ஐயர் இறந்த பின்னர் போலீஸ் தேடி வந்த அதிசயம்! (Post No.6163)

Written by London swaminathan
swami_48@yahoo.com


Date: 7 March 2019


GMT Time uploaded in London – 15-28


Post No. 6163

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

இது 26 வயதில் இறந்த மஹா மேதை ராஜம் ஐயர்-பகுதி 4 (இறுதிப் பகுதி)

இறுதிப் பகுதியில் முக்கிய அம்சங்கள்:

இவருக்கு திருமணம் நடந்து மனைவி வீட்டுக்கு வந்தாள். மனைவியுடன் சுமுக உறவு. ஆனால் தந்தையிடம் சுமுக உறவு இல்லை.

இரண்டாவதுமுறை, குடற் சிக்கல் நோய் வந்து அபூர்வமாகப் பிழைத்தார். அதுவரை ஆன்மீகம் என்று வாளாவிருந்த ஐயர்,

பணத்துக்காக பிரபோத சந்திரிகை என்னும் பத்திரிக்கையை துவங்க எண்ணி, இவரை ஆதரித்து வந்தோரின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அறிவிப்பு வெளியிட்டார்.

மூன்றாம் முறை மிகவும்கடுமையான நோய் வந்தது. அப்பொழுது குருநாதர் சாந்தாநந்தா அங்கே வந்தது இவருக்கு உற்சாகம் தந்தது.

கடும் நோயிலும் குருநாதருக்கு பாத பூஜை செய்ய ஆசைப்பட்டார். குருநாதரே அதைத் தடுத்துவிட்டார். அங்குள்ள சூழ்நிலை அவருக்கு புரிந்தது.

நோய்முற்றி 26-ம் வயதில் அமரரானார். இவர் வேதாந்தம் பற்றி எழுதிய விஷயங்கள் தனி ஒரு புஸ்தகமாக வெளியானது. இந்த வாழ்க்கைச் சரித நூல் 1909ல் வெளியிடப்பட்டது.

இவர் எப்போதோ எழுதிய வேதாந்த விஷயம், பிரிட்டிஷ் ராஜ விரோதமான செயல் என்று கருதி அதை விசாரிக்க போலீஸ், ராஜம் ஐயர் வீட்டுக்கு வந்தது. அதாவது அவர் இறந்து தகனம் ஆன இரண்டு நாட்களுக்குப் பின்னர்! (see pages 60 and 61 below)

அன்றுமட்டும் இவர்  உயிரோடு இருந்திருந்தால் ஒருவேளை தியாகி என்ற பட்டமும் கிடைத்திருக்கும்!

தமிழுக்கும் ஆன்மீகத்துக்கும் உயிர்கொடுத்த உத்தமர்.

வத்தல குண்டு கிராமத்துக்கு வரலாற்றில் அழியாத இடம் பெற்றுத் தந்தவர்.

வாழ்க ராஜம் ஐயர்! வளர்க அவர் புகழ்!!

xxxxx

xxx

26 வயதில் இறந்த மஹா மேதை – பகுதி- 2 (Post No.6153)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 5 March 2019


GMT Time uploaded in London – 9-24 am


Post No. 6153

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

கமலாம்பாள் சரித்திரம் நாவலெழுதிப் புகழ்பெற்ற ராஜம் ஐயரின் கதையின் இரண்டாவது பகுதியைப் பார்ப்போம். முதலில் புல்லட் பாயிண்டுகளில் (Gist in bullet points)  சாராம்சம்:-

ராஜம் ஐயருக்கு சாந்தானந்த ஸ்வாமிகள்,  குருவானது எப்படி என்பதை இப்பகுதியில் காணலாம். முதலில் காசு கொடுப்போரை மட்டுமே தரிசனத்துக்கு அனுப்பியதால் அவரைப் பார்க்க ஐயருக்கு முடியவில்லை. பின்னர் சுவாமிகளே அவரைப் பார்க்க ஆர்வம் தெரிவிக்கும் சந்தர்ப்பம் நிகழ்ந்தது. முதலில் பக்திப் பெருக்கால் கண்ணீர் விட்டுத் துதிபாடிய ஐயர், பின்னர் சுவாமிகளின் உபதேசத்தால் தியானம் முதலிய செயல்களில் ஈடுபட்டு மனச் சாந்தி பெற்றார்.

