பிராமணர்கள் ஜாக்கிரதை! தமிழ் கவிஞர் எச்சரிக்கை! (Post No.4599)

Written by London Swaminathan 

 

Date: 9 JANUARY 2018

 

Time uploaded in London 11-13 AM

 

 

 

Post No. 4599

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

((எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக் கூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்; நீயே கவனித்துக்கொள்!))

 

பிராமணர்கள் தீ போன்றவர்கள்; மிகவும் பக்கத்தில் போனால் சுடும்; மிகவும் விலகிச் சென்றால் குளிரும்; நீங்கள் கஷ்டப்படுவீர்கள்- என்று ஒரு தமிழ்க் கவிஞர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எச்சரித்தார்.

உலக மஹா புத்திமான், பேரறிவாளன், உலகின் முகல் பொருளாதார நூல் எழுதிய நிபுணன், சாணக்கிய நீதி, அர்த்த சாஸ்திரம் முதலிய நூல்களை யாத்த பெரு மகன், மகத சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பின்னரும் குடிசையில் வாழ்ந்த உத்தமன், ஏழைப் ப்ராஹ்மணன் ஆகிய சாணக்கியன் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் ப்ராஹ்மணாள் பற்றி இதை விட ஒரு பெரிய எச்சரிக்கை விடுக்கிறான்.

 

இரண்டு பிராமணர்கள் நின்று கொண்டிருந்தால் குறுக்கே போகாதே!

 

பிராமணன் இருந்தால் அவனுக்கு எதிரே கால் நீட்டாதே.

 

இதோ தமிழ், ஸம்ஸ்க்ருத கவிதைகள்!!!

 

விப்ரயோர்விப்ரவஹ்ன்யோஸ்ச தம்பத்யோஹோ ஸ்வாமிப்ருத்யர்யோஹோ

அந்தரேண ந கந்தவ்யம் ஹலஸ்ய வ்ருஷபஸ்ய ச

சாணக்கிய நீதி, அத்தியாயம் 7, ஸ்லோகம் 5

 

பொருள்—“இரண்டு பிராமணர்களுக்குக் குறுக்கே போகாதே; ப்ராஹ்மணனுக்கும்   அக்னிக்கும் (தீ) குறுக்கே போகாதே போகாதே; அவ்வாறே கணவன்– மனைவி, எஜமானன்–சேவகன் (முதலாளி- தொழிலாளி), உழுகலன் (ஏர்)- காளை மாடு இவர்களுக்கு இடையிலும் செல்லாதே.

 

பாதாப்யாம் ந ஸ்ப்ருசேதக்னிம் குரும் ப்ராஹ்மணமேவ ச

நைவ காம் ந குமாரீம் ச ந வ்ருத்தம் ந சிசும் ததா

சாணக்கிய நீதி, அத்தியாயம் 7, ஸ்லோகம் 6

 

பொருள்

அக்னி, ஆசிரியர், ப்ராஹ்மணன், பசு மாடு, இளம் பெண், முதியவர், குழந்தை ஆகியோருக்கு முன்னால் காலை நீட்டி உட்காராதே, படுக்காதே.

சாணக்கியன் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் ஆராய்ந்து பார்க்கில் பல விஷயங்கள் நமக்கே புரியும்; உதாரணங்கள் மனக் கண் முன் சித்திரம் போலச் செல்லும்.

 

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகு!

 

அந்தக் காலத்தில் ப்ராஹ்மணர்கள் தூய ஒழுக்கத்தின் சின்னமாக விளங்கினர்; அந்தக் காலத்தில் மூவேந்தர்களும் கூட ப்ராஹ்மணர்களைக் கண்டு அஞ்சினர். சங்க இலக்கியத்தில் அதிகமான பாடல்களை இயற்றிய கபிலரையும் பரணரையும் கண்டு சேர சோழ பாண்டியர்கள் மரியாதையுடன் கூடிய பயம் கொண்டனர். ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என்று தமிழ்ப் பார்ப்பான் கபிலனை சங்கப் புலவர்கள் புகழ்ந்து, தலைமேல் வைத்துக் கூத்தாடினர்.

 

‘’குணம் என்னும் குன்று ஏறி நிற்கும் பார்ப்பனர்கள் வெகுளி கணம் ஏயும் காத்தல் அரிது’’ என்பதால் பயந்தனர். அந்தக் காலத்தில், அவர்கள் வாயில் நல்ல சொற்கள் வந்தால் அது பலிக்கும்; சுடு சொற்கள் வந்தால் அது ஒருவனுடைய குலத்தையே வேர் அறுக்கும் என்பது உண்மையாக இருந்தது.

 

இதனால் வேளாண் குடி மக்களுக்கு திரிகடுகம் ஆசிரியர் நல்லாதனார், ஒரு நல்ல புத்திமதி செப்பினார்:

சூதாட்டத்தில் பணம் கிடைக்க வேண்டும் என்று காத்திராதே; விரும்பாதே; பார்ப்பனர்களை தீ என்று கருது;

அகலாது அணுகாது குளிர் காய்பவர் போல இரு;

உழவுத் தொழிலை கடனே என்று செய்யாமல், விரும்பிச் செய்.

 

வேளான்குடிக்கு அழகாவன

 

 

கழகத்தால் வந்த பொருள் காமுறாமை

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல்- ஒழுகல்

உழவின்கண் காமுற்று வாழ்தல் இம்மூன்றும்

அழகென்ப வேளாண் குடிக்கு

–திரிகடுகம், நல்லாதனார்

 

முற்காலத்தில் இதே தீ உவமையை வள்ளுவர், அரசர் பெருமக்களுக்கு உவமித்தார். தமிழ் வேதமாகிய திருக்குறள் சொல்லும்:–

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார்– குறள் 691

 

அரசர் கூட வேலை செய்வோர், ராஜாவை மிகவும் நெருங்காமலும், விலகிப் போகாமலும், குளிர் காய்பவன் போல, தம் கடமையைச் செய்ய வேண்டும்.

 

பிற்காலத்தில் நன்னூல் எழுதிய பவணந்தி போன்றோரும் இதைப் பயன் படுத்தினர்.

 

 

உண்மையில் இந்த தீக்காயும் உவமையை முதல் முதலில் பயன்படுத்தியவர் ஆதி சங்கரர் ஆவார். அவர் எழுதிய பாஷ்யங்களில் இந்த உவமை வருகிறது.

 

பகவத் கீதை 9-29 ம் ஸ்லோகத்துக்கு அண்ணா எழுதிய உரையில் இதை மேற்கோள் காட்டுவார்:

அக்னியைப் போல் நான் உளேன்; எட்டி நிற்பவர் குளிரை அக்னி போக்குவதில்லை; ஸமீபித்து வருவோர் குளிரைப் போக்குகிறது. இது அக்னியின் பாரபக்‌ஷமன்று. அது போலவே பக்தர்கள் என் அருள் பெறுவதும். மற்றவர் பெறாததும்- சங்கரர்

விஷ்ணுஸர்மன் எழுதிய பஞ்ச தந்திரத்திலும் இந்த தீ உவமையைக் காணலாம்.

 

–Subham–

சம்ஸ்கிருத காதல் கவிதைகள் (Post No.4593)

Date: 8 JANUARY 2018

 

Time uploaded in London- 6-00 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4593

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

சம்ஸ்கிருத காதல் கவிதைகள் : ராகத்திலே அநுராக மேவினால் ஜகமே ஊஞ்சலில் ஆடாதா!!!

 

ச.நாகராஜன்

 

1

1955ஆம் ஆண்டு, பொங்கல் தினத்தன்று வெளியான படம் தமிழகத்தை ஒரு கலக்கு கலக்கியது.

மிஸ்ஸியம்மா.

அதில் ஒரு பாடல் காட்சி. மக்களை ஆட வைத்தது.

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும்

பொது சொந்தமன்றோ….

கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் உள்ளமே

ஜில்லெனத் துள்ளாதா?

ராகத்திலே அநுராக மேவினால்

ஜகமே ஊஞ்சலில் ஆடாதா!

பாட்டுடன் மக்கள் ஆடினர்.

பாடலை ஜெமினி கணேசன் பாட ஜமுனா ராணி ஆடுகிறார்.

அதை ரங்காராவ் மனைவியுடன் ரசிக்கிறார். சாவித்திரியோ நடு நடுவில் வந்து பார்த்துக் குமுறுகிறார்.

தஞ்சை ராமையா தாஸின் பாடலுக்கு ராஜேஸ்வர ராவ் இசையமைத்துள்ள இந்தக் காட்சி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

சரி, ஒரு கேள்வி.

ராகத்திலே அநுராக மேவினால் ஜகமே ஊஞ்சலில் ஆடாதா?

ராகத்திலே அநுராக மேவினால் என்றால் அர்த்தம் என்ன?

உங்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.

 

2

காதலை 64 வ்கையாக போஜ மன்னன் பிரித்தார். அதில் ராகமும் உண்டு; அநுராகமும் உண்டு.

இந்த அநுராகத்தை விளக்கும் பாடல்கள் ஆயிரக் கணக்கில் சம்ஸ்கிருதத்தில் உள்ளன.

வித்யாகரர் என்று ஒரு தேர்ந்த கவிதா ரஸிகர்.

நல்ல பாடல்களாகத் தொகுக்க ஆரம்பித்தார்.

சுமார் 275க்கும் மேற்பட்ட கவிஞர்களைத் தேர்ந்தெடுத்தார்.

அவர்களின் சிறந்த பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்தார்.

1738 பாடல்கள் அவர் தேர்வில் வெற்றி பெற்றன.

அதை சுபாஷித ரத்னகோசம் என்ற பெயரில் நூலாகத் தொகுத்தார்.

அதில் 50 தலைப்புகள்.

அதில் ஒரு தலைப்பு: The Blossoming of Love. காதல் அரும்புதல்!

இந்த தலைப்பில்  மட்டும் 70 பாடல்கள் உள்ளன.

1738 பாடல்களும் அருமை என்றாலும் இந்தத் தலைப்பில் உள்ள சில பாடல்களை இங்கு பார்ப்போம்.

 

3

 

வித்யாகரரின் காலம் சரியாகத் தெரியவில்லை.அவரைப் பற்றிய விவரங்களையும் ஆதாரபூர்வமாக அறிய முடியவில்லை.

இருந்தாலும் இவரது பாடல்களை அரும்பாடு பட்டு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ள டேனியல் ஹெச்.ஹெச்.இங்கால்ஸ் என்ற அறிஞர், இவர் புத்தமதத்தைச் சேர்ந்த பேரறிஞர் என்றும். பதினொன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த இவர் வங்காளத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார்.

4

இங்கால்ஸின் An Anthology of Sanskrit Court Poetry என்ற நூலிலிருந்து The Blossoming of Love – காதல் அரும்புதல்

என்ற பகுதியிலிருந்து சில கவிதைகள்:

The glances of your eye,

Which stretches to your ear, darker than waterlily

Were enough to steal a heart.

What needs it, pretty lass,

With such ado pretending to bind up your loosened braid

To show your armpit, camphor dusted

And, marked with lover’s nail?

அடடா, உன் கண் பார்வை!

செவி வரை நீண்டிருக்கும் அது, அல்லி மலரை விடக் கறுத்திருக்கிறதே!

அது ஒன்று போதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள!

ஓ, அழகிய இளம் பெண்ணே,

பரபரப்புடன் தளர்ந்திருக்கும் உன் கேஸப் பின்னலைத் தூக்கி

முடிப்பது போலப் பாசாங்கு செய்கிறாயே!

அதன் தேவை தான் என்ன?!

வாசனை தூவப்பட்ட உனது அக்குளையும்

அங்கிருக்கும் காதலனின் நகக்குறியைக் காண்பிக்கவா?

*

Her body is a pond

Her face thereof a lotus and her arms the lotus stems,

Her loveliness the water and her triple fold the wave.

Therein a strong young elephant,

No other than my heart, has plunged,

But caught fast in love’s quicksand will never rise again.

 

அவள் மேனி ஒரு குளம்

அங்கிருக்கும் அவளது முகமோ தாமரை. அவளது கரங்களோ தாமரைத் தண்டுகள்.

