பாரதி 97!- PART 1 (post No.5406)

WRITTEN BY S NAGARAJAN

Date: 9 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-23 AM (British Summer Time)

 

Post No. 5406

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

 

மஹாகவிக்கு அஞ்சலி

பாரதி 97!- PART 1

 

ச.நாகராஜன்

 

மஹாகவி பாரதி அமராரான நாள் செப்டம்பர் 11. 1921 ஆம் ஆண்டு அவர் மறைந்தார். 97 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.அவரது சிறப்பியல்புகள் எத்தனையோ. அவற்றில் 97ஐ இங்கு காண்போம். அவருக்கு நமது சிரம் தாழ்ந்த அஞ்சலியைச் செலுத்துவோம். தேச பக்தியிலும் தெய்வ பக்தியிலும் சிறந்துயர்வோம்.

 

 

  1. சிறந்த சம்ஸ்கிருத விற்பன்னர்

1898 ஜூன் மாதம். பாரதியார் காசிக்குப் பயணமானார். அங்கே ஹிந்து கலாசாலையில் சேர்ந்தார். ஸம்ஸ்கிருதத்தில் நல்ல புலமையைப் பெற்றார்.அத்துடன்  ஹிந்தி பாஷையிலும் தேர்ந்தார்.

  1. பல்மொழி அறிந்தவர்

பாரதியார் இயல்பாகவே பல மொழிகளை அறிந்து கொண்டவர். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.புதுவை வாழ்க்கையில் பிரெஞ்சு மொழியையும் வங்காள மொழியையும் அறிந்து கொண்டார். சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம் என்பதால் அவர் தெலுங்கு மொழியும் அறிந்தவரே. யாம் அறிந்த மொழிகளிலே’ என்ற அவரது பாடல் குறிப்பின் மூலமாக அவரது பன்மொழி அறிவைத் தெரிந்து கொள்ளலாம்.

 

  1. பள்ளி ஆசிரியர்

1903ஆம் ஆண்டு பாரதியார் ஆசிரியத் தொழிலை மேற்கொண்டார்.மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக மூன்று மாதம் பணி புரிந்தார்.

  1. சிறந்த பத்திரிகாசிரியர்

இந்தியா உள்ளிட்ட பல இதழ்களின் ஆசிரியராகத் திகழ்ந்ததோடு தேசபக்தி உணர்வூட்டும் பல கட்டுரைகளை வெளியிட்டு வந்தார்.

  1. சிறந்த பதிப்பாளர்

பல நூல்களை வெளியிட்டவர். மிகத் தரமான முறையில் குறைந்த விலையில் தன் கவிதை நூல்களை வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் அவருக்குண்டு.

  1. கார்ட்டூனை அறிமுகப்படுத்தியவர்

இந்தியா இதழில் கார்ட்டுனை அறிமுகப்படுத்தி சிறந்த கருத்துக்களை சித்திரம் மூலம் வெளிப்படுத்தியவர்

7.சிறந்த கவிஞர்

பல நூறு பாடல்களை இயற்றியவர். இந்தப் பாடல்கள் சாகா வரம் பெற்றவை.

 

  1. சிறந்த கணவர்

தன் மனைவி செல்லம்மாவை உயிரினும் மேலாக நேசித்தார். சம உரிமை தந்து கை கோர்த்து தெரு வீதியில் அந்தக் காலத்திலும் சென்று புதுமை படைத்தார்.

  1. சிறந்த தகப்பன்

தன் குழந்தைகளை உயிரினும் மேலாக நேசித்தார். அவர்களுக்கு அன்பைக் குழைத்து அறிவைத் தந்தார். அவரைப் பற்றி அவரது குடும்பத்தினர் எழுதிய நூல்களில் அவரது அன்பைக் காட்டும் பல சம்பவங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

  1. சிறந்த கதாசிரியர்

ஞான ரதம் உள்ளிட்ட ஏராளமான படைப்புகள் அவர் சிறந்த கதாசிரியர் என்பதை உணர்த்தும்.

  1. சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்.

மகாகவியின் எழுத்துக்களில் ஆங்காங்கே நகைச்சுவை கொப்பளிக்கும்.சின்னச் சங்கரன் கதை நல்ல நகைச்சுவை கதையாக மிளிர்ந்தது.

  1. சிறந்த புதுக் கவிதை இயற்றிய புதுமையாளர்

வசன கவிதைகள் பலவற்றை இயற்றிய புதுமையாளர். காட்சி, புகழ் உள்ளிட்டவை இவரது வசன கவிதை  படைப்புகளை இனம் காட்டுபவையாகும்.

13.சிறந்த சொற்பொழிவாளர்

ஏராளமான மேடைகளில் அனல் பறக்கும் தேசிய உணர்வூட்டும் சொற்பொழிவுகளை ஆற்றியவர். ஆன்மீகச் சொற்பொழிவுகளையும் ஆற்றியவர்;

  1. சிறந்த மேலை இலக்கிய விற்பன்னர்.

ஷெல்லியின் பாடல்களில் தோய்ந்தவர். ஷெல்லி தாசன் எனப் புனைப்பெயரையே கொண்டார்.ஆங்கிலக் கவிஞன் பைரன், வால்ட் விட்மன் உள்ளிட்ட ஏராளமானோரின் கவிதைகளைப் படித்து உணர்ந்து அனுபவித்தவர்.

 

  1. மஹாத்மாவை இனம் கண்டவர்

மஹாத்மா காந்தி பஞ்சகத்தை இயற்றி இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு பாழ்பட்டு நின்ற பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த மஹாத்மா என்று போற்றினார். மஹாத்மாவை சென்னையில் சந்தித்து அவரது தலைமைக்கும் இயக்கத்திற்கும் ஆசி கூறினார்.

  1. திலகரைப் போற்றியவர்

திலகரிம் பக்தியும் ஈடுபாடும் கொண்டவர். வாழ்க திலகன் நாமம் பால கங்காதர திலகர் ஆகிய பாடல்களைப் பாடி அவரைப் போற்றியவர்.

  1. தேசபக்தர்களைப் போற்றியவர்

தாதாபாய் நௌரோஜி, லாலா லஜ்பத்ராய் உள்ளிட்ட பெரும் தலைவர்களைப் போற்றியவர்.

18.வ.உ.சிக்கு நெருக்கமானவர்

‘வ.உ.சி.க்கு வாழ்த்து’ பாடியவர். அவருடன் நெருங்கிப் பழகியவர்.

 

19.நிவேதிதாவைக் குருவாகக் கொண்டவர்

விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவியை 1906ஆம் ஆண்டு நடந்த கல்கத்தா காங்கிரஸில் கலந்து கொண்டு திரும்பும் போது சந்தித்து உபதேசம் பெற்றவர். நிவேதிதா தேவி துதி இயற்றிப் போற்றியவர். தனது இரு நூல்களை அவருக்கு சமர்ப்பணம் செய்தவர்.

  1. அரவிந்தருடன் நெருங்கிப் பழகியவர்

அரவிந்தரின் நட்பு புதுவையில் ஏற்பட்டது. அவருடன் அடிக்கடி அளவளாவி பல கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டவர். வேதத்தை அரவிந்தரிடம் கற்றார். அரவிந்தரும் பாரதியாரும் பரஸ்பரம் கொண்டிருந்த அன்பும் மதிப்பும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.

  1. தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தியவர்

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்று பாடியவர். சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்ய வேண்டும் என அறிவுரை பகன்றவர். தமிழைப் புதிய சிகரத்தில் ஏற்றியவர்.

22.சிறந்த இசை விற்பன்னர்

பல பாடல்களை – கிருதிகளை – தாளம், ராகத்தோடு இயற்றியவர். அவற்றை பலருக்கும் சொல்லித் தந்தவர். தமிழில் உள்ள இசைப் பாடல்களையும் கச்சேரிகளில் பாடுதல் வேண்டும் என முதன்முதலில் முழக்கம் இட்டவர்.

  1. சிறந்த பாடகர்

கணீரென்ற குரலில் தனது பாடல்களை ஆவேசத்தோடு அவர் பாடியதை ஆயிரக்கணக்கான மக்கள் கேட்டு மெய் சிலிர்ப்பது வழக்கம்.

  1. தேவார திவ்ய பிரபந்த விற்பன்னர்

தேவாரத்திலும் திவ்ய பிரபந்தத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அவற்றை அடியொற்றிய பாடல்களையும் இயற்றியவர்.

  1. சங்க இலக்கிய விற்பன்னர்

சங்க இலக்கியங்களைக் கற்றவர். இளங்கோ மீது ஈடுபாடு கொண்டவர். திருக்குறளைப் போற்றியவர்.

 

  1. கம்பனில் ஈடுபாடு கொண்டவர்

எல்லையற்ற தன்மையைக் கொண்டவர் என கம்பனைப் போற்றியவர்.கம்பன் பிறந்த தமிழ்நாடு என கம்பனையும் தமிழ் நாட்டையும் உச்சியில் ஏற்றிப் பாராட்டியவர்

  1. வேதம் புகழ்ந்தவர்

வேதம் உடையது இந்நாடு என வேதத்தைப் பெருமையாகப் பறை சாற்றிய ‘வேத அறிஞர்’ பாரதியார்.  ஏராளமான வேதக் கருத்துக்களை தன் கவிதைகளிலும்,கட்டுரைகளிலும் எடுத்துக் காட்டியவர். அரவிந்தருடன் வேத ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்.

27.ரஷிய புரட்சியை வரவேற்றவர்.

ஜார் மன்னன் வீழ, ஆஹா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி என ரஷிய புரட்சியை அழியாத கவிதை மூலம் பாராட்டியவர்.

இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்து விட்டான் ஜாரரசன் என்று பாடினார்.

28.பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து பாடியவர்

முதல் உலக மகா யுத்தத்தில் ஜெர்மனி பெல்ஜியத்தின் மீது படையெடுத்து அங்கிருந்த சுதந்திர அரசை வீழ்த்தியபோது திறத்தினால் எளியை ஆகிச் செய்கையால் உயர்ந்து நின்றதாக பெல்ஜியத்தைப் பாராட்டினார். துயருண்டோ துணிவுள்ளோர்க்கே என்று தன் கவிதையை முடித்தார்.

29.பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள் படும் பாட்டைக் கண்டு வருந்தியவர்

கரும்புத் தோட்டத்திலே ஹிந்து மாதர் படும் துன்பம் தீர ஒரு மருந்திலையோ என வேதனைப் பட்டார். எங்கு ஹிந்துக்கள் துன்பப்பட்டாலும் தனது வேதனைக் குரலை வெளியிட்டார்.

 

Hindu temple in Fiji

  1. உலக நிகழ்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்தவர்

தனது பத்திரிகை வாயிலாக அறத்தினால் நிமிர்ந்து நிற்கும் அரசுகளுக்கு ஆதரவு தந்தார். புரட்சியை வரவேற்றார். மறத்தினால் ஆளும் ஆட்சிகளை – பிரிட்டிஷ் ஆட்சி உட்பட அனைத்தையும் கண்டித்தார்.

