அதிசய ரத்தினக் கற்கள்- கம்பன் பாடல்களில்! (Post No.4884)

அதிசய ரத்தினக் கற்கள்- கம்பன் பாடல்களில்! (Post No.4884)

 

Research article Written by London Swaminathan 

 

Date: 5 April 2018

 

Time uploaded in London –  8-49 am (British Summer Time)

 

Post No. 4884

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தமிழில் ராமாயணத்தைத் தந்தான் கவிச் சக்ரவர்த்தி கம்பன். அவன் காலத்தில் சோழ வள நாடு சோறு மட்டுமின்றி ரத்தினக் கற்களிலும் செழிப்பாக இருந்தது. இதை அ வனது பாடல்களில் காண முடிகிறது. அது மட்டுமா?

 

அதிசய நாக ரத்தினம் பற்றியும், தொட்டதை எல்லாம் தங்கமாக்கும் ‘ஸ்பர்ஸ்வேதிக்’ கல் பற்றியும் கம்பன் பாடுகிறான். இது அக்கால நம்பிக்கைகளை எடுத்துக் காட்டுகிறது

 

‘ஸ்பர்ஸவேதி’ என்னும் கல்லை சித்தர்கள் வைத்திருந்தார்கள் என்றும் அதனால் அவர்கள் வேண்டிய அளவுக்குத் தங்கக் கட்டிகளைப் பெற்றார்கள் என்றும் இந்துக்கள் நம்புவர். மேலை நாட்டிலும் மத்திய காலத்தில் இப்படி ஒரு நம்பிக்கை இருந்தது.

 

கம்பன் சொல்வான்; ராமன் ஒர் ஸ்பர்சவேதிக் கல் போலும்; அவன் தொட்டதெல்லாம் தங்கம் ஆகி விடுகிறதே என்று!

 

நாகரத்தினம் உண்டு என்றும், இதைக் கொண்டே நாகங்கள் இரை தேடும் என்றும் தமிழர்கள் நம்பினர் (காளிதாசன் காவியங்களிலும், சங்கத் தமிழ் பாடல்களிலும் உள்ள விஷயங்களை ஏற்கனவே ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் கொடுத்துள்ளேன்)

 

கம்பன் இதைச் சொல்கிறான்:-

 

சுந்தர காண்டத்தின் நிந்தனைப் படலத்தில் சீதையைத் தேடி அசோக வனத்துக்குள் வந்த ராவணனை வருணிக்கும் கம்பன் செப்புவான்:-

 

ஒரு மணி தேடும் பல் தலை அரவின்

உழைதொறும் உழைதொறும் உலாவி

 

காம மயக்கத்தால் சீதை இருக்கும் இடத்தை மறந்து போன ராவணன், தன் ஒப்பற்ற மாணிக்கத்தை  இழந்த பல தலைப் பாம்பு போலப் பற்பல இடங்களிலும் அவளைத் தேடித் திரிந்தபடி வந்தான்.

 

 

அனுமன் கடலைத் தாண்டிய வேகத்தில் கடல் நீர் கிழிந்ததாம். அதில் பாதாள லோகமும் அங்கே வாழும் நாகர்களுடைய ரத்தினங்களும் மின்னியதாம்.

 

கீண்டது வேலை நல் நீர் கீழ் உறக் கிடந்த நாகர்

வேண்டிய உலகம் எல்லாம் வெளிப்பட மணிகள் மின்ன

–கடல் தாவு படலம், சுந்தர காண்டம்.

 

உருக் காட்டுப் படலத்தில் ராமனின் மோதிரத்தை அனுமான் சீதையிடம் கொடுத்தவுடன், மாணிக்கத்தைத் தேடும் பாம்புக்கு அந்த ரத்தினம் கிடைத்து விட்டால் எவ்வளவு மகிழ்ச்சி கொள்ளுமோ அது போல சீதையின் மன நிலை இருந்ததாம்.

இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்– என்பான்.

 

வேதிகை மணி

அதிசயமான வேதிகை மணி பற்றிய பாடலும் சுந்தர காண்டம் உருக்காட்டுப் படலத்திலேயே வருகிறது:-

நீண்ட விழி நேரிழைதன் மின்னின் நிறம் எல்லாம்

பூண்டது ஒளிர்பொன் அனைய பொம்மல் நிறம் மெய்யே

ஆண்தகைதன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம்

தீண்டு அளவில் வேதிகை செய்தெய்வ மணிகொல்லோ

 

பொருள்:-

நீண்ட கண்களையும் சிறந்த அணிகலன்களையும் உடைய சீதையின் மின்னல் போன்ற உடலின் நிறமானது, மோதிரத்தின் ஒளியால் பொன்னிறம் பெற்றுப் பொலிவும் பூண்டது. இது உண்மை! எனவே, இராமனது மோதிரம் தன்னை நெருங்கும் எல்லாப் பொருள்களும் தன்னைத் தீண்டுகிற மாத்திரத்தில் பொன்னாக மாற்றுகின்ற தெய்வத் தன்மை பெற்ற ஸ்பரிசவேதி என்னும் ரசவாத குளிகைதானோ?

 

ஆரண்ய காண்டம், சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலத்தில் ராவணன் மாணிக்கத் தேரில் ஏறி வந்ததாகவும் அங்கே ஒன்பது மணிகளால் (நவரத்னம்) ஆன மரங்கள் இருந்ததாகவும் கூறுகிறான்

மாணிக்க மானத்திடை மண்டபம் காண வந்தான்

பொற்பு உற்றன ஆய் மணி ஒன்பதும் பூவில் நின்ற

 

 

நவரத்தினத் தேர், நவரத்தின மோதிரம்!

 

 

ராமன் ஏறிய தேர் பற்றிய வர்ணனை மிகவும் சுவையானது;-

பொன் திரள் அச்சது வெள்ளிச் சில்லி புக்கு

உற்றது வயிரத்தின் உற்ற தட்டது

சுற்று உறு நவமணி சுடரும் தோற்றத்து

ஒற்றை ஆழிக் கதிர்த் தேரொடும் ஒப்பதே

–பால காண்டம்

 

ராமனின் தேரின் அச்சு-தங்கம், சக்கரம்-வெள்ளி, தேர்த் தட்டு- வைரம், பார்டர்- நவ அர் ரத்தினக் கற்கள், சூரியனின் ஒற்றைச் சக்கரம் போன்றது.

 

 

கிட்கிந்தா காண்டம், கார்காலப் படலத்தில் நவ ரத்தின மோதிரம் பற்றிய வருணனை வருகிறது:

நானிறச் சுரும்பும் வண்டும் நவமணி அணியின் சார- என்ற பாடலில் பல நிறங்களுடைய சுரும்புகளும் வண்டுகளும் நவ மணிகள் இழைக்கப் பெற்றுக் கைகளில் அணிந்து கொள்ளும் மோதிரம் வளை போலக் காந்தள் மலரில் மொய்த்தன– என்று வருகிறது.

இவ்வாறு நவரத்தினம், தங்கம், வெள்ளி பற்றிய குறிப்புகள் நிறையவே உள்ளன. இவை சோழர் கால செல்வ வளத்தின் எதிரொலி என்றால் மிகையாகாது.

 

My Old Articles: –

 

கம்பன், காளிதாசன் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/கம்பன்-காளிதாசன்/

18 Oct 2016 – விஷத்தை நீக்கும் இரத்தினக் கற்கள். மனு தம சாத்திரமும் விஷம் பாதிக்காமல் இருக்க அதற்கான ரத்தினக் கற்களை அணிய வேண்டும் என்கிறது (மனு 7-218).காளிதாசன் சொல்லுகிறான்:- ரகுவம்சம் 2-32. திலீபன் மேய்த்த தெய்வீகப் பசுவை சிங்கம் தாக்கியது. உடனே கோபமடைந்த …

ரத்தினக் கற்கள் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/ரத்தினக்-கற்கள்/

22 வகை ரத்தினக் கற்கள். மனிதருள் மாணிக்கம் என்று சிலரைப் போற்றுகிறோம்; ஆங்கிலத்தில் அவன் ஒரு ரத்தினம்என்று நல்லோரைப் போற்றும் மரபுச் சொற்றொடர் உண்டு. மாமன்னன் விக்ரமாதித்தன் அரசவையில் உலக மஹா கவிஞன் காளிதாசன் உள்பட ஒன்பது அறிஞர்கள் இருந்ததை …

 

நாகரத்தினம் பற்றி வராகமிகிரர் கூற்று …

https://tamilandvedas.com/…/நாகரத்தினம்-பற்றி-…

13 Feb 2015 – முடிவுரை: யாரேனும் எங்கேனும் நாகரத்தினக் கல் இருக்கிறது என்று சொன்னால் அவர்களிடம் ஏமாந்து போய்விடாதீர்கள். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் ஏதோ ஒரு உவமையாகத் தான் இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். நாக ரத்தினம் என்பது …

 

மாணிக்கம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/மாணிக்கம்/

முடிவுரை: யாரேனும் எங்கேனும் நாகரத்தினக் கல் இருக்கிறது என்று சொன்னால் அவர்களிடம் ஏமாந்து போய்விடாதீர்கள். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் ஏதோ ஒரு உவமையாகத் தான் இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். நாக ரத்தினம் என்பது உவமையே …

 

TAGS- ரத்தினக் கற்கள், நவரத்தினம், நாக ரத்தினம், வேதிகை மணி,  தங்கம் ஆக்கும் கல்

 

சுபம்–

ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் தியாஜ்யம்! (Post No.4881)

ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் தியாஜ்யம்! (Post No.4881)

 

Written by London Swaminathan 

 

Date: 4 April 2018

 

Time uploaded in London –  17-51 (British Summer Time)

 

Post No. 4881

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பழமொழி விளக்கக் கதை

எல்லோருக்கும் பஞ்சாங்கம் என்றால் என்ன என்று தெரியும். ஆனால் தியாஜ்யம் என்றால் பலருக்கும் தெரியாது.

தியாஜ்யம் என்றால் நல்ல காரியங்கள் செய்யக்கூடாத காலம்.

 

 

‘ஒவ்வொரு நாளிலும் கழிவாகிய மூன்றே முக்கால் நாழிகை’ என்று ஆனந்த விகடன் அகராதி கூறும். ‘நக்ஷததிரங்களில் சுபகாரியம் செய்யக்கூடாத காலம்’ என்று அபிதான சிந்தாமணி சொல்லும்.

‘த்யஜ’ என்ற ஸம்ஸ்க்ருத வினைச் சொல்லுக்கு ‘விடுதல்’ என்று பொருள். எல்லாவற்றையும் விட்டவரை ‘தியாகி’ என்று ஸம்ஸ்க்ருதத்தில் சொல்லுகிறோம். தமிழிலும் அந்தச் சொல் எல்லோருக்கும் தெரிந்ததே.

 

ஒரு நாளில் 60 நாழிகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் 24 நிமிடங்களுக்குச் சமம். ஆக ஒரு நாளில் விலக்கப்பட்ட காலம் என்பது மிகவும் குறைவே  .பஞ்சாங்கத்தில் நல்ல நேரமும், அல்லது நல்லது, கெட்டது இல்லாத சம நிலைக் காலமே அதிகம். அப்படி இருந்தும் சிலர்  எப்போதும் கெட்ட காலம் என்றே கருதுவர்.

