பயங்கரவாதிகள் பற்றி வள்ளுவன், சேக்கிழார் (Post No.5771)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 12 December 2018


GMT Time uploaded in London – 10-53 am

Post No. 5771


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

தற்காலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் பற்றி பத்திரிக்கைகளில் நிறைய செய்திகளைப் படிக்கிறோம். அவர்கள் நேரடியாகத் தாக்கினால் ‘வீரர்கள்’ என்று புகழ்வோர் சிலர். ஆனால் பொய் வேடம் கொண்டு நண்பன் போல, சீடன் போல நடித்துக் கொன்றால் அத்தகையவரை கோழை என்று உலகமே இகழும். நமது காலத்திலேயே காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியை விடுதலைப் புலி இயக்கத்தைச் சேர்ந்த பெண் வணங்குவது போல வணங்கி வெடிகுண்டு வைத்து இருபதுக்கும் மேலானவர்களைப் படுகொலை செய்த வன் செயலை உலகமே கண்டித்தது. 

ஷேக்ஸ்பியர் நாடகத்தில் ஜூலியஸ் ஸீஸரைக் கொல்ல வந்த நண்பன் ப்ரூட்ட,,,, ஸைப் பார்த்து ‘யூ டூ ப்ரூட்டஸ்’  (et tu Brute? You too Brutus?) என்று சீஸர் சொன்ன வரிகளை நாம் அறிவோம்.

காளிதாசன் காலத்திலும் இது நடந்தது. கி.மு.73-ல் சுங்க வம்ஸத்தின் கடைசி அரசனான தேவ பூதியை ஒரு அடிமைப் பெண், ராணி போல வேடம் அணிந்து, படுக்கை அறைக்குள் நுழைந்து கொன்றாள். அமைச்சன் வாசுதேவனின் சதியின் பெயரில் அது நடந்தது. பஞ்ச தந்திரமும் மன்னர்களின் படுகொலை பற்றிப் பேசுகிறது.

வள்ளுவர், சேக்கிழார், திருத்தக்க தேவரும் அத்தகைய சம்பவங்களைப் பாடி வைத்திருப்பது, இந்தப் படுகொலைகள் தொன்றுதொட்டு நிகழ்கின்றன என்பதை அறிய முடிகிறது.

சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தில் வரும்

மெய்ப்பொருள் நாயனார் சரிதம் மிகவும் உருக்கமானது.

கதையின் சுருக்கம் இதுதான்

சேதிநாட்டில், திர்க்கோவலூரில்,மலையமான் குலத்தில் வந்த அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். எப்பொழுதும் திருநீறு பூசி சிவனைப் பூஜித்து, மெய்ப்பொருள் காண்பதையே லட்சியமாகக் கொண்டிருந்ததால், அவர் பெயரே மெய்ப் பொருள் நாயனார் என்று ஆயிற்று. அவரிடம் பலமுறை போரில் தோற்றுப்போன முத்தநாதன் என்பவன், நேர் வழியில் வெல்லுவது அரிது என்று கருதி, பொய்யான தவ வேடம் பூண்டு வந்தான். சிவ குரு என்று சொல்லி எல்லாக் காவல் நிலைகளையும் தாண்டி வந்தபோதும் மெய்ப் பொருள் நாயனாரின் முக்கியக் காவல் அதிகாரி தத்தன் மட்டும் சந்தேகக் கண்ணுடன் பார்த்தான். படுக்கை அறையில் மனைவியுடன் இருப்பதையும் மீறி மெய்ப்பொருள் நாயனாரின் பள்ளி அறையில் நுழைய மஹா ராணி திடுக்கிட்டு எழுந்தாள். மன்னரோ முத்த நாதன் சிவனியார் வேடத்தில் வந்ததால் வணங்கி என்ன காரத்தினால் வந்தீர்? என வினவ புதிய ஆகம நூல் கிடைத்து இருப்பதாகவும் அதை உபதேசிக்க வந்து இருப்பதாகவும் சொன்னான்.

முத்தநாதன் ‘மனதிலே கரு(று)ப்பு வைத்து’

முத்த நாதனின் வேடத்தை சேக்கிழார் வருணிக்கும் அழகே அழகு. உடம்பெல்லாம் வெண்மை நிறம். ஆனால் மனம் மட்டும் கறுப்பாம்:

மெய்எலாம் நீறு பூசி
     வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினில் படைக ரந்த
     புத்தகக் கவளி ஏந்தி
மைபொதி விளக்கே என்ன
     மனத்தின்உள் கறுப்பு வைத்துப் 
பொய்த்தவ வேடம் கொண்டு
     புகுந்தனன் முத்த நாதன்

மனைவி உடனிருந்தால் உபதேசிக்க முடியாது என்று சொல்லி அவளை அனுப்பச் செய்துவிட்டு, மன்னர் தனியாக வந்த போது புத்தக் கட்டை (ஏட்டுச் சுவடிக் கட்டு) அவிழ்ப்பது போல அவிழ்த்து ஏடுகளுக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி அவரைக் கொலை செய்தான்.

சப்தம் கேட்டு தத்தன் உள்ளே வந்து, முத்த நாதனைக் கையும் களவுமாகப் பிடித்த போதும் சிவ சின்னங்களை அணிந்திருந்த ஒரே காரனணத்துக்காக அவரை, ‘தத்தா இவர் நமர் (நம்ம ஆள்)’ என்று சொல்லி ஊர் எல்லை வரை பாதுகாப்போடு அழைத்துச் சென்று விடுக என்று கட்டளையும் இடுகிறார். தத்தனும் அப்படியேசெய்தான்.

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே

தின்னவரும் புலிதனையும் -……………….

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே

என்ற பாரதி பாட்டை நினைவுபடுத்துகிறது மெய்ப்பொருள் நாயனாரின் செயல்.

கைத்தலத்து இருந்த வஞ்சக் 
     கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று      
     புரிந்துஅவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
     நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப் 
     பொருள்எனத் தொழுது வென்றார் 

நிறைத்தசெங் குருதி சோர 
     வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப்படும் அளவில் தத்தா
     நமர் எனத் தடுத்து வீழ்ந்தார்

xxx

வள்ளுவன் வாக்கு

திருவள்ளுவரும் சொல் வணக்கம், வில் வணக்கம் பற்றி எச்சரிக்கிறார். தொழுத கைக்குள்ளும் ஆயுதம் இருக்கும் என்றும் எச்சரிக்கிறார். அவருக்கும் தேவ பூதி, ஜூலியஸ் சீஸர் கதைகள் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு

சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்

தீங்கு குறித்தமையான்— குறள் 827

பொருள்

வில் வளைவது தீமை வரப் போவதைக் காட்டும். அதே போல பகைவர்கள் வணக்கத்தோடு சொல்லும் சொல்லை நன்மை என்று கருதி விடக்கூடாது ((வணங்குவது போல வணங்கி காலை வாரி விடுவர்; புலி பதுங்குது பாய்வதற்காகத் தானே)- 827

தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்  ஒன்னார்

அழுத கண்ணீரும்  அனைத்து- 828

பொருள்

பகைவர் வணங்கும் கைகளுக்கு உள்ளும் கொலைக் கருவியை மறைத்து வைத்திருப்பர். அவர்கள் அழுது சொரியும் கண்ணீரும் அத்தகையதே-828

xxx

சீவக சிந்தாமணி

தொழுத்தங் கையினுள்ளும் துறுமுடி அகத்துமும் சோர

அழுத கண்ணீரினுள்ளும் அணிகலத்தகத்து மாய்ந்து

பழுத கண்ணரிந்து கொல்லும் படையுடன் ஒடுங்கும் பற்றா

தொழிகயார் கண்ணும் ஹேற்றம் தெளிகுற்றார் விளிகுற்றாரே – சீவக சிந்தாமணி 1891

tags–பயங்கரவாதிகள்,முத்தநாதன், மெய்ப்பொருள் நாயனார்

–subham–

‘நாய் பெற்ற தெங்கம் பழம்’ –‘ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்’ (Post No.5756)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 9 December 2018


GMT Time uploaded in London – 12-38

Post No. 5756


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பர்த்ருஹரி நீதி சதகம் ஸ்லோகங்கள் 38, 39

தானம் போகோ நாசஸ்திஸ்த்ரோ கதயோ பவந்தி வித்தஸ்ய

யோன ததாதி  ந புங்தே தஸ்ய த்ருதீயா கதிர்பவதி – 38

दानं भोगो नाशस्तिस्रो
गतयो भवन्ति वित्तस्य ।
यो न ददाति न भुङ्क्ते
तस्य तृतीया गतिर्भवति ॥ 1.38 ॥

பொருள்

“ஒருவனுடைய செல்வம் மூன்று வழிகளில் கரைகிறது; தானம் கொடுப்பதாலோ, தனக்குப் பயன்படுத்துவதாலோ, இழப்பதாலோ போய்விடும். முதல் இரண்டு வழிகளைப் பயன்படுத்தாதோருக்கு மூன்றாவது வழி திறந்தே இருக்கிறது”.