  1. தீர்க்கதரிசி

ஆடுவோமே, பள்ளுப்பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று என்று தீர்க்கதரிசன வாக்குக் கூறியவர்.

  1. வெள்ளையரை விரட்ட குரல் கொடுத்தவர்

வெள்ளைப் பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே என்று வெள்ளையரை இகழ்ந்து சுதந்திரத்திற்காக வெகு ஜன எழுச்சியைத் தன் பாட்டாலும் செயலாலும் சொற்பொழிவாலும் ஏற்படுத்தியவர். பாரத தேசம் பெற்ற சிறந்த தவப்புதல்வர்.

அடுத்த இரு கட்டுரைகளுடன் இந்தத் தொடர் முடியும்.

 

குறிப்பு: மேலே கண்ட சிறப்புக்களை விளக்கும் விதத்தில் ஏராளமான பாடல்களையும் கட்டுரைகளையும் பாரதியார் படைத்துள்ளார்.பல அரிய சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன.

ஸம்ஸ்க்ருதத்தில் 650 நாடகங்கள்- நேருஜி தகவல் (Post No.5404)

Written by  London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 8 September 2018

 

Time uploaded in London – 8-25 am (British Summer Time)

 

Post No. 5404

 
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ஸம்ஸ்க்ருத மொழியின் சிறப்புகள் பற்றி எவ்வளவோ படிக்கிறோம். பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் எழுதிய டிஸ்கவரி ஆப் இந்தியா (DISCOVERY OF INDIA) என்ற நூலில் வேறு இடத்தில் கிடைக்காத பல செய்திகளை எழுதியுள்ளார்.

 

ஸம்ஸ்க்ருத மொழியில் பாஷா, காளிதாசன்,சூத்ரகன், ஹர்ஷர் முதல் ஒன்பதாம் நுற்றாண்டு முராரி வரை பலரும் நாடகங்களை எழுதினர். சில்வன் லெவி (SYLVAIN LEVY) என்ற பிரபல இந்தியவியல் அறிஞர் 189 ஆசிரியர்கள் எழுதிய 377 நாடகங்களின் பட்டியலை வெளியிட்டார். அதற்குப் பின்னர் வெளியான ஒரு பட்டியலில் 650 நாடகங்கள் இருப்பதாக நேருஜி தனது புஸ்தகத்தில் எழுதியுள்ளார்.

 

1924 ஆம் ஆண்டிலேயே சூத்ரகன் என்ற பிரபல ஸம்ஸ்க்ருத நாடகாசிரியர் எழுதிய ‘ம்ருச்ச கடிகம்’ (மண்ணியல் சிறுதேர்) நியூயார்க்கில் நாடக மேடை ஏறியதும் அது பற்றி நேஷன் என்ற பத்திரிக்கையின்  கலை விமர்சகர் ஜோஸப் வுட் க்ரட்ச் நீண்ட விமர்சனம் எழுதியதையும் அப்படியே கொடுத்துள்ளார் நேரு.

“அந்த நாடகம் யார் எழுதியது, எந்த நூற்றாண்டில் எழுதியது என்பதைவிட அதன் இதயத்தைத் தொடும் அம்சங்களும், உண்மையுமே மிகவும் கவர்ர்ந்திழுக்கிறது. இது போன்ற ஒரு தூய நாடகத்தை ஐரோப்பாவில் காண முடியாது” என்றார்.

 

ஷேக்ஸ்பியர் எழுதிய Mid Summer Night’s dream

‘மிட் சம்மர் நைட் ட்றீம்’ என்ற நாடகம் அந்தக் காலத்திலேயே , அதாவது 1892 ஆம் ஆண்டில்– ஸம்ஸ்க்ருத மொழியாக்கம் செய்யப்பட்ட செய்தியையும் எழுதியுள்ளார்.

 

 

1789-ஆம் ஆண்டில் ஸர் வில்லியம் ஜோன்ஸ் (SIR WILLIAM JONES) காளிதாசனின் சாகுந்தலம் நடகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டவுடன் மேலை உலகம் முழுதும் பெரும் வியப்பும் மகிழ்ச்சியும் உண்டானதாகவும் உடனே அவரது மொழி பெயர்ப்பின் அடிப்படையில் ஜெர்மன், பிரெஞ்ச், இதாலிய மொழிகளில் சாகுந்தலம் வெளியானதாகவும்நேருஎழுதுகிறார். அது மட்டுமல்ல கெதே (GOETHE) போன்ற பெரும் புலவர்களை இது மிகவும்  ஈர்த்தது என்கிறார்.

நாடகங்களுக்கு அறிமுகம்/ பீடிகை (PROLOGUE) எழுதுவது ஸம்ஸ்க்ருத நாடகங்களில் மட்டுமே உண்டு. காளிதாசன் நாடகங்களைப் பார்த்துத்தான் பாஸ்ட் (FAUST) போன்ற நாடகத்தில் அறிமுகம்/ பீடிகை இடம்பெற்றது என்றும் சொல்கிறார்.

 

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஸம்ஸ்க்ருதப் பேராசிரியர் வில்ஸன் (WILSON) பவபூதி, காளிதாஸன் நாடகங்களைப் புகழ்ந்து எழுதியதையும் மேற்கோள் காட்டுகிறார். ‘இசை போன்று ஒலிக்கும் மஹத்தான காவியங்கள்’ என்பது வில்ஸனின் பாராட்டுரை.

 

2800 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி விதித்த வரம்புக்குள் இவ்வளவும் நடந்துள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பின்னர் நாடகம் முதலிய கலைத்துறைகள் படிப்படியாகக் குறைந்தமைக்கு இஸ்லாமிய மதத்தின் கலை வெறுப்பே காரணம் என்று ஒரு கருத்து உள்ளது. இந்தக் கலைகள் அனைத்தும் இந்தியாவின் தேசீய மதத்தைத் தழுவி இருந்ததால் ஆட்சியாளரின் ஆதரவு கிடைக்காமல் போயிற்று என்பதைக் குறிப்பிட்ட நேரு இதை முழுதும் ஏற்பதற்கில்லை. ஏனெனில் அதற்கு முன்னரே கலைகளின் வீழ்ச்சியைக் காண முடிகிறது என்பார்.

 

ஸர் வில்லியம் ஜோன்ஸ் சொன்ன கருத்தை அப்படியே கொடுத்துள்ளார்.

 

“சம்ஸ்க்ருத மொழி, எவ்வளவு பழமையாக இருக்கட்டும்; அதன் அமைப்பு மிகவும் அதிசயமானது. கிரேக்க மொழியை விட சிறப்பானது; லத்தீன் மொழியைவிட வளம் பொருந்தியது; இரண்டு மொழிகளையும் விடசெம்மையானது; ஆயினும் வியப்பான ஒற்றுமையைக் காணமுடிகிறது. வினைச்சொற்களின் வேர், இலக்கண அமைப்பு ஆகியவற்றில் அதிக ஒற்றுமை இருப்பதை தன்னிச்ச்சையாக நடந்தது என்று எண்ண முடியாது. எந்த ஒரு மொழி அறிஞனும் அவை ஒரே மூலத்திலிருந்து பிறந்த மொழிகள் என்றே எண்ணுவான். அந்த மூல மொழி இப்போது இல்லாமல் இருக்கலாம்”.

 

நேருவும் தனது சொற்களில் சம்ஸ்க்ருத்த மொழியின் வளமை, பழமை, செம்மை ஆகியவற்றைப் பாராட்டுகிறார்.

 

பாணினி பற்றி (ABOUT PANINI)

உலக மஹா இலக்கண மேதை, உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதிய, பாணினி பற்றி ஜவஹர்லால் நேரு, டிஸ்கவரி ஆப் இந்தியா- வில் கூறுகிறார்:-

“கி.மு. ஆறாவது அல்லது ஏழாவது நூற்றாண்டிலேயே பாணினி என்பவர் ஸம்ஸ்க்ருத இலக்கணத்தை எழுதிவிட்டார். அவருக்கு முந்தி இருந்த இலக்கண வித்தகர்களின் பெயர்களையும் அவர் செப்புகிறார். அவரது காலத்தில் ஸம்ஸ்க்ருத மொழி செம்மொழியாகி  எப்போதும் வளரும் இலக்கியமாக உருப்பெற்றது. அவர் எழுதிய புத்தகம் வெறும் இலக்கண புஸ்தமன்று. அதற்கும் மேலானது . பாணினியின் இலக்கணம் (அஷ்டாத்யாயி) பற்றி சோவியத் (ரஷ்ய) பேராசிரியர் ஸ்டெசர் பாட்ஸ்கி பகர்கிறார்: ‘

‘மனித சிந்தனையின் மஹத்தான சாதனைப் படைப்புகளில் இதுவும் ஒன்று. இதுவும் இதன் மீது பதஞ்சலி எழுதிய மஹாபாஷ்யம் என்னும் பேருரையும் இந்திய விஞ்ஞான சிந்தனையின் அடிப்படையாகத் திகழ்கின்றன.’

 

பாணினிக்குப் பிறகு பல வியாக்கியானங்களும் பிற்சேர்க்கைகளும் வந்த போதும் இன்றும் அது, ஸம்ஸ்க்ருத இலக்கணத்தின் அளவுகோலாக நிற்கிறது. பாணினி யவன லிபி பற்றிச் சொல்லுவது வியப்பானது – அலெக்ஸாண்டர் படையெடுப்புக்கு மிக நீண்ட காலத்துக்கு முன்னரே இந்தியாவுக்கும் கிரேக்க நாட்டுக்கும் தொடர்பு இருந்ததை இது காட்டுகிறது.

 

பாணினி பல்வேறு நாட்டியங்கள் பற்றி உரைப்பது 2700 ஆண்டுகளுக்கு முன்னரே நாட்டியம், நாடகம் வளர்ந்ததைக் காட்டுகின்றது.

 

அடிக்குறிப்பு:

கீத் போன்றோர் கி.மு.300 வாக்கில் பாணினி இருந்ததாகச் சொன்னாலும் அவர் புத்தர் காலத்துக்கும் முந்தியவர் என்பது தெளிவாகத் தெரிகிறது. பாணினி சொல்லும் விஷயங்களில் எங்குமே புத்தமத வாசனை துளிக்கூட இல்லை.

 

 

வட மேற்கு இந்தியாவில் தற்போதைய பெஷாவர் (பாகிஸ்தானில் உள்ளது) நகருக்கு அருகில்  புத்தர் பிறபதற்கு முன்னர் (2700 ஆண்டுகளுக்கு முன்னர்) தட்ச சீலம் நகரில் ஒரு பல்கலைக்கழகம் இருந்தது. விஞ்ஞானம் மருத்துவம் கலைகள்,சம்யம் ஆகியவற்றைப் போதித்தது (இதுதான் உலகின் முதல் பல்கலைக்கழகம்).அதில் கல்வி கற்க தொலைதூரப் பிரதேசங்களில் இருந்து பிராஹ்மணர்களும் பிரபுக்களின் பிள்ளைகளும் பயமின்றி, ஆயுதப் பாதுகாப்பின்றி பயணம் செய்ததை ஜாதக் கதைகளில் காண்கிறோம். அதில் படித்துப் பட்டம் பெறுவதை பெறும் கௌரவமாகக் கருதினர். பாணினியும் இந்த இடத்தில் கல்வி கற்றவரே.முன்காலத்தில் பிராஹ்மண (வேத) பாடங்கள் கற்பிக்கப்பட்டது. பிற்காலத்தில் பௌத்தம் கற்பிக்கும் கேந்திரமாக மாறியது.

