எலி பற்றிய 4 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8148)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8148

Date uploaded in London – 11 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

விடை

1.எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்

2.எலிக்குத் திண்டாட்டம் , பூ னைக்குக கொண்டாட்டம்

3.எலி அம்மணத்தோட போகிறதென்கிறான்

4.எலி வளையா னா லும்  தனி வளை வேண்டும்


Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

Tags-    எலி,  பழமொழிகள், பூனை, பாம்பு

–subham–

பாம்பு பற்றிய 3 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் (Post No.7999)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7999

Date uploaded in London – 18 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

பாம்பு  பற்றிய 3 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள்

விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது

பாம்பு  என்றால் படையும் நடுங்கும்

பாம்பின் கால் பாம்பறியும்

பாம்பு என்று தாண் டுவதா, பழுது என்று மிதிப்பதா?


tags –   பாம்பு,  பழமொழி

பாபிலோனியாவில் பாம்புக் கடவுளும் கீரிக் கடவுளும் (Post No.6064)

Ethapur picture sent by Lalgudi Veda

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 12 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 7-55 am


Post No. 6064

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

-Babylonian Boundary stone

பாம்பு நீர் குடித்தால் விஷமாகும்; பசு நீர் குடித்தால் பால் ஆகும்! (Post No.5848)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 28 December 2018
GMT Time uploaded in London –20-40
Post No. 5848


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பர்த்ருஹரியின் நீதி சதகத்திலுள்ள நூறு பாடல்களில் இது வரை 44 பாடல்களைக் கண்டோம். மேலும் சில பாடல்களைத் தமிழ் இலக்கியத்துடன் ஒப்பிட்டு மகிழ்வோம்

இதோ பாடல் 45

கெட்டவனுக்கு இயல்பாகவே கொடுஞ்செயல்கள் வரும்.

காரணம் இல்லாமலேயே சண்டைக்கு வருவான்.

மற்றவர் செல்வத்துக்கும் மனைவியர்க்கும் ஆசைப்படுவான்.

நல்லோரைக் கண்டால் சீறி விழுவான்.

தனது குடும்பத்தினரையே நிந்திப்பான்.

ராவணன் இந்த எல்லா கெட்ட குணங்களையும் உடையவன்.

குபேரனின் புஷ்பக விமானத்தைப் பறித்தான்;

சிவ பெருமானின் கயிலை மலையை அசைத்தான்;

ராமனின் மனைவியைக் கவர்ந்தான்.

தேவர்களைத் துன்புறுத்தினான்.

எல்லா ராக்ஷசர்களும், நல்லோரைத் துன்புறுத்தியதால்தான் விஷ்ணு பல அவதாரங்களை எடுக்க நேரிட்டது.

திருவள்ளுவரும் தமிழ் வேதமான திருக்குறளில் கயவர்களின் குணத்தை வருணிக்கிறார்

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகும் கீழ் -குறள் 1079

பிறர் நன்றாக உடுப்பதையோ உண்பதையோ கண்டால்,கயவர்கள், பொறாமை கொண்டு அதற்கும் குற்றம் காண வல்லவர் ஆவார்கள்.

ஈசாப்   கதையில் வரும் ஆடு- ஓநாய் கதை போலத்தான். வலிய சண்டைக்கு இழுத்து ஆட்களைக் கொல்லுவர். ரிஷி முனிவர்கள் காடுகளில்  பழங்களையும் தேனையும் சேகரித்து உண்டு அமைதியான வாழ்க்கை நடத்தியபோதும் அவர்களுடன் வம்புச் சண்டைக்குப் போனவர்கள் அரக்கர்கள்.

பிறன் மனை நோக்காத பேராண்மை

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்- குறள் 146

பிறருடைய மனிவியை நாடிச் செல்பவனுக்கு நான்கு கெடுதிகள் எப்போதும் வரும்/ இருக்கும்:–

பகைமை, பாவம், பயம், உலகமே பழித்துரைக்கும் வசவுகள் இவை நான்கும் நீங்காமல் நிற்கும்.

இதை பர்த்ருஹரி அழகாகஒரே ஸ்லோகத்தில் சொல்லிவிட்டார்.

அகருணத்வமகாரணவிக்ரஹக பரதனே பரயோஷிதி ச ஸ்ப்ருஹா

ஸுஜன பந்துஜனேஸ்ஹ்வஸஹிஷ்ணுதா ப்ரக்ருதி ஸித்தமிதம்  ஹி துராத்மனாம்-45

xxxxxx

பாடல் 46

கற்றவர்களாயினும் தீய குணம் இருந்தால் அவர்களைத் தவிர்க்க வேண்டும். பாம்பின் தலையில் மாணிக்கம் இருந்தாலும் அது ஆபத்தானதல்லவா?

துர்ஜனஹ பரிஹர்தவ்யோ வித்யயாஅலக்ருதோ அபிஸன்

மணினா பூஷிதஹ ஸர்பஹகிம் அஸௌ ந பயங்கரஹ- 1-46

தீயவர்பால் கல்வி சிறந்தாலு மற்றவரைத்

தூயவரென்றெண்ணியே துன்னற்க– சேயிழையே!

தண்ணொளிய மாணிக்க சர்ப்பந் தரித்தாலும்

நண்ணுவரோ மற்றதனை நாடு- நீதிவெண்பா

பொருள்

பாம்பிடம் ஒளிமிக்க மாணிக்கக் கல் இர்ந்தாலும் யாராவது அதை நெருங்குவார்களா? அதே போல கெட்டவர்களிடம் கல்வி அறிவு இருந்தாலும் நாடக் கூடாது.

