Post No. 10,935
Date uploaded in London – – 4 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
நாய் விடு தூது – உலகின் முதல் தூதுக் கவிதை
தமிழ் மொழியில் நிறைய தூதுக் கவிதைகள் (Messenger Poems) உள்ளன.சங்க காலத்தில் பெண்கள் கிளி, குயில், அன்னம், நாரை, வண்டு , மேகம் முதலியவற்றுடன் (Apostrophe) பேசுவார்கள் ; அவைகள் மூலமாக காதல் செய்தி அனுப்புவார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த உத்தியை சம்ஸ்க்ருதம், தமிழ் மொழிகளில் மட்டுமே காணலாம்.
தமிழர்களுக்கும் முன்னதாக இந்தத்துறையில் காளிதாசன் எழுதிய நூல் மேக தூதம் என்ற பெயரில் உலகப் புகழ் பெற்றது; இலக்கிய உலகத்தில் அந்த நூல் பெரும் புரட்சியை உருவாக்கியது. அவரைத் தொடர்ந்து பலரும் இப்படி முழு நீள தூதுக் கவிதை நூல்களை எழுதத் துவங்கினர். தமிழில் இப்படி தனி ஒரு நூல் வருவதற்கு நீண்ட காலம் பிடித்தது. ஆனால் சிறிய கவிதைகள் சங்க காலத்தில் தோன்றின. காளிதாசன் உலகப் புகழ் பெற்ற இந்து மன்னன் விக்ரமாதித்தன் வாழ்ந்த காலத்தில் அவனுடைய ஆஸ்தான புலவராக இருந்தார். அதாவது 2100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார். அவரது நூல்களின் தாக்கத்தை கபிலர் எழுதிய குறிஞ்சிப் பாட்டில் காணலாம்.
காளிதாசரின் ‘ஒரிஜினல் ஐடியா’ Original Idea வா இந்த தூதுக் கவிதை; இல்லை. காளிதாசரின் நூல்களுக்கு பழங்காலத்தில் 75 பேருக்கும் மேலானோர் உரை எழுதினார்கள். அவர்களில் மிகவும் பிரசித்தமானவர் மல்லிநாதர். வால்மீகி முனிவரின் ராமாயணம்தான் காளி தாசருக்கு ஊற்றுணர்ச்சி தந்தது என்கிறார். ராமாயணத்தில் நாம் குரங்கு/ அனுமன் விடு தூதுக் கவிதையைக் காண்கிறோம். ராமன் அனுப்பிய செய்தியுடன் சீதையைச் சந்தித்து மோதிரத்தையம் கொடுத்து, மீண்டும் ‘குட் நியூஸ்’ Good News கொண்டுவந்து ராமனிடம் சபாஷ் வாங்குகிறார் அனுமன். இந்த அனுமன் தூது – குரங்கு விடு தூதுதான் காளிதாஸருக்கு ஐடியா Idea கொடுத்தது என்பதற்கு மற்றும் ஒரு சான்று வால்மீகி ராமாயண கணையாழி போல காளிதாசரின் ஒவ்வொரு நாடகத்திலும் ஒரு மோதிரம் அல்லது நகை முக்கிய இடம் பெறும் . ஆக அவர் வால்மீகி தாசர் என்பது வெள்ளிடை மலை.
அப்படியானால் ராமாயணத்தில் வரும் அனுமன் தூது விடு தூதுதான் உலகின் முதல் தூதுக் கவிதையா? இல்லை .
ரிக் வேதத்தில் வரும் ‘நாய் விடு தூது’தான் உலகின் முதல் தூதுக் கவிதை. தூது என்பது ஸம்ஸ்க்ருதச் சொல். இதுபற்றி திருவள்ளுவரும் ஒரு அதிகாரம் எழுதியுள்ளார். உலகில் தூது, தூதர், அவர்களுக்கான நெறிமுறை முதலியவற்றை வகுத்தவர்கள் இந்துக்கள்தான் என்பது ரிக்வேதம் முதல் தாரா, தாரா வந்தாரா, சங்கதி ஏதும் சொன்னாரா என்ற தமிழ் சினிமாப்பாட்டு வரை உள்ள பாடல்கள் உறுதி செய்கின்றன.
