இரோகோ (IROKO) என்ற ஒரு மரம் MICROBES எனப்படும் சில நுண்ணுயிர்களுடன் இணைந்து கார்பன் டை ஆக்ஸைடு கொண்டுள்ள புகையை சுண்ணாம்பாக மாற்றுகிறது என்பதை நன்கு ஆய்ந்து கண்டுபிடித்துள்ளது.

 

 

புவி வெப்பமாதல் எனப்படும் குளோபல் வார்மிங் Global Warming  அபாயத்தால் உலகெங்கும் உள்ள காடுகள் தாங்கள் மண்ணில் சேமித்து வைத்திருக்கும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியிட்டு வரும் இன்றைய சூழ்நிலையில் இது தக்க ஒரு மாற்றாக அமையும் என்பது  நல்ல செய்தி. வறண்ட அமில மண்ணில் இந்த மரங்கள் நடப்பட்டால் மண்ணில் காணப்படும் கால்சியத்துடன் கார்பன் டை ஆக்ஸைடைச் சேர்த்து ஒரு குறிப்பிட்ட கனிமத்தை இரோகோ மரங்கள் உருவாக்குகின்றன. இதன் மூலம் கார்பன் டை ஆக்ஸைடு நச்சுப்புகையினால் மாசு படுத்தப்படும் வளி மண்டலம் சுத்தம் செய்யப்படுகிறது. சிலவகை பாக்டீரியாக்களுடனும் காளான்களுடனும் இது உரிய முறையில் சேர்க்கப்பட்டால் இந்த மரம் உருவாக்கும் கனிமம் சுண்ணாம்பாக மாறுகிறது பொலிவியா, ஹைதி, இந்தியா ஆகிய நாடுகளில் இப்போது கார்பன் சவாலைச் சமாளிக்க இந்த இரோகோ மரங்களை நட்டு சோதனை செய்யும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.

Igi-Iroko

 

இந்த மரம் தொழிலகத் திட்டங்களுக்குப் பயன்படுவதோடு இதனால் உருவாகும் சுண்ணாம்பின் மூலம் ஒரு ‘பயோ சிமெண்டை’ உருவாக்கவும் இப்போது அறிவியல் ரீதியிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

 

இந்த இரோகோ மரத்தை ஆப்பிரிக்காவின் தேக்கு மரம் என்று ஆப்பிரிக்கர்கள் கூறுகின்றனர். அத்தோடு அதை வெட்டி வீட்டு உபயோகத்திற்காக அனாவசியமாகப் பயன்படுத்தினால் பயன்படுத்துபவருக்கு துரதிர்ஷ்டம் வந்து சேரும் என்பது அவர்களின் நம்பிக்கை.

 

 

இது போன்ற மரங்களை இனம் கண்டு கார்பன் சவாலைப் புது விதமாக நவீன அறிவியல் முனைந்திருப்பது உலக மக்கள் அனைவரும் வரவேற்கும் ஒரு நல்ல செய்தி தானே!

iroko 2

iroko tree

***

உருகி வரும் பனிப்பாறைகளும் உயரும் கடல் நீர் மட்டமும்! (POST No. 2347)

Melting-Ice-Caps-in-Antarctica-700x465

 

Radio Talk written by S NAGARAJAN

Date: 21 November 2015

POST No. 2347

 

Time uploaded in London :– 5-55 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

உலகில் ஆங்காங்கே பல நாடுகளிலும் விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் ஆய்வுகள் பனிப்பாறைகள் பரவலாக உருகி வருவதைச் சுட்டிக் காட்டுகின்றன

ஒவ்வொரு வருடமும் க்ரீன்லாந்தில் 200 மில்லியன் டன்கள் என்ற அளவில் ஐஸ் உருகுகிறது என்பதையும் 2003ஆம் ஆண்டிலிருந்தே ஒவ்வொரு ஆண்டும் இதே அளவு ஐஸ் உருகி வருகிறது என்பதையும்  கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச்  சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

இப்படிப் பெருமளவில் பனி உருகுவதால் கடல் மட்டம் உயர்கிறது. ஏற்கனவே கார்பன் நச்சுப்புகையால் கடல் நீரின் அமிலத் தன்மை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அத்தோடு இந்த அபாயமும் சேர்ந்திருப்பது கவலை தரும் அம்சமாகும்.

18 வருடங்களாக விண்கலங்களின் உதவி கொண்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் உலகெங்கும் உள்ள கடல் நீர் மட்டம் மூன்று மிலிமீட்டர் உயர்ந்திருப்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.கிடைத்துள்ள விவரங்களின் அடிப்படையில் ஒரு கடல் நீர் மட்ட அட்டவணைத் தயாரிக்கப் பட்டதோடு எதிர்காலத்தில் இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதும் கணிக்கப்பட்டுள்ளது.

 

 

2100ஆம் ஆண்டுக்குள் கடல் நீர் மட்டம் ஒரு மீட்டர் அதிகரிக்கும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாகும்.

 

கடல் நீரின் மட்டம் உயர்வது பூமியின் தட்பவெப்ப நிலை மாறுதலைக் கணிப்பதற்கான முக்கியமான காரணங்களுள் ஒன்றாகும்.

