பாண்டியனின் சேனைக்கு அன்னம் தந்து உதவிய அன்னத்தியாகி!
ச.நாகராஜன்
கொடும் பஞ்சம் நிலவிய காலம் அது. பாண்டிய நாட்டில் தன் சேனை
வீரர்களுக்கு அன்னம் கொடுக்க முடியாமல் வருந்தினான் பாண்டிய மன்னன். தன் சேனையின் ஒரு பகுதியை முளசை வேலப்பன் என்பவரிடம்
அனுப்பினான்.
வேலப்பனோ பெரு மகிழ்ச்சி எய்தினார். பாண்டிய நாட்டின் பஞ்சம்
தீரும் வரையில் அந்தப் படைவீரர்களுக்கு அமுதூட்டி மகிழ்ந்தார். இயல்பு நிலை திரும்பியவுடன்
படை வீரர்கள் பாண்டிய நாடு திரும்பினர்.
வேலப்பனின் இந்த அற்புதமான செயலைக் கண்டு மகிழ்ந்த பாண்டிய மன்னன்
அவருக்கு அன்னத்தியாகி என்ற பட்டத்தை அளித்தான்.
இந்தச் செய்தியை வரலாறு கூறுகிறது.
“தென்னவன் படைக்குச் செழிப்புறு வரையி
லன்ன மளித்த அன்னத் தியாகி”
என்று இவ்வாறு முளசையார் மெய்கீர்த்தி கூறுகிறது.
இந்த வரலாற்று வீரனை கொங்கு மண்டல சதகம் தனது 77ஆம் பாடலில்
பாடிச் சிறப்பிக்கிறது.
இந்தப் பாடலின் திரண்ட கருத்து : உண்ணுதற்குத் தண்ணீரும் கூட
அகப்படாத கொடிய பஞ்ச காலத்தில் பாண்டியனின் சேனைக்கு அமுதூட்டி அன்னத்தியாகி என்று
புகழ் பெற்ற வேலன் என்பவனது முளசை நகரும் கொங்கு மண்டலத்தில் உள்ளதேயாம்.
என்ற திருச் – திருப்பணிமாலைப் பாடலும் இங்கு ஒப்பு நோக்கத்
தக்கது.
இந்த அன்னத்தியாகியின்
மரபில் வந்த ஒருவன் அடங்காத ஒரு குதிரையின் மீது ஏறி அதை அடக்கிய ஆற்றலைக் கண்டு வியந்த
பாண்டிய மன்னன் பெருத்த வெகுமதியையும் அதிகாரத்தையும் கொடுத்தான் என்ற வரலாறும் உள்ளது.
அன்னத்தியாக பட்டன் என்னும் ஒரு புலவர் குடும்பத்தார்
இன்றும் வாழ்ந்து வருவது குறிப்பிடத் தகுந்த
ஒரு விஷயம்.
சின்னச் சின்ன சிறப்பான
செய்திகளை இன்று நாம் மறந்து விட்டோம்.
இப்படிப்பட்ட பாடல்கள் நமக்கு உத்வேகம் ஊட்டும் என்பதில் ஐயமில்லை.
லண்டனில்
ராயல் கட்டிடக் கலைஞர் சங்கம் புகழ்பெற்றது. 1980ஆம் ஆண்டில் அவர்கள் வெளியிடும் மாத
இதழில் தாஜ்மஹால் பற்றிய வழக்கமான கதைகளை எதிர்த்து இரண்டு கடிதங்கள்
வெளியிடப்பட்டன.ஒன்று திரு ஓக் எழுதியது; மற்றொன்று நான் எழுதிய கடிதம்.
எங்களுடைய வாதங்களை எவரும் எதிர்த்து எழுதவில்லை. ஓக், பாதுஷாநாமா தொகுதி 1, பக்கம் 403 விஷயத்தை
மேற்கோள் காட்டியிருந்தார். நான் என் கடிதத்தில் கூறியது என்ன?
ஷாஜஹான்
ஆட்சிக் காலத்துக்கு முன்னர் ஆக்ரா நகரம் எப்படி இருந்தது? அதுதான் 17ஆம்நூற்றாண்டு வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் மழுப்பிய விஷயம். ஆங்கிலேயர்களைப் போலவே
டச்சுக்காரர்களும் வியாபாரம் செய்ய நம் நாட்டுக்கு வந்தனர். அவர்களுக்கு ஆக்ராவில்ஒரு வணிக நிலையம் இருந்தது. 1620 முதல் 1627 வரை அவர்களுடைய வர்த்தகப்பிரதிநிதியாக இருந்தவர் பிரான்சிஸ்கோ
பெல்சார்ட் என்பவர் ஆவார். ஹாலந்து நாட்டிலுள்ள தனது மேலதிகாரிகளுக்கு அவர் 1626ல் ஒரு அறிக்கை தயாரித்து அனுப்பினார்.
அவரும் ஆக்ரா நகரம் அப்போது இருந்த நிலைமையை விளக்குகிறார். இது தன்னிச்சையாக ஒரே நேரத்தில் நடந்த ஒரு அதிசயம்.
அவர் சொல்கிறார்:-
இது
குறுகலான, ஆனால் நீளமான ஒரு நகரம். ஏனெனில் எல்லா
செல்வந்தர்களும்,
செல்வாக்குமிக்கவர்களும்நதிக் கரைஓரமாக பத்தரை மைல் தொலைவுக்கு
அரண்மனைகளைக் கட்ட்டியுள்ளனர். நான் முக்கியமான சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.
வடக்கிலிருந்து
துவங்கினால் பஹதூர் கானின் அரணமனை இருக்கிறது. பின்னர் போஜ……….பிறகு
செங்கோட்டை இருக்கிறது. (இதை பெலசார்ட் வருணிக்கிறார்).
அதையும் தாண்டி பெரிய மார்க்கெட் (நகாஸ்)
உளது. அதையும் தண்டி பிரபுக்கள் அரண்மனைகள்- மீர்ஜா அப்துல்லா, ஆகாஅநவுர், மஹபத் கான், காலஞ்சென்ற ராஜா மான்சிங்கின் அரண்மனை, மதோ சிங் அரண்மனை”
இந்த
அறிக்கையின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1925ம் ஆண்டு முதல் கிடைக்கிறது. ஆயினும் ஒரு வரலாற்று ஆசிரியரும்
குறிப்பிடவில்லை. ஏன்? காரணம்மிகவும் தெரிந்ததே.
நதிக்கரையில்
பத்தரை மைல் நீளப் பிரதேசம் முழுதும் அரண்மனைகள் இருப்பதாக 1626ல் பெலசார்ட் கூறியுள்ளார். ராஜாமன்சிங்கின் அரண்மனை, கடைசி அரண்மனைக்கு ஒரு இடம் முன்னதாக
இருந்தது. மனைவியை அடக்கம் செய்வதற்காக ஷாஜஹான் இதை எடுத்துக்கொண்டதாக பாதுஷா நாமா சொல்கிறது. ஆகையால் நாம் தாஜ்மஹால் என்று
எதைச் சொல்கிறோமோ அது ராஜா மான்சிங்கின் அரண்மனையே.இந்த உண்மையை வரலாற்று ஆசிரியர்கள்
நம்மிடமிருந்து மறைத்து வைத்திருந்தனர்.
என்னுடைய
முயற்சிகளுக்கு ஒரு பலன் கிடைத்தது; 1982ம் ஆண்டில் தொல்பொருட் துறை ‘தாஜ் மியூஸியம்’ என்று ஒரு சிறு புத்தகம் வெளியிட்டது.
அதன் ஆசிரியர்கள் வழக்கமாகச் சொல்லப்படும் கதைகளை எல்லாம் சொல்லிவிட்டு மும்தாஜ்,
பர்ஹான்பூரில் இறந்தார் அவருடைய சடலம் அங்கே அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு
ஆறு மாதங்களுக்குப் பின்னர் அந்த சடலத்தைத் தோண்டி எடுத்து சவப்பெட்டியை
ஆக்ராவுக்கு அனுப்பினார். அதுவரைக்கும் அந்த இடத்தில் ராஜா மான்சிங்கின் அரண்மனை
இருந்தது” … இதை எழுதிய ஆசிரியர்கள் ஜியாவுதீன் அஹமது தேசாய், கவுல். இப்பொழுது அந்த அரண்மனை
தாஜ்மஹால் என்று அழைக்கப்படுகிறது இதைவிட எப்படி எளிதாகச் சொல்ல முடியும்? ஒரு சடலத்தை அரண்மனையில் புதைக்க
கட்டிடப் பணிகள் எதுவும் தேவையா?
லண்டனுக்கு அருகில் வசிக்கும்
திரு.காட்போலே, தாஜ்மஹாலின் உண்மைக் கதையை
ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதைத் தமிழில் மொழிபெயர்க்க ஒரு நண்பர் மூலம் என்னை
அணுகினார். நான் மொழி பெயர்த்த கட்டுரையை எனது பிளாக்கில் வெளியிட அனுமதி தந்தார்.
இதோ நீண்ட கட்டுரை:
தாஜ் மஹால்- உண்மையைச் சொல்லும் நேரம் வந்துவிட்டது
தாஜ்
மஹால் பற்றிப்பல கதைகள் உண்டு.ஆனால் அவை எல்லாவற்றிலும் ஒரு
வாக்கியத்தைக் காணலாம்- ‘இதைக் கட்டுவதில் 22 ஆண்டுகளுக்கு 20,000 பேர் ஈடுபட்டனர்’. இது உலகமே அறிந்த ஒரு செய்தி. ஒரு
சின்னக் கேள்வி. யாரிடமிருந்து இந்தச் செய்தி கிடைத்தது?
பிரான்ஸ்
நாட்டைச் சேர்ந்த ரத்தின வியாபாரி ஜே பி டவர்னியர் எழுதிய இந்தியப்பயணம் என்ற நூலில் இருந்துதான் இந்த
எண்ணிக்கை வந்தது. அவர் சிவாஜியின் காலத்தில் இந்தியாவுக்குஆறு முறை—1638 முதல் 1668 வரை — துணிகர பயணங்களை மேற்கொண்டார்..
டாவர்னியர் சொல்கிறார்- “இந்தக் கட்டிடப்பணியின் துவக்கத்தையும் நிறைவையும்
நான் கண்டேன். இதில் 22 ஆண்டுகளுக்கு
20000 ஊழியர்கள் இடைவிடாது
பணியாற்றினர்” என்று.
டவர்னியரின்
புஸ்தகம் முதலில் பிரெஞ்சு மொழியில் 1675ல் வெளியானது.அந்தக் காலத்தில் ஒரு தனி மனிதன் இவ்வளவு நீண்ட பயணம்
செய்வது ஒரு துணிகரச் செயலாகக் கருதப்பட்டது. பயணத்தில் பல கஷ்டங்களைச் சந்திக்க
வேண்டியிருக்கும்;
பலமொழி, கலாசாரம் உடைய ஆட்களுடன் பழக வேண்டியிருக்கும்; அவர்களுடைய நடை உடை பாவனைகளுக்கு ஏற்ப
மாறவேண்டியிருக்கும்; பின்னர் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும்; இதுவே நம்பமுடியாத சாதனை. அத்தோடு
டவர்னியரோ வைரம் முதலான ரத்தினக் கல்
வியாபாரம் செய்பவர்.ஒரு முறை அல்ல;இரு முறை அல்ல; டவர்னியர் இப்படி ஆறு முறை பயணம்
செய்தார். ஆகையால் அக்காலத்தில் அவருடைய புஸ்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 1677 முதல் 1811க்குள் அவருடைய புத்தகம்
ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது .ஒன்பது ஆங்கிலப் பதிப்புகள்
வெளியாகின.அதே காலத்தில் 22 பிரெஞ்சு
மொழிப் பதிப்புகள் வெளியாகின.
1889ம் ஆண்டு டாக்டர் பால் என்பவர்
பிரெஞ்சு புத்தகத்தை மொழி பெயர்த்து முந்திய தகவல்களைத் திருத்தினார். அவர் நிறைய
அடிக்குறிப்புகளையும் சேர்த்து கூடுதல் தகவல் சேர்த்தார். டவர்னியரின் பயணத்தை
நன்கு ஆராய்ந்து அவரது ஆறு பயணங்களின் விவரங்களையும் சேர்த்தார்.
அதிலிருந்து டவர்னியர் இரண்டு முறை மட்டுமே ஆக்ராவுக்கு வந்ததது தெரிகிறது 1640-41 குளிர் காலத்திலும் 1665ம் ஆண்டிலும். இது இன்னொரு சுவையான
வினாவை எழுப்பும்.
ஷாஜஹானின்
மனைவி 1631ம் ஆண்டில் இறந்ததாகவும் உடனே ஷாஜஹான்
தாஜ் மஹல் கட்டிட வேலையைத் துவங்கியதாகவும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அது
சரியென்றால் டவர்னியர் தாஜ்மஹால் கட்டத் துவங்கியதைப் பார்த்திருக்க முடியாது.
ஏனெனில் அவர் அதற்குப் பத்து ஆண்டுகளுக்குப் பின்னரே ஆக்ராவுக்கு வந்தார்.
அவுரங்க
சீப், அவருடைய தந்தையான ஷாஜஹானை ஆக்ராவிலுள்ள செங்கோட்டையில் 1658 முதல் சிறை வைத்து ஆட்சியைக்
கைப்பற்றினார்.அவுரங்கசீப் தாஜ்மஹாலை கட்டி முடித்தார் என்று எந்த வரலாற்று
அறிஞரும் எழுதவில்லை. அது சரியென்றால், டவர்னியர் தாஜ்மஹால் கட்டிடம் நிறைவு அடைந்ததையும் பார்த்திருக்க
முடியாது.
அப்படியானால்
20,000 தொழிலாளர்கள் இடைவிடாது பணியாற்றினர்
என்று டவர்னியர் சொல்லுவது அர்த்தமற்றது.ஏன் இந்த வரலாற்று உண்மையை 117 ஆண்டுகளாக வரலாற்று அறிஞர்கள்மறைத்து வைத்தனர் ? காரணம் மிகவும் தெளிவானதே.இந்த உண்மை, கதையின் அஸ்திவாரத்தையே ஆட்டுகிறது.
பாதுஷாநாமா
– இதுஎன்ன சொல்கிறது?
இந்துக்களுக்கு
வரலாற்று உணர்வே இல்லை என்று பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுவர். முஸ்லீம்
ஆட்சியாளர்கள் மட்டுமே வரலாற்று தகவல்களைப் பதிவு செய்ததாக விளம்புவர்.போகட்டும். நாம் ஷாஜஹான் காலத்தில் எழுதப்பட்ட
பாதுஷா நாமா பக்கம் நம் பார்வையைச் செலுத்துவோம். வங்காளத்தில் இருந்த ஆசியக்
கழகம் 1867, 1868 ஆண்டுகளில் பாதுஷா நாமாவின் பாரஸீகப்
பதிப்பை இரண்டு பகுதிகளாக வெளியிட்டது.ஆங்கிலமேஜர் ஒருவரின் மேற்பார்வையில் இரண்டு
மௌல்விகள் இதைச் செய்தனர். மிகவும் விந்தையான விஷயம் என்னவென்றால் தாஜ் மஹால் எப்படிக்
கட்டப்பட்டது என்று பாதுஷா நாமா சொல்லுவதை
எந்த வரலாற்று ஆசிரியனும் வெளியிடுவதில்லை. ஏன்?
எட்டாவது
நூற்றாண்டில் முகமது பின் காசிம் சிந்து நதி தீரத்தில் நடத்திய தாக்குதலிலிருந்து 19-ஆவது நூற்றாண்டில் மராட்டியர் ஆட்சி
வீழ்ச்சி அடையும் வரையான இந்தியவரலாற்றை எழுதும் மஹத்தான பணியை எலியட் மற்றும் டவ்சன் என்ற இரு ஆங்கிலேயர்கள் மேற்கொண்டனர். அதாவது1200 ஆண்டு வரலாறு. ஆனால் முஸ்லீம்கள்
எழுதிய வரலாற்றை மட்டும் அடிப்படையாக வைத்து அவர்கள் எழுதினர். 1867 முதல் 1877 வரை பத்து தொகுதிகளாக அவை வெளியாயின.
ஏழாவது தொகுதி ஷாஜஹான், அவுரங்கசீப் ஆகியோரின் ஆட்சி பற்றியது. அதில் தாஜ்மஹால்
என்றசொல்லே இல்லை.
அவர்கள்
என்னசொல்லியிருக்க வேண்டும்? நாங்கள் ஷாஜஹானின் ஆட்சிக்காலத்தில் அவரால் அதிகாரபூர்வமாக எழுதிவைக்கப்பட்ட
பாதுஷாநாமாவை ஆதாரமாகக் கொண்டு இந்த வரலாற்றை எழுதியுள்ளோம். அதில் தாஜ் மஹால்
பற்றி எதுவும் இல்லை என்று சொல்லியிருக்க வேண்டும். அவர்கள் அப்படி எதுவும்
செப்பவில்லை. வரலாற்று அறினஞர்கள் இதையும் கடந்த 130 ஆண்டுகளாகச் நம்மிடம் சொல்லவில்லை.
1896ம் ஆண்டு ஆக்ராவின் விரிவான வரலாறு என்ற நூலை கான் பகாதூர் சையது முகமது லதீப் எழுதினார்.அவர் பாதுஷாநாமாவை பல முறை மேற்கோள் காட்டினார். ஆனால் பக்கங்களின் எண்களைக் குறிப்பிடவில்லை. பக்கம் 105-ல் அவர் சொல்கிறார்,………………………..
உத்தரமேரூர் கோவிலுக்குச் சென்று திரும்பிய பின்னர் அது பற்றிய அருமையான புத்தகம் கிடைத்தது. அடக் கடவுளே! இந்தப் புத்தகம் முன்னரே கிடைத்திருந்தால் ஒரு நாள் முழுதும் உத்தரமேரூருக்கு ஒதுக்கியிருக்கலாமே என்று வருத்தப் பட்டேன்.
உத்தரமேரூர்
, செங்கல்பட்டுக்கு அருகில் இருக்கிறது.
சென்னையிலிருந்து இரண்டரை மணி நேர்த்தில் செல்லலாம்.
சென்னையிலிருந்து
லண்டனுக்குப் புறப்படுவதற்குச் சில மணி நேரத்துக்கு முன்னர் உலகப் புகழ்பெற்ற
தொல்பொருட்துறை நிபுணர் டக்டர் இரா. நாகசாமியைச் சந்தித்து (2-4-2019) ஆசிபெற்றேன். அவர் எழுதிய உத்தரமேரூர்
என்ற புத்தகத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் அளித்தார். அத்துடன் மேலும் பல
புத்தககங்களையும் அன்புடன் வாரி வழங்கினார். 2 கிலோ 3 கிலோ எடையுள்ள புஸ்தகங்களை அடுத்த
முறை எடுத்துச் செல்கிறேன் என்று சொல்லி விட்டு ஐந்தாறு புஸ்தகங்களுடன் விமானம்
ஏறினேன்.
அவர்
புஸ்தகத்தில் எழுதிய விஷயங்களைவிட வேறு எவரும் எழுத முடியாது. ஆகையால் அந்தப்
புத்தகத்தின் தலைப்புகளை மட்டும் தருகிறேன். அடுத்த முறை உத்தரமேரூருக்குச்
செல்லுகையில் அதைப் படித்துவிட்டுச் செல்ல வேண்டும்.
உலகிலேயே
ஜன நாயகம் பற்றிய முதல் குறிப்பு ரிக்வேதத்தில் சபை பற்றிய குறிப்பில் வருகிறது.
இன்றுவரை அந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லை தமிழிலிலும் (அவை) இந்தியிலும் (லோக் சபா, ராஜ்ய சபா) பயன்படுத்தி வருகிறோம்.
இதற்கு
அடுத்தபடியாக தேர்தல் பற்றிய தெளிவான, விரிவான ஜனநாயக முறை– குடவோலை முறை– சோழர் காலத்தியது. ஆயிரம்
ஆண்டுப் பழமையான அக் கல்வெட்டு உத்தர மேரூர் கோவிலில் உளது. அதனால் அது நாடு
முழுதும் புகழ் பெறுவிட்டது. யார் தேர்தலில் நிற்கலாம், நிற்கக்கூடாது என்ற முழுத் தகவலையும்
டாக்டர் நாகசாமி விரிவாக எழுதியுள்ளார்.
ஊர்ச்சபா
மண்டபத்தில் தேர்தல் கல்வெட்டு இருக்கிறது இப்பொழுது அது வைகுண்டப்பெருமாள்
கோவிலுடன் சேர்ந்துவிட்டது
நந்தி
வர்மன் (கி.பி 750) காலம் முதல் தற்காலம் வரை 100 கல்வெட்டுகளுக்கு மேல் கிடைக்கின்றன.
ஆண்டுதோறும்
இங்கே மஹபாரதம் நிகழ்த்திக் காட்டப்படுகிறது
உத்தரமேர்ரூரில்
உள்ள முக்கியக் கோவில்கள்
சுந்தரவரதர்
கோவில்
வைகுண்டப்
பெருமாள் கோவில்
கைலாசநாதர்
கோவில்
கேதாரீஸ்வரர்
கோவில்
பாலசுப்ரமண்யர்
கோவில்
எல்லாக்
கோவில்களிலும் கல்வெட்டுகள் உள்ளன.
1300 ஆண்டுகளுக்கு முன்னர் பிராமணர்களுக்கு
தானம் அளிக்கப்பட்ட கிராமம் இது. ஆயினும் அதற்கு முன்னரே கிராமம் மக்கள் வாழும்
இடமாக இருந்தது.
டாக்டர்
நாகசாமி புத்தகத்தில் உள்ள விவரங்களின் தலைப்புகள்:-
பத்துக்கும்
மேலான கோவில் விவரங்கள்
தேர்தல்
பற்றிய முழு கல்வெட்டு
பாபுக்கடி
மருந்து கல்வெட்டு
ஆகம
சாத்திர கல்வெட்டு
பேராசிரியர்
நியமன கல்வெட்டுக
இலக்கணப்பள்ளிகள்
வேதப்பள்ளிகள்
வைரமேக
தடாகம்
திருப்புலிவனம்
நிறைய
படங்கள்
சுந்தர
வரதராஜப் பெருமாள் கோவில் மூன்று தளங்களில் அமைந்துள்ளது. எட்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் அடித்தளத்தில் உள.
பாலசுப்ரமண்யர்
கோவில்- எட்டாம் நூற்றாண்டு – அருணகிரிநதரால் பாடப்பெற்றது.