பத்து கெட்ட குணங்கள் எவை? (Post No.5697)

 

COMPILED by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 24 November 2018

GMT Time uploaded in London –15-21
Post No. 5697

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

மநு, தனது மானவ தர்ம சாஸ்திரம் என்னும் மநு ஸ்ம்ருதியில், பத்து கெட்ட குணங்களைப் பட்டியலிட்டு விட்டு மற்ற அனைத்தும் நல்ல காரியங்களே என்று சொல்லுகிறார். மனம், மொழி,மெய் (மனோ, வாக், காயம்) ஆகிய மூன்றும் செய்யக்கூடிய அசுபசெயல்கள் இவை. இதோ பட்டியல்

பர த்ரவ்யேச்வபித்யானம்மனஸா நிஷ்ட சிந்தனம்

விததாபிநிவேசஸ்ச த்ரிவிதம் கர்ம மானஸம் -12-5

ஒருவன் பொருளை எப்படி அபகரிக்கலாம் என்று திட்டம் போடுதல்,

மிகவும் கெட்டசெயல்களை நினைத்தல்

இந்த உடலே ஆத்மா என்று தவறாக நினைத்தல்

–இவை மூன்றும் மனதில் அசுப கர்மங்கள்; அதாவது தவறான சிந்தனை.

xxx

பாருஷ்யமன்ருதம்சைவ பைசுன்யஞ்சாபி ஸர்வசஹ

அஸம்பத்தப்ரலாபஸ்ச வாங்மயம் ஸ்யாச் சதுர்விதம் 12-6

கொடும் சொல், பொய் பேசுதல், கோள் சொல்லுதல், வீண் பேச்சு ஆகிய நான்கும் வாய் மூலம் செய்யும் அசுபகர்மங்கள்

xxxx

அதத்தானாமுபாதானம் ஹிம்ஸாசைவாவிதானதஹ

பரதாரோபஸேவா ச சரீரம் த்ரிவித ஸ்ம்ருதம்

12-7

கொடுக்கத் தகாதவர்களுக்குக் கொடுத்தல்

யாகமின்றி ஹிம்ஸை செய்தல்,

பிறன் மனைவியை விரும்பல்,

ஆகிய மூன்றும் உடலால் செய்யும் தீய செயல்கள்.

இவை பத்தும் இல்லதவர்கள் வாய்மை, மெய்மை, உண்மை என்னும் மூன்று த்ரி கரண சுத்திஉடையவர்கள் ஆவர்.

परद्रव्येष्वभिध्यानं मनसाऽनिष्टचिन्तनम् ।

वितथाभिनिवेशश्च त्रिविधं कर्म मानसम् ॥ Bछ्.Sछ्॥

पारुष्यमनृतं चैव पैशुन्यं चापि सर्वशः ।

असंबद्धप्रलापश्च वाङ्मयं स्याच्चतुर्विधम् ॥ Bछ्.Sछ्॥

अदत्तानामुपादानं हिंसा चैवाविधानतः ।

परदारोपसेवा च शारीरं त्रिविधं स्मृतम् ॥ Bछ्.Sछ्॥

मानसं मनसेवायमुपभुङ्क्ते शुभाशुभम् ।

वाचा वाचा कृतं कर्म कायेनेव च कायिकम् ॥ Bछ्.S

tags–பத்து கெட்ட குணங்கள்

–சுபம்–

சிரிப்பு யோகாவும்! – உண்மை யோகாவும்! ! (Post No.5694)

Written by S Nagarajan

Date: 24 November 2018

GMT Time uploaded in London –6-52 am
Post No. 5694

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

நாட்டு நடப்பு

சிரிப்பு (தரும்) யோகாவும்! – உடல் மன நலத்திற்கான உண்மை யோகாவும்!

ச.நாகராஜன்

ஹிந்து மதத்திற்கும் பாரதத்திற்கும் சிறப்பு தரும் ஒரு பெரிய பயிற்சி யோகா!

இந்த வார்த்தையை எவ்வளவு தூரம் கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்துகிறார்கள் நமது நாட்டில் சிலரும், மேலை நாட்டில் பலரும்!

சிரித்துக் கொண்டே இருந்தால் சிரிப்பு யோகாவாம். பின்னால் நடந்து கொண்டே சென்றால் அது ஒரு யோகாவாம்! சாப்பிடுவதும் யோகா, செக்ஸும் யோகா.. இப்படி யோகாவை எல்லா வார்த்தைகளிலும் சேர்த்து கமர்ஷியல் செய்வதை தின வார இதழ்களில் அன்றாடம் பார்க்கலாம்.

இதே போல தவறாகப் பயன்படுத்தும் இன்னொரு வார்த்தை கோஷண்ட்! இண்டெலிஜென்ட் கோஷண்ட் என்று நுண்ணறிவை அளக்க ஒரு மதிப்பீட்டு எண்ணைச் சொன்னார் ஒரு விஞ்ஞானி. இந்த கோஷண்ட் என்ற வார்த்தையைப் பிடித்துக் கொண்டு, எமோஷனல் கோஷண்ட், லவ் கோஷண்ட், செக்ஸ் கோஷண்ட்  … இப்படி எதற்கு வேண்டுமானாலும் கோஷண்டைச் சேர்த்துக் கொள்கிறார்கள்.

யோகா என்பது மனிதனின் ஆன்மா பரமாத்மாவுடன் சங்கமம் ஆகும் ஒரு இணைப்பு- ஒரு சேர்க்கை – ஒரு கூடுதல்!

இது புனிதமானது. இந்தப் புனிதத்திற்கு உடல் ஒரு இன்றியமையாத பாலம். ஆகவே உடலைப் பேணுவது தேவையாகிறது.

உடம்பினுக்குள் உறு பொருள் கண்டேன்; உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே!

பதஞ்சலி முனிவர் யோக சூத்ரத்தை வகுத்தார். படிப்படியாக யோகம் பற்றி விளக்கியுள்ளார். யோகா சித்தவிருத்தி நிரோத:  – யோகம் என்பது அலைபாயும் மனதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது தான்!

இதற்கு ஒருமுனைப்படுத்தப்பட்ட ஒரு  தெய்வீகப் பொருளின் மீதான குவிப்பு தேவை என்றார் அவர்.

இதயத்தின் மீது இந்தக் குவிப்புடன் இறைவனை தியானித்தால் நலம் பயக்கும் என்பது அவர் உபதேசம். யோகம் இறை சக்தியுடன் இணைய வழி வகுக்கும் என்பது அவரது அருளுரை.

ராஜ யோகம், கர்ம யோகம், லய யோகம், பக்தி யோகம், ஞான யோகம், ஹட யோகம் என பயிற்சி முறைக்குத் தக்கவாறு யோகம் பலபடியாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

 

அவரவர்க்குப் பிடித்தபடி, தேவைக்குத் தக்கபடி, சூழ்நிலைக்கும் முயற்சிக்கும் ஏற்றபடி இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்; முன்னேறலாம்.

அனைத்தின் இலட்சியம் ஒன்றே தான். இறைவனுடன் சேர்வது.

இதை சிரிப்பு யோகம், செக்ஸ் யோகம் என்றெல்லாம் சொல்லிக் கேலிக் கூத்தாக்குவது எந்த விதத்தில் நியாயம்?!

யோகம் என்ற அற்புதமான தெய்வீகச் சொல் அசிங்கப்படுத்தப் படுகிறது.

இதை அறிந்தபிறகு நாமாவது

யோகம் என்பதை கண்ட சொல்லுடன் சேர்க்காமல் இருப்போமாக!

