புத்தரின் எல்லையற்ற தேஜஸுடன் கூடிய அழகு! (Post No.5370)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 28 August 2018

 

Time uploaded in London – 5-15 AM (British Summer Time)

 

Post No. 5370

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

புத்தரின் எல்லையற்ற தேஜஸுடன் கூடிய அழகு!

 

ச.நாகராஜன்

 

புத்தரின் தேஜஸ் எல்லையற்ற ஒன்றாக இருந்தது. அத்துடன் அவர் முகத்தில் ஜொலித்த அழகு எல்லையற்ற ஒன்றாக இருந்ததால் அனைவரும் அவர் பால் ஈர்க்கப்பட்டனர்.

 

வக்கலி என்று ஒரு இளைஞன் ஒரு நாள் புத்தரைப் பார்த்தான். அவ்வளவு தான்! அவர் தோற்றத்தாலும் அழகாலும் அவன் ஈர்க்கப்பட்டான். அவரையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான். அதைத் தவிர அவனுக்கு வேறெதுவும் வேண்டியிருக்கவில்லை.

 

அவரது உபதேசங்களோ அல்லது நிர்வாண நிலையை எய்துவதோ அவன் குறிக்கோளாக இல்லை.

சும்மா, புத்தரைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு தான் அவன் ஆசை!

 

புத்தர் போகும் இடமெல்லாம் அவனும் கூடவே தொடர்ந்து போனான். தூரத்தில் இருந்து கொண்டு அவரைப் பார்த்துக் கொண்டே இருப்பான்.

 

இதைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருந்த புத்தர், ஒரு நாள் அவனை அருகில் அழைத்தார்.

“வக்கலி, வக்கலி! இது என்ன? போ! போய் விடு! இந்த அழுக்கான உடலைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பதால் என்ன பயன்?” என்று கூறிய புத்தர் அவனை அங்கிருந்து போகச் சொன்னார்.

 

இப்படி விரட்டப்பட்ட பின்னர் தான் அவன் புத்தரின் ஆன்மீக உபதேசங்களைக் கவனிக்கத் தொடங்கினான்.

நாளடைவில் உபதேசங்களைப் பின்பற்றி அவன் அர்ஹந்த் என்ற உயரிய நிலையை அடைந்தான்.

 

*

குரு தேசத்தில் மாகந்தி என்று ஒரு பிராம்மணன் வாழ்ந்து வந்தா. அவனது மனைவி பெயரும் மாகந்தி தான். பெண் பெயருர்ம் மாகந்தி தான். பெண்ணின் மாமாவின் பெயரும் மாகந்தி தான்.

 

எல்லையற்ற பேரழகு கொண்ட அவளுக்கு ஈடான மாப்பிள்ளை கிடைக்கவில்லை.

 

ஆகவே பிராம்மண மாகந்தி அப்படி ஒரு பேரழகனைத் தேடிக் கொண்டிருந்தார்.

 

அவளது அழகைப் பற்றிக் கேள்விப்பட்ட பல பிரபுக்களின் குடும்பங்கள் அவளை எப்படியாவது தங்கள் இல்லங்களைச் சேர்ந்த ஒருவனுக்கு மணம் முடிக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்தனர்.

 

ஆனால் பிராம்மணரோ அவர்களை, எனது மகளுக்கேற்றவன் நீ இல்லை” என்று வந்தவரை எல்லாம் விரட்டிக் கொண்டிருந்தார்.

 

ஒரு நாள் புத்தர் உலகின் போக்கைத் தன் தியானத்தின் மூலம் கவனித்துக் கொண்டிருந்தார். அவருக்கு பிராமணன் மாகந்தியும்  அவது மனைவியும் உயர் நிலையை அடையத் தகுதி உடையவர்கள் என்பது தெரிந்தது.

 

தனது பிக்ஷா பாத்திரத்துடன் அவர் மாகந்தி இல்லம் ஏகினார்.

மாகந்தி அக்னிக்குக் கொடுக்க வேண்டிய ஆஹுதியை தன் இல்லத்தின் முன் செய்து கொண்டிருந்தார்.

அவர் புத்தரைப் பார்த்தார். பிரமித்தார்.

புத்தரின் உடலில் உள்ள சிறப்பான 32 அங்க அடையாளங்களைக்  கண்டு அவர் வியப்பின் உச்சிக்கே சென்றார். அத்துடன் புத்தரின் உடலில் இருந்த எண்பது அங்க லக்ஷணங்களையும் கண்டு அவர் பிரமித்தார்.

 

“இவரை விட ஒரு பெரிய மஹா புருஷர் இந்த உலகத்தில் மனிதப் பிறவியில் இருக்க முடியாது. இவரே எனது பெண்ணுக்கு ஏற்ற கணவர்” என்று  சிந்தித்து அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.

 

“ஓ! மஹானே! எனக்கு ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கு ஏற்ற கணவன் இதுவரை கிடைக்கவில்லை என்பதால் அவளை எனது பாதுகாப்பில் என் இல்லத்திலேயே வைத்திருக்கிறேன். ஆனால் உங்களை இங்கு பார்த்தவுடன் நீங்களே அவளுக்கு ஏற்றவர் என்று கண்டு கொண்டேன். அவளை உங்களுக்கே இப்போதே மண முடிக்க நான் தயார். சற்றுப் பொறுங்கள். அவளை அழைத்து வருகிறேன்” என்றார் மாகந்தி.

புத்தர் இதை ஏற்கவும் இல்லை; மறுக்கவும் இல்லை. அவர் பேசாமலிருந்தார்.

மாகந்தி வீட்டிற்குள் ஓடி தன் மனைவியிடம், “ ஓ! அதிர்ஷ்டசாலிப் பெண்ணே! உன் பெண்ணுக்குத் தகுந்த மாப்பிள்ளையை இதோ இப்போது தான் கண்டேன். அவர் வாசலில் நின்று கொண்டிருக்கிறார். அவரைச் சற்றுக் காத்திருக்குமாறு கூறி இருக்கிறேன். நீ உன் பெண்ணை அலங்கரித்து அழைத்து வா” என்றார்.

 

மனைவி பெண்ணை அலங்கரிக்க மனைவியையும் பெண்ணையும் மாகந்தி வெளியே அழைத்து வந்தார்.

நடந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தார் செய்தியைப் பரவ விட காட்டுத் தீ போல செய்தி பரவி நகரமே அங்கு குழுமியது.

 

“அங்கம், மகதம், காசி, கோசலம், வஜ்ஜி, மல்லா போன்ற இடங்களிலிலிருந்தெல்லாம் எத்தனை செல்வந்தர்கள் இங்கு வந்து நின்றிருக்கின்றனர்! அவர்களை எல்லாம், “ நீங்கள் என் பெண்ணுக்கு ஏற்றவர்கள் இல்லை” என்று துரத்தி அடித்த இவர் இப்போது யாரைக் கண்டு இப்படி மாப்பிள்ளை ஆக்கப் போகிறார்” என்று பேசிக் கொண்ட மக்கள் திரள் பிராமணர் வீடு முன் குழுமியது.

 

ஆனால் புத்தர் எந்த இடத்தில் நின்று கொண்டிருந்தாரோ அங்கு இல்லை. அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றிருந்தார்.

 

அவரது காலடித் தடங்கள் அவர் சென்ற பாதையைக் காட்டின. தன் மனைவி மகளுடன் புத்தர் இருக்குமிடம் சென்று அவரைப் பார்த்த மாகந்தி, “ ஓ!மஹானே! இதோ என் புதல்வி! இவளை ஏற்றுக் கொள்வீராக!” என்று வேண்டினார்.

புத்தர் பேச ஆரம்பித்தார்:

“ ஓ! பிராமணரே! ஜனன மரணச் சுழலிலிருந்து விடுபட நான் கபிலவாஸ்து அரசைத் துறந்தேன். யசோதரா போன்ற ராணியைத் துறந்தேன். ராகுல் போன்ற மகனையும் துறந்தேன். அரசாளும் அதிகாரத்தையும் விரும்பவில்லை. நாற்பதினாயிரம் அழகிய பணிப்பெண்கள் கூப்பிட்ட குரலுக்கு ஏவல் செய்பவர்கள் – அவர்களையும் விட்டு விட்டு நள்ளிரவில் அரண்மனையை விட்டு வெளியேறிய நான் திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். மரணதேவனாகிய மாரன் என்னை ஆறு வருடங்கள் இடைவிடாமல் பின் தொடர்ந்து அலுத்துப் போய் என்னை விட்டான். போதி மரத்தின் அடியில் அமர்ந்து  ஞானத்தை அடைந்தேன். மாரனின் புதல்விகள் மூன்று பேரும் தன் தந்தையை அலைய விட்டதற்காகப் பழி தீர்க்க என்னிடம் வந்தனர்.  ஆரத்தி, ரதி, ராகா என்ற அந்த மூவரிடம் அனிக்கா (நிலையற்ற தன்மை) துக்கம்,அனத்தா ( ஆன்மா இல்லாமை) ஆகிய மூவரையும் அனுப்பினேன்.புலனின்பத்தின் உச்ச கட்ட இடமான ஆறாம் சொர்க்கத்திலிருந்து இறங்கிய அவர்களிடமே எனக்கு புலனின்பம் அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றவில்லை. அப்படிப்பட்ட எனக்கு அசுத்தம் நிரம்பிய குடம் போன்ற உன் பெண்ணிடமா மனம் செல்லும்?”