அதாவது,

“செல்வத்தை, காசு பணத்தை, ஒருவன் தனக்கோ பிறருக்கோ பயன்படுத்த வேண்டும் அல்லது அது வீணாகிப் போகும். பணக்காரன், தானும் அனுபவியாமல் தர்மமும் செய்யாமல் இருந்தால் அது நாசமாகும்.-38”

பழமொழி 400 என்னும் தமிழ் நூல் இதை இன்னும் அழகாகச் சொல்லும்.

நாய் கையில் கிடைத்த தேங்காய் போல என்று

வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற

முழங்கு முரசுடைச் செல்வம் – தழங்கருவி

வேய்முற்றி முத்து திரும் வெற்ப  அதுவன்றோ

நாய்பெற்ற தெங்கம் பழம்  –பழமொழி 216

பொருள்

“ஒலிக்கும் அருவிகளையுடைய மூங்கில் முதிர்ந்து முத்து உதிரும் மலை நாட்டையுடையவனே !

மற்றவர்க்கும் கொடுக்காமல் தானும் அனுபவிக்காமல் உள்ளவன் பெற்ற செல்வம்  நாய் பெற்ற தேங்காய் போன்றதன்றோ!”

நாயிடம் தேங்காய் கிடைத்தால் அதைப் பயன் படுத்தாமல் உருட்டிக்கொண்டு இருக்கும்.மற்றவர்களையும் நெருங்க விடாது.

கருமிகள் எனப்படும் லோபிகளும் இதுபோன்றவர்களே.

4.WHAT MISERS HAVE HOARDED THE WICKED WILL TAKE

4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர். 

என்று கொன்றை வேந்தனில் அவ்வையாரும் கூறுவார்

நாம் எல்லோரும் மைடாஸ் (Midas, the Miser) கேட்ட வரம் பற்றிய கதையை அறிவோம்.

xxx

மணிஹி  சனோல்லீடஹ  ஸமரவிஜயீ ஹேதிதலிதோ

மதக்ஷீணோ நாகஹ சரதி ஸரிதஹ ஸ்யானபுலினாஹா

கலாசேஷஸ் சந்த்ரஹ  ஸுரத்ம்ருதிதா பால வனிதா

தனிம்னா சோபந்தே கலிதவிபவாஸார்திஷு நராஹா – 39

मणिः शाणोल्लीढः समरविजयी हेतिदलितो
मदक्षीणो नागः शरदि सरितः श्यानपुलिनाः ।
कलाशेषश्चन्द्रः सुरतमृदिता बालवनिता
तन्निम्ना शोभन्ते गलितविभवाश्चार्थिषु नराः ॥ 1.39 ॥

பொருள்

ரத்தினக் கல்லை அறுத்து அறுத்து பட்டை தீட்டினாலும் ஜொலிக்கத்தான் செய்கிறது;

விழுப்புண் அடைந்தாலும் வெற்றி பெற்ற வீரனின் முகம் பெருமித ஒளி வீசுகிறது;

யானையானது மத நீர் அனைத்தும் வடிந்தும் கம்பீரமாகக் காட்சி தருகிறது;

நதியானது தண்ணீர் குறைந்த காலத்திலும் அழகுடன் தோன்றுகிறது;

அமாவாசைக்கு அடுத்த இரண்டாவது நாளிலும் நிலவு அழகாகத்தான் ஒளிர்கிறது;

காதலனுடன் கட்டிப் புரண்டு காலையில், களைப்புடன் எழுந்தபோதும் மனைவியின் அழகு குன்றவில்லை;

பணக்காரன், அவனது செல்வம் முழுதையும் தர்மம் செய்தபோதும் பொலிவுடன் திகழ்கிறான்.

இவற்றில் ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டுப் பார்த்து ரஸிக்கலாம்.

இருந்தபோதும் கவிஞன் சொல்ல வரும் விஷயம், கையில் உள்ள எல்லாவற்றையும் தானம் கொடுத்தபோதும் செல்வந்தனுக்குப் புகழும் புண்ணியமும் எஞ்சி நிற்கும் என்பதாகும்.

காளிதாசனின் ரகுவம்ஸ காவியத்திலும், சங்க இலக்கியப் புற நானூற்றிலும் தானத்தினால் ஒருவனுக்கு ஏற்பட்ட வறுமையை புலவர்கள் புகழ்கிறார்கள்.

அதே போல ஒரு வீரனுக்கு உடலில் ஏற்பட்ட காயங்கள் அழகு தருமேயன்றி அழகைக் குறைக்காது என்பதையும் தமிழ், ஸம்ஸ்க்ருத நூல்கள் பன்முறை பகர்கின்றன.

இதோ சில எடுத்து காட்டுகள்

மாரி, பாரி, வாரி: காளி.,கம்பன் கபிலன்!!!

Written by London Swaminathan

Post No.1125 ; Dated :– 23 June 2014.

மாரி என்றால் மழை;

பாரி என்பவன் கடை எழு வள்ளல்களில் ஒருவன்;

வாரி என்றால் கடல்.

காளிதாசன், கபிலன் என்பவர்கள் 2000 ஆண்டுகளு க்கு முன் வாழ்ந்த புகழ்பெற்ற கவிஞர்கள். அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் உதித்தவன் கம்பன் என்னும் கவிஞன். இம்மூன்று கவிஞர்களும் சொல்லேர் உழவர்கள்; ஒரே விஷயத்தை தமக்கே உரித்தான பாணியில் நயம்பட உரைப்பதைப் படித்து மகிழ்வோம்.

கி.மு முதல் நூற்றாண்டில் வாழ்ந்த உலக மஹா கவிஞன் காளிதாசன். அவனது ஆயிரத்துக்கும் மேலான உவமைகளில் 200—க்கும் மேலான உவமைகளை சங்கப் புலவர்கள் கையாண்டிருப்பதை ஏற்கனவே ஆறு, ஏழு கட்டுரைகளில் ஆதாரத்துடன் எழுதி இருக்கிறேன்.

ரகுவம்சம் (17—72) என்னும் காவியத்தில் வரும் ஸ்லோகம் இது:

வறுமையில் வாடிய புலவரும் ஏழைகளும் அதிதி என்ற அரசனை அடைந்தனர். அவன் அள்ளி அள்ளிக் கொடுத்தான். அந்தப் பொருளை வாங்கி ஊருக்குத் திரும்பி வந்தவுடன் அவர்களும் எல்லோருக்கும் வாரி வழங்கி வள்ளல் என்ற பெயர் எடுத்துவிட்டனர். இதன் உட் பொருள்:–அப்பொருளைப் பெற்றோர், அப்பொருளுக்கு மூல காரணமான அதிதி என்னும் மன்னனையே மறந்துவிட்டனர். மேகங்களும் இப்படித்தான் கடல் நீரை மொண்டு எல்லோருக்கும் மழையாகத் தருகிறது. இதன் உட்பொருள்:–எல்லா கவிஞர்களும் மேகங்களை வள்ளல் என்று புகழ்கின்றனர். ஆனால் அந்த மேகங்களுக்கும் நீர் கொடுத்தது கடல் என்பதை மறந்துவிட்டனரே!!

ரகுவம்சம் 1-18ல் திலீபன் என்னும் மன்னனின் கொடைத் தன்மையை வருணிக்கையில் ‘’சூரியன் கடல் நீரை உறிஞ்சுவது ஆயிரம் மடங்கு திருப்பித் தருவதற்கன்றோ! அதே போல திலீபன் வரி வாங்கியதும் ஆயிரம் மடங்கு மக்களுக்குத் திருப்பித் தருவதற்கன்றோ!!’’ – என்பான்.

ரகுவம்ச அரசர்கள் எப்படிக் கொடுத்துக் கொடுத்து வறியவர் ஆயினரோ அதே போல பாரியும் ஆய் என்ற வள்ளலும் வறியவர் ஆனதை முடமோசியாரும் கபிலரும் பாடுகின்றனர்.

