இறந்துபோன முன்னோருக்கு சூடான உணவும், நதிக்கரை சாப்பாடும் பிடிக்குமாம்- மநு (Post No.5314)

WRITTEN by London swaminathan

Date: 12 August 2018

 

Time uploaded in London – 21-41 (British Summer Time)

 

Post No. 5314

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

மநு நீதி நூல்- Part 24

 

மூன்றாம் அத்யாயத் தொடர்ச்சி

 

3-183 முதல்  3-240 வரை உள்ள ஸ்லோகங்களில் முக்கிய விஷயங்கள்–

 

இறந்துபோன முன்னோருக்கு சூடான உணவும்,

நதிக்கரை சாப்பாடும் பிடிக்குமாம்- மநு (Post No.5314)

 

மர்ம விஷயங்கள்

3-189 பிதுர் தேவதைகள் வாயு ரூபமாக வந்து சிரார்த்தப் பிராஹ்மணர்கள் அருகில் உட்கார்வர் என்றும் அவர்கள் செல்லும் இடமெல்லாம் அவர்களும் சுற்றி வருவர் என்றும் மநு சொல்கிறார். ஆகையால் அவன் பரிசுத்தனாக இருக்க வேண்டும்.

 

3-190 ஒரு பிராஹ்மணன் வருவதாகச் சொல்லிவிட்டு வராமல் போனால் பன்றியாய்ப் பிறப்பார் என்கிறார்.

3-192-ல் பிதுர்களின் குணாதிசயங்களை வருணிக்கிறார்:

 

பிதுர்கள், அதாவது இறந்த முன்னோர்கள்,

1.கோபம் இல்லாதவர்கள்

2.சண்டை போடாதவர்கள்

3.உள்ளும் புறமும் பரிசுத்தமானவர்கள்

4.அவர்கள் மஹானுபாவர்கள்

5.பிரம்ம விசாரம் செய்பவர்கள்

 

ஆகையால் வந்த பிராஹ்மணர்களும் அவர்களுக்கு உணவு தருவோரும் அதே போல தூயவர்களாக இருக்க வேண்டும்.

சிரார்த்ததித்திற்கு அழைப்போருக்கு வேதம், ஆறு அங்கம் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு

த்ரி நஸிகேதஸ் = கடோப நிஷதத்திலுள்ள நஸிகேதஸ் கதை அறிந்தோர்;

த்ரி ஸுபர்ண = ரிக் வேதத்திலுள்ள மூன்று பறவை கதை அறிந்தோர் (10-114-3);

ஜ்யேஷ்ட சாமன் = உயர்ந்த சாமன் ஓதுவோர்

ஆகியோரை அழைப்பது சிறப்பு என்பார். (Slokam 185)

 

இதற்கடுத்தாற் போல 1000 பசு தானம் செய்தவர்கள், நூறு வயது எய்தியவர்கள் சிறப்பு என்பார்.

 

அந்தக் காலத்தில் 1000 பசு தானம்  செய்தவர்கள், 100 வயதை எட்டியவர்கள் இருந்ததை இதன் மூலம் அறிகிறோம். ரிக் வேதம், மூல வர்மன் (இந்தோநேஷியா) கல்வெட்டுகளில் 20,000 பசுக்கள் தான செய்திகள் வருவதால் மநு சொல்லுவது நடை முறையில் இருந்ததை அறிகிறோம்.

பித்ருக்களின் வகைகளும் தோற்றமும்

 

ஸ்லோகம் 194 முதல் பித்ருக்களின் வகைகளை விவரிக்கிறார்.

அந்தப் பெயர்கள் எல்லாம் விநோதமாக இருக்கின்றன. உதாரணத்துக்கு சோமம் குடிப்போர், தீயால் சுவைக்கப்பட்டோர், நெய் சாப்பிடுவோர், தீயால் சுடப்பட்டோர், தீயால் சுடப்படாதவர் என்று பல வகைகள் பட்டியலில் உள்ளன. இவைகளின் வியாக்கியானங்களைப் பார்த்தால்தான் புரியும்.

 

ஸ்லோகம் 201 முதல் பித்ருக்களின் தோற்றம் பற்றி சொல்லப்படுகிறது.

 

 

ஸ்லோகம் 205-ல் முதலில் கடவுளருக்கும் பின்னர் பித்ருக்களுக்கும் சிரார்த்தம் படைக்க வேண்டியது பற்றிச் சொல்கிறார்

 

இயற்கை அன்பர்கள்

 

ஸ்லோகம் 207-ல் பித்ருக்கள் இயற்கை விரும்பிகள் என்பதை மநு விவரிக்கிறார்; அவர்களுக்கு திறந்த வெளிகளும் நதிக்கரைகளும், தனிமையான இடங்களும் பிடிக்கும் என்பார்.

 

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகு

212-ல் சிரார்த்த அக்னி இல்லாவிடில் பிராஹ்மணர் கைகளில் ஹோமம் செய்யலாம்; ஏனெனில் பிராஹ்மணர்கள் தீயைப் போன்றவர்கள்.

 

‘பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகு’ என்று தமிழ்ப் பாடல்களும் செப்பும்; அகலாது அணுகாது தீக்காய்வார் போல பிராஹ்மணர்களிடத்தில் இருக்க வேண்டும் என்பது கருத்து.

 

 

சிரார்த்ததுக்கு வந்த பிராஹ்மணர்களுக்கு என்ன என்ன உணவு என்பதை விளக்கிப் பரிமாற வேண்டும்.

 

3-230-ல் பிராஹ்மணர்களுக்கு உணவு படைக்கையில் கோபப்படக் கூடாது; கண்ணீர் சிந்தக் கூடாது; அசுத்தப்படுத்தக் கூடாது.

வேதத்திலுள்ள விடுகதைகள்

சந்தோஷத்தோடு உணவு பரிமாறி அவர்களையும் சந்தோஷப்படுத்த வேண்டும்; எது பிடிக்குமோ அதை உபசரித்துப் போட வேண்டும்; வேத வேதாந்தங்களை அப்போது படிக்கலாம். வேதத்திலுள்ள விடுகதைகள், புதிர்களைப் படிக்கலாம்.

 

236-237-ல் இறந்து போன முன்னோர்கள் சூடான உணவை மட்டுமே உண்ணுவர்; ஆகையால் சூடான பொருளை மட்டுமே பரிமாற வேண்டும்

 

இந்தப் பகுதியில் வரும் விஷயங்கள் ஆரிய -திராவிட வாதத்தையும், திராவிட கலாசாரம் என்று தனியாக ஒன்று உண்டென்னும் வாதத்தையும் வேட்டு வைத்து தகர்க்கிறது.

வெப்ப மண்டலப் பிரதேசத்தில் வளரும்    எள், தர்ப்பை, அரிசி பற்றிய கிரியைகள் உள்ளதால் அவர்கள் (இந்துக்கள் ) மண்ணின் மைந்தர்கள் என்பது புரியும்.

 

திராவிடரகளும் இதையே பின்பற்றுவதால் அவர்களுக்குத் தனி ஒரு கலாசாரம் இல்லை ஒரே இனம் தான் என்பதும் விளங்கும்.

தென் புலம், தர்ப்பைப் புல், பிண்டம் என்பன புற நானூறு, திருக்குறள் போன்ற நூல்களிலும் வருகின்றன. ஆறு பருவங்கள் பற்றி ரிக் வேதத்திலும் சங்க இலக்கியத்திலும் வருகிறது. இந்தியா தவிர மற்ற இடங்களில் நாலு பருவங்கள்- எள், பிண்டம் (அரிசிச் சோறு) ஆகியன இல்லை. ஆகையால் இந்துக்களே மண்ணின் மைந்தர்கள், அவர்கள் வெளியேயிருந்து வந்தவர்கள் என்று கூறுவோருக்கு பலத்த அடி கொடுக்கும் பகுதி இது!

 

 

 

 

 

 

 

தொடரும்

 

பத்மலோசனர் செய்த அற்புதம்! கைக்குட்டை, தண்ணீர் ரஹஸியம்! (Post No.5310)

COMPILED by London SWAMINATHAN

Date: 11 August 2018

 

Time uploaded in London – 14-23 (British Summer Time)

 

Post No. 5310

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

பத்மலோசனர் செய்த அற்புதம்! கைக்குட்டை, தண்ணீர் ரஹஸியம்! (Post No.5310)

 

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெருமையை உலகிற்குப் பறைசாற்ற விரும்பிய பெரியோர்களில் ஒருவர் பத்மலோசன். அவர் சில அற்புதங்களை நிகழ்த்தி வந்தார். அது எப்படி என்பது அவருடைய மனைவிக்கும் தெரியாது. அதை ராமகிருஷ்ணர் கண்டுபிடித்தவுடன் ராமகிருஷ்ணர் ஒரு அவதாரம் என்று அறிவிக்கத் துவங்கினார்.

 

இதோ அந்தக் கதை

பர்த்துவான் அரசரின் அவைப் புலவர் பத்மலோசன். அவர் மஹா மேதாவி. சாஸ்திரங்களின் கரை கண்டவர். அவரைச் சந்திக்க ராமகிருஷ்ணர் ஆசைப்பட்டார். அதன்படி அவரும் கல்கத்தா வந்தார். ஏனெனில் அவருக்கு ராமகிருஷ்ணரின் மீது அளவற்ற மரியாதை.

 

தாந்த்ரீக சாதனைகளைப் பழகியதன் விளைவாக பத்மலோசனர் சில அற்புதமான சக்திகளைப் பெற்றிருந்தார். அவர் எபோதும் தன் பக்கத்தில் ஒரு பாத்திரம் நிறைய தண்ணீரும் கைக் குட்டை (HAND KERCHIEF)யும்  வைத்திருப்பார்.ஏதாவது கடினமான பிர்ச்சினையைத் தீர்த்து வைக்குமாறு அவர் அழைக்கப்பட்டால், சிறிது தூரம் நடந்து சென்றுவிட்டு , திரும்பிவருவார். பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் முகத்தைக் கழுவுவார். பின்னர் அந்தக் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு தீர்ப்பு கூறுவார். அவருடைய இஷ்ட தெய்வத்தின் அருளினால் அவர் இப்படிச் செய்துவந்தார். இப்படிச் செய்யும் அவரை யாரும் வாதத்தில் மிஞ்ச முடியாது. அவர் சொல்லும் தீர்ப்பும் கனகச்சிதமாக இருக்கும். யாரும் அதை மறுக்க முடியாது.

ஏதோ சிந்தனை செய்வது போல நடந்து சென்று வீட்டுத் தண்ணீரில் முகம் கழுவுவார். பின்னர் தீர்ப்புக் கூறுவார். எல்லோரும் ஏதோ வெளியே போய் வந்த களைப்பில் முகம் கழுவுவதாக நினைத்துக் கொள்ளுவர். அவருடைய மனைவிக்கும் இதன் ரஹஸியம் தெரியாது.

 

ராமாகிருஷ்ணருக்கு அன்னை காளியின் அருள் இருந்ததால் இதன் காரணம் புரிந்துவிட்டது. ஒருநாள் அவர் அந்தத் தண்ணீர் பாத்திரத்தையும், கைக்குட்டையையும் எடுத்து ஒளித்து வைத்துவிட்டார். அப்பொழுது பத்மலோசனருக்குக் கடினமான ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பண்டிதர் அதற்குப் பதில் சொல்லும் முன் கைக்குட்டையையும் தண்ணீர் பாத்திரத்தையும் தேடினார். அவை அங்கு இல்லாதது கண்டு ஆச்சரியப்பட்டார். அவற்றை ராமகிருஷ்ணர்தான் எடுத்து மறைத்து வைத்திருக்கிறார் என்ற செய்தி கிடைத்த பின்னர் மேலும் வியப்படைந்தார். அதிலும் அவர் அதை வேண்டுமென்றே செய்திருக்கிறார் என்பதைக் கேட்டவுடன் அவர் அடைந்த ஆச்சர்யத்துக்கு அளவே இல்லை.