 

 

இப்படி கடல் நீர் மட்டம் உயர்ந்தால் குறைந்த பட்சம் தாழ்வான பகுதியில் வாழும்  60 கோடி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவர் அவர்கள் இடம் பெயர வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்படும். 50 சென்டி மீட்டர் அளவு கடல் மட்டம் உயர்ந்தாலேயே கடலோரப் பகுதிகளில் நீர் நுழைந்து சொல்லொணாத் துன்பத்தை அப்பகுதி வாழ் மக்கள் அடைவர் என்பது விஞ்ஞானிகளின் எச்சரிக்கை.

 

 

முந்தைய காலங்களில் எப்போதோ ஒரு முறை பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் வெள்ள அபாயம் இனி 2100ஆம் ஆண்டுக்குள் பல முறை பல்வேறு நாடுகளில் ஏற்படப் போகிறது என்பது சாதாரண விஷயமல்ல.

 

 

ஆகவே இதற்கு அடிப்படையான பூமி உஷ்ணத்தை அதிகரிக்க வைக்கும் மனிதனின் செயற்கையான காரணங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்த உருகும் பனிப்பாறைகள் மனித குலத்திற்குத் தரும் எச்சரிக்கைச் செய்தியாகும். உணர்ந்து செயல்படுவோம்!

 

To be continued…………………………………………………

***

அழிந்து வரும் மழைக் காடுகள்! POST No. 2344

amazon-rainforest-shutterstock-web

 

Radio Talk written by S NAGARAJAN

Date: 20 November 2015

POST No. 2344

 

Time uploaded in London :– 5-50 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

contentIte

உலகெங்கும் உள்ள வனப் பகுதிகள் பல்வேறு காரணங்களுக்காக அழிக்கப்படும் நிலை கூடிக் கொண்டே போகிறது.

 

வன விலங்குகளை வேட்டையாடுவது, வனப்பகுதிகளை அழித்து விவசாயம் பரவலாக்கப்படுவது, வனத்தில் இருக்கும் மரங்களை வெட்டுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் வனச் செல்வம் அழிவு பட்டு அதனால் உலகளாவிய அளவில் பல்வேறு அபாயங்கள் ஏற்பட்டு வருகின்றன.

 

உலகின் மிகப் பெரிய மழைக் காடுகள் அமைந்துள்ள அமேஸான் பகுதியும் இந்த அபாயத்திற்கு உள்ளாகி இருப்பது அனைவரையும் கவலையுற வைத்துள்ளது.

 

 

பிரேஜில் நாட்டில் உள்ள 19 நகரங்களின் ஜனத்தொகையானது கடந்த பத்து ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. இந்த 19 நகரங்களில் 10 நகரங்கள் அமேஸான் வனப் பகுதியில் உள்ளவையாகும். நாளுக்கு நாள் அமேஸான் காடுகள் அழிக்கப்பட்டு வருவதையே இது குறிக்கிறது.

 

 

காட்டுச் செல்வம் அழிக்கப்படும் போது அங்குள்ள வன விலங்குகள் வேட்டையாடப்பகுகின்றன. இதனால் பல விலங்கினங்கள் முற்றிலுமாக அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்களை ஏற்படுத்தவும் அன்றாட உபயோகங்களுக்காகவும் மரங்கள் அழிக்கப்படுவதால் மழை வளம் குறைவதோடு புவி வெப்பம் உயரும் அபாயமும் ஏற்படுகிறது. இது உலகளாவிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

 

நூறாண்டுகள் வாழ்ந்த மரங்கள் வெட்டப்படும் போது பல உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரமாக அவை விளங்குவதை மறந்து விடக் கூடாது. 30 சதவிகித பறவை இனங்கள் கூடுகள் கட்டி வாழவும், பல்வேறு விலங்கினங்கள் இளைப்பாறவும் உதவும்  மரங்கள் பெருமளவு கார்பனை உறிஞ்சி சேமிக்கின்றன. மண் வளத்தின் மறு சுழற்சிக்கு மரங்கள் பெரிதும் உதவுகின்றன. பெரிய மரங்கள் மனிதர்களுக்கும் பல்வேறு விலங்கினங்களுக்கும் ஏராளமான உணவை அளிக்கின்றன.பழங்கள், காய்கள், மலர்கள் என அமுதத்திற்கு நிகராக அவை வழங்கும் உணவுச் செல்வம் மதிப்பிட முடியாத ஒன்று.

 

amazon 2

சமீபத்தில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி நமது நாட்டின் 14 நகரங்களில் வனப்பகுதிகள் குறைந்து கொண்டே வருகிறது. இதுவரை 367 சதுர கிலோமீட்டர் வனப்பரப்பு குறைந்துள்ளது.ஒவ்வொரு மரமும் வெட்டப்படும் போது வாழ்வாதாரம் சிறிது வெட்டப்படுகிறது என்பதே பொருள்.

