பாரதியார் பற்றி அமுதன் வானொலி உரை

bharati patal, picture,fb

Compiled by ச.நாகராஜன்

Date : 7 September  2015

Post No. 2132

Time uploaded in London: – காலை 8-50

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 6

ச.நாகராஜன்

பாரதியார் பிறந்த நாள்

அரவிந்த ஆசிரமம் அமுதன்

இது ஒரு புத்தகம் அல்ல. வானொலி உரை. அரவிந்த ஆசிரமத்தைச் சேர்ந்த அமுதன் அவர்களை புதுவை வானொலி நிலையத்தார் அழைத்து மஹாகவி பாரதியார் பற்றி உரை ஒன்றை நிகழ்த்துமாறு வேண்டினார்கள்.

பாரதியார் பிறந்த தினத்தன்று 11-12-1968ஆம் தேதி இது ஒலிபரப்பப்பட்டது.

அமுதன் அவர்கள் சிறுவயதிலேயே பாரதியாருக்கு அறிமுகமானவர். பின்னால் அரவிந்த ஆசிரமத்தில் மஹரிஷி அரவிந்தருடன் நெருங்கிப் பழகும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. அன்னை அவர்களின் அந்தரங்கக் காரியதரிசியாகவும் அவர் ஆனார்.

வைகறை என்ற இதழ் அரவிந்த ஆசிரமம் வெளியிடும் ஒரு அழகிய தமிழ் இதழ். பிப்ரவரி, ஏப்ரல்,ஆகஸ்டு, நவம்பர் மாதங்களில் வெளி வர ஆரம்பித்த இந்த இதழின் ஆசிரியப் பொறுப்பில் இருந்த அவர் அழகுற அருமையான தங்கம் நிகர் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டு வந்தார். இந்த வைகறையில் 1970ஆண்டு மலர் 1இல் இவரது வானொலி உரை முழு வடிவில் அப்படியே பிரசுரமானது.

பாரதி அன்பர்கள் அரவிந்தரின் தொடர்பினால் மஹாகவி எவ்வளவு மகிழ்ச்சியுற்றார், அரும் படைப்புகளைப் படைத்தார் என்பதை அறிவர். அந்த நெருங்கிய தொடர்பைப் பற்றியும் மஹாகவி பற்றியும் நன்கு விளக்கிக் கட்டுரைகளைப் படைத்தவர் அமுதன் அவர்கள்.

அமுதன் அவர்களின் வானொலி உரை

அவரது உரையின் பெரும் பகுதி, அரவிந்த ஆசிரமத்திற்கும் வைகறைக்கு நாம் செலுத்தும் உரிய நன்றியுடன், அவரது சொற்களிலேயே இதோ:-

“பாரதியார் புதுவையில் இருக்கும்போது அவருடன் நெருங்கிப் பழகினவர்களில் நானும் ஒருவன்; இந்த ஒரு காரணத்தினாலேயே நான் அவரை நன்கு தெரிந்து கொண்டு விட்டதாகவும் நான் ஏதோ ஏனையோர் இதுவரை சொல்லியிராத விவரங்களை சொல்லப் போவதாகவும் நினைக்கக் கூடாது. என்னை விட அவரை அறிந்து தெரிந்தவர்கள் இருக்கத்தான் வேண்டும். பாரதியாரைப் பற்றி எண்ணிறந்த கட்டுரைகள் வெளி வந்துள்ளன – பாரதியாரின் நாட்டுப்பற்று, பாரதியாரின் இலக்கியம், முக்கியமாக – அவர் கவிதை, பாரதியாரின் புதுவை வாழ்க்கை முதலிய.

சுருங்கச் சொல்லின் இவை எல்லாவற்றையும் விட அவர் நம் தமிழ்வானின் கீழ்த்திசையில் முளைத்த வெள்ளி.

நான் பாரதியாரை முதன் முதலில் பார்த்தது 1909. அவரை தரிசித்த ஒரு வாரத்திற்குள்ளேயே அவர் சாதாரண மனிதன் அல்ல என்பது பசுமரத்தில் அடித்த ஆணி போல் என் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்து விட்டது. அன்று நானோ சிறுபிள்ளை.

பாரதியாரின் அசாதாரணத் தன்மை அவர் நடையிலும் உடையிலும், பாவனையிலும் பளிச்சென்று பிரகாசிக்கும்; அதை நாம் வேண்டாவிடினும் அதை கவனித்தே ஆக வேண்டியிருக்கும்.

பாரதியார் ஆதர்ச புருஷன் – கொண்ட ஆதர்சத்தில் முழுக்க ஈடுபட்டவர்; அவரிடம் எதிலும் அரைகுறை என்ற பேச்சே கிடையாது. ஒரு கொள்கையை அவர் உள்ளம் கண்டதும், அதைக் கொண்டதும், உடனே அந்த க்ஷணமே அதைக் கைக்கு மெய்யாக ஆக்கி விடப் பார்ப்பார், ஆக்கியும் விடுவார். கொள்கைக்கும் செய்கைக்கும் மத்தியில், அவர் வரை, இடைவெளி கிடையாது.

இன்று போல் அல்ல அன்று. இன்று நாம் ஒளியை விட்டு விலகி, மண்ணோடு மண்ணாய் விட்டோம். இன்று, “வருமானம் என்ன, செலவு என்ன, சாப்பாட்டிற்கு வழி என்ன, எவ்வளவு சேகரம் செய்தோம்?” என்பன போன்ற எண்ணங்களும் உணர்ச்சிகளும் தனி மனிதனையும் மக்கள் குழாத்தையும் ஆட்டிக் கொண்டிருக்கின்றன. அன்றோ மக்கள் உள்ளத்தில் தீ சுடர் விட்டெரியக் கண்டோம். அச்சுடரை மூர்த்திகரிக்கும் ஆதர்ச புருஷர்கள் மக்களிடை சஞ்சாரம் செய்தார்கள். அத்தகைய மூர்த்திகளில் ஒருவர் பாரதியார். அவர் மண்ணுலகில் நடமாடிய போது நாம் விண்ணுலகில் வாழ்வதாக நினைத்தோம். அவர் ‘விடுதலை’ என்னும் மந்திரச் சொல்லைக் கர்ஜித்த போது நாம் நமது தளைகள் அறுந்து இறக்கை கட்டி விண்ணில் பறப்பதாக எண்ணினோம். மண்ணும் ஒளிர்ந்தது.

பாரதியார் வாழ்ந்த காலம் மண்ணில் விண்ணைக் கண்ட காலம்.பாரதியார் தன் பாடல்களைப் பாடிய மாதிரி வேறெவரும் பாடி நான் கேட்டதில்லை – அந்த ஆவேசம், அந்த சக்தி, அந்த உத்ஸாஹம், அந்த தாண்டவம் நான் மீண்டும் காணவில்லை.

பாரதியார் வாக்கில், அவர் சொல்லில் ஓர் அமாநுஷ்யம், தைவதம் மிளிர்ந்தது – அது தெய்வ சம்பத்தல்லவா?

எவரிடமும் அவருக்கு அவநம்பிக்கையே கிடையாது – பச்சைக் குழந்தை உள்ளம். தன் பொருள், பிறர் பொருள் என்பதும் அவரிடம் கிடையாது – ஒருவித சரளம், அவர் பிறரிடம் சல்லாபம் செய்யும்போது.

பட்டினத்துப்பிள்ளை: “பொய்யாய்ப் பழங்கதைக் கனவாய் மெல்லப் போனதுவே”

பாரதி: “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது சொற்புதிது, சோதி மிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை”

மேனி சிலிர்க்க வைக்கும் மெய்யுரை

எப்படிப்பட்ட உரை! மண்ணகத்தில் விண்ணகத்தைக் கண்ட காலத்தில் மஹாகவியுடன் நெருங்கிப் பழகும் பேறு பெற்ற பெரியவர் அல்லவா அமுதன்!

அவர் உரை மேனி சிலிர்க்க வைக்கிறது. பாரதி அன்பர்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அற்புத உரை இது!

*************

மஹாகவிக்குச் செய்யும் மஹத்தான துரோகம்!

Default Co. Ltd

Default Co. Ltd

Written by S NAGARAJAN

Date : 31 ஆகஸ்ட்  2015

Post No. 2111

Time uploaded in London : 12-11

 

By .நாகராஜன்

 

பதிப்புகள் பல விதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம்!

 

மஹாகவி பாரதியார் போன்ற ஒரு பெரும் கவிஞனை காலம் எப்போதோ ஒரு முறை தான் தோற்றுவிக்கிறது

வாழ்ந்த காலத்தில் அவரைக் கொண்டாடாமல், அவரைச் சற்றே வறுமையில் வாட விட்டு விட்டது தமிழ்ச் சமுதாயம்.

