பிரமிடுகளை முதலில் கட்டிய வம்சாவளி: எகிப்திய அதிசயங்கள்-10 (Post No.3670)

Written by London swaminathan

 

Date: 25 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 17-36

 

Post No. 3670

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

கட்டுரை-9ல் முப்பது வம்சங்களின் தோற்றத்தையும் முதல் வம்சாவளியையும் கண்டோம்.

இரண்டாவது வம்சாவளி (2800 BCE)

இரண்டாவது வம்சாவளி பற்றி அதிக விவரங்கள் பதிவு செய்யப்படவில்லை. ஆயினும் எகிப்து ஒரே நாடாக (Unification) உருப்பெற்றது. இந்த சாதனையை உருவாக்கியவர் காசிகெம்வி (Khasehemvy). அவர் மிகவும் பெரிய உருவம் படைத்தவர். அவர் விட்டுச்சென்ற நினைவலைகள் பல நூற்றாண்டுகளுக்கு நீடித்தது. அவருக்கு மகன் கிடையாது. எகிப்திய வழக்கப்படி அவர் தன் மகளையே திருமணம் செய்துகொண்டார் என்று ஊகிக்கப் படுகிறது.. அவர் பெயர் (Nemmathap) நெம்மாதாப்.

 

துவக்க காலத்தில் பெண்களே ஆட்சிக்கு வந்தனர். அதாவது மன்னனின் மூத்த மகள் அல்லது மஹாராணி,  (Isis) ஐஸிஸ் என்னும் தேவதையின் அம்சமாகக் கருதப்பட்டாள். மன்னன், ஹோரஸ் (Horus) என்னும் கடவுளின் அவதாரமாகக் கருதப்பட்டார். சிம்மாசனத்துக்கான சித்திர எழுத்து மூலம்  ஐஸிஸ் குறிக்கப்பட்டாள். அந்த சிம்மாசனத்தில் உடகார்ந்ததால் மன்னர் கடவுள் அம்சம் பெறுகிறார்.

 

இந்து அரசர்களும் அரச பதவியை ராஜ்யலெட்சுமி என்று அழைத்தது ஒப்பிடத் தக்கது.

 

மூன்றாவது வம்சம் (2600 BCE)

நெம்மாதாப் (NemmaathapP மூலம் மூன்றாவது வம்சம் தோன்றியது. அவளுக்கு இரண்டு மகன்கள். முதல் புதல்வனின் பெயர் சனக்தே (Sanakhte) அல்லது Nebka நேப்கா. இரண்டாவது புதல்வன் தஜொசர் நெட்ஜெரிகேட் (Djoser Netjerykhet).

 

முதல் பிரமிட் (First Pyramid)

 

நெட்ஜெரிகேட் (கேது) என்ற மன்னந்தான் முதல் முதல் பிரமிட் கட்டியவர். இது படிக்கட்டுகள் போல அமைந்த (Step Pyramid)  பிரமிட். இது சக்கரா என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இந்தப் பிரமிடு கட்டிய பெருமை அவருடைய அமைச்சரும், கட்டிடக் கலைஞருமான இமோதேப் (Imhotep)  அவர்களையே சேரும் ஒரு  மில்லியன் டன் (பத்து லட்சம்) கற்களை நன்கு செதுக்கி உருவாக்கப்பட்ட ஒப்பற்ற கட்டிடம் இது. இதற்கு ஈடு இணையாக அக்காலத்தில் ஒரு கட்டிடமும் கிடையாது.

 

பல பெயர்கள் கேட் என்று முடியும். இது மஹாபாரதத்தில் பல அரசர்களின் பெயர்கள் ‘கேது’ என்பதன் திரிபாக இருக்கலாம். இதே போல அமைச்சரின் பெயர் ‘தேப்’ என்பது ‘தேவ’ என்பதன் திரிபாக இருக்கலாம். எகிப்தில் பல தமிழ், சம்ஸ்கிருதச் சொற்கள் இருப்பதை முன்னரே ஒரு  கட்டுரையில் தந்துள்ளேன்.

 

படிக்கட்டு வடிவில் அமைந்த முதல் பிரமிடுதான் பிற்கால மன்னர்களைப் பெரிய பிரமிடுகளைக் கட்ட ஊக்குவித்தது. எகி ப்துக்கு வரலாற்றில் அ ழி யாத இடத்தையும் புகழையும் ஈட்டித் தந்தது.

 

மன்னர் என்பவர் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டதால் மன்னரின் மதிப்பு உயர்ந்தது. ஹீலியோபோலிஸ் (Heliopolis) எனப்படும் சூர்யபுரி நகரம் பெரும் சிறப்புடன் திகழ்ந்தது. இங்கிருந்து நட்சத்திரங்களைக் கவனித்தனர். நட்சத்திரங்களை வழிபடவும் செய்தனர்.

 

நட்சத்திர வழிபாடு; அதிசய சிரியஸ் (SIRIUS) நட்சத்திரம்

 

இது இந்துமத்துக்கு மிக நெருக்கமான விஷயம். இன்றுவரை 27 நட்சத்திரங்கள் அதற்கான அதி தேவதைகள் வணங்கப்படுகின்றன. மேலும் வேதங்களிலேயே நடசத்திரங்களின் முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது.

 

 

இந்த இடத்தில் சிரியஸ் (Sirius) நட்சத்திரம் பற்றிய சில வியப்பான தகவல்களைக் காண்போம்; எகிப்தியர் வாழ்வில் சிரியஸ் நடசத்திரம் முக்கியப் பங்கு ஆற்றியது.

 

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 19 ஆம் தேதி இது எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவின் வானத்தில் தோன்றும்போது நைல் நதி வெள்ளப் பெருக்கெடுக்கும். ஆகையால் இதை எகிப்தியர்கள் ஆதிகாலத்திலிருந்தே கவனித்து அது தோன்றும் தேதியைப் பதிவு செய்யத் துவங்கினர். இதை எகிப்தியர்கள் சோதி (Sothi) என்று அழைத்தனர் நாமதை ஜோதி (ஒளி) என்று அர்த்தம் செய்தாலும் பொருந்தும். ஏனெனில்  இதுதான் வானத்திலேயே மிகவும் பிரகசமான நட்சத்திரம். எல்லா பண்பாடுகளும் இதை நாய், ஓநாய் அல்லது அது போன்ற மிருகங்களுடன் சம்பந்தப்படுத்தினர். சம்ஸ்கிருதத்தில் இதை ம்ருக வ்யாத என்று அழைத்தனர். மான் வேட்டை என்று பொருள். எகிப்தில் இது தோன்றும்போது வெள்ளம் வந்தது போலவே கிரேக்க நாட்டில் கோடைக் காலம்  துவங்கும். ஆகவே அவர்களைப் பொருத்தமட்டில கோடை நட்சத்திரம். பாலிநேசியன் எனப்படும் பசிபிக் மஹாசமுத்திர பழங்குடியின ருக்கு இது கப்பல் விட உதவும் நட்சத்திரம்.

 

இந்த நட்சத்திரம் முதலில் இருந்த நிலைக்குத் திரும்பிவர 1460 ஆண்டுகள் ஆகும்.

 

எகிப்திய காலண்டர் சிரியஸ் நட்சத்திரம் தோன்றும் நாளன்று துவங்கும். இதை எகிப்தியர் சோப்டு (Sopdu) என்று அழைத்தனர். கிரேக்க நாட்டினர் சோதிக் காலண்டர் (Sothic Calendar) என்று அழைத்தனர். இந்துக்களின் சாந்திர மாதம் போலவே இதுவும் 360 நாட்களைக் கொண்டது. பின்னர் ஐந்து நாட்களைக் கூட்டி 365 நாள் என்று மாற்றினர். அப்படியும் ஒவ்வொரு ஆண்டும் 6 மணி  நேரம் துண்டு விழும். ஆங்கிலக் காலண்டரில் லீப் வருடம் என்று உண்டாக்கி இதை ஈடு செய்தனர். எகிப்தியரும் வேறு சில காலண்டர் முறைகளைப் புகுத்தி குறைகளைப் போக்கினர்.

 

புதிய ராஜ்யம் (New Kingdom) , நடு (Middle Kingdom) ராஜ்யம் ஆகியவற்றில் சிரியஸ் நட்சத்திர உதயம் பற்றி மூன்று முறை கல்வெட்டுகளில் பதித்துள்ளனர்.

 

தொடரும்………………..

கங்கர், கொங்கர், கலிங்கர், குலிங்கர்: கம்பன் தரும் நாடுகளின் பட்டியல் (Post No.3669)

Written by London swaminathan

 

Date: 25 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 12-33

 

Post No. 3669

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

கம்ப  ராமாயணத்திலுள்ள பூகோள (Geographical-நிலவியல்) விஷயங்களை ஆராய்வது ஒரு தனி இன்பம் தரும்; ஆழமாக ஆராய்ந்தால் டாக்டர் பட்டமும் வாங்கலாம். நாடுகளைக் கம்பன் வரிசைப்படுத்தும் அழகே தனி அழகு!

1.கங்கர் கொங்கர் கலிங்கர் குலிங்கர்கள்

சிங்களாதிபர் சேரலர் தென்னவர்

அங்கராசர் குலிந்தர் அவந்திகர்

வங்கர் மாளவர் சோழர் மராடரே

 

2.மான மாகதர் மச்சர் மிலேச்சர்கள்

ஏனை வீர இலாடர் விதர்ப்பர்கள்

சீனர் தெங்கணர் செஞ் சகர் சோமகர்

சோன சேகர் துருக்கர் குருக்களே

 

3.ஏதி யாதவர் ஏழ்திறல் கொங்கணர்

சேதிராசர் தெலுங்கர் கருநடர்

ஆதிவானம் கவித்த அவனிவாழ்

சோதி நீள்முடி மன்னரும் துன்னினார்

பால காண்டம், கம்ப ராமாயணம்

உலாவியல் படலத்தில் ராமன்சீதை திருமணத்துக்கு வந்த மன்னர்கள் பட்டியல் இது.

