Tirukkural Calendar from Sri Lanka year 1915

 Tirukkural Calendar from Sri Lanka year 1915

–subham–

tags- Tirukkural, calendar, Tirunavukkarasu, colombo publication, year 1915

GNANAMAYAM 9th  November 2025 BROADCAST PROGRAMME

 GNANAMAYAM 9th  November 2025 BROADCAST PROGRAMME

dr t undari

news

S Suryanarayanan onMuthuswamy Dikshitar K

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 12 PM GMT

Indian Time 5-30 pm (evening)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer -Dr Subbalakshmi Nagarajan

***

NEWS BULLETIN

VAISHNAVI ANAND and LATHA YOGESH from London present World Hindu News in Tamil

****

Mrs Brhannayaki Sathyanarayanan speaks on Viththuvakkodu Temple in Kerala (Vaishnava Divyakshetram)

***

Talk by Prof. S Suryanarayanan on

Muthuswamy Dikshitar Kritis

****

SPECIAL EVENT-

Talk on Seevaka Chintamani, Tamil Epic

Women in Seevaka Chintamani

By

Dr. Thiripura Chudamani

Professor in Tamil, Author

 ******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 9th  November 2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் — Dr Subbalakshmi Nagarajan.

***

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்  வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் — திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் சொற்பொழிவு– தலைப்பு    கேரளாவில் உள்ள வித்துவக்கோடு ஆலயம், (108 வைணவ திவ்ய தலங்களுள் ஒன்று.)

****

தமிழ்ச் சொற்பொழிவு

பேராசிரியர் எஸ் சூர்யநாராயணன்

தலைப்பு- முத்து சுவாமி தீட்சிதரின் கிருதிகள்

***

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு– தலைப்பு-    சீவக சிந்தாமணியில் பெண்கள் 

பேசுனர் –  டாக்டர் திரிபுர சூடாமணி

பேராசிரியைநூலாசிரியர்

—subham—

Tags- Gnanamayam, Broadcast, 9-11-2025, Vaishnavi Anand, Dr Tripurasundari

GNANAMAYAM 9th  November 2025 BROADCAST PROGRAMME

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 12 PM GMT

Indian Time 5-30 pm (evening)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer -Dr Subbalakshmi Nagarajan

***

NEWS BULLETIN

VAISHNAVI ANAND and LATHA YOGESH from London present World Hindu News in Tamil

****

Mrs Brhannayaki Sathyanarayanan speaks on Viththuvakkodu Temple in Kerala (Vaishnava Divyakshetram)

***

Talk by Prof. S Suryanarayanan on

Muthuswamy Dikshitar Kritis

****

SPECIAL EVENT-

Talk on Seevaka Chintamani, Tamil Epic

Women in Seevaka Chintamani

By

Dr. Thiripura Chudamani

Professor in Tamil, Author

 ******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 9th  November 2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் — Dr Subbalakshmi Nagarajan.

***

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்  வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் — திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் சொற்பொழிவு– தலைப்பு    கேரளாவில் உள்ள வித்துவக்கோடு ஆலயம், (108 வைணவ திவ்ய தலங்களுள் ஒன்று.)

****

தமிழ்ச் சொற்பொழிவு

பேராசிரியர் எஸ் சூர்யநாராயணன்

தலைப்பு- முத்து சுவாமி தீட்சிதரின் கிருதிகள்

***

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு– தலைப்பு-    சீவக சிந்தாமணியில் பெண்கள் 

பேசுனர் –  டாக்டர் திரிபுர சூடாமணி

பேராசிரியைநூலாசிரியர்

—subham—

Tags- Gnanamayam, Broadcast, 9-11-2025, Vaishnavi Anand, Dr Tripurasundari

ஞானமயம் வழங்கும் (9- 11 -2025)  உலக இந்து செய்திமடல் (Post No.15,169)

Written by London Swaminathan

Post No. 15,169

Date uploaded in London –  10 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்.

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்துவைஷ்ணவி ஆனந்த்த்தும்  லதா  யோகேஷும்  வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் மாதம் இரண்டாம்  தேதி , 2025-ம் ஆண்டு

****

முதலில் தேசீயச் செய்திகள்

வந்தே மாதரம் பாடல் வரிகளை ஜவஹர்லால் நேரு… நீக்கினார்!: பிரதமர் நரேந்திர மோடி பகிரங்க குற்றச்சாட்டு

“தேசபக்தி பாடலான வந்தே மாதரத்தில் இடம் பெற்றிருந்த முக்கிய வரிகள், மறைந்த முன்னாள் பிரதமர் நேருவால் வேண்டுமென்றே வெட்டி துாக்கி எறியப்பட்டன. அதுவே பிரிவினைக்கான விதைகளை விதைத்து, பிளவுபடுத்தும் மனப்பான்மையை உருவாக்கி, நாட்டுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியது,” என, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.

வங்க மொழி கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, ‘வந்தே மாதரம்’ பாடலை, 1875 நவ., 7ல், அட்சய நவமி நாளில் எழுதினார். சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய இந்த பாடல், ‘ஆனந்த மடம்’ என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த பாடல் எழுதப்பட்டு, 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், நாடு முழுதும் அடுத்த ஓராண்டுக்கு கலைநிகழ்ச்சிகளை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

சிறப்பு தபால் தலை இதன் ஒருபகுதியாக, தலைநகர் டில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார்.

வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டு, 150 ஆண்டுகளானதை குறிக்கும் வகையில், சிறப்பு தபால் தலை மற்றும் நாணயத்தை அவர் வெளியிட்டார். தேசிய கலைஞர்களால் பாடப்பட்ட, ‘வந்தே மாதரம்’ பாடலையும் அவர் கேட்டு மகிழ்ந்தார்.

நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:

வந்தே மாதரம் பாடல், நாட்டின் சுதந்திர போராட்டத்தின் குரலாக ஒலித்தது. அது, ஒவ்வொரு இந்தியரின் உணர்வையும் வெளிப்படுத்தியது. ஆனால் துரதிருஷ்டவசமாக, 1937ல், வந்தே மாதரம் பாடலில் இடம் பெற்றிருந்த சில முக்கிய வரிகள், வெட்டி துாக்கி எறியப் பட்டு, அதன் ஆன்மா அகற்றப்பட்டது.

வந்தே மாதரம் பாடலை பிளவுபடுத்திய செயலே, பிரிவினைக்கான விதைகளையும் விதைத்தது. நாட்டை கட்டமைக்கும் இந்த மஹா மந்திரத்திற்கு ஏன் இந்த அநீதி இழைக்கப்பட்டது என்பதை, இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும்.

வந்தே மாதரம் என்பது ஒரு மந்திரம்,. இது பாரத அன்னை மீதான பக்தி வழிபாடு. இது, வரலாற்றுடன் நம்மை இணைக்கிறது. நம் எதிர்காலத்திற்கு புதிய தைரியத்தை அளிக்கிறது. இந்தியர்களான நாம் அடைய முடியாத எந்த இலக்கும் இல்லை.. என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்

வந்தே மாதரம்’ பாடல் எழுதப்பட்டு, 150 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி ஓராண்டு கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விழா நவம்பர் 7- ஆம் தேதி துவங்கி 2026ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது.

****

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டையொட்டி ஆர்எஸ்எஸ் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

1896-ல் தேசிய கவி ரவீந்திரநாத் தாகூரின் இனிமையான இசையில் பாடப்பட்ட வந்தே மாதரம் பாடல், தேசத்தின் ஆன்மாவின் குரல், பிரகடனம் மற்றும் உணர்வாக மாறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்வயம்சேவகர்கள்‌ உட்பட அனைவரும்‌ வந்தே மாதரத்தின்‌ 150-வது ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்‌எஸ்‌எஸ்‌ அழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

****

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம்

நாடு முழுவதும் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் வழங்கப்படும் என தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.

திருப்பதி திருமலையில் தேவஸ்தானத்தின் மாதந்திர கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், திருமலையில் உள்ள உணவகங்களில் நூடுல்ஸ், பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுகளுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என தெரிவித்தார்.

