OLD TAMIL FILM ADVERTISEMENTS 1943 to 1946- part 2 (Post No.5893)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 6 JANUARY 2019
GMT Time uploaded in London 17-41
Post No. 5893
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

FOLLOWING ARE OLD TAMIL FILMS ADVERTISED IN SAKTI MAGAZINE BETWEEN 1943 AND 1946



–subham–

மாபாரதத்தில் 250 மநு நீதிப் பாடல்கள்!- டாக்டர் இராதாகிருஷ்ணன் (Post No.5880)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 4 JANUARY 2019
GMT Time uploaded in London 8-33 am
Post No. 5880
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercia

Tags-  ராதாகிருஷ்ணன், மநுவும் கௌடில்யரும், ஹோமர், வள்ளுவர்

–subham–

பிலிப்பைன்ஸ் நாட்டில் மநுவின் சிலை (Post No.5876)

Written by London swaminathan

swami_48@yahoo.com
Date: 3 JANUARY 2019
GMT Time uploaded in London 7-02 am
Post No. 5876
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

TAGS- பிலிப்பைன்ஸ், மநு சிலை, தென் கிழக்கு ஆசியா,மநு செல்வாக்கு

புகழ் பெற்ற லண்டன் சர்ச்சில் மநு நீதி நூல்! (Post No.5872)




Written by London Swaminathan

swami_48@yahoo.com
Date: 2 JANUARY 2019
GMT Time uploaded in London –8-31 AM
Post No. 5872
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.





TAGS- லண்டன் சர்ச்,  மநு நீதி நூல்,வில்லியம் ஜோன்ஸ், செயின்ட் பால் கதீட்ரல் 

-SUBHAM-

பாம்பு நீர் குடித்தால் விஷமாகும்; பசு நீர் குடித்தால் பால் ஆகும்! (Post No.5848)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 28 December 2018
GMT Time uploaded in London –20-40
Post No. 5848


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பர்த்ருஹரியின் நீதி சதகத்திலுள்ள நூறு பாடல்களில் இது வரை 44 பாடல்களைக் கண்டோம். மேலும் சில பாடல்களைத் தமிழ் இலக்கியத்துடன் ஒப்பிட்டு மகிழ்வோம்

இதோ பாடல் 45

கெட்டவனுக்கு இயல்பாகவே கொடுஞ்செயல்கள் வரும்.

காரணம் இல்லாமலேயே சண்டைக்கு வருவான்.

மற்றவர் செல்வத்துக்கும் மனைவியர்க்கும் ஆசைப்படுவான்.

நல்லோரைக் கண்டால் சீறி விழுவான்.

தனது குடும்பத்தினரையே நிந்திப்பான்.

ராவணன் இந்த எல்லா கெட்ட குணங்களையும் உடையவன்.

குபேரனின் புஷ்பக விமானத்தைப் பறித்தான்;

சிவ பெருமானின் கயிலை மலையை அசைத்தான்;

ராமனின் மனைவியைக் கவர்ந்தான்.

தேவர்களைத் துன்புறுத்தினான்.

எல்லா ராக்ஷசர்களும், நல்லோரைத் துன்புறுத்தியதால்தான் விஷ்ணு பல அவதாரங்களை எடுக்க நேரிட்டது.

திருவள்ளுவரும் தமிழ் வேதமான திருக்குறளில் கயவர்களின் குணத்தை வருணிக்கிறார்

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகும் கீழ் -குறள் 1079

பிறர் நன்றாக உடுப்பதையோ உண்பதையோ கண்டால்,கயவர்கள், பொறாமை கொண்டு அதற்கும் குற்றம் காண வல்லவர் ஆவார்கள்.

ஈசாப்   கதையில் வரும் ஆடு- ஓநாய் கதை போலத்தான். வலிய சண்டைக்கு இழுத்து ஆட்களைக் கொல்லுவர். ரிஷி முனிவர்கள் காடுகளில்  பழங்களையும் தேனையும் சேகரித்து உண்டு அமைதியான வாழ்க்கை நடத்தியபோதும் அவர்களுடன் வம்புச் சண்டைக்குப் போனவர்கள் அரக்கர்கள்.