புறம் 127 முடமோசியார் பாடிய பாடலில், ‘’ உன் மனைவி கழுத்தில் உள்ள தாலி ( ஈகை அரிய இழையணி மகளிரொடு ) மட்டுமே கொடுக்க இயலாது. மற்ற எல்லாவற்றையும் நீ பரிசிலர்க்கு வழங்கிவிட்டாய் என்பார்.

கபிலன் பாடல்

பாரியினுடைய 300 ஊர்களும் ஏற்கனவே இரவலர்க்கு வழங்கப்பட்டு விட்டது என்பதை முற்றுகையிட்ட மூவேந்தரிடம் கபிலர் கூறினார்.

புறம் 107 கபிலர் பாடிய பாடலில், மேகம் உவமை வருகிறது.:-

பாரி பாரி என்று பல ஏத்தி,

ஒருவர்ப் புகழ்வர் செந்நாப்புலவர்

பாரி ஒருவனும் அல்லன்;

மாரியும் உண்டு ஈங்கு உலகு புரப்பதுவே.

எல்லோரும் பாரியையே புகழ்கின்றனரே. உலகத்தைக் காப்பதற்கு  மாரி (மழை/மேகம்) யும் உள்ளனவே. இது பழிப்பது போல பாரியைப் புகழ்வதாகும்.

கம்பன் பாடல்

கம்பனும் ராமாயண பால காண்டத்தில் இதே உத்தியைக் கையாளுகிறான்:

புள்ளி மால் வரை பொம் எனல் நோக்கி, வான்

வெள்ளி வீழ் இடை வீழ்த்தெனத் தாரைகள்,

உள்ளி உள்ள எல்லாம் உவந்து ஈயும் அவ்

வள்ளியோரின் , வழங்கின் மேகமே (ஆற்றுப் படலம், பால காண்டம்)

மற்றவர்களுக்கு தானம் செய்யும்போது ஏற்படும் இன்பத்தைக் கருதி தம்மிடமுள்ள செல்வத்தை எல்லாம் வாரி வழங்கும் வள்ளல்களைப் போல மேகங்களும் கோசல நாட்டில் மழையைக் கொட்டித் தீர்த்தனவாம்! இது கடைசி இரண்டு வரிகளின் பொருள்.

முதல் இரண்டு வரிகளின் பொருள்:– பெருமையுடைய இமயமலை பொலிவுடையதாக இருக்க வேண்டும் என்று கருதி வெள்ளி நிறக்கம்பிகள் போல தாரை தாரையாக மழை இறங்கியது.

ஆக மேகத்தையும் கடலையும், மழையையும் கொண்டு  மன்னர்களின் வள்ளல் தன்மையை புலவர்கள் விளக்கும் நயம் மிகு பாடல்கள் படித்துச் சுவைப்பதற் குரியனவே!

உலகில் இப்படி வள்ளன்மைக்கு உவமையாக மழை, மேகம், கடல் ஆகியவற்றைப் பயன்படுத்துவதை பாரதம் முழுதும் வடமொழி, தென்மொழிப் பாடல்களில் மட்டுமே காணமுடியும். இது பாரதீயர்களின் ஒருமுகச் சிந்தனையைக் காட்டுகிறது, ஆரிய—திராவிட இனவெறிக் கொள்கையைப் பரப்புவோருக்கு இதுவும் ஒரு அடி கொடுக்கும்!

tags– நீதி சதகம் ஸ்லோகங்கள் 38, 39

–சுபம்–

அந்த நல்ல காரியம் நடக்காதா? (Post No.5755)

Written by S Nagarajan

Date: 9 DECEMBER 2018


GMT Time uploaded in London –7- 28 am


Post No. 5755

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

ஆங்கில இலக்கியம்

அந்த நல்ல காரியம் நடக்காதா? யார் சொன்னது? அது நடக்கும்; நடந்தே தீரும்!

ச.நாகராஜன்

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். ஒரு பிரச்சினை போல் இன்னொன்று இல்லை; ஒருவருக்கு உள்ளது போல இன்னொருவருக்கு  இல்லை.

மனம் கலங்கி நின்றால் நிற்க வேண்டியது தான். நகர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும் உலகம் முன்னேறிக் கொண்டே இருக்கும்.

நிதானமாகச் சிந்தனை செய்; வழி பிறக்கும் என்பது தான் அனுபவ மொழி.

“For every problem under the sun,
There is a remedy, or there is none.
If there is one, try to find it;
If there  is none, never mind it.”

என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் நம்மால் தீர்க்க முடியாத, பிறவியிலிருந்தே இருக்கும் அங்கக் குறைபாடுகள் போன்றவற்றை எண்ணி வருத்தப்படாமல் ஆக வேண்டியதைப் பார்க்கலாம்; கண் பார்வையற்ற ஹெலன் கெல்லர் போல வாழ்க்கையைச் சிறப்பாக்குவது எப்படி என்று யோசித்து வழி வகுத்துச் செல்லலாம்.

மார்க் ட்வெய்னின் கூற்று ஒன்று உண்டு:

Every complex problem has a solution which is simple, direct, plausible—and wrong.

எதுவும் முடியாது என்று சொல்லும் கோழைகளுக்கும், சோம்பேறிகளுக்கும் நடுவே இது முடியும் என்று சொல்பவனே ஹீரோ!

அமெரிக்காவின் பிரபல கவிஞரான எட்கர் ஏ கெஸ்ட் (Edgar Albert Guest பிறப்பு 20-8-1881 மறைவு 5-8-1959) உத்வேகம் மூட்டும் பாடல்களைப் பாடுவதில் வல்லவர். 11000 கவிதைகளை அவர் இயற்றியுள்ளார். டெட் ராய்ட் ஃப்ரீ ப்ரஸ் இதழில் அவரது கவிதைகள் வெளி வந்தன. மக்கள் கவிஞர் என்று அவர் அழைக்கப்பட்டார். ரேடியோவிலும் தொலைக்காட்சியிலும் அவரது பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

தனது கவிதைகள் உருவாகும் விதத்தைப் பற்றி அவர் கூறும் போது, “எனக்கு அன்றாடம் நேரும் சின்ன நிகழ்ச்சிகளை எடுத்துக் கொண்டு, அவை மற்றவர்களுக்கும் ஏற்படுகின்றன என்பதை உணர்ந்து எனது எளிய கவிதைகளைப் படைக்கிறேன்” என்றார்.

(“I take simple everyday things that happen to me and I figure it happens to a lot of other people and I make simple rhymes out of them.”)

அவரது கவிதைகளில் பிரபலமான கவிதை : It Couldn.t Be Done

It Couldn’t Be Done

by Edgar A. Guest
 
Somebody said that it couldn’t be done,
  But he, with a chuckle replied
That maybe it couldn’t, but he would be one
  Who wouldn’t say so till he’d tried.
 
So he buckled right in with the trace of a grin
  On his face.  If he worried he hid it.
He started to sing as he tackled the thing
  That couldn’t be done, and he did it.
 
There are thousands to tell you it cannot be done,
  There are thousands to prophesy failure;
There are thousands to point out to you, one by one,
  The dangers that wait to assail you.

But just buckle in with a bit of a grin,
  Just take off your coat and go to it;
Just start to sing as you tackle the thing
  That “cannot be done,” and you’ll do it.

என்ன அருமையான கவிதை! ஆயிரம் பேர் கூறுவார்கள் அது முடியாது  என்று. முயன்று தான் பாரேன். முடியும் என்பது தெரியும். அவர்கள் எதிர் வரும் அபாயங்களைக் கூறுவார்கள்; தோல்விக்கான ஆயிரக்கணக்கான காரணங்களைக் கூறுவார்கள்! சிரி; செயல்படு. அது முடிந்து விடும்!

Impossibe is a word to be found only in the dictionary of fools – என்று கூறிய நெப்போலியன் தான் குள்ளமாக இருந்த போதிலும் மனதால் உயர்ந்து வெற்றிகளை அள்ளிக் குவித்தான்.

Impossible என்று ஒரு கோழை கத்தும் போதே ஊக்கமுடைய ஒருவன் அந்த வார்த்தையிலேயே பார் – I ‘m possible  -என்று வருகிறது என்று கூறுகிறான்.

ஊக்கமுடையவர் இல்லையெனில் இந்த உலகம் இந்த அளவுக்கு வந்திருக்குமா; சந்திரனுக்குத் தான் மனிதன் போயிருப்பானா!

அந்த நல்ல காரியம் நடக்காதா? அப்படி யார் சொன்னது? அது நடக்கும்; நடந்தே தீரும்!