 

 

எதிர்கால சந்ததியினருக்கு மழைவளத்தையும் குறைக்கிறோம் என்பது நீண்ட கால விளைவுகளில் ஒன்று. ஆகவே அரிய வனப் பகுதிகளை எந்தக் காரணத்திற்காகவும் அழித்தல் கூடாது; அவற்றைப் பாதுகாக்க சட்டம் இயற்றியுள்ள அரசோடு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

 

***

 

புவி வெப்பத்தால் பாதிக்கப்படும் பருவநிலை ( POST No. 2341 )

 

climate-change

 

Radio Talk written by S NAGARAJAN

Date: 19 November 2015

POST No. 2341

 

Time uploaded in London :– 9-23 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

புவி வெப்ப உயர்வானது இந்தியாவின் வழக்கமான பருவநிலை மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை புதிய ஆய்வு ஒன்றின் முடிவு சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளது. வருகின்ற இருநூறு ஆண்டுகளுக்குக் கோடைகால பருவ நிலையில் இந்தப் பாதிப்பு தொடரக்கூடும் என்பதை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

அதி நவீன கணினி தொழில்நுட்பத்தின் மூலமாக பருவநிலை பற்றிய ஆய்வை மேற்கொண்ட ஐரோப்பிய விஞ்ஞானிகளின் குழு, சராசரியாக இந்தியாவில் கோடைகாலத்தில் பெய்யும் மழையின் அளவில் இனி 40 முதல் 70 சதவிகிதம் வரை குறைய வாய்ப்புண்டு என்று தெரிவித்துள்ளது.

 

 

1870ஆம் ஆண்டிலிருந்து பெய்துள்ள மழை அளவை ஒப்பிட்டுப் பார்த்ததில் இனி அடிக்கடி இப்படி மழை பொய்க்கின்ற வாய்ப்பும் குறைந்த அளவிலேயே மழை பெய்யும் வாய்ப்பும் உருவாகும் என்பதை ஆய்வு தெரிவித்துள்ளது.

தட்பவெப்ப நிலை மாறுபாட்டால் ஏற்படும் விளைவுகள் வாக்கர் சர்குலேஷன் (Walker Circulation) மூலமாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மேலை ஹிந்து மஹாசமுத்திரத்திற்கு உயர் அழுத்தப் பகுதிகளைக் கொண்டு வருவது, எல் நினோ ஏற்படும் காலங்களில் மாறி அதனால் இந்தியாவில் பருவ மழை அளவு குறையும் நிலை ஏற்படும் என்பதைத் தெளிவாக ஆய்வு குறிப்பிடுகிறது.

 

 

புவி வெப்பம் உயர்வதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று இந்தியாவில் நாளுக்கு நாள் வாகனங்கள் வெளிப்படுத்தும் நச்சுப் புகையே!

 

polar bear

வளி மண்டலத்தைக் கார்பன் டை ஆக்ஸைடும் கார்பன் மானாக்ஸைடும் தாக்கி பல்வேறு விபரீத விளைவுகளை ஏற்படுத்துவதை நாம் அனைவரும் அறிவோம். இதற்குக் காரணம் இந்த நச்சுப் புகைகளை வெளியேற்றும் வாகனங்களே! ஆகவே வாகனங்களுக்கே உரிய நச்சுப்புகை கட்டுப்பாடு விதிகளைக் கடைப்பிடித்தால் மட்டுமே இதைத் தடுக்க முடியும்.

 

***

 

புவி வெப்பத்தால் சுருங்கும் தாவரங்களும் மீன் வகைகளும்! (POST No. 2338)

A woman carries tannery waste as she walks through a dried pond at Hazaribagh area in Dhaka

A woman carries tannery waste as she walks through a dried pond at Hazaribagh area in Dhaka August 19, 2013. REUTERS/Andrew Biraj 

Radio Talk written by S NAGARAJAN

Date: 18 November 2015

 

POST No. 2338

 

Time uploaded in London :– 13-42

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

ச.நாகராஜன்

 

 

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

 

 

நாளுக்கு நாள் பூமி அதிகமாக வெப்பமாகிக் கொண்டே வருவதால் அபாயங்கள் பெருகி வருகின்றன. இந்த அபாயங்களைப் பற்றி வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வுகளை நடத்திக் கொண்டே இருக்கின்றனர் அவர்கள் தரும் எச்சரிக்கையை பொறுப்பான விதத்தில் மனித குலம் ஏற்றுக் கொண்டு புவி வெப்பமாதலைத் தடுக்க முழு முயற்சி எடுத்தல் இன்றியமையாதது.

 

 

பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 2001ஆம் ஆண்டிலிருந்து 2050ஆம் ஆண்டு வரை உயரும் தட்பவெப்ப நிலையைக் கருத்தில் கொண்டு 600 உயிரினங்களின் மீது புவி வெப்பம் அதிகமானால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் கடல் வாழ் உயிரினங்கள் மீது புவி வெப்பம் உயர்வதால் ஏற்படும் அபாயம் தாங்கள் கருதியதற்கும் மேலாகவே இருக்கும் என்பதை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.