 

ஆனால் இப்போது அவரது பெருமை நன்கு புரிந்து விட்ட நிலையில் காலத்தை வென்ற கவிஞன் என்று அவன் போற்றப்படும் நிலையில் அவனுக்குத் தமிழர்கள் சிலர் இழைக்கும் கொடுமைக்கும் துரோகத்திற்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டே ஆக வேண்டும்.

 

மஹாகவிக்கு துரோகமா என்று விழிகளில் வியப்பைத் தேக்க வேண்டாம்.

அவர் நமக்கு விட்டுச் சென்ற படைப்புகளை உள்ளது உள்ளபடி வெளியிடாமல் தங்களின்கெட்டநோக்கத்திற்கு இசைந்த வகையில் வெளியிடுவதைத் தான் இங்கு துரோகம் என்று குறிப்பிடுகிறோம்.

 

அறியாமல் செய்தாலும் பிழை பிழை தான்! ஆகவே பாரதி ஆர்வலர்கள் இந்தப் பதிப்பாளர்கள் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நல்ல பதிப்பையே தேடிப் பிடித்து வாங்க வேண்டும். சரியான தலைப்புகள், சரியான பாடம் தெரிந்த போது தனது பிரதியில் அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

 

மனம் போன படி மாற்றலாமா?

 

பல்வேறு வித நோக்கங்கள்! அதற்கு பலி மஹாகவி! அது தான் வருத்தமாய் இருக்கிறது.

முதலில் எழுத்துக்களை மாற்றி வெளியிடுதல் தவறல்லவா. , , , போன்ற எழுத்துக்களைக் கையாளுவதில் அவருக்குத் தடை இருந்ததே இல்லை. ஸ்வ சரிதை என்பதை பல பதிப்புகள் சுய சரிதை என்று மாற்றி வெளியிடுவதைப் பார்க்கலாம்.

 

 

எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய அவரது தீர்க்கமான சிந்தனை பற்றிய   அருமையான சம்பவங்கள் உண்டு, (அவற்றை எனது தனிக் கட்டுரையில் காணலாம்)

ஆகவே அவர் எழுதிய எழுத்துக்களை அப்படியே அவரது படைப்புகளில், கதை, கவிதை, கட்டுரையில் வெளியிட வேண்டும்.

 bharati drawing

அடுத்து தலைப்புகளை மாற்றுதல்.

 

ஶ்ரீ கிருஷ்ணன் மீது ஸ்துதி என்பது அவர் கொடுத்த தலைப்பு, கண்ணனை வேண்டுதல் என்பது புதிய தலைப்பு. எளிமைப் படுத்துகிறார்களாம்! மனம் போன படி தலைப்பு, வார்த்தைகளைஎளிமைப் படுத்தஇவர்கள் யார்?” ஸ்வ சரிதை என்பது 1948ஆம் ஆண்டு பாரதி பிரசுராலயம் கொடுத்திருக்கும் தலைப்பு. சிலர் இதை சுயசரிதம் என்றும் கனவு என்றும் தலைப்பு கொடுத்து பிரசுரிக்கின்றனர்.

 

கவிஞனின் உள்ளத்தைத் தெரிவிக்கும் தலைப்புகளையே மாற்றலாமா?

அடுத்து மஹாகவி ராகம், ஸ்வரக் குறிப்புகளைத் தன் பாடல்களுக்குத் தந்துள்ளார். அதை விடுத்து பாடல்களைப் பதிப்பது இன்னுமொரு தவறு!

வார்த்தைகளையே மாற்றுவது அல்லது மனம் போன படிதமிழ்ப் படுத்துவது’, சில வரிகளை மறைப்பது அல்லது மாற்றுவது என்று பாரதியார் பலதமிழர்களிடம்படாத பாடு படுகிறார்.

 

சீர் பிரித்து பிரசுரிப்பது ஒரு வழக்கமாக ஆகி விட்டது இப்போது; மர்ரே கம்பெனியின் கம்ப ராமாயணப் பதிப்பின் நேர்த்தியைக் கண்டோர்தாமும் அதுவாகப் பாவித்துபாரதியாரைசீர் பிரிக்கிறார்கள்”! இதிலும் பல விதம்!!

 

பரலி சு.நெல்லையப்பர் ஆங்கிலேய அதிகாரிகள் பாரதியாரின் பாட்டுக்களை தடை செய்து விடுவார்கள் என்ற நோக்கத்துடன் நாட்டுப் பாட்டு என்ற நூல் தலைப்பில் அவரது கவிதைகளை வெளியிட்டார்; பரப்பினார். இது புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. ஆனால் சுய லாபங்களுக்காக அவரை மாற்றுவது தான் வேடிக்கை!

 

 

தமிழினம் காப்பதாகதம் இனம்காப்போர்!

 

சிலஇஸம்களிடம் அவர் மாட்டிக் கொண்ட விந்தையையும் பல பதிப்புகளில் பார்க்கிறோம். கம்யூனிஸ்டுகளின் பாரதி ஒரு விதம்! திராவிடஆரியம் என்ற பிரிவினைக் கொள்கை கொண்டோரின் பாரதி இன்னொரு விதம்! பார்ப்பன எதிரிகள் என்று தம்மை பகிரங்கமாகச் சொல்லி கொள்வொர் பாரதியைத் துணைக்கு அழைத்து அவருக்குட்ரீட்மெண்ட்கொடுப்பது இன்னொரு விதம்!

இத்தனைக்கும் மீறிய மகாகவி அவர். அவரை உள்ளபடி தேடிக் கண்டு பிடிப்பது அவர் மறைந்த நூறு ஆண்டுகளுக்குள்ளேயே மிகவும் சிரமமான காரியமாக ஆகி விட்டது.

 

1936ஆம் ஆண்டு ஐந்தாம் பதிப்பாக தேசீய கீதங்கள் என்று தலைப்பிட்ட நூலை பாரதி பிரசுராலயம்,திருவல்லிக்கேணி, சென்னை வெளியிட்டுள்ளது. இந்த நூலைப் பார்த்து இன்றுள்ள பலரது பதிப்புகளையும் பார்க்கும் போது வேதனை தான் பிறக்கிறது. முதலில் தமிழை இப்படிப்பட்ட வக்கிரம் பிடித்தவர்களிடமிருந்து காக்க வேண்டும்.

 

தமிழினம் காப்போம், தமிழைக் காப்போம் என்ற கோஷத்தை முன் வைத்து தம் இனத்தை மட்டும்’ – வாரிசுகளைக் காக்கும் இவர்களை இனம் கண்டு இவர்களிடமிருந்து தமிழர்கள் முதலில் தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும், இல்லையா?!

 

பாரதியாரைத் தம் பக்கம் தவறாகத் துணைக்கு இழுப்பவர்கள் பாரதியாருக்கு மரியாதை செய்பவர்களா அல்லது துரோகிகளா?

 

சிந்திப்போம்! பாரதியாரைக் காப்போம்!!

**************

 

பாரதி புதையல்: மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்!-5

bharathiyar_554

Article No. 2106

Written by S NAGARAJAN
Date : 29 August  2015
Time uploaded in London :– 12-06

ச.நாகராஜன்

பாரதி புதையல் மூன்றாம் தொகுதி

ரா..பத்மநாபனின் தமிழ்த் தொண்டு

மிக மிக அருமையான இந்த நூலை பாரதி பக்தர் ரா.அ.பத்மநாபன் தொகுத்து 1975ஆம் ஆண்டு பாரதி தினத்தன்று வெளியிட்டிருக்கிறார். இது அமுதநிலையம் பிரைவேட் லிமிடட்டின் 248வது நூல். 321 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் அன்றைய விலை ரூ 12.

பதிப்புரையில் ரா.அ.பத்மநாபன் கூறுவது:- “பாரதியாரின் எழுத்துகளில் இதுவரை வெளியாகாதவை அல்லது எப்போதோ பத்திரிகைகளில் வெளி வந்து மறைந்து கிடப்பவை – இவற்றைத் தேடித் திரட்டி, நூல் வடிவில் தொகுத்துத் தருவதே “பாரதி புதையல் நூல் வரிசையின் நோக்கமாகும். இவ்வரிசையில் இது மூன்றாவது தொகுதியாகும். முதல் தொகுதி 1958-இலும் இரண்டாம் தொகுதி 1959-இலும் வெளியாயின.”

தமிழ் மக்களுக்கு இதை விடச் சிறந்த சேவையை எப்படிச் செய்ய முடியும். ரா.அ.பத்மநாபனுக்கு தமிழ் உலகம் என்றும் கடமைப்பட்டிருக்கிறது.பாரதியின் புகழ் பரப்பும் பணியே இவரது வாழ்க்கைப் பணி.