ஆம்; I ‘m possible : It could be done!

tags- நல்ல காரியம், எட்கர் ஏ கெஸ்ட்

***

31 பாரதியார் பொன் மொழிகள் (Post No.5714)

 

compiled by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 29 November 2018

GMT Time uploaded in London – 16-17

Post No. 5714
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

டிசம்பர் 2018 நற்சிந்தனை காலண்டர்

பண்டிகை நாட்கள் டிசம்பர் 11- பாரதியார் பிறந்த நாள்;16- மார்கழி மாதம் ஆரம்பம்;18- வைகுண்ட ஏகாதஸி, கீதா ஜயந்தி; 23-ஆருத்ரா தரிசனம்/திருவாதிரை; 25-கிறிஸ்துமஸ்

அமாவாஸை- 6, பௌர்ணமி- 22; ஏகாதஸி உபவாஸ நாட்கள்- 3, 18.

சுப முகூர்த்த நாட்கள்- 12, 13, 14

டிசம்பர் மாத (கார்த்திகை/மார்கழி) காலண்டரை பாரதியார் பொன்மொழிகள் அலங்கரிக்கின்றன.

டிசம்பர் 2018 காலண்டர்; விளம்பி கார்த்திகை-மார்கழி மாதம்

 

டிசம்பர் 1 சனிக்கிழமை

அருவி போலக் கவி பொழிய-எங்கள்

அன்னை பாதம் பணிவேனே

குருவிப்பாட்டை யான்பாடி- அந்தக்

கோதை பாதம் அணிவேனே

டிசம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை

மாணுயர் பாரத தேவியின் மந்திரம்

வந்தே மாதரமே

டிசம்பர் 3 திங்கட்கிழமை

அச்சப்பேயைக் கொல்லும் படையாம்

வித்தைத் தேனில் விளையும் கனியாய்

வாராய், நிலவே வா

டிசம்பர் 4 செவ்வாய்க்கிழமை

மந்திரம் கூறுவோம், உண்மையே தெய்வம்

கவலையற்றிருத்தலே வீடு, களியே அமிழ்தம்,

பயன்வரும் செய்கையே அறமாம்.

டிசம்பர் 5 புதன் கிழமை

ப்ராண வாயுவைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக

அபாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக

வ்யாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக

உதாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக

ஸமாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக

டிசம்பர் 6 வியாழக் கிழமை

கடல் நமது தலை மேலே கவிழவில்லை

ஊர்கள் கலைந்து போகவில்லை

உலகம் எல்லா வகையிலும் இயல்பெறுகின்றது

இஃதெல்லாம் அவளுடைய திருவருள்

டிசம்பர் 7 வெள்ளிக் கிழமை

சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஒரு குமிழியாம்

சக்திப் பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர்

சக்தி அநந்தம், எல்லையற்றது, முடிவற்றது

 

டிசம்பர் 8 சனிக்கிழமை

புகழே, புகழே, புகழே

புகழுக்கோர் புரையுண்டாயின்

இகழே, இகழே, இகழே

டிசம்பர் 9 ஞாயிற்றுக்கிழமை

இன்பம் இன்பம் இன்பம்

இன்பத்திற்கோர் எல்லை காணில்

துன்பம் துன்பம் துன்பம்

டிசம்பர் 10 திங்கட்கிழமை

நாதம், நாதம், நாதம்

நாதத்தேயோர் நலிவுண்டாயின்

சேதம், சேதம், சேதம்

டிசம்பர் 11 செவ்வாய்க்கிழமை

தாளம், தாளம், தாளம்

தாளத்திற்கோர் தடையுண்டாயின்

கூளம், கூளம், கூளம்

டிசம்பர் 12 புதன் கிழமை

பண்ணே, பண்ணே, பண்ணே,

பண்ணிற்கோர் பழுதுண்டாயின்

மண்ணே, மண்ணே, மண்ணே

டிசம்பர் 13 வியாழக் கிழமை

ஆதியாலாதியப்பா!- கண்ணா!

அறிவினைக் கடந்த விண்ண்கப் பொருளே

சோதிக்குச் சோதியப்பா!– என்றன்

சொல்லினைக் கேட்டருள் செய்திடுவாய்!

டிசம்பர் 14 வெள்ளிக் கிழமை

பெண்டீர் தமையுடையீர்!பெண்களுடன் பிறந்தீர்

பெண் பாவமன்றோ? பெரியவசை கொள்வீரோ?

கண்பார்க்க வேண்டும் என்று கையெடுத்து கும்பிட்டாள் (திரவுபதி)

 

டிசம்பர் 15 சனிக்கிழமை

பேயரசு செய்தால்பிணம் தின்னும் சாத்திரங்கள்

டிசம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை

‘தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும்

தருமம் மறுபடி வெல்லும்’ எனுமியற்கை

மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்

வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்

டிசம்பர் 17 திங்கட்கிழமை

கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும்

தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்

டிசம்பர் 18 செவ்வாய்க்கிழமை

கோயிற் பூசை செய்வோர் சிலையக் கொண்டுவிற்றல் போலும்

வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்திழத்தல் போலும்

ஆயிரங்களான நீதி யவை உண்ர்ந்த தரும

தேயம் வைத்திழந்தான், சீச்சீ சிறியர் செய்கை செய்தான்

டிசம்பர் 19 புதன் கிழமை

ஆங்கொரு கல்லை வாயிற்படி என்

றமைத்தனன் சிற்பி,மற்றொன்றை

ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்

றுயர்த்தினான், உலகினோர் தாய் நீ!

டிசம்பர் 20 வியாழக் கிழமை

யாங்கனே எவரை, எங்கனஞ்சமைத்தற்

கெண்ணமோ அங்கன்ம் சமைப்பாய்

ஈங்குனைச் சரணென்றெய்டினேன், என்னை

இருங்கலைப் புலவனாக்குதியே

டிசம்பர் 21 வெள்ளிக் கிழமை

இடையின்றி அணுக்களெல்லாம் சுழலுமென

இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்

இடையின்றி கதிர்களெலாஞ் சுழலுமென

வானூலார் இயம்புகின்றார்.

 

டிசம்பர் 22 சனிக்கிழமை

இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப்

பொருட்கெல்லாம் இயற்கையாயின்

இடையின்றிக் கலை மகளே! நினதருளில்

எனதுள்ளம் இயங்கொணாதோ?

டிசம்பர் 23 ஞாயிற்றுக்கிழமை

‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்- அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக’ என்பதோர் நல்ல மங்களம்  வாய்ந்த சுருதி மொழி கொண்டு வாழ்த்தியே

(காயத்ரி மந்திரத்தின் மொழி பெயர்ப்பு)

டிசம்பர் 24 திங்கட்கிழமை

‘கிழவியர் தபசியர் போல்- பழங்

கிளிக்கதை படிப்பவன், பொறுமையென்றும்

பழவினை முடிவென்றும்- சொலிப்

பதுங்கி நிற்போன், மறத் தனமையிலான்

வழ வழ தருமன்’

டிசம்பர் 25 செவ்வாய்க்கிழமை

நல்லது தீயது நாமறியோம் அன்னை

நல்லது நாட்டுக1 தீமையை ஓட்டுக!

டிசம்பர் 26 புதன் கிழமை

ஒன்பது வாயிற் குடிலினைச் சுற்றி

யொருசில பேய்கள் வந்தே

துன்பபடுத்துது, மந்திரஞ்செய்து

தொலைத்திட வேண்டுமையே!

டிசம்பர் 27 வியாழக் கிழமை

வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு

பூணும் வட நீ எனக்கு, புது வயிரம் நானுனக்கு

 

டிசம்பர் 28 வெள்ளிக் கிழமை

தில்லித் துருக்கர் செய்த வழ்க்கமடி! பெண்கள்

திரையிட்டு முகமலர் மரைத்து வைத்தல்

வல்லியிடையினையும் ஓங்கி முன்னிற்கும்- இந்த

மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்

டிசம்பர் 29 சனிக்கிழமை

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை- முகச்

சோதி மறைத்துமொரு காதலிங்குண்டோ

டிசம்பர் 30 ஞாயிற்றுக்கிழமை

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

அதை தொழுது படித்திடடி பாப்பா!

உயிர்களிடத்தில் அன்பு வேணும்- தெய்வம்

உண்மையென்று தானறிதல் வேணும்

டிசம்பர் 31 திங்கட்கிழமை

சாமி நீ! சாமி நீ! கடவுள் நீயே!

தத்வமஸி, தத்வமஸி, நீயே அஃதாம்

HAPPY NEW YEAR

TAGS- பாரதியார், பொன் மொழிகள், டிசம்பர் 2018, நற்சிந்தனை, காலண்டர்

 

–SUBHAM–

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு கேள்விகள்! – 3 (Post No.5709)

 

Written by S Nagarajan

Date: 28 November 2018

GMT Time uploaded in London –6- 49 am
Post No. 5709

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் இலக்கியம்; அறநூல்!