Truth 12-10-18 86ஆம் தொகுதி, 26ஆம் இதழில் வெளி வந்துள்ள யோகா பற்றிய ஒரு பகுதியை ஆங்கில மூலத்தில் கீழே தருகிறோம்.

நன்றி : ட்ரூத் வார இதழ்

***

Practice of Yoga: Yoga is gaining popularity in various countries and Yogasana is proving to be a plausible alternative for persons of different ages for physical health improvement. It is necessary to know what Yoga is, in the spiritual sense.Yoga in general is the process of unification of Atma with — Paramatma (the Supreme Being), Shiva (one of the three principal Hindu Gods) with Shakti (Goddess Durga), Jeeva (the living being) with Brahma (The Supreme Entity) etc.– which are all the same in the ultimate analysis.

According to Patanjal Yoga Sutra (1/2) ‹Yoga chitta vruththii nirodha:– Yoga is the process by which one can control or absolutely stop the diverse and distracting waves of the mind. This control finally leads to a blissful state: Samadhi (trance). To reach this state you require first an undivided concentration on a single pure or divine object, whatever you like – yadhabhimat dhyanat va (Yogasutra 1/39). It is better for the believers to concentrate on the worship of God with all devotion in so many forms and through so many ways: ESWARA: PRANIDHAANAM VAA (Yoga Sutra 1/23).

Again if you can concentrate – on the heart (or the divine figure) of a saint who is above all material attachments whatsoever– this is also an easy and fruitful method to attain  Samadhi– Veetha raga vishyam va chiththam (Yogasutra : 1/36). This is Raja Yoga– the most popular yoga round the world– in a nut shell.

Besides Raja Yoga, there are other important schools of Yoga– Karma Yoga, Bhakti Yoga, Jnana Yoga, Laya Yoga, Hatha yoga etc.– the target of all of them being almost the same: by different ways to reach the same destination– to get connected or united with the Supreme Power.

   One should remember that only physical fitness and mental peace cannot bestow upon us the spiritual bliss, which is joy thousand times deeper, which is joy immense without any parallel.

That’s why the Upanishad has clearly declared : (NALPE SUKAMASTI H=BHUMIVA SUKAM (Chandokya Upanishad 7/23/1). There is no genuine joy in the physical world, it is all there in the spiritual realm.

Not only that, if you can have an electrical connection with the power house, you get so many benefits out of it so soon: light, fan, TV, computer etc all get energized or empowered in a moment. Similarly if we can establish a hot line with the Supreme Power through Yoga, we become empowered in the physical, mental, intellectual, material as well as spiritual planes simultaneously. But tragically enough, we are either totally disconnected or at best loose- connected with the Super Power. What a loss indeed, how very foolish – to keep ourselves away from this Super Power which is the  summum bonum of human life !!

(Courtesy– Sahaj Kriya Yoga, Vol I by Kinkar Vitthal Ramanuja).

Courtesy : Truth Weekly 12-10-18 issue Vol 86 Issue 26

Tags– சிரிப்பு யோகா,உண்மை யோகா

***

 

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி-30+ சொற்கள் (Post No.5692)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 23 November 2018

GMT Time uploaded in London –14-14
Post No. 5692

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

முப்பதுக்கும் மேலான தமிழ்ச் சொற்களை இக்கட்டத்துக்குள் அடைக்கலாம். கீழே அதற்கு உதவுவதற்காக குறிப்புகள் உள. முடியாதபோது விடைகளைக் காண்க

 1  2  3  4
 5  6  7
 8
9 10 11  12
13  14
15
16  17 18  19
20 21
22 23 24

குறுக்கே

2.பனை மரத்தில் கிடைப்பது

3.கோடாரி; ஒரு அவதாரத்தின் பெயர்

5.வழி, காய்ச்சல்

6.அறைகளின் நாற்புறத்தில் நிற்பது

7.ஒரு கருவி

8.கை, கார்யத்தின் மூலச் சொல்

12.ஆகர்ஷணம்; நடிகைகளிடம் உள்ளது

13.பானை

14.ரசம், குழம்பில் சுவை தருவது

15.தாளிக்க வேண்டியது

16.கோத்திரத்துடன் பேசப்படுவது

  1. அம்பு விடத் தேவை

18.வில்லுடன் வருவது

20.கணவன்; சைவ சித்தாந்தச் சொல்

21.பெண்களின்  நண்பன்

22.விளையாடு, ஆனந்தி

22.பத்தாவது அவதாரம்

23.மக்கள் தேர்ந்தெடுப்பது

கீழே

1.பயிர் செழிக்கத் தேவையானது

2.மனிதனைக் கெடுக்கும் குணம்

3.சாதுவான பிராணி

4.வளைவு

9.இடத்தின் எதிர்ப் புறம்

10.முடிச்சு போன்றது; அவிழ்க்க/தீர்க்க வேண்டியது

11.செலவுக்கு எதிர்ப்பதம்

15.நாய் மீதும் வீசலாம், கட்டிடமும் கட்டலாம்

16.இதில் தானியத்தைச் சேமிக்கலாம்

17.கை கழுவி……, போய்……….. என்று சொல்ல உதவும்

17.கை கால்களில் 5 இருக்கும்

19.வாக்கிய முடிவில் வைப்பது

19.பிராமணர்கள் யாகத்தில் பயன்படுத்தும் இலை; ஒரு மரம்

20.வலிமை

24.குடிக்கக் குடிக்க ஆனந்தம்; குடலைக் கெடுக்கும்

 

ள் சு
சு ம் ர் சு ளி
ம் வு
ம் ம்
சி ச் ர்
ம் க் ளி பு
ம் கு டு ள்
கு ம் வி ல் ம் பு
தி ம் வை
ர் ளி ல் கி சு

Answers

சுரம், உரம், கரம், வரம், வலம்,  கலம், குலம், குதிர், பதி, கல், கள், கர்வம், பரசு, பசு, சுள்ளி, கள்ளி, சுவர்,

கவர்ச்சி, சுளிவு, வரவு, சிக்கல், வில் அம்பு, புரசு, வைரம் , அரசு, கடுகு, ,விரல், கல்கி, புள்ளி, உளி, களி, ரம்

TAGS–30+ சொற்கள், குறுக்கெழுத்துப் போட்டி

–subham–

தவளைக் கஷாயம் (Post No.5691)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 23 November 2018

GMT Time uploaded in London –7-00 AM
Post No. 5691

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

picture from Wikipedia

பிளினி மூத்தவர் ( PLINY THE ELDER ) சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் ரோமானிய சாம்ராஜ்யத்தில் வாழ்ந்தார். அவர் நம் நாட்டு வராஹமிஹிரரின் பிருஹத் ஜாதகம் போல வானவியல் முதல் பிராணிவியல் வரையுள்ள எல்லா விஷயங்களையும் எழுதி நேச்சுரல் ஹிஸ்டரி- NATURAL HISTORY இயற்கை வரலாறு-என்ற பெயரில்37 தொகுதிகளாக வெளியிட்டார். இது லத்தீன் மொழியிலுளது. இதை 500 ஆண்டுகளுக்கு முன்னர் வெனிஸ் நகரில் பதிப்பித்தனர். வராஹமிஹிரரின் பிருஹத் ஜாதகம் போன்ற நூல்கள் ஏராளமான விஞ்ஞான பூர்வ விஷயங்களை உடைத்தாய் இருக்கிறது. பிளினி எழுதிய மருத்துவ விஷயங்கள் ஒரே அபத்தக் களஞ்சியமாக உளது. நமது சரகர், சுஸ்ருதர் போன்றோர் எழுதிய நூல்கள் இவருக்கும் சில அல்லது பல நூற்றாண்டுகளுக்கு முந்தியவை. இவைகளை ஒப்பிடுகையில் ஐரோப்பியர்கள் காட்டுமிராண்டி வைத்தியத்தைக் கடைப்பிடித்தது தெரிகிறது.