 

புத்தரின் இந்தப் பேச்சைக் கேட்டு மக்கள் வியந்தனர்; மாகந்தியின் குடும்பமும் வியந்தது.

 

அனைவரும் அவரைப் பணிந்து வணங்கினர். மாகந்திக்கும் அங்கு குழுமியிருந்த மக்கள் அனைவருக்கும் புத்தர் தன் உபதேசத்தை நல்கி அருளினார்.

 

புத்தரின் உடலும் அழகு; மனமும் அழகு என்பதை அவர் உடலிலிருந்து வெளிப்படும் ஜோதி காட்டியது!

இப்படிப்பட்ட அங்க லக்ஷணங்களைக் கொண்ட ஒரு அழகிய மகானை உலகம் கண்டதில்லை என்கிறது புத்த மத வரலாற்று ஏடுகள்!

***

 

தமிழில் ஷேக்ஸ்பியர் கவிதைகள் சில! (Post No.5365)

COMPILED BY LONDON SWAMINATHAN

Date: 26 August 2018

 

Time uploaded in London – 14-29 (British Summer Time)

 

Post No. 5365

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையைச் சேர்ந்த தமிழ் பண்டிதர் கோபாலகிருஷ்ண ஐயர் பல ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளை தமிழில் கவிதை வடிவில் தந்தார். அதில் ஷேக்ஸ்பியரின் சில கவிதைகளையும் நாடக வசனங்களையும் தமிழில் காண்போம்.

 

ஷேக்ஸ்பியர் ஒரு மஹா மேதை என்பதைக் கீழ்கண்ட புள்ளிவிவரமே காட்டும் :

அவர் எழுதிய நாடகங்கள் 37

அவர் நாடகத்தில் எழுதிய வரிகள் 34,896

அவர் எழுதிய நாடகங்களில் மிகப் பெரியது (Hamlet) ஹாம்லெட்- 4042 வரிகள்

சிறிய நாடகம்- (Comedy of Errors) காமெடி ஆப் எர்ரர்ஸ்- 1787 வரிகள்

 

அவர் உருவாக்கிய கதா பாத்திரங்கள்- 1221 பேர்

அவர் கவிதை, நாடகங்களில் பயன்படுத்திய சொற்கள் 8,84,429

ஒப்பற்ற (unique) சிறப்புச் சொற்கள் 28,829

ஒரே முறை மட்டும் வந்த சொற்கள் 12493

 

His plays are: அவருடைய 37 நாடகங்கள்
1 Two Gentlemen of Verona
2 Taming of the Shrew
3 Henry VI, part 1
4 Henry VI, part 3
5 Titus Andronicus
6 Henry VI, part 2
7 Richard III
8 The Comedy of Errors
9 Love’s Labours Lost
10 A Midsummer Night’s Dream
11 Romeo and Juliet
12 Richard II
13 King John
14 The Merchant of Venice
15 Henry IV, part 1
16 The Merry Wives of Windsor
17 Henry IV, part 2
18 Much Ado About Nothing
19 Henry V
20 Julius Caesar
21 As You Like It
22 Hamlet
23 Twelfth Night
24 Troilus and Cressida
25 Measure for Measure
26 Othello
27 All’s Well That Ends Well
28 Timon of Athens
29 The Tragedy of King Lear
30 Macbeth
31 Anthony and Cleopatra

32 Pericles, Prince of Tyre
33 Coriolanus
34 Winter’s Tale
35 Cymbeline
36 The Tempest
37 Henry VIII

 

 

–SUBHAM–

ஹிந்து ராஷ்ட்ரத்தில் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 3 (Post No.5360)

Australian aborigines

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 25 August 2018

 

Time uploaded in London – 6-14 AM (British Summer Time)

 

Post No. 5360

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ஹிந்து ராஷ்ட்ரத்தில் எங்களை நாங்கள் விரும்பும் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 3

 

ச.நாகராஜன்

 

5

எங்கு கிறிஸ்தவ மத வெறியர்கள் சென்றாலும் அங்குள்ள பூர்வ குடியினருக்கு ஆபத்துத் தான். கலவரம், கொள்ளை, கொலை இவைகளே அவர்களின் வழிமுறைகள்.

 

ஹவாயில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் 5 லட்சம் பூர்வ குடியினர் வசித்தனர். ஆனால் இன்றோ அவர்களின் ஜனத்தொகை வெறும் ஐம்பதினாயிரமாகக் குறைந்து விட்டது. அவர்களது பண்பாடு, பழக்க வழக்கம், மதம் எல்லாம் போயே போய் விட்டது. அவர்களது மொழியோ வெறும் ஐந்நூறு பேர்களால் மட்டுமே இன்று பேசப்படுகிறது. அவர்கள் தொழுத கடவுளோ வெறும் கஹுனா (Kahuna) குருமார்களால் மட்டுமே தொழப்படுகிறது.

 

 

ஸ்பெயின் நாடு வெற்றிகரமாக மதத்தைப் பரப்பிக் கொள்ளை அடித்து செல்வம் சேர்த்து வருவதைப் பார்த்த போர்த்துக்கல் நாமும் ஏன் இப்படிக் கொள்ளை அடிக்கக் கூடாது என்று எண்ணியது. தென் அமெரிக்கா முழுவதும் ஸ்பெயினால் காலியாக்கப்பட்டதை எண்ணிய போர்த்துக்கல் தமது நாட்டினரையும் கப்பலில் அனுப்பி பார்த்தவர்களை எல்லாம் கொன்று பணத்தை எடுத்து வாருங்கள் என்று அனுப்பியது.

 

இதைப் பார்த்த ஸ்பெயினுக்குக் கோபம் வரவே இது ஸ்பெயினுக்கும் போர்த்துக்கல்லுக்குமான போராக மாறியது.

இதைப் பார்த்த வாடிகன் போப் திடுக்கிட்டார். மதமாற்றம் என்னும் முதலுக்கே மோசம் வந்து விட்டதே என்று எண்ணிய அவர் இரு நாடுகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தார்.

 

அவரது சமரச திட்டத்தின் படி கொள்ளை,கொலைக்கான எல்லைக்கோடு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது லத்தீன் அமெரிக்காவில் ஒரு எல்லை நிர்ணயிக்கப்பட்டு தென் பிராந்தியங்கள் எல்லாம் ஸ்பானியர்களின் கொள்ளை, கொலை பிரதேசம் என்றும் வட பிராந்தியங்கள் எல்லாம் போர்த்துக்கல்லின் கொலை, கொள்ளை பிரதேசம் என்றும் வ்ரையறுக்கப்பட்டது.

 

ஆகவே தான் ஸ்பெயினின் மாரடோனா இன்று ஸ்பானிஷ் (Maradona of Spain)  மொழி பேசுவதையும் பிரேஜிலின் பீலே (Pele of Brazil) போர்த்துக்கல் மொழி பேசுவதையும் இன்று நம்மால் பார்க்க முடிகிறது.

இப்படி மதமாற்றத்திற்கு ஊறு நேராத படி சமரசம் செய்வதில் போப்புகள் வல்லவர்கள். மதமாற்றம் அல்லாத போர்களைப் பற்றி அவர்கள் அக்கறை காட்ட மாட்டார்கள்.

 

ஆனால் கிறிஸ்தவ மத மாற்றும் முயற்சியில் ஏதேனும் பங்கம் ஏற்பட்டால் அவ்வளவு தான், வரிந்து கட்டிக் கொண்டு சமரச முயற்சியில் தங்களது போப் என்ற செல்வாக்கை வைத்துக் கொண்டு இறங்குவார்கள்.

 

இரண்டாவது உலக மகா யுத்தத்தை எடுத்துக் கொள்வோம்.

ஹிட்லர் கத்தோலிக்க கிறிஸ்தவர். அவர் லட்சோபலட்சம் அப்பாவி யூதர்களைக் கொன்று குவித்தார். இதைப் பார்த்த உலகமே திடுக்கிட்டு பிரமித்தது. ஆனால் போப்போ இதைக் கண்டிக்கவே இல்லை. ஏனெனில் சாவது யூதர்கள் தானே!

ஒரு முறை இப்படிப்பட்ட கோரக் கொலைகளை போப் கண்டிக்கவில்லை என்பது சோகமான ஒரு வரலாற்று உண்மை!

