மரமும் மேகமும் கொடை வள்ளல்கள்- புலவர்கள் புகழாரம் (Post No.3373)

Written by London Swaminathan

 

Date: 20 November 2016

 

Time uploaded in London: 18-27

 

Post No.3373

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

காளிதாசனும் கம்பனும் வள்ளுவனும் சங்கப் புலவர்களும் கையாளும் உவமைகள் பாரதப் பண்பாடு ஒன்றே என்று காட்டுகின்றன. இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை; ஒரே வகையான உவமை. ஆயினும் உலகில் , வேறெங்கும் இந்த உவமைகளைக் காணமுடியாது. மரமும் மேகமும் உலகம் முழுதும் காணப்படும். ஆயினும் பாரதப் புலவர்களுக்கு மட்டுமே அவைகளைப் பார்த்த மாத்திரத்தில் நற்சிந்தனை எழுகின்றது.

 

காளிதாசன் எழுதிய சாகுந்தல நாடகத்தில் கூறுவான்:-

 

பவந்தி நம்ராஸ் தரவ: பலாகமை

நர்வாம்புபிர்தூர விலம்பினோ கனா:

அனுத்ததா: சத்புருஷா: சம்ருத்திபி:

ஸ்வபாவ ஏவைஷ பரோபகாரிணாம்

–சாகுந்தலம் 5-12

பொருள்:-

பழங்கள் நிறைந்த மரம் வளைந்து வணங்கி கீழ்நோக்கி நிற்கிறது. நீர் நிரம்பிய மேகம் விண்ணில் தாழத் தவழ்கிறது. நகரும் பொருளான மேகமும் நிலையான பொருளான மரமும் கூட உதவி கொடுக்கத் தயாராக பணிந்து நிற்கின்றன. நல்லோரும் இப்படித்தான். அவர்களுக்குச் செல்வம் கிடைத்தால் பணிவாக இருப்பர். பணிவே அவர்களுக்கு அணிகலன்.

 

வள்ளுவனும் இதை அழகாகச் சொன்னான்:

பயன்மரம் உள்ளூர் பழுத்தற்றார்ச் செல்வம்

நயனுடையான் கட் படின் – குறள் 216

 

ஊர் நடுவில் ஒரு மரத்தில் பழங்கள் காய்த்தால் எப்படிப் பயன்படுமோ அதுபோல நல்லோரிடம் வந்த செல்வம் எல்லோருக்கும் பயன்படும்; எளிதில் கிடைக்கும்.

 

 

புறநானூற்றுப் பாடலில்

கபிலர் பாடிய புறநானூற்றுப் பாடலில் பாரியை இகழ்வது போலப் புகழ்கிறார். அங்கும் மேகம் உவமை வருகிறது:-

 

பாரி பாரி என்று பல ஏத்தி

ஒருவர் புகழ்வர், செந்நாப்புலவர்

பாரி ஒருவனும் அல்லன்

மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே

–புறம் 107, கபிலர்

 

பொருள்:-

 

இது என்ன வேடிக்கையாக இருக்கிறது. செந்நாப் புலவர்கள் எல்லோரும் கொடுப்பதில் சிறந்தவன் பாரி, பாரி என்று புகழ்ந்து தள்ளுகிறார்களே. பாரி ஒருவன் மட்டும்தான் உலகத்தைக் காப்பதற்கு உள்ளானோ! மாரியும் (மழையும்) உலகைக் காப்பாற்ற இருக்கிறது! (பாரியை மட்டம் தட்டுவது போலப் புகழ்வது)!

 

தராசு போல இரு

 

நீதி வெண்பா இயற்றிய ஒரு தமிழ்ப் புலவர், தராசு போல இரு என்று ஒரு அருமையான உவமை தருகிறார்:

 

ஆக்கம் பெரியர் சிறியார் இடைப்பட்ட

மீச்செலவு காணின் நனி தாழ்ப — தூக்கின்

மெலியது மென்மேல எழச் செல்லச் செல்ல

வலிதனே தாழுந்துலைக்கு

 

(துலை= துலா = தராசு)

பொருள்:

தராசுத்தட்டில் வைத்து நிறுத்தால் மெல்லீய பொருளுள்ள தட்டு மேலே போகப்போக பாரமான தட்டு கீழே போகும். அது போல, கல்வி, செல்வம் ஆகிய இரண்டிலும் சிறந்த பெரியோர்கள் செருக்குடையோரைக் கண்டால் தாழ்ந்து போவர்.

 

அதாவது நிறைகுடம் தழும்பாது; குறைகுடம் கூத்தாடும்.

 

–SUBHAM—

 

இடி ஓசையை மிஞ்சும் புகழ் ஓசை! (Post No.3358)

Written by London Swaminathan

 

Date: 16 November 2016

 

Time uploaded in London: 4-51 am

 

Post No.3358

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

நாலடியாரில் ஒரு நல்ல பாடல்.

 

முரசொலி பெரிதா, இடி ஓசை பெரிதா, புகழோசை பெரிதா என்று ஒப்பிடுகிறார் ஒருபுலவர்.

 

நாலடியார் என்பது 18 கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. சமண முனிவர்களால் பாடப்பட்ட பாடல்கள் இதில் அடக்கம். திருக்குறள் போலவே நீதிநெறியை இயம்பும் பாடல்கள்.

 

கடிப்பிடு கண்முரசங்  காதத்தோர் கேட்பர்

இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்

அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்

கொடுத்தாரெனப்படுஞ் சொல்

 

பொருள்:-

குறுந்தடியால் அடிக்கப்படும் முரசின் ஒலியை ஒரு காத தூரம் வரை கேட்கலாம். மேகம் இடித்து எழுப்பும் இடி ஓசையை ஒரு யோசனை தூரம் வரை கேட்கலாம். இவர் ஏழைகளுக்குக் கொடுத்து உதவினார் என்று சான்றோர் சொல்லும் சொல் பூலோகம், புவர் லோகம், சுவர் லோகம் ஆகிய மூன்று உலகக்ங்களிலும் கேட்கும்.

 

(காதம் என்பது ஏழரை மைல், யோசனை என்பது 30 மைல் என்று ஒரு கணக்கு உண்டு. யோசனை என்பது எட்டு மைல் என்று சொல்வோரும் உண்டு.)

 

ஈரேழு பதினான்கு உலகங்களையும் சுருக்கமாக மூவுலகம் என்றும் சொ ல்லுவர். மேலுலகம் நடு உலகம் கீழ் உலகம் என்ற பொருளில் இப்படிக் கூறுவதும் அல்லது கிருதகம், அகிருதகம், கிருதகாகிருதகம் என்ற மூன்று வகை என்போரும் உளர்.

 

கிருதகம் என்றால் செய்யப்பட்ட உலகங்கள் அதாவது பூமி, பாதாளம் முதலியவை. அகிருதகம் என்றால் செய்யப்படாதவை. அவை தபோலோகம் சத்தியலோகம் முதலானவை. கிருதகாகிருதகம் என்றால் செய்யப்பட்டதும் செய்யப்பபடாததுமாயுள்ள உலகங்கள். அதவது சொர்கம் முதலியவை.

 

இந்திரன் கோவில் முரசொலி

 

முரசொலி என்றவுடன் புறநானூற்றூப் பாடல் ஒன்றும் நினைவுக்கு வருகிறது. ஆய் அண்டிரன் இறந்தவுடன் அவன் கொடைத் தன்மையைக் கருதி அவனை,  இந்திரன் முரசு அறைந்து வரவேற்றானாம். இதைச் சொல்லுபவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆவார்.

 

 

திண்தேர் இரவலர்க்கு ஈத்த, தண்தார்,

அண்டிரன் வரூஉம் என்ன ஒண்தொடி

வச்சிரத்தடக்கை நெடியோன் கோயிலுள்

போர்ப்புறு முரசம் கறங்க

ஆர்ப்பு எழுந்தன்றால், விசும்பினானே (புறம் 241)

 

வச்சிரத்தடக்கை நெடியோன் = இந்திரன்.