 

தன் இஷ்ட தெய்வமான காளியைத் தவிர வேறு யாராலும் அறிந்துகொள்ள முடியாத இந்த ரஹஸியத்தை அறிந்து கொண்ட ராமகிருஷ்ண பரமஹம்ஸர் காளியின் அவதாரமே என்று நினைத்து கண்ணீர் மல்கி, ராமகிருஷ்ணரையே வழிபடத் துவங்கினார். இந்த நிகழ்ச்சியால் அவர் தம்மை முழுதுமாக ராமகிருஷ்ணரிடம் அர்ப்பணித்தார்

இந்த நிகச்ழ்ச்சி பற்றி பண்டிதர் பத்மலோசனர் சொல்லும்போது, நான் நல்ல நிலையை அடைந்ததும், இந்த நாட்டிலுள்ள சமய அறிஞர்கள் எல்லோரையும் அழைத்து, ஒரு பெரிய கூட்டம் நடத்தி, அவரை கடவுளின் அவதாரம் என்று மெய்ப்பிப்பேன். யாருக்குத் தைரியம் இருக்கிறதோ அவர்கள் வந்து எதிர்க்கட்டும் என்றார். (ஆனால் பத்மலோசனர் மோசமான உடல்நிலையில் இருந்ததால் விரைவில் காலமாகிவிட்டார்.)

 

ஆதாரம்- பக்கம் 181-182, பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், ராமகிருஷ்ண மடம் வெளியீடு, மயிலாப்பூர், சென்னை.

 

–SUBHAM-

நைடதத்தில் உள்ள நான்கு சிலேடைப் பாடல்கள்! (Post No.5309)

Written by S Nagarajan

Date: 11 August 2018

 

Time uploaded in London – 7-00 AM  (British Summer Time)

 

Post No. 5309

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

நைடதத்தில் உள்ள நான்கு சிலேடைப் பாடல்கள்!

 

ச.நாகராஜன்

 

அதிவீரராம பாண்டியன் இயற்றிய தமிழ்க் காவியமான நைடதம் சிருங்காரச் சுவை சொட்டச் சொட்ட எழுதப்பட்ட ஒன்று.

இதில் சுயம்வரப் படலம் குறிப்பிடத் தகுந்த ஒன்று.

திரிலோகத்தில் உள்ள அரசர்களெல்லாம் ஒருங்கு கூடி சுயம்வர மண்டபத்தில் வந்து சேர தமயந்தியின் தந்தையான வீமராஜன் மகிழ்ச்சியும் திகைப்பும் அடைந்தான்.

 

 

அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு தன் மகளை மணம் செய விரும்புவது குறித்து மகிழ்ச்சி,

ஆனால் இவரை இன்னார் என்று நல்ல விதத்தில் அறிமுகப்படுத்தக் கூடியவர் இந்த மண்ணுலகில் இல்லையே என்பதை நினைத்து திகைப்பு.

 

 

நாரணனை மனம் உருக வேண்டினான். நாரணனோ பிரம்மாவை நோக்கி, ‘பிரம்ம தேவா!. இவர் இன்னின்னார் என்று கூற கலைமகள் அன்றி வேறு யார் இருக்கிறார்கள்” என்று கேட்டார். பிரம்மா கலைமகளை நோக்கி, “நீ சென்று அரசர் கூட்டத்தை தமயந்திக்கு இவர் இன்னார் என்று விளக்கி வருவாய்” என்று பணிக்க கலைமகள் சுயம்வர மண்டபம் வந்து ஒவ்வொருவரைப் பற்றியும் தமயந்திக்கு எடுத்துக் கூற ஆரம்பித்தாள்.

 

 

42 பாடல்களில் அரசர்கள் பற்றிய அறிமுகம் விளக்கப் படுகிறது.

தமயந்தியை மணக்க வேண்டி சுயம்வர மண்டபத்திற்கு வந்த இந்திரன், அக்கினி தேவன், யமன்,வருணன் ஆகியோரை விளக்கும் பாடல்கள் நளனுக்கும் இவர்களுக்குமாக அமைந்துள்ள சிலேடைப் பாடல்களாக அமைந்துள்ளன.

இந்திரனுக்கும் நளனுக்கும் சிலேடை:

 

கலை வளர்திங்க ளென்னக் கடிகமழ் கமலம் வாட்டுந்

திலக வாண் முகத் தாயிங்கு வைகிய சினவேற் காளை

வலனுடை வயிர வாளான் கற்பகமலிந்த தோளான்

பலபகைவரை முன்செற்ற பகட்டெழின் மார்பினானே.

 

இதன் பொருள் :- கலைமகளுடைய அருளும், நல்ல வாசனை பொருந்திய தாமரை மலரும் வாடி விடும்படியான, திலகமிட்ட சந்திரனைப் போன்ற முகத்தை உடைய தமயந்தியே! இங்கே இருக்கும் அரசன் கோபமும் வீரமும் ஒருங்கே பெற்றும், வலனைக் கொன்ற வெற்றியுடையவனும், வெற்றி மிகுந்த கூரிய வாளை உடையவனும், கற்பக மாலை சூடியவனும், மலை பிளக்கும் தோழனும், பகைவரை முதலில் ஜெயித்து  பெருமை பொருந்திய அழகிய மார்பினனுமான இந்திரன் ஆவான்.

இந்த அரசனின் வர்ணனை – கோபமும் வீரமும் ஒருங்கே பெற்றவன், கூரிய வாளை உடையவன், பகைவரை ஜெயித்தவன் ஆகியவை நளனுக்கும் பொருந்துபவை. ஆகவே இந்திரனையும் நளனையும் குறித்த சிலேடைப் பாடலாக இது அமைகிறது.

 

அக்னிதேவனுக்கும் நளனுக்கும் சிலேடை:

நகைமதி முகத்தாயீங்கு வைகிய நாமவேலான்

புகலுரும் வெகுளி யுள்ளத் தொருவினான் பொங்கி யார்த்த

பகையிருட் பிழம்பு சீக்கும் பலசுட ருமிழும் வாளான்

றகைமைசால் புலவ ரேத்துந் தால மேழுடைய கோவே

 

இதன் பொருள் :

சந்திர பிம்பம் போன்ற முகத்தை உடைய தமயந்தியே! (நகை மதி முகத்தாய்) இங்கு இருப்பவர் யார் எனில் சொல்ல முடியாத அளவு கோபமும் ஒளியும் பொருந்தியவனுமான அக்னி தேவன்.

இருளை ஒத்த பகைவரை தன் வாளால் வென்று பெருமை மிக்க புலவர்களால் சத்சத் தீவை உடையவன்.

 

 

தீவு தேவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு அக்னியையே முதலாவதாக பூஜிப்பதாலும் அவர்களுக்கு வேண்டிய ஹவிர் பாகங்களை அக்னி மூலமாகப் பெறுவதாலும் வேதத்தில் அக்னியை மூலமாகச் சொல்வதாலும் இருள் பிழம்பை ஓட்டி ஒளி தரும் ஏழு நாவை உடையவன் ஆதலாலும் தேவர்களால் புகழப்படுவதாலும் அக்னி தேவன் இவ்வாறு புகழப் படுகிறான்.

 

 

அக்னியைக் கூறும் போது தேவர்கள் என்றும் நளனைக் குறிப்பிடும் போது புலவர்கள் என்று கூறுவதும் காண்க. தேவர்களும் புலவர்களும் சிலேடையாகக் கூறப்படுகிறது.

 

யமனுக்கும் நளனுக்கும் சிலேடை

அஞ்சன மெழுத லாற்றா தம்மவோ வென்று நையும்

வஞ்சிநுண் ணிடையா யிங்கு வைகிய நாமவேலா

னெஞ்சலி றருமன் றெண்ணி ரிருங்கட லுலக மெல்லாஞ்

செஞ்சவே யோசை போய தீதறு செங்கோல் வேந்தே

 

இதன் பொருள் : அஞ்சன மை எழுதும் போது அதன் கனம் கூடத் தாங்க மாட்டாது நைந்து போகும் நுண்ணிய இடையை உடையவளே! இதோ இருக்கின்றானே இவன் யம தருமன்! பயமுறுத்தும் வேல் படையை உடையவன். செவ்விய கால தண்டாயுதத்தைக் கொண்டு கடல் சூழ்ந்த உலகை புகழ் பரப்பச் செங்கோலால் ஆள்பவன்!

நளனும் இருங்கடல் உலகம் ஆள்பவன். செங்கோலால் ஆட்சி செய்து புகழ் பெற்றவன். ஆக ஈற்றடி இரண்டினாலும் நளனுக்கும் யமனுக்கும் சிலேடை புகலப்பட்டது.

 

வருணனுக்கும் நளனுக்கும் சிலேடை :

பாற்றிரை யமிரத மூறும் படரொளிப் பவளச் செவ்வாய்

கோற்றொடி மடந்தை யீங்கு வைகிய குலவுத் தோளான்

மகற்றருஞ் சிறப்பின் மிக்க வளங்கெழு புவன வேந்த

னாற்றிசை பரப்புஞ் சூழ்போ நலங்கெழு நேமி வேந்தே

 

இதன் பொருள் ; பாற்கடலில் தோன்றிய அமிர்தமென ஊறுகின்ற பவளச் செவ்வாயை உடையவளே! அழகிய வளையலை அணிந்துள்ளவளே! இங்கு  வந்திருப்பவன் நன்மை பொருந்திய கடல் அரசனான வருண தேவன்.

 

 

புவனம் என்றால் நீர் ; நீருக்கு அரசன் வருணன்

புவனம் என்றால் பூமி : பூமிக்கு அரசன் நளன்

நேமி என்றால் கடல். வருணனைக் குறிப்பது.

நேமி என்றால் சக்கரம். நளனைக் குறிப்பது.

ஆக வருணனுக்கும் நளனுக்கும் சிலேடை புகலப்பட்டது.

 

இப்படி இந்திரன், அக்னி, யமன், வருணன் ஆகியோரின் சிறப்பியல்புகள் அனைத்தும் ஒருங்கே கொண்டவன் என்று குறிப்பால் தமயந்திக்கு கலைமகள் சொல்லிக் கொண்டே வருகிறாள் என்பது சுவையான செய்தி!

அதிவீரராம பாண்டியனின் நைடதம் கற்போர்க்கு ஔடதம்.

***

 

ஹிந்து ராஷ்ட்ரத்தில் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 1 (Post No.5301)

Date: 9 August 2018

 

Time uploaded in London – 6-46 AM  (British Summer Time)

 

Post No. 5301

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஹிந்து ராஷ்ட்ரத்தில் எங்களை நாங்கள் விரும்பும் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 1

 

ச.நாகராஜன்

1

 

டெல்லியின் ஆர்ச்பிஷப் அனில் கௌடோ (Anil Couto, Archbishop of Delhi) எல்லா சர்ச்சுகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதன் சாரம் ஒரே வரியில் இது தான்; செகுலரிஸம் ஆபத்துக்குள்ளாயிருக்கிறது. (Secularism fabric under threat : Archbishop)

 

இதன் முழு அர்த்தமும் நமக்குப் புரிய வேண்டும். அதாவது இனிமேல் நம்மால் நினைத்தபடி மதம் மாற்ற முடியாது; ஏமாற்ற முடியாது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உண்ணாவிரதம் இருந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்கிறார் இந்த பிஷப்! எது வரை? 2019 பொதுத் தேர்தல் வரை!

‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற பழமொழி போல ‘2019 பொதுத் தேர்தல் வரை’ என்பதிலிருந்தே மறைமுகமாக இந்த பிஷப்,  மோடிக்கு ஓட்டுப் போடாதீர்கள்; போட்டால் நமது தொழில் இங்கே சரிவர நடக்காது! என்கிறார்.

இந்த கெட்ட எண்ணப் பிரார்த்தனை வேண்டுகோள் ஒரு புறம் இருக்க இதை ஆதரித்து ஜூலியோ ரிபரோ  என்ற போலீஸ் அதிகாரி (Julio Riberio – The Times of India dated 28-5- 2018 – A prayer for secularism: Hindu Rashtra, which would make my country a saffron Pakistan, is profoundly anti-national May 28, 2018, 2:02 AM IST Julio Ribeiro ) எழுதியுள்ள கட்டுரையில் இந்தியா காவி பாகிஸ்தான் ஆகி விடக்கூடும்; ஹிந்து ராஷ்ட்ரத்தில் நான் விரும்பும் வழிபாட்டைச் செய்ய முடியுமா? என்று ஆதங்கப்பட்டுக் கேட்டிருக்கிறார்.

ஆக, ஆர்ச்பிஷப்பின் விஷமத்தனமான தூண்டுதல் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது என்பது தெரிகிறது.

ஜூலியோவிற்கு நாம் சொல்ல வேண்டியது ஏராளம் இருக்கிறது. இருந்தாலும் கூட “கிறிஸ்து வழிபாட்டைத் தடுத்து நிறுத்த மாட்டீர்களே என்று கேட்கும் நீங்கள் தயவு செய்து கிறிஸ்தவ மதம் பரப்பப்பட்ட வரலாறைச் சற்று தெரிந்து கொள்ளுங்கள்” என்று சொல்லி விடலாம். அத்துடன் இந்தியாவைப் பற்றி ஒன்றுமே நீங்கள் அறிந்திருக்கவில்லை; அறிந்திருந்தால் இப்படி ஒரு அபத்தமான எண்ணத்தை வெளியிட்டிருக்க மாட்டீர்கள் என்றும் கூறலாம்.

 

2

அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதியாக இருந்த தாமஸ் ஜெஃபர்ஸன் என்ன சொன்னார் என்று பார்ப்போமா?

“Millions of innocent men, women and children, since the introduction of Christianity, have been burnt, tortured, fined, imprisoned, (and molested) : yet we have not advanced one inch towards humanity. What has been the effect of coercion? To make one half of the world fools, and the other half hypocrites. To support error  and roguery all over the earch.” – Thomas Jefferson, The Third President of United States.

 

கிறிஸ்துவ மதத்தை அறிமுகப்படுத்துவதில் லட்சக்கணக்கான அப்பாவிகளும், பெண்களும், குழந்தைகளும் எரிக்கப்பட்டனர், சித்திரவதை செய்யப்பட்டனர், அபராதம் விதிக்கப்பட்டனர், சிறைக்கு அனுப்பப்பட்டனர். பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டனர். இருந்த போதிலும் ஒரு அங்குலம் கூட மனிதத்வத்தை நோக்கி நாம் முன்னேறவில்லை. இப்படிக் கட்டாயப்படுத்தப்பட்டதன் விளைவு என்ன? உலகின் ஒரு பாதியை முட்டாளாக்கியது. இன்னொரு பாதியை கபடதாரிகளாக்கியது. தவறுக்கும் அயோக்கியத்தனத்திற்கும் துணை செய்தது. – தாமஸ் ஜெஃபர்ஸன், யுனைடெட் ஸ்டேட்ஸின் மூன்றாவது ஜனாதிபதி.

3

பற்பல நூற்றாண்டுகளாக இந்தியா தான் எல்லா மதத்தினருக்கும் சுதந்திரமாக வழிபடுவதற்கான சொர்க்க பூமியாக அமைந்திருக்கிறது. எல்லா இனத்தினரும் அமைதியாக வாழக்கூடிய சொர்க்க பூமி இது ஒன்றே தான்! தங்கள் நாடுகளை விட்டு அகதிகளாகத் துரத்தப்பட்டவர்களுக்கும், மதமாற்றக் கொடுமைகளிலிருந்து தப்பித்து ஓடி வந்தவர்களுக்கும், தங்கள் பண்பாட்டையும் வழிபாட்டுமுறைகளையும் தக்க வைத்துக் கொள்ள விரும்பி ஓடி வந்தவர்களுக்கும் அடைக்கலம்  கொடுத்த புண்ய பூமி இது.

கிறிஸ்துவத்தில் உருவ வழிபாட்டை ஏற்று அதன்படி வழிபாடு நடத்திய சிரியன் கிறிஸ்தவர்கள் கேரளாவில் அடைக்கலம் புகுந்தனர்.

தீயை நித்தம் வழிபடும் பார்ஸிகள் மஹராஷ்டிரத்திலும் குஜராத்திலும் அடைக்கலம் கோரி வந்து வசித்தனர்.

யூதர்களில் சிலர் மத மாற்றக் கொடுமைக்கு அஞ்சி இங்கு வந்து குடியேறினர்.

முஸ்லீம்களில் பஹாய் மார்க்கத்தினர் 50 இஸ்லாமிய நாடுகளில் வாழ முடியாமல் அங்கு வர அனுமதிக்கப்படாமல் இறுதியில் இந்தியாவில் வந்து குடியேறினர்;தங்கள் வழிபாடுகளை இன்றளவும் தடையின்றி நடத்துகின்றனர்.

சீன கம்யூனிஸ ராட்சஸர்களால் துரத்தப்பட்ட தலாய்லாமா – புத்த மதத் தலைவர் – அடைக்கலம் தேடி இந்தியா வந்தார். இன்றளவும் தர்மஸ்தலாவில் தங்கி தன் வழிபாட்டைத் தொடர்கிறார்.

இப்படி ஒரு நாட்டை – இன்னும் ஒரே ஒரு நாட்டை உலகில் காட்ட முடியுமா? முடியாது.

தன் மதத்தைச் சேராமல் இருப்பவர்களுக்கு – அடிதடி, வெட்டு, குத்து, கொலை – இவை தான் இதர மதங்கள் காட்டும் வழி; செய்த செயல் முறை.

ஆக இப்படிப்பட்ட நாட்டை நோக்கி- அதன் மக்களை நோக்கி – என் வழிபாட்டை இங்கு தொடர முடியுமா என்று கேள்வி கேட்கும் ஜூலியா போன்றவர்களை என்ன சொல்லி அழைப்பது?

அப்பாவித்தனமாக கேள்வி கேட்பவர் என்றா?

விஷமிகளில் ஒருவர் என்றா? வரலாறு தெரியாதவர் என்றா?

 

நல்ல மனம் கொண்ட, இந்திய வரலாறைத் தெரிந்த எவரும் இந்திய வாழ்க்கை முறை ஒன்றே தான் எந்த மதத்தையும் சம்மதம் என்று ஏற்றுக் கொள்ளும் ஒரே வாழ்க்கை முறை என்பதை உணர்வர்.

இஸ்லாமோ, கிறிஸ்தவமோ ஏனைய பிற மதங்கள் இருக்கக் கூடாது என்று கூறுபவை.  பிற மதத்தின் வழிபாட்டைச் செய்வோர் பாவிகள்; அவர்கள் திருத்தப்பட வேண்டும் என்று கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தொடர்ந்து முழங்கி வருபவர்கள்.

ஆகவே ஜூலியா இப்படிப்பட்ட கேள்வியை இஸ்லாமிய நாடுகளிலும் கிறிஸ்தவ நாடுகளிலும் கேட்கலாம். அங்கு இதர மதத்தினருக்கு வழிபாட்டுச் சுதந்திரம் உண்டா என்று கேட்கலாம்.

 

விஷமத்தனமான கேள்விகளைக் கேட்பவர்களுக்காக – அவர்கள் இப்படிக் கேட்டு இந்தியாவில் வகுப்புக் கலவரத்தைத் தூண்ட விரும்புவதால் – சில உண்மைகளை எடுத்துக் காட்ட வேண்டியிருக்கிறது.

அதைத் தொடர்ந்து காண்போம்.

  • தொடரும்

***

 

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க! (Post No.5300)

Written by London swaminathan

Date: 8 August 2018

 

Time uploaded in London – 11-48 AM (British Summer Time)

 

Post No. 5300

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என் 
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க 
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என் 
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க 

திரைப்படம்: எங்க ஊர் ராஜா 
இயற்றியவர்: கவிஞர் கண்தாசன் 

 

குருட்டுக் கவிஞர் மில்டனும் செவிட்டு அறிஞர் எடிசனும் சமாளித்த விதம்!

 

உலகப் புகழ்பெற்ற கவிஞர்களில் பலர் கண்பார்வையற்றவர்கள். உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் அருமையான கவிகளைப் பொழிந்தவர் தீர்க்கதமஸ் (நீண்ட இருள்). கண்பார்வையற்றதால் ஏற்பட்ட காரணப் பெயர் இது. கிரேக்க மொழியில் முதல் காவியத்தை இயற்றிய ஹோமரும் அந்தகரே. ஆங்கில மொழியில் புகழ்பெற்ற பாரடைஸ் லாஸ்ட் காவியத்தை உருவாக்கிய மில்டனும் கண்பார்வை இழந்தவரே. தமிழ் கூறு நல்லுலகில் அந்தகக் கவி வீர ராகவ முதலியார், இரட்டைப் புலவரில் ஒருவர் இப்படிப் பலர் அந்தகர்களே! கிருஷ்ண பக்தர் சூர்தாஸும் அந்தகரே! கண்ணில்லை; ஆனால் புகழ் கொடி கட்டிப் பறந்தனர்.

 

 

மில்டனை குருட்டுக் கவிஞர் என்று அவருடைய இலக்கிய எதிரிகள் குறைகூறினர். அதற்கு மில்டன் அளித்த பதில் மிகவும் உருக்கமானது:

மில்டன் சொன்னார்

“உங்களுடைய குருட்டுத் தன்மையை விட என் குருட்டுத்தனம் எவ்வளவோ மேலானது. எனக்கு கண்கள் மட்டுமே குருடு; உங்களுக்கோ எல்லா புலன்களுக்கும் அடியில் ஆழமாகச் சென்று உங்கள் மனதையும் குருட்டாக்கி விட்டது. இதனால் உருப்படியான விஷயங்களை உங்களால் காண  முடியாது;  நான் ஒரு பொருளின் வர்ணத்தையும் உருவத்தையும்தான் காண முடியாது. ஆனால் அவைகளின் உண்மைப் பொருளையும் நிலைத்த தன்மையையும் ஊடுருவிப்பார்க்க முடியும். அது கிடக்கட்டும்.

 

நான் பார்க்காத பொருள்கள் எவ்வளவு; நான் வருத்தப் படாமல் பார்க்கும் பொருள்கள்தான் எவ்வளவு? அப்படி வருந்தாமல் பார்க்கக்கூடிய, விட்டுப் போன பொருள்கள் குறைவே;

 

தீய மனிதர்களே! என்னைப் பார்த்து கேலியா செய்கிறீர்கள்? மனிதர்கள் ஏற்படுத்தக்கூடிய காயங்களில் இருந்து அந்தகர்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. சொல்லப்போனால் நாங்கள் (தீயவைகளைப் பார்க்காததால்) புனிதர்கள் ஆக்கப்பட்டுவிட்டோம்”

 

(இது ஒரு நல்ல பாடம்; நாமதிகமான தீமைகளையும் தீய செயல்களைச் செய்வோரையுமே காண்கிறோம்; அவர்களைக் காணாததும் அது பற்றி சிந்திக்காததும் அந்தகர்களை ரிஷி முனிவர் போல ஆக்கி விடுகிறது!

 

மில்டன் யார்?

ஆங்கில மொழியில் தலை சிறந்த புலவர்களில் ஒருவர். ஹோமர், வர்ஜில் போல காலத்தால் அழியாத காவிய த் தைப் படைக்க வேண்டும் என்பது இவரது நீண்ட நாளைய அவா; அதன் காரணமாக PARADISE LOST சொர்க்க இழப்பு, சொர்க மீட்சி PARADISE REGAINED என்ற இரண்டு காவியங்களைப் படைத்தார்.

 

பிறந்த ஆண்டு 9-12- 1608

 

 

இறந்த ஆண்டு 8-11-1674

 

இறக்கும்போது வயது- 65

 

கல்லூரியில் படிக்கும்போது கவிதை யாத்தார். 29 வயதில் அவர் எழுதிய லிஸிடாஸ் LYCIDAS  என்ற கவிதை மிகச் சிறந்த கவிதை ஆகும்.

 

இங்கிலாந்தில் உளநாட்டுப் போர் ஆரம்பமானது.

 

ஆலிவர் க்ராம்வெல் OLIVER CROMWELL என்பவர், முடியாட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியபோது, அவருக்கு ஆதரவாக அரசியல் கட்டுரைகளை எழுதுவதில் முனைப்பு காட்டினார். பின்னர் முடியாட்சி மீண்டும் ஏற்பட்டது. இதற்குள் அவர் முழுக் குருடு ஆகிவிட்டார். அவர் பிறவிக்குருடர் அல்ல.

 

பாரடைஸ் லாஸ்ட் என்பதை எழுத இவர் மனைவியும் மகளகளும் உதவினர். மில்டன் சொல்லச் சொல்ல அவர்கள் எழுதினர். 55 வயதில் அது வெளிவந்தது. சாத்தானை சொர்க்கத்தில் இருந்து பூமிக்குத் தள்ளியப்போது அது எப்படி ஆதாமையும் ஏவாளையும் மனதளவில் கெடுத்தது என்பதே சொர்க்க இழப்பு கதையின் சாரம். இது வெளியானவுடன் இவர் புகழ் உச்சாணிக் கொம்புக்கு ஏறியது!

 

xxxx

 

செவிடாக இருப்பதே மேல்!

தாமஸ் ஆல்வா எடிசன், அமெரிக்காவின் புகழ் பெற்ற விஞ்ஞானி; கண்டு பிடிப்பாளர். ஆயிரத்துக்கும் மேலான பொருள்களுக்கு அமெரிக்காவில் பேடன்ட் வாங்கி வைத்தவர். பல்பு முதலிய பலபொருட்களைக் கண்டுபிடித்தவர்.

அவர் வாழ்ந்த காலம்-

11-2-1847   to

18-10- 1931

 

தாமஸ் ஆல்வா எடிசனுக்குக் காது கேட்காது. ஆனால் அவர் காதில் கோளாறு இல்லை; மனதிலேயே கோளாறு என்று கண்டுபிடிக்கப்பட்டது. உடனே நண்பர்கள் ஒரு டாக்டரை அழைத்து வந்தனர். அவர் பெரிய சிகிச்சை திட்டம் ஒன்றை வகுத்து  எடிசனிடம் காட்டினார். நீங்கள் ஒப்புக் கொண்டால் நாங்கள் உடனே தயார் என்றார்.

 

எடிஸன் சொன்னார்

“இதோ பாருங்கள்; உங்கள் திட்டம் கட்டாயம் வெற்றி பெறும்; எனக்கு ஐயப்பாடே இல்லை. நான் என்ன என்ன வெல்லாம் கேட்க வேண்டி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அவற்றில் எவை எவை கேட்கத்  தகாதவை என்பதையும் சிந்தியுங்கள். கொஞ்சம் காது கேளாமை இருப்பது நல்லதே. நானே எவை எவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமோ அவைகளை மட்டுமே கேட்கிறேன். என்னை இப்படியே விட்டு விடுங்கள்” நீங்கள் எந்த அளவுக்கு காது  கேட்க முடியாதவர்கள் என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்திருப்பது எவ்வளவு நல்லது!

–சுபம்–

மஹாபாரதத்தில் ஒட்டகக் கதை (Post No.5297)

ஒட்டக மர்மம்-PART -2 (5297)


RESEARCH ARTICLE WRITTEN by London swaminathan

Date: 7 August 2018

 

Time uploaded in London – 12-20  (British Summer Time)

 

Post No. 5297

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ரிக் வேதம் முதல் தமிழில் அகநானூறு வரை ஒட்டகம் பேசப்படுவது வியப்பான செய்தி

 

ரிக் வேதத்தில் ஒட்டகம் வரும் இடங்கள்  ஈரான் (பாரஸீக) பகுதி பாடல்களிலேயே வருகிறது. அதாவது எட்டாம் அத்தியாயத்தில்!

 

 

ரிக் வேத எட்டாம் அத்யாய (மண்டல விஷயங்கள்)

 

புரோகிதர்களுக்கு மன்னன் காஷு நூறு ஒட்டகங்களையும் 10,000 பசுக்களையும் பரிசாகக் கொடுத்தான் (8-5-37)

 

பல்பூதாவும் தாருக்ஷாவும் முனிவருக்கு 100 ஒட்டககங்களைப் பரிசாகக் கொடுத்தனர் (8-46-32)

 

பர்ஷுவும் த்ரீந்திராவும் ஒரு லக்ஷம் பரிசு/ தானம் கொடுத்தனர் (8-6-46)

 

இந் த மன்னர்களின் பெயர்கள் ஈரானிய அவெஸ்தன் இலக்கியத்திலும் வருவதால் எட்டாவது மண்டலம் ஈரானிய மர்மங்கள் நிறைந்ததாக உள்ளது.

சுமார் 20, 30 வெள்ளைக்கார்கள் ரிக் வேத த்தை மொழி பெயர்ப்பதாகச் சொல்லி குதறி இருக்கிறார்கள்; உளறிக் கொட்டி கிளறி மூடி இருக்கிறார்கள் ஒட்டகம் என்றால் திமிலுள்ள மாடு என்பர். திமிலுள்ள மாடு என்றால் ஒட்டகம் என்பர். ஒருவருக்கொருவர் முரண்பாடாக “முழி” பெயர்த்து இருக்கின்றனர்.

 

ஆனால் இந்தோநேஷியாவில் உள்ள மூல வர்மனின் ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகளிலும் பிராஹ்மணர்களுக்குக் கட்டித் தங்கமும் 10,000 பசுமாடுகளும் தானம் கொடுத்த செய்தி உள்ளதால் 10,000 பசுக்கள் 100 ஒட்டகங்கள் என்பதே பொருத்தம் என்பது எனது துணிபு.

 

ஒட்டகம் பற்றி உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் மேலும் பல பாடல்கள் உள.

 

சிந்து சமவெளியில் முழு ஒட்டக எலும்புக்கூடு கிடைத்தது. ஆனால் அது மேல்  மட்டத்தில் கிடைத்ததாகச் சொல்லி அது பற்றி பிரஸ்தாபிப்பதே இல்லை. அது ஆராயப்படாத மர்மம் ஆகும். மற்ற அகழ்வராய்ச்சிகளிலும் ஒட்டக எலும்புகள் கிடைத்தன.

 

 

காளிதாசனில் ஒட்டகம்

 

காளிதாசன் படைப்பான ரகுவம்ச காவியத்தில்  (5-32) கௌத்சர் என்ற மஹரிஷிக்கு ரகு கொடுத்த 14 கோடிப் பொன்களை நூற்றுக் கணக்கான ஒட்டகங்கள், குதிரைகள் மீது  வர் ஏற்றிக் கொண்டு சென்றார் என்று சொல்லப்பட்டுள்ளது.

 

பஞ்ச தந்திரக் கதைகள், கதாசரித் சாகரம் (கதைக் கடல்) ஆகிய நூல்களிலும் ஒட்டகம், ஒட்டகக் குரல், ஒட்டக வடிவ மட்பாண்டங்கள் பேசப்படுகின்றன.

மஹாபாரதத்தில் ஒட்டகக் கதை

ஒட்டகத்தைப் பாலைவனக் கப்பல் என்று அழைப்பர்; இது கசப்புள்ள முள் செடிகளை விரும்பித் தின்னும். அரேபிய, இந்திய ஒட்டகங்களுக்கு ஒரு திமிலும், மத்திய ஆசிய, வட ஆப்ரிக்க ஒட்டகங்களுக்கு இரண்டு திமில்களும் உண்டு.

 

சோம்பலுள்ள ஒரு ஒட்டகம் இரை தேட விரும்பவில்லை. பிரம்மனை நோக்கி தவம் இருந்தது; பிரம்மன் அதற்கு இருந்த இடத்திலிருந்தே இழை, தழைக ளைச் சாப்பிட நீண்ட கழுத்தை அருளினன். ஒரு முறை மழை கொட்டியது. அதற்கு அஞ்சி ஒரு குகைக்குள் கழுத்தை விட்டது. அங்கேயுள்ள நரி அதைக் கடித்துக் குதறியதால் ஒட்டகம் இறந்தது– மஹாபாரதம்- சாந்தி பர்வம் (ஆதாரம் சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி)

 

பைபிளில் ஒட்டகம்

ஊசியின் காதில் (ஊசித்வாரம்) ஒட்டகம் நுழைவதை விட பணக்கார்கள் கடவுளின் உலகத்தை அடைவது கடினம் என்று ஏசு கிறிஸ்து (மாத்யூ 19-24) சொன்னதாக பைபிள் கூறும். அதாவது ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையவும் முடியாது; பணக்காரர்கள் சொர்கத்துக்குச் செல்லவும் முடியாது என்பது பொருள்.

சிலர் இது தவறான மொழி பெயர்ப்பு என்று வாதிடுவர். ஏனெனில் ஏசு கிறிஸ்து பேசிய அராமிய மொழியில் ‘கம்லா’ என்றால் ஒட்டகம், கயிறு என்று இரண்டு பொருள் உண்டு. ஆகையால் ஊசியின் காதில் தடித்த கயிறு போவதைவிட என்றும் மொழி பெயர்ப்பர். (கம்லா= ஸMஸ்க்ருத க்ரமேல= ஆங்கில CAMEL ‘கேமல்’ தொடர்பைக் காண்க)

 

ஆனால் ஊசியின் காதில் ஒட்டகம் என்பதே சரி என்று வாதாடவும் ஆதாரமுண்டு. பபிலோனிய தால்முத் (BABYLONIAN TALMUD) தில் (யூதர்களின் மதப் புஸ்தகம்) இதே போல ஒரு வாசகம் வருகிறது. ஒரு ‘ஊசியின் காதில் யானை நுழைவதைப் போல கஷ்டமானது’ என்பது அந்த வாசகம். ஆக இப்படி அடைய முடியாத , நடக்க முடியாத விஷயங்களைக் குறிப்பிடுவது மேற்காசியாவில் இருந்தது என்பது உண்மையே..

 

புனித அகஸ்டின் (கிறிஸ்தவ அகஸ்த்யர்) ஒட்டகத்தை கிறிஸ்தவ கிரஹஸ்தர்களின் அடையாளமாக உருவகித்தார். ஏனெனில் அவர்களும் ஒட்டகம் மாதிரி குடும்ப பாரத்தைச் சுமக்கின்றனர்.

ஒட்டக வாஹனம்

அஷ்ட திக் தேவதைகளில் தென் மேற்கு திசைக்கு நைத்ருதி என்னும் தேவதை அதிபதி; அவளுக்கு ஒட்டகம் அல்லது கழுதை வாஹனம் என்பர்.

 

சில கோவில்களில் அனுமாருக்கும் ஒட்டகம் வாஹனமாகக் காட்டப்பட்டுள்ளது. இவையெல்லாம் சாஸ்திர ஆதாரமற்றவை. உள்ளூர் பக்தர்களின் அருட்கதைகளில் இருந்து பிறந்தவை.

 

பாணினியில் ஒட்டகம்

 

உலக மஹா இலக்கண வித்தகன் பாணினி. 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வடமேற்கு இந்தியாவில் வாழ்ந்தார். இன்றுள்ள உலக இலக்கண புஸ்தகங்களில் அவர் எழுதிய பாணீனீயம் அல்லது அஷ்டாத்யாயீ என்பதே பழையது. அவர் நால் வகைப் படைகளுடன் ஒட்டகப் படை இருந்ததையும் இலக்கண விதிகளைக் கற்பிக்கும்போது உதாரணம் காட்டுகிறார். பெரும்பாலும் சுமை தூக்க இவைகள் உதவி இருக்கலாம். மேலும் மலைக் கணவாய்களையும் பாலைவனங்களையும் கடக்கப் பயன்பட்டிருக்கலாம்.

 

 

ராஜஸ்தானில் (PUSHKAR IN RAJASTHAN) உலகின் மிகப் பெரிய ஒட்டகச் சந்தை ஆண்டுதோறும் நடை பெறுகிறது.

 

புத்தர் இறந்தவுடன் யானை, ஒட்டகம், நீர் எருமை, புலி ஆகியனவும் துக்கம் தெரிவித்ததாக புத்த மத நூல்களில் வருவதால் அவர்களும் ஒட்டகத்தை நன்கு அறிந்து இருந்தனர்.

 

மநு ஸ்ம்ருதியில் ஒட்டகம்

சுமார் 18 இடங்களில் மநு, தனது சட்டப் புத்தகத்தில் ஒட்டகத்தைக் குறிப்பிடுகிறார்

 

MANU SMRTI: 2-204; 3-162; 4-115; , 120; 5-8, 18; 8-146, , 239, 296, 9-48, 11-69, 138, 155, 157, 200, 202; 12-55, 57.

 

அவர் சொல்லும் விஷயங்களின் சாராம்சம்:–

 

ஒட்டக வண்டி பற்றி சொல்கிறார். ஒட்டகப் பால் பற்றியும் பேசுகிறார். ஒட்டகத்தின் மீது சவாரி செய்துகொண்டு வேதம் சொல்லக் கூடாது என்கிறார். ஒட்டக மாமிசம் ஒட்டகக் கொலை ஆகியன பற்றியும் குறிப்பிடுகிறார். இவற்றைத் தனியே குறிப்பிடாமல் ஏனைய ஆடு மாடு குதிரை  ஆகியவற்றுடன் பேசுவதால் அந்தக் காலத்தில் ஒட்டகம் சர்வ சாதாரணமாக இருந்தது என்றும் அறியலாம்..

வயலுக்கு வேலி அமைப்போர் ஒட்டகம் எட்டிப் பார்க்காத உயரம் வரை அமைக்கலாம் என்பதால் அக்காலத்தில் ஒட்டகம் எல்லோருக்கும் தெரிந்த மிருகம். மேலும் ஸம்ஸ்க்ருத கதைப் புத்தகத்திலும் ஒட்டகக் கதைகள் உண்டு. அக நானூற்றில் குறிப்பிடப்பட்டதில் வியப்பொன்றும் இல்லை.

 

 

எனது முடிபுகள்:

 

  1. ரிக் வேத காலம் முதல் இந்துக்களுக்கு ஒட்டகம் பற்றித் தெரியும்

2.பசுக்களைப் போல ஒட்டகங்களும் தானம் கொடுக்கப்பட்டதால் அவற்றின் புனிதம் புலப்படுகிறது

3.ஒட்டகங்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டது மநு நீதியில் தெளிவாக உளது.

  1. சங்க இலக்கியத்தோடு தமிழின் மிகப்பழைய நூல் என்று கருதப்படும் தொல்காப்பியத்திலும் ஒட்டகம் உளதால் 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டிலும் ஒட்டகங்கள் வளர்க்கப்பட்டன

5.’க்ரமேல என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து அராபிய கமலாவும் ஆங்கில CAMEL கேமலும் வந்திருக்கலாம். ஸம்ஸ்க்ருத உஷ் ட் ர- வில் இருந்து ஒட்டகம் என்று வந்ததும் வெளிப்படை

 

6 சில இந்துக் கடவுளருக்கு ஒட்டகம் வாஹனம் என்பதாலும் இதன் புனிதம் விளங்குகிறது

 

7.பஞ்சதந்திரக் கதைகள், கதா சரித் சாகரம், நியாயக் களஞ்சியம் ஆகியவற்றிலும் ஒட்டகம் வருவதால் சிறுவர்கள் முதல் கிராம மக்கள் வரை ஒட்டகத்தை அறிவர்.

 

8.பாணிணி ஒட்டகப் படை பற்றிப் பேசுவதால் 2700 ஆண்டுகளுக்கு முன், முதல் ஒட்டகப் படையை அமைத்தது இந்துக்களே!

9.மஹாபாரத ஒட்டகக் கதை அதற்கு இதிஹாசச் சிறப்பையும் அளித்துவிட்டது. இதுபோல ஆப்பிரிக்கப் பழங்குடி மக்கள ஒட்டைச் சிவிங்கி பற்றியும் ஒரு கதை சொல்லுவர்; ஒப்பிட்டு மகிழ வேண்டிய ஒன்று.

10.மநு ஒட்டகப் பால், ஒட்டக வண்டி, ஒட்டக சவாரி பற்றியெல்லாம் பேசுவது அவரது பரந்த அறிவினைக் காட்டுகிறது.

வாழ்க ஒட்டகம்!

-subham–

இந்துக்கள் பாம்புகளை கும்பிடுவது ஏன்? விஞ்ஞான விளக்கம் (Post No.5293)

Written by London swaminathan

Date: 6 August 2018

 

Time uploaded in London – 9-51 AM  (British Summer Time)

 

Post No. 5293

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

இந்த ஆண்டு (2018) ஆகஸ்ட் 15ம் தேதி நாக பஞ்சமி வருகிறது. நாடு முழுதும் இந்துக்கள் பாம்புகளைக் கும்பிடுவார்கள்.

நாக பஞ்சமி என்றால் என்ன?

எப்போது?

ஏன் பாம்புகளை வழிபட வேண்டும்?

இது பற்றிய இரண்டு கதைகள் என்ன?

கொஞ்சம் ஆராய்சி செய்வோமா?

 

சில பகுதிகளில் நாக பஞ்சமியை ஒரு மாதம் வரை கொண்டாடுகிறார்கள். ஆடி மாத பஞ்சமியிலிருந்து ஆவணி சுக்ல பக்ஷ பஞ்சமி வரை கொண்டாடுகிறார்கள்.

 

நாக பஞ்சமி தினத்தன்று என்ன செய்வார்கள்?

பாம்புகளை வழிபடுவார்கள்;

 

பாம்புப் புற்றுகளில் பால் வார்ப்பார்கள்

 

பாம்பு, பறவைகளின் படங்களை சுவர்களிலும் கோலங்களிலும் வரைவார்கள்.

 

பருப்பு, கோதுமைகளை அரைத்து அதில் புல்லை முக்கி பாம்பு போல செய்வார்கள். அத்தோடு இனிப்புகளைப் பாம்புப் புற்றுகளில் இடுவார்கள்.

 

மானஸா தேவி என்னும் நாக தேவதையை வழிபடுவார்கள்

 

நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு வழக்கம் இருக்கிறது

 

இது பற்றி இரண்டு கதைகள் உண்டு

ஒரு பிராஹ்மணப் பையனை பாம்பு கடித்து விட்டது. அவனைக் காப்பாற்ற அவனது இரண்டு சஹோதரிகளும் மானஸாதேவியை வழிபட்டனர். அந்தப் பையனுக்கு மீண்டும் உயிர் வந்தது. அவனும் சஹோதரிகளுக்கு விருந்து வைத்தான் ஆகையால் இது சஹோதர-சஹோதரி விருந்து நாளாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.

 

இரண்டாவது சம்பவம்

 

சந்த் என்ற வணிகனுக்கு மானஸா தேவி மேல் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. அவனது ஒவ்வொரு குழந்தையும் பாம்பு கடித்து இறந்தபோதும் அவன் வழிபட மறுத்தான். மீண்டும் ஒரு மகன் பிறந்தான்.

அந்த மகனுக்கு கல்யாண நாள் நிச்சயிக்கப்பட்டது. அந்த தினத்தில் மானஸா தேவி அந்த வணிகனுக்குப் பாடம் கற்பிக்க அந்த மணமகனைக் கடித்தாள்; அதாவது பாம்பு கடித்து அந்த மணமகன் இறந்தான்.

 

ஆனால் புது மணப்பெண், அந்த சடலத்தை எரிக்க வேண்டாம் என்று சொல்லி விரதம் இருந்தாள். அவளும் உடல் இளைத்து எலும்புக்கூடாகும் தருணத்தில் மானஸா தேவி மனம் இறங்கி அருள் பாலித்தாள். பிண மகன் மீண்டும் மணமகன் ஆனான். வணிகன் பெயர் சந்த். மணமகனை மீட்ட கற்புக்கரஸியின் பெயர் வெஹுலா.

 

இப்படி நாடு முழுதும் பாம்புக்கடி மரணங்களும் அவர்கள் மீண்டு வந்த அற்புதங்களும் உண்டு. நாயன்மார் ஆழ்வார் கதைகளிலும் பாம்புக் கதைகள் இருக்கின்றன. இவற்றைத் தனியே எழுதியுள்ளேன்.

 

நாக பஞ்சமி மூலம் இந்துக்கள் எப்படி இயற்கையைப் பாதுகாக்கிறார்கள், போற்றுகிறார்கள் என்று இப்பொழுது வெளிநாட்டினரும் புகழத் துவங்கி விட்டார்கள்; அறிவியல் ரீதியில் பார்த்தால் பெரும்பாலான பாம்புகள் விஷமற்றவை. மக்களின் பயமும் பீதியும் வெளியாட்களின் பிரச்சனையும் தான் சிக்கலை உருவாக்குகிறது. மேலும் பாம்புகள் மனிதனின் எதிரிகள் அல்ல;  தானாக வந்து எவரையும் தாக்குவதில்லை. அதைத் தாக்கும்போதோ மிதிக்கும்போதோ அவை தற்காப்புக்காகத் திருப்பித் தாக்குகின்றன. குழந்தைகளும் பாம்புகளும் விளையாடும் படங்களைப் பார்க்கிறோம்; ஏனெனில் அவை நண்பனுக்கு நண்பன்; எதிரிக்கு எதிரி.