 

o-CLIMATE-CHANGE-ARCTIC-facebook

Three Polar bears on an ice flow

கடல் நீரின் உஷ்ண நிலை உயர்வதால் கடலிலுள்ள ஆக்ஸிஜனின் அளவு குறைவுபடும் என்றும் இதனால் கடலில் வாழும் மீன்களின் உடல் எடை குறையும் என்றும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். முன்பு நடத்திய ஆய்வுகள் மீனின் இனப்பெருக்கத்தை புவி வெப்பம் குறைக்கும் என்று தெரிவித்த நிலையில் அதன் அளவும் குறுகி விடும் என்பதும் இப்போது தெரிகிறது.கடல் நீரின் உஷ்ண நிலை உயர்வதால் மீன்களின் உடல் உஷ்ணமும் அதிகரிக்கும். அதனால் அதன் உடல் இயக்கங்கள் வெகுவாகப் பாதிக்கப்படும். அது மட்டுமின்றி மீன் கூட்டங்கள் புவி வெப்ப உயர்வால் பூமியின் துருவங்களை நோக்கி விரையும் என்பதையும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆகவே இந்தியன் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் வாழும் மீன்களின் உடல் அளவில் 14 முதல் 24 சதவிகிதம் வரை குறையும் என்பதை அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர். நேச்சர் க்ளைமேட் சேஞ்ஜ் என்ற பத்திரிக்கையில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

 

 

அத்தோடு அடிலெய்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு, தாவரங்களின் மீதும் புவி வெப்பத்தின் தாக்கம் உள்ளதாகக் கண்டறிந்துள்ளது. தாவரங்களில் இலைகளின் வடிவங்கள் மாறுவதோடு அவை பெரிதும் சுருங்கி வருகின்றன என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இலைகளின் அளவுக்கும் உயர்கின்ற வெப்ப நிலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை குறுகிய இலைகளை ஆராய்ந்த பின்னர் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்

 

 

ஆகவே புவி வெப்பம் இயற்கையில் அமைந்துள்ள தாவரங்களையும் பாதிக்கிறது. கடல் வாழ் உயிரினங்களையும் பெரிய அளவில் பாதிக்கிறது. இன்று புவி வெப்பமாதலைத் தடுப்பது ஒவ்வொரு மனிதனின் கடமையாகிறது.

 

 

*****

விஞ்ஞானிகளை வியக்க வைத்த ‘கணக்குப் போடும் குதிரை’! (Post No.2336)

Schoeller_Elberfeld

 

அறிவியல் துளிகள் தொடரில் பாக்யா 2015, நவம்பர் 13ஆம் தேதி இதழில் வெளியான கட்டுரை

 

Compiled by S NAGARAJAN
Date: 17 November 2015
POST No. 2336
Time uploaded in London :– 14-40
( Thanks for the Pictures )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
DON’T USE THE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

.நாகராஜன்

விஞ்ஞான உலகத்தையே திகைக்க வைத்த குதிரை ஒன்றை ‘மிருக உலகின் கணித விந்தை’ என்று விஞ்ஞானிகள் புகழ்ந்த சம்பவம் நிஜமாக நடந்த ஒன்று,

 

எல்பர்ஃபெல்ட் குதிரை)கள் (Elberfeld horses) என்று புகழ்பெற்ற அந்த குதிரைகளைப் பற்றி ‘உளவியல் உலகில் மிகவும் பரபரப்பூட்டிய சம்பவம்’ என்று டாக்டர் இ. க்ளாராபிட் (Dr E.Clarapide) வர்ணித்தார்.

1891ஆம் ஆண்டு நடந்த விஷயம் இது!

இந்தக் குதிரைகளின் அபார புத்திசாலித்தனத்தை முதலில் கண்டு பிடித்தவர் வில்லியம் வான் ஆஸ்டன் என்பவர். அவர் ஒரு பள்ளி வாத்தியார். அவர் குதிரைகளை ஒரு விசேஷமான முறையில் பயிற்றுவித்தார். விளைவோ அபாரமாக இருந்தது.

க்ளூஜ் ஹான்ஸ் என்ற குதிரை கணக்குப் போடும் திறனைக் கொண்டிருந்தது.

ஒரு மேஜை மீது கொட்டைகளை வைத்தால் அதில் எத்தனை இருக்கிறது என்பதை தனது குளம்புகளைத் தட்டிக் காட்டி அது சொல்லும்! வான் ஆஸ்டன் முதலில் நம்பர்களை உரக்கச் சொல்வார். பின்னர் ஒரு கரும்பலகையில் அந்த எண்ணை எழுதிக் காண்பிப்பார். அதைப் பார்க்கும் குதிரை அப்படியே அந்த எண்ணை உட்கிரகித்துக் கொண்டு தன் குளம்புகளால் அந்த எண்ணைத் தட்டிக் காண்பிக்கும்! ஆனால் இதை மோசடி என்று பல பேர் சொல்ல ஆரம்பித்தார்கள். தனது அபாரமான குதிரையின் கணிதத் திறமையைப் பாராட்டாவிட்டாலும் சரி, மோசடி என்கிறார்களே என்று மனமுடைந்த வான் ஆஸ்டன் அந்த விரக்தியிலேயே இறந்து போனார். ஆனால் பல விஞ்ஞானிகள் அந்தக் குதிரையை ஆராய்ந்த பின்னர் மோசடி ஒன்றும் இல்லை என்று கூறினர். என்றாலும் அவர் இறந்தது இறந்தது தானே!