 பசுவுக்கு நீர்பால்; பாம்புக்கு நீர் – விஷம்

பாம்புண்ட நீரெல்லாம் நஞ்சாம் பசுவுண்ட

தேம்படு ஹெண்ணீர் அமுதமாம் – ஓம்பற்கு

ஒளிஆய்ம் உயர்ந்தார்கண் ஞானம் அதுபோற்

களியாம் கடையாயார் மாட்டு- அறநெறிச்சாரம்

பொருள்

பாம்புகள் குடிக்கும் நீர் எல்லாம் விஷமாக மாறுகிறது;

கயவர்கள் கற்கும் ஞன நூல்கள் அவர் மாட்டு மயக்கத்தையே விளைவிக்கும்;

பசு மாடுகள் குடிக்கும் தண்ணீர் இனிய பாலாக மாறும்;

உயர்ந்தோர் கற்கும் ஞான நூல்கள் அவர்கள் மாட்டு அறிவினை வளர்க்கும்.

தீயோர்கள் கற்றாலும் கற்றதையெல்லாம் தவறாக வியாக்கியானம் செய்வர்.

अकरुणत्वम् अकारणविग्रहः
परधने परयोषिति च स्पृहा ।
सुजनबन्धुजनेष्वसहिष्णुता
प्रकृतिसिद्धम् इदं हि दुरात्मनाम् ॥ 1.45 ॥

दुर्जनः परिहर्तव्यो
विद्यया‌உलकृतो‌உपि सन् ।
मणिना भूषितः सर्पः
किम् असौ न भयङ्करः ॥ 1.46 ॥

tags– நல்லோர்,தீயோர், பாம்பு, பசு, விஷம், பால்

Xxxxxxxxxxxxxx  subham xxxxxxxxxxxxxxxxxxxx

அமெரிக்கப் பாம்பும் கம்பன் குரங்கும்! (Post No.5099)

Written by London swaminathan

Date: 11 JUNE 2018

Time uploaded in London –  13-37 (British Summer Time)

Post No. 5099

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

அமெரிக்கப் பாம்பும் கம்பன் குரங்கும்! (Post No.5099)

 

கோகுலாஷ்டமிக்கும் குலாம்பாய்க்கும் தொடர்பு உண்டோ இல்லையோ ,அப்துல் காதருக்கும் அமாவாஸைக்கும் தொடர்பு உண்டோ இல்லையோ ,ராம நவமிக்கும் ரஹீமுக்கும்  தொடர்பு உண்டோ இல்லையோ, அமெரிக்கப் பாம்புக்கும் கம்பன் சொன்ன ராமாயண வானரப் படைக்கும் கட்டாயம் தொடர்பு உண்டு!

 

ஞாயிற்றுக் கிழமை தோறும் நாங்கள் லண்டன் நேரம் காலை 7-30 முதல் 9 மணி வரை ஸ்கைப்பில் (Skype) நடத்தும் கம்பராமாயண வகுப்பில் பல விஷயங்களை அலசுவோம். இந்த வாரம் கம்பராமாயணப் பாடலில் இரண்டு சுவையான விஷயங்கள் விவாதத்துக்கு வந்தன.

 

கம்பன் சொல்கிறான்:

ஒளிவீசும் தீப்பொறி கக்கும் விழிகளை உடைய குரங்குப் படைகள் கையில் எடுத்த மரங்கள் அரக்கப் படை வீசிய அம்புகளால் துண்டாயின. அரக்கர்கள் வீசிய அம்புகள், வானரங்களின் நெஞ்சில் ஊடுருவ அவை இறந்து விழுந்தன; அந்த நிலையிலும் அரக்கர்களை கடித்து அவர்களைக் கொன்று தாமும் இறந்தன (அதாவது செத்தும் கடித்தன அல்லது சாவதும் கடிப்பதும் ஒருங்கே நிகழ்ந்தன).

 

இதோ யுத்த காண்ட நாகபாசப் படலப் பாடல்:-

 

சுடர்த்தலை நெடும்பொறி சொரியும் கண்ணன

அடர்த்து அலை நெடும் மரம் அற்ற கையன்

உடர்த்தலை வைரவேல் உருவ உற்றவர்

மிடற்றினைக் கடித்து உடன் விளிந்து போவன.

 

 

இதே போல அமெரிக்காவிலும் ஒரு சம்பவம் நடந்தது.

அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகானத்தில் கார்ப்பஸ் கிறிஸ்டி என்ற Corpus Christi, Texas, USA) ஊருக்கு அருகில் ஒரு   பெண்மணி  வீட்டிற்குப் பின்புறமுள்ள பகுதிகளைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அப்பொழுது கிலுகிலுப்பைப் பாம்பு (Rattle Snake) ஒன்று தலைப்பட்டது.

 

சாரைப் பாம்பு போன்ற இத்தகைய பாம்பு வாலை ஆட்டு போது கிலுகிலுப்பை ஒலி உண்டாகும்.

 

அந்தப் பெண்மணி ‘பாம்பு, பாம்பு’ என்று அலறிய உடன், கணவர் ஓடோடி வந்து அருகிலுள்ள மண்வெட்டியால் பாம்பின்  தலையில் ஒரு போட்டு போட்டார். வெட்டு ஒன்று துண்டு இரண்டாகியது. அவர் பெயர் மியோ சட்க்லிப். அவருக்கு பெருமை தாங்கவில்லை. பாம்பின் தலையருகே போனார். துண்டாகிக் கடந்த தலை அவர் மீது பாய்ந்து கடிக்கவே அவர் உடலில் விஷம் ஏறி மயங்கி விழுந்தார். உடனே விமான ஆம்புலன்ஸ் வந்து அவ ரைத் தூக்கிச் சென்று ஆஸ்பத்திரியில் போட்டது. கொஞ்சம் கொஞ்சமாக உ யிர் வந்து கொண்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

கம்பன் பாடலில் சாகும் அல்லது செத்த குரங்குகள் கடித்து, அதுவும் இறந்தது;  கடிபட்ட அரக்கனும் இறந்தான் என்று சொன்னது மெய்யே; அவன் கண்ணால் கண்டதை எழுதுகிறான்.; காட்டு வழியாகப் போகும் போது இத்தகைய காட்சிகளைப் பார்த்து இருப்பான் போலும்!