 

6

விஞ்ஞானத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் ஆரம்ப காலம் முதலே சண்டை தான். ஏனெனில் பல விஞ்ஞான உண்மைகள் கிறிஸ்தவம் கூறும் கொள்கைகள் தவறு என்பதை நிரூபிப்பதால் தான்.

 

கலிலியோ சூரியனைச் சுற்றியே பூமி வருகிறது என்பதை நிரூபித்தார். ஆகவே பைபிள் கூறுவது அபத்தமானது என்பதை வெட்ட வெளிச்சமாக்கினார். வந்தது கோபம் போப்பிற்கு.

உடனடியாக அரசாளும் மன்னருக்கு உத்தரவு போட, கலிலியோ கைது செய்யப்பட்டார்.

 

கலிலியோ தனது “கண்டுபிடிப்பை” வாபஸ் வாங்குமாறு செய்யப்பட்டார்.

முதுமைக் காலத்தில் கலிலியோ சிறையில் வாடியதும் அவர் எழுதிய கடிதங்களும் தனி ஒரு நூலுக்கான விஷயம்.

பைபிள் அபத்தம் என்று கூறும் விஞ்ஞான உண்மைகளைக் கூறும் விஞ்ஞானிகள் போப்பினால் உடனடியாகக் கண்டிக்கப்படுவது வாடிக்கையான ஒரு விஷயம்.

இதையும் மீறி அறிவியல் உலகம் இன்று முன்னேறி வருகிறது.

 

7

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விஷயம் இது.

கிழக்கு ஐரோப்பிய பால்கன் நாடுகள் யூகோஸ்லேவியாவிடமிருந்து பிரிந்தன. செர்பியா, போஸ்னியா, க்ரோஷியா, ஹெர்சகோவினா (Serbia, Bosnia,Croatia and Herzegovina) ஆகிய நாடுகள் பிரிந்த நிலையில் பிரம்மாண்டமான ஒரு ஆதிக்கப் போட்டியும் எந்த பிரதேசம் யாருக்குச் சொந்தம் என்ற நில ஆக்கிரமிப்புப் போட்டியும் தொடங்கியது. இரத்தம் சிந்தும் அந்தப் போர் பயங்கரமாக உருவெடுத்தது.

 

இதைக் கண்ட போப் திடுக்கிட்டார். அமெரிக்க அரசை நாடிய போப் ஏதேனும் செய்ய வேண்டுமென்று ஆலோசனை கூறினார். இந்த பிரச்சினைக்கு அவர் கூறிய தீர்வு ஒரு நிபந்தனையுடன் கூடியது.

 

என்ன அந்த ஒரு நிபந்தனை?

 

முஸ்லீம் மற்றும் ஆர்மீனிய கிறிஸ்தவர்கள் முழு ஜனத்தொகையுடன் மொத்தமாக ரோமன் கத்தோலிக்கராக  மாற வேண்டும் என்பது தான் அந்த ஒரே ஒரு நிபந்தனை!!

அட, கிறிஸ்தவத்தின் கத்தோலிக்க பிரிவு தானே இப்படிச் செய்கிறது என்று சொல்லி விட்டு விட முடியாது. இதே அளவுக்கோ அல்லது இதை விட மோசமான அளவுக்கோ கிறிஸ்தவத்தின் இதர பிரிவுகளும் தங்கள் இப்படி செய்ததைச் சுட்டிக் காட்டும் சம்பவங்கள் ஏராளம் உள்ளன.

எடுத்துக் காட்டாக …….

தொடரும்

***

 

Shelley’s Sky Lark in Tamil (Post No.5355)

Compiled by London swaminathan

Date: 23 August 2018

 

Time uploaded in London – 7-09 am  (British Summer Time)

 

Post No. 5355

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

Translated by M Gopalakrishnan of Madurai 100 years ago!

PERCY BYSSHE SHELLEY PROFILE

SHELLYEY, English Poet, Novelist and Essayist

Born August 4, 1792

Died July 8, 1822

Age at death 29

P B Shelley was one of England’s greatest Romantic poets. He was born into a wealthy noble family. He was educated at Eton college, where his radical views on politics and religion earned him a nick name ‘Mad Shelley’. While still at Eton and aged just 18, he published his first book, a gothic horror novel called Zastrozzi. In 1811 he was expelled from Oxford University for writing an anti-Christian pamphlet.

 

The same year 19 year old Shelley shocked his family even more by secretly marrying 16 year old Harriet Westbrook. This was the start of Shelly’s adventurous life of elopements and restless travels. Three year later Shelley eloped with Mary Wollstonecraft Godwin, who became Mary Shelley and who wrote the famous novel Frankenstein. Harriet killed herself in 1816, and Shelley married his new love. Mary and Shelley moved around constantly; they travelled around Europe and lived in many different towns in England. Shelley wrote his poetry in short bursts of intense creativity. His poems such as Alastor and Ozymandias, overflow with intense emotion and radical ideas that were not always appreciated by readers of his time.

 

In 1818 Shelley and Mary left England to live in Italy. He completed some of his greatest poetry there, including his masterpiece Prometheus Unbound. A few years later, on a short sea voyage along the Italian coast, Shelly’s small sail boat was caught in a storm and he was drowned. He was just 29 years old, but he had written poetry hat established him as one of the greatest English poets.

Publications

1810 Zastrozzi

1813 Queen Mab

1816 Alastor

1818 The Revolt of Islam

1818 Ozymandias

1819 The Cenci

1820 Prometheus Unbound

1821 Adonais

Published after he died

1824 The Triumph of Life

 

Shelley was Tamil Poet Bharatiyar’s favourite poet.

 

பாரதியாரைக் கவர்ந்த ஆங்கிலப் புலவன் ஷெல்லியின் வானம்பாடிக் கும்மி. தமிழில் தருபவர் மதுரை எம். கோபால கிருஷ்ண அய்யர்

 

 

 

 

 

 

–subham–

 

 

 

நகர் எங்கும் தக்காளிச் சட்னி! (Post No.5354)

Written by London swaminathan

Date: 23 August 2018

 

Time uploaded in London – 6-36 am  (British Summer Time)

 

Post No. 5354

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ஸ்பெயின் நாட்டில் புனோல் (Bunol in Spain) என்ற ஒரு நகரம் உள்ளது ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கடைசி புதன் கிழமை தக்காளித் திருவிழா (La Tomatina) நடைபெறும்; இதைத் தக்காளிச் சட்னி திருவிழா என்று அழைப்பதே சாலப் பொருத்தம். இந்த ‘பிளாக்’ (BLOG)கில் ஸ்பெயின் நாட்டுத் திருவிழா பற்றி எழுதுவானேன் என்று சிலர் நினைக்கலாம்.

 

பிள்ளையார் சிலை செய்தால் குற்றம்; கரைத்தால் குற்றம்; துர்கை சிலை செய்தால் குற்றம். பட்டாசு வெடித்தால் குற்றம்; வாங்கினால் குற்றம்— இப்படி பலர்— அறிவு ஜீவிகள்– வாய்ச் சொல் வீரர்கள்– பேசுவதும் போதாக்குறைக்கு சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் (case) போட்டும் வீரர் போலக் காட்சி தருவதையும்  காண்கிறோம்.

கோவிலில் பாலாபிஷேகம் செய்தால் அதை ‘வீண்’ ,வேஸ்ட், (waste) என்பர். விளக்கு ஏற்றினால் அது புகை (pollution) ‘பொல்லூஷன்’ என்பர். ஆனால் ஆடுகளையும் ஒட்டகங்களையும் ஒரே நாளில் லட்சக் கணக்கில் உலகெங்கும் வெட்டுவதைக் கேட்கவோ, கண்டு கொள்ளவோ மாட்டார்கள். ஒவ்வொரு நிமிடமும் எரிக்கப்படும் கோடிக் கணக்கான சிகரெட் புகை பற்றிப் பேச மாட்டார்கள். ஆண்டு தோறும் ஒவ்வொரு நாடும் புத்தாண்டு, சுதந்திர தினம் போன்றவற்றில் சில மணி நேரத்துக்குள் வெடித்துத் தீர்க்கும் ‘டன்’ கணக்கான பட்டாஸ் பற்றிப் பேச மாட்டார்கள். அவர்கள் எல்லாம் பாலாபிஷேகம் வீண் என்று சொல்லும் முன், ஒரே மணி நேரத்தில் 150 டன் தக்காளி எப்படி வீணடிக்கப்படுகிறது என்பதையும் அறிதல் நலமே.