 

150 ஆண்டுகளுக்கு முன் வெளியான வெள்ளைக்காரர் புஸ்தகங்களில் சில படங்கள் இருக்கும்;

 

காளி கோவிலில் குழந்தைகளைப் பலி கொடுக்கும் படம்

பெண்களை, கணவனின் சிதையில் தூக்கி எறியும் படம்

மரங்களையும் பாம்புகளையும் பெண்கள் வழிபடும் படம்

 

இப்பொழுதும் இவைகள் பழைய புஸ்தகங்களிலும் பத்திரிக்கைகளிலும் உள. நான் அடிக்கடி லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரியிலும் லண்டன் யுனிவெர்ஸிட்டி லைப்ரரியிலும் பார்த்துப் பார்த்துச் சிரிப்பேன்;

 

இவை எல்லாம் உண்மையில் நடந்திருந்தால் இன்று இந்துக்களே உலகில் இருந்திருக்க மாட்டார்கள். கோடியில் ஒன்று நடந்தது உண்மைதான். இன்று மேலை நாடுகளில் இதைவிடக் கூடுதல் கொடுமைகள் நடப்பதை லண்டனில் பத்திரிக்கைகளில் தினமும் படிக்கிறோம்.

 

ஏனைய விஷயங்களை புறத்தே ஒதுக்கி வைத்து விட்டு பாம்பு வழிபாடு பற்றி மட்டும் பார்ப்போம்.

 

உலகில்  அறிவியல் அடிப்படையில் அமைந்த மதம் இந்து மதம்; எல்லாப் பண்டிகைகளுக்கும் அறிவியல் விளக்கம் உண்டு.

இந்தியா ஒரு விவசாய நாடு. மக்களின் மிகப்பெரிய தொழில் விவசாயம்.

உழுதுண்டூ வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின் செல்பவர் (குறள் 1033)

உழவர்களே  தன்னுரிமையோடு வாழ்வார்கள்; மற்றெல்லோரும் பிறர் முன்னால் கைகட்டி, வாய் புதைத்து வாழ்பவர்கள்; இயல்பாகவே உழவர் பின்னால் செல்பவர்கள்.

 

விவசாய உற்பத்தி குறைந்தால் பஞ்சம் வெடிக்கும்; அராஜகம் பிறக்கும் ஆகையால் விவசாய உற்பத்தியைப் பாதுகாப்பது அவசியம்.

எலிகள் மூலம் ஏற்படும் சேதம் மிக மிக அதிகம். அதோடு பூச்சிகளும் சேதம் விளைவிக்கும். இவைகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைப்பது பாம்புகளே (Vital link in the food production chain) .

 

ஆதிகாலத்தில் வீட்டுக்குள் பாம்புகளைக் கண்டாலும் கூட அவைகளைக் கொல்ல மாட்டார்கள். பானைக்குள் அல்லது பெ ட் டிக்குள் பிடித்து வயற்காட்டில் விட்டு விடுவார்கள் அல்லது பாம்புப் பிடாரனை அழைத்து அவன் கையில் அந்தப் பணியை ஒப்படைப்பர்.

வயல் வெளிக்குள் நடந்து செல்வோரும் இரவில் ஒத்தையடிப் பாதையில் வருவோரும் கைகளைத் தட்டிக்கொண்டே வருவர் பாம்புகள் விலகி ஓடி விடும்! (பாம்புகளுக்கு காதுகள் உண்டா? அவைகளால் கேட்க முடியுமா என்பதை வேறு ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கிவிட்டேன்; அதன் விஞ்ஞான விளக்கத்தை கட்செவி (கண்ணே செவி/காது) என்னும் ஆய்வுக் கட்டுரையில் காண்க)

ஆக எலிகளைக் கொல்ல பாம்புகள் உரிய அளவில் இருக்க வேண்டும் என்பது இந்துக்கள் அறிந்த உண்மை.

 

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி; ஆனால் நல்லோர் அவையில் புகுந்த பாம்புகளையும் அவர்கள் கொல்ல மாட்டார்கள் என்று ஸம்ஸ்க்ருத, தமிழ்ப் பாடல்கள் சொல்லும். ஆக பாம்புகளின் மீதுள்ள பயத்தை எப்படிப் போக்குவது?

குறிப்பாக பெண்களும் சிறுவர்களும் பயப்படுவர். ஆண்டு தோறும் பண்டிகை நடத்தி நாக பஞ்சமி கொண்டாடுவதன் மூலமும் வெள்ளிக் கிழமைதோறும் புற்றிலுள்ள பாம்புகளுக்குப் பால் வார்ப்பதன் மூலமும், நாக பஞ்சமி தினத்தன்று பாம்பு படங்களைக் கோலம் வரைபடம் ஆகியவற்றில் வரைவதன் மூலமும், கோவில் தோறும் நாகர் சிலைகளை வைப்பதன் மூலமும் மக்களை உளவியல் ரீதியில் (psychologically prepared)  இந்துக்கள் தயார்படுத்த்தினர்.

பாம்புகளைக் கட்டித் தழுவுங்கள்; கொஞ்சிக் குலவுங்கள் என்று நான் சொல்ல வரவில்லை; அதை அவஸியமின்றி அடித்துக் கொன்று அழிக்காதீர்கள்; அவைகளையும் இயற்கை எனும் சங்கிலியில் ஒரு வளையம் என்பதை உணருங்கள்.

 

பாம்புகளை அழித்தால் வயல் வெளியில் எலிகள் பெருகும்; எலிகள் பெருகினால் உணவு உற்பத்தி குறையும்.

 

வாழ்க நாக பஞ்சமி; வளர்க நாகங்கள் (புற்றுக்குள் மட்டும்)!!!

–subham–

 

சூரி நாகம்மா! (Post No.5292)

Written by S NAGARAJAN

Date: 6 August 2018

 

Time uploaded in London – 6-09 AM  (British Summer Time)

 

Post No. 5292

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சூரி நாகம்மா!

 

ச.நாகராஜன்

 

ஒரு பெரிய அவதாரம் நிகழும் போது அது ஆற்ற வேண்டிய பணிக்காக கூடவே சீடர்களும் பல்வேறு விதங்களில் பிறக்கின்றனர்.

 

மஹரிஷி ரமணர் திருவண்ணாமலையில் இருந்த போது அவரது வாழ்க்கை நிகழ்வுகளையும் உபதேசங்களையும் பல பக்தர்கள் பதிவு செய்தனர்.

அவர்களில் மிக முக்கியமானவர் சூரி நாகம்மா.

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட அவர் குண்டூர் மாவட்டத்தில் மங்களகிரிக்கு அருகில் இருக்கும் கொலனுகொண்டா என்ற கிராமத்தில் 1902 ஆகஸ்ட் மாதம் பிறந்தார். நான்கு வயதில் அவரது தகப்பனாரும் பத்து வயதில் அவரது தாயாரும் காலமாகி விட்டார்கள். அந்தக் கால வழக்கப்படி அவருக்கு பதினொன்றாம் வயதில் கல்யாணம் நடந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒரே வருடத்தில் அவர் கணவனை இழந்தார்.

 

வாழ்நாள் முழுவ்தும் விதவையாக வாழ வேண்டிய துர்ப்பாக்கியம். அதை இறை நினைப்பில் ஈடுபடுத்தி தன்னை அதில் அர்ப்பணித்து வாழ்வை சிறக்க வைத்துக் கொண்டார் அவர்.

 

தனக்கான குருவாக ரமணரை வரித்தார். ஆசிரமத்திலேயே வசிக்க ஆரம்பித்தார். அவரது அண்ணன் சாஸ்திரி அவரை ஆசிரமத்தில் நிகழும் நிகழ்வுகளையும் மஹரிஷியின் உபதேசங்களையும் எழுதுமாறு கூறினார்.

 

இயல்பாகவே தெலுங்கில் கவிதை எழுதும் ஆற்றல் அவருக்கு இருந்தது. ஆனால் ஆசிரம நிகழ்வுகளை எழுதலாமா என்ற தயக்கம் அவருக்கு இருந்தது. அந்த நிகழ்வுகளைத் தனக்குக் கடிதமாக எழுதி அனுப்பலாமே என்ற சிறிய சகோதரரின் யோசனை அவருக்குப் பிடிக்கவே அவர் கடிதங்களை எழுதலானார்.

 

 

இன்று நமக்கு பொக்கிஷமாக கிடைத்திருக்கும் ‘லெட்டர்ஸ் ஃப்ரம் ரமணாச்ரமம்’ இப்படிப் பிறந்தது தான்!

சூரி நாகம்மா ஆசிரமத்திற்கு வருவதற்கு முன்னர் முனகால வெங்கடராமய்யா ஆங்கிலத்தில் ஆசிரமத்தில் நடப்பனவற்றை டைரியாக எழுதத் தொடங்கினார். சில காலம் எழுதிய பின்னர் டைரி நின்று விட்டது.

 

 

இன்னொரு அணுக்க பக்தரான தேவராஜ முதலியாரும் ஆசிரம நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார்.

இன்று நமக்கு ரமண உபதேசமாக கிடைப்பவை இவர்களது அரும் பதிவுகளினால் தான்.

 

1945ஆம் வருடம் நவம்பர் மாதம் 21ஆம் தேதி தனது கடிதம் எழுதும் பணியை சூரி நாகம்மா தொடங்கினார்.

எந்த நல்ல காரியமும் விக்கினம் இல்லாமல் முன்னேறாது என்பது உலக நியதி போலும்!

 

ஆசிரமத்திலும் கூட பொறாமை பிடித்தவர்கள் இருப்பார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடைபெற்றது.

ஆசிரமம் அமைந்தவுடன் அதன் நிர்வாகப் பொறுப்பை சர்வாதிகாரியாக ஏற்றார் ரமண மஹரிஷியின் பூர்வாசிரம சகோதரர். நிரஞ்ஜனானந்த ஸ்வாமி என்ற பெயருடன் அவர் நிர்வாகத்தை நடத்தி வந்தார். சின்ன ஸ்வாமிகள் என்று அவரை அனைவரும் அழைப்பது வழக்கம்.

 

ஒரு நாள் அவர் சூரி நாகம்மாவை அழைத்து . “ இனி இத்துடன் நிறுத்து’ என்றார். அப்போது அவரது கடிதங்கள் புத்தகமாக அச்சிடப்பட்டு வந்ததை ரமணரின் முன்னால் படித்து வர ஏராளமான பக்தர்கள் அதைக் கேட்டு மகிழ்ந்து வந்தனர்.

நாகம்மா படிப்பதை நிறுத்தினார். ஏன் என்று மஹரிஷி கேட்க சின்ன ஸ்வாமி கூடாது என்று சொல்லி விட்டார் என்றார் அவர்.

அப்படியா என்ற அவர் அருகிலிருந்த ராஜகோபாலய்யங்கார் என்பவரைப் பார்த்து, “நாம் படிக்கச் சொல்லுவது.அவர் கூடாதென்கிறது. இதெல்லாம் நன்றாயிருக்கு. இனி நாம் யாரையும் படிக்கச் சொல்லக் கூடாது போல இருக்கிறது! என்றார்.