ஒரு சில எடுத்துக் காட்டுகளைக் காண்போம்:-

ஒருவருக்கு இடது பக்கம் கண் நோய் இருந்தால் ஒரு தவளை அல்லது தேரையின் இடது கண்ணை நோயாளியின் இடது தோளில் இருந்துத் தொங்க விடுக; இதே போல வலது கண் நோய்க்கு வலப்பக்கம் செய்க.

யாருக்காவது காதில் நோய் இருந்தால் தவளைக் கொழுப்பைக் காதில் திணிக்கவும். நோய் பறந்தோடும்.

பல் வலியா? தவளையை புளிச்ச காடி எனப்படும் விநிகரில் கொதிக்க வைத்து அந்தக் கஷாயத்தால் வாயைக் கொப்புளிக்கவும்.

இருமல், தொண்டையில் வியாதி இருந்தால் குட்டித் தவளையை வாயில் போட்டுத் துப்பி விடவும்.

இது போன்ற நம்பிக்கைகள் ஐரோப்பாவில் 1600 ஆண்டுகளுக்கு நீடித்தமைக்கு  அநதக் காலத்தில் வெளியான சில ஆங்கில நூல்களும் சான்று பகர்கின்றன.

1658ல் ஸர் கே.டிக்பி (SIR K DIGBY எழுதிய டிஸ்கோர்ஸ் ஆன் சிம்பதி (DISCOURSE ON SYMPATHY) என்ற நூலில் காணும் விஷயம்:

நீங்கள் பிரயாணம் செய்கிறீர்களா? குறிப்பாக நோய் இருக்கும் பகுதிக்குச் செல்வதானால் தவளை அல்லது தேரையைப் பொடி செய்து டப்பாவில் கொண்டு செல்லவும். அல்லது உயிருடன் உள்ள தவளை அல்லது சிலந்திப் பூச்சிகளையோ ஆர்ஸெனிக் என்னும் விஷத்தையோ கொண்டு சென்றால் நோய்கள், அவைகளுக்குப் போய்விடும் உங்களை விட்டுவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

1665ல் ஆலின் லெட்டர்  என்பவர் எழுதிய விஷயம்:-

‘பிளேக்’ போன்ற கொடிய கொள்ளை நோய் இருந்தால்  அப்பகுதிக்குச் செல்லுகையில் தவளை விஷம் கொண்ட தாயத்துகளை அணிக. நோய் வந்தாலும் அது உங்களைக் கொல்லாது.

இப்படி தேரை, தவளை வைத்தியம் 1800 ஆம் ஆண்டுவரை பரப்பப்பட்டு வந்துளது.

தமிழ் ஸம்ஸ்க்ருத நூல்களில் உள்ள மூலிகை மருத்துவம் நாம் எவ்வளவு முன்னேறி இருந்தோம் என்பதற்கு எடுத்துக் காட்டுகள்.

Tags– தவளை, கஷாயம், தேரை, வைத்தியம்

–SUBHAM–

போகுமிடம் வெகு தூரம்! போக வேண்டும் நெடு நேரம்!! (Post No.5690)

Written by S Nagarajan

Date: 23 November 2018

GMT Time uploaded in London –6-13 am
Post No. 5690

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

ஆங்கில இலக்கியம்
போகுமிடம் வெகு தூரம்! போக வேண்டும் நெடு நேரம்!!
ச.நாகராஜன்
போகுமிடம் வெகு தூரம்!
போக வேண்டும் நெடு நேரம்!!
எத்தனை அற்புதமான வரிகள், பாருங்கள்!
Miles to go before I sleep என்ற அற்புதமான சொற்றொடரை ‘Stopping by Woods on a Snowy Evening’ என்ற கவிதையில் தந்தவர் அமெரிக்க கவிஞரான ராபர்ட் ஃப்ராஸ்ட். (Robert Frost)
ராபர்ட் ஃப்ராஸ்ட் (பிறப்பு 26-3-1874 மறைவு 29-1-1963) அமெரிக்காவில் சான்ஃப்ரான்ஸிஸ்கோவில் பிறந்தார். அவரது தந்தை ஒரு ஆசிரியர்;- பின்னர் அவர் ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும் ஆனார்.
இயற்கையிலேயே கவிதை இயற்றும் ஆற்றல் அவருக்கு இருந்தது. அமெரிக்க நாட்டுப்புற மொழியில் வல்லுநராக அவர் திகழ்ந்தார்.