 

இந்த ஆண்டு தக்காளித் திருவிழா ஆகஸ்ட் 29 (2018) புதன் கிழமை நடக்கிறது. லாரி  நிறைய தக்காளிகளைக் கொண்டு வருவர். அதில் 150 டன் பழுத்த தக்காளிப் பழம் இருக்கும். ஒருவர் மீது ஒருவர் தக்காளியை வீசி எறிந்து ஆனந்தப் பட வேண்டும். எல்லோரும் ரத்தக் கறை படிந்த கொலைகாரர்கள் போல காட்சி தருவர். ஒரு மணி நேரம் தலையணைச் சண்டை– அல்ல , அல்ல, தக்காளிச் சண்டை— போடுவர். ஒரு மணி நேரத்துக்குள் ஊரே தக்காளிச் சட்னியாகி விடும்; அத்தனையையும் நகர தண்ணீர் வாஹனங்கள் கழுவி விட்ட பின்னர் அவை அருகிலுள்ள நதியில் கலந்து விடும்.

 

2013 வரை விழாவுக்கு 50,000 மக்கள் வந்தனர். 9000 மக்களே வசிக்கும் புனோல் நகருக்குள் 50,000 பேர் நு ழைந்தால் அது ‘பனால்’ ஆகி விடும் என்று இப்பொழுது டிக்கெட் வைத்து விட்டார்கள்; 20,000 பேருக்கு மட்டுமே அனுமதி. 150 டன் தக்காளி வீணாவது பற்றி எவருக்கும் கவலை இல்லை. அதிலுள்ள சிட்ரிக் அமிலம் ஊரை சுத்தம் செய்கிறதாம். நதியில் எத்தனை உயிரினங்களைக் கொல்கிறதோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இந்த லண்டனிலும் இந்த தக்காளி சட்னி/ சண்டை விழாவை ஏற்பாடு செய்து 50 பவுன் டிக்கெட் வைத்துள்ளனர். உலகின் பல நாடுகளில்- குறிப்பாக கொலம்பியா முதலிய ஸ்பானிய மொழி பேசும் தென் அமெரிக்க நாடுகளில் இது பரவி வருகிறது இந்தியாவில் டில்லியிலும் பெங்களூரிலும் இந்த விழா அறிவிக்கப்பட்டவுடன் கடும் எதிர்ப்பு கிளம்பியது; அதை அறிவித்தவர்கள் ‘உடும்பு வேண்டாம், கையை விட்டால் போதும்’ என்று ஓடி விட்டனர்.

 

லாரிகள் தக்காளி கொண்டு வந்தவுடன் உறியடித் திருவிழா ஆரம்பமாகும்; கிருஷ்ணன் கோவில்களில் நடக்கும் விழா போல ஓங்கி வளர்ந்த எண்ணை பூசப்பட்ட கம்பத்தின் மீது துண்டு கட்டி வைத்திருப்பர். அதை யாராவது ஒருவன் கொண்டு வந்த பின்னர் விழா துவங்க வேண்டும் என்பது நியதி; ஆனால் அந்த அளவுக்கு மக்களுக்கு பொறுமை கிடையாதென்பதால் ஒரு தண்ணீர் பீரங்கி மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பர். உடனே ‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ என்ற பாணியில் தக்காளிச் சண்டை துவங்கும். யாரும் முழுத் தக்காளியை எறியக்கூடாது. அதைப் பிய்த்தோ பிழிந்தோ கசக்கியோ மற்றவர் மீது எறியலாம். எல்லாம் வேடிக்கைதான் ; ஆனால் 150 டன் தக்காளி ஒரே மணி நேரத்தில் காலி! சரியாக ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் மற்றொரு தண்ணீர் பீரங்கி தண்ணீரை வீசும். “கதை முடிந்தது; கத்தரிக்காயும் காய்த்தது; அவரவர் வீட்டிலே அவரைக்காய்ச் சோத்துலே” என்று (NURSERY RHYME) நர்ஸரி ரைம் பாடியவாறு நதியில் விழுந்து நல்ல ஸ்நானம் செய்து ‘அவா அவா ஆத்து’க்குப் போகலாம்.

 

இந்த விழா எப்படித் துவங்கியது?

இது பற்றிப் பல கதைகள் உண்டு. ஒரு திருவிழாவின் போது இளைஞர்கள் சாலை ஓரக் கடையில் தவறி விழுந்தவுடன் சண்டை துவங்கியது என்றும் அருகிலுள்ள தக்காளி அனைத்தையும் ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையா’க மக்கள் எறிந்தனர் என்றும் சொல்லுவர். இன்னும் சிலர் வேண்டாத நகரசபை அதிகாரிகள் மீது அழுகிய தக்காளி எறிந்தவுடன் ஆண்டுதோறும் அதைச் செய்யத் துவங்கினர் என்பர். 1945 ஆம் ஆண்டில் துவங்கியது. இந்த விழா இடையில் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் துவங்கியது.

 

தக்காளிச் சண்டைக்கு வருவோர் கூரான ஆயுதங்கள், பாட்டில்கள் கொண்டுவர அனுமதி இல்லை.

 

பெண்களே! 150,000 கிலோ தக்காளியில் எத்தனை ஈயச் சொம்பு ரஸம் வைக்கலாம் என்று கணக்குப் போடுங்கள். ஆண்கள! எத்தனை கப் தக்காளி சூப் (CUP SOUP) கிடைக்கும் என்று கணக்குப் போடுங்கள்.

 

–சுபம்–

அறிஞர்க்கழகு கற்றுணர்ந்து அடங்கல்- 2 கதைகள் (Post No.5350)

Modi with Bhutanese King.

WRITTEN BY London swaminathan

Date: 22 August 2018

 

Time uploaded in London – 8-57 AM (British Summer Time)

 

Post No. 5350

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

அறிஞர்க்கழகு கற்றுணர்ந்து அடங்கல்- வெற்றி வேற்கை/ நறுந்தொகை (அதிவீர ராம பாண்டியன்)

மிதிலை நகரில் ஒருவன் மாமிசக் கடை வைத்திருந்தான். அவன் ஒரு வேடன்; காட்டுப் பன்றியின் மாமிசம் காட்டு எருமை மாட்டின் மாமிசம் முதலியவற்றை அவன் அவன் விற்று வந்தான். இப்படிச் செய்பவனுடைய பெயர் தர்ம வியாதன். அதாவது அறநிலை வேடன். ஏனென்றால் அவன் சத்தியம் தவறாதவன். வேத சாஸ்திரங்களைக் கற்றவன். வைத்திருப்பதோ கசாப்புக் கடை; பெயரோ தர்ம வியாதன். ஆயினும் அவன் தன் புகழை தம்பட்டம் அடிக்கவில்லை. ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்பதற்கிணங்க வாழ்ந்து வந்தான்.

 

 

அவனிடம் பிராஹ்மண ஸ்ரேஷ்டர்களும் வந்து ஐயம் தெளிந்தனர். கௌசிகன் என்ற அந்தணன் அவரிடம் வந்து பெற்றோர்களைக் கவனிப்பதே முக்கியம் என்று தர்ம வியதனைப் பார்த்துக் கற்றுக் கொண்டார். அப்போதுதான் அவர் தான் அப்படிக் கவனிக்காமல் போனதும் தவறு என்றும் புரிந்தது. இந்தக் கதை மஹாபாரதத்தில் இருக்கிறது

அடக்கம் காரணமாக அவன் புகழ் தானாகப் பரவியது. வள்ளுவனும் அடக்கத்தின் – பணிவின் பெருமையை திருக்குறளில் விதந்து ஓதுகிறான்.

Prince Charles in India

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து (குறள் 125)

 

பொருள்

பணிவு- அடக்கம் என்பது எல்லோருக்கும் நன்மை தரும்; பணக்காரர்களிடத்தில்  அது இருந்தால், அவர்களுக்கு மேலும் செல்வம் கிடைத்தது போல இருக்கும்.

 

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது  (குறள் 124)

 

எந்த நிலையிலும் மாறுபடாமல் இருப்பவனின் பணிவு, மலையை விடப் பெரியது, உயர்வானது.

 

இதோ இன்னொரு கதை!

அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் (GEORGE WASHINGTON). அவருடைய படம் பொறித்த பத்து டாலர் தங்கக் காசு (700 ரூபாய்) அமெரிக்காவில் 137 லட்சம் பவுன் மதிப்புக்கு ஏலம் போனதாகப் பிரிட்டிஷ் பத்திரிக்கைகள் 20-8-2018ல் செய்தி வெளியிட்டுள்ளன. ஏன் இவ்வளவு மதிப்ப?. அதை ஜார்ஜ் வாஷிங்டன் தனது பைக்குள்ளேயே வைத்திருந்தாராம். அவர் ஏன் சட்டைப் பைக்குள் வைத்திருந்தார்?

 

அங்குதான் ரஹஸியம் இருக்கிறது எனது படம் பொறித்த நாணயங்களை வெளியிட வேண்டாம் என்று சொல்லி அதைப் பைக்குள் போட்டுக்கொண்டார். உடனே அதை முன் மாதிரியாக அடித்த கம்பெனியும் அந்த மாடலைக் கைவிட்டு ஒரு புறம் சுதந்திர தேவி மறு புறம் அமெரிக்காவின் சின்னமான கழுகு ஆகியவற்றைப் பொறித்து புதிய நாணயங்களை வெளியிட்டனர்.