 

கரடி தின்ன Sweet Dinner ‘ஸ்வீட் டின்னர்

 

இன்னொரு பாட்டில் யானைகளின் மூளைகளை   கரடிகள் தின்னதாகச் சொல்லி அது அவைகளுக்கு இனிய உணவாக/ விருந்தாக அமைந்தது என்கிறான். கரடிகள் பெரும்பாலும் மீன், புழுப்பூச்சிகளை த் தின்னும். ஆனால யானை போன்றவற்றின் மூளைகளைத் தின்னுவதாக கம்பன் சொல்லும் காட்சியையும் அவன் கண்ணால் கண்டான் போலும்.

 

கம்பராமாயண,  யுத்த காண்ட, நாக பாஸப் படலத்தில் சொல்கிறான்:

 

போர் புரியும் கரடிகள், மலைகளைத் தாக்கி அழிக்கும் இடிகள் போலத் தொடர்ந்து சென்று, மதம் பொழியும் யானைகளின் தலைகளைப் பிளந்தன. அதனால் வெளிப்பட்ட மூளைகளை இனிமையாகத் தின்று பசி என்னும் தீயை அனைத்தன.

 

அடர்ந்தன கிரிகளை அசனி ஏறு எனத்

 

தொடர்ந்தன மழை பொழி தும்பிக் கும்பங்கள்

 

இடந்தன மூளைகள் இனிதின் உண்டன

 

கடந்தன பசித் தழல் கரடி காதுவ

 

இப்படிப் போகிற போக்கில் வன விலங்குகள் பற்றியும் கம்பன் சொல்லுவது ராமாயணச் சுவையைக் கூட்டுகிறது.

வாழ்க தமிழ்! வளர்க கம்பன் புகழ்!!

 

–சுபம், சுபம்—

 

பாம்பும் பார்வதியும்- அப்பர் நகைச்சுவை! (Post No.4325)

Written by London Swaminathan

 

Date: 22 October 2017

 

Time uploaded in London- 6-59 am

 

 

Post No. 4325

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தேவாரத்தைப் பக்தியோடு படிப்பது ஒருவிதம்; ஓதுவாரின் இனிய குரலில் கோவில் பிரகாரங்களில் கேட்டு ரசிப்பது மற்றொரு விதம்; இலக்கிய நயத்துக்காக , இயற்கைக் கட்சிகளுக்காக, தமிழர் வரலாற்றுக்காக படிப்பது மற்றொரு ரகம். இதில் மூன்றாவது ரகத்தைச் சேர்ந்தவன் நான். அந்தக் காலத்தில் தர்மபுர ஆதீனம் வெளியிட்ட ஆராய்ச்சிப் பதிப்பு முதல் இந்தக் காலத்தில் வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்ட அத்தனை பதிப்புக ளையும் புரட்டிப் புரட்டிப் பார்க்கும்போது புதுப் புது கருத்துகள் கிடைக்கும்; எனக்கு மட்டுமா? எல்லோருக்கும்தான்!

 

அது மட்டுமா? போகிறபோக்கில் மாணிக்கவாசகர், தனக்கு முன் வாழ்ந்தவர், மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தருமி என்ற பிராமணனுக்கு சிவபெருமான் கவிதை எழுதிக் கொடுத்தது, மாமன்னன் மஹேந்திர பல்லவன் தன்னைக் கொடுமைப் படுத்தியது — எனப் பல வரலாற்றுக் காட்சிகளையும் நம் முன் அப்பர் படைக்கிறார். படிக்கப் படிக்கத் தெவிட்டாதது தேவாரம், திவ்யப் பிரபந்தம், திருமந்திரம், திருவாசகம்; எந்தக் கோணத்தில் இருந்து ஆராய்ந்தாலும் இன்ப மழை பொழியும்; அமிர்த தாரை வழியும்; பருகுவார் பருகலாம்.

 

 

பார்வதியைக் கண்டு பாம்பு பயந்ததாம்; பாம்பைக் கண்டு பார்வதி பயந்தாளாம்; இதை எல்லாம் வேடிக்கை பார்த்த சிவன் முடியில் உள்ள பிறைச் சந்திரன் ஏங்கியதாம்; இத்தனையையும் தன் தலையில் தாங்கிய சிவபெருமானுக்கு ஒரே சிரிப்பாம்! ஆனால் வாய் விட்டு கெக்கென்று சிரித்தால் காட்சி மறை ந்துவிடக் கூடுமல்லவா?ஆகையால் புன்முறுவல் பூத்தாராம் அகில புவனங்களையும் தன் ஆட்டத்தினால் (நட ராஜ)அசைவிக்கும் எம்பெருமான்!

 

இது அப்பர் கண்ட காட்சி; சிவ பெருமானை தினமும் பாடும் அப்பர், சொன்ன விஷயத்தையே திரும்பத் திரும்பச் சொன்னால் நமக்கு எல்லாம் ‘போர்’ (BORE) அடிக்கும் அல்லவா? ஆகையால் அவரும் அழகாக கற்பனை செய்கிறார்.

நிறையக் கொடுத்தால் திகட்டிவிடும்!

 

இதோ அப்பர் தேவாரத்தின் நான்காம் திருமுறையில் இருந்து இரண்டே பாடல்கள்:–

 

 

கிடந்தபாம்பு அருகுகண்டுஅரிவை பேதுறக்

கிடந்தபாம்பு அவளையோர் மயிலென்று ஐயுறக்

கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே

கிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே

-திருவதிகை வீரட்டானப் பதிகம், நாலாம் திருமுறை

 

பொருள் சிவன் திருமுடியில் தவழும் பாம்பானது, சிவபெருமானின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் உமா தேவியாரைக் (பார்வதி) கண்டு அஞ்சுகின்றது; ஏனெனில் அவள் மயில் போல இருக்கிறாள். உமாதேவியோ பாம்பைக் கண்டு பயப்படுகிறாள்; ‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்பது தமிழ்ப் பழமொழி அல்லவா? இதைப் பார்க்கும் சிவன் முடியிலுள்ள பிறை ஏங்குகின்றதாம்; கிரஹண காலத்தில் நிலவை விழுங்குவது பாம்பு அல்லவா? இதை எல்லாம் வேடிக்கைப் பார்க்கும் சிவனோ மென்முறுவல் பூக்கிறார்.