அவளது பேரழகு தான் நீர்; அவளது மூன்று மடிப்புகளோ அலைகள்!

அங்கு ஒரு வலிமை வாய்ந்த யானை –

எனது இதயத்தைத் தான் சொல்கிறேன் – மூழ்கியது!

ஆனால் காதல் என்னும் புதைகுழியில் அது சிக்கி விட்டதால்

அது மீண்டும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது!

 

*

புதிதாக மணம் ஆகி விட்டது. கணவன் நெடு நாள் பிரிந்திருக்கப் போகிறான். வெளியூர் செல்ல இருக்கிறான். அவன் செல்ல வேண்டிய இடத்தை அடையவே நூறு நாள் பிடிக்கும்.

புது மணப்பெண்ணின் மனம் என்ன பாடுபடும்?

பார்க்கலாமா?

“You will return in an hour?                                                                                               Or at noon? Or after?

Or at least some time today!”

With such words the young bride,choked with tears,

Delayed her love’s departure for a land

Distant at hundred days.

 

“ நீ இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவாயா?

அல்லது நடுப்பகலில் வருவாயா? அல்லது சற்று நேரம் கழித்தா?

இன்றுக்குள் திரும்பி விடுவாய், இல்லையா!”

கண்ணீர அரும்ப தொண்டை அடைக்க இளம் மணப்பெண்

தன் கணவனிடம் கூறும் சொற்கள்… இவை

அவன் கிளம்பும் பயணத்தை சற்று நேரம் தள்ளி வைத்தது.

அவன் போக வேண்டிய இடத்தை அடையப் பிடிக்கும்

நூறு நாட்கள்.

*

மூன்று முத்தான கவிதைகளைப் பார்த்தோம்.

1738ஐயும் படிக்க வேண்டும் என்கின்ற ஆவல் எழுகிறதில்லையா?

வித்யாகரரின் ரஸனை அற்புதமானது. சுந்தரமான சுபாஷித ரத்ன கோஸத்தை நாடுங்கள். படியுங்கள். ரஸியுங்கள்

***

நன்றி : An Antholoty of Sanskrit Court Poetry translated by Daniel H.H.Ingalls

Cambridge, Massachusetts Harvard University Press, 1965

குறிப்பு: இதைப் படிப்பவர்கள், ‘காதலில் எத்தனை விதம் சொல்லு?! 64 வகை; அதன் உட்பிரிவோ 12288!! அதிசயமன்னனும், அவனை ஆராய்ந்த அறிஞரும்!!!’ என்ற கட்டுரையையும் படிக்கலாம்.

 

காதலில் எத்தனை விதம் சொல்லு?! 64 வகை!! (Post No.4590)

Date: 7 JANUARY 2018

 

Time uploaded in London- 5-47 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4590

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

மன்மத லீலை

 

காதலில் எத்தனை விதம் சொல்லு?! 64 வகை; அதன் உட்பிரிவோ 12288!! அதிசய மன்னனும், அவனை ஆராய்ந்த அறிஞரும்!!!

 

ச.நாகராஜன்

 

 

1

சுமார் நூறு வருடங்களுக்கு முன்பேயே மகாகவி பாரதியார் காதல் காதல் காதல்

காதல் போயின் காதல் போயின்

சாதல் சாதல் சாதல்

என்று அருமையாக காதலின் உச்சகட்ட நிலையை விளக்கி விட்டார்.

அந்தக் காலத்தில், காதலின் வேகமும் அழுத்தமும் இந்த நவீன யுகத்தில் இருக்கின்றார் போல இருந்ததா? தெரியவில்லை.

இருந்தாலும் அந்த நாளிலேயே அவர் இப்படி அழுத்தமாகச் சொல்லி விட்ட கவிதா வரிகள் சற்று அதிசயமாகவும் இருக்கிறது; ஆச்சரியமாகவும் இருக்கிறது!

2

சரி, காதல்மன்னர்களும், காதல் பற்றிய ஆராய்ச்சியாளர்களும், ரஸிகர்களும், காதலர்களும், காதலிகளும் ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல முடியுமா?

காதலில் எத்தனை விதம், சொல்லுங்கள், பார்ப்போம்!

பதில் தெரியாமல் முழித்தால் இந்து நாகரிகத்திற்குத் தான் வர வேண்டும்.

ஆண்-பெண் உறவின் அற்புத இரகசியத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசிய ஒரே மதம் இந்து மதம் தான்.

காதலில் மொத்தம் 64 விதம் உள்ளது.

எங்கே 64-ஐயும் சொல்லுங்கள் பார்ப்போம் என்கிறீர்களா?

இதோ தருகிறோம், பட்டியலை!

3

01) Abhilasa – அபிலாஷா

02) Akanksa – அகாங்சா

03) Apeksa – அபேக்ஷா

04) Utkantha – உத்கந்தா

05) Ipsa – இப்ஸா

06) Lipsa – லிப்ஸா

07) Iccha – இச்சா

08) Vancha – வாஞ்சா

09) Trsna -த்ருஷ்ணா

10) Lalasa – லாலஸா

11) Sprha -ஸ்ப்ருஹா

12) Laulya – லௌல்யா

13) Gardha – கர்தா

14) Sraddha – ச்ரத்தா

15) Ruci – ருசி

16) Dohada – தோஹதா

17) Asa – ஆசா

18) Asis – ஆசிஸ்

19) Asamsa – அசம்ஸா

20 Manoratha – மனோரதா

21) Astha – ஆஸ்தா

22) Abhinivesa – அபினிவேசா

23) Anubandha – அனுபந்தா

24) Agraha –  ஆக்ரஹா

25) Vimarsa – விமர்சா

26) Manisa – மநீசா

27) Abhipraya – அபிப்ராயா

28) Paksapata – பக்ஷபாதா

29) Lobha – லோப்ஹா

30) Asanga – ஆஸங்கா

31) Abisvanga – அபிஸ்வங்கா

32) Sakti – சக்தி

33) Moha – மோஹா

34) Akuta – அகூடா

35) Kuthuhala – குதூகலா

36) Vismaya – விஸ்மயா

37) Raga – ராகா
38) Vega – வேகா

39) Adhyavasaya -அத்யாவாஸ்யா

40) Vyavasaya – வ்யவசாயா

41) Kamana – காமனா

42) Vasana – வாஸனா

43) Smarana -ஸ்மரணா

44) Sankalpa – சங்கல்பா

45) Bhava – பாவா

46) Rasa (Hasa) – ரஸா (ஹாஸா)

47) Rati – ரதி

48) Priti – ப்ரீதி

49) Dakshinya – தாக்ஷிண்யா

50) Anugraha – அனுக்ரஹா

51) Vatsalya – வாத்ஸல்யா

52) Anukrosa – அனுக்ரோஸா

53) Visvasa – விஸ்வாஸா

54) Visramba – விஸ்ரம்பா

55) Vasikara – வசீகரா

56) Pranaya -ப்ரணயா

57) Prapti – ப்ராப்தி

58) Paryapti – பர்யாப்தி

59) Samapti – சமாப்தி

60) Abhimanapti – அபிமானாப்தி

61) Sneha – ஸ்னேஹா

62) Prema – ப்ரேமா

63) Ahlada – ஆஹ்லாதா

64) Nirvrti –  நிவ்ருத்தி

 

 

3

அடேயப்பா, இத்தனை விதமா?

இதற்குள் மலைத்தால் எப்படி?

இந்த 64 விதத்தில் அனுராகத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

 

 

நித்யானுராகா

நைமித்திகானுராகா

சமான்யானுராகா

விசேஷானுராகா

ப்ரகாசானுராகா

ப்ரச்சன்னானுராகா

அக்ருத்ரிமானுராகா

க்ருத்ரிமானுராகா

 

என இதில் எட்டு வகை உள்ளன. இவை காதலின் மஹார்தி எனச் சொல்லப்படுகிறது.

இவை ஒவ்வொன்றிலும் 24 வகை உண்டு.

ஆக அனுராக வகைகளில் மட்டும் எட்டு வகையில் உள்ள 24 உட்பிரிவு வகைகளையும் பெருக்கிப் பார்த்தால் வருவது 192. இந்த 192 ஐ 64-உடன் பெருக்கினால் வருவது 12288.

இவ்வளவு வகை உண்டு.

 

4

சரி, இதையெல்லாம் யார் சொல்கிறார்கள், எங்கே சொல்கிறார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பே.

போஜ மஹாராஜன்,”ச்ருங்கார ப்ரகாசா” என்ற அலங்கார சாஸ்திர நூலைப் புனைந்துள்ளான்.

அதில் தான் ஒவ்வொன்றின் விளக்கத்துடனும் காதல் அதாவது  ச்ருங்காரம் மிக நுட்பமாக விளக்கப்படுகிறது!

 

 

5

இது இப்போது கிடைக்குமா? எப்படி இந்த தகவல்கள் கிடைக்கின்றன?

நல்ல கேள்வி.

பேரறிஞர் டாக்டர் வி. ராகவன் (நிஜமாகவே பேரறிஞர்!!!) சம்ஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகச் சிறந்த விற்பன்னர்.

உ.வே.சாமிநாதையர் வாழ்நாள் முழுதும் தமிழ்ச் சுவடிகளைத் தேடி ஊர் ஊராக அலைந்தது போல, டாக்டர் ராகவன் நாடு நாடாக அலந்தார். பல்வேறு பல்கலைக் கழகங்கள், நிறுவனங்கள், சம்ஸ்கிருத சுவடி இருக்கும் இடங்கள் என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை.

 

பல லட்சம் நூல்கள் அடங்கிய சம்ஸ்கிருத நூல்கள் பற்றி அறிந்து கொண்ட பின்னர் சம்ஸ்கிருத நூலுக்கான என்சைக்ளோபீடியாவைத் தயாரித்தார்.

அந்த மாபெரும் ஆராய்ச்சியாளர் தனது டாக்டரேட் டிகிரிக்காக ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நூல் தான் போஜனின், “ச்ருங்கார ப்ரகாசா”

 

1931 செப்டம்பர் மாதத்திலிருந்து 1934 செப்டம்பர் மாதம் வரை அவர் செய்த அற்புதமான ஆராய்ச்சியின் பெருமையைச் சொற்களால் அளக்க முடியாது; விளக்க முடியாது!

 

1940ஆம் ஆண்டு இது  தொகுதிகளாகவும், பகுதிகளாகவும் வந்தது. (Karnakatk Publishing House, Bombay – 1940)

இப்போது இதை விளக்க இன்னொரு ராகவன் தான் வேண்டும். அப்படி ஒரு நுட்பமான ஆராய்ச்சியை அவர் செய்து உலகுக்கு அளித்திருக்கிறார்.

 

 

 

6

அற்புதமான மன்னன் போஜ மஹாராஜன். அவன் தொடாத துறையே இல்லை.

அதில் ஒன்று தான் “ச்ருங்கார ப்ரகாசா”.

 

36 அத்தியாயங்கள் இந்த நூலின் கைப்பிரதி மட்டும் 1908 பக்கங்கள் – ஃபூல்ஸ்கேப் பேப்பரில்!.

 

இதைத் தயாரித்து ஆராய்ந்தார் டாக்டர் ராகவன்.

போஜ மஹாராஜன் 84 நூல்களை எழுதியுள்ளான்.

விமானம் கட்டுவதிலிருந்து சிருங்கார ப்ரகாஸா வரை உள்ள அவனது நூல்கள் பிரமிக்க வைப்பவை.

 

அந்த மாபெரும் அறிஞனின் அறிவை அளக்க யாரால் முடியும்?!

ஒரு சிறிது அறிந்தாலும் கூட அந்த அளவுக்கு நமது அறிவின் வலிமை கூடும் என்பதில் ஐயமில்லை.

நன்றி : டாக்டர் வி. ராகவன் அவர்களுக்கு!