1909இல் அவர் இறந்த பின்னர் அவரது பயிற்சி உத்தியால் கவரப்பட்ட எல்பர்பெல்ட் நகரைச் சேர்ந்த ஒரு நகை வியாபாரி அந்தப் பயிற்சியைத் தொடர்ந்தார். அவர் பெயர் ஹெர் க்ரால் (Herr Krall). க்ரால் பொறுமையாக தன்னுடைய சொந்தக் குதிரைகளுக்குப் பயிற்சியை அளிக்க ஆரம்பித்தார்.

குதிரைகள் அடிப்படை கணிதத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தலைக் கற்றுக் கொண்டன.

முஹம்மது, ஜரீஃப், பெர்டோ மற்றும் ஹான்சென் ஆகிய பெயர்களை உடைய தனது நான்கு குதிரைகளுக்கு இந்தக் கணித வித்தையை அவர் கற்றுக் கொடுத்தார். நான்கு மாதங்களில் ஒரு அபாரமான முன்னேற்றம் ஏற்பட்டது. குதிரைகள் வர்க்கம் மற்றும் க்யூப் ரூட்டையும் போட ஆரம்பித்தன (Square and cube roots). அத்துடன் ஆங்கில ஸ்பெல்லிங்கையும் கூடக் கற்றுக் கொண்டன.

34 என்ற எண்ணை உரக்கக் கூவினால் நான்கு குதிரைகளும் இடது கால் குளம்பை மூன்று தடவையும் வலது கால் குளம்பை நான்கு தடவையும் தட்டும்! க்ரால் ‘Denkende Tiere’ என்ற ஒரு நூலை இது குறித்து எழுதினார். அது உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஞ்ஞானிகள் இந்த விந்தையால் பெரிதும் கவரப்பட்டனர்.

ஒன்றன் பின் ஒன்றாக விஞ்ஞானிகளின் குழு குதிரைகளின் மீது ஆய்வு நடத்த வர ஆரம்பித்தது. ஏராளமான கடுமையான சோதனைகள் நடத்தப்பட்டன. பல விஞ்ஞானிகள் திகைப்புடனும் ஆச்சரியத்துடனும் தங்கள் ஆய்வு முடிவுகளை அறிவித்தனர் – இது உண்மை தான் என்று!

நோபல் பரிசு பெற்ற பிரபல சிந்தனையாளரான மௌரிஸ் மேடர்லிங்க் (Maurice Materlink) (பிறப்பு 28/8/1862 மரணம் 6/5/1949) நேரடியாக எல்பர்பெல்ட் நகருக்கு வந்தார். முஹம்மதைப் பார்த்தார். அந்தக் குதிரைக்கு அவர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். உடனடியாக குதிரை அவரது பெயரை குளம்புகளினால் தட்டிக் கூறியது. மேடர்லிங்க் பல கணக்குகளைப் போடச் சொன்னார். அத்தனை கணக்குகளையும் முஹம்மது மிகச் சரியாகப் போட்டது. ஒரு நம்பரின் ஸ்குயர் ரூட்டை கேட்ட போது குதிரை அதைப் போட மறுத்தது. பின்னால் தான் அது ஸ்குயர் ரூட் போடுவதற்கான  சரியான எண் இல்லை  என்பதை மேடர்லிங்க் புரிந்து கொண்டார்.

சோதனைகள் மிக்க கவனமுடன் நடத்தப்பட்டன. யாரேனும் சிக்னல் தருகிறார்களா என்ற சந்தேகத்தை சில விஞ்ஞானிகள் கிளப்பினர். உடனே டெலிபோன் மூலம் எண்கள் குதிரைகளுக்குத் தரப்பட்டன. ஹெட் போனை குதிரைகளின் காதில் மாட்டி விட்டனர். எண்கள் உரக்கச் சொல்லப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டன. சில சமயம் ப்ளாக்போர்டில் எண்கள் எழுதப்பட்டு கணக்குகள் எழுதப்பட்டன. சில சமயம் எண்களை குதிரைகளின் முதுகில் எழுதிக் காட்டினர்.

அத்தனை சோதனைகளிலும் குதிரைகள் தேறின!

ஆனால் ஆறு மாதங்கள் கற்ற பின்னர் அதற்கு மேல் ஒரு முன்னேற்றமும் அவைகளுக்கு ஏற்படவில்லை.

டாக்டர் எடிங்கர், ஃப்ராங்க்பர்ட் நகரைச் சேர்ந்த பிரபல நியுராலஜிஸ்டான டாக்டர் ஹெச் க்ராமர் மற்றும் ஸ்டட்கார்ட் நகரைச் சேர்ந்த டாக்டர் ஹெச். ஈ. ஜைக்லர் மற்றும் பேசெலி நகரைச் சேர்ந்த டாக்டர் பால் சாராஸிஸ் ஆகியோர் இந்த சோதனைகளை நிகழ்த்தி ‘கணக்குப் போடும் குதிரைகள் ஒரு மாபெரும் அற்புதம்’ என்று நற்சான்றிதழைத் தந்தனர்!