பிறன் மனை நோக்காத பேராண்மை

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்- குறள் 146

பிறருடைய மனிவியை நாடிச் செல்பவனுக்கு நான்கு கெடுதிகள் எப்போதும் வரும்/ இருக்கும்:–

பகைமை, பாவம், பயம், உலகமே பழித்துரைக்கும் வசவுகள் இவை நான்கும் நீங்காமல் நிற்கும்.

இதை பர்த்ருஹரி அழகாகஒரே ஸ்லோகத்தில் சொல்லிவிட்டார்.

அகருணத்வமகாரணவிக்ரஹக பரதனே பரயோஷிதி ச ஸ்ப்ருஹா

ஸுஜன பந்துஜனேஸ்ஹ்வஸஹிஷ்ணுதா ப்ரக்ருதி ஸித்தமிதம்  ஹி துராத்மனாம்-45

xxxxxx

பாடல் 46

கற்றவர்களாயினும் தீய குணம் இருந்தால் அவர்களைத் தவிர்க்க வேண்டும். பாம்பின் தலையில் மாணிக்கம் இருந்தாலும் அது ஆபத்தானதல்லவா?

துர்ஜனஹ பரிஹர்தவ்யோ வித்யயாஅலக்ருதோ அபிஸன்

மணினா பூஷிதஹ ஸர்பஹகிம் அஸௌ ந பயங்கரஹ- 1-46

தீயவர்பால் கல்வி சிறந்தாலு மற்றவரைத்

தூயவரென்றெண்ணியே துன்னற்க– சேயிழையே!

தண்ணொளிய மாணிக்க சர்ப்பந் தரித்தாலும்

நண்ணுவரோ மற்றதனை நாடு- நீதிவெண்பா

பொருள்

பாம்பிடம் ஒளிமிக்க மாணிக்கக் கல் இர்ந்தாலும் யாராவது அதை நெருங்குவார்களா? அதே போல கெட்டவர்களிடம் கல்வி அறிவு இருந்தாலும் நாடக் கூடாது.

 பசுவுக்கு நீர்பால்; பாம்புக்கு நீர் – விஷம்

பாம்புண்ட நீரெல்லாம் நஞ்சாம் பசுவுண்ட

தேம்படு ஹெண்ணீர் அமுதமாம் – ஓம்பற்கு

ஒளிஆய்ம் உயர்ந்தார்கண் ஞானம் அதுபோற்

களியாம் கடையாயார் மாட்டு- அறநெறிச்சாரம்

பொருள்

பாம்புகள் குடிக்கும் நீர் எல்லாம் விஷமாக மாறுகிறது;

கயவர்கள் கற்கும் ஞன நூல்கள் அவர் மாட்டு மயக்கத்தையே விளைவிக்கும்;

பசு மாடுகள் குடிக்கும் தண்ணீர் இனிய பாலாக மாறும்;

உயர்ந்தோர் கற்கும் ஞான நூல்கள் அவர்கள் மாட்டு அறிவினை வளர்க்கும்.

தீயோர்கள் கற்றாலும் கற்றதையெல்லாம் தவறாக வியாக்கியானம் செய்வர்.

अकरुणत्वम् अकारणविग्रहः
परधने परयोषिति च स्पृहा ।
सुजनबन्धुजनेष्वसहिष्णुता
प्रकृतिसिद्धम् इदं हि दुरात्मनाम् ॥ 1.45 ॥

दुर्जनः परिहर्तव्यो
विद्यया‌உलकृतो‌உपि सन् ।
मणिना भूषितः सर्पः
किम् असौ न भयङ्करः ॥ 1.46 ॥

tags– நல்லோர்,தீயோர், பாம்பு, பசு, விஷம், பால்

Xxxxxxxxxxxxxx  subham xxxxxxxxxxxxxxxxxxxx

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி27-12-18 (Post No.5844)

Written by London Swaminathan

swami_48@yahoo.com
Date: 27 December 2018
GMT Time uploaded in London – 20-59
Post No. 5844


