பூமியைக் காப்பாற்றுங்கள்

SAVE MOTHER EARTH

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Compiled  by ச. நாகராஜன்

Date: 30  September 2015

Post No: 2201

Time uploaded in London :– 6-06 (காலை)

(Thanks  for the pictures) 

 

MY BROTHER S NAGARAN IS A REGULAR CONTRIBUTOR TO BHAGYA MAGAZINE: swaminathan

அறிவியல் துளிகள் தொடர், பாக்யா வார இதழில் கடந்த நாலரை ஆண்டுகளுக்கு மேல் வந்து கொண்டிருக்கிறது. அதில் 238வது அத்தியாயமாக    11-9-2015இல் வெளியான கட்டுரை இது!

 

பூமியைக் காப்பாற்றுங்கள் ஒரு விண்வெளி வீரரின் உருக்கமான இறுதி உரை!

.நாகராஜன்

 

நமது பூமி பெரும் ஆபத்தில் இருக்கிறது! என்ன நடவடிக்கையை நீங்கள் எடுக்கப் போகிறீர்கள்?”  – பூமியைக் காப்போம் என்ற இயக்கத்தின் ஸ்லோகன்களில் ஒன்று

 

 

நெதர்லாந்திலிருந்து முதலில் விண்வெளிக்குச் சென்ற பெருமையைப் பெற்றவர்    இயற்பியல் வல்லுநரான உப்போ ஜோஹன்னஸ் ஓகெல்ஸ் (Wubbo Johannes Ochkels பிறப்பு 28, மார்ச்,1946 மறைவு 18, மே,2014).

 

யூரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்ஸி மூலம் 1985ஆம் ஆண்டு இவர் விண்வெளிக்குப் பயணமானார்.

இயற்பியல் வல்லுநரான இவரது சிந்தனைகள் புதியவை. மலைக்க வைப்பவை.

 

TED என்ற நிறுவனம் தொழில்நுட்பம், பொழுதுபோக்கு மற்றும் வடிவமைப்பு  (Technology, Entertainment and Design) ஆகியவற்றை இணைத்து புதிய சிந்தனைகளைத் தரும் சொற்பொழிவுகளை 1984ஆம் ஆண்டிலிருந்து ஏற்பாடு செய்து வருகிறது. நிபுணர்கள் பேசும் இந்தப் பேச்சுக்கள் பிரபலமானவை. 18 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் பேச்சுக்கள் இவை.

 

இந்த டெட் சொற்பொழிவில் உப்போ ஓகெல்ஸின் ஆம்ஸ்டர்டாம் சொற்பொழிவு மிகவும் பரவலாகப் பேசப்படும் ஒன்றாக அமைகிறது.

இதில் காலம் பற்றிய ஒரு புதிய சிந்தனையை முன் வைத்தார் ஓகெல்ஸ். காலம் என்பதே மாயை என்பது இவரது வாதம்.

காலத்தை யாராலும் அளக்க முடியாது. ஏனெனில் அதில் பிரிக்கக் கூடிய சிறு பகுதி என்று ஒன்று இல்லை. ஒளியின் வேகம் நிலையானது. அந்த வேகத்தில் ஒளியோடு ஒருவர் பயணிக்க முடிந்தால் அவருக்கு காலமே கிடையாது.

 

 விண்வெளி வீரர்

இவரது 18 நிமிட டெட் பேச்சைக் கேட்டவர்கள் அசந்து போனார்கள். இதனால் காலத்தைப் பற்றிப் புதிய பார்வையில் ஆய்வு நடக்க ஆரம்பித்துள்ளது.

விண்வெளியில் பறந்த போது இவருக்குப் பெரும் ஆன்மீக அனுபவம் ஏற்பட்டது. ஒரு விரிந்த பார்வை இவருக்கு வந்தது.

 

இவர் தனது மறைவிற்கு முன்னர் நீட்டித்த ஆற்றல் தீர்வுகள் பற்றி ஒரு கடிதம் உலகத்தினருக்கு எழுதினார். அதில், “நாம் உணர்வற்று காலனிகளை அமைக்கும் தேனீக்கள் இல்லை. நாம், இணைந்து சேர்ந்து சிந்திக்க வல்ல திறமை இருப்பதை அறியாத நியூரான்களும் இல்லை. நாம் அறிவார்ந்தவர்கள். நமது சமூகத்தின் நடத்தையைப் பார்த்து கவனிக்கும் வல்லமை பெற்றவர்கள். மனித குலம் எங்கே செல்கிறது என்பதை நாம் நன்கு அறிவோம். நாம் அனைவரும் இணைந்து செயலாற்றினால் மனித குலத்தை இன்னும் பிரமாதமான திசை நோக்கி நடத்திச் செல்லலாம். அனைவரையும் இணைக்கும் ஒரு புதிய மதத்தை மனித குலத்தின் மீது ஒரு புதிய நம்பிக்கை கொண்டு நாம் உருவாக்கலாம்.

 

பல மதங்கள் உள்ளன. மக்களை இணைக்கின்றன. ஆனால் அனைத்து மக்களையும் அவை இணைக்கவில்லை. மக்கள் நம்பும் வெவ்வேறு கடவுள்கள் மனித குலத்தைப் பிரிக்கின்றனர். இந்தப் பிரிவினைகள் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கின்றன. பூமியுடன் இந்த மதங்கள் மனித குலத்தை ஒன்றாக இணைக்கவில்லை. அவை நீடித்திருப்பவை அல்ல.

ஆனால் முழு மனித குலத்தின் மீதும் நாம் நம்பிக்கை கொண்டிருப்போமானால் ஒரு பிரச்சினையும் இருக்காது. ஏனெனில் நம்மிடம் தான் பிரிவினை இருக்காதே, ஒன்றுபட்டு அல்லவா இருப்போம்! மனித குலத்தின் கடவுள் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார். நம்மை விட்டு வெளியே கடவுள் இல்லை. நாம் இந்தக் கடவுளிடமிருந்து ஒளிந்து கொண்டிருக்க முடியாது. ஏனெனில் நாமே கடவுள்

 

சமாதானத்துடன் ஒரே மனதைக் கொண்ட, சண்டை இல்லாத மனித குல எழுச்சிக்காக அறைகூவுகிறார் ஓகெல்ஸ்.

விண்வெளியிலிருந்து பூமிப் பந்தைப் பார்த்த போது அவருக்கு உயரிய ஆன்மீக அனுபவம் ஏற்பட்டு நல்ல புதிய சிந்தனைகள் மலர்ந்தன.

 

அருமையான மனைவி, குழந்தைகள், பேரப் பிள்ளைகள் என நல்ல வாழ்வு வாழ்ந்த அவருக்கு 2005ஆம் ஆண்டு  மாரடைப்பு ஏற்பட்டது. ஒருவழியாக மீண்டார். ஆனால் 2013, மே மாதம் அவருக்கு சிறுநீரகத்தில் புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு டாக்டர்கள் அவருக்கு இரண்டு வருடம் என்றுநாள் குறித்துவிட்டனர்.

 

2014, மே மாதம் 18ஆம் தேதி மரணமடைந்த அவர் இறப்பதற்கு முதல் நாள் மருத்துவ மனையில் படுத்திருந்தபடியே தொலைக்காட்சி ஒன்றிற்குத் தனது கடைசி பேட்டியை அளித்தார். உணர்ச்சி ததும்ப மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு அனைத்து சக்தியையும் ஒருங்கிணைத்து, சக்தி வாய்ந்த தனது பேச்சில் அவர் உலகினரிடம் இந்த பூமி மிகவும் மதிப்பு வாய்ந்தது என்றும் அதை எப்படியேனும் காக்க வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டிக் கொண்டார். “இது ஒன்றே தான் நமக்கான வசிப்பிடம். இரண்டாவது பூமி இல்லைஎன்றார் அவர்.

 

தனக்கு வந்தது போல பூமிக்கும் கான்ஸர் வந்து விடக் கூடாது என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர்,” நம்முடைய பூமி கான்ஸரினால் பீடிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு கான்ஸர் உள்ளது. மக்களில் ஏராளமானோர் கான்ஸரினால் இறக்கின்றனர். எல்லோரும் இறக்கத் தான் வேண்டும். ஆனால் மனித குலம் எப்போதும் நீடித்து இருக்க போதுமான அளவு மனிதர்கள் உள்ளனர்.

 

நாம் நமக்கே சொந்தமான நமது பூமியைக் காக்க வேண்டும். ஒரு விண்வெளி வீரரின் உற்சாகமும் ஆர்வமும் உள்ளொளியும் அணுகுமுறையும் இருக்கும் போது மற்றவர்கள் நேசிக்க முடியாத அளவிற்கு பூமியை நீங்கள் நேசிக்க ஆரம்பிப்பீர்கள். ஒன்றை உளமார நேசிக்க ஆரம்பித்து விட்டால் அதை விட உங்களுக்கு மனமே வராது.

 

என் மனைவியைப் பாருங்கள். அவளுக்கு என்னை இழக்க விரும்பவில்லை. என்னவெல்லாமோ முடியுமோ அதையெல்லாம் செய்து என்னை வாழ வைக்க அவள் விரும்புகிறாள். அந்த அன்பும் அணுகுமுறையுமே மனித குலம் பூமியை வாழ வைக்கத் தேவையானவை!”

 

அவரது தொலைக்காட்சி பேட்டியைக் கண்டோர் நெகிழ்ந்து உருகியதில் அதிசயமே இல்லை.

7 நாட்கள் 44 நிமிடங்கள் விண்வெளியில் பறந்த வீரர் மண்ணில் வாழும் மாந்தருக்குக் கூறிய அறிவுரைகளும் புதிய சிந்தனைக் கருத்துக்களும் வளமானவை; வரவேற்கப்பட வேண்டியவை; வாழ்ந்து காட்டப்பட வேண்டியவை!

 

–சுபம்–

டெலிபதி மூலம் செய்திகளைப் பரிமாறும் காலம் வருகிறது!

antenna1

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Compiled  by S.NAGARAJAN

Date: 29  September 2015

Post No: 2198

Time uploaded in London :– 8-59 am

(Thanks  for the pictures) 

 

விஞ்ஞான விந்தை

அறிவியல் துளிகள்தொடர், பாக்யா வார இதழில் கடந்த நாலரை ஆண்டுகளுக்கு மேல் வந்து கொண்டிருக்கிறது. அதில் 239வது அத்தியாயமாக    18-9-2015இல் வெளியான கட்டுரை இது!

 

டெலிபதி மூலம் செய்திகளைப் பரிமாறும் காலம் விரைவில் வருகிறது!

.நாகராஜன்

india antenna

ஃபேஸ்புக்கின் எதிர்காலம் டெலிபதி தான்!” – மார்க் ஜுக்கர்பெர்க்

 அதிசயங்கள் நிகழும் ஆனந்தமான நாட்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது முன்னோர்களுக்குக் கிடைக்காத அரிய விஞ்ஞான அதிசயங்கள் நம் விரல் நுனிகளில் இன்று இருக்கின்றன. செல் போன். வாட்ஸ் அப், மடிக் கணினி, கணினி வழியே ஸ்கைப், முகநூல் (ஃபேஸ்புக்), ட்விட்டர் இன்ன பிற மென்பொருள்கள் என இவற்றைக் கொண்டு அமர்க்களமான வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

 

 

இதற்கு அடுத்த கட்டம் என்ன என்பதை உலகின் முக்கியமான நபர் ஒருவர் அறிவித்துள்ளார். அது தான் இன்றைய உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் முக்கிய விஷயம்.

சொன்னவர் ஃபேஸ்புக்கின் இணை நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க். சொன்ன விஷயம்சமீப எதிர்காலத்தில் டெலிபதி சாத்தியம், மனத்தோடு மனம் பேசப் போகிறோம், உணர்ச்சிகளை தொலைதூரத்திலிருந்து நிஜமாகவே பகிர்ந்து கொள்ளப் போகிறோம் என்பது தான்.