 

இதைக் கொஞ்சம் விளக்கமாகக் காண்போம். சிலர் முழுக்க முழுக்க Negative நெகட்டிவ் – எதிர் மறைச் சிந்தனை உடையவர்கள். எதைச் சொன்னாலும் அதில் குறையை மட்டுமே எடுத்துக் காட்டுவர். நாவிலிருந்து நல்லதே வராது.

 

மழை பெய்தால் விமானம் பறக்காது என்பர். இடி இடித்தால் விமானம் கீழே எரிந்து விழும் என்பர்.

 

வட இந்தியாவில் ரயில் விபத்து நடந்தால் சென்னை-மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் டிக்கெட்டை ரத்து செய்துவிடுவர். இப்படித் தான் மட்டும் கெட்டது போதாது என்று நிற்காமல், மற்றவர்களுக்கும் துர் போதனை செய்வர். சுருக்க மாகச் சொன்னால் வாயில் நல்லதே வராது.

 

மதுரையில் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பின்புறம் ‘எல்லீஸ் நகர்’ என்று பழைய பிரிட்டிஷ் துரையின் பெயரில் ஒரு பொட்டல் காடு இருந்தது. அங்கு வீட்டு வசதி வாரியம் வீடுகள் கட்டி விளம்பரம் செய்தது. எனக்கும் ஏ.என்.சிவாரமனின் (Editor, Dinamani) மகனுக்கும் பத்திரிக்கையாளர் கோட்டாவில் (ஒதுக்கீட்டில்) போட்டியே இல்லாமல் வீடு கிடைத்தது.

 

என்னுடன் வேலை பார்த்த மற்றொரு சப் எடிட்டர் வீட்டுக்கு நல்ல செய்தி சொல்லப் போனேன். அவர் தனது தந்தை பற்றி முன்னரே எச்சரித்திருந்தார். அவர் கண்களுக்குப் படாமல் மாடிக்கு வரும்படி சொல்லி இருந்தார். இருந்த போதிலும் அவர் தந்தை என் கண்ணில் பட்டு விட்டதால், மரியாதையின் பொருட்டு “மாமா சௌக்கியமா?” என்று கேட்டுவிட்டேன்.

 

அவ்வளவுதான்!

 

“ஏண்டா! சுடுகாட்டில் வீடு வாங்கி இருக்கிறாயாமே!”– என்று துவங்கி விட்டார். அவர் சொன்னது ஓரளவு உண்மைதான். அந்த எல்லீஸ் நகர் கிறிஸ்தவர்களுக்கு இடுகாடாகவும் மற்றொரு பக்கம் இந்துக்களுக்குச் சுடுகாடாகவும் இருந்தது. ஆயினும் நான் சிரித்துக் கொண்டே ‘’ஆமாம் ஆமாம் சிவனுடைய பூமியில் வீடு கிடைத்தது அதிர்ஷ்டமே’ என்று சொல்லிக்கொண்டு மாடிக்குப் போனேன்.

அந்த சஹ ஊழியர்- சப் எடிட்டர் என்னைக் கடிந்து கொண்டார். நான் தான் என் அப்பா கண்ணில் படாமல் ஓடி வா என்றேனே’ என்றார் நான் சிரித்து மழுப்பி விட்டேன்.

 

சிலருக்கு நல்லதையே காண முடியாது. எங்களுக்கு எல்லாம் மந்திர உபதேசம் செய்த சுமாமிஜி, அந்தப் பெரியவரை – துரியோதணன் என்று அழைப்பார். அப்படியானால் என்ன என்று நாங்கள் சிரித்துக் கொண்டே கேட்போம். பெரிய செல்வந்தன் என்று சொல்லி சுவாமிஜி மழுப்பி விடுவார். பின்னர்தான் எனக்கு மஹாபாரதக் குட்டிக்கதை தெரிய வந்தது.

 

 

குட்டிக்கதை

ஒரு முறை கிருஷ்ண பரமாத்மா தர்மபுத்ரனையும் (யுதிஷ்டிரன்) துரியோதணனையும் அழைத்து உலகில் உள்ள நல்லவன் ஒருவனைக் கண்டு பிடித்து வா என்று அனுப்பினார். 24 மணி நேரம் கழித்து இருவரும் திரும்பி வந்தனர்.

என்ன! கண்டு பிடித்தீர்களா? என்று கண்ணன் கேட்டான்.

தருமர் சொன்னார்: கண்ணா, உலகில் கெட்டவரே இல்லையே; எப்படி எனக்கு இப்படி ஒரு கஷ்டமான பணியைக் கொடுத்தாய்? யாரை நான் கெட்டவர் அல்லது நல்லவர் என்று சொல்ல முடியும்; எல்லோரும் நல்லவர்களே என்று சொல்லி ஒவ்வொருவரின் நல்ல குணங்களையும் விளக்கத் துவங்கிவிட்டார்.

 

துர்யோதணனோ நேர் மாறாக, கண்ணா! இது என்ன அசட்டுப் பிசட்டு என்று நல்லவன் ஒருவனைக் கண்டு பிடித்து வா என்று என்னை அனுப்பினாய். அவ்வளவு பெயர்களும் அயோக்கியர்களே என்று எல்லோருக்கும் அயோக்கியப் பட்டம் கட்டினான்.

 

கண்ணன் நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு இருவரையும் சென்று வாருங்கள் என்று அனுப்பினார்.

 

உலகில் பல அயோக்கியர்கள் மற்றவர்களை அயோக்கியர்கள் என்று அழைக்கும் போதே நமக்கு அந்த கீழ்ஜாதிகளின் தன்மை புரிந்து விடுகிறது.

 

ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் கெட்ட காலம் (தியாஜ்யம்= விலக்கப்ப்ட்ட காலம்) என்பது போல இவர்களுக்கு தங்களைத் தவிர மற்ற எல்லோரும் அயோக்கியர்களே.

 

ஆகவே Negative Vibrations நெகட்டிவ் வைப்ரேஷன் உடையோரைச் சந்திக்காமல் இருப்பதே நலம். அவர்களுடைய வியாதி சில நேரத்தில் நம்மையும் தொற்றிக் கொள்ளக் கூடும். ஏனெனில் கல்யாணத்துக்காக ஜாதக் கட்டைக் கையில் தூக்குவோர் கூட ஏதேனும் நெகட்டிவ்/ வேண்டாத செய்தி வந்தால் அப்பொழுது அக்காரியத்தை நிறுத்தி விடுவர்; அல்லது அப்போது கைக்குவந்த ஜாதகத்தை ஒதுக்கி விடுவர்.

 

ஆகவே கனியிருப்பக் காய் கவறாமல் இனிய சொல்லைச் சொல்ல வேண்டும். மங்களச் சொற்களைச் சொல்ல வேண்டும். எப்போதும் இப்படி எண்ணிப் பழகினால்தான் உரிய நேரத்தில் உரிய சொற்கள் வரும்.

 

பல அரசியல்வாதிகள், திருமணக் கூட்டங்களில் அபசகுன, அமங்களச் சொற்களைப் பேசுவதை நாம் பத்திரிக்கைகளில் படிக்கிறோம்; நகைக்கிறோம்!!!

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.

 

–subham–

எண்களின் ரகசியம்: பதிமூன்றும் முப்பதும்! (Post No.4879)

Date- 4 April 2018

 

British Summer Time- 6-03

 

Written by S Nagarajan

 

Post No.4879

 

 

எண்களின் ரகசியம்

 

பதிமூன்றும் முப்பதும்! : மேலை நாட்டினரின் மூட நம்பிக்கை!

 

ச.நாகராஜன்

 

பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியர்களை மூட நம்பிக்கை மிகுந்தவர்கள் என்று பிரிட்டிஷார் கேலி செய்வது வழக்கம். ஆனால் உண்மையில் சொல்லப் போனால் அதிக மூட நம்பிக்கைகள் கொண்டவர்கள் அவர்களே!

 

இதற்கு எடுத்துக்காட்டுகள் ஏராளம் உண்டு. இங்கு 13ஆம் எண்ணைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

 

13 என்றாலே மேலை நாட்டவர்களுக்கு அலர்ஜி. பல மாடி அடுக்குக் கட்டிடத்தில் 12ஆம் மாடிக்குப் பிறகு 14ஆம் மாடி தான். பதிமுன்றே கிடையாது.

 

பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவு இப்போது இந்தியாவிலும் கூட இதே நிலை தான். அதே போல 13ஆம் எண் அறையும் கிடையாது. 12 ஏ என்று இருக்கும்!

இதற்கான காரணங்கள் பல.

 

13 ஒரு அதிர்ஷ்டமற்ற எண்.

என்றாலும் ஏசு கிறிஸ்துவிடமிருந்து தான் இந்த எண்ணைப் பற்றிய கெட்ட அபிப்ராயம் தோன்ற ஆரம்பிக்கிறது.

ஏசுவின் இறுதி சாப்பாட்டில் அவர் 12 சீடர்களுடன் இருந்தார்.ஆகவே 13 என்பது அதிர்ஷ்டம் கெட்ட எண்!

தூக்குமரத்தில் தூக்குப் போடுபவனுக்கான கட்டணம் 13 பென்ஸ்.

ஆகவே 13 என்பது அதிர்ஷ்டமற்ற எண்ணாம்! உண்மையில் தூக்குப் போடுபவனுக்கு 13 ½ பென்ஸ் தரப்பட்டது. அரை பென்ஸ் தூக்குக் கயிறுக்கான பணம். ஆகவே 13 பென்ஸ் என்று கொள்ளப்பட்டது.

தூக்கு மேடைக்கு ஏறும் படிகள் 13. ஆகவே 13 அதிர்ஷ்டமற்ற எண்.

 

பெண்களின் மாதவிடாயும் கூட 13 எண்ணின்

அதிர்ஷ்டமின்மைக்கு ஒரு காரணமாம். ஆண்டுக்கு 13 முறை அவர்கள் மாதவிலக்கை அடைகின்றனராம்!

 

13 எழுத்துக்கள் பெயரில் இருந்தால் அபாயமாம். ஏனெனில் கொடும் கொலைகளைச் செய்த கொலையாளிகள் 13

எழுத்துக்களைக் கொண்ட பெயர்களையே உடையவர்களாக இருந்தார்களாம். இதற்கான பெரிய் பட்டியலே தயார்!

13ஆம் தேதி வெள்ளிக்கிழமையாக அமைந்தால் மாபெரும் ஆபத்து! அன்று எந்த வித வியாபாரமும் செய்யக் கூடாது. மீறிச் செய்தால் நஷ்டமும் துரதிர்ஷ்டமும் பீடிக்கும். ஆகவே பல பில்லியன் டாலர் அளவுக்கு வணிகம் முடங்குமாம் அன்று!

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 

ஆகவே பிரிட்டிஷாரோ அல்லது இதர மேலை நாட்டினரோ ஹிந்துக்களைப் பற்றி இழிவாகக் கூறுவதற்கோ அல்லது விமரிசிப்பதற்கோ தகுதியானவர்கள் இல்லை.

அடுத்து எண் முப்பது சபிக்கப்பட்ட எண்ணாம் – அவர்களின் கருத்துப் படி! ஏனெனில் ஜுடாஸ் ஏசுவை காட்டிக் கொடுக்க அவன் பெற்ற பணம் 30 வெள்ளிக் காசுகள். இன்னொரு நம்பிக்கை ஏசு கிறிஸ்து தனது உபதேசங்களை அவரது 30ஆம் வயதில் செய்ய ஆரம்பித்தாராம்!

 

ஆக ஐஸ்பெர்க்கின் டிப் என்று சொல்வார்களே அது போல மேலை நாட்டினரின் ஏராளமான மூட நம்பிக்கைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே இந்த 13!