 

இந்த ஏலத்தில் இன்னொரு சுவையான செய்தியும் உளது. ஏலத்துக்கு வந்த நாணயம் எரிக் நியூமான் (ERIC NEWMAN) என்பவருக்குச் சொந்தமானது; அவர் அமெரிக்காவின் மிகப்பெரிய நாணய சேகரிப்பாளர். அது மட்டுமல்ல எழுத்தாளர்; அத்தோடு அறக்கொடையாளர் (PHILANTHROPHIST) . அவர் 106 ஆண்டுகள் வாழ்ந்து சாதனை புரிந்து, சென்ற ஆண்டு இறந்தார். அவரது நாணயங்களை ஒவ்வொன்றாக ஏலம் விட்டு கல்விப் பணிகளுக்கும் நாணய ஆராய்ச்சிக்கும் நன்கொடையாகத் தருகின்றனர். எவ்வளவு பெரிய மனது!

அவரது மகன் ஆண்டி (ANDY)  சொல்கிறார்,

எனது தந்தை நியூமானுக்கு, ஜார்ஜ் வாஷிங்டன் என்றால் மிகவும் பிடிக்கும். அவரைப் போற்றித் துதிபாடுவார். வாஷிங்டன் தனது உருவத்தை நாணயத்தில் பொறிக்ககூடாது என்று சொன்னது அவரது மகத்தான (HUMILITY) பணிவைக் காட்டுகிறது.

 

இதுவரை அறக்கொடைப் பணிகளுக்கு நியூமான் நாணய ஏலம் முதல் 560 லட்சம் பவுன் கிடைத்துள்ளது. இது வள்ளுவனின் குறளை நினைவு படுத்துகிறது:

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்கணவர் – குறள்228)

பொருள்

பொருளைச் சேர்த்துவிட்டு, அதைத் தானும் அனுபவியாமல், பிறருக்கும் கொடுக்காமல் இருக்கிறார்களே; ஐயோ பாவம்! அவர்களுக்கு கொடுப்பதில் உள்ள இன்பம் என்னவென்றே தெரியவில்லையே!

 

–சுபம்-

 

 

பாபர் ஆட்சியில் பசுவின் கால் சடங்கு!! (Post No.5346)

WRITTEN by London swaminathan

Date: 21 August 2018

 

Time uploaded in London – 6-54 AM (British Summer Time)

 

Post No. 5346

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

மொகலாய மன்னர்களில் பாபர் (1483-1530) முதலாமவர். அவர் காலத்தில் துருக்கி இனத்தவர்கள் பழைய கால பழக்க வழக்ககங்களை அப்படியே பின்பற்றி வந்தனர். அவை எல்லாம் இஸ்லாமிய மதம் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்னமே இருந்தவை. பாபர், முஸ்லீமாக இருந்த போதும் அந்த வழக்கங்களைப் பின்பற்றியது அவர் பற்றிய பாபர் நாமா புஸ்தகத்தில் உள்ளது.

 

பாபர் தனது சுயசரிதையை அவரது சாகதாய் மொழியில் எழுதினார். அவர்  தைமூரின் கொள்ளுப்பேரன். அக்பரின் தாத்தா. இதனால் அக்பர் காலத்தில் பாபர் நாமாவை ஓவியமாக வரைந்து தர அக்பர் ஆணையிட்டார். அவை இப்பொழுது டில்லியில் தேசீய மியூஸியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் இந்துக்களின் புனித தெய்வமான பசுவைப் பற்றிய ஒரு அதிசயப் படம் உள்ளது. துருக்கி-இராக் பகுதிகள், வேத கால அரசர்களின் கீழ் இருந்ததால் இந்த வழக்கம் வேத கால வழக்கமாகவும் இருக்கலாம். கி.மு 1400 வாக்கில் துருக்கி வரை இந்துக்களின் ஆட்சி பரவி இருந்தது.

 

 

பாபர் நாமாவில் நாலாவது படத்திலுள்ள காட்சி இதோ:

 

“மன்னர் குதிரையிலிருந்து இறங்கினார். அவருக்கு முன்னால் ஒன்பது அலங்காரச் சின்னங்கள் இருந்தன. ஒரு மொகலாய வீரன் பசுவின் காலில் ஒரு வெள்ளைத் துணியைக் கட்டி அதன் மறு முனையை தன் கையில் பிடித்திருந்தான். மேலும் மூன்று வெள்ளைத் துணிகள் ஒன்பது அலங்காரக் கம்பங்களில் மூன்றில் கட்டப்பட்டன. அவைகளில் ஒரு வெள்ளைத் துணியின் மீது பாபர் நின்றார். அப்பொழுது பசுவில் கால் துணியைப் பிடித்திருந்தவன், ஏதோ சில உச்சாடனங்களை அவனது பாஷையில் மொழிந்தான். அப்பொழுது அவன் அந்த ஒன்பது அலங்காரக் கம்பங்களைப் பார்த்து ஏதோ முத்திரைகளைக் காட்டினான். மன்னனும் மற்ற பெரியோர்களும் குதிரையின் பாலை அந்தச் சின்னங்கள் மீது ப்ரோக்ஷனம் செய்தனர் (தெளித்தனர்). உடனே பின்னால் நின்ற படை வீரர்கள் போர்க்கால வெற்றி முழக்கமிட்டனர். இதை அவர்கள் மூன்று முறை செய்தார்கள். அப்பொழுது வாத்தியக் காரர்கள் முரசுகளை அடித்து எக்காளமிட்டனர். இந்த வாத்ய கோஷத்துக்குப் பின்னர் அவர்கள் மீண்டும் கோஷமிட்டவாறே அந்தச் சின்னங்களைச் சுற்றி ஓடி வந்தார்கள்.”

இந்த சடங்கு புதிய மன்னர்களை வரவேற்று அங்கீகாரம் அளிக்கும் சடங்கு ஆகும்.

இந்த வழக்கம் செங்கிஸ்கான் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டதற்கான சான்று உளது.

 

எவ்வாறு கிறிஸ்தவ மதம் பரவிய நாடுகளில் எல்லாம் பழங்கால வழக்கங்கள் அந்த மதத்தில் இணக்கப்பட்டனவோ அவ்வாறே இன்றும் இஸ்லாமிய நாடுகளில் குறிப்பாக வேத கால மன்னர் ஆட்சி நடந்த துருக்கி-இராக்-ஈரான் பகுதிகளில் உள்ளன. முஸ்லீம் மதத் தலைவர்கள் கண்டிப்பதனால் மறைவாக அவைகளைச் செய்கின்றனர். அவை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன.

கிருஷ்ணனின் யாதவ குலத்தில் 12-ஆவது மன்னனான கஜன் என்ற மன்னன் ஸ்தாபித்த நகர்தான் ஆப்கனிஸ்தானத்திலுள்ள கஜினி. அங்கிருந்து முகமது என்ற மன்னன் குஜராத் மீது 17 முறை படையெடுத்து சோமநாத சிவலிங்கத்தை உடைத்து அதன் கீழேயிருந்த தங்கம் வைரம் எல்லாவற்றையும் கொள்ளை அடித்ததை நாம் அறிவோம். அந்த கஜினி நகரம் யாதவ குல மன்னர்களின் கீழ் 101 தலைமுறைக்கு மேல் இருந்தது. அதன் 74ஆவது மன்னன் கஜ சிங். அவனது காலத்தில் அவர்கள் கஜினியிலிருந்து வெளியேற்றப்பட்டு ஹிமாசலப் பிரதேசத்திலுள்ள ஜ்வாலாமுகிக்கு வந்தனர். அதில் ஒருவன் சாலிவாஹனன் என்ற மன்னன். அவன் சாலிவாஹனபுரத்தை ஸ்தாபித்தான். அதன் பெயர் சாலாபுரம் என்றும் சியால் கோட் என்றும் மருவின; இப்பொழுது சால்கோட் (டை) பாகிஸ்தானில் உள்ளது. சாலிவாஹனனனுக்கு பத்து மகன்கள். அவர்களில் ஒருவன் பட்டி.  அந்த பட்டி என்போன் மீண்டும் கஜினியை வென்று 101 தலைமுறை ஆட்சியைக் கொண்டாட ஹரோத் என்னுமிடத்தில் ஒரு கோட்டையைக் கட்டினான்.