****

 

 

பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்ரர் (Post No.4584)

Written by London Swaminathan 

 

Date: 5 JANUARY 2018

 

Time uploaded in London- 8-12 am

 

 

 

Post No. 4584

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்ரர் பெயர் வைக்கும் முறை (மநு நீதி நூல்- part 10)-

 

second chapter 149 (2-30)

  1. குழந்தை பிறந்த பத்தாவது அல்லது பன்னிரெண்டாவது நாள் தந்தையானவர் பெயர்சூட்டு (நாமதேயம்) வைபவத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது நல்ல நாளில் நல்ல திதியில் முகூர்த்த நாளன்றும் வைக்கலாம்.

 

150.பிராமணர் பெயரில் மங்களத்தையும், க்ஷத்ரியர் பெயரில் பலத்தையும், வைஸ்யர் பெயரில் பொருளையும் (செல்வம்) சூத்திரர் பெயரில் தாழ்வையும் கட்டும் சொற்கள் இருக்க வேண்டும்

 

 

151.பெயரின் இரண்டாவது பகுதி பிராமணர்களுக்கு சந்தோஷத்தைக் காட்டும் சொல்லும் (ஸர்ம), க்ஷத்ரியர்களுக்குப் பாதுகாப்பைக் காட்டும் சொல்லும் (வர்ம), வைஸ்யர்களுக்கு சுப வாழ்க்கை (பூதி) பற்றியும் சூத்திரர் பெயரில் சேவை (தாஸன்) தொடர்பான சொல்லும் இருக்கலாம்.

152.பெண்களுடைய பெயர் எளிதில் உச்சரிக்கத் தக்கதாகவும் சுபச் சொல் உடையதாகவும் , மங்களம் தருவதாகவும், நன்மை தரும் சொல்லாகவும், கெட்ட பொருள் தராததாகவும், உயிர் எழுத்தில் நெடிலில் முடிவதாகவும் இருக்க வேண்டும் (எ.க.கருணா, சீதா, கீதா)

153.குழந்தை பிறந்த நாலாவது மாதத்தில்  வீட்டை விட்டு வெளியே வந்து குழந்தையைச் சூரியனுக்குக் காட்டும் நிகழ்ச்சியும் ஆறாவது மாதத்தில் அன்ன ப்ராஸ்னம் எனப்படும் உணவூட்டும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யலாம்; இது தவிர அந்தந்த குடும்பத்தின் பழக்க வழக்ககங்களுக்கு உரித்தான சடங்குகளையும் மூன்றாவது மாதம் முதல் செய்யலாம்.

 

154.இருபிறப்பாளர் ஜாதிகளில் பிறந்த எல்லாக் குழந்தைகளுக்கும் முடி இறக்கல் முதல் ஆண்டிலோ மூன்றாவது ஆண்டிலோ செய்யப்பட வேண்டும் என்று வேத விதிகள் சொல்கின்றன. கருவுற்ற காலத்தில் இருந்து எட்டாவது ஆண்டில் பிராமண பையனுக்கும், பதினோராம் வயதில் க்ஷத்ரிய மாணவர்களுக்கும், 12-வது ஆண்டில் வைஸியப் பையனுக்கும் உபநயனம் (பூணூல்) செய்விக்க வேண்டும்

 

  1. பிரம்ம தேஜஸை விரும்பும் பிராமணக் குழந்தைகள் அதை 5 வயதிலும், பலத்தை விரும்பும் க்ஷத்ரியர் ஆறு வயதிலும், தனத்தை விரும்பும் (வணிகத்தில் வெற்றி பெற விரும்புவோர்) வைஸ்யர் எட்டு வயதிலும் பூணூல் (உபநயனம்) போட்டுக்கொள்ளலாம்.

 

  1. இவ்வாறு பூணூல் (உபநயனம்) போட்டுக்கொள்ள பிராமணனர், க்ஷத்ரியர், வைஸ்யருக்கு முறையே 16, 22, 24 வயது வரை அனுமதி உண்டு.(ஸாவித்ரியை வழிபடும் உரிமை)

 

157.மேலே குறிப்பிட்ட கால வரம் புக்குள் செய்யாவிடில் அவர்கள் விராத்தியர்கள் என்று அழைக்கப்படுவர்.

அவர்களுக்கு ஸாவித்ரியை வழிபடும் உரிமை இல்லை.

158.இவர்கள் மீண்டும் இரு பிறப்பாளராக சில சடங்குகளைச் செய்யலாம். அப்படிச் செய்து மீண்டும் வராதோருடன் ஏனையோர் திருமண உறவுகளையோ வேதச் சடங்கு செய்யும் உறவுகளையோ வைக்கக் கூடாது. துன்பம் வந்த காலத்தும் உதவக் கூடாது

வைதீக கார்யங்களில் இருந்து நீக்கிவைக்கப்பட வேண்டும் பெண் கொடுக்கவோ வாங்கவோ கூடாது.(2-40)

 

159.இனி எந்தெந்த வர்ணத்தார் என்ன மேலாடை, கீழாடை அணிய வேண்டும் என்பதைக் காண்க. பிராமண, க்ஷத்ரிய, வைஸ்யர் முறையே கருப்பு மான் தோல் (கிருஷ்ண சாரம்), புள்ளி மான் தோல், ஆட்டின் தோல் ஆகியவற்றை மேலாடையாகவும், சணல்,  பட்டு நூல், ஆட்டின் மயிர் (கம்பளியை) ஆகியவற்றால் ஆன உடைகளை கீழாடைகளாகவும் அணிக(2-41)

160.இடையில் சுற்றிக்கொள்ள இந்த மூன்று வர்ணத்தாரும் முறையே மிஞ்சிப் புல் (முங்கா புல்), வில்லின் ஞாணைப் போன்ற முறுவல் புல் (மூர்வா), சணல் நார் ஆகியவற்றை மேடு பள்ளமில்லாமல் பின்னி அரை ஞாண்  மேல் அரை ஞாண் கட்ட வேண்டும் 2-42

 

161.மேற்சொன்னவை கிடைக்கவில்லை என்றால் மூன்று வர்ண பிரம்மச்சாரிகளும் தருப்பை, நாணல், சவட்டைக் கோறை ஆகியவற்றினால் ஆன ஞாணை மூன்று அல்லது ஐந்து வடமாக, (குல வழக்கப்படி), ஒரு முடிச்சுடன் அணியலாம்

2-43

 

162.மூன்று வர்ணத்தாரும் போடும் பூணூல் முறையே வலதுபுறம் செல்லும்; பஞ்சு நூல், சணல் நூல், வெள்ளாட்டின் மயிர் ஆகியவற்றால் இருக்க வேண்டும். 2-44

 

 

எனது கருத்து

மனு சொல்லக்கூடிய பெயர் சூட்டும் முறை ஆய்வுக்குரியது. எப்போது வரை இந்த முறை பின்பற்றப்பட்டது என்பதை கிடைக்கும் நூல்களைக் கொண்டு ஆராயலாம். அம்புலி மாமா போன்ற சிறுவர் நூல்களில் கூட மானர் பெயர் என்றால் வர்மன் என்றும் வைஸ்யர் என்றால் தனஎன்ற சொல்லும் இருப்பதைக் காணலாம். ஆனால் இது அப்படியே பின்பற்றப்படவில்லை. மஹாபாரதப் பெயர்களை- சிந்து சம்வெளிப் பெயர்களுடன் (ஊகம் தான்) ஒப்பிட்டுக் காட்டிய எனது ஆய்வுக் கட்டுரையில் சேனன் என்று 24, வர்மன் என்று 13, கேது என்று 9 etc. முடிவதைக் காட்டினேன். ஆனால் அங்கும் கர்ணன், துரோணன் என்றும், கசாப்புக் கடைக்காரனுக்கு தர்மவியாதன் என்றும் பெயர் இருப்பது ஆய்வுக்குரியது. சங்க காலத் தமிழர் பெயர் கள் வேறு விதமாக உள்ளன. ஒரு விஷயம் மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

 

மநு என்பவர் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் அல்ல; அதற்கு மிகவும் முந்திய காலத்தில் வாழ்ந்தவர். ஏனெனில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பல உப ஜாதிகள் தோன்றிவிட்டன. வெறும் 4 வர்ணம் மட்டும் இருக்கவில்லை!

 

இரண்டாவது சுவையான விசயம் மூன்று வர்ணத்தார் (சூத்திரர் தவிர) பூணுல் போட்டுக் கொண்டது, வெவ்வேறு வகையான ஆடைகளை அணிந்தது,  அரை ஞாண் கயிறு அணிந்தது என்பதெல்லாம் எக்காலம் வரை நீடித்தது?

 

மஹாராஷ்டிரத்திலும் (அம்பேத்கர் பூமி), தமிழ்நாட்டிலும் மட்டும் எப்படி அரசியல்வாதிகள் எல்லோருக்கும் சூத்திரர் முத்திரை குத்தினர் என்பதும் ஆராயப்பட வேண்டியது. மற்ற எல்லா மாநிலங்களிலும் நான்கு அல்லது அவர்களின் உட் பிரிவுகளுடன் ஜாதிகள் இருந்தன. இவ்விரு மாநிலங்களில் மட்டும், பிராமணர் அல்லாதார் அனைவரும் சூத்திரர் என்று சொல்லி அம்பேத்கர் கட்சி, திராவிடக் கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடின. இது ஜாதி வெறியை வளர்க்கவும் வேரூன்றச் செய்யவும் காரணமா? என்றும் ஆராய வேண்டும்

 

மநுதர்மம்—- ஜாதியின் பெயரால் வேற்றுமை பாராட்டியது தவறு என்று சொல்லும் தர்மவான்கள்’, இன்று ஜாதியின் பெயரால் சிலருக்கு விஷேச சலுகை தருவது எவ்வகையில் நியாயம் என்பதையும் இதயத்தைத் தொட்டு ஆராய வேண்டும்; பணக்காரர்களும் ஜாதியின் பெயரால் உரிமை பெறுவது நியாம என்றால் மநு ஆயிரம் மடங்கு மேலானவர் என்று ஆகிவிடும்; ஏனெனில் அவர் ஆரம்பதில் எழுதிய ஸ்லோகங்களிலேயே விருப்பு வெறுப்பற்ற காம க்ரோதம் இல்லாதவர்களுகே இந்த சாஸ்திரம் என்று திட்ட வட்டமாகக் கூறிவிட்டார்.

 

அரசியல் சட்ட அமலாக்கத்தில் இருந்து 25 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த ஜாதிவாரிச் சலுகைகள் இருக்க வேண்டும் என்று சொன்ன புதிய மநுவையும் — அம்பேத்காரையும் — காற்றில் பறக்கவிட்ட அரசியல்வாதிகள் அல்லது அவரது கட்சியினர் மநுவைக் குறைகூறினால் உலகம் கைகொட்டிச் சிரிக்கும் என்பது எமது துணிபு.

 

to be continued………………………………….

சகல வியாதிகளையும் போக்கும் சூரிய ஸ்துதிகள் (Post No.4583)

Date: 5 JANUARY 2018

 

Time uploaded in London- 5-41 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4583

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

ஞான ஆலயம் ஜனவரி 2018 இதழில் வெளியாகியுள்ள

மகர சங்கராந்தி சிறப்புக் கட்டுரை.

ஞான ஆலயம் வருட சந்தா ரூ300. சந்தா அனுப்ப வேண்டிய முகவரி :திருமதி மஞ்சுளா ரமேஷ், பழைய எண் 7, புதிய எண் 32, அருணாச்சலபுரம் இரண்டாவது தெரு, அடையாறு, சென்னை, 600020

 

குஷ்ட ரோகம், கண் வியாதிகள் உள்ளிட்ட சகல வியாதிகளையும் போக்கும் சூரிய ஸ்துதிகள்

 

ச.நாகராஜன்

1

உலகின் எல்லா நாகரிகங்களும் சூரியனைக் கண்டு பிரமித்து வியப்பவை. ஆனால் ஹிந்து நாகரிகமோ சூரியனின் அபார வல்லமையை ஆய்ந்து கண்டு பிடித்து அதை மனித குலத்தின் நன்மைக்காகப் பெறுவதற்குள்ள அனைத்து வழிகளையும் தந்திருக்கும் நாகரிகமாக அமைகிறது.

ஏராளமான சூரிய ஸ்துதிகள், சூரிய வழிபாட்டு முறைகள் ஹிந்து பாரம்பரியத்தில் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம்.