****

ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்கம்: தமிழக ஜீயர்கள், ஆச்சாரியா புருஷர்கள் பங்கேற்பு

பகவத் ராமானுஜரின் பீடங்களை ஒருங்கிணைத்து, தென்னாச் சாரியார் சம்பிரதாய சபை சென்னையில் துவக்கப்பட்டது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த ஜீயர்கள், ஆச்சாரியா புருஷர்கள் ஒரே மேடையில் பங்கேற்றனர். வைணவ ஆச்சாரியார் ராமானுஜர், வானமாமலை, திருக்கோஷ்டியூர் நம்பி, திருக்கோவிலுார், ஆழ்வார்திருநகரி பிள்ளான், தொட்டாசார், எம்பார், ஆளவந்தார் உள்ளிட்ட 74 பீடங்களை நியமித்தார்.

இந்த 74 பீடங்கள், துவங்கிய காலகட்டத்தில் இருந்தே ஒருங்கிணைக்கப்படாமல் இருந்தன. பல்வேறு காலகட்டங்களில் ஒருங்கிணைக்கும் முயற்சியில் பல ஜீயர்கள் ஈடுபட்டனர்.

டாக்டர் வெங்கடேஷின் உபன்யாசத்துடன் விழா துவங்கியது. ஒரே மேடையில் வேதவியாச சுதர்சன பட்டர் சுவாமிகள், காஞ்சி பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸாச்சாரிய சுவாமிகள், திருமலை அநந்தாண்பிள்ளை அக்கா ரக்கனி ராமானுஜாசாரியார் சுவாமிகள்…

விழா சிறப்பு மலரை, திருக்கோவிலுார் எம்பெருமானார் ஜீயர் வெளியிட, திருவெள்ளறை மேலத்திருமாளிகை அம்மாள் ஸ்ரீ விஷ்ணுசித்தன் சுவாமிகள் பெற்றுக் கொண்டார்.

பிற்பகல், ஜீயர்கள் மற்றும் ஆச்சாரியா புருஷர்கள் ஒருங்கிணைந்து, தென்னாச்சாரியார் சம்பிரதாய சபையை வழிநடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர் அமெரிக்கை நாராயணன் மற்றும் விழாக் குழுவினர்களான கல்யாணி நாராயணன், மல்லி சதீஷ்குமார், சவுரிராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

****

பட்டீஸ்வரம் கோவிலில் பணிபுரிய ஈ.வெ.ரா.பற்றி தெரிய வேண்டுமாம்அறநிலையத்துறையின் அடாவடித்தனம்

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நேற்று நடந்த நேர்காணலில், 375 பேர் பங்கேற்றனர். அவர்களிடம் கோவில் உதவி கமிஷனர் மற்றும் அதே அந்தஸ்திலுள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் கேள்விகளை கேட்டனர்.

அப்போது, ‘ஈ.வெ.ரா. பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள்? ஈ.வெ.ரா.வின் பொன்மொழிகளில் உங்களை கவர்ந்தது எது? திராவிட மாடல் அரசு, தமிழகத்தில் ஆன்மிகத்திற்கு செய்த பணிகள் என்ன?’ போன்ற கேள்விகளை கேட்டனர். இதற்கு பதில் சொல்ல முடியாமல் பங்கேற்ற பலரும் தடுமாறினர். நேர்காணலில் பங்கேற்றவர்கள் கூறுகையில், ‘ஆன்மிகத்துக்கும், ஈ.வெ.ரா.வுக்கும் என்ன சம்மந்தம்? கடவுள் இல்லை என்று சொன்னவரை பற்றி, வேலை தேடி வருவோரிடம் கேள்வி எழுப்பினால் எப்படி? கோவில் சம்மந்தமாகவோ, சைவ சமயம் சார்ந்த அல்லது ஆன்மிகம் சார்ந்த கேள்வி எழுப்பினால், நாங்கள் பதில் சொல்லியிருப்போம்’ என்றனர்.

 *****

சனாதனத்தை டெங்கு, மலேரியா என தாழ்த்தி பேசினாலும் அழிக்க முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!

சனாதனத்தை டெங்கு, மலேரியா என தாழ்த்தி பேசினாலும் அழிக்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் 27 ஆவது மடாதிபதி, மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் மணிவிழா மாநாடு நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், சனாதனம் என்ற அடிப்படையை கொண்டு பாரதம் கட்டமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாரத நாட்டில் சனாதன கொள்கையை அழிய விடாமல் பாதுகாப்பதில் ஆதீனங்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் கூறினார். ஐந்தாயிரம் ஆண்டுகளாக பாரத நாட்டில் சனாதனம் பாதுகாக்கப்பட்டு வருவாதாகவும், சனாதனத்தை டெங்கு, மலேரியா என தாழ்த்தி பேசினாலும் அழிக்க முடியாது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

தருமபுரம் ஆதீன மடாதிபதியின் மணிவிழா மாநாட்டில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, விழா மலரை வெளியிட்டதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தருமபுரம் ஆதீனத்தின் 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் 60 வயதை எட்டியதை அடுத்து மணிவிழா மாநாடு நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த விழாவில் குன்றக்குடி ஆதீன பொன்னம்பல அடிகளார், திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் சபாபதி தம்பிரான் சுவாமிகள், மேகாலயா முன்னாள் நீதிபதி வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

***

திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வாங்க: ஹிந்து முன்னணி அழைப்பு

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை:

முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக நடந்து வந்தது.

இரண்டாம் உலகப்போரின் போது, பாதுகாப்பு காரணமாக, ஆங்கிலேய அரசு அதை தடை செய்தது. அதனால், கோவில் முன்புறம் உள்ள துாணில் தீபம் ஏற்றப்பட்டது. அந்த நடைமுறை இதுவரை மாறவில்லை.

மலை மீதுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, ஹிந்து முன்னணி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. மறைந்த ஹிந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் நடத்திய சட்டப் போராட்டம் இதற்கான தீர்ப்பைப் பெற்றுத் தந்தது. ஆனால், தீர்ப்பு வந்து பல ஆண்டுகளாகியும் கோவில் நிர்வாகம் நடைமுறைப் படுத்தவில்லை.

வழிபாடு நம் உரிமை; நீதிமன்றமும் சட்டப்படி அதை உறுதி செய்துள்ளது. தீபத்துாணில் தீபம் ஏற்றுவதை கோவில் நிர்வாகம் பின்பற்றாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

இதை மாற்றும் வகையில், வரும் திருக்கார்த்திகை தினத்தில் திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றி வழிபட, முருக பக்தர்கள், ஆன்மிக குழுவினர், பாத யாத்திரை, காவடி குழுவினர் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

***

மருதமலையில் 184 அடி முருகன் சிலை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் சரமாரி கேள்வி

கோவை மாவட்டம், மருதமலையில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடம், அடிப்படை வசதிகள் போன்ற முழு விபரங்களுடன், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவை வனப்பகுதியில் உள்ள யானைகள் வழித்தடமான மருதமலை, சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியமான பகுதி. நீலகிரி வனப்பகுதியில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்ல யானைகள், இப்பகுதியை பாதையாக பயன்படுத்துகின்றன.

இந்த பகுதியில், 110 கோடி ரூபாய் செலவில், 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைக்கப்பட உள்ளது. இதை எதிர்த்து, சென்னை கோட்டூர் கார்டன் பகுதியை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தனர்.

அதில், ‘மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம், 184 அடி உயர முருகன் சிலை அமைப்பதற்கு, கடந்த மாதம் 9ல் தடையில்லா சான்று பெற விண்ணப்பம் செய்யப்பட்டு உள்ளது. இப்பகுதியில் சிலை அமைவதால், யானை வழித்தடங்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது’ என கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகள் கூறியதாவது:சிலை அமைவதற்கு, இந்த நீதிமன்றம் தடையாக இருக்காது. அதேநேரம், வனப்பகுதியில் இவ்வளவு உயரத்தில் சிலை அமைக்கப்படும்போது, அதை பார்வையிட எவ்வளவு பேர் வருவர்; குறைந்தபட்சம் 1,000 கார்களாவது வரும்; அவற்றை எங்கு நிறுத்துவீர்கள்?

அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகள் செய்ய, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது; அவர்கள் விட்டு செல்லும் குப்பை எவ்வாறு அகற்றப்படும்?

இவர்கள் விட்டு செல்லும் திடக்கழிவுகளால், நாளடைவில் வனமே மறைந்து விடாதா? இந்த திட்டத்தால், வனப்பகுதிக்கு, எவ்வித தொந்தரவும் ஏற்படக் கூடாது.

இங்கு 184 அடி உயர சிலை அமைத்தால், அதை சுற்றிய பகுதிகள் நகரமயமாகாதா; பல்வேறு காரணங்களால் வனப்பகுதிகள் சுருங்கி வருகின்றன. இதன் காரணமாக, மனித- – விலங்குகள் மோதல் நிகழ்வுகளும் நடக்கின்றன. போதிய வசதிகள் செய்யப்படவில்லை எனில், நெரிசல் சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், ”நீதிமன்றம் கோரிய விபரங்களுடன் விரிவான அறிக்கையை, அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்கிறோம்,” என்றார்.

இதை ஏற்ற நீதிபதிகள், ‘கூட்ட நெரிசல் மேலாண்மை நிர்வகிக்கும் முறை, சிலை அமைய உள்ள சரியான இடம், பார்க்கிங் போன்ற அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்த முழு விபரங்களுடன், அறநிலையத் துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்பின், சம்பந்தப்பட்ட பகுதியில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தொடர்பாக, அத்துறை நிபுணர்கள் ஆய்வு செய்வது குறித்து, இந்த நீதிமன்றம் முடிவு செய்யும்’ என உத்தரவிட்டு, விசாரணையை டிச., 5க்கு தள்ளிவைத்தனர். அதுவரை, பணிகளை துவக்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

***

பீஜிங்கில் ராமாயண நடன நாடகம்: அரங்கேற்றிய சீன கலைஞர்கள்

பீஜிங்: சீனாவில் ராமாயணத்தை அடிப்படையாக கொண்ட நடன நாடகத்தை கலைஞர்கள் அரங்கேற்றினர்.

பிரபல சீன அறிஞர் மறைந்த பேராசிரியர் ஜி சியான்லின் எழுதிய ராமாயணத்தின் மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு நடன நாடகமான “ஆதி காவ்யா-முதல் கவிதை”யை சீன நடனக் கலைஞர்கள் குழு அரங்கேற்றியது.

இது குறித்து இந்திய துாதரகம் பதிவிட்டுள்ளதாவது:

சீன பரதநாட்டிய நிபுணர் ஜின் ஷான்ஷான் இயக்கிய இந்த நாடகம், 50க்கும் மேற்பட்ட திறமையான உள்ளூர் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு, பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை காண திரண்டு வந்த பார்வையாளர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர்.

இந்த நடன நாடகம் இரண்டாவது முறையாக நடத்தப்பட்டுள்ளது. இந்த வரலாற்று நிகழ்ச்சி முதன் முதலில் கடந்த ஜனவரி-2025 ல் ஷூனி கிராண்ட் தியேட்டரில் நடைபெற்றது.. இவ்வாறு இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.

***

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா  யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு நவம்பர் மாதம் 16–ம்  தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் 12 மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

—SUBHAM—-

Tags – World Hindu News, 9-1I-2025, ஞானமயம் ஒளிபரப்பு, வைஷ்ணவி,

ஆலயம் அறிவோம்! திருவித்துவக்கோடு (Post.15,168)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 15,168

Date uploaded in London – 10 November 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

லண்டனிலிருந்து 9-11-25 அன்று ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை 

ஆலயம் அறிவோம்! 

வழங்குவது ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம். 

தருதுயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரணில்லை

விரை குழுவும் மலர்ப்பொழில் சூழ் விற்றுவக்கோட்டம்மானே!

அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன்

அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்றிருந்தேனே!

                                                                                      – குலசேகராழ்வார் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றான திருவித்துவக்கோடு திருத்தலமாகும்.

இத்தலம் கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி என்னும் நகருக்கு அருகில் உள்ளது.

 மூலவர்: உய்யவந்த பெருமாள், அபயபிரதன் (தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம்)

 தாயார்: வித்துவக்கோட்டுவல்லி, பத்மாஸனி நாச்சியார்

  தீர்த்தம்: சக்ர தீர்த்தம்,

  விமானம் : தத்வ காஞ்சன விமானம்

 திருவித்துவக்கோடு என்னும் இத்தலம் திருமிற்றக்கோடு என்றும் திருவீக்கோடு என்றும் அழைக்கப்படுகிறது.

 இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறுகள் பல உண்டு.

அம்பரீஷ சக்ரவர்த்தி பரமபதநாதனின் வ்யூக அவதாரத்தை சேவிக்க வேண்டுமென்று எம்பெருமானை இந்த இடத்திலிருந்து பிரார்த்தித்தான்.

உடனே எம்பெருமான் நான்கு வடிவம் கொண்டு வ்யூக வடிவத்தை அவனுக்கு இங்கு காட்சி கொடுத்து முக்தியும் அளித்தார். இதனால் இந்தத் தலத்திற்கு நாலுமூர்த்தி கோவில் என்ற பெயரும் ஏற்பட்டது.

 அம்பரீஷன் இங்கு முக்தி அடைந்ததால் வைகுண்டப் பதவிக்கு வித்தாக அமைந்த இந்தத் தலம் வித்துவக்கோடு என்ற பெயரைப் பெற்றது.

 திருமாலுக்கும் சிவனுக்கும் இங்கு ஒரே இடத்தில் சந்நிதி இருக்கிறது.

இரு மூர்த்திகளும் கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தைக் காணலாம்.

பஞ்ச பாண்டவர்கள் தங்கள் வனவாச காலத்தில் இங்குள்ள நீளா நதிக்கரையோரம் ஒரு அழகிய இடத்தைக் கண்டனர்.  அந்த அழகிய இடத்தில் சில காலம் தங்க தீர்மானித்தனர். நித்ய வழிபாட்டிற்காக ஆலயத்தையும் விக்ரஹங்களையும் ப்ரதிஷ்டை செய்தனர்.\

முதலில் மஹாவிஷ்ணுவை அர்ஜுனன் ப்ரதிஷ்டை செய்ய மற்றவர்களும் விக்ரஹங்களை ப்ரதிஷ்டை செய்து தங்கள் வனவாச காலத்தில் பூஜை செய்தனர்.

நடுவில் அமைந்துள்ள மூர்த்தியை தர்மரும், மேற்கில் அமைந்துள்ள மூர்த்தியை அர்ஜுனனும், இடப்புறம் உள்ள மூர்த்தியை பீமனும், வலப்புறம் உள்ள மூர்த்தியை நகுல சகாதேவர்களும் பூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது.

பிற்காலத்தில் பாண்டிய மன்னன் ஒருவன் கோவிலின் சுற்று மதில்களை நிர்மாணித்தான்.

நெடுங்காலமாக நான்கு மூர்த்திகள் கொண்ட தலமாகவே இது இருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாட்டைச் சேர்ந்த ரிஷி ஒருவர் காசிக்குச் சென்று அங்கேயே தங்கி இருந்தார். அவரது அன்னையார் மரணத் தருவாயில் இருப்பதாக அவருக்குச் செய்தி கிடைக்கவே அவர் தாயாரைப் பார்க்க திரும்பி வந்தார். அப்போது அவரது பக்தியினால் மகிழ்ந்த காசி விஸ்வநாதர் அந்த முனிவரது குடையில் மறைந்து வந்ததாக வரலாறு கூறுகிறது.

அவர் இந்தத் தலத்திற்கு வந்த போது நீளா நதியில் நீராடச் சென்றார்.

நான்கு மூர்த்திகளுக்கு முன்புறம் இருந்த ஒரு பலிபீடத்தில் தன் குடையை வைத்து விட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்க்கும் போது அந்த பலிபீடம் நான்காக வெடித்து அந்த வெடிப்பிலிருந்து ஸ்வய,ம்புவாக ஒரு சிவலிங்கம் தோன்றி இருந்தது. குடையும் மறைந்து விட்டது.