 

பொருள்:-

1.கங்க நாடு, கொங்கு நாடுகலிங்க நாடு, குலிங்க நாடு, சிங்கள நாடு, சேர நாடு, தென்னாடான பாண்டிய நாடு, அங்க நாடு, குலிந்த நாடு, அவந்தி நாடு, வங்க நாடு, மாளவ நாடு, சோழ நாடு, மராட நாடு ஆகிய நாட்டு அரசர்களும்,

 

2.பெருமை மிகுந்த மகத நாடு, மச்ச நாடு, மிலேச்ச நாடு, மற்றுமுள்ள வீரம் பொருந்திய இலாடநாடு, விதர்ப்ப நாடு, சீன நாடு, தெங்கண நாடு, செம்மை வாய்ந்த சக நாடு, சோம நாடு, சோனக நாடு, துருக்கி நாடு, குரு நாடு ஆகிய நாட்டு அரசர்களும்,

3.ஆயுதங்கள் நிறைந்த யாதவ நாடு, ஏழு பிரிவு கொண்ட கொங்கண நாடு, சேதி நாடு, தெலுங்கு நாடு, கரு நாடு என்னும் கன்னட நாடு, ஆகிய நாடுகளின் அரசர்களும், பஞ்ச பூதங்களில் முதன்மையானதான ஆகாயத்தின் கீழே ஆழும் — ஒளிவீசும் மணிமுடி அணிந்த பிற அரசர்கள் அனைவரும் அந்த மண்டபத்தை அடைந்தனர்.

 

 

முதல் பாட்டில், அங்கராசர் என்பதற்குப் பதிலாக சில பதிப்புகளில் அங்கர் சீனர் என்று காணப்படும்; அப்படியானால் அடுத்த பாட்டில் வரும் சீனர் என்ற சொல்லுக்கு மகா சீனர் என்று பொருள் சொல்லுவர் பெரியோர்.

இதே போல சோனர் சேகர் என்பதை சோன கேசர் என்றும் எழுதுவர். விசுவாமித்திரர் சேனைகளை எதிர்ப்பதற்காக காமதேனு என்னும் தெய்வீகப் பசு மூலம் வசிட்டனால் உண்டாக்கப்பட்ட சேனை என்றும் சொல்லுவர். இது பற்றிய கதை மிதிலைக் காட்சிப் படலத்தில் உள்ளது.

 

 

கம்பன் பாட்டில் தெரிய வரும் செய்திகள்:-

 

கம்பன் காலத்தில், திராவிட நாடு என்று  ஒரு நாடு இல்லை.

 

கொங்கண நாட்டைக் குறிப்பிடும் போதெல்லாம் ஏழு பிரிவு கொண்ட கொண்க்கண நாடு என்பதை ஏன் அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகிறார் என்று தெரியவில்லை.

துருக்கி, சீனம், அரேபியா (சோனகம்) என்பவை கம்பன் காலத்தில் நன்கு தெரிந்தவை.

 

மிலேச்ச நாடு (ரோம்/இதாலி, கிரீஸ் உள்ளிட்ட யவன பூமி)

 

ஏழு பிரிவுகள் கொண்ட கொங்கண நாட்டை அவன் சுந்தர காண்டத்திலும் குறிப்பிடுவான்.

 

சுந்தர காண்டத்தில் அவன் சொல்லும் பல பூகோள/நிலவியல் விஷயங்கள் இன்னும் வியப்பானவை.

 

துருக்கர் கொண்டுவந்த குதிரைகள் பற்றி உன் அமுத உத்தியன ஒண் நகர்……..என்ற பாட்டிலும் கம்பன் பேசுகிறான்.

 

 

எனது முந்தைய கட்டுரைகள்

1.புராதன இந்தியாவின் 56 தேசங்கள்! (Post No. 2686) posted on 2 April 2016

2.திராவிடர்கள் யார்? posted on July 17, 2013

3.பெண்கள் மட்டுமே ஆண்ட அதிசய நாடு! Posted on 23 March 2015

4.தமிழ்ப் பெண்கள் வெளிநாடு செல்ல தடை! (Posted on 30 September 2016

 

5.தமிழ்நாட்டின் எல்லை ‘திருப்பதி’தான்! (Post No.3429) 8 December 2016

6.சங்க இலக்கியத்தில் யவனர் மர்மம்!

1 August 2014

7.மிலேச்சர்களை அழிக்கும் கல்கி அவதாரம் எப்போது? 21 March 2015

PLUS+++

 

1.முதல் திராவிட ராணி கி.மு 1320, (2).Dravidian Queen (1320 BC) in North India (3).The Biggest Brainwash in the World (4). ஆதிசங்கரர் காலம்: தமிழ் இலக்கியச் சான்றுகள் 5.தமிழன் காதுல பூ!!!! (6).மூன்று தமிழ் சங்கங்கள்: உண்மையா? கட்டுக்கதையா? (7) 3 Tamil Sangams: Myth and Reality 8. தமிழ் இனத்தின் வயது என்ன? 9. தமிழ் ஒரு கடல் 10.தமிழ்-கிரேக்க தொடர்பு

11..Indra festival in the Vedas and Tamil Epics 12.Bull fighting: Indus valley to Spain via Tamil Nadu 13.Karikal Choza and Eagle shaped Fire A tar 14.Why do British judges follow a Tamil king? 15.Flags : Indus Valley- Egypt Similarity 16.தமிழ் முனிவர் அகஸ்தியர் 17.வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் 18.கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி—எகிப்து அதிசிய ஒற்றுமை 19.வீரத் தாயும் வீர மாதாவும் 20.Veera Matha in the Vedas and Tamil Literature

21.இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும் 22.கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம் 23.பருவக்காற்றைக் கண்டுபிடித்தது தமிழனா?  24.பிரிட்டிஷ் நீதிபதிகள் நரை முடி தரிப்பது ஏன்? 25. தொல்காப்பியர் காலம் தவறு ( ஐந்து பகுதிகள் கொண்ட கட்டுரைகள்)+ 3000  கட்டுரைகள்.

 

–Subahm–

எகிப்தில் 30 வம்சங்கள்: அதிசய தகவல்கள்-பகுதி 9 (Post No.3667)

Written by London swaminathan

 

Date: 24 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 21-38

 

Post No. 3667

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

எகிப்திய வரலாறு மிக குழப்பமானது;புராணங்களில் உள்ள அரசர் வம்சாவளிகளைவிட முன்னுக்குப்பின் முரணானது. ஆயினும் அதை ஒட்டுப்போட்டு ஓரளவுக்குச் சரிக்கட்டிவிட்டனர். உலகிலேயே முதலில் வரலாறு எழுதியது இந்தியர்கள்தான். சுகர் என்பவர்தான் புராணங்களில் இந்திய வரலாற்றை முதல் முதலில் எழுதினார். புராணம் என்பதற்கான ஐந்து லட்சணங்களில் ஒன்று வம்சாவளி. உலகில் இப்படி எந்த நாட்டிலும் கிடையாது. அதுமட்டுமல்ல இப்படி வரலாறு சொல்லுவதை நைமிசாரண்யம் முதலிய காடுகளில் முனிவர்கள் உட்கார்ந்து 12 வருடங்களுக்குக் கேட்டுள்ளனர். இப்பொழுதுதான் இதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கியுள்ளனர். நமது இதிஹாச புராணங்கள் சொல்லுவதை நம்புவோமானால் எகிப்திய வரலாற்றுக்கு முந்தைய வரலாறு நம்முடையது. ஆனால் மிகப்பெரிய வித்தியாசம்—- மெசபொடோமியாவும் (இராக்), சுமேரியாவும் (தெற்கு இராக்), எகிப்தும் பாலைவனப் பகுதிகள் ஆனதாலும் அவர்கள் கற்களையும் களிமண் பலகைகளையும் பயன்படுத்தியதாலும் அவர்களுக்குப் பழைய ஆதாரங்கள் உள்ளன. நமக்கு நதிப் பிரதேசம் என்பதாலும், பருவமழை காரணமாகவும் நாம் ஓலைச் சுவடி/ மரப்பட்டைகளில் எழுதியதாலும் பழைய ஆதாரங்கள் இல்லை. இது நமது துரதிருஷடமே.

 

எகிப்தில் கார்பன் – 14 (Carbon Dating) விஞ்ஞான முறை ஆய்வுகளில் பெரும் வித்தியாசம் வந்தபோதும் ஆராய்ச்சியாளர்கள் அதைப் பூசி மெழுகி ஓரளவுக்குத் தட்டிக்கொட்டி ஒரு வரலாற்று தேதிகளைக் கொடுத்துள்ளனர்!

பாலர்மோ ஸ்டோன் (Palermo Stone) (கல்வெட்டு), அபிதோஸ் (Abydos) நகர பட்டியல், டூரின் (Turin) நகர பட்டியல் சக்கரா (Saqqara) நகர பட்டியல் என்று பல்வேறு ஆதாரங்களை ஒட்டுப்போட்டு ஒரு புதிய பட்டியலை உருவாக்கினர். இதற்கெல்லாம் அடிபடையாக அமைந்தது மனிதோ (Manetho) என்பவரின் பட்டியல். எப்படி சுகர் வம்சாவளி பட்டியலை புராணங்களில் கொடுத்தாரோ அதைப் போல மனிதோ ஒரு அடிப்படையை அமைத்துக் கொடுத்தார்.