இந்த நூலில் பாரதியாரின் வெளியிடப்படாத கவிதைகள் நான்கும், கட்டுரைகள் இருபத்தி ஒன்பதும் உள்ளன. இத்துடன் மிக முக்கியமான தொகுப்பாக பாரதியாரைப் பற்றி நன்கு அறிந்தவர்களும் உடன் பழகியவர்களும் எழுதிய 26 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இது ஒரு அரிய கஷ்டமான காரியம். எங்கெங்கோ எப்போதோ பிரசுரிக்கப்பட்டவற்றை ஒரே நூலில் படிக்க முடிகிறது.

பல்வேறு சுவையான சம்பவங்கள். சம்பவங்களில் உடன் இருந்தோர் அதை விவரிக்க, அவற்றைப் படிக்கும் போது அதிகாரபூர்வமாக அவற்றை உணர முடிகிறது.

padmanaban_1740634h

R A Padmanabhan

சோழனும் கம்பனும்

மாமா பாரதியார் என்று வ.உ.சி எழுதிய கட்டுரையில் தன்னைச் சோழனாகவும் பாரதியாரைக் கம்பனாகவும் நினைக்க வைத்த சந்திப்பை உளமுருக விவரிக்கிறார். மாஜினியின் சங்கத்தில் அங்கத்தினராகச் சேர்ந்தோர் செய்து வந்த விசுவாசப் பிரமாணச் செய்யுளை பாரதியார் ஆங்கிலத்தில் படித்துக் காட்ட, வியப்புற்ற வ.உ.சி அதைத் தமிழ்ப்பாட்டாகத் தர வேண்டினார். உடனே அதே இடத்தில் கவிதை ஒன்று உருவானது. அது தான் ‘பேரருட் கடவுள் திருவடியாணை’ என்று தொடங்கும் கவிதை.

 

நாராயண ஐயங்காரின் கட்டுரைகள்

சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் கடை கண்ட நிபுணரான பண்டிட் எஸ்.நாராயண ஐயங்கார் பாரதியாரின் நண்பர். அவர் 9-9-1956, 16-9-1956 தினமணி சுடர் இதழ்களில் எழுதிய கட்டுரைகள் காசியிலிருந்து பாரதியாருடனான நாராயண ஐயங்காரின் நட்பை விளக்குகிறது.

கங்கைக் கரையில் அமர்ந்து ஷெல்லியின் பாடல்களைப் படித்து அர்த்தம் சொல்வார் பாரதியார். ஒரு சமயம் சரஸ்வதி பூஜையன்று பெண் கல்வி வேண்டுமென்பது பற்றி அவர் பேச அந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்த ஶ்ரீ சீதாராம சாஸ்திரிகள் அதை ஏற்க மறுக்க பாரதியாரோ இன்னும் ஆணித்தரமாகத் தன் கருத்தை வலியுறுத்தினார். காசியில் இருந்த போது அவருக்கு வயது 18. நாராயண ஐயங்காருக்கு வயது 16. ஏராளமான சுவையான சம்பவங்களை விவரிக்கிறார் நாராயண ஐயங்கார்.

.வே.சு. ஐயரும் பாரதியாரும்

புதுவையில் இந்தியா வெளியிடும் பொறுப்பை ஏற்றவர் ,மண்டயம் ஶ்ரீநிவாஸாச்சாரியார். இவர் பாரதியாரின் புதுவை வாழ்க்கையில் உடன் இருந்தவர். வ.வே.சு ஐயரையும் பாரதியாரையும் ஒப்பிட்டு இவர் 1942 மார்ச் கலைமகள் இதழில் எழுதிய கட்டுரை நூலில் இடம் பெற்றுள்ளது. ஶ்ரீ அரவிந்தர் ரிக்வேதம் படிக்கும் போது அவரோடு பாரதியாரும் ரிக் வேதம் படித்தார்.ஆர்யா என்ற அரவிந்தரின் மாதப் பத்திரிகைக்கு பாரதியார் விஷயதானம் செய்து வந்தார். சதுரங்கம் ஆடும் போது ஏப்போதும் ஐயருக்கு எதிர்க் கட்சியில் பாரதியார் இருப்பார். எப்போதும் ஐயர் தான் ஜெயிப்பார். பாரதியாருக்கு ரோஷம் பிறந்து விடும்.மறுபடியும் ஐயரை ஆடச் சொல்லி ஓரிரு முறை தான் ஜயித்த பின் தான் எழுந்திருப்பார்.

 

குவளை கிருஷ்ணமாச்சாரியாரின் அரிய கட்டுரைகள்

பாரதியாரை யானையிடமிருந்து காப்பாற்றிய குவளை கிருஷ்ணமாச்சாரியார் பல சுவையான சம்பவங்களை விவரமாக எழுதியுள்ளார். 1938இல் அவர் ஹிந்துஸ்தான் வாரப் பதிப்பில் எழுதிய கட்டுரை இது.பன்னிரெண்டு பேர் சேர்ந்து நாலாயிரம் பாடினார்களா, பார் நான் ஒருவனே ஆறாயிரம் பாடுகிறேன் என்று பாரதியார் எழுத ஆரம்பித்த பாடல்கள் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு அறுபத்தாறு பாடல்களுடன் நின்றது.

பாரதியாருக்கு இறந்து போன அவரது தந்தை உருவத்தையும் தாய் உருவத்தையும் காண்பித்த கோவிந்தசாமி என்னும் சித்தரைப் பற்றி குவளை கிருஷ்ணமாச்சாரியார் 1939 கலைமகள் எழுதிய சுவாரசியமான கட்டுரையும் இதில் இடம் பெறுகிறது.

இப்படி முக்கியமானவர்களின் எழுத்துக்களின் தொகுப்பைப் படிக்கும் போது பாரதி பக்தர்கள் பரவசமடைவதில் வியப்பே இல்லை.

பாரதியாரைக் கற்கவும் புரிந்து கொள்ளவும் விரும்புவோர் உடனடியாகப் படிக்க வேண்டிய நூல் இது.

எழுதிய அனைவரும் தமிழ் உலகிற்கு ஒரு அரிய தொண்டைச் செய்துள்ளனர் என்றால் அது மிகையாகாது.

************

நான் கண்ட நால்வர்

bharati malar

Article No. 2102

Written by S NAGARAJAN
Date : 27 August  2015
Time uploaded in London :– காலை 8-43

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 4

ச.நாகராஜன்

நான் கண்ட நால்வர்

1959ஆம் ஆண்டு பிரபஞ்ச ஜோதி பிரசுராலயத்தால் வெளியிடப்பட்ட இந்த அருமையான நூலை எழுதியவர் தமிழ் உலகம் நன்கு அறிந்த அறிஞர் வெ.சாமிநாத சர்மா (1895-1978) ஆவார். மீண்டும் செப்டம்பர் 1998இல் இதை மறுபதிப்பு செய்த பெருமை திரு வே.சுப்பையா (அமரர் வெ.சாமிநாத சர்மாவின் பக்தர் இவர்) பூங்கொடி பதிப்பகம் சென்னையைச் சாரும்.

திரு.வி.கலியாண சுந்தர முதலியார், வ.வே.சு. ஐயர், சுப்ரமணிய சிவா, மகாகவி பாரதியார் ஆகிய நால்வரைப் பற்றிய நூல் இது.

இந்த நூலைப் படிக்கும் போது திரு வி.க, வ.வே.சு.ஐயர், சுப்ரமணிய சிவா, பாரதியார் ஆகியோரிடையே நிலவிய நட்பை நன்கு உணர முடியும். திரு வி.க. ஆசிரியராக இருந்த தேசபக்தன் பத்திரிக்கையின் வரலாறு மிக சுவையாக நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் வெ.சாமிநாத சர்மா பணி புரிந்து வந்ததால் ஒரு நேரடி அனுபவத்தை நாம் உணர்கிறோம். ஏராளமான சுவையான சம்பவங்களை விவரிக்கும் இந்த நூலை பாரதி ஆர்வலர்கள் நிச்சயம் படிக்க வேண்டும்.

 

நேர்வழி செல்வோம்

சென்னை திலகர் கட்டத்தில் ஹிந்து பத்திரிகையின் ஆசிரியர் ஶ்ரீ கஸ்தூரி ரங்க ஐயங்கார் தலைமை வகித்துப் பேசிக் கொண்டிருந்த கூட்டத்தில் கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு, அதாவது உட்கார்ந்திருப்பவர்களைத் தள்ளி விட்டுக் கொண்டு வந்தார் மகாகவி பாரதியார்.

மேடையுடன் இணைக்கப்பட்டிருந்த பெஞ்சு ஒன்றை மேஜையாகக் கொண்டு பத்திரிகை பிரதிநிதியாக குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தார் வெ.சாமிநாத சர்மா. அங்கு வந்த கவிஞர் சர்மாவையும் ஹிந்து பத்திரிகையின் பிரதிநிதியாக வந்திருந்த வாசுதேவய்யர் என்பவரையும் சிறிது தள்ளி விட்டு நடுவில் உட்கார்ந்தார்.