 

எவ்வாறு புத்த மதத்தினர், இலங்கையிலுள்ள ராமாயண சின்னங்களை மறைத்தனரோ அவ்வாறே முஸ்லீம்கள் ஆட்சி ஏற்பட்ட ஈரான் முதல்- இந்தோநேஷியா வரை இந்துச் சின்னங்கள் மறைக்கப்பட்டுள்ளன. அவை அந்த நாடுகளின் மியூஸியங்களில் இன்றும் உள. அவைகளை அறவே ஒழித்தால் அந்த நாடுகளின் வரலாறு எல்லாம் முகமது நபிக்குப் பின்னர் என்று ஆகிவிடுமே என்று அஞ்சி, இன்னும் மியூஸியங்களில் பழம்பொருட்களை வைத்துள்ளனர். பாமியன் புத்தர் சிலைகளையும் இராக்கில் உள்ள புனிதச் சின்னங்களையும் சமீப காலங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகள் அழித்ததை நாம் பத்திரிக்கைகளில் படித்தோம். எஞ்சியுள்ளவைகளை விரைவில் புகைப்படம் எடுத்து அவற்றின் வரலாற்றை எழுதுவது இந்துக்களின் கடமை.

 

-சுபம்–

ரிக்வேத ஆராய்ச்சியில் கிடைத்த ஒன்பது விஷயங்கள்! (Post No.5342)

Research Article by London swaminathan

Date: 20 August 2018

 

Time uploaded in London – 7-44 AM (British Summer Time)

 

Post No. 5342

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

கடந்த 150 ஆண்டுகளாக வேதங்கள் பற்றி வெளியான புஸ்தகங்கள் எண்ணிலடங்கா. அவை பெரும்பாலும் ஆங்கிலம், ஹிந்தி மொழியிலோ ஜெர்மானிய பிரெஞ்சு மொழிகளிலோ இருக்கின்றன. கடல் போலப் பெருகிக் கிடக்கின்றன. தமிழில் இத்தகைய ஆராய்ச்சிப் புத்தகங்கள் மிகக் குறைவு; வேத மந்திரங்களின் மொழி பெயர்ப்பு மட்டுமே ஆர். ஜம்புநாதன் முதலியோரால் வெளியிடப் பட்டுள்ளன. ஆனால் அதை ஆராயாமல் அப்படியே மந்திர மொழி பெயர்ப்பையே கொடுத்துள்ளனர். நான் இது வரை படித்த புத்தகங்களில் கண்ட ஒன்பது சுவையான செய்திகளைத் தருகிறேன்.

 

1.மன்னர்களின் தம்பிமார்களில் ஓரிருவர் பிராஹ்மண ரிஷிகளாக மாறி , ரிஷி வம்ஸத்தை ஸ்தாபித்தனர் என்று

புருஷோத்தம் லால் பார்கவா எழுதிய நூலில் சொல்கிறார்:

!

தமிழிலும் இதற்கு உதாரணம் உண்டு; சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோ, துறவியாக மாறி, நமக்கு சிலப்பதிகாரத்தைத் தந்துள்ளார்.

2.அடுத்த சுவையான செய்தி ஈரானிலும் சுமேரியாவிலும் பல வேதகாலப் பெயர்கள் காணப்படுவதாகும். ஸுமுகன் என்ற ஒரு கெட்ட மன்னனின் பெயர் இரண்டே இடங்களில்தான் காணப்படுகின்றது. தீய செயல்களினால் அரசாட்சியை இழந்த மன்னர் பட்டியலில் சுமுகன் என்றொரு மன்னனின் பெயரைச் சொல்கிறார் மநு. இது விநாயகர் முதலிய பல கடவுள்களைக் குறிப்பிடும் நாமம். ஆனால் புராதன இந்தியாவில் இப்படி ஒரு மன்னன் பெயர் கிடையாது! சுமேரியாவில் மட்டும் இந்தப் பெயர் காணப்படுகிறது!

 

பழங்காலத்தில் பெண் கொலை புரிந்த நன்னன் என்ற தமிழ் மன்னனைப் போற்றிப்பாட எல்லா சங்கப் புலவர்களும் மறுத்துவிட்டனர். அது போல சுமுகனையும் கிடப்பில் போட்டுவிட்டனர் ஸம்ஸ்க்ருதப் புலவர்கள்.

 

3.மற்றொரு மர்மமான பெயர் நாபாகநேதிஷ்டா. இந்தப் பெயரே ஒரு விநோதமான பெயர். ஸம்ஸ்க்ருத அர்த்தப்படி ‘மநுவுக்கு அடுத்தவன்’ என்பது பொருள். இவன் ஒரு மநுவின் புதல்வன். முறை தவறிய செயல்களில் ஈடுபட்டதால் இவனுக்கு மநுவும் நாபாகனின் சஹோதர்களும் சொத்து விஷயத்தில் பங்கு தர மறுத்து விட்டார்களாம். அந்தக் காலத்திலேயே இப்படி ஒரு குடும்பத் தகராறு!! இந்தப் பெயர் சுமேரிய,அஸீரியப் பெயர்களுடன் தொடர்புடையது. இவனைப் பற்றிய குறிப்புகள் ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் வருகிறது.

அக்நேதன் (Akhenaten of Egypt) போன்று நாபாகநேதிஷ்டானும் சமயப் புரட்சி செய்திருக்கலாம். ஏனெனில் இது போல எகிப்தில் அக்நதனும் (ஏக நாதன்) சுமேரியாவில் ஒரு மன்னனும் புரட்சி செய்தவுடன் அவர்கள் பதவி பறிபோனது அது போல நாபாக நேதிஷ்டன், சுமுகன் போன்றோரும் சமயப் புரட்சி செய்தனரா என்று ஆராய வேண்டும்.

 

4.ரிக் வேதத்தின் எட்டாவது மண்டலம் புதிர்கள் நிறைந்தது. இதில் வரும் பலபூதன் என்ற மன்னன் பிராஹ்மணர்களுக்கு பசுக்களோடு ஒட்டகங்களையும் தானம் செய்தான். இவன் ஈரான் பகுதியைச் சேர்ந்தவன். ரிக்வேதப் பாடல்கள் ஈரான், ஆப்கனிஸ்தான், துருக்கி, தற்போதைய பாகிஸ்தான், இந்தியாவில் விதர்ப தேசம்- கங்கைச் சம்வெளி, மங்கோலிய வம்ஸத்தினர் வசிக்கும் திபெத், சீனா வரையுள்ள விஷயங்களை விவாதிக்கிறது. இது மிகப்பெரிய பகுதி. இவ்வளவு பெரிய பகுதியை உலகில் வேறு எந்தப் பழைய நூலும் பிரஸ்தாபிக்கவில்லை!!!

 

  1. வேதத்தில் வரும் ‘தாஸ’, ‘அநாஸ’ ஆகிய சொற்களுக்கு வெளிநாட்டினர் தவறான பொருள் கொடுத்து, ஆரிய-திராவிடர் என்று பிரித்துப் பொய் சொன்னதால், சிந்துவெளி எழுத்தைப் படிக்க முடியவில்லை. தாசர் என்றால் அடிமை போல வேலை செய்வோர். இது கிரேக்க சாம்ராஜ்யத்தில் உண்டு. பெரிய புராணத்தில் சுந்தர மூர்த்தி நாயனார் சரிதத்தில் உண்டு. இதற்கும் ஆரிய- திராவிட என்ற பிரசாரத்துக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை. இதே போல ‘அநாஸ்’ என்றால் மூக்கு அற்றவர் என்று பொருள். ஜப்பானியர், சீனர் போன்ற மங்கோலிய இன மக்களுக்கு மூக்கு சப்பையாக இருக்கும்; மூக்கு இருப்பதாகவே தோன்றாது ஆகையல் இதை அநாஸ ( மூக்கு அற்றவர்) என்று வேதங்கள் சொல்லும். ஒரு பக்கம் திராவிடர்களுக்கு போண்டா மூக்கு என்று எழுதிய வெள்ளைக்கார்கள் ‘மூக்கற்ற’ என்ற சொல்லையும் திராவிடர் மேல் ஏற்றிவிட்டனர்.

 

  1. மற்றொரு அதிசயம் துருக்கி நாட்டில் கி.மு 1380-ஆம் ஆண்டு மிட்டனி நாகரீக(Mitanni Civilization) களிமன் கல்வெட்டில் வேத காலப் பெயர்கள் சம்ஸ்க்ருதத்தில் இருப்பதாகும்! வேத கால மன்னர்களின் பெயரில் உள்ள ‘பிரதர்தன’ என்ற மன்னர் பெயர் மிட்டனி மன்னர்களின் பட்டியலில் உளது. நாம் தினமும் படிக்கும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலும் ரிக் வேதத்திலும் உளது.

 

7.ரிக் வேதத்தில் ‘சிந்துத்வீப’ என்பது ஒரு ரிஷி/மன்னரின் பெயர். இந்த மாதிரி பெயர் மஹா பாரதத்திலும் வருகிறது. சிந்து தேச ராஜா ஜெயத்ரதன் பற்றி மஹாபாரதத்திலும் காணலாம். ஆக, வேத காலத்தில் இருந்த மன்னர்களின் பெயர்களை பிற்காலத்தவரும் பயன்படுத்தினர். இது ரிக்வேத- சிந்து சமவெளி நாகரீகத்தை உறுதிப் படுத்திகிறது.

8.ரிக் வேதத்தில் பல்வேறு வம்ஸாவளியைச் சேர்ந்த 160 மன்னர்களின் பெயர்கள் உளது. எனது ஆங்கிலக் கட்டுரையில் அனைவர் பெயரும் உள. இவர்களுக்கு வெள்ளைக்காரர் போல 20 ஆட்சி ஆண்டு வீதம் கொடுத்தால் 3000 ஆண்டுகளைக் கடந்து விடும்; ஆனால் ஒரே நேரத்தில் பல தேசங்களில் பல மன்னர்கள் ஆண்டிருக்கலாம். ஆக 500 முதல் 1000

ஆண்டுக் கால வரலாறு இது!

9.மீனவ மன்னன் , துமுசி, சம்மட போன்ற சுமேரியப் பெயர்கள், வெள்ளம் பற்றிய அதர்வன வேதக் குறிப்பு ஆகியனவும் ஒப்புநோக்கதக்கது.

–SUBHAM–

 

வாஸ்து சாஸ்திரம்- ஸ்ரீ கணபதி ஸ்தபதி! (Post No.5341)

WRITTEN BY S NAGARAJAN

Date: 20 August 2018

 

Time uploaded in London – 5-50 AM (British Summer Time)

 

Post No. 5341

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

ஹிந்து உன்னதம்

 

வாஸ்து சாஸ்திரத்தை உன்னத நிலைக்கு ஏற்றிய ஸ்ரீ கணபதி ஸ்தபதி!

 

ச.நாகராஜன்

 

 

 

வாஸ்து சாஸ்திரம் ஹிந்து வாழ்க்கை முறையின் உன்னத சாஸ்திரங்களுள் ஒன்று.

 

பூவுலகில் பிறந்தோர் அனைவரும் தங்கள் வாழ்க்கையைத் திறம்பட சிறப்பாக அமைத்துக் கொள்ள வைக்கும் இந்த சாஸ்திரம் காலம் காலமாக விஸ்வகர்மா குலத்தினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

 

 

இந்த குலத்தில் பிறந்து இந்தக் கலையின் உண்மையை உலகெங்கும் பறை சாற்றியவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் ஸ்ரீ கணபதி ஸ்தபதி ஆவார்.

 

1927ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி பிள்ளையார் பட்டியில் வைத்தியநாத சிற்பிக்கும் வேலம்மாளுக்கும் மகனாகப் பிறந்த கணபதி ஸ்தபதி தன் முன்னோர்களின் பாதையில் சென்று வாஸ்து கலையைச் செவ்வனே பயின்றார்.

இவரது முன்னோர்களில் ஒருவரான ராஜ ராஜ பெருந்தச்சன் பத்தாம் நூற்றாண்டில் மாமன்னன் ராஜ ராஜ சோழனின் வேண்டுகோளுக்கு இணங்க பெரிய கோயிலை – பிரஹதீஸ்வரர் ஆலயத்தை – சிற்ப சாஸ்திரத்திற்கேற்ப அமைத்தவர்.

வாஸ்து சாஸ்திரத்தைத் தன் தந்தையாரிடமிருந்தும் தனது மாமா செல்லக்கண்ணு ஸ்தபதியிடமிருந்தும் இவர் பயின்றார்.

மாமல்லபுரத்தில் உள்ள கட்டிடம் மற்றும் சிற்பக் கலைக்கான அரசுக் கல்லூரியில் 27 வருடங்கள் தலைமைப் பொறுப்பை ஏற்று  திறம்பட அதை நடத்தி வந்தார்.

 

 

சிற்பக் கலை நலிவடைந்திருந்த நிலையில் அதைக் காத்து அதன் சிறப்புக்களை உலகிற்கு உணர்த்த வேண்டிய கால கட்டத்தில் வாழ்ந்த அவர் இதை சவாலாக ஏற்று வாஸ்து சாஸ்திரத்தின் மாண்பை காலத்திற்கேற்ப புதிய உச்சத்தில் ஏற்றினார்.

1988இல் பணி ஓய்வு பெற்ற பின்னர் வாஸ்து சாஸ்திரத்தின் மூலநூல்களையும் முறைகளையும் ஆராய்ந்து அதற்காக வாஸ்து வேத ஆய்வு மையத்தையும் அமைத்தார்.

 

ஏராளமான கோவில்களை புராதன சாஸ்திரம் சற்றும் வழுவாது அமைத்தார்; பெரும் புகழைப் பெற்றார்.

 

இவரது அரிய சாதனையைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு இவருக்கு 2009ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதை வழங்கிக் கௌரவித்தது. இன்னும் பல விருதுகள் இவரைத் தேடி வந்தன.

 

இவரது நுட்பமான திறமையை உலகில் உள்ள அனைவரும் மதித்தனர். அமெரிக்காவில் சிகாகோ, வாஷிங்டன் டி.சி. (சிவா – விஷ்ணு கோவில்), கெண்டுகி, போஸ்டன்,பால்டிமோர், சான்பிரான்ஸிஸ்கோ, ஹவாய் (சமரச சன்மார்க்க இறைவன் கோவில்) ஆகிய இடங்களில் கோவில்களை அமைக்க இவரை அங்குள்ளோர் அழைத்தனர். அவரும் இதை ஏற்று கோவில்களை சிற்ப சாஸ்திர முறைப்படி வடிவமைத்தார்.

 

பிரிட்டன், சிங்கப்பூர், மலாசியா, மரிஷியஸ், சீஷெல்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள கோவில்களையும் வடிவமைத்தவர் இவரே.

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை,சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக வளாகம், ஹைதராபாத்தில் உள்ள ஹுசைன் சாகர் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை,முதல் சிற்பியான மயனுக்கு மாமல்லபுரத்தில் சிலை உள்ளிட்டவை இவரது மதிநுட்பத்தாலும் கைவண்ணத்தாலும் ஏற்பட்டவையே.

 

 

ஏராளமான வாஸ்து சாஸ்திர நூல்களை எழுதியுள்ள இவர் குறிப்பிடும் பழைய புராதன ஹிந்து சிற்ப சாஸ்திர நூல்கள் பல.

மானசாரம் குறிப்பிடும் 32 நூல்களின் பட்டியலை இவர் தந்துள்ளார்:

 

விஸ்வகர்மீயம், விஸ்வம், விஸ்வசாரம், ப்ரபோதம், விருத்தம்

மயமதம், த்வஷ்டா தந்த்ரம், மனுசாரம்,நலம், மானவிதி,

மானகல்பம், மானஸாரம், பேஹுஸ்ருதம், ஸ்ருஷ்டம், மான போதம்,

 

விஸ்வ போதம், ஆதிசாரம், விசாலாக்ஷம்,

விஸ்வகாஸ்யபம், வாஸ்து போதம்,

 

மஹா தந்த்ரம், வாஸ்து வித்யாபதி, பராசரீயகம்,

காலயூபம்,

 

சைத்யம், சித்ரம், ஆவர்யம், சாதக சார சம்ஹிதா,

பானுமதம்,  இந்த்ர மதம், லோகாகுவம், சௌரம்

ஆகியவை குறிப்பிடத் தகுந்த நூல்களாகும்.

 

 

மனுசாரம் குறிப்பிடும் 18 நூல்கள் சிறப்பானவை:

 

ஈஸானம், சித்ர காயபம், ப்ரயோக மஞ்சரி, பெருஹிதம்,

புத்த மதம், கௌதமம், குலாலம், வாசிஷ்டம்,

மனோகல்பம், பார்கவம், மார்கண்டம், கோபாலம்,

நாரதீயம், நாராயணீயம், கஸ்யபம்,

சித்ரயாமளம்,

சித்ரஹாஹுல்யம், தேசிகம்

 

 

இது தவிர கீழ்க்கண்ட முக்கியமான நூல்களும் உள்ளன:

 

வாஸ்து வித்யா, மனுஷ்யாலய சந்த்ரிகா,

சாரஸ்வதீய சித்ர கர்மா சாஸ்த்ரம்,

ப்ராஹ்மீய சித்ரகர்ம சாஸ்திரம்

சகலாதிகாரம்,சில்ப ரத்னம்,

சனத் குமார வாஸ்து சாஸ்த்ரம்,

சில்ப ரத்னாகரம், சர்வார்த்த சில்ப சிந்தாமணி

 

வட இந்திய சிற்பிகளால் பயன்படுத்தப்படும் நூல்கள்:

 

வாஸ்து ராஜவல்லபம், சமராங்கன சூத்ரதாரம்,

ரூப மண்டனம்,

கோதண்டமண்டனம், சில்ப ப்ரகாசா, அபராஜிதா,

ப்ருச்சா, ப்ரதிமா, மான லக்ஷ்ணம், க்ஷீர நவம்,

தீபார்னவம்.