–subham–

26 வயதில் இறந்த மஹா மேதை ராஜம் ஐயர்- Part 1 (Post No.6149)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 4 March 2019


GMT Time uploaded in London – 7-36 am


Post No. 6149

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பெரிய மனிதர்கள் பலர் நீண்ட நாள் வாழ்வதில்லை; காரணம்- இவர்களை இறைவன் சில குறிப்பிட்ட பணிகளுக்காக அனுப்பிவிட்டு, அது நிறைவேறியவுடன் மீண்டும் அழைத்துக் கொள்கிறான் போலும்.

மஹா கவி பாரதியார், சுவாமி விவேகாநந்தர், தமிழில் இரண்டாவதாக நாவல் எழுதிய பி. ஆர். ராஜம் ஐயர் ( B R RAJAM IYER) , பரிதிமாற் கலைஞர்  என்று பெயரை மாற்றிக்கொண்டு தமிழுக்கு செந்தமிழ் தகுதி கோரிய முதல் தமிழன் வி.கோ. சூரிய நாரயண சாஸ்திரி, மற்றும் கணித மேதை சீனிவாச ராமானுஜன் ஆகியோர் காலச் சுவட்டில் அழியாத இடம் பதித்து விட்டு 40 வயதுக்குள் இறந்து விட்டனர். பூதவுடல் அழிந்தாலும் புகழ் உடம்பு சூரிய சந்திரர்கள் உள்ளவரை நீடிக்கச் செய்துவிட்டு மறைந்தனர்.

வேத நாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம்  நாவலுக்கு அடுத்தபடியாக கமலாம்பாள் சரித்திரம் எழுதி, தமிழ் உரைநடை இலக்கியத்தில் முக்கிய இடம் பெற்றவர் ராஜம் அய்யர். அவரைப் பற்றிய பழைய நூல், லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ளது. அவரது வாழ்க்கைச் சரிததத்தை இணைத்துள்ளேன். முழுக்கப் படிக்க நேரம் இல்லாதோருக்கு இதோ புல்லட் பாயிண்டில் Bullet points சுருக்கி வரைகிறேன்:

1909 ஆண்டில் வெளியான புஸ்தகத்தில் ராஜமையரின் வாழ்க்கை சரிதம் சுமார் 60 பக்கங்கள் இருப்பதால் 4 அல்லது 5 பகுதிகளாகப் பிரித்துத் தருகிறேன். முன்னுரையில் சுருக்கி வரைகிறேன்.

பிறந்த இடம்– மதுரை மாவட்டம் வத்தலகுண்டு

பிறந்த ஆண்டு- 1872

இறந்த ஆண்டு – 1898

காரணம்- குடல் சிக்கல் நோய்

இளமையில் நாஸ்திகப் பிராமணர்

ஆங்கிலக் கவிஞர்களிடையே மோகம்

பி. எல். தேர்வில் தோல்வி

வாழ்க்கையில் மாற்றம்- ஆன்மீக நாட்டம்

விவேக சிந்தாமணி பத்திரிக்கையில் கமலாம்பாள் சரித்திரம் தொடர்கதையாக வெளியீடு

சென்னையில் தங்கி கல்வி கற்றதால், அங்கேயே வாசம்- திருவல்லிக்கேணியில் ஸந்யாசினியுடன் சந்திப்பு

சுவாமி விவேகாநந்தரின் சென்னை விஜயத்தின்போது சந்திப்பு

பிரம்மவாதினி பத்திரிக்கையில் கட்டுரை வெளியீடு- ஐயரின் மஹிமை அம்பலம்

ராஜம் ஐயரின் குரு- சாந்தானந்த ஸரஸ்வதி

டுத்த பகுதிகளில் விவேகாநந்தருடன் பேசியது, ராஜம் அய்யரைத் தேடி போலீஸ் வந்தது முதலிய சுவையான செய்திகளைக் காண்போம்.