 

(அடைப்புக் குறிக்குள் இருப்பது நான் சேர்த்த விளக்கங்கள்.  நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர், சிறைவாசத்தின்போது நேரு எழுதியது டிஸ்கவரி ஆப் இந்தியா. அனைவரும் படிக்க வேண்டிய நூல்)

 

–சுபம்–

செம்பைப் பொன்னாக்கி தந்த கொங்கண சித்தர்! (Post No.5403)

WRITTEN BY S NAGARAJAN

Date: 8 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-58 AM (British Summer Time)

 

Post No. 5403

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ச.நாகராஜன்

 

செம்பைப் பொன்னாக்கி அனைவருக்கும் தந்த கொங்கண சித்தர்! (Post No.5403)

 

 

செம்பைப் பொன்னாக்கும் ரஸவாதக் கலையில் தேர்ந்தவர்கள் சித்தர்கள்.கருணை பெருக ஏழைகளுக்கும் தகுந்தவர்களுக்கும் செம்பைப் பொன்னாக்கித் தருவது அவர்களின் வழக்கம். இப்படிப்பட்ட சித்தர்களுள் குறிப்பிடத்தகுந்த பெரிய சித்தர் கொங்கண சித்தர்.

இவர் கொங்கு மண்டலத்தில் உள்ள ஊதியூர் மலையில் வசித்து வந்தார்.

இவரைப் பற்றி கொங்கு மண்டல சதகம் 37ஆம் பாடலில் சிறப்பித்துக் கூறுகிறது:

தோற்றிய செம்பு தராவீயம் பித்தளை சூழ்பச்சிலைச்

சாற்றுடனாக ரசங்கந் தகமிட்டுத் தந்திரமாய்

தேற்றுந் தவம்பெற்ற கொங்கணச் சித்தர்முன் செம்பொன்செய்து

மாற்றுரை கண்டது பொன்னூர்தி யூர்கொங்கு மண்டலமே

 

இதன் பொருள் :- செம்பு,பித்தளை முதலிய உலோகங்களுடன் பச்சிலைச் சாறு, ரச கந்தகம் முதலியன சேர்த்துப் பொன்னாக அதை மாற்றிக் காணும் கொங்கண சித்தர் வசிக்கும் ஊதியூர் மலையும் கொங்கு மண்டலத்தில் உள்ளதே ஆகும்.

 

இவர் பற்றிய வரலாறு ஒன்று உண்டு.

மகதநாட்டு மன்னனுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. அதைப் பார்த்த சுராநந்த முனிவர் என்பவர் அதை நீடித்து வாழ்வாயாக என்று ஆசி கூறிக் காப்பிட்டார்.

சகல கலைகளும் கற்ற அந்த அரசகுமாரன் தேச சஞ்சாரத்தால் ஞானத்தைப் பெறலாமென்று எண்ணினான். அதைத் தன் தந்தைக்கு அவன் தெரிவிக்க உரிய பரிவாரங்களோடு மகனை அனுப்பி வைத்தார் தந்தை. பல ஊர்களையும் சென்றடைந்த பின் ஆதியூருக்கு வந்தான் அரசகுமாரன். அங்கு சுராநந்த முனிவர் தோன்றி அவனுக்கு முக்கால அடைவு உணர்வித்து ஆசி அருளினார்.

இந்த கொங்கண ராஜன் மேல் நாட்டு யாத்திரையாகக் கிளம்பி பல தலங்களையும் தரிசித்து தென் கரை நாட்டில் கொங்கணேசரைத் தரிசித்து அங்கே தங்கி இருந்தான். ஒரு நாள் புன்னாக மர நிழலிலே சிவனைத் தரிசித்து உள்ளமுருகுப் பூசிக்கும் காலத்தில் இறைவன் குருவடிவாகத் தோன்றி அஷ்ட மா சித்தியையும் சிவ யோகத்தையும் தெளிவாக உபதேசித்து அருளினார்.

கொங்கணர் தாமிர முதலியவற்றை பொன்னாக மாற்றும் சித்தியைப் பெற்றதால் விரும்பினோருக்கு அப்படிப் பொன்னாக மாற்றிக் கொடுத்து வந்தார். ஒரு சமயம் ஆகாயத்தில் பறந்த கொக்கு ஒன்று அவர் மீது எச்சமிட அதைக் கொங்கணர் விழித்துப் பார்க்கவே அது சாம்பலானது.

கொங்கணருக்கு இன்னொரு சித்தரான கோரக்கநாதரின் நட்பும் உண்டானது.

அப்பிரமேய தல புராணம் கூறும் செய்யுள் இது:-

பாத பத்திரம் பற்பல மூலி கொண்

டூது கற்புட முன்வலி யெய்திய

சூத வேதைசிந் தூரத் துகளினால்

வாத சித்தி கனகம் வழங்கினான்

தென்கரை நாட்டில் உள்ள ஊதியூர் சிவபெருமான் கொங்கணேசர் என்ற திருநாமம் கொண்டவர். இங்கு சிவபிரானின் அநுக்கிரகம் பெற்று வசித்தலால் இறைவன் திரு நாமமான கொங்கணர் என்ற பெயரைப் பெற்று வாழ்ந்து வந்தார் இந்த சித்தர்.

இராசிபுர நாட்டிலும் கொங்கண சித்தர் மலை, கொங்கண சித்தர் ஆலயம் ஆகியவை உள்ளன.

கொங்கண சித்தர் அருளிச் செய்த நூல்களாக நம்மிடையே இன்று பஞ்சபட்சி, வாதம், வைத்தியம் ஆகிய நூல்கள் உள்ளன.

 

கொங்கணகிரியில் அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்புகழ் ஒன்று உண்டு:

 

ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள

ரந்திபக லற்றநிலை                        வருள்வாயே

அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வழுத்தியுனை

அன்பொடுது திக்கமன                   மருள்வாயே

தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்தி பெற

சந்திரவெ ளிக்குவழி                        யருள்வாயே

தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்

சம்ப்ரமவி தத்துடனே                       வருள்வாயே

மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன

முன்றனைநி னைத்தமைய                  அருள்வாயே

மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரக்ஷைபுரி

வந்தனைய புந்தியினை                     யருள்வாயே

கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்

கொண்டுஉட லுற்றபொரு                   ளருள்வாயே

குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு

கொங்கணகி ரிக்குள்வள்ர்                    பெருமாளே

அருமையான அர்த்தத்தைக் கொண்ட இந்த அரிய திருப்புகழின் இறுதியில்,

கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்

கொண்டுஉட லுற்றபொரு                   ளருள்வாயே

குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு

கொங்கணகி ரிக்குள்வள்ர்                    பெருமாளே

என்று வரும் வரிகள் கொங்கண கிரியின் பெருமையைக் கூறுவதைக் காணலாம்.

***

கேரள யானைத் தந்த சிம்மாசனம் லண்டனுக்கு வந்த கதை! (Post No.5399)

Research article written by by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 6 September 2018

 

Time uploaded in London – 18-55  (British Summer Time)

 

Post No. 5399

 

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது தமிழ்ப் பழமொழி. ஏன்?

தந்தத்திற்கு அவ்வளவு மதிப்பு. உலகெங்கிலும் இந்திய தந்தப் பொருட்கள் உள்ளன. இப்பொழுது இங்கிலாந்திலும், ரஷ்யாவிலும், மேலும் பல நாட்டு மியூஸியங்களிலும் இந்திய தந்தப் பொருட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே நான் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் பழங்கால எகிப்தில் இந்திய தந்தச் சிற்பங்கள் இருப்பது பற்றி எழுதியுள்ளேன். இதோ மேலும் சில சுவையான செய்திகள்.

இங்கிலாந்தில் இந்திய யானைத் தந்தம்

சென்னை அரும்பொருட் காட்சியகத்தின் சூபெரின்டெண்டாக இருந்த எட்வர்ட் தூர்ஸ்டன் ஒரு செய்தியைக் தெரிவித்ததார். கேரளத்தில் மன்னர் பரம்பரையில் வந்த ராம வர்மா ஒரு முறை ஐந்து அற்புதமான தந்தச் சிற்பங்களைப் பார்த்தார். அவற்றில் மனதைப் பறிகொடுத்து தந்த வேலை செய்யும் சிற்பிகளுக்கு பேராதரவு வழங்கினார். அவரை அடுத்து மன்னராக வந்த மார்த்தாண்ட வர்மா அதில் மேலும் ஈடுபட்டார். அவர் ஒரு பெரிய தந்த சிம்மாசனத்தைச் செய்து அதை  விக்டோரியா மாஹாராணிக்கு அனுப்பி வத்தை வைத்தார். உடனே பிரிட்டிஷார் அதை 1851 ஆம் ஆண்டு லண்டன் பொருட்காட்சியில் மக்கள் பார்வைக்கு வைத்துவிட்டு வின்ட்ஸர் அரண்மனைக்கு எடுத்துச் சென்றன்ர்.

லண்டனில் உள்ள மியூஸியங்களிலும் தனியாரிடமும் நிறைய தந்தக் கலைப் பொருட்கள் உள்ளன. மூக்குப்பொடி டப்பி முதல் ஆங்கில எழுத்துகளைச்  சிறுவர்களுக்கு கற்பிக்கும் அகரவரிசை வரை ஆயிரக்கணக்கான கலைப் பொருட்கள் இந்திய அரண்மனைகளிலும் இல்லங்களிலும் உள. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மாஸ்கோவுக்குச் சென்ற பொழுது ஒரு பெரிய தந்த ஸ்க்ரீனை ரஷ்யாவுக்குப் பரிசாகக் கொடுத்தார். 1955ஆம் ஆண்டில் கொடுத்தது இப்பொழுதுஅங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

உலகம் முழுதுமுள்ள செல்வங்களைக் கொள்ளை அடித்து வந்த பிரிட்டிஷார், லண்டன் பிரிட்டிஷ் மியூஸியத்தில் அஸீரிய நாகரீக தந்த கலைப் பொக்கிஷத்தை வைத்துள்ளனர். ஹைதராபத்தில் சாலார் ஜங் மியூஸியத்தில் சிறப்புமிக்க கலை வேலைப்பாடுகள் மிகுந்த தந்த கைவினைப் பொருட்கள் காட்சியில் உள்ளன. பெரும் பணக்காரர்கள் சதுரங்கக் காய்களை தந்தத்தில் செய்தனர்.

மும்பையிலுள்ள பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மியூஸியத்தில் நிறைய தந்த கைவினைப் பொருட்கள் இருக்கின்றன. நாடு முழுதும், குறிப்பாக கேரளத்தில் நிறைய இடங்கள், தந்தச் சிற்பங்களுக்கு பெயர் போன ஊர்களாகும்.