 

சிறுவர்களிடம் அச்சம் உண்டாக்க நாம் சில பொம்மைகளைப் போட்டுவிட்டு அவர்கள் பயப்படும்போது,  கண்டு ரசிக்கிறோம் அல்லவா? அது போல சிவனும் சில விஷமங்களைச் செய்கிறார். ஆனால் குழந்தைகளைப் பயமுறுத்திய தாய் பின்னர் எப்படி குழந்தைகளை அனைத்து பயப்படாதே அவை வெறும் பொம்மை என்று ஆறுதல் சொல்லுவது போல ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து அருளும் சிவன் எல்லோரையும் காப்பான்.

 

அப்பர் இதை ஒரு சிறிய நகைச் சுவை தோன்ற அமைத்து இருக்கிறார். இது போல சங்க இலக்கியப் பாடல்களிலும் நகைச் சுவை உண்டு. உண்மையான நவாப் பழங்களை (நாகப் பழம்) வண்டு என்று பயப்படும் குரங்குகளையும், வண்டுகளை நாகப்பழம் என்று  நினைத்து வாயருகே கொண்டுபோகும் குரன்குகள், திடீரென்று அஞ்சி அவைகளை விட்டெறிவதையும் தமிழ்ப் பாடல்களில் கண்டு ரசிக்கலாம்.

இதோ இன்னும் ஒரு தேவரப் பாடலிலும் அப்பர் இதே கருத்தைச் சிறிது மாற்றிப் பாடுகிறார்:-

 

நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்சை யென்று

வேகத்தைத் தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து

பாதத்தில் நிமிர்தல் செய்யாத் திங்களை மின்னென்று அஞ்சி

ஆகத்திற் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே

–திருவாரூர்ப் பதிகம்

 

பொருள்:-

சிவபெருமான் திருமுடியில் தரித்திருக்கும் நாகத்தைக் கண்டு, கங்கையானவள் அஞ்சுகிறாள்; அந்த நங்கையை மயில் என்று கருதி நாகப் பாம்பு அஞ்சுகின்றது! சிவபெருமான் போர்த்தி இருக்கும் யானையின் தோல் கருப்பு நிறத்தில் மேகம் போலக் காட்சி தருகிறது. அதில் பிறைச்சந்திரன் பளிச்சென்று மின்னியவுடன் பாம்பு அதை இடி மின்னல் என்று நினைத்து அஞ்சுகின்றது (‘இடி கேட்ட நாகம் போல’ என்பது தமிழ்ப் பழமொழி) இத்தன்மையுடன் விளங்கும் பெருமானே ஆரூரில்  வீற்று இருக்கிறான்.

மயில்- பாம்பு பகைமை, இடி- பாம்பு பகைமை, மனிதன்-பாம்பு பகைமை ஆகியவற்றைக் கொண்டு நயம்படப் பாடியிருக்கிறார் அப்பர் என்னும் திருநாவுக்கரச நாயனார்.

 

சுபம்–

 

பனை மரத்துக்கு அடியில் நின்று பாலைக் குடித்தாலும்… (Post No.3904)

Written by London Swaminathan

 

Date: 13 May 2017

 

Time uploaded in London: 6-34 am

 

Post No. 3904

 

Pictures are taken from various sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

தமிழில் அழகான, ஆழமான பொருள் பொதிந்த பழமொழிகள் உள. ஒருவன் செய்யும் காரியம் எவ்வளவுதான் நல்லதானாலும் இடமும் நேரமும் சூழ்நிலையும் சரியாக இல்லாவிடில் நல்ல பெயர் கிடைக்காது

 

பாம்புப் புற்றுக்கு அருகில் ஒரு கயிறு கிடந்தாலும் அதைப் பாம்பென்றே மக்கள் கருதுவர்; சஹவாச தோஷம்!

பனைமரத்துக்கு அடியில் நின்று பாலைக் குடித்தாலும், அதன் வெண்மை நிறமும், இடமும் அதைக் கள் என்று நினக்கச் செய்யும்.

 

நிந்தையிலாத் தூயவரும் நிந்தையைச் சேரில் அவர்

நிந்தையது தம்மிடத்தே நிற்குமே – நிந்தைமிகு

தாலநிழல் கீழிருந்தான் றன்பால் அருந்திடினும்

பாலதனச் சொல்லுவரோ பார்.

-நீதி வெண்பா (எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை)

 

பொருள்:-

பனை மரத்தின் அடியின் உடகார்ந்துகொண்டு பசுவின் பாலைக் குடித்தாலும், பிறர் அதைப் பால் என்று சொல்லுவரோ? நீ அதனை நினைத்துப் பார். அதுபோல நல்ல பெயருடைய மேலோர், கெட்டவர்களுடன் சேர்ந்தால் அவர்களுடைய கெட்ட பெயர் இவர்களையும் ஒட்டிக்கொள்ளும்.

பழுதும் பாம்பும்

 

இதே கருத்தை வலியுறுத்த இன்னொரு பாடலையும் பாடி வைத்தார் அந்தப் புலவர்!