சர்மாவுக்கு சிறிது ஆத்திரம் வந்தது. கவிஞரை முறைத்துப் பார்த்தார். “என்ன, முறைத்துப் பார்க்கிறீர்?” என்றார் கவிஞர்.

“ஒன்றுமில்லை, கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு இப்படிக் குறுக்காக வந்தீர்களே? சுற்றிக் கொண்டு வரக் கூடாதா?” என்று கேட்டார் சர்மா.

நாம் சுற்றுவழி செல்லமாட்டோம். நேர்வழி தான் செல்வோம்என்று உரக்கச் சொல்லிக் கொண்டே அவர் துடைமீது ஓங்கி ஓர் அறை அறைந்தார் கவிஞர். அறைந்து விட்டு ஹ, ஹவென்று சிரிக்கவும் செய்தார்.

இந்த வார்த்தைகளை மட்டும் மனிதர்கள் கடைப்பிடிக்க ஆரம்பித்தால் கடவுள் ராஜ்யம் என்பது பூவுலகில் வந்து இறங்கி விடும் என்று சொல்கிறார் சர்மா.

முருகா, முருகா, முருகா

 

 

சர்மா அவர்கள் கூறும் இன்னொரு சம்பவத்தை அவர் வார்த்தைகளிலேயே பார்ப்போம்:-

“பாரதியார் ஒரு சமயம் சென்னை ராயப்பேட்டை மோபரீஸ் ரோடிலுள்ள குகானந்த நிலையத்திற்கு வந்திருந்தார். அப்பொழுது கலியாணசுந்தர முதலியாரும் நானும் வேறு சில நண்பர்களும் அங்கிருந்தோம். மாலை நேரம். நிலையத்து மண்டபத்தில் குமரக் கடவுளின் திருவுருவப் படம் வைக்கப்பட்டிருந்தது. அந்த உருவம் பாரதியாரின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்து விட்டது. “முருகா, முருகா, முருகா”, என்று தொடங்கும் பாடலை உணர்ச்சி ததும்பப் பாடினார். மாலை நேரத்து மஞ்சள் வெயில் அந்தப் படத்தின் மீது லேசாக படிந்து, முருகனுடைய  திருவுருவத்திற்குத் தனிச் சோபை கொடுத்தது. “வருவாய் மயில் மீதினிலே வடிவேலுடனே வருவாய்” என்ற சரணத்தை அவர் பாடி அதையே திரும்பத் திரும்பச் சொன்ன போது, அந்தக் குமர வடிவம் அவரை நோக்கி மெதுமெதுவாக வருவது போலவே இருந்தது. நாங்கள் அனைவரும் பரவசர்களானோம். அந்தக் காட்சி என் நெஞ்சத்தை விட்டு அகலவே அகலாது. முதலியார் இந்த நிகழ்ச்சியைப் பற்றி அடிக்கடி கூறி ஆனந்தப்பட்டிருக்கிறார்.

தேசபக்தன் பத்திரிகை மீது பாரதியாருக்குத் தனி அன்பு உண்டு. அதன் கருத்துக்களும் தமிழ் நடையும் அவருக்குப் பிடித்திருந்தன. இதற்காக முதலியாரைக் காணும்போதெல்லாம் அவரைப் பாராட்டுவார்.”

புத்தகம் முழுவதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஏராளமான சுவையான செய்திகள் உள்ளன.

பாரதியார் திருநாளை முதலில் கொண்டாடியவர் சிவா

சுப்ரமணிய சிவா பற்றிய பகுதியில் பல செய்திகளைப் படித்து மகிழலாம்.

பாரதியார் அமரரான பிறகு சென்னையில் அவருடைய திருநாளைக் கொண்டாட வேண்டுமென்று முதன்முதலாக ஏற்பாடு செய்தவர் சிவனார் தான். திருவல்லிக்கேணியில் இப்பொழுது தேசீயப் பெண் பாடசாலை இருக்கிறதல்லவா, அது முந்தி தென்னந்தோப்பாயிருந்தது. அந்த இடத்தில் 1924ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் பாரதியார் அமரரான திருநாளன்று ஒரு பொதுக் கூட்டம் கூட்டினார். கூட்டத்திற்குச் சுமார் நூறு பேரே வந்திருந்தனர். கூட்டத் தொடக்கத்தில் ஶ்ரீ ரா.கிருஷ்ணமூர்த்தி (கல்கி) பாரதியாரின் வந்தே மாதரமென்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதுமென்போம்’ என்ற தொடக்கத்துப் பாடலையும் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே” என்ற தொடக்கத்துப் பாடலையும் பாடினார். பிறகு திரு வி.கலியாணசுந்தர முதலியார் வீராவேசத்துடன் பேசினார்.”

272 பக்கங்கள் அடங்கிய இந்த நூல் பாரதி ஆர்வலர் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய நூல்!

*************

பாரதி பற்றி அவரது மனைவி செல்லம்மாள் !

IMG_6148

Article No. 2099
Written by S NAGARAJAN
Date : 26 August  2015
Time uploaded in London :–  19-10

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! -3

எழுதியவர்: ச.நாகராஜன்

என் கணவர்

இத்தொகுப்பில் இடம் பெறும் இது புத்தகம் அல்ல. வானொலி உரை. மகாகவி பாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மா பாரதி 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் இந்தத் தலைப்பில் ஒரு உரையாற்றினார்.

அற்புதமான அந்த உரையை நிகழ்நிலையில் (Online) யார் வேண்டுமானாலும் படிக்கலாம்; தரவிறக்கமும் (downloading) செய்து கொள்ளலாம். பல வலைத்தளங்களில் இந்த உரையைக் காண முடிகிறது.

இதை ஒலிபரப்பிய திருச்சி வானொலி நிலையத்திற்கு தமிழ் உலகம் என்றும் கடமைப்பட்டிருக்கிறது. இதை வலைத்தளத்தில் ஏற்றிய, யார் என்று அறிய முடியாத, முதல் அன்பருக்கு நமது நன்றிகள். சுமார் 573 வார்த்தைகள் அடங்கிய இந்த உரையிலிருந்து சில பகுதிகள் – இதை முழுவதுமாக உடனே படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவதற்காக!

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?.

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்… விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்.

உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.

IMG_6145

கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது.

கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.

காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.

அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை.

புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.

மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று.

தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. “விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!” என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

அருமையான கட்டுரையில் பெரும்பாலான பகுதிகளை மேலே படித்து விட்டீர்கள்.

விட்டுப் போன பகுதிகளை உடனே இணைய தளத்தில் படித்து விடலாம்.

பாரதி ஆர்வலர்கள் சேர்க்க வேண்டிய பாரதி இலக்கியத்தில் இது ஒரு முக்கியமான கட்டுரை!

***************

பாரதி நினைவுகள்: மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! -2

bharathi_ninaivukal_copy

Article No. 2095

Written by ச. நாகராஜன்
Date : 24 August  2015
Time uploaded in London :– 10-10

ச.நாகராஜன்

  1. பாரதி நினைவுகள்

பாரதி பற்றிய இந்த நூலை எழுதியவர் யதுகிரி அம்மாள். இதன் முதற் பதிப்பு 1954 செப்டம்பர் மாதம் அமுத நிலையம் பிரைவேட் லிமிடட்-ஆல் வெளியிடப்பட்டது. நூலின் அன்றைய விலை 30 காசுகள் மட்டுமே! 87 பக்கங்கள் அடங்கிய இந்த நூலை “பாரதியின் தோழராக விளங்கிய என் பிதா ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீநிவாஸாச்சாரியாரின் திருவடித் தாமரைகளில் இச் சிறு நூலை அன்புக் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்” என்று சமர்ப்பணம் செய்துள்ளார் யதுகிரி அம்மாள்.

அறிமுகம் என்ற உரையில் ரா.அ.பத்மநாபன் கூறுவது:-

“வாசகர்கள் முன் உள்ள இந்த “பாரதி நினைவுகள்” நூலை எழுதிய ஶ்ரீமதி யதுகிரி அம்மாள் மண்டயம் ஶ்ரீ ஶ்ரீநிவாஸாச்சாரியாரின் மூத்த புதல்வி. புதுவையில் பாரதியார் இருந்த சமயம் சிறுமியாக இருந்தவர். பாரதியாருடன் பல்லாண்டுகள் நெருங்கிப் பழகி, அவரது அன்புக்குப் பாத்திரமாகும் பேறு பெற்றிருந்தவர். தமது சிறு வயதில் பாரதியாரைத் தாம் அறிந்த வகையில் கவிஞரை நமக்கு விவரிக்கிறார் ஶ்ரீமதி யதுகிரி அம்மாள்”         (ரா.அ.பத்மநாபன், சென்னை, 3—9-54இல் எழுதியது)

“பாரதியாரைப் பற்றி எனக்குத் தெரிந்ததைப் பிறரும் அறியச் செய்யலாம் என்று ஏதோ எழுத முன் வந்தேன். இக்குறிப்புகள் 1938-39-ல் எழுதப்பட்டவை. இன்ரு அச்சேறுகின்றன” என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் யதுகிரி (28-7-1954இல் எழுதப்பட்டது முன்னுரை)

நூலில் 26 அத்தியாயங்கள் உள்ளன.