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

TAMIL CROSSWORD27-12-18

குறைந்தது 13 தமிழ் சொற்களைக் கண்டுபிடியுங்கள்


1

2









3











4



5
6
6












7














8




9

குறுக்கே

1. என்  வயது

3.- மேல் தளம், பால்கனி

4. -சேர், ஒன்று சேர்

5. – எட்டுகால் மிருகம், தத்துக்கிளி, எட்டுக்கால் புள், வரையாடு

6. – பாம்பு

7 – ராமனால் கொல்லப்பட்ட கோர உருவமுள்ள  அரக்கன்

8. – தேவதை, அசுரன், அச்சம்தரும்

9. -திட்டு, வை; பெயர்ச்சொல்லாக எடுத்தால் கிறிஸ்தவ மத ஸ்தாபகர்

கீழே

2. -சமணராகி மீண்டும் சைவரான தேவாரப் பெரியார்

3. (6)  — பூபியிலுள்ள தேசங்களின் தொகுப்பு

4 – ராமகாதை எழுதிய தமிழன்

5. -மூன்று வயதில் ஞானப்பால் சாப்பிட்டு கவிதை மழை பொழிந்த சிறுவன்

6. – உட்கார  உதவும் (நாற்காலி இல்லாத போது) GO UPWARDS

9. – எல்லோரையும் உயர்த்திவிட்டுத் தான் மட்டும் உயராத ஒரு மரச் சட்டம்

answers


ன்வை



ப்



ப்ரிகை


ர்


ம்

நா
ம்

டு



ர்

ந்ன்
ள்



ணி


சூ
ர்
சு

குறுக்கே

என் அகவை–  ,உப்பரிகை,கல,சரபம், நாகம்,கபந்தன்

சூர்,ஏசு

கீழே

அப்பர்,உலகநாடுகள்,கம்பர்,சம்பந்தர்,பலகை,ஏணி.

குறுக்கே

1என் அகவை- என்  வயது

3.உப்பரிகை- மேல் தளம், பால்கனி

4.கல-சேர், ஒன்று சேர்

5.சரபம்- எட்டுகால் மிருகம், தத்துக்கிளி, எட்டுக்கால் புள், வரையாடு

6.நாகம்- பாம்பு

7.கபந்தன்  – ராமனால் கொல்லப்பட்ட கோர உருவமுள்ள  அரக்கன்

8.சூர்- தேவதை, அசுரன், அச்சம்தரும்

9.ஏசு-திட்டு, வை;பெயர்ச்சொல்லாக எடுத்த்தால் கிறிஸ்தவ மத ஸ்தாபகர்

கீழே

2.அப்பர்-சமணராகி மீண்டும் சைவரான தேவாரப் பெரியார்

3.உலகநாடுகள்  — பூபியிலுள்ள தேசங்களின் தொகுப்பு

4.கம்பர்- ராமகாதை எழுதிய தமிழன்

5.சம்பந்தர்-மூன்று வயதில் ஞானப்பால் சாப்பிட்டு கவிதை மழை பொழிந்த சிறுவன்

6.பலகை- உட்கார  உதவும் (நாற்காலி இல்லாத போது)

9.ஏணி- எல்லோரையும் உயர்த்திவிட்டுத் தான் மட்டும் உயராத ஒரு மரச் சட்டம்

–SUBHAM–

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனி (Post No.5842)

Written by London Swaminathan


swami_48@yahoo.com
Date: 27 December 2018
GMT Time uploaded in London – 8-20 am
Post No. 5842


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

சங்கத் தமிழ் வளர்த்த மதுரை–  இயல் இசை நாடகம் — ஆகிய முத்தமிழையும் வளர்த்தது. மதுரை தந்த எம்.எஸ். சுப்புலெட்சுமியை யாரும் மறக்க முடியாது. பரிதிமாற் கலைஞர் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு தமிழ்ப் பணி ஆற்றிய மதுரை வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரியின் தமிழ் நாடகங்களை எவரும் மறக்க முடியாது.

அந்தக் காலத்தில் மதுரை,  நாடகங்களின் ஆதார பூமியாக விளங்கியது. நாடகம் வளர்த்த சங்கரதாஸ் சுவாமிகள், நவாப் ராஜமாணிக்கம், நாகம் எழுதிய பம்மல் சம்பந்த முதலியார் ஆகியோரையும் மறப்பதற்கில்லை.