 

 

2015, ஜூன் 30ஆம் தேதி ஒரு கேள்விபதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் தன் அசாதாரணமான வார்த்தைகளால் உலகையே வியப்பில் ஆழ்த்தினார்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு நாள் நாம் வளமான சிந்தனைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். உரைகள் மூலமாகவும் போட்டோக்கள் மூலமாகவும் இன்று செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்கிறோம். இனி எதிர்காலத்தில் வீடியோவாகப் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். அதன் பின்னர் வர்ச்சுவல் ரியாலிடி எனப்படும் மெய்நிகர் நிலை மூலமாக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வோம்.இதில் புலன் மற்றும் உணர்ச்சிகரமான அனுபவங்கள் தத்ரூபமாகப் பகிர்ந்து கொள்ளப்படும்.”

 

 547-Arvi-Satellite-Earth-Station

இப்படி ஜுகர்பெர்க் சொன்னதன் உண்மையான அர்த்தம் என்ன? எதிர்காலத்தில் மூளையுடன் மூளை தொடர்பு கொள்ளப் போகிறது. அதாவது டெலிபதி சாத்தியம் தான் என்பதே இதன் பொருள்!

ஒரு ஹெட்செட்டைப் பொருத்திக் கொண்டு பாட்டைக் கேட்கிறோம் இல்லையா, அதே போல ஹெட்செட்டைப் பொருத்திக் கொண்டு மூளையுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். நியூரான்கள் மூலமாக நமது மூளை நமது எண்ணங்களை நாம் விரும்பும் இன்னொருவரின் மூளையில் உள்ள நியூரான்களுக்கு அனுப்பும்.

 

இன்றைய தொழில்நுட்ப ரீதியாகவே ஒருவரின் மூளையை நாம்படிக்கமுடியும் என்கிறார் பிரிட்டனில் உள்ள வார்விக் ஷைர் பல்கலைக்கழக பயோமெடிகல் பேராசிரியரான கிறிஸ்டோபர் ஜேம்ஸ். ஆனால் மூளை செல்கள் என்ன சிக்னலைத் தருகின்றன என்பது இப்போது தெரிந்தாலும் கூட அது என்ன சொல்கிறது என்பதைடீ கோட் செய்துஅர்த்தத்தை அறிவது இன்றைய நிலையில் முடியவில்லை.

 antenna6

இந்த சிக்னல்களை டீகோட் செய்து விட்டால் ஒருவர் என்ன எண்ணுகிறார் என்பதைச் சொல்லி விட முடியும். அதைக் கண்டுபிடிக்கத் தான் இன்றைய விஞ்ஞானிகள் முயன்று வருகிறார்கள்.

 

ஒரு மனிதனின் மூளையில் உதிக்கும் எண்ணத்தின் மொத்த வோல்டேஜ் மற்றும் மின்சக்தியை அறிய முடிகிறது. ஆனால் அது எதைத் தெரிவிக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை! இந்த மர்மம் துலங்கும் நாள் நெருங்குகிறது.

உண்மையில் ஒரு எண்ணம் என்பது என்ன என்பதை விஞ்ஞானிகளால் இன்று கூட விளக்க முடியவில்லை.

 

அப்படி இருக்கும் போது, ஜுக்கர்பெர்க்கின் தீர்க்கதரிசன வாக்கு எப்படி நடைபெறப் போகிறது?

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஒரு குழு பல விசித்திரமான சோதனைகளை நடத்தி முடித்திருக்கிறது. மூளையின் மோட்டார் கார்டெக்ஸ் (தமிழில் இயக்கப் புறணி) பகுதி வழியே இரு நபர்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் செய்யும் சோதனையைத் தான் இந்தக் குழு செய்து பார்த்துள்ளது.

 

air india

வெவ்வேறு அறைகளில் இருவர் இருக்கின்றனர். அவர்கள் தலையில் எலக்ட்ரோட் பொருத்தப்பட்டுள்ளது. இன்டர்நெட் வழியே அவர்களில் ஒருவரின் தலையிலிருந்து சிக்னல்கள் கிளம்பி இன்னொருவரின் தலைக்குச் சென்று சேர்கிறது! அதாவது ஒரு மோட்டார் கார்டெக்ஸிலிருந்து இன்னொரு மோட்டார் கார்டெக்ஸுக்குச் செய்தி வெற்றிகரமாகச் சென்று சேர்கிறது! எந்த வார்த்தையை அனுப்புபவர் நினைக்கிறாரோ அதற்கான சிக்னலைப் பெறுபவர் அந்த வார்த்தையையும் டீகோடிங் முறையில் சரியாக புரிந்து கொள்கிறார்

 

இது உண்மையான விஞ்ஞான விந்தை!

 

ட்யூக் பல்கலைக் கழகத்தில் நடந்தது இன்னொரு விசித்திரமான சோதனை. இரண்டு எலிகளின் மூளைகள் இணைக்கப்பட்டன. முதல் எலிக்கு சிக்னல் தரப்பட்ட போது அது விஞ்ஞானிகள் வைத்திருந்த நெம்புகோலைத் தட்டியது. இரண்டாவது எலிக்கு சிக்னல் தரப்படாமல் இருந்தாலும் இரு எலிகளின் இணைப்புகளால் அதுவும் நெம்புகோலைத் தட்டியது.

 

இரு மூளைகளும் இணைக்கப்படலாம் என்பதை அறிந்த விஞ்ஞானிகள் பரவசம் அடைந்தனர்.

எலிக்கு எலி சரி! ஆனால் மனிதனுக்கு இதெல்லாம் சாத்தியப்படுமா? ஆரம்ப கால முயற்சி தான் இது! இதில் முன்னேற வேண்டியது எவ்வளவோ இருக்கிறது!

மூளை இணைப்பு சம்பந்தமான ஆராய்ச்சிகள் மும்முரமாக உலகெங்கும் நடைபெற்று வருகின்றன.

 

UNITED STATES OF AMERICA - CIRCA 1964: A stamp printed in USA shows Radio Waves and Dial, dedicated to the 100th anniversary of the Amateur Radio, circa 1964

சும்மா சொல்லவில்லை ஜுக்கர்பெர்க்! நடந்து முடிந்த ஆராய்ச்சிகளின் பலன்களை வைத்தே நாளைய உலகம் பற்றிச் சொல்லி இருக்கிறார்.

யாராவது ஏதாவது சொன்னால் நம்ப முடியாது!

ஆனால் சொன்னவர் ஃபேஸ்புக்கைத் தந்தவர் ஆயிற்றே. கோடிக்கணக்கான மக்களின் முக தரிசனத்திற்குக் காரணமானவர் எதைச் சொன்னாலும் நம்பலாம். டெலிபதி மூலமாகவே அவரைப் பாராட்டும் காலமும் வரலாம்!

antenna5

***************

சூரியனிடத்தில் ஆரோக்கியத்தைக் கேள்: ஆரோக்கியம் தொடர்பான பொன்மொழிகள்

boat suprabadh

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by London swaminathan

Date: 26 September 2015

Post No: 2190

Time uploaded in London :– காலை  7-14

(Thanks  for the pictures) 

1).ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத் – பூஜா ப்ரகாச:

சூரியனிடத்தில் ஆரோக்கியத்தைக் கேள்

(சூரியன் மூலம் வைடமின் ‘டி’ கிடைக்கிறது. கண், ஒளி பெறுகிறது. இதை அறிந்த முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே இப்படிச் சொல்லிவைத்தனர்; ஒப்பிடுக: கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரமா?)

2).காய: கஸ்ய ந வல்லப: – பஞ்ச தந்திரம்

யாருக்குதான் உடல் மீது பற்று/ ஆசை இல்லை?

3).இதம் பஸ்மாந்தம் சரீரம் – ஈஸாவாஸ்ய உபநிஷத்

(ஒப்பிடுக: முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு பிடிசாம்பராய் வெந்து மண்ணாவதும் கண்டு…………..பட்டினத்தார்)

falls

4).நீரையும் சீராடு

நீரை முறையாகப் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறலாம்.

5).உடம்பைக் கடம்பால் அடி

கடம்ப மரக் கட்டில் மிகவும் நல்லது

6).லங்கணம் பரம ஔஷதம்

பட்டினி கிடந்தால் பல நோய்கள் பறந்தோடிவிடும்

7).கிமிவ ஹி மதுராணாம் மண்டனம் நாக்ருதீனாம் –சாகுந்தலம்

அழகுக்கு எதுதான் அழகு சேர்க்காது?

8).தர்மார்த்த காம மோக்ஷாணாம் ஆரோக்யம் மூலம் உத்தமம் – சரக சம்ஹிதை

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பேறுகளையும் அடைய ஆரோக்கியமே சிறந்த சாத்னம்/கருவி.

9).சுட்ட எண்ணையைத் தொடாதே, வறுத்த பருப்பை விடாதே!

ஒரு முறை சூடாக்கிய எண்ணையையோ, நெய்யையோ மீண்டும் சூடாக்கினால், கெட்ட ‘’கொலஸ்ட்ரால்’’ அதிகரிப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது

10).திகஸ்து கலு மானுஷ்யம் – வால்மீகி ராமாயணம்

மனிதப் பிறவி வேண்டத் தக்கது ( பெறுதற்கரிய பேறு)

ந சரீரம் புனப் புன: — சாணக்ய நீதி தர்ப்பண:

அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது

colourful field walk

11).ஸ்யேம நு சூர்யமுச்சரந்தரம்  – ருக் வேதம்

தலைக்கு மேல் சூரியனை எப்போதும் காண்போமாக (நூறாண்டுக் காலம் நல்லபடி வாழ்வோமாக)

12).பஸ்யேமஸ் சரதஸ்சதம், ஜீவேம சரதஸ்சதம் – யஜூர், அதர்வ வேதங்கள்

நூறாண்டுக் காலம் நாம் காண்போமாக; நூறாண்டுக் காலம் நாம் வாழ்வோமாக

(நூறாண்டுக் காலம் வாழ்க; நோய்நொடியிலாமல் வாழ்க)

13).பஹிஸ்ஸரதி நிஸ்வாஸே விஸ்வாச: க: ப்ரவர்ததே – மஹாபாரதம்

வெளியே போன மூச்சு திரும்பிவரும் என்று எப்படி நம்புவது?

(போன மூச்சு திரும்பிவரும் என்று உத்தரவாதம் கிடையாது)

போனால் போச்சு, பொழுது விடிந்தால் ஆச்சு!

தூங்குகையில் வாங்குகிற மூச்சு, அது சுழி மாறிப்போனாலும் போச்சு!

14).மரணம் ப்ரக்ருதி: சரீரிணாம் – ரகு வம்சம்

பிறந்தோரெல்லாம் இறப்பது இயற்கை

மரணம் ப்ரக்ருதி சரீரிணாம் விக்ருதி ஜீவிதம் உச்யதே புதை:
க்ஷணமப்யவதிஷ்டதே ஸ்வசன்யதி ஜந்துர்நனு லாபவானசௌ
(ரகுவம்சம் 8-87)

பொருள்: உடல் எடுத்த பிராணிகளுக்கு மரணமானது இயற்கையானது; பிழைத்திருப்பதுதான் எதிர்பாராதது என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். பிராணியானது ஒரு கணமேனும் ஜீவித்திருக்குமாயின் இப் பிராணிக்கு பெரிய லாபம்தான்!!

((ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யு: — பிறந்தவர் எல்லாம் இறப்பது இயல்பு; இறந்தவர் எல்லாம் பிறப்பது உறுதி –கீதை 2-27))

15).ரம்யாணாம் விக்ருதிரபி ஸ்ரியம் தனோதி – கிராதார்ஜுனீயம்

அழகுள்ளவரித்தில் செயற்கையான பொருள் இருந்தாலும் அது அழகே சேர்க்கும்

16).பூஷாபி: கிம் சுந்தரோ ய: ப்ரக்ருத்யா

அழகானவர்களுக்கு அலங்காரம் எதற்கு?

train watr falls

17).சரீரமாத்யம் கலு தர்மசாதனம் – குமாரசம்பவம்

அறப் பணிகள் செய்வதற்கு ஆதாரமானது இந்த உடல்தான்.

(சுவரை வைத்துத்தான் சித்திரம்)

xxxxxxxxxxxxxxxxx

கடவுளுக்கு சவால்!

simpsonz

கடவுளும் விஞ்ஞானிகளும்

கடவுளுக்கு சவால்குரங்கு அடிக்கப் போன ஷேக்ஸ்பியர் கவிதை!

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by S NAGARAJAN

Date: 23 September 2015

Post No: 2182

Time uploaded in London :– 13-26

(Thanks  for the pictures) 

 

 

.நாகராஜன்

 

கடவுளுக்கு சவால்!

படைப்பு என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; எல்லாம் நம்மாலேயே செய்ய முடியும் என்றார் ஒரு விஞ்ஞானி.

அந்த நகரிலிருந்த பெரியவரிடம் அனைவரும் அந்த விஞ்ஞானியின் அதிசயமான கூற்றைத் தெரிவித்தனர்பெரியவர் விஞ்ஞானியிடம் வந்தார்.

பெரியவர் கேட்டார்:- “நீங்கள் கடவுளைப் போல எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று கூறுகிறீர்களாமே!”

 monkeysshakespeare

 

விஞ்ஞானி முழங்கினார்:+ “ நீங்கள் சொல்வதில் ஒரு திருத்தம்! கடவுளே இல்லை என்கிறேன். எல்லாவற்றையும் மனிதனால் செய்ய முடியும்!”

பெரியவர் விஞ்ஞானியிடம் ஒரு பந்தையும் பேட்டையும் கொடுத்தார்.அவர் ஒரு உயிரியல் விஞ்ஞானி என்பதோடு அவர் ஒரு குரங்கை வளர்ப்புப் பிராணியாக வளர்த்து வந்ததும் பெரியவருக்குத் தெரியும்.

பெரியவர் சொன்னார்:”ஓஹோ! சரி, பெரிய விஷயம் எல்லாம் பேச வேண்டாம். இதோ கொடுத்திருக்கிறேனே, பேட், பந்து, இரண்டையும் உங்கள் செல்லக் குரங்கிடம் கொடுங்கள். அதற்கு பேட் மூலம் பந்து விளையாடக் கற்றுக் கொடுங்கள். நீங்கள் சொல்வதை எல்லாம் அப்புறம் கேட்கிறோம்!”

 

 

பூ! இது சுலபம்என்றார் விஞ்ஞானி. அனைவரும் கலைந்தனர்.

விஞ்ஞானி குரங்கிற்கு பந்து விளையாடக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். பேட்டையும் பந்தையும் வைத்து எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார். நாட்கள் ஓடின. குரங்கு பந்து விளையாடக் கற்கவே இல்லை.

கடைசி முயற்சியாக குரங்கை பேட், பந்துடன் ஒரு அறையில் வைத்துப் பூட்டினார். நெடு நேரம் கழித்து ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க அவர் கதவின் சாவித் துவாரம் வழியே பார்த்தார்.

மறுமுனையில் குரங்கு தன் விழிகளை வைத்து இந்தப் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தது!

 

விஞ்ஞானி அன்றிலிருந்து தன்னால் எதையும் செய்ய முடியும் என்று சொல்வதை நிறுத்தி விட்டார். பெரியவர் புன்முறுவல் பூக்க அனைவரும் வழக்கம் போல கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுதனர்.

கோவிலில்அலகிலா விளையாட்டுடையான்சிரித்தான்!

 

 darwin_italy_stamp

சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை    

காலம் காலமாக எதையாவது புதுக் கொள்கையாகச் சொல்வது அறிஞர்களுக்கு ஒரு விளையாட்டு. ஆனால் அவர்களின் பல கொள்கைகள் கால வெள்ளத்தில் ஈடு கொடுத்து நிற்க முடிவதில்லை!

எவல்யூஷன்’ – பரிணாம வளர்ச்சிஎன்ற கொள்கையை முன் வைத்தார் சார்லஸ் டார்வின். ஆனால் அது தோன்றிய காலம் தொட்டே சர்ச்சைக்குள்ளாகி  படாதபாடு பட்டது.

 

 

ஆனால் தாமஸ் ஹக்ஸ்லி (Thomal Huxley) அதை பலமாக ஆதரித்தார்.அவர் சிறந்த உயிரியல் வல்லுநர் (eminent biologist)

குரங்கிலிருந்து பிறந்தவனே மனிதன் என்று அடித்துக் கூறினார் அவர். அதற்கும் ஒரு படி மேலே போய் ஒரு குரங்கு டைப் அடித்துக் கொண்டே இருந்தால் அது ஷேக்ஸ்பியரின் கவிதையைக் கூட டைப் அடித்து விடும் என்றார்.

அவரது, ‘Monkeys might type Shakespeare’ என்ற வாக்கியம் பிரசித்தமானது. அவ்வளவு தூரம் இங்கிலாந்தின் சொற்பொழிவு அரங்கங்களில் அந்தக் கருத்தை அவர் முழங்கி வந்தார்.

 

 

பரிணாம வளர்ச்சி கடவுளுக்கு எதிரான சவால் என்று விஞ்ஞானிகளும்பகுத்தறிவுகளும்மகிழ மக்களோ முழித்தனர். எது உண்மை?

 

 cartoon

குழுவினரும் குரங்குகளும்       

இதற்கு ஒரு முடிவு கட்ட ஒரு குழு முன் வந்தது. இங்கிலாந்தின் தென்மேற்கில் உள்ள ப்ளிமத் பல்கலைக்கழகத்தைச் (Plymouth University) சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் அடங்கிய குழு தான் அது. இந்த மாணவர்கள் மீடியா லாப் ஆர்ட்ஸ் (Media Lab Arts Course) என்ற பாடத்திட்ட வகுப்பில் பயில்பவர்கள்.

 

இதற்கான ஆராய்ச்சியை அறிவியல் ரீதியில் நடத்த நாங்கள் தயார் என்று குழுவினர் அறிவித்தனர். 2000 பவுண்டு நிதி உதவி உடனே அளிக்கப்பட்டது. (ஒரு பவுண்டு இன்றைய மதிப்பில் சுமார் 101 ரூபாய்; ஆராய்ச்சி நடந்த காலத்தில் குறைவு தான்!) மத்திய இந்தோனேஷியாவில் இருந்த சோலை குரங்குகள் ஆறை வாங்கினர் குழுவினர்.

 

இதற்காக தேவான் என்ற இடத்தில் உள்ள பைக்ங்டன் மிருகக்காட்சிசாலையில் (Paignton Zoo, Devon) ஒரு தனி அறை அமைக்கப்பட்டது. ஒரு கம்ப்யூட்டரும் நிறுவப்பட்டது. குரங்குகளின் இலக்கிய இன்பம்எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை அன்றாடம் அவ்வப்பொழுது கண்காணிக்க குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

 

ஒரு மாத தீவிர முயற்சியில் அந்த சோலை மந்திகள் கம்ப்யூட்டரை உடைத்ததோடு அதைத் தங்கள் கழிவறையாகவும் பயன்படுத்தியதைக் கண்டு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அதைக் கேட்ட மக்களோ விழுந்து விழுந்து சிரித்தனர்.

 shakes, falkland

ஷேக்ஸ்பியரை குரங்குகள் மதிக்கவே இல்லை!!

ஒரு குரங்கு ஐந்து பக்கங்களில் ‘S’ என்ற வார்த்தையை மட்டும் அடித்துத் தள்ளி இருந்தது!

 

 

குரங்கின் மீதல்ல ஜோக், கொள்கையின் மீதே தான்!

 

ஆய்வுத் தலைவரான விரிவுரையாளர் ஜெஃப் காக்ஸ் (Geoff Cox) தங்களது ஆய்வின் முடிவை அறிவித்துக் கூறுகையில், “காலப் போக்கில் பரிணாம வளர்ச்சி அடைவதைக் குறிக்கும் ரேண்டம் ப்ராசஸ் (Random Process) முறை மூலம் மிருகங்கள் ஒரு போதும் வளர்ச்சி அடையாது என்பதையும் மிருகங்களைக் கம்ப்யூட்டர் மட்டத்திற்கு கொண்டு வர முடியாது என்பதையும் எங்கள் ஆய்வு உறுதி செய்கிறது. இந்த ஆய்வில் ஜோக் ஏதாவது இருப்பதாக எண்ணி நீங்கள் மகிழ்வீர்களானால் அந்த ஜோக் குரங்குகளின் மீது (அல்லது அதன் செயல்பாடுகளில்) இல்லை. உண்மையில் ஜோக் அந்த பரிணாம வளர்ச்சி கொள்கையில் தான் இருக்கிறதுஎன்றார்.

 

paington 

 

ஊடகத்தின் கொண்டாட்டம்

 

இது என்ன, பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த கதையாய் இருக்கிறதே என்கிறீர்களா! இல்லை உண்மையில் குரங்கு அடிக்கப் போய் கம்ப்யூட்டர் டாய்லட் ஆன கதை தான் இது!

விஷயம் பிரமாதமான விஷயம் இல்லையா! வரிந்து கட்டிக் கொண்டு ஊடகங்கள் ஆய்வுக் குழுவினரை (குரங்குகள் கூடவே இருக்கும் போது தான்!) முற்றுகை இட்டன.

 

உலகளாவிய விதத்தில் ஆய்வு முடிவுகள் ஒளிபரப்பப்பட்டன. லண்டனில் பிரபல பத்திரிகையான டைம்ஸ்இல், நிருபர் சாம் லிஸ்டர் (Times, Sam Lister) செய்தியை வெளுத்துக் கட்டி விட்டார். (இதை ஸ்டேட்ஸ்மென் ஆங்கில நாளிதழ் 10-5-2003 இதழில் வெளியிட்டது)

 

 darwin russia

சார்லஸ் டார்வினின் கொள்கை சந்தி சிரிப்பது ஒரு புறம் இருக்கட்டும்; கடவுளை அடிக்கடி சவாலுக்கு இழுக்கும் விஞ்ஞானிகளின் விளையாட்டு தான் திண்டாட்டத்தில் முடிகிறதுஒவ்வொரு முறையும்!

அலகிலா விளையாட்டுடையான் அவன்!

அவனிடமே ஒரு விளையாட்டா???!!!

****************

மனோசக்தியின் வலிமை! – 2

placebo-effect-one-a-day

Written by S NAGARAJAN

Date : 4 September  2015

Post No. 2122

Time uploaded in London : 5-54 am

 

.நாகராஜன்

மனம் என்பது சக்தி வாய்ந்த ஒரு கருவிவியாதிக்கு எதிரான இந்தப் போராட்டமானது அணு அணுவாக உடல்ரீதியாகவும் மனோரீதியாகவும் ஆக இரண்டினாலும் ஆனதுடேவ் லினிகர்

     மனோசக்தியின் வலிமைக்கு உதாரணமாக ப்ளேசிபோ எபெக்ட்  (Placebo effect)  பற்றிக் கூறும் போதே அதற்கு எதிர்ப் பக்கமான நோசிபோ எபெக்ட் (Nocebo effect) பற்றியும் அறிய வேண்டியது அவசியமாகிறது.