காசி விஸ்வநாதரே இங்கிருந்த நான்கு மூர்த்திகளோடு தங்குவதற்காக வந்துவிட்டதாகவும் அதற்கு அந்த முனிவர் காரணமாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது. பிற்காலத்தில் சிவலிங்கத்தைச் சுற்றி ஒரு கோவில் கட்டப்பட்டு விட்டது.

ஆக இது ஐந்து மூர்த்தி தலமாக மாறியது. இதன் பெயரும் ஐந்து மூர்த்தி திருக்கோவில் என்று மாறியது.

இத்தலத்தைப் பற்றி குலசேகராழ்வர் அற்புதமான பத்து பாக்களில் மங்களாசாஸனம் செய்துள்ளார். 

நடுக்கடலில் ஒரு பறவை அகப்பட்டுக் கொண்டது. எங்கும் கடல் நீர்!

 கரையோ, காடோ, நகரமோ தென்படவில்லை. அப்போது அங்கு ஒரு கப்பல் வந்து கொண்டிருந்தது. கப்பலுக்கு அருகே சென்ற பறவை அதைச் சுற்றிச் சுற்றி வந்தது. அது நாடாகவோ, தனக்குரிய இடமாகவோ அதற்குத் தென்படவில்லை. பின்னர் தொலைவில் சென்றது.

வேறு வழியின்றி மீண்டும் கப்பலுக்கு வந்து அதன் பாய்மரக்கம்பத்தின் கூம்பில் வந்து அமர்ந்தது. அதே போல, பெருமாளே, எனக்கு உன் திருவடியை விட்டால் வேறு வழியில்லை. மானிடக் கடலில் சிக்கித் தவிக்கும் என்னை நீயே காப்பாற்ற வேண்டும். நின் திருவடியே சரணம் என்று கூறுகிறார் ஆழ்வார்.

“எங்கும் போய்க் கரை காணா

தெறிகடல் வாய் மீண்டேயும்

வங்கத்தின் கூம்பேறும்

மாப்பறவை போன்றேனே”

என்ற அவரது பாசுரம் உள்ளத்தை நெகிழ வைக்கும் ஒன்று.

இப்படி உயரிய உவமானங்களுடன் அவர் பெருமாளைத் துதிப்பது எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியதாக அமைந்துள்ளது.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் உய்ய வந்த பெருமாளும் தாயார் வித்துவக்கோட்டுவல்லியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

நன்றி! வணக்கம்!!

**

அதிசய அனுபவத்தால் கண்டுபிடிக்கப்பட்ட ஈ ஈ ஜி (E E G)! (Post.15,167)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,167

Date uploaded in London –   10 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

18-8-25 அன்று கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

அதிசய அனுபவத்தால் கண்டுபிடிக்கப்பட்ட ஈ ஈ ஜி (E E G)! 

ச. நாகராஜன்

 இன்று மருத்துவத் துறையில் பல்வேறு வியாதிகளுக்கும் சிகிச்சை அளிப்பதற்கு முன், ஈஈஜி எனப்படும்  எலெக்ட்ரோ என்செபலோகிராம் (Electroencephalogram) மூளையில் உள்ள மின்துடிப்புகளை அளக்க உதவும் ஒரு வழிமுறை.

லட்சக்கணக்கான பேர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் இது எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? ஹான்ஸ் பெர்கர் (Hans Berger தோற்றம் 21-5-1873 மறைவு 1-6-1941) என்ற ஒரு ஜெர்மானிய விஞ்ஞானியின் விசித்திரமான அனுபவத்தினால் தான்!

பத்தொன்பது வயது ஆகும் சமயத்தில் அவர் ஜெர்மனியில் உள்ள வுர்ஸ்பெர்க்கில் ராணுவப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு நாள் அவர் ஒரு குதிரை மீது சவாரி செய்து போய்க் கொண்டிருந்தார்.

திடீரென்று குதிரைகள் தடுமாற அவர் ஒரு வண்டியின் சக்கரங்களில் விழுந்து நசுங்க இருந்தார். நல்லவேளையாக குதிரைகள் சடக்கென நின்றன. கீழே விழுந்த அவர் சின்னக் காயங்களுடன் தப்பினார்.

 அன்று மாலை அவரது தந்தையிடமிருந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கேட்டு ஒரு தந்தி வந்தது. இப்படி ஒரு தந்தி அவருக்கு முன்னும் வந்ததில்லை. பின்னாலும் வந்ததில்லை.

 இதன் காரணத்தை ஆராயப் போனார் பெர்கர். அவர் குதிரை தடுமாறி நிற்கும் போது கீழே விழ இருந்த அதே சமயத்தில் அவரது மூத்த சகோதரிக்கு தனது சகோதரன் ஒரு ஆபத்தில் சிக்கப் போகிறான் என்ற உணர்வு ஏற்பட்டது. உடனே அவர் தனது தந்தையிடம் பெர்கரின் உடல்நலத்தைச் சரிபார்க்குமாறு தூண்ட அவர் தந்தி அடித்து நிலைமையைத் தெரிந்து கொண்டார்.

 இது சுயேச்சையாக செய்தி அனுப்பப்பட்ட ஒரு விசித்திரமான சம்பவம் என்று எழுதிய பெர்கர், அந்த அபாயமான கட்டத்தில் நான் ஒரு டிரான்ஸ்மிட்டர் போலச் செய்தி அனுப்பினேன், அதை எனது சகோதரி ஒரு ரீசீவர் போலப் பெற்று என்னைக் காப்பாற்றினார் என்றார்.

 இதிலிருந்து அவருக்கு எண்ணம் மூலம் செய்தி அனுப்பும் டெலிபதியில் ஒரு ஆர்வம் ஏற்பட்டது. கணிதத்துறையில் சிறந்து விளங்கி வானியல் விஞ்ஞானியாக ஆக விரும்பிய அவர்,  ஜெர்மனியில் ஜீனா பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். ராணுவத்தில் ஒரு வருடப் பயிற்சிக்காகச் சேர்ந்தார்.

 ஆனால் இந்த அனுபவத்திற்குப் பின்னர் அவர் டெலிபதியில் ஆர்வம் கொண்டு உளவியல் படிக்கத் தொடங்கினார்.

மூளை இயல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவர் மூளையில் இயங்கும் மின்அலைகளைப் பார்த்து அதிசயப்பட்டார். 1924ம் ஆண்டு முதன் முதலாக மூளையில் இயங்கும் அலைகளை ரிகார்டு செய்யும்

ஈ ஈ ஜியை அவர் கண்டுபிடித்தார்.

இந்தக் கண்டுபிடிப்பைக் கண்டு வியந்த மருத்துவர்கள் அப்போதிலிருந்து உலகெங்கும் ஈஈஜியை எடுக்கத் தொடங்கினர்.

பால் ப்ரோகா என்பவர் மூளைஉளவியலில் ஒரு நிபுணர். அவர் மூளை எப்படி மொழியை உணர்கிறது என்று ஆராயலானார். நோயாளி ஒருவருக்கு பேசும் சக்தி போய்விட்டது. ஆனால் அவர் மிக புத்திசாலியாரக் இருந்தார். அவரை ‘பேஷண்ட் டாம்’ என்று அனைவரும் கூற ஆரம்பித்தனர். ஏனெனில் அவரால் டாம் என்ற ஒரு வார்த்தையை மட்டுமே கூற முடிந்தது. அவர் இறந்த போது அவரது உடல்கூறை ஆராய்ந்த ப்ரோகா இடது ஃப்ரண்டல் லோபில் இருந்த ஒரு பகுதியே மூளையே மொழியை அறிந்து தகவல் பரிமாற்றத்திற்கு  ஆதாரமாக விளங்குகிறது என்பதைக் கண்டுபிடித்தார்.

இந்தப் பகுதிக்கு ‘ப்ரோகா பகுதி’ (Broca’s Area)  என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

ஏதேனும் ஒரு பெரிய மோசமான சம்பவம் ஒரு நோயாளிக்கு நிகழ்ந்த பின்னர் தான் அவரது மூளை மீது மருத்துவர்களின் கவனம் சென்று கொண்டிருந்த காலத்தில், ஈஈஜி கண்டுபிடிப்பு ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. முன்னாலேயே வரப் போகும் ஆபத்தைத் தடுக்க உதவியது.

