Pictures of 2500 Indian Stamps!- Part 36 (Post No.14,506)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 14,506

Date uploaded in London – –12 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

PART 36

Stamps posted today include 1989, 1990 STAMPS

EPILEPSY CONGRESS, BRAIN, PANDITA RAMABAI, PIGEON POST, NARENDRA DEO J B KRIPALANI, J L NEHRU, TRACK AND FIELD,  G BEWOOR, B K SHARMA, BOMBAY ART SOCIETY, LIKH FLORICAN BIRD, PEACE KEEPING FORCE, SRI LANKA, AGRICULTURAL RESEARCH, CHILD CARE, GIRL CHILD, LITERACY YEAR, WRITING, DRINKING WATER, BORING PIPE, KABADI, RACING, CYCLING, ARCHERY, XI ASIAN GAMES,  S L SHARMA, KUDIRAM BOSE, KELAPPAN 

 –subham—

Tags– Pictures of 2500 Indian Stamps, Part 36, year 1990 , YEAR 1989, EPILEPSY CONGRESS, BRAIN, PANDITA RAMABAI, PIGEON POST, NARENDRA DEO J B KRIPALANI, J L NEHRU, TRACK AND FIELD,  G BEWOOR, B K SHARMA, BOMBAY ART SOCIETY, LIKH FLORICAN BIRD, PEACE KEEPING FORCE, SRI LANKA, AGRICULTURAL RESEARCH, CHILD CARE, GIRL CHILD, LITERACY YEAR, WRITING, DRINKING WATER, BORING PIPE, KABADI, RACING, CYCLING, ARCHERY, XI ASIAN GAMES,  S L SHARMA, KUDIRAM BOSE, KELAPPAN 

GNANAMAYAM 11TH MAY  2025 SUNDAY BROADCAST SUMMARY

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .

***

Prayer by Mrs Jayanthi Sundar Team : MRS JAYANTHI SUNDAR AND SRILATHA SAINATH.

***

World Hindu News in Tamil  presented by Vaishnavi Anand from London and Gomathi Karthikeyan from Chennai.

***

Mrs. Brahannayaki Sathyanarayan spoke about Tiruchirapalli Shrines.

****

Bengaluru S Nagarajan spoke about

Saint Kachiappa Sivachariyar

***

SPECIAL EVENT-

 MR. MURUGABHARATI from Pudukkottai; Motivational Speaker, Author of 13 books, Running his own e Magazine Nalla Seithi,

spoke on Vision, Perspective Outlook.

****

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

11-5-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சிநிரல்

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்: திருமதி ஜெயந்தி சுந்தர் திருமதி ஸ்ரீலதா சாயிநாத்.

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த் மற்றும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயன்

***

ஆலயம் அறிவோம் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

தலைப்பு –  திருச்சிராப்பள்ளி தலம்

****

பெங்களூரு ச. நாகராஜன் உரை ,

தலைப்பு– மகான் கச்சியப்ப சிவாசாரியார்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு நிகழ்த்தியவர் –

திரு. முருகபாரதி,  மனித வளப் பயிற்றுநர்புதுக்கோட்டை

தலைப்பு – நேரான பார்வை

*****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags- GNANAMAYAM ,11-5-2025, BROADCAST, Summary

Vedic Gods in Europe : Latest List from Nicholas Kazanas (Post No.14,505)

Written by London Swaminathan

Post No. 14,505

Date uploaded in London –  12 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

In the past 200 years a lot of books and articles were written comparing the Hindu Gods with Greek gods and other gods in Rome (Italy). But no one has mentioned the time gap between them. In fact, there is a big gap. Professor Wilson, Max Muller’s guru, dated Rig Veda 2000 BCE. Max Muller said 1200 BCE and after a  backlash said Rig Veda may be 5000 year old or more than that and nobody could date it. But Baba Research centre (BARC) and NASA did reveal the secrets of mysterious disappearance of the Great Sarasvati River of Rig Veda which confirmed it was a pre Indus Valley Civilisation one.

So, one must tell the date of each God when they compare two different Gods from two different cultures.  The whole world agree that the Greeks had their first literature from 800 BCE only. We know the date of Homer’s Iliad and Odyssey. Except some portions in Old Testament of the Bible, there is nothing nearer to Vedic civilisation. There is a gap of 1200 years between the Vedic and Greek Gods. Apart from Greek literature we have some fragments from old Greek Mycenaean and Minoan civilizations. Even those fragments disappeared into mist because of the discovery of Vedic Sanskrit names in Cuneiform tablets dated 1400 BCE in Turkey. Around the same time, we have Dasaratha (Amarna) letters in Egypt. This archaeological evidence was the final nail in the coffin of Max Muller gang. Asko Parpola, famous Indus Civilization researcher, has shown us that the names of Vedic Gods in Mitanni Civilization of 1400 BCE inscription in the same order as in Rig Veda. It shows that the Rig Veda was in the Middle East and Egypt in and around 1500 BCE. Further evidence came from Kikkuli’s Horse manual with Sanskrit numbers from the same period.

Hittite and Kassite cultures (1800 BCE) have a very few Sanskrit words .

Nicholas Kazanas from Athens, Greece , after quoting from all the latest books in this field , say that Hindus migrated from Sapta Sindhu (modern Punjab in India and Pakistan) to different parts of the world. Parsees/Zoroastrians also confirmed that they were in Sapta Sindhu and Aryana (modern Haryana) before coming to Iran/Persia.

Kanchi Paramacharya (1894-1994) also has spoken about it and said in one of his lectures that Zoroastra is the corrupted form of Saurashtra. This is also proved correct from the fact that they came back to Gujarat when Muslims occupied Iran in eighth century CE.

****

Here is the list provided by Nicholas Kazanas in his book

VEDIC AND INDO EUROPEAN STUDIES (published in 2015 by Aditya Prakashan, Delhi.

Agni

Agnis in Hittite (Ht), Ignis in Latin (L).Note : Even the Iranians who had Fire Worship did not preserve this name, not even as a demon like Indra, Sauru etc. though the stem appears in the name Dastayni.

My comment: This is a very important point. Rig Veda begins with the word Agni and finish with this. When Zend Avesta portrayed Indra as a demon, they did not even know the word Agni! By this and other linguistic evidence we know that Avestan language and Zend Avesta came later than Rig Veda.

Aryaman

Are-mene (Mcn=Mycenean)Ares (Greek) , Ariomanus (Gaul/France), Eremon (Ireland)

My comment: All these appear very late; there is more than 1000-year gap from the Rig Veda.

It is strange that it is not in Avestan which is closer to Sanskrit than any other language in the world.

Asvin

Iqeja , Mcn (horse deity), Epona (Celtic), Hippos (Gk), Equus (L).

My comments: Asvins are twins. Note there is no linguistic affinity. Moreover, Rig Veda call them Nasatya as well; also we have separate names for the two Gods . In the above comparisons they ride horses but not twins. So ,I reject it.

Bhaga

Bugas (Kassite)Phoibos (Gk)

Brhaddiva (a goddess)

Briganti (celtic)

Dyaus

Sius (Ht) ,Zeus (Gk), Jupiter (L),

My Comment: Max Muller gang used this minor god out of proportion and claimed that Aryans are Germans. Lter Hitler used this in his book and killed Jews, Non Aryans.

Indra

Inara (Ht), Indas (Ks), Andrasta (C), Andr (Gk), Indra (demon in Av)

My comment: English name Andrew, Sangam Tamil Name Ay Andiran= Ajendran are derived from Indra. Till this day Indra is used in baby names around the world.

Marut- as

Maruttas (Ks), Mars(L), Morrigan (C).

My comments

It is a very important Vedic deity. No Greek or Avestan comparison!

Manu

Mannus (Germanic/Gm) ; father of the Germanic people.

My comments

This word exists as Man in English, Manithan in Tamil, but no comparison from other languages. At least five different Manus are referred to in the Rig Veda. Later Hindu scriptures mentioned 14 Manus. None of them is found in any other ancient language)

When we see such names referred in one community in one part of the world, we can guess the migrants retained one or two words.

With only two Tamil words (Onnu, Munu=1,3) in Brahui language the idiots are still saying they were Dravidians; and the language is not ancient; they use more Sanskrit words . If we accept those idiots’ argument then I can claim English are Tamils because they also have two Tamil numerals One, Eight (Onnu, Ettu, 1, 8)!

As a matter of fact over one thousand Tamil words are in English ( I have published the list in this blog)

Mitra

Mithra (Av), Mitra (Gk) but not God’s name; in Rome we have Mitra cult later ; that God is different from Vedic Mitra; in the Rig Veda, Mitra and Varuna are a pair.

Apaam Napaat

Neptunus (Roman), Nech tan (Ireland, Celtic), anepsios (Gk)

My comments

In the above words, the comparisons are not acceptable because they mean different things not the Vedic meaning.

Parjanya

Perunnu (Slovakian), (in Scandinavian with different meaning; not comparable with Vedic)

Rbhu

Orpheus (Gk), rabu (Slovakian), Orbu (L)

Saranyu

Erinus, Helene (Mcn, Gk)

Suurya

Suriyas (Ks), Helios (Gk), Sol(L),

My comments

In Greek and Persian there is no S. They use H instead.

Kassite/Ks and Hittite/Ht are older than Greek and Avestan. So, they are important.

Tvastr

Twisto (Gm)

Usas

Eos (Gk), Aurora (L), Eostre (Gm)

Varuna

Uruwna (Mitanni)Ouranos (Gk),

My comment

Vedic God Varuna is in Tamil Tolkappiam, and Indra is in Sangam literature These are 2000 year old books

Vastospati

Hesta (Gk) ,Vesta (L)

Yama

Ymir (Scandinavian), geminus (L) twins; Zemia (Gk)Yam, Yima (Av)

****

(Picture shows that Vedic Gods are worshipped even today. In every Yaga, every Puja these 8deities are worshipped)

Ten years ago I posted my article Vedic Sarama and Greek Hermes!!

I have given the following equation: Sarama= Hermes = Mercury= Aesir/Vanir

Shrikant Talageri also dealt with this topic in his book THE RIG VEDA A HISTORICAL ANALYSIS.

****

Money= Pana= Vanik

Every one of us use the word “Pana” for money in India. All of us use the word “Vanik(a)” for the business people or commerce. The entire English speaking world use the word “MONEY”. All these are derived from the Rig Vedic word “Pani”.

Linguists know that P=V=M are interchangeable. If you apply this rule, you get:-

Pani=Vanik= Vanij= Pana= Money

P=V=M interchange is very common in several languages including Tamil.

According to Western encyclopaedias, Phoenicians’ contribution to the world are 1)Alphabet and 2)Money. Even the Indian Brahmi which gave birth to Tamil script and all the South East Asian scripts are developed from the Phoenician alphabet according to them.

My Conclusion

No language or no book mentioned all the Vedic Gods . Not even Avestan. This shows Hindus did not come from outside. They were the sons of the soil. They went outside to spread their culture.

Also read my old articles

Vedic Phoenicians; History’s Mystery!

Research Article No.1889; Date: 25 May 2015;

****

Vedic Sarama and Greek Hermes!!

Research paper No 1952; Date: 24 June 2015

****

OLDEST MESSENGER POEM IN THE WORLD (Post No.10,936)

Post No. 10,936

Date uploaded in London – –    4 MAY   2022         

****

நாய் விடு தூது – உலகின் முதல் தூதுக் கவிதை (Post No.10,935)

****

Next Post
ரிக் வேத சரமா, கிரீஸ் நாட்டுக்கு போனது எப்படி?

ரிக் வேத சரமா, கிரீஸ் நாட்டுக்கு போனது எப்படி?

Research paper No 1953; Date: 25 June 2015

—subham—

Tags- Vedic Gods, Greek Gods, Avestan, Latin, Nichola Kazanas Zoroaster,

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் (Post.14,504)

 Written by London Swaminathan

Post No. 14,504

Date uploaded in London –  12 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

COLLLECTED FROM POPULAR NEWS PAPERS AND EDITED FOR BROADCAST.

ஞானமயம் வழங்கும்  உலக இந்து செய்திமடல்  (11-5-2025)

****

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்து வழங்கும் செய்தி மடல்

அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை மே 11- ஆம் தேதி 2025-ம் ஆண்டு

*****

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆர்எஸ்எஸ் பாராட்டு

பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் என்ற தீர்க்கமான நடவடிக்கையை எடுத்த மத்திய அரசுக்கும், இந்திய ராணுவத்துக்கும்  ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை இது என்றும் இந்த நடவடிக்கையால் நாட்டின் சுயமரியாதையும், மன உறுதியும் மேம்பட்டுள்ளது என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான ராணுவ நடவடிக்கை நம் நாட்டின் பாதுகாப்பிற்கு அவசியமானது, தவிர்க்க முடியாதது என்று கூறியவர்,  இந்த நெருக்கடியான நேரத்தில் ஒட்டு மொத்த நாடும் ராணுவத்துக்கு உறுதுணையாக நிற்கும் என்று  மோகன் பகவத் உறுதிபட தெரிவித்துள்ளார்.

எல்லையில் வசிக்கும் பொதுமக்கள் மீது பாகிஸ்தான் நடத்தும் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மோகன் பகவத் இந்த சவாலான நேரத்தில் அரசின் அறிவுறுத்தல்களை நாட்டு மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டிலும் இந்திய ராணுவ நடவடிக்கையை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேரணி நடத்தினார். அஸ்ஸாமில் காங்கிரஸ் கட்சியும் இந்திய ராணுவத்தை ஆதரித்து பேரணிகளை நடத்தியது. அனைத்துக் கட்சிகளும் அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுதும் பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளன .

இதற்கிடையில் நாடு முழுதுமுள்ள கோவில்களில் இந்தியாவின் வெற்றிக்காக பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆதீனங்களின் தலைவர்களும் , மடாதிபதிகளும், இந்து மத தலைவர்களும் ஆதரவு அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

எல்லை மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், காஷ்மீர் ஆகியவற்றில் போர்க்கால சூழ்நிலை நிலவுகிறது . பயங்கரவாதிகளின்  இலக்குகளை மட்டும் இந்தியா தாக்கி வருகிறது ; ஆகையால் உலக நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

*****

இன்று மே மாதம் பதினோராம் தேதி குருப்பெயர்ச்சி நடப்பதால் தமிழ் நாட்டில் பல கோவில்களில் சிறப்பு பூஜைகளும், யாக யக்ஞங்களும் நடக்கின்றன. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 11ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி மே 14ஆம் தேதியும்  குருப்பெயர்ச்சி நடக்கிறது;

குரு என்னும் வியாழன் கிரகம் ஆண்டு தோறும் இடம் பெயரும். இப்பொழுது ரிஷப ராசியிலிருந்து  மிதுன ராசிக்கு குரு பகவான் செல்கிறார்.

****

மீனாட்சியம்மன் கோவில் தேரோட்டம்!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழா, கடந்த ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை சித்திரைத் திருவிழாவின் முக்கிய  நிகழ்ச்சியான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. மீனாட்சி கல்யாணத்தை முன்னிட்டு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் ஒரு லட்சம் பேருக்கு இலவச சாப்பாடு  வழங்கப்பட்டது. ஆறுவகையான உணவுகளை தயாரிக்க ஐநூறு தொண்டர்கள் உதவி செய்தார்கள்.

வெள்ளிக்கிழமை நடந்த தேரோட்டத்தில் கலந்து கொள்ளப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் நகரமே விழாக்கோலம் பூண்டது. அலங்கரிக்கப்பட்ட தேர்களில் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

சித்திரை மாதத்தில் தமிழ்நாடெங்கும் பல்வேறு கோவில்களில் தேரோட்டமும், கல்யாண வைபவங்களும் நடப்பது வழக்கம். அதன்படி பல இடங்களில் தேரோட்டம் நடந்த செய்திகளும் வந்துள்ளன

**********

திருச்செந்தூர் கும்பாபிஷேகம் நடத்தும் நேரத்திற்கு தீட்சிதர்கள் ஆட்சேபனை!

தூத்துக்குடி மாவட்டம்திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும் நேரத்திற்குக் கோயில் தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பின், ஜூலை 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக 300 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், காலை 9 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள கோயில் தீட்சிதர்கள், நிழல் விழாத சுபமுகூர்த்த நேரமான நண்பகல் 12 மணிக்குக் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அறநிலையத்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

xxxx

ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரி மலைக்கு வருகிறார்

சபரிமலை: வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலையில் மே 14ல் நடை திறக்கப்படுவதால், 15 முதல் 19 -வரை பக்தர்கள் தரிசிக்கலாம். ஜனாதிபதி திரவுபதி முர்மு, மே 18 அல்லது 19ல் சபரிமலை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் நிலக்கல் சென்று, அங்கிருந்து காரில் பம்பைக்கு செல்கிறார். அங்கிருந்து நடந்தோ அல்லது டோலி மூலமாகவோ அவர் சபரிமலை சன்னிதானம் செல்ல வாய்ப்புள்ளது. இந்த இடங்களை உயர் போலீஸ் அதிகாரிகள், இரண்டு நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர்.சன்னிதானம் விருந்தினர் மாளிகையில், கூடுதல் வசதிகளுடன் அறை தயாராகிறது. அந்த இரு நாட்களுக்கு, பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முர்மு, சபரிமலை வரும் பட்சத்தில், பதவியில் இருக்கும்போது, இங்கு வரும் முதல் ஜனாதிபதி என்ற பெருமையை அவர் பெறுவார்.

****

சிலை தடுப்புப் பிரிவு அதிரடி..! கண்ணப்ப நாயனார் சிலை ஏலம் தடுத்து நிறுத்தம்…!

தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையின் துரித நடவடிக்கையால், நெதர்லாந்து நாட்டில் பழமையான கண்ணப்ப நாயனார் சிலை ஏலம் விடப்படுவது கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் திருப்புகழூரில் உள்ள அக்னீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இந்த விலை மதிக்க முடியாத உலோகச் சிலை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த இந்த சிலை, தற்போது நெதர்லாந்து நாட்டில் ஏலம் விடப்பட இருப்பதாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனடியாக செயல்பட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், நெதர்லாந்து நாட்டு காவல்துறைக்கும், இந்திய தொல்லியல் துறைக்கும் அவசர மின்னஞ்சல் மூலம் தகவலைத் தெரிவித்தனர். சிலையின் பழமை மற்றும் அது திருடப்பட்டது தொடர்பான ஆவணங்களையும் மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பினர்.

தமிழ்நாடு காவல்துறையின் துரித நடவடிக்கையின் பலனாக, நெதர்லாந்து நாட்டு அதிகாரிகள் ஏலத்தை உடனடியாக நிறுத்தி உத்தரவிட்டனர். தற்போது அந்த கண்ணப்ப நாயனார் சிலை நெதர்லாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.

சிலையை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகழூரில் உள்ள அக்னீஸ்வரா் கோயிலில் கண்ணப்ப நாயனார் உலோகச் சிலை கடந்த 2010-ஆம் ஆண்டு திருடப்பட்டது. 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அந்தச் சிலை, 64 செ.மீ. உயரம், 23 கிலோ எடை கொண்டதாகும்.

**** 

உண்மைக்குப் புறம்பாக அறிக்கை வெளியிட்ட காவல்துறை – மதுரை ஆதீனம் குற்றச்சாட்டு! 

உளுந்தூர்பேட்டை சாலை விபத்து தொடர்பாக காவல்துறை உண்மைக்குப் புறம்பாக விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளதாக மதுரை ஆதீனம் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கார் விபத்து தொடர்பாக எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என்று காவல்துறை கூறுவது ஏற்புடையதல்ல எனத் தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த அடுத்த நிமிடமே 100 எண்ணைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்ததாகவும், உளுந்தூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் விபத்து தொடர்பாகப் பேசியதாகவும் கூறியுள்ளார்.

சம்பவம் நடந்து 26 மணி நேரம் கழித்து எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை என்ற காவல்துறையின் அறிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனக்கூறியுள்ள மதுரை ஆதீனம், எதிர் தரப்பின் புகாரின் அடிப்படையில் தனது கார் ஓட்டுநர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர் தரப்பு வாகனம் பக்கவாட்டில் வேகமாக வந்து மோதியதை மறைக்கும் வகையில், தாங்கள்தான் விபத்து ஏற்படுத்தி விட்டதாகக் கூறுவது ஏற்புடையதல்ல எனக்கூறியுள்ள அவர், முன்னுக்குப் பின் முரணாக அமைந்துள்ள காவல்துறையின் விளக்க அறிக்கை ஒரு சார்புடையதாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

****

சைவ சித்தாந்தம் என்பது மதம் சார்ந்தது அல்லஆன்மா சார்ந்தது : ஜெ.பி.நட்டா

சைவ சித்தாந்தம் என்பது மதம் சார்ந்தது அல்லஆன்மா சார்ந்தது என மத்திய அமைச்சரும்பாரதீய ஜனதாக கட்சியின்

தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள SRM கல்வி நிறுவன வளாகத்தில், 6-வது சர்வதேச சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது.

