Date: 1 FEBRUARY 2019 GMT Time uploaded in London – 9-05 am Post No. 6016 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
உலகின் எந்த நாட்டிலும் எந்த ஒரு சண்டையிலும் காணாத
அற்புதமான பெருந்தன்மையை ஹிந்து சேனை ஒன்று மட்டுமே கொண்டிருப்பதை பல வரலாற்றுச் சம்பவங்கள்
எடுத்துரைக்கின்றன. இதில் ஒரு விசேஷ அம்சம் என்னவெனில் இதை அந்த ஹிந்து சேனையை எதிர்த்தவர்களே
கண்டு அயர்ந்து வியந்து பாராட்டி இருப்பது தான். இது அந்தக் காலத்தில் மட்டுமல்ல, சமீபத்திய
உலகப் போர்களிலும் காணப்பட்டது. அதை பல குறிப்பேடுகள் விவரிக்கின்றன. அதைத் தொகுத்துக்
கலைக்களஞ்சியமாக்கத் தான் ஆளில்லை. பெரும் பணியான இது ஒரு தனிமனிதனால் செய்ய முடியாது.
அரசு அல்லது பெரும் நிறுவனங்கள் பொறுப்பேற்றுச் செய்ய வேண்டிய பணி இது. நாம் தான் செகுலர்
ஆயிற்றே. அரசு என்ற முறையிலும் செய்ய மாட்டோம்; அறப்பணியில் ஈடுபட்டு முன்வரும் நிறுவனங்களையும்
செகுலர் என்ற பெயரால் செய்ய விட மாட்டோம்; இது தான் இன்றைய நிலை. இது மாறுமா; மாற்ற
நாம் முன் வருவோமா – சற்று சிந்திக்க வேண்டும்!
இஸ்லாமிய
ஆக்கிரமிப்பாளர்களை விரட்டி அடித்த ஹிந்து மன்னர்கள்! – 9
ச.நாகராஜன்
லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் இன்னுயிரை நாம் இன்று
அனுபவிக்கும் சுதந்திரத்திற்காக தியாகம் செய்தனர்; என்றாலும் கூட பெயரளவுக்குத் தலைவராக இருந்த ஒருவருக்கே இந்த சுதந்திரம்
பெற்ற பெருமைப் போய்ச் சேர்வதாக இருக்கிறது.
ஏன் நமது முன்னோர்கள் ஒரு எதிர்ப்பையும்
செய்யவில்லை? ஏன் நாம் இவ்வளவு மிக மோசமாக கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறோம், கொலை செய்யப்பட்டிருக்கிறோம்?
இந்தக் கேள்விகள் நிச்சயம் நம்மை நமது பண்பாட்டு வேர் மற்றும் புராதனம், நமது வரலாறு,
பாரம்பரியங்கள், நமது தேசத்திற்கான சொந்தம் கொண்டாடும் தன்மை ஆகிய நீரோட்டத்திலிருந்து
மாறுபடச் செய்கின்றன.
நமது வரலாற்றின்
அடிவேரைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இதுவே தான்! ஜெய் ஹிந்த்! (www.myindiamyglory.com/ 2018/11/21).
****
இத்துடன் கட்டுரை முடிகிறது. தொடர்ந்து
ட்ரூத் ஆங்கில வார
இதழ் இந்தக் கட்டுரையை ஒட்டிய தனது கருத்தைத் தருகிறது. அதில் மேலும் பல விஷயங்கள்
இருப்பதால் அதையும் படித்து உணர வேண்டியது அவசியமாகிறது. அதையும் கீழே தருகிறோம்.