-தொடரும்……………

பிராமணன் எப்போது சூத்திரன் ஆகிறான்? நீதிபதிகளுக்கு மநு அறிவுரை (Post No.6146)

Compiled and commented by London swaminathan


swami_48@yahoo.com


Date: 3 March 2019


GMT Time uploaded in London – 13-22


Post No. 6146

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஸ்லோகம் 102ன் சரியான மொழிபெயர்ப்பு:

கால்நடை வளர்க்கும், வியாபாரம் செய்யும், தொழில் செய்யும்,ஊர் ஊராகச சுற்றி இசை பாடும்,வேலைக்காரர்களைப் போன்ற தொழில் செய்யும் அந்தணர்களை, ராஜாவானவர், சூத்திரர் போல நடத்தவேண்டும்

ஸ்லோகம் 104ன் சரியான மொழிபெயர்ப்பு:

உண்மையச் சொல்லுவதால் ஒரு சூத்திரனுக்கோ, வைஸ்யனுக்கோ, க்ஷத்ரியனுக்கோ, பிராமணனுக்கோ மரணம் சம்பவிக்குமானால், உண்மையை உரைப்பதைவிட பொய் சொல்வதே மேல்.

–subham–

கங்கையின் புனிதம் பற்றிய மேலை நாட்டார் புளுகு! (Post No.6141)

Written by S.Nagarajan



swami_48@yahoo.com


Date: 2 March 2019


GMT Time uploaded in London – 6-05 am


Post No. 6141

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

புனித பூமி பாரதம்

கங்கையின் புனிதம் பற்றிய மேலை நாட்டார் புளுகு!

ச.நாகராஜன்

திட்டமிட்டு பாரத தேசத்தின் எந்த விஷயத்தையும் பற்றி புளுகுவதே மேலை நாட்டு அறிஞர்களின் வேலை; பாதிரிகளின் பழக்கம்.

இந்த வகையில் கங்கை நீர் புனிதம் என்பதெல்லாம் கட்டுக்கதை என்றும் இதைச் சொல்வது புராணங்கள் தாம் என்றும் அந்தப் புராணங்கள் எல்லாம் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து எட்டாம் நூற்றாண்டிற்குள் தோன்றியவையே என்றும் பல மேலை நாட்டு “அறிஞர்கள்” எழுதி வைத்துள்ளனர்.

இது எவ்வளவு பெரிய புளுகு என்பதைப் பல ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.

பின்னால் வந்த முகம்மதிய படையெடுப்பாளர்களும் அரசர்களும் கூட – அக்பர் உள்ளிட்டவர்களும் கூட – கங்கை நீரை மட்டுமே பருகும் பழக்கத்தைக் கொண்டிருந்ததை ஏற்கனவே கட்டுரைகள் வாயிலாகத் தெரிவித்திருக்கிறேன்.

 கங்கை புனிதமானது என்பதைப் புராணங்கள் தாம் கிளப்பி விட்டது என்று இவர்கள் சொல்லும் பொய்யையும் உடைக்கும் ஆதாரம் உள்ளது. முதலில் புராணம் இவர்கள் சொல்லும் கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்ததே இல்லை; மிகவும் பண்டைய காலத்தது.

அது ஒரு புறம் இருக்கட்டும். கிறிஸ்துவுக்கு முன் இருக்கும் சரித்திரத்திற்கு வருவோம்.

சிலோன் என்று கூறப்பட்ட லங்கையின் அரசனாக திசா கி.மு.47இல் பதவியேற்றான். அப்போது மாபெரும் சக்கரவர்த்தியாக அசோகன் மகதத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். அவனுக்குத் தன் மரியாதையையும் விசுவாசத்தையும் தெரிவிக்கும் விதமாக மன்னன் திசா, தான் அரியணை ஏறியவுடன் பல பரிசுப் பொருள்களைத் தன் தூதர்கள் வசம் கொடுத்து அனுப்பினான்.

அவற்றைப் பெற்ற சக்கரவர்த்தி அசோகன் மனம் மிக மகிழ்ந்தான்.

தூதுவர்கள் திரும்ப யத்தனிக்கையில் ஒரு கடிதத்தையும் திசாவின் பதவியேற்பைக் கருதி  கங்கை நீரையும் சில சன்மானங்களையும் தூதுவர்களிடம் தந்தான்.

கடிதத்தில் புத்த தர்மம் பற்றி எழுதிய அசோகன் அதில் சேருமாறு திசாவை வேண்டிக் கொண்டான்.

கடிதத்தையும் கங்கை நீரையும் பரிசுப் பொருள்களையும் தூதுவர்கள் மன்னன் திசாவிடம் சென்று கொடுத்தனர்.