2

ஏழாம் நூற்றாண்டில் ஹர்ஷவர்த்தனனின் சாம்ராஜ்யம் மிகப் பெரிதாக விளங்கியது. ஹர்ஷவர்த்தனனும் அவனது தந்தை ப்ரபாகரவர்த்தனனும் சூரிய தேவனை உபாசிப்பவர்கள்.

 

அவனது அரசவையில் மிகப் பெரும் கவிஞராக மயூர பட்டர் என்பவர் இருந்தார். அபாரமான சம்ஸ்கிருத சொல் வன்மை உடையவர் அவர். அவருக்கு அதிரூபலாவண்யம் கொண்ட பேரழகியாக ஒரு மகள் இருந்தாள்.

அவளது அழகு அனைவரையும் சொக்க வைக்கும் அழகு.

அப்படிப்பட்ட அழகைப் பார்த்த மயூர பட்டர் அதைத் தன் அழகிய சொற்களினால் வர்ணித்துக் கவிதை இயற்றினார்.

இந்தப் பாடல்களைக் கேட்ட மகள் பெரிதும் வருத்தமடைந்தாள். சொந்தப் பெண்ணின் அழகை எந்தத் தந்தையாவது வர்ணிப்பானா? இது முறையா என்று அவள் வெகுண்டாள்.

மிகுந்த ஒழுக்க சீலமும் ஞானமும் வாய்ந்த அவள் பெரும் தபஸ்வினியும் கூட.

தந்தையை நோக்கி, “இப்படி நீங்கள் தகாத ஒரு செயலைச் செய்ததற்காக என்னை வர்ணித்த அந்தக் கண்கள் பார்வையை இழக்கட்டும். உங்கள் உடலைக் கொடிய குஷ்டம் தாக்கட்டும்” என்று சாபம் கொடுத்தாள்.

பெரும் சக்தியைக் கொண்டிருந்த அவளது சாபம் உடனே பலித்து விட்டது.மயூர பட்டர் பார்வையை இழந்தார். அவரது உடலோ குஷ்ட ரோகத்தால் பீடிக்கப்பட்டு சோபையை இழந்தது.

மயூர பட்டர் துக்கத்தினால் அழ, அவரது நிலையைக் கண்டு பரிதாபப்பட்ட மகளும் தன் சாபம் அவருக்குச் செய்த கெடுதியைக் கண்டு நொந்து போனாள்.

பின்னர் மனத்தெளிவு பெற்று தந்தையிடம், “தந்தையே! கவலைப்பட வேண்டாம். அனைத்து ரோகங்களையும் போக்கி ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரும் சூரியனைக் குறித்து உங்கள் வாக் வன்மையால் நூறு செய்யுள்களைக் கொண்ட சூர்ய சதகம் ஒன்றை இயற்றி அவனை வழிபடுங்கள். வழி பிறக்கும்” என்றாள்.

மகளின் அமிர்தம் போன்ற வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்த மயூர பட்டர் மனமுருக சூரியனை நோக்கி நூறு மந்திர சக்தி வாய்ந்த அபூர்வமான பாடல்களைப் பாடலானார்.

என்ன ஆச்சரியம்! பாடல்கள் முடிந்த போது அவர் மேனி குஷ்ட ரோகம் நீங்கிப் பளபளத்தது. கண் பார்வை தீர்க்கமாக வந்தது.

ஹர்ஷவர்த்தனன் உள்ளிட்ட அனைவரும் ஆச்சரியத்தால் பிரமித்தனர்.அவரையும் அவர் மகளையும் உலகமே போற்றியது.

 

SUN TEMPLE AT MODHERA IN GUJARAT

அந்த நூறு பாடல்களைக் கொண்ட சதகம் சூர்ய சதகம் என்றும் மயூர சதகம் என்றும் அனைவராலும் போற்றப்பட்டு இன்று வரை ஓதப்பட்டு வருகிறது.

குஷ்டரோகம், கண்பார்வை இல்லாமை உள்ளிட்ட ரோகங்களால் வருந்தும் யாரானாலும் சரி, அவர்கள் இந்த நூறு ஸ்லோகங்களையும் ஒதியோ அல்லது ஓதக் கேட்டோ சூரியனை பயபக்தியுடன் வழிபட்டால் அவர்கள் ரோகம் நீங்கி ஆரோக்கியம் பெறுர். இதை வரலாறு கூறும் ஏராளமான சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

சுமார் 12 பேரறிஞர்கள் இந்த சூர்ய சதகத்திற்கு விரிவுரை என்னும் பாஷ்யத்தைச் செய்திருப்பதிலிருந்தே இதன் மஹிமையைச் சுலபமாக அனைவரும் அறியலாம்.

சமீபகாலத்தில், காஞ்சி பரமாசார்யாள் இதை பிரபலப் படுத்தியது குறிப்பிடத் தகுந்தது.

இதை இன்று சுலபமாக நெட்டிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

3

முக்கோடி வாழ்நாளும் , முயன்றுடைய பெரிய தவமும், எக்கோடியாராலும் வெல்லப்படாய் என்ற வரத்தையும் பெற்ற இராவணனை எப்படி வதம் செய்வது என்று ராமன் சற்று திகைத்து நின்ற போது அவனுக்கு எதிரில் தோன்றிய அகஸ்திய மாமுனி ஆதித்ய ஹ்ருதயம் என்ற அற்புதமான சூரிய வழிபாட்டு மந்திரத்தைக் கற்பித்தார்.

இன்று வரை அனைவருக்கும் பலன் தரும்  மஹா மந்திரம் இது.

 

 

“இவனே பிரம்மா; இவனே விஷ்ணு; இவனே சிவன், ப்ரஜாபதி” (ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணுஸ்ச, சிவ ஸ்கந்த:ப்ராஜாபதி) என்ற அபூர்வமான ரகசியத்தை விண்டுரைத்த அகஸ்தியர் அவனை வழிபடும் பெயர்களை ஆதித்ய ஹ்ருதயத்தில் தந்துள்ளார்.

அதைச் சொல்லி விட்டு அகஸ்தியர், “இதோ, இந்தக் கணத்திலேயே ராவணனை வதம் செய்”  (அஸ்மின் க்ஷணே, மஹா பாஹோ, ராவணம் த்வம் வதிஷ்யஸி) என்று அருளினார்.

இந்த வார்த்தை அன்னை ஜானகிக்கு பொருள் பொதிந்த ஒன்றாக அமைந்திருப்பதை சுந்தர காண்டம் ஓதும் அனைவரும் உணர்வர்.

 

SUN SCULPTURE IN BATH IN ENGLAND, UK

அசோக வனத்தில், கோர ராக்ஷஸிகள் அன்னையைச் சூழ்ந்திருக்க அவர்களில் ஒருத்தி, “என் வார்த்தையை அங்கீகரித்து நடக்காவிட்டால் இந்த க்ஷணத்தில் நாங்கள் எல்லோரும் உன்னைக் கொன்று தின்று விடுவோம் (அஸ்மின் முகூர்த்தே ஸர்வாஸ்த்வாம் பக்ஷயிஷ்யாமஹே வயம்) என்று பயமுறுத்தியதற்குப் பதிலடியாக வந்த மந்திர வார்த்தையாக அஸ்மின் க்ஷணே ராவணனை வதம் செய் என்ற அகஸ்தியர் வார்த்தை அமைவதை உணரலாம்.

கண் வியாதி, கண் பார்வைக் குறைவு உள்ளிட்ட அனைத்து வியாதிகளையும் போக்கும் சூரிய மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம். எதிரிகளை ஒழிப்பது; பரம மங்களமானது; சர்வ மங்களத்தையும் அருள்வது; அனைத்துக் கவலையையும் ஓட்டுவது, ஆயுளைத் தருவது என்பதை ஆதித்ய ஹ்ருதயமே உறுதி செய்கிறது.

(ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாஸனம் I

ஜயாவஹம் ஜபேந் நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம் II

ஸர்வ மங்கள மாங்கள்யம் ஸர்வபாப ப்ரணாஸனம் I

சிந்தாஸோக ப்ரஸமனம் ஆயுர்வர்த்தந முத்தமம் II ஸ்லோகம் 4, 5)

இதை இரண்டு தரமோ மூன்று முறையோ தினமும் பாராயணம் செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாக இருந்து வருகிறது.

வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் சொல்லப்படும் ஆதித்ய ஹ்ருதயம் பற்றி மேலே பார்த்தோம்.

இன்னொரு ஆதித்ய ஹ்ருதயம் (சற்று நீளமானது) ஸ்ரீ பவிஷ்யோத்தர புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக – கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடக்கும் உரையாடலாக – அமைகிறது.)

சிவபிரானால் அருளப்பட்ட சூர்யாஷ்டகம், “ஆதி தேவ நமஸ்துப்யம்” என்று ஆரம்பிக்கும் எட்டு ஸ்லோகங்களைக் கொண்டது. சுலபமாக சில வினாடிகளில் அன்றாடம் அனைவரும் கூறும் அஷ்டகம் இது. பெரிய பலனைத் தர வல்லது.

இன்னொரு சூர்யாஷ்டகம் ஸ்ரீ பண்டித ரகுநாத சர்மாவினால் அருளப்பட்டுள்ளது. ப்ரபாதே என்று இது ஆரம்பிக்கும்.

சூரியனை கவசமாகக் கொள்ள விரும்புவோர் ஓதுவதற்கு உரிய சூர்ய கவசம் ஸ்ரீ சூர்ய உவாச என்று ஆரம்பிக்கும்.

ஸ்ரீப்ரஹ்ம யாமளத்தில் உள்ள இது ‘த்ரைலோக்ய மங்களம் நாம சூர்ய கவசம்’ என்று அழைக்கப்படுகிறது

 

4

வேதங்கள் சூரியனை ‘ரோக நாசகன்’ என்று புகழ்கின்றன. ரிக் வேதம் முதலாம் மண்டலத்தில் நாற்பதாம் சூக்தத்தில் சூரியனைப் பற்றிய அனைத்து இரகசியங்களையும் பற்றி அறியலாம். நண்பர்களின் நண்பனான சூரியனே என்று இது சூரியனை விளிக்கிறது. உனது சிவப்புக் கிரணங்களினால் எனது பீடைகள் தூர விலகுகின்றன என்று அது கூறுகிறது.

ரிஷிகள் சூரியனின் மகத்தான சக்தியை உணர்ந்தவர்கள்.  ஆகவே சூரியனுக்கு என ஒரு தனி உபநிஷத்தே உள்ளது. சூர்யோபநிஷத் என்னும் உபநிடதத்தில் சூரியனே ஞான விஞ்ஞான ஆனந்த ரூபன் என்று வர்ணிக்கப்படுகிறான்.

சூர்ய காயத்ரியின் மஹிமையோ எல்லையற்றது.

“ஓம் பாஸ்கராய வித்மஹே, திவாகராய தீமஹி, தன்னோ சூர்ய ப்ரசோதயாத்” என்பதே சூர்ய காயத்ரி.

(“ஒம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி, தன்னோ சூர்ய ப்ரசோதயாத்” என்றும் சூர்ய காயத்ரி சொல்லப்படுகிறது)

ஆரோக்கிய ப்ராப்தி, சக்தி, புகழ், தேஜஸ் உள்ளிட்ட சகல நலன்களையும் பெற சூர்ய சூக்தத்தை பாடம் செய்யுங்கள் என்பது ரிஷிகளின் அருளுரை. சூர்ய சூக்தம் 47 அபூர்வமான சக்தி வாய்ந்த மந்திரங்களைத் தன்னுள் கொண்டுள்ளது.

சூரிய மந்திரத்துடன் சூர்ய ஸ்தவராஜத்தின் ஐந்து பாடங்களையும் சிரத்தையுடன் ஒருவன் சொன்னால் எப்பேர்ப்பட்ட ரோகமும் போய் விடும் என்பது முனிவர்களின் அருள் வாக்கு.

சாந்தோக்ய உபநிஷத் (1-4-1&2) புத்ர ப்ராப்திக்கு சூரியனை வழிபடுமாறு அருளுரை பகர்கிறது.

மைத்ராயண்யுபநிஷத் சூரியனுக்கும் ஓம்காரத்திற்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது.