சிந்து- ஸரஸ்வதி சம வெளி நாகரீக காலத்தில் பெண்கள் தந்தத்தினால் ஆன சீப்புகளைப் பயன்படுத்தியதும் தெரிகிறது.

அது மட்டுமல்ல தமிழ், ஸம்ஸ்க்ருத இலக்கியம் முழுதும் தந்தம் பற்றிய அரிய விஷயங்கள் இருப்பது எனது ஆராய்ச்சியில் தெரிய வந்தது.

 

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்

 

கி.மு இரண்டாம் நூற்றாண்டில் காளிதாசன் வாழ்ந்தான் என்று நான் சங்க இலக்கிய உவமைகள் மூலம் நிரூபித்தேன். உலகப் புகழ் பெற்ற ஸம்ஸ்க்ருதக் கவிஞன் காளிதாஸன் எழுதிய ரகுவம்ஸ காவியத்திலொரு அற்புதமான செய்தி வருகிறது:-

ரகு வம்ஸம் 17-21

மன்னன் அதிதி, நாற்கால் மண்டபத்தில் அமர்ந்து அபிஷேகம் செய்துகொண்டபின் உடை உடுப்பதாற்காக அருகிலோர் உள்ள மற்றோர் அறையில் வைக்கப்பட்டுள்ள யானைத் தந்த ஆசனத்தில் உட்கார்ந்தான் (17-21, ரகு வம்சம்)

 

யானைத் தந்த ஆசனம்= கஜ தந்த ஆசனம்

 

இதே போன்ற ஒன்றைத் தான் கேரள மன்னர் , விக்டோரியா மஹா ராணியாருக்கு   செய்து அனுப்பினார். சிற்ப வேலைகள் அனைத்தும் பரம்பரையாக கற்பிக்கப்பட்டதால் நூற்றாண்டுக் காலத்திலும் அது பெரிதும் மாறி இருக்காது என்று நம்பலாம்.

 

கலித்தொகையில் குறிஞ்சிக் கலியில் கபிலர் பாடலில் (40-2) பாடுகிறார்,

“வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து

ஏந்து மருப்பின் இன வண்டு இமிர்பு ஊதும்

சாந்த மரத்தின் , இயன்ற உலக்கையால்

ஐவன வெண்ணெல் அறி உரலுள் பெய்து

புலியால் கொல்லப்பட்ட யானையின் தந்தத்தை எடுத்து வந்து செய்த உலக்கை, மற்றும் சந்தன உலக்கையால் மூங்கில் நெல்லைக் குத்தியதாக கபிலர் பாடுகிறார்.

அகநானூற்றில் தொல்கபிலர் பாடிய பாடலில் (282), ஒரு வேடன் காட்டிலே யானையைக் கொன்று கொண்டு வந்த தந்தத்தால் தங்கத்தைத் தோண்டி எடுக்க முயன்றான். ரத்தினக் கற்களுடன் தங்கமும் வந்தது. அந்த நேரத்தில் கோடாரி போல பயன்பட்ட யானைத் தந்தம் ஒடியவே அதிருந்து முத்துக்களும் சிதறின என்கிறார் ( யானையின் மருப்பில்முத்துக்கள் இருப்பதாக , காளிதாசனும் தமிழ்ப் புலவர்களும் நம்பினர்)

 

“பெருமலைச் சிலம்பில் வேட்டம் போகிய

செறிமடை அம்பின் வல்வில் கானவன்

பொருது தொலை யானை வெண்கோடு கொண்டு

நீர்திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வோன்

கண்பொருது இமைக்கும் திண்மணி கிளர்ப்ப

வைத்துதி வால் மருப்பு ஒடிய உக்க

தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு”

 

நல்ல கற்பனை! ஆயினும் அக்காலத்தில் வேடுவர்க்கு யானைத் தந்தம் கிடைத்ததால் அதைக் கொண்டு பல்வேறு பண்டமாற்றம் செய்த தகவல்களுமுள.

பாலி என்ற நகரில் ஒரு தெரு முழுதும் தந்த வேலைச் சிற்பிகள் இருந்தனர்.

 

சாஞ்சியில் கிடைத்த 2200 ஆண்டுப் பழமையான கல்வெட்டு விதிசா நகரில் இருந்த தந்த வேலை சிற்பிகள் பற்றி செப்புகிறது.

வராஹ மிஹிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதாவில் கட்டில் கால்கள் தந்தத்தால் செய்யப்பட வேண்டும் என்கிறார். அதற்கெல்லாம் முன்னதாக வால்மீகி எழுதிய ராமாயணத்தில் அயோத்தியில் தந்த வேலைச் சிற்பிகள் இருந்தது பற்றிச் சொல்கிறார்.

 

சூத்ரகர் எழுதிய ‘மிருச்ச கடிகம்’ நாடகத்தில் ஒரு நாட்டிய மாதின் முற்றம் தந்தத்தால் ஆனதாகச் சொல்கிறார்.

 

ஹெர்குலேயம், பெக்ராம் (Herculeum, Begram) போன்ற வெளிநாட்டு நகரங்களில் இந்திய தந்தப் பொருட்கள் கிடைத்தன. சிந்துவில் பிராமணாபாத் நகரில் சதுரங்கக் காய்கள் கிடைத்தன.

 

ஆக இலக்கியமும் கல்வெட்டும் தொல்பொருத் துறை அகழ்வும் தந்தம் பற்றிப் பேசுவதால் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் தந்த வேலையில் சிறந்து விளங்கியது தெரிகிறது.

போர்ச்சுகீஸிய, ஆங்கில வரலாற்று ஆய்வாளர்களும் நமது தந்த வேலை பற்றிப் பகர்ந்தனர்.

வெளிநாட்டு தந்தப் பொருட்கள் பற்றிய குறிப்புகள் எனது நேற்றைய ஆங்கிலக் கட்டுரையில் காண்க

–subham–

மஹாபாரதப் பெரும் போர் – துரியோதனனின் கேள்வி! ((Post No.5397)

WRITTEN BY S NAGARAJAN

Date: 6 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 5-49 AM (British Summer Time)

 

Post No. 5397

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

போர் போர், மஹாபாரதப் பெரும் போர் – துரியோதனனின் கேள்வி!

 

ச.நாகராஜன்

 

போர் என்பது இனி தவிர்க்க முடியாததாக ஆகி விட்டது.

பஞ்ச பாண்டவர்களை ஒழித்தால் தான் நிம்மதியாக அரசாள முடியும் என்ற இறுதி முடிவுக்கு துரியோதனன் வந்து விட்டான்.

போர் ஆயத்தங்கள் முடிகின்ற நிலை.

 

‘,ஹூம், அவர்களிடம் வெறும் ஏழு அகக்ஷௌஹிணி சேனை மட்டும் தான். என்னிடமோ பதினோரு அக்ஷௌஹிணி சேனை.

ஒருவனை ஒருவன் வீழ்த்தினால் கூட மிச்ச்ம் நாலு மிஞ்சும் – வெற்றியுடன். அது மட்டுமா,  குடும்பத்தில் அனைவருக்கும் பெரியவரான பீஷ்மர் என் பக்கம். அனைவருக்கும் வில் வித்தை கற்றுக் கொடுத்த துரோணர் என் பக்கம். ஆசார்ய கிருபர் என் பக்கம். அருமைத் தம்பிகள், மாமா சகுனி, இன்னும் ஏராளமான ராஜாக்கள்! அட,இது போதாதா, வெற்றிக்கு” என்று இவ்வாறு எண்ணி மகிழ்ந்தான் துரியோதனன்.

 

ஆனால் ஒரே ஒரு உறுத்தல்.

 

அந்த மாமாயக் கண்ணன் அவர்கள் பக்கம். அவன் ஏதாவது மாயாஜாலம் செய்து விடுவானோ – துரியோதனனுக்கு இந்த பயம் சற்று இருந்தது.

 

அவனுக்குப் பதில் தெரிய வேண்டிய கேள்வி ஒன்றே ஒன்று தான்!

 

வெற்றி நிச்சயம் என்ற போதிலும் கூட போர் எப்போது முடியும், எத்தனை நாள் தான் நடக்கும்?

ஒரு நாள அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்ட எண்ணினான். இரவு முழுவதும் சிந்தனை.

 

இரவு விடிந்ததும் பிதாமஹர் பீஷ்மரை நோக்கி துரியோதனன் வினவினான்: “இதோ பிரம்மாண்டமான இந்த பாண்டவ சேனையை எவ்வளவு காலத்தில் வெல்வீர்?”

 

இதைக் கேட்ட பீஷ்மர் பதில் அளித்தார்: “ பதினாயிரம் காலாட்கலையும், ஆயிரம் தேராளிகளையும் ஒரு பாகமாகச் செய்து பாண்டவர்களின் சேனையை நாள் தோறும் அழிப்பேன். இது எனது பாகமாகக் கொள்கிறேன். ஓ! பாரத! அல்லது யுத்தத்தில் நின்று கொண்டு லட்சம் பேர்களைக் கொல்கின்ற மஹாஸ்திரங்களை விடுவேன் என்றால் ஒரு மாதத்தில் கொல்லுவேன்”

 

துரியோதனன் இப்போது துரோணர் பக்கம் திரும்பினான்: “ஓ! ஆசார்யரே! நீர் பாண்டுபுத்திரர்களின் சேனைகளை எவ்வளவு காலத்தில் வெல்லுவீ ர்?”

 

துரோணர் அவனை நோக்கிச் சிரித்துக் கொண்டே பதில் கூறினார்:” கிழவனாயிருக்கிறேன். சக்தியும் முயற்சியும் எனக்குக் குறைந்து விட்டன. பாண்டவ சேனையை பீஷ்மர் போல் ஒரு மாதத்தில் எரிப்பேன் என்பது என் எண்ணம். இது தான் என் சக்தியின் அளவு. இது தான் என் வலிமையின் அளவு”

துரியோதனன் கிருபரை நோக்க அவர், “இரண்டு மாதங்களில் கொல்வேன்” என்றார்.

 

அஸ்வத்தாமன் பத்து தினங்களில் பாண்டவ சேனையை வதம் செய்வதாக பிரதிக்ஞை செய்தார்.

கர்ணனோ ஐந்து தினங்களில் பாண்டவரை வதம் செய்வேன் என்று பிரதிக்ஞை செய்தான்.

உள்ளதிலேயே குறைந்த காலம்; ஐந்தே நாட்கள்! பாரதப் போரை முடிவுக்கு கொண்டு வந்து விடுவேன்! !கர்ணனின் வாக்கு!

கர்ணனின் இந்த வார்த்தையைக் கேட்ட கங்காபுத்திரரான பீஷ்மர்  ஹாஹா என்று சப்தத்துடன் சிரித்தார்.

 

“ஓ! ராதையின் புத்திரா! கர்ணா! தேரில் ஏறி வருகின்ற அர்ஜுனனை நெருங்காத வரையில் நீ இவ்விதம் நினைப்பாய். உன்னாலே இப்படியும் இதற்கும் மேலும் இஷ்டப்படி சொல்லுவதற்கு முடியும்” என்றார் பீஷ்மர்.