 

பொருள்:-

பெரிய, வலிய தேர்களை வறியவர்களுக்கு வழங்கியவன்; குளிர்ந்த மாலையை உடையவன்; ஆய் வள்ளல் வருகின்றான் என, இந்திரன் கோவிலில் முரசம் முழங்குவதால், வானத்திலும் இடியொலியாகிய பேரொலியும் எழுகின்றதே.

 

-subham–

 

வரி விதிப்பது எப்படி? புறநானூற்றுப் புலவர் புத்திமதி (Post no.3348)

Research article written by London Swaminathan

 

Date: 12 November 2016

 

Time uploaded in London: 18-12

 

Post No.3348

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

வரி விதிப்பது பற்றி காளிதாசன், மனு, திருவள்ளுவர் ஆகியோர் கருத்துகளை நேற்று கண்டோம். புறநானூற்றில் (பாடல் 184) பிசிராந்தையார் கூறும் புத்திமதி நல்லதொரு உவமையுடன் வருகிறது.

 

பாண்டியன் அறிவுடை நம்பிக்குப் புலவர் சொன்ன புத்திமதி:-

 

காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,

மா நிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்;

நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே

வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;

அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,

கோடியாத்து, நாடு பெரிது நந்தும்;

மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்

வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,

பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,

யானை புக்க புலம்போல,

தானும் உண்ணான், உலகமும் கெடுமே.

 

பொருள்:-

ஒரு ‘மா’ அளவைவிடக் குறைந்த நிலமாயினும் அதில் விளைந்த நெல்லை அறுத்துக் கவளம் கவளமாக யானைக்கு ஊட்டினால் பலநாட்களுக்கு அது வரும்.; யானையும் பல நாட் பசியடங்கி இன்புறும். அல்லாது, நூறு “செய்” நிலமாயினும், தன் போக்கிலே யானை சென்று தின்னுமானால், அது சாப்பிட்ட நெல்லைவிட அதன் காலடியில் பட்டு அழியும் நெல்லே மிகுதியாகிவிடும். இதே போல, அறிவுள்ள ஒரு அரசன் தர்ம நியாயத்தை உணர்ந்து மக்களிடம் வரி வசூலித்தால் கோடிக்கணக்கில் அவனுக்கு வருவாய் வருவதுடன் நாடும் செழிக்கும். அஃதன்றி, அவனுடைய மந்திரிகளும் புத்திமதி சொல்லாமல், அவனும் குடிகளை வருத்தி அதிக வரி வசூலித்தால், அவனுக்கும் நாட்டுக்கும் கேடே விளையும். (மா, செறு=செய் என்பன பழங்கால நில அளவைகள்)

குடிகொன்று இறை கொள்ளுங் கோமகற்குக் கற்றா

மடிகொன்று பாலகொளலும் மாண்பே – குடியோம்பிக்

கொள்ளுமா கொள்வோர்க்குக் காண்டுமே மாநிதியம்

வெள்ளத்தின் மேலும் பல –நீதிவெண்பா

 

குடிமக்களை வருத்தி வரிவாங்கும் அரசன் செயலைவிட, கன்றையுடைய பசுவின் மடியை வருத்திப் பால் கறப்ப்து நல்ல செயல் ஆகும். குடிகளைப் பாதுகாக்கும் அளவுக்கு வரி வாங்கும் அரசர்களுக்கு வெள்ளம் அளவைவிட செல்வம் சேருவதைக் காணலாம்.

 

வெள்ளம்= 57, 000 000 000 000 00

(14 zeroes)

 

உப்புக்கும் நெல்லுக்கும் ஒரே அளவு வரி

 

யாவரும் கேளிர் என்ற நூலில் டாக்டர் இரா.நாகசாமி எந்தந்தப் பொருளுக்கு எவ்வளவு வரி விதிக்கப்பட்டது என்ற பட்டியலைத் தந்துள்ளார். இது 700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டிலிருந்து எடுக்கப்பட்ட செய்தி. உப்புக்கும் நெல்லுக்கும் ஒரே அளவு வரி விதிக்கப்பட்டது நெல்லைப் போல இரு மடங்கு வரி அரிசிக்கும், பருத்தியைப் போல இருமடங்கு வரி, நூல்களுக்கும் விதிக்கப்பட்டது. நூலுக்கும் இரும்புக்கும் ஒரே வரி!. வாசனைப் பொருள்களான சந்தனம், அகில், பன்னீர், சவரிமயிர் ஆகியவற்றுக்குத்தான் அதிகமான வரி.

 

ஒரு சில எடுத்துக்காட்டுகள்:-

 

உப்பு தலைச் சுமை ஒன்றுக்கு அரைக் காசு

உப்பு பாக்கம் ஒன்றுக்கு அரைக் காசு

உப்பு பொதி ஒன்றுக்கு ஒரு காசு

உப்பு வண்டி ஒன்றுக்கு பத்து காசு

 

சந்தனம் பொதி ஒன்றுக்கு 30 காசு

 

வரி, இறை, சுங்கம், உல்கு, திறை முதலிய பல பொதுப் பெயர்களும் பின்னர் ஒவ்வொரு வரிக்குமுள்ள சிறப்புப் பெயரும் பயன்படுத்தப் பட்டன.

 

-subham–

 

ஐயர்களுக்கு வரி விதிக்காதே! மனு தடாலடி!! (POST NO.3344)

 

WRITTEN by London Swaminathan

 

Date: 11 November 2016

 

Time uploaded in London: 20-18

 

Post No.3344

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

வரி விதிப்பது எப்படி? மனு, காளிதாசன், வள்ளுவன் அணுகுமுறை

 

வரி விதிப்பது பற்றி சாணக்கியன் எழுதிய அர்த்த சாத்திரத்தில் நிறைய விஷயங்கள் உள்ளது. அது உலகின் முதலாவது பொருளாதார நூல். ஆகையால் அதில் வியப்பேதும் இல்லை ஆனால் வள்ளுவன், காளிதாசன், மனு முதலானோர் பொருளாதார விடயங்களை எழுத வரவில்லை. ஆயினும் அவர்களும் இவ்விஷயத்தைத் தொட்டுக்காட்டியுள்ளனர். இவர்களில் மனு சொல்லும் விஷயஙகள் வியப்பைத் தரும் முதலில் அதைக் காண்போம்:-

 

மனுதர்ம சாத்திரத்தில் ஏழாவது அத்தியாயத்தில் சொல்கிறார்:-

 

ஒரு அரசன் பசியினால்  இறந்து போக நேரிட்டாலும், வேதத்தை மனப்பாடமாக வைத்திருக்கும் பிராமணனிடத்தில் வரி வாங்கக்கூடாது. அவர்களைப் பசியினால் வாடவிடக்கூடாது (7-133)

 

வேதம் அறிந்த பார்ப்பான் பசியினால் மயக்கமடைந்து விழுந்தால் அந்த அரசாட்சியும் வீழும் (7-134)

 

இதைப் பார்த்தவுடன் பலரும் இது நியாயமில்லாத ஒரு விதி என்று எண்ணலாம். ஆனால் தமிழ் கல்வெட்டுகள் அனைத்தும் பிரம்மதேயம் (பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்ட நன்கொடை), தேவதானம் (கோவில்களுக்குக் கொடுக்கப்பட்ட நன்கொடை) ஆகிய அனைத்தையும் இறையிலி (வரியற்ற) நிலங்களாகவே அறிவிக்கின்றன. ஆக, தமிழ் மன்னர்கள் மனு நீதியைப் பின்பற்றியது தெளிவு.

 

இப்போது இந்த இடத்தில் பிராமணர்கள் என்பதற்குப் பதிலாக அறிஞர்கள் என்று போட்டுவிட்டால் பொருள் நன்கு விளங்கும். அதாவது புத்தியுடையோர், அறிவாளிகள் வறுமையில் வாடக்கூடாது என்பதே பொருள். நிறைய சம்பாதிக்கும் அறிஞர்கள் இதில் வாரார். பிராமணர்கள் மூன்று நாட்களுக்கு மேலான செல்வம் வைத்திருக்கக்கூடாது என்பது விதி. எப்போதும் மற்றவர்களுக்கு அறிவுதானம் செய்து பொருள் பெற வேண்டும் என்பதற்கே இந்த விதி!

 

அட்டை போல உறிஞ்சு!

 

மனுவின் வரிவிதிப்பு அணுகுமுறையும் சிறிது வேறுபட்டது.

 

ஒரு அரசனானவன், அட்டை போல, கன்றுக்குட்டி போல, தேனீ போல கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஆண்டுக்கான வட்டியைப் பெறவேண்டும்.(7-129)

அட்டை போல (இரத்தத்தை) உறிஞ்சு என்று சொல்லுவது அவ்வளவு நன்றாக இல்லையே என்று எண்ணலாம். ஆனால் இது பணக்காரர் விஷயத்தில் பொருந்தும். நான் வாழும் லண்டனில் கூட அதிக பணம் சம்பாதிப்போரின் பணத்தில் 60 சதவிகிதத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும். இது என்னடா பகற்கொள்ளை? என்று எண்ணுவோம். ஆயினும் கம்பெனிகள் வாரி வழங்குவதால் இந்தக் கட்டுப்பாடு.

 

அட்டை என்னும் பூச்சி இரத்தத்தை உறிஞ்சியதாலோ, கன்றுக்குட்டி பால் குடித்ததாலோ, தேனீக்கள் தேன் எடுத்ததாலோ எந்தப்பிராணியும் எந்தப் பூவும் அழிவதில்லை.

 

பணக்கார்களுக்கு அட்டை போலவும், மத்திய தர வர்கத்துக்கு கன்று போலவும் ஏழைகளுக்கு தேனீ போலவும் வரி விதிப்புக் கொள்கை இருக்கட்டும் என்று மனு சொல்லாமல் சொல்லுவான்.

வள்ளுவன் சொல்லுவான்:

அதிக வரி விதிப்பது பாலைவனத்தில் கள்ளர்கள் வழிமறித்து எடுக்கும் பகற்கொள்ளைக்கு நேர் நிகர் என்று.

 

வேலொடு நின்றான் இடு என்றது போலும்

கோலொடு நின்றான் இரவு (குறள் 552)

பொருள்:- ஒரு அரசன் குடிமக்களை  வருத்தி கட்டாயப்படுத்தி வரி வாங்குவது, வேல் ஏந்திய வழிப்பறிக் கொள்ளைக்காரன் வழி மறித்து பொருளைப் பறிப்பதற்குச் சமம்.

 

காளிதாசன், அவனது ரகுவம்ச காவியத்தில் சொல்லுவான்:-

 

ப்ரஜானாமேவ பூத்யர்த்தம்

சதாப்யோ பலிமக்ரஹீத்

சஹஸ்ர குணமுத்ஸ்ரஷ்டும்

ஆதத்தே ஹி ரசம் ரவி: (ரகு 1-18)

 

சூரியன் தன் ஆயிரம் கிரணங்களால் பல வகையான இடங்களிலிருந்து நீரை எடுக்கிறான். நீரை எடுக்கும் போது நீர் நிலைக்குத் தீங்கு செய்வதில்லை. எடுத்த நீரை மழையாக திருப்பித் தரும்போது பயிர்களும் உயிர்களும் செழிக்கின்றன. மழை எந்த வேறுபாடுமின்றி எல்லோருக்கும்  உதவுவது போல அரசனும் உதவுவான்.

 

–subham–

கம்பன், சாக்ரடீஸ், திருமூலர் சொன்ன ஒரே கருத்து(Post No.3342)

WRITTEN by London Swaminathan

 

Date: 11 November 2016

 

Time uploaded in London:5-59 AM

 

Post No.3342

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

தன்னைத் தான் உணரத்தீரும் தகையறு பிறவி என்பது

என்னைத் தான் மறையும் மற்றத் துறைகளும் இசைத்த வெல்லாம்

முன்னைத் தான் தன்னை ஓரா முழுப்பிணி அழுக்கின்மேலே

பின்னைத் தான் பெறுவது அம்மா நறவுண்டு திகைக்கும் பித்தோ

 

கிட் கிந்தா காண்டம், கம்பராமாயணம்

 

பொருள்:-

ஒருவன் தன்னை அறிந்துகொண்ட அளவில் பிறவிப்பிணி நீங்கிவிடும் என்று வேதங்களும் மற்ற சாத்திரங்களும் சொல்லுகின்றன. இந்த மெய்யறிவைப் பெறாததால் பிறவி நோய்க்காளாகும் இந்த அழுக்குடலைப் பெற்றிருக்கிறேன் இத்தோடு நில்லாமல், போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம் என்ற பழமொழிக்கு ஏற்ப கள்ளை உண்டு மனமும் மயங்குவது தகுமோ! (சுக்ரீவன் வருந்திச் சொன்ன பாடல் இது.)

 

உன்னையே நீ அறிவாய், ஒன்றாகக் காண்பதே காட்சி– – என்ற பெரிய தத்துவங்களை நமது முன்னோர்கள் பல இடங்களில் வலியுறுத்தியதை பல கட்டுரைகளில் வலியுறுத்தினேன்.

 

இதே கருத்தை கம்பன் வலியுறுத்தும் இடம் வியப்பைத் தரும்; குடிப்பழக்கத்துக்கு ஆளாகி வருத்தப்படும் சுக்ரீவனின் வாய் வழியாக இந்தப் பெரிய கருத்தை வலியுறுத்துகிறான்.

 

பிறவிப் பிணி அறுபட வேண்டுமானால் என்ன என்ன குணங்கள் இருக்க வேண்டும் என்று அடுத்த ஒருபாடலில் கம்பன் கூறுவதைக் கவனியுங்கள்

 

தெளிந்து தீவினையைச் செற்றர் பிறவியின் தீர்வரென்ன

விளிந்திலா உணர்வினோரும் வேதமும் விளம்பவேயும்

நெளிந்துறை புழுவை நீக்கி நறவுண்டு நிறை கின்றேனால்

அளிந்து அகத்து எரியும் தீயை நெய்யினால் அவிக்கின்றாரின்

 

பொருள்:-

மனம் தெளிந்து தீய செய்கைகளை விட்டவர்கள் பிறவி நோயை ஒழித்தவாரவர் (இறப்பு-பிறப்பு என்னும் சுழலில் சிக்குவது பிறவி நோய்). இதை ஞானிகளும் வேதங்களும் செப்புவர். நானோ புழுக்கள் நெளியும் கள்ளில் அந்த புழுக்களை வடிகட்டிவிட்டுச் சாப்பிட்டு இப்படிச் சந்தோஷமடகிறேன். இது  எதற்குச் சமம் என்றால் எரியும் நெருப்பை நெய்யை ஊற்றி அணப்பதற்குச் சமம் என்று சுக்ரீவன் சொல்லுகிறான்.

 

அரிய பெரிய வேதக்கருத்துகளை கம்பன் திடீரென்று பாடல்களில் நுழைப்பான். கடலில் முத்து எடுப்பதுபோல மூச்சைப் பிடித்து அவைகளை வெளியே கொணற வேண்டும்!!

Excerpts from my old articles:–

 

எனது முந்தைய கட்டுரைகளில் இதே கருத்து வெளியிடப்படிருப்பதால் அவைகளை இணைத்துள்ளேன்:–

 

எகிப்தில் திருமூலர் கருத்துக்கள்

 

–லண்டன் சுவாமிநாதன்—

POST No. 716 dated 21 Novemeber 2013

“உன்னையே நீ அறிவாய்”, “உள்ளம் பெருங்கோயில்” என்ற கருத்துக்கள் இந்துக்களுக்குக் கரதலைப் பாடமாகத் தெரிந்தவை. ‘மனக் கோயில், மனமே கோயிலாகக் கொண்டவன்’ என்று இறைவனைப் பாராட்டும் வரிகள் தேவாரம், திவ்யப்பிரபந்தம், திருமந்திரம், திருவாசகத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகின்றன.

எகிப்து நாட்டில் தீப்ஸ் என்னுமிடத்தில் உள்ள லக்ஸார் கோவிலில் இந்த இந்து மதக் கருத்துக்கள் எழுத்தில் இருக்கின்றன. இந்தக் கோவில்கள் 3500 ஆண்டுகள் பழமையானவை. அப்போதே இந்துமதக் கருத்துக்கள் அங்கே பரவி இருந்தன. உபநிஷத் சொன்ன கருத்துக்களை பிற்காலத்தில் சாக்ரடீஸ் மேலை உலத்தில் பரப்பினார். அதற்குப் பின்னர் திருமூலர் அவைகளைத் தமிழில்—எளிய தமிழில்—எல்லோருக்கும் புரியும்படியாகப் பாடி வைத்தார்.

சாக்ரடீஸின் சீடர் பிளட்டோ இந்தக் கருத்துக்களை அவரது சீடர் அரிஸ்டாடிலுக்குச் சொன்னார். அவர் தனது சீடரான அலெக்ஸாண்டருக்குச் சொன்னார். இதைக் கேட்டுப் பிரமித்துப் போன மஹா அலெக்ஸாண்டர் எப்படியாவது இந்து மத சந்யாசிகளைக் கிரேக்க நாட்டுக்கு அழைத்து வந்துவிடவேண்டும் என்று அரும்பாடுபட்டார். இதை “ஒரு யோகியின் சுயசரிதை” நூல் எழுதிய பரமஹம்ச யோகானந்தா போன்றோர் (நடிகர் ரஜினிகாந்தின் குருவின் வழிவந்தவர் பரமஹம்ச யோகாந்தா) கூறியுள்ளனர். எல்லா விவரங்களையும் “நிர்வாண சாமியார்களுடன் அலெக்ஸாண்டர்” என்ற எனது கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்டேன்.

 

கீழ்கண்ட பகுதியை விக்கிபீடியாவில் இருந்து எடுத்து மொழிபெயர்த்து இருக்கிறேன்:
“பழங்கால லக்ஸார் கோவிலில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. முன் பகுதியில் ஆரம்ப உபதேசம் பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். உள்ளே இருக்கும் பகுதிக்குத் தகுதி உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். உயரிய ஞானமும் அந்தர்முகமாகப் பார்க்கவல்லவர் மட்டுமே அங்கே பிரவேசிக்கலாம். வெளிப்புறக் கோவிலில் இருக்கும் பொன்மொழிகளில் ஒன்று “ உடலே இறைவனின் திருக்கோயில்”. இதனால்தான் உன்னையே நீ அறிவாய் என்று மனிதர்களுக்குச் சொல்லப்படுகிறது. உள்ளே உள்ள பொன்மொழிகளில் ,”மனிதனே , உன்னையே நீ அறிவாய். பின்னர் நீ கடவுளை அறிவாய்” என்று எழுதப்பட்டுள்ளது.

Ancient Egyptian
“There are two parts of the ancient Luxor temple: the outer temple where the beginning initiates are allowed to come, and the inner temple where one can enter only after proven worthy and ready to acquire the higher knowledge and insights. One of the proverbs in the Outer Temple is “The body is the house of God.” That is why it is said, “Man know thyself.”[20] In the Inner Temple, one of the many proverbs is “Man, know thyself … and thou shalt know the gods.”[21]”

 

ஏற்கனவே நான் எழுதிய எகிப்து தொடர்பான மூன்று, நான்கு கட்டுரைகளில் அதர்வண வேத மந்திரக் கருத்துக்கள் அங்கே இருப்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறேன். காஞ்சி மஹா பெரியவர் சென்னையில் 1930-களில் நடத்திய சொற்பொழிவுகளில் உலகம் முழுதும் இந்துமதக் கருத்துக்கள் இருப்பதை ஆதாரங்களுடன் விளக்கிய பின்னர் ஒரு கருத்தை முன்வைக்கிறார்: “இப்படி நான் சொன்னதால் இந்துக்கள் அங்கெல்லாம் போய் தங்கள் மதத்தைப் பரப்பினார்கள் என்று நினைக்காதீர்கள். ஆதியில் ஒரே மதம்தான் உலகம் முழுதும் இருந்தது. அதுதான் சநாதன தர்மம்” (இந்து மதத்தின் பழைய பெயர்) என்று சொல்லி இருக்கிறார்.

தன்னை அறிய தனக்கொரு கேடில்லை

இதோ திருமூலரின் திருமந்திரப் பாடல்கள்:

1.தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்”

2.தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்”(பாடல் 280)

  1. “உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்
    தெள்ளத் தெளிந்தோர்க்குச் சீவன் சிவலிங்கம்”

கீதையில் கண்ண பிரானும் இதை வலியுறுத்துகிறான்:
எவன் தானே தன்னை வெல்கிறானோ அவனே அவனுக்கு உறவினன் (பந்து).தன்னை வெல்லாதவனுக்கு தானே பகைவன் (6-6)

‘திருமூலருடன் 60 வினாடி பேட்டி’ என்ற எனது முந்தைய கற்பனைப் பேட்டியில் மேல் விவரம் காண்க.

 

உபநிஷத அற்புதங்கள்– Part 2 எனது ஆராய்ச்சிக் குறிப்புகள்

எழுதுபவர் – லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண். 996; தேதி—23 April 2014.

 

 

14.ஒன்றாகக் காண்பதே காட்சி

ஒன்றாகக் காண்பதே காட்சி (அவ்வை பாடல் வரி) என்ற வாசகம் — “இரண்டு இருக்கும்  போதுதான் பயம் இருக்கும்” என்ற உபநிடத வாக்கியத்தில் இருந்து உண்டானதே. 1-4-1

கடவுள் தன்னை இரண்டாகப் பிரித்துக் கொண்டார்: கணவன் மனைவி என்று.

மனைவியை கணவனின் மற்றொரு பாதி (The Other Half தி அதர் ஹாப்) என்று கூறுவதற்கு இதுதான் முக்கியக் காரணம். பிற்காலத்தில் வந்த அர்த்தநாரீஸ்வரன் உருவத்துக்கு (மாதொருபாகன்) மூர்த்திக்கு இதுவே மூலம்.

இதையே பைபிள் “ஆதாம் என்பவர் இடது பக்க விலா எலும்பை முறித்து பெண்ணை உருவாக்கி”யதாகச் சொல்லுகிறது. இடது பக்கத்தில் தேவி இருப்பது இந்து மதத்தில் இருந்து எடுக்கப்பட்டது. ஆதாம் (Adam=ATMA) என்பது ஆத்மா என்பதன் திரிபு. பரம ஆத்மா தன்னை ஜீவ ஆத்மா என்று இரண்டாக வேறு படுத்தியதே இக்கதை.

 

இதையே உபநிடதத்தில் இரண்டு பறவைகள் கதையாகவும் காண்கிறோம். காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் இது பற்றி அற்புத விளக்கம் கொடுத்துள்ளார். நானும் ஏற்கனவே ‘THREE APPLES THAT CHANGED THE WORLD த்ரீ ஆப்பிள்ஸ் தட் சேஞ்ட் தெ ஓர்ல்ட்’ என்ற கட்டுரையிலும் , ‘பைபிளில் சம்ஸ்கிருதம்’ என்ற கட்டுரையிலும் எழுதி இருக்கிறேன்.

 

–Subham–

 

 

புறநானூற்றில் அந்தணரும் வேதமும் ! – 5 (Post No.3341)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 11  November 2016

 

Time uploaded in London: 5-09 AM

 

Post No.3341

 

 

Pictures are taken from various sources. Thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 8

இந்தக் கட்டூரையில் புறநானூற்றில் உள்ள பாடல்கள் 367 மற்றும் 305 ஆகியவை இடம் பெற்றுள்ளன

 

புறநானூற்றில் அந்தணரும் வேதமும் ! – 5

 

                      ச.நாகராஜன்

                            

 

ஔவையார் பாடிய பாடல் ஒன்று (வாழ்த்தியல் துறை) புறநானூற்றில் 367ஆம் பாடலாக மலர்கிறது.  பாடப்பட்டோர் : மூன்று தமிழ் மன்னர்கள்! சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சேரமான மாவெங்கோ!

 

மிகுந்த மகிழ்ச்சியுடன்  மூவேந்தர் மூவரையும் வாழ்த்திப் பாடுகிறார் பெரும் புலவர் ஔவையார்.

 

ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து

 

அந்த மன்னர்கள் எப்படிப்பட்டவர்கள்? தகுந்த பிராமணர்களுக்கு (ஏற்ற பார்ப்பார்க்கு) நீரினால் ஈரம் நிறைந்த கையினால் (ஈர்ங்கை நிறைய) பூ, பொன் ஆகியவற்றை கைவழியே நீரினால் சொரிந்து (பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து) தருகின்றனர்!

 

பாடலின் பின் பகுதியில் வரும் வரிகள் இவை:

 
ஒன்று புரிந்து அடங்கிய இரு பிறப்பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த

 

மூன்று தமிழ் மன்னர்களையும் ஒரு சேரப் பார்ப்பது எப்படி இருக்கிறது? புலவருக்கு அந்தணரும் அவர்களது தீ வளர்ப்புமே ஞாபகத்திற்கு வருகிறது – உவமையாக.

 

அறம் ஒன்றையே கூறும் வேதத்தை நன்கு உணர்ந்து (ஒன்று புரிந்து) நன்கு புலன்களை அடக்கிய இரு பிறப்பை – தாயின் கருப்பை வழியே பூமியில் பிறக்கையில் முதல் ஜனனம், பூணூல் போடும் போது அடையும் ஞானப் பிறவி இரண்டாம் பிறப்பு, ஆக இரு பிறப்பு (அடங்கிய இரு பிறப்பாளர்) அடைந்தோர், மூன்று அக்கினிகளை வளர்த்து ஹோமம் செய்வது போல (முத்தீப் புரையக் காண் தக) இருக்கிறது. (முத்தீ விளக்கம் முந்தைய கட்டுரையில் தரப்பட்டு விட்டதால் இங்கு மீண்டும் தரப்படவில்லை).

 

 

ஔவையார் மனதார வாழ்த்தும் இந்தப் பாடலை முழுதுமாகப் படித்து அனுபவிக்க வேண்டும்! அத்துடன் சோழ மன்னனின் பெயரில் உள்ள ராஜசூய யாகம் என்ற வார்த்தை அவன் அந்தப் பெரிய யாகத்தை முறைப்படி நடத்திப் பெரும் புகழ் பெற்ற்வன் என்பதை அறிவிக்கிறது என்பதையும் அறிந்து மகிழலாம். சங்க காலத்தில் இப்ப்டிப்பட்ட பிரம்மாண்டமான யாகங்களை மன்னர்கள் செய்வது அவர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இருந்திருக்கிறது!

 


இன்னொரு பாடலைப் பார்ப்போம். ஏற்கனவே பார்ப்பன வாகையில் ஒரு பாடலைப் பார்த்தோம். இன்னொரு பாடல் எண் 305 இதைப் பாடியவர் மதுரை வேளாசான் என்னும் புலவர்.

 

வயலைக் கொடியின் வாடிய மருங்கின்
உயவல் ஊர்திப் பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்
சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி
மாண் வினை யானையும் மணி களைந்தனவே. 

 

அடும் போர் ஒன்று நடைபெற இருக்கிறது. அதைத் தடுக்க வேண்டும்.

 

போர் நடக்கப் போகிறதே என்ற துக்கத்துடன் இரவு நேரத்தில் இளம் வயதுப் பார்ப்பனன் ஒருவன் வருகிறான். சில வார்த்தைகளையே சொல்கிறான். உடனே முற்றுகைக்காக இருந்த ஏணியும் வாயிலில் இருந்த கதவின் அடைப்பும் நீக்கப் பட அவனது விஜயம் வெற்றிகரமாக ஆனது.

 

தூதனாக வந்த தூயவன் சில சொற்களைச் சொல்ல – ஆம் –  போர் நின்று விட்டது.

 

அந்தணனின்  சில சொற்களுக்கு அவ்வளவு மஹிமை!

மெலிதான வயலைக் கொடியைப் போன்ற (வயலைக் கொடியின் வாடிய மருங்கின்) அந்தண இளைஞன் (பயலைப் பார்ப்பான்) துக்கத்துடன் வந்து (உயவல ஊர்தி) யாருக்காகவும் காத்திருக்காமல் (நில்லாது) உள்ளே நுழைந்து (புக்கு) சொல்லிய சொற்கள் சில தான்! (சொல்லிய சொல்லோ சிலவே). அதன் பின்னர் உடனேயே (அதற்கே) கதவில் இருந்த முற்றுகைக்கான ஏணியும் கதவடைப்பும் நீக்கப்பட்டன. ((ஏணியும் சீப்பும் மாற்றி)

போருக்குக் கிளம்பும் தருணத்தில் இருந்த, அழகிய போர் புரியும் யானைகளின் மீதிருந்த ரத்தினங்களும் களையப்பட்டன! (மாண் வினை யானையும் மணி களைந்தனவே.

 

 

சண்டை என்றவுடன் மன வேதனை அடைந்து சில சொற்களால் பெரும் போரை நிறுத்திய தூதுவனான ஒரு இளம் பார்ப்பானைப் போற்றிப் பாடப்படும் பாடல் இது!

போர் என்றால் அந்தக் காலத்திலும் வேதனையே மிகுந்திருந்தது என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. அதை நிறுத்துவதில் தான் அந்தணர் உள்ளம் இருந்தது.

 

“ஸர்வே ஜனா: ஸுகினோ பவந்து”

 

எல்லா மக்களும் சுகத்துடன் இருக்கட்டும்!

 

அந்தணர் வாழ்த்தும் வாழ்த்தில் தான் எத்தனை உயரிய சிந்தனை! சுகமான சிந்தனையும் கூட!!

                          *****             

                              புறநானூற்றுப் பாடல்களை

அதிகமாகச் சுவைத்த மகிழ்ச்சியுடன் அடுத்த சங்க இலக்கியத்திற்குள் புகுவோம்.  (தொடரும்)  

 

குறிப்பு: அன்பர்கள் இதுவரை வெளியாகியுள்ள எட்டுக் கட்டுரைகளையும் ஒன்றன் பின் ஒன்றாகப் படித்தால் தொடர்பு புரியும்.

 

 

புறநானூற்றில் அந்தணரும் வேதமும் – 4 (Post No.3339)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 10  November 2016

 

Time uploaded in London: 6-09 AM

 

Post No.3339

 

 

Pictures are taken from various sources. Thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 7

இந்தக் கட்டூரையில் புறநானூற்றில் உள்ள பாடல்கள் 6 மற்றும் 122 ஆகியவை இடம் பெற்றுள்ளன

 

புறநானூற்றில் அந்தணரும் வேதமும் ! – 4

 

                        ச.நாகராஜன்

                            

 

சங்ககாலத்தில் வாழ்ந்த அற்புதமான மன்னனான பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போற்றி காரிக்கிழார் என்ற புலவர் பாடிய பாடல் புறநானூற்றின் 6வது பாடலாக அமைகிறது.

பாடலின் முதல் நான்கு அடிகளே பாரத தேச ஒருமைப்பாட்டை நன்கு விளக்குகிறது.

 

 

வடக்கில் பனி படு நெடிதுயர்ந்த மலை.

தெற்கிலோ உருகெழு குமரி முனை

கிழக்கிலும் க்டல்; மேற்கிலும் கடல்!

 

வாடாஅது பனி படு நெடு வரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும்
குடாஅது தொன்று முதிர் பொளவத்தின் குடக்கும்”                                               (1 முதல் 4 வரிகள்)

 

அடுத்து புலவர் மன்னனின் தலை யாருக்கு மட்டும் தாழலாம் என்பதைக் குறிப்பிடுகிறார் இப்படி:-

 

 

அத்தை நின் குடையே முனிவர்
முக்கண் செல்வர் நகர் வலஞ் செயற்கே
இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே
வாடுக”
(வரிகள் 17 முதல் 21 முடிய)]

 

உனது குடை மூன்று கண்ணுடைய சிவபிரானின் கோவிலை வலம் செய்யும் போது தாழட்டும்;(முனிவர் முக்கண் செல்வர் நகர் வலஞ் செயற்கே அத்தை நின் குடையே)  நான்கு வேதங்களைச் சொல்லும் அந்தணர் கைகளைத் தூக்கி இருக்க அவர்கள் முன்னர் உன் தலை வணங்கட்டும்! (நின் சென்னி சிறந்த நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே இறைஞ்சுக)

 

 

சிவபிரானின் கோவிலிலும் சிவபிரானை மகிழ்விக்கும் வேதங்களைச் சொல்லும் அந்தணர் முன்னும் பாண்டியனின் தலை பணியலாம்; வேறு யாருக்கும் அவன் தலை தாழாது!

என்ன ஒரு பக்தி பாண்டிய மன்னனுக்கு!

வேள்வி பல நடத்திப் பெரும் புகழ் கொண்ட பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதியைப் போற்றிய அருமையான இப்பாடலில் சங்க காலச் சூழ்நிலை தெளிவாகத் தெரிகிறது.

 

 

அடுத்து பாடல் எண் 122ஐப் பார்ப்போம். இதைப் பாடியவர் கபிலர். பாடப்பட்ட பாட்டுடைத் தலைவன் மலையமான் திருமுடிக்காரி.

காரி கடை ஏழு வள்ளல்களில் ஒருவன்.

.இப்பாடலில் புலவர், காரியின் நாடு அக்கினி வளர்த்து யாகம் செய்யும் அந்தணரின் நாடு என்று சொல்கிறார்.தன் நாட்டையே ஈந்து உவந்த பெரும் வள்ளல் காரி என்பது இதனால் பெறப் படுகிறது!

 

நின் நாடே
அழல் புறம் தரூஉம் அந்தணர் அதுவே (வரிகள் 2  மற்றும் 3)

 

அடுத்து உன்னுடையது என்று சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது என்று கேட்டு அதற்கு பதிலையும் தருகிறார் இப்படி: நின் மனைவி வடமீனான அருந்ததி அன்ன கற்புடையாள். மிக மிருதுவாகப் பேசும் இயல்பினள் (வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை). அவளது தோள் அல்லாது வேறு எதையும் உன்னுடையது என்று நினைக்காதவன் நீ; அதனாலேயே நீ பெரியோனாகிறாய்! (தோள் அளவு அல்லதை நினது என இலை நீ பெருமிதத்தையே)

 

 

வட மீன் புரையுங் கற்பின் மட மொழி
அரிவை தோள் அளவு அல்லதை
நினது என இலை நீ பெருமிதத்தையே. (வரிகள் 8 முதல் 10 முடிய)

 

 

பத்தே வரிகள் கொண்ட பாடலில் மனதை நெகிழ வைக்கிறார் கபிலர். உருக வைக்கும் சொற்கள். உன்னதமான கருத்துக்கள்!

கற்பில் அருந்ததி போன்ற மனைவியைத் தவிர வேறு எதையும் தனக்கெனச் சொந்தம் கொண்டாடாத மாமன்னன் காரியைப் போல உலகம் கண்டதுண்டா!

 

 

பெரும் ஈகையாளன் காரியைப் போல் வேறு ஒரு மன்னனைக் காண முடியுமா?

 

நாட்டையே அந்தணருக்கு ஈந்த் காரியின் பெருங்கொடை ஒரு புறம் இருக்க அதற்குத் தகுதியான பாத்திரமாகத் திகழ்ந்த அந்தணரின் புகழ் குறைவானதா என்ன?

 

அருந்ததி என்று சொல்லப்படும் கற்பில் சிறந்த ரிஷி பத்தினியை ஒவ்வொரு திருமணத்திலும் மணமகன் மணமகளுக்குக் காட்டுவது வழக்கம். வசிஷ்டர் – அருந்ததி போல வாழ்வோம் என்பது அவர்கள் அந்தச் சமயத்தில் எடுக்கும் உறுதி மொழி!

 

இப்படிப் பண்பாட்டாலும், சடங்காலும், வேத மந்திரத்தாலும், அதற்கு உரிய தெய்வத்தாலும் ஒன்றாக இணைந்த ஒரு உயரிய தேசத்தையே சங்க இலக்கியம் சுட்டிக் காட்டுகிறது. சொற்களை அனுபவித்துப் படிக்க புறநானூறு நூலை எடுப்போம்! நாமே படிப்போம்!! தீய அர்த்தம் தரும் உரைகளைத் தீயில் போடுவோம்!!!

**********

FIVE DAY HINDU WEDDING- Part 3 (Post No.3338)

COMPILED BY by London Swaminathan

 

Date: 9 November 2016

 

Time uploaded in London: 19-59

 

Post No.3338

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

Second Day of the Five Day Wedding

On the morning of the second day the bride is duly decorated and loaded with jewels, partly marriage gifts, but some probably borrowed for the occasion. Then seated in a marriage palanquin, and accompanied by dancing women and a band of music, she is taken in procession to the house where the bridegroom’s father and friends lodge. The bridegroom then, all gorgeously arrayed, joins her and sits opposite to her in the palanquin. Then they are carried round in a grand procession back to the bride’s house.

 

Husband’s Name is sacred!

 

On their return home from this procession, and also when they return from any of the processions, as they alight from the palanquin, their feet are washed by some attendants, and they are made to speak each other’s name. This also is noteworthy, as it is not customary for a wife ever to mention her husband’s name, and it is amusing to see the various shifts that are resorted to in order to avoid doing so. Even in the case of a poor woman, if asked by one strange to the customs of the country what her husband’s name is, instead of replying she will, with a titter, ask some one standing by, perhaps her own child, to mention it. Sometimes for fun, romping girls will tease a little wife to make her say her husband’s name. They will shut up her in a room, or in some other way imprison her, and not let her out until she has mentioned what is usually so sacred and unmentionable. This day is passed in singing marriage songs and feasting, with a few minor ceremonies.

 

In the evening, there is again a grand procession, like that of morning, except that they make a longer round and fireworks are let off at various places on the way. On arriving home a homam is performed, and the second day’s affairs close with the usual feastings.

 

The following is a specimen of the songs sung on such an occasion

 

A KRISHNA LULLABY.

Refrain –come, let us sing sweet lullaby.

 

Come ye with eyes that twinkle bright,

And sing your sweetest lullaby.

The cradle swings with jewels set,

And there our baby Krishna lies.

—-Come, let us sing sweet lullaby.

 

To him who did in mercy save

Lost kari from fierce makari.

To him who ever happy is,

And rescues those who do believe,

—–Come, let us sing sweet lullaby.

 

To him who slew king Kamsa vile,

Who joy dispenses to the good.

To him who saved from evils great,

The parents whom he ever loved

 

——Come, let us sing sweet lullaby.

 

To Cupid’s father, beauteous one,

Who stole the butter, Nanda’s son,

To him who bears mount Mandara,

Loved Krishna, king of Keshava.

-Come, let s sing sweet lullaby

 

Sadasyam Ceremony

On the morning of the third day there is the usual procession, after which there is an elaborate ceremony called Sadasyam or the meeting of the elders. During this ceremony presents are made

of cloths and money to various people and the forenoon closes with a grand feast.

 

In the evening a very elaborate procession is made. The people first go to the bank of a river or some nice shady place, where carpets are spread. When all are seated, betel is served round and rose-water sprinkled on them. Then various games are played. All this being over, the procession again forms and, with much blazing of torches and burning of coloured lights, braying of horns and beating of drums, singing of dancing girls, and letting off of fireworks, it slowly makes a grand progress through the streets home again. It is not a pleasant thing to meet one of these marriage processions in the narrow streets of a village, or in the crowded parts of a bazaar, when returning home after dark from an evening ride. The blare of the trumpets, the din of the drums, the swishing rush and pistol-like report of the rockets, together with the glare of the torches and coloured lights, all combined form a scene that is enough to make any animal nervous.

To be continued…………………..