இதைக் கண்டுபிடிக்க பெர்கரைத் தூண்டியது அதிசயமான ஒரு டெலிபதி செய்தியின் அனுபவம் அவரது சகோதரிக்கு ஏற்பட்டதால் தான்!

விஞ்ஞானம் வளரும் விதமும் விந்தையானது தான்!

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL இந்துமத கலைச்சொல் அகராதி– Part 13(Post.15,166)

Wax Museum with Ramayana characters.

Written by London Swaminathan

Post No. 15,166

Date uploaded in London –  9 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Following words are added to letter B today:

Bharata, Bharata Muni/Bharatam, mahaBharat,

Bhaarat/am, Bharata naatya , Brhaspati Bhadram, Bhadra kaali, Bharadwaja, Bakasura, Bhima, Bheeshma, Balarama 

Next comes

Benares, Brahmorchava, Bheeja mantra, Brahma suutra (scripture), Brahma Samaaja (movement) , Bel, Basil, Banyan (3 plants) , Brahmaputra,  Brahdeeswar temple/Big Temple, Baali (Indonesia), Bhaashaa (language), Braahmi (script), Brahmaloka, Bhodaayana, Bhaahubali, Bhajrang Dal, Bhairava, Bhattar/Bhattacharya (priest), Bhasa kavi, Bhaana bhatta, Baana, Bhartruhari, Bilhana (five authors) Baadaami (caves), Bhava saagara, , …………

பாரத பரத என்பதை ஆங்கிலத்தில் எழுதும்போது குழப்பம் ஏற்படுகிறது அது நான்கு அல்லது  ஐந்து  விஷயங்களைக் குறிக்கிறது .

(1).பரத/ன் – ராமனின் சகோதரன் ராம லக்ஷ்மண பரத சத்ருக்ன என்று நாள்வரைக் குறிப்பிடுவது வழக்கம். உண்மையில் ராமனுக்கு அடுத்தவர்கைகேயியின் புதல்வர் ராமனுக்காக 14 ஆண்டுகளுக்கு காத்திருந்தவர் .

(2).பரத முனி

சம்ஸ்க்ருதத்தில் ஆறாயிரம் ஸ்லோகங்களில் நாட்டியம்நாடகம் பற்றி நூல் எழுதியவர் . அவர் எழுதிய நூலை (3).பரதம் என்றும் சொல்வர். அவர் சொன்ன படி ஆடும் நாட்டியம் (4)பரத நாட்டியம். அந்தக் கலைக்கு நடராஜன் என்னும் சிவனே அதி தேவதை அல்லது தெய்வம். இப்போது பெரும்பாலும் தமிழ் நாட்டில் பயிலப்படுகிறது . (5).பாரதம் என்பது இந்தியாவின் பழைய பெயர். சகுந்தலையின் புதல்வன் (7)பரதன்  ஆண்டதால் இந்தப்பெயர். இதை மஹாபாரத நூல் செப்புகிறது . தபால்தலைகளிலும் நாணயங்களிலும் ஹிந்தி மொழியில் (8).பாரத் என்று எழுதியிருப்பார்கள் . மஹாபாரத நூலைச் சுருக்கமாகக் குறிப்பிடும்போதும் (9).பாரதம் என்பார்கள்

BHARAT/A is very often confused with four or five different things or persons.

1

Bharata is the brother of Rama, Lakhmana, Satrugna. Bharat is the son of Kaikeyi in Ramayana. He waited for Rama to come back to Ayodhya from the forest.

2 & 3

Bharata Muni is the author of a great book on dance and drama in Sanskrit and the book is called Bharatam.

4 & 5

Bharat or Bhaaratam is the name of India. On postage stamps they write Bharat for India in Hindi. It is named after the great emperor Bharata, son of Shakuntala according to Mahabharat. The same word Bhaarata/m is also used to denote Maha Bharat, the longest epic in the world.

6

Bharata Natyam

A kind of traditional Dance, mostly practised and followed in South India. Lord Nataraja (dancing Shiva) is the patron god of dance.

***

பகாசுரன்

மஹாபாரதத்தில் வரும் அசுரன். ஏகசக்ர என்ற நகரில் வாழ்ந்த பகாசுரன், நாள்தோறும் முறைவைத்து ஒவ்வொரு குடும்பத்திலிருந்து ஒரு மனிதனைத் சாப்பிட்டுவந்தான்  ஒரு பிராமண குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக பீமன் அந்தக் குடும்பத்தின் முறையை ஏற்றுச் சென்று பகாசுரனைத் துவம்சம் செய்தான்.

BAKASURA

Mighty rakshasa, brother of Hidimba lived in the town of Ekachakra terrorising people . Bhima, one of the five Pandavas killed him. Hist tory is in Mahabharata.

***

பலராமன்

கிருஷ்ணனின் அண்ணன் ; ரோகிணியின் மைந்தன்; ரைவத மகாராஜாவின் மகளான ரேவதியை மணந்தவன் ; ஆதிசேஷன் என்னும் பாம்பின் அவதாரம்; மஹாபாரதப் போரில் பங்கேற்காமல் நடு நிலை வகித்து நாடு முழுதும் யாத்திரை சென்று விவசாயத்தைப் பரப்பினார். கண்ணன் மஞ்சள் சட்டைக்காரன்/பீதாம்பரதாரி ; பலராமன் நீலச் சட்டைக்காரன்/ நீலாம்பரதாரி.

BALARAMA

Elder brother of Krishna , son of Rohini . He married Revati, daughter of king Raivata . Considered an avatara/incarnation of snake Adisesha . he spread agriculture throughout India. He wore Blue shirt while his brother Krishna wore yellow shirt.

***

பத்ரம்

பத்திரமாகப் போய்விட்டுவா என்று சொல்லி அனுப்புவது வழக்கம். அதாவது உன்னுடைய பயணம் மங்களமாக அமையட்டும் என்று பொருள். நன்மை, மங்களம், மகிழ்ச்சி, வளமை என்ற பொருளும் உண்டு. ஓம் பத்திரம் கர்னேபி ச்ருணுயாம தேவாஹா என்று துவங்கும் மந்திரம் “ஓ தேவர்களே ! என் காதுகளில் மங்களகரமான சொற்கள் வந்து விழட்டும்”  என்று துவங்குகிறது .

BHADRAM

Means mangala, auspiciousness. Good, happy, prosperous. Auspicious, blessed;

ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः ।

Om Bhadram Karnnebhih Shrnnuyaama Devaah |

 O Devas, May we Hear with our Ears what is Auspicious

***

பத்ர காளி

நம்மை செய்யும் காளி; தென்னிந்தியாவில் அதிகம் வழிபடப்படும் வடிவம்  .

BHADRA KALI , bhadrakaali

Auspicious Kali ; worshipped in south India

***

பரத்வாஜர்

வேதம் ராமாயணம், மஹாபாரதம் புராணங்களில் வரும் மகரிஷி; கோத்ரத்துக்குத் தலைவர்; பல முனிவர்கள் இதே பெயரைத் தாங்கி நின்றதால் இரண்டு இதிஹாசங்களிலும் வருகிறார். துரோணாச் சாரியாரின் தந்தை பெயரும் இதுதான்

BHARADWAJA

A great rishi and founder of a Gotra. Several rishis had this name from Rig Vedic days. His name is in the Ramayana, Mahabharata and puranas. Father of Dronacharya also had this name.

***

பீமன்

பாண்டவர்களில் மிகவும் பலசாலி; எல்லோரையும் பந்தாட வல்லவன். கீசகன், பகாசுரன், துரியோதனன் முதலியோரை எளிதாகக் கொன்ற மஹா பலசாலி;  பெருந்தீனிக்காரன் .

BHIMA

One of the five Pandava brothers; renowned for his super human strength and great appetite. He killed Duryodhana , Bakasura , Keechaka and others.