இந்த விஷயங்களை தனது ஒற்றர் மூலம் அறிந்து கொண்ட தர்மர் தனது தம்பிகளை நோக்கி நடந்த விஷயங்களைச் சொன்னார்.

 

பின்னர் அர்ஜுனனை நோக்கி, “நீ எவ்வளவு காலத்தில் பகைவர்களை நாசம் செய்வாய்?” என்று கேட்டார்.

அர்ஜுனன், “ நான் சத்தியம் தவறாமல் சொல்கிறேன். கிருஷ்ணனின் சகாயத்துடன் தேவர்களோடு கூடிய மூவுலகங்களையும்  எல்லா சராசரங்களையும் சென்றதையும் இருப்பதையும் இனி உண்டானதையும் ஒரு நிமிஷத்தில் கொல்லுவேன்” கிருஷ்ணன் எதை விரும்புகிறானோ அதன் படியே ஆகும்! வேறு விதம் ஆகாது.  பாசுபதாஸ்திரம்  என்னிடம் இருக்கிறது. அதை பீஷ்மரும் அறியமாட்டார். துரோணருக்கு, அது தெரியாது. கிருபருக்கும் தெரியாது. அஸ்வத்தாமனும் அறியான்! எனில் கர்ணனுக்கு மட்டும் எப்படித் தெரியும்?

 

என்றாலும் திவ்ய அஸ்திரங்களினாலே  சாமான்ய மனிதர்களைக் கொல்வது உசிதமில்லை. ஓ! பாண்டவரே! ஒருவராலும் வெல்லப்படாத சிகண்டி, யுயுதானன், திருஷ்டத்யும்னன், பீமசேனன், நகுல ஸஹதேவர், யுதாமன்யு, உத்தமௌஜஸ், விராட துருபதர்கள், சங்கன், கடோத்கஜன், அவனது புத்திரனான் அஞ்சனபர்வா, சாத்யகி,அபிமன்யு, திரௌபதியின் ஐந்து புத்திரர்கள் ஆகிய இவர்கள் தேவர்களுடைய சேனையைக் கூட வெல்வார்கள். அதே போல கோபத்தால் நீர் எந்த மனிதனைப் பார்ப்பீரோ அவன் சீக்கிரம் இல்லாமல் போய் விடுவான் என்பது நிச்சயம் என்று உம்மை நான் அறிகிறேன்.” என்று பதில் கூறினான்.

 

ஒரு மாதம் நடக்குமா, பத்து மாதம் நடக்குமா, அல்லது ஐந்து நாட்கள் நடக்குமா? அர்ஜுனன் கூறியது போல ஒரு நிமிடத்தில் முடியுமா? அல்லது தர்மரின் ஒரு கோபப் பார்வையே போதுமா?

அர்ஜுனன் கணித்த படி கிருஷ்ணன் எதை விரும்புகிறானோ அதுவே நடக்கும்!

 

மாமாயக் கண்ணன் முன்பே முடிவு செய்து விட்டான்.

படிப்படியாக பதினெட்டு நாட்களில் களை எடுத்து வேருடன் பகைவ்ரை அழிப்பதென்று! அவன் எடுத்த முடிவை யாரே மாற்ற வல்லார்?

 

அற்புதமான தர்ம யுத்தம் கோரமாக நடந்தது.

தர்மம் வென்றது. பாவம் தோற்றது.

போர் எனில் இது போர்! புண்ணியத் திருப் போர்!

பாவிகள் ஒழிந்தனர்; புண்ணியர் ஜெயித்தனர்!

 

***

குறிப்பு : –  வியாச பாரதம், உத்யோக பர்வம் 193, 194 அத்தியாயங்களின் சுருக்கத்தைத் தான் மேலே பார்த்தோம். விரிவாக படிக்க விரும்புவோர், ம.வீ.இராமானுஜாரியாரால் பதிப்பிக்க்ப் பெற்ற ம்ஹாபாரதம் தமிழ் மொழிபெயர்ப்பு நூலைப் படிக்கலாம்.

-subham-

 

ரிக் வேதத்தில் தமிழ் சொற்கள்! (Post No.5392)

RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN

 

swami_48@yahoo.com

Date: 4 September 2018

 

Time uploaded in London – 6-34 am (British Summer Time)

 

Post No. 5392

 

TAMIL WORDS IN THE RIG VEDA

உலகின் மிகப்பழைய நூல் ரிக்வேதம். கி.மு 1700 முதல் கி.மு.6000 வரை பலராலும் தேதி குறிப்பிடப்பட்ட நூல். இந்துக்களைப் பொறுத்தமட்டில் இதன் பழமைக்காக மதிக்கவில்லை. வேதம் இன்றி இந்து மதம் இல்லை. இந்தப் பெருமைமிக்க நூலில் நிறைய தமிழ் சொற்கள் இருக்கின்றன. மொழியியல் விதிகளைப் பயன்படுத்திப் பார்த்தால் மறைந்திருக்கும் மேலும் பல தமிழ்ச் சொற்கள் மேலுக்கு வரும்.

 

எதற்காக இந்த ஆராய்ச்சி?

 

நிறைய பேர் ரிக் வேத ஸம்ஸ்க்ருதம் பழமையானது என்றும் அதற்குப் பின்னர் வந்த பாணினி-காளிதாசன் கால ஸம்ஸ்க்ருதம் வேறு என்றும் சொல்லுவர். ஓரளவுக்கு அது உண்மைதான். இது எல்லாப் பழைய மொழிகளுக்கும் பொருந்தும். பழங்கால தமிழ், ஆங்கிலம் ஆகிய எந்த மொழியின் பழைய இலக்கணமும் வேறு; சொற்களின் பொருளும் வேறு.

இவ்வளவு பழமை வாந்த நூலில் உள்ள சொற்களை நாம் இன்றும் பயன்படுத்துவது வியப்புக்குரிய விஷயம்!

 

இதோ சில தமிழ்ச் சொற்கள்:-

எண்கள் பற்றி:-

ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் உள்ளன. அடைப்புக்குறிக்குள் உள்ள எண்களில்முதலில் மண்டலம், பின்னர் மந்திரத் துதியின் எண், அதிலுள்ள மந்திர வரியின் எண் என்ற வரிசையில் கொடுத்துள்ளேன். இந்த எண்களை எடுக்க உதவிய நூல் பகவான் சிங்கின் ‘வேதிக் ஹரப்பன்ஸ்’ Vedic Harappans என்ற நூலாகும்.

 

உஷ் ட் ர – ஒட்டகம் (ரிக். 1-138-2; 8-5-37;8-6-48)

கர்தப- கழுத (ர=ல)/ கழுதை (1-29-5; 3-53-23)

காகம்பிர- காகம் (6-48-17)

மயூர- மயில் (1-191-4; 3-45-1; 8-1-25)

சிம்ஹ- சிங்கம் (5-44-1)

உட்ச- ஊற்று (2-16-7)

கூப – கூவம்/ கிணறு 1-105-17

குல்யா – குளம் , கால்வாய்

நீர் – நீர்

பூமி-புவி 2-14-7

யூப – 5-2-7 சங்கத் தமிழ்

புஷ்ப/ பூ – அதர்வ 8-712

பலி- 1-70-9

மது- தேன் 1-90-6

மத்ஸ்ய/ மச்ச – 10-68-8

ரத்ன- 1-20-7

ரஜ்ஜுப் பொருத்தம் – ரஜ்ஜு 1-162-8

ராஜசூயம்- அதர்வ – 4-8-1

புறநானூற்றின் அடிக்குறிப்பில் ராஜசூயன் வேட்ட பெருநற்கிள்ளி என்ற பெயர் உள்ளது

சங்கு- அதர்வ 4-10-1

களம்- நெல் அடிக்கும் களம் (10-48-7)

XXXX

 

சில சொற்களை அப்படியே தமிழ்க் கவிதைகளில் பயன்படுத்தியுள்ளனர். அது ரிக்வேத காலம் முதல் இன்று வரை புழக்கத்தில் இருப்பதும் வியப்புக்குரிய செய்தி. இதோ சில சொற்கள்:

 

ரிஷபம் (6-16-47) (இடபம்/விடை – தேவாரத்தில்

வாரணம் (யானை) – ஆண்டாள் வாரணம் ஆயிரம்

கபி/கவி – குற்றாலக் குறவஞ்சி (10-86-5)

கோ (3-1-23)- கோவலன்/ கோபாலன் சிலப்பதிகாரம்

xxx

இன்னும் சில சொற்கள் சர்வ சாதாரணமாக பேச்சு வழக்கிலும் பத்திரிக்கைகளிலும் புழக்கத்தில் இருக்கின்றன.

ஸர்ப- சர்ப்பம்/பாம்பு (10-16-6),serpent

ம்ருக (மான்) – மிருகம்

மேஷ- மேட ராசி/ மேஷராசி

வராக – வராஹ அவதாரம்

ஹம்ச- அன்னம் (2-34-5)

ஆரண்யப் பசு – காட்டு மிருகம்/ எருமை (10-90-8) ;ஆரண்யம் (காடு) என்ற சொல் வேதாரண்யம் முதலிய ஊர்ப்பெயர்களில் காணப்படும்

பாச (கயிறு)- 2-27-16)

பஹு அன்ன – நிறைய உணவு

 

(பஹு என்பது தமிழில் வெகு என்று மாறும் (ப=வ)

அன்னம் – உணவு இப்பொழுதும் புழக்கத்தில் உள்ள சொல் – அன்ன தானம்

அங்குச- அங்குசம் (8-17-10)

 

கச (கசையடி)- (5-83-3)

தண்ட – தடி (8-33-6)

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் – தமிழ்ப் பழம்ழொழி

 

பந்தன – கட்டுதல் (5-12-4); ரக்ஷா பந்தன்

தான்ய – தானியம் (5-53-13)

பீஜ – விதை (ப=வ) (5-53-13)

சகன் – சாணம் (அதர்வண வேதம் 3-14-4)

வது/ பெண்5-37-3

ஸ்வப்ன – சொப்பனம் – 2-28-10

வசனம், வாக்கியம், வார்த்தை

இவற்றிலிருந்து என்ன தெரிகிறது?

ரிக் வேதம் என்பது உலகிலேயே பழைய நூலாக இருந்தாலும் அவற்றிலுள்ள சொற்களை இன்றும் நாம் பயன்படுத்துகிறோம். நான் கொடுத்த எடுத்துக் காட்டுகள் தவிர நூற்றுக் கணக்கான சொற்கள் உள்ளன. இன்னும் ஆங்கிலத்தில் நமக்குத் தெரிந்த சாதாரன சொற்களையும் ஒப்பிட்டால் அடுத்த நிமீடமே நமக்கு ஏறத்தாழ ஆயிரம் ரிக்வேதச் சொற்கள் தெரிந்து விடும். முப்பதுக்கும் மேற்பட்ட ஆங்கில, ஜெர்மானிய, பிரெஞ்சு அறிஞர்கள் வேதங்களைப் பற்றி எழுதியுள்ளனர். இப்படி வெளிநாட்டுக்காரர்களே வேதத்தைப் படிக்க இயலுமானால் நம்மால் முடியாதா? இதை உணர்ந்து அனைவரும் முறையாக வேதத்தைப் பயிலல் வேண்டும்.