பாரதி நினைவுகள் - யதுகிரி

உலையில் போடுவதற்காக வைத்திருந்த அரிசியில் கால் பங்கு கூட இல்லை என்று செல்லம்மா தவிக்கையில், பாரதியார், “வா, செல்லம்மா, இந்தக் குருவிகளைப் பார்! எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றன” என்று கூறி அரிசியைக் குருவிகளுக்குப் போட்ட சம்பவம் விட்டு விடுதலையாகி என்ற அத்தியாயத்தில் விவரமாகத் தரப்பட்டுள்ளது.

பாம்பாட்டி பாடிய பாட்டில் ஒரு பாடலை எழுதித் தருவதாக பாரதியார் யதுகிரியிடம் கூறி விட்டு மறுநாள் “பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்” பாடலை எழுதிக் கொண்டு வந்து பாடிக் காட்டிய சம்பவம் பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் என்ற அத்தியாயத்தில் தரப்பட்டுள்ளது.

போட்டிக்கு எழுதப்பட்ட செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற பாடல் எழுந்த வரலாற்றையும் அதை வ.வெ.ஸு. ஐயர் வெகுவாகப் பாராட்டியதையும் செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற அத்தியாயம் சுவையாக விவரிக்கிறது.

காணி நிலம் வேண்டும் என்ற பாடல் எப்படி எழுந்தது? ஜப்பானில் புதிய சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன் படி அந்த ராஜ்யத்தை ஒரே சமனாகப் பிரித்து எல்லா ஜப்பானியருக்கும் ஆளுக்கு இவ்வளவு என்று பிரித்துக் கொடுத்து விடுவது, இனி பிச்சைக்காரர்களும், சோம்பேறிகளும் தங்கள் தேசத்தில் இருக்கக் கூடாது என்று செய்தார்கள். இதைப் பார்த்த புதுவை சுதேசியார் நம் நாட்டில் ஒரு குடும்பம் பிழைக்க எவ்வளவு நிலம் வேண்டும் என்று ஆராய்ந்தனர்.

அதற்கு விடையே காணி நிலம் வேண்டும் என்ற பாரதியாரின் பாட்டு,

ஏராளமான சம்பவங்கள். உள்ளத்தைத் தொடுபவை சில. உருக்குபவை சில. உணர்ச்சி ஊட்டுபவை பல.

பாரதி ஆர்வலர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

****

சத்ரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியது – பாரதியாரின் அற்புத கவிதை!

shivaji flag

Written by S NAGARAJAN

Date : 31 July 2015

Post No. 2030

Time uploaded in London : 7-51 am

 

By .நாகராஜன்

 

 

பாரதியாரின் சிவாஜிகவிதை

1910 பிப்ரவரி முதல் தேதியிட்ட விஜயா இதழில் பாரதியாரின் முஸ்லீம்கள் பற்றிய கருத்துக்களைப் பார்த்தோம்.

இதற்கு முன்பாகவே 1906ஆம் ஆண்டு இந்தியா இதழில் தொடர் கவிதையாக வெளியிடப்பட்டக் கவிதைத் தொடர் தான்சத்ரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியதுஎன்ற கவிதைத் தொடர்.

1906ஆம் ஆண்டு நவம்பர் 17, 24, டிசம்பர்1, 6 ஆகிய தேதியிட்ட இந்தியா இதழ்களில் தொடராக இது வெளி வந்தது.

இன்னும் வரும் என்ற குறிப்புடன் வெளி வந்த இதன் தொடர்ச்சி வெளிவரவில்லை.

 

 

190 வரிகள் உள்ள கவிதையில் பாரத நாட்டின் சிறப்பு, துருக்கரின் அதர்மச் செயல்கள், அவர்கள் இன்னல்கள் தருவது அவர்களை வெல்லும் புனிதப் போரில் பங்கு கொள்ளமிலேச்சரை வெற்றி கொள்ளதூயவரையும், வீரர்களையும் அழைப்பது, அநாரியத் தன்மையை அடையாதே, ஈடிலாப் புகழினோய், எழுகவோ எழுக என அர்ஜுனனை கண்ணபிரான் கீதையை உபதேசித்து விழிப்புறச் செய்து பற்றலர் தமையெலாம் பார்க்கிரையாக்கியது என வரிசையாக விவரிக்கும் அற்புத நடையைக் காண்கிறோம்.

சிவாஜியின் வீர உரை என்றும் இந்திய நாட்டினருக்குப் பொருந்தும் வகையில் கவிதை வரிகள் ஒளிர்கின்றன.

அவுரங்கஜீபின் அழிவுக்குக் காரணம் அதர்மம் என்று மகாகவி கூறியுள்ளதை நோக்கி விட்டு அந்த அதர்மங்கள் முகலாயர் காலத்தில் என்னென்ன என்பதைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் மகா கவிஞர்.

 

 

ஆலயம் அழித்தலும், அருமறை பழித்தலும்,                                    

பாலரை, விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்                                       

மாதர் கற்பழித்தலும் மறையவர் வேள்விக்                                            

கேதமே சூழ்வதும் இயற்றி நிற்கின்றார்                                                

 சாத்திரத் தொகுதியைத் தழல்படுக்கின்றார்                                   

கோத்திர மங்கையர் குலங் கெடுக்கின்றார்                                              

எண்ணில, துணைவர்காள், எமக்கிவர் செயுந் துயர்                                    

 கண்ணியம் மறுத்தனர், ஆண்மையுங் கடிந்தனர்,                               

பொருளினைச் சிதைத்தனர், மருளினை விதைத்தனர்                                  

திண்மையை அழித்து பெண்மையிங் களித்தனர்                                               

பாரதப் பெரும்பெயர் பழிப் பெயராக்கினர்                                                 

சூரர் தம்  மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்                                                    

வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்                                                       

ஆரியர் புலையர்க் கடிமைகள் ஆயினர்

 

அதர்மத்தின் முழுப் பட்டியலை இதை விட வேறு யாரால் இப்படிச் சொல்ல முடியும்?

 SHIVAJI 2

 

எழுகவோ எழுக!

மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை?”        

என்ற சிவாஜி மஹாராஜாவின் வார்த்தைகளில் தன் கருத்தை ஏற்றிக் கூறுகிறார் மகா கவிஞர்.

மொக்குள் தான் தோன்றி முடிவது போல                                      

மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்

என்பதைச் சுட்டிக் காட்டும் கவிஞர்எழுகவோ எழுகஎன அறைகூவல் விடுக்கிறார்.

அற்புதமான இந்தக் கவிதை பாரதியார் இந்தியா எப்படி எழ வேண்டும் என்ற தன் உள்ளக் கிடக்கையைத் தெளிவாக விளக்கும் ஒரு கவிதை.

 

 

sivaji statue

தர்ம பாரதம்

அதர்மப் பட்டியலுக்கு எதிராக தர்ம நாடு பாரதம் எப்படி இருக்கும்?

ஆலயங்கள் உயிர்ப்புடன் வாழும், அருமறை தழைக்கும்,                                    

பாலரும், விருத்தரும் போற்றப்பட்டு வாழ்வர்                                      

  பசுக்கள் வாழ்விக்கப்படும்                                                                 

மாதர் கற்புடன் இருக்க மறையவர் வேள்வி எங்கும் நடக்கும்                                                                          சாத்திரத் தொகுதி தழைக்கும்                                                         

கோத்திர மங்கையர் குலம் ஓங்கும்                                                                                   

கண்ணியம் இருக்கும், ஆண்மை ஓங்கும்,                                                     

பொருள் செழித்து வளரும், மருள் ஒழியும்                                      

திண்மை பெருகும் ஆண்மை மிளிரும்                                               

பாரதப் பெரும்பெயர் உலகெங்கும் போற்றப்படும்                                                 

 சூரரின் வீரியம் கூடும் மேன்மை பெருகும்                                                                

நம் ஆரியர் உலகத் தலைமை கொள்வர்

என்றல்லவா இப்படி தர்ம பாரதம் விளங்கும்!

ஆனால் துருக்கர் விதைத்த மருள் இன்னும் இந்த நாட்டை விட்டு நீங்காமல் இருப்பது நமது தவத்தின் குறைவே ஆகும்!