***
1. இந்தியாவில் நாடு
எங்கணும் பல்வேறு இடங்களில் யுத்தங்கள் நடந்தன. ஆயின் மிகுந்த வீரம் கொண்ட ராஜஸ்தானின்
ராஜபுத்திர வம்சம் எப்போதுமே போர்க்களத்தில் அசாத்திய வீரத்துடன் போரிடும். ஒரு ரத
வீரன் ஒரு பொழுதும் காலாட்படை வீரரைத் தாக்க மாட்டான்.ஒரு குதிரை வீரன் ஒரு பொழுதும்
காலாட்படை வீரரைத் தாக்க மாட்டான். ராஜபுத்திரர்களுக்கு எப்போதுமே சரிக்குச் சமமான
வீரர்களுடன் மட்டுமே தான் போர்!
சாகும் வரை போர் என்று
தீர்மானித்து விட்ட தருணங்களில் அந்த வீரர்கள் ஜரத் காபர்வாலா என்று சொல்லப்படும் மஞ்சள்
ஆடையை அணிவர். ஜோத்பூர் ராணாவுக்கும் சிந்தியா
வீரர்களுக்கும் இடையே மார்டாவில் நடந்த போரைப் பற்றி சிந்தியாக்களுடன் சேர்ந்து போரிட்ட ஒரு பிரிட்டிஷ்
வீரன் போரைப் பற்றி இப்படி குறித்து வைத்துள்ளான்:
“ஜரத் காபர்வாலாக்களின்
வீரத்தையும் தைரியத்தையும் விளக்க வார்த்தைகளே இல்லை. சேனை விரட்டப்பட்ட போதும் அவர்களை
விட ஒரு படி மேலான நிலையை அடைந்த போதும் கூட சிந்தியாக்களின் மிகப்பெரிய சேனையுடன்
மீதமுள்ள 15-20 போர்வீரர்கள் போரிட்டுக் கொண்டே இருந்தனர். ஒரு ராஜபுத்திர வீரன் கூட
இறுதி மூச்சு வரை போர்க்களத்தை விட்டு அகலவில்லை. ஒவ்வொரு ராஜபுத்திர போர்வீரனும் பல
சிந்தியா வீரர்களை இறக்கும் முன்னர் கொன்று குவித்தான்.”
ஜேம்ஸ் ஸ்கின்னர் என்ற
ஐரோப்பிய தளகர்த்தன் கி.பி. 1800ஆம் ஆண்டு
மால்பூரில் நடந்த போர் பற்றிய தனது போர்க்கள விவரணத்தில் ராஜபுத்திர வீரர்கள் வீரத்துடன்
அதிக தீரத்துடனும் பீரங்கிப் படை குண்டுமாரி பொழியும் போது சற்றும் பயமின்றி எதிர்த்ததைக்
குறிப்பிடுகிறார். நூற்றுக் கணக்கான ராஜபுத்திர வீரர்களை துளைக்கும் பைனட்டோ அல்லது
பீரங்கி குண்டு மழையோ கொன்ற போதும் சற்றும் அஞ்சாது மீதியுள்ள சேனை மேகக் கூட்டம் போல அதி பயங்கர ஆரவாரத்தைச்
செய்து எதிரிகளின் மீது ஏறியது.
கி.பி.1750ஆம் ஆண்டு
மார்டா போர்க்களத்தின் அருகில் நடந்த ஒரு சம்பவம் விசேஷமாகக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
டெல்லியைச் சேர்ந்த சலாவத் கானால் ராஜா ராம் சிங்கின் சேனை தாக்கப்பட்டது. நான்கு மணி
நேரம் நடந்த அதி பயங்கர சண்டைக்குப் பின்னர் சலாவத் கானின் சேனை தளர்ச்சியுற்று அதி
பயங்கர பாலைவன சூரிய வெப்பத்தில் வெப்பத்தாலும் தாகத்தாலும் செத்துக் கொண்டிருந்தது.
அந்தக் கணத்தில் எல்லா நீர்நிலைகளும் ராஜபுத்திரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
நெடுநேரம் தண்ணீருக்காக வீணே அலைந்து தேடிய பின்னர் எதிரிகளான ராஜபுத்திரர்களின் முகாமிலிருந்து
நீரைக் கேட்டு அவர்கள் பெற்றனர்.
மிக்க தீரத்துடனும் தயாள
மனப்பான்மையுடன் இருந்த ராஜபுத்திர வீரர்கள் எதிரிகளை நீரைக் கையில் ஏந்திக் கொண்டு
வரவேற்றனர். அது அவர்களுக்கும் அவர்கள் குதிரைகளுக்கும் போதுமானதாக இருந்தது. இந்த
அசாதாரணமான பெருந்தன்மையால் தங்கள் சக்தியையும் பலத்தையும் மீண்டும் முகலாய சேனை பெற்றவுடன்
சண்டை மீண்டும் தொடங்கியது.
****
மேலே கண்ட தமிழாக்கத்தின் ஆங்கில
மூலம் கீழே தரப்படுகிறது :
Lakhs of freedom fighters sacrificed their lives for the freedom
we enjoy today yet this freedom is attributed to one namesake leader.
Why did our ancestors not offer any resistance? Why were we always
so easily looted and plundered? These questions are bound to drift us from our
rich cultural roots and ancestry, from our historicity and traditions, from our
belongingness to the nation.
It is time we know our true historical roots. Jai Hind! (www.myindiamyglory.com/ 2018/11/21).
1. In India, battles
have taken place across the country. But the gallant Rajput clan of Rajasthan
would always fight their battle with bravery and chivalry. A charioteer would
never attack a foot soldier; a cavalier would never challenge a footman. For
the Rajputs, war would always be among equals.
On occasions when the Rajputs would prepare to fight till they
die, they would wear a yellow dressing and be known as Zarad Kaparwala. An
account of the battle of Marta that occurred between the soldiers of Jodhpur
Rana and the soldiers of Scindhia, narrated by a British soldier who was
part of the Scindhia soldiers reads as this :
“No words can express the level of courage and gallantry of the
Zarad Kaparwalas. Even after being dispersed and overtaken, the remaining 15-20
soldiers kept fighting the much bigger army of Scindhias and not a single of
the Rajputs left the war until the last breath. Each Rajput warrior had killed
many of the opponent Scindhia contingents before he had breathed his last.”
James Skinner, a European general, in his narrative of the Battle
of Malpur 1800 AD, had described the Rajput army to be valiant and
overwhelming, that remained undeterred in the face of artillery shower.
Completely fearless of the piercing bayonet or the artillery shower that killed
hundreds of Rajput fighters, the rest of the army mounted on their opponent
creating a terrific din much akin to a cloud burst.
One incident that occurred in year 1750 AD near the battlefield of
Marta needs special mention. The army of Rajah Ram Singh had been attacked by
Salavat Khan of Delhi. After a tremendous battle continuing over four hours,
the army of Salavat Khan grew restless and were dying out of heat and thirst in
the scorching desert sun. All the sources of water were under the control of
the Rajputs at that moment. After a long futile search for water, the Muslim
army sought water from their opponent Rajput camps.
The chivalrous and broad-hearted Rajput clan welcomed their
enemies with water, sufficient enough for the cavalry and their horses. When
the Muslim army had restored their energy and vigor by this tremendous show of
generosity of the Rajput clan, the battle resumed.
***
நன்றி:
ட்ரூத் ஆங்கில வார இதழ் – தொகுதி -86- இதழ் 35 ; 28-12-2018 இதழ்
Date: 30 JANUARY 2019 GMT Time uploaded in London –7-05 am Post No. 6006 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
மிட்டன்னி மர்மம் நீடிக்கிறது- இந்துக்கள் உடனே செயல்படவேண்டும் (Post No.6006)
தசரதன், பிரதர்தனன் என்ற வைஷ்ணவ பெயர்களுடன் கி.மு1400-ல் சிரியாவையும்,துருக்கியையும் ஆண்ட மன்னர்கள் பற்றி இன்னும் பழைய தகவல்களே உள. ஏன்? ஏன்?
அதிசயத்திலும் அதிசயம், சிரியா-துருக்கி பகுதியை 3600 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட மிட்டனி (Mitanni Civilization or Dynasty) நாகரீகம் பற்றி லண்டன் பல்கலைக் காக லைப்ரரியில் கூட ஓரிரு புத்தகங்கள் தான் கிடைத்தன. எந்த கலைக் களஞ்சியத்தை எடுத்தாலும் இரண்டு பக்க கட்டுரைதான் உளது! காரணம் இந்து மன்னர்களின் பெயர்கள்! அதுவும் தூய ஸம்ஸ்க்ருதத்தில்! இது பற்றி 2014-ம் ஆண்டு நான் எழுதிய கட்டுரைகளின் இணைப்பு முகவரிகளை இறுதியில் சேர்த்துள்ளேன்.
முதலில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான தேம்ஸ் & ஹட்ஸன் நிறுவனத்தின் இரண்டு பக்க மிட்டனி விஷயங்களை சுருக்கித் தருகிறேன். கட்டுரை இப்படி துவங்குகிறது:-
“மிட்டனி வரலாற்றை சரியாக வரிசைக் கிரமத்தில் அமைப்பது இன்னும் மிகவும் கடினமாகவே இருக்கிறது.”
அடுத்தாற் போல அதே பக்கத்தில் ஒரு பெட்டிச் செய்தியைக் (Box Item) கட்டம்போட்டு வெளியிட்டுள்ளனர். அதில் சொல்வதாவது:-
ஹுர்ரியன் மொழி இப்போது வழக்கொழிந்துபோன ஹுர்ரோ-உரர்தியன் (Hurro-Urartian) குடும்பத்தைச் சேர்ந்தது. பாபிலோனை கி.மு16ம் நூற்றாண்டிலிருந்து ஆண்ட காஸைட் (Kassites) பேசிய மொழியுள்ள கல்வெட்டுகள் கிடைக்கவில்லை. ஆயினும் அக்கடியந் காஸைட் அகராதி மூலம் 200 சொற்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை வர்ணம், தேரின் பாககங்கள், சில தாவரங்கள், பாசனம், ஆட்களின் பெயர்கள் பற்றியவை. இப்போது நமக்குத் தெரிந்த எந்த மொழியுடனும் தொடர்புடையதல்ல.
மிடனியர்கள் யார் என்று தெரியவில்லை. ஒருவேளை காகஸஸ் பகுத்திக்கு அப்பாலிலிருந்து வந்த ஹுரியன்களின் ஒரு பிரிவாக இருக்கலாம்; ஹுரியன்கள் பற்றி கி.மு-3000 முதல் குறிப்புகள் உள.
எனது கருத்துக்கள்
காஸைட்- ஹிட்டைட் ஆகியோருக்கும் சிந்து-ஸரஸ்வதி நாகரீக மொழிக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். ஏனெனில் இருவரும் ஏறத்தாழ சம காலத்தவர்கள். காஸைட் பேசிய மொழியில் 200 சொற்கள் வரை கிடைத்துள்ளதால் இதை ஆராய்தல் அவசியம். இந்தத் துறையில் தமிழ் படித்தவர்களும், ஸம்ஸ்க்ருதம் கற்றவர்களும் ஆராய்ந்தால் பல புதிய உண்மைகள் கிடைக்கும். 60,000 க்கும் மேலான களிமண் கல்வெட்டுகள் முதலியன கியூனிபார்ம் லிபியில் அக்கடியன், சுமேரியன் மொழிகளில் இருக்கின்றன.
இது வரை கிடைத்த சுவையான தகவல்களை மீண்டும் சொல்கிறேன். உலகம் முழுதுமுள்ள கலைகளஞ்சியங்களிலும் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சொற்பொழிவிலும் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட விஷயங்கள் நமது பாட திட்டத்திலேயே இல்லாதபோது மற்றவர்களை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை.சுமேரிய- அஸீரிய பாடங்களைக் கற்கவும் ஒப்பிடவும் முறையான நிதி ஒதுக்கீடு செய்து ஆராய்தல் நலம்பயக்கும்.
ஆர்ய தரங்கிணி என்ற பெயரில் இரண்டு வால்யூம்களில் ஆங்கிலத்தில் நூல் வெளியிட்டுள்ள கல்யாணராமன் போன்றோர் இந்தத் துறையில் வழிகாட்ட முடியும்.
நான் முன்னர் எழுதிய விஷயங்களின் தொகுப்பு;
இவை உலகிலுள்ள எல்லோராலும் 100 ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்கப்பட்ட விஷயங்கள்:-
1.மிட்டனி நாகரீகப் பெயர்கள் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் (எ.கா. தசரத, பிரதர்தன); நாமும் ராமாயணம்,விஷ்ணு ஸஹஸ்ர நாமம் முதலியவற்றில் காண்கிறோம்.
2. துருக்கியில் கிடைத்த குதிரை சாஸ்திர நூலில் ஸம்ஸ்க்ருத்க் கட்டளைகள் உள. இது கி.மு1300-க்கு முந்தையது.
3.தஸரதன் எழுதிய கடிதங்கள் அக்கடியன் மொழியில் கியூனிபார்ம் லிபியில் எகிப்திலுள்ள அமர்ணா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இப்பொழுது அமர்னா கடிதங்கள் உலக மியூஸியங்களை அலங்கரிக்கின்றன.
3. கிமு.1400 வாக்கில் துருக்கி-சிரியாவில் இரண்டு மன்னர்கள் கையெழுத்திட்ட உடன்படிக்கையில் வேத கால தெய்வங்கள் நால்வர் பெயரில் ஸத்தியப் பிரமாணம் எடுத்துள்ளனர். இதில் ரிக் வேதத்தில் கடவுளரின் உள்ள அதே வரிசையில் பெயர்கள் இருப்பதை சிந்து சமவெளி நிபுணர் அஸ்கோ பர்போலா சுட்டிக்காடியுள்ளார். இதனால் மாக்ஸ்முல்லர் முதலியோர் வேததுக்கு முதலில் சொன்ன காலம் தவிடு பொடியாகிறது.
4.காஸைட்,ஹிட்டைட், மிட்டன்னியர் பற்றி அதிகம் தெரியவில்லை. அவர்கள் இந்தோ- ஐரோப்பிய (சம்ஸ்க்ருத) மொழித் தொடர்புடையோராக இருக்கலாம்.
உலகமே ஏற்றுக் கொண்ட இந்த விஷயங்கள் பற்றி எனது கருத்துக்கள்
1.துரகம்/ குதிரை தொடர்பான மிகப் பழைய நூல் கிடைத்த நாட்டை இன்றும் நாம் துருக்கி என்று சம்ஸ்க்ருதத்திலேயே அழைக்கிறோம்.
சூரியனையே முதல் தெய்வமாகக் கொண்ட பாபிலோனியர் ஆண்ட சிரியா என்பது சூர்யா என்பதிலிருந்தே வந்தது.
அஸீரிய மன்னர்கள் அனைவரும் அசுர என்ற பெயர் வைத்திருப்பதால் அது அசுரர் நாடு.ரிக்வேதத்தின் பழைய பகுதிகளில் அசுர என்றால் பலம் வாய்ந்தவர்கள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது .இந்திரன் அக்னி முதல்யோரும் அசுரர் எனப்பட்டனர். பின்னர் பாரஸீகத்துக்கு குடியேறின சொராஸ்டர் வருணனுக்கு மட்டும் அசுர என்ற அடை மொழி கொடுத்தார். ஆகவே இதில் இனப் பொருள் (No Racial connotation) இல்லை
இரான் (பாரஸீகம்) என்பது ஆர்ய என்ற சொல்லில் இருந்து பிறந்ததே.
ஒருமொழி பேசுவோர், காலத்தாலும் தூரத்தாலும் எவ்வளவு தள்ளிப் போகிறார்களோ அந்த அளவுக்கு அந்த மொழிப் பெயர்கள் சிதைவுறும். மேலும் மாற்று மொழி பேசுவோர் அதை உச்சரிக்க முடியாமல் திருத்தியும் எழுதுவர். நம்மூர்ப் பெயர்களை வெள்ளைக்கார்களும் கிரேக்கர்களும் வாய்க்கு வந்தபடி எழுதி புது ஸ்பெல்லிங் கொடுத்ததை நாம் இன்றும் படிக்கிறோம். இந்துப் பெயர்களும் சடங்குகளும் இலங்கை,மலேசியா, பாலி/இந்தோநேஷியா,தென் ஆப்ரிக்கா, பிஜி, கயானா, மோரீஸ், ஷெஷல்ஸ் தீவுகளில் எந்த அளவுக்கு திரிந்து போயுள்ளன என்பதை நாம் இப்போது அறிகிறோம்.
சங்க காலத்திலேயே காமாட்சி என்பதை காமக் கண்ணியார் என்றும் சுலோசனா என்பதை நக்கண்ணையார் என்றும், சிலப்பதிகாரத்தில் கோபாலன் என்பதை கோவலன் என்றும் எழுதுவதை நாம் கண்டோம். ஆக மொழி மாற்றத்தை மனதில் கொண்டு ஆராய்ந்தால் தமிழ்-ஸம்ஸ்க்ருதம் கற்றோர், சுமேரியாவில் அரிய பெரிய உண்மைகளைக் காணலாம். லண்டன் போன்ற இடங்களில் வசிக்கும் என்னைப் போன்றோருக்கு பல்கலைக் கழக லைப்ரரிகளிலும், பிரிட்டிஷ் லைப்ரரியிலும் மஹத்தான பொக்கிஷங்கள் வேறு கிடைக்கும். ஆக இந்து, இந்திய பாட திட்டத்தில் இதை உடனே சேர்க்க வேண்டும்.
மிட்டன்னி என்பது மித்ர என்ற வேத கால தெய்வத்தின் பெயரில் இருந்தும், அவர்களுடைய தலைநகரான வசு கன்னி என்பது வசு, கன்யா என்ற வேத கால தெய்வத்தின் பெயர்களில் இருந்தும் தோன்றியிருக்கலாம்
காஸைட் என்பதை காசி ராஜா வம்சம், ஹிட்டைட் என்பது க்ஷத்ரிய வம்சம், ஹுர்ரியன் என்பது ஆர்ய என்று படிக்க முடியும். ஆயினும் ஊகத்தின் பேரில் அல்லாது முறையான ஆராய்ச்சி மூலம் இவற்றை நிரூபிக்க வேண்டும். அதற்கு நாம் அந்த மொழிகளைக் கற்க வேண்டும்.
இறுதியாக ஒரு விஷயம்; பாபிலோனியா பகுதியில் 3000க்கும் மேலான தெய்வங்கள் இருந்தன. பல மொழிகள் பேசப்பட்டன;பல இன மக்கள் தொடர்ந்து குடியேறிப் போரிட்டனர்.ஆகையால் குழம்பாமலிருக்க அந்த வரளாறு பற்றி முழுதும் தெரிந்திருக்க வேண்டும்.
Research paper written by London Swaminathan Research article No.1342; Dated 12th October 2014. சிரியாவும் துருக்கியும் இப்போது முஸ்லீம் நாடுகள். ஆனால் 4000 …
(for old articles go to tamilandvedas.com ORswamiindology.blogspot.com) …… 1400ல் மிட்டன்னிராஜாக்களின் உடன்பாட்டில் வேதகால தெய்வங்களின் பெயர்கள் இருக்கின்றன.