சூரிய ஜப விதிகளை வல்லார் வாய் கேட்டு, குரு மூலம் ஆசி பெற்று அனுஷ்டிப்பதே உசிதம்.

 

5

இன்னும் யாக்ஞவல்க்யர் அருளிய சூர்யகவச ஸ்தோத்திரமும், மஹாபாரதத்தில் வரும் சூரிய அஷ்டோத்தரமும் பக்தர்களுக்கு சூரியனின் அருளைப் பொழிவதற்காகவே உள்ளன.

யுதிஷ்டிரர் அருளியுள்ள சூர்ய ஸ்தோத்ரமும் மஹாபாரதத்தில்  உள்ளது.

ஆயிரம் நாமங்களால் ஆயிரமாயிரம் கிரணம் கொண்ட சூர்யனை வழிபடுவதற்கெனவே சூர்ய ஸஹஸ்ரநாமமும் பிரபலமாக உள்ளது.

எட்டாம் இடத்தில் தோஷத்துடன் சூரியன் ஒரு ஜாதகத்தில் அமைந்திருந்தால் எதிர்கால விபரீதங்களைத் தடுக்க சூரியனின் அருள் வேண்டி சூரிய வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

அன்றாட ஆரோக்கியத்தை உறுதி செய்து நீண்ட ஆயுளைப் பெற விரும்புவோர் காலம் காலமாக செய்யப்பட்டு அனுபவத்தால் உண்மை என்று அறியப்படும் சூரிய நமஸ்காரத்தை உரிய மந்திரங்களுடன் தினமும் செய்து சூரியனை காலை நேரத்தில் வழிபடலாம்.

6

இன்னும் மந்திர மற்றும் தந்த்ர சாஸ்திரங்கள் அருளும் விவரங்கள் அபாரமானவை.

இந்த மந்திர,தந்திர பிரயோகங்களை நன்குணர்ந்த குருமார்கள் மூலமாகவே பெற வேண்டும் என்பதால் இங்கு குறிப்பிடவில்லை.

சூரியனுக்கு உரிய யந்திரமாக அமைவது கீழே தரப்பட்டுள்ள யந்திரம்:

 

6 7 2
1 5 9
8 3 4

சூரியனுக்கு உரிய நவக்ரஹ ஸ்துதி:

ஜபாகுஸும ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம் I

தமோரிம் ஸர்வ பாபக்நம் ப்ரணதோஸ்மி திவாகரம் II

சூரியனுக்குரிய ஸ்தலம் : சூரியனார் கோவில் (மாயவரத்திலிருந்து திருவையாறு செல்லும் பாதையில் சுமார் 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது)

இதர தலங்கள் : கோனார்க் உள்ளிட்ட ஏராளமான தலங்கள்

சூரியனின் மனைவி : உஷா ப்ரத்யக்ஷா

சூரியன் அதிபதியாக உள்ள ராசி : சிம்மம்

நவக்ரஹங்களுக்கு நடுவில் உள்ளவர்.

அதி தேவதை:அக்கினி

ப்ரத்யதி தேவதை: ருத்ரன்

நிறம்: சிவப்பு

தானியம் : கோதுமை

மலர் : செந்தாமரை, எருக்கு

வஸ்திரம்: சிவப்பு ஆடை

ரத்தினம் : மாணிக்கம்

சமித்து: முருக்கு

7

சூரியனை வழிபடுவதற்கான விசேஷ தினங்கள் ஏராளம் உள்ளன. மகர சங்கராந்தி (பொங்கல்) அன்று விசேஷமாக சூரிய நாராயண பூஜை செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் மரபு. பாரதமெங்கும் இதைக் கொண்டாடாமல் யாரும் இருப்பதில்லை.

சூரியன் பிறந்த தினமான ரத சப்தமி தை மாதம் அமாவாசை கழிந்த ஏழாம் நாளன்று வருகிறது. அன்று தெற்கு நோக்கிச் சென்ற சூரியன் தன் பயணத்தை முடித்துக் கொண்டு வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்குகிறான். அன்று சூரியனை வழிபடுவதன் மூலமாக நீடித்த ஆயுளையும் நல்ல உடல் நலத்தையும் பெறலாம். புதிய தொழில் துவங்க ரத சப்தமி நல்ல நாள். பெண்கள் இந்த நாளில் சூரியனை வழிபடுவதன் மூலமாகச் சிறப்பான மேல் நிலையை அடைவர்.

ரத சப்தமிக்கான ஒரு அருமையான நீண்ட கதை உண்டு,

அதில் ஒரு அந்தணன் ஒரு மரத்தடியில் தினமும் சூரியனின் 12 நாமங்களைச் சொல்லி வழிபட மரத்திலிருந்து ஒரு குரல் ஏதேனும் கேள் என்று தினமும் ஒலிக்க, அதை அவன் தன் மனைவியிடம் கூற, அவள் சிறிது அன்னமும் செல்வமும் அருளும் படி கேட்கச் சொல்ல, அதை அந்தணன் கூறி வழிபட,  வீ ட்டிற்குத் திரும்பி வந்தவன் வீடு முழுவதும் மலை போல அன்னமும், ஏராளமான செல்வமும் குவிந்து கிடப்பதைப் பார்த்துத் திகைக்க, பின்னர் அவனும் அவன் மனைவியும் அனைவருக்கும் அன்ன தானமும் செல்வ தானமும் தினமும் செய்து பெரும் புகழ் பெற்றனர் என்று வருகிறது.

சூரியனின் வழிபாடு ஹிந்து வாழ்க்கை முறையில் இரண்டறக் கலந்த ஒரு அன்றாட வழிபாடு.

சூரியனின் பெருமையில் இது வரை நாம் பார்த்தது எழு கடல் மணலில் ஒரு சிறு  மணல் துளியைத் தான்.

சகல சௌபாக்கியங்களையும் பெற பிரத்யக்ஷ தெய்வமாக – அன்றாடம் நாம் காணக் கூடிய தெய்வமாக – அறிவியலும் வியந்து ஆமோதிக்கும் பெரும் சக்தியாக – விளங்குவது சூரியனே.

அவனை வழிபட்டு உயர்வோம்; உய்வோம்!

****

 

சாணக்கிய நீதியில் பாம்பு!!! பரமஹம்சர் சொன்ன பாம்பு கதை (Post No.4581)  

சாணக்கிய நீதியில் பாம்பு!!! பரமஹம்சர் சொன்ன பாம்பு கதை (Post No.4581)

 

Written by London Swaminathan 

 

Date: 4 JANUARY 2018

 

Time uploaded in London- 8-16 am

 

 

 

Post No. 4581

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தமிழ் இலக்கியத்தில் பாம்பு, மலைப் பாம்பு பற்றி வரும்  விஷயங்களையும், கம்பனும் காளி தாசனும் பயன்படுத்தும் பாம்பு உவமைகளையும் முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் தந்தேன். சாணக்கிய நீதியில் பாம்பு பற்றி வரும் சுவையான விஷயங்ளைக் காண்போம்

 

நிர்விஷேணாபி ஸர்பேன கர்தவ்யா மஹதீ பணாஹா

விஷமஸ்து ந சாப்யஸ்து பணாடோபோ பயங்கரஹ

 

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 9, ஸ்லோகம் 10

விஷமே இல்லாத ஒரு பாம்பும் கூட அதன் தலையைத் தூக்கி படம் விரித்தாட வேண்டும் (படம் காட்ட வேண்டும்); விஷம் இருக்கிறதோ இல்லையோ பாம்பு படம் விரித்தாடுவது பயத்தை உண்டாக்கும்.

 

சாணக்கியனின் அருமையான போதனை இது. நல்லோர் எல்லோரும் வல்லவர்களாக இருக்க வேண்டும்; பலம் இல்லாதவர்கள் கூட பலம் இருப்பது போல நடித்தால்தான் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்

 

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன பாம்பு கதை

 

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இதை அழகான ஒரு கதையாகக் கூறுகிறார். ஒரு ஊரின் ஒதுக்குப் புறத்தில் ஒரு பாம்பு வசித்து வந்தது. மிகவும் கொடிய பாம்பு; யார் வந்தாலும் கடித்து விஷத்தைப் பாய்ச்சிவிடும்; அவர்கள கதி ‘சகதி’தான். ஒருமுறை அந்தப் பக்கமாக ஒரு சாது சந்யாஸி வந்தார். அவரையும் பாம்பு துரத்தியது ஆனால் அருகில் வந்தவுடன் அந்த யோகியின் தவ வலிமையால் அது சாதுவாக நின்றது என்னைக் கடிக்க வேண்டுமா? கடி என்றார். ஆனால் அது பதிலே சொல்லவில்லை.

 

 

உடனே அந்த ஸாது சந்யாஸியும் அதன் மேல் கருணை கொண்டு நல்லுபதேசம் அளித்தார். “ பாம்பே! இனிமேல் யாரையும் கடிக்காதே- என்றார் அதுவும் தலையையசைத்து சம்மதம் சொன்னது.

 

நாளடைவில் இதன் மென்யை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். இது கிழட்டுப் பாம்பாகி விட்டது; விஷம் எல்லாம் தீரந்து போய்விட்டது என்று அதன் மீது கற்களை வீசினர். அப்போதும் அது ஸாதுவாக இருப்பதை அறிந்து அதன் வாலைப் பிடித்து தர தர என்று இழுத்தனர். அதற்கு உடம் முழுதும் காயம் ஏற்பட்டது.

 

சிறிது காலத்துக்குப் பின்னர் அதே ஸந்யாஸி அந்த வழியாகப் போக நேரிட்டது. பாம்பின் பரிதாப நிலையைக் கண்டார்; குசலம் விசாரித்தார்

 

 

பாம்பு தனக்கு ஏற்பட்ட அவல நிலையைச் சொல்லி, அவருடைய உபதேசத்தைப் பின்பற்றியதால் இந்தக் கதி என்றது.

 

 

ஸந்யாஸி சொன்னார்: “பாம்பே! நான் உன்னைக் கடிக்காதே என்று தானே சொன்னேன்; சீறி பயமுறுத்தக் கூடாது என்று சொல்லவில்லையே!”

இதைச் சொன்ன பரமஹம்ஸர் மேலும் சொல்லுவார்:

பலரும் நீதி வாக்கியங்களை, உபதேசங்களைப் புரிந்து கொள்வதில்லை; அல்லது அரைகுறையாகப் புரிந்து கொள்கி றார்கள். இந்த உலகத்தில் வாழும் வரை மற்றவர்கள் உன்னை மரியாதையாக நடத்தும்படி பார்த்துக்கொள்; அவர்கள் உன்னைக் கண்டு அஞ்ச வேண்டும்; மற்றவர்களைத் துன்புறுத்தாதே; மற்றவர்களைத் துன்புறுத்தவும் அனுமதியாதே.

 

இது நல்ல புத்திமதி. ஸாதுவான பள்ளிக் குழந்தைகளுக்குச் சொல்லித தர வேண்டிய அறிவுரை; பலரும் பள்ளி, கல்லூரிகளில்  கஷ்டப்படுவதைக் கேட்கிறோம்.

 

 

பாதகம் செய்பவரைக் கண்டால்—நாம்
பயம் கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

என்று பாரதி சொன்னதும் அதுவே

 

XXXX

பரஸ்பரஸ்ய மர்மாணி யே பாஷந்தே நராதமாஹா

த ஏவ விலயம் யாந்தி வல்மீகோதரஸர்பவத்

 

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 9, ஸ்லோகம் 2

 

 

ஒருவருடைய ரஹஸ்யங்களை மற்றொருவனுக்குச் சொல்லுபவன் , பாம்புப் புற்றிலுள்ள பாம்பு போல அழிவான்

 

XXXX

 

 

துர்ஜனஸ்ய ச ஸர்பஸ்ய வரம் ஸர்போ ந துர்ஜனஹ

ஸர்போ தசதி காலேன துர்ஜனஸ்து பதே பதே

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 3, ஸ்லோகம் 4

 

பொருள்

 

கெட்டவர்களையும் பாம்புகளையும் ஒப்பிடுங்கால், பாம்பு நல்லது ஆகிவிடும்; ஏனெனில் பாம்பு எப்போதாவது நம்மைக் கடிக்கிறது; கெட்டவர்களோ ஒவ்வொரு அடிக்கும் ஒரு முறை நம்மைக் கடிப்பார்கள்; துன்புறுத்துவார்கள்.