முதலில் எழுத்து வடிவில் வந்தது மஹாபாரதமா அல்லது ராமாயணமா என்பதில் இருவேறு கருத்துக்கள் உள்ளன. எதுவாயினும் மஹாபாரதத்தில் உள்ள அன்னம் விடு தூது மிகவும் அறியப்பட்ட தூது ஆகும். நளன் , அந்தப் பறவை மூலம் தமயந்திக்குத் தூது விடுவதும் உடனே தமயந்தி பதில் அனுப்புவதும் மஹாபாரத நளோபாக்கியானத்தில் வருகிறது
xxx
ரிக்வேதம் உலகின் பழமையான நூல்; உலகின் முதல் கவிதைத் தொகுப்பு நூல். அதில் சரமா என்ற நாய் தூது போகும் செய்தி வருகிறது. கிரேக்க நாட்டில் அது ஹர்மஸ் (Hermes) என்ற பெயரில் வருகிறது; கிரேக்க , பாரசீக மொழிகளில் ‘ச’ என்னும் எழுத்து இல்லாததால் ‘சிந்து’ என்பதை ‘ஹிந்து’ என்றனர்; ‘சரமா’ என்பதை ‘ஹரமா , ஹெர்மஸ்’ என்றனர்.
சரமா தூது, அதற்கு லஞ்சம் கொடுக்க நடந்த முயற்சிகள் பற்றி முன்னரே எழுதியுள்ளேன் (இணைப்புகளைக் காண்க)
xxx
தமிழிலும் ஸம்ஸ்க்ருத்திலும் தூது இலக்கியம் எந்த அளவுக்கு வளர்ந்தன என்பதை எனக்கும் முன்னரே பலர் பட்டியலிட்டுள்ளனர். அவற்றின் சுருக்கத்தை மட்டும் காண்போம்:-
சங்க காலத்தில் பெண்கள், தன் காதலன் வருகைக்காக காத்திருக்கும் போது , உயிருள்ள பிராணிகள் பறவைகளுடன் பேசுவார்கள்; உயிரற்ற ஜடப்பொருள்களுடனும் பேசுவார்கள். நாய், குரங்கு முதலியவற்றைத் தொடர்ந்து காளிதாசன் மே கத்துடன் பேசியதைக் கண்டோம் ; தமிழர்களும் இந்த உத்தியைக் கடைப்பிடித்தனர்.
மேக தூதம் போலவே எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் ஜம்பு கவி என்பவர் ‘சந்திர தூத’ இயற்றினார். 12-ம் நூற்றாண்டில் தோயி (Dhoyi) என்ற கவிஞர் பவன தூத (காற்று விடு தூது ) இயற்றினார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் , வங்காளி , கன்னடம் முதலிய மொழிகளிலும் தூத காவியங்கள் மலர காளிதாசன் வழிவகுத்தார். தூத அல்லது சந்தேச என்ற சொல் காவியங்களில் பயன்படுகிறது . 15-ம் நூற்றாண்டில் உத்தண்ட கவி என்பவர் கோகிலா ஸந்தேசம் (குயில் விடு தூது) இயற்றினார் . இது காஞ்சி நகரிலிருந்து கேரளத்தில் உள்ளவருக்கு விடப்பட்ட காதல் செய்தி.
xxx
காளிதாசனில் உள்ள விஞ்ஞான அணுகுமுறையை மற்ற தூத காவியங்களில் காண முடியாது.
காளிதாசன் உலகின் முதல்Tourist Guide டூரிஸ்ட் கைடு ; போகும் வழியில் உள்ள நகரங்களையும் காடு மலைகளையும் வருணித்து படிப்போருக்கு பூகோள, வரலாற்றுச் செய்திகளை அளிக்கிறான் .
மேலும் அவன்தான் முதல் பயணக்கட்டுரை (Travelogue Writer) எழுதியவன் என்றும் சொல்லலாம். மஹாபாரதம், ராமாயணத்தில் இது போன்ற வருணனைகள் இருந்தாலும் புராணக்கதைகளும் நம்ப முடியாத விஷயங்களும் இருக்கும்.
காளிதாசன் வானிலை இயல் மன்னன் (Meteorologist) . முதல் முதலில் (Mapped South West Monsoon) தென் மேற்குப் பருவக்காற்று விந்திய மலை முதல் இமய மலை வரையே எந்தப் பாதையில் செல்கிறது என்பதையும் காட்டுகிறான். பறவைகள் குடியேற்றம் (Bird Migration) பற்றியும் காளிதாசன் செல்கிறான் . பிற் காலத்தில் புறநானூற்றுப் புலவர் முதல் சத்திமுற்றத்துப் புலவர் வரை “நாராய், நாராய், செங்கால் நாராய்” (Northward Return Journey of Migratory Birds) என்று பாட வழிவகுத்தார் இவ்வகையில் காளிதாசனின் மேக விடு தூது சிறப்புடைத்து. மேகம் மூலம் ஒரு யக்ஷன் தனது காதலிக்கு அனுப்பிய செய்தியைக் கொண்டது ஆகும்.
xxx
சமய விஷயங்களைப் பரப்பவும் தூத காவியம் பயன்பட்டது. நேமிநாதரை துறவறத்தை விட்டு வீட்டுக்குத் திரும்புமாறு அழைக்கும் சமண மத காவியம் மேக தூதம் என்ற பெயரிலேயே அமைந்துள்ளது. மேரு துங்க என்பவர் எழுதியது இது . கச்சியப்ப முனிவர் எழுதிய கச்சி ஆனந்தருத்திரேசர் , பலபட்டடை சொக்கநாத கவிராயர் எழுதிய அழகர் கிள்ளைவிடு தூது முதலியன தற்காலத்தியவை; அதாவது சில நூற்றாண்டு பழமை உடைத்து
சொக்க நாத கவிராயரின் பண (Money) விடு தூது, புலவர் பெயர் தெரியாத ஹம்ச சந்தேசம், உமாபதி சிவாச்சாரியார் இயற்றிய நெஞ்சுவிடுதூது முதலியன தத்துவ விஷயங்களைப் பேசின. அரசியலிலும் தூது புகுந்து ‘காந்தி விடு தூது’ நூலைத் தோற்றுவித்தது .
சினிமாப் பாடல்களிலும் பறவைகளிடம் காதலியர் பேசி தூது விடும் காட்சியைக் காண்கிறோம். தமிழ் மொழியில் எண்பதுக்கும் மேலான பிற்கால நூல்களும் சம்ஸ்க்ருதத்தில் 60-க்கும் மேலான முற்கால நூல்களும் உள
ரிக் வேத காலத்தில் நாய் விடு தூதாகத் துவங்கிய கவிதை தமிழில் புகையிலை (Tobacco) விடு தூதுவரை பரவியது . இந்தப் புரட்சிக்கு வித்திட்ட காளிதாசனை எவரும் மறக்க முடியாது .
சரமா | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › சர…
பாணீக்கள் என்போர் லஞ்சம் கொடுக்க முன்வந்தபோது இந்திரனின் தூதராகச் சென்ற நாய் சரமா …
சரமேயஸ் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › சர…
25 Jun 2015 — 6.பாணிக்கள், இந்திரனின் பசுக்களைத் திருடிச் சென்று குகைகளில் வைத்தனர். சரமா …
–subham-#
TAGS- தூத காவியங்கள், மேகதூதம், காளிதாசன், சரமா , ரிக்வேதம், நாய், சங்க இலக்கியம் , தூது, Messenger Poems