 

இப்படி ஏராளம் உண்டு. பின்னால் சந்தர்ப்பம் கிடைக்கும் போது விரிவாகக் காண்போம்!

***

 

கிரேக்க, இதாலிய நாடுகளில் பாம்பு வழிபாடு (Post No.4875)

கிரேக்க, இதாலிய நாடுகளில் பாம்பு வழிபாடு (Post No.4875)

 


WRITTEN by London Swaminathan 

 

Date: 2 April 2018

 

Time uploaded in London –  15-58 (British Summer Time)

 

Post No. 4875

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

(பிறர் எழுதியதைத் திருடுபவனும் பிறர் மனைவியைத் திருடுபவனும் பிறர் 

 

பொருளைத் திருடுபவனும் ஒன்றே – ஐன்ஸ்டீனின் அண்ணன்பெர்னார்ட் 

 

ஷாவின் தம்பிகாந்திஜியின் தாத்தா சொன்னது!!!)

 

ஸர்ப்ப , நாக என்ற இரண்டு ஸம்ஸ்க்ருதச் சொற்களில் இருந்து ஆங்கிலச் சொற்கள் ஸ்நேக் (ஸ் நாக(S+nake)) ஸெர்பெண்ட் (serpent), ஆகியன வந்தன என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரையுள்ள ஊர்ப் பெயர்களில் ஆயிரக் கணக்கான பெயர்களில் நாக அல்லது ஸர்ப்ப வருகின்றன. இன்றும் பாம்புகளை வழிபடும் நாக பஞ்சமியையும் வருண பஞ்சமியையும் கொண்டாடும் நாடு நமது இந்தியாதான். நாக பாஸம் என்ற அஸ்த்ரத்தின் நினைவாக நமது ஏவுகணைகளுக்கும் நாம் ‘நாக’ பெயர் சூடியுள்ளோம்.

 

 

நாகர்- பாண்டவர் மோதல் காரணமாகப் புறப்பட்ட மாய தானவன் என்ற நாகன் தென் அமெரிக்க மாயன் (Mayan Civilization) நாகரீகத்தை ஸ்தாபித்ததையும், குப்தர் கல்வெட்டுகளில் பலர் நாகர் பெயர்கள் இருப்பதையும், சங்க காலப் புலவர்களில் இருபதுக்கும் மேற்பட்ட நாகர்கள் பெயர்கள் இருப்பதையும், சிந்து சமவெளி- ரிக் வேதம் ஆகியவற்றில் நாக ராணி (Snake Queen) பற்றி காணப்படுவதையும், நல்லோர் அவையில் புகுந்த நாகத்தைக்கூட இந்துக்கள் கொல்ல மாட்டார்கள் என்ற இலக்கியக் குறிப்புகளையும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளில் வடித்தேன். இப்போது மேலும் ஒரு புத்தகததைப் படித்தேன். சுவையான குறிப்புகளைச் சுவைத்தேன்; அவைகளை உங்களுடன் பகிர்வேன்.

காஷ்மீரின் வரலாற்றைக் கூறும் ராஜ தரங்கிணி என்ற நூலை கல்ஹணர் என்ற பிராஹ்மணன் 1000 ஆண்டுகளுக்கு முன் ஸம்ஸ்க்ருதத்தில் எழுதினான். அவனுக்கு முன்பாக நீல மத புராணம் என்ற புஸ்தகத்தில் கூறிய பல விஷயங்களை அவனும் குறிப்பிட்டுள்ளான்.

 

காஷ்மீருக்கும் நாகர்களுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. இங்கே நாகர் என்பதை மலை ஜாதி மக்கள் என்று கொள்ளாமல் உண்மையான பாம்பு என்றே கொண்டு எழுதி இருப்பதால் இன்னும் சுவை கூடுகிறது. எததனையோ நாகர் பெயர்களை மஹாபாரதம் முதலிய நூல்கள் குறிப்பிட்டாலும் அதிகமான நாகர் பெயர்களின் பட்டியல் நீலமத புராணத்தில்தான் இருக்கிறது. 527 நாகர்களின் பெயர்கள் இதில் உள்ளன!

 

அபுல் பாஸல் என்பவர் மொகலாய மன்னன் அக்பரின் சபையில் பிரதம மந்திரி. அவர் எழுதிய நூலிலும் காஷ்மீரில் நாகர்கள் பற்றிய நம்பிக்கைககள், கதைகளைத் தொகுத்து நமக்கு அளித்துள்ளார்.

 

தென்னாட்டில் நாகர் சிலை இல்லாத கோவில்களே இல்லை என்றே சொல்லலாம்

 

கிரேக்க நாட்டில் பாம்பு வழிபாடு

நம்முடைய புராண விஷயங்களைக் காப்பியடித்து உருத்தெரியாமல் திரித்தவர்கள் கிரேக்கர்கள்- கிருஷ்ணர் செய்த பல லீலைகளை ஹெர்குலீஸ் செய்ததாக கிரேக்கர் சொல்லுவர். கிருஷ்ணன் கொடிய காளீயன் என்ற பாம்பை அடக்கி ஒடுக்கியது போல ஹெர்குலீஸும் ஒரு பாம்பை த்வம்சம் செய்ததாகக் கதை. அபல்லோ (Apollo Vs Python) என்னும் தெய்வம் பைதானுடன் (மலைப்   பாம்பு) சண்டை இட்டதாக இன்னும் ஒரு கதை.

 

கிரேக்க நாட்டில் மலைக் குகைகள், பாதாள அறைகள் ஆகியவற்றில் இருந்து ஆரூடம் சொல்லுவோர் மீது கிரேக்கர்களுக்கு அதிக நம்பிக்கை உண்டு.

 

கடமஸ் (Cadmus) என்பவன், அவனது ஆட்களைக் கொன்ற பாம்பை சண்டை போட்டுக் கொன்றதாகவும் புராணக் கதைகள் பேசுகின்றன.

 

எகிட்னா (Echidna) என்ற ஸர்ப்ப தேவதையைப் புணர்ந்து நாக வம்ஸத்தை ஹெர்குலீஸ் தோற்றுவித்தாராம்.அவர்கள் (Scythians) சிதியர், சகரர் எனப்படுவர்.

 

கிரேக்க நாட்டில் டெல்பி, த்ரோபோனியஸ் ஆகிய இடங்களில் குறி சொல்லும் அறைகளில் பாம்புகள் வைக்கப்பட்டிருந்தன எபிடேரஸ் என்ற இடத்தில் இருந்த பாம்புகளுக்கு இரண்டாம் நூற்றாண்டு வரை பால் வார்க்கப்பட்டது. புனித இடங்களைப் பாது காக்கவும், குறிகள் சொல்லவும், கடவுளைக் குறிக்கவும், நோய்களைத் தீர்க்கவும் பாம்புகள் உதவுவதாக கிரேக்கர் கதைகள் உள்ளன.

 

அலெக்ஸாண்டரின் தாய் ஒலிம்பியாஸ் அவரது வீட்டில் ஒரு பாம்பு வளர்த்ததாக ப்ளூடார்ச் (Plutarch) எழுதியுள்ளார். அலெக்ஸாண்டர் ஒரு நாக கன்னிகைக்குப் பிறந்ததாக லூஸியன்(Lucian)  எழுதி வைத்தார். ஒரு வேளை நாகர் வம்ஸத்தில் பிறந்த பெண், அவருடைய தாயார் போலும்!

 

 

இதாலியில் இந்தியப் பாம்புகள் இறக்குமதி

ரோமாபுரியை ஆண்ட டைபீரியஸ் Tiberius (கி.பி.14-37) ஒரு செல்லப் பிராணியாக ஒரு நாகத்தை வளர்த்து வந்தார். ஒரு நாள் எறும்புகள் அதைக் கடித்துக் குதறி இருந்ததைக் கண்டார். பின்னர் இந்தியாவில் இருந்து ஒரு நாகப் பாம்பை இறக்குமதி செய்து ஏதென்ஸ் நகரத்தில் ஜூபிடர் ஒலிம்பியஸ் கோவிலில் வைத்தார். பாம்பைக் கொன்ற பாபத்துக்குப் பரிகாரம் செய்ய இப்படி காணிக்கை கொடுத்தார் போலும்!

 

மினர்வா (Minerva) என்னும் தேவதை லவாகூன் என்பவரைக் கொல்ல இரண்டு பாம்புகளை அனுப்பியதாக ரோமாபுரி வரலாறு சொல்லும்.

 

அந்த இடம் புனிதமானது என்பதற்காக சுவரில் இரண்டு பாம்பு ஓவியங்கள் வரையப்பட்டனவாம்.

 

கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிபியோ ஆப்ரிகானஸ் (Scipio Africanus) என்ற ரோமாபுரி தளபதி ஒர் நாகத்தால் (நாக கன்னிகை) வளர்க்கப்பட்டாராம்.

 

அகஸ்டஸ் சீசரின் தாயார் அடியா ( Atia), அகஸ்டஸை ஒரு நாகத்திடம் பெற்றுக் கொண்டதாக நம்பினார். இந்தக் கதைகளில் சம்பந்தப்பட்டவர் எல்லாம் நாக வம்ச மனிதர்களாக இருக்க வேண்டும்.

 

கிரேக்க ரோமானிய நாணயங்களில் பாம்பு உருவங்கள் இருப்பது 2000 ஆண்டுக்கு முந்தைய நம்பிக்கைகளை உறுதி செய்கின்றன.

அழகிகளும் நாகங்களும்!

 

ஆர்கிவ் ஜோனோ (Argive Juno) கோவில் அருகில் ஒரு  இருண்ட பெரிய குகையில் ஒரு பாம்பு வசித்ததாக ஏலியன் (Aelian) எழுதுகிறார். லாடியத்தில் (Latium) வசித்த கன்னிப் பெண்கள் உண்மையில் கற்புக்கரசிகளா என்று கண்டறிய ஆண்டுதோறும் இந்தக் குகைக்குள் கன்னிப் பெண்கள் அனுப்பப்படுவராம். அவர்கள் கொடுக்கும் உணவுகளை அந்த நாகம் ஏற்றால் அவர்கள் கன்னித் தன்மை அழியாதவர் என்பது உறுதி ப்படுவதோடு அவ்வாண்டு அமோக விளைச்சல் கிடைக்குமாம். இதே போல் எபிரஸ் (Epirus) என்னும் இடத்தில் நிறைய பாம்புகள் இருந்தனவாம். அங்கு கன்னிப் பெண்கள் நிர்வாண நிலையில் உணவுகளைக் கொண்டு செல்வராம். பாம்புகள் சாப்பிட்டால் நல்ல அறுவடை நடக்குமாம்.

இப்படிப் பாம்புகள் பற்றிப் பல நம்பிக்கைகள் இருந்ததை மேற்குறித்த   கிரேக்க ரோமானிய எழுத்தர்கள் மூலமும் ஆசிரியர்கள் மூலமும் அறிகிறோம்.

 

My Old Research Articles

நாகர் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/நாகர்/

யாதவர்கள் மீதும் பாண்டவர்கள் மீதும் கோபம் கொண்டநாகர்கள் பழிவாங்குவதற்காக ஒரு தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தனர். மய தானவன் என்ற ஒரு நாகர்தலைவன் மட்டும் அர்ஜுனன் கிருஷ்ணர் தரப்பில் இருந்தான்.அவனைக் கானகத் தீயிலிருந்து மீட்டதால்பாண்டவர்களுக்கு …

நாகர் கதை | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/நாகர்-கதை/

அர்ஜுனனும் கிருஷ்ணனும் பழங்குடி நாகர்கள் எதிர்ப்பையும் மீறி காண்டவ வனத்தை எரித்ததையும் இதனால் நாகர்கள் –பாண்டவர்கள் ஜன்மப் பகை பல தலைமுறைகளுக்குப் பரவி பரீட்சித் கொல்லப்படவும், ஒரு நாகா இன ஆள் (பாம்பு) அவரைக் கொன்றதால் ஜனமேஜயன் சர்ப்ப யக்ஞம் …

 

Tamil | Tamil and Vedas | Page 64

https://tamilandvedas.com/category/tamil/…:/tamilandvedas…/64/ –

8 Dec 2012 – மாயாக்கள் சொன்னதன் உண்மை என்ன? மாயா இன மக்கள் இந்தியாவிலிருந்து சென்ற நாகர்கள் என்றும்பாண்டவர்கள்– நாகா இன மோதல் அதிகரித்து ஜனமேஜயனின் சர்ப்ப யாகத்தில் (அதாவது நாகர்கள்படுகொலை) முடிவடைந்தது என்றும் நான் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளில் …

நாக ராணி | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/நாக-ராணி/

Minoan Snake Goddess 1600 BC. சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரையில் ஒரு கடவுளுக்கு இரு புறமும் இரண்டு நாகங்கள் படம் எடுத்த நிலையில் இருக்கின்றன. வேதங்களில் நாகராணியைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன. இப்போது நடை பெறும் வேத ஆராய்ச்சிகள் பல புதிய உண்மைகளைத் …

 

 

நான் கண்ட சுனாமி அதிசயம் ! அலைகளில் …

swamiindology.blogspot.com/2016/04/post-no-2722.html

13 Apr 2016 – (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). sesha, pullaboothangudi. Wave. பாம்புத் தலை வடிவில் பேரலைகள்!! நான் வாகன ஆராய்ச்சி செய்பவன். பல வாகன ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி, இதே பிளாக்கில் வெளியிட்டிருக்கிறேன். அப்படி நாக வாஹன படம் ஒன்றை எனது பைலில் ‘சேவ்’ …

 

Picture from Meera Rai post

Serpent Queen:Indus Valley to Sabarimalai | Tamil and Vedas

Serpent Queen:Indus Valley to Sabarimalai

17 Jun 2012 – British archaeologist Arthur Evans excavated at the palace of Knossos in Crete and revealed to the world the fascinating details of a new civilization that existed between 2700 BC and 1500 BC coinciding with theIndus Valley Civilization. The famous serpent queen figure is of a priestess holding two snakes …

 

 

 

Snakes and Snake Bites in Mahabharata! | Swami’s Indology Blog

swamiindology.blogspot.com/2015/03/snakes-and-snake-bites-in-mahabharata.html

10 Mar 2015 – The stories in Hindu scriptures are real life stories. They are not concocted. The best examples are stories of snake bites. From the story of Parikshit to down south Tamil stories of Periya Purana and Tiruvilaiyadal Purana, we hear about several deaths due to snake bites. In some stories gods or saints came ..

 

included the Olmec, the Mixtec, the Toltec, the Aztec, and the Maya.

snake miracle | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/snake-miracle/

(for old articles go to tamilandvedas.com ORswamiindology.blogspot.com). sesha … Though there is no religion or culture without a snake in it, Hindus are the only community who worship snakes from the Vedic days until today. There are millions of … All the Hindu gods are linked with a snake in one way or another. All the .

 

Are Mayas, Indian Nagas? | Tamil and Vedas

Are Mayas, Indian Nagas?

28 Apr 2012 – Maya calendar begins on 11th August 3114 BC. Indiancalendar Kaliyuga begins in 3102 BC. But Hindu mythology is very clear about their existence long before Kali yuga. Kaliyuga is the last of the four yugas. But Mayas are silent about their existence before this date 3114 BC. The amazing co incidence …

Amazing Similarities between Mayas and Hindu Nagas | Tamil and …

https://tamilandvedas.com/…/amazing-similarities-between-mayas-and-hindu-nagas/

28 Apr 2012 – Amazing Similarities between Mayas and Hindu NagasAmazing Similarities between Mayas and Hindu Nagas ( The first part of this article is Are Mayas, Indian Nagas?) 1. Strange co incidence: Kali Yuga 3102 BC and Maya Yuga beginning 3114 BC 2. Maya appearance:Maya people of Central America …

 

Naga Yakshi | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/naga-yakshi/

We have Nagapanchami celebrations celebrated throughout India where live snakes are worshipped. Hindus respect Nature and Environment and use the natural resorces to the minimum. Snake Goddesses such as Manasa Devi and Naga Yakshi are worshipped in India. The Vedas has an authoress named as Serpent …

Gondwana | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/gondwana/

They celebrate Hindu festivals such as Dasara and Naga Panchami. Like any other village community they have their own stories for everything. They are well versed in arts and building. They have divided themselves into four different castes lie the four divisions of work in ancient Hindu society. They form the biggest tribe …

 

–சுபம்–

 

பெரியோருக்கு வந்தனம் சொன்னால் என்ன கிடைக்கும்? மநு பதில் (Post No.4871)

பெரியோருக்கு வந்தனம் சொன்னால் என்ன கிடைக்கும்? மநு பதில் (Post No.4871)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 1 April 2018

 

Time uploaded in London –  15-06 (British Summer Time)

 

Post No. 4871

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

மநு நீதி நூல்- Part 14 (Post No 4871)

 

குருவின் ஆசனத்திலும் படுக்கவும் உட்காரவும்  கூடாது; ஒரு மாணவன் தனது படுக்கையில் படுத்திருக்கும் போது அல்லது  உட்கர்ந்திருக்கும்போது குரு வந்தால் எழுந்து நின்று வந்தனம் (வணக்கம்) செய்ய வேண்டும். 2-117 (235)

 

வயதிலும் கல்வியிலும் பெரியவர்களானவர்கள் வரும்போது ஒருவன் உடகார்ந்திருந்தால் அவனுடைய பிராண வாயு மேலெழுந்து வெளியே செல்ல முற்படும்; எழுந்து நின்றால் அது சம நிலையை அடையும். 2-118 (236)

 

 

நான்கு கிடைக்கும்!

 

பெரியார்களை நாள்தோறும் வந்தனம் செய்கிறவனுக்கும் தரிசிக்கிறவனுக்கும் நான்கு கிடைக்கும்:- அவையாவன- ஆயுள், கல்வி, புகழ்/கீர்த்தி, பலம் 2-119 (237)

 

பெரியோர்களுக்கு வணக்கம் சொல்லுகையில் தன்னுடைய பெயர், குலம், கோத்திரம், தான் படிக்கும் வேதம், ஷாகை ஆகியவற்றைச் சொல்லி அபிவாதனம் செய்ய வேண்டும்.

அபிவாதனம்– மிகவும் அடக்கத்துடன் குனிந்து எதிரேயுள்ள பெரியோரின் காலைத் தொட்டுச் சொல்லுதல்

 

யாருக்கு ஆசீர்வாதம் செய்யத் தெரியாதோ அவர்களுக்கும் பெண்களுக்கும் வணக்கம் சொல்லுகையில் அபிவாதயே மந்திரம் சொல்லத் தேவை இல்லை. தன்னுடைய பெயரை மட்டும் சொன்னால் போதும்

 

பெயரைச் சொன்ன பின்னர் ‘போ’ (தாங்கள் = தங்களை வணங்குகிறேன்) என்று சொல்லி முடிக்க வேண்டும்.அந்த சப்தமானது பெயர்களின் ஸ்வரூபம் (நிறைவு பெற்றது) என்று ரிஷிகளால் சொல்லப்படுகிறது.

 

 

சிறியோர்கள் வந்தனம் சொல்லும்போது பெரியோர்கள் “நீ நீண்டகாலம் வாழ்வாயாக” என்று வாழ்த்த வேண்டும்; சம்ஸ்க்ருதத்தில் ஆயுஷ்மான்  பவ,

என்று வந்தனம் சொன்னவர் பெயரை நெடில் எழுத்தில் சொல்ல வேண்டும் (உ.ம். ஆயுஷ்மான்  பவ ஸ்வாமிநாதா, கார்த்திகேயா)

 

இவ்வாறு எந்தப் பிராமணனுக்கு ஆஸீர்வாதம் செய்யத் தெரியவில்லையோ அவனுக்கு வந்தனம் செய்யக்கூடாது- அவன் சூத்திரனுக்குச் சமம்.

 

இவ்வாறு வணக்கம் செய்பவனை – பிராமணனாக இருந்தால் குசலம் (நலமாக இருக்கிறீர்களா?) விசாரிக்க வேண்டும்; க்ஷத்ரியனாக இருந்தால் நோயற்ற வாழ்வு வாழ்கிறீர்களா? எனக் கேட்க வேண்டும்; வைஸ்யனாக இருந்தால் நல்ல பணம் வருகிறதா? என்றும் சூத்திரனாக இருந்தால் சுகமாக இருக்கிறீர்களா? என்றும் கேட்கவேண்டும்.

யாகம் செய்வதற்காக தீக்ஷை அணிந்தவன் – வயதில் சிறியவனாக இருந்தாலும் அவரைப் பெயரைச் சொல்லி அழைக்கக்கூடாது. ‘போ’, ‘பவான்’ (தாங்கள்) என்றே அழைக்க வேண்டும்

 

வயதான மாதர்கள் பிறருடைய மனைவியாகவோ, உறவினர் அல்லாதவர்களாகவோ இருந்தால் ‘பவதி’, ‘சுபகே’, ‘பகினி’ என்று அழைக்க வேண்டும் அதாவது அவர்களை அக்கா, அம்மா, அம்மணி என்ற மரியாதையுடன் நடத்துவதாகும்.

 

அம்மான், சிற்றப்பன், பெரியப்பன், மாமனார், யாக புரோகிதர்கள், குரு  வந்தால் எழுந்து நின்று  அபிவாதனம் செய்து மரியாதை செய்தல் வேண்டும்.

அண்ணன் மனைவியை நாள் தோறும் வணங்க வேண்டும். ஞாதி- சம்பந்திகளின் மனைவிமார்களை ஊருக்குப் போய் வந்தபோது மட்டும் வணங்க வேண்டும்- 132

பெரிய அத்தை, தாயுடன் பிறந்த பெரிய தாய், சிறிய தாய்- ஆகியோரிடத்தில் தாயைப் போல மரியாதை காட்டவேண்டும்; ஆனால் தாயார், இவர்கள் எல்லோரையும் காட்டிலும் உயர்ந்தவள்

யாரை நண்பன் ஆக்கலாம்?

ஓர் பட்டணம், ஊரில் வசிப்பவன் தனக்கு பத்து வயது மூத்தவனோடும், சங்கீதம் முதலிய வித்தைகள் தெரிந்தவன் ஆனால் ஐந்து வயது மூத்தவனோடும், வேதம் தெரிந்திருந்தால் மூன்று வயது மூத்தவனோடும், ஞாதி ஆகியோருடன் கொஞ்சம் வயது வயது மூத்தவனோடும் சிநேகம் செய்யலாம் (நட்புறவு கொள்ள வேண்டும்).

 

பத்து வயதுள்ள பிராமணனையும் 100 வயதுள்ள க்ஷத்ரியனையும் தகப்பன்- பிள்ளயாக கவனிக்க வேண்டியது. அதாவது பிராமணனை தகப்பன் மரியாதையுடனும் க்ஷத்ரியனை புத்திரன் மரியாதையுடனும் நடத்த வேண்டும்.

 

பூஜிக்கத்தக்க 5 அம்சங்கள்

நியாயமாய்த் தேடிய பொருள், சிற்றப்பன் முதலிய உறவினர்கள்,  உயர்ந்த வயது, நல்ல ஒழுக்கம், கல்வி ஆகிய ஐந்தும் ஒருவனை பூஜிப்பதற்குரிய /மதிப்பதற்குரிய ஐந்து அம்சங்கள் –  வரிசைக் கிரமத்தில் பார்த்தால் இவை ஒன்றைக் காட்டிலும் ஒன்று உயர்ந்தது. இந்த ஐந்து அம்சங்/தகுதி/களில் ஏதேனும் இரண்டு, மூன்று அம்சங்கள்/தகுதிகள் உடையோரை ஒன்று மட்டுமே உடையவர்கள் பூஜிக்க வேண்டும்; 90 வயதுக்கு மேற்பட்ட சூத்திரர்களுக்கு எல்லோரும் மரியாதை செய்ய வேண்டும்.

 

90 வயதுக்கு மேற்பட்டவன், நோயாளி, சுமையாளி, மாதர்கள், அநுஷ்டானமுள்ள பிராமணர்கள்,அரசன், கலியானம் செய்யப்போகும் மாப்பிள்ளை ஆகியோருக்கு வண்டி வாஹனங்களில் வருவோர் வழிவிட வேண்டும்.

 

இவர்களில் பலரும் வந்தால் அனுஷ்டானமுள்ள பிராமணனுக்கும் மன்னனுக்கும் முதலில் வழிவிட வேண்டும். பிராமணனும் அரசனும் வந்தால் பிராமணனுக்கே முதலில் வழிவிடவேண்டும்.

 

யார் ஆச்சார்யன்?

எவன் உபநயனம் செய்வித்து வேத, யாக மந்திரங்களையும், வேதாந்தங்களையும் ஓதுவிக்கிறானோ, அவனே ஆச்சார்ன் எனப்படுவார்.

எவன் கர்ப்பதானம் முதலிய கிரியைகளைச் செய்வித்து ஜீவனோபாயத்தைக் கற்பிக்கிறானோ அவன் குரு எனப்படுவான்.

எவன் அக்னிசந்தானம், அக்னிஷ்டோமம் முதலிய யாகங்களைச் செய்விக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு அதனைச்

செய்விக்கிறானோ அவனை ரித்விக் என்று சொல்லுவார்கள்.

 

எவன் ஸ்வரத்தோடு கூடிய வேத ஒலியினால் தன் காதுகளை நிறைவிக்கின்றானோ அவன் தாய், தந்தைக்குச் சமமானவன்; அவனுக்கு ஒருக்காலும் துரோகம் செய்யக் கூடாது.

 

உபத்தியாயனைவிட ஆச்சார்யன் பத்து மடங்கு உயர்ந்தவன். ஆச்சார்யனைவிட உபநயனம் முதலிய சடங்குகளைச் செய்வித்த தந்தை நூறு மடங்கு  உயர்ந்தவன்.. அவரைவிட ஒருவனுடைய தாய் ஆயிரம் மடங்கு உயர்ந்தவள்.

 

பெற்ற தகப்பனை விட இரண்டாவது ஜன்மம் உண்டாக்கும் பிரம்மோபதேசம் செய்த ஆச்சார்யன் உயர்ந்தவன்; அவ்விரண்டாவது பிறப்பானது இம்மையிலும் மறுமையிலும் அழியாதது.

 

மாதாவும் பிதாவும் புணர்ந்து அதன் காரணமாக யோனி வழியாகப் பிறக்கும் உடல் மிருகங்களைப் போல உறுப்புகளை மட்டும் உண்டாக்கும் (2-147)

 

எனது கருத்து

 

மேற்கூறிய ஸ்லோகங்கள் பற்றி எனது கருத்துகள்:

 

வயதானோருக்கு வந்தனம் சொன்னால் புகழ், வலிமை, ஆயுள், கல்வி கிடைக்கும் என்ற ஸ்லோகமும் ஒருவனைப் பூஜிக்க அடிப்படையான ஐந்து அம்சங்களை விளக்கும் ஸ்லோகமும் அருமையானவை

 

.தமிழ்நாட்டிலும் மஹாராஷ்டிரத்திலும் தோன்றிய அரசியல்வாதிகள் பிராமணர் அல்லாதோர் அனைவரையும் சூத்திரர் ஆக்கிவிட்டார்கள். உண்மையில் அந்த நாலாவது வருணத்தார் மிகவும் குறைவே.

 

அவர்களில் மிகவும் வயதானோரை மற்ற மூன்று வருணத்தாரும் மதிக்க வேண்டும் என்ற ஸ்லோகம் குலத்தால் ஒருவர் தாழ்ச்சி இல்லை என்பதைக் காட்டுகிறது.

 

ஒவ்வொருவரையும் நலம் விசாரிப்பது எப்படி என்ற ஸ்லோகத்தில் சூத்திரனை, சுகமாக இருக்கிறீர்களா? என்று மரியாதையுடன் விசாரிக்க வேண்டும் என்று மநு விதிக்கிறார். ஆகையால் எவ்வளவு சம நிலையுடன் அணுகப்படுகிறது என்பது புலப்படும். விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்லோகத்திலும் “சூத்ர சுகம் அவப்னுயாத்” என்று வேண்டப்படுகிறது. எங்குமே அவனுக்கு எதிராக நெகட்டிவ் – வசவு வாக்கியம் கிடையாது.

 

வேதப் படிப்பு முதலியவற்றில் அவன் தொடர்பு இருக்கக் கூடாது என்ற கடுமையான வாசகங்களைக் காண்கிறோம்; அவர்கள் ஏதோ வேதம் கற்க ஆர்வத்தோடு ஓடி வந்த போது பிராஹ்மணர்கள் அதைத் தடுத்துவிட்டார்கள் என்று எண்ணுவது நகைப்புக்குரிய விஷயமாகும்; பிராஹ்மணர்களே வேதம் கற்பதை நிறுத்திவிட்ட இன்றை நிலையைப் பார்க்கையில் இது இன்னும் நன்றாக விளங்கும்.

ஜாதி என்பது உலகம் முழுதும் உளது. இந்தியாவில் அரசியல்வாதிகள், தங்கள் குடும்பத்தினரை மந்திரி பதவியில் அமர்த்துகின்றனர்; கட்சிப்பதவிகளில் நியமிக்கின்றனர். கீழ்ஜாதி மக்கள் தங்களி மேலும் கீழ் ஜாதிகளாக அறிவித்து எப்போதும் வேலை, கல்வி நிறுவனச் சலௌகை தரவேண்டும் என்கின்றனர். அவர்கள் செல்வந்தர்களாக இருந்தும் ஜாதி ஒதுக்கீட்டு ம்சலுகைகளைப் பெறுவதிலிருந்து அவர்கள் செய்யும் மோசடி அம்பலம் ஏற்கிறது. பிரிட்டனிலும் ஆதிகள் உண்டு; அரச ஜாதியினரே அரசனாக முடியும்; பிரபுக்களின் வம்சாவளியினரே பிரபு வாக முடியும்; இவை அனைத்தும் பிறப்பு மூலமே கிடைக்கின்றன. நடிக,நடிகையர் மகன்கள், மனிவிகள் மட்டும் ஏதாவது ஒரு சினிமாத் துறயில் புகுந்து விடுகின்றானர்.

 

 

ஆயிரம் தகப்பன் = ஒரு தாய்

 

பெண்ணின் மதிப்பை மநு தொடர்ந்து போற்றி வருகிறார். இங்கே ஒரு ஸ்லோகத்தில் ஒரு தந்தையைவிட தாய் ஆயிரம் மடங்கு உயர்ந்தவள் என்ற ஸ்லோகம் மிகவும் அருமையானது.

 

வண்டிகள் போக்குவரத்தில் யார், யாருக்கு வழிவிட வேண்டும் என்ற விதிமுறை போன்றவற்றைப் பார்க்கையில் , இக்காலத்தில் உள்ள ப்ரயாரிட்டி PRIORITY, RIGHT OF WAY ரைட் ஆf வே நினைவுக்கு வருகிறது. மநு இந்தப் போக்குவரத்து பற்றி கூட பேசுகிறார்

அண்ணன், மனைவி முதலியோருக்குக் கூட மதிப்பும் மரியாதையும் தரப்படுகிறது.

 

உபாத்யாயன், ஆச்சார்யன், குரு, ரித்விக் முதலிய வருணனைகள் இக்காலத்துக்குத் தேவை இல்லாதாகிவிட்டது..

 

தொடரும்………………….

 

 

 

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -3 (Post.4864)

Date: MARCH 30, 2018

 

 

Time uploaded in London- 5-49 am

 

 

Compiled by S NAGARAJAN

 

 

Post No. 4864

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சம்ஸ்கிருதச் சிறப்பு :

நீங்கள் படிப்பது அயர்லாந்து சம்ஸ்கிருத ஆசிரியர் ரட்கெர் கோர்டன்ஹார்ஸ்ட் நிகழ்த்திய உரை!

 

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -3

 

ச.நாகராஜன்

 

ஆங்கிலத்தை எடுத்துக் கொள்வோம். உங்கள் குழந்தை அதை எப்படி கற்க வேண்டி இருக்கிறது என்று பாருங்கள்!

ROUGH என்பதை எப்படிச் சொல்ல வேண்டும்? அதே சமயம் DOUGH என்பதை எப்படிச் சொல்ல வேண்டும்? WOMEN என்ற வார்த்தையில் உள்ள ‘o’  ஏன் ‘e’ போல ஒலிக்க வேண்டும்? SPECIAL என்ற வார்த்தையில் வரும் ‘ci’ ஏன் CINEMA என்ற வார்த்தையில் வரும் ‘ci’- ஐ விட மாறுபட்டு ஒலிக்க வேண்டும்?

ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்? ‘அது அப்படித்தான்’! அதைக் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்கள்! அவர்களுக்கு தர்க்கரீதியாகக் காரணம் சொல்லத் தெரியவில்லை!

 

குழந்தைகளுக்கு அது ஒரு ‘hit and miss’ விஷயம் போல விசித்திரமாக இருக்கிறது! இது குழந்தைக்கு என்ன ஒரு நம்பிக்கையைத் தரும்?!

இப்போது விதிகள் உள்ள மொழியைப் பாருங்கள்.

 

எதையுமே ‘அது அப்படித்தான்’ என்று சொல்ல இடமில்லாமல் விதி முறை மாறாமல் இருக்கிறது.

அருமையான நேர்த்தியான தத்துவக் கருத்துக்கள் எளிய ‘அகர வரிசை’ சரியாக அமைக்கப்பட்டிருப்பதால் நன்கு உருவாகி கற்க முடிவதைப் பாருங்கள்!

சம்ஸ்கிருதத்துடனான தொடர்பினால் மற்றவர்கள் அப்படி நல்ல குணாதிசயங்களுடன் வளர்வதை நான் நேரடியாகக் கண்டிருக்கிறேன்.

பல வருடங்களாக சம்ஸ்கிருதத்தை ‘குறைந்த பட்ச புரிதலுடன்’ ‘அதிக பட்ச உற்சாகத்துடன்’ நாங்கள் கற்பித்து வந்துள்ளோம்.John Scttus School – இல் உள்ள குழந்தைகளுக்கும், தத்துவப் பள்ளியில் – School of Philosophy – இல் உள்ள பெரியவர்களுக்கும் நாங்கள் சம்ஸ்கிருதம் கற்பித்து வந்துள்ளோம்.