இவ்வளவு நூல்களையும் படித்தால் வாஸ்து விஞ்ஞானத்தின் பெருமையும் உண்மையும் புலப்படும்

 

 

தனது ஆராய்ச்சி வன்மையால் கணபதி ஸ்தபதி அடைந்த அதிசயமான அனுபவங்கள் ஏராளம். அதை அவரே எழுதியுள்ளார்.

காஞ்சி பரமாசார்யருடனான அவரது அனுபவங்கள் சிலிர்க்க வைப்பவை.

வாஸ்து சாஸ்திரம் விஞ்ஞான பூர்வமான ஒன்று என்பதை அவர் Vastu Shastra – A Scientific Treatise என்ற தனது நூலில் விளக்கியுள்ளார்.

 

நிறைவாழ்வு வாழ்ந்து 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  5ஆம் தேதி அவர் இறைவனடி சேர்ந்தார்.

 

அவரது அதிசய அனுபவங்களையும், அவர் விளக்கும் நுட்பமான கருத்துக்களையும் இன்னொரு கட்டுரையில் காண்போம்.

***

ஆடை இல்லாதவன் ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் (Post No.5334)

Written by London swaminathan

Date: 18 August 2018

 

Time uploaded in London – 7-30 AM  (British Summer Time)

 

Post No. 5334

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

‘ஆடை இல்லாத ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்’ என்பது பழமொழி. இதற்கு சரியான உதாரணம் ஒரு பிரபல பேச்சாளரின் வாழ்வில் நடந்தது. நிர்வாணமாக மக்கள் உலவும் காலனிகள் அமெரிக்காவில் (nudist colony) உண்டு. அங்கு அவரை சொற்பொழிவாற்ற அழைத்திருந்தனர். முதலில் அவர் வரவே மாட்டேன் என்று மறுத்தார். பின்னர் அவர்கள் வற்புறுத்தவே, சம்மதித்தார்.

 

நிர்வாண காலனிக்குள் வழக்கமான கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு நுழைந்தார். அவருக்கு மகத்தான வரவேற்பு! ஆனால் வரவேற்ற எல்லோரும் பிறந்த மேனியில் (naked) இருந்தனர். ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு, பார்வையை ஆகாயத்தில் நிறுத்திய வண்ணம் நுழைந்தார். அனைவரும் அவரை குசலம் விசாரித்துவிட்டு உங்களுக்கு மாடியில் அறை ஒதுக்கி இருக்கிறோம். டின்னர் பெல் ( Dinner Bell = இரவு சாப்பாட்டுக்கான மணி) அடித்தவுடன் கீழே வந்தால் போதும் என்றனர். அவருக்கும் மெத்த மகிழ்ச்சி. சொற்பொழிவில் சொல்ல வேண்டிய விஷயங்களை மனத்தில் உருப்போட்டுக்கொண்டு மாடி ஏறினார்.

 

 

அறையில் ஒன்றுமே இல்லை. அதுவும் பிறந்தமேனிக்கு– திறந்தமேனிக்கு– ஒன்றுமே இல்லாமல் இருந்தது. அவர் திருதிருவென விழித்தார். ஓஹோ! நாமும் உடையை மாற்றிக்கொண்டு– கழட்டிக்கொண்டு– அவர்கள் சொரூபத்தில் தரிசனம் தர இந்த ஏற்பாடு போலும் என்று எண்ணி, அனைத்து உடைகளையும் கழட்டிவிட்டு, முகத்தைக் கழுவி, வாசனைத் திரவியங்களை அடித்துக்கொண்டு காத்திருந்தார். ‘டின்னர் பெல்’ அடித்தது. அவருக்கோ நல்ல பசி. ஆஹா! முதலில் சாப்பிட்டுவிட்டு பின்னர் உரையாற்றுவோம் என்று ஆவலுடன் படி இறங்கி வந்தார்! இடி போலப் பேரதிர்ச்சி காத்திருந்தது.

 

எல்லோரும் ‘டிப் டாப்’பாக உடை அணிந்து காட்சி தந்தனர்; அவரை வரவேற்க காத்திருந்தனர். இவரோ நாணிக் குறுகி, கையினால் “அதை” மறைத்துக் கொண்டு ஓடினார் மாடிக்கு!

 

நாம் ஒன்று நினைக்க தெய்வப் பிறவிகள் வேறு ஒன்று நினைக்கிறது!

xxxx

குதிரை எங்கே? ஆடைகள் பற்றிய மேலும் ஒரு சங்கதி!

 

ஆர்கைல் நகரப்  பிரபு (Duke of Argyll)  ஒரு தியேட்டருக்கு நாடகம் பார்க்கச் சென்றிருந்தார். பிரபுக்கள் முத்லிய பிரமுகர்களுக்கான தனியான இருக்கைப் பகுதியில் ( Private Box) அமர்ந்தார். பொது மக்கள் வர முடியாத பகுதி. அதற்குள் ஒருவர் திடீரென்று நுழைந்தார். அவர் காலில் பூட்ஸும், குதிரை ரேஸ் ஓட்டுவோர் அணியும் கால் காப்பும் (Spurs) இருந்தது. அதை ஒரு நொடியில் நோட்டம் விட்ட பிரபு எழுந்து நின்று சகல மரியாதைகளுடன் வணக்கம் செலுத்தினார்.

 

உள்ளே நுழைந்த குதிரை வீரனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

ஐயன்மீர்! என்னைப் போன்ற எளியேனுக்கு இப்படி ஸர்வ மரியாதைகளையும் செலுத்துவதன் கருத்து யாதோ? என்று வினவினன்.

 

அது சரி! கிடக்கட்டும்! குதிரை எங்கே? அதைக் கொண்டு வரவில்லையா? என்றார்.

 

முறையற்ற ஆடைகளுடன் வந்தவனுக்கு மூக்கு உடை கிடைத்தது!

 

xxx

 

உடுப்பு பற்றிய மேலும் ஒரு சங்கதி! பெயின் ட் வாசனை அடிக்கிறதே!

 

உலக மஹா யுத்த காலத்தில் அமெரிக்காவில் புகழ்பெற்று இருந்த வழக்கறிஞர்- தொழிலதிபர்- ப்ளாய்ட் ஆட்லம் (Floyd Odlum) ஆவார். அவரை ஒரு குடும்பம் விருந்துக்கு அழைத்து இருந்தது. அவர் மனைவியுடன் புறப்படும் முன் திடீரென்று ஒரு யோஜனை பிறந்தது.

 

‘அடியே! என்னிடம் ஒரே பூட்ஸ் ஜோடிதா ன் இருக்கிறது. அதுவோ கண்

ண்ணைப் பறிக்கும் மஞ்சள் நிறத்தில் உளது. வீட்டில் சாமான் அறையில் வைத்திருக்கும் கருப்பு பெயின் ட் டப்பாவைக் (Black Paint Tin) கொண்டுவோ. வேகமாக கலரை மாற்றி விடுகிறேன்.

அவள் சொன்னாள்: என் பிராண நாதா! நல்ல ஐடியா! இதோ வருகிறேன் என்று சொல்லி காற்றினும் கடுகிச் சென்று பெயின்ட் டின்னைக் கொணர்ந்தாள்; சாயப்பூச்சு இனிதே நிறைவேற- ‘கையும் கையும் கலந்திடவே ஜாலியாகவே’- என்று பாடிக்கொண்டு விருந்துக்கு அழைத்த வீட்டுக்கு ஏகினர்.

 

அந்த வீட்டில் அருமையான விருந்து சமைத்து இருந்ததால் அறுசுவை விருந்து மணம் கமழ்ந்தது. இவர்கள் இருவரும் வீட்டுக்குள் நுழைந்தவுடன் பெயின் ட் மணம் பரவியது.

 

விருந்தாளி அம்மாவுக்கு ஒரே சந்தேகம்! இவ்வளவு நேரம் நல்ல வாசனை; இப்போது என்ன நிகழ்ந்ததோ!

 

‘டேய் சார்லி! சாமான் அறைக்கு ஓடிப்போய் பார்; ஒருவேளை நாம் யாராவது பெயின் ட் டப்பாவை தவறாக இடறி கொட்டிப் போயிருக்கும்.

 

உடனே அவள் மகன் சார்லியும் போய்ப் பார்த்துவிட்டு அம்மா! எல்லாம் (Air Tight) டைட்டாக மூடிக் கிடக்கு; வேறு எங்கோ இருந்துதான் வாசனை (smell) வருகிறது என்றான்.

 

அந்த இரவு முழுதும் சம்பாஷணை (Conversation) அனைத்தும் பெயின்ட் பற்றித்தான்! ஓட்லமும் அவரது மனைவியும் ‘கப்புச் சிப்பு’ என்று இருந்தனர்; பேச்சை வேறு பக்கம் திருப்பிவிட பெருமுயற்சி செய்தனர்.

 

திருடனுக்குத் தேள் கொட்டினால் கத்தவா முடியும்?

 

xxx subhamxxx