 

XXXX

 

 

சாணக்கியன் சொன்ன பாம்பும், கெட்டவர்களும் என்ற உவமை தமி ழ் இலக்கியத்திலும் உளது. எனது முந்தைய ஆய்வுக் கட்டுரைகளில் காண்க.

 

பாம்பு மந்திரம்: அதர்வண வேதமும் …

https://tamilandvedas.com/…/பாம்பு-மந்திரம்-அதர…

 

18 Oct 2016 – பாம்பு மந்திரம்: அதர்வண வேதமும், கம்பனும் காளிதாசனும் (Post No.3264). snake-nandhu-fb. Research Article by London Swaminathan. Date: 18 October 2016. Time uploaded in London: 14-59. Post No.3264. Pictures are taken from various sources; thanks. (Picture is used only for representational purpose; no connection with the current article.) Contact swami_48@yahoo.com. snakes-banded-egyptian-cobra.

 

பாம்பு | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/பாம்பு/

 

Written by London Swaminathan. Date: 22 October 2017. Time uploaded in London- 6-59 am. Post No. 4325. Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. தேவாரத்தைப் பக்தியோடு படிப்பது ஒருவிதம்; ஓதுவாரின் இனிய குரலில் கோவில் பிரகாரங்களில் கேட்டு ரசிப்பது மற்றொரு விதம்; இலக்கிய …

 

பாம்பு தலையில் பூமி! கம்பன் …

https://tamilandvedas.com/…/பாம்பு-தலையில்-ப…

 

7 Nov 2016 – இதில் நமக்கு வேண்டியது , பல்தலைப் பாந்தள் ஏந்திய மொய்நிலம், அதாவது பல தலைகளையுடையபாம்பின் தலையிலுள்ள பூமி! இன்னொரு பாடலில் … அரசனை சூரியன், வாயு பகவான் ஆகியோருடன் ஒப்பிடுவதும் தமிழ் சம்ஸ்கிருத இலக்கியத்தில் உள்ளது. Atlas holding the earth in Greek …

 

மலைப் பாம்பு | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/மலைப்-பாம்பு/

 

கட்டுரை எண்:- 892 தேதி:– 7 மார்ச் 2014. சங்க இலக்கியத்தில்மலைப் பாம்புகளின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்த தமிழ்ப் புலவர்கள், அவைகள் யானைகளை விழுங்கியது பற்றிப் பாடி வைத்திருக்கின்றனர். யானையை மலைப் பாம்புவிழுங்க முடியுமா? இதோ முதலில் சில உண்மைச் ………………..

 

–subham–

 

 

பத்து உலக மஹா இலக்கிய அதிசயங்கள் (Post No.4575)

Written by London Swaminathan 

 

Date: 2 JANUARY 2018

 

Time uploaded in London- 8-21 AM

 

 

Post No. 4575

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

 

உலக மஹா அதிசயம் இந்தியாவில் நடந்தது. அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது.  இது இந்திய நாகரீகத்தின் தனித் தன்மையைக் காட்டுகிறது. அதற்குப் பின்னர் மேலும் சில அதிசயங்கள் நடந்தன. சுருக்கமாக விளம்புகிறேன்.

 

ஒரு நாட்டின் நாகரீக முன்னேற்றத்தைக் காட்டும் அளவுகோல் எது?

அந்த நாட்டின் இலக்கியங்கள் ஆகும்.

அதிசயம் 1

2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மொழியில் சுமார் 450 புலவர்கள் இரண்டாயிரத்துக்கும் மேலான கவி தைகளை எழுதினர். அதற்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்கிருதத்தில் இன்னும் 400 புலவர்கள் கவிபாடினர். அவர்கள் பாடியவை ஆயிரத்துக்கும் மேலான துதிப் பாடல்கள் ஆகும். இது முதல் அதிசயம் ஆகும். ஏனெனில் உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வாறு 850 புலவர்கள் கூட்டாகக் கவி பாடியதில்லை. சங்க இலக்கியப் புலவர்கள் அத்தனை பேருடைய பெயர்களும் நம்மிடம் இருக்கின்றன இதே போல உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதம் பாடிய 400 கவிஞர்களின் பெயர்களும் நமக்குக் கிடைத்தன.

அதிசயம் 2

இரண்டாவது உலக அதிசயம் இதிலுள்ள பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை! உலகில் வேறு எங்கும் இவ்வளவு பெண்பாற் புலவர்களின் குழுவைக் காண முடியாது. தமிழில் குறைந்தது 25 பெண்பாற் புலவர்களையும் வேதத்தில் குறைந்தது 20 பெண் புலவர்களையும் காண்கிறோம்.

 

இந்த இரண்டு அதிசயங்களும் காட்டும் உண்மை என்ன?

உலகிலேயே மிகப் பழமையான நாகரீகம் இந்து அல்லது இந்திய நாகரீகமே. எந்த ஒரு நாடும் இவ்வளவு அறிஞர் பெருமக்களை அக்காலத்தில் அளிக்கவில்லை.

 

பழமையான நாகரீகம் என்பதோடு மிகவும் முனேறிய நாகரீகம் என்பதும் இதனால் அறியப்படுகிறது.

 

தமிழர்களுக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்கர்கள் எழுதி இருந்தாலும் தமிழர்களைப் போல அவர்கள் மாபெரும் சங்கம் வைத்து மொழியை வளர்க்கவில்லை . வேதங்களோ கிரேக்க மொழிக்கு மிக மிக முந்தியவை.

அதிசயம் 3

மூன்றாவது இலக்கிய அதிசயம் வேதங்களைப் பாதுகாத்த முறையாகும்; பிரமாண்டமானதொரு இலக்கியத்தை — அதாவது 400 க்கும் மேலான புலவர் பாடியவை- ஆயிரத்துக்கும் மேலான துதிகளைக் கொண்டவை — உலகில் எங்குமே வாய் மொழியாகப் பாது காக்கப் படவில்லை இதுவும் இந்திய மக்களின் அறிவாற்றலுக்குச் சான்று பகரும்.

 

   

அதிசயம் 4

நாலாவது அதிசயம் பிரம்மாண்டமான இலக்கியக் குவியலாகும். தமிழர்களும், கிரேக்கர்களும், எபிரேயர்களும் எழுதுவதற்கு முன்னதாக பிரம்மாண்டமான துதிப்பாடல் தொகுப்பை- சமய உரை நடைத் தொகுப்பை– வேத கால இந்துக்கள் உருவாக்கிவிட்டனர். அதாவது நான்கு வேதங்களில் மட்டுமே 20,000 க்கும் மேலான மந்திரங்கள்; அதற்குப் பின்னர் பிராமண இலக்கியங்கள், ஆரண்யகங்கள் உபநிஷத்துக்கள் என்னும் உரை நடை இலக்கியங்கள் தோன்றின. இதையும் ஒப்பற்ற முன்னேற்றம் என்று சொல்லலாம்.

 

எகிப்திய நாட்டில் பபைரஸ் (Papyrus) என்ற புல்லில் பல நூல்கள் உள. சுமேரியாவில் – மத்திய கிழக்கில் — 60,000 களிமண் பலகைகள் (Clay Tablets) உள. ஆயினும் இலக்கியம் என்று சொல்லும் நயமுள்ள பகுதிகள் மிகச் சிலவே.

 

அதிசயம் 5

ஐந்தாவது அதிசயம் உபநிஷத்துக்கள் என்னும் தத்துவ நூல்களாகும். இந்தியாவில்  இந்த தத்துவ நூல்கள் உருவாகிய சில நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், ஜொராஸ்டர், மோஸஸ், மஹாவீரர், புத்தர், கன்பூசியஸ் என்று உலகின் பல பகுதிகளில் மஹான்கள் தோன்றினர்.

 

அதிசயம் 6

ஆறாவது அதிசயம் மிக நீண்ட மன்னர் பட்டியலும், குருமார்கள் (Long List of Kings and Teachers) பட்டியலும் ஆகும். 140 தலைமுறைகளின் வரிசை அப்படியே புராணங்களில் உள்ளன. ஐம்பதுக்கும் மேலான ‘குரு’க்களின் பெயர்கள் பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் உள்ளன. இப்படிப்பட்ட நீண்ட பட்டியல் உலகில் வேறெங்கும் இல்லை; வரலாற்று ஆசிரியர்களாகக் கஷ்டப்பட்டு நமக்குக் கொடுத்த பட்டியல்தான் உள்ளது– கி.மு இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் பெரோரஸஸ் (Berossus) முதலியோர் கொடுத்த வரலாற்றுப் பட்டியல் பல முரண்பாடுகளுடன் இருந்ததை வரலாற்று ஆய்வாளர்கள் தட்டிக்கொட்டிச் சரிப்படுத்தியுள்ளனர். இதற்கெல்லாம் முன்னதாக கிரேக்க ஆசிரியர்கள் நம்முடைய 140 தலை முறை பற்றி வியப்போடு எழுதிவைத்துள்ளர்.

 

அதிசயம் 7

ஏழாவது இலக்கிய  அதிசயம் அசோகர் கல்வெட்டுகளாகும் . கி.மு மூன்றாம் நூற்றன்டில் திடீரென  ஆப்கனிஸ்தான் முதல் இலங்கையின் தென்கோடி வரை பிராமி லிபியில் (Brahmi script) பாலி மொழியில் கல்வெட்டுகள் தோன்றியதாகும். இதில் மிக முக்கியமான உண்மை வெளியாகியது. இந்தியர்கள் மஹா மேதாவிகள் — பட்டி தொட்டி தோறும் எழுத்தறிவு மிகுந்து இருந்தது. கர்நாடகத்தில் கூட அசோகர் கல்வெட்டுகள் கிடைத்து இருக்கின்றன. சீன யாத்ரீகர் குறிப்பிடும் காஞ்சீபுரக் கல்வெட்டுகள் மட்டும் படை எடுப்பில் அழிந்துவிட்டன. எழுத்தறிவு இருந்ததால்தான் இப்படி கல்வெட்டுகளைக் காண முடிகிறது. இது உலக அதிசயம் (Brahmi script from Afghanistan to Kandy in Sri Lanka). இப்படிப்பட்ட பெருநிலப்பரப்பில் உலகில் வேறு எங்கும் 2300 ஆண்டுகளுக்கு முன் காணக் கிடைக்காது. இந்தியர்கள் எந்த அளவுக்கு எழுத்து அறிவு பெற்று இருந்தனர் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

அதிசயம் 8

எட்டாவது உலக அதிசயம் பிராமி என்னும் எழுத்தாகும். இந்த லிபி மூலம் தமிழ் உள்பட தெற்காசிய எல்லா மொழிகளுக்கும் லிபியை/ எழுத்தை அளித்த இலக்கிய அதிசயம் ஆகும். இது பீனிசிய எழுத்தில் இருந்து வந்ததாகவும் வரவில்லை என்றும் இரு வேறு கருத்தூக்கள் உண்டு– ஆயினும் இதைக் கண்டு வெளிநாட்டினர் வியக்கின்றனர். ஏனெனில் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி எழுதிய சம்ஸ்கிருத எழுத்து முறைக்குத் தக, அகர (alphabet) வரிசைப்படி, இந்த எழுத்து முறை அமைந்துள்ளது– மற்ற மொழி எழுத்துக்கள் இப்படி அமையவில்லை என்பது அவர்கள் கூற்று.

 

 

அதிசயம் 9

ஒன்பதாவது உலக மஹா இலக்கிய அதிசயம் பாணினியின் அத்புதமான ஸம்ஸ்கிருத வியாகரணம் ஆகும் அஷ்டாத்யாயீ என்னும் இந்த இலக்கண நூலைக் கண்டு வியக்காதோர் உலகில் இல்லை. பாரதி தனது பாடல்களில் வேத முரசு உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்று சொன்னதோடு பாணினியையும் உபநிஷத்துக்களையும் தனியாகப் புகழ்ந்து பாடியுள்ளார். 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் வேறு எந்த மொழிக்கும் இலக்கண நூல் என்பதே இல்லை; இலக்கணம் இருந்ததா (?!?!) என்பதும் ஐயப்பாடே.