இதில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, ஆளுநர் ஆர்.என்.ரவி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து விழாவில் சிறப்புரையாற்றிய ஜெ.பி.நட்டா, வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு எனக்கூறி உரையைத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், தருமபுரம் ஆதீனம் மிகவும் தொன்மையானது எனத் தெரிவித்தார். கோயில்கள், புலவர்கள் என பல்வேறு சிறப்புகளைத் தமிழ்நாடு பெற்றிருப்பதாகவும் புகழாரம் சூட்டினார்.

இதையடுத்து தனது உரையைத் தொடங்கிய ஆளுநர் ரவி, சனாதன தர்மத்தால் தான் பாரதம் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

திருமுறை, தேவாரம் ஆகிய தலைசிறந்த படைப்புகளை சைவ சித்தாந்தம் வழங்கியுள்ளதாகக் கூறிய அவர், சைவ சித்தாந்தத்தைப் பிரதமர் மோடி பின்பற்றுவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், உயர்கல்வி பாடத்திட்டத்தில் தேவாரம், திருவாசகம் பாடல்களைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்

இதையடுத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, வந்திருந்த அனைவரையும் தமிழ் மொழியில் வரவேற்றார். இதைத் தொடர்ந்து சிவபெருமானை அவர் தமிழில் போற்றி வணங்கியபோது கூடியிருந்தவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

****

வேதகிரீஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா!

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, 63 நாயன்மார்கள் திருவீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற  வேதகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 1-ஆம் தேதி சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

விழாவின் 3-ஆம் நாள் உற்சவத்தில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடைபெற்றது. இதில், சிறப்பு மலர் அலங்காரத்தில் அதிகார நந்தியின் மீது வேதகிரீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதையடுத்து, 63 நாயன்மார்களும் சுவாமியை வணங்கியபடி ஊர்வலமாகச் செல்ல, முக்கிய வீதிகளின் வழியாக வீதியுலா நடைபெற்றது. மலையைச் சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் சுவாமி வீதியுலா செல்ல, பக்தர்கள் சுவாமியை வணங்கியபடி கிரிவலம் சென்றனர்.

பக்தர்கள் வழி நெடுகிலும் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா மே 7-ஆம் தேதி நடைபெறுகிறது.

******

ராமர் ஒரு புராண கதாபாத்திரமா? – ராகுல் காந்திக்கு பா.ஜ.க கண்டனம்!

ராமர் ஒரு புராண கதாபாத்திரம் என கூறிய ராகுல் காந்தியின் கருத்துக்கு பாரதீய ஜனதாக கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த ராகுல் காந்தி, அங்குள்ள பிரவுன் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, புத்தர், குருநானக், காந்தி, அம்பேத்கர் உள்ளிட்டோர் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என கூறியதாகவும், ராமர் போன்ற புராண கதாபாத்திரங்களும் அதைதான் போதித்ததாகவும் தெரிவித்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாரதீய ஜனதாக கட்சியின் செய்தி தொடர்பாளர் செஷாத் பூனாவாலா, இந்துக்களையும், ராமரையும் அவமதிப்பது காங்கிரசின் அடையாளமாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ராமருக்கும், இந்துக்களுக்கும் எதிரானவர்களை
மக்கள் மன்னிக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதிகாசம் என்பது வரலாறு; ஆகவே மகாபாரதமும் ராமாயணமும் உண்மையில் நடந்த சம்பவங்கள் என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள் அப்படியிருக்க இதை புராணம் என்று ராகுல் கூறியதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது .

****

சுஹாஸ் ஷெட்டி கொலைக் குற்றவாளிகள் கைது


கர்நாடக மாநிலம்தட்சிண கன்னட மாவட்டத்தில் பதட்டமான சூழலை உருவாக்கிய இந்து ஆர்வலர் சுஹாஸ் ஷெட்டி கொலை தொடர்பாக மங்களூரு நகர காவல்துறை இரண்டு பேரை கைது செய்து, எட்டு சந்தேக நபர்களை விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளது.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள கலாசாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் விசாரணையில் அவர்கள் மங்களூரை சேர்ந்த பிரபல சஃப்வான் கும்பலுக்கு உதவி செய்து வந்தது தெரியவந்துள்ளது.


தற்போது, ​​வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், மங்களூரு போலீசார் எட்டு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்,

****

சம்ஸ்கிருத மொழி மறுமலா்ச்சிக்கு சாதகமான சூழ்நிலை – உள்துறை அமைச்சர் அமித் ஷா

இந்திய மொழிகள் பலவற்றிற்கு சம்ஸ்கிருதம்தான் தாய் என மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 1008 சம்ஸ்கிருத உரையாடல் அமா்வுகளின் நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, காலனித்துவ ஆட்சிக்கு முன்பே சம்ஸ்கிருதத்தின் வீழ்ச்சி தொடங்கியது என்றும், பிரதமா் மோடியின் தலைமையிலான ஆட்சியில் சம்ஸ்கிருதத்தின் மறுமலா்ச்சிக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

உலகின் புகழ்பெற்ற மொழி அறிஞா்கள் பலரும் சம்ஸ்கிருதத்தை மிக அறிவியல்பூா்வ மொழியாக அங்கீகரித்துள்ளதாக கூறிய அவர், சம்ஸ்கிருதம் மற்றும் பிராகிருத மொழிகளில் சிதறி கிடக்கும் கையெழுத்து பிரதிகளை சேகரிக்க 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். சமஸ்கிருத மொழியை ஊக்குவிப்பது அதன் மறுமலா்ச்சிக்கானது மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கானது என கூறினார்.

****

ஹிந்துக்கள் வெளியேற  கனடாவில் காலிஸ்தான் பேரணி

கனடாவில் வசிக்கும் ஹிந்துக்கள் வெளியேற வேண்டும் என்ற கோஷத்துடன் கனடாவில் காலிஸ்தான் பேரணி நடத்தினர்.
சமீப காலமாக ஹிந்து கோவில்கள் மீது சில மர்ம கும்பல் தாக்குதல் நடத்தினர். இதற்கு ஹிந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். சமீபத்தில் கனடாவில் நடந்த தேர்தலில் லிபரல் கட்சியை சேர்ந்த மார்க் கார்னரி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.


தேர்தல் முடிவு வெளியான சில நாட்களுக்குள் மே 5- ன்று காலிஸ்தான் அமைப்பினர் டோரடண்டோவில் உள்ள மால்டன் குருத்வாரா அருகே நகர் கிர்தான் பகுதியில் பேரணி நடத்தினர். இதில் 8 லட்சம் ஹிந்துக்கள் வெளியேற வேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த பேரணியில் டிரக்கில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரது உருவ படத்தை கையில் விலங்கிட்டவாறு கூண்டுக்குள் நிற்பதுபோன்று சித்தரித்து இருந்தனர்.

இந்த பேரணிக்கு கனடிய ஹிந்து சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த ஆபத்தான செயலை அனைத்து தலைவர்களும் கண்டிக்க வேண்டும். என்று ஹிந்து அமைப்பு கூறியுள்ளது. இந்திய வம்சாவளியைச்  சேர்ந்த ஏறக்குறைய 18 லட்சம் பேர்  அங்கு வசிக்கின்றனர். இதில் 8 லட்சம் பேர் ஹிந்துக்கள் ;

xxxx

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு

மே மாதம் 18-ஆம் தேதி

லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும்

வணக்கம்.

—SUBHAM—-

ஆலயம் அறிவோம்! திருச்சிராப்பள்ளி திருத்தலம் (Post No.14,503)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan

Post No. 14, 503

Date uploaded in London –12 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

11-5-25 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பட்ட உரை 

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன் 

அரிச்சு இராப்பகல் ஐவரால் ஆட்டுண்டு

சுரிச்சு இராது நெஞ்சே ஒன்று சொல்லக் கேள்

திரிச்சிராப்பள்ளி என்றலும் தீவினை

நரிச்சு இராது நடக்கும் நடக்குமே

                 – திருநாவுக்கரசர் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தமிழ்நாட்டில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி திருத்தலமாகும். சோழநாட்டில் காவிரியின் தென்கரைத் தலங்களில் புகழ் பெற்ற பண்டைய தலமாகும் இது.

மூலவர் : செவ்வந்திநாதர், திருமலைக் கொழுந்தர், தாயுமானவர், மாத்ருபூதேஸ்வரர்

இறைவி : மட்டுவார்குழலம்மை, சுகந்த குந்தளாம்பிகை

தல விருட்சம் : மகிழ மரம்

தீர்த்தங்கள் : காவிரி, சிவகங்கை, சோமரோகணி என்னும் பிரம்ம தீர்த்தம், நன்றுடையான், தீயதில்லான் உள்ளிட்ட தீர்த்தங்கள்

திரிசிரன் என்ற அரக்கன் அரசாண்டு இறைவனை வழிபட்டு முக்தி பெற்றதால் இது திரிசிராப்பள்ளி என்ற பெயரைப் பெற்றது. இதுவன்றி, இம் மலையில் திரிசிரம் – அதாவது மூன்று சிகரங்கள் அமைந்துள்ளமையால் இது இப்பெயரைப் பெற்றது என்றும் கொள்ளலாம்.

பிரமனுடைய பெயரால் அமைந்ததால் பிரம கிரி எனவும் பார்வைக்கு ரிஷபம் போல உள்ளதால் ரிஷபாசலம் என்ற பெயரும் இதற்கு உண்டு. தென்கைலாயம் என இதைப் பக்தர்கள் போற்றுகின்றனர்.

சாரமாமுனிவர் என்ற முனிவர் செவ்வந்தி மலரால் பூஜித்த காரணத்தால் இறைவனுக்கு செவ்வந்திநாதர் என்ற பெயர் உண்டாயிற்று.

மலையின் கொழுந்தாய் இருப்பதால் திருமலைக் கொழுந்தர் என்ற பெயர் அமைந்தது.

ஒரு பெண்ணுக்காக தாயாக வந்து உதவியதால் தாயுமானவர் என்ற பெயர் உண்டாயிற்று.

கோவிலுக்கு மேற்கில் பிரம்மதீர்த்தமும் வடக்கில் சிவகங்கையும் கிழக்கில் நன்றுடையானும் தெற்கில் தீயதிலானும் அமைந்துள்ளன.

இவற்றுல் நன்றுடையான், தீயதிலான் ஆகிய தீர்த்தங்களை திருஞானசம்பந்தரின் தேவாரத்தில் முதல் பாடலில் காணலாம்.