நிற்க

 

நான் ஒரு புதிய கருத்தை வெளியிட்டு வருகிறேன். பரஞ்சோதி முனிவர்கள் முதலானோர் மறைமுகமாக வெளியிட்ட கருத்து அது. அதாவது தமிழும் ஸம்ஸ்ருதமும் சிவ பெருமானின் உடுக்கையின் இரண்டு பக்கங்களில் இருந்து பிறந்தன. தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒரு தாயின் இரண்டு பிள்ளைகள்.

வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்

தொடர்புடைய தென்மொழியைஉலகமெலாம் தொழுதேத்தும்

குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்

கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்

 

–பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்

கடவுள் தந்த தமிழ்

வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி

நிழற்பொலி கணிச்சி மணி நெற்றியுமிழ் சங்கண்

தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் (கம்ப இராமா.ஆரணி. அகத்தி.41)

 

 

அவ்வாறில்லாவிடில் சிவ பெருமான், அகத்தியனை வடக்கிலிருந்து அனுப்பித் தமிழுக்கு இலக்கணம் செய்யக் கேட்டிருக்க மாட்டார். இந்த இரண்டு மொழிகளுக்குள்ள தொடர்பு போன்ற நெருக்கம் வேறு எந்த மொழிக்கும் இடையில் காண முடியாதது. சந்தி இலக்கணம், வேற்றுமை உருபுகள் முதலிய பல அம்சங்களில் இரண்டும் ஒன்றே!

வாழ்க தமிழ்! வளர்க ஸம்ஸ்க்ருதம்!!

 

–subham–

 

 

 

கம்போடியாவில் கந்தன், காமராஜ்! (Post No.5383)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 1 September 2018

 

Time uploaded in London – 9-09 am (British Summer Time)

 

Post No. 5383

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

கந்தன், காமராஜ் பொன்ற பெயர்கள்  தமிழ்நாட்டில் சர்வ சாதாரணமாகக் காணப்படும்  பெயர்கள்;  இந்தப் பெயர்கள்  ஸம்ஸ்ருதச் சொற்கள் என்றாலும் தமிழ்நாட்டில் நிறைய புழக்கத்தில் உள்ளது. இந்தப் பெயர்களும்  ஏனைய சில பெயர்களும் கம்போடியா நாட்டிலும் உள்ளன.  இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு நிலவிய தமிழர்களின்  செல்வாக்கைக் காட்டும்.

 

லண்டன் (SOAS) பல்கலைக்கழகத்தில் சீனியர் விரிவுரையாளராக வேலை செய்த ஜூடித் ஜாகப் (CAMBODIAN LINGUISTICS, LITERATURE AND HISTORY BY JUDITH JACOB AND EDITED BY DAVID A SMYTH) எழுதிய புஸ்தகத்தை நான் ஆராய்ந்தபோது கிடைத்த தகவல்கள் இதோ:

 

ஒரு கல்வெட்டில் ‘மே கந்தன், தா கந்தன், கு கந்தன்’ என்று வருகிறது – இதன் பொருள் கந்தனின் தாய், கந்தனின் தந்தை, அவர்களுடைய மகன் கந்தன் என்பதாகும்.

 

(வா என்பது திரு, கு என்பது குமாரி அல்லது திருமதி)

 

கம்போடியா, பர்மா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் நாட்டுப்புற கதைகளில் தனஞ்ஜயன் (அர்ஜுனனின் பெயர்) மிகவும் அடிபடும். கிட்டத்தட்ட தெனாலிராமன் கதைகள் போல பல நிகழ்ச்சிகள் இருக்கும்.

 

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் ‘தாக்கு அணங்கு’ கம்போடிய கதைகளிலும் உண்டு . காடு, மலை, மரம், ஏரி, குளம் ஆகியவற்றை ஆக்ரமிக்கும் பிரம்ம ராக்சஸ் போன்றவை அணங்கு என்னும் தேவதைகள்

 

ஒரு நாட்டுப்புற கதையிலும் கந்தன் வருகிறான்.

 

இதோ அந்தக் கதை:-

பிரம்ம தத்தன் என்ற அரசனின் மனைவி பெயர் காக்கி. (கார்கி என்பவள் உபநிஷத்தில் வரும் புகழ்பெற்ற பெண்மணி). கருடர்களின் அரசனுடன் ராஜா, சதுரங்கம் விளையாடுவான். அவன் காகியைக் காதலிக்கத் துவங்கினான். அரசனுக்குத் தெரியாமல் காதல் சமிக்ஞைகளைச் செய்வான். அவளும் காதல் வலையில் விழுந்தாள். ஒருநாள் கருட அரசன் ஒரு புயலை உருவாக்கி, எல்லோரும் பயந்துகொண்டு இருந்த சம்யத்தில் ராணியை அணுகி தன்னுடைய நாட்டுக்கு வரும்படி வலியுறுத்தினான். அரசனுக்கு நடந்தது தெரியாது. புயல் ஓய்ந்த பின்னர் கருட அரசன் வழக்கம்போல சதுரங்கமாட வந்தான். அரசனுக்கு அவன் மீது சந்தேகம் ஏற்படவே தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான தளபதி கந்தனை அழைத்து ஒரு பூச்சி ரூபத்தில் கருடனுன் போய், ரஹஸியத்தை அறிந்து வா என்று அனுப்பினான்

அங்கே கந்தனும் காக்கியைக் காதலித்தான்; பின்னர் திரும்பி வந்தான்; மறு நாளன்று வழக்கம்போல கருட ராஜா ‘செஸ்’ விளையாட வந்தபோது யாழ் வாத்தியத்தையும் வாசித்தனர். அப்போது காக்கியின் வேசித்தனத்தையும் ஏசினர் (கந்தனும் அவனுடைய ராஜா பிரம்மத்ததனும்).

 

கருட ராஜாவுக்குக் கோபம் வரவே அவளைத் திருப்பிக் கொண்டுவந்து விட்டான். பிரம்மதத்தனும் அவள் மீது கோபம் கொண்டு ஒரு படகில் வைத்து நதியில் அனுப்பிவிட்டான்.

 

இந்தக் கதையிலும் கந்தன் என்ற பெயர் தமிழ் வழக்குப்படி ‘கந்தன்’ என்றே வருகிறது; ‘ஸ்கந்த’ என்பது ஸம்ஸ்க்ருத மூலம்.

காமராஜ், அருண்ராஜ்

 

மற்றொரு கதையில் காமராஜ், அருண்ராஜ் என்ற பெயர்கள் வருகின்றன. இன்னொரு கதையில் கிருஷ்ணகுமார், சுவண்ண (ஸ்வர்ண) குமார் என்ற பெயர்கள் காணப்படுகின்றன.

 

ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் என்றபோதிலும் அவை தமிழர் பயன்படுத்தும் வடிவத்தில் இருப்பது தமிழ் மொழியின் தாக்கத்தைக் காட்டுகிறது.

 

 

 

 

அடிமைகளின் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள்

 

அங்கோர் ஆட்சிக்கு முந்தைய கம்போடியாவில் (Pre-Angkhor) படித்த மக்கள் ஸம்ஸ்க்ருதப் பெயர்களையே பயன்படுத்தினர். அப்படிப்பட்ட பெயர்கள் அடிமைகளாக இருந்தவர்களிடமும் காணப்படுகின்றன. ‘வசந்த மல்லிகா’ என்பது ஒரு அடிமைப் பெண்ணின் பெயர்.

 

அடிமைகள், நாம் பயன்படுத்தும் பலசரக்கு சாமான்களைப் போல,

நடத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் எப்படி அடிமை ஆயினர் என்பது தெரியவில்லை. அவர்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது.

 

கோவிலுக்கு தானம் செய்யும் போது இத்தனை அரிசி மூட்டை அல்லது நிலம், இத்தனை அடிமை என்று எழுதப்பட்டது.

 

 

இந்தியாவில் காணப்படும் கல்வெட்டுகளைப் போலவே, கம்போடியக் கல்வெட்டுகளில் பின்வரும் தகவல்கள் இருக்கின்றன:

 

1.ஆளும் அரசனின் பெயர் அல்லது ஆண்டு;

2.தானம் செய்வோரின் பெயர்கள், பதவி;

3.எந்தக் கடவுளுக்கு தான்ம்

4.யார் யார் கொடுத்ததை அறக்கொடைக்கு எழுதுகின்றனர்.

5.அறக்கொடைக்காக அப்படி நிலத்தை விட்டுக் கொடுத்தோருக்கு என்ன நஷ்ட ஈடு அளிக்கப்பட்டது;

6.தானம் செய்யப்பட்ட நிலங்களின் பரப்பு

7.நிலத்துடன் தானம் செய்யப்பட அடிமைகளின் பெயர், அவர்கள்

செய்யப் போகும் வேலை;

8.குருமார்களுக்கான ஊதியம்

9.அறக்கொடை நிறுவனங்களுக்கு இத்தோடு கூடுதலாகத் தரப்படும் நந்தவனம், கடை முதலியன.

10.கொடுக்கப்படும் வேறு விலையுயர்ந்த பொருட்கள்

11.வருவாயை என்ன செய்வது, எப்படிச் செலவிடுவது;

12.எவரேனும் இந்த தானத்துக்குப் பாதகம் செய்தால் அவருக்குக் கிடைக்கும் தண்டனை.

இந்தக் கல்வெட்டு அமைப்பும் இந்தியாவின் செல்வாக்கைக் காட்டுகிறது. தமிழ்க் கல்வெட்டுகளும் இதே வரிசையில் விஷயங்களைத் தருகின்றன.

 

–சுபம்–

ஆருடம் சொல்ல ஆசையா? (Post No.5381)

WRITTEN BY LONDON SWAMINATHAN

 

swami_48@yahoo.com

Date: 31 August 2018

 

Time uploaded in London – 20-44 (British Summer Time)

 

Post No. 5381

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

இந்துக்களின் அதிசய மூச்சு சாஸ்திரம்

 

நமது மூக்கில் இரண்டு துளைகள் உள்ளன. அதில் மூச்சு மாறி மாறி ஓடும். இதை நாம் கவனிப்பதே இல்லை. எப்போதாவது ஜலதோஷத்தில் மூக்கு அடைத்துக் கொண்டால் அப்போது மட்டுமே, எந்த துவாரத்தின் வழியாக மூச்சு ஓடுகிறதோ அந்த வழியாக விடுகிறோம்.

 

வலது துவாரம் வழியாக மூச்சு விடும்போது அதை சூரியகலை என்பர். இடது துவாரம் வழியாக முச்சு விடும்போது அதை சந்திரகலை என்பர். சிலநேரங்களில் இரண்டு துவாரம் வழியாகவும் மூச்சு சென்று வரும்; இதை சுழுமுனை என்பர்.

இந்த மூச்சு சாஸ்திரத்தை நன்கு கவனித்த பெரியோர்கள் சாதாரண மனிதனுக்கு மூச்சு எப்படி ஓடுகிறது என்று கண்டுபிடித்து எழுதி வைத்துள்ளனர். இதைப் பற்றி மேலை நாட்டு மருத்துவ நூல்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

 

காலை ஆறு மணி முதல் எட்டு மணி வரையிலும் சூரிய கலை எனப்படும் வலது நாசித் துவாரம் வழியாக மூச்சு வெளியேறும்; உள்ளே வரும். எட்டு மணி முதல் பத்து மணிவரை மூக்கின் இடது துளை வழியாக- அதாவது சந்திர கலை வழியாக மூச்சு விடுவோம். இப்படி இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை மாறி மாறி ஓடும்.

சூரிய கலையை பிங்கலை என்றும் சொல்வர்.

சூரிய கலையில் செய்யக்கூடிய காரியங்கள் என்ன என்று பழைய நூல்கள் கூறும்:–

கல்வி கற்றல்

மந்திரம் ஓதுதல் துவக்கம்

வாஹனம் ஓட்டக் கற்றல்

சித்திரப் படமெழுதல்

ஸ்நானம்/ குளியல்

சொற்பொழிவாற்றுதல்

தான தருமம்

வேட்டை யாடல்

பெண்களுடன் சம்போகம்

மோகனம், ஸ்தம்பனம், உச்சாடனம்

புத்தாடை அணிதல் (நூதன வஸ்திராபரணம்)

வடக்கு, கிழக்கு திசையில் பிரயாணம்

 

 

 

சந்திர கலை எனப்படும் இடது துவரம் வழியாக நாம் மூச்சு விடும்போது செய்ய வேண்டிய செயல்கள்

தெற்கு, மேற்கு திசையில் பிரயாணம் செய்தல்

யுத்தம் செய்தல்

உபநயனம்

கிரஹப் ப்ரவேசம்

விதை விதைத்தல்

மருந்து சாப்பிடுதல்

சாந்தி கழித்தல்

விவாகம்

யோக அப்யாஸம்

வெளிநாட்டுப் பயணம்

கடவுள் சிலை நிர்மாணித்தல்

அலங்காரம்

 

இந்த நேரங்களில் இந்தக் காரியங்களைச் செய்வது 100 சதவிகித பலன் தரும் என்பது நம்பிக்கை.

ஆருடம் சொல்ல ஆசையா?

 

மூச்சு சாஸ்திரத்தைப் பயின்றால் நீங்களும் ஆரூடம் சொல்லலாம். ஆனால் மனம் , மொழி, மெய் ஆகியவற்றில் சுத்தம் வேண்டும்; அல்லது ஜோதிடம் சொல்லியே சிக்கலில் மாட்டிக் கொள்வோம். ஏனெனில் நாம் சொல்வது பலிக்காது; அப்படிப் பலித்தாலும் அதுவே நம்மை சிக்கலில்  மாட்டிவிடும். ஆகையால் வினைத் தூய்மை இல்லாதோர் விலகி நிற்க.

யாராவது ஒருவர் உங்களிடம் வந்து நான் கார் வாங்கலாமா, வீடு வாங்கலாமா, அல்லது அதைச் செய்யலாமா, இதைச் செய்யலாமா என்று கேட்பதாக வைத்துக் கொள்ளுங்கள். தேர்தலில் வெற்றி  கிடைக்குமா, போட்டி போடலாமா என்றெல்லாம் கேடதாக வைத்துக்கொள்ளுங்கள். அப்போது உங்கள் மூக்கின் வலது துவாரத்தின் வழியாக மூச்சு ஓடி, அவரும் அதே பக்கத்தில் நின்று உங்களை எது கேட்டாலும் ஜயம்/ வெற்றி என்று சொல்லலாம்.

 

இது சூரிய குறி எனப்படும்

 

சந்திர குறி என்றால் என்ன?

சந்திர கலை பூரணமாய் நடக்கும்போது– அதாவது இடது துளை வழியாக மூச்சு ஓடுகையில் ஒருவர் வந்து அதே பக்கத்தில் நின்று கேள்வி கேட்டால் அந்தக் காரியம் தடை இன்றி நிறைவேறும் என்று செப்பலாம்.

 

மூக்கின் இரண்டு துளைகள் வழியாகவும் மூச்சு ஓடினால் அதை சுழும்,,,,,,,,,,,,,,,னை என்பர். அந்த நேரத்தில் ஒருவர் வந்து கேட்டால் அவர் வெற்றி பெறமாட்டார். காணாமற்போன பொருள் கிடைக்குமா என்று கேட்டாலும் அது கிடைக்காது என்று சொல்லிவிடலாம்.

 

மூச்சு ஓடும் பக்கம் பூரண பக்கம்

மூச்சு ஓடாத பக்கம் சூன்யம் எனப்படும்.

நமக்கு வேண்டாதவர் வந்தால், எதிரிகள் வந்தால், அவர்களை சூன்ய பக்கத்தில் நிற்க வைத்து, நிறை வேறாது என்று சொல்லலாம். வாதங்களில் அவரைத் தோற்கடித்து விடலாம்.

 

மூச்சு சாஸ்திரத்தில் இன்னும் பல அதிசயங்கள் உண்டு; அவற்றைப் பின்னர் காண்போம்.

 

-சுபம்–

30 வெற்றிவேற்கை மேற்கோள்கள் (Post No.5378)

COMPILED BY LONDON SWAMINATHAN

Date: 30 August 2018

 

Time uploaded in London – 13-02 (British Summer Time)

 

Post No. 5378

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

செப்டம்பர் 2018 காலண்டர்; விளம்பி வருஷம் ஆவணி-புரட்டாசி

 

30 வெற்றி வேற்கை மேற்கோள்களும் ஆங்கிலத்தில் இம்மாத ஆங்கிலக் காலண்டரில் கொடுக்கப்பட்டுள்ளன. அதிவீர ராம பாண்டியனால் இயற்றப்பட்டவை.

 

பண்டிகை நாட்கள்: செப்.2 கிருஷ்ண ஜயந்தி/ ஜன்மாஷ்டமி;

5 ஆசிரியர் தினம்; 11 பாரதி நினைவு தினம்; 13 விநாயக சதுர்த்தி/ பிள்ளையார் சதுர்த்தி; 25- மாளயபக்ஷம் ஆரம்பம்

 

அமாவாசை -9; பௌர்ணமி- 24; ஏகாதஸி- 6, 20

முகூர்த்த நாட்கள்- 6, 12

 

செப்டம்பர் 1 சனிக்கிழமை

 

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்

 

செப்டம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை

 

கல்விக்கழகு கசடற மொழிதல்

 

செப்டம்பர் 3 திங்கட்கிழமை

செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்

 

செப்டம்பர் 4 செவ்வாய்க்கிழமை

வேதியர்க்கழகு வேதமும் ஒழுக்கமும்

 

செப்டம்பர் 5 புதன்கிழமை

மன்னவர்க்கழகு செங்கோல் முறைமை

 

செப்டம்பர் 6 வியாழக்கிழமை

வணிகர்க்கழகு வளர் பொருளீட்டல்

 

செப்டம்பர் 7 வெள்ளிக்கிழமை

உழவர்க்கழகு ஏர் உழுதூண் விரும்பல்

 

 

செப்டம்பர் 8 சனிக்கிழமை

மந்திரிக்கழகு வரும்பொருளுரைத்தல்

 

செப்டம்பர் 9 ஞாயிற்றுக்கிழமை

தந்திரிக்கழகு தறுகண் ஆண்மை

 

 

செப்டம்பர் 10 திங்கட்கிழமை

உண்டிக்கழகு விருந்தோடுண்டல்

 

செப்டம்பர் 11 செவ்வாய்க்கிழமை

பெண்டிர்க்கழகு எதிர்பேசாதிருத்தல்

 

செப்டம்பர் 12 புதன்கிழமை

குலமகட்கழகு தன் கொழுநனைப் பேணுதல்

 

செப்டம்பர் 13 வியாழக்கிழமை

அறிஞர்க்கழகு கற்றுணர்ந்தடங்கல்

 

செப்டம்பர் 14 வெள்ளிக்கிழமை

வறிஞர்க்கழகு வறுமையில் செம்மை

 

செப்டம்பர் 15 சனிக்கிழமை

தேம்படு பனையின் திரள் பழத்தொரு விதை
வானுற ஓங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க்கிருக்க நிழலாகாதே (வெற்றி வேர்க்கை)

 

தெள்ளிய வாலின் சிறு பழத்தொரு விதை

தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்

நுண்ணிதே யாயயினும் அண்ணல் யானை

அணிதேர்ப் புரவி ஆள் பெரும்படையொடு

மன்னர்க்கிருக்க நிழலாகும்மே

நறுந்தொகை (வெற்றி வேற்கை)

 

செப்டம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை

பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்

 

செப்டம்பர் 17 திங்கட்கிழமை

சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்

 

செப்டம்பர் 18 செவ்வாய்க்கிழமை

பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர்

 

செப்டம்பர் 19 புதன்கிழமை

உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர்

 

 

செப்டம்பர் 20 வியாழக்கிழமை

கொண்டோர் எல்லாம் பெண்டிரும் அல்லர்

 

செப்டம்பர் 21 வெள்ளிக்கிழமை

அடினும் ஆவின் பால் சுவை குன்றாது

 

செப்டம்பர் 22 சனிக்கிழமை

 

சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது

 

செப்டம்பர் 23 ஞாயிற்றுக்கிழமை

 

அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது

 

செப்டம்பர் 24 திங்கட்கிழமை

 

புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது

 

செப்டம்பர் 25 செவ்வாய்க்கிழமை

 

கலக்கினும் தன் கடல் சேறு ஆகாது – வெற்றி வேற்கை

 

செப்டம்பர் 26 புதன்கிழமை

அடினும் பால்பெய்துகைப் பறாது பேய்ச்சுரைக்காய்

 

செப்டம்பர் 27 வியாழக்கிழமை

 

ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை

இரு நிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே

 

 

செப்டம்பர் 28 வெள்ளிக்கிழமை

 

நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை

நீர்மேல் பாசிபோல் வேர் கொள்ளாதே

 

 

செப்டம்பர் 29 சனிக்கிழமை

 

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

 

 

செப்டம்பர் 30 ஞாயிற்றுக்கிழமை

 

சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம்

பெரியோராயின் பொறுப்பது கடனே

–subham–

ஹிந்து ராஷ்ட்ரத்தில் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா?- 4 (Post No.5376)

WRITTEN BY S NAGARAJAN

Date: 30 August 2018

 

Time uploaded in London – 6-37 AM (British Summer Time)

 

Post No. 5376

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ஹிந்து ராஷ்ட்ரத்தில் எங்களை நாங்கள் விரும்பும் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 4

 

ச.நாகராஜன்

 

8

கிறிஸ்தவத்தின் எந்தப் பிரிவானாலும் சரி, ஒரு நாட்டிற்குள் நுழைந்தால் அந்த நாட்டின் கதி அதோகதி தான்.