 

குடிகாரர்கள் பற்றி கம்பன் எச்சரிக்கை (Post No.3337)

Written  by London Swaminathan

 

Date: 9 November 2016

 

Time uploaded in London: 18-32

 

Post No.3337

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

தமிழன் புதைத்துக் கெட்டான் என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது தங்க நாணயங்கள், நகைகள் முதலியவற்றை மற்றவர்களுக்குத் தெரியாமல் புதைத்து வைத்துவிட்டு இறந்தும் போய்விடுவான். பின்னர் அதை யாரோ ஒருவன் புதையலாக எடுத்து பயனடைவான் என்பது இதன் பொருள். இப்போது தமிழன் குடித்துக் கெட்டான் என்று பழமொழியை மாற்றி அமைப்பது சாலப் பொருத்தம்.

 

குடியும் கூத்தும் தமிழனைக் கெடுத்தது திருவள்ளுவர் காலத்திலிருந்தே இருந்ததை நாம் திருக்குறள் மூலமாக அறிவோம். இதற்காகவே “கள்ளுண்ணாமை, வரைவின் மகளிர், பெண்வழிச் சேரல்” என்று பல அதி காரங்களில் முழங்கியுள்ளார்.

 

ஆனால் கம்பன் அதை சுக்ரீவன் வாயிலாக கிட்கிந்தாக் காண்டத்தில் வழங்கும் பாங்கு படித்துச் சுவைக்க வேண்டியது.

நறவுண்டு மறந்தேன், நாணுகிறேன்

 

உறவுண்ட சிந்தையானும் உரைசெய்வான் ஒருவற்கின்னம்

பெறலுண்டோ அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி உற்றது

இறலுண்டோ என்னின் தீர்வான் இருந்த பேரிடரை எல்லாம்

நறவுண்டு மறந்தேன் காண நண்ணுவல் மைந்த என்றான்

 

பொருள்:-

அங்கதனை நோக்கிச் சுக்ரீவன் கூறியது: இராமனிடம் நான் பெற்ற உதவி, மற்றொருவனால் பெறக்கூ டியதா?  நான் பெற்ற செல்வத்துக்கு அழிவு உண்டோ? இராமனின் பெருந் துன்பங்களை எல்லாம் மது அருந்தியதால் மறந்துவிட்டேன் ஆகையால் இலக்குவனைப் பார்க்க வெட்கமாக இருக்கிறது.

 

பஞ்ச மா பாதகம் (5 பெரும் பாவங்கள்)

ஏயின இதுவலால் மற்று ஏழமைப் பாலதென்னோ

தாய் இவள் மனைவி என்னும் தெளிவு இன்றேல் தரும் என் ஆம்

தீவினை ஐந்தின் ஒன்றாம் அன்றியும் திருக்கு நீங்கா

மாயையின் மயங்குகின்றாம் மயக்கின்மேல் மயக்கும் வைத்தாம்

 

பொருள்:-

என்னிடம் குடிப்பழக்கத்தைத் தவிர வேறு என்ன இருக்கிறது? சீச் சீ! தாய் யார் , மனைவி யார் என்று கூட வித்தியாசம் தெரிவதில்லையே! கள் குடிப்பவனிடம் எவ்வளவு படிப்பு இருந்து என்ன பயன்? பஞ்சமா பாதகங்களில் இதுவும் ஒன்றே (கொலை, களவு, மது பானம் அருந்தல், பொய் சொல்லுதல், குருவை நிந்தித்தல்). ஏற்கனவே மாயையில் சிக்கித் தவிக்கும் எனக்கு குடி வேறு மயக்கம் தருகிறது. இது மிக இழிவானது.

 

குடித்தால் வஞ்சனை, களவு, பொய் வரும்

 

வஞ்சமும் களவும் பொய்யும் மயக்கமும் மரபில் கொட்பும்

தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும் களிப்பும் தாக்கும்

கஞ்ச மெல்லணங்கும் தீரும் கள்ளினால் அருந்தினாரை

நஞ்சமும் கொல்வதல்லால் நரகினை நல்காதன்றே

 

 

பொருள்:-

குடித்தால் வஞ்சனை,  திருடுதல்,  பொய் கூறல், அறியாமை, மாறான கொள்கை, அடைக்கலம் அடைந்தோரை கைவிடுதல், செருக்கு,  ஆகியன வருத்தும். அதே நேரத்தில் தாமரை மகளும் (லெட்சுமி) நீங்கிவிடுவாள் நஞ்சைச் சாப்பிட்டால் உடல் மட்டும் அழியும். இதுவோ உடலையும் அழித்து ஆளை நரகத்திலும் தள்ளும்.

 

இன்னும் இரண்டு பாடல்களில் மதுவால் கேடுவரும் என்று பெரியோர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். நல்ல வேளை! அனுமனின் புத்திமதியால் பிழைத்தேன் என்பான் சுக்ரீவன்

கேட்டெனென் நறவால் கேடு வரும் எனக் கிடைத்த அச் சொல்

காட்டியது அனுமன் நீதிக் கல்வியால் ……………….

என்றும்

இதைக் கையால் தொடுவது கெட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். மனதினால் நினைப்பதே தப்பு!

ஐய நான் அஞ்சினேன் இந்நறவினின் அரிய கேடு

கையினால் அன்றியேயும் கருதுதல் கருமம்

என்றும் சொல்லுவான்.

 

—சுபம்–

வெங்காயம்! என்னடா தமிழ்! வெங்காயம்!!! (Post No.3321)

Written  by London Swaminathan

 

Date: 5  November 2016

 

Time uploaded in London: 17-45

 

Post No.3321

 

 

Pictures are taken from various sources; they are only representational.

 

contact; swami_48@yahoo.com

 

தமிழனுக்கு முதலாவது தெளிவான நேரான சரித்திரமே இல்லை. அதுபோலவே சமய ஞான சாதனமும் இல்லை. இவை இல்லாமல் தமிழனுக்கு என்று ஆரிய ஆதிக்கமும் கலப்பும் அற்ற இலக்கியமும் இல்லை.”

 

தமிழின் மூலமோ, தமிழ் இலக்கியத்தின் மூலமோ, தமிழ்ச் சமயம் பண்பாடு மூலமோ நாம் உலக மக்கள் முன்னனி வரிசையில் ஒருநாளும்  இருக்கமுடியாது.

இன்றைய நிலமையைவிட வேகமாக முன்னேறவேண்டுமானால் ஆங்கிலம்தான் சிறந்த சாதனம்.

 

 

1957 ஆம் ஆண்டு மலேசிய தமிழ் முரசு பத்திரிக்கை மலரில் வெளியான ஒரு கட்டுரையில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தமிழ் கலாசாரம் பற்றி தனது கருத்துகளைப் பட்டவர்த்தனமாகச் சொல்லியிருக்கிறார். அதை வெளியிட்ட பத்திரிகையே இது எங்கள் பத்திரிக்கையின் கருத்து அல்ல என்று ஈ.வெ.ரா.வை கை கழுவிவிட்டது!

 

கட்டுரை நகலை இணத்துள்ளேன் அதை பெரிதாக்கி படிக்க இயலாதவர்களின் நலன் கருதி சில அம்சங்களை மட்டும் இங்கே மீண்டும் எழுதுகிறேன் (அவர் சொன்னபடியே)

 

இவர் தமிழ் துரோகியா? தமிழ் அன்பனா என்று வாசகர்களே  முடிவு செய்யலாம்.

தினமணியில் வந்த ஒரு பழைய செய்தி

 

திருச்சியில் பகுத்தறிவுப் பகலவர்களைப் பெற்றெடுத்த, “தாலி அறுத்த மாதர்” மகாநாட்டில் பேசிய  ஈ.வெ.ரா. திருவள்ளுவரைச் சாடியதை நாங்கள் தினமணியில் பெட்டிச் செய்தியாக முதல் பக்கத்தில் வெளியிட்டோ . (40 ஆண்டுகளுக்கு முன்னர் நான் தினமணி சீனியர் சப் எடிட்டராக வேலை பார்த்தபோது).

 

எங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் கரஸ்பாண்டன்ட் கோபால ஐயர், ஈ.வெ.ராவுக்கு மிகவும் பிடித்த ஐயர்களில் ஒருவர். திருச்சியில் நடந்த திராவிடக் கழக மாநாட்டு விஷயங்களை அப்படியே ஆங்கிலத்தில் எழுதிக் கொடுப்பவர்.