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 3

ச.நாகராஜன்

அவை கூடியது.

அனைவரும் திருவள்ளுவரைப் பார்க்க அவர் கையை அசைத்தார்- துவங்கலாம் என்று.

“ஐயனே! பெண் என்பவள் யார்? நாங்கள் எப்படி இருக்க வேண்டும் “ – இப்படி மகளிர் அமர்ந்திருந்த பக்கத்திலிருந்து ஒரு பேரிளம் பெண் கேட்டாள்.

அனைவருக்கும் ஒரு உற்சாகம் ஏற்பட, வள்ளுவரை நோக்கினர்.

வள்ளுவர் முழங்கினார் :

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண் (56)

அனைவரும் ‘ஆ’ என்று வியந்து பாராட்டினர் இந்த வரையறுப்பைக் கண்டு. கேள்வி கேட்ட அழகியை அனைவரும் பாராட்ட இன்னொரு பெண் எழுந்து கேட்டாள் :  ‘என்னையும் காத்துக் கொள்கிறேன். கணவன் உள்ளிட்ட என் குடும்பத்தினரையும் நான் பேணுகிறேன் புகழையும் என்னால் சேர்க்கிறேன். இப்படிப்பட்ட பெண்ணை எப்படி அறிஞர் பார்ப்பார்கள்?’

வள்ளுவர் மஹாராணியையும் அந்தப் பெண்ணையும் பார்த்தார்; பின்னர்

கூறினார் :

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மை உண்டாகப் பெறின் (54)

அனைவரும் மஹாராணியின் கற்பின் திண்மையை முதல் நாள் பார்த்தவர்கள் ஆதலால் மிகவும் மகிழ்ந்தனர்.

மகளிர் அனைவரும் மகிழ்ந்த போது ஆண்கள் பக்கத்திலிருந்து ஒருவர் எழுந்தார்:

“ஐயனே! பெண்களிடம் அப்படி என்ன தான் உள்ளது?”

வள்ளுவர் புன்முறுவல் பூத்தார்:

கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள (1101)

இதைக் கேட்டு ஆண்களும் பெண்களும் பரவசப்பட்டுக் கத்தினர்.

ஐம்புலன்களுக்கு இன்பம் தர வல்லவள் பெண்ணல்லவோ! அவள் இல்லாமல் உலகம் இயங்குமா? இருக்கத் தான் செய்யுமா?

மகளிர் சிலர் நாணத்துடன் தலை கவிழ பலரோ வள்ளுவரைப் பாராட்டிக் கூவினர்.

மகளிர் அணியிலிருந்து எழுந்த ஒரு அழகிய இளம் பெண் கண்ணீர் மல்கவே மஹாராணியாரும் ஏனையோரும் துணுக்குற்றனர்:

அவள் விசும்பியவாறே கூறினாள்: “ என்னைக் கைப்பிடித்தவர் இன்னொருத்தியின் வீட்டில் அல்லவா இருக்கிறார்; இது நியாயமா?” என்று கேட்டாள்.

வள்ளுவர் வருந்திய முகத்துடன் கூறினார்:

“பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்

ஏதில் பிணந்தழீஇ அற்று” (913)

கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவன் எழுந்து ஓடி வந்து அந்த அழகியை நோக்கிக் கூறினான்” என் தலைவியே! என்னை மன்னித்து விடு! இருட்டறையில் பிணத்தைத் தழுவி அல்லவா இது வரை வாழ்ந்தேன் என்று வள்ளுவப் பிரான் கூறுகிறார்; என் அறிவுக் கண்ணைத் திறந்து விட்டார்” என்று கூறி அழ, மன்னன் அவர்கள் இருவரையும் மேடைக்கு அழைத்தான்.

மஹாராணி தன் மார்பிலிருந்த  பாண்டி நாட்டு தங்கச் சங்கிலியில் கோர்த்த  முத்தாரத்தை எடுத்தாள்; மன்னரிடம் கொடுத்தாள்.

குறிப்பறிந்த மன்னன் அதை திருந்திய தனது குடிமக்களுள் ஒருவனான அவன் கையில் தந்து தன் தலையை அசைக்க அவன் உடனடியாக அந்த அழகியின் கழுத்தில் அணிவித்து தன்னை மன்னிக்குமாறு இறைஞ்சினான்.

கூட்டத்தினர் கை தட்டி, தங்கள் தோள்களில் இருந்த உத்தரீயங்களை மேலே எறிந்து பிடித்து ஆரவாரித்தனர்.

கண் கலங்கி, ஆனந்தக் கண்ணீர் விட்ட இளம் பெண் மஹாராணியின் காலில் விழ, அந்த இருவரையும் மஹாராணி வள்ளுவரை வணங்கி ஆசிப் பெறச் சொன்னாள்.

வள்ளுவர் கைகளை உயர்த்தி ஆசிகளைத் தர, கூட்டத்தினருக்கு ஒரு பெரிய நல் கூத்தைப் பார்த்த திருப்தி ஏற்பட்டது; இங்கு வந்தது நமது புண்ணியமே என்று எண்ணினர்.

இதே போல பரத்தையர் வீடு செல்பவர்கள் இனி திருந்துவர் என மகளிர் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

உடனடியாக புலவர் ஒருவர் எழுந்தார்:

“ஐயனே, அந்தணர் யார்?” என்று கேட்டார்

வள்ளுவர் பளீரென்று பகர்ந்தார்:

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுகலான்

அனைவரும் அந்தணர்களைப் பார்த்து வணங்கினர்.

இன்னொருவர் கேட்டார் : அவர்கள் அறத்தை வழுவில்லாமல் காப்பது எப்படி? அனைவருக்கும் இது பொருத்தமான கேள்வி தான் என்ற எண்ணம் எழ, இதன் இரகசியத்தை வள்ளுவர் எப்படி விளக்கப் போகிறாரோ என்று பார்த்தனர்:

வள்ளுவர் கூறினார்:

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்

பாண்டியன் பெரிதும் மகிழ்ந்தான். அனைவரும் ஆஹாகாரம் செய்தனர்.

வளையா செங்கோல் நிமிர்ந்து நிற்க அந்தணர் பிறர்க்குரியாளராக வாழ்வதை அனைவரும் போற்றினர். பாண்டியன் பெருமிதத்துடன் மக்களைப் பார்க்க மக்களும் பாண்டியனை வெற்றிப் புன்னகையுடன் பார்த்தனர்.

அந்தணர் ஒருவர் எழுந்தார்:

“ஐயனே! மற்று எவ்வுயிர்க்கும் இப்படி செந்தண்மை பூண்டு வாழ்தலால் என்ன பயன்?”

வள்ளுவர் பகர்ந்தார்:

“கொல்லான் புலானை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிருந் தொழும்”

அடடா! என்ன ஒரு  பதில்! புலாலை மறுத்தவர் அல்லவோ அந்தணர்! மன்னுயிர் எல்லாம் தொழும் என்பதில் என்ன ஒரு அர்த்தம் பொதிந்திருக்கிறது!

புலவர்கள் பேச எழுந்தனர். வள்ளுவர் கூறிய பெண்மையைப் போற்றும் கூற்றுகளையும், அந்தணர் சிறப்பையும், கொல்லாமையையும் பற்றி அவர்கள் பெரிதும் பேச கூட்டத்தினர் உன்னிப்பாகக் கேட்டனர்.

மாலை சூரிய அஸ்தமனம் ஆகவே கூட்டம் கலைய மக்கள் உற்சாகத்துடன் தமக்குள் பேசியவாறே வீடு திரும்பினர்

தொடரும்

***

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள குறட்பாக்களின் எண்கள் : 56,54,1101,913,30,543,260

Tags–பாண்டியன் வள்ளுவர,  நூறு கேள்விகள்! – 3

 

நாய் பற்றிய பத்து தமிழ்ப் பழமொழிகள் (Post No.5708)

 

WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 27 November 2018


GMT Time uploaded in London –17-55

Post No. 5708


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

இந்தக் கட்டத்தில் நாய் பற்றிய பத்து தமிழ்ப் பழ மொழிகள்  கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் தமிழ் அறிவைச் சோதித்துப் பாருங்களேன். ஒரு மணி நேரத்துக்குள் செய்ய முடியவில்லையானால் விடையைப் பார்த்து விடுங்கள்

answers

நாய்த் தோல் செருப்பு ஆகுமா?