அத்துடன் நிற்காமல் அசோகன் லங்காவிற்கு தன் மகேந்திரனையும் மகள் சங்கமித்திரையையும் புத்த மதம் பற்றிக் கூற நேரில் அனுப்பினான்.

ஆக கங்கை புனிதமானது என்பதும் பதவியேற்பு சமயத்தில் புனிதம் தரும் திவ்ய ஜலம் என்பதும் பெறப்படுகிறது. இது கிறிஸ்துவிற்கு முன் இருக்கும் சரித்திரத்திலேயே இடம் பெறும் ஒன்று என்பதும் பெறப்படுகிறது.

இப்படி ஏராளமான சரித்திர ஆதாரங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் மேலை நாட்டினரின் ஒவ்வொரு பொய்யையும் உடைக்கும் ஆதாரங்களாகும்.

இவற்றைத் தொகுத்து உண்மையான இந்திய சரித்திரத்தை எழுதுதல் வேண்டும். அதற்கு முன்னர் பாரதத்தை இகழும் வகையில் உள்ள பொய், புளுகுகளை பாட புத்தகங்களிலிருந்து நீக்க வேண்டும். இப்படிப்பட்ட புளுகுகளை அறிஞர்கள் யாரேனும் மேற்கோளாகக் காட்டினால் அந்தத் தவறை உடனடியாக அனைவரும் சுட்டிக் காட்ட வேண்டும். வேண்டுமென்றே இவற்றை ஆய்வுப் பேப்பர்களிலும் கட்டுரைகளிலும் மேற்கோளாகக் காண்பித்தால் அந்த “அறிஞர்களின்” புத்தகங்களுக்கு உடனுக்குடன் மறுப்புரை எழுதும் புத்தகங்களை ஆதரிப்பதுடன் அவற்றைப் பிரச்சாரமும் செய்ய வேண்டும்.

இது ஒவ்வொரு பாரதீயனின் கடமையாகும்!

வெல்க பாரதம்!

OLD ARTICLE IN THE BLOG

இலங்கைக்கு அசோகன் கங்கை நீர் …



  1.  

Translate this page

18 Sep 2014 – இலங்கைக்கு அசோகன் கங்கை நீர் அனுப்பியது ஏன்? river map_srilanka. Ganges is everywhere in Sri Lanka! கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்

***

கெட்டவன் அருகில் நல்லவன் வசிப்பது முடியாது! (Post No.6125)

Written by london swaminathan

swami_48@yahoo.com


Date: 26 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 19-10


Post No. 6125

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பர்த்ரு ஹரியின் நீதி சதகத்தைத் தொடர்ந்து காண்போம்; இதோ பாடல் 52, 53,54

அறநெறிகளையும், விதி முறைகளையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, கடந்தகால தவறுகளை மறந்துவிட்டு, நல்லது அனைத்துக்கும் எதிரே நிற்கும், குருட்டு அதிர்ஷ்டத்தில் பணம் சேர்த்த, அகந்தைமிக்க ஒருவன் அருகில் வசிப்பவன் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்?

உத்பாசிதாகிலகலஸ்யவிஸ்ருங்கலஸ்ய

ப்ராக்ஜாதவிஸ்ருதநிஜாதமகர்ம வ்ருத்தேஹே

தைவாதவாப்தவிபவஸ்ய குணதவிசோஅஸ்ய

நீசஸ்யகோசரகதைஹி சுகம் ஆப்யதே 1-52

उद्भासिताखिलखलस्य विशृङ्खलस्य
प्राग्जातविस्तृतनिजाधमकर्मवृत्तेः ।
दैवादवाप्तविभवस्य गुणद्विषोस्य
नीचस्य गोचरगतैः सुखम् आप्यते ॥ 1.52

கெட்டவர்கள் பற்றி தீ நட்பு என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் அழகாகச் சொல்லுவார்:-

சொல்லும் செயலும் வெவ்வேறாக இருப்பவர்களுடன் தொடர்பே வைத்துக்கொள்ளக்கூடாது; அது கன்aவிலும் துன்பம் தரும்- 819

கனவினும் இன்னாது மன்னோ வினை வேறு

சொல்வேறுபட்டார் தொடர்பு-819

Xxxxxxxxxxxxxxxxxxx

பாடல் 53

காலையில் நிழல் நீளமாக விழும்; நேரம் செல்லச் செல்ல குறுகிக் கொண்டே போகும்;

பிற்பகலில் விழும் நிழல் சின்னதாக இருக்கும் ஆனால் நேரம் ஆக ஆக வளர்ந்துகொண்டே போகும்;

இதே போலத்தான் தீயோர் தொடர்பும் நல்லோர் தொடர்பும்.

आरम्भगुर्वी क्षयिणी क्रमेण

लघ्वी पुरा वृद्धिमती च पश्चात् ।

दिनस्य पूर्वार्धपरार्धभिन्ना

छायेव मैत्री खलसज्जनानाम् ॥ 1.53

ஆரம்பகுர்வீக்ஷயிணீ க்ரமேண

லக்வீபுரா வ்ருத்திமதீச பஸ்சாத்

தினஸ்ய பூர்வதர்பரார்தபின்னா

சாயேவ மைத்ரீ கல ஸஜ்ஜனானாம்

இந்திய தத்துவஞான கருத்துக்களை 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டில் வெளியிட்ட பிதகோரஸின் ஐந்து முக்கியக் கொள்கைகளில் ஒன்று மனிதர்களுக்கு மிகவும் முக்கியமான குணங்கள் நட்பும் அடக்கமும்தான் என்பதாகும்.

தமிழ் நூல்களும் நட்புறவை, குறிப்பாக நல்ல நண்பர் உறவை, மிகவும் வலியுறுத்துகின்றன. பர்த்ருஹரி நிழல் உவமையைப் பயன்படுத்தினார்.

திருவள்ளுவர் தமிழ் வேதமான திருக்குறளில்  பிறை நிலவு உவமையைப் பயன் படுத்துகிறார்:-

நிறை நீர நிரவர் கேண்மை பிறைமதிப்

பின் நீர பேதையார் நட்பு – குறள் 782

அறிவுடையார் நட்பு வளர்பிறை போல நாளுக்கு நாள் வளரும்; அறிவில்லாதார் நட்பு, தேய் பிறை நிலவு போல நாளுக்கு நாள் தேய்ந்துகொண்டே போகும் என்று திருவள்ளுவர் சொல்வார்.

Xxxxxxxxxxxxxxxxx

பாடல் 54

மான், மீன், நல்லோன் ஆகியோர் புல், தண்ணீர், திருப்தி ஆகியவற்றின் மூலமே சந்தோஷம் அடைகின்றனர் (ஆயினும் அவர்களுக்கும் எதிரிகள் உண்டு). வேடனும், மீனவனும், தீயோனும் காரணமில்லாமல் அவர்களிடம் விரோதம் பாராட்டுகின்றனர்.

ம்ருகமீன ஸஜ்ஜனானாம் த்ருணஜல ஸந்தோஷ விஹித வ்ருத்தீனாம்

லுப்தகதீவரபிசுனா நிஷ்கரணவைரிணோ ஜகதி 1-54

((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

मृगमीनसज्जनानां तृणजलसन्तोषविहितवृत्तीनाम् ।
लुब्धकधीवरपिशुना निष्कारणवैरिणो जगति ॥ 1.54 ॥

மிருகங்கள், பறவைகளைக் கொண்டு நீதி போதிப்பது பாகவத காலத்தில் இருந்து திருவள்ளுவர் காலம் வரை இருக்கிறது .பர்த்ருஹரியும் காரணமின்றி பகைமை பாராட்டுவதை விளக்க அந்த உத்தியைப்  பயன்படுத்துகிறார்.

காக்கை போல கரைந்து உண்ணுதல்,நாய் போல நன்றி செலுத்துதல் என்பன அடிக்கடி வரும். ஆனால்  பர்த்ருஹரி வே றுகோணத்தில் இருந்து பார்க்கிறார்.

–சுபம்–

சம்ஸ்கிருதத்தில் நையாண்டி சுபாஷிதங்கள் (Post No.6118)

Written by S.Nagarajan

swami_48@yahoo.com


Date: 25 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 11-03 am


Post No. 6118

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

நையாண்டிப் புலவரின் இரு பாடல்கள்! (Post No.6106)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com


Date: 22 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 8-29 am


Post No. 6106

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

இந்தப் பழம் பழுத்து விட்டது! (Post No.6089)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 18 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 7-31 am


Post No. 6089
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))




ஆறு வகை எள் ஏகாதஸி (Post No.6088)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 17 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 19-19


Post No. 6088

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))