கம்பன் கவிதையில் எட்டெழுத்து மந்திரம் (Post No.4960)

Written by London Swaminathan 

 

Date: 29 APRIL 2018

 

Time uploaded in London – 9-25 am (British Summer Time)

 

Post No. 4960

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

எட்டெழுத்து, ஐந்தெழுத்து, ஆறெழுத்து மந்திரங்களின் புகழை இந்துக்கள் அனைவரும் அறிவார்கள்.

 

ஓம் நமோ நாராயணாய என்று சொல்லி, கோபுரத்தின் உச்சியில் இருந்து எட்டெழுத்து மந்திரத்தின் பெருமைதனை பறை  சாற்றினார் ராமானுஜர்.

ஐந்தெழுத்தின் மந்திர சக்தியை நமசிவாய என்று சொல்லி பல அற்புதங்களைச் செய்து தமிழ் கூறு நல்லுலகத்தை சைவ நெறியில் திருப்பினர் அப்பர், சம்பந்தர், சுந்தர மாணிக்க வாசகர் முதலானோர்.

 

ஓம் சரவண பவ என்று சொல்லி ஆறெழுத்தின் மந்திர சக்தியை உலகிற்கு நிலை நாட்டினர் அருணகிரி நாதர், தேவராய சுவாமிகள் முதலானோர்.

 

கம்பன் பாடிய ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் இரணியன் வதைப் படலத்தில் பிரஹலாதன் வாயிலாக எட்டெழுத்து மந்திரத்தின் மஹிமையை கம்பன் சொல்லும் அழகு தனி அழகு. கம்பன் வழி தனீ,,,,,,,,,,,,,,,,,, தனி வழி!

 

கம்பன் பாடல் ஒவ்வொன்றையும் மென்று, கடித்து, சுவைத்து, ரஸித்துப் படிக்க வேண்டும்.

 


சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,
சொற்புதிது, சோதிமிக்க
நவகவிதை’

 

என்று பாரதி சொன்னானே அது பாரதி கவிதைக்கும் பொருந்தும்; கம்பன் கவிதைக்கும் பொருந்தும்.

 

இதோ எட்டெழுத்து மந்திரப் பாடல்கள்:

இரணியன், அவனுடைய மகனான பிரஹலாதனை, ஓம் நமோ ஹிரண்யகஸிபே நமஹ என்று சொல்ல வேண்டும் என்று கட்டளையிடுகிறான். இதற்காக ஒரு பிராஹ்மண வாத்தியாரையும் அமர்த்தி பாடம் சொல்லிக்  கொடுக்கிறான். அவனோ மீண்டும் மீண்டும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்தை உச்சரிக்கிறான். ஆசிரியர் ஐயாவுக்கு குலை நடுக்கம் எடுத்தது. உடனே ஓடிப்போய் ஹிரண்யகஸிபுவிடம் உண்மையை உரைக்கிறார். அவர் நுவல்வதைக் கேட்டு பிரஹ்லாதனைப் பல வகைச் சித்திரவதைகளுக்கு உட்படுத்துகிறான். அவனும் அப்பர் என்னும் திருநாவுக்கரசர் மாமன்னன் மஹேந்திர பல்லவனின் சித்திரவதைகளில் இருந்து ஐந்தெழுத்து மந்திரம்ர சொல்லி தப்பியது போல, எட்டெழுத்து மந்திரம் சொல்லித் தப்பி விடுகிறான்.

 

அப்பொழுது இரணியன் நேரே வந்து தன் மகனை அடக்கப் பார்க்கிறான். அந்தக் கட்டத்தில் பிரஹலாதன் சொல்லுவான்:

 

 

 

காமம் யாவையும் தருவதும் அப்பதம் கடந்தால்

 

சேம வீடுறச் செய்வதும் செந்தழல் முகந்த

 

ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்

 

நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய

 

கேட்டதை எல்லாம் கொடுப்பான்; அது அலுத்துப் போய் மோட்சம் வேண்டின் அதையும் தருவான்; யார் அவன்? சுவர்க்கம் போக ஹோமம் செய்யும்போது சொல்லும் பெயர் இருக்கிறதே! அதுதான்– நமோ நாராயணாய.

மண்ணின் நின்று மேல் மலர் அயனுலகு உறவாழும்

எண் இல் பூதங்களில் நிற்பனதிரிவன இவற்றின்

உள் நிறைந்துள கரணத்தின் ஊங்கு உள உணர்வும்

எண்ணுகின்றது இவ் எட்டு எழுத்தே பிறிது இல்லை

 

பொருள்

இந்த பூமி முதல் மேலேயுள்ள பிரம்ம லோகம் வரையுள்ள எல்லா உலகங்களிலும் இருக்கும் உயிரினங்களிலும் அறிவும் நினைப்பும் இந்த எட்டெழுத்துதான்.

 

முன்கண் டேவனும் நான் முகத்து ஒருவனும் முதலா

மக்கள் காறும் இம்மந்திரம் மறந்தவர் மறந்தார்

புக்குக் காட்டுவதரிது இது பொதுவுறக் கண்டார்

ஒக்க நோக்கினர் அலவர் இதன் நிலை உணரார்

பொருள்:

மூன்று கண் உடைய சிவனும் நான்கு முகம் உடைய பிரம்மாவும் முதலாக சாதாரண மனிதர் வரை யாராவது இந்த எட்டெழுத்துப் பெயரை மறந்தால் அவர்கள் இறந்தவர்களே இதன் மஹிமையை விரித்துச் சொல்ல இயலாது; சமய வேறுபாடின்றி நடு நிலையோடு பார்க்கும் விவேகம் உடையோருக்கு– ஞானிகளுக்கு– இதன் மஹிமை நன்கு விளங்கும்; கல்லாத மற்றவர் இதன் பெருமையை அறியார்.

 

இவ்வாறு பிரஹலாதன் விளக்கிக் கொண்டே போகிறான்.

கம்பன்   இ ந்தப் படலத்தில் ஓம், உபநிஷதம் முதலிய தத்துவங்களையும் விளக்குகிறான்.

 

ஒவ்வொரு பாடலையும் ஊன்றிப் படிப்போருக்கு ஆனந்தம் கிட்டும்.

 

–சுபம்–

ராமன் பற்றி ராவணன் கிண்டல்/பரிஹாசம் (Post No.4957)

Written by London Swaminathan 

 

Date: 28 APRIL 2018

 

Time uploaded in London – 14-37 (British Summer Time)

 

Post No. 4957

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

ராமன் பற்றி ராவணன் கிண்டல்/பரிஹாசம் (Post No.4957)

இராம பிரானின் வீரத்தையும் புகழையும் சொல்லி, அவன் திருமாலின் அவதாரம், ஆகையால் சீதையை ஒப்படைப்பதே நன்மை பயக்கும் என்று விபீஷணன் புத்திமதி சொல்கிறான் இராவணனுக்கு.

அதற்கு இராவணன் வெடிச் சிரிப்பு சிரித்துவிட்டு,  சில பாடல்களில் இராம பிரானைக் கிண்டல் செய்கிறான்; சுவையான பாடல்கள்.

 

இவை யுத்த காண்டத்தில் இராவணன் மந்திரப் படலத்தில் உள்ள பாடல்கள்.