ஒருவேளை நாங்கள் ஏராளமானவர்களை சம்ஸ்கிருதம் படிக்க ஊக்குவிக்கவில்லையோ என்னவோ!

ஆகவே சம்ஸ்கிருதம் எங்கு தோன்றியதோ அங்கு செல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

சம்ஸ்கிருத ஆசிரியர்கள் சம்ஸ்கிருதத்திலேயே பேசுபவர்களாக இருக்கும் இடத்தில் வாழ வேண்டும்.

 

பெங்களூர் அருகில் உள்ள ‘சம்ஸ்கிருத பாரதி’ -இல் நான் மூன்று கோடைக் காலங்களைக் கழித்தேன்.

அது என்னை இன்னும் தீவிரமாக சம்ஸ்கிருதத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆசையைத் தோற்றுவித்தது.

ஆகவே பாரம்பரியமான ஒரு குருகுலத்திற்கு நான் சென்றேன்.

அதாவது அங்கேயே தங்கி இருக்க வேண்டும்.

அரிசி சாதம் சாப்பிட வேண்டும்.

ஏராளமான பவர் கட்டுகளை – மின் தடைகளை அனுபவிக்க வேண்டும்.

நீர் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டும்.

 

ஆனால் டிசம்பர் 2009இல் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். சீனியர் ஸ்கூலில் நான் வகித்து வந்த வைஸ்-பிரின்ஸிபால் வேலையை விட்டு விட்டு சம்ஸ்கிருதத்தை கற்பிப்பதிலேயே என் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

இன்னும் பல பேர்கள் நான் வகித்து வந்த வைஸ்-பிரின்ஸிபால் பதவியை வகிக்க தகுதியானவ்ர்களாக இருப்பார்கள். ஆனால் சம்ஸ்கிருதத்தை அயர்லாந்தில் போதிக்க வேறு யாரால் முடியும்?

ஆகவே இதை ஒரு பதவி உயர்வாகவே – ப்ரமோஷனாகவே – நான்  கருதுகிறேன்.

வயது ஆக ஆக என் உடல் தளர்ந்தாலும் கூட சம்ஸ்கிருதத்தினால் என் மனம் முன்னேறும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

சம்ஸ்கிருதம் என்பது ஒரு முழு நேர ஆசிரியருடன் ஒப்பிடப்படக் கூடியது.

24/7 என்று முழு நேரமாக அது இருக்கிறது. மற்ற மொழிகள் எல்லாம் பகுதி நேர – Part time –  மொழியாகவே இருக்கின்றன!

சம்ஸ்கிருதம் கற்பதன் விளைவு என்னவெனில் அது உண்மையான நம்பிக்கையை என்னுள் ஏற்படுத்துகிறது.

இரண்டாவதாக எனது வார்த்தைகளை சீர் தூக்கிப் பார்த்து துல்லியமாக சரியாகப் பேச வேண்டும் என்று அது எனக்கு உணர்த்துகிறது.

குழப்பமின்றி நான் சொல்ல வருவதைச் சொல்ல அது எனக்குக் கற்பிக்கிறது.

ஆகவே எதையும் என்னால் சுருக்கமாகப் பேச முடிகிறது.

எனது கவன சக்தி சந்தேகமின்ரி அதிகரித்துள்ளது!

கேட்பதைத் தக்க வைக்கும் சக்தியும் அதிகரித்துள்ளது!

 

எப்படி சம்ஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது?

இந்தியாவில் பல இடங்களில் முறையாக அது கற்பிக்கப்படவில்ல என்பது எனக்கு ஆச்சரியமூட்டும் ஒரு விஷயம்!

9 முதல் 11 வயது முடிய அது மாணவர்களுக்கு அங்கு கற்பிக்கப்படுகிறது. ஆனால் மோசமாகக் கற்பிக்கப்படுவதால் அத்துடன் அதை விட்டு விடுகிறார்கள்.

சில விடாக்கண்டர்கள் மட்டும் அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல ஆசைப்படுகிறார்கள்.

இது ஏன்?

 

ஏனெனில் மேலை நாடுகளைக் காப்பி அடிக்க வேண்டும் என்ற ஒரு வெறி அங்கு உள்ளது.

காலனி ஆதிக்கத்தால் அவர்களின் பாரம்பரியம் திட்டமிட்டு வேருடன் அழிக்கப்பட்டுள்ளது.

கிழக்கத்திய ஞானத்தையும் இலக்கணத்தையும் அறிய பாரம்பரிய மிக்க ஒரு குருகுலத்தில் நான் சேர்ந்தேன்.

சம்ஸ்கிருதம் பேசுவதற்கோவெனில் நவீன அணுகு முறை அங்கு இல்லை என்பதை உணர்ந்தேன்.

அப்போது தான் புதுவையில் உள்ள அரவிந்த ஆஸ்ரமத்தில் இண்டர்நேஷனல் ஸ்கூலில் ஒரு ஆசிரியரைக் கண்டேன்.

அவர் பெயர் நரேந்திரா.

அவர் இலக்கணத்தைக் கற்பிக்க ஒரு புதிய எளிய வழி முறையைக் கண்டுள்ளார்.

அது இலக்கணம் படிக்கிறோம் என்ற உணர்வையே உங்களிடம் ஏற்படுத்தாது!

ஆனால் அதே சமயம் இலக்கணத்தை பயிற்சியாளர்களுக்குக் குறைத்துக் கற்பித்து விடாது. ஆகவே உங்களுக்கு இலக்கணத்தில் பகுதி அறிவு தான் ஏற்படும் என்ற நிலையும் ஏற்படாது.

சில சம்ஸ்கிருத பேச்சு வழக்கு வகுப்புகளிலும் நான் சேர்ந்தேன்.

இவை அனைத்தும் சம்ஸ்கிருதத்துடனான பரிச்சயத்தை எனக்கு அதிகப்படுத்தியது!

– தொடரும்

(அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடர் முடியும்)

 

 

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -3 / A

 

ச.நாகராஜன்

 

Rutger Kortenhorst ஆங்கித்தில் உள்ள முரண்பாடுகள் ஒரு சிறிதை மட்டும் தனது உரையில் கோடி காட்டி விட்டுச் சென்று விட்டார்.

இது தொடர்பாக எனது தொகுப்பில் உள்ள ஒரு சிறு கவிதையை இங்கு தருகிறேன்.

ஆங்கித்தில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டும் சுவையான நையாண்டிக் கவிதை இது:-

WHY ENGLISH IS SO HARD

 

We’ll begin with a box, and the plural boxes,

But the plural of ox becomes oxen, not oxes

One fowl is goose, but two are called geese,

Yet the plural of moose should never be meese.

You may find a lone mouse or a nest full of mice

Yet the plural of house is houses, not hice.

 

If the plural of man is always called men,

Why shouldn’t the plural of pan be called pen?

If I speak of my foot and show you my feet,

And I give you a boot, would a pair be called beet?

If one is a tooth and a whole set are teeth,

Why shouldn’t the plural of booth be called beeth?

 

Then one may be that, and three would be those,

Yet hat in the plural would never be hose,

And the plural of cat is cats, not cose,

We speak of a brother and also of brethren

But though we say mother, we never say methern,

Then the masculine pronoun are he, his and him,

But imagine the feminine she, shis and shim!

 

– ANONYMOUS

***

 

 

அன்பிற்கும் அவதி உண்டோ? – ராவணன் (Post No.4863)

WRITTEN by London Swaminathan 

 

Date: 29 MARCH 2018

 

Time uploaded in London –  20-04 (British Summer Time)

 

Post No. 4863

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’ என்றான் தெய்வப் புலவன் வள்ளுவன். தமிழ் வேதமான திருக்குறளில் அன்புடைமை என்னும் அதிகரத்தில் அருமையான பத்து குறட் பாக்களைக் காண்கிறோம். கம்ப ராமாயணம் முழுதும் நூற்றுக்கணக்கான பாடல்களில் குறளின் எதிரொலியைக் கேட்க முடிகிறது. கம்பன், தெய்வப் புலவனின் திருக்குறளை மனப்பாடமாக அறிந்திருக்க வேண்டும் ஒரு நாளைக்கு 700 கவிகள் பாடிய கம்பனுக்கு முடியாததும் உண்டோ!

 

கம்ப ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் கும்பகர்ணன் வதைப் படலத்தில் ஒரே பாடலில் இரண்டு செய்திகளைத் தருகிறான் கம்பன்

 

1.அன்புக்கு எல்லை இல்லை

2.விநாஸ காலே விபரீத புத்தி (விதி கெட்டால் மதி கெட்டுப் போகும்)

 

ராவணன் முதல் யுத்தத்தில் தோற்றவுடன் மால்யவான், மகோதரன் ஆகிய அமைச்சர்களையும் உறவினர்களையும் கலந்தாலோசிக்கிறான். மாமனான மால்யவான், சீதையை விட்டுவிடு என்கிறான். மகோதரன் என்பவனோ , வா, சண்டக்குப் போவோம், வெற்றி நமதே என்கிறான். அப்போது ராவணன் சொல்வான்—

 

பெறுதியே எவையும் செல்வம் பேர் அறிவாள சீரிற்று

அறிதியே என்பால் வைத்த     அன்பினுக்கு அவதி உண்டோ

உறுதியே சொன்னாய் என்னா உள்ளமும் வேறுபட்டான்

இறுதியே இயைவது ஆனால் இடைஒன்றால் தடைஉண்டாமோ?

 

பொருள்

மகோதரன் சொன்னதைக் கேட்ட ராவணன் அவனை நோக்கி, “சிறந்த அறிவுடையனே! நீ செல்வம் யாவையும் பெறுதற்கு உரியவன்; சிறந்த செயல்களை நீ அறிந்துள்ளாய். நீ என்னிடம் கொண்ட அன்புக்கு அளவு உண்டா?  நீ எனக்கு உறுதி பயக்கும் செயலையே உரைத்தாய்” – என்று அவனைப் பாராட்டி, தனது சோர்வைக் கைவிட்டான். ஒருவனுக்கு அழியும் காலம் வந்துவிட்டால், இடையிலே எது வந்தாலும் அந்த அழிவுக்குத் தடை உண்டாகுமோ? உண்டாகாது.

 

அவதி= எல்லை, அளவு, துயரம்

 

ஆக, கம்பனும் வள்ளுவனும் அன்பினுக்கு எல்லையோ தாழ்ப்பாளோ இல்லை என்கின்றனர்.