 

நல்லொழுக்கம் இல்லாரிடம் சேர்ந்த நல்லோர்க்கு

நல்லொழுக்கமில்லாச் சொல் நண்ணுமே – கொல்லும் விடப்

பாம்பென உன்னாரோ பழுதையே ஆனாலும்

தூம்பு அமரும் புற்று அடுத்தாற் சொல்

-நீதி வெண்பா (எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை)

 

ஓட்டைகள் மிக்க புற்றுக்குப் பக்கத்தில் கயிறே கிடந்தாலும், அதை கொல்லக் கூடிய விஷப் பாம்பு என்று சொல்லுவார்கள் அல்லவா? நீயே சொல்! அது போல நல்ல ஒழுக்கம் இல்லாதவர்களுடன் சேர்ந்த நல்லோரையும் பழிச் சொல் வந்து சேரும்.

 

அழகான இரண்டு உவமைகள் மூலம் நமக்கு உயரிய கருத்துக்களைச் சொல்வர் தமிழ்ப் புலவர். இளம் வயதிலேயே இந்தச் செய்யுட்களை மனப்பாடம் செய்தால், அவை நம் மனதில் பசு மரத்தாணி போலப் பதியும்.

 

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்ப் புலவர்தம் பெருமை!

 

–சுபம்–

 

 

“நீல வர்ண ஸ்ருகால:” நீல நிற நரி!!

blue jackal

சம்ஸ்கிருத பொன்மொழிகள்

Written by London swaminathan

Post No.2251

Date: 17 October 2015

Time uploaded in London: 13-26

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

“நீல வர்ண ஸ்ருகால:”

ஆத்மபக்ஷம் பரித்யஜ்ய பரபக்ஷேசு யோ ரத:

ச பரைர் ஹன்யதே மூடோ நீலவர்ண ஸ்ருகாலவத் (ஹிதோபதேச)

தன்னுடைய சொந்த இனத்தை விட்டு யார் ஒருவர் வேறுபக்கம் செல்கிறாரோ, அவர்களை அந்த வேறுபக்க ஆட்கள் கொன்றுவிடுவார்கள்- நீல வர்ண நரிக்கு ஏற்பட்ட கதியே ஏற்படும் என்பது சம்ஸ்கிருதப் பாடலின் பொருள்.

ஹிதோபதேசம் கதை

ஒரு காட்டில் ஒரு நரி இருந்தது. ஒரு நாள் பக்கத்திலுள்ள நகரத்தில் நுழைந்தது. அதைப் பார்த்து நாய்கள் குரைக்கவே அது, துணிகளுக்கு சாயமேற்றும் ஒரு சாயப் பட்டறையில் நுழைந்தது. அங்கே இருட்டாக இருந்தது. அந்த நரி தவறிப்போய், ஒரு சாயம் வைத்திருந்த ‘டிரம்’மில் விழுந்தது. உடலெல்லாம் நீலச் சாயம் ஏறியது. காலையில் காட்டுக்குள் வந்தவுடன் எல்லா மிருகங்களும் அதை விநோதப் பிராணியாகப் பார்த்தன. உடனே நரி, தான் தேவலோகத்திலிருந்து வந்திருப்பதாகவும் தானே அரசன் என்றும் பறைசாற்றியது. தன்னுடைய சொந்த இன நரிகளை அலட்சியம் செய்தது. சிங்கம் உள்பட, எல்லா மிருகங்களும் அடங்கி ஒடுங்கி , அதற்கு அடிமையாக இருந்தன. ஒரு நாள் எங்கோ நரிகள் கூட்டம் ஊளையிடுவதைக் கேட்டவுடன் நீலவர்ண நரிக்கும் பிறவிக்குணம் தலைக்கேறியது. மிகப் பெரிய சத்தத்தோடு ஊளையிட்டது. இதைப் பார்த்த் சிங்கம் முதலிய கொடிய விலங்குகள், அது வெறும் நரி, இவ்வளவு காலம் நம்மை ஏமாற்றியிருக்கிறது  என்று அறிந்து அதன் மீது பாய்ந்து அதைக் குதறிக் கொன்றன.

blue fox

xxx

பெண்ணுக்கு ‘அழகு’ குறி, அம்மாவுக்குப் ‘பணம்’ குறி!

ரூபம் வரயதே கன்யா, மாதா வித்தம், பிதா ஸ்ருதம்

பாந்தவா: கலுமிச்சந்தி மிஷ்டான்னமிதரே ஜனா: – பஞ்ச தந்திரம்

கல்யாணம் என்று வந்து விட்டால் பெண்ணுக்கு மாப்பிள்ளையின் அழகும், அம்மாவுக்கு மாப்பிள்ளையின் பணவசதியும், அப்பாவுக்கு மாப்பிள்ளையின் அறிவும், சொந்தக் காரர்களுக்கு அவனது குலமும், ஏனையோருக்கு கல்யாண விருந்தும் குறியாக (முக்கியம்) இருக்கும்!!!

Xxx

விக்ரீயந்தே ந கண்டாபிர்காவ: க்ஷீரவிவர்ஜிதா: — சார்ங்கதர பத்ததி:

பால் இல்லாத பசுக்களின் கழுத்தில் மணி கட்டினாலும் அதிக விலைக்கு விற்கமுடியாது.

Xxx

விஹ்வலா ஹி ராஜப்ரக்ருதி: — காதம்பரி

ராஜாவின் போக்கு சந்தேகத்துக்குரியது (அரசனிடம் கவனமாக இருக்க வேண்டும்)

ஒப்பிடுக:

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார் – குறள் 691

பொருள்: –மன்னன் அருகில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். தீ மூட்டி குளிர்காயும்போது எப்படி தீக்கு மிக அருகிலும் அல்லது தீயிலிருந்து மிகத் தொலைவிலும் செல்வதில்லையோ அப்படி அகலாது, அணுகாது பழக வேண்டும்

 

“பாம்பு என்று தாண்டுவதா, பழுது என்று மிதிப்பதா?”

“பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகல் – திரிகடுகம்”

Xxx

 

வ்ருத்தா நாரீ தபஸ்வினீ – சாணக்ய நீதி தர்பணம்

வயது முதிர்ந்துவிட்டால் பெண்கள் எல்லாம் தவசிகள் (அவ்வையார்) ஆகிவிடுவர்.