ஆயினும் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் லைப்ரரிக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக வாரம்தோறும் செல்லும்போது அந்தக் காலத்தில் தெருக்கூத்து, நாடகங்கள் ஆகியவற்றை எழுதியோர் பட்டியல் ஒரு நீண்ட பட்டியல் என்பது புரிகிறது; தெரிகிறது.

இது டாக்டர் பட்டம் பெறுவதற்கு நிறைய தகவலுள்ள துறை. நானும் அவ்வபோது கண்ட நாடகங்களைப் பற்றிய தகவல்களைப் பேஸ்புக்கில் வெளியிட்டு வந்தேன்.

மதுரையில் இருந்ததொரு நாடகக் கம்பெனி பற்றிய சுவையான விவரம் இதோ:–

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியை 1910ஆம் ஆண்டில் .எஸ். எம். சச்சிதானந்தம் பிள்ளை துவக்கினார். இளைஞர்களைக் (பால்யர்கள்) கொண்டே இதை இயக்கினார். அவர் பல நாடகங்களை இயற்றினார்; அவற்றில் சில:-

கங்காராம் அல்லது கவர்னர்ஸ் கப்

பஞ்சாப் கேசரி

வீர சிவாஜி

அவர் சொல்லும் தகவல்

நல்ல நீதிகளைக் கொண்ட நாடகங்களால் உலகத்தவர்கள் நல்ல நடவடிக்கைகளில் ஈடுபடுவர் என்பது பெரியோர் அபிப்பிராயம்; எனக்கும் அந்த அபிப்பிராயம் உண்டு.

காலஞ்சென்ற கன்னையாவைப் போல நானும் ஏராளமான பொருட்செலவில் தசாவதாரம் என்ற பிரயாதிமிக்க நாடகத்தை நடத்தி முடித்தேன்.

பிறகு காலப்போக்கை அனுசரித்து  ஜனசாரச் சீர்திருத்தம் சம்பந்தமான  நாடகம் நடத்த முற்பட்டு

ராஜாம்பாள், மனோஹரன், கள்வர் தலைவன் முதலியன்வும்

பதிபக்தி, பம்பாய் மெயில் முதலியனவும் நடத்தினேன்.

கிண்டியில் நடக்கும் குதிரைபந்தயம் என்னும் சூதாட்டத்தினால் விளையும் தீமைகளை விளக்க ‘கவர்னர்ஸ் கப்’ என்ற இந்த நாடகத்தை எழுதினேன் (ஆண்டு 1935).

வரகவி அ .சுப்பிரமணிய பாரதியிடம் தந்துஅவர் திருத்தியமைத்தபின் அச்சிட்டேன்; அவருக்கு நன்றி

என் நாடகத்தில் பிரதான நடிகர்கள்

டி ஆர் பாபு ராவ், காளி, என். ரத்தினம்

XXX

தமிழ் கூறு நல்லுலகம் சச்சிதானந்தம் பிள்ளைக்கும் நாடக நடிகர்களுக்கும் என்றும் கடமைப்பட்டுள்ளது.

TAGS–

சச்சிதானந்தம் பிள்ளை, மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, தமிழ் நாடகங்கள், கன்னையா

–SUBHAM–

ஆற்றில் தள்ளிவிட்டு தீர்ப்பு! மநுவும் ஹமுராபியும் (Post No.5835)

Research Article Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 26 December 2018
GMT Time uploaded in London – 7-25 am
Post No. 5835


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ஒருவனைக் குற்றவாளியா இல்லையா என்பதைத் தீர்மானிக்க, ஆதிகாலத்தில்  பல விநோத முறைகள் கையாளப்பட்டன. இதே போல எது உண்மை என்பததைத் தீர்மானிக்கவும் தண்ணீர் அல்லது தீ (அக்னி) பயன்படுத்தப்பட்டது. இது தொடர்பாக மநு என்ன சொல்கிறார் என்பதை முதலில் காண்போம். மநுவுக்குப் பின்னர் வந்த பாபிலோனிய மன்னன் ஹமுராபி, தமிழ் நாட்டு சமணர்கள் (ஞான சம்பந்தரின் அனல் வாதம் , புனல்வாதம்), மஹாபரத அஷ்டவக்ரர்- பண்டி மோதல் ஆகியவற்றைக் கண்போம்.