 

கென்யாவின் தலைவரானா ஜோமோ கென்யாட்டா ஒரு முறை இப்படிக் கூறினார் : “ஆப்பிரிக்காவில் ஐரோப்பியர்கள் வந்த போது அவர்கள் கைகளில் பைபிள் இருந்தது. எங்களிடம் நிலம் இருந்தது. சீக்கிரமே இது தலைகீழாக மாறிவிட்டது. எங்கள் கைகளில் பைபிளும் அவர்கள் கைகளில் எங்கள் நிலங்களும் உள்ளன.”

(Kenyan leader Jomo Kenyatta had ruefully observed, “When the Europeans landed in Africa they had Bible in their hands and we had our lands. Soon it got reversed and now we have the bible and they have our lands.”)

 

ஐயான் ஸ்மித் என்ற வெள்ளைக்காரத் தலைவர் ரொடீஷியாவின் அதிகாரத்தை அங்குள்ள பூர்வ குடியினரிடம் தர மறுத்தார். ஏனெனில் அவர்கள் நாட்டை ஆளுகின்ற அளவு நாகரிகம் கொண்டவர்கள் இல்லை என்று அவர் சொன்னார்.

 

இதைக் கேட்ட ரொடீஷிய மக்கள், “கொலை, கொள்ளை, திருட்டு, லஞ்சம், ஓரினச் சேர்க்கை, பாவ காரியங்கள் ஆகியவற்றை ஆப்பிரிக்காவில் கொண்டு வந்ததே வெள்ளைக்கார இனம் தான். அதுவரை ஆப்பிரிக்கர்களுக்கு இந்த மாதிரி பாவச் செயல்கள் எதுவுமே தெரியாது” என்று கூறி பதிலடி கொடுத்தனர்.

எலும்புக்கூடு புன்சிரிப்பு சிரித்தாலும் அது பயத்தைத் தானே தரும்! கிறிஸ்தவ பிரார்த்தனை கூட இது போன்ற எலும்புக் கூட்டின் புன்னகைச் சிரிப்பு தான்!

 

செயிண்ட் இக்னேஷியஸ் லயோலாவும் செயிண்ட் சேவியரும் கோவாவிற்குள் நுழைந்தனர். அவ்வளவு தான், அதை மரண பூமியாக மாற்றினர்.லயோலோ சொஸைடி ஆஃப் ஜீஸஸ் அல்லது ஜெஸ்யூட் என்ற சங்கத்தை கி.பி. 1525ஆம் ஆண்டு அங்கு கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக நிறுவினார். இந்த சங்கம் தீவிரவாதத்தைக் கிளப்பி விட்டது. அறக்கட்டளை மற்றும் கல்வியின் பேரால் இன்று வரை இவற்றின் மூலம் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் முயற்சியைத் தான் காண்கிறோம்.செயிண்ட் சேவியர் பள்ளி, மற்றும் கல்லூரி மற்றும் மிஷனரிகளின் அறக்கட்டளைகள் இந்த நச்சு மரத்தின் கிளைகளே.

 

9

ஜெஸ்யூட் பிரமாணம் என்று ஒன்று இருக்கிறது.இதை இணையதளத்திலிருந்து எடுத்துப் படிக்கலாம். (http:/ www.reformation.org/jesuitoathinaction.html/) கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்கு முன்வரும் ஜெஸ்யூட்கள் இந்த பிரமாணத்தை எடுக்க வேண்டும்.

 

இந்த பிரமாணத்தின் படி, தலைவராக ஆகும் ஒருவர் பிரமாணம் எடுக்கும் போது அவரைத் தவிர இன்னும் மூன்று பேர்கள் மட்டுமே இருப்பர்.

 

இவருக்கு இரு பக்கமும் இருப்பவர்களில் ஒருவர் மஞ்சள் மற்றும் வெள்ளை ஆகிய போப்பின் வண்ணம் ஏந்திய பதாகையை ஏந்தியிருப்பார்.இன்னொருவர்  ஒரு குத்தீட்டியும் சிவப்பு சிலுவையும் இருக்க மேலே மண்டைஓட்டுடன் இரு எலும்புகள் குறுக்காக இருப்பதையும் கொண்ட கறுப்பு பதாகையை ஏந்தியிருப்பார்.

 

இதன் கீழ் INRI என்று இருக்கும். அதன் கீழ் IUSTUM, NECAR, REGES, IMPIOUS என்ற வார்த்தைகள் இருக்கும்.

 

இதன் பொருள் : பரம்பரையாக அரசாளும் அரசர்கள், அரசுகளை ஒழித்துக் கட்டுவோம் என்பது தான்.

 

பிரமாணத்தை எடுத்து வைப்பவர் பிரமாணத்தைச் சொல்லச் சொல்ல அதை பிரமாணம் சொல்பவர் திருப்பிச் சொல்ல வேண்டும். பிரமாணத்தைக் கூறுபவர் சொல்வதில் ஒரு பகுதி இது:

 

“எனது மகனே! ஆகவே உனக்கு பொய்யாக நடித்து ஏமாற்றக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பொறாமை, வெறுப்பு ஆகியவற்றிற்கான செடியின் விதைகள் பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவைகளால் அமைதியுடன் வாழும்  சமூகங்கள், ராஜ்யங்கள், மாநிலங்கள் ஆகியவற்றில் இரத்தம் சிந்த வைத்து சுதந்திரம், அமைதி கொண்ட அவைகளை ஒன்றுடன் ஒன்று போரிடச் செய்து உள்நாட்டுக் குழப்பம் உண்டாக்கி புரட்சிகளை உருவாக்க கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எதிரணியில் இன்னொரு ஜெஸ்யூட் இருந்தாலும் சர்ச்சின் நன்மையே உங்கள் கவனத்தில் இருக்க வேண்டும்.

 

உளவாளியாக இருக்க உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான தகவல்கள், உண்மைகளை எல்லா விதங்களிலும் சேர்க்க வேண்டும்.

இரத்தம் சிந்தாமல் யாரும் “காப்பாற்றப் பட” முடியாது. நான் சொல்லும் பிரமாணத்தைத் திருப்பிச் சொல்லுங்கள்.

 

இதன் பின்னர் சொல்லப்படும் பிரமாணம் இது தான்: –

 

“I,…. now in the presence of Almighty God, the Blessed Virgin Mary, the Blessed Michael the Archangel, the Blessed St. John the Baptist, the holy Apostles St. Peter and St. Paul and all the saints and sacred hosts of heaven, and to you, my ghostly father, the Superior General of the Society of Jesus, founded by St. Ignatius Loyola in the Pontificate of Paul the Third, and continued to the present, do by the womb of the Virgin, the matrix of God, and the rod of Jesus Christ, declare and swear that his holiness the Pope is Christ’s Vice-regent and in the true and only head of the Catholic or Universal church throughout the earth… …

 

I furthermore promise and declare that I will, when opportunity present, make and wage relentless war, secretly or openly, against all heretics, Protestants and Liberals, as I am directed to do, to extirpate and exterminate them from the face of the whole earth; and that I shall spare neither age, sex or condition; and that I will hang, waste, boil, flay, strangle and bury alive these infamous heretics, rip up the stomachs and wombs of their women and crush their infants’ heads against the walls, in order to annihilate forever their execrable race….”

 

இந்த பிரமாணத்தைப் படிப்போர் மனம் திடுக்கிடும் என்பதில் ஐயமில்லை.

 

ஜூலியாக்கள் போன்ற செகுலரிஸ்டுகள் உண்மை தெரியாதவர்களா அல்லது ஜெஸ்யூட் கோஷ்டியில் ஒருவரா?

ஒன்றும் தெரியாத அப்பாவி போல நாளிதழ்களில் எதையேனும் எழுதி ஹிந்து ராஷ்டிரத்தில் எங்களை நாங்கள் வணங்கும் கிறிஸ்துவை வழிபட விடுவீர்களா என்று கேள்வி கேட்கும் போது விஷயம் அறியாதவர்கள் அடடா, இவர் கேட்பது சரி தானோ என்று எண்ணுவர்.

 

ஆக, ஜுலியாக்களுக்கு உண்மை தெரிவதற்காவது கிறிஸ்தவ  மதம் இந்தியாவில் எப்படி பரப்பப் பட்டது அதற்கு எத்தனை ஆயிரம் அப்பாவிகள் பலி ஆகினர் என்ற வரலாறு வெளி வர வேண்டும்.

 

எவ்வளவு செல்வம் இந்த நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டது, என்னென்ன இழி செயல்கள் இங்கு செய்யப்பட்டிருக்கிறது என்பதும் தெரிய வேண்டும்.

வரலாற்றை ஆராய்வோர் எழுதுவர்; படிப்போம்!

 

10

பட்டயத்தை எடுத்தவன் பட்டயத்தாலேயே அழிந்து போவான் என்பது பைபிள் வாசகம்.

பட்டயம் என்றால் கத்தி. அதாவது கத்தியை எடுத்தவன் கத்தியாலேயே அழிந்து போவான்.

 

இது ஹிந்துவாகிய எனக்கு மிகவும் பிடித்த வாசகம்.

ஏனெனில் உயரிய குணங்கள் என்று குணங்களை பகவத் கீதையும் மனு ஸ்மிருதியும் பட்டியலிடும் போது அதில் முதலிடம் பெறுவது அஹிம்ஸை. அடுத்து தான் சத்தியம் சொல்லப்படுகிறது.

அந்த அளவிற்கு அஹிம்ஸை ஹிந்து மதத்தில் வலியுறுத்தப்படுகிறது. அதன் மஹிமையை எடுத்துக் காட்டியவர் மஹாத்மா காந்தி.

 

சிங்கத்தை அதன் குகையிலேயே பல்லைப் பிடித்து ஆட்டியவர்.

கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப வந்த ஐரோப்பியர்களை துரத்தியவர்.

ஆக அஹிம்ஸாவாதிகளான ஹிந்துக்கள், ‘கத்தியை எடுத்தவன் கத்தியாலேயே அழிந்து போவான்’ என்ற ஹிந்து தத்துவத்தை வலியுறுத்தும் பைபிள் வாசகத்தை நிச்சயம் விரும்புவார்கள்.

 

அப்பாவிகளாக வாழ்ந்து வந்த பல தேசத்து மக்களை மதமாற்றம் என்ற பெயரால் கொன்று குவிக்க கத்தியை எடுத்த கிறிஸ்தவ பாதிரிகள் கத்தியாலேயே அழிவர் என்பது உறுதி.

பைபிள் வாசகம் பலிக்குமானால், அஹிம்ஸையை விரும்பும் கிறிஸ்தவர்களில் மனம் மாறியவர்கள் போக, காலப் போக்கில் மீதியுள்ள கிறிஸ்தவராக ஏசு ஒருவர் தான் அதில் மிஞ்சுவாரோ?

பைபிளை ஹிந்து ராஷ்டிரத்தில் படிக்க விரும்பும் ஜூலியாக்கள் சிந்திக்கட்டும்!

 

*** தொடர் முற்றும்

தொடருக்கு உதவிய ஆதாரம் : Truth Volume 86 Issue 12 – 6-7-2018 இதழ்

நன்றி : Truth