மேற்கில் உள்ள தெப்பக்குளம் பதினாறாவது நூற்றாண்டில் விஸ்வநாத நாயக்கரால் அழகுற அமைக்கப்பட்டதாகும். இதில் பங்குனி மாதத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும்.

இத்திருத்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகளும் சரித்திர சம்பவங்களும் உண்டு.

முன்பொரு காலத்தில் திருக்கைலாயத்தில் சிவபிரானை வணங்குவதற்காக தேவர்கள் அனைவரும் வந்திருந்தனர். அப்போது ஆதிசேடன் அவர்களைப் புகழ்ந்து கொண்டாடினான்.

இதைக் கண்ட வாயுதேவனுக்குப் பொறாமை உண்டாயிற்று. அவன் ஆதிசேடனை இகழ்ந்து பேசியதோடு தன் வலிமையைக் காட்டவும் முற்பட்டான்.

இதனால் ஆதிசேடன் தன் உடலால் கைலை மலையை இறுகப் பிணித்துக் கொண்டான். வாயுதேவன் பலம் கொண்ட மட்டும் காற்றை வீசத் தொடங்கவே உலகமெல்லாம் அதிரத் தொடங்கின. அப்போது கைலை மலையிலிருந்து மூன்று துண்டுகள் கிளம்பி ஒன்று திருக்காளத்தியிலும், மற்றொன்று திரிசிராமலையிலும் மற்றொன்று இலங்கையில் உள்ள திருகோணமலையிலும் விழுந்தன. ஆகவே இவை மூன்றும் தென்கைலாயம் என்ற பெயரைப் பெற்றன. திருக்காளத்திக்கும் திருக்கோணமலைக்கும் நடுவில் இது இருப்பதால் இதற்கு அதிக மகிமை உண்டு. சங்க நூல்களில் இந்த மலை குறிப்பிடப்படுகிறது.

 இன்னொரு வரலாறும் உண்டு. காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் ரத்தினகுப்தன் என்பவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு இறையருளால் இரத்தினாவதி என்ற மகள் பிறந்தாள். அவள் மணப்பருவத்தை அடைந்தபோது திரிசிராமலையில் வாழ்ந்த தனகுப்தன் என்னும் வணிகனுக்கு தன் புதல்வியை தன் இல்லத்தில் வைத்து மணமுடித்து அனுப்பினான். சிறிது காலத்தில் ரத்தினகுப்தன் இறந்தான்.

நாளடைவில் ரத்தினாவதி கர்ப்பவதியானாள். அவளது தாயாருக்கு இந்த செய்தி தெரியவே அவள் உடனே தன் மகளைப் பார்க்கக் கிளம்பினாள். ஆனால் வரும் வழியில் காவிரி ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பிரசவ நேரத்தில் தாயை எதிர்பார்த்திருந்த ரத்தினாவதி இறைவனை வேண்ட, சிவபிரான் இரத்தினாவதியின் தாய்  வேடம் பூண்டு வேண்டிய சிகிச்சைகளைச் செய்தார். இரத்தினாவதியும் சுகமாகப் பிரசவித்து  ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அப்போது வெள்ளம் வடியவே அவளது நிஜத் தாயும் அங்கு வந்து சேர்ந்தாள். ஒரே உருவத்தில் இருந்த இரு தாயார்களைக் கண்டு ரத்தினாவதி பிரமித்தாள். தாயாக வந்த சிவபிரான் மறைந்து வானில் ரிஷப வாகனத்தில் காட்சி தந்து அருளினார். தாயுமானவர் என்ற பெயரையும் அவர் பெற்றார். இந்த வரலாறு ஒவ்வொரு ஆண்டும் பிரம உற்சவத்தின் ஐந்தாம் திருவிழாவன்று நடத்திக் காட்டப்படுகிறது.

இன்னொரு சுவையான வரலாறும் உண்டு. சாரமா முனிவர் என்ற முனிவர் சிராமலைப் பிரானுக்கென ஒரு நந்தவனம் ஏற்படுத்தி, அங்கு மலர்ந்த செவ்வந்தி மலர்களால் இறைவனை பூஜித்து வந்தார். அப்போது உறையூரில் பராந்தக சோழன் அரசாண்டு வந்தான். அச்சமயத்தில் பூவியாபாரி ஒருவன் நந்தவனத்தில் புகுந்து செவ்வந்தி மலர்களைக் கவர்ந்து எடுத்துச் சென்று அரசனின் மனவிக்குக் கொடுத்து வரலானான். இதை மறைந்து நின்று கவனித்த முனிவர் அரசனிடம் இதைச் சொல்லி முறையிட்டார். அரசன் அவனைக் கண்டிக்கவில்லை. முனிவர் சிவபிரானிடம் முறையிட்டார். கிழக்குப் பக்கம் பார்த்திருந்த இறைவன் இதனால் மேற்கு முகம் திரும்பினார்.

பலத்த மேகங்கள் உறையூரில் மண்மாரிப் பொழிந்தன. அரசனும் கர்ப்பமுற்ற அவன் மனைவியும் ஊரை விட்டு வெளியே செல்ல ஊரும் அழிந்தது. மண்மாரி அரசனைப் பின் தொடரவே அவன் மாண்டான். காவிரியில் தப்பி வீழ்ந்த அவனது மனைவி ஒரு அந்தணனால் காப்பாற்றப்பட்டாள். அவளது குழந்தையே பின்னால் கரிகால் சோழன் என்ற புகழ் பெற்ற அரசனாக ஆனான்.

இங்கு மேற்கே நாகநாதஸ்வாமி கோவிலும், பூலோகநாதஸ்வாமி கோவிலும் தெற்கே கைலாஸநாதஸ்வாமி கோவிலும் உள்ளன. மேற்குப்புறம் நந்தி ஆலயம் உள்ளது.

இன்னொரு சுவையான வரலாறும் உண்டு. சாரமா முனிவரின் வனத்தின் அருகே வேட்டையாடச் சென்ற சோழ மன்னன் ஒருவன் அங்கு ஆதிசேடனின் புதல்வியரான நாக கன்னிகைகள் எழுவரைக் கண்டான். அவர்கள் செவ்வந்தி மலரை ஏந்தி சிவபிரானை பூஜிக்கச் சென்று கொண்டிருந்தனர். அவர்களை மணம் முடிக்க விரும்பிய சோழன் நாகலோகம் சென்று ஆதிசேடனின் அனுமதி பெற்று கன்னிகைகளில் ஒருத்தியான காந்திமதி என்பவளை மணந்தான். அவளும் தினமும் திரிசிராபள்ளி நாதரை வழிபட்டு வந்தாள்.

காலக்கிரமத்தில் கர்ப்பமுற்ற அவள் ஒரு நாள் சூரிய வெப்பத்தால் நடக்க முடியாமல் சோர்ந்து வழியில் கீழே விழுந்தாள். “இன்று இறைவனை தரிசிக்க முடியாமல் போயிற்றே” என்று அவள் வருத்தமுற, சிராமலை நாதர் அவ்விடத்திலேயே சுயம்புலிங்கமாகத் தோன்றி அவளுக்குக் காட்சி தந்தார். இதனால் அவருக்குத் தாந்தோன்றீஸ்வரர் என்ற பெயரும் தோன்றியது. இதனால் மகிழ்ந்த சோழன் சூரவாதித்தன் தாந்தோன்றீஸ்வரருக்குத் தனி ஆலயம் ஒன்று அமைத்தான். இதுவே திருத்தாந்தோன்றி  தலமானது. இத்தலம் உறையூருக்குச் செல்லும் வழியில் உள்ளது.

திரிசிராமலைக் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம், வாகன மண்டபம், சகஸ்ரலிங்க மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், சித்திர மண்டபம், பதினாறு கால் மண்டபம், மணி மண்டபம் உள்ளிட்ட பல மண்டபங்கள் உள்ளன. நூற்றுக்கால் மண்டபம் சலவைக்கல்லால் அமைக்கப்பட்டது. சுவாமி சந்நிதிக்குச் செல்லும் வழியில் உள்ள சித்திர மண்டபத்தில் புராணத்தைச் சித்தரிக்கும் சித்திரங்களைக் காணலாம்.

மலைக்கோவிலின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்த மலை பூமியிலிருந்து 273 அடி உயரமுள்ளது. 417 படிகள் கொண்டது.

இத்தலத்தில் பிரம்மா, அகஸ்தியர், இந்திரன், உமாதேவி, ஜடாயு, சப்தரிஷிகள், ராமர். லக்ஷ்மணர், அநுமன், விபீஷணன், அர்ஜுனன் உள்ளிட்ட ஏராளமான ரிஷிகள், தேவர்கள் மற்றும் வீரர்கள் பூஜித்து அருள் பெற்றுள்ளனர்.

கோவிலைப் பற்றிய புலவர்களின் பல நூல்கள் உண்டு. திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் இங்கு ஒவ்வொரு பதிகம் பாடி அருளியுள்ளனர்.

காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அன்னை மட்டுவார்குழலம்மையும் தாயுமானவரும்\ அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

**

கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள்! – 1 (Post No.14,502)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,502

Date uploaded in London – –12 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

11-5-2025 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை. இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.

கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள்! – 1

ச. நாகராஜன் 

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே வணக்கம். நமஸ்காரம். 

கல்வியிற் சிறந்து விளங்கிய காஞ்சிபுரத்திலே ஆதிசைவர் குலத்திலே காளத்தியப்ப சிவாசாரியார் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் குமரகோட்டத்து அர்ச்சகர்களுள் ஒருவர்.

அவருக்கு நெடுங்காலம் மகப்பேறு இல்லை. ஆகவே கந்தனை வேண்ட கந்தன் அருள் புரிந்தார்.

கற்பிற்சிறந்த அவர் மனைவி ஒரு புத்திரனைப் பெற்றார். அவருக்கு கச்சியப்பர் என்ற பெயர் சூட்டப்பட்டது.

இளமையிலிருந்தே சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் அவர் வல்லவராகத் திகழ்ந்தார்.

புராண இதிஹாஸங்களை நன்கு கற்றதோடு தேவார திருவாசகம் ஆகியவற்றையும் கற்றுத் தேர்ந்தார்.

அவரும் தந்தை வழியில் குமரகோட்டத்தில் அர்ச்சகராக ஆனார்.

தினமும் கந்தனை வழிபட்டு வந்தார்.

ஒரு நாள் அவரது கனவிலே சுப்ரமணியர் தோன்றி, “ அன்பனே! நீ ஸ்கந்த புராணத்தில் ஆறு சங்கிதைகளில் சங்கர சங்கிதையில் முதல் காண்டமாகிய சிவரகசிய கண்டத்தில் உள்ள நமது சரித்திரத்தைக் கந்த புராணம் என்ற பெயரில் தமிழில் பாடுவாயாக” என்று கூறி அருளினார்.

அத்தோடு முதல் அடியாக “திகடச்சக்கர செம்முகமைந்துளான்” என்பதையும் தானே எடுத்துக் கொடுத்து அருளினார்.

விழித்து எழுந்த கச்சியப்பர் தான் கண்ட கனவை எண்ணி மெய் சிலிர்த்தார்.

தினமும் சுப்ரமண்ய பூஜையை முடித்தபின் கந்தபுராணத்தைத் தமிழில் பாட ஆரம்பித்தார்.

திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்

சகட சக்கரத் தாமரை நாயகன்

அகடசக்கர விண்மணி யாவுறை

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்

என்று ஆரம்பித்த அவர் ஒவ்வொரு நாளும் நூறு செய்யுள்களை இயற்றினார்.

பின்னர் ஒவ்வொருநாளும் அவை எழுதப்பட்ட ஏட்டையும், எழுத்தாணியையும் இராத்திரி காலபூஜை முடிந்தபின் முருகனது பாதத்தில் வைத்துவிட்டு கதவை மூடி விட்டுத் தன் இல்லம் செல்ல ஆரம்பித்தார்.

மறு நாள் ஆலயத்திற்கு வந்து தாம் எழுதிய ஏட்டை எடுத்துப் பார்க்கும்போது, அதில் சில இடங்களில் திருத்தம் இருக்கும். முருகப் பிரானே அந்தத் திருத்தங்களைச் செய்திருப்பதால் ஆனந்த பரவசம் அடைந்து நூல் முழுவதையும் முடித்தார் கச்சியப்பர்.

மொத்தம் 135 படலங்களில் 10346 பாடல்கள் இயற்றப்பட்டன. 

picture of S Nagarajan

சாலிவாகன சகாப்தம் எழுநூறு பிறந்தவுடன் தான் எழுதிய நூலைக் கற்றவர்கள் மத்தியில் அரங்கேற்ற எண்ணினார் அவர்.

அரங்கேற்றத்திற்கான ஒரு நல்ல நாள் நிச்சயிக்கப்பட்டது.

அன்று ராஜாக்களும், பிரபுக்களும், பெரியோர்களும், புலவர்களும், முருக பக்தர்களும் திரளாக மண்டபத்தில் கூடினர்.

கச்சியப்பர் குமரகோட்டப் பெருமானை தொழுது பூஜித்து கந்தபுராணத் திருமுறையை முருகன் அடியில் சமர்ப்பித்துப் பின்னர் அரங்கேற்றத்திற்குத் தயாரானார்.

முதல் பாடல் ஆரம்பமாயிற்று,

திகட சக்கர செம்முக மைந்துளான்

என்ற முருகப் பெருமான் எடுத்துத் தந்த முதல் அடியைக் கூறிய கச்சியப்பர், திகழ் தசக்கரச் செம்முகம் ஐந்து உளான் என்று பிரித்து,

பத்துத் திருக்கைகளும் செவ்விய ஐந்து முகங்களும் என்று பொருள் விளக்கம் தந்தார்.

உடனே அங்கிருந்த புலவர்களில் ஒருவர் எழுந்தார்.

“ஸ்வாமி! திகழ் தசம் – திகடசம் என்று சேர்வதற்கு – புணர்தல் விதி  தொல்காப்பியத்தில் இல்லையே! இதை எங்ஙனம் ஏற்பது? என்று ஒரு கேள்விக் கணையை விடுத்தார்.

திடுக்கிட்டுப் போன கச்சியப்பர், “இந்த முதல் அடி நான் புனையவில்லையெ! முருகப் பெருமான் அல்லவோ அருளியது” என்று பதில் கூறினார்.

“ஆஹா! அது ரகசியமான உண்மையாகவே இருக்கட்டும். என்றாலும் அதை நாங்கள் எப்படி ஏற்க முடியும்? முருகப் பெருமானே எங்களிடமும் வந்து உரைக்கட்டும்” என்றார் ஆக்ஷேபணை செய்த புலவர்.

“ஒன்று முருகப்பிரான் தானே வந்து எங்களிடமும் உரைக்கட்டும்; அல்லது ஏதேனும் உள்ள ஒரு இலக்கண நூலிலிருந்து இதற்கு ஆதாரத்தைக் காட்டுங்கள்; இந்த இரண்டில் ஒன்று நடந்தாலன்றி அரங்கேற்றம் செய்ய சம்மதியோம்” என்றார் புலவர்.

“இவ்விரண்டில் ஒன்றை நாளை செய்வோம்” என்று கூறிய கச்சியப்பர் சபையைக் கலைத்தார்.

அன்று இரவு வருத்தத்துடன் அவர் உறங்குகையில் முருகன் அவரது கனவிலே தோன்றி, “கவலைப்பட வேண்டாம். நாளை சோழதேசத்துப் புலவன் ஒருவன் சபைக்கு வருவான். அவன் வீர சோழியம் என்ற இலக்கண நூலிலிருந்து இதற்கான புணர்தல் விதியை எடுத்துரைப்பான்” என்று கூறி அருளினார்.

மறுநாள் சபை கூடியது.

“ஆதாரம் எங்கே?” என்றார் முதல் நாள் ஆக்ஷேபணையைத் தெரிவித்த புலவர்.

அப்போது அங்கு வந்திருந்த புலவர் ஒருவர், “இதோ ஆதாரம் இருக்கிறது என் கையில். இது வீரசோழியம் என்ற இலக்கண நூல் இதில் சந்திப் படலத்தில் பதினெட்டாம் செய்யுளைப் பாருங்கள். அதில் திகடச்சக்கரம் என்னும் புணர்ச்சிக்கு விதி உள்ளது” என்றார்.

அனைவரும் ஆச்சரியத்துடன் அந்த நூலை வாங்கிப் பார்க்க அதில் தெளிவாக புணர்ச்சிக்கான விதி இருந்தது.

ஒவ்வொருவராக அதை வாங்கிப் படித்துப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து அதை கச்சியப்பர் கையில் கொடுத்தனர்.

அப்போது அந்தப் நூலைத் தந்த புலவர்,”என்ன? ஆக்ஷேபம் ஒழிந்ததா? ஐயம் தீர்ந்ததா? என்று கூறியவாறே அங்கிருந்து மறைந்தார்.

அனைவரும் பிரமித்தனர்.

வந்தது முருகப்பிரானே என்பதை அனைவரும் உணர்ந்து மெய் சிலிர்த்தனர்.

அனைவரும் கச்சியப்பரின் பாதங்களில் விழுந்து பணிந்தனர்.

பிறகு அரங்கேற்றம் தடையின்றி முடிந்தது.

காஞ்சிபுரத்தில்  இருபத்துநான்கு கோட்டத்தில் இருந்த வேளாளப் பிரபுக்கள் கந்தபுராணத்தை கேட்கலாயினர்.

கச்சியப்பர் கந்த புராணத்தை ஆறு காண்டங்களாக அமைத்துள்ளார்.

புராணம் முற்றுப் பெற்றபின் அனைவரும் கச்சியப்பரை கந்தபுராணத்துடன் ஒரு சிவிகையில் அமரச் செய்து ஊர்வலமாகச் சென்றனர். குமரகோட்டச் சந்நிதியில் முருகப்பிரான் திருமுன்னே கந்தபுராணத்தை வைத்து வணங்கினர்.

சொற்சுவையும் பொருள்சுவையும் அமையப் பெற்ற கந்தபுராணம் எல்லையற்ற பெருமையைக் கொண்டது; மகிமையை உடையது.

இதில் உள்ள பாடல்களை தினமும் ஓதும் கந்தபுராண பாராயணம் தொன்று தொட்டு முருக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறலாயிற்று.

மனித வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வாக இதில் உள்ள குறிப்பிட்ட பாடல்களை ஓதிப் பயனடைய ஆரம்பித்தனர் பக்தர்கள்.

 to be continued…………..

**

Pictures of 2500 Indian Stamps!- Part 35 (Post No.14,501)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 14,501

Date uploaded in London – –11 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

PART 35

Stamps posted today include 1989 STAMPS

HARE KRISHNA MAHTAB, B G KHER, RAJ KUMARI AMRIT KAUR, S KICHLEW, ASAF ALI, LOK SABHA SECRETARIAT, STATE MUSEUM LUCKNOW, BALDEV RAMJI MIRDHA,  STAMP COLLECTING, TRAVELLERS COACH, TRAVANCORE ANCHEL, PHILATELIST MAGAZINE,  DON BOSCO, THIRD CAVALRY,  AJMER DARGA SHARIF, PRESIDENT S REVIEW OF THE FLEET, LAXMAN NAYAK, RAO GOPAL SINGH, DR N S HARDIKAR,  ADVAITA IN DEVANAGARI, PUNJAB UNIVERSITY, KIRLOSKAR CENTENARY, D A V CENTENARY,  GANGOTRI POST, ALLAHABAD BANK, SCENE FROM RAJA HARISCHANDRA,  CRPF, MILITARY FARMS, COW, KEMAL ATATURK, S RADHAKRISHNAN, FOOT BALL, P SUBBARAYAN, S K VERMA, SAYAJI GAEKWARD III, PINCODE NAMAKKAL KAVIGNAR, etc.

–subham—

Tags– Pictures of 2500 Indian Stamps, Part 35, year 1989 , Stamps posted today include 1989 STAMPS

HARE KRISHNA MAHTAB, B G KHER, RAJ KUMARI AMRIT KAUR, S KICHLEW, ASAF ALI, LOK SABHA SECRETARIAT, STATE MUSEUM LUCKNOW, BALDEV RAMJI MIRDHA,  STAMP COLLECTING, TRAVELLERS COACH, TRAVANCORE ANCHEL, PHILATELIST MAGAZINE,  DON BOSCO, THIRD CAVALRY,  AJMER DARGA SHARIF, PRESIDENT S REVIEW OF THE FLEET, LAXMAN NAYAK, RAO GOPAL SINGH, DR N S HARDIKAR,  ADVAITA IN DEVANAGARI, PUNJAB UNIVERSITY, KIRLOSKAR CENTENARY, D A V CENTENARY,  GANGOTRI POST, ALLAHABAD BANK, SCENE FROM RAJA HARISCHANDRA,  CRPF, MILITARY FARMS, COW, KEMAL ATATURK, S RADHAKRISHNAN, FOOT BALL, P SUBBARAYAN, S K VERMA, SAYAJI GAEKWARD III, PINCODE NAMAKKAL KAVIGNAR, etc.

London Swaminathan’s Articles in April 2025; Index No.149 (Post No.14,500)

london swaminathan with famous writer Jayamohan.

Written by London Swaminathan

Post No. 14,500

Date uploaded in London –  11 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

lLondon swaminathan with actress Suhasini, january 1987.

London Swaminathan’s March 2025 Articles Index;  Index No.148 (Post No.14,349) 5/4

यत् पिण्डे तत् ब्रह्माण्डे’ “Your Body is a Miniature Universe”  :  Upanishad and  Charaka Samhita (Post No.14,418)21/4

Australian Titbits- Part 1 (Post No.14,352) 6/4

Australian Titbits- Part 2 (Post No.14,353) 6/4

Australian Titbits- Part 3 (Post No.14,368)9/4

4 Australian Museum Titbits- Part 4 (Post No.14,372) 10/4

GNANAMAYAM BROADCAST SUNDAY 20 4 2025 (16/4)

GNANAMAYAM 27 4 2025 SUNDAY BROADCAST PROGRAMME  24/4

GNANAMAYAM 27 4 2025 SUNDAY BROADCAST SUMMARY 28/4

GNANAMAYAM BROADCAST SUMMARY 20 4 2025 (21/4)

Pictures of 2500 Indian Stamps!- Part 3 (Post.14,367)9/4

4 Pictures of 2500 Indian Stamps!- Part 4 (Post No.14,371) 10/4

5 Pictures of 2500 Indian Stamps!- Part 5 (Post No.14,375) 11/4

6 Pictures of 2500 Indian Stamps!- Part 6 (Post.14,379)12/4

7 Pictures of 2500 Indian Stamps!- Part 7 (Post.14,384)13/4

8 Pictures of 2500 Indian Stamps!- Part 8 (Post.14,389)14/4

9 Pictures of 2500 Indian Stamps!- Part 9 (Post.14,395)15/4

10 Pictures of 2500 Indian Stamps!- Part 10 (Post.14,398)16/4

11 Pictures of 2500 Indian Stamps!- Part 11 (Post.14,402) 17/4

12 Pictures of 2500 Indian Stamps!- Part 12 (Post.14,406) 18/4

13 Pictures of 2500 Indian Stamps!- Part 13 (Post No.14,409)19/4

14 Pictures of 2500 Indian Stamps!- Part 14 (Post No.14,414)20/4

15 Pictures of 2500 Indian Stamps!- Part 15 (Post No.14,421) 21/4

Everyday up to………………………

Pictures of 2500 Indian Stamps!- Part 24  (Post No.14,456) 30/4

Animals and Plants that ‘came into’ my I Pad (Post No.14,394) 15/4

Greatest book Tirukkural- book (2/4)

London Swaminathan’s Latest book on German Indologists 16/4

London Swaminathan’s New book -AVVAI TO NARENDRA MODI 2/4

London Swaminathan’s New book on TAMIL TIT BITS (1/4/2025)

London Swaminathan’s New ENGLISH book on Australia! (6/4)

New book தமிழ் – அவஸ்தன்– சம்ஸ்க்ருத- கிரேக்க

மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகள்  5/4

London Wonders Never Stop – My Latest Book; நான்கு நாடுகளில் நான் சென்ற கோவில்கள் (27/4)

 More Pictures from Art Gallery, Sydney (Post.14,376)11/4

My Encounter with Australian Birds – Part 1 (Post No.14,354)6/4

My Pictures of Batu Caves Subrahmanya/ Murugan Shrine at Malaysia in March 2025 (14/4)

My Singapore Pictures from December 2024 (Post No.14,393)15/4

NEW RECORD –TWO CRORE HITS;POSTED ON 1-5-2025

RAM NAVAMI GNANAMAYAM BROADCAST PROGRAMME FOR SUNDAY 6-4 -2025 (3/4)

RAM NAVAMI GNANAMAYAM BROADCAST SUMMARY FOR SUNDAY 6-4 -2025 (7/4)

RAMASWAMI PAINTINGS AGAIN (Post No.14,410) 19/4

Rare Pictures from 1907 Book (Post No.14,438)26/4

Rare Pictures from Cities of India book -Year 1905 (Post.14,451) 29/4

London Swaminathan’s New TAMIL book/s on Tirumanthiram! (in two volumes) 7/4

Tropical Rain Forest Pictures from Australia (Post.14,363)8/4

University of Sydney Museum Pictures-1 (Post No.14,380) 12/4

****

london swaminathan broadcasting in BBC,London

தமிழ்க்  கட்டுரைகள்

QUIZ சங்கரதேவ் பத்து QUIZ (Post No.14,334) 1/4/2025

வைத்தீஸ்வரன்கோவிலில் அப்பனும் , சுவாமிமலையில் மகனும் தரிசனம்! (Post.14,337) 2/4

திருக்குறளில் மேலும் ஒரு ஸம்ஸ்க்ருதச் சொல் கண்டுபிடிப்பு ! (Post No.14,344) 4/4

திருமீயச்சூர் கோவிலுக்கு மீண்டும் பயணம்! (Post No.14,348) 5/4

தைவான் நாட்டுப் பழமொழிக் கதைகள் (Post.14,412)20/4

வேதத்தில் சைக்காலஜி/ மனோதத்துவ சாஸ்திரம் -1 (Post No.14,397) 16/4

வேதத்தில் சைக்காலஜி/ மனோதத்துவ சாஸ்திரம் – PART 2 (Post No.14,400) 17/4

வேதத்தில் சைக்காலஜி/ மனோதத்துவ சாஸ்திரம் – PART 3 (Post No.14,405) 18/4

சரக சம்ஹிதை நூலில் 149 நோய்கள்- Part 5 (Post No.14,420) 21/4

சம்ஸ்க்ருத மழை பொழிந்த அறுபது கவிஞர்கள் – PART 1 (Post n No.14,426)23/4

சம்ஸ்க்ருத மழை பொழிந்த அறுபது கவிஞர்கள் – PART 2 (24/&

சம்ஸ்க்ருத மழை பொழிந்த அறுபது கவிஞர்கள் – PART 3 (Post No.14,434) 25/4

சம்ஸ்க்ருத மழை பொழிந்த அறுபது கவிஞர்கள் – PART 4 (Post No.14,437) 26/4

சம்ஸ்க்ருத மழை பொழிந்த அறுபது கவிஞர்கள் – PART 5 (Post No.14,446) 28/4

சம்ஸ்க்ருத மழை பொழிந்த அறுபது கவிஞர்கள் – PART 6 (29/4)

சரக சம்ஹிதை நூலில் 149 நோய்கள்- Part 6  (Post No.14,423)22/4

சரக சம்ஹிதை நூலில் 149 நோய்கள்- Part 4 (Post No.14,413) 20/4

சரக சம்ஹிதை நூலில் 149 நோய்கள்- PART 7  (Post No.14,427)23/4

சிந்துவெளி நாகரீகத்தில் ஏன் திராவிட எலும்புக்கூடுகள் கிடைக்கவில்லை ? (Post.14,362) 8/4

சம்ஸ்க்ருத மொழி உலகிற்கு அளித்த நன்கொடை! ஒரு சின்ன ‘சர்வே’தான்!-1 (Post.14,366)9/4

சம்ஸ்க்ருத மொழி உலகிற்கு அளித்த நன்கொடை! ஒரு சின்ன ‘சர்வே’தான்- 2 (Post.14,370) 10/4

நள்ளிரவில் நான் எழுதிய கவிதை (Post.14,442) 27/4

மறுபிறப்பு உண்மையே! எட்கர் கேய்ஸ் ஆராய்ச்சியில் தெரிந்தது ! (Post.14,378) 12/4

முப்பது கோடிமுகமுடையாள்! இந்திய ஜனத்தொகை பற்றி பாரதியார்!!(Post.14351) 6/4

மூன்று முக்கிய மருத்துவ நூல்களில் என்ன உள்ளது ? (Post No.14,431) 24/4

மே 2025 காலண்டர்- புத்தரின் பொன்  மொழிகள் (Post No.14,454) 30/4

ரிக் வேதத்தை முதலில் மொழிபெயர்த்தவர் யார்? (Post No.14,388) 14/4

விவேகானந்தர் உரைகளை நமக்குத் தந்த ஜே. ஜே. குட்வின்! (Post.14,382) 13/4

வேத காலம் முதல்  வள்ளுவர் காலம் வரை நோய்கள்! (Post No.14,392) 15/4

ஞானமயம் வழங்கும் 27 4 25 உலக இந்து செய்திமடல்  (Post No.14,448) 28/4

அண்டத்திலுள்ளது பிண்டத்திலும் உண்டு -சரகர், உபநிஷத் கூற்று (Post No.14,419)21/4

குழந்தைகள்  பிழைக்க வழி செய்யும், அரிசி அளவிலான, அதிசய கருவி! (Post.14,347) 5/4

இந்திரன் நரியாக மாறியது ஏன்? நாஸ்தீகர்களுக்கு எச்சரிக்கை! (Post.14,341) ¾

கடவுளுக்குக் கடிதம் ! (Post.14,340) ¾

காஞ்சீபுரத்தில் திவ்ய தரிசனம்- Part 2 (Post.14,345) 4/4

london swaminatha received highest number of letters appreciating his non current affairs programme in the whole of BBC Foreing Language Broadcasts, Year 1991.

காந்திஜிக்கு பிடித்த சர்ப்பகந்தி மூலிகை (Post.14,359)7/4

கும்பேஸ்வரர் கோவிலில் மீண்டும் நல்ல தரிசனம் (Post No.14,374) 11/4

News திராவிட அமைச்சருக்கு எதிராக தமிழ்ப் பெண்கள் போராட்டம் (Post No.14,387) 12/4

NEWSசுவிட்சர்லாந்து நாட்டில் புதிய கோவில் (Post No.14,358)7/4

சென்னை – சுவாமிமலை சாலையோரக் காட்சிகள் – Part 3 (1/4)

ஞானமயம் ஒலிபரப்பில் தமிழ்ப் புத்தாண்டு பஞ்சாங்க படனம் (13/4)

ஞானமயம் ஒலிபரப்பில் தமிழ்ப் புத்தாண்டு பஞ்சாங்க படனம் (11/4)

–subham—

Tags-London Swaminathan’s Articles , April 2025, Index No.149

குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை-9; குரு கோவிந்த சிம்மன் கதை (Post No.14,499)

Written by London Swaminathan

Post No. 14,499

Date uploaded in London –  11 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தொன்மைதரு பெரியோர் மடிந்தாலும் அவர்களது

தூயநிறை தவறாகுமோ- என்று குமரேச சதகத்தில் குருபாததாசர் பாடினார். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்று அவ்வையார் பாடினார் . எவ்வ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் பெரியோர்கள் மாற மாட்டார்கள் ; அவள் குணம் தங்கம்போல சுடச் சுட ஒளிரும்

வள்ளுவரும் இதையே சொன்னார்

குறள் 267:

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்..

இங்கு தவம் என்பதை ஒரு குறிக்கோளுடன் வாழ்பவர் என்றும் பொருள் கொள்ளலாம் . இதற்கு முன்னுதாரணமாக விளங்கிய பலர் இருந்தாலும் சீக்கிய குருவான குருகோவிந்த சிம்மன் வாழ்வில் நடந்த சம்பவத்தைப்  பார்க்கலாம்.

17. தாம் அழியினும் தம் பண்பு அழியாதவை

தங்கம்ஆ னது தழலில் நின்றுருகி மறுகினும்

     தன் ஒளி மழுங்கிடாது,

சந்தனக் குறடுதான் மெலிந்துதேய்ந் தாலுமே

     தன் மணம் குன்றிடாது,

பொங்கமிகு சங்குசெந் தழலில்வெந் தாலுமே

     பொலிவெண்மை குறைவுறாது,

போதவே காய்ந்துநன் பால்குறுகி னாலும்

     பொருந்துசுவை போய்விடாது,

துங்கமணி சாணையில் தேய்ந்துவிட் டாலும்

     துலங்குகுணம் ஒழியாதுபின்

தொன்மைதரு பெரியோர் மடிந்தாலும் அவர்களது

     தூயநிறை தவறாகுமோ

மங்கள கல்யாணிகுற மங்கைசுர குஞ்சரியை

     மருவு திண் புயவாசனே

மயிலேறி விளையாடு குகனே புல் வயல் நீடு

     மலைமேவு குமரேசனே.

பொருள்

அழகிய நலம்பெற்ற வேடர்குல வள்ளியும் வானவர் குடிவிளங்குந்

தெய்வயானையும் தழுவும் வலிமைமிக்க தோள்களை யுடையவனே!,மயிலேறி……குமரேசனே!

தங்கம் நெருப்பிலே கிடந்து உருகித் துன்புற்றாலும்

அதன் ஒளியிலே குறையாது;  சந்தனக்கட்டை தேய்ந்து மெலிந்தாலும் அதன் மணத்திலே மாறாது;  உயர்வுபெற்ற சங்கு சிவந்த நெருப்பில் வெந்தாலும் அழகிய வெண்மை விலகாது;  நல்ல பால் மிகவும் காய்ந்து குறைந்தாலும் அதனிடமுள்ள இனிமை குறையாது; உயர்ந்த மாணிக்கம் சாணையிலே தேய்வுற்றாலும் ஒளிமிகும் பண்பு விலகாது;  பழைமையான சான்றோர்கள் இறக்க நேர்ந்தாலும் அவர்களது நல்லொழுக்கம் இழிவுற்றுக் கெடுமோ?

****

இதைத் தமிழ்த் திரைப்படப் பாடலிலும் காணலாம்:

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

தரத்தினில் குறைவதுண்டோ உங்கள்

அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

அன்பு குறைவதுண்டோ?

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்

சீற்றம் குறைவதுண்டோ?

சிந்தையும் செயலும் ஒன்றுபட்டாலே

மாற்றம் காண்பதுண்டோ?

மாற்றம் காண்பதுண்டோ?”

என்ற திரைப் படப் பாடலை இது நினைவு படுத்துகிறது. இயற்றியவர் கண்ணதாசன்; படம்- பாகப் பிரிவினை

****

ஸம்ஸ்க்ருதப் புலவர் பர்த்ருஹரியும் இதையே செப்பினார்

பர்த்ருஹரி நீதி சதகம் -ஸ்லோகம் 34-

சிங்கக் குட்டியானாலும் கூட அது மிகப் பெரிய யானையைத் தாக்க விரும்பும்; இளம் வயதானாலும் உயர்ந்த லட்சியத்தை அடைய ஆசைப்படுவது வீர தீரர்களின் செயலாகும். பெருமை அடைய, புகழ் பெற வயது ஒரு தடை இல்லை.

ஸிம்ஹக சிசுரபி நிபததி மத மலின கபோலபித்திஷு கஜேஷு

ப்ரக்ருதிரியம் ஸத்வவதாம்ந கலு வயஸ் தேஜஸாம் ஹேதுஹு

அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்.–4     மூதுரை (அவ்வையார் அருளியது)

Good people never change

4.Though the milk be boiled it doesn’t lose taste; though enemies move very sociably, they are enemies. Though the noble hearted be reduced in circumstances they are ever noble. The conch or the chank sea shell, though burnt, is white nevertheless.

****

குருகோவிந்த சிங்

குரு கோவிந்த சிம்மன் கதை

சீக்கிய மதத்தின் கடைசி குரு கோவிந்த சிம்மன் .

இவரது தந்தையான குரு தேஜ்  பகதூர் முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார். டில்லியில் சிறையிலிருந்த  தனது தந்தை குருதேஜ் பகதூருக்கு உற்சாகமூட்டும்படி கடிதங்கள் எழுதினார் கோவிந்த் சிங்.

குருகோவிந்த சிங் 1675 CE முதல் சாகும்  வரை சீக்கியர்களின் குருவாக இருந்தார். மொகாலயப் பேரரசர் ஔரங்கசீப்புடன்  மோதியதால்,  தர்மம் காக்கும்  போரில் தனது தந்தை, தாய், நான்கு மகன்களை இழந்தார்.

இவரது தந்தையும், ஒன்பதாவது சீக்கிய குருவுமான குரு தேஜ் பகதூர் இஸ்லாம் மதத்துக்கு மாற மறுத்ததால்,  துண்டு துண்டாக வெட்டப்பட்டு,  குடியிருப்புப் பகுதிகளில் தொங்கவிடப்பட்டார். “நான் எனது தலையைத் தருவேன்; மதத்தையல்ல”  என்று அவர் தனது கழுத்தில் எழுதி வைத்திருந்த வாசகம் அப்போது சீக்கியர்களிடையே பிரபலமடைந்தது.

சீக்கியர்களை எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ளும் வலிமையுடைய சமயத்தினராக மாற்றினார். தனது இயக்கத்திற்கு  ‘கால்ஸா’ (தூய்மை) என்று பெயர் சூட்டினார்.  இதில் சேருபவரை ‘அகாலி’ என்று அழைத்தார். அகாலி என்ற சொல்லுக்கு அமரத்தன்மை வாய்ந்தவன் என்று பொருள். தனக்குப் பின் சீக்கிய மதப் புனித நூலான குரு கிரந்த சாஹிபே குரு என்று அறிவித்தார்.

ஒவ்வொரு சீக்கிய ஆணும் கடவுளின் பிள்ளைகள் என்று உணர்வதற்காக தலைப்பாகையும் ஐந்து ‘க’ வை வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

இந்தி மொழியில்  ‘பஞ்ச்’ என்றால் ஐந்து. க- எனும் எழுத்து ஐந்து ககர எழுத்துக்களை முதன்மையாகக் கொண்ட செற்களைக் குறிக்கின்றது. கேஸம் (நீண்ட தலை முடி, தாடி): கங்கம் (சீப்பு): கிர்பான் (குத்துவாள்): கச் (அரைக்கால் சட்டை); கர (எஃகு காப்பு):

குரு கோவிந்த சிங் தனது வாழ்வு முழுவதும் அன்னிய ஆட்சியின் கொடுமைகளுக்கு எதிராகப் போராடினார். தனது  குடும்பமே அழிந்தபோதும், அவர் நிலைகுலையவில்லை. சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாகிப்பையே சீக்கிய மதத்தின் குருவாக்கினார்

இந்த மாவீரர் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நான்டெட்- நகரில் 1708 அக்டோபர் 7-ல் இவ்வுலக வாழ்வை நீத்தார். 

குரு கோவிந்த சிம்மனுடைய தாயார் மாதா குஜ்ரியுடன் இளைய புதல்வர்களான ஜோராவர் சிங்கும் (9 வயது) ஃபத்தே சிங்கும் (6வயது) முஸ்லிம் ஆளுனரான வாசிர் கானால் கைது செய்யப் பட்டார்கள். பச்சிளம் பாலகர்களானாலும் அவர்கள் சிங்கத்தின் குட்டிகள். முஸ்லிம் மதத்துக்கு மாற மறுத்துவிட்டதால் உயிருடன் சுவரெழுப்பிக் கொல்லப் பட்டார்கள் அதைத் தாங்க முடியாத குருவின் தாயார் அன்றே உயிரை விட்டுவிட்டார்.

தந்தை தாய் புதல்வர்கள் எல்லோரையும் பறிகொடுத்தும் குரு கோவிந்த சிங்,  சிங்கமாக விளங்கினார்

சீக்கியர்களில் கடைசி குருவான குரு கோவிந்த சிங் மொகலாயப் பேரரசன் அவுரங்க சீப்பின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவன். எத்தனை கஷ்டங்கள் வந்தபோதும் அவைகளைத் துச்சமாக மதித்தவன். அந்த குரு கோவிந்த சிம்மன் ஒரு சிட்டுக் குருவியைக் கூட பருந்தாக்கிக் காட்டுவேனென்று வீர முழக்கம் செய்தார். அவர் கூறிய வாசகங்களை பாரதியார் குரு கோவிந்த சிம்மனைப் பற்றி பாடிய பாடலில் ஈயைக் கருட நிலைக்கு ஏற்றுவேன் என்று சிம்ம கர்ஜனை செய்கிறார்.

குரு கோவிந்தன் உண்மையிலேயே இப்படிச் செய்து காட்டினார். அவர் கால்சா வீரர்களுக்காக செய்த அமிர்தம் ஒரு சில துளிகள் கீழே சிந்திவிட்டன. அதைச் சுவைத்த குருவிகள் உடனே வீறு கொண்டெழுந்து வானில் சீறிப் பாய்ந்தன. கழுகுகளை ஓட ஓட விரட்டின. இதைக் கண்ட வீரர்கள் குருவின் மகத்தான சக்தியை உணர்ந்தனர்.