மேலும் சில ஒப்பீடுகள்

யாக்கையதியல்பினுமன்பினும் கொண்டுதன்

காட்சிக்கண்ணீர் கரந்தகத் தடக்கி (பெருங்கதி 1-36; 147-8)

 

உன்னுபே ரன்புமிக்கொழுகியொத் தொண்கணீர்

பன்னுதாரைகள் தரத் தொழுதெழும் பரதனை

-கம்ப. எதிர்கோள்.26)

அன்பிற்கும் உண்டோ | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/அன்பிற்கும்-உண்ட…

2 Dec 2016 – அன்பிற்கும் அன்ன தானத்துக்கும் சக்தி உண்டு!அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கண்நீர் பூசல் தரும் (குறள் 71). பொருள்:- அன்பை, பிறர் அறியாமல் மறைத்து வைக்கும் கதவோ தாழ்ப்பாளோ உண்டா? கண்களிலிருந்து பெருகும் கண்ணீரே அந்த அன்பினைப் …

 

வீடு பற்றிய 30 பழமொழிகள் (Post No.4861)

Picture posted by Lalgudi Veda

COMPILED by London Swaminathan 

 

Date: 29 MARCH 2018

 

Time uploaded in London –  6-58 am (British Summer Time)

 

Post No. 4861

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

ஏப்ரல் 2018 காலண்டர்

(2018 பங்குனி-சித்திரை மாத நற்சிந்தனை காலண்டர்;

ஹேவிளம்பி- விளம்பி காலண்டர்)

 

முக்கிய விழாக்கள் ஏப்ரல் 14-தமிழ்ப் புத்தாண்டு; 18-அக்ஷய த்ருத்யை; 20- சங்கர ஜயந்தி; 29-சித்ரா பௌர்ணமி; புத்த பௌர்ணமி; ஏப்ரல் 1- ஈஸ்டர், 2- ஈஸ்டர் திங்கள் விடுமுறை

 

 

பௌர்ணமி ஏப்ரல் 29

அமாவாசை ஏப்ரல் 15

ஏகாதஸி விரதம்—ஏப்ரல் 12, 26

சுப முகூர்த்த தினங்கள்:- 5, 20, 22, 25, 27

 

ஏப்ரல் 1 ஞாயிற்றுக் கிழமை

வீடு அசையாமல் தின்னும், யானை அசைந்து தின்னும்

ஏப்ரல் 2 திங்கட்கிழமை

வீடு கட்டுகிறது அரிது, வீடு அழிக்கிறது எளிது

ஏப்ரல் 3 செவ்வாய்க்கிழமை

 

வீடு கட்டும் முன்னம், கிணறு வெட்ட வேண்டும்

ஏப்ரல் 4 புதன்கிழமை

வீடு நிறைந்த விளக்குமாறு

ஏப்ரல் 5 வியாழக்கிழமை

வீடு பற்றிக் கொண்டு  எரியும்போது, சுருட்டுக்கு நெருப்புக் கேட்டானாம்.

 

ஏப்ரல் 6 வெள்ளிக்கிழமை

வீடு பற்றி எரியும்போதா கிணறு வெட்டுவது?

ஏப்ரல் 7 சனிக்கிழமை

வீடு போ போ என்கிறது காடு வா வா என்கிறது

 

ஏப்ரல் 8 ஞாயிற்றுக் கிழமை

வீடு வெறும் வீடாய் இருந்தாலும் மணியம் ஏழு ஊர்

ஏப்ரல் 9 திங்கட்கிழமை

வீட்டிலிருக்கிற பூனையை அடித்தால், மேட்டிலிருக்கிற எலியைப் பிடிக்கும்

ஏப்ரல் 10 செவ்வாய்க்கிழமை

வீட்டுக்கு ஏற்றின விளக்கு விருந்துக்கும் ஆகும்

 

ஏப்ரல் 11 புதன்கிழமை

வீட்டைக் கட்டிப் பார், கலியாணம் செய்து பார்

 

ஏப்ரல் 12 வியாழக்கிழமை

வீட்டைக் காத்த நாயும் காட்டைக் காத்த நரியும் வீண்போகா

ஏப்ரல் 13 வெள்ளிக்கிழமை

வீட்டுக் கருமம் நாட்டுக்குரையேல்

ஏப்ரல் 14 சனிக்கிழமை

வீட்டுக் காரியம் பார்க்காதவன் நாட்டுக் காரியம்  பார்ப்பானா?

 

ஏப்ரல் 15 ஞாயிற்றுக் கிழமை

வீட்டுக்கு அடங்காத பிள்ளையை ஊரார் அடக்குவார்கள்

வீட்டில் அடங்கதவன் ஊரில் அடங்குவான்

ஏப்ரல் 16 திங்கட்கிழமை

வீட்டுக்கு அலங்காரம் பெரிய குடி.

வீட்டுக்கு அலங்காரம் மனையாள்.

வீட்டுக்கு அலங்காரம் விளக்கு.

வீட்டுக்கு அலங்காரம் வேளாண்மை.

ஏப்ரல் 17 செவ்வாய்க்கிழமை

வீட்டுக்கு இருந்தால் வெண்கலப் பெண்டாட்டி, வீட்டுக்கு இல்லாமற் போனால் தூங்கற் பெண்டாட்டி

ஏப்ரல் 18 புதன்கிழமை

வீட்டுக்கு ஒரு மெத்தை, கேட்டுக்கொள்ளடி மாரியாத்தை

ஏப்ரல் 19 வியாழக்கிழமை

வீட்டுக்கு ஒரு வாசற்படி, பூட்டுக்கு ஒரு திறவு கோல்

 

ஏப்ரல் 20 வெள்ளிக்கிழமை

வீட்டுக்கு சோறில்லை சிவனறிவான், நாட்டுக்குச் செல்லப் பிள்ளை நானல்லவா?

ஏப்ரல் 21 சனிக்கிழமை

வீட்டுக்குப் புளி, காட்டுக்குப் புலி

 

ஏப்ரல் 22 ஞாயிற்றுக் கிழமை

வீட்டுக்கு வாய்த்தது எருமை, மோட்டுக்கு வாய்த்தது போர்

 

ஏப்ரல் 23 திங்கட்கிழமை

வீட்டைக் கட்டிக் குரங்கை குடிவைத்தது போல

 

ஏப்ரல் 24 செவ்வாய்க்கிழமை

வீட்டுக்கு வீரன் காட்டுக்குக் கள்ளன்

 

ஏப்ரல் 25 புதன்கிழமை

வீட்டுப் பாம்பு காட்டுக்குப் போனால் அதுவும் காட்டுப் பாம்பாகும்.

வீட்டு மூதேவியும் காட்டு மூதேவியும் சேர்ந்து உலாவுகின்றன

 

ஏப்ரல் 26 வியாழக்கிழமை

வீட்டுக்குள் கஞ்சித் தண்ணீரைக் குடித்துவிட்டு, மீசையில் வெள்ளையைத் தடவிக்கொண்டு புறப்படுகிறது

ஏப்ரல் 27 வெள்ளிக்கிழமை

வீட்டுப் பெண்சாதி வேம்பு, நாட்டுப்     பெண்சாதி                 கரும்பு

 

ஏப்ரல் 28  சனிக்கிழமை

வீட்டுக்கு வீடு  வாசற்படி.

வீட்டுக்கு வீடு எதிர் வீடு ஆகாது.

வீட்டுக்கு வீடு மண் வீடுதான்.

 

ஏப்ரல் 29 ஞாயிற்றுக் கிழமை

வீட்டுச் செல்வம் மாடு, தோட்டச் செல்வம் முருங்கை

 

ஏப்ரல் 30 திங்கட்கிழமை

வீட்டுக்குள்ளே வேட்டை நாயை உசுப்புவானேன்

 

BONUS PROVERBS ON HOUSE/HOME

வீட்டிளக்காரம் வண்ணான் அறிவான்

வீட்டைக் கொளுத்தி வேடிக்கை பார்க்கிறதா?

வீட்டில் அழகு வேம்படியாகும்

 

–SUBHAM–

 

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -2 (Post No.4860)

Date: MARCH 29, 2018

 

 

Time uploaded in London- 5-56 am

 

 

Compiled by S NAGARAJAN

 

 

Post No. 4860

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சம்ஸ்கிருதச் சிறப்பு

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -2

 

ச.நாகராஜன்

 

இந்தியா காத்து வரும் மொழி தான் சம்ஸ்கிருதம்.என்றாலும் பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதையும் அது கவர்ந்து வந்திருக்கிறது!

அது தரும் ஞானம் மேற்கு நாடுகளைக் கவர்ந்துள்ளது என்பதை யோகா, ஆயுர்வேத மருந்துகள், தியான உத்திகள், நடைமுறை தத்துவங்களாகத் திகழும் ஹிந்து மதம், புத்த மதம் ஆகியவற்றின் மூலமாக உணரலாம்.

ஆங்காங்குள்ள இடங்களில் இருக்கும் பாரம்பரியங்களையும், மதங்களையும் அது எதிர்ப்பதில்லை; அவற்றுடன் முரண்படுவதில்லை! மாறாக அவற்றை ஆதரிக்கிறது. விரிவாக்குகிறது.

மேலும் அதிகப் பொலிவுடன் அவற்றைத் திகழ வைக்கிறது!

சம்ஸ்கிருதத்தின் துல்லியம் அகர வரிசையில் ஒலிகள் எப்படி அமைக்கப்பட்டு விவரிக்கப்பட்டிருக்கிறது என்ற இணையற்ற விவரத்திலிருந்தே உருப்பெறுகிறது.

வாய், மூக்கு,தொண்டை முதலிய இடங்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒலி எழும்புவதை அது விவரிக்கிறது. அவை மாறுவதே இல்லை!

ஆகவே தான் சம்ஸ்கிருதத்தின் எழுத்துக்கள் ‘அக்ஷரங்கள்’ – அழிக்கப்பட முடியாதவை – என்று வழங்கப்படுகிறது.

ஆக வாயிலுள்ள ஐந்து இடங்கள் எல்லா அக்ஷரங்களையும் எந்த இடத்திலிருந்து உருவாக்குகிறது என்பதானது விரிவாக விளக்கப்பட்டுள்ளது. சில மன மற்றும் உடல் முயற்சிகள் மூலம் இவை நன்கு முறைப்படி திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது.

A,b,c,d,e,f,g  என்ற ஆங்கில அகர வரிசையில் இதை உச்சரித்த பின் என்ன அமைப்பு (structure) இதில் இருக்கிறது?

ஏதேனும் தெரிகிறதா பாருங்கள்?! ஒரு அமைப்பும்   இல்லை.

A -இல் ஆரம்பித்து Z  வரை போகிறது. அவ்வளவு தான்!

மாறாக சம்ஸ்கிருதத்தில் உள்ள அழகிய அமைப்பு (structure) ஆங்கிலத்தில் இல்லை.

சரி,இப்போது எழும் கேள்வி, என் குழந்தை ஏற்கனவே இருக்கும் பாடச் சுமை போதாது என்று இன்னுமொரு மொழியை ஏன் கற்க வேண்டும் என்பது தான்!

இது அவர்களுக்கு எந்த விதத்தில் பயன்படும்?

பதில் இது தான்:

சம்ஸ்கிருதத்தின் குணாதிசயங்களே உங்கள் குழந்தையின் குணாதிசயங்களாக மாறும். அதாவது உங்கள் குழந்தையின் மனமும் இதயமும் அழகியதாக ஆகி விடும்!

துல்லியமானதாக (precise) ஆகி விடும்!

நம்பகமானதாக (reliable) ஆகி விடும்! எதையும் கூர்ந்து கவனிக்கும் சக்தியை அதனுடைய துல்லியத்தினால் சம்ஸ்கிருதம் அதைக் கற்கும் உங்கள் குழந்தைக்குத் தானாகவே கற்பித்து விடும்!

துல்லியம் இருக்குமானால் உயரச் செல்லுதல் என்பது ஏற்படும் என்பது அனுபவம்!

 

அது உங்களுக்குச் சந்தோஷத்தைத் தருகிறது. ஆரம்ப பயிற்சியில் ஈடுபட்டவர்கள் கூட அதன் இனிய அனுபவத்தை உணர முடியும். இசை போல அது உங்களை உயர்த்தும்.

அது வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும், பகுதிகளிலும் வாழ்நாள் முழுவதும் உதவும்.