க்ரால் ஒரு குட்டி யானையையும் பயிற்றுவிக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த சோம்பேறி யானை எதையும் கற்க மறுத்து விட்டது.

இன்று வரை விஞ்ஞான உலகம் எல்பர்ஃபெல்ட் குதிரைகள் எப்படிக் கற்றுக் கொண்டன என்ற புதிரை விடுவிக்கவில்லை!

விஞ்ஞானம் விளக்க முடியாத ஏராளமான புதிர்களுள் கணக்குப் போடும் குதிரைகளும் ஒன்று!

அறிவியல் அறிஞர் வாழ்வில்….

பிரபல இரசாயன இயல் விஞ்ஞானியான ஹெர்மன் ஃபிஷர் (1852-1959) தூக்க வியாதிக்கு வெரோனல் என்ற மருந்தைக் கண்டு பிடித்து 1902 ஆம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்றார்.

ஒரு முறை அவர் பிரபல நாவலாசிரியரான ஹெர்மன் சுடர்மானைச் (Hermanna sudarmann) சந்தித்தார்.

சுடர்மான் ஃபிஷரைக் கிண்டல் செய்யும் விதமாக, உங்கள் வெரோனலைச் சாப்பிடக் கூட வேண்டாம். அதைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு தூக்கம் வந்து விடுகிறது” என்றார்.

உடனே ஃபிஷர் பதிலடி கொடுத்தார் இப்படி:” அடடா! என்ன ஒற்றுமை பாருங்கள்! உங்கள் நாவல்கள் அனைத்தையும் படிக்க வேண்டும் என்று வாங்கி அடுக்கி வைத்திருக்கிறேன். அதைப் பார்த்தாலேயே போதும், நல்ல தூக்கம் வந்து விடுகிறது!’

இருவரும் நகைத்தனர்! எழுத்தாளருக்கு விஞ்ஞானி சோடையா, என்ன?

******

 

கார்பன் மானாக்ஸைடு தரும் அபாயம்! (POST No. 2333)

co metre

Radio Talk written by S NAGARAJAN

Date: 16 November 2015

POST No. 2333

Time uploaded in London :– 9- 31 AM

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

ச.நாகராஜன்

carbon-monoxide-alarm-199357

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

Part 1 posted on 6th November 2015; Part 2 posted on 7th ;Part 3 on 8th nov.Part 4 on 9th nov.15;part 5 on 11th Nov.; Part 6- 12th; Part- 7- 13th.Nov.;part 8 on 14th nov.;part 9 on 15th nov.

 

வாகனக் கழிவாக வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கார்பன் மானாக்ஸைடு ஒரு நச்சு வாயு. சிகரட் புகைக்கும் போதும், மண்ணெண்ணெய் அடுப்புகளிலிருந்தும் கூட இந்த நச்சு வாயு வெளிப்படுகிறது.

அபாயகரமான இந்த வாயு சுவாசத்தின் போது உள்ளே சென்றால் தலைவலி, கிறுகிறுப்பு, தடுமாற்றம், நினைவாற்றல் இழப்பு, வாந்தி எடுத்தல், சுவாசிப்பதில் சிரமம்,மார்பு வலி, நினைவற்று கோமாவில் இருத்தல் போன்ற அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

CarbonMonoxideDetectorBG_hero_image

குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் ஆகியோர் எளிதாக இந்த வாயுவினால் வீட்டிலும் வெளியிலும் பாதிக்கப்படுவதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தல் அவசியம்.

சமையலுக்காக வீட்டில் பயன்படுத்தப்படும் ஸ்டவ்வுகள் கார்பன் மானாக்ஸைடை வெளிப்படுத்தாத ஸ்டவ்வுகளாக இருப்பது அவசியம்.

வீட்டில் கார் காரேஜில் நின்ற நிலையிலேயே வெகு நேரம் கார் எஞ்சினை இயக்காமல் இருக்க வேண்டும். காரின் எஞ்சின்களை கார்பன் மானாக்ஸைடு வெளியேற்றாத தரக்கட்டுப்பாடு நிலையில் உருவாக்கப்பட்டதா என்று சோதித்து கார்களை தெரிவு செய்ய வேண்டும்.

சிகரட்டை புகைக்கும் ஒருவர் தனக்குக் கெடுதலைச் செய்து கொள்வதோடு அருகில் உள்ள மற்றவருக்கும் கார்பன் மானாக்ஸைடை வெளிப்படுத்துவதன் மூலம் கேடு விளைவிக்கிறார். ஒரு பாக்கட் சிகரட்டை புகைக்கும் ஒருவருக்கு கார்பன் மானாக்ஸைடின் அளவு இருபது பார்ட்ஸ் பர் மில்லியன் (0 parts per million)என்ற அபாய அளவில் இருக்கிறது.கார்பன் மானாக்ஸைடு நுரையீரல் வழியே ரத்தத்தை அடைந்து ஹீமோகுளோபினுடன் கலக்கிறது. உடல் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை ஏந்திச் செல்லும் ரத்தத்தின் திறனைக் குறைக்கிறது. கார்பன் மானாக்ஸைடின் அளவு ஒருவரின் ரத்தத்தில் அதிகமாகும் போது அவரது ரத்தம் ஆக்ஸிஜனை ஏந்திச் செல்லும் திறனில் குறைவு படுகிறது. நாளாக நாளாக இதய வியாதி உள்ளிட்ட பல்வேறு வியாதிகளை உருவாக்குகிறது.