 

 

இதை ராஜகோபாலய்யங்கார் அலுவலகத்தில் சொல்ல, படிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. எழுதுவதைத் தான் நிறுத்தச் சொன்னேன்” என்றார் சின்ன ஸ்வாமி.

மறுபடியும் படிக்கத் தொடங்கிய நாகம்மா மூன்று நாட்களில் கடிதங்களைப் படித்து முடித்தார்.

 

சின்ன ஸ்வாமியின் சொல்படி தனது கடிதங்களை ஆசிரமத்தின் வசம் ஒப்படைத்தார்.

 

சில நாட்கள் கடிதங்கள் எழுதுவதை நிறுத்திய அவர் பின்னர் மீண்டும் எழுதத் தொடங்கினார்.

 

 

அவை பின்னால் ரமணாசிரமக் கடிதங்கள் என்ற பெயரில் ஆசிரமத்திலிருந்தே அச்சிடப்பட்டு வெளி வந்தன.

கடிதங்கள் படிப்பதற்குச் சுவையாக இருப்பதுடன் ஆசிரம நிகழ்வுகளையும் பகவானின் பல உபதேசங்களையும் தருவதாக அமைந்துள்ளன.

 

இன்று ரமணரைப் பற்றி அதன் மூலம் அறிந்து கொள்வோர் அவருக்கு நன்றி பாராட்டாமல் இருக்க முடியாது.

சிறு வயதில் சொந்த வாழ்க்கையில் நேர்ந்த சொல்லவொண்ணா துக்கத்தைச் சுமந்தாலும், பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு ரமண உபதேசங்களை வழங்கிய பெறும் பேற்றைப் பெற்றார் அவர்.

 

சூரி நாகம்மாவின் கடிதங்கள் ரமண பக்தர்களுக்கு ஒரு பொக்கிஷம்!

***

 

தமிழில் ஒட்டக மர்மம்!- PART 1 (Post No.5290)

RESEARCH ARTICLE Written by London swaminathan

Date: 5 August 2018

 

Time uploaded in London – 14-03  (British Summer Time)

 

Post No. 5290

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஒட்டக ஆராய்ச்சியில் வரும் விஷயங்கள்

 

ரிக்வேதத்தில் ஒட்டகம்

பாணினியின் இலக்கண நூலில் ஒட்டகம்

பைபிளில் ஒட்டகம்

சங்க இலக்கியத்தில் ஒட்டகம்

தொல்காப்பியத்தில் ஒட்டகம்

சிலப்பதிகாரத்தில் ஒட்டகம்??

காளிதாசனில் ஒட்டகம்

ஸம்ஸ்க்ருதக் கதை  நூல்களில் ஒட்டகம்

அமர கோஷத்தில் ஒட்டகம்

மஹாபாரதத்தில் ஒட்டகம்

மனு ஸ்ம்ருதியில் ஒட்டகம்

சிந்து சமவெளியில் ஒட்டகம்

அகராதி, நிகண்டுக்களில் ஒட்டகம்

ஒட்டக வாஹனம்

எனது முடிபு

 

கட்டுரை இரண்டு பகுதிகளாக வருகின்றது; இதோ முதல் பகுதி:-

சங்க இலக்கியத்தில் சிறுபாணாற்றுப் படையிலும் அக நானூற்றிலும், ஒட்டகம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஒட்டகம் என்பது பாலைவன மிருகம். மேலும் உஷ் ட் ர என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லே இப்படி ஒட்டை, ஒட்டகம் என்று மருவியது.

 

சிறுபாணாற்றுப்படை சங்க காலத்தின் முடிவில் தோன்றிய நூல். ஆகவே பொது ஆண்டு 300 முதல் 400-க்குள் இருக்கலாம். பிற்கால இலக்கியத்திலும் கூட ஒட்டகம் பற்றிய குறிப்புகள் சிலவே.

 

பனி நீர்ப்படுவின் பட்டினம் படரின்

ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன

வீங்கு திரை கொணர்ந்த விரைமர விறகின்

1153-155 சிறு பாணாற்றுப்படை

 

பொருள்

கடல் நீர் அலைகள் எயிற்பாட்டினக் கரையில் அகில் கட்டைகளைக் கொண்டுவந்து ஒதுக்கின. அக்கட்டைகள் ஒட்டகம் உறங்குவது போலக் காட்சி தந்தன.

 

 

தொல்காப்பியத்தில் ஒட்டகம் வருகிறது

 

சூத்திரம் 1517

‘ஒட்டகம் அவற்றொடு ஒருவழி நிலையும்………………….’

ஒட்டகத்தின் குட்டியையும் கன்று எனலாம்

 

சூத்திரம் 1552

‘ஒட்டகம், குதிரை, கழுதை, மரை இவை

பெட்டை என்னும் பெயர்க் கொடைக்கு உரிய’

ஒட்டகம், குதிரை, கழுதை, மரைமான் ஆகியவற்றின் பெண்பால்- பெட்டை என்ற பெயர் பெறும். அதாவது ஒட்டகப் பெட்டை என்றால் அது பெண் ஒட்டகம்.

 

ஆக தொல்காப்பியர் காலத்திலேயே ‘உஷ்ட்ற’ என்பது தமிழில் ஒட்டகம் ஆகிவிட்டது.

XXX

 

அகநானூற்றில் ஒட்டகம்

முள் தின்றதா? எலும்பு தின்றதா?

 

அகநானூற்றில் மருதன் இளநாகனார் பாடிய பாடலில்

“குறும்பொறை உணங்கும் ததர் வெள் என்பு

கடுங்கால் ஒட்டகத்து அல்குபசி தீர்க்கும்

கல்நெடுங் கவலைய கானம் நீந்தி,

அம்மா அரிவை ஒழிய– அகம்.245

 

இந்த வரிகளின் பொருள்

 

பாறையில் உதிர்ந்து கிடக்கும் இலவ மலர்கள் காய்ந்து எலும்புகள் போலக் காட்சி தரும். அவைகளை ஒட்டகங்கள் சாப்பிட்டுப் பசியைத் தீர்த்துக்கொள்ளும்.

 

இந்தப் பாடல் வரிகளை ஒட்டகம் எலும்பு சாப்பிட்டதாக் கொண்டோரும் உண்டு. ஆனால் ஒட்டகங்கள் சாக பட்சினிகள்; அவை எலும்பு தின்னாது.

 

ஆக எலும்பு போலக் காய்ந்த பூக்கள் அல்லது பூக்களைத் தாங்கிய , காய்ந்த சுள்ளிகள் என்றே கொள்ளல் வேண்டும்.

அகநானூறு, சிறுபாணாற்றுப் படை, தொல்காப்பியம் ஆகியவற்றில் ஒட்டகம் வருவதால் அக்காலத்தில் பாலைவனப் பகுதி மிருகமான ஒட்டகம் தமிழகம் வந்தது என்று கொள்ளவேண்டும். இல்லாவிடில் அதற்குத் தமிழ் இலக்கணத்தில் தொல்காப்பியர் இடம் தந்திருக்க மாட்டார்!

XXXX

 

கோவேறுக் கழுதையில் கோவலன்

 

சிலப்பதிகாரத்தில் கோவலன் அத்திரி மீது சவாரி செய்ததாக ஒரு செய்தி உண்டு; அத்திரி என்றால் கழுதை, ஒட்டகம் என்று இரு பொருள் உண்டு. கோவலன் போன்ற பெரிய வணிகன் கழுதை மேல் சவாரி செய்தான் என்பதை விட ஒட்டகத்தின் மீது சென்றான் என்று பொருள் கொள்வது பொருந்தும்

 

பூம்புகாரில் பௌர்ணமி நாளன்று நடந்தது என்ன?

 

வான வண்கையன் அத்திரி ஏற

மான் அமர் நோக்கியும் வையம் ஏறிக்

கோடி பல அடுக்கிய கொழிநிதிக் குப்பை………………………

 

–கடலாடு காதை, சிலப்பதிகாரம்

 

பொருள்

வானத்து மழைபோல வழங்கும் கைகளை உடைய கோவலன், கோவேறுக் கழுதையின் மீது ஏறிக்கொண்டான்; மான் போன்ற பார்வையுடைய மாதவி மூடு வண்டியில் ஏறிக்கொண்டாள்; கோடிக் கணக்கான பொருள் உடைய வணிகரின் மாட வீதிகளைக் கடந்து சென்றனர்.

 

இதில் அத்திரி என்பதைக் கழுதை என்று உரைகாரர்கள் வியாக்கியானம் செய்த போதும் அத்திரி என்பதற்கு ஒட்டகம் என்றும் பொருள் உண்டு. ஆக கோவலன் ஒட்டகம் மீது ஏறிக் கடலாடச் சென்றான் என்றும் பொருள் சொல்ல முடியும்.

 

மதுரையில் ஒட்டக பவனி

 

மதுரை மீனாட்சி கோவிலில் சுவாமியும் அம்மனும் பவனி வருகையில் ஒட்டகம் யானை டமாரம் (முரசு) ஏந்திய மாடு முதலில் பவனி வரும் அவைகளுக்குப் பின்னர் சுந்தரேசரும் மீனாட்சி அம்மனும் பவனி வருவர்.

 

எருது ஒட்டகம், எருமை ஆகியவற்றுக்கும் திமில் இருந்தாலும் திமில் உள்ள மிருகம் என்றால் அது ஒட்டகத்தையே குறிக்கும். மாடு, ஆடு ஆகியவற்றுக்குக் கொம்புகள் இருந்தாலும் கொம்பு மிருகம் என்றால் அது காண்டா மிருகத்தையே குறிப்பது போல!

 

அகராதி, நிகண்டுக்களில்

ஒட்டகத்தின் தமிழ் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள்

ஒட்டகம், ஒட்டை, அத்திரி, இரவணம், கனகதம், தாசோகம், நெடுங்கழுத்தன், உஷ் ட் ர,  க்ரமேல (இதிலிருந்து கேமல் CAMEL என்ற ஆங்கிலச் சொல் வந்தது; அராபிய மொழியில் கமல், கமலா என்று இருப்பதால்  அங்கிருந்தும் ஸம்ஸ்க்ருத்ததுக்கு வந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது.)

 

அமர கோசம் என்னும் புகழ் பெற்ற ஸம்ஸ்க்ருத நிகண்டில்

பெண் ஒட்டகத்துக்கு உஷ்ட்ரி கா (ம்ருத்தாண்டே) என்ற பெயர் உள்ளது

க்ரமேல, மய, மஹாங்காஹா, கரபஹ, தீர்க்கக்ரீவ, த்விகுடஹ, சரபஹ என்ற பெயர்கள் உள்ளன.

தமிழில் தாசேரம், நெடுங்கோணி, அயவனம், கூன்புறம் என்ற பெயர்களும் காணப்படுகின்றன. இவைகளில் பெரும்பாலானவை ஸம்ஸ்க்ருதப் பெயர்களே!

குட்டியாக இருந்தால்

கரபாஹா, ஸ்யுஹு, ஸ்ருல்லகா, தாரவைஹி, பாத பந்தனைஹி என்றும் உள்ளது.

 

TO BE CONTINUED………………………….