மநு  தர்ம நூலில் ஸரஸ்வதி நதி

மநு தர்ம சாஸ்திரத்தில், ஸரஸ்வதி நதி பற்றி குறைந்தது மூன்று இடங்களில் பேசுகிறார்.

இரண்டாம் அத்தியாயத்தில் வேத பூமியின் எல்லைகளை வரையறுக்கையில் புண்ய நதிகளான ஸரஸ்வதி- த்ருஷத்வதி ஆகியவற்றுக்கு இடையேயான பிரதேசமே பிரம்மாவர்த்தம் (வேத பூமி என்பார்).மனு-217

பதினோராவது அத்தியாயத்தில் பிராமணனைக் கொன்றவர் செய்யும் பரிகாரங்களை சொல்லுகையில் ஒருவன் யாகத்துக்கான உணவுகளை மட்டும் உட்கொண்டு சரஸ்வதி நதி ஓடும் தூரம் முழுவதையும் கடக்கலாம்; எப்படியென்றால் நீரோட்டத்துக்கு எதிராக நடந்து சென்று கடக்க வேண்டும் – மனு 11-78

அதாவது நடக்க முடியாத தூரம் அல்லது மிகக்கஷ்டமான காரியத்தைச் செய்தல்– இதிலிருந்து ஸரஸ்வதி நதி பிரவாஹம் எடுத்துச் சென்றதை அறியலாம், அமெரிக்க நாஸா புகைப்படங்களும் இந்திய அணுசக்தி ஆராய்ச்சிகளும் ஸரஸ்வதி நதி ஓடிய காலம் கி.மு.2000க்கு முன்னரே; அதன் பின்னர் வற்றிவிட்டது என்பதால் ஹமுராபிக்கும் முன்னர் மநு வாழ்ந்தது புலனாகிறது.அது மட்டுமல்ல அந்தக் காலத்திலேயே ஒருவன் நீர் சோதனை மூலம் தனது அப்பாவித்தனத்தை நிரூபிக்கலாம் அல்லது பரிகாரம் செய்யலாம் என்பதை அறிய முடிகிறது. அது மட்டுமல்ல முந்திய ஸ்லாகங்களில் ஒருவன் மூன்று முறை தலை கீழாகத் தீயில் பாய்ந்தும் பாவத்தைப் போக்கலாம் என்று சொல்லுகிறார். உண்மையில் ஒருவன் குற்றம் இழைக்காவிடிலோ அல்லது அவர் கொலை செய்த சூழ்நிலை தற்காப்பின் பொருட்டோ என்று இருக்குமானால் அக்னியும் தண்ணீருமே அவரை ஒன்றும் செய்யாது என்பது தாத்பர்யம்.

ஹமுராபியின் சட்டம்

ஹமுராபி சட்டவிதி எண்.2

“ஒருவன் மாய மந்திர பேய் பிசாசு,பில்லி, சூனியம் செய்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டால்,

ஆனாலதைநிரூபிக்கப் போதுமான சான்றுகளில்லாமலிருந்தால்,

குற்றஞ்சாட்டப்பட்டவன் ஒரு நதியில் குதித்து தான், நிரபராதி என்று நிரூபிக்கலாம்.

அவனை வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் நதி மூழ்கடித்துவிட்டால், குற்றம் சாட்டியவனே சரி; அவன் குற்றவாளியின் வீட்டை எடுத்துக் கொள்ளலாம்.

குற்றவாளி, நதியிலிருந்து மீண்டு வந்துவிட்டால்,  அவன் நிரபராதி. யார் பில்லி சூனியப்  புகாரைச் சொன்னானோ அவனைக் கொன்று விடுக .நதியில்  குதித்து உயிர் தப்பியவன் அவனுடைய வீட்டை மீண்டும்  பெறுக”.

 (ஹமுராபியின் சட்டத்தில் மரண  தண்டனை என்பது தண்ணீர்   பட்டபாடு. அவர் எதற்கெடுத்தாலும் ‘கொல், கொல், கொல்’ என்று குறைக்கிறார்!)