யார் இந்த மனீதோ?

 

இரண்டாம் டாலமி பிலடெல்பியாஸ் Ptolemy II Philadelphias (கி.மு.285-246) காலத்தில் ஹீலியோபோலிஸின் (சூரியபுரிHeliopolis) தலைமை குருமார் மானீதோ. (இந்தப் பெயர் விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வருவதால் இது சம்ஸ்கிருதப் பெயர் என்றும் சொல்லலாம்) இவர் சொல்லும் விஷயம் விநோதமானது:

 

முதலில் எகிப்தை (Time of the Gods) தெய்வங்கள் ஆண்டன.

அதன் பின்னர் இறந்தோரின் ஆவிகளும் (The spirits of the dead, the demi gods) தேவர்களும் ஆண்டனர்.

அதன்பின்னர் இறந்து போகக்கூடிய மனிதர்கள் (mortal kings) ஆண்டார்கள்.

 

நமக்குக் கிடைக்காத பல விஷயங்கள் அவருக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்திருக்க வேண்டும்! அவர்தான் எகிப்தின் மன்னர் வம்சங்களை 30 வம்சாவளிகளாகப் (Dynasties) பிரித்தார். ஏன் இப்படிப் பிரித்தார்? ஒரு குடும்பத்தினரின் ஆட்சி — ராஜா, அவரது மகன், அவரது பேரன், அவரது கொள்ளுப்பேரன் என்று ஆண்டு வேறு ஒருவர் கைப்பற்றும்வரை —ஒரு வம்சாவளி என்று பிரித்தார். இதைத்தான் இன்றுவரை எல்லோரும் பின்பற்றி வருகின்றனர். இது மேல் எகிப்தும், கீழ் எகிப்தும் ஒரு குடைக்கீழ் (Unification) வந்த பின்னர் துவங்கிய வம்சாவளிகளாகும். ஆனால் அதற்கு முன், பழங்காலம் (Archaic Period), வம்சாவளிக்கு முந்தைய அரசர் காலம் (Pre Dynastic Period),  என்றெல்லாம் இருந்துள்ளன. அதற்கும் முன்னர் படாரியன் (Badarian) காலம் நகாதா (Naquada) காலம்  என்றெல்லாம் சேர்ந்து சுமார் 10,000 ஆண்டு வரலாற்றைக் கொண்டது எகிப்திய வரலாறு. மனீதோ சொன்ன பல அரசர்களுக்கு வரலாற்றுச் சான்றுகளோ, தொல் பொருட் துறை ஆதாரங்களோ கிடையாது!

மேலும் தனித்தனி அரசர் காலமும், வம்சாவளியின் மொத்த ஆட்சிக்காலமும் அவரது பட்டியலில் உள்ளன. ஆனால் இரண்டு கணக்குகளும் ஒத்துப் போவதில்லை. நமது புராணங்களில் உள்ளதைப் போலத்தான்! பெரிய கணக்குப் புலிகளையும் திணற வைக்கிறார் மனீதோ!

 

முன்னரே எகிப்திய மன்னர் வம்சாவளிகளை பழைய ராஜ்யம் (Old Kingdom) புதிய ராஜ்யம் (New Kingdom), கிரேக்க- ரோமானியர் ஆட்சிக் காலம் என்ற மூன்று பிரிவுகளாகக் கொடுத்துள்ளேன். இடையிடையே குழப்பமான காலம் இருந்ததை இடைப்பட்ட காலம் (First, Second Intermediate Periods)  ஒன்று, இரண்டு என்றெல்லாம் பிரித்துள்ளனர்.

 

கிறிஸ்தவ ஆட்சியாளர் , எகிப்திய நாகரீகத்தின் மிச்ச மீதிகளைச் சிதைத்தனர். வெளிநாட்டுப் படைகள் பீரங்கிப் பயிற்சிக்கு எகிப்திய சின்னங்களைப் பயன்படுத்தினர். கல்லறைத் திருடர்கள், அவைகளைத் தோண்டி, விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்துச் சென்றனர். நமது நாட்டில் கோட்டைச் சுவர்களை உடைத்து வீடுகட்ட கற்களைக் கொண்டு சென்றது போல பலர் செய்தனர். மிச்சம் மீதி, பூமிக்கு அடியில் இருந்ததால் பிழைத்தன.

 

தேள் (Scorpion) , இரிஹோ (Iryhor)ர், கா (Ka) (கா என்றால் சம்ஸ்கிருதத்தில் பிரம்மா), ஆஹா (Aha), மெனெஸ் Menes (மனு), நர்மேர் (Narmer நரமேரு) முதலிய மன்னர்களுக்குப் பின்னர், எகிப்திய வரலாறு துவங்குகிறது. முதல் இரண்டு வம்சாவளிகளை பழங்காலம் என்னும் பிரிவில் வைக்கின்றனர்

 

இனி ஒவ்வொரு வம்சாவளியின் சுவையான அம்சங்களைக் காண்போம்:

முதல் வம்சாவளி

முதல் வம்சாவளி மன்னர்கள் சுமார் 300 ஆண்டுக் காலம் ஆண்டனர். எகிப்தின் பிற்கால வளர்ச்சிக்கான அஸ்திவாரம் இடப்பட்டது. தெற்கே நைல் நதி உற்பத்தியாகும் இடம் முதல் வடக்கில் கடலில் சங்கமிக்கும் வரை ஒரே நாடாக இன்ணைக்கப்பட்டது. மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் மதிக்கப்பட்டபோதும், அவர்களுடைய கல்லறைகள் எல்லாம் சேதமாக்கப்பட்டன. மன்னருக்கு அடுத்தபடியாக முத்திரைதாங்கிகள் (SEAL BEARERS) எனப்படும் பிரபுக்கள் இருந்தனர். விரிவான, சிக்கலான அதிகார வர்கம் தோன்றியது. இவர்கள் காலத்தில் பிரமிடுகள் தோன்றவில்லை. வெறும் செங்கல் கல்லறைகளில் மன்னர்கள், அதிகாரிகள் புதைக்கப்பட்டனர். இவை எல்லாம் கி.மு.3150 ஐ ஒட்டிய காலத்தில் — இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னர் — நடந்தன.

அடுத்த கட்டுரைகளில் ஏனைய 29 வம்சங்களைக் காண்போம்.

 

–SUBHAM–

 

மனித முகம்; சிங்க உடல்! ஸ்பிங்ஸ்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 8 (Post No.3664)

Written by London swaminathan

 

Date: 23 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 21-10

 

Post No. 3664

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்தில் பிரமிடுகளுக்கு அடுத்தபடியாக எல்லோருக்கும் தெரிந்தது ஸ்பிங்ஸ் SPHINX என்னும் பிரம்மாண்டமான சிலை ஆகும். இதற்கு மூன்று பெருமைகள் உண்டு:

 

உலகிலேயே மிகப்பெரிய சிலை!

உலகிலேயே பழமையான சிலை!

உலகிலேயே விநோதமான சிலை!

இந்து மதத்தில் விஷ்ணுவுக்கு முக்கிய அவதாரங்கள் 10. அதில் ஒன்று நரசிம்மாவதாரம்; அங்கே சிங்க முகம் , மனித உடல். ஆனால் எகிப்தில் மனித முகம், சிங்க உடல்: நேர் எதிர் உருவம்.

 

எகிப்தில் எங்கே உள்ளது (Sphinx) ஸ்பிங்ஸ்?

கீஸா (Giza) என்னும் இடத்தில் இந்தச் சிலை இருக்கிறது. அது எகிப்தின் தலைநகரான கெய்ரோவுக்கு அருகில் உள்ளது.

 

இந்த சிலையின் பொருள் என்ன? இது என்ன?

 

இது எகிப்திய மன்னரின் முகத்தையும் படுத்திருக்கும் சிங்கத்தின் உடலையும் கொண்டது.

 

இதன் உயரம் நீளம் என்ன?

இதன் உயரம் 66 அடி; நீளம் 240 அடி. பெரும்பாலும் ஒரு மலையைச் செதுக்கி உருவாக்கியுள்ளனர். ஆயினும் அத்தோடு கல்வேலைப்பாடு செய்து பொருத்தியுள்ளனர்.. அருகில் நாலாவது அரச வம்சத்தைச் சேர்ந்த காப்ரே என்ற மன்னரின் பிரமிடு இருக்கிறது

இது கொஞ்சம் சேதம் அடைந்துள்ளது. எகிப்துக்குள் வந்த துருக்கி படைகள் துப்பாக்கி– பீரங்கிப் பயிற்சிக்கு இதை குறியிலக்காகப் பயன்படுத்தியது!!

 

3000 ஆண்டு எகிப்திய வரலாற்றில் பலமுறை இதைப் பாதுக்காக்க மேல்பூச்சு பூசினர். பாலைவனப்பகுதியில் இருந்ததால் பெரும்பகுதியை மணலும் மூடிப் பாதுகாத்தது. முன்காலத்தில் இதில் பல வர்ணங்களைப் பூசி யிருந்தனர். உடலையும் முகத்தையும் சிவப்பு வர்ணத்தாலும் மன்னரின் தலைக் கிரீடத்தை மஞ்சள்-நீல நிறங்களாலும் அலங்கரித்தனர்.

 

 

ஸ்பிங்ஸ் சிலை குறித்து இரண்டு புதிர்கள் உள்ளன:

  1. இதன் வயது எதற்காக இப்படி ஒரு விநோதமான உருவத்தை அந்த மன்னன் சமைத்தான்?

 

இது இருக்கும் பகுதியில் பெரிய பிரமிடு (Great Pyramid)  என அழைக்கப்படும் கூஃபூவின் பிரமிடு, அவனுடைய மகன் காஃப்ரேயின் பிரமிடு, அவனுடைய மகன் மென்கௌரேயின் பிரமிடு (அதாவது கூஃபுவின் பேரன்) ஆகியன இருக்கின்றன. சிலர் இது காப்ரேயின் முகம் என்பர்; மற்றும் சிலர் இது மன்கௌரேயின் முகம் என்பர்; இவர்கள் எல்லோரும் கி.மு 2600 முதல் 2400 வரை ஆண்டவர்கள். ஆனால் வேறு சில ஆராய்ச்சியாளர்கள் இது அவர்களுக்கெல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டது — அதாவது கி.மு.5000 தான் இதன் உண்மை வயது என்பர். அப்படியானால் 7000 ஆண்டுகளாக இது மழையிலும் வெய்யிலிலும் கஷ்டப்பட்டு வருகிறது!

 

ராபர்ட் ஸ்சோச் (Robert Schoch) என்ற அறிஞர் காலநிலை மாற்றத்தால் சிலைக்கு ஏற்பட்ட அரிப்பு/ சிதைவை வைத்துக் கணக்கிட்டு 7000 ஆண்டுப் பழமையானது என்பார். ஆனால் தொல்பொருட்துறை அறிஞர்கள் இது காப்ரே மன்னரின் காலத்தை ஒட்டியே உருவாகி இருக்க வேண்டும் என்பர். அப்படியானால் இதன் வயது 5000 ஆண்டுகளுக்கும் குறைவே.

 

இப்படி ஒரு உருவத்தை ஏன் உருவாக்கினர்?

இது திட்டமிடப்பட்டு உருவாக்கிய சிலை என்பது ஒருசாரார் வாதம்; மற்றொரு கோஷ்டி, இல்லை, பக்கத்தில் உள்ள பிரமிடுகளுக்குக் கல் தோண்டுகையில் கற்களை வெட்ட வெட்ட இப்படி ஒரு உருவம் இயற்கையிலேயே உருவாகியது. அதை வீணடிக்கவேண்டாம் என்று எண்ணி, சிங்க உருவமாகச் செதுக்கிவிட்டார்கள் என்கின்றனர்.

 

அருகிலேயே ஸ்பிங்ஸ் கோவில் (Sphinx Temple)  இருக்கிறது அது காப்ரே (Khafre) என்ற மன்னருடன் தொடர்புடையது. ஆகையால் காப்ரேதான் இதையும் உருவாக்கினான் என்பது ஊகம்! இது ஒரு சாலையின் முடிவில் இருப்பதாலும் அருகில் மிகப் பழைய பிரமிடுகள் இருப்பதாலும் அவைகளின் காவலனாக — காவல் தெய்வமாக- இதைப் படைத்தனரோ என்றும் எண்ணுவர். இது பற்றி எந்தக் கல்வெட்டும் இல்லா ததால் இப்படிப் பல ஊகங்கள், புதிர்கள் உலவுகின்றன!

 

எகிப்திலும் கிரேக்க (Greece) நாட்டிலும் பலவகையான ஸ்பிங்ஸ் சிலைகள் உள்ளன. அவைகளைப் பின்னர் காண்போம்.

 

–Subham–

 

 

எகிப்தில் இந்திய நீலக்கல்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 7 (Post No.3660)

லபிஸ் லசூலி Lapis lazuli நீலக்கல் (Wikipedia)

 

Written by London swaminathan

 

Date: 22 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 16-59

 

Post No. 3660

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்தில் இந்தியாவின் தாக்கம், துவக்க காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. இதற்கு மறுக்க முடியாத ஆதாரமாக விளங்குவது நீலப் பாறை (லபிஸ் லசூலி) ஆகும். எகிப்தியர்களுக்கு மிகவும் பிடித்தது நீலம். தங்கள் நாட்டின் நதிக்கே நீலம் என்ற சம்ஸ்கிருதப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர். நீல ( niila= Nile) என்பதை ஆங்கிலத்தில் எழுதி அதை நைல் என்று திரித்துவிட்டனர். ஆயினும் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? இன்றும் ஆங்கிலத்திலும் ப்ளூ நைல்(BLUE NILE) நதி என்றே சொல்லுவர்.

 

நீலம் என்ற விலைமதிப்புமிக்க Sapphire-க்கு அடுத்த படியாக உபயோகத்தில் உள்ளது லபிஸ் லசூலி (LAPIS LAZULI) எனப்படும் நீலப் பாறை ஆகும். இதை பவளம் போல வெழுமூன வழு வழு என்று பாலிஷ் செய்தால் சலவைக்கல் போல வழுவழுப்பாகிவிடும்.

 

எகிப்தியர்களுக்கு இந்தக் கல் மீது ஒரு அலாதிப் பிரியம்; இதை பாரதத்திலிருந்து இறக்குமதி செய்து, மன்னர் கிரீடம் முதல் பொம்மைகள் வரை எல்லாவற்றுக்கும் பயன்படுத்தினர். இதை சிந்து வெளி மக்களும் பயன் படுத்தியதை எனது ஆராய்சிகட்டுரையில் ஏற்கனவே எழுதியுள்ளேன்.

 

இந்தக் கல் கிடைக்கும் இடங்கள் இப்பொழுது ஆப்கனிஸ்தான் நாட்டிலும் பாகிஸ்தான் நாட்டிலும் உள்ளன. ஆனால் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தியர் இதைப் பெற்றபோது இவ்விரு இடங்களும் அப்போது உலகிலேயே பெரிய நாடான பாரதத்துக்குள் இருந்தன. சந்திரகுப்த மௌர்யன் ஆட்சிக் காலத்தில்கூட — 2400 ஆண்டுகளுக்குமுன் – இவை பாரதப் பேராசின் ஒரு பகுதியே!

லபிஸ் லசூலி (Lapis lazuli)  கிடைக்கும் இடங்கள்:

படக்க்ஷான் (Badkshan) – ஆப்கனிஸ்தான்

குவெட்டா (Quetta) – பாகிஸ்தான்

 

எகிப்து நாடு,  இவ்விரு இடங்களிலிருந்து தொலைவில் இருந்தாலும், இந்திய வணிகர்கள் இதை ஈரான் வழியாக கொண்டு சென்றனர்.

 

எகிப்திய மன்னர்கள் தங்கள் பெயரை எழுத சதுரக் கட்டதைப் ( SEREKH) பயன்படுத்தினர். இதை செரிக் என்பர். இது சார்க்க (Saarka) என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் திரிபாக இருக்கலாம். “சூரியன் தொடர்புடைய” (Sa+ Arka) என்று பொருள்; மன்னர் தன்னை ஹோரஸ் (சோரஸ்= சூர்ய= சோலார்; Horus=Sorus=Solar= Suurya) என்ற சூரியக் கடவுளின் பிரதிநிதியாகக் கருதினார். மேலும் இது தென்மேற்கு ஆசியாவில் (South West Asia) உருவானதாக எகிப்தியவியலாளர் (Egyptologists)  கூறுவர்.

 

இந்துக்கள்தான் வட்டம், சதுரம் போன்ற வடிவங்களை வைத்து சொற்களை உருவாக்கினர் பூஜ்ய (வட்டம்) என்றால் புனிதத்துக்குரிய என்று பொருள். சதுரம் என்றால் புத்திசாலி என்று பொருள்; யார்கொலோ சதுரர்? என்று மாணிக்கவாசகர் சிவபெருமானைக் கிண்டல் செய்கிறார். சதுரா என்று கடவுளை பஜனைப் பாடல்களில் புகழ்வர். சதுரத்திலிருந்து உருவான சாதுர்யம், சாதுர்யமான என்ற சொற்களை நாம் இன்றும் பயன்படுத்துகிறோம். எவ்வகையில் பார்த்தாலும் இது இந்துக்கள் உருவாக்கியதே.

Goddess Hathor (Hindu name Savitr)

மேலும் தென்மேற்கு ஆசிய கட்டிடக்கலை அம்சங்களும் எகிப்தில் காணப்படுகின்றன. பிரமிடுகள் கட்டுவதற்கு முன் மஸ்தபா (Mastaba)  என்பப்படும் செங்கல் சமாதிகளி ல்தான் எல்லோரையும் புதைத்தனர். இவை கி.மு.3500 முதல் சுமேரியாவில் (Mesopotamia)  காணப்படுகின்றன. பின்னர்தான் கருங்கல் கட்டிட பிரமிடுகள் தோன்றின.

தெற்கே உதித்த நாகரீகம்

 

எகிப்திய நாகரீகம் மேல் எகிப்து எனப்படும் தெற்கு எகிப்தில் தோன்றியது. பின்னர்தான் நைல் நதி சங்கமம் ஆகும் கடற்பகுதிவரை — வட பகுதி வரை பரவியது. இதை கீழ் எகிப்து என்பர். தெற்கில் முதல் முதலில் எல்-படாரி el-Badari, எல்-அம்ரா el-Amra, நகாதா Naqada என்ற மூன்று விதமான தோற்றுவாய்களைக் காணலாம். எப்போதாவது எகிப்துக்கு ஆபத்து வந்தாலோ, கலாசாரம்  கீழ்நோக்கிச் சென்றாலோ உடனே- பழைய கலாசாரம் தஞ்சம் புகுந்த இடம் தென்பகுதிதான்.

