
பர்மா,மலேயாவில் சம்ஸ்கிருதம் (Post No.7377)
Written by LONDON SWAINATHAN
Post no. 7377
Date 24 December 2019
Uploaded from London
Pictures are taken from various sources; thanks
வியட்நாமில் வியத்தகு சம்ஸ்கிருத அறிவு -2
பழங்கால மொழிகளான சம்ஸ்கிருதம், தமிழ், கிரேக்கம், லத்தின், சீனம் ,எபிரேயம்(ஹீப்ரூ ) ஆகியவற்றில் ஸம்ஸ்க்ருதத்தில்தான் இலக்கியம் அதிகம். அதன் பரப்பளவும் அதிகம். ஸிரியா , துருக்கி, மங்கோலியா, மத்திய ஆசியா, இந்தியா, ஹென் கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் சம்ஸ்கிருத மொழிக்கு கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் எண்ணிக்கையில் சுமேரிய மொழி கல்வெட்டுகளே அதிகம். அவை கியூனிபார்ம் லிபியில் எழுதப்பட்டு களிமண் பலகைகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

நேற்று கம்போடியாவில் சம்ஸ்கிருத கல்வெட்டு இலக்கியம் அடைந்த உன்னத நிலையைக் கண்டோம். உலகில் கல்வெட்டுகளிலும் பெரிய இலக்கியம் படைத்த மொழி சம்ஸ்கிருதம் ஒன்றே. எகிப்தில் சித்திர எழுத்துக்களிலும், சுமேரியாவில் களிமண் பலகை கியூனிபார்ம் எழுத்துக்களிலும் இலக்கியம் உண்டு.கிரிஸ் என்னும் கிரேக்க நாட்டில் கி.மு. 800-க்குப்பின்னர் இலக்கியம் உண்டு. தமிழக கல்வெட்டுகளில் எட்டாம் நூற்றாண்டு நந்திவர்மன் திருவெள்ளரைப் பாடல் கல்வெட்டு, பின்னர் மெய்க்கீர்த்தி பாடல் கல்வெட்டுகள் இருக்கின்றன. ஆனால் கம்போடியாவில் கிடைத்த கவிதை அளவுக்கு எங்குமில்லை.
கம்போடியா சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் ராமாயணம் ,மஹாபாரதம், புராண , பவுத்த, சமண, தத்துவ நுல்களைக் குறிப்பிடுகின்றன. மநுவின் சட்ட புஸ்தகத்தைச சொல்லிவிட்டு ஒரு முழு ஸ்லோகத்தையும் ஒரு கல்வெட்டு மேற்கோள் காட்டுகிறது.
வாட் திபேதி கல்வெட்டில் (எண் .78), நீண்ட சம்ஸ்கிருத சொற்றோ டர்கள் , அதியுக்தி (மிகைப்படக் கூறல் ), அனுபிராச (ஒரே வரியில் அசைச் சொற்கள் மீண்டும் வருதல்) ஆகியவற்றைக் காணலாம். இது கௌட பாணி எனப்படும்.
கம்போடிய கல்வெட்டு இலக்கியம் சம்ஸ்கிருத இலக்கியத்தில் ஒரு ஒப்பற்ற அத்தியாயம் ஆகும். சுருங்கச் சொல்ல வேண்டுமானால் இரண்டாம் ஜெயவர்மன், யசோ வர்மன் கல்வெட்டுகள் உன்னதமானவை. இதே போல சம்பா என்னும் வியட்நாம் தேசத்தில் பத்ரவர்மன், ஏழாம் ஜெய இந்திரவர்மன் கல்வெட்டுகளை பார்க்கவும்.
மூன்றாம் இந்திரவர்மனின் வியட்நாம் கல்வெட்டு அவன் அறிந்த சாஸ்திரங்கள் பற்றிப் பகர்வதைக் பார்ப்போம் :-
மீமாம்ச ஷட் தர்க்க ஜினேந்திர சூர்மிஸ்
ச காசிகா வ்யாகரநோதக -அவ் காகாஹா
ஆக்யான சைவோத்தர கல்ப மீனாஹா
பதிஷ்ட ஏதவ்ஸ் இதி சக்தவீணாம்
பொருள்
ஒரு மீன் தண்ணீரில் எவ்வளவு சுலபமாக நீந்துமோ அவ்வளவு சுலபமாக மன்னன் நீந்திக் கரைகண்ட விஷயங்கள் — பவுத்த தர்மம், பாணினியின் இலக்கணம், காசிகா உரையுடன், ஆக்யானம், சைவர்களின் உத்தர க ல்பம், மீமாம்சம் முதலிய அறுவகை தத்வ தரிசனங்கள் . இது எல்லாம் கி.பி.918-ல் ஆடசி புரிந்த இந்திரவர்மன் பற்றியது. தென்கிழக்காசிய நாடுகள் எல்லாவற்றிலும் அரசாங்க மொழி சம்ஸ்கிருதமாக இருந்ததை நூ ற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன.
மலாயாவில்