 

 

18ஆம் நூற்றாண்டில் உருவான ப்ளேசிபோ என்ற சொல்லுக்குநான் இன்பம் தருவேன்” (I will please) என்று அர்த்தம். இதற்கு எதிர்மாறாக நெகடிவ் மனோநிலை ஏற்பட்டு உடல் நலம் பாதிப்பது நோசிபோ விளைவு என்று கூறப்படுகிறது. நோசிபோ என்ற லத்தீன் வார்த்தைக்கு அர்த்தம்நான் தீங்கு விளைவிப்பேன்’ (I will harm) என்பதாகும். கான்ஸர் நோயால் பாதிக்கப்பட்டோர் கீமோதெராபிக்கு முன்னர் வாந்தி எடுப்பதையும் ஒரு சாதாரண செடியைத் தொட்டவுடன் விஷச் செடியைத் தொட்ட பாதிப்பு வந்தது போல் சிலர் அலறுவதும் இதற்கு உதாரணங்கள்.

இதனால் பாதிக்கப்படுவோர் ஏராளம். உதாரணமாக, அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட ஒரு கேஸ் உலகெங்கும் பிரபலமாகப் பேசப்படுகிறது. இந்தச் சம்பவம் நியூ ஸயின்டிஸ்ட் இதழில் பதிவு செய்யப்பட்ட ஒன்று.

 

 

அலபாமாவைச் சேர்ந்த வான்ஸ் என்பவர் கல்லறை ஒன்றுக்குச் சென்று மந்திரவாதி ஒருவரைப் பார்த்தார். மந்திரவாதி, வான்ஸிடம்நீ சீக்கிரமே சாகப் போகிறாய்என்று கூறி விட்டார். இதை நம்பி விட்ட வான்ஸுக்கு உடல்நலம் சில வாரங்களிலேயே படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. இறக்கும் நிலைக்கு வந்து விட்ட வான்ஸை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் உடல்ரீதியாக அவருக்கு எந்த நோயும் இல்லை என்று உறுதியாகக் கூறினர். வான்ஸின் மனைவி டாக்டர்களிடம் வான்ஸ் கல்லறைக்குச் சென்று மந்திரவாதியைச் சந்தித்ததையும் அவன் வான்ஸை சீக்கிரமே இறக்கப் போகிறாய் என்று கூறியதையும் சொன்னார்.  

 

 

     டாக்டர்களின் ஒருவரான டாக்டர் டோஹெர்டிக்கு ஒரு யோசனை உதித்தது. மறுநாள் வான்ஸ் தம்பதிகளை அழைத்த டாக்டர் டோஹெர்டி, தான் முதல் நாளன்று கஷ்டப்பட்டுத் தேடி மந்திரவாதியைச் சந்தித்ததாகவும் என்ன செய்தாய் என்று அவனை மிரட்டியதாகவும், கடைசியில் அவன் பயந்து போய் நடந்ததைக் கூறி விட்டான் என்றும் கூறினார். மந்திரவாதி ஒரு பல்லியை வான்ஸின் உடலுக்குள் செலுத்தி விட்டதாகவும், உடலின் உள்ளே இருக்கும் பல்லி படிப்படியாக வான்ஸின் உடலை அரிப்பதாகவும் டாக்டர் டோஹெர்டி கூறினார். அதற்கு மாற்று மருந்தைத் தான் தயாரித்திருப்பதாகவும் அந்த இஞ்ஜெக்ஷனை இப்போது போடப் போவதாகவும் கூறினார். வான்ஸுக்கு இஞ்ஜெக்ஷன் போடப்பட்டது. என்ன ஆச்சரியம், கஷ்டப்பட்டு பச்சையான பல்லி ஒன்றை வான்ஸின் உடலிலிருந்து எடுத்த அவர் அதை வான்ஸ் தம்பதியினரிடம் காண்பித்து இனி மந்திரவாதியின் பல்லி ஒன்றும் செய்ய முடியாது என்று சந்தோஷத்துடன் உரக்கக் கூவினார்.

 placebo sugar

 

     வான்ஸ் அமைதியாக அன்று இரவு உறங்கினார். மறு நாள் காலையில் எழுந்த வான்ஸுக்கு ஒரே பசி. உடலில் வியாதியே இல்லை. சில நாட்களிலேயே பழையபடி ஆனார் வான்ஸ். டாக்டர் சொன்னது முழுப் பொய். பல்லியும் பொய், மாற்று மருந்தான இஞ்ஜெக்ஷனும் பொய், உடலில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறிய பச்சைப் பல்லியும் பொய். பெரிய டிராமாவை நன்குசெட்அப்செய்து போட்டிருந்தார் டாக்டர்.

    இந்த சம்பவத்தை வேறு நான்கு பேரும் உறுதி செய்த பின்னர் இது அந்த பிரபல விஞ்ஞான இதழில் வெளியிடப்பட்டது. வூடு என்னும் மந்திரவாத வித்தை இப்படித் தான் மனதளவில் ஒருவரை வாட்டி வதைத்துக் கொல்கிறது. இந்த விளைவைத் தான் நோசிபோ எபெக்ட் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

 

    ப்ளேசிபோ விளைவு சர்ஜரியைத் தவிர்க்கிறது. பருக்கள் மற்றும் தோல் மீது வரும் கட்டிகளைப் போக்க்குகிறது. காயங்களைக் குணப்படுத்துகிறது. இதற்கு மாறான நோசிபோ எபெக்ட் எதிரமறையான மனோசக்தியைத் தூண்டி விட்டு வாந்தி, காதில் இரைச்சல், பயம், நரம்புத் தளர்ச்சி, நினைவாற்றல் இழப்பு போன்றவற்றைத் தருகிறது.

     இன்னொரு ஆய்வில் இறக்கப் போகிறோம் என்று நினைத்தவர்களையும், வியாதியினால் இறக்க மாட்டோம், மீண்டு வீட்டுக்கு போவோம் என்பவர்களையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் இறக்கப் போகிறோம் என்று நம்பியவர்கள் இறந்தே போயினர்.

 

 

      இதய நோய் வந்து விட்டது என்று நம்பும் பெண்களுக்கு சாதாரண இதய நோய் உள்ளவர்களை விட நான்கு மடங்கு அதிகம் இறக்கும் அபாயம் ஏற்படுகிறது. சீரான இரத்த அழுத்தம் மற்றும் நல்ல உடல்நிலையைக் கொண்டிருந்தாலும் இறப்பதன் காரணம் எதிர்மறை மனோசக்தியாக தாங்கள் இறக்கப் போகிறோம் என்ற அவர்களது (அவ)நம்பிக்கையே இதற்குக் காரணம்!

 

     சாஸ் என்ற பெண் மருத்துவரின் சகோதரர் ஸ்டீவ். நுரையீரலில் கட்டி இருப்பதைக் கண்டு பிடித்த அவரது டாக்டர் தற்போது பயமில்லை என்றும் இன்னும் ஐந்து வருடங்கள் அவர் உயிர் வாழ்வார் என்றும் ஆறுதலாகக் கூறினார். ஸ்டீவ் டாக்டரை நம்பினார். சரியாக ஐந்து வருடங்கள் கழித்து ஒரு நாள் அவர் மாவி என்ற கடற்கரையில் நினைவின்றிக் கிடந்தார். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் நான்கு நிமிடங்கள் ஆக்ஸிஜன் மூளைக்குச் செல்லாமல் இருந்ததால் இறந்து போனார். அவரது நம்பிக்கையே அவரை ஐந்து வருடங்கள் உயிர் வாழ வைத்தது. அதுவே ஐந்து வருடங்கள் முடிந்தவுடன் அவரைவழி அனுப்பிவைத்தது.

 

 Placebo-Pills

    இப்படிநாள் குறித்துஆறுதல் சொல்லும் டாக்டர்கள் நோயாளிக்கு நல்லது செய்வதில்லை. பொதுவாக அவர்கள் தீங்கையே விளைவிக்கிறார்கள்.

    இன்ஸ்டிடியூட் ஆஃப் நோயடிக் ஸயின்ஸஸ் (The Institiute of Noetic Sciences) ஆராய்ந்து பதிவு செய்த 3500க்கும் மேற்பட்ட கேஸ்கள் கூறுவது ஒரே ஒரு உண்மையைத் தான்! தீர்க்க முடியாத வியாதி என்று ஒரு வியாதி உலகத்திலேயே இல்லை. ஆனால் நமக்கு இந்த வியாதி குணமாகாது என்று மனிதன் நம்பும் நம்பிக்கையே அவனது வியாதியைக் குணமாக்காது செய்து விடுகின்றது.

 

 

டாக்டர் லிஸா ரான்கின் என்பவர் மைண்ட் ஓவர் மெடிசின்: ஸயிண்டிஃபிக் ப்ரூஃப் தட் யூ கேன் ஹீல் யுவர்செல்ஃப் (Mind Over Medicine: Scientific Proof That You Can Heal Yourself – Dr Lissa Rankin) என்ற தனது நூலில் மனத்தின் ஆதிக்கம் உடலில் அதிகம் உண்டு; அது தீராத வியாதிகளையும் தீர்த்து வைக்கும். நம்புங்கள், குணப்படுவீர்கள் என்கிறார்.

 

ஆக ப்ளேசிபோ எபெக்ட் மற்றும் நோசிபோ எபெக்ட் பற்றி அறிந்து கொண்டோர் தெரிந்து கொள்ளும் ஒரு அறிவியல் உண்மைமனோசக்தி மூலம் ஒருவர் சீரான உடல்நலத்தைப் பெற்று ஆக்கபூர்வமாக முன்னேறலாம் என்பதையே!

 

நன்றி : பாக்யா 4-9-2015 பாக்யா இதழில் வெளி வந்த கட்டுரை

(Written by my brother for “Bhagya”, a Tamil Magazine:London swaminathan;pictures are used from various sites;thanks)

மனோசக்தியின் வலிமை! -1

Placebo

Written by S.NAGARAJAN

Date : 3 September  2015

Post No. 2119

Time uploaded in London : 5-58 am

 

.நாகராஜன்

 

மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!…. 

 இத்தனை நாட்போல் இனியும் நின் இன்பமே                                        

விரும்புவன், நின்னை மேம்படுத்திடவே                                        

முயற்சிகள் புரிவேன்….”  – மகாகவி பாரதியார்     

                                            

      இடைவிடாமல் விஞ்ஞானிகளில் பலர் ஆர்வமுடன் ஆராய்ச்சி செய்யும் ஒரு துறை மனோசக்தியின் வலிமை பற்றியது! அவர்களே எதிர்பார்க்காத பிரமிப்பூட்டும் முடிவுகளை அவர்களின் ஆராய்ச்சிகள் தந்துள்ளன.

 

இந்த மனோசக்தி ஆராய்ச்சிகளில் ஒன்று ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) என்பது.

ப்ளேசிபோ என்றால் என்ன? ஆறுதல் மருந்து என்று தமிழில் கூறலாம். ஒரு நோயாளிக்கு மருத்துவர் ஒருவர் வியாதி ஒன்றுக்கு உரிய அபூர்வ மாத்திரை அல்லது மருந்தைத் தருவதாகச் சொல்லி விட்டு அவருக்கு சாதாரண மாத்திரை ஒன்றைத் தருவார், ஆனால் அதன் நல்ல விளைவுகளோ நோயாளியிடம் அபாரமாக இருக்கும். இது தான் ப்ளேசிபோ எபெக்ட்!

 

பெயரளவில் மாத்திரையாக இருக்கும் ஒன்று உடல் ரீதியாக நோயாளி ஒருவரிடம் அபூர்வ விளைவை ஏற்படுத்த முடியுமா? தர்க்க ரீதியாக நிச்சயம் முடியாது என்று சொல்லி விட்டாலும் சோதனை செய்து பார்த்ததில் பல நோயாளிகள் நன்கு குணமடைந்து மருத்துவர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

இதன் காரணம் மிக்க எளிமையான ஒன்று! நோயாளி அந்த மாத்திரை தன் உடலில் அற்புதமாக வேலை செய்கிறது என்று நினைப்பதனாலேயே அவர் குணமாகிறார்!