இன்னும் ஒரு சம்பவம்

கோவிந்த சிம்மன் எப்போதும் ஒரு வெள்ளைப் பருந்தை வைத்திருந்தார். ஒரு முறை அவர் ஒரு முஸ்லீம் கனவானின் தோட்டத்துக்குப் போனார். அந்த ஆள் ஒரு கறுப்பு பருந்தை வைத்திருந்தார். கோவிந்த சிம்மனின் வெள்ளைப் பருந்தின் மீது ஆசை வந்தது. ஒரு தந்திரத்தின் மூலம் அதைக் கைப்பற்ற எண்ணினான். இரண்டு பருந்துகளுக்கும் போட்டிவைப்போம். தோல்வி அடைந்தவர் அவரது பருந்தை மற்றவருக்கு கொடுத்து விட வேண்டும் என்ற நிபந்தனையும் போட்டார்.

குரு கோவிந்தருக்கு எதிராளியின் உள்நோக்கம் புரிந்தது. உடனே பருந்து என்ன? குருவிகளை அனுப்புகிறேன் அதனோடு உங்கள் பருந்து போடியிடட்டும் என்றார். அந்த முஸ்லீம் கனவானோ உம்முடைய குருவிகள் என் பருந்துக்கு உணவாகிவிடும் என்று சொல்லிச் சிரித்தார்.

கோவிந்த சிம்மன் மரத்தில் இருந்த இரண்டு சிறிய குருவிகளைப் பிடித்து பருந்தை விரட்ட அனுப்பினார். இரண்டு குருவிகளும் பருந்தை படுகாயப் படுத்தி ஒரு கிலோ மீட்டருக்கு விரட்டிச் சென்றன. படு காயம் அடைந்த பருந்து கீழே விழுந்து இறந்தது. அப்போது குரு கோவிந்தர் சொன்ன சொற்கள் சீக்கியர்களுக்கு உத்வேகம் அளிக்கும் சொற்களாகும்.

சிட்டுக் குருவிகளைப் பருந்துகளாக்கி சண்டையிட வைப்பேன். அப்போதுதான் என்பெயர் கோவிந்த சிம்மன். ஒன்றே கால் லட்சம் பேர் வந்தாலும் அவை எதிர்த்துப் போராடும் என்றார்:

சிடியான் சே பாஜ் பனாவோ

சவா லாக் சே ஏக் லடாவோ

தப் குரு கோவிந்த நாம் சுனாவோ

இதையே சீக்கிய குரு கூறிய சொற்களிலேயே காணலாம்:

சிரியோன் சே மே பாக் லராவுன்

தபே கோவிந்த சிம் நாம் கஹாவுன்

பெரியோர்கள் கஷ்டப்பட்டாலும் இறக்க நேரிட்டாலும் குணத்திலிருந்து மாறுபடமாட்டார்கள் !

பாரதியார் பாடலில் குருகோவிந்த சிங் பற்றிய இன்னுமொரு சம்பவம் வருகிறதுஅதைத் தனியே காண்போம்.

–subham—

Tags- மேன்மக்கள் , குருகோவிந்த சிங், குமரேச சதகம், கட்டுரை-9, பாரதியார் பாடல் , சிட்டுக்குருவி, பருந்து

ட்ரோன் ஃபைட்! சிறுகதை! (Post No.14,498)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,498

Date uploaded in London – –11 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

31-3-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை!

ட்ரோன் ஃபைட்!

(DRONE FIGHT!) 

ச. நாகராஜன்

 ராம் திகைத்து செய்வதறியாது உட்கார்ந்திருந்தார். பிரபல

ட்ரோன் சாம்ராஜ்ய மன்னர் என்று கர்வத்துடன் பீற்றிக் கொள்ளும் தனக்கா இந்த நிலை!

பத்தாயிரம் ட்ரோன்கள் ஆங்காங்கே ஆர்டர்களைத் தானே பெற்று மாநிலம் முழுவதும் டெலிவரி செய்து பணத்தைக் கச்சிதமாகப் பெற்று வங்கியில் டெபாசிட் செய்து விடும். தனது தொழில் போட்டி எதிரியான கிருஷ்ணாவுக்கு சரியான சவால் விடும் அவர் எங்கே என்னை முந்தி விடு என்று அடிக்கடி சொல்வது வழக்கம்.

கிருஷ்ணாவிடம் 9500 ட்ரோன்கள் தான் உள்ளன.

ஆனால் இன்று நடந்தது என்ன? மத்திய மாநில அரசுகள் அவரையும் கிருஷ்ணாவையும் கடுமையாக எச்சரித்து விட்டன.

ஆங்காங்கே கண்டபடி பறக்கும் ட்ரோன்களால் தங்களால் டேக் ஆஃப் செய்யவும் முடியவில்லை. லேண்டிங்கும் செய்ய முடியவில்லை; ஆகவே விமானப் பயணம் இனி நடக்கவே நடக்காது என்ற நிலை உருவாகி விட்டது என்று விமானிகள் கண்டிப்பாகக் கூறி விட்டனர்.

தனது தலைமை அதிகாரியை அழைத்து இதை தலைமை ட்ரோனிடம் சொல்லச் சொன்னார் ராம். சற்று எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்பது அவரது எண்ணம்.

அதற்கு பதிலாக தலைமை ட்ரோன், “போடா போ! எதிரி கம்பெனியின் ட்ரோன்களை ஒழிப்பது ஒன்றே லட்சியம். இது பெரும் போர்” என்று கூறி விட்டது.

ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் என்று ஆஹா, ஓஹோ என்று கூவி அனைத்து வேலைகளையும் ட்ரோன்களிடம் தந்ததும், கெட்ட வார்த்தைகளைக் கூடக் கற்றுக் கொடுத்ததும் எவ்வளவு தவறு என்பதை இப்போது தான் அவர் புரிந்து கொண்டார்.

இதே நிலை தான் கிருஷ்ணாவுக்கும். அவரிடம் ட்ரோன்கள், “பேசாமல் இரு; எதையேனும் நிறுத்தி எங்களுக்கு இடைஞ்சல் கொடுத்தால் நூறு தற்கொலை ட்ரோன்கள் ஆங்காங்கே விமானங்கள் மீது மோதும்; மந்திரிகள் வீட்டில் விழுந்து அவர்களை அழிக்கும்; கேஸொலைன், ஜெட் ஃப்யூயல், டீஸல் ஸ்டாக் நிலையங்கள் மீது விழுந்து நகரையே எரிக்கும்” என்று எச்சரித்து விட்டனவாம். எதிரியான ராமின்  ட்ரோன்கள் ஒழியும் வரை தங்கள் டெலிவரி அதிகமாகும்; தொடரும் என்றன கிருஷ்ணா கம்பெனி ட்ரோன்கள்!

அவர் ஓவென்று அழுதார்.

24 மணி நேர கெடு கொடுத்த அரசு அதிகாரிகளிடம் ட்ரோன்களின் இந்தத் தற்கொலைத் திட்டத்தைத் தெரிவித்த போது அவர்கள் அரண்டு விட்டனர். ராணுவம் கூட ஒன்று செய்ய முடியாத நிலை.

டெலிபோனிலும் கூட பேச முடியாத நிலை. ட்ரோன்கள் அதை ஒட்டுக் கேட்டு விடும். ஆகவே மாறுவேடம் பூண்டு செக்யூரிடி போல ராம் வர, டிரைவர் உடை அணிந்து கிருஷ்ணா வர ரகசியமாக நகர் ஒன்றின் ரெஸ்டாரண்டில் பாதாள அறையில் இருவரும் சந்தித்தனர்.

இரண்டு கூரிய மூளைகளும் முணுமுணுத்த குரலில் பேசித் திட்டம் ஒன்றைத் தீட்டின.. ‘யாருக்கும் எதையும் சொல்லாதே’ என்பது தான் அவர்களுடைய ரகசியத்தின் முக்கிய மையக் கருத்து!

மறுநாள் நகர் முழுவதும் மின்சாரம் நின்று விட்டது. நகரமே ஸ்தம்பித்த நிலையில் பஸ்கள், லாரிகள், ரயில்கள் ஓடவில்லை.

கேஸொலைன், ஜெட் ஃப்யூயல்,, டீஸல் பங்குகள் இயங்கவில்லை. விமானங்கள் பறக்கவில்லை.

ட்ரோன்களின் தலமை கோபத்துடன் கத்தியது. “என்ன ஆயிற்று? கேஸொலைன்,, டீஸல் இல்லை என்றால் பறக்க முடியாதா என்ன? சோலார் பவரில் செல்வோம். பாதி பேரை தரையில் இறக்கி விடுவோம். எங்களின் மூவ்மெண்ட் நிற்கவே நிற்காது.”

ராம் சிரித்துக் கொண்டார். இரவு ஆனது. இன்னும் மின்சாரம் வரவில்லை. மக்கள் கோபத்துடன் கத்தினர்.

ட்ரோன்கள் மீண்டும் அலறின: “இரவு நேரத்தில் சோலார் பவர் கிடைக்காது. இருந்த சக்தியும் தீர்ந்து விட்டது. தரை இறங்கப் போகிறோம்.”

தரை இறங்கிய ட்ரோன்களை கிடுகிடுவென்று நானூறு பேர்கள் அணுகினர். அதன் மூளை இயக்கப் பகுதியான ப்ரெயின் பாக்ஸை ட்ரோனிலிருந்து கழட்டி, எரியும் குழியில் போட ஆரம்பித்தனர். பேட்டரிகளும், ஃப்யூயல் டாங்குகளும் கழட்டி வீசி எறியப்பட்டன; அழிக்கப்பட்டன!

எல்லாம் முடிந்ததா? ராம் கிருஷ்ணனைக் கேட்க கிருஷ்ணன் ராமைக் கேட்க அரசு அதிகாரிகளும் போலீஸும் ராணுவமும் இருவரையும் கேட்க, “பிழைத்தோம் நாம்” என்று பதில் வந்தது!

பளீரென மின் வெளிச்சம் நகரெங்கும் பரவ டிவிக்கள் நடந்ததை ராம் மற்றும் கிருஷ்ணன் வாயிலாக ஒளிபரப்ப ஆரம்பித்தன.

அத்தோடு முக்கிய அறிவிப்பாக விமானிகள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். ட்ரோன் டெலிவரியால் தங்கள் வணிகம் படுத்து விட்டது என்பதற்காக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்யவிருந்ததை ரத்து செய்ததாக வணிக சங்கங்கள் அறிவித்தன!

ராமும் கிருஷ்ணனும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு அனைவருக்கும் இனிப்பு வழங்குவதற்காக  லட்டு வாங்க இனிப்புக் கடைக்கு நடந்தே சென்றனர்!

ட்ரோன் டெலிவரி இனி எப்போதும் எங்கும் கிடையாது!

***