ஆகவே சுற்றுப்புறத்திற்குக் கேடு விளைவிக்கும் வாகனப் புகை வெளியேற்றத்தைத் தடுப்பதும், வீட்டிலும் வெளியிலும் புகை பிடிப்பதால் ஏற்படும் கார்பன் மானாக்ஸைடு வெளியேற்றத்தைத் தடுப்பதும் வளி மண்டலத்தைச் சுத்தமாக்க உதவும் வழிகளாகும்.

கார், மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற வாகனங்களைக் குறைவாகப் பயன்படுத்துவோம். புகை பிடிப்பவரிடம் கார்பன் மானாக்ஸைடு தீமைகளைக் கூறி அவரைக் காப்பாற்றும் செயலையும் செய்ய ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் முயல வேண்டும். ஆரோக்கியமான சுற்றுப்புறச் சூழலுக்கும், இல்லச் சூழலுக்கும் எதிரியான கார்பன்மானாக்ஸைடு நச்சுப் புகையைத் தவிர்ப்போம்; வாழ்வை வளமாக்குவோம்!

To be continued……………………………..

பவளத்திட்டுகளைப் பாதுகாப்போம் (Post 2330)

coral stamps

Radio Talk written by S NAGARAJAN

Date: 15 November 2015

POST No. 2330

Time uploaded in London :– 17-47

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

ச.நாகராஜன்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

Part 1 posted on 6th November 2015; Part 2 posted on 7th ;Part 3 on 8th nov.Part 4 on 9th nov.15;part 5 on 11th Nov.; Part 6- 12th; Part- 7- 13th.Nov.;part 8 on 14th nov.

 

 

உலகில் பயோடைவர்ஸிடி எனப்படும் பல்லுயிர்ப்பெருக்கத்திற்குப் பெரிதும் துணை செய்வது பவளப் பாறைகள் அல்லது பவளத் திட்டுகள் ஆகும். இவை வெகுவாக உலகெங்கும் அழிந்து வருகின்றன.சுமார் இருபத்தெட்டுலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு பவளத் திட்டுகள் உலகெங்கும் உள்ளன.

இவை ஆயிரக்கணக்கான உயிரினங்கள் உயிர் வாழ உதவுகின்றன. இவற்றை ‘கடலில் உள்ள மழைக்காடுகள்’ (“rainforests of the seas”) என்றே அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இவை தரும் நன்மைகள் எண்ணிலடங்கா.

கடல் அலைகளாலும் சூறாவளிகளாலும் கடற்கரைகள் அழியாமல் பாதுகாக்க பவளத் திட்டுகளே உதவுகின்றன. உணவாகவும் மருந்தாகவும் இவை அமைகின்றன.

சுற்றுலாவை மேம்படுத்திஆங்காங்கே வாழும் உள்ளூர் மக்களுக்கும் சமூகத்திற்கும் இவை பொருளாதார ரீதியாக  உதவுகின்றன.

சுற்றுப்புறச் சூழல் அமைப்பை எடுத்துக் கொண்டு பார்த்தோமானால் பெருங்கடல்களைப் பாதுகாக்கும் வண்ணம் கடல் அமைப்புகளோடு ஒரு அங்கமென இவைகள் திகழ்வதால் இவற்றின் மதிப்பு மிகவும் அதிகம். நிலத்தில் மழைக்காடுகள் என்று நாம் கூறுவது போல கடலுக்கடியில் அமைந்துள்ள மழைக்காடுகளாக இவை திகழ்கின்றன.