Miles to go before I Sleep என்ற வரி வரும் Stopping by Woods on a Snowy Evening என்ற கவிதை 1921ஆம் ஆண்டு வாக்கில் இயற்றப்பட்டது.
குதிரையில் பயணிக்கும் பயணி ஒருவர் கூறுவது இது.
இதை விமரிசிக்கும் இலக்கிய விமரிசகர்கள் இது மரணத்திற்கு முன் தெரிவிக்கும் ஆசை போல என்கின்றனர். Sleep  என்ற சொல் இங்கு  மரணத்தைக் குறிக்கிறது என்பது அவர்களின் எண்ணம்.
ஆனால் பலரோ இது வாழ்க்கையின் லட்சியத்தை நிர்ணயித்து அதை அடையத் துடிக்கும் வாழ்க்கைப் பயணியின் அற்புதமான கூற்று என்கின்றனர்.
ஜவஹர்லால் நேரு முதல் உலகின் அறிஞர்களும் சாமான்யரும் இலக்கிய ஆர்வலர்களும் விரும்பிப் படித்து மேற்கோள் காட்டும் கவிதை இது:
Stopping by Woods on a Snowy Evening
ROBERT FROST
Whose woods these are I think I know.
His house is in the village though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.
My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.
He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sound’s the sweep
Of easy wind and downy flake.
The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep
எனது லட்சியம் நிறைவேற போகவேண்டும் நெடு நேரம்; ஏனெனில் அதை அடைய நான் செல்ல வேண்டிய தூரம் வெகு தூரம். செல்ல வேண்டிய பாதையோ அடர்ந்த காரிருள் நிறைந்த காட்டு வழி.
உலகத்தினரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட கவிதா வரிகள்!
ஜான் கென்னடி தனது பதவியேற்பு விழாவின்போது கவிஞர் ராபர்ட் ஃப்ராஸ்டை அழைத்து கவிதை பாட வைத்தார். 1961ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் நாள் நடந்த அந்த விழாவின் போது அவருக்கு வயது 86. அந்த விழாவிற்கென ஃப்ராஸ்ட் Dedication என்ற கவிதையை பிரத்யேகமாக எழுதினார். விழா நடந்த அன்று சூரிய ஒளியில் அதைப் படிக்க மிகவும் கஷ்டப்பட்டார். கடைசியில் மனப்பாடமாக இருந்த The Gift Outright என்ற கவிதையை நினைவிலிருந்து பாடி விட்டார்.
போஸ்டனில் 1963 ஜனவரி 29ஆம் நாள் அவர் மறைந்தார். அவரது கல்லறையில் எழுதப்பட்ட வாசகம் : “ I had a lover’s quarrel with the world.”
அவரது கவிதையில் இன்னொரு அழகிய கவிதை – The Road Not Taken.
The Road Not Taken
 ROBERT FROST
Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
And be one traveler, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth;
Then took the other, as just as fair,
And having perhaps the better claim,
Because it was grassy and wanted wear;
Though as for that the passing there
Had worn them really about the same,
And both that morning equally lay
In leaves no step had trodden black.
Oh, I kept the first for another day!
Yet knowing how way leads on to way,
I doubted if I should ever come back.
I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:
Two roads diverged in a wood, and I—
I took the one less traveled by,
And that has made all the difference.
 இந்த அழகிய கவிதையில் வரும் வார்த்தைகளை வைத்து அநேகமாக ஒவ்வொரு ஆங்கிலப் பத்திரிகையிலும் The Road less Traveled என்ற தலைப்பில் நிச்சயமாக ஒரு கட்டுரை வந்திருக்கும்.
இரு நண்பர்கள் ஒரு சாலை வழியே செல்கின்றனர். பாதை இரண்டாகப் பிரிகிறது. ஒன்று கரடுமுரடானது. யாரும் அதிகமாகச் செல்லாதது. இன்னொன்று வழவழ என்று இருக்கிறது. கல், முள் இல்லை. அனைவரும் அதிகமாகப் பயன்படுத்தும் பாதை.
நண்பர் நல்ல பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்.
ஆனால் ஃப்ராஸ்ட் எதைத் தேர்ந்தெடுக்கிறார்?
‘ குறைந்த பேர்கள் தேர்ந்தெடுத்த அந்தப் பாதையை நான் தேர்ந்தெடுத்தேன்; அதுவே பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது’ என்கிறார்.
அருமையான இந்தக் கவிதை உலகில் ஏராளமான பேர்களின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரடுமுரடான வழியாக இருப்பினும் லட்சியத்தை நோக்கி அது செல்லும் எனில் அதையே தேர்ந்தெடுப்போம் என்பதே லட்சியவாதிகளின் எண்ணம்.பட்டப்படிப்பு முடிக்கும் பட்டதாரிகள் புதிய வழியில் செல்வோம் என உறுதிமொழி எடுக்க
இந்தக் கவிதை தான் தூண்டியது.
ஆனால் உண்மையில் ஃப்ராஸ்ட் இதை ஒரு ஜோக் கவிதையாகத் தான் எண்ணி எழுதினார். தனது நண்பரைக் கேலி செய்ய அவர் எழுதிய கவிதை தான் இது. அவர் நண்பர் எட்வர்ட் தாமஸ் அடிக்கடி நடைப்பயிற்சியை மேற்கொண்டு அவருடன் நடந்து செல்வது வழக்கம். தாமஸுக்கு எப்போதுமே எந்த வழியைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு தயக்கம் இருக்கும். ஒரு வழியை அவர் தேர்ந்தெடுத்த பின்னர், அட, அடுத்த வழியில் போகாமல் விட்டு விட்டோமே என அங்கலாய்ப்பது வழக்கம். அதற்காக எழுதிய இந்தக் கவிதையை அனைவரும் லட்சியக் கவிதையாகப் பார்த்ததைக் கண்டு ஃப்ராஸ்டுக்கு வியப்பு மேலிட்டது. இது மன உறுதிக்கான ஒரு உருவகக் கவிதை என அனைவரும் சொல்ல, தாமஸிடம் ஃப்ராஸ்ட், “ சும்மா விளையாட்டுக்காக அதை எழுதினேன் என்றாலும் கூட அதை அனைவரும் மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டு விட்டனர்”, என்று கூறினார்.
படிப்பவர்களுக்கு உத்வேகம் ஊட்டும் கவிதை அல்லவா இது!
எனக்கும் தான்:-
“போகுமிடம் வெகு தூரம்
    போக வேண்டும் நெடு நேரம்
போகும்வழி முள்பாதை
    போகாதோர் பலர்பாதை
நோகுமிடம் உடலெல்லாம்
    நோகாது என் உறுதி
ஆகும் ஆசை முடியட்டும்
     அற்புதமாய் அமையட்டும்”

லெட்சுமி வசிக்கும் இடம்; மஞ்சள் மகிமை! (Post No.5688)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 22 November 2018

GMT Time uploaded in London –7-23 am
Post No. 5688

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

 

பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் மறைந்து வருகிறது. பல வகையான சோப்புகளும், கிரீம்களும் அந்த இடத்தைப் பிடித்துவிட்டன. மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால் பெண்களின் முகத்தில் முடி வளர்வதைத் தடுக்கலாம். பரு முதலியன வராமலும் தடுக்கலாம்.

மஞ்சள் என்பது பாக்டீரியா எதிர்ப்புக் குணம் மிக்க பொருள் என்பதை இப்பொழுது விஞ்ஞானிகளும் ஒப்புக் கொண்டு விட்டனர். மஞ்சள் பொடி போட்டு இந்திய உணவு உருவாக்கப்படுவதை வெளிநாட்டு சமையல் சானல் (channels) கள் மிகவும் சிலாஹித்துப் பேசுகின்றன. சமைத்த பண்டங்கள் விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க மஞ்சளும் உப்பும் உதவும் என்பது தாய்மார்கள் அறிந்த விஷயமே.

அந்தக்காலத்தில் தெய்வத்தின் பெயரில் எதைச் சொன்னாலும் மக்கள் கேள்வி கேட்காமல் அதை ஏற்றனர். இந்தக் காலத்தில் விஞ்ஞானத்தின் பெயரில் எதைச் சொன்னாலும் மக்கள நம்புகின்றனர். இரண்டுமே விவேகமற்ற செயல். ஒரு காரியத்தின் கருத்தை அறிநதால் அது எக்காலத்திலும் நம்பப்படும்; காப்பி குடித்தால் நல்லது என்று ஒரு கட்டுரை வரும்; அடுத்த வாரம் காப்பி குடித்தால் கெடுதி என்று வரும் அநத ஆராய்ச்சியை யார் எங்கு எத்தனை பேரிடத்தில் நடத்தினர், அது எல்லோருக்கும் பொருந்துமா என்பதை எல்லாம் நாம் முழுதும் ஆராய்வதில்லை. இப்படித்தான் அந்தக் காலத்திலும் காரண காரியங்களை விளக்காமல் ‘அங்கே’ லக்ஷ்மி வசிப்பாள் என்று சொல்லி விட்டார்கள். இன்று அறிவியல் சோதனைகள் மூலம் காரண காரியங்களை விளக்க, விளங்கிக்கொள்ள நமக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

பழங்காலத்தில் லக்ஷ்மி வாசம் செய்யும் இடங்களைப் பற்றி ஒரு நல்ல ஸ்லோகம் இருக்கிறது. அதை நன்கு சிந்தித்துப்  பார்த்தால் அவர்கள் சொன்னது சரிதான் என்பது தெரியும்.

கணவர்களுக்கு ஆயுளைத் தரும் பெண்களின் அலங்காரங்கள்

ஹரித்ரா குங்குமம் ச ஏவ ஸிந்தூரம் கஜ்ஜலம் ததா

கூர்பாஸகம் ச தாம்பூலம் மங்கள்யாபரணே ததா

கேசஸம்ஸ்கார கபரீ கர்கணாதி பூஷணம்

பர்துர்ராயுஷ்மிச்சந்தி தூஷயேன்ன பதிவ்ரதா

பொருள்

மஞ்சள் பூசிக் குளிப்பது

குங்குமம்,ஸிந்தூரம் தரிப்பது

கண்ணுக்கு மை தீட்டுதல்

ரவிக்கை, தாம்பூலம் (வெற்றிலை பாக்கு)

காது, மூக்குகளில் நகை அணிதல்

வாரின தலை

முதலியன கணவர்களுக்கு ஆயுளைத் தரும் பெண்களின் அலங்காரங்கள்

 

கோலத்தின் மஹிமை

இன்னொரு ஸ்லோகத்தையும் காண்போம்

யத் க்ருஹம் ராஜதே நித்யம் மங்களைரனுலேபனைஹி

தத் க்ருஹே வசதே லக்ஷ்மீ: நித்யம் பூர்ணகலான்விதா

எவள் வீட்டைப் பெருக்கி மெழுகி,  கோலமிட்டு  அலங்கரிக்கிறாளோ அங்கே லக்ஷ்மீ பூரண கலைகளுடன் வசிக்கிறாள்.