நாய் நன்றியுள்ள பிராணி

நாயை அடிப்பானேன் ஃஃஃஃ சுமப்பானேன்

நாய் குரைத்து விடியுமா? கோழி கூவி விடியுமா?

நாய்க்குத் தெரியுமா தேங்காய் ருசி?

நாய் அடிக்க குறுந்தடியா?

நாய் விற்ற காசு குலைக்குமா?

நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

நாயைக் கண்டால் கல்லைக் காணும், கல்லைக் கண்டால் நாயைக் காணும்

நாய் நாலு காதம் ஓடினாலும் குதிரை வேகம் ஆகுமா?

நாய் பட்ட பாடு

Tags–நாய், பழமொழிகள்

—subham–

MORE TAMIL WISDOM- NAL VAZI BY AVVAIYAR-1 (Post No.5707)

WRITTEN by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 27 November 2018

GMT Time uploaded in London –14-55

Post No. 5707

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

I have already posted three books of  Tamil poetess Avvaiyar with Englsih translation.This is Nal Vazi- ‘Good Path’ composed by Avvaiyar in 40 verses. Part 1 contains 20 verses.

Nalvazi ( The Good Path)

Prayer to Lord Ganesh

Milk, pure honey, molasses, pulses— these four blended, I will offer you, O Pure Gem, beautifying the exalted elephant faced, give me the Triple Tamil of the ancient Academy or Tamil Sanga.

  1. நல்வழி

Tamil verses taken from Project Madurai website; thanks. English matter IS taken from two authors and edited by me.
கடவுள் வாழ்த்து

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா

XXX

SHUN EVIL,DO GOOD

1.Virtue will accrue,sin will disappear, the past deeds are hoards to the earth born. On reflection naught; but this do men of all religions preach- Shun evil, Do good.

புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.
1

XXX

 

GIVERS AND NON GIVERS

2.No castes exist but two, if we are to speak of it. According to the unfailing moral system, the givers are the great in the world and the non givers are base born, the bare truth as set forth in the codes.

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி.

XXX

DO CHARITY, LIBERATION IS ASSURED

3.This natural body is a bag of miseries. Don’t take this false body as true. Quickly do charity. If you do charity you, you will have moksha or liberation as those freed from mortal ills ordained by fate.
இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே
இடும்பொய்யை மெய்யென்(று) இராதே – இடுங்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.

 

XXX

GOOD KARMA

4.It is hard for anyone to do good action as conceived by him unless his past merits favour it. It will be futile like the blind man throwing his walking stick, at the mango down unless the favourable time arrives for it.

எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் – கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு.

XXX

WHAT IS YOURS WILL COME TO YOU

5 . The unattainable can never be attained, however hard we strive for the same. The attainable will never miss us, however kicked out they be. To sit in sorrow, ponder long by themselves, make the mind sore and die at best- is human lot.

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா – இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.

XXX

6.In this world it is hard to get one another’s felicity except what has been allotted. To the life spirit inhabiting this body, of what avail is crossing the billowy ocean and coming back ashore.
உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்
கடலோடி மீண்டும் கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு.

XXX

BE LIKE WATER ON LOTUS LEAF

7.Viewed in all possible ways, this body is a vile hut, replete with vile worms and foul diseases, and the sages who know it, don’t speak about it to others, but keep themselves in the world together and apart like the beautiful lotus leaf and the water about it: they live in the world and out of it at once.

எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு.

XXX

WEALTH FLIES AWAY

8.Though countless are ways in which efforts are made to gather riches, they will not succeed unless ordained by fate. O men of great world, hearken, what is fit to acquire is honour. Wealth is unstable (takes to itself and flies away).
ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் – தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம்.

XXX

GREAT PEOPLE ARE LIKE WATER SPRINGS

9.Even when the flood in the river has dried away and when the solar heat scorches the feet, the world is fed with spring water. To the mendicant poor, men of good birth will not withhold their gifts nor will they willingly say no despite their own vicissitudes.

ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து .

XXXX

 

GIVE  AND EAT

10.However we weep and wail year after year and roll on the earth, will the dead come back, O men of the great world? Let us not do so. That is our WAY too. Till we depart ask what have we here? So give, eat and rest in peace.

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் – வேண்டா!
நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும்
எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும்

XXX

APPETITE IS DIFFICULT TO CONTROL

11.O my body! Oppressed with appetites! If I say omit one day’s eating you will not. If I say take food for two days, you will not. You know not my trouble even for one day. To live with you is difficult indeed.

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் – ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது.

XXXX

AGRICULTURE IS THE BEST WORK

12.The tree standing on the river bank and the wealth acquired through intimacy with the king equally liable to fall. Is it not so? To plough and eat is the most excellent way of living. There is no work so noble as this. All other occupations are considered mean.

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே – ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு,

 

XXX

FATE DECIDES EVERYTHING

13.Indeed in this world, those that are destined to live long, who can destroy? Or those that are destined to be destroyed, who can enable to escape? Or those that are destined to always live by begging who can divert from that course?
ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம் புவியதன் மேல்.

XXX

HONOUR IS MORE IMPORTANT

14.Living frugally is better than begging. If the matter be well considered, it is disgraceful to procure one meal by flattery. To lose one’s life is far better than to lose his honour for the sake of a livelihood.
பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை – சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்.

XXXX

LORD SIVA IS SUPREME

15.Those who meditate on Siva will have no suffering of any kind at any time. This is the way of over coming the decree of destiny. This is the true wisdom. None but these will ever subdue fate.

சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.

 

XXX

WOMEN AND CHASTITY

16.Know you that in the sea girt earth the quality of water is distinguished by the goodness of the soil. The quality of the good by liberality, quality of the eye by unvarying favour and the disposition of women, by a man not repugnant to chastity.



தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் – பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி.

XXXX

DON’T BLAME GOD

17.Those who are instructed by the wise not to do evil in this world, do not behave accordingngly or give alms. Hence they suffer want ; Why should they then attribute it to god, and not to their vicious actions? Will they obtain great wealth? Will an empty pot boil over?

செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்?- வையத்து
“அறும்-பாவம்!” என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்?

XXXX

MISERS CAUSE VIOLENCE

18.In this vast earth a niggard will not give anything to his parents, children, country men, relatives and friends, even though they prostrate themselves at his feet. But he will give to strangers who inflict pain on him.

பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் – மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்.

XXX

19.For procuring a measure of rice in order to appease our hunger, we take uncommon pains to offer our services, or to beg from door to order, or to take long voyage s on the ocean of clear water, or to pay homage or to rule over kingdoms, or to make verses in honour of noble people.
சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் – போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்.

XXX

PROSTITUTION

20.To satisfy pleasure ( not by means of a lawful wife) but by a prostitute, is like attempting to cross a river ( not by means of a boat) but by a grind stone: this way of living will destroy wealth and become the seed of poverty. It is not good for either this life or for the life to come.

அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்.
20
—TO BE CONTINUED

Tags, Nal vazi-1, Good path,Avvai

–subham–

Tamil Cross word புயல் 40 Words (Post No.5703)

 

WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 26 November 2018


GMT Time uploaded in London –12-07

Post No. 5703


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

இந்தக் கட்டத்தில் சுமார் 40 சொற்கள் உள்ளன. அவற்றைக் கண்டுபிடிக்கச் சில குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. முயன்று பாருங்கள்; தெரியாவிட்டால் விடைகளைக் காண்க.

1 2
3 4   5
6 7
8 9
10  11 12
13 14
15 16 17
25
18 19 20 21
22 23 24

குறுக்கே

2.சாம்பார் செய்ய எது தேவை

2.திருமணப் பெண்

2.இது இல்லாவிடில் எதையும் வாங்க முடியாது

4.கைகேயிக்கு இதைக் கொடுத்தத்தால் தசரதன் கஷ்டப்பட்டார்,

6.வெற்றி

7.பிரமுகர் வருகை

8.வலிமை

9.பறவைகள் செய்வது

11.பனை மரத்தில் கிடைக்கும் பானம்

12.சப்தஸ்வரம்,

12.மக்கள்

14.கல்யாணம், வாசனை

16.பானை

15.செவ்வகத்தின் ஒரு பகுதி

17.எரிக்கும் கிரியை

18.ஒரு கேந்திரம்

19.இல்லம்

19.இல்லறத் தலைவி

21.எலியின் எதிரி

22.ஐந்து உணர்ச்சிகளிலொன்று,

23.படுக்கையில் விழு

கீழே

  1. எது வீசினால் மரங்கள் சாயும்

3.பானை, இசைக்கருவி

4.இடதின் எதிரப்புறம்

5.மரத்தை அறுக்க உதவும் கருவி

7.நகைச் சுவை காட்சி

8.குதிரை

  1. முனிவர்கள் செய்வது
  2. சூரியன்

12.அசைவு, முள்ளம்பன்றி, நீர், பொய்

13.வியாபாரம்

14.உள்ளம்

12.மக்கள்

15.பூமியின் பெயர்

16.ஆண் குரங்கு

17.அடக்கம்

19.குளம், ஏரியின் வாயில்

20 போய்…………, விட்டு………………..