coral1

வெப்ப பிரதேசங்களில் உள்ள நீர்நிலைகளில் ஊட்டச் சத்துகள் குறைவாகவே இருக்கும். ஏனெனில் வெப்பமான நீர் இப்படிப்பட்ட சத்துக்களை எல்லைக்குட்பட்டதாக குறைவாகவே இருக்கச் செய்கிறது. ஆகவே தான் இவற்றை ‘கடலில் உள்ள பாலைவனங்கள்’ என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.இந்த நிலையில் பவளத் திட்டுகள் உணவுச் சங்கிலி ஒன்றை அமைத்து உணவை 25 சதவிகிதம் மீன்களுக்கு வழங்குகிறது.இந்த மீன்கள் தங்களது தங்குமிடமாக பவளத் திட்டுகளையே ஆக்கிக் கொள்கின்றன. கடலின் ஏராளமான உயிரினங்களுக்கு இளமைப் பருவத் தாலாட்டும் இடமாகவும் பவளத் திட்டுக்கள் அமைகின்றன. இந்த பவளத் திட்டுகளை அழிந்து பட்டால் இதை நம்பி உள்ள அனைத்து உயிரினங்களும் அழியும்; சுற்றுப்புறச் சூழலுக்கு மாபெரும் கேடு ஏற்படும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவை அழிக்கப்பட்டு வருவதாக இன் டர்நேஷனல் யூனியன் •பார் கன்ஸர்வேஷம் ஆ•ப் நேச்சர் (International Union for Conaservation of Nature- IUCN) எனப்படும் உலகின் இயற்கை பாதுகாப்பு பன்னாட்டு சங்கம் தனது ஆய்வின்  மூலமாகக் கண்டறிந்து எச்சரிக்கையை விடுத்துள்ளது.உலகின் இருபது சதவிகித பவளத் திட்டுக்கள் அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறும் இந்த நிறுவனம் இதைப் பாதுகாக்க அனைத்து நாட்டு மக்களும் ஒருங்கிணைய வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளது. கடல்புறம் சார்ந்த மக்களும் சுற்றுலாப் பயணமாக பவளத் திட்டுகளைப் பார்க்கச் செல்லும்  மக்களும் இவற்றின் முக்கியத்துவத்தை அறிந்து அவற்றிற்கு ஊறு விளைவிக்கக் கூடாது. இவற்றைப் பேணிப் பாதுகாக்க ஒவ்வொருவரும் உறுதி பூண வேண்டும்

To be continued………………………

தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயம்!

Radio Talk written by S NAGARAJAN

Date: 14 November 2015

POST No. 2327

Time uploaded in London :– 10-11 AM

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

ச.நாகராஜன்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

Part 1 posted on 6th November 2015; Part 2 posted on 7th ;Part 3 on 8th nov.

Part 4 on 9th nov.15;part 5 on 11th Nov.; Part 6- 12th; Part- 7- 13th.Nov.

 

8.தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயம்!

உலகின் தட்பவெப்ப நிலை வெகு வேகமாக மாறி வருகிறது.புவி வெப்பமடைந்து வருகிறது.இந்த மாறுதலுக்குக் காரணம் மனிதனின் செயல்களே என்பது வருத்தமூட்டும் செய்தி!

புவி வெப்பம் அடைவதால் பல்வேறு உயிரினங்கள் அழிந்து வருகின்றன; அவற்றின் உறைவிடங்கள் மறைகின்றன; சுற்றுப்புறச் சூழல் அமைப்புகள் பாதிக்கப்படுகின்றன.பூமியை எதிர்நோக்கியுள்ள அபாயங்களில் மிகப் பெரிய அபாயம் புவி வெப்பமாதலே என்பதை விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவரும் ஒரு மனதாக ஒப்புக் கொண்டுள்ளனர். சமீபத்திய ஆய்வுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உஷ்ணம் அதிகரித்து வருவதையும் தட்பவெப்ப நிலையில் சீரற்ற மாறுபாடுகள் அதிகரிப்பதையும் அறிவிக்கின்றன.

தொல்படிம எரிபொருள்களான நிலக்கரி, பெட்ரோல் உள்ளிட்டவை எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் போது அது காற்றை மாசுபடுத்துகிறது. சூரிய கிரணங்களை மேகங்கள் சூரியனிலிருந்து பிரதிபலிக்க வைத்து அவை விண்வெளியை அடையச் செய்கின்றன. இது ஒரு அசாதாரண விளைவை ஏற்படுத்துகிறது. இது க்ளோபல் டிம்மிங் (global dimming) என்ற சொற்றொடரால் குறிப்பிடப்படுகிறது. இந்த க்ளோபல் டிம்மிங்கின் விளைவாக குறைந்த வெப்பமும் ஆற்றலும் பூமியை அடைகிறது. முதலில் இது நலம் பயக்கும் ஒன்றாகத் தோன்றினாலும் இதுவே ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளிலும் எண்பதுகளிலும் எதியோப்பியாவில் ஏற்பட்ட பஞ்சத்திற்குக் காரணம் என கண்டறியப்பட்டது. ஏனெனில் வட துருவத்தில் உள்ள பெருங்கடல்கள் மழையை உருவாக்கும் வண்ணம் உரிய வெப்பத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆகவே இந்தப் பஞ்சங்களினால் லட்சக்கணக்கில் அங்கு மக்கள் மடிந்தனர்.

க்ளோபல் டிம்மிங்கிற்குக் காரணமாக அமையும் கார்பன் டை ஆக்ஸைடு போன்ற நச்சுப் புகை வளி மண்டலத்தில் கலப்பதைத் தடுப்பதே இதற்குச் சரியான தீர்வாக அமையும்.

க்ளோபல் டிம்மிங்கைத் தடுப்பதன்  மூலம் தட்பவெப்ப நிலை சீரடைந்து புவி வெப்பமயமாதல் தடுக்கப்படும். மக்களின் ஆரோக்கியம் மேம்படும். ஆகவே இன்றைய உடனடிக் கடமை புவி வெப்பமடைவதைத் தடுப்பதே ஆகும்.

தொடரும்…………………………….