 

தமிழுக்குத் தென் பாண்டி நாடு எப்படிக் காவலனாக இருந்ததோ அது போல எகிப்திய பண்பாட்டுக்கு தென் எகிப்து காவலனாக இருந்தது. ஆயினும் தொடக்க காலத்திலேயே எகிப்துக்குள் வெளிநாட்டினர் குடியேறினர். அதனால்தான் இந்த நாட்டுகே மிஸ்ர (கலப்பட) தேசம் என்று பெயர் என்பதை முதல் கட்டுரையிலேயே விளக்கினேன்.

 

அடுத்த கட்டுரையில் ஒவ்வொரு வம்ச (Dynasty wise) அரசு பற்றிய சுவையான விஷயங்களைக் காண்போம்.

 

 

எனது பழைய ஆரய்ச்சிக் கட்டுரை:–

Indus Valley to Egypt: Lapis lazuli Export! | Tamil and Vedas

Indus Valley to Egypt: Lapis lazuli Export!

6 Sep 2014 – Afghanistan and Pakistan, parts of ancient Bharat were the main sources for this stone, says the archaeologists. The contact between Egypt and the Hindu kings of Turkey and Syria is well documented. … Egypt and Sumer had jewellery made up of lapis lazuli blue stones from 2500 BCE……………..

 

–Subham–

 

எகிப்தில் நரபலி:எகிப்திய அதிசயங்கள்-பகுதி 6 (Post No.3657)

Written by London swaminathan

 

Date: 21 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 19-56

 

Post No. 3657

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்தில் ஆரம்பகால மன்னர்கள் (பழைய ராஜ்யம் Old Kingdom) இறந்தபோது அவர்களுடன் நூற்றுக்கணக்கான அடியாட்கள், காமக்கிழத்தியர் (Concubines), குள்ளர்களும் (Dwarves) புதைக்கப்பட்டதாகத் தெரிகிறது.இவர்கள் தானாக உயிர்த் தியாகம் செய்தார்களா அல்லது பலவந்தமாக நரபலி கொடுக்கப்பட்டதா என்பதே கேள்வி.

 

வால்மீகி ராமாயணத்தில் ராமன் சரயு ஆற்றில் விழுந்து உயிர்த் தியாகம் (ஜல சமாதி) செய்தபோது அவரோடு ஏராளமான பொது மக்களும் தாமாக முன்வந்து  உயிர்த் தியாகம் செய்த செய்தி உள்ளது.

 

திருஞான சம்பந்தர் திருமண நாளன்று  மனைவியுடன் அக்கினியில் புகுந்தபோது அவர் ஏராளமானோரை அழைத்துச் சென்றார். இது போல மன்னர்களும், புனிதர்களும் இறக்கும்போது அவர்களுடன் சென்றால் சுவர்க்கத்துக்குள் எளிதாகப் போக முடியும்; இது சொர்க்கத்துக்கு ஒரு சுருக்குவழிப்பாதை (Short cut route) என்பது மக்களின் நம்பிக்கை. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் துறந்தபோது பிசிராந்தையார் முதலியோரும் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்ததும் இந்தக் காரணத்தால்தான். வடக்கிருத்தல் என்பது ஒரு புனித நோன்பு.

மஹா பத்தினியான சித்துர் ராணி பத்மினி , அலாவுதீன் கில்ஜியின் கரங்கள் தன் மீது பட்டுவிடக்கூடாதென்பதற்காக தீக்குளித்தபோது அவளுடன் நூற்றுக்கணக்கான ராஜபுத்திர வீராங்கனைகள் தீக்குள் பாய்ந்து உயிர் நீத்ததற்கும் இதுவே காரணம். போரில் இறப்பவர்களுக்கு வீர சுவர்க்கம் கிர்டைக்கும் என்பது பகவத்கீதையிலும் புறநானூற்றிலும் தெள்ளத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. போருக்கு முன்பாக தன்னைத்தானே பலிகொடுத்து வீரத்தைத் தூண்டிவிடும் வீரர்களின் சிலைகள் தமிழ்நாடு முழுதும் உள்ளன. இது  மஹாபாரத காலத்தில் துவங்கியது மஹாபாரதத்தில் வரையப்பட்டுள்ளது.

 

 

எகிப்தில் நடந்தது என்ன?

எகிப்திலும் தாமாக முன்வது இறந்தனரா என்பதே கேள்வி

பிளிண்டர்ஸ் பெற்றி Flinders Petrie என்பவர்தான் முதல் முதலில் எகிப்தில் பெரிய ஆராய்ச்சிகளைச் செய்தவர். அவர் ABYDOS அபிதோஸ் நகரில் 1900ஆம் ஆண்டில் அகழ்வாராய்ச்சி நடத்தினார். முதல் அரச வம்சத்தைச் சேர்ந்த தஜெர் (Djer of First Dynasty) என்ற மன்னரின் புதைகுழிக்குப் பக்கத்தில் 317 துணைப் புதைகுழிகள் இருந்தன. இது தவிர நைல் நதி ஓரமாக ஏராளமான கல்லறைகள் இருந்தன.

 

முதல் அரச வம்சம் தொடர்பான சில விஷயங்கள் சின்னச் சின்ன கல்வெட்டு வில்லைகளாகக் கிடைத்தன. அதில் முக்கிய தர்பார் நிகழ்ச்சிகளும் சமயம் தொடர்பான சடங்குகளும் வரையப்பட்டுள்ளன.

 

இரண்டு வில்லைகளில் பயங்கரக் காட்சிகள் உள்ளன. உயிருடனுள்ள ஒரு கைதியின் நெஞ்சில் ஒருவன் கத்தியைப் பாய்ச்சுகிறான். அவனது ரத்தத்தைப் பிடிப்பதற்காக அருகிலேயே ஒரு கிண்னம் வைக்கப்பட்டுள்ளது. இதன் சரியான பொருள் தெரியவில்லை. ஆனால் போர்க்கைதிகள், குற்றவாளிகளை சமயச் சடங்குகளில் பலி கொடுப்பது தெரியவந்த்துள்ளது.

 

ஆனால் ஒவ்வொரு மன்னர் இறந்தபோதும் ஏராளமானோர் பலிகொடுக்கப்பதற்கான ஆதாரஙள் எதுவும் இல்லை. ஆரம்ப கால கிசா பிரமிடுக்குப் பக்கத்தில் வரிசை வரிசையாக கல்லறைகள் இருந்தபோதும் அவை எல்லாம் அரசாங்க திகாரிகள் இறந்தபின்னர் புதைப்பதற்காக ஒதுக்கப்பட்டவையே. இது அவர்களுக்குக் கிடைத்த ஒரு சலுகை!

முதல் அரசவம்ச (First Dynasty) கால கல்லறைகளில் ஒரு முக்கிய வேறுபாடு காணப்படுகிறது. இறந்தவரின் பெயரும் அவர் பதவியும் பொறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் உயர் அதிகாரிகள் இல்லை. அரசரின் சேவகர்கள், காமக் கிழ்த்தியர், குள்ளர்கள் ஆகியோரின் கல்லறைகளாகும்.

 

இந்தியாவிலும் அரண்மனைகளில் குள்ளர்களை வேலைக்கு வைக்கவேண்டும் என்று நீதி சாத்திரம் கூறுகிறது. இந்தியாவிலும் அரசனின் அந்தப்புரத்தில் இதுபோல கள்ளக் காதலிகள் இருப்பர்.

 

அவர்களுடைய சடலம் உள்ள நிலை, எந்தக் காலத்தில் புதைக்கப்பட்டனர் என்பதை ஆராய முடியாதவாறு கல்லறைத் திருடர்கள் அவைகளைத் தோண்டி நிர்மூலம் செய்துவிட்டதால் முறையான ஆராய்ச்சிக்கு வழி இல்லாமல் போய்விட்டது.

 

சீனா, மெசபொடோமியா, பழைய நூபியா(Old Nubia) ஆகிய நாடுகளின் கல்லறைகளில் சடலமோ, எலும்புக்கூடோ உடகார்ந்திருக்கும் நிலையைப் பார்த்து அது உயிருடன் புதைக்கப்பட்ட ஆசாமி என்பதை அறிந்தோம். சில இடங்களில் ஒரே கல்லறையில் நூற்றுக்கணக்கானோர் புதைக்கப்பட தையும் பார்த்திருக்கிறோம். ஆனால் எகிப்தில் அப்படி இல்லாமல் இற   ந்தோருக்கு மரியாதை கொடுத்திருப்பதைக் காண முடிகிறது. தனித்தனி கல்லறைகளில் சடலங்கள் புதைக்கப் பட்டன. தலையைச் சீவி பலி கொடுக்கப்பட்டதற்கான தடயங்களும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு புரியாத விசித்திரப் புதிர் மட்டும் இருக்கிறது! ஆஹா (Aha) என்ற மன்னரின் (பாரோவின்) கல்லறைக்கு அருகில் புதைக்கப்பட்ட எல்லோருடைய வயதும், 25-க்கும் குறைவு! அரசன் மறைவை அடுத்து அவர்களும் இறந்தது அல்லது இறக்கவைக்கப்பட்டது தெரிகிறது

நரபலி தடயங்கள்

முதல் அரச வம்சத்தின் இரண்டு அரசர்களின் (பாரோக்கள்) கல்லறைகளில் நரபலிக்கான நல்ல தடயம் கிடைத்தன. இவர்கள் கொலை செய்யப்பட்டனரா அல்லது மன்னரின் மீதுள்ள அபிமானத்தால் தற்கொலை செய்துகொண்டார்களா என்று சொல்ல முடியாது. சமர்கேட் Semerkhet (சமரகேது), கா (Qaa) (இந்துமதத்தில் கா என்றால் பிரம்மா என்று பொருள்) ஆகிய இருவரின் கல்லறைகளுக்கு அருகிலுள்ள சில கல்லறைகள் ஒரே நேரத்தில் மூடப்படுள்ளன. அவர்களாக உயிர்த் தியாகம் செய்திருக்கலாம். 1989ல் ஜப்பானிய மன்னர் ஹிரோஹிடோ இறந்தவுடன் அவருடைய பழைய நன்றியுள்ள ஒரு சேவகன் தற்கொலை செய்துகொண்டான்; காரணம்- மன்னருக்கு மேலுலகத்திலும் சேவை செய்ய!

 

எகிப்திலும் மக்களின் சமய நம்பிக்கை காரணமாக இறந்திருக்கலாமே! நமது நாட்டிலேயே ராமாயண, புறநானூற்றுச் சான்றுகள் உளவே!

-சுபம்–

ஆதிகால எகிப்திய புலவரின் புலம்பல்; எகிப்திய அதிசயங்கள்-5 (Post No.3654)

Written by London swaminathan

 

Date: 20 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 20-54

 

Post No. 3654

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

எகிப்தில் பழைய அரச வம்சம் (Old Kingdom) முடிந்தவுடன், கி.மு.2200 வாக்கில் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்தன; கடவுள் என்று கருதப்பட்ட மன்னனின் அதிகாரங்கள் குறைந்து மனிதன் என்ற நிலையை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தார். மன்னரின் கால்களை முத்தமிடுவது கிடைத்தற்கரிய பாக்கியமாக கருதப்பட்ட நிலை மாறி, மன்னரைக் கவிழ்க்கும் முயற்சிகள் பெருகின. இதை நேரில் கண்ட ஒரு புலவர் நமக்காக எழுதிவைத்துச்  சென்றுள்ளார். சுமார் 4000 ஆண்டுகளுக்கு பின்னர் படித்தாலும் அதிலுள்ள கவிநயம் ரசிக்கத்தக்கதாக உள்ளது. இதே போல காளிதாசனும் ரகுவம்சத்தில் தோன்றிய கடைசி சில அ ரசர்கள் பற்றிப் புலம்பியுள்ளார். காஷ்மீரின் சரித்திரத்தை ராஜதரங்கிணி என்ற நூலாக எழுதிய கல்ஹணரும் இதே போல காஷ்மீரில் இந்து சாம்ராஜ்யம் எப்படி சரிந்தது என்று கவி பாடியுள்ளார். கவிஞர்கள் என்றுமே உண்மை விளம்பிகள்!

 

இந்தக் கவிஞரின் பெயர் இபுவேர் (Ipuwer) அல்லது அய்புவேர. அவருடைய கவிதை சிதைந்த நிலையிலேயே கிடைத்துள்ளது. ஆதிகால எகிப்திய இலக்கியத்தில் சிறந்த ஒரு பகுதி என்று கருதப்படுகிறது. இபுவேர் சொல்கிறார்:

 

“அரசன் கிழவன் ஆகிவிட்டான்; அரண்மனைக்குள் பாதுகாப்பாக உள்ளான். அவனுக்குத் தெரியுமா மக்கள் படும்பாடு! அவனைச் சுற்றியுள்ள அதிகாரிகள், அவனுக்கு இதுபற்றித் தெரியாமல் மறைத்துவிட்டனர். எகிப்தைப் பீடித்துள்ள நோய்கள் இரண்டு; அதிகமான வெளிநாட்டினர் தங்கு தடையின்றி உள்ளே வந்துவிட்டனர். அத்தோடு பழைய சமூக நிலை தலை  கீழாக மாறிவிட்டது

இதைப் பற்றித்தான் எல்லோரும் புகார் செய்கின்றனர். வேலைக்காரிகள், மஹாராணிகளின் இடத்தைப் பிடித்துவிடுகிறார்கள்; அதிகாரிகள் சட்டவிரோத ஆட்களின் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டியுள்ளது. இளவரசர்களின் குழந்தைகளை சுவரில் மோதி கொல்கின்றனர்”.

கடவுள்- அரசன் தொடர்பு மாறியவுடன் அரசன்–மக்கள் தொடர்பும் மாறிவிட்டது நாலாவது (Fourth Dynasty) அரச வம்ச மன்னன் ஒருவன், தனக்கு வேண்டிய ஒரு அதிகாரியை தனது காலை முத்தமிட அனுமதித்தான். அதை அந்த அதிகாரி பெரிய பாக்கியமாகக் கருதினார். இவையெல்லாம் பிறகாலத்தில் நினைத்தும் பார்க்கமுடியாதவை

 

எகிப்தியர்களே இதற்கு முந்தைய ஆயிரம் ஆண்டுகளைப் பொற்காலம் (Golden Age) என்று வருணித்தனர். ரே (Re) என்னும் கடவுளே அக்காலத்தில் ஆண்டதாகக் கருதினர். ஆனால் இபுவேர் என்ற கவிஞர் சொல்கிறார்:

 

“ரே- வுக்கு வயதாகிவிட்டது! அவருடைய எலும்புகள் வெள்ளி ஆகிவிட்டன; சதை தங்கம் ஆகிவிட்டது; அவருடைய தாடி நீலநிறக் கற்களாகிவிட்டன.”

 

கஷ்டகாலத்திலும் கூட கவிஞரின் கற்பனைக்கு யாரும் தடை போட முடியவில்லை. அவர் வருணித்த பொருள்கள் எல்லாம் வெளிநாடுகளில் இருந்து எகிப்துக்குள் வந்தவை.

 

இபுவேர் கி.மு.2000ல் வாழ்ந்தவர் என்றும் அவர் வருணிப்பது அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவை என்றும் கருதப்படுகிறது. ஆனால் அவரது கவிதையை தவிர வேறு எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை.

 

காளிதாசன் புலம்பல்

உலகப் புகழ்பெற காளிதாசனும் ரகு வம்சத்தை துவக்கத்தில் புகழ்கிறான்; பிற்காலத்தில் அது க்ஷீண திசையை அடந்தபோது இகழ்கிறான். மக்களை மதிக்காத மன்னன் ஜன்னல் வழியே கால்களை நீட்டித் தெரியும்படி வைத்து மக்களை அவமானப் படுத்துகிறான்.

 

ரகுவம்சத்தில் 19-ஆவது சர்கத்தில் அக்னிவர்ணன் என்ற மன்னன் பற்றிக் காளிதாசன் கூறுவதாவது:-

 

அழகான ஸ்த்ரீக்களுடன் வசிக்கும் அக்காமுகனது வீட்டில் எப்போதும் மிருதங்க ஒலி கேட்டது. முதல் நாள் கொண்டாட்டத்தை விஞ்சும் அளவுக்கு இரண்டாம் நாள் கொண்டாட்டம் இருக்கும். அந்தப் புரத்தை விட்டு அவன் நகரவில்லை.  ஜனங்களைக் காண விரும்பவில்லை.

மந்திரிகள் கெஞ்சியதால் ஒரு முறை மக்களுக்கு தரிசனம் தந்தான். எப்படி என்றால் ஜன்னல் வழியே கால்களை மட்டும் நீட்டினான. அப்பாதத்தையே வணங்கி மக்கள் பேறுபெற்றதாக எண்ணி மகிழ்ந்தனர். மதுவிலும் மாதுவிடத்திலும் காலம் கழித்தான். அவனே மிருதங்கம் வாசித்து ஆடல் அழகிகளை ஆடச்செய்தான். வேலைக்கரிகளிடம் காதல் கொண்டான்.. இறுதியில் நோய்வாய்ப்படு இறந்தவுடன் அவன் மனைவி அரசாண்டாள்.

 

எகிப்திய கவிஞர் புலம்பல் போலவே காளிதாசனும் புலம்பியது குறிப்பிடத்தக்கது.

 

இதே போல இலங்கையில் நடந்த தீய செயல்களை மஹாவம்சமும் காஷ்மீரில் நடந்த தீய செயல்களை கல்ஹணரின் ராஜதரங்கிணியும் விளக்கமாகத் தந்துள்ளன.

 

சுபம்–

 

 

எகிப்தில் சூர்ய வம்சம்: எகிப்திய அதிசயங்கள்-பகுதி 4 (Post No.3651)

Written by London swaminathan

Date: 19 FEBRUARY 2017

Time uploaded in London:- 20–49

Post No. 3651

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

ஆர்ய தரங்கிணி என்னும் ஆங்கில நூலில் ஏ.கல்யாணராமன் (Aryatarangini by A.Kalyanaraman) எழுதிய விஷயங்களின் சுருக்கத்தை மூன்றாம் பகுதியில் கொடுத்தேன். அவர் சொல்லும் வேறு சில விஷயங்கள்:–

எகிப்திய பாரோக்கள் (மன்னர்கள் ) தங்களை சூரியனின் புதல்வர்கள் என்று கூறிக்கொண்டனர். கி.மு.2500ம் ஆண்டில் இப்படி அழைத்துக்கொண்ட முதல் மன்னன் ஆண்ட நாகரின் பெயரும் சூரியபுரி! இதை இந்தியாவிலுள்ள சூரியவம்சத்துடன் ஒப்பிடலாம். இக்ஷ்வாகு வம்சத்தில் திலீபன், ரகு, ராமன் ஆகியோர் தோன்றினர். இவர்கள் அனைவரும் சூரியகுலத்தில் உதித்த அரசர்கள். (தமிழ் மன்னர்களில் சோழர்களும் சூரிய குலத் தோன்றல்களே). இவர்கள் அனைவரும் 14 ஆவது மனுவான வைவஸ்வத மனுவின் வழியில் வந்தவர்கள். அவருடைய காலம் கி.மு.3000 ஆக இருக்கலாம்.

 

 

இந்திய மன்னர்கள் சூரிய தெய்வங்களான ஆதித்யர்கள் (அதிதியின் மகன்கள்= ஆதித்யர்கள்) வழி வந்தவர்கள் ஆவர். எகிப்தில் மன்னர்களின் மூச்சு, நைல் நதிக்கு உயிரோட்டம் கொடுத்ததாகச் சொல்லுவர். இந்தியாவில் நீர்க் கடவுளான வருணனை மன்னர்களுடன் ஒப்பிடுவர்.

 

இந்த ஒற்றுமைகளை எல்லாம் கண்ட சில ஆராய்ச்சியளர்கள், எகிப்திலிருந்தே, இந்திய கலாசாரம் வந்ததாகச் சொன்னார்கள். இதை நியாயப்படுத்துவதற்காக எகிப்திய மன்னர்களின் காலத்தை முன்போட்டனர். எகிப்தியர்களுக்கு மிகவும் முந்தையது சப்தசிந்து நாகரீகம் என்று நான் காட்டுவேன்.

எகிப்தில் நாகரீகம் தோன்றியது கி.மு.3200 -எனலாம்.. ரிக்வேதத்தில் காணப்படும் கலாசாரம் இதைவிட குறைந்தது 1000 ஆண்டுகளாவது பழமையானது. எகிப்தியர்கள்தான்,  இந்தியாவிலிருந்து கடன் வாங்கி இருக்க வேண்டும். இதற்கு ஆதாரங்கள் உள.

 

 

எகிப்துக்குள் கொஞ்சம் கொஞ்சமாக குதிரைகள், சக்கரம் பூட்டிய ரதங்கள், குயவர் சக்கரம், இரும்பு உபகரணங்கள், ஆயுதங்களூம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை துருக்கி, லெபனான் ஆகிய பகுதிகளை ஆண்ட மிட்டனி (Mitanni) அரசர்களிடமிருந்து கிடைத்திருக்கலாம்.

 

வில்- அம்பு

ரிக் வேதத்தில் வில்- அம்பு பிரயோகம் பற்றி அடிக்கடி பேசப்படுகிறது. பயுவின் பிராரத்தனை (6-75) ஒரு எடுத்துக் காட்டு. இந்த வில்- எதனால் ஆனது என்பதை வேதம் சொல்லாவிடினும், உலோகம், கொம்பு, மரத்தால் வில்கள் செய்யப்படதாக அக்னி புராணம் சொல்லும். கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாணிணி அம்புகளை கார்முக என்று குறிப்பிடுகிறார். பாணினி, கௌடில்யர் முதலியோர் பனைமரத்தால் ஆன வில்லைக் குறிப்பிடுகிறார்கள். மஹேச்வாச என்ற விசேஷ வில்லைப் பாணினி குறிப்பிடுகிறார். இது ஏழரை அடி நீளமானது. சாதாரண வில் ஆறு அடி நீளம் உடையது. எகிப்தியர்களும் இதே அளவுடைய வில் பயன்படுத்தினர். சம்ஸ்கிருதத்தில் வில்- அம்புக்கு உள்ள பெயர்களே அவஸ்தன், கிரேக்க, லதீன் மொழிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

 

எகிப்து மீது படையெடுத்த ஹிக்ஸோஸ் (Hyksos) குதிரை பூட்டிய ரதங்களைப் பயன்படுத்தியது, எகிப்தில் புதிய தாக்கத்தை உண்டாக்கியது. அதற்குப் பின்னர், எகிப்திய ராணுவத்தில் குதிரைப் படை வந்தது. ஆசிய நாட்டு மரங்களை தேருக்குப் பயன்படுத்துவது கொஞ்சம் காலம் நீடித்தது. இந்தப் படையெடுப்புக்குப் பின்னர் இந்தியாவிலிருந்து திமில் இருக்கும் பிராம்மணி காளைகள் இறக்குமதி செய்யப்பட்டன. போர் என்னும் கலையை ஹிக்ஸோஸ் படை எடுப்பு முழு அளவுக்கு மாற்றிவிட்டது என்று சர் எச். கார்டன் (Sir H.Gordon) கூறுகிறார்.

 

–subham–

எகிப்தில் இந்தியப் பண்பாட்டின் தாக்கம்: எகிப்திய அதிசயங்கள்- பகுதி 3 (Post No.3648)

Written by London swaminathan

 

Date: 18 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 20-59

 

Post No. 3648

 

 

Pictures are taken from various sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்து பற்றி பல ஆராய்ச்சியாளர்கள் கூறியதையும் அது குறித்து தனது கருத்தையும் ஏ.கல்யான்ணராமன் எழுதிய ஆரியதரங்கிணி என்ற நூலில் பல்வேறு பக்கங்களில் தனித்தனியே  அளித்துள்ளார். அவற்றைத் தொகுத்து (தமிழில்) தருகிறேன்:-

 

செமிட்டிக் மொழிகளில் குரங்கு, மயில், கிதார், நீலம் (ரத்தினக் கல்) முதலியவற்றின் சொற்கள் சம்ஸ்கிருத மொழியிருந்து வந்துள்ளன. இது ஹீப்ரு முதலிய மொழிகளில் இந்தியாவின் தாக்கததைக் காட்டுகிறது.

 

வேதத்திலுள்ள மனு- மீன் கதை (பிரளயம்) பைபிளின் பழைய ஏற்பாட்டில் (Jonah and the Whale) உள்ளது. இது இந்து கலாசாரத்தின் தாக்கத்தைக் காட்டுகிறது. கி.மு.3000 வாக்கில் இந்தியாவிலிருந்து பலர் அங்கு குடியேறினர்.

 

எகிப்தை டாலமி (Ptolemies) வம்ச அரசர்கள் ஆண்டபோது அங்கு ஆரிய புரோகிதர்கள் இருந்ததும் அங்குள்ள சம்ஸ்கிருதப் பயிற்சிப் பள்ளீகளில் அவர்கள் சொற்பொழிவாற்றியதும் தெரியவந்துள்ளது.

 

 

பல எகிப்திய தெய்வங்கள், வைதீக சமய தெய்வங்களைப் போல இருக்கின்றன. இது பற்றி இன்னொரு இடத்தில் விளக்கியுள்ளேன். எகிப்தியர்களின் முக்கியக் கடவுள் Ptah பிதா ( பரலோக பிதா) வேதத்திலுள்ள வானுலக பிதாவை Dyaus Pitar இது குறிக்கும் இதை கிரேக்கர்கள் ஜ்யூஸ் பேடர் Zeus Pater என்றும் ரோமானியர்கள் ஜூ+பிடர் Jupiter என்றும் வழிபட்டனர்.

 

எகிப்தியர் வழிபட்ட Hathor ஹதோர், வேத கால தெய்வமான சவிதர் (Savitur) என்பதைப் போன்றது எகிப்தியரின் ஹோரஸ் (Horus or Sorus) அல்லது சோரஸ் என்பது வேதத்திலுள்ள சூர்ய  (Surya=Sun)என்பதைப் போன்றது.

(கிரேக்க மொழியிலும் பாரசீக மொழியிலும்  S எஸ் என்பது H எச் என்று உச்சரிக்கப்படும்)

 

எகிப்தியர் மன்னர்களை பாரோ (Pharaoh) என்று அழைத்தனர். இது சம்ஸ்கிருதச் சொல்லான பர Para (உயர்ந்தது, சிறந்தது என்பதன் திரிபு ஆகும்.

மன்னர்களை எல்லோரையும் விட உயர்வாகக் கருதியதால் இவ்வாறு அழைத்தனர். அவரை வாழும் தெய்வாமாகக் கருதியதோடு, இறந்தபின்னர் ஆசிரிஸ் Osiris என்று கருதினர். ஆசிரிஸ் நைல் நதி வெள்ளத்துக்குக் காரணமானவர்; உயிர்கள் தோற்றத்திற்கான கடவுளும் ஆவார். ஆசிரிஸின் நகரம் Heliopolis ஹீலியோபோலிஸ். இது சூர்யபுரி Suryapuri என்பதன் திரிபு.

 

வேத இலக்கியமான பிராமணங்களில் அரசர் பற்றி கூறிய கொள்கைகளே எகிப்தியர் கொள்கையாகவும் இருந்தது.

பிரமிடுகளும் ராஜசூய யக்ஞமும்

 

பிரமிடுகளை ஏன் எகிப்தியர் கட்டினர்?

மன்னரின் ஆவி சுவர்க லோகத்துக்குச் செல்லும் ஏணிதான் பிரமிடு என்று எட்வர்ட் (Edward) காட்டுகிறார். இதற்கு ஆதாரமாக பபைரஸ் (Papyrus) காகிதத்திலுள்ள ஒரு பழைய வாசகத்தை அவர் சுட்டிக்காட்டினார். ரே (Eye of Re) கடவுளின் கண்ணாக நான் சுவர்கத்துக்கு ஏகுவேன். ரே கடவுளின் கிரணங்களை படியாகப் பயன்படுத்துவேன் என்பது எகிப்திய வசனம்.