அது என்ன பூரண கலை?

நாம் அஷ்ட லக்ஷ்மீ என்று சொல்லும்போது வளத்தை, தனம், தான்யம், வீரம், ஸந்தானம் (மகப்பேறு), ஐஸ்வர்யம், சௌபாக்கியம் என்று எல்லாம் பிரித்துப் பார்க்கிறோம். இவை அனைத்தும் இருந்தால் அது லக்ஷ்மீயின் பூரண அம்சம் ஆகும்.

இந்த இரண்டு ஸ்லோகங்களும் வியாஸர் சொன்னதாக ஒரு புஸ்தகத்தில் படித்தேன். ஆனால் மஹாபாரதத்திலா என்று சொல்லவில்லை.

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.

மஞ்சள் முகமே வருக, மங்களம் என்றும் தருக என்று பாடுவோம்.

tags– மஞ்சள்,மஹிமை,  கோலம், லெட்சுமி

–சுபம்–

பர்த்ருஹரி சொல்லும் விஞ்ஞான விஷயங்கள் (Post No.5685)

Himalaya pictures from Radhika Balakrishnan

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 21 November 2018

GMT Time uploaded in London –10-34 am
Post No. 5685

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

பர்த்ருஹரி இந்த ஸ்லோகங்களில் சொல்லும் அறிவியல் துளிகள்

1.மலைகள் பறந்தன;

2.சூரிய காந்தக் கல் நெருப்பைக் கக்கும்;

3.பூமியைப் பாம்பு தாங்குகிறது-

பர்த்ருஹரி நீதி சதகம் தொடர்ச்சி

ஸ்லோகங்கள் 31,32,33

 

 

‘பெருந்தன்மை கொண்டபெரியோர்கள், கொடையாளிகளின் சக்திக்கும் பெருமைக்கும் அளவே இல்லை. இந்த பூமியை ஆதிசேஷன் என்னும் பாம்பு தாங்குகிறான். அந்த சேஷ நாகத்தை ஆமை தன் முதுகில் தாங்குகிறது. அநத ஆமையை கடல் தனது அடித்தளத்தில் தாங்கி நிற்கிறது’.—1-31

காளிதாஸன் போன்ற உலகப் புகழ்பெற்ற கவிஞர்களும் பூமியைப் பாம்பு தாங்குவதாகக் கருதினர். இதன் விஞ்ஞான விளக்கம் தெரியவில்லை. இதை அப்படியே சொல்லுக்குச் சொல் பொருள் கொள்ளாமல் அதன் தாத்பர்யத்தை அறிய வேண்டும். உலகில் ஒவ்வொரு பழைய கலாசாரத்திலும் இப்படிப்பட்ட நம்பிக்கை இருந்தது. கிரேக்கர்கள அட்லஸ் (Atlas) என்பவன் தனது தோளில் பூமியைச் சுமப்பதாக நம்பினர். இதனால் தேசப்பட புத்தகத்துக்கு அட்லஸ் என்று பெயர் சொல்லுவர்.

வஹதி புவனேஸ்ரேணிம் சேஷஹ பணாபலகஸ்திதாம்

கமடபதினா மத்யே ப்ருஷ்டம் ஸதச தார்யதே

தமபி குருதே க்ரோடாதீனம் பயோதிரநாதராத்

தஹஹ மஹதாம் நிஸ்ஸீமாநஸ்சரித்ர விபூதயஹ – 31

वहति भुवनश्रेणिं शेषः फणाफलकस्थितां

कमठपतिना मध्येपृष्ठं सदा स च धार्यते ।

तम् अपि कुरुते क्रोडाधीनं पयोधिरनादराद्

अहह महतां निःसीमानश्चरित्रविभूतयः ॥ 1.31 ॥

XXX

‘தேவர்களின் தலைவனான இந்திரன் இமயமலை மீது தன் வஜ்ராயுதத்தை வீசித் தாக்கினான். அப்போது இமயத்தின் மகனான மைநாக பர்வதம் தந்தையை விட்டு ஓடிப்போய் கடலில் அடைக்கலம் புகுந்தது. இது சரியான செயலன்று. மகன் என்னும் பெயருக்கு ஏற்ற செயலுமன்று’ – 1-32

மலைகள் ஆதிகாலத்தில் பறந்தததாகவும் ,இந்திரன் அவற்றின் சிறகுகளை வெட்டியதாகவும் புராணங்கள் புகலும்.இந்த நிகழ்ச்சியை உவமையாகப் பயன்படுத்துவர் புலவர் பெருமக்கள்.

இதில் பெரிய அறிவியல் உண்மை இருப்பதாக நான் கருதுகிறேன். டைனோஸரஸ் போன்ற ராட்சத மிருகங்கள் பூமியிலிருந்து அழிய பெரிய விண்கற்களே காரணம் என்று விஞ்ஞானிகள் இப்போது பகர்வர். பூமியின் துவக்க கால சரிதத்தில் இத் தாக்குதல்கள் அதிகம் இருந்தன. இன்றும் ஒவ்வொரு நொடியும் பூமியில் விண்கற்கள் விழுந்தபோதும் அவை காற்றில் பஸ்மம் ஆகி சாம்பல மட்டுமே பூமியில் விழும். இரவு நேரத்தில் வானத்தை உற்று நோக்குவோர் நட்சத்திரங்கள் விழுவது போலக் காண்பது எல்லாம் இந்த விண்கற்களே. ஆயினும் துவக்க காலத்திலிவை அதிகம் இருந்தது.

இதை பாமர மக்களுக்கு விளக்க எழுந்த கதைதான் மலைகள் பறந்ததும் அதை இந்திரன் வெட்டி வீழ்த்தியதும்.

இந்த பர்த்ருஹரி ஸ்லோகத்தில் சொல்லவரும் நீதி ஒருவருக்கு ஆபத்து ,, வருகையில் — குறிப்பாக தந்தைக்கு ஆபத்து வருகையில் — மகன் ஓடிப்போவது — உதவாமல் பயந்து ஒளிவது — முறையன்று– வீரமும் அன்று என்பதாகும்.

நீதியைப் புரிந்து கொண்டு விட்டோம். இதிலுள்ள அறிவியல் விஷயங்களை நுணுகி ஆராய்வோம்:

1.பூமியின் ஆரம்பகட்டத்தில் விண்கற்கள் (Meteorites) , நுண்கிரஹங்களின் (asteroids) தாக்குதல் அதிகம் இருந்ததை இந்துக்கள் அறிவர்.

  1. உலகில் கடலுக்கு அடியிலும் மலைகள் இருப்பது (Submarine mountains) இந்துக்களுக்கு நன்கு தெரியும். (சக்ரவாள மலை பற்றியஎனது கட்டுரையில் முன்னரே விளக்கி இருக்கிறேன்)

3.பிற்காலத்தில் இந்த விண்கல், நுண் கிரஹவீ ழ்ச்சி அறவே நின்றதையும் இந்துக்கள் அறிவர். ஆகையால்தான் இந்திரன் பறக்கும் மலைகளின் சிறகுகளை வெட்டி அவற்றை கடலுக்குள் அனுப்பிய கதைகள் எழுந்தன.

கடலியலும் (Oceanography), பூகர்ப்ப இயலும் (Geology) வளந்த இந்த நாட்களில் நாம் படிப்பதை புராணங்கள் கதை ரூபத்தில் நமக்குக் கற்பித்தன.

அது மட்டுமல்ல; இந்திரன்தான் உலகின் முதல் சிவில் எஞ்சினீயர். அவன் மலைப் பாறைகளை அகற்றி தண்ணீரை விடுவித்த கதை உலகின் பழமையான் நூலான ரிக் வேதத்திலேயே உளது.

இதை அறியாத சிலர் இந்திரன் அரக்கனை வெட்டி வீழ்த்தியதாகவும் அவர்கள் பழங்குடி மக்கள் என்றும் பிதற்றினர். இந்திரன் என்பது தலைவன், மன்னன், முழுமுதற் சக்தி போன்ற பல பொருட்களில் ரிக் வேதத்தில் வருகிறது. ஆயிரத்துக்கும் மேலான இடங்களில் இந்திரன் பெயர் வநததை ‘ஒரு ஆள்’ என்று நினைத்து வெள்ளைக்காரர்கள் குழம்பிப் போய் நம்மவர்களையும் குழப்பிவிட்டனர்.

வரம் பக்ஷச்சேதஹ ஸமதம கவன்முக்தகுலிஸ

ப்ரஹாரைருத்ரச் சதூபஹலதஹனோத்ரார குரூபிஹி

துஷாரத்ரேஹ்ஹே ! பிதரி க்லேசவிவசே

ந சாசௌ ஸம்பாதஹ பயஸி பயஸாம் பத்யூருசிதஹ -32

वरं पक्षच्छेदः समदमघवन्मुक्तकुलिशप्रहारैर्
उद्गच्छद्बहुलदहनोद्गारगुरुभिः ।
तुषाराद्रेः सूनोरहह पितरि क्लेशविवशे
न चासौ सम्पातः पयसि पयसां पत्युरुचितः ॥ 1.32 ॥

XXX

சூர்யகாந்தக் கல், சூரிய ஒளியை நெருப்பாக கக்குவதை காளிதாஸன், தமிழில் திருமூலர் போன்ற ஏராளமான புலவர்கள் பயன்படுத்துவதால், லென்ஸ் (Lens), உருப்பெருக்கு ஆடி (Magnifying glass) பற்றி இந்துக்களுக்கு முன்னரே தெரிந்ததை நாம் அறிய முடிகிறது.

இதோ பாட்டின் பொருள்

சூரிய ஒளிபட்டவுடன் உயிரே இல்லாத ஜடப்பொருளான சூர்ய காந்த மணி கூடப் பிரகாஸிக்கிறது; நெருப்பை உமிழ்கிறது. அப்படி இருக்கையில் பெரியோர்களை யாரேனும் அவமதித்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா? 1-33

ஆக, பல விஞ்ஞான உண்மைகளை உவமையாகப் பயன்படுத்துவதால் இவைகளைப் பாமர மக்களும் அறிந்தது புலனாகிறது. நம்மில் பலர் எப்படி டெலிவிஷன், ரேடியோ, மொபைல் போன் பற்றிய விஞ்ஞான விஷயங்களை அறியாமலேயே அதை பயன்படுத்த மட்டுமே தெரிந்து கொண்டது போல பாமர மக்களுக்கு உவமை மட்டுமே தெரியும். அதன் பின்னுள்ள விஞ்ஞான விஷயங்கள் தெரியாது.

பூமியின் சலனம் பற்றி முழுதும் அறியாவிட்டால் இந்துக்கள் கிரஹணத்தைக் கணக்கிட்டும் இருக்க முடியாது. ஜோதிட சாஸ்திரத்தை உருவாக்கி இருக்கவும் முடியாது. சனிக் கிரஹம் குருக் கிரஹம் போன்றவற்றுக்கு விஞ்ஞானப் பெயர்களை சூட்டி இருக்கவும் முடியாது.

சனிக் கிரஹம் (சனை= மந்தம், மெதுவாக) சூரியனைச் சுற்றிவர 30 ஆண்டுகள் ஆவதை அறிந்து சனைச் சரன் (மந்த கதியில் செல்வோன்) என்று பெயரிட்டனர்.

குரு என்றால் கனமான என்று பெயர்; கிரஹங்களில் பெரியது குரு (வியாழன்)) என்பதாலும், குருவைப் போல ஒருவரை உயர்த்தி, உந்தி விடுவதாலும் (Slingshot Gravity effect) அந்த கிரஹத்துக்கு குரு என்று பெயரிட்டனர், இந்த ‘ஸ்லிங் ஷாட் எப்பெக்ட்’ இப்பொதுதான் விஞ்ஞானிகளுக்குத் தெரியும். இனி வரப் போகும் எதிர்காலக் கண்டு பிடிப்புகளை இந்துக்கள் முன்னரே அறிவித்துவிட்டதை  எனது முந்தைய  கட்டுரைகளில் பட்டியலிட்டு விட்டேன்.

யதசேதனோபி பாதைஹி ஸ்ப்ருஷ்டஹ ப்ரஜ்வலதி ஸவிதுரினகாந்தஹ

தேஜ்ஸ்வீ புருஷஹ பரக்ருதநிக்ருதிம் கதம் ஸஹதே – 33

Tags- நீதி சதகம், பர்த்ருஹரி, சூர்யகாந்த மணி, பறக்கும் மலைகள், பூமி பாம்பு, சேஷ நாகம்

–சுபம்—

எனக்கு கூட்டம் சேருவது எப்படி? (Post No.5678)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 19 November 2018

GMT Time uploaded in London –11-17 am
Post No. 5678

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

ஜெர்மானிய தத்துவ அறிஞர் Frederich Schleilermarcher  பிரெடெரிக் ஸ்லைச்மார்ஷெர். அவரிடம் ஒருவர் உங்கள் கூட்டங்களுக்கு நிறைய கூட்டம் வருகிறதே. அது எப்படி? (சாதாரணமாக தத்துவம் போன்ற விஷயங்களை விவாதிக்கும் கூட்டங்களில் அதிக ஆட்கள் வர மாட்டார்கள்.)

அவர் சொன்னார்,

நான் தேர்வுகள் போர்டில் (BOARD OF EXAMINERS) அங்கத்தினர். இதை மனதிற் கொண்டு மாணவர்கள் என்னை மொய்க்கின்றனர். ஆங்கே வரும் மாணவ , மாணவிகளை ஒருவர் ஒருவர் கண்டு மோஹிக்க ( ‘சைட்’ அடிக்க) இரு பாலரும் வருவர். அங்கே வரும்

இளம் பெண்களைக் காண துருப்புகள் (படை வீரர்) வருகின்றனர்!

(எல்லோரும் ஒரு விஷயத்தை எதிர் பார்த்து வருகின்றனரே அன்றி தத்துவத்துக்காக வரவில்லை என்பதை அழகுபட விளக்கினார்).

xxxxx

அமெரிக்க நகைச்சுவை

ஆர்டிமஸ் வார்ட் என்ற பிரபல பேச்சாளரை ஒரு சங்கத்தில் பேச அழைத்தனர் அவருக்கு ‘அமெரிக்க மக்களின் நகைச்சுவை ரசனை’ என்ற தலைப்புக் கொடுத்திருந்தனர். அந்த சங்கத்தின் தலைவர் ‘மைக்’-கைப் பிடித்தார். பேச்சாளரை அறிமுகம் செய்து வரவேற்பதற்குப் பதிலாக, அமெரிக்க   மக்களின் நகைச் சுவை பற்றி தனக்குத் தெரிந்த எல்லா விஷயங்களையும் எடுத்துரைத்து தனது மேதாவிலாஸத்தை காட்டினார்.