21.சிவபெருமான் பட்டாளம்

24.செயல்

25.தாக்குதல்

25.கர்நாடக, தெலுங்கு ஆள், பிரம்மச்சாரி,

25.சிறுவன், பிரம்மச்சாரி, குற்றம், இளங்காய்

 

 

 

ANSWERS–

புயல், துவரம் பருப்பு, துட்டு, விகடம், கடம், வது, வரம், ஜயம், விஜயம், தவம், வலது, சரிகமபதநி, சலம், மனம், சனம், மணம், பூதகணம், ரம்பம், பலம்,பற, பகலவன், கலம், கடுவன், வடு, வன்,

தொடு, மடு, மனை, மனைவி, விடி படு, வினை, பரி, விற்பனை, பூனை, வடுக,  பவன், அகலம், தமனம், தகன, அவநி

 

பு ப் ரு ம் து ட் டு
ல்   ர ம்
ம் வி ம் ம்
ம்
நி ரி ம்
 வ வி ம்
ம் ற்
டு
ன் னை வி பூ னை
ன் தொ டு டு வி

1.புயல்- எது வீசினால் மரங்கள் சாயும்

2.துவரம் பருப்பு- சாம்பார் செய்ய எது தேவை

  1. வது- திருமணப் பெண்

3.துட்டு- இது இல்லாவிடில் எதியும் வாங்க முடியாது

3.கடம்- பானை, இசைக்கருவி

4.வலது- இடதின் எதிரப்புறம்

4.வரம்- கைகேயிக்கு இதைக் கொடுத்தத்தால் தசரதன் கஷ்டப்பட்டார்,

5.ரம்பம்- மரத்தை அறுக்க உதவும் கருவி

6.ஜயம்- வெற்றி

7.விஜயம்- பிரமுகர் வருகை

7.விகடம்- நகைச் சுவை காட்சி

8.பரி- குதிரை

9.பலம்- வலிமை

9.பற- பறவைகள் செய்வது

10.தவம்- முனிவர்கள் செய்வது

11.பகலவன்  — சூரியன்

11.பதநி- பனை மரத்தில் கிடைக்கும் பானம்

12.சரிகமபதநி- சப்தஸ்வரம்,

12.சனம்- மக்கள்

12.சலம்- அசைவு, முள்ளம்பன்றி, நீர், பொய்

13.விற்பனை- வியாபாரம்

14.மனம்- உள்ளம்

14.மணம்- கல்யாணம், வாசனை

15.அகலம்- செவ்வகத்தின் ஒரு பகுதி

15.அவநி  – பூமியின் பெயர்

16.கலம்- பானை

16.கடுவன் — ஆண் குரங்கு

17.தமனம்- அடக்கம்

17.தகன-எரிக்கும் கிரியை

18.பவன்  — ஒரு கேந்திரம்

18.வன்  —  தாக்குதல்

19.மடு- குளம்,ஏரியின் வாயில்

19.மனை– இல்லம்

19.மனைவி- இல்லறத் தலைவி

20.விடு

20.விடு

21.பூனை- எலியின் எதிரி

21.பூதகணம்- சிவபெருமான் பட்டாளம்

22.தொடு- ஐந்து உணர்ச்சிகளிலொன்று,

23.படு- படுக்கையில் விழு

24.வினை- செயல்

25.வடு- சிறுவன், பிரம்மச்சாரி, குற்றம், இளங்காய்

25.வடுக- கர்நாடக,தெலுங்கு ஆள் ,பிரம்மச்சாரி, கடி- பல்லால் செய்யும் செயல்

TAGS–புயல் 40 Words , Tamil Cross word

–subham–

யாரடாவன் கூட்டத்துல பாம்பு விடறது? (Post No.5699)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 25 November 2018

GMT Time uploaded in London –7-39 am

Post No. 5699

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

சார்ல்ஸ் லாம்ப் (CHARLES LAMB) என்பவர் பிரபல ஆங்கில எழுத்தாளர், கவிஞர். அவர் ஒரு முறை சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். திடீரென்று கூட்டத்தில் ‘உஸ்’ என்ற சப்தம்.  பலமாகக் கேட்டது. திடீரென்று ஒரே நிசப்தம். எல்லோருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.

லாம்ப் கொஞ்சமும் அசரவில்லை. உலகத்தில் மூன்று ஜந்துக்கள்தான் உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஒலி உண்டாக்கும்

1.குள்ள வாத்து

2.பாம்பு

3.முட்டாள் பயல்

யாரடாவன்? இந்த மூன்றில் இங்கே எது இருக்கிறது? துணிச்சல் இருந்தால் உன் மூஞ்சியைக் காட்டு.

(அவர் இப்படிச் சொன்னபின் பேரமைதி; கூட்டம் இனிதே நடந்தது.)

xxxxx

scientist Scheele

தவறான ஆளுக்கு விருது! அடித்தது குருட்டு யோகம்!

மூலகங்கள் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கிய அஸ்திவாரக் கற்கள். 118 மூலகங்கள் திட, திரவ, வாயு ரூபங்களில் இருக்கும். அவற்றில் ஒன்று மக்னீஷியம் (MAGNESIUM). அதைக் கண்டு பிடித்தவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஷீல் (SCHEELE) என்பவர் ஆவார்.

ஒருமுறை, பிரெஞ்சு விஞ்ஞானிகள் பாரீஸ் நகருக்கு வந்த சுவீடன் மன்னர் மூன்றாவது குஸ்டாவைச் (GUSTAV III) சந்தித்தனர்.

மன்னரே! நீவீர் எவ்வளவு அதிர்ஷ்ட சாலி; உமது நாடு மக்னீஷியத்தைக் கண்டுபிடித்த ஷீல் என்பவரை உடைத்தாய் இருக்கிறதே! அஹோ, பாக்யவான்! என்று சிலாகித்துப் பேசினர்.

மன்னருக்கு ஒரே வெட்கம்: ஏனெனில் அவர் விஞ்ஞான முன்னேற்றம் பற்றி அறியாத ஞான சூன்யம்! இருந்தபோதிலும் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு ‘நன்றி நன்றி’ என்று புகன்றார்.

அவர்கள் அந்தப் பக்கம் போனவுடன், சுவீடனுக்கு செய்தி பறந்தது.

“ஷீல் அவர்களுக்கு பிரபு (COUNT) என்ற பட்டம் கொடுத்து கௌரவியுங்கள்”.

சுவீடன் பிரதமர் அந்தச் செய்தியைப் பார்த்து,

அட ராஜாவின் கட்டளை; உடனே நிறை வேற்ற வேண்டும்.உடனே ஷீல்  என்பவரின் விலாசத்தைக் கண்டுபிடித்து முழு விவரமும் அறிக; இங்கே கொணர்க– என்று காரியதரிசிக்குக் கட்டளையிட்டார்.

அவர் உடனே அட்ரஸ் புஸ்தகத்தைப் பார்த்து ஒரு ஷீல் என்பவரைக் கண்டு பிடித்தார்.

மண்டு, மக்கு, முட்டாள் காரியதரிசி கண்டுபிடித்தது இதுதான்ந்— ஷீல் என்பவர் நமது பீரங்கிப் படையில் லெப்டினன்ட் அந்தஸ்தில் இருக்கிறார். நல்ல திறமையான படைவீரன். அது மட்டுமா பில்லியர்ட்ஸ் விளையாட்டில் கில்லாடி என்று.

உடனே அந்த ஊர் பேர் தெரியாத ஆசாமிக்கு பிரபு பட்டம் கொடுத்து ஆசனத்தில் அமர்த்தினர்.

மக்னீஷியத்தைக் கண்டுபிடித்த ஷீல் அவர்களோ, முன்னைப் போலவே சோதனைச் சாலையில் ரசாயனக் குடுவைகளுடனும் சோதனைக் குழாய்களுடனும் மன்றாடிக் கொண்டிருந்தார்.

XXX

டேய் குரங்கு! என்ன முழிக்கிறாய்?