 

ரிக்வேதத்தில் இறுதிச் சடங்கு பற்றிய மந்திரத்தில் இறந்தவரின் கண் சூரியனிடம் செல்லுவதாக உள்ளது:-

 

சூர்யம் தே சக்ஷுஹு கச்சந்து (10-15)

 

சோழ மன்னரும் தருமபுத்திரனும் மற்றும் பலரும் செய்த ராஜசூய யக்ஞத்தில் 17 படியுள்ள கம்பத்தில் (17 sided post) மன்னர் ஏறுவார் இது அந்த மன்னரை நப (வானத்துக்கு) என்ற இடத்துக்கு அழைத்துச் செல்லும். இதற்குப் பின்னர் மன்னர் அறிவிப்பார்:

வானத்துக்கும் அப்பாலுள்ள லோகத்துக்கு சென்று பிரஜாபதியின் மகன் ஆகிவிட்டேன்.

இது போன்ற பொருளுள்ள வசனங்கள் எகிப்திய புனித நூல்களிலும் உள.

 

இந்துக்களை போல அவர்களும் பார்லியைப் பயன்படுத்தினர். அதுதான எகி ப்தின் முக்கியப் பயிர்.

 

குப்ரு (Khufu) என்ற மன்னன் குரு வம்சத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம்.

ராம்செஸ் (Ramses) என்ற மன்னரின் பெயர் ராம ஈச என்று சில இந்தியவியலாலர் கருதுகின்றனர். அவர் மாதா மாரி அம்மனின் (Maat Meri Ammon)  மகன்.

 

வேத கால இந்துக்கள் விவசாயிகளாக இருந்ததால் நதிகளைத் தெய்வமாகக் கருதினர். இதுபோல எகிப்தியர்களும் நதியைப் புனிதமாகக் கருதினர். அவர்களும் விவசாயிகள்.

 

ஆதிகால எகிப்தியர்களுக்கு தங்கமும் தாமிரமும் மட்டுமே தெரியும். கி.மு.1600 ல் ஹிக்ஸோஸ் (Hyksos) தான் இரும்பு பற்றிச் சொல்லிக் கொடுத்தனர்.

 

மன்னர் ஏர் உழும் காட்சி எகிப்தில் சித்தரிக்கப்பட்டது. ரிக்வேதத்தில் நிறைய விவசாயக் குறிப்புகள் உள்ளன (7-6; 10-101; 10-8; 10-99; 3-45)

ஆரிய என்ற சொல்லே ஏர் என்னும் விவசாயச் சொல்லில் இருந்து உருவானதே.

பேராசிரியர் ஜே.பி.எஸ். ஹால்டேன் (J B S Haldane)  போன்றோர் ரொட்டிக்கான கோதுமை பஞ்சாபிலிருந்தே உலகம் முழுதும் பரவியது என்பர்.

அடுத்த பகுதியில் சூர்ய வம்சத்துக்கும் எகிப்துக்கும் உள்ள தொடர்பு பற்றி ஏ.கல்யாணராமன் சொல்லும் விஷயங்களைக் காண்போம்.

source:Aryatarangini by A Kalyanaraman, 1969

 

 

எகிப்திய அரசனுக்கு ஐந்து பெயர்கள்! எகிப்திய அதிசயங்கள்-2 (Post No.3641)

Egyptian God and the King

 

Written by London swaminathan

 

Date: 16 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 5-56 am

 

Post No. 3641

 

 

Pictures are taken from various sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்தில் எப்போது மன்னர்களின் முடியாட்சி துவங்கியது என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. கி.மு. 3150 முதல் வரலாற்றுக் காலம் துவங்கியது.

 

மன்னரின் மகனே அடுத்த ராஜாவாக நியமிக்கப் பட்டான். மன்னர்களைக் கடவுள் என்று மக்கள் கருதினார்கள். கீழ் எகிப்து, மேல் எகிப்து — என்று இரண்டு பிரிவுகளாக. எகிப்து இருந்தது. எல்லா மன்னர்களும் இரண்டு பிரிவுகளுக்கும் தலைவர் என்று பெருமையாகப் பிரகடனம் செய்தனர். முதல் வம்ச அரசர்கள்,  தற்போது எகிப்து நாட்டின் தலைநகராகவுள்ள கெய்ரோவுக்கு அருகில் தலைநகர் வைத்து ஆண்டனர். அந்த நகரத்தை கிரேக்கர்கள் மெம்பிஸ் MEMPHIS என்று அழைத்தனர்.

 

இரண்டு எகிப்துகளுக்கும் தலைவர் என்பதைக் குறிக்க இரட்டை கிரீடம் என்னும் வடிவமுடைய கிரீடத்தை அணிந்தனர்.

அரசனைச் சுற்றி சில கோட்பாடுகள் உருவாகின. அவருக்கு பிறந்தபோது சூட்டிய பெயரைத் தவிர புதிய மன்னரின் பெயர் சூட்டப்பட்டது. முதலில் மூன்று பெயர்கள் இருந்தன. பின்னர் இது வளர்ந்து ஐந்து பெயர்களாகப் பெருகின! பலவகைக் கிரீடங்களுடன், மன்னன் (பாரோ) புதிய  ராஜாங்க சின்னங்களை அணியத் துவங்கினான்.

Picture of Horus from Wikipedia

 

மன்னர்களின் பெயரகளைக் கல்வெட்டுகளில் பொறிக்கும்போது அதன் புனிதம் கருதி அதை ஒரு சிறிய செவ்வக கட்டத்துக்குள் (SEREK) எழுதினர்.

 

துவக்க காலத்தில் மன்னர்தான் கடவுள், அவர்தான் பிரபஞ்சத்தின் தலைவர் என்றெல்லாம் சொல்லப்பட்டது. மன்னரின் கட்டளையின் பேரில்தான் சூரியன் உதிக்கிறான், நைல் நதி வெள்ளப் பெருக்கெடுக்கிறது என்றும் நம்பினர்.

ஹோரஸ் (HORUS)  என்னும் தெய்வம்தான் எகிப்தின் பழம்பெரும் தெய்வம். பருந்து வடிவ முகம் கொண்டது. இந்து மதத்திலுள்ள கருடாழ்வார் போன்றது! “கருட” என்ற பெயரே ஹோரஸ் என்று திருந்தியதோ என்று எண்ண வேண்டி இருக்கிறது!

 

எகிப்திய மக்களின் வாழ்க்கை முழுதும் மன்னரைச் சுற்றியே இருந்தது. அவர் இறந்தவுடன் அடக்கம் செய்யப்படுவதற்கான பிரமிடு(PYRAMIDS)களைக் கட்டுவதே பெரும் தொழில்! இதற்கு அடுத்தபடியாக விவசாயம், போர்த் தொழில் இருந்தன.

 

அரசன் என்பவன் ஹோரஸ் என்னும் கடவுளின் மறு அவதாரம் எனக் கருதப்பட்டான். பின்னர் எகிப்துக்கு வந்த புதிய தெய்வமான ஆசிரிஸை, ஹோரசின் தந்தையாகக் கருதினர். பிறகு ஆசிரிஸ்(OSIRIS), மன்னர் இறந்தவுடன், அவரைக் கவனிக்கும் கடவுள் என்று கதைகள் உருவாக்கப்பட்டன!.

 

 

மன்னரின் பட்டாபிஷேகத்தின்போது நால் திசைகளிலும் பறவைகள் பறக்கவிடப்பட்டன. இந்து மத அரசர்கள் பட்டாபிஷேகத்தின்போது கைதிகளும் கூண்டுக் கிளி, மைனா முதலிய பறவைகளும் ‘விடுதலை’ செய்யப்பட்டதை இத்துடன் ஒப்பிடலாம்!

Horus from Roman period (looks like Garuda vahana of Vishnu)

மன்னரின் ஐந்து பெயர்களில் ஒன்று ஹோரஸ் என்ற அடைமொழியுடன்- பட்டத்துடன் துவங்கும். இதுதான் மிகவும் புனிதமான பெயர். பிறந்தபோது வைத்த பெயரை யாருக்கும் சொல்லமாட்டர்கள். அது ரஹசியமானது. குடும்பத்தினருக்கு மட்டுமே தெரியும்!

 

மன்னர் கடவுள் மட்டுமல்ல. சில நேரங்களில் கடவுளரும் மன்னருக்கு அடிபணியவேண்டும் என்று மக்கள் நம்பினர். இந்து மதத்தில் “குரு” என்பவர் கடவுளுக்கும் மேலாக அதிகாரம் உடையவர்; அவர் விருப்பப்படி, கடவுளும் விதியை மாற்ற முடியும் என்று கதைகள் உள்ளது போல! கோவில்களிலும் எகிப்திய மன்னரே தலைமை. மன்னர்கள் இறந்தபோது அவர்களுடன் நூற்றுக் கணக்கான அதிகாரிகளும் ஆயிரக்கணக்கான சேவகர்களும் உயிருடன் புதைக்கப்பட்டனர்.

 

ஆயினும் எகிப்திய வரலாறு 3000 ஆண்டுக் கால வீச்சுடையது. காலப்போகில் வெளிநாட்டுப் படை எடுப்புகளால், மன்னரின் நிலையும், அவர் பற்றிய நம்பிக்கைகளும் மாறிக்கொண்டே வந்தன.

மேலும் பல அதிசயங்களை அடுத்த கட்டுரையில் காண்போம்!

–தொடரும்