 

இதை நிரூபிக்கும் விதத்தில் நூற்றுக் கணக்கான சோதனைகள் உலகளாவிய விதத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டுள்ளன.

இந்த ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) பற்றி வேடிக்கையான சோதனை ஒன்றை பிரின்ஸ்டன் பல்கலைக் கழக மாணவர்களில் சிலர் செய்து பார்த்தனர்.

 

தங்கள் வகுப்புத் தோழர்களை அழைத்துவிசேஷமான பார்ட்டிஒன்றை அவர்கள் தந்தனர். பார்ட்டி என்றாலே மதுபானம் உண்டல்லவா? அனைவரும் மனம் மகிழ்ந்து அதில் கலந்து கொண்டனர்.

 

 

வழக்கமான பீரில் 5% ஆல்கஹால் இருக்கும். இவர்கள் கொடுத்த பானத்திலோ வெறும் 0.4% ஆல்கஹால் தான்பெயருக்குஇருந்தது. இந்தக் குறைந்த அளவு பானத்தை மதுபான வகையிலேயே சேர்க்க முடியாது. ஆனால் நடந்தது என்ன?

 

இதைக் குடித்த தோழர்கள் வழக்கமான பானத்தை அருந்தியிருப்பதாக நினைத்தனர். ஆட்டமும் பாட்டமுமாக வழக்கமான பீர் பார்ட்டியின் ஆர்ப்பாட்டத்திற்கும் அதிகமாக அவர்களின் நடத்தை அமைந்தது.

 placebo-effect-drug-company

இந்த முடிவால் பதறிப் போன உலகின் பெரும் மருந்துக் கம்பெனிகள் நரம்பு மண்டலத்தில் ப்ளேசிபோ எந்த வித விளைவை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டி ஆராய ஆரம்பித்து விட்டன!

 

வெறும் சர்க்கரைக் கட்டிகள் பெரிய வேலையைச் செய்தால் அவர்கள் கம்பெனிகள் திவாலாகி விடுமே! உலகின் எண்ணெய் கம்பெனிகளை விட அதிகமாக விற்பனை செய்து லாபம் ஈட்டும் மருந்துக் கம்பெனிகள் பதறுவதில் வியப்பே இல்லை!

 

 

சக் பார்க் என்பவர் ஒரு மென்பொருள் வடிவமைப்பாளர். மனவிரக்தியால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த அவரால் வேலை செய்யவே முடியவில்லை. அவரிடம் மருத்துவர், “இதோ இது ஒரு சர்க்கரைக் கட்டி தான். சாப்பிடுங்கள் பலன் அளிக்கும்என்று வேடிக்கையாகக் கூறியவாறே ஒரு ப்ளேசிபோ மாத்திரையைத் தந்தார்.

 

ஆனால் அதைச் சாப்பிட்ட சக் பார்க்கோ, ‘மருத்துவர் விளையாட்டாக ஏதோ கூறுகிறார், தான் சாப்பிட்ட மாத்திரை சிறந்த ஒன்று’, என்று நினைத்தார்.

 

விளைவு, அவர் மனச் சோர்வு போயே போனது! “நீங்கள் உண்மையிலேயே சர்க்கரைக் கட்டியைத் தான் சாப்பிட்டீர்கள்என்று அவரிடம் கூறிய போது அவர் வியந்தே போனார்!

 

 

பாஸிடிவ் திங்கிங் வேலை செய்யும் என்பதை புன்முறுவல் பூத்து மருத்துவர்கள் எள்ளி நகையாடுவது வழக்கம். ஆனால் பல சோதனைகள் நோயாளிகளைக் குணமாக்கியதைக் கண்டவுடன் அவர்கள் PET ஸ்கானர்கள், எம் ஆர் ஆகியவற்றின் மூலமாக இந்த சிகிச்சை முறையை ஆராய ஆரம்பித்தனர். சமீபத்திய ஆய்வு முடிவுகள் ப்ளேசிபோ மாத்திரையைச் சாப்பிட்ட ஒருவரின் மூளை அதிகமான டோபமைனைச் (Dopamine) சுரக்கிறது என்று கண்டுபிடித்துள்ளன. நோயாளிகள் ப்ளேசிபோ மாத்திரையை எடுத்துக் கொண்ட போது சரியான மாத்திரையைத் தாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டவுடன் இந்த அபூர்வ விளைவு ஏற்படுகிறது!

 

இதனால் சரியான மாத்திரை உண்மையில் என்ன விளைவை எப்போது ஏற்படுத்தும் என்பதை ஆராய்வதும் விஞ்ஞானிகளின் கடமையாக ஆகி விட்டது.

மனோசக்தி உடலின் மீது பெரிய ஒரு வலுவான ஆதிக்கத்தைச் செலுத்துகிறது என்பதையே ப்ளேசிபோ சோதனை நிரூபிக்கிறது.

 

 

கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் டார் வேகர் (Tor Wager), “ப்ளேசிபோ மூளையில் பல செய்முறைகளைத் தூண்டி உடலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதை விளக்க ஒரு உதாரணத்தைக் கூறலாம். இரவு நேரத்தில் வாசலில் திடீரென ஒரு நிழலுருவம் தோன்றுகிறது. உடனே உங்கள் விழிகள் விரிகின்றன. உடல் எச்சரிக்கை நிலையை அடைகிறது; உடம்பெல்லாம் வியர்க்கிறது. ஆனால் கூர்ந்து கவனித்த மறு நிமிடம் அது உங்கள் கணவர் தான் என்று தெரிந்தவுடன் அரை வினாடியில் மகிழ்ச்சி மேலோங்கி உடல் பூரித்து பயம் போயே போய் விடுகிறது! நம்பிக்கை மாறியவுடன் உணர்ச்சிகள் மாறுகின்றன. ஆனால் இப்போது எதிர் கொள்ள வேண்டிய விஷயம் எப்படி இந்த அபூர்வமான வலிமை வாய்ந்தநம்பிக்கை மாற்றத்தைஏற்படுத்துவது என்பது தான்!” என்று விளக்கமாக இது பற்றி இப்படிக் கூறினார்!

 

 

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் தன்னார்வத் தொண்டர்களிடம் ஒரு விநோதமான சோதனை நடத்தப்பட்டது. லாரா டிப்பிட்ஸ் என்ற பெண்மணிக்கு வலது தோளிலும் கையிலும் தாங்கமுடியாத வலி. அவரை தானே நேரில் ப்ரெய்ன் வேவ்களை ஸ்கானரில் பார்க்க ஏற்பாடு செய்தனர். வலி தசைகளில் இல்லை அல்லது காயம் அடைந்த கையில் இல்லை. அது மூளையில் இருக்கிறதுஎன்றார் அந்தப் பெண்மணி! “ஒரு சிக்னல் காயப்பட்ட இடத்திலிருந்து கிளம்பி மூளைக்குச் செல்கிறது. அதை மூளை வலி என்றுஎடுத்துக் கூறுகிறது”! என்கிறார் அவருடைய மருத்துவர்.

எந்த விதமான எண்ணம் வலியை உண்டாக்குகிறது, எது வலியை நீக்குகிறது என்பதையும் அவர்  ஆராய ஆரம்பித்தார். மனச் சித்திரங்கள் ஓரளவு நல்ல பலனைத் தருகின்றன என்பது அவரது கண்டுபிடிப்பு.

 

 

ஸ்கானரில் வலி ஏற்படும் மூளைப் பகுதிகளைப் பார்த்து நம்மால் கண்ட்ரோல் செய்ய முடியும் என்று நினைக்கும் போதே பாதி வலி போய் விடுகிறது. இது அதிசயமாக இருக்கிறதுஎன்றார் லாரா.

ஆக அறிவியல் சோதனைகளின் முடிவுகளால் மருத்துவர்களும் கூட மனோசக்தி  உடலின் மீது வலுவான நல்ல ஆதிக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு என்று கூற ஆரம்பித்துவிட்டனர். அதாவது MIND OVER BODY என்பது நிரூபணமாகி வருகிறது!

ஆறுதல் மருந்தான ப்ளேசிபோ அற்புத மருந்தாக அமைவது மனோசக்தியின் மூலமாகத் தான்!

 

நன்றி : பாக்யா 28-8-2015 பாக்யா இதழில் வெளி வந்த கட்டுரை

written by my brother S Nagarajan for Bhagya magazine.

 

வேத,உபநிஷத்துகளில் கனவுகள்

Sleep-training

Article No. 2047

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 6  August  2015

Time uploaded in London : –10- 41

(I am giving below the summary of my English article already published here)

முன் காலத்தில் கனவுகள், உறக்கம் ஆகிய இரண்டின் முக்கியத்துவத்தை அறிந்தது இந்துக்கள் மட்டுமே. தினமும் சிவன் கோவிலில் சிவனுக்குக் காலையில் அபிஷேகம் செய்கையில் ருத்ரம்-சமகம் என்ற யஜூர் வேத மந்திரத்தைச் சொல்லி அபிஷேகம் செய்வார்கள். இதில்தான் சைவர்களின் தாரக மந்திரமான ஓம் நமசிவாய – என்ற சம்ஸ்கிருத மந்திரம் முதல் முதலில் வருகிறது. சமகம் என்னும் பகுதியில் மனிதனுக்கு வேண்டிய எல்லாப் பொருட்களையும் பட்டியலிட்டுள்ளனர் வேத கால ரிஷி முனிவர்கள். அதில் ‘சயனம் ச மே’, ‘சுதினம் ச மே’ என்று வேண்டுவர். நல்ல தூக்கமும் விடிந்தவுடன் நல்ல நாளும் எனக்குக் கொடு — என்று இதன் பொருள்.

இந்த “சுதினம்” ச மே என்பதை ஆஸ்திரேலியர்கள் இன்றும் ஒருவரை ஒருவர் பார்க்கையில் Good Day “குட் டே” என்று வாழ்த்துகின்றனர். பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக ஐயர்கள் சொல்லும் மந்திரத்தில் உள்ள குட் நைட் Good Night, குட் ஸ்லீப் Good Sleep/Sweet Dreams, குட் டே Good Day – என்பன இன்றும் பயன்படுகின்றன!!!

உலகின் பழைய புத்தகமான ரிக் வேதத்தில் தூக்கம், கனவுகள் பற்றி நிறைய குறிப்புகள் உண்டு. கனவுகளின் பொருள் என்ன (Dream Interpretation) என்ற ஆராய்ச்சியும் வேத காலத்திலேயே  துவங்கிவிட்டது. ரிக் வேத காலத்துக்குப் பின்னர் வந்த எகிப்திய, சுமேரிய ஹைரோகிளிபிக்ஸ், க்யூனிfஆர்ம் எழுத்துக்களிலும் கனவுகள் பற்றி எழுதி வைத்துள்ளனர். அவர்களும் நம்மைப் போன்றே பல விஷயங்களை நம்பினர்.