மலேயாவில் கெடா என்னும் கடாரத்தில் களிமண் பலகைப் பொறிப்பில் மஹாயான புத்த மத ஸ்லோகங்கள் மூன்று, சம்ஸ்கிருதத்தில் உள்ளன. இவைகளின் மூல நூல் சம்ஸ்கிருதத்தில் கிடைக்கவில்லை. ஆனால் இரண்டு சுலோகங்கள் சீன மொழிபெயர்ப்பில் கிடைத்தன.
சுங்கை பாடுவில் கிடைத்த துர்கா, சிவன், நந்தி சிலைகள் அங்கு சைவ சமயம் தழைத்தோங்கியதைக் காட்டுகிறது.
மலாயாவில் நாலாம் நூற்றாண்டிலேயே இந்து மதம் பரவியது அங்குள்ள குப்தர் கால சிலைகளிலிருந்து தெரிகிறது. மத்தியப் பகுதியில் 7, வடக்கு வெல்லஸ்லி மாகாணத்தில் 4, லிகோர் பகுதியில் 5, சய்யாவில் 2, கடாரம், தக்கோலத்தில் ஒவ்வொன்று என சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் கிடைத்தன. இவை துண்டு துண்டாக இருப்பதால் அதிக விஷயத்தைச் சொல்லாவிடினும் சம்ஸ்கிருத மொழியின் தாக்கத்தையும் வீச்சையும் காட்டும்.
கடாரம், பெராக் ஆகிய இடங்களில் இந்துக் கடவுள் சிலைகள் கிடைத்தன. மிக முக்கியக்கண்டுபிடிப்பு பெரா க்கில் கண்ட கார்னிலியன் (Cornelian Seal) முத்திரை ஆகும். இதில் ஐந்தாம் நூற்றாண்டு எழுத்தமைதியில் விஷ்ணுவர்மன் என்ற அரசனின் பெயர் உளது.
பர்மாவில்

பர்மாவின் தற்போதைய பெயர் மியன்மார் .இங்கு அசோகர் புத்த மதத்தைப் பரப்பியதாக ஒரு நம்பிக்கை உளது. அதை புத்தகோஷரும் ஐந்தாம் நூற்றாண்டில் எழுதிவைத்துள்ளார். ஆனால் இதற்கு இலக்கியச் சான்றுகளைத் தவிர வேறு சான்றுகள் கிடைக்கவில்லை.
பர்மாவில் பாகான் (Pagan or Bagan) நகரம் கி.பி.849ல் ஸ்தாபிக்கப்பட்டதாக வரலாறு கூறும்.இதன் அப்போதைய பெயர் அரிமர்தனபுரம். அநிருத்தன்/ அனவ்ரதன் என்ற மன்னன் 1044-ல் பதவி ஏற்ற பின்னர் பர்மாவின் ஆதிக்கம் வலுத்தது. அவன் அரக்கன் பிரதேசத்தை வென்றான். இந்தியாவில் வங்கம் வரை ஆதிக்கத்தைப் பரப்பினான். அவனது ஆடசியில் புத்த மதம் பரவியது. அவன் இந்தியாவின் வைசாலி பிரதேச இளவரசியை மணந்தான். அவர்களின் புத்திரன் கியான் சித்த/ ஞான சித்தன் பதவி ஏற்றான் . அவனுடைய மகளை வங்காள இளவரசன் பட்டகேர காதலித்து அது சோகக்கதையாக முடிந்தது இந்தக் கதை பர்மாவில் நாடகம், கவிதை, காவ்யம் என மலர்ந்தது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு இந்தியாவுடன் நல்லுறவு நீடித்தது. 1271 வாக்கில் குப்லாய்கானின் மங்கோலிய படைகள் பர்மாவை ரத்தக்களரியில் மிதக்கவிட்டது
இந்திய இலக்கியத்தில் பர்மா முதல் சுமத்ரா வரையான பகுதியை சுவர்ண பூமி என்று வருணித்துள்ளனர்.
பர்மாவில் மெய் சேத்தி (MYAZEDI INSCRIPTION)
என்னும் இடத்தில் அதிசயமான விநோதமான 4 மொழிக்கல்வெட்டு இருக்கிறது. இந்தியாவில் குஜாராத்தில் கிர்னார் மலையில் அசோகன், ருத்ரதாமன் , ஸ்கந்த குப்தன் கல்வெட்டுகள் இருப்பது போன்றது இது. ஆனால் கிர்னார் குன்று 800 ஆண்டு கால வரலாற்றைக் கூறும். இதுவோ ஒரே வரலாற்றைக் கூறும் .
இதில் பாலி மொழிப பகுதியில் சம்ஸ்கிருதப் பெயர்கள் உள . த்ரி புவன ஆதித்ய மஹாராஜா, அவனது மனைவி லோகவாதன்சா தேவி, அவர்களுடைய மகன் யாழ குமாரன் ஆகிய பெயர்கள் இருக்கின்றன. யாழ குமாரன், தங்க புத்தர் தானம் செய்த விஷயம் இதில் இருக்கிறது.
மெய்சேதி கல்வெட்டின் காலம் கி.பி.1113.
இந்த வினோதமான, அதிசயமான நான்கு மொழிக் கல்வெட்டில்
பாலி மொழியில் 41 வரிகளும்
பர்மிய மொழியில் 39 வரிகளும்
மோன் மொழியில் 33 வரிகளும்
பியூ மொழியில் 26 வரிகளும் இருக்கின்றன.கிட்டத்தட்ட ரோசட்டா ஸ்டோன் (Rosetta Stone) போன்றது.
பர்மாவின் சாவலுமின் (SAWLUMIN INSCRPTION)
( கல்வெட்டும் சுவையானது. இதில் சம்ஸ்கிருத வரிகள் உள்பட 5 மொழிகள் உள்ளன.இது வெவ்வேறு பகுதிகளில் துண்டு துண்டாகக் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது ஒட்டிவைக்கப்பட்டுள்ளன.கடைசி பகுதி 2013ல் தான் கிடைத்தது. பாலி , சம்ஸ்கிருதம், பர்மிய, மோன் , பியூ மொழிகளில் வாசககங்கள் காணப்படுகின்றன. இது சாவ் லு என்ற மன்னன் பற்றியது. காலம் கிபி.1052
—subham—
You must be logged in to post a comment.