முக்கியப் பேச்சாளரின் நேரம் வந்தது. அப்போது ஆர்டிமஸ் சொன்னார்

அன்பர்களே! நண்பர்களே!

எனக்குக் கொடுத்த தலைப்பில் நான் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் சங்கத் தலைவரே செப்பி விட்டார். நான் சொல்வதற்கு எதுவும் மிச்சம் வைக்கவில்லை. ஆகையால் நான் ‘’இந்திய உணவு வகைகள்’’ பற்றி உரையாற்றுவேன் என்று உணவு வகைகள் பற்றிப் பேசி முடித்தார்.

xxxx

மார்க் ட்வைனின் பிரபல சொற்பொழிவு

மார்க் ட்வைன் என்ற பிரபல அமெரிக்க எழுத்தாளர், கதாசிரியர், நகைச் சுவை மன்னனை, சான் பிரான்ஸிஸ்கோ நகரிலுள்ள அவருடைய நண்பர்கள் ஒரு முறை பேச அழைத்தனர்.

‘ஐயா, என்னை விட்டு விடுங்கள்; நான் எழுத்தாளனேயன்றி பேச்சாளன் அல்ல’ என்று மன்றாடினார். அதுவும்  இது அவரது படைப்புகளின் ஆரம்ப காலத்தில் நடந்தது.

‘இல்லை, கவலையே படாதீர்கள்; ஹவாய் தீவில் நான் கண்ட அதிசயங்கள் என்று தலைப்பு கொடுக்கிறோம்; சுவையான

விஷயங்களைச் சொல்லுங்களேன் என்றனர்.

அது மட்டுமல்ல; நாங்கள் ஆங்காங்கே நமது ரஸிகர்  பட்டாள ஆட்களை உட்கார வைத்துள்ளோம் அவர்கள் நீங்கள் அடிக்கும் ஒவ்வொரு ‘ஜோக்’குக்கும் பயங்கர கைதட்டல் கொடுத்து உங்களை ஊக்குவிப்பர் என்றனர்

‘சரியப்பா! நான் சொல்லும் ஜோக் புரிந்தாலும் புரியாவிட்டாலும் பலமாகச் சிரிக்கச் சொல்லுங்கள். அது போதும்’ என்றார் மார்க் ட்வைன் (அவரது உண்மைப் பெயர் ஸாமுவேல் க்ளெமென்ஸ்).

ஒருவாறாக கூட்டத்தில் கூலிப் பட்டாளம் கைதட்டவும் சிரிக்கவும் தயாராக வைக்கப்பட்ட நிலையில் மார்க் ட்வைன் மேடைக்கு வநதார். இது அவரது கன்னிப்[ பேச்சு என்பதால் கை, கால் உதறத் தொடங்கியது. ஆள் மயக்கம் போட்டு விழுந்து விடுவாரோ என்று கூட்ட ஒருங்கிணப்பாளர்கள் தீயணைக்கும்படை போல தயார் நிலையில் நின்றனர். அவர் ஒருவாறாகச் சமாளித்துக் கொண்டு தன்னை சுதாரித்துக் கொண்டார்.

எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா– என்று பாரதியார் பாடிய ஸ்டைலில் மார்க்கும் சொன்னார்

எனக்கு முன்னே ஜூலியஸ் ஸீஸர் இருந்தான்; செத்தான்

ஷேக்ஸ்பியர்  இருந்தான்; செத்தான்

நெப்போலியன் இருந்தான்; செத்தான்

ஆப்ரஹாம் லிங்கன்  இருந்தான்; செத்தான்

நானும் அவர்கள் நிலைக்கு நெருக்கமாகத்தான் உள்ளேன்-

இப்படித் துவங்கியவுடன் கூட்டத்தில் உண்மையாகவே கரகோஷம் எழுந்து விண்ணைப் பிளந்தது.

அந்த ஊக்குவிப்பில் மார்க், விட்டு விளாசினார். கூட்டம் முடிந்தபோது எல்லோரும் வயிறு வெடிக்கச் சிரித்து ‘ஐயோ, அம்மா, அப்பாடா– சிரித்துச் சிரித்து வயிறு எல்லாம் புண் ஆகிவிட்டதே’ என்று கஷ்டப்பட்டுக்கொண்டே எழுந்தனர். அது மார்க் ட்வைனின் பிரபல சொற்பொழிவு எனப் பெயர் எடுத்தது.

TAGS–மார்க் ட்வைன், அமெரிக்க நகைச்சுவை, கூட்டம் சேருவது 

–சுபம்–

ஷேக்ஸ்பியர் ஃபெயிலான கதை! (Post No.5676)

Written by S Nagarajan

Date: 19 November 2018

GMT Time uploaded in London –7-32 am
Post No. 5676

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

ஷேக்ஸ்பியர் ஷேக்ஸ்பியரில் ஃபெயிலான கதை!

ச.நாகராஜன்

1

ஷேக்ஸ்பியர், ஷேக்ஸ்பியர் பற்றிய பரிட்சையில் ஃபெயிலான கதை உங்களுக்குத் தெரியுமா?

இதை கை போஸ் (Guy Boas) என்பவர் 1926ஆம் ஆண்டு ‘Lays of Learning’ என்று ஒரு  கவிதையாகவே எழுதி விட்டார்!

I dreamt last night that Shakespeare’s Ghost

Sat for a civil service post.

The English paper for that year

Had several questions on King Lear

Which Shakespeare answered very badly

Because he hadn’t read his Bradley

ஆமாம், ஷேக்ஸ்பியர் பற்றி பரிட்சை எழுதப் போன ஷேக்ஸ்பியர் ப்ராட்லியின் நோட்ஸைப் படிக்க மறந்து போனார். ஆகவே பரிட்சையில் ஃபெயிலாகி விட்டாராம்!

யார் இந்த ப்ராட்லி? சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதென்றால் இவர் நம்ம ஊர் கோனார் நோட்ஸ் (KONAR TAMIL NOTES) எழுதி மாணவர்களைக் கவர்ந்தாரே, அந்தக் கோனார் போல! கம்பன், வள்ளுவன், இளங்கோ என்ன சொல்லி இருக்கிறார் என்பதை கம்பன் சொல்லி இருப்பதை விடக் கோனார் சொன்னால் தான் நம்புவோமே, அந்தக் காலத்தில்! அது போல, ப்ராட்லி ஷேக்ஸ்பியரைக் கரைத்துக் குடித்தவர். அவர் ஷேக்ஸ்பியர் அதாரிடி!

ஏ.சி. ப்ராட்லி (Andrew Cecil Bradley  பிறப்பு 26-3-1851 மறைவு 2-9-1935) இலக்கிய ஆர்வலர்; அறிஞர்! சார்லஸ் ப்ராட்லி என்பவருக்குப் பிறந்த 21 குழந்தைகளில் கடைக்குட்டி. லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறையில் பணியாற்றியவர். அவர் ஷேக்ஸ்பியர் பற்றி ஏராளமான சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். Shaekespearen Tragedy (1904), Oxford Lectures on Poetry  என்ற அவரது இரு நூல்கள் இன்றும் அனைவராலும் விரும்பிப் படிக்கப்படும் நூல்கள்!

2

ஷேக்ஸ்பியர் தனது வாழ்நாளில் 37 இலக்கிய நூல்களைப் படைத்தார். அதை இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து அதில் எத்தனை சொற்கள் உள்ளன என்பது வரை சொல்லி விட்டார்கள்.

அந்த ஆய்வின் படி ஷேக்ஸ்பியர் குறைந்த சொற்களாக 14,701 சொற்களை எழுதிப் படைத்த படைப்பு Comedy of Errors. அதிகப்படியாக 30,557 சொற்களைப் பயன்படுத்தி எழுதிய பெரிய படைப்பு -Hamlet. அவர் பயன்படுத்திய மொத்தச் சொற்கள் 8,35,997!

Shakespeare’s plays,

listed by number of words

Total words in all plays: 835,997

Total plays: 37

Average per play: 22,595

Note: A “speech” consists of either words spoken by a character, or a stage direction —

anything from a one-word shout to a long soliloquy.

Words        Play      Genre

30,557      Hamlet

Tragedy

29,278      Richard III

History

27,589      Coriolanus

Tragedy

27,565      Cymbeline

Tragedy

26,450      Othello

Tragedy

26,145      King Lear

Tragedy

26,119      Henry V

History

26,089      Troilus and Cressida

Tragedy

25,689      Henry IV, Part II

History

25,439      Henry VI, Part II

History

24,914      Winter’s Tale

Comedy

24,905      Antony and Cleopatra

Tragedy

24,629      Henry VIII

History

24,579      Henry IV, Part I

History

24,545          Romeo and Juliet

Tragedy

24,294      Henry VI, Part III

History

23,009      All’s Well That Ends Well

Comedy

22,423      Richard II

History

21,845      Merry Wives of Windsor

Comedy

21,780      Measure for Measure

Comedy

21,690      As You Like It

Comedy

21,607      Henry VI, Part I

History

21,459      Love’s Labour’s Lost

Comedy

21,291      Merchant of Venice

Comedy

21,157      Much Ado about Nothing

Comedy

21,055      Taming of the Shrew

Comedy

20,772      King John

History

20,743      Titus Andronicus

Tragedy

19,837      Twelfth Night

Comedy

19,703      Julius Caesar

Tragedy

18,529      Pericles

History

18,216      Timon of Athens

Tragedy

17,129      Two Gentlemen of Verona

Comedy

17,121      Macbeth

Tragedy

16,633      Tempest

Comedy

16,511       Midsummer Night’s Dream

Comedy

 

14,701        Comedy of Errors                       Comedy

இந்த 8,35,997 சொற்களில் புரியாத சொற்கள் பத்தே பத்து தான்!

அந்தச் சொற்கள் :

  1. ARMGAUNT (Antony & Cleopatra, I.V)
  2. BALK’D (Henry IV : Part 1, I.I)
  3. BRAID (All’s Well That Ends Well, IV.II)
  4. COCI-A-HOOP (Romeo & Juliet, I.V)
  5. DEMURING (Antony & Cleopatra IV.XV)
  6. EFTEST (Much Ado About Nothing, IV.II)
  7. GLASSY (Measure For Measure, II.II)
  8. IMPETICOS (Twelfth Night, II.III)
  9. PORTAGE (Pericles, III.I)
  10. WATCH-CASE (Henry IV:Part 2, III.I)

ஷேக்ஸ்பியர் பற்றிய இன்னும் சில சுவையான தகவல்களை அடுத்து இன்னொரு கட்டுரையில் காண்போம்!

tags–

ஷேக்ஸ்பியர்,

ஏ.சி. ப்ராட்லி, புரியாத சொற்கள்

****

கூஜா, குடை, தயிர்சாதம், ஊறுகாய் பயணம் (Post No.5674)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 18 November 2018

GMT Time uploaded in London –9-43 am
Post No. 5674

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

நூறு வருஷங்களுக்கு முன்னால், யாத்திரை போகும் மக்கள், கூஜாவில் தண்ணீர், கையில் குடை, படுக்கை, பெட்டி, கட்டுச் சாதம் , ஊறுகாய், மாவடு, மோர் மிளகாய், கைவிளக்கு முதலியன கொண்டு செல்வர். பின்னர் டார்ச் லைட், தண்ணீர் பாட்டில் என்று காலம் மாறியது. இப்போதோ கிரெடிக் கார்டு அல்லது பணம் + மொபைல் போன் இருந்தால் போதும், மீதி எல்லாம் ஆங்காங்கே வாங்கிக் கொள்ளலாம் என்றாகி விட்டது. ஆயினும் அந்தக் காலத்தில் மக்கள் என்ன செய்தார்கள் என்பதை அறிவதில் பலருக்கும் ஆவல் உண்டு. குறிப்பாக வரலாற்று நவீனங்களைப் படிப்போருக்கும் யாத்திரை வரலாற்றைப் பயில்வோருக்கும் சுவை தரும் விஷயங்கள் இவை.

அநதக் காலத்தில் ஊர் பேர் தெரியாத ஒரு தமிழ்ப் புலவர் அருமையாகப் பாடி வைத்த நூல் விவேக சிந்தாமணி. அதில் யாத்திரை பற்றி இரண்டு பாடல்கள் உள. அவற்றைப் படித்துச் சுவைப்போம்.

யாத்திரைக்கு அழகு!

தண்டுல ,மிளகின் றூள் புளியுப்பு

தாளிதம் பதார்த்த மிதேஷ்டம்

தாம்பு நீர் தோற்ற மூன்றுகோலாடை

சக்கிமுக்கி கைராந்தல்

கட்டகங் காண்பான் பூஜை முஸ்தீபு

கழல் குடை யேவல் சிற்றுண்டி

கம்பளி யூசி நூலடைக் காயிலையைக்

கரண்டகங் கண்ட கேற்றங்கி

துண்டமுறிய காகரண்டி நல்லெண்ணெய்

தட்டன் பூட்டுமே கத்தி

சொல்லிய தெல்லாங் குறைவறத்தி ருத்தித்

தொகுத்துப் பற்பலவினு மமைத்துப்

பெண்டுக டுணையோ டெய்து வங்கன்னாயம்ப

பெருநிலை நீர்நிழல் விறகு

பிரஜையுந் தங்குமிடஞ் சமைத்துண்டு

புறப்படல் யாத்திரைக் கழகே.

–விவேக சிந்தாமணி

பொருள்

அரிசி (தண்டுலம்), மிளகுப்பொடி, புளி, உப்பு, மிகுதியான தாளிதப் பதார்த்தக் கறிவடகம், கயிறு, தண்ணீர், அளவறிய ஊன்றுகோல், வஸ்திரங்கள் (ஆடை), சக்கிமுக்கிக் கல் அல்லது நெருப்பு உண்டாக்கும் கருவி, கைராந்தல், அரிவாள், பாதரட்சை (செருப்பு), குடை, வேலையாள், சிற்றுணவு அல்லது பலகாராதிகள், கம்பளி, ஊசி, நூல், எழுத்தாணி, ஊறுகாய்த் துண்டு, கரண்டி, நல்ல எண்ணெய், துட்டு, பூட்டு, கத்தி இவை முதலாகச் சொல்லப்பட்டவைகள் எல்லாம் குறைவில்லாமல் திருத்தத்தோடு பல வகைகளுஞ் சேகரித்து பெண்கள் துணையோடு, சரியான வாகனத்தோடு, பெருத்த நிலையான  நிலம், நல்ல நிழல், விறகு, ஜனங்கள், தங்குமிடங்கண்டு பிரயாணஞ் செய்தல் யாத்திரைக்கு அழகாம்.

Tags– விவேக சிந்தாமணி, யாத்திரை, அழகு

xxxxxxxxxxxx SUBHAM xxxxxxxxxxxxxxxxx