அனல் வாதமும், புனல் வாதமும்

தண்ணீரும் தீயும்  உண்மையனவர்களை ஒன்றும் செய்யாது என்பது வேத கால நம்பிக்கை.ஜைமினீய பிராஹ்மணம்   முதலிய நூல்களிலேயே ‘தீ மிதி’ சோதனைகள் பேசப்படுகின்றன. ராமாயணத்தில் சீதையும் அக்னிப் பரீக்ஷையில் தேறி வந்ததைக் காண்கிறோம்.

பிராமணச் சிறுவன் ஞான சமபந்தர் மதுரையில் தங்கி இருந்த மடத்துக்கு சமணர்கள்,  தீ வைத்தும் அவரைக்கொலை செய்ய முடியவில்லை என்றவுடன் அனல் வாதம் (தீ), புனல் வாதத்துக்கு (நீர்) வருகின்றனர். அதில் சம்பந்தர் எழுதிய ஐந்தெழுத்து மந்திரச் சுவடி தீயில் போட்டாலும் எரியவில்லை; வைகை நதியில் விட்டாலும் எதிர் நீச்சல் அடித்து மதுரைக்குப் பக்கத்தில் உள்ள திரு ஏடகத்தில் ஏடு கரை ஏறியது. ஆக மநு,ஹமுராபி, முதலியோர் சொல்லும் ‘நதி சோதனை’ (River Ordeal)  சம்பந்தர் காலத்தில் — 1400 ஆண்டுகளுக்கு முன்னர்- பின்பற்றப்பட்டதையும் அறிகிறோம்.

மஹாபாரதத்தில் புனல் வாதம்

கீழ்கண்ட கதை மஹாபாரதத்தில் தர்மபுத்ரனுக்கு உரைக்கப்பட்டது

மஹாபாரதத்துக்கு முன்னர், வேத காலத்தில் நடந்த நிகச்ச்சி இது. அதாவது கி.மு 3102-க்கு முன்னர்- கலியுகம் துவங்கு முன்னர் –நடந்தது. ஜனகரின் அவையில் பண்டி என்ற புலவர்- அறிஞர் இருந்தார். எல்லோரையும் வாதத்துக்கு அழைப்பார்; தோற்றுப் போனவர்களை நதியில் தூக்கி எறிவார். அவரிடம் கஹோதர் என்னும் முனிவர் தோற்றுப் போய் நதியில் எறியப்பட்டு உயிர் இழந்தார். அவருடைய மகன் அஷ்டாவக்ரன், 12 வயதில் எல்லா சாஸ்திரங்களையும் கற்று பண்டியுடன் மோதினார். பண்டி தோற்றுப் போனவுடன் நதியில் எறியப்பட்டார். ஆனால் வருண பகவானின் தயவுடன் அவர் உயிர் தப்பி பின்னர் இறந்தார் என்று கதை முடிகிறது. அது மட்டுமல்ல. கஹோதர் மீன்ன்டும் உயிர்பெற்றார். அஷ்டா வக்ரர் என்றால் ‘எட்டு கோணல்’ என்று பொருள்; வேத ஒலிக்கு அபார சக்தி உண்டு. கஹோதர் தவறாக வேதத்தை உச்சரித்தபோது எல்லாம், சுஜாதாவின் கர்ப்பத்தில் இருந்த அஷ்டாவக்ரர் உடல் நெளிந்து, நெளிந்து எட்டு கோணல் ஏற்பட்டது. அவரும் நதியில் குளித்தவுடன் கூன் முதுகு நிமிர்ந்தது. பாண்டிய மன்னன் நின்ற சீர் நெடுமாறனுடன் ஒப்பிடலாம். இங்கும் தண்ணீரின், நதியின் சிறப்பைக் காணலாம். யார் உண்மையானவரோ அவருக்கு அனலும் புனலும் உதவும் என்பதே கருத்து.

tags– 

 மநு  தர்ம நூல், ஸரஸ்வதி நதி,ஹமுராபி சட்டம், ஆற்றில் தள்ளிவிட்டு தீர்ப்பு

–subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி22-12-18 (Post No.5814)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 22 December 2018
GMT Time uploaded in London – 17-11
Post No. 5814


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்திலுள்ள குறைந்தது 18 சொற்களைக் கண்டுபிடியுங்கள்; விடை கீழே உளது