இந்திரன் தனை இருஞ்சிறையிட்ட நாள் இமையோர்

தந்தி கோடு இறத் தகர்த்த நாள் தன்னை யான் முன்னம்

வந்த போர் தொறும் துரந்த நாள் வானவர் உலகை

சிந்தவென்ற நாள் சிறியன் கொல் நீ சொன்ன தேவன்

 

பொருள்:

ஏ விபீஷணா! நீ சொன்னாயே ஒரு தேவன், அவன் நான் இந்திரனைச் சிறையில் வைத்தபோது வரவில்லை; தேவரின் யானையான ஐராவதத்தின் கொம்புகளை (தந்தம்) முறித்த போதும் வரவில்லை; அது போகட்டும்; திருமாலையே நான் புறமுதுகு காட்டி ஓட வைத்தேனே அப்போதும் வரவில்லை; தேவர்கள் உலகத்தை நான் வென்றபோது அவர்கள் பயந்து ஓடினர். அப்போதும் வரவில்லை. ஒருவேளை நீ சொன்ன தேவன் பச்சைக் குழந்தையாக இருந்தானோ!!

 

 

இன்னொரு பாட்டில் “அட, உன் திருமால், ஆயிரம் தோள்– ஆயிரம் கைகளை எடுத்தவனாயிற்றே! ஓரடிக்குள் பூமியை அளந்தானே.  அதெல்லாம் சிறுமையுடையது என்று கருதி இப்பொழுது நாம் உணவாக உண்ணும் மனித வடிவத்தை எடுத்தானோ!” என்று பரிஹாசம் செய்கிறான்.

ரிக்வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் உள்ள புகழ் மிகு புருஷசூக்தம்

என்னும் துதியில் “ஸஹஸ்சீர்ஷா புருஷஹ, ஸஹஸ்ராக்ஷ ஸஹஸ்ரபாத்”- என்று விஷ்ணு புகழப்படுகிறான் (ஆயிரம் தலை, ஆயிரம் கண், ஆயிரம் கால்). இன்னொரு துதியில் மூன்று அடி எடுத்த த்ரிவிக்ரம அவதாரம் பற்றி வருகிறது. இவை எல்லாம் கம்பனுக்கு அத்துபடி.

பகவத் கீதையில் கண்ணன் எடுத்த விஸ்வரூபத்திலும் இப்படிப்பட்ட வருணனை உண்டு.

ஆயிரம் பெருதோள்களும் அத்துணைத் தலையும்

மாயிரும் புவி உள்ளடி அடக்குறும் வடிவும்

தீய சாலவும் சிறிது என நினைத்து நாம்தின்னும்

ஓயும் மானுட உருவுகொண்டனன் கொலாம் உரவோம்

இதே காண்டத்தில் ஓம், உபநிஷதம் ஆகியவற்றின் பெருமையையும் விளக்குகிறான்.

 

 

இதில் இன்னொரு விசயத்தையும் இந்த காண்டத்தில் கம்பன் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறான். வேதம் படித்தாலும், வீணை வாசித்தாலும், தங்கக் கோட்டையில் வசித்தாலும் அரக்கர் இனம் மனிதர்களைத் தின்னும் (CVANNIBALS) இனம் என்பதாகும்

 

இக்கால வெள்ளையர்களை இராவணனுக்கு ஒப்பிடலாம்; எவ்வளவுதான் ராக்கெட் விட்டாலும் அணுகுண்டு வெடித்தாலும், பொருளாதாரத்தில் முன்னிலையில் இருந்தாலும் மேலை நாடுகள் பெட்ரோலியம் கொடுக்காத நாடுகள் மீது பொய்க் குற்றம் சாட்டி குண்டு மழை பொழிவதையும்,பெட்ரோலியம் கொடுக்கும் துலுக்க நாடுகளில் அடிப்படை உரிமையே இல்லாத போதும் அவைகளைக் கண்டுகொள்ளாமல் அவைகளுக்கு ஆயுதம் விற்பதையும் இராவண ஆட்சியுடன் ஒப்பிடலாம்.

அதுமட்டுமல்ல; சென்றவிடமெல்லாம் பழங்குடி மக்களை பறவைகளைச் சுடுவது போலச் சுட்டுத் தள்ளினர்; சிலர் அந்த நர மாமிசத்தை தின்னவும் செய்தனர்!

கடைசியாக ராவணன்  கூறுவது இன்னும் பகடி செய்கிறது:

பித்தன் ஆகிய ஈசனும் அரியும் என்பெயர்கேட்டு

எய்த்த சிந்தையர் ஏகுழி ஏகுழி எல்லாம்

கைத்த ஏற்றினும் கடவிய புள்ளினும் முதுகில்

தைத்த வாளிகள் நின்றுள குன்றின் வீழ் தடித்தின்

 

 

பொருள்:

என் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் பைத்தியக்காரனான சிவனும் திருமாலும் காளையிலும், கருடனிலும் ஏறி ஓடிப்போயினர். அப்போது நான் விட்ட அம்புகள், மலையில் இடி விழுந்த தடம் போலத் தழும்பேறிக் கிடக்கின்றன.

 

இவ்வாறு இராவணன் கிண்டல் செய்தவுடன், விபீஷணன் பதில் தருகிறான். அண்ணா! உன்னைவிட வலிமை படைத்ட் இரணியன் கதை கேள் என்று இரணியன் வதைப் படலத்தைச் சொல்கிறான். அது மிகவும் சுவையான பாடல்கள் கொண்ட பகுதி; தனிக் கட்டுரையில் தருகிறேன்.

–சுபம்–

கம்ப ராமாயண யுத்த காண்டப் பொன்மொழிகள் (POST No.4956)

கம்ப ராமாயண யுத்த காண்டப் பொன்மொழிகள் (POST No.4956)

 

மே 2018 நற்சிந்தனை காலண்டர்

 

 

COMPILED by London Swaminathan 

 

Date: 28 APRIL 2018

 

Time uploaded in London – 8-43 am (British Summer Time)

 

Post No. 4956

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

மே 2018 காலண்டர்

(2018 சித்திரைவைகாசி மாத நற்சிந்தனை காலண்டர்;

விளம்பி காலண்டர்)

 

முக்கிய விழாக்கள் – 28-  வைகாசி விசாகம்; அக்னி நட்சத்திரம் ஆரம்பம் -4 முடிவு– 28; 10-ஹனுமான் ஜயந்தி (தெலுங்கு தேசம்); பாங்கு விடுமுறை திங்கள்-7 AND 28. 

பௌர்ணமி– – 29; அமாவாசை– –  15; ஏகாதஸி விரதம்—11, 15

சுப முகூர்த்த தினங்கள்:- 2, 4, 6, 7, 13, 20, 25, 27

 

 

 

 

மே 1 செவ்வாய்க்கிழமை

 

ஒன்றெ என்னின் ஒன்றேயாம்

பல என்று உரைக்கின் பலவேயாம்

அன்றே என்னின் அன்றேயாம்

ஆமே என்னின் ஆமேயாம் (கடவுள் பற்றி கம்பன்)

 

மே 2 புதன்கிழமை

கங்குல் பொழுதும் துயிலாத

கண்ணன் கடலைக் கண்ணுற்றான் ( இரவிலும் கூட தூங்காத ராமன் கடலைக் கண்டான்.)