 

அதிசயம் 10

பத்தாவது உலக மஹா இலக்கிய அதிசயமும் இந்தியாவில் நிகழ்ந்ததே! மொழி தொடர்பான விஷயங்களை உவமையாகக் காட்டுவது, எண் தொடர்பான அடையாளக் குறியீடுகளை (Number symbolism) வைத்துப் பாடுவது. மொழி இயல் கருத்துக்களை (Linguistic remarks) வேதம் போன்ற துதிப்பாடல்களில் கூடச் சேர்ப்பது வேறு எங்கும் காணாப் புதுமை ஆகும். ஒரு சமுதாயம் இலக்கியத்திலும் மொழியிலும் (Language), மொழி இயலிலும் (Linguistics)  வளர்ச்சி அடைந்தால்தான் இத்தைகய ஜாலங்களைச் செய்ய இயலும். சொல் வேட்டுவர்களையும் வில் வேட்டுவர்களையும் ஒருங்கே கண்ட நாடு இது— அரசர்களும் கவி பாடிய நாடு இது. சங்கேத மொழியில் பாடுவதே (Secret, hidden language) எங்கள்  தொழில் என்று வேத கால முனிவர்கள் ஆடிப்பாடிய நாடு இது. இப்படிப்பட்ட ரஹஸிய விஷயங்கள் இருந்ததால் வேதத்தை எழுதாக் கற்பு என்றும் மறை (Secret, hidden meaning) என்றும் மொழி பெயர்தான் தமிழன்.

 

இவை எல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த  அ திசயங்கள். எகிப்திலும் பாபிலோனியாவிலும் கல் ஓவியம் இருக்கலாம்; சொல் ஓவியம் இல்லை. ஒரு தத்துப் பித்து ஜில்காமேஷை (Gilgamesh) வைத்துக் கொண்டு கூத்தாடலாம். ஆனால் ரிக் வேதத்தின் க டைசி துதிப்ப்பாடலுக்கு அது ஈடு இணையாகாது.

வேதத்தில் மொழி, மொழி இயல் பற்றி வரும் குறிப்புகளையும்        உலக நலன் பற்றி வரும் வேதத் துதிகளின் எண்களையும் குறிப்பிட்டு கட்டுரையை முடிப்பேன்

 

மொழி இயல் கூறும் துதிகள்

RV 1-164, 4-58, 8-59, 8-100, 10-71, 10-114, 10-125, 10-177

 

மொழி / பேச்சு பற்றிய துதிகள்

RV 1-164, 10-71, 4-3, 10-125

உலக நலன் பற்றிய துதிகள்

10-191, , YV 36, AV 19-60, AV 7-69, AV 3-30,

 

வாழ்க இந்தியா! வளர்க இலக்கியம்!!

 

–SUBHAM–

யவனர்களைத் தமிழர்களும் சாணக்கியனும் தாக்கியது ஏன்? (Post No.4564)

Image of Roman Wine

 

Research Article Written by London Swaminathan 

 

Date: 30 DECEMBER 2017 

 

Time uploaded in London- 7-54 am

 

 

Post No. 4564

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

 

யவனர்களைத் தமிழர்களும் சாணக்கியனும் தாக்கியது ஏன்? (Post No.4564)

 

 

யவனர்கள் யார்?, மிலேச்சர்கள் யார்? என்று மூன்று ஆண்டுகளாகச் சில ஆராய்ச்சிக்  கட்டுரைகளை எழுதிவிட்டேன். இப்பொழுது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் போலவே சாணக்கியன் காலத்திலும் ‘யவன வெறுப்பு’ இருந்ததைக் காட்டும் பாடல் கிடைத்துள்ளது அதையும் பார்ப்போம். காளிதாசன் கவிதைகளைக் கண்ட போது ஒரு புதிய எண்ணமும் மனதில் உதித்தது. அதையும் சொல்லுவேன்.

 

எனது துணிபு

 

யவனர் என்பது கிரேக்க, ரோமானிய, பாரசீக, அராபிய இனங்களைக் குறித்தது.

 

யவனர் மீது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலம் வரை இருந்த வெறுப்பு பின்னர் சிறிது சிறிதாகத் தணிந்தது.

 

யவனர்களை கடும் சொல் பேசுவோர், அவர்கள் காவல் வேலைக்கு உகந்தோர், அந்நாட்டு அழகிகள் அந்தப்புரத்தைக் காக்க உதவுவர்; நம் மொழி தெரியாததால் அரசு ரஹஸியங்களைப் பாதுகாக்க அவர்களை அரசனுக்குக் காவலாக வைக்கலாம், மதுபானம் கொடுத்து உபசரிக்க அந்த அழகிகளை அருகில் வைத்துக் கொள்ளலாம் என்ற தகவல்கள் தமிழ் , ஸம்ஸ்க்ருத நூல்களில் இருந்து தெரிகின்றன.

Image of Persian Wine

முதலில் சாணக்கியன் சொல்லும் செய்தியைக் காண்போம்:-

 

சாண்டாலானாம் ஸஹஸ்ரைஸ்ச ஸூரிபிஸ்தத்வதர்சிபிஹி

ஏகோ ஹி யவனஹ ப்ரோக்தோ ந நீ சோ யவனாத் பரஹ

 

 

 

 

“உண்மை நிலையை உணர்ந்த அறிஞர்கள் செப்பியது என்ன? ஒரு யவனன் ஆயிரம் சண்டாளர்களுக்குச் சமமானவன். யவனனை விடத் தாழ்ந்தது உலகில் எதுவுமே இல்லை”.

 

சாணக்கிய நீதி, அத்தியாயம் 8, ஸ்லோகம் 5

 

ஏன் இந்த வெறுப்பு? சாணக்கிய நீதி நூலை மொழி பெயர்த்த ஸத்ய வ்ரத சாஸ்திரி பகர்வது யாதெனில், இவர்கள் ஆட்சியைப் பிடிக்க வந்தவர்கள். மேலும் வெறுக்கத் தக்க பழக்க வழக்கங்களை உடையவர்கள் என்பதாகும்.

 

உண்மைதான் இந்துக்கள் வெறுக்கும் பசு மாமிசத்தைப் புசித்திருப்பர். அலெக்ஸாண்டர் இறந்தவுடன் 2300 ஆண்டுகளுக்கு முன்பு, வடமேற்கு இந்தியாவில் இந்திய-கிரேக்க வம்ஸத்தினரின் ஆட்சி நிலவியது. அவர்கள் படை எடுப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.

 

மேலும் அவர்கள் படுத்துக் கொண்டே உணவு உண்பார்கள் என்பதும் ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்களில் உள்ளது; ‘’சயானா முஞ்சதே யவனாஹா’’ என்று ஸ்லோகம் உள்ளதால் அவர்களுக்கு ‘’துர்யவனம்’’ என்ற அடைமொழி (கெட்ட யவனன்) கொடுக்கப்பட்டது. மேலும் இந்த ‘’துர் யவனம்’’ என்பதை ஸம்ஸ்க்ருத வியாகரணத்தில் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை விளக்க எப்போதும் பயன்படுத்தினர். ஆக பழக்க வழக்கங்களாலும் கடும் சொற்களாலும் (மிலேச்ச பாஷை பேசியதாலும்) இவர்கள் தீண்டத் தகாதவர்கள் (சண்டாளர்) ஆனார்கள்.

 

நான்     இன்னும் ஒரு கருத்தையும் சேர்ப்பேன். ஆரம்ப காலத்தில் இவர்கள் மேலைக் கடற்கரையில் சென்ற நமது வணிகக் கப்பல்களைத் தாக்கிக் கொள்ளை அடித்திருப்பர். சந்திர குப்த மௌர்யன், அவனுக்குப் பின்னால் இமய வரம்பன் நெடுஞ் சேரலாதன் ஆகியோர் இவர்களை அடக்கி ஒடுக்கி வழிக்குக் கொண்டுவந்த பின்னர் கடுமை குறந்து இருக்கும்.

 

பாரஸிக மதுபானம்

என்னுடைய இன்னும் ஒரு ஆராய்ச்சி தமிழகத்துக்குப் பாரஸிக மதுபானம் வந்த செய்தியாகும். யவன அழகிகள் தமிழ் மன்னர்களுக்கு தங்கக் கிண்ணங்களில் மது பானம் வழங்கிய செய்தி சங்க இலக்கியத்தில் உள்ளது (கீழே எனது பழைய ஆய்வுக் கட்டுரைகளுக்கான லின்க் LINK உள்ளது. அவைகளில் சங்க இலக்கியம் பற்றிய விரிவான செய்திகள் காணக் கிடைக்கும்.

 

காளிதாசன் அவனது நாடகங்களான சாகுந்தலம், மாளவிகா அக்னிமித்ரம், விக்ரம ஊர்வஸீயம் ஆகியவற்றிலும் ரகு வம்ஸத்திலும் யவனர் பற்றிய பல காட்சிகளைத் தருகிறான்:

 

 

ரகுவம்ஸ ஸ்லோகம் இதோ:–

 

யவனீ முக பத்மானாம் ஸேஹே மதுமதம் ந ஸஹ

பாலாமிவாப்ஜானாம் அகால ஜலதோதுயஹ

ரகுவம்ஸம், அத்யாயம் 4, ஸ்லோகம் 61

 

 

பொருள்:

காலை வேளையில் சூரியன் உதயமானவுடன் தாமரை மலர்கின்றது. முன்பே செந்நிறம் பெற்றுள்ள தாமரை மலர்கள், சூரியனது இளம் வெய்யில் படும் பொழுது மேலும் அழகு பெறும். ஆயினும் மேகக் கூட்டம் வந்து ஒளியைத் தடுத்தால் அவை ஒளி குறைந்து காணப்படும் பாரஸீகப் பெண்களின் முகம் செக்கச் செவே என்று தாமரை போல உள்ளன. அந்த அழகிகள் மதுபானம் செய்து மேலும் அழகு பெற்றனர். ஆயினும் ரகு மன்னன், பாரஸீகம் (ஈரான் நாடு) மீது படை எடுத்து வருகிறான் என்ற செய்தியைக் கேட்டவுடன் வாடினர். ஏனெனில் மது பானம் செய்வதைத் தவிர்த்தனர்.

 

யவன என்பதற்கு வியாக்கியானம் செய்தவர்கள் கொடுக்கும் பொருள் பாரஸீகம்

 

இந்த பாரஸீக மதுதான் சங்கத் தமிழ் நூல்களிலும் பயிலப்பட்டது என்பது எனது துணிபு.

Yavana in Barhut Sculpture; 2300 year old.

ஸாகுந்தலம் என்னும் உலகப் புகழ் பெற்ற நாடகத்தில், இரண்டாம் காட்சியிலும் ஆறாம் காட்சியிலும் யவன ஸ்த்ரீகள் நடமாடுகின்றனர். மாமன்னன் துஷ்யந்தனின் படைகளுடன் வந்த பரிவாரத்தில் யவன அழகிகளும் இருந்தனராம் (இதைத் தமிழிலும் காண்கிறோம்). மன்னன் எங்கு எங்கெல்லாம் சென்றானோ அங்கெல்லாம் யவன மாது ‘வில்’லை எடுத்து வந்தாளாம்.

 

முற்கால மன்னர்களின் சபைகளிலும், அரண்மனைகளிலும் யவன மகளிருக்கு வேலைக்காரி வேலை கொடுக்கப்பட் டத்தை ஏனைய நாடகங்கள் காட்டுகின்றன. இதைத் தில் இலக்கியத்திலும் காண்கிறோம்.

 

ஆக யவனர்கள் என்பது கீழ் மட்ட வேலைக்காரர் அல்லது வேலைக் காரி என்ற பொருளிலேயே சாணக்கியனும் தமிழரும் பயின்றனர்.