TAMIL CROSS WORD 22-12-18

குறுக்கே

1. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று: விளம்பி நாகனார் செய்தது

4a. கட்டுவதற்கு உதவும்

6.தப்படி- தவறான செய்கை; 5 அல்லது 3 அடி கொண்ட கால் வைப்பு

7.கதிர்காமத்துடன் இணைந்தது

8.- காயிலும் உண்டு; பூவிலுமுண்டு

9.-பருப்பு வகையறா

10.-செங்குத்துக்கோடு; அதைப் பார்க்க உதவும் கருவி

11.- பிராணிகளையும் குழந்தைகளையும் இப்படி வளர்ப்பர்

12.- சரி, சரி

கீழே

1.- சமண முனிவர்கள் செய்த நூல்; பதினெண்கீழ்க்கனக்கு நூல்களில் ஒன்று

2.- குழந்தைச் செல்வம்

3.- ரகளை

4- கரம்

4a. (8)- கரத்தில் கட்டும் மணி பார்க்கும் கருவி

5. – வெள்ளை அல்லது—-;இரண்டே நிறம்

5a.- வர்ணம்

9.- வலிமை

11.-செயல்படு

1

2

3
4
5







4a




6
7










8









9



5a





10








11






12

நா1
ன்ம2ணிக்க3டிகை4
க5




க4aயிறு
டிப்த6
க7ண்டி
ப்
யா
பே

ம்
கா8
ம்
பு
ர்
று
ப9


நி5a


ய்

ல10 ம்
ம்



செ11
ல்ம்


12ஆம்

குறுக்கே

1.நான்மணிக்கடிகை- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று: விளம்பிநாகனார் செய்தது

4a.கயிறு- ட்டுவதற்கு உதவும்

6.தப்படி- தவறான செய்கை; 5 அல்லது 3 அடி கொண்ட கால் வைப்பு

7.கண்டி- கதிர்காமத்துடன் இணைந்தது

8.காம்பு- காயிலும் உண்டு; பூவிலுமுண்டு

9.பயறு-பருப்பு வகையறா

10.லம்பம்-செங்குத்துக்கோடு; அதைப் பார்க்க உதவும் கருவி

11.செல்லம்- பிராணிகளையும் குழந்தைகளையும் இப்படி வளர்ப்பர்

12.ஆம்- சரி, சரி

1.நான்மணிக்கடிகை,4a.கயிறு,6.தப்படி,7.கண்டி,8.காம்பு,9.பயறு

10.லம்பம்,11.செல்லம்,12.ஆம்

கீழே

1.நாலடியார்- சமண முனிவர்கள் செய்த நூல்பதினெண்கீழ்க்கனக்கு நூல்களில் ஒன்று

2.மகப்பே று- குழந்தைச் செல்வம்

3.கலகம்- ரகளை

4.கை- கரம்

4a.கடி (8)காரம்- கரத்தில் கட்டும் மணிபார்க்கும் கருவி

5.கறுப்பு – வெள்ளை அல்லது—-;இரண்டே நிறம்

5a.நிறம்- வர்ணம்

9.பலம்- வலிமை

11.செய்-செயல்படு

1.நாலடியார்,2.மகப்பே று,3.கலகம்,4.கை

4a.கடி (8)காரம்,5.கறுப்பு ,5a.நிறம்,9.பலம்,11.செய்

தியானம் மூலம் கிடைக்கும் நன்மைகள்! (Post No.5800)


Written by S Nagarajan

Date: 19 DECEMBER 2018


GMT Time uploaded in London –7 -03 am


Post No. 5800

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

தியானம் மூலம் கிடைக்கும் நன்மைகள்!

ச.நாகராஜன்

தியானம் என்பது கவனக் குவிப்பைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒரு தனி நபரின் பிரக்ஞையை உயர்த்தும் உத்தியே என அறிவியல் விளக்குகிறது. ஆனால் ஹிந்து தத்துவமோ ஒருவரின் ஆன்மாவை உணர்வதற்கான வழிமுறையே தியானம் என வரையறுக்கிறது. தியானத்தின் பலன்கள் சொல்ல முடியாத அளவு ஏராளம். சிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.