(படங்கள் : தூங்கும்  அழகி என்ற  கதையின் படங்கள்)

ரிக் வேதத்தில் மரணத்தை முன் அறிவிக்கும் கனவுகள் பற்றிச் சொல்லப் பட்டிருப்பதாவது (2-28-10; 10-162-6):

கழுத்தைச் சுற்றி துணி/ ஆடை கட்டுவதைப் போலவோ, மாலை போடுவது போலவோ கனவு காண்பது தீய நிமித்தம் ஆகும்

ரிக் வேத ஆரண்யகப் பகுதியான ஐதரேய ஆரண்யகத்தில் (3-2-4) ஒரு நீண்ட பட்டியல் உள்ளது:

1.கறுப்பு நிற மனிதன் கறுப்புப் பற்களால் கடித்துக் கொல்லுவது போல வரும் கனவு

2.காட்டுப் பன்றி நம்மைக் கொல்வது போல

3.காட்டுப் பூனை நம் மீது பாய்வது போல

4.தங்கத்தை சாப்பிட்டுவிட்டு துப்புவது போல

  1. தேனைக் குடித்துவிட்டு தாமரைக் கிழங்கைச் சாப்பிடுவது போல

6.தெற்கு நோக்கி கருப்புப் பசுவை ஓட்டிக் கொண்டுபோவது போல

7.வெட்டிவேர், இலாமிச்சைச் செடி மாலை போடுவது போல கனவு காணக் கூடாது

(ஏசு கிறிஸ்து இறப்பதற்கு முன்னரும் இத்தகைய மாலையை ஒருவர் அவருக்கு வலியச் சென்று சூட்டியதாக பைபிள் கூறும்)

மேற்கூறிய விஷயங்கள் உண்மையா, பொய்யா, அல்லது அதன்மூலம் வேறு ஏதாவது சொல்ல விரும்பினரா என்ற ஆராய்ச்சியில் புகாமல், கனவுகளை அவர்கள் எவ்வளவு முக்கியமாகக் கருதினர் என்று தெரிந்து கொண்டால் போதும்.

மாண்டூக்ய உபநிஷத்தில் கனவுகள் பற்றி வருகிறது. ஆதி சங்கரர் தனது விவேக சூடாமணி முதலிய நூல்களில் கனவு நிலை, விழிப்பு நிலை, தூங்கும் நிலை, துரீய நிலை (நாலாவது நிலை) என்பன பற்றி விளக்குகிறார். ஆனால் இங்கெல்லாம் தத்துவ விஷயங்களை விளக்க கனவுகளைப் பயன்படுத்துகின்றனர்; அறிவியல் விளக்கத்துக்கு அல்ல.

அதர்வண வேதம், சதபத பிராமணம், வாஜசநேயி சம்ஹிதை ஆகியவற்றிலும் பல குறிப்புகள் உள.

பிற்கால சம்ஸ்கிருத இலக்கியங்களில் சுப கனவுகள் பற்றி விளக்கப்படுகின்றன. புத்தரையும் மஹாவீரரையும் பெற்றெடுக்கு முன் அவர்களுடைய தாய்மார்கள் கண்ட கனவுகள், வடமொழி நாடக கதாநாயகிகள் கண்ட கனவுகள் இதற்கு எடுத்துக் காட்டுகள்.

கனவு விளக்க நூல் ஒன்றை பிருஹஸ்பதி (வியாழ பகவான் எழுதினார். தமிழ் கலைக் களஞ்சியமான அபிதான சிந்தாமணியில் ஏழு பக்கங்களுக்கு இவற்றின் சுருக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தீய கனவுகளைத் தவிர்ப்பதற்கான ஸ்லோகங்களும் இருக்கின்றன. பிராமணர்கள் தினமும் மும்முறை செய்யும் சந்தியா வந்தனத்தின் கடைசி மந்திரம் தீய கனவுகள் வர்க்கூடாது என்று வேண்டும் மந்திரமாகும்.

வெளிநாட்டுக்காரர்கள் தற்காத்தில்தான், ‘ஒருவரும் கனவு காணாமல் தூங்க முடியாது’ (ராபிட் ஐ மூவ்மென் ட்) என்றெல்லாம்    எழுதிவைத்தனர். நாமோ இதை அபோழுதே அறிந்து தினமும் மூன்று முறை துஸ்வப்பனத்தை அகற்ற வேண்டும் என்ற மந்திரத்தை தினசரிச் சடங்கில் சேர்த்து வைத்திருக்கிறோம்!

Sleeping-Beauty

My previous Research Articles on Dreams:

Role of Dreams in Tamil Saivite Literature (posted on July 4, 2013)

Do our Dreams have Meaning? (Posted on December 29, 2011)

God’s Note Book (posted on March 16, 2014)

Strange Dreams, posted on 27 July 2015Inauspicious Dreams: Dreams in Vedas and Upanishads, Posted on 28th July 2015

Vedic Echo in Sumerian and Egyptian Concept of Dreams, Posted 31 July 2015

விநோதக் கனவுகள், ஆகஸ்ட் 4, 2015

சிவனை நோக்கி கனவில் நடந்த கிருஷ்ணார்ஜுனப் பயணம் (பிப்ரவரி 4, 2015)

வித்தியாசமான விஞ்ஞானி யுங்

ஐன்ஸ்டீன் ‘காப்பி’ அடித்தாரா?

india eistein

Article No.2024

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 28  July 2014

Time uploaded in London : 10-16 am

இயற்பியலில் (பௌதீகம்) மிகவும் முக்கியமான சார்பியல் கோட்பாட்டைக் (Theory of Relativity) கண்டுபிடித்து வெளியிட்டவர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன் (ஜெர்மன் மொழியில் அவருடைய பெயர் ‘ஒரு கல்’. ஐன் = ஒன்று, ஸ்டைன்=கல்/ஸ்டோன்.

இவருக்கு இப்பேற்பட்ட ஒரு கொள்கை மனதில் உதித்தது எப்படி? இந்து மதத்தின் தாக்கம் காரணமா?

எதையும் ஒருவர் கண்டுபிடித்தபின்னர் “எங்களுக்கு அன்றே தெரியும் இது” – என்று சொந்தம் கொண்டாடுவது நியாயம் இல்லைதான். இருந்த போதிலும் காரண காரியங்களை ஆராய்வதில் தவறே இல்லை.

காலம் (Concept of TIME) – என்பது பற்றி மேலை நாட்டினருக்கு, பழங் காலத்தில் கொஞ்சமும் விஞ்ஞான பூர்வ அணுகுமுறை கிடையாது.உலகமே கி.மு.4004–ல் தோன்றியது என்ற கிறிஸ்தவ மதப் பிரசாரத்துக்கு ஏற்றபடி எல்லாவற்றையும் எழுதிவந்தனர்.

நாமோ உலகம் வியக்கும் கொள்கைகளைப் புராணத்தில் எழுதி வைத்தோம். ‘த்ரிகால ஞானிகள்’ என்பவர்கள் முக்காலத்தையும் பார்க்க வல்லவர்கள் என்று எடுத்துக் காட்டுகளுடன் காட்டினோம். ஒருவன் மலை உச்சியில் ஏறி நின்றுகொண்டு ஓடும் ஒரு நதியைப் பார்த்தால், எப்படி ஆற்றில் “சென்ற” தண்ணீர், “செல்லுகின்ற” தண்ணீர், “செல்லப்போகின்ற” தண்ணீர் ஆகிய மூன்றையும் பார்ப்பானோ அது போல, முனிவர்கள் காணமுடியும் என்று உணர்த்தினோம். ஆனால் நதிக்கரையில் நிற்பவனுக்கு “அப்பொழுது ஓடும் தண்ணீர்” (நிகழ்காலம் Present ) மட்டுமே தெரியும். இதே போல நாம் எப்படி டேப்ரிகார்டரில் அல்லது வீடியோ ரிகார்டரில் “பாஸ்ட் Fஆர்வர்ட்” Fast forward, “ரீவைண்ட் Rewind” செய்து எப்படி பார்க்கிறோமோ அது போல் சந்யாசிகளும் காலம் என்னும் விஷயத்தில் செய்ய முடியும் – என்றும் சொல்லிக் கொடுத்தோம்.

albert-ajnstajn-velika

பகவத் கீதையில் விஸ்வரூப தரிசனம் என்னும் அத்தியாயம் இதை மெய்ப்பிக்கிறது. நிகழப் போகும் நிகழ்ச்சிகளை அர்ஜுனனுக்கு முன்கூட்டியே காட்டிவிடுகிறான் கண்ணபிரான். இப்பொழுது கருந்துளைகள் (BLACKHOLE பிளாக் ஹோல்), ஜோடியான பிரபஞ்சம் ( PARALLEL UNIVERSE பாரல்லல் யுனிவெர்ஸ்) என்னும் விஷயங்கள் பற்றி வியப்பான செய்திகள் வெளியாகி வருகின்றன. பகவத் கீதை விஸ்வரூப தர்சன யோகம் இவைகளை எல்லாம் விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது. பிளாக் ஹோலில் மஹத்தான வேகத்தில் எல்லாப் பொருட்களும் உள்ளே இழுகப்பட்டு மாயமாய் மறைவது போல விஸ்வரூபத்தின் வாயில் படைகள் அனைத்தும் மஹத்தான வேகத்தில் நுழைந்து மறைகின்றன.

இப்படி பகவத் கீதைக்கும், பிளாக் ஹோலுக்கும் முடிச்சுப் போடுவது, அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் முடிச்சுப்போடுவது போலத் தோன்றலாம் அல்லது கோகுலாஷ்டமிக்கும் குலாம்காதருக்கும் முடிச்சுப்போடுவது போலத் தோன்றலாம். அது சரியல்ல. நான் தான் இப்படி முதலில் செய்வதாக நினைக்காதீர்கள். முதல் அணுகுண்டு வெடித்தைப் பார்த்தவுடன் அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படும் ராபர்ட் ஓப்பன்ஹைமரும் பகவத் கீதை ஸ்லோகத்தைச் சொல்லி வியந்தார் (ROBERT OPPENHEIMER, Theoretical Physicist); அந்த ஸ்லோகம் இதோ…….

“வானத்தில் ஆயிரம் சூரியன்களின் பிரகாசம் ஒரே நேரத்தில் நேரத்தில் உதிக்குமானால் எவ்வளவு பிரகாசம் இருக்குமோ அவ்வளவு பிரகசத்தில் விஸ்வரூபம் தோன்றியது” (கீதை 11-12)

திவி சூர்ய சஹஸ்ரஸ்ய பவேத் யுகபதுத்திதா

யதி பா: ஸத்ருசீ ஸா ஸ்யாத் பாஸஸ் –தஸ்ய மஹாத்.

இப்பொழுது ஐன்ஸ்டீன் – இந்துமத நூல்கள் தொடர்பு  பற்றிய இரண்டு தடயங்களைக் காண்போம்:

usa e=mc2

தடயம் 1

ரவீந்திரநாத் தாகூர் உள்பட பல இந்துமதக் கவிஞர்களையும் அறிஞர்களையும் ஐன்ஸ்டீன் சந்தித்து அளவளாவியிருக்கிறார். அவருடைய நூல்நிலையத்தில் ப்ரம்ம ஞான சபையினர் வெளியிட்ட ‘தி ஸீக்ரெட் டாக்ட்ரைன்’ (The Secret Doctrine by Theosophical Society) என்னும் புத்தகம் இருந்தது. இது இந்துமத நூல்களை அவர் விரும்பிப் படிக்கும் பழக்கத்தைக் காட்டுகிறது. ஆனால் இதில் சார்பியல் கோட்பாட்டுக்கான மூலம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தபோதிலும் நமது நூல்களைப் படித்தால் சார்பியல் கொள்கையை உருவாக்கத் தேவைப்பட்ட Lateral Thinking “லேடரல் திங்கிங்”- ‘பன்முக சிந்தனை’ கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

தடயம் 2

பெரியோர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள் என்ற பழைய ஆங்கில நூல் ஒன்றில் ஐன்ஸ்டீன் சொன்னதாக உள்ள கதை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட, உலகிலேயே மிகப்பெரிய கதைத் தொகுப்பான கதாசரித் சாகரத்தில் இருக்கிறது. ஆக ஐன்ஸ்டீனுக்கு நம்முடைய சம்ஸ்கிருத நூல்கள் அத்துபடி என்பது இதிலிருந்து உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும். இதோ அந்தக் கதையை ஐன்ஸ்டீன் பயன்படுத்தும் ஒரு சுவையான நிகழ்வு:-

ஐன்ஸ்ட்டினை விருந்துக்கு அழைத்த ஒருபெண்மணி, ‘சார்பியல் கோட்பாட்டை’ விளக்கும் படி ஐன்ஸ்டீனை கேட்டுகொண்டார். உடனே ஐன்ஸ்டீன் சொன்னார்:

“பெண்ணே! நான் ஒரு நாள், கண் தெரியாத ஒரு நண்பருடன் கடும் வெய்யிலில் நடந்து கொண்டிருந்தேன். எனக்கு கொஞ்சம் குடிப்பதற்குப் பால் வேண்டுமே – என்றேன்.