 

இந்தக் கவிதையின் குறிப்பில் மகாகவி ஹிந்துக்களும் மகமதியர்களும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகள் போல நடந்து கொள்ள வேண்டுமென்பதை பலமுறை வற்புறுத்தியுள்ளதை நினைவு கூர்கிறார்.

சிவாஜி கூறியுள்ள வீர வசனங்களை நியாயப் படுத்தும் விதமாக மகாகவி பாரதியார் இந்தக் குறிப்புரையில் கூறியுள்ளதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

 

அத்தோடு அதர்மத்தின் கோரப் பிடியில் ஹிந்து சொத்துக்கள் கொள்ளை போன விவரத்தையும் ஒரு சிறிது நோக்குவோம்.

 

இதைப் படிக்கும் நேயர்கள் 190 வரிகள் கொண்ட இந்தக் கவிதையை ஒரு முறை படித்து கவிதை கூற வரும் பாரத சக்தியைத் தம்முள் ஏற்றிக் கொண்டால் இனி  வருவதை நன்கு படிக்க ஏதுவாகும்.

 

                                      –தொடரும்

 

ராமனுக்கு ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் !!!

RAMA IDOLS

(Picture from face book: Ramapriya ramanuja dasi)

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 2

 

by ச.நாகராஜன்

 

Post No 1635; Dated 9th February 2015

ஒரு வில், ஒரு சொல், ஒரு இல்!

 

தமிழர் தம் நீண்ட வரலாற்றை எடுத்துக் கொண்டு பார்த்தால், ராமர் தமிழ் குடும்பங்களின் பின்னணியாகத் திகழ்வது தெரியவரும். அவர் கால் படாத இடம் தமிழ்நாட்டில் இல்லை என்னும் அளவுக்கு பல தல புராணங்கள் அவரது பெருமையைச் சுட்டிக் காட்டுகின்றன. இராமேஸ்வரத்தில் சேது அமைத்து இராவணனை வதம் செய்த அவரை தமிழ்க் குடும்பங்கள் வழிபட்டு வருவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என்றே அறநெறி கொண்டவன் அவன்.

துஷ்டர்களுக்கு ஒரே பாணம் – ஒரு வில்!

சரணம் என்று வந்தோர்க்கு அபயம் என்ற வாக்கு – ஒரு சொல்!

ஜென்மம் முழுவதும் இணைந்து வாழ ஒரு மனைவி – ஒரு இல்!

இது தான் அவனது அறநெறி.


rama white

Vishnu with Sridevi and Bhudevi

ராமர் போல துஷ்டர்களிடமிருந்து என்னைக் காத்து, அபயம் என உன்னையே கரம் பிடிக்கும் என்னைப் போற்றி நேசித்து, வாழ்நாள் முழுவதும் என் ஒருத்தியுசடனேயே வாழ வேண்டும் என்ற முப்பெரும் நெறிகளைச் சுட்டிக் காட்டி அதையே நான் விழைகிறேன் என்பதைப் பாடல் மூலம் சொல்ல வேறு எந்த ஒரு சந்தர்ப்பம் தான் கிடைக்கும், ஒரு பெண்ணுக்கு!

ஆக, பெண் பார்க்கும் படலத்தில் ராமரைப் பற்றிப் பாடுவது சரியானது தான் என கவிஞரும், பட இயக்குநரும், வசனகர்த்தாவும் நினைத்திருந்தால் அது சரிதானே!

இந்த வகையில் ராமர் எத்தனை ராமனடி பெண்களின் மனதைக் கவர்ந்த ஒரு பாடல் என்றால் அதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது?

asokavanam

Sita in Asoka Vana in Sri Lanka

ராஜாராமனும் சீதாராமனும்

 

இதை இயற்றிய சம்பவம் பற்றி கவிஞர் கண்ணதாசன் குறிப்பிடுகையில், “உத்தரகாண்டத்தில் ராஜாவான ராமனின் ஆணைப்படி சீதையைக் காட்டில் விட்டு விட்டு அயோத்திக்குத் திரும்பி வந்த லட்சுமணன் மாளிகையில் ராமர் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து வியந்து, நீங்கள் தானே சீதையைக் காட்டில் விட ஆணையிட்டீர்கள், பின் அழுவது ஏன் என்று கேட்க, ராமர், “அப்படி ஆணையிட்டது ராஜாராமன், இப்போது அழுவது சீதாராமன்” என்று ராமர் பதில் சொல்கிறார். இதைப் படித்து உத்வேகம் பெற்று ராமர் எத்தனை ராமரடி பாடலை இயற்றினேன்” என்று சொன்னாராம்!

வசந்தத்தில் ஓர் நாள்

 

ஆக இந்த வகையில் இன்னும் ஒரு பெண் பார்க்கும் படலத்தில் வரும் ஒரு பாடலைப் பார்ப்போம். படம் மூன்று தெய்வங்கள். வெளியான ஆண்டு 1971. படத்தை இயக்கியவர் தாதா மிராஸி. பாடலைப் பாடியவர் பி.சுசீலா. இசை அமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இயற்றியதோ கவிஞர் கண்ணதாசன் தான்! ராகம்:தர்பாரி கானடா

பாடலைப் பார்ப்போம்:

வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி
 வைதேகி காத்திருந்தாளோ              வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி
 வைதேகி காத்திருந்தாளோ  வைதேகி காத்திருந்தாளோ

மையிட்ட கண்ணோடு மான் விளையாட           மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தேவி
                                தேவர்கள் யாவரும் திருமண மேடை அமைப்பதை பார்த்திருந்தாளோ தேவி

திருமால் பிரம்மா சிவன் எனும் மூவர்                        காவலில் நின்றிருந்தாளோ தேவி
                                     காவலில் நின்றிருந்தாளோ தேவி
         வைதேகி காத்திருந்தாளோ

வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ

பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில்
       பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில்
                                மூவரும் கொண்டுத் தந்தாரோ அங்கே

       பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில்
                              பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில்
                              மங்கையை வாழ்த்த வந்தாரோ

அங்கே
  சீரோடு வந்து சீதனம் தந்து சீதையை வாழ வைத்தாரோ தேவி

    தேவி வைதேகி காத்திருந்தாளோ

வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ
          தேவி வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ


hanuman or sugreeva

Sugreeva – Vali fighting

காட்சி அமைப்பு அந்தக் காலப் படப்பிடிப்பின் படி மிக பிரமாதமாக அமைந்திருந்தது. நாகேஷ் பிரம்மா. சிவாஜிகணேசன் விஷ்ணு. முத்துராமன் சிவன். அவர்கள் மலையைத் தொட்டுத் தர சிவகுமார் மாலையை சந்திரகலாவிற்கு அணிவிப்பதாக காட்சி அமைகிறது.பாடலைப் படத்தில் பாடுபவர் சந்திரகலா. அந்தக் காலத்தில் தெலுங்கு, கன்னடம், தமிழ், ஹிந்தி என  பல மொழிப் படங்களிலும் கொடி கட்டிப் பறந்தவர். பாடல் காட்சியின் பின்னணியில் தேவ லோகக் காட்சிகள் இடம் பெறுகின்றன. குணசித்திர நடிகரான எஸ்.வி.சுப்பையா, வி.எஸ்.ராகவன் என காட்சி களை கட்டுகிறது.

 

ராமரைப் பாடலில் கொண்டுள்ள திரைப்படங்களில் மூன்று தெய்வங்களும் ஒன்று.

-தொடரும்.

தமிழில் பழ மறையைப் பாடுவோம்: பாரதியார்

bharati stamp

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1474; தேதி 11 டிசம்பர், 2014.
Today is Bharathyar’s Birth Day

அமிழ்தம் அமிழ்தம் என்று கூவுவோம்—நித்தம்
அனலைப் பணிந்து மலர் தூவுவோம்
தமிழில் பழமறையைப் பாடுவோம்—என்றும்
தலைமை பெருமை புகழ் கூடுவோம்

பாரதியார் ஒரு தீர்க்கதரிசி. அவர் சொன்னதெல்லாம் நடந்து வருகிறது. சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்றார். நாம் சந்திரனுக்கு விண்கலம் அனுப்பி வெற்றி கண்டு விட்டோம். சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்றார். இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குள் இலங்கைக்கு சாலைப் பாலம் அமைத்து விடுவோம். எல்லோரும் அமர நிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும் என்றார். நாம் வல்லரசு ஆகும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அப்போது நாம் சொல்வதை எல்லோரும் கேட்பர்.

தேமதுரத் தமிழ் ஓசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்றார். இன்று உலகெங்கும் தமிழ் பள்ளிகளும் தமிழ் சங்கங்களும் தமிழ் கோவில்களும் உள. சொல்லில் உயர்வு தமிச் சொல்லே அதை தொழுது படித்திடடி பாப்பா என்றார். இன்று தமிழ் மொழி செம்மொழியாக் கப்பட்டுவிட்டது. மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர் மகிமை இல்லை. திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்றார். இன்று இந்தியர்கள் திறமையை உலகமே கண்டு வியந்து பெரிய பதவிகளைக் கொடுத்து உயர்ந்த சம்பளத்தில் அமர்த்தியுள்ளது.