ஒப்பிடுக:

சௌ சூஹே காகர் பில்லீ ஹஜ் கோ சலீ

Xxx

நாஸ்தி கங்கா சமம் தீர்த்தம் நாஸ்தி மாத்ரு சமோ குரு:

கங்கையின் புனிதத்துக்குச் சமமான ஜலம் இல்லை’

அம்மாவுக்குச் சமமான குருவும் இல்லை.

ராமகிருஷ்ண பரம ஹம்சரும் மூன்று “க” முக்கியம் என்பார். கங்கை, கோவிந்தன், காயத்ரி.

ஆதிசங்கரர் பஜகோவிந்தத்திலும்  கங்கா ஜலம், கோவிந்தன் (முராரி), பகவத் கீதை ஆகிய மூன்று ‘க’ முக்கியம் என்பார்.

—சுபம்–

கெட்ட மனைவியும் விஷப் பாம்பும்!

snake

Article No.1983

Compiled by London swaminathan

Date 9th July 2015

Time uploaded in London: 8-44 am

 

இதுவரை ஆயிரத்துக்கும் மேலான சம்ஸ்கிருத பழமொழிகள், பொன் மொழிகளையும், ஆயிரத்துக்கும் மேலான தமிழ் பழமொழிகள், பொன் மொழிகளையும் இந்த பிளாக்-கில் கொடுத்திருக்கிறேன். கூடிய மட்டிலும் அதைத் தலைப்பு (சப்ஜெக்ட்) வாரியாக வகைப் படுத்தி இருக்கிறேன். மேலும், அது குறிப்பாக எந்த இடத்தில் இருக்கிறது என்றும் புத்தகம், அத்தியாயம், வரிசை எண் ஆகியவற் றையும் கொடுத்திருக்கிறேன். இதோ மேலும் 20 அழகான பழமொழிகள்:–

1.தண்டேன ச ப்ரஜா ரக்ஷ மா ச தண்டமகாரணே – ராமாயணம்

சட்டத்தால் குடிகளைக் காக்க வேண்டும்; காரணமில்லாமல் தண்டிக்காதே.

2.துஷ்டா பார்யா சடம் மித்ரம் ப்ருத்யசசோத்தரதாயக:சமர்பே ச க்ருஹே வாஸோ ம்ருத்யுரேவ ந சம்சய: — ஹிதோபதேசம், சாணக்ய நீதி தர்பணம்

பாம்புள்ள வீட்டில் இருப்பவனுக்கு மரணம் ஏற்படும்; அதே போல கெட்ட மனைவி, முட்டாள் நண்பன், கீழ்ப்படியாத வேலைக் காரன்  ஆகியோருடன் இருப்பவனுக்கும் மரணமே மிஞ்சும். சந்தேகமே யில்லை.

3.ந கச்சேத் ப்ராம்மணத்ரயம்

மூன்று பிராமணர்கள் சேர்ந்து போகக்கூடாது

(சகுன சாஸ்திரப்படி ஒற்றைப் பிராமணன் – அபசகுனம்)

4.ந நக்னோ ஜலம் ப்ரவிசேத்

நிர்வாணமாக நீரில் இறங்கக்கூடாது

5.ந நிஷ்ப்ரயோஜனம்  அதிகாரவந்த: ப்ரபுபிராஹூயந்தே- முத்ரா ராக்ஷசம்

அதிகார வர்கம், காரணமில்லாமல், பிரபுக்களை அணுகுவதில்லை.

6.ந யுக்தம் ப்ராக்ருதமபி ரிபுமவஞாதும்  – முத்ரா ராக்ஷசம்

சாதாரண எதிரிகளையும் புறக்கணிக்காதே

(எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ?)

2natarajan

7.நவாங்கானானாம் நவ ஏவ பந்தா: – சுபாஷிதரத்ன பாண்டாகாரம்

இளம் யுவதிகளின் நடை, உடை பாவனை எல்லாமே புதுமைதான்

8.ந வ்யாக்ரம் ம்ருகசிசவ: ப்ரதர்ஷயந்தி – ப்ரதிமா நாடகம்

மான் குட்டிகள், புலியை ஒன்றும் செய்ய முடியாது

 

9.நாங்கிக்ருதேஷு குணதோஷ விசாரணா ஸ்யாத்

ஏற்றுக் கொண்ட இடத்தில் குணமும் குற்றமும் காணக் கூடாது

10.நிகடஸ்தம் கரீயாம்சமபி லோகோ ந மன்யதே – ஹிதோபதேசம்

பெரியவர்கள் பக்கத்தில் இருந்தால் மதிக்கப்படுவதில்லை

(உள்ளூர் சரக்கு விலை போகாது)

11.நிஜமதனநிவிஷ்ட: ஸ்வா ந சிம்ஹாயதே கிம்

தன்னுடைய வீட்டில் நுழைந்த நாய் சிங்கம் போல இருக்காதா?

12.நிரஸ்தபாதபே தேசே ஏரண்டோபி தூமாயதே – ஹிதோபதேசம்

மரங்கள் இல்லாத இடத்தில் புதர்கள் கூட மரமாகக் கருதப்படும்

(ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை)

aaddu

13.கதானுகதிகோ லோக:– ஹிதோபதேசம்

ஒருவன் சென்ற பாதையை பின்பற்றிச் செல்வதே உலகம்

(மக்கள் ஆட்டு மந்தை)

14.ஜலபிந்து நிபாதேன க்ரமச: பூர்யதே கட: — ஹிதோபதேசம், சாணக்ய நீதி தர்பணம்

ஒவ்வொரு சொட்டுச் சொட்டினாலும் பானையே நிரம்பிவிடும்.

(சிறு துளி பெரு வெள்ளம்)

15.தஸ்தபதி தர்மாம்சௌ கதமாவிர்பவிஷ்யதி – சாகுந்தலம்

சூரியன் பிரகாசிக்கையில் இருட்டு எங்கே வர முடியும்?

16.நிர்குண: ஸ்வஜன: ஸ்ரேயான், ய: பர: பர ஏவ ச: — ராமாயணம்

நமக்கு வேண்டியவர்கள் குணமில்லாதவரானாலும் சிறந்தவனே

17.நிர்வாணதீபே கிமு தைலதானம் – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

அணைந்து போன தீபத்துக்கு எண்ணை ஊற்றி என்ன பயன்?

(கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?)

LION KING

18.நைகஸ்மின் காந்தாரே சிம்ஹயோர் வசதி: க்வசித்

ஒரு காட்டில் 2 சிங்கங்களின் வசிப்பிடம் இருப்பதில்லை

(ஒரே உறையில் இரண்டு வாட்கள் இருக்காது)

19.பங்கோ ஹி நபஹி க்ஷிப்த: க்ஷேப்து: பததி மூர்தனி – கதா சரித் சாகரம்

வானத்தைப் பார்த்து சேற்றை எறிந்தால் அது அவன் மீதே விழும்

(சேற்றில் கல்லை எறியாதே, உன் மீதுதான் தெறிக்கும்)

(யானை தன் தலையிலே மண்ணைப் போட்டுக் கொள்ளும்)

20.பயசா சிஞ்சிதம்  நித்யம் ந நிம்போ மதுராயதே

எலுமிச்சை மீது தினமும் பால் வார்த்தாலும் அது தித்திக்காது.

(நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் வாலைக் குழைத்துக் கொண்டு — —  — தின்னதான் போகும்)

படங்கள் என்னுடையவை அல்ல; பேஸ் புக் நண்பர்கள், பல வெப் சைட்டுகளில் இருந்து எடுத்தவை: பஹு தன்யவாத்! ரொம்ப ரொம்ப நன்றி!!

-சுபம்-

சான்றோரும் சந்திரனும்; சான்றோரும் பாம்புகளும்

moon

கட்டுரையை எழுதியவர் :– London swaminathan

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1541; தேதி 4 January, 2015.

சான்றோரும் சந்திரனும் ஒன்றுதான்; ஆனால் ஒரு சின்ன வித்தியாசம்! சன்றோரும் சந்திரனும் பிரகாசமானவர்கள்; குளிர்ச்சி மிக்கவர்கள். இவை இரண்டுக்கும் பொது. ஆனால் சந்திரனில் மான் போலவும் முயல் போலவும் தோன்றும் களங்கம் உண்டு. சான்றோரிடத்தில் இப்படி ஒரு களங்கம் வந்தால் அவர்கள் மறு கணமே உயிர் துறப்பர். சந்திரனோவெனில் தேய்ந்தும் வளர்ந்தும் தொடர்ந்து இருக்கும்!

அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்

திங்களுஞ் சான்றோரும் ஒப்பர் மன் – திங்கள்

மறுவாற்றுஞ் சான்றோர் அஃதாற்றார் தெருமந்து

தேய்வர் ஒரு மாசுறின் (நாலடியார்)

வள்ளுவனும் கூட இதையே சொல்லுவான்:-

மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின் (969)

குடிப் பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்

மதிக் கண் மறுப்போல் உயர்ந்து 957

காளிதாசன் – குமார சம்பவம் 1-3

இவர்களுக்கு எல்லாம் முன்னரே உலகப் புகழ் கவிஞன் காளிதாசனும் இதைச் சொல்லிவிட்டான். இமய மலை அழகை வருணிக்கும் அவன், அதில் பனி மூடியிருப்பது ஒரு குறையாகாது என்பான். இதற்கு நிலவையே எடுத்துக் காட்டுகிறான. சந்திரனில் ஒரு களங்கம் இருந்தாலும் அது வீசும் வெள்ளி நிற ஒளியில் அந்தக் களங்கம் பொலிவிழந்து போகவில்லையா? என்று குமாரசம்பவம் என்னும் அற்புத காவியத்தில் சொல்லுகிறான்.

pictures-of-king-cobra-snakes

மேன் மக்களும் பாம்பும்

மேன் மக்கள் — தண்ணீர் பாம்பு போன்றவர்கள்; விஷமில்லாத பாம்பு என்பதால் தண்ணீர் பாம்பு எப்போதும் கரையில் கிடக்கும்.யாரும் அதைக் கண்டு அஞ்சுவதில்லை. அதுவும் அஞ்சி ஓடுவதில்லை! மேன் மக்கள் அதைப் போன்றவர்கள்.

கீழ் மக்கள் விஷப் பாம்பு போன்றவர்கள். நல்ல பாம்பு விஷம் உடையது ஆகையால் அது கரந்துறையும்; மறைந்து வாழும். கீழ் மக்களும் அத்தகையோரே.

நஞ்சுடைமை தான் அறிந்து நாகம் கரந்துறையும்

அஞ்சாப் புறங் கிடக்கும் நீர்ப்பாம்பு – நெஞ்சில்

கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்

கரவிலா நெஞ்சத்தவர் – அவ்வையாரின் வாக்குண்டாம்

பசுவுக்குத் தண்ணீர் கொடுத்தால் அது பாலாகப் பொழிந்து தள்ளுகிறது.

பாம்புக்குப் பாலையே கொடுத்தாலும் அது விஷமாகக் கக்குகிறது.

மேன் மக்களும் கீழ் மக்களும் பசுவும் பாம்பும் போன்றவர்களே. எந்த நூல்களைப் படித்தாலும் மேலோர்கள் அதில் நல்ல பொருளையே காண்பர். இவர்கள் பசு அனையர். தண்ணீரை உட்கொண்டு பால் தருவது போல நல்ல கருத்துக்களை வெளியிடுவர்.

northern-water-snake

அதே நூல்கள் கீழ் மக்களிடம் கிடைத்தாலோ கெட்ட பொருளைக் காண்பர். அர்த்தத்தை அனர்த்தமாக ஆக்கிவிடுவர். வெளிநாட்டு அறிஞர்கள் என்ற பெயரில் இந்துமத நூல்களை இழித்துரைக்கும் மக்கள் விஷப் பாம்பு போன்றவர்கள். இந்து மத நூல்களில் எவ்வளவு நல்ல கருத்து இருந்தாலும் அதைத் திரித்தும் கரித்தும் மறித்தும் சிரித்தும் பழித்தும் பேசுவர்.

பாம்புண்ட பால் எல்லாம் நஞ்சாம் பசுவுண்ட

தேம்படு தண்ணீர் அமுதமாம் – ஓம்பற்கு

ஒளியாம் உய்ர்ந்தார் கண் ஞானம் அதுபோற்

களியாங் கடையார் மாட்டு (அறநெறிச்சாரம்)

ஒரு குட்டிக் கதை

துரியோதனன், தர்மன் (யுதிஷ்டிரன்) ஆகிய இருவரும் கண்ணனிடம் சென்றனர். உலகிலேயே மிகக் கெட்டவனையும், மிக நல்லவனையும் கண்டுபிடித்து வாருங்கள் என்கிறான் கண்ணன் – இருவரும் சென்றனர். உலகில் ஒரு கெட்டவர் கூட கண்ணுக்குத் தெரியவில்லையே என்று திரும்பி வந்து விட்டான் தர்மன். கொஞ்ச நேரம் கழித்து துரியோதனனும் வந்தான். உலகில் நல்லோரே இல்லை. எல்லோரும் அயோக்கியர்கள் என்றான். வெளிநாட்டில் இருந்து இந்து மதத்தைக் குறை கூறி ஆங்கிலத்தில் புத்தகம் எழுதும் அறிஞர்கள் – துரியோதனனின் தம்பிகள்!!

Snake-5_1421019i

குன்றின் மேல் இட்ட விளக்கு

கன்றி முதிர்ந்த கழியப் பன்னாள் செயினும்

ஒன்றும் சிறியார் கண் என்றானும் தோன்றாதாம்;

ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம்

குன்றின் மேல் இட்ட விளக்கு  (பழமொழி)

கீழோர்கள் எத்தனை முறை தவறு செய்தாலும் அவர்களுக்குப் புதிய கெட்ட பெயர் என்று ஒன்று வராது. ஆனால் மேன் மக்கள் ஒரு சிறு தவறு செய்தாலும் உலகமே அதைப் பற்றிப் பேசி இகழும். அது மலையின் மீது வைத்த விளக்கிற்குச் சமம். உலகமே அதைப் பார்க்கமுடியும்! ஆகையால் அவர்கள் மாசு மருவற்ற தூய வாழ்க்கை வாழ வேண்டும். எத்தனையோ சாமியார்கள் பற்றி பலவகையான செய்திகளைப் படிக்கிறோம். அவர்கள் ஆயிரம் நல்லது செய்திருந்தாலும் அந்த ஒரு கெட்ட செய்தி அவர்களை அதள பாதாளத்தில் வீழ்த்தி விடுகிறது.

light house

சங்க காலத்தில் வாழ்ந்த கபிலன் என்ற பார்ப்பனப் புலவனை ஐந்து சங்கப் புலவர்கள் பாராட்டுகின்றனர். ‘’புலன் அழுக்கற்ற அந்தணாளன்’’ என்று. மூவேந்தர்களுக்கு உலகமே பயந்து நின்றது — ஆனால் கபிலன் பயப்படவில்லை! அவர்களை எள்ளி நகை ஆடுகிறார். இதோ பார் பாரியிடம் இருந்த 300 ஊர்களையும் அவன் தானம் செய்துவிட்டான். நேரே வந்து அவனையே கேட்டாலும் கொடுத்து விடுவான் என்கிறார். ஆயினும் மூவேந்தர்களும் அவனை வஞ்சனையால் கொன்று விடுகின்றனர். புலன் அழுக்கற்று இருந்ததால் யாருக்கும் அஞ்சாத துணிவு சாணக்கியனுக்கும் கபிலனுக்கும் இருந்தது!

மண் குடமும் பொன் குடமும்

சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற்று

அல்லாதார் கெட்டால் அங்கென்னாகும் – சீரிய

பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும் என்னாகும்

மண்ணின் குடம் உடைந்தக்கால் – அவ்வையின் வாக்குண்டாம்

மண் குடம் உடைந்தால் குப்பைத் தொட்டியில் போடுவர். பொன் குடம் உடைந்தாலோ தங்கத்தை உருக்கி அழகான புதிய பொன் குடம் செய்து விடுவர். பெரியோர்களுக்கு, அவர்களுடைய முன்வினைப் பயனால் வறுமையோ, நோயோ வந்தாலும் அது அவர்களைப் பாதிக்காது. மென்மேலும் புகழ் கூடும். அவர்கள் எப்போதும் மேலோர்களே என்கிறார் அவ்வையார். ரமண மகரிஷிக்கும், ராம கிருஷ்ண பரமஹம்சருக்கும் புற்று நோய் வந்தது. அவர்கள் மனம் கஷ்டப்படவும் இல்லை. அவர்கள் புஅழ் குன்றவும் இல்லை. பாரதியார் வறுமையில் வாடினார். ஆனால் சிறுமை என்னும் செயல்களில் இறங்கவில்லை. இன்று உலகப் புகழ்பெற்ற கவிஞர் என்ற பெயரே எஞ்சி நிற்கிறது.

தமிழ்ப் பாடல்களில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை எண்ணி எண்ணி இறும்பூது எய்துவோம். எளிய நடை! அரிய கருத்து! அழகான உவமை! தமிழ் ஒரு உலக மகா பொக்கிஷம்!!!

வாழ்க மேன்மக்கள்  வளர்க தமிழ்!!

contact swami_48@yahoo.com