 

 

காளிதாசனின் 200-க்கும் மேலான உவமைகள் சங்கத் தமிழ் நூல்களில் உபயோகிக்கப்பட்டதால் காளிதாசன், சங்க காலத்துக்கு முந்தையவன் என்பதைப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் காட்டினேன். இந்த பாரஸீக மது, யவன வேலைக்காரிகள் என்பதை இன்னும் ஒரு சான்றாகக் கொள்க!

 

 

Persia (Iran)

 

யவனர்கள் யார் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/யவனர்கள்-யார்/

 

ஆராய்ச்சிக் கட்டுரை வரைபவர்: லண்டன் சுவாமிநாதன் கட்டுரை எண்.:–1207; தேதி:- ஆகஸ்ட் 1, 2014. சங்க இலக்கியத்திலும் பிற்காலத்தில் எழுந்த சிலப்பதிகாரத்திலும்யவனர்கள் பற்றிய சில குறிப்புகள் உள்ளன. இவை பெரும் புதிராக உள்ளன. யார் இந்த யவனர்? எப்போது இந்த சம்பவங்கள் நடந்தன …

சங்க இலக்கியத்தில் யவனர் மர்மம்! | Swami’s …

swamiindology.blogspot.com/2014/08/blog-post.html

1 Aug 2014 – சேரர்கள் – யவனர் மோதல் மர்மம் நீடிக்கிறது. சேர மன்னர் ஆண்ட யவனர் நாடோ, கைகளைப் பின்னால் கட்டி தலையில் நெய் ஊற்றப்பட்ட யவனர்கள் யார் என்பதோ தெரியவில்லை.இதே போல புராணங்களும் சகர மன்னன், யவனர்களைப் பிடித்து மொட்டை அடிக்கச் செய்தான் என்று …

“மிலேச்ச” என்றால் என்ன? | Tamil and Vedas

https://tamilandvedas.com/2012/…/மிலேச்ச-என்றால…

  1. 6 Sep 2012 – பலுச்சிஎன்பது மிலேச்ச என்று மாறியது என்று சில மொழி இயல் அறிஞர்கள் வாதிடுவர். கிரேக்கர்களும் கூட தங்கள் இனத்தைச் சேராதோரை ‘பார்பேரியன்ஸ்’ என்று அழைத்தனர்.

மிலேச்சர்களை அழிக்கும் கல்கி …

https://tamilandvedas.com/…/மிலேச்சர்களை-அழி…

21 Mar 2015 – … ‘மிலேச்ச பாஷை’யும் அல்ல என்பது இக்கட்டுரையின் துணிபு. முந்தைய கட்டுரைகள்:–. MLECHA: Most Misunderstood Word (Posted on 3 September,2012). “மிலேச்சஎன்றால் என்ன? (Posted on 6 September,2012) …

 

சுபம்–

சாணக்கியனின் புதிர்க் கவிதை! காலையில் சூது, மதியம் மாது, இரவில் களவு! (Post No.4557)

சாணக்கியனின் புதிர்க் கவிதை! காலையில் சூது, மதியம் மாது, இரவில் களவு! (Post No.4557)

 

Written by London Swaminathan 

 

Date: 28 DECEMBER 2017 

 

Time uploaded in London- 6-46 am

 

 

Post No. 4557

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

 

சாணக்கியன்  ராஜ தந்திரி மட்டும் அல்ல; பொருளாதார நிபுணன் மட்டும் அல்ல; கவிஞனும் கூட! அவனது சாணக்கிய நீதியில் ஆங்காங்கு சில புதிர்க் கவிதைகளையும் பாடியுள்ளான்.

 

காலையில் சூதாடுங்கள்!

மதியம் பெண்களிடம் போங்கள்!

இரவில் திருடுங்கள்!

நல்ல போதனை ஐயா! போதையில் சொன்ன போதனையோ என்று எண்ணத் தோன்றுகிறதல்லாவா? மேலும் பார்ப்போம்.

 

சாணக்கிய நீதி, அத்தியாயம் 9, ஸ்லோகம் 11

ப்ராதர் த்யூதப்ரசங்கேன மத்யாஹ்னே ஸ்த்ரீ ப்ரசங்கதஹ

ராத்ரௌ சௌர்யப்ரசங்கேன  காலோ கச்சதி தீமதாம்

 

பொருள்

புத்திசாலிகள்/ அறிஞர்கள் காலையில் சூதிலும் மதியத்தில் மாது (மகளிர்) இடத்திலும், இரவில் திருட்டிலும் பொழுதைக் கழிக்கின்றனர்.

 

இதன் பொருள் வியாக்கியானக்காரர்களின்றி நமக்கு விளங்காது. இதோ அவர்கள் பகரும் உண்மைப் பொருள்:-

 

 

த்யூதப் ப்ரசங்க என்பது சூதாட்டம்– காலையில் அறிஞர்கள் மஹாபாரதம் படிப்பார்கள்

 

*தமிழில் நாம் வழங்கும் சூது என்ற சொல் சம்ஸ்கிருத ‘த்யூத’ என்பதுடன் தொடர்புடையது. இரண்டு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து வந்ததைக் காட்டும் ஆயிரக் கணக் கான சொற்களில் இதுவும் ஒன்று)

 

ஸ்த்ரீ ப்ரசங்க– என்பது பெண் பற்றியது; இங்கே பெண் என்பது உலக மஹா உத்தமி சீதையின் சரிதமான — ராமாயணத்தைக் குறிக்கும்; ஆகவே அறிஞர்கள் மதியத்தில் ராமாயணம் படிப்பார்கள் என்பது இதன் உண்மைப் பொருள்; ‘’ஸீதாயாஸ் சரிதம் மஹத்’’– என்பது ஆன்றோர் வாக்கு.

சௌர்ய ப்ரசங்க– என்பது திருட்டு பற்றியது; இது பாகவத புராணத்தைக் குறிக்கும். கிருஷ்ணனைவிட பெரிய திருடன் உண்டா? வீட்டில் வெண்ணை திருடினான்; காட்டில் கோபியர்களின் சேலைகளைத் திருடினான்; கும்பிடும் இடங்களில் எல்லாம் பக்தர்களின் உள்ளத்தைத் திருடினான்; மனம் கவர் கள்வன் அவன்; உள்ளம் கவர் செல்வன் அவன். ஆக, அறிஞர்கள் இரவு நேரத்தில் பாகவத புராணத்தைப் படித்து, போகும் வழிக்குப் புண்ணியம் தேடிக் கொள்வர்.

 

சாணக்கியனின் கற்பனையும் சொல்லும் நயமும் எல்லோர் மனதையும் வெல்லும்!

 

என்  சொந்தக் கருத்து:–

 

கண்ணன் திருடிய கோபியர்களின் சேலைகள் எல்லாம் எங்கே போயிற்று? அவன் ஏன் அப்படித் திருடினான்? என்றால் எதிர்காலத்தில்

திரவுபதிக்கு உதவத்தான்! நூற்றுக் கணக்கானோர் முன்னிலையில் துச்சாதனன் அவிழ்க்கப் போகும் நேரத்தில் அவன் கை ஓயும் அளவுக்கு சேலை மழை பொழியவே கண்ணபிரான் திருடினான்!

வாழ்க சாணக்கியன் புகழ்; வளர்க கண்ணன் புகழ்!!

 

-சுபம்–

ஒரு நொடி வாழ்ந்தாலும் போதும்- சாணக்கியன் அறிவுரை (Post No.4522)

Markandeya Painting by Raja Ravivarma from Wikipedia

 

Written by London Swaminathan 

 

Date: 20 DECEMBER 2017 

 

Time uploaded in London-  16-21

 

 

Post No. 4522

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

முஹூர்த்தமபி ஜீவேத்வை நரஹ சுக்லேன கர்மணா

ந கல்பமபி கஷ்டேன லோகத்வயவிரோதினா

சாணக்ய நீதி 13-1

பொருள்

தகாத செயல்களை செய்துகொண்டு யுகக் கணக்கில் வாழ்வதைவிட, குற்றமற்ற தூய செயல்களைச் செய்துகொண்டு ஒரு நொடி வாழ்ந்தாலும் சிறந்ததே. தீய செயல்கள் இக, பர லோக வாழ்வுக்குத் தீங்கு இழைக்கும்.

மார்க்கண்டேயன் 16 வயது வாழ்ந்தும் அழியாத இடம் பெற்றான்.

ஆதி சங்கரர் 32 வயதும், சம்பந்தர் 16 வயதும் தான் வாழ்ந்தனர். பாரதியார் 39 வயதுதான் வாழ்ந்தனர். சுவாமி விவேகாநந்தரும் அவ்வாறே.

 

இவர்கள் அனைவரும் வரலாற்றில், இலக்கியத்தில் அழியாத இடம் பெற்றுவிட்டனர். ஆகையால் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற குறிக்கோளைவிட. இருக்கும் காலத்தில் சாதனைகளைச் செய்ய வேண்டும் என்பதே சிறந்த லட்சியம்.

 

மார்கண்டேய புராணம் காட்டிய பாதை

புகழ் சேர்க்கும் 16 வயதுப் புதல்வன் (( மார்க்கண்டேயன் )) வேண்டுமா? பூமிக்குப் பாரமாக வாழும் ஆயிரத்தோடு ஆயிரத்தொன்றாக 100 ஆண்டுகள் வாழும் புதல்வன் வேண்டுமா? என்று மிருகண்டு ரிஷியை இறைவன் கேட்ட போது புகழ் சேர்க்கும்- தோன்றிற் புகழொடு தோன்றும்  — 16 வயதுப் புதல்வன் போதும் என்றனர் ம்ருகண்டுவும் அவரது மனைவி மருத்வதியும். நல்ல அருமையான கதை. இந்துக்களின் லட்சியம் எதுவாக இருக்க வேண்டும் என்று சொல்லும் கதை. வள்ளுவனை புகழ் என்னும் அதிகாரத்தின் கீழ் பத்து குறட்பாக்களைப்  பாடவைத்த கதை!

 

 

ஏதேனும் சாதனைகளைச் செய்ய வேண்டும் என்று துடியாய்த் துடித்த பாரதி பாடுகிறான் ‘நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?’ என்று. அவனுடைய ஆசை இந்த பூமிக்குப் பாரமாக இருக்கக்கூடது என்பதே.

உலகமெங்கும் தமிழ் மொழி ஓசையையக் கேட்கச் செய்ய வேண்டும்; வேத முரசு எங்கும் ஒலிக்க வேண்டும்; தமிழில் பழ மறையைப் பாட வேண்டும்; நாடு விடுதலை பெறவேண்டும்; இல்லையென்ற கொடுமை இல்லையாக வேண்டும்; கோடி கவிதைகள் இயற்றல் வேண்டும்; விட்டு விடுதலையாகி (முக்தி)  சிட்டுக்குருவி போல பறக்க வேண்டும்- என்று பாடுபட்டான்; அழியாப் புகழும் பெற்றான்.

 

வல்லமை தாராயோ, இந்த மாநிலம்

பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவ சக்தி—நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?”

பாரதி பாடல்

 

 

வள்ளுவனும் சொன்னான்,

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம் (குறள் 239)

 

பொருள்

புகழ்பட வாழாத உடம்பைப் பெற்ற நிலத்தில் விளைச்சல்கூடக் குறைந்து விடும்.

 

வசையொ  ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

வாழ்வாரே வாழாதவர் (240)

 

பொருள்

உலகத்தில் தம் மீது பழியில்லாமல் வாழ்கின்றவரே வாழ்கின்றவர் ஆவார்கள். புகழ் தேடாமல் வாழ்வோர், இறந்தர்கள் போலத்தான்.

 

‘They alone live for who live others; the rest are more dead than alive’ -Swami Vivekananda

பிறருக்காக வாழ்பவனே — அதாவது சுயநலம் இல்லாமல் — வாழ்பவனே வாழ்பவன்; மற்ற எல்லோரும் செத்தாருள் வைக்கப்படும் – என்று சுவாமி விவேகாநந்தரும் சொன்னார்.

 

வள்ளுவன், பாரதி, விவேகாநந்தர், 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சாணக்கியன்– எல்லோரும் சொன்னது ஒன்றே:

லட்சியத்துடன் வாழ்; புகழுடன் வாழ்.

–SUBHAM-