 

அவர் அனுப்பிய செய்தியைத்தான் நாங்கள் முதல்பக்கத்தில் பாக்ஸ் ஐயிட்டமாக BOX ITEM வெளியிட்டோம்.

 

தெய்வம் தொழாள் (குறள் 55) —– என்னும் திருக்குறளைச் சொல்லி முதல் வரிசையில் அமர்ந்த பெண்களைப் பார்த்து நிங்கள் எல்லாம் பத்தினிப் பெண்கள்தானே? என்று ஈ.வெ.ரா. கேட்டார். அதுகளும் மாடு மாதிரி தலை அசைத்து ஆமாம் சாமி போட்டன. எங்கே பார்ப்போம்; வள்ளுவன் சொல்றான்— பத்தினிப் பெண்கள் எல்லாம் பெய் என்றால் மழை பெய்யுமாம்; நீங்கள் எல்லோரும் “பெய்” என்று சொல்லுங்கள் என்றவுடன் அதுகளும் “பெய்” என்றன. மழை பெய்யவில்லை. பார்த்தீர்களா வள்ளுவனின் மூடநம்பிக்கை என்று சொல்லி ஈ.வெ.ர. உரையை முடிக்க அந்தப் பெண்கள் மூஞ்சியில் ஈ ஆடவிலை. இப்பொழுது வள்ளுவன் சொன்னது தப்பா? அல்லது அதுகள் எல்லாம் பத்தினிகள் இல்லையா– என்ற ஒரு தரும சங்கடமான நிலையில் மகளிரைத் தள்ளிவிட்டார் பெரியார்.

 

கீழே உள்ளதைப் படியுங்கள் இன்னும் வேடிக்கை பார்க்கலாம்:—

 

xxxxx

 

“மொழி என்பது மனிதனுக்கு அவ்வளவு ஒரு முக்கிய சாதனம் அல்ல. இயற்கையானதும் அல்ல. அதற்கு ஒரு கட்டாயமும் தேவை இல்லை”.

xxxxx

 

நமக்கு சொந்த மொழி என்பது பிறந்த ஜாதியின் காரணமாக. எனக்குக் கன்னடம். மற்றும் சிலருக்குத் தெலுங்கு. மற்ற தமிழ்நாட்டுப் பெரு ம்பாலான மக்களுக்குத் தமிழ்.

 

xxxxx

 

தமிழ்நாடு நம் சொந்த நாடு. ஆனாலும் அட்சி தமிழர்கள் அல்லாத அந்நியர்களுடைய ஆட்சியாக இருப்பதால் அந்த அந்நியர்கள் பலர் ஒன்று சேர்ந்து நம்முடைய நாட்டை அடக்கி ஆள்பவர்களாக இருப்பதனால் — இந்தி மொழிதான் அட்சி மொழியாகவும் போதனா மொழியாகவும்……………… இது நமக்கு ஒரு மாபெரும் கெட்ட வாய்ப்பும் வெட்கப்படத்தக்கதுமான சம்பவமுமாகும்.

xxxx

காலம்சென்ற ஐக்கோர்ட் ஜட்ஜ் சதாசிவ ஐய்யர் குமாரர் கிருஷ்ணமூர்த்தி அய்யர் தலைமையில் மொழி என்னும் தலைப்பில்   (1939 ஆம் ஆண்டில் என்று ஞாபகம்) பேசியிருக்கிறேன். ஆங்கில எழுத்துக்களையே தமிழ் நெடுங்கணக்காக, தமிழ் அகரவரிசையாக எடுத்துக்கொள்ளலாமென்றும், தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற எழுத்து ஆங்கிலத்தில் ஒன்றிரண்டு குறையுமானால் அதற்கேற்ப தமிழ் எழுத்தையே எடுத்துக் கொள்ளலாமென்றும் சொன்னதோடு மற்றும்,

ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாகும் காலம் ஏற்பட்டால்தான் மிகவும் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவேன் என்று பேசியிருக்கிறேன்.

 

xxx

“இங்கிலீஷ் மொழியே ஆட்சி மொழியாக வேண்டும் என்று நீங்கள் பேசியவுடன் எல்லோரும் ஒன்றும் பேசாமல் வாயை மூடிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் யாராவது இப்படிப் பேசியிருந்தால் கூட்டத்தில் பெரிய கலாட்ட செய்திருப்பார்கள் என்று 6,7 வருடங்களுக்கு முன் நடந்த இந்தி எதிர்ப்பு மகாநாட்டிற்குப் பிறகு சி.என். அண்ணாதுரை என்னிடம் கூறினார்.

xxx

 

நான் ஆங்கிலம் ஆட்சி மொழியாக வேண்டும் என்று சொன்னவுடம், மொழி வெறியர் சிலர், நீ யாருக்குப் பிறந்தாய்? என்று கேட்டனர்.

 

அந்த மொழியைப் பேசவேண்டும் என்று சொல்லுவது நாம் ஆங்கிலேயனுக்குப் பிறந்ததாகும் என்றால், மற்றபடி காப்பி குடிப்பது முதற்கொண்டு ரயில், ஆகாய விமானம், ரேடியோ, டெலிபோன் , மருந்து முதலியவை ஆங்கிலேயனுடையது என்று தெரிந்து அனுபவிக்கிறோம். இதனால் எத்தனை முறை ஆங்கிலேயனுக்குப் பிறந்தோம் என்பதை சிந்தித்துப் பார்த்தால், மொழி பேசுவதனால் ஆங்கிலேயனுக்குப் பிறந்தவனாக மாட்டோம் என்று சொல்லுவேன்.

 

தமிழின் மூலமோ, தமிழ் இலக்கியத்தின் மூலமோ, தமிழ்ச் சமயம் பண்பாடு மூலமோ நாம்  உலக மக்கள் முன்னனி வரிசையில் ஒருநாளும்  இருக்கமுடியாது.

இன்றைய நிலமையைவிட வேகமாக முன்னேறவேண்டுமானால் ஆங்கிலம்தான் சிறந்த சாதனம்.

 

ஆங்கிலமே அரசியல் மொழியாகவும் போதனா மொழியாகவும் இருக்க வேண்டும்.

ஆங்கில எழுத்துக்களே தமிழ் நெடுங் கணக்காவது அவசியம்.

ஆங்கிலமே நம் பேச்சு மொழியாவது நலம்பயத்தக்கது

 

என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தமிழை எடுத்துக்கொண்டாலும் இன்று உலக ஞானத்தில் முற்போக்குத் தன்மையில் தமிழுக்கு என்ன சிறப்பு இருக்கிறது? தமிழனுக்கு முதலாவது தெளிவான நேரான சரித்திரமே இல்லை. அதுபோலவே சமய ஞான சாதனமும் இல்லை. இவை இல்லாமல் தமிழனுக்கு என்று ஆரிய ஆதிக்கமும் கலப்பும் அற்ற இலக்கியமும் இல்லை. அதாவது ஆரிய வரவுக்கு முந்தியது என்று சொல்லத்தக்க வண்ணம், விவகாரத்திற்கு இடமில்லாத தன்மையில் எதுவும் கிடைப்பது மிகவும் அருமையாகதான் இருக்கிறது. தமிழ் மொழி வேண்டுமானால் ஆரியத்துக்கு முந்தியது என்று ஒப்புக்கொள்ளலாம். அதுவும் தமிழனுக்கு இன்றளவும் என்ன பயனைக் கொடுத்திருக்கிறது. விஞ்ஞாநதிற்கு சிறிதும் பயன்படத்தக்கதாய் இல்லை. அறிவுக்கும் தக்கபடி பயனளிக்க முடியவில்லை.

 

தமிழனின் பேச்சு மொழி”, “தாய் மொழி தமிழ்” — என்பதைத் தவிர தமிழுக்கு வேறு உலக முக்கியத்துவம் எதும் இருப்பதாக எனக்குத் தென்படவில்லை. தமிழும் தமிழனும் பெரும்பாலும் பழங்கால நிலச் சின்னங்களாகவே காணப்படுகின்றனர்.”

 

–SUBHAM–