 

மே 3 வியாழக்கிழமை

முழுப்பெருந்தனி முதல் உலகின் முந்தையோன் (படைப்புக் கடவுளான பிரம்மா பற்றி கம்பன்)

 

மே 4 வெள்ளிக்கிழமை

பண்டிதர் பழையவர் கிழவர் பண்பினர்

தண்டலில் மந்திரத் தலைவர் சார்க (அறிஞர், நீண்ட நாள் பழகியவர், சுற்றத்தார், பண்புடையோர், நல்ல ஆலோசனை கூறும் அமைச்சர்கள் வருக என ராவணன் ஆணையிட்டான்)

 

 

மே 5 சனிக்கிழமை

உலங்கும் நம்மேல் வரின் ஒழிக்கற்பாலதோ (எதிரிகளை ஒழிக்காவிட்டால் கொசு வந்தால் கூட நம்மால் அதை விரட்ட முடியாது)

 

மே 6 ஞாயிற்றுக் கிழமை

வெள்ளியம் கிரியினை விடையின் பாகனோடு (சிவன் பற்றிக் கம்பன்; வெள்ளிமலை- கயிலை, விடை-ரிஷப வாஹனம்)

 

மே 7 திங்கட்கிழமை

மண்ணியல் மனிசரும் குரங்கும் மற்றவும்

உண்ணிய மைந்தன உணவுக்கு (மனிதர்கள், குரங்கு, ஏனைய விலங்குகள் எல்லாம் நாம் சாப்பிட அல்லவா படைக்கப்பட்டுள்ளது; அரக்கர் சொல்லுவது)

 

மே 8 செவ்வாய்க்கிழமை

 

நீ அயன் முதல் குலம் இதற்கு ஒருவன் நின்றாய்

ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்தறிவு அமைந்தாய்

(ராவணா! நீ பிராமணன்; பிரம்மன் முதல் தோன்றிய நம் குலத்தில் நீ ஒப்பற்றவன்; ஆயிரம் கிளைகள் (ஷாகா) கொண்ட சாம வேதத்தை அறிந்தவன்)

 

மே 9 புதன்கிழமை

ஆசில் பரதாரம் அவை அம் சிறை அடைப்பேம்

மாசில்புகழ் காதலுறுவேம் வளமை கூரப்

பேசுவது மானம் இடை பேணுவதும் காமம்

கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம்

(மாற்றான் மனைவியை சிறை வைப்போம்; புகழை விரும்புவோம்;வீ ரம் பேசுவோம்; காமத்துடன் உலவுவோம்; ஆனால் வலிமை அற்ற மனிதரைக் கண்டு பயப்படுகிறோம்!நன்றாக இருக்கிறதப்பா!)

 

மே 10 வியாழக்கிழமை

யானை இலர் தேர் புரவி யாதும் இலர் ஏவும்

தானை இலர் நின்ற தவம் ஒன்றும் இலர் தாமோ

கூனல் முதுகின் சிறு குரங்கு கொடு வெல்வார்

ஆனவரும் மானுடர் நம் ஆண்மை இனிது அன்றோ

 

யானை, தேர், குதிரைப்படையோ, ஆயுதங்களோ இல்லாமல் கூன்முது கொண்ட குரங்கின் மேல் ஏறி வரும் மனிதர்கள் நமக்கு உணவாக வேண்டியவர் ஆவர். இவர்கள் ஜெயிப்பார் என்று சொல்வது நல்ல அழகப்பா!!)

 

மே 11 வெள்ளிக்கிழமை

கோநகர் முழுவதும் நினது கொற்றமும்

சானகி எனும் பெயர் உலகின் தம்மனை

ஆனவள் கற்பினால் வெந்தது (ராவணா, குரங்கு சுட்டதால் இலங்கை தீப்பற்றியது என்று எண்ணாதே; சீதையின் கற்புதான் எரித்தது – வீடணன் கூற்று)

 

மே 11 வெள்ளிக்கிழமை

உயர்வு மீட்சியும்

பெண்பொருட்டு அன்றியும் பிறிது உண்டாம் எனின்

மண்பொருட்டு அன்றியும் ,வரவும் வல்லவோ (பெண்ணினால் வீழ்ச்சி வராவிடில் மண்ணினால்  அழிவு வரும்; வேறு காரணம் உண்டா? வீடணன் கேள்வி))

 

மே 12 சனிக்கிழமை

 

நாலு தோள் நந்திதான் நவின்ற சாபத்தால்

கூல வான்குரங்கினால் குறுகும் கோள் அது

வாலிபால் கண்டனம் (நந்தி இட்ட சாபத்தால் குரங்கினால் உனக்கு அழிவு வரும் என்பதை வாலி யிட்ட சண்டையால்தால் அறிந்தாம்)

 

மே 13 ஞாயிற்றுக் கிழமை

தீயிடைக்குளித்தவத் தெய்வக் கற்பினாள்

வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ (தீக்குளித்த வேதவதி இட்ட சாபத்தை தடுக்கும் வல்லமை நமக்கு உண்டா? வீடணன் கேள்வி))

 

 

மே 14 திங்கட்கிழமை

அடல்படைத்து அவனியை பெருவளம்தருக என்றருளினானும்

கடல்படைத்தவரொடும் கங்கை

தந்தவன் வழிக்கடவுள் மன்னன் ( பூமியை வென்று வளம் கொடு என்று கட்டளையிட்ட பிருதுவும், கடலை உண்டாக்கிய சகரரும், கங்கையைக் கொடுணர்ந்த பகீரதனும் உதித்த சூரிய குலத்தில் வந்தவன் தசரதன்)

 

 

மே 15 செவ்வாய்க்கிழமை

ஈசனின் பெறு படைக்கலம்

இமைப்பு அளவில் எவ்வுலகில் யாவும்

நாசம் உற்றிட நடப்பன

கொடுத்தன பிடித்துடையர் நம்ப ( நொடிப் பொழுதில் எல்லாவற்றையும் அழிக்கும் ஆயுதங்களைக் கோசிகன் சிவனிடம் இருந்து பெற்று அவர்களுக்கு  அளித்தான்.)

 

மே 16 புதன்கிழமை

தெறு சினத்தவர்கள் முப்புரம்

நெருப்புற உருத்து எய்த அம்பும்

குறுமுனிப்பெயரினான் நிறைதவர்க்கு

இறைதரக் கொண்டு நின்றார் (ராமன் கையில் உள்ள ஆயுதங்கள் சிவன் கொடுத்த அம்பு, திருமாலின் வில்;அகத்தியவர் கொடுத்தவை)

 

மே 17 வியாழக்கிழமை

குலத்த கால் வயநெடுங் குதிரையும்

அதிர் குரல் குன்றும் இன்று

வலத்த கால் முந்துறத் தந்து நம்

மனையிடைப் புகுவ மன்னோ (குதிரைகளும் யானைகளும் வலது காலை வைத்து வீட்டிற்குள் வருகின்றன; தீய சகுனம்; அதாவது வீரர்கள் கைவிட்ட மிருகங்கள் மட்டும் திரும்பி வருகின்றன)

 

மே 18 வெள்ளிக்கிழமை

அசைவில் கற்பின் அவ் அணங்கை விட்டருளுதி இதன் மேல்

விசையம் இல் எனச் சொல்லினன் அறிஞரின் மிக்கான் (மாறாத கற்புடைய தெய்வப் பெண்ணாகிய சீதையை ராமனிடம் திருப்பி அனுப்பு; அதுவே வெற்றிதரும்– வீடணன் புத்திமதி)

 

மே 19 சனிக்கிழமை

 

வந்த போர்தொறும் துரந்த நாள் வானவர் உலகை

சிந்தவென்ற நாள் சிறியன் கொல் நீ சொன்ன தேவன் (ராமன் பற்றி ராவணன் கிண்டல்: இந்திரன், விஷ்ணு, தேவர்கள் ஆகியோரை ஒவ்வொரு போரிலும் ஓட ஓட விரட்டினேன்; அப்போதெல்லாம் நீ புகழும் ராமன் சின்னப் பயலாக இருந்தானோ?)

 

மே 20 ஞாயிற்றுக் கிழமை

 

ஒற்றை அண்டத்தின் அளவினோ அதன் புறத்து உலவா

மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான் (இரணியன் பெயர் இந்த அண்டத்தில் மட்டும் இன்றி பிற அண்டங்களிலும் பரவியது;தமிழர்களின் வானியல் அறிவினைக் காட்டும் பாடல்)

 

 

மே 21 திங்கட்கிழமை

வேதத்தின் உச்சியின் மெய்ப்பொருட் பெயரினை விரித்தான் (வேதத்தின் உச்சியான உபநிடதத்தில் கூறப்படும் உண்மைக் கடவுளின் பெயரினை (பிரகலாதன்) கூறினான்

 

 

மே 22 செவ்வாய்க்கிழமை

என்னை உய்வித்தேன் எந்தையை யுய்வித்தேன் இனைய

உன்னை உய்வித்து இவ்வுலகையும் உய்விப்பான் அமைந்து

முன்னை வேதத்தின் முதற் பெயர் மொழிவது மொழிந்தேன்

என்னை குற்றம் நான் இயம்பியது இயம்புதி என்றான் (ஆசிரியரிடம் பிரகலாதன் சொன்னது: என்னையும், என் தந்தையையும், உங்களையும் ,உலகில் உள்ள எல்லோரையும் ஈடேறச் செய்யும், ஓம் எனும் வேதத்தின் முதல் எழுத்து உணர்த்தும் ஒருவன் பெயரைத்தானே- ஓம் நமோ நாராயணாய- நான் சொன்னேன்; இது ஒரு குற்றமா? சொல்லுங்கள்)

 

மே 23 புதன்கிழமை

 

காடு பற்றியும் கனவரை பற்றியும் கலைத்தோல்

மூடி பற்றியும் முண்டித்தும் நீட்டியும் முறையால்

வீடு பெற்றவர் பெற்றதின் விழுமிது என்றுரைக்கும்

மாடு பெற்றெனென் மற்று இனி என் பெற வருந்தி (முனிவர் தோற்றம்: காடு,மலையில் வாழ்வர்-மான் தோல் அணிவர்-முடியை மழிப்பர், வளர்ப்பர்- மோட்சத்தை அடைவர்- அதைவிடப் பெரிய செல்வம் எனக்குக் கிடைத்தது-பிரகலாதன் செப்பியது)

 

மே 24 வியாழக்கிழமை

காமம் யாவையும் தருவதும் அப்பதம் கடந்தால்

சேம வீடுறச் செய்வதும் செந்தழல் முகந்த

ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்

நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய (கேட்டதை எல்லாம் கொடுப்பான்; அது அலுத்துப் போய் மோட்சம் வேண்டின் அதையும் தருவான்; யார் அவன்? சுவர்க்கம் போக ஹோமம் செய்யும்போது சொல்லும் பெயர் இருக்கிறதே! அதுதான்– நமோ நாராயணாய)

 

மே 25 வெள்ளிக்கிழமை

அரவின் நாமத்தை எலி இருந்து ஓதினால் அதற்கு

விரவு நன்மை என் துன்மதி விளம்பு என வெகுண்டான்( பிரகலாதனிடம் இரணியன் விளம்பியது: பாம்பின் பெயரை எலி இடைவிடாது ஓதினால் அதற்கு என்ன நன்மை கிடைக்கும்? சொல்)

 

 

மே 26 சனிக்கிழமை

வித்து இன்றி விளைவது ஒன்றில்லை வேந்த நின்

பித்து இன்றி உணர்தியேல் அளவைப் பெய்குவேன் (பிரகலாதன் மொழிவது: அரசனே, விதை இல்லாமல் மரம் முளைக்காது; நீ பைத்தியம் தெளிந்து கேட்பாயின் தத்துவப் பொருளை அறியும் வழியைச் சொல்வேன்)

 

மே 27 ஞாயிற்றுக் கிழமை

உபநிடதங்கள் ஓதுவ

கிளவிஆர் பொருள்களான் கிளக்குறாதவன்

களவை யார் அறிகுவார் மெய்ம்மை கண்டிலார் ( உபநிடதச் சொற்களால் விளக்கமுடியாதவன்; அவன் தன்மையை யார் அறிவார்? யாரும் கண்டதில்லை)

மே 28 திங்கட்கிழமை

 

முந்தை ஓரெழுத்து என வந்து மும்முறைச்

சந்தியும் பதமுமாய்த் தழைத்த தன்மையான் (ஓம் அவன்; அ, உ, ம சந்தி அவன்)

மே 29 செவ்வாய்க்கிழமை

ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் தன்மையான் -(ஆலமரத்தையும் அதைத் தன் சிறிய விதைக்குள் அடக்கியது போல பிரபஞ்சத்தை அன்னுள் கொண்டவன்)

 

மே 30 புதன்கிழமை

ஓம் எனும் எழுத்து அதனின் உள் உயிர்

ஆம் அவன் அறிவினுக்கு அறிவும் ஆயினான் (ஓம் எனும் எழுத்தும், அதிலுள்ள அ,உ, ம, வில், அகார உயிராக உள்ளான்)

 

மே 31 வியாழக்கிழமை

கன்று புல்லிய கோள் அரிக்குழு எனக்

கனக்கின்ற தறுகண்ணார் ( குட்டி யானையை சிங்கக் கூட்டம் சூழ்ந்துகொண்டது போல, அரக்கர்கள் பிரகலாதனைச் சுற்றி வளைத்தனர்)

 

–SUBHAM–

பாரதி போற்றி ஆயிரம் – 83 (Post No.4955)

Compiled by S NAGARAJAN

 

Date: 28 April 2018

 

Time uploaded in London –  8-02 AM  (British Summer Time)

 

Post No. 4955

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 83

  பாடல்கள் 742 முதல் 778

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

புலவர் கு.ப. பெருமாள் இயற்றிய       பாரதியின் “பா”ரதம்

இந்த பாரதியாரின் வரலாற்று நூலில் பல அத்தியாயங்கள் உள்ளன. நூலை முழுவதுமாகத் தர இயலாத நிலையில் தேர்ந்தெடுத்த கவிதைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. இங்கு மதுரையில் மாகவி என்ற அத்தியாயத்தில் உள்ள 18 பாடல்களையும் சுதேசமித்திரனில் துணையாசிரியர் என்ற அத்தியாயத்தில் 19 பாடல்களையும் படித்து மகிழலாம். நூலின் பக்கங்களை அப்படியே காணலாம்.

இணைப்பாகத் தரப்படுபவை :

மதுரையில் மாகவி – 18 பாடல்கள்

சுதேசமித்திரனில் துணையாசிரியர் – 19 பாடல்கள்

 

 

தொகுப்பாளர் குறிப்பு:
புலவர் கு.பொ.பெருமாள் பல்வேறு சந்தங்களில் மரபு நிலை மாறாது பாடல்களை யாத்துள்ளார்.

இவரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மாவட்டம் புளியம்பட்டியில் இருக்கும் புலவர் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.

கவிஞர் கு.பொ.பெருமாள் அவர்களுக்கும் புலவர் பதிப்பக உரிமையாளருக்கும் நமது நன்றி

***

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 82 (Post No.4950)

Compiled by S NAGARAJAN

 

Date: 26 April 2018

 

Time uploaded in London –  8-15  AM  (British Summer Time)

 

Post No. 4950

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 82

  பாடல்கள் 728 முதல் 741

 

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

புலவர் கு.ப. பெருமாள் இயற்றிய       பாரதியின் “பா”ரதம்

இந்த பாரதியாரின் வரலாற்று நூலில் பல அத்தியாயங்கள் உள்ளன. நூலை முழுவதுமாகத் தர இயலாத நிலையில் தேர்ந்தெடுத்த கவிதைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. இங்கு அரண்மனையில் அருட்கவி என்ற அத்தியாயத்தில் உள்ள 14 பாடல்களைப் படித்து மகிழலாம்.

அத்துடன் நூலை அப்படியே புகைப்படங்களாக எடுத்து அளிக்கும் உத்தி கையாளப்படுகிறது.

ஆகவே நூலின் பக்கங்களை அப்படியே காணலாம்.

இணைப்பாகத் தரப்படுபவை :

அரண்மனையில் அருட்கவி – 14 பாடல்கள்

 

 

 

 

 

தொகுப்பாளர் குறிப்பு:
புலவர் கு.பொ.பெருமாள் பல்வேறு சந்தங்களில் மரபு நிலை மாறாது பாடல்களை யாத்துள்ளார்.

இவரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மாவட்டம் புளியம்பட்டியில் இருக்கும் புலவர் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.

கவிஞர் கு.பொ.பெருமாள் அவர்களுக்கும் புலவர் பதிப்பக உரிமையாளருக்கும் நமது நன்றி

***

 

பாரதி போற்றி ஆயிரம் – 81 (Post No.4944)

Compiled by S NAGARAJAN

 

Date: 24 April 2018

 

Time uploaded in London –  7-29  AM  (British Summer Time)

 

Post No. 4944

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 81

  பாடல்கள் 702 முதல் 727

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

புலவர் கு.ப. பெருமாள் இயற்றிய       பாரதியின் “பா”ரதம்

இந்த பாரதியாரின் வரலாற்று நூலில் பல அத்தியாயங்கள் உள்ளன. நூலை முழுவதுமாகத் தர இயலாத நிலையில் தேர்ந்தெடுத்த கவிதைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. இங்கு காசியில் கவிஞன் என்ற அத்தியாயத்தில் உள்ள 26 பாடல்களைப் படித்து மகிழலாம்.

அத்துடன் நூலை அப்படியே புகைப்படங்களாக எடுத்து அளிக்கும் உத்தி கையாளப்படுகிறது.

ஆகவே நூலின் பக்கங்களை அப்படியே காணலாம்.

இணைப்பாகத் தரப்படுபவை :

காசியில் கவிஞன் – 26 பாடல்கள்

 

 

 

 

தொகுப்பாளர் குறிப்பு:
புலவர் கு.பொ.பெருமாள் பல்வேறு சந்தங்களில் மரபு நிலை மாறாது பாடல்களை யாத்துள்ளார்.

இவர் தன்னைப் பற்றிக் கூறுவதில் ஒரு சிறு பகுதி: “ உயர் பள்ளி சென்று ஒரு நாளும் கல்லாத யான் கறைப்பட்டவனாகச் சிறைப் (ஆயுட்சிறை) பட்ட காலத்தில் இருபத்து ஏழாம் அகவையில் இருட்டறையில் தவித்த எனக்கு, அணையா ஒளிவிளக்காகக் கல்வி அறிவூட்டிப் புலவனாக வெளியில் வரும் நிறைவுற்றவனாகச் செய்தவர், இதயத்துள் என்றும் நிற்கும் என் ஆசிரியர் ஆவார்கள்.”

இவரது ஆசிரியர் நக்கீரன்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மாவட்டம் புளியம்பட்டியில் இருக்கும் புலவர் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.

முதற் பதிப்பு டிசம்பர் 2003. விலை ரூ 35/ (144 பக்கங்கள்)

கவிஞர் கு.பொ.பெருமாள் அவர்களுக்கும் புலவர் பதிப்பக உரிமையாளருக்கும் நமது நன்றி

***

 

டாக்டர் நாகசாமியின் திருக்குறள் நூல் தரும் புதிய செய்திகள் (Post No.4940)

டாக்டர் நாகசாமியின் திருக்குறள் நூல் தரும் புதிய செய்திகள் (Post No.4940)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 22 April 2018

 

Time uploaded in London –  20-54 (British Summer Time)

 

Post No. 4940

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

டாக்டர் இரா நாகசாமியை அறியாதோர் தமிழகத்தில் இருக்க முடியாது. தொல்பொருட் துறை இயக்குநராக நீண்ட காலம் பணியாற்றியவர். காஞ்சிப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர். தமிழ் வரலாறு, தமிழக தொல்லியல் துறையில் கரை கண்டவர். உலகம் முழுதும் சென்று தமிழ்க் கலாசாரம் பற்றி விரிவுரை ஆற்றியவர்; 50-க்கும் மேலான நூல்களின் ஆசிரியர். அவர் திருக்குறள் பற்றி எழுதிய நூல் நிறைய புதிய செய்திகளைத் தருகிறது. சில பழங்கதைகளை உடைத்தெரிகிறது.

 

அண்மையில் இவருக்கு இந்திய அரசு பத்மபூஷன் விருது கொடுத்து கௌரவித்தது. இதுவே தாமதமாக கொடுக்கப்பட்ட பரிசு என்பது என் கருத்து. அந்தக் காலத்தில் புதை பொருள் இலாகா என்று பத்திரிக்கைகள் எழுதிய புதைந்து போன இலாகாவை பெருமை மிகு தொல்பொருட் துறையாக மாற்றி கொடிகட்டிப் பறக்க வைத்தவர் இவர்.

 

டாக்டர் நாகசாமியின் திருக்குறள் நூல் ஒரு ஆங்கில நூல். சுமார் 250 பக்கங்களில் அரிய விஷயங்கள் இருந்தும் விலை 150 ரூபாய்தான். நிற்க. புஸ்தகத்துக்குள் நுழைவோம்.

 

திருவள்ளுவர் தங்கக் காசு உண்மையா?

 

கல்கத்தாவில் ஒரு தங்கக் காசு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் முன்புறம் முனிவர் போன்ற உருவமும் பின்புறம் ஐந்து முனை நட்சத்திரமும் உளது. இதை ஐராவதம் மஹாதேவன் ,திருவள்ளுவர் காசு என்று எழுதி அதை தமிழ் அறிஞர் எல்லீஸ் வெளியிட்டிருக்க வெண்டும் என்று கதை கட்டினார். ஆனால் இதற்கும் எல்லீஸ் துரைக்கும் தொடர்புள்ள சான்றும் இல்லை. மேலும் இது திருவள்ளுவரும் இல்லை என்று டாக்டர் நாகசாமி பிட்டுப் பிட்டு வைக்கிறார். இதில் எல்லீஸ் பெயரை சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இழுத்தனர். இது புத்தரின் காசு. அதில் பூமி ஸ்பர்ஸ முத்ரை உளது என்கிறார் டாக்டர் நாகசாமி.

 

 

இந்துகளின் நான்கு வாழ்க்கை மூல்யங்கள் தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்பதாகும். இதே வரிசையில் திருவள்ளுவர் அறம் பொருள் இன்பம் என்று முப்பால் நூலை வகுத்து அறத்துப் பாலில் மோக்ஷம் என்பபடும் வீடு பேற்றையும் வைத்துளார்.

 

டாக்டர் நாகசாமி திருவள்ளுவரின் முப்பாலும் (அறம் பொருள் இன்பம்) ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள தர்ம சாஸ்திரம், அர்த்தசாஸ்திரம் காம சாஸ்திரம் நாட்ய சாஸ்திரம் ஆகியவற்றில் இருந்து ஏராளமான விஷயங்களை எடுத்திருப்பதை ஆதரங்களுடன் காட்டியுள்ளார். இதற்குமுன்னர் டாகடர் வி ஆர் ராமசந்திர தீக்ஷிதர் என்ற பேரறிஞர் இதே போல பல ஒப்பீடுகளைச் செய்தபோதிலும் டாக்டர் நாகசாமி கூடுதல் விஷயங்க ளைத் தருகிறார். தம்மபதம் என்னும் புத்தமத நூல், பகவத் கீதை ஆகியனவும் ஒப்பிடப்படுகின்றன.

 

ஜி.யு. போப் செய்த விஷமங்கள்

 

ரெவரண்ட் ஜி யூ போப் செய்த விஷமங்களை எடுத்துக் காட்டி அவர் முகத்திரையை கிழி கிழி என்று கிழித்துவிட்டார் டாக்டர் நாகசாமி.

1.புறநானூற்றின் பாடல்களில் 72 பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த போப், கபிலர் என்னும் புலன் அழுக்கற்ற அந்தணாளனை, பிராஹ்மணனை— பறையன் என்று கூறியுள்ளார். கபிலர் தன்னை அந்தணன் என்று பறைசாற்றிய புற நானூற்றுப் பாடலை மறை த்துவிட்டார்.

  1. வள்ளுவர் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று தத்துப் பித்து என்று உளறியும் உள்ளார் ஜி யு போப்.

3.வள்ளுவர் மீது கிறிஸ்தவ மத தாக்கம் இருந்ததாகவும் இந்துக்கள் வரை வெறுத்ததாகவும் ஜி யூ போப் எழுதிய புளுகு மூட்டைகளை டாக்டர் நாகசாமி சொல்லால் எரித்துவிட்டார்.

விஷமக்கார ஜீ யூ போப்- புக்கு ஒரு ஆப்பு!

 

திருவள்ளுவர் சமணரா?

திருவள்ளுவர் சமணரா, திருக்குறள் சமண காவியமா என்ற விவாதத்துக்கே பொருள் இல்லை. ஏனெனில் இடை சமண நூல் என்று சொல்ல எந்தச் சான்றும் இல்லை என்கிறார். மேலும் திருவள்ளுவரின் சமயப் பிரிவு என்ன என்பதைத் தெரிவிக்கும் எந்த சான்றையும் அவர் அளிக்க விரும்பவில்லை என்றே தோன்றுகிறது என்கிறார்.

திருவள்ளுவரின் காலம்

டாக்டர் நாகசாமியின் புஸ்தகத்தைப் படித்தால் முந்தையவர் கூறிய வாதங்களை எல்லாம் தெரிந்து கொள்ளலாம். அவைகளை எல்லாம் சுருங்கக் கூறி பின்னர் தன் வாதத்தை முன்வைக்கிறார். திருவள்ளுவர் இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரத்தும் முந்தையவர் என்று முடிவு செய்துள்ளார். இதற்கு சங்க நூல் சான்றுகளையும் சூத்ரம் பாணியில் வள்ளுவர் குறள் அமைந்திருப்பதும் அதன் பழமைக்கு சான்று பகரும் என்கிறார்.

 

காலனியாதிக்கப்  பேர்வழிகள் வள்ளுவரை கிறிஸ்தவராகவோ அல்லது கிறிஸ்தவர்களின் நண்பராகவோ காட்ட முயன்றதை எல்லாம் எடுத்துரைத்து அவைகளுக்கு ஆதாரமே இல்லை என்கிறார். ரெவரண்ட் லஸாரஸ் , எல்லீஸ் போன்றோரிம் அரும்பணிகளையும் மொழிந்துள்ளார்.

 

டக்டர் நாகசாமி ஆங்கிலம், தமிழ், ஸம்ஸ்க்ருதம் ஆகிய மூன்று மொழிகளில் வித்தகர். இப்படிப்பட்ட மும்மொழி அறிஞர்கள் தமிழகத்தில் மிகமிகக் குறைவு.

 

அவரே புஸ்தகத்தை முடிக்கும் முன் ‘புல்லட் பாயிண்டு’களில் ஒரு சுருக்கத்தைக் கொடுக்கிறார். அதில் அவர் சொல்லுவதாவது: ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள சாஸ்திரங்களை அறியாதோர் திருக்குறளை நன்கு விளங்கிக் கொள்ள முடியாது என்று சொல்கிறார்.

 

உ,வே.சா.வின் நாடக வழக்கு, மு.வ.வின் கருத்துக்கள் பற்றி                     யும் அலசி ஆராய்கிறார் டாக்டர்.

 

ஸம்ஸ்க்ருத குறிப்புகளை  ஸம்ஸ்க்ருதத்திலேயே மொழிபெயர்ப்புடன் கொடுத்திருப்பது எல்லோருக்கும், குறிப்பாக தமிழ் பேசாத வட இந்தியர்களுக்கு ஆசிரியர் எதை ஒப்பிடுகிறார் என்று அறிய உதவும்.

 

இவ்வளவு பெரிய ஆராய்ச்சி விஷயங்கள் அடங்கிய நூலுக்கு இவ்வளவு குறைவான விலை நிர்ணயித்தது தமிழர்களுக்கும் வட இந்தியர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமே.

 

ஜி.யூ.போப், லஸாரஸ், எல்லீஸ் போன்றோர் பற்றி இவ்வளவு விரிவாக எங்கும் காணமுடியாது. Drew ற்றூ என்னும் ஆங்கிலேயர் திருக்குறளின் காமத்துப் பாலை மொழிபெயர்க்கவே முடியாது அவ்வளவு ஆபாசமானது. இதை மொழிபெயர்த்தால் வள்ளுவரின் பேர் ‘ரிப்பேர்’ ஆகிவிடும், மானம் விமானத்தில் பறந்து விடும், கதி ‘சகதி’ ஆகிவிடும் என்று கருதியதையும் டாக்டர் நாகசாமி சுட்டிக்காட்டியுள்ளார். ஆரம்பகால வெள்ளையர்கள், தமிழ் இலக்கிய அகத்துறைப் பாடல்களை ஆபாச இலக்கியம் என்று கருதியதைப் பார்க்கும்போது நமக்கு சிரிப்புதான் வரும்.

திருக்குறளைப் போன்ற ஒரு ரத்தினம் தமிழ் இலக்கிய உலகில் இல்லை என்று அடித்துக் கூறி வான்புகழ் வள்ளுவனின் புகழை மேலும் பரப்புகிறார் டக்டர் நாகசாமி .

 

அனைவரும் வாங்கிப் படித்து பாதுக்காக வேண்டிய நூல். தள்ளாத வயதிலும்  தமிழ் பரப்பும் டாக்டர் நாகசாமி , தமிழ் தாத்தா உ.வே.சா.வை நினைவு படுத்துகிறார் என்றால் மிகையாகாது.

வாழ்க வள்ளுவர்!! வளர்க டாக்டர் நாகசாமி . புகழ்.

 

Details of the Publication:

Tirukkural- An Abridgement of Sastras

Dr R Nagaswamy

December 2017

Pages 248, Price Rs.150

Published by Tamil Arts Academy and Giri Trading Agency Private Limited

Contact: www.giri.in

sales@giri.in

-சுபம்-

பாரதியார் பற்றிய நூல்கள் – 48 (Post No.4937)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 22 April 2018

 

Time uploaded in London –  5-23  AM  (British Summer Time)

 

Post No. 4937

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 48

ப.கோதண்டராமன் அவர்களின் ‘பாரதி யுகம்

 

ச.நாகராஜன்

1

பாரதி ஆர்வலர் .கோதண்டராமன் அவர்கள் பாரதியார் பற்றி ஐந்து அத்தியாயங்களில் நூறு பக்கங்களில் நன்கு எழுதியுள்ள நூல் பாரதி யுகம்.

1961 பிப்ரவரியில் இமயப் பதிப்பகம், நாகப்பட்டினம்வெளியீடாக இது வந்தது.

மகாகவியின் பெருமை பற்றி முதல் அத்தியாயத்தில் விவரிக்கப் புகுந்த நூலாசிரியர் ஒரு கவியின் லட்சணம் பற்றி நன்கு விளக்கி அது மகாகவிக்கு எப்படிப் பொருந்துகிறது என்பதை விளக்குகிறார்.

அதில் சில பகுதிகள் :
கவி வாழ்க்கையையும் மக்களின் உணர்ச்சிகளையும் பொலிவுடன் பாடுகிறான். அவன் உலகில் நெறி வழியைக் காட்டுகிறான்; தன் கற்பனைத் திறத்தினாலும், கவிதையின் அமைப்பு, அணி, அலங்காரம், இசை, ஒலிநயம், தாள லயங்கள் ஆகியவற்றினாலும் மக்களின் உள்ளத்தை மகிழ்விக்கிறான்.மானிட அனுபவத்திலும் இயற்கையிலும் உள்ளே அடங்கியுள்ள அழகுகளை எடுத்துக்காட்டி மக்களின் மனோபாவங்களையும் அனுதாபங்களையும் தூண்டி விடுகிறான்.

 

    மன அறிவிலிருந்து படிப்படியாக விடுதலையடைந்து சாதாரண உணர்வுக்கு அப்பாலுள்ள பேருணர்வுடன் உறவேற்படுத்திக் கொள்கிறான். இவ்வுணர்வு நிலையில் அவன் கேட்கும் தொனி தெய்வத்தனமை பொருந்தியது; அவன் காணும் காட்சி தெய்வீக ஆதரிசமாகிறது

2

தேசிய மகாகவி பாரதியார் என்ற இரண்டாம் அத்தியாயத்தில் பாரதியாரின் தேசியப் பணி எப்படி படிப்படியாக மலர்ந்தது என்பது ந்ன்கு விவரிக்கப்படுகிறது. காங்கிரஸில் அரவிந்தரின் தாக்கம் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது. பாரதியார் 1906ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்திற்கு பாரதியார், தமிழர் கோஷ்டியொன்றுடன் சென்றார். தாதாபாய் நௌரோஜியின் தலைமையில் அக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டபின்னர் சகோதரி நிவேதிதாவை அவர் ச்ந்தித்தார்.

இவற்றை நன்கு விவரிக்கும் நூலாசிரியர், அடுத்து ..சிதம்ப்ரம் பிள்ளைபாரதியாரின் நட்பை விவரிக்கிறார். ‘என் உள்ளமே பாரதி நாவில் துடித்தது என்று ..சி. கூறுவதுண்டு என்ற செய்தியையும் தருகிறார்.

1907 டிசம்பர் மாதம் மிதவாதிகளின் கோட்டையான் சூரத்தில் காங்கிரஸ் கூடியது. அதில் கலந்து கொண்ட பாரதியார் அங்கு நடந்த ரகளையையும் அதில் கலநது கொண்ட தமிழர் பங்கையும் நகைச்சுவையுடன்எங்கள் காங்கிரஸ் யாத்திரை என்ற நூலில் விவரிக்கிறார்.

3

மூன்றாம் அத்தியாயம்புதுவையில் பாரதி என்ற தலைப்பைக் கொண்டது.

பதினேழு மாத காலம் வாரந்தோறும் வந்தஇந்தியா இதழில் பாரதியாரின் கட்டுரைகளைப் பற்றி நூலாசிரியர் விவரிக்கிறார்.

பாரதியாரின் தலையங்கத்தில் சில பகுதிகள்:

முதற் பிரயத்தினம் என்ற தலையங்கத்தில் (21-11-1908) ‘சுதந்திரத்தின் பொருட்டுத் தலைமுறை தலைமுறையாக ரத்தத்தில் வீழ்ந்து மாள்வரேனும், நம் சந்ததியார் நடத்திச் செல்லுமாறு தந்து விட்டுப் போகிற சுதந்திர யுத்தம் பல முறை தோற்றுப் போயினும் கடைசி வரை ஜயங்கொண்டே முடிவதாகும்:

நூலாசிரியர் கவி பைரனின் மொழிகளை பாரதியார் இப்படி தமிழில் தருவதைச் சுட்டிக் காட்டுகிறார்.

இன்னொரு தலையங்கம்பாரதியார் எழுதியது:

ஸ்வதந்திரமடைய விரும்புவோர் செல்லவேண்டிய பாதை மல்லிகையிதழ்கள் தூவிய பாதையன்று, கல்லும் முள்ளும் பரப்பிய பாதை, செங்குத்தான வழி.

அரவிந்தரின் புதுவை வருகை, அவருடனான பார்தியாரின் உறவு பற்றி இந்த நூலின் ஆசிரியர் அழகுற விளக்குவதில் ஒரு பகுதி இது:

பாரதியார்  ஸ்ரீ அரவிந்தரின் மகா மேதையையும் ஆத்மீகத் துறையில் அவர் அடைந்துள்ள  தேர்ச்சியையும் நன்குணர்ந்தவர். இவ்விஷயங்களைப் பற்றிஇந்தியாவில் கட்டுரைகள் பல வெளியாகியுள்ளன. தாம் புதுவையில் வாடிக் கொண்டிருந்தபோது தம்மிலும் பல துறைகளில் சிறந்து விளங்கிய ஒரு பெரியார் தமக்கு நட்புரிமை அளித்ததை ஒரு பாக்கியமாகவே கருதினார். பாரதியார் அரவிந்தரை மதித்துப் போற்றியதைப் போலவே, அரவிந்தரும் தேசாபிமானியும் அருந்தமிழ்ப் புலவருமான பாரதியை உரிய முறையில் மதித்து வந்தார்.

புதுவையில் மலர்ந்த பாரதியின் படைப்புகளைப் பற்றி மிக விரிவாக இந்த நூலில் திரு .கோதண்டராமன் அழகுற விளக்குகிறார்.

4

நான்காம் அத்தியாயமானஇறுதிக் காலம் அத்தியாயத்தில் பாரதியாரின் கடய வாழ்க்கை மற்றும் சென்னை வாழ்க்கையைக் காண்கிறோம்.

காந்திஜியுடனான சந்திப்பு, கூடலூரில் 1921 மார்ச் மாதம் 25ஆம் தேதி பாரதியார் நிகழ்த்தியமனிதனுக்கு மரணமில்ல என்ற சொற்பொழிவு, பார்த்தசாரதி கோயில் யானை பாரதியாரைத் தன் துதிக்கையால் தூக்கிப் போட்டது, .வே.சு ஐயர் பாரதியாரை சிறைக்குச் செல்லும் முன்னர் பாரதியாரைச் சந்தித்தது, மறுநாள் இரவு சுமார் 1-30 மணிக்கு பாரதியாரின் ஆவி பிரிந்தது ஆகியவை பற்றிக் காண்கிறோம்.

5

பாரதி யுகம் என்ற ஐந்தாம் அத்தியாயத்துடன் நூல் முடிகிறது.

பாரதியாரின் சிறப்புகள் அனைத்தும் சுருக்கமாக இதில் விளக்கப்படுகிறது.

நூலின் இறுதி பாரா:

பாரதியார் இத்தகைய வாழ்க்கையின் மூலமாகவும் இதனின்று எழுந்த அமர இலக்கியங்களின் மூலமாகவும் ஒரு புதிய சகாப்தத்தையே, ஒரு புதிய யுகத்தையே ஆரம்பித்தார். பாரதியுகம் இன்றும் நடக்கிறது. இந்த நூற்றாண்டின் பாதிக்கு மேல் முடிந்து விட்டது. ஆயினும் இன்னும் பாரதியாரை வெல்ல வல்ல யாதொரு பாவாணனையும் காணோம். இளங்கவிகள் தம்மைப் பாரதி பரம்பரை எனக் கூறிக் கொள்கின்றனர். அவர்களுடைய பாடல்கள் பெரிதும் பாரதியாரைத் தழுவியனவாகவே காண்கின்றன. பாரதியார் வாழ்க!

அருமையான இந்த நூல் பாரதி ஆர்வலர்களை நிச்சயம் கவரும் என்பதில் ஐயமில்லை!

***

 

பாரதி போற்றி ஆயிரம்– 80 (Post No.4931)

COMPILED by S NAGARAJAN

 

Date: 20 April 2018

 

Time uploaded in London –  6-23  AM  (British Summer Time)

 

Post No. 4931

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 80

  பாடல்கள் 692 முதல் 701

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

புலவர் கு.ப. பெருமாள் இயற்றிய       பாரதியின் “பா”ரதம்

இந்த பாரதியாரின் வரலாற்று நூலில் பல அத்தியாயங்கள் உள்ளன. நூலை முழுவதுமாகத் தர இயலாத நிலையில் தேர்ந்தெடுத்த கவிதைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. இங்கு மாணவ மணம் என்ற அத்தியாயத்தில் உள்ள 10 பாடல்களைப் படித்து மகிழலாம்.

அத்துடன் நூலை அப்படியே புகைப்படங்களாக எடுத்து அளிக்கும் உத்தி கையாளப்படுகிறது.

ஆகவே நூலின் பக்கங்களை அப்படியே காணலாம்.

இணைப்பாகத் தரப்படுபவை :

மாணவ மணம் – 10 பாடல்கள்

 

 

தொகுப்பாளர் குறிப்பு:
புலவர் கு.பொ.பெருமாள் பல்வேறு சந்தங்களில் மரபு நிலை மாறாது பாடல்களை யாத்துள்ளார்.

இவர் தன்னைப் பற்றிக் கூறுவதில் ஒரு சிறு பகுதி: “ உயர் பள்ளி சென்று ஒரு நாளும் கல்லாத யான் கறைப்பட்டவனாகச் சிறைப் (ஆயுட்சிறை) பட்ட காலத்தில் இருபத்து ஏழாம் அகவையில் இருட்டறையில் தவித்த எனக்கு, அணையா ஒளிவிளக்காகக் கல்வி அறிவூட்டிப் புலவனாக வெளியில் வரும் நிறைவுற்றவனாகச் செய்தவர், இதயத்துள் என்றும் நிற்கும் என் ஆசிரியர் ஆவார்கள்.”

இவரது ஆசிரியர் நக்கீரன்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மாவட்டம் புளியம்பட்டியில் இருக்கும் புலவர் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.

முதற் பதிப்பு டிசம்பர் 2003. விலை ரூ 35/ (144 பக்கங்கள்)

கவிஞர் கு.பொ.பெருமாள் அவர்களுக்கும் புலவர் பதிப்பக உரிமையாளருக்கும் நமது நன்றி

***

பாரதி போற்றி ஆயிரம் – 79 (Post.4925)

COMPILED by S NAGARAJAN

 

Date: 18 April 2018

 

Time uploaded in London –  5-37  AM  (British Summer Time)

 

Post No. 4925

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 79

  பாடல்கள் 666 முதல் 691

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

புலவர் கு.ப. பெருமாள் இயற்றிய       பாரதியின் “பா”ரதம்

இந்த பாரதியாரின் வரலாற்று நூலில் பல அத்தியாயங்கள் உள்ளன. நூலை முழுவதுமாகத் தர இயலாத நிலையில் தேர்ந்தெடுத்த கவிதைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. இங்கு இறைவணக்கம் – ஒரு பாடலையும், பாரதி யார் என்ற அத்தியாயத்தில் 25 பாடல்களையும் படித்து மகிழலாம்.

அத்துடன் நூலை அப்படியே புகைப்படங்களாக எடுத்து அளிக்கும் உத்தி கையாளப்படுகிறது.

ஆகவே நூலின் பக்கங்களை அப்படியே காணலாம்.

இணைப்பாகத் தரப்படுபவை :

முதல் பாடல் : இறை வணக்கம்

1 பாடல்

பாரதி யார்? அத்தியாயத்தில் 25 பாடல்கள் மட்டும்

 

தொகுப்பாளர் குறிப்பு:
புலவர் கு.பொ.பெருமாள் பல்வேறு சந்தங்களில் மரபு நிலை மாறாது பாடல்களை யாத்துள்ளார்.

இவர் தன்னைப் பற்றிக் கூறுவதில் ஒரு சிறு பகுதி: “ உயர் பள்ளி சென்று ஒரு நாளும் கல்லாத யான் கறைப்பட்டவனாகச் சிறைப் (ஆயுட்சிறை) பட்ட காலத்தில் இருபத்து ஏழாம் அகவையில் இருட்டறையில் தவித்த எனக்கு, அணையா ஒளிவிளக்காகக் கல்வி அறிவூட்டிப் புலவனாக வெளியில் வரும் நிறைவுற்றவனாகச் செய்தவர், இதயத்துள் என்றும் நிற்கும் என் ஆசிரியர் ஆவார்கள்.”

இவரது ஆசிரியர் நக்கீரன்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மாவட்டம் புளியம்பட்டியில் இருக்கும் புலவர் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.

முதற் பதிப்பு டிசம்பர் 2003. விலை ரூ 35/ (144 பக்கங்கள்)

கவிஞரையும் பதிப்பகத்தையும் தொலைபேசி வாயிலாகவும் கடித வாயிலாகவும் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனில்லை.

கவிஞர் கு.பொ.பெருமாள் அவர்களுக்கும் புலவர் பதிப்பக உரிமையாளருக்கும் நமது நன்றி

 

 

 

 

***