 

–SUBHAM–

வாழ்வில் முன்னேற ஒரு முதலைக் கதை – 2 (Post No.5286)

WRITTEN BY S NAGARAJAN

Date: 4 August 2018

 

Time uploaded in London – 6-50 AM  (British Summer Time)

 

Post No. 5286

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாக்யா வார இதழில் 3-8-18 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு இருபத்தியிரண்டாம்) கட்டுரை

வாழ்வில் முன்னேற ஒரு முதலைக் கதை – 2

ச.நாகராஜன்

ஏராளமான நவீன் தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட இந்தக் காலத்தில் அவற்றுடன் இணைந்தே நம் வாழ்க்கை கழிகிறது. இ மெயில், வாட்ஸ் ஆப், எஸ் எம் எஸ், மொபைல் போன், ட்விட்டர், ஃபேஸ்புக் இன்ன பிற தொழில்நுட்பங்கள் நம்மைக் கவ்விக் கொண்டிருக்கின்றன.                                     இவற்றை எல்லாம் உதறி விட்டு நம்மால் இன்று வாழ முடியவில்லை. இதில் எவ்வளவு நேரத்தை அனாவசியமாகக் கழிக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கக் கூட நேரம் இல்லை. வாழ்க்கை ஓடுகிறது; ஓடிக் கொண்டே இருக்கிறோம். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் ஒரு வழி தான் ‘திங்க் வீக்’! (Think Week)

மைக்ரோ சாஃப்டின் பில் கேட்ஸ் தான் இந்த ‘சிந்தனை வாரம்’ என்னும் புது வழியைக் கண்டு பிடித்து அதைக் கடைப்பிடித்தார்; முன்னேறினார்.                                    வருடத்திற்கு இருமுறை பரபரப்பான தன் வாழ்க்கைச் சூழலிலிருந்து அவர் விடுபட்டுத் தனியிடம் ஒன்றை நாடுவார். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட யாருடனும் தொடர்பு அறவே இருக்காது. அந்த ஒரு வாரத்தில் படிக்க வேண்டிய அனைத்தையும் படிப்பார். தனது அடுத்த கட்ட நடவடிக்கையை சிந்தனை செய்து நன்கு ஆலோசித்து முடிவெடுப்பார். இணையதளம் ஒரு பெரிய நிலைக்களமாக ஆகப் போகிறது என்பதை இந்த சிந்தனை வாரத்தில் தான் அவர் உணர்ந்தார்; அதற்காக தனது கம்பெனியை ஆயத்தப் படுத்தி முடுக்கி விட்டார். விளைவு பெரிய லாபத்தையும் பெயரையும் சம்பாதித்தார்.  இதேபோல ஸ்கில்ஷேர் கம்பெனியை நிறுவிய மைக்கேல் காஞ்சனப்ரகோர்ன் (Skillshare – Michael Karnjanaprakorn) பில் கேட்ஸின் இந்த வழியைத் தானும் கடைப்பிடிக்க ஆரம்பித்தார். சிந்தனை வாரத்தில் புது ஐடியாக்களை அவர் அலசுவார். பல பத்திரிகைகள், புத்தகங்களைப் படிப்பார். ஆழ்ந்து யோசிப்பார். தனது நிறுவனத்தில் உள்ள அனைவரிடமும் தங்கள் தங்கள் யோசனைகளை அனுப்பக் கூறுவார். இது தனது முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது என்று அவர் கூறுகிறார்.                                    தியானத்தின் ஒரு சின்ன வழிமுறை தான் சிந்தனை வாரம். ஒரு வாரம் இப்படிக் குடும்பம், சுற்றம், நட்பை விட்டுப் பிரிந்திருக்க முடியாதவர்கள் ஒரு நாளை சிந்தனை நாளாக ஒதுக்கலாம்; முன்னேறலாம்.                                          பெரிய முதலை சும்மா இருந்ததைப் போல குறிக்கோளுடன் கூடிய பொழுதாக இதைக் கழிக்கலாம். தினமும் வாட்ஸ் ஆப்பில் வரும் அனாவசிய வம்புச் செய்திகள் எத்தனை எத்தனை; மெயில்கள் எத்தனை எத்தனை; இவற்றிலிருந்து விடுபட வேண்டும் என்பதே இப்போதைய ட்ரெண்ட்!

இந்தியாவில் வழி வழியாக வழங்கி வரும் ஆப்பில் அகப்பட்ட குரங்குக் கதையும் பொருள் பொதிந்த ஒன்று! குரங்கைப் பிடிக்க நினைப்பவர்கள் ஒரு மரத்தைப் பிளந்து அதில் வாய் குறுகிய குவளை ஒன்றை வைத்து வாழைப்பழத்தை நன்கு தெரிகிறார்போல வைப்பார்கள். பழத்திற்கு ஆசைப்பட்ட குரங்கு குறுகிய வாயின் உள்ளே கையை விட்டு வாழைப்பழத்தை எடுக்கும். வாழைப்பழம் கையில் இருக்கும் போது அதன் கை வெளியே வராது. அதை விட்டு விட்டால் அதன் கை எளிதில் வெளியே வந்து விடும். ஆனால் பழத்தை விட அதற்கு மனம் வராது. அந்தச் சமயம் பார்த்து அருகிலிருக்கும் குரங்கு பிடிப்போர் அதைப் பிடிப்பார்கள். நமக்கு வேண்டாத வம்புச் செய்திகளைப் பிடித்துக் கொண்டபோது நாம் விடுபட முடியாது. நம்மைப் பிடிக்க வேண்டிய துரதிர்ஷ்டம் காத்திருந்து நம்மைப் பிடிக்கும்.

 

ஜென் பிரிவில் ஒரு அழகிய குட்டிக் கதை உண்டு. குதிரையில் அமர்ந்த ஒரு மனிதன் மிக வேகமாக குதிரையில் வந்து கொண்டிருந்தான். அவனது வேகத்தைப் பார்த்து பயந்து சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு மனிதன் அவனை நோக்கிக் கத்தினான்: “எங்கே போகிறாய், இவ்வளவு வேகமாக!” அதற்கு ஓடும் குதிரையில் இருந்த மனிதன் கத்தி பதில் சொன்னான்: “எனக்குத் தெரியாது, குதிரையைக் கேள்”                  ஆழ்ந்த பொருள் கொண்டது இந்த ஜென் கதை. குதிரை என்பது நமது பழக்க வழக்கங்கள். நம்மை மீறி நமது பழக்க வழக்கங்கள் அதன் போக்கில் வேகமாக நம்மை இழுத்துச் செல்கின்றன. போகுமிடம் நமக்கு எப்படித் தெரியும். குதிரைக்குத் தான் – பழக்க வழக்கங்களுக்குத் தான் – போகுமிடம் (விளைவு) தெரியும்; ஆகவே குதிரையைச் சற்று நிறுத்தி யோசிக்க வேண்டும்.

ஆக முதலைக் கதை, குரங்குக் கதை, குதிரைக் கதை வாழ்வின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க உதவும்.  நவீன கால சொற்றொடரின் படி திங்க் வீக் என்று இதைச் சொன்னாலும் சரி அல்லது புத்தமத விளக்கமான மைண்ட்ஃபுல்னெஸ் (Mindfulness) என்று சொன்னாலும் சரி அர்த்தம் ஒன்று தான்.                            உன்னிலிருந்து நீ விலகி உன்னைக் கவனி என்பதே இதன் சுருக்கமான அர்த்தம்.

மைண்ட்ஃபுல்னெஸ் என்பதைச் சுருக்கமாக விளக்க வேண்டுமெனில்,”உன்னைச் சுற்றி என்ன நடக்கிறது, எங்கே நீ போய்க்கொண்டிருக்கிறாய், எந்த வழியில் எந்த விதத்தில் நீ சென்று கொண்டிருக்கிறாய்” என்பதை சிந்தித்து நன்கு உணர்வதே ஆகும். இந்த விழிப்புணர்ச்சியைத் தருபவையே மைண்ட்ஃபுல்னெஸ் தியான வழி முறைகள்.            ஏராளமான வெற்றிக் கலை உத்திகளைக் கையாண்ட மேலை உலகம் இப்போது மைண்ட்ஃபுல்னெஸ் பக்கம் திரும்பி இருக்கிறது.                                                        ‘சும்மா இருந்து சுகம் கண்டு, யோசித்து, வெற்றி பெறு’ என்கிறது இப்போதைய மேலை உலகம். காலம்காலமாக கையாளப்பட்டு வெற்றி தரும் வழி முறை இதுவே என்பதில் ஐயமில்லை!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

ஃப்ரான்ஸிஸ்கோ வரேலா (பிறப்பு 7-9-1946 மறைவு 28-5-2001) சிலியைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி. சிலியில் நடந்த அரசியல் புரட்சி காரணமாக அவர் அமெரிக்கா சென்று சில காலம் தங்கினார். பின்னர் சிலிக்குத் திரும்பி வந்து சிலி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். புத்தமதம், அறிவியல் ஆகிய இரண்டின் நடமாடும் களஞ்சியம் என்ற பெயரைப் பெற்ற இவர் உயிரியலைப் படிக்கும் மாணவனாக இருந்த போது பேராசிரியர் ஹம்பரோ மடுரானா என்பவரின் அறைக்குள் வேகமாக நுழைந்து கத்தினார்:” பிரபஞ்சத்தில் மனித மனதின் பங்கு என்ன என்பதை நான் அறிய வேண்டும்.”

மடுரானா புன்முறுவலுடன் பதில் சொன்னார்:”பையா! சரியான இடத்திற்குத் தான் நீ வந்திருக்கிறாய்!”

அன்றிலிருந்து வரேலாவுக்கு மடுரானா வழிகாட்டியானார். வரேலாவின் நண்பரான விஞ்ஞானி ஜெர்மி ஹேவேர்ட் (Jeremy Hayward) தனது வழிகாட்டியான புத்தமத துறவி ட்ரங்பா ரின்போச்சேயை அறிமுகப்படுத்த, அவர் வரேலாவுக்கு “ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பதை” சொல்லித் தந்தார். புத்த மதத்தை நன்கு அறிந்து கொண்ட வரேலா நோபல் பரிசு பெற்ற தலாய்லாமாவைச் சந்தித்து அறிவியலும் புத்தமதமும் பற்றிய மாநாட்டை இந்தியாவில் தர்மஸ்தலாவில் நடத்தினார். பின்னர் இமயமலைக் காடுகளிலும் குகைகளிலும் தனியே இருந்து தியானம் பயின்று மைண்ட்ஃபுல்னெஸ் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டார்.

அவரது வழியில் சகவிஞ்ஞானிகள் புத்த துறவிகளை அமெரிக்க ஆய்வுக்கூடத்திற்கு அழைத்து வந்து அவர்கள் தலையில் 256 சென்ஸர்கள் வரை மாட்டி தியானத்தின் போது மூளையில் ஏற்படும் ஆய்வு பற்றி சோதனை நடத்தினர். சோதனை முடிவில், தியானத்தைத் தொடர்ந்து செய்வதன் மூலம் கவன சக்தி பிரம்மாண்டமான அளவில் கூடுகிறது என்றும், மூளை வியக்கத்தக்க விதத்தில் நல்ல மாறுதலை அடைகிறது என்றும் கண்டுபிடித்தனர். வரேலா இறுதி வரை புத்தமத தியான முறைகளை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து முடிவுகளை அதிகாரபூர்வமாக உலகிற்கு அறிவித்து வந்தார். சுவை நிரம்பிய வாழ்க்கை வரலாறு கொண்ட விஞ்ஞானி வரேலா மதத்தையும் அறிவியலையும் இணைத்தவராவார்!

***