இது மற்ற எல்லா குழந்தைகளையும் ஒப்பிடும் போது உங்கள் குழந்தைக்கு மிகுந்த பயனை நல்கும்.

சம்ஸ்கிருதத்தைக் கற்பதன் மூலமாக இதர மொழிகளைக் கற்பது சுலபமாக ஆகிறது.

சம்ஸ்கிருதத்தில் உள்ள சில இலக்கணங்களை ஐரிஷ் அல்லது கிரேக்கம்,லத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பிரதிபலிக்கிறது.

இந்த மொழிகள் அனைத்தும் சம்ஸ்கிருத இலக்கணத்தின் சில பகுதிகளைக் கொண்டுள்ளது.

சம்ஸ்கிருதம் கற்பதானது முறையான ஒரு மொழியைக் கற்கிறோம் என்பதாகிறது. அதன் விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் அது உங்கள் குழந்தைகளை முன்னேற்றுகிறது – வாழ்நாள் முழுவதும்!

அதை அவர்களே உங்களுக்குச் சொல்வார்கள்.

அவர்கள் நன்கு பேச ஆரம்பிப்பார்கள். யார் நன்கு பேச முடியுமோ அவர்களே உலகை வழி நடத்திச் செல்கின்றனர்.

பாரக் ஒபாமா நன்கு பேசுவதால் அவர் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்.

மஹாத்மா காந்தி தனது சீரான சொற்களால் பெருந்திரளான கூட்டத்தைக் கவர்ந்தார்.

தெரஸா எளிய சொற்களால் அனைவரையும் உயர்த்துகிறார்.

பெரும் ஆசான்களின் மொழியானது நமக்குப் பழமையான காலத்திலிருந்து கிடைத்துள்ள ஒன்று. ஆனால் அதுவே பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

ப்ளேட்டோவின் வார்த்தைகளின் மூலம் அவரது அருமையான மனத்தின் மூலம் புக முடிகிறது.

உங்கள் மகனோ மகளோ துல்லியமான மொழி மூலம் தங்களை வெளிப்படுத்த முடியுமானால் அவர்களே எதிர்காலத் தலைமுறையின் தலைவர்களாக ஆகி விடுவார்கள்.

வேதம், கீதை ஆகியவற்றின் மூலமாக சம்ஸ்கிருதம் அனைத்தையும் உள்ளடக்கிய கருத்துக்களைக் கொண்டுள்ளது.

வில்லியம் பட்லர் ஈட்ஸ் (William Butler yeats) அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ள உபநிடதங்கள் உலகம் முழுமைக்கும் பொதுவான மத உணர்வுகளை கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகம் முழுவதுமுள்ள மக்களுக்குத் தந்து வருகிறது!

மொழி பெயர்ப்பின் மூலம் இவற்றைப் படிப்பது மூலத்தைப் படிப்பதற்கு ஈடாகாது.

ஆகவே அவற்றை மூலத்தில் உள்ள மொழியிலேயே படிக்க வேண்டும்.

மதச் சச்சரவுகள் பெருகி வரும் இக்காலத்தில் உலக முழுமைக்கும் பொதுவான மத நோக்கத்தைத் தரும் ஞானம் நல்கும் மதத்தை நாம் பெற வேண்டும்.

பயங்கரவாதம் தவறாக மதத்தைப் புரிந்து கொள்ளும் அரைகுறை மதக் கருத்துக்களால் ஏற்படுகிறது.

உலகம் முழுவதும் போற்றும் ஆன்மீக ஞானியான ஸ்வாமி விவேகானந்தர். சிகாகோவில் 1893இல்  சர்வ மத மகாநாட்டில நிகழ்த்திய உரையில் கூறியது இது:-

You can put a mass of knowledge into the world, but that will not do it much good. There must come culture into the blood. We all know in modern times of nations which have masses of knowledge, but what of them? They are like tigers, they are like savages, because culture is not there.

Knowledge is only skin-deep, as civilisation is, and a little scratch brings out the old savage. Such things happen; this is the danger. Teach the masses in the vernaculars, give them ideas; they will get information, but something more is necessary; give them culture.

 

சம்ஸ்கிருதம் உங்கள் குழந்தைக்கு உலகம் முழுமைக்குமான, சீரான லயத்துடன் கூடிய உண்மைகளை வெளிப்படுத்த உதவுகிறது!

 

***

தொடரும்

 

 

 

 

 

 

 

 

செம்புலப்பெயல் நீரார் செப்பியதை கம்பனும், வள்ளுவனும் செப்பினர்! (Post No.4858)

\’WRITTEN by London Swaminathan 

 

Date: 28 MARCH 2018

 

Time uploaded in London –  7-51 am

 

Post No. 4858

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

(பிறர் எழுதியதைத் திருடுபவனும் பிறர் மனைவியைத் திருடுபவனும் பிறர் பொருளைத் திருடுபவனும் ஒன்றே – ஐன்ஸ்டீனின் அண்ணன், பெர்னார்ட் ஷாவின் தம்பி, காந்திஜியின் தாத்தா சொன்னது)

செம்புலப்பெயல் நீரார் செப்பியதை கம்பனும், வள்ளுவனும் செப்பினர்! (Post No.4858)

சங்க இலக்கியத்தில் புகழ்பெற்ற அகத்துறைப் பாடல் செம்புலப்பெயல் நீரார் என்னும் புலவர் யாத்தது. ரிக் வேதம் போலவே, சில தமிழ்ப் புலவர்களின் புகழ்பெற்ற வாசகத்தைக் கொண்டே அப்புலவரை அழைப்பது தமிழிலும் உண்டு. ஒரு செம்மண் தரையில் மழை நீர் விழுந்தால் அது எப்படி இரண்டறக் கலக்குமோ அது போல நாம் ஒன்றுபட்டு விட்டோம்; இனி பிரியமாட்டோம் என்று காதலியிடம் காதலன் சொல்லும் பாடல் அது.

 

யாயும் ஞாயும் யார் ஆகியரோ

எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

 

–குறுந்தொகை 40, செம்புலப்பெயனீரார்

 

பொருள்:

காதலன் கூறுகிறான்: “என்னுடைய தாயும் நின்னுடைய தாயும் ஒருவருக்கொருவர் எத்தகைய உறவினர்? என் தந்தையும் நின் தந்தையும் எந்த முறையில் உறவினர்? இப்பொழுது யானும் நீயும் ஒருவரை ஒருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்? செம்மண் நிலத்தே பெய்த மழை நீர், அம்மண்ணோடு கலந்து அத்தன்மையை அடைவது போல நமது உள்ளங்கள் (தாமாகவே) ஒன்றுபட்டன.

 

கம்பனும் சொன்னான்

கம்பன், யுத்தகாண்டம், கும்பகர்ணன் வதைப் படலத்தில் சொல்லுகிறான்:-

 

புலத்தியன் வழிமுதல்வந்த பொய் அறு

குலத்து இயல்பு அழிந்தது கொற்றம் முற்றுமே

வலத்து இயல் அழிவதற்கு  ஏதுமை அறு

நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால்

 

-கம்ப ராமாயணம்

 

பொருள்

புலத்திய முனிவரின் வழி வந்த குலத்தின் பெருமை உன்னால் அழிந்தது. உனது செயல் நமது வெற்றித் தன்மையை விழ்ச்சி அடையச் செய்யும். அறம் தவறிய உனக்கு வெற்றி கிடைக்குமா? கிடைக்காது. குற்றமற்ற நிலத்தின் இயல்பே நீரினது இயல்பாகும் என்னும் முறைமைக்கு ஏற்றதாக உள்ளது. (இது ராவணனுக்கு கும்பகர்ணன் சொன்ன அறிவுரை)

 

நிலம் நன்றாக இருந்தால் அதில் விழும் நீரும் நன்றாக இருக்கும்.

 

வள்ளுவனும் விளம்பினான்

இதையே வள்ளுவனும் விளம்புவது, படித்து மகிழ்வதற்குரியது:-

 

நிலத்தியல்பால் நீர்திரிந்  தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப  தாகும் அறிவு – குறள் 452

 

பொருள்

தான் அடைந்த நிலத்தின் தன்மையையே நீரும் பெறும். அது போல மக்களும் எந்த இனத்தாருடன் சேருகின்றனரோ அந்த அறிவையே பெறுவர்.

 

இதை சிற்றினம் சேராமை என்னும் அதிகாரத்தில் வள்ளுவன் சொல்லுவதால் சத் சங்கத்தின் மஹிமை தெள்ளிதின் விளங்கும்.

 

இன்னொரு குறளில் செம்புலப் பெயல் நீரார் செப்பியதையே வள்ளுவனும் செப்புவான்:–

 

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு

நீரியைந்   தன்னா      ரகத்து – குறள் 1323

 

நிலத்தொடு நீர் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சம் உடைய காதலனும் காதலியும் ஊடலில் அடையும் இன்பத்துக்குச் சமமான இன்பம் சொர்க  லோகத்தில் உண்டோ?

தேவலோகத்தில் SEX  செக்ஸ் கூடாது என்று பார்வதி சபித்ததால் அங்கு செக்ஸ் (பாலியல்) இன்பம் கிடையாது (பிற கிரஹங்களில் உயிரினங்கள் உண்டா? என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில்

(Hindus’ Belief in Extra Terrestrial Civilizations) இது பற்றி விளக்கியுள்ளேன்.

 

 

காளிதாசனும் மொழிந்தான்!

 

காதலர்களின் மனம் ஒன்று பட்டதற்கு இப்படி ஒரு உவமையைப் பயன்படுத்தியது போல, சங்க காலத்துக்கு முன் வாழ்ந்த காளிதாசரும் மழை நீர் உவமையைப் பயன்படுத்தியுள்ளார். (காளிதாசன் காலம் பற்றிய எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் அவன் சங்க காலத்துக்கு முந்தியவன் என்பதை நிரூபித்துள்ளேன்)

 

ஒரே சுவையுடைய மழை நீர் எங்கெங்கு விழுகின்றதொ அந்தந்த நிலத்தின் சுவையைப் பெறுவதுபோல சத்வம் என்ற ஒரே குணமுடைய இறைவன், கைக்கொள்ளும் குணங்களுக்கு ஏற்ப தொழில்களையும் பெயர்களையும் ஏற்கின்றீர் (சத்வ குணம் காரணமாக விஷ்ணுவாகவும், ரஜோ குணம் காரணமாக பிரம்மனாகவும், தமோ குணம் காரணமாக ருத்திரத் தனமையையும் அடைகின்றீர். எப்படி நீர் என்பது ஒன்றுதானோ அதே போல இறைவன் ஒருவனே.

ரசாந்தராண்யேகரசம் யதா திவ்யம் பயோஸ்ச்னுதே

தேசே தேசேகுணேஷு  ஏவம் யதாத்வம்அவிக்ரியஹ

— ரகு வம்சம் 10-17

 

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?’ (Post No …

https://tamilandvedas.com/…/யாயும்-ஞாயும்-ய…

6 Apr 2017 – Written by London swaminathan Date: 6 APRIL 2017 Time uploaded in London:- 20-27 Post No. 3794 Pictures are taken from various sources; thanks. contact; swami_48@yahoo.com காளிதாசனும், செம்புலப்பெயநீராரும் சங்கத் தமிழ் நூல்களில் ஒன்று குறுந்தொகை. அருமையான காதல் பாடல்கள் உள்ள நூல். அதில் ஒரு அருமையான பாடல். காதலர் …

 

சுபம்–