தமிழில் பழமறையைப் பாடுவோம், வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே என்றும் பாடினார். வேதத்தின் பெருமைதனை உலகம் போற்றத் துவங்கிவிட்டது. அவர் எதை எதை எல்லாம் மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று எதிர் பார்த்தாரோ அதைத் தானே செய்தும் காட்டினார்.
அவர் பாடல்களில் நிறைய வேத மந்திரங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதோ சில எடுத்துக் காட்டுகள்:

அயம்லோகாஹா ப்ரியதமஹ = அனைத்திலும் இனியது இவ்வுலகம் என்று அதர்வ வேதம் கூறுகிறது. இதை உலகு இன்பக் கேணி என்று மொழி பெயர்த்தார்:
ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகின்பக் கேணி என்றே – மிக
நன்று பல்வேதம் வரைந்த கை
பாரத நாயகி தன் திருக் கை — என்று பாடினார்.

ஏகம் சத் விப்ராஹா பஹூதா வதந்தி = உண்மை ஒன்றே; அறிஞர்கள் அதைப் பலவாறாகப் புகல்வர் – என்று கடவுள் ஒருவரே என்று ரிக் வேதம் சொன்னதையும் மேற்கூறிய வரிகளில் காணலாம்.

இந்துக்கள் பிள்ளையாரைத் தொழாமல் எந்தக் காரியத்தையும் செய்யமாட்டார்கள். சுக்லாம் பரதரம் என்று மந்திரத்தைச் சொல்லித் தலையில் குட்டிக் கொண்டு அமிர்த தாரை விழும் இடத்தில் ‘’அக்யூபிரஸ்ஸர்’’ கொடுத்துவிட்டுத்தான் எல்லா பூஜைகளையும் தொடங்குவர்.. அதை அவர் அழகிய தமிழில்
வெள்ளாடை தரித்த விட்டுணு என்று செப்பிய மந்திரத் தேவனை
=சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் என்று சொல்கிறார்.

Subramanya Bharati

இப்பொழுது எல்லா இந்துக்களுக்கும் ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் சவிதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹீ என்ற காயத்ரி மந்திரம் தெரியும். இதை அவர் அழகிய தமிழில்
“செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்—அவன்
எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” — (காயத்ரி மந்திரம்)
என்று மொழி பெயர்த்தார். சம்ஸ்கிருதம் தெரியாதவர்களும் இந்தத் தமிழ் மந்திரத்தைச் சொன்னால் அறிவு தெளிவு பெறும். நினைத்ததெல்லாம் கைகூடும்.

தர்மம் சர, சத்யம் வத, ……….. என்று தைத்ரீய உபநிஷத் சொல்கிறது. அதைத் தூய தமிழில்,

வேத வானில் விளங்கி, ‘அறம் செய்மின்
சாதல் நேரினும் சத்தியம் பூணுமின்
தீதகற்றுமின் என்று திசை எல்லாம்
மோத நித்தம் இடித்து முழங்கியே — என்று மொழி பெயர்த்தார்.

பிருஹத் ஆரண்யக உபநிஷதத்தில் வரும் புகழ் பெற்ற
அசதோ மா சத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய — என்ற மந்திரத்தை
இருளை நீக்கி ஒளியினைக் காட்டுவாய்
இறப்பை நீக்கி, அமிர்தத்தை ஊட்டுவாய் — என்று அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார்.

பாரதியாரின் பாடலில் அதர்வ வேதத்தின் தாக்கத்தை அதிகம் காணமுடிகிறது.
கண்ணம்மா என் காதலி – என்ற பாடலில்
பாயும் ஒளி நீ எனக்கு, பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு, தும்பியடி நான் உனக்கு
வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நான் உனக்கு
பூணும் வடம் நீ எனக்கு, புது வயிரம் நான் உனக்கு
வான மழை மது நீ எனக்கு, வண்ண மயில் நான் உனக்கு
பானம் அடி நீ எனக்கு, பாண்டமடி நான் உனக்கு

என்பதெல்லாம் அதர்வண வேத (14-2-71) கல்யாண மந்திரத்தின் பாணியில் இருக்கிறது:

இதே போல சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம் என்ற கவிதையில் கை முதல் துவங்கி ஒவ்வொரு அங்கத்தையும் இறைவன் பணியில் பயன்படுத்துவது அதர்வண வேத (19-60) மந்திரத்தின் பாணியில் இருக்கிறது:

ஈசாவாஸ்யம் இதம் சர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத் — என்ற ஈசாவாஸ்ய உபநிஷத வாக்கியம்
துச்சமெனப் பிறர் பொருளைக் கருதலாலே
சூழ்ந்ததெல்லாம் கடவுள் எனச் சுருதி சொல்லும்
என்ற வரிகளில் காணலாம்

இப்படி பாரதி பாடல் முழுதும் வேத முழக்கத்தைக் காணலாம். அவர் பாடியதெல்லாம் வேத மந்திரம் போன்ற சக்தியுடையவை. ஏனெனில் உள்ளத்தில் ஒளி உண்டாகில் வாக்கினிலே ஒளி உண்டாகும் என்று அவரே பாடி வைத்துள்ளார். பாரதி பாடலை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படியுங்கள் உங்கள் உடலிலும், வீட்டிலும் பாசிட்டிவ் வைப்ரேஷன்ஸ் பரவுவதைக் காண்பீர்கள்.

Barathi_by_Kabil
இதோ அவர் எடுத்தாண்ட சில வேத மந்திரங்கள்:
ஜீவா ஜ்யோதிர் அஸுமஹி – ரிக்வேதம்
பொருள்:- அறிவொளி துலங்க நாம் வாழ்வோம்.

ஸர்வ ஆஷா மம மித்ரம் பவந்து
எட்டு திக்கும் என் நண்பர் குழாம் ஆகட்டும் (அதாவது யாதும் ஊரே, யாவரும் கேளிர்)
ஆநோ பத்ராஹா ருதவோ யந்து விஸ்வதஹ – ரிக் வேதம்
அனைத்து திசைகளில் இருந்தும் உயர்ந்த எண்ணங்கள் எங்களை வந்தடைவதாகுக.

அதர்வ வேத மந்திரம் : மணமகளிடம் சொல்கிறான்:–
நம் இருவர் பார்வையும் இனிதாகட்டும்
நம்முடைய முகத்தில் நல் இணக்கம் பிரதிபலிக்கட்டும்
உன் இதயத்தில் எனக்கு இடம் கொடு
நாம் ஈருடல், ஓருயிர்

மணமகள் சொல்கிறாள்:–
இதோ இந்த ஆடையால் உன்னைப் போர்த்துகிறேன்
இது மனுவிடம் இருந்து வந்தது
நீ எனக்கு மட்டுமே சொந்தம் ஆவாயாக
மற்ற எந்தப் பெண்ணையும் புகழாதே
–அதர்வ வேதம் 7-36/37

ஓ இந்திரனே! இந்தப் பெண்ணையும் ஆணையும்
சக்ரவாகப் பறவைகள் போல சேர்த்து வைப்பாயாக
நல்ல வீட்டில் சுகமாக வசித்து
குழந்தைகளுடன் முழு வாழ்வு வாழட்டும்

நான் இது, நீ அவள்
நான் பாட்டு, நீ கவிதை
நான் வானம் நீ பூமி
நாம் இருவரும் கூடி வாழ்வோம்
குழந்திகளுக்கு பெற்றோர் ஆஅவோம்
–அதர்வ வேதம் 14-2

என்னுடைய முந்தைய பாரதி பற்றிய கட்டுரைகள்:
1.மனம் ஒரு பெண், மனம் ஒரு புலி (Posted on 17-2-2014)
2.Quotes from the Greatest Tamil Poet Bharati (11-12-2013)
3.வாழ்க்கையில் வெற்றி பெற பாரதி அட்வைஸ் 10-12-2013
4.பாரதியுடன் 60 வினாடி பேட்டி (16-1-2012 & 10-9-2014)
5.பாரதியின் பேராசை (Posted on 27-12-2012)
6.பாரதி பாட்டில் பகவத் கீதை (Posted on 10-12-2012)
7.பேய்கள் பற்றி பாரதி & விவேகாநந்தர் (Posted on 29-11- 2012)
8.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே (Posted on 10-9-2012)
9.பாரதி பாட்டில் பழமொழிகள் (Posted on 25-6-2012)
10.உங்களுக்கு வள்ளுவனையும் பாரதியையும் தெரியுமா? (27-3-2014)
11.காலா என் காலருகே வாடா! ஞானிகளின் ஞானத் திமிர் (23-3-2014)
12.ஆரிய பாரதி வாழ்க (செப் 10, 2014)

தமிழ்ப் புலவர் மாயமாய் மறைந்தது எப்படி?

yaha1

ஆராய்ச்சிக் கட்டுரை : லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:— 1219; தேதி 7 ஆகஸ்ட் 2014

சங்க இலக்கிய நூலான பதிற்றுப் பத்தில் ஒரு அதிசய நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அதிசயத்தை சிலப்பதிகாரத்தில் இளங்கோவும் இரண்டு இடங்களில் சொல்லிச் சொல்லி வியப்படைகிறார்.