அந்தக் குருடர் கேட்டார்: பாலா, அப்படியானால் என்ன?

அதான், வெள்ளை நிற திரவம்.

திரவம் எனக்குத் தெரியும். ஆனால் வெள்ளை என்றால் என்ன?

அதுதான்; கொக்கு என்னும் பறவையின் சிறகுகளின் நிறம்.

ஓ, கொக்கின் இறகுகள் எனக்குத் தெரியும். ஆனால் கொக்கு எப்படி இருக்கும்?

அதுதான், வளைந்த கழுத்துள்ள பறவை – என்றேன்.

கழுத்து எனக்குத் தெரியும். ஆனால் வளைந்த என்றால் புரியவில்லையே என்றார் அந்த அந்தகர்.

உங்கள் கைகளைக் கொடுங்கள் என்று சொல்லி, ஒரு கையை நன்கு நீட்டினேன். இதுதான் ‘நீட்ட வாக்கு’ என்று சொல்லிவிட்டு அவர் கையைக் கொஞ்சம் முறுக்கியும் மடக்கியும் வளைத்துக் காட்டி இப்படித்தான் இருக்கும் கொக்கின் வளைந்த கழுத்து என்றேன்.

ஓ! எனக்கு பால் என்றால் என்ன என்று தெரிந்துவிட்டது என்றார் அந்த அந்தகர்.

eistein quote

(உலகிலுள்ள எல்லாக் கதைகளுக்கும் மூலம் சம்ஸ்கிருதத்திலுள்ள, கதாசரித் சாகரம் (கதைக்கடல்) தான். இதிலிருந்தே அராபிய இரவுக் கதைகள் முதலியன வந்தன. பஞ்ச தந்திரக் கதைகள், வேதாளம்-விக்ரமாதித்தன் கதைகள், கதாசரித் சாகரம் (கதைக்கடல்) ஆகிய மூன்றும்தான் வெவ்வேறு உருவில் ‘காமிக்’ கதைப் புத்தகங்களாகவும் “ஹாரி பாட்டர்” கதைகளாகவும் வருகின்றன! சம்ஸ்கிருதம் படித்தோருக்கு எதுவுமே புதுமை இல்லை.

ஷேக்ஸ்பியரின் 37 நாடகங்களுக்கும் கூட சம்ஸ்கிருதக் கதைகளே மூலம். ஆனால், அவர் சம்ஸ்கிருதத்தைக் காப்பி அடித்தார் என்று நான் சொல்ல வரவில்லை. ஒரு மனிதன் எப்படியெல்லாம், எல்லா விஷயக்களைப் பற்றியும் சிந்திக்க முடியுமோ அவை அத்தனையையும் சம்ஸ்கிருதத்தில் முன்னமேயே எழுதிவிட்டனர். பின்னர் வந்தவர்கள் அதில் ஒன்றிரண்டு விஷயங்களைப் பயன்படுத்தி தங்களுடைய – சொந்த சரக்குகளையும்- கற்பனையையும்—சொற்சிலம்பத்தையும் சேர்த்துப் பயன்படுத்தி புகழ் எய்தினர் என்றால் தவறில்லை.

அடுத்த ஒரு கட்டுரையில் ஐன்ஸ்டீன் வாழ்வில் நடந்த சில சுவைமிகு சம்பவங்களைத் தருவேன்.

–சுபம்—

பிராம்மணோ போஜன ப்ரிய:

ilai

Article No.1977

Date: 6 July 2015

Written by London swaminathan

Uploaded from London at காலை 7-56

 

திருடாதே! பாப்பா! திருடாதே!

இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள்: மற்றவர்கள் எழுதுவதை, எழுதியவர் பெயரை வெட்டிவிட்டு, வெளியிடாதீர்கள். நீங்கள் இப்படிச் செய்தால், அதாவது திருடினால் — உங்கள் கணவரோ, மனைவியோ, மகனோ, மகளோ, அம்மாவோ, அப்பாவோ உங்களை ஏமாற்ற நீண்ட நேரம் பிடிக்காது. மேலும் தமிழும் அழியும்; தமிழ்த் தாயும் உங்களை அழிப்பாள். ஆகையால் திருடுவதை நிறுத்துங்கள். யார் எழுதினரோ அவர்தம் பெயருடன் வெளியிடுக!

Xxxxxxx

பிராம்மணோ போஜன ப்ரியஹ

“பிராமணர்கள் சாப்பாட்டு ராமன்கள்” —  என்று இதற்குப் பலரும் பொருள் சொல்லுவர். அது தவறு.

இப்படியும் படிக்கலாம்:—

பிராம்மண! “போ” ஜனப்ரியஹ

ஹே! பிராம்மண! நீ மக்களுக்குப் பிரியமானவன்

இதுவும் வேடிக்கையாகச் சொல்வதுதான். உண்மைப் பொருள் என்ன வென்றால்:

Idli Parade

விஷ்ணு அலங்காரப் பிரியன்

சிவன் அபிஷேகப் பிரியன்

சூரியன் நமஸ்காரப் பிரியன்

தேவி பிரதக்ஷிணப் பிரியள்

பிராம்மண: போஜனப் பிரியன்

அதாவது விஷ்ணுவை அலங்காரம் செய்து மகிழ்வித்தால் உனக்கு கேட்டதையெல்லாம் தருவான்.

சிவனை அபிஷேகம் செய்து மகிழ்வித்தால் உனக்கு கேட்டதையெல்லாம் தருவான்.

சூரியனை நமஸ்காரம் செய்து மகிழ்வித்தால் உனக்கு (ஆரோக்கியம் தொடர்பாகக்) கேட்டதையெல்லாம் தருவான்.

தேவியைப் பிரதக்ஷிணம் (வலம் வந்து) செய்து மகிழ்வித்தால் உனக்கு கேட்டதையெல்லாம் தருவாள்.

பிராமணனுக்கு அன்னம் படைத்து மகிழ்வித்தால் உனக்கு பரிபூர்ண ஆசீர்வாதம்  (கேட்டதையெல்லாம்) தருவான்.

துஷ்யந்தி போஜனே விப்ரா: – சாணக்ய நீதி தர்பணம்

“பிராமணர்கள் சாப்பாட்டில் சந்தோஷம் அடைவர்” – என்று வேறு ஒரு நூலும் கூறுவது இதே பொருளில்தான்.

அதே போல சூரியனே மனிதர்களின் ஆரோகியத்துக்கு அதிபதி. (கட்டுரையின் இறுதிப் பகுதியில் இது விளக்கப்பட்டுள்ளது)

தமிழில் சொல் விளையாட்டு!

தமிழிலும் இது போல வார்த்தா ஜாலம் (சொற் பிறட்டு)  உண்டு:——

பிராமாணர்கள் சாப்பிடும்  இடம்.

பிராமணர் “கள்” சாப்பிடும் இடம்! – என்பது போல.

இதுவும் வேடிக்கையாகச் சொல்லுவதே!

கணவன் கெஞ்சிக் கேட்டால் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் பெண்:

1.தெய்வம் தொழாள் கொழுநன் தொழுது எழுவாள் (கடவுளைக் கும்பிட மாட்டாள், கணவன் வந்து கெஞ்சிய பின்னரே எழுவாள்)

2.தெய்வம் தொழாள் கொழுநன் தொழுது எழுவாள் (தெய்வத்தைக் கும்பிட மாட்டாள், கணவனைக் கும்பிட்டு எழுவாள்)- குறள் 55

இரண்டும் தமிழ் இலக்கணப்படி சரியே!!! (மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், எங்கள் குருநாதர் வி.ஜி.சீனிவாசன் சொன்னது)

என் தலைவி  திவசம் (என் மனைவிக்கு இன்று திதி)

என் தலை “விதி”  வசம் (எல்லாம் என் தலை விதி )

எனது பள்ளி — மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி — தமிழாசிரியர் ம.க. சிவசுப்பிரமணியம் சொன்னது)

surya darsanam

லண்டன் சந்துரு குருக்கள், அவருடைய மகனுடன் செய்யும் சூரிய வழிபாடு

லண்டனில் வைட்டமின் “டி” கிடைக்காது !!

ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத் – பூஜாப்ரகாச:

அதாவது “சூரியனிடம் ஆரோக்கியத்தைக் கேள்” – என்பது இந்தப் பொன் மொழியின் பொருள்.

இந்தியாவில் வசிப்போருக்கு சூரிய ஒளி இயற்கையாகவே கிடைப்பதால், இதன் அருமை பெருமை தெரிவதில்லை. வைட்டமின் – டி – என்னும் முக்கியச் சத்தை இது கொடுக்கிறது. அந்தக் காலத்தில் இந்துக்களுக்கு சிறு வயது முதல் சூரிய நமஸ்காரத்தைக் கற்றுக் கொடுத்தனர். இப்பொழுது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மூலமக இது மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது.

எங்கள் லண்டனில் இப்பொழுது எல்லோருக்கும் – டாக்டரிடம் அடிக்கடி போகும் எல்லோருக்கும் –– குறிப்பாக கிழக்கு லண்டனில் முஸ்லீம் பெண்கள் எல்லோருக்கும் – வைட்டமின் “டி” கொடுக்கின்றனர். இது கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் நடை பெற்ற  ஆராய்ச்சியில் குறைந்த சூரிய வெளிச்சமுள்ள மேலை நாடுகளில் இதுதான் உடல்நலப் பிரச்சனைகளுக்கு மூல காரணம் என்று தெரிந்தவுடன் அரசாங்கமே எல்லோருக்கும் – குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு  — இதை இலவசமாக வழங்க உத்தரவிட்டுள்ளது. யார் ரத்த பரிசோதனைக்குப் போனாலும் இதற்கான சோதனையும் செய்யப்படுகிறது. மற்ற எந்த சமூகத்தின ரையும்விட உடல் முழுவதையும் போர்த்திக் கொள்ளும் முஸ்லீம்களுக்கு வைட்டமின் டி  – இன்னும் மிகவும் குறைவாக இருக்கிறது!

நான் முதல் பத்தியில் “சூர்யன் நமஸ்காரப் ப்ரியன்” என்று சொன்னதற்கு இதுவும் ஆதாரமாகும். சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்!

நூறாண்டுக் காலம் வாழ்க!

நோய் நொடியில்லாமல் வாழ்க!

 

பிராமணர்கள் நாள்தோறும் மதிய நேரத்தில் செய்யும் சந்தியா வந்தன வழிபாட்டில் ஒரு அருமையான துதி உள்ளது. அதை சினிமா பாட்டிலும் நூறாண்டுக் காலம் வாழ்க! நோய் நொடியில்லாமல் வாழ்க! என்று மொழிபெயர்த்துள்ளனர்.

சூரியனைப் பாதுகாப்பாகப் பார்க்க பிராமணச் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே கற்றுத் தருவர்.