1)பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தியானமானது ஒருவருக்கு ஆக்கபூர்வமான தொடர் வரிசை விளைவுகளை ஏற்படுத்துகிறது.

2) நடத்தையைச் சீராக்கும் சிகிச்சையில் இது தன்னைத் தானே கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த வழிமுறையாக ஆகிறது

3) கவலையை விரட்டுகிறது.

4) ஒருவனின் உண்மையாக தற்போது இருக்கும் ஆன்ம அடையாளத்தை இலட்சியபூர்வமான ஆன்ம அடையாளத்துடன் சமப்படுத்துகிறது.

5) அனைத்தும் உள்ளடக்கிய மருந்தாக அமைகிறது.

6) அகங்காரத்தைப் போக்குகிறது.

7) தனிநபரை எப்போதும் நிகழ்காலத்தில் வாழ வைக்கிறது.

8) எண்ணங்களைத் தளர்த்தி வெளியேற்றும் உத்தியாக அமைகிறது.

9) ஆரோக்கியத்தின் அற்புதத் திறவுகோலாக அமைகிறது.

10) தியானம் மூலமாக உடல் ரீதியான அற்புத ஆற்றல்களைப் பெற முடிகிறது.

11) தியானம் மூலமாக தானியங்கி நரம்பு மண்டலத்தை நினைத்தபடி கட்டுப்படுத்த முடிகிறது.

12) மன அழுத்தம் மூலமாக வரும் அனைத்துச் சிக்கல்களையும் போக்குகிறது.

13) மனித ஆற்றலைப் பற்றிய விரிவான காட்சியைத் தருகிறது.

14) வேக யுகத்தின் தொழில்நுட்ப கலாசாரத்தின் கொடுமைகளை நீக்குகிறது.

15) வாழ்க்கையின் மதிப்புகளை அறிய வைக்கிறது.

16) கற்பதற்கு மிகவும் சுலபமானது.

17) பயிற்சி செய்ய மிகவும் சுலபமானது.

18) பணச் செலவில்லை.

19) வயது வரம்பில்லை.

20) ஆண், பெண் பாகுபாடு இல்லை.

21)  எங்கு வேண்டுமானாலும் தியானம் செய்யலாம்.

22) எப்பொழுது வேண்டுமானாலும் தியானம் செய்யலாம்.

23) இனம், மதம், மொழி, நாடு என்று எந்த பேதமும் கிடையாது.

24) அந்தஸ்து ஒரு தடையில்லை.

25) உடல் ரீதியான முன்னேற்றம் தருகிறது.

26) மனரீதியான முன்னேற்றம் தருகிறது.

27) ஆன்மீக ரீதியான முன்னேற்றம் தருகிறது.

28) மனிதனின் பாரம்பரியத்துடன் தொடர்பு படுத்தும் அனைத்து நற்குணங்களையும் தியானம் உள்ளடக்கியுள்ளது.

29) தியானத்தின் போது இன்பமான, ஆச்சரியகரமான அனுபவங்கள் கிடைக்கிறது.

30) நீடித்த ஆரோக்கியமான வாழ்வு உறுதி செய்யப்படுகிறது.

31) கெட்ட கனவுகளை நீக்குகிறது.

32) இரவில் நன்கு தூங்க முடிவதை உறுதி செய்கிறது.

33) மன அழுத்தம் ஏற்படுகையில் உருவாகும் தாடை, முதுகு, தோள்கள் ஆகியவற்றில் ஏற்படும் இறுக்கம் வராது.

34) எப்போதும் சாந்தியுடன் இருக்க முடிகிறது.

35) தெளிவாக, தூய்மையாக, மலர்ச்சியுடன் எப்போதும் இருக்க முடிகிறது.

36) வெட்கப்படுவது போய் விடுகிறது.

தியானம் தரும் ஏராளமான நற்பயன்களில் சில மட்டுமே மேலே தரப்பட்டுள்ளது.

இன்று அறிவியல் அங்கீகரிக்கும் அற்புத வழிமுறையாக தியானம் அமைகிறது.

ஏற்றத்திற்கும், வளத்திற்கும், வளர்ச்சிக்கும், அமைதிக்கும், மலர்ச்சிக்கும் உற்ற துணை தியானமே!

 tags–தியானம், நன்மைகள்

***