ஒரு பிரபல விலங்கியல் நிபுணர், ஒரு குரங்கைப் பிடித்து அதற்கு பந்து விளையாடக் கற்றுக் கொடுத்தார். ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை; குரங்கு, குரங்காகவே இருந்தது. அவருக்கு ஒரு ‘ஐடியா ‘ (IDEA) தோன்றியது. ஒரு பந்தையும்  மட்டையையும் குரங்கின் கையில் கொடுத்து ஒரு அறைக்குள் பூட்டி வைத்தார். சில மணி நேரங்களுக்குப் பின்னர் பேரார்வத்துடன் குரங்கு என்ன செய்கிறது என்று பார்ப்போம் என்று கிளம்பினார். சத்தம் இல்லாமல் சாவித் துவாரத்தின் வழியே எட்டிப் பார்த்தார். துவாரத்தின் மறு புறத்திலிருந்து ‘இரண்டு விழிகள்’ அதே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன!

(மனிதனுக்குக் குரங்கு புத்தி; குரங்குக்கு மனித புத்தி என்று சொல்லலாமே)

Tags-   கூட்டத்துல பாம்பு,ஷீல்,  மக்னீஷியம், குரங்கு பந்து

–சுபம்–

கடவுள் நம்பிக்கை பற்றிக் கூறி வருத்தம் அடைந்த கார்ல் ஜங்! (Post No.5698)

John Freeman, right, interviewing Carl Gustav

Written by S Nagarajan

Date: 25 November 2018

GMT Time uploaded in London –6- 30 am
Post No. 5698

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

கடவுள் நம்பிக்கை பற்றிக் கூறி வருத்தம் அடைந்த கார்ல் ஜங்!

ச.நாகராஜன்

Jung’s regret over “I don’t need to believe, I know.”

வருடம் 1959. பி.பி.சி.யில் உள்ளோருக்கு ஒரே மகிழ்ச்சி. வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபல உளவியலாளர் கார்ல் குஸ்டாவ் ஜங் ஒரு பேட்டி தர ஒத்துக் கொண்டார். ஸ்விட்ஸர்லாந்தில் ஜூரிச் நகரில் ஒரு ஏரிக்கரையின் அருகில் அமைந்திருந்த தனது வீட்டில் அமைதியாக அவர் அமர்ந்திருந்தார். பேட்டி எடுக்க வந்தவர் பிரபல பேட்டியாளர் ஜான் ஃப்ரீமேன்.

ஜான் ஃப்ரீமேன் (John Freeman) (பிறப்பு 19-2-1915; மறைவு 20-12-2014),

சாதாரண பேர்வழி இல்லை. அவர் ஒரு அரசியல்வாதி. ராஜதந்திரி. போர்வீரர். பேட்டி எடுப்பதில் நிபுணர். அவர் சர்ச்சிலை பேட்டி எடுத்த போது அவரைப் பாராட்டியவுடன் சர்ச்சில் கண்ணீர் விட்டுக் கலங்கினார். இந்தியாவின் ஹைகமிஷனராக ஜான் ஃப்ரீமேன் நியமிக்கப்பட்ட போது இந்தியா காமன்வெல்த்திலிருந்து விலகி விட வேண்டும் என்ற ஒரு எண்ணம் வந்த போது அதை தனது சாதுரியத்தால் தவிர்க்க வைத்தவர். இங்கிலாந்தின் தூதுவராக அவர் வாஷிங்டனுக்கும் அனுப்பப்பட்டார்.

‘Face to Face’ என்ற அவரது நிகழ்ச்சி தனிச் சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாகக் கருதப்பட்டது. இன்றும் கூட அந்த நிகழ்ச்சிகளை இணையதளத்தில் பார்க்கலாம். பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், எடித் சிட்வெல், சிசில் பீடன், ஈவிலின் வா, ஹென்றி மூர், மார்டின் லூதர் கிங் என ஏராளமான பிரபலங்களை அவர் நேருக்கு நேர் பேட்டி எடுத்துப் புகழ் பெற்றார்.

99 வயது வரை வாழ்ந்து அவர் 20-12-2014இல் மறைந்தார்.

ஆனால் ஜங்குடன் அவர் எடுத்த பேட்டி மட்டும் தனித் தன்மை வாய்ந்த ஒன்றாக இருந்தது. அருமையான அந்தப் பேட்டியில் காமராவிற்கு முதுகைக் காட்டிக் கொண்டு அமர்ந்த ஃப்ரீமேன், ஜங்கிடமிருந்து உண்மைகளைப் பெற, உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத முகத்தை வைத்துக் கொண்டு என்னென்ன கேள்விகளைக் கேட்கலாம் என்பதிலேயே குறியாக இருந்தார்.

1959இல் ஜங் இந்தப் பேட்டியைத் தந்த போது அவருக்கு வயது 84. இதற்குப் பின்னர் 18 மாதங்களில் அவர் மறைந்தார். (ஜங் பிறப்பு 26-7-1875 மறைவு 6-6-1961).

பேட்டியின் போது நான்கு முறை ஜங், “that  is difficult to say” என்று கூறினார். அப்படி கேள்விகள் கூர்மையாக  இருந்தன. ஆனால் அந்த வயதிலும் அவரது புத்தி கூர்மை வியக்கத் தக்கதாக இருந்தது.

பேட்டி மிக விரிவாகப் போய்க் கொண்டிருந்த போது திடீரென்று ஃப்ரீமேன், “கடவுளை நீங்கள் நம்புகிறீர்களா?” என்று கேட்டார்.பேட்டி இப்படி அமைந்தது:

Freeman : And did you believe in God?

Jung: Oh! Yes.

Freeman : Do you now believe in God?

Jung : Now? (pause) Difficult to answer. I know. I don’t need to believe. I know.

பின்னர் பேட்டி தொடர்ந்தது.

நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட பின்னர் ஜங் பற்றி கடுமையான விமரிசனம் எழுந்தது. அவர் கிறிஸ்தவ இறையியல் கொள்கை பற்றிச் சற்று விமரிசித்தே வந்தவர். ஆகவே அவர் கடவுள் இல்லை என்று சொல்லி விட்டார் என்று அனைவருக்கும் கோபம்!

ஜங்கிற்கு ஒரே வருத்தம். தான் சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டார்களே என்று!

ஒரே வரியில் சொன்னதால் அது புதிர் போன்ற ஒரு விடையாக ஆகி விட்டது!

பின்னால் அவர் எழுதினார் இப்படி: “நான் கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்ததை நான் நம்புகிறேன். ஆகவே தெரிந்த ஒன்றைப் பற்றிய நம்பிக்கை என்பது தேவையில்லாத ஒன்று. ஆகவே கடவுள் இருக்கிறார் என்பது நிச்சயமான போது அவர் இருக்கிறாரா என்பது பற்றிய நம்பிக்கை தேவை இல்லையே!”

இதைத் தான் அவர் சொல்லி இருந்தார்!

தனது பதிலை இப்படி விளக்கமாகக் கூறி இருந்தால் இப்படி ஒரு தவறான புரிதல் எழுந்திருக்காதே, விளக்கமாகப் பதிலைச் சொல்லாமல் ஒரே வரியில் சொன்னதால் அது புதிர் போல ஆகி விட்டதே என்று அவர் மிகவும் வருத்தப்பட்டார்.

கடவுள் பற்றிய உண்மை சிக்கலான ஒன்று.கடவுள் ஒரு மர்மம். கடவுளின் தன்மை மனித அறிவுக்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்ட ஒன்று என்று அவர் நம்பினார்.

ஜங் ஸ்விட்சர்லாந்தில் உள்ள குஸ்நாஸ்ட்டில் இருந்த (Kusnacht, Switzerland)  தனது வீட்டின் வாசல் கதவில் இப்படி லத்தீன் வாசகங்களைப் பொறித்திருந்தார் : “VOCATUS ATQUE NON VOCATUS DEUS ADERIT.” இதன்பொருள், அழைத்தாலும் சரி, அழைக்கா விட்டாலும் சரி, கடவுள் இருக்கிறார்!  (“Called or not called, the god will be there.)

கார்ல் ஜங் இந்தியாவிற்கு வந்ததைப் பற்றியெல்லாம் அறிவியல் துளிகள் தொடரில் விரிவாக எழுதி இருப்பதால் அதை இங்கு மீண்டும் தரவில்லை.

உலகம் கண்ட உன்னத உளவியலாளர்களில் ஒருவர் ஜங்!

TAGS–கடவுள் நம்பிக்கை,  கார்ல் ஜங்

***