சூரியனை நோக்கிச் சொல்லப்படும் இந்த துதி:

பஸ்யேம சரதஸ் சதம்: நூறு ஆண்டுகள் சூரியனைக் கண்டு வணங்குவோம்

ஜீவேம சரதஸ் சதம்: நூறு ஆண்டுகள் வாழ்வோம்

நந்தாம சரதஸ் சதம்: நூறு ஆண்டுகள் உறவினர்களுடம் கூடிக் குலவுவோம்

மோதாம சரதஸ் சதம்: நூறு ஆண்டுகள் மகிச்சியுடன் இருப்போம்

பவாம சரதஸ் சதம்: நூறு ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் இருப்போம்

ஸ்ருணுவாம சரதஸ் சதம்: நூறு ஆண்டுகள் இனியதையே கேட்போம்

ப்ரப்ரவாம சரதஸ் சதம்: நூறு ஆண்டுகள் இனியதையே பேசுவோம்

அஜீதாஸ்யாம சரதஸ் சதம்: நூறு ஆண்டுகள் வெற்றியுடன் வாழ்வோம் (தீமைகளை வெல்லுவோம்)

ஜ்யோக் ச சூர்யந் த்ருசே: இவ்வாறு சூரியனை அனுதினமும் காண்போமாக

–தைத்ரீய ஸம்ஹிதை & ஆரண்யகம்

எல்லோரும் வாழ்க! இன்பமே சூழ்க!!

இரத்த ஓட்டத்தைக் கண்டுபிடித்தவர் யார்?

heartrelatedproblems

Research paper No 1947

Written by London swaminathan

Date: 22 June 2015

Uploaded in London at 9-12 காலை

இது என்னப்பா? எப்போது பார்த்தாலும் பழங் கதைகளைப் பேசிக் கொண்டு இருக்கீறீர்கள்?  எதைக் கண்டுபிடித்தாலும் இது எங்கள் இந்து மதத்தில் அன்றே சொல்லி விட்டோம்!! என்று அங்கலாய்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். இப்படி கதைத்துக் கதைத்து என்னதைக் கண்டீர்கள்? உங்கள் இந்து மதம் மொபைல் போனைக் கண்டுபிடித்ததா? இன் டெர் நெட்டைக் கண்டு பிடித்ததா? எங்கே உங்கள் நூல்களில் ஆதாரம் காட்டுங்கள். அட! அது சரி, தொலைந்து போகட்டும்! இனி அடுத்த 25 ஆண்டுகளில் என்ன நடக்கப் போகிறது என்பதையாவது சொல்லித் தொலையுங்களேன் – என்று உங்களில் பலர் நினைக்கலாம். இந்துக்களின் எதிர் காலக் கண்டு பிடிப்புகள் என்ற தலைப்பில் நான் ஒரு வருடத்துக்கு முன்பாகவே ஆங்கிலத்தில் 2 கட்டுரைகளை எழுதிவிட்டேன். படியுங்கள். நிற்க.

இரத்த ஓட்டத்தைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி (கி.பி 1578- 1657) என்று நாம் எல்லோரும் பள்ளிக்கூடத்தில் படித்தோம். அது தவறு. இரத்த ஓட்டம், இருதயத்தின் பணி ஆகியவற்றைக் கண்டு பிடித்தது இந்தியர்களே என்பது இப்போதைய மொழி ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

சம்ஸ்கிருதத்தில் இதயத்தின் பெயர் ஹ்ருதயம். இதிலிருந்து “ஹார்ட்” என்ற ஆங்கிலச் சொல்லும் இருதயம் என்ற தமிழ்ச் சொல்லும் பிறந்தன. இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளும், ஐரோப்பாவிலுள்ள எல்லா பெரிய மொழிகளும் ஹ்ருதயம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் வடிவங்களையே பயன்படுத்துகின்றன. வேறு சொல் கிடையாது!!

ஹ்ரு — என்றால் உள்ளே இழு, த- என்றால் வெளியே கொடு, ய – என்றால் சுற்று. ஆக இந்துக்களுக்கு இந்த உடல் உறுப்பு இவ்வாறு ரத்தத்தை உள்ளே இழுத்து வெளியேற்றி சுழலச் செய்கிறது என்பது தெரிந்தே இப்படிப் பெயர் வைத்தனர். ஏனெனில் சம்ஸ்கிருதம் விஞ்ஞான ரீதியில் செம்மை செய்யப்பட்ட – பண்பட்ட மொழி. ஆகையால் எல்லா சொற்களும் 2700 ஆண்டுகளுக்கு முன், பாணீனி என்னும் மாமேதை பட்டியலிட்ட 2000 வேர்ச் சொற்களில் இருந்தே பிறக்கும். அகராதியே இல்லாமல் ஓரளவு அர்த்தத்தைப் புரிந்து கொண்டு விடலாம்.. எடுத்துக் காட்டாக மரங்களுக்குப் பல பெயர்கள் உண்டு. அதில் ஒரு பெயர் பாதபா: — அதாவது கால்களின் வழியே நீரைக் குடிக்கும் – என்பது பொருள். மரங்கள் கால்களின் / வேர்களின் – வழியே தண்ணீரை உறிஞ்சுகிறதல்லவா! ஆகவே இருதயம் என்பதற்குத் திடீரென்று புதுப் பொருள் கண்டு பிடித்துவிட்டதாக யாரும் குற்றம் சொல்ல முடியாது.சம்ஸ்கிருதத்தில் எல்லாச் சொற்களும் 2000 வினைச் சொற்களில் இருந்தே பிறந்தன.

இந்த விஞ்ஞான அணுகுமுறை அதர்வண வேதத்திலேயே இருக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முன் உருவானதாகக் கருதப்படும் தொல்காப்பியத்தில் உயிரினங்களை ஆறுவகையாகப் பிரித்துப் பாடியிருக்கிறார். ஆனால் அதற்கு குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தவரங்களைப் பலவகையாகப் பிரித்துப் பேசும் பாடலும் நோய்களைப் பலவகைப் படுத்தும் பாடல்களும் உள. இதே போல பிராணிகளையும் ஜராயுஜ, அண்டஜ, ஸ்வேதஜ, உத்பீஜ என்று நால்வகையாகப் பிரித்தனர். இன்று இவை எல்லாம் பயனற்றதாகத் தோன்றலாம் ஆயினும் அவர்களுடைய அறிவியல் சிந்தனைக்கு இவை எல்லாம் எடுத்துக் காட்டுகள் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை. அவர்கள் தோற்றுவித்த இந்த அறிவியல்- ஆய்வியல் நோக்கு உலகம் முழுதும் பரவி இன்று மேலை நாட்டிற்குக் குடியேறிவிட்டது!!

நான் 45 ஆண்டுகளுக்கு முன் பி.எஸ்சி. பாடனி (தாவரவியல்) வகுப்பில் சேர்ந்தபோது எனக்கு லின்னேயஸ் என்பவர் உருவாக்கிய தாவரப் பகுப்பு முறை கற்றுத் தரப்பட்டது. அதற்கு முன் கிரேக்கர்கள் இத்துறையில் சில ஆராய்ச்சிகளைச் செய்திருந்தனர். அதற்கும் முன்பாக நாம் ஆராய்ச்சி செய்தோம். மாற்றம் என்பது இயற்கை நியதி. உலகில் எல்லாம் மாறிக் கொண்டே இருக்கும். அந்த வகையில் நாம் விதைத்த அறிவியல் வித்து வளர்ந்து பலன் தருகிறது.

பாரத நாடு 700 ஆண்டு முஸ்லீம் ஆட்சியிலும் 300 ஆண்டு கிறிஸ்தவ ஆட்சியிலும் இருந்தபோது (“ஆயிரம் வருஷ அன்பிலா அந்நியர் ஆட்சி”—சுப்ரமண்ய பாரதி) நமது ஆய்வுகள் எல்லாம் முடங்கிப் போயின. நூலகம் எல்லாம் தீக்கிரையாக்கப்பட்டன. அதன் விளைவே வெளிநாட்டினர் நம்மை முந்திச் சென்றமைக்குக் காரணம். ஆனால் அந்த அறிவு மழுங்கி விடவில்லை என்பதற்கு ஒரு சான்று — இன்று உலகம் முழுதும் நம்முடைய டாக்டர்களும் கணித மேதைகளும் கம்ப்யூட்டர் வல்லுநர்களும் வேலை செய்வதாகும்.

 atharva-veda-8

அதர்வண வேத தகவல்கள்!

நான்கு வகையான தாவரங்கள் இருக்கின்றன. அவையாவன: வனஸ்பதி-பெரிய மரங்கள்; வானஸ்பத்ய – சிறிய மரங்கள்; வீருத்த – கொடிகளும் புதர்களும் ஓஷதி- மூலிகைகள்.

மூலிகைகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம் என்று கல்பம் கூறும்:ஆதர்வணீ- சாந்தி மற்றும் பௌஷ்டிக கர்மாக்களில் பயன்படுபவை,  , ஆங்கிரஸி- மயக்கம் கொடுக்கவும், ஆளைக் கொல்லவும் பயன்படும் தாவரங்கள், தைவி –மனிதர்களுக்கு நரை, மூப்பு, மரணம் வராமல் பாதுகாக்கும் மூலிகைகள், மனுஷ்யஜா- நோய் தீர்க்கும் மருந்துகள்.

கோணல் பார்வையும், காமாலைக் கண்களும்,மனத்தில் கருப்பும், மனைவி மீது கணவனுக்கே சந்தேகம் உண்டாக்கும் ஜோடனைகளில் வல்லவர்களுமான வெளிநாட்டுக்காரர்கள் நம்முடைய பங்கு பணியை எல்லாம் மட்டம் தட்டிவிட்டனர்.

அதர்வண வேதம் ஒன்பது வகையாக ஜுரம்—காய்ச்சல் பற்றியும் கூறுகிறது. இப்படி பிரித்துப் பார்த்ததே அவர்கள் இத்துறையில் எவ்வளவு காலம் ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும் என்பதைக் காட்டும்:

ரூர:, சியவ:, நோதன:, த்ருனு:,  சீதா:, பூர்வக்ரத்வாத், அந்யேத்யு, உபவேத்யு, அவ்ரதா: என்பன அவை.

அதர்வனம்

டாக்டர் கடவுள்!

உலகில் வேறு எந்த மத நூலும் கடவுளை டாக்டர் என்று வருணிக்கவில்லை. ஆனால் இந்து மதவேத வேதங்கள் இந்திரன், ருத்ரன், அக்னி முதலிய தெய்வங்களை (பிஷக்), அதாவது மருத்துவன் என்று பாடுகின்றன. அவன் உடல் நோய்க்கு மட்டுமின்றி, பிறவி என்னும் நோய்க்கும் மருந்து ஆனவன்!

அபாலா என்பவளின் மலடித்தனமையைப் போக்கியதாக வேதங்களில் இந்திரன் புகழப்படுகிறான்.

அஸ்வினி தேவனைத் தான் வேதங்கள் மிகவும் புகழ்கின்றன. முதுமையைப் போக்கி இளமை தருபவன், விஸ்பலா என்பவளுக்கு செயற்கைக் கால் தந்ததாக அஸ்வினி தேவர்கள் புகழப்படுகின்றனர்.

மருத்துக்கள் எனப்படும் வாயு தேவனுக்கு மலைகளில் வளரும் அத்தனை மூலிகைகளும் தெரியும் என்றும் வேதங்கள் துதிபாடும்

இவை எல்லாம், அக்காலத்தில்  மக்களின் உடல்நலத்தில் எவ்வளவு அக்கறை இருந்தது என்பதைக் காட்டும். இதே போல சோமரசம் என்பதும் பல நோய்களுக்கு மருந்தாக விளங்கியது. மனோசுத்த சோமயாஜி என்று ஒரு பார்ப்பனனைப் புகழிகிரது பாண்டியர் செப்பேடு. ஆகவே இன்றைய மருத்துவத்தின் தந்தை ஹிப்போக்ரடீஸ் அல்ல, தன்வந்திரியே என்று அடித்துச் சொல்லலாம்.

(மேல் விவரங்களுக்கு இது பற்றிய ஆங்கிலக் கட்டுரையை நாடவும்)