யவனர்களைப் பிடித்து, கைகளைப் பின்புறம் கட்டி, (மொட்டை அடித்து) தலையில் நெய்யை ஊற்றி அவமானப் படுத்தியவன் இமயம் வரை சென்று விற்கொடி நாட்டிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவனுடைய தம்பி பல்யானை செல்கெழுகுட்டுவன். இவன் மீது கவிபாடியவர் பாலைக் கௌதமனார். அவன் 25 ஆண்டுகள் அரசாட்சி செய்தான்.

பல்யானை செல்கெழுகுட்டுவன் பற்றிப் பதிற்றுப் பத்து சொல்கிறது:

ati rudra
Sri Sathya Sai Baba performing Ati Rudra Maha Yajna

அரபிக்கடல் முதல் வங்காள விரிகுடா வரை வரிசையாக யானைகளை நிறுத்தி வைத்து இரு கடல் நீரையும் ஒரு பகலில் நீராடியவன். அகப்பா என்னும் கோட்டையைப் பிடித்து ஒரே பகலில் தீயிட்டுக் கொளுத்தியவன். அயிரை மலையில் உள்ள துர்க்கையை அனுதினமும் வழிபட்டவன். அவனுடைய புரோகிதர் நெடும்பாரதாயனார் என்பவர் வானப் ப்ரஸ்தம் செய்யக் காட்டுக்குச் சென்றார். உடனே இவனும் அரச பதவியை விட்டு காட்டுக்குத் தவம் செய்யப் போய்விட்டான்.

இதை எல்லாம் விடப் பெரிய அதிசயம்!!! பாலைக் கவுதமனார் என்ற பிராமணப் புலவன், அவர் மீது கவி பாடினான் —(காண்க பதிற்றுப்பத்து—மூன்றாம் பத்து). —–புலவரே! உமக்கு என்ன வேண்டும், கேளும், கொடுக்கிறேன் ——– (நீர் வேண்டியது கொண்மின்) ——– என்றான் மன்னர் மன்னன்.

பிராமணப் புலவன் பாலைக் கௌதமன் சொன்னான்: “யானும்என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்”

மன்னன் அசந்தே போனான். உடனே பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெரு வேள்வி வேட்பிக்கப் பத்தாம் பெருவெள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினர் ——- என்று பதிற்றுப் பத்து பதிகம் பகரும்.
elijahchariot
Elijah going by Fire Chariot

அதாவது பெரிய பிராமண அறிஞர்களைக் கலந்தாலோசித்து பத்து யாக யக்ஞங்களுக்கு மன்னன் ஏற்பாடு செய்தான். ஒன்பது வேள்வி முடிந்தது. பத்தாவது வேள்வியில் பார்ப்பனப் புலவன் கௌத்தமன், அவனுடைய மனைவியுடன் மாயமாய் மறைந்து விட்டான். 2000 ஆண்டுக்கு முன் எழுந்த சங்க இலக்கியம் தரும் தகவல் இது.

( ஒரே பகலில் நான்கு கடல்களின் நீரைக் கொண்டு குளிப்பது தமிழ் மன்னர்களுக்குப் பிடித்த விளையாட்டு —- இது சாத்தியமா?——– இது பற்றி முன்னரே நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி இருக்கிறேன். மாயா இன மக்கள் எப்படி ஓடி, ஓடி செய்தி பரப்பினர், மாரத்தன் வீரன் எப்படி 26 மைல் ஓடிவந்து செய்தி சொன்னான், வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி திருச்செந்துரில் தீவாரதனை ஆனவுடன் சாப்பிட்டான் என்பனவற்றை ஏற்கனவே விளக்கி இருக்கிறேன். வானப் பிரஸ்தம் என்பது இந்துக்களின் மூன்றாவது கட்ட வாழ்க்கை என்பதையும் வேறு ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன். கண்டு மகிழ்க!)

பாலை கௌதமனார் பாடிய மூன்றாம் பத்து:

இமையவரம்பன் தம்பி அமைவர
உம்பற்காட்டை தன்கோல் நிறீ இ
அகப்பா எறிந்து பகல் தீ வேட்டு
மதியுறழ் மரபின் முதியரைத் தழீ இக்
கண்ணகன் வைப்பின் மண்வகுத்து ஈத்துக்
கருங்களிற்று யானைப் புணர் நிரை நீட்டி
இருகடல் நீரும் ஒரு பகல் ஆடி
அயிரை பரை இ ஆற்றல் சால் முன்போடு
ஒடுங்கா நல்லிசை உயர்ந்த கேள்வி
நெடும் பாரதாயனார் முந்துறக் காடு போந்த
–பதிற்றுப் பத்து பதிகம்

சிலப்பதிகாரச் செய்தி

பிற்காலத்தில் யாரும் இதை பொய் என்றோ இடைச் செருகல் என்றோ சொல்லிவிடக் கூடாது என்பதற்காக இளங்கோவும் இதை கட்டுரைக் காதையிலும் நடுகற் காதையிலும் பாடிவைத்தார்:

நான்மறையாளன் செய்யுட்கொண்டு
மேல்நிலை உலகம் விடுத்தோன் ஆயினும்
(—வரிகள் 137-137, நடுகற் காதை)

வண்டமிழ் மறையோர்க்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலன் காண்கு
(—வரிகள் 63-64, கட்டுரைக் காதை)

elijah
Elijah fed by Ravens!

கோவலனும் கண்ணகியும் விசேஷ விண்கலத்தில் சுவர்க்கம் சென்றதையும் சிலப்பதிகாரம் கூறும். ராமன், விமானி இல்லாத விசேஷ விமானத்தில் இலங்கையில் இருந்து உத்தரப் பிரதேசம் வந்தது எப்படி என்பதற்கான விஞ்ஞானப் பத்திரிக்கைச் செய்தி ஆதாரத்தை முன்னரே எழுதி இருக்கிறேன். அதே போல விமானி இல்லாத விமானம், பெரியோர்களை அழைத்துச் செல்ல, சுவர்க்கத்தில் இருந்து வரும் செய்தியை புற நானூற்றுப் புலவன் முதுகண்ணன் சாத்தனார் பாடிய பாட்டில் இருந்து நாம் அறிகிறோம் (புற. 27).

இதே போல பைபிளிலும் ஒரு கதை உண்டு.

பைபிளில் விமானம்
பைபிளில் வரும் ஒரு கதை: எலிஜா என்பார் ஒரு தீர்க்கதரிசி. அவர் விக்கிரக ஆராதனையை எதிர்த்தும் ஜெஹோவாவை ஆதரித்தும் பிரசாரம் செய்தவர். அவருக்கு வறட்சிக் காலத்தில், அண்டங் காக்கைகள் உணவு கொண்டு வந்தன. திரவுபதி வைத்திருந்த அட்சய பாத்திரம் போல, ஒரு விதவைப் பெண்ணிடம் இருந்த பாத்திரத்தில் இருந்து ரொட்டிக்கான பொருட்களை வரவழைத்தார். அவளுடைய இறந்துபட்ட குழந்தையை அப்பர், பெருமான, திருஞான சம்பந்தர் ஆகியோர் குழந்தைகளை உயிர்ப்பித்துத் தந்தது போல உயிர்ப்பிக்கிறார். அவருக்கு சொர்கத்துக்குப் போவதற்கு தீ கக்கும் ஒரு ரதம் வருகிறது. அதை இழுக்கும் குதிரைகளும் ஜோதி ரூபத்தில் இருந்தன. அவர் ஒரு சூறாவளியால் தூக்கப்பட்டு அந்த ரதத்தில் சென்று மறைந்தார்.

elijah ascent to heaven
Place where Elijah ascended in Jordan

ஆக, யாகத் தீயில் மாயமாய் மறைந்த பார்ப்பனன், பார்ப்பனி, ஜோதி ரதத்தில் மறைந்த எலிஜா ஆகியோர் கதைகள் சுவையான பல விஷயங்களைத் தருகின்றன. இன்றுவரை அவைகளை உண்மையே என்று நம்புவோர் இருப்பதையும் காண்கிறோம்.

வாழ்க வண்டமிழ் மறையோர் = தமிழ் பிராமணர்கள்!!

–சுபம்–