***

பீஷ்மர்

மஹாபாரதத்தில் பாண்டவர்களாலும்  கெளவர்களாலும்  மதிக்கப்பட்ட மாபெரும் ராஜ தந்திரி . தந்தை சந்தனு, ஒரு மீனவப் பெண்ணைக் காதலித்தவுடன், அவளுடைய நிபந்தனையை ஏற்று, என் வாழ்நாள் முழுதும்  பிரம்மச்சாரியாக இருப்பேன் என்ற மாபெரும் சபதத்தைச் செய்து,  நாட்டுரிமையை விட்டுக்கொடுத்த பெரும் தியாகி. போரில்  சிகண்டி என்ற வீரனின் பின்னால் நின்று பீஷ்மரை அர்ஜுனன்,வீழ்த்தினான் . ஆயினும் மரணத்தின் நாளைத் தேர்ந்தெடுக்கும் வரம் பெற்றிருந்ததால் 56  நாட்களுக்கு அம்புப் படுக்கையில் படுத்திருந்து உயிர் நீத்தார்

BHISHMA

Grandsire and most respected elder statesman; a bachelor in the epic Mahabharata. Symbol of supreme sacrifice. When his father Shantanu fell in love with a fisherwoman, he sacrificed his birth right to the throne. He was killed by Arjuna who stood behind Shikhandi. He had a boon to choose his day of death. So, he remained on a bed of arrows for 56 days and then left the world.

பீஷ்ம அஷ்டமி

பீஷ்மர் உயிர் நீத்த அஷ்டமி நாளில் எல்லோரும் அவருக்காக தர்ப்பணம் செய்வது சம்பிரதாயம்; அவர் சபதம் செய்து பிரம்மச்சரியாகவே வாழ்நாளைக் கழித்ததால் இந்த ஏற்பாடு

BHISHMA Ashtami

Ever year people do tarpan for him on this day because he was a bachelor and had no son to do it. Tarpana is paying obeisance to the departed souls.

***

பிருஹஸ்பதி – வியாழன், ஜூபிட்டர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் தேவர்களுக்கு குரு ; எதிர்ப்புறத்தில், அசுரர்களுக்கு சுக்ராசார்யார் குரு. அவருடைய மகன் கச்சனுக்கும் தேவயானிக்கும்  இடையே நடந்த காதல் இந்தியா முழுதும் பல மொழிகளில் திரைப்படமாக வந்தது.

BRIHASPATI

Teacher of Devas and his counterpart Sukra was the teacher of demons/Asuras. Son of Angiras rishi/seer and father of Kacha. The love story of Kacha and  Devayani is one of the famous film / cinema stories in India

To be continued…………………

Tags- பரத, பாரத, பிருஹஸ்பதி, பரத்வாஜ, பீமன், பீஷ்மர், HINDU DICTIONARY, IN ENGLISH AND TAMIL இந்துமத, கலைச்சொல் அகராதி– Part 13

லலிதா சஹஸ்ர நாமத்தில் வர்ணங்கள்! (Post.15,165)

Written by London Swaminathan

Post No. 15,165

Date uploaded in London –  9 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

முந்தைய கட்டுரைகளில் நாம் லலிதா சகஸ்ரநாமத்தில்நவரத்தினம், நகரங்கள், பூக்கள் முதலியவற்றைப்  பார்த்தோம்   அம்பாளின் வர்ணங்களும் பல நாமங்களில் வருகின்றன ; பொதுவாக, அதிகமாக சிவப்பு நிறத்தை அம்பாளுடன் தொடர்பு படுத்துகிறார்கள் .இதோ சில நாமங்கள்:–

1

சர்வ வர்ணோப சோபிதா என்ற நாமம் தேவியை வர்ணங்களுடன் தொடர்புடுத்திப் போற்றுகிறது.,

எல்லா வர்ணங்களும் உள்ள கலர் சக்கரக் COLOUR WHEEL காற்றாடியைச் சுழற்றினால்-வேகமாகச் சுற்றினோமானால் — வர்ணங்கள் மறைந்து வெள்ளை நிற ஒளி மட்டுமே மிஞ்சும்.   .

இன்னும் ஒரு பரிசோதனை – முப்பட்டைக் கண்ணாடி என்னும் பிரிஸ்ம் PRISM வழியாக வெண்மையான சூரிய ஒளிக்கிரணத்தைச் செலுத்தினால் திரையிலோ சுவற்றிலோ  வான வில்லின் அற்புதமான ஏழு நிறங்களையும் காணலாம்.

இவைகளைக் கருத்திற்கொண்டு அம்பளை நிறங்களுள்ளவள்  என்றும் நிறங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட வெண்மை நிறம் — அதாவது ஜோதியாக ஒளிர்பவள் என்றும் வியாக்கியானம் செய்துள்ளார்கள்.

(வர்ணம் என்றால் எழுத்து, அக்ஷரம் என்ற பொருளும் உண்டு).

***

ரக்த வர்ணா BLOOD RED

சஹஸ்ரநாமத்தில் வரும் பூக்களைப் பற்றிய கட்டுரையில் ஜபாகுஸுமம் HIBISCUS ROSASINENSIS என்னும் செம்பருத்திப் பூவினைக் கண்டோம். அதை நினைவுபடுத்தும் வகையில் அம்பாளின் மற்றோர் நாமம் வருகிறது ; அது ரக்த வர்ணா என்பதாகும். அம்பாளின் உதடுகள், கன்னங்கள், உடல் முழுதும் சிவப்பு வர்ணமாகப் பார்க்கிறார்கள் முற்றும் துறந்த முனிவர்களும் யோகிகளும் ; நாமும் கூட சூரியனை – ஒளிப்பிழம்பினை- வெள்ளை நிறத்தில், மஞ்சள் நிறத்தில், சிவப்பு நிறத்தில் காண்கிறோம் அல்லவா?

***

சர்வாருணா


இதற்கு முன்னர் சர்வாருணா என்ற நாமத்திற்கு சர்வ+அருணா என்று பொருள் கொண்டு அவளை அருண நிறத்தவள் — அதாவது ஆடை, ஆபரணம், மேனி, மலர் ஆகியன எல்லாமே செந்நிறம் என்று  உரை கண்டுள்ளனர்

நீலகண்ட தீட்சிதர் எழுதிய அற்புதமான அம்பாள் துதியான ஆனந்த சாகர ஸ்வத்தில் வரும் பாடலையும் உரைகாரர்கள் எடுத்தாள்கின்றனர் . அதில்,

குங்குமப்பூ அலங்கரிக்கும் திருமேனி, சிவப்பு வர்ண ஆபரணங்களை அணிந்து அழகுடன் காட்சி தருபவள், தாம்பூலம் தரித்து செந்நிற வாயுடையவள் – இப்படிப்பட்ட செந்நிறக் காட்சி என் முன்னால் நிற்கவேண்டும் என்று தீட்சிதர் வேண்டுகிறார்

ப்ரத்யக்ர குங்கும ரசாக்லிதாங்கராகம்

ப்ரத்யங்க தத்த மணி பூஷண  ஜால ரம்யம்

தாம்பூல பூரிதமுகம் தருணேந்து சூடம்

சர்வருணம் கிம் அபி வஸ்து மமாவிரஸ்து 

என்பது  நீலகண்ட தீட்சிதர்  யாத்த பாடல் ஆகும்

***

பீத வர்ணா என்ற நாமத்தை எடுத்துக்கொள்வோம்.

பீதம் என்பது குங்குமப்பூவுக்கும் பெயர்; மஞ்சள் நிறத்துக்கும் பீத வர்ணம் என்று பெயர் ; அதாவது பொன்னிறமான பட்டின் நிறம். க்ரீம் கலர் ; இந்துக்கள் போன்ற வர்ண உணர்வுள்ளவர்களை வேறு எங்கும் காண முடியாது. நிறங்கள் ஓர் ஐந்துடையாய் என்று சிவபெருமானின் ஐந்து நிறங்களை மாணிக்க வாசகர் திருவாசகத்தில் துதிக்கிறார் . பரதர் எழுதிய பரத நாட்டிய நூலில் தியேட்டரில் எந்த ஜாதி மக்களுக்கு எந்த வர்ண ‘சீட்’டுகள்– ஆசனங்கள் -என்று  ஒதுக்குகிறார்  கிருஷ்ணன்- பலராமன் அணிந்த யுனிபார்ம்களை/ சீருடைகளை UNIFORMS பஜனைப் பாடல்தோறும் பாடுகிறோம்; கிருஷ்ணன் CREAM COLOUR, YELLOW பீதாம்பரதாரி; அவனுடைய அண்ணன் பலராமனோ நீலாம்பரதாரி; எப்போதும் BLUE, பிளு கலர் துண்டு மேலிருக்கும். எப்படி கலர் கான்ஸஸியஸ் COLOUR CONSCIOUS பாருங்கள்! மூவாயிரம் அணுக்களுக்கு முன்னரே இப்படி கலர்களை பார்க்கலாம் .பீத என்றால் தீசூரியன் என்றும் அகராதி சொல்லும். பித்தளை என்று நாம் சொல்லும் உலோகத்துக்கும் மஞ்சள் CREAM COLOUR, YELLOW நிறமே காரணம். அத்தனையும் சம்ஸ்க்ருதம்.

***

திரிவேணி, த்ரி குணாத்மிகா, த்ரயம்பகா என்ற நாமங்களுக்கு உரைகாரர்கள் ஆதிசங்கரரின் செளந்தர்ய லஹரியில் ஒரு ஸ்லோகத்தை எடுத்துக் காட்டுகிறார்கள்  :

पवित्रीकर्तुं नः पशुपतिपराधीनहृदये दयामित्रैर्नेत्रैररुणधवलश्यामरुचिभिः ।

नदः शोणो गङ्गा तपनतनयेति ध्रुवममुं त्रयाणां तीर्थानामुपनयसि संभेदमनघम् ॥ ५४॥

Pavithrikarthum nah pasupathi-paradheena-hridhaye Daya-mithrair nethrair aruna-dhavala-syama ruchibhih;

Nadah sono ganga tapana-tanay’eti dhruvamamum Trayanam tirthanam upanayasi sambhedam anagham-54

பவித்ரீ கர்த்தும் ந: பஶுபதி பராதீன ஹ்ருதய  தயாமித்ரைர் நேத்ரை ரருண தவல ஶ்யாம ருசிபி:

நத: ஶோணோ கங்கா தபன தனயேதி த்ருவமமும் த்ரயாணாம் தீர்த்தானா முபநயஸி ஸம்பேத மநகம்   54

ஆதி சங்கரர். அம்பாள் தரிசனம் பெற்று அதை நமக்கு ஆனந்தாமிர்தமாக 103 ஸ்லோகங்களில்  அள்ளித்தருகிறார் 

“அம்பே, லலிதா தேவி,  பசுபதிக்கு   ஸ்வாதீனமான  அன்பு  நிறைந்த ஹ்ருதயத்தை படைத்தவளே ! அம்மா  உனது நயனங் களை எப்படி வர்ணிப்பேன்?    அவை  தயை, கருணை நிறைந்த  அழகிய,  சிவப்பு, வெளுப்பு, கறுப்பு என்ற வர்ணங்களைக் கொண்டவையாக  இருக்கிறதே.    இது எதை நினைவூட்டுகிறது தெரியுமா?  ப்ரவாஹமாக  மேற்கு நோக்கிச் செல்வதும் சிவப்பு  நிறம் கொண்டதுமான  சோணபத்ரா  என்ற  நதியும்,  பனி உருகி வெள்ளை வெளேரென்று குளிர்ந்த சமுத்திரம் போன்ற  வெண்ணிற கங்கை நதியும், சூரிய  புத்திரியாகவும்   இயற்கையிலேயே கறுப்பு வர்ணம் கொண்ட  யமுனா நதியுமாகிய   மூன்று புண்ய புண்ணிய நதிகளும்  ஒன்று சேர்ந்த ஸங்கமமாகி  பாவத்தையெல்லாம் போக்கும் ப்ரயாகையாக காட்சி அளிக்கிறது.   ஓஹோ!   எங்கள்  பாபத்தை எல்லாம் அழித்து  புனிதமாக்குவதற்காக  அல்லவோ உன் பார்வை இருக்கவேண்டும் என்பதற்காக  நீ அமைத்துக்கொண்ட  மூன்று நிற கண்களோ  உன்னுடையவை”

மேலே சொன்ன மூன்று நிற கண்கள் உள்ளார்த்தமாக குண்டலினி சக்தி தியானத்தால் ஏற்படும் நன்மையை குறிக்கிறது.

திரிவேணி :–

திரிவேணி நாமத்திற்கு உரைகாரர்கள் மூன்று நதிகளை குறிப்பிடுகிறார்கள்

காளிந்தி யமுனை == கருப்பு நிறத்துடன் ஓடும் நதி

கங்கை -வெண்மை நிறத்துடன் ஓடும் நதி

சோணபத்ரா — தங்க நிறத்தில் ஓடும் நதி

***

த்ரி குணாத்மிகா

சத்வ குணம்– வெண்மை

ராஜஸ குணம்– சிவப்பு /தங்க நிறம்

தாமச குணம்– கருப்பு

****

தேவியுடன் தொடர்புடைய நாமங்களில் கீழ்கண்டன வருகின்றன:

தாமரை மலர், மாணிக்கம், குருவிந்தம் – சிவப்பு

ஜபா புஷ்பம் – செம்பருத்தி சிவப்பு நிறம்; கண்களில் தீட்டிக் கொண்டிருக்கும் மை கருப்பு/ நீலம் .

இவை மேம்போக்காகக் கண்டவைதான்; உரைகளை ஆழமாகப் படித்தால் இன்னும் பல  நிறங்களைக் காண முடியும் . ஸ்படிகத்தை எதனருகில் வைத்தாலும் அதன்  நிறத்தைக் கொண்டுவிடும். நிறமற்ற நீரில் போட்டாலோ காண்பதற்க்கரிதாகி மறைந்து விடும் ; தேவியும் அப்படியே !உருவம் உடையவள்; உருவமில்லாதவள்; நிறங்கள் உடையவள்; நிறங்கள் இல்லாத பளிங்கு போன்றவள்.

—SUBHAM—

TAGS- லலிதா சஹஸ்ர நாமத்தில், வர்ணங்கள் , நிறங்கள் , பீத வர்ணா, ரக்த வர்ணா, சர்வ அருணா , சர்வ வர்ணோப சோபிதா

அறிவாற்றலை அதிகரிக்க அணிய வேண்டிய கல் லாபிஸ் லசூலி! (LAPIS LAZULI) (Post No.15,164)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,164

Date uploaded in London –   9 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

29-8-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

அறிவாற்றலை அதிகரிக்க அணிய வேண்டிய கல் லாபிஸ் லசூலி! (LAPIS LAZULI) 

ச. நாகராஜன்

 ஆறாயிரம் வருடங்களாக மனித குலம் பயன்படுத்தி வரும் ஒரு அபூர்வ ரத்தினக் கல் லாபிஸ் லசூலி! (LAPIS LAZULI). 

லாபிஸ் லசுலஸ் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து உருவான சொல் இது. லஸ்வார்ட் என்ற அராபிய வார்த்தையிலிருந்தும் இது பிறந்தது.

ஒளி என்பது இதன் பொருள். 

நீல வர்ணத்தில் ஒளிரும் இந்தக் கல்லை பிரபல அறிவாளியும் பேரரசனுமான சாலமன் அணிந்திருந்தான். தீய சக்திகளை அடக்க அவன் இதைப் பயன்படுத்தினான்.

 பிரபல அழகிகளான நெபர்டரி, கிளியோபாட்ரா, ஷீபா ஆகியோர் இதை அணிந்து புகழ் பெற்றனர்.

அரச போகத்தையும் சொகுசு வாழ்க்கையையும் தருவது இது.

 அறிவைப் பெருக்கும் இந்தக் கல்லை அறிவாளிகளும், எழுத்தாளர்களும் தவறாது அணிந்து வந்தனர்.

கண்ணுக்குப் புலனாகாத சக்திகள், தத்துவ ஆராய்ச்சி, புதிர்கள், விளங்காத மர்மங்கள் ஆகியவற்றைப் பற்றி அறிய உதவும் கல் இது.

 மனிதனின் உள்ளார்ந்த அழுக்குகளை நீக்கி, சிந்தனைத் தெளிவைத் தந்து கடைசியில் சச்சிதானந்த நிலையை இது தரும்.

 லசூரைட் என்ற தாதுக் கலவையிலிருந்து இது உருவாகிறது. சோடோலைட் என்ற ரத்தினக் கல் வகையைச் சேர்ந்தது இது. இதில் சோடியம், அலுமினியம், சில்கேட், சல்பர், கால்சியம் ஆகியவை உள்ளன.

 ஆப்கானிஸ்தானில் உள்ள படகஸ்தானிலும், சிலியிலும் இது மிக அதிகமாகக் கிடைக்கிறது. கனடா, காஷ்மீர், பர்மா, அங்கோலா, சைபீரியா, இலங்கை உள்ளிட்ட இடங்களிலும் இது கிடைக்கிறது.

இதன் கடினத் தன்மை 5-லிருந்து 5.5 வரை இருக்கிறது.

பெரிய பாறைகளாகக் கிடைப்பதாலும், கடினத்தன்மை குறைவாக இருப்பதாலும் இதை வைத்து அழகிய சிலைகளும் அழகு சாதனங்களும் செய்யப்படுகின்றன. விலையும் சற்று மலிவு தான்!

 குண்டலினி யோகத்தில் விசுத்தி சக்கரத்தையும் ஆக்ஞா சக்கரத்தையும் இது எழுப்பி விடும்.

 தொண்டை, குரல் நாண் ஆகியவற்றை இது நன்கு ஊக்குவிக்கும். மூளையுடன் தொடர்பு கொண்ட இந்தக் கல்லை ADD எனப்படும் Attention Deficit Disorder குணப்படுத்தவும் உபயோகிக்கிறார்கள்.

 எகிப்தியர்கள் ஜுரம், காலரா உள்ளிட்ட வியாதிகளைக் குணமாக்க உபயோகப்படுத்தினர்.

 நீலத்தின் பல்வேறு நிறக்கூறுகளில் இது கிடைத்தாலும் அழகிய நீலமாக மட்டுமே இருக்கும் கல்லே மிகச் சிறந்தது என்று கருதப்படுகிறது, இதன் அடர்த்தி எண் 2.38லிருந்து 2.45 g/cm^2.

இதனுடைய ஒளிவிலகல் எண் 1.50

 டாரட் கார்டுகளை வைத்துக் குறி சொல்பவர்கள் ஒரு லாபிஸ் லசூலி கல்லை தங்கள் கார்டுகளின் மீது வைத்து விட்டே குறி சொல்வார்கள்.  அப்போது தங்கள் குறி சொல்லுதல் பலிக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

வெவ்வேறு குணநலன்களை இது கொண்டிருப்பதால் ஆன்மீக சிகிச்சை நிலையங்களிலும் Spa –க்களிலும் இது பயன்படுத்தப் படுகிறது.

 ஏழைகளின் நீலம் (Poor Man’s Sapphire) என்று இது அழைக்கப்படுகிறது – இதன் விலையைக் கருதி!

பல்வேறு பிரபலங்களின் ஃபேவரைட் ரத்தினக் கல் இது!

 பிரபல ஹாலிவுட் நடிகையான ஜென்னா டீவான் (Jenna Dewan)  இந்தக் கல்லைப் பெரிதும் விரும்பி அணிபவர். இது என்னை பூமிபிரபஞ்சம்,இயற்கை அனைத்துடனும் இணைக்கிறது’ என்கிறார் அவர்.

 நமது நலனில் அக்கறை கொண்ட நல்ல நண்பர்களின் உதவியைக் கொண்டு தெரிந்த வணிகர்களிடம் இதை வாங்குவது சிறந்தது.

 போலிகளிடம் அதிக விலை கொடுத்து ஏமாறக் கூடாது. பிடித்த வகையில் ஆபரணத்தில் இதைப் பதித்து ஆண்களும்பெண்களும் அணியலாம்.

**

அப்பர் தேவாரத்தில் புவியியல்: நதிகள், மலைகள், கடல்கள்! (Post 15,163)

Written by London Swaminathan

Post No. 15,163

Date uploaded in London –  8 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

அப்பர் தேவாரத்தில் நவரத்தினங்களைக் கண்டோம் . இதோ மேலும் ஒரு கட்டுரை

நால்வர் என்று போற்றப்படும் அப்பர் (திருநாவுக்கரசர்), சம்பந்தர், சுந்தரர் ,மாணிக்க வாசகர் ஆகியோரில் அதிகம் பயணம் செய்தவர் அப்பர் சுவாமிகள்தான். ஏனைய மூவரும் அந்தக் காலத் தமிழ் நாட்டுக்குள்ளேயே வலம் வந்தவர்கள் தான். சமண மதத்தைத் தழுவியதால் அப்பர், பீஹார் மாநிலத்திலுள்ள பாட்னா (பாடலிபுத்திரம்) வரை  சென்றிருக்கிறார். இதை அவரது பாடல்களில் காண முடிகிறது.

அடைவுத் திருத்தாண்டகம்  என்ற அற்புதமான பாடலில் அப்பர் தரும் விஷயங்களை வைத்து மட்டுமே தனியான புஸ்தகம் எழுதலாம். அவ்வளவு விஷயங்களை அடுக்கடுக்காகப்   பாடுகிறார். சிவன் தொடர்பான ஊர்களே இவ்வளவு இருக்குமானால்  சக்திக் கேந்திரங்கள் திருமால் திவ்ய க்ஷேத்ரங்கள் என்பன எவ்வளவு என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்

அப்பரின் புவியியல் அறிவுக்கு ஈடு இணை இல்லை! புவியியல் விஷயங்களை ,செய்திகளை மட்டும் காண்போம்

ஆறாம் திருமுறையை மட்டும் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டு பூகோள வர்ணனைகளைக் காண்போம்.

1

 திருநாவுக்கரசர்   தேவாரம்

பொது -அடைவுத் திருத்தாண்டகம் – திருத்தாண்டகம்

பள்ளி என்று முடியும் ஊர்ப்  பெயர்களையும் , வீரட்டானத் தலங்களையும்,  குடி , ஊர் என்று முடியும் ஊர்ப்  பெயர்களையும் தந்த பின்னர் காடுகளின் பெயர்களை பாடுகிறார் :

மலையார் தம் மகளொடு மாதேவன் சேரும் மறைக்காடு; வண்பொழில் சூழ் தலைச்சங்காடு;

தலையாலங்காடு; தடங்கடல் சூழ் அம் தண் சாய்க்காடு; தெள்ளு புனல் கொள்ளிக்காடு;

பலர் பாடும் பழையனூர் ஆலங்காடு; பனங்காடு; பாவையர்கள் பாவம் நீங்க,

விலை ஆடும் வளை திளைக்க, குடையும் பொய்கை வெண்காடும்; அடைய வினை வேறு ஆம் அன்றே.

பின்னர் வாயில், ஈச்வரம் என்று முடியும் ஊர்ப்  பெயர்களையும் தந்துவிட்டு மலைகளையும், ஆறுகளையும்  பாடுகிறார்

****

2

கந்த மாதனம், கயிலைமலை, கேதாரம், காளத்தி, கழுக்குன்றம், கண் ஆர் அண்ணா,

மந்தம் ஆம் பொழில் சாரல் வடபர்ப்பதம், மகேந்திர மா மலை நீலம், ஏமகூடம்

விந்த மா மலை, வேதம், சையம், மிக்க வியன் பொதியில் மலை, மேரு, உதயம், அத்தம்,

இந்து சேகரன் உறையும் மலைகள் மற்றும் ஏத்துவோம், இடர் கெட நின்று ஏத்துவோமே.

***

3

நள்ளாறும், பழையாறும், கோட்டாற்றோடு, நலம் திகழும் நாலாறும், திரு ஐயாறும்,

தெள்ளாறும்; வளைகுளமும், தளிக்குளமும், நல் இடைக்குளமும், திருக்குளத்தோடு; அஞ்சைக்களம்,

விள்ளாத நெடுங்களம், வேட்களம்; நெல்லிக்கா, கோலக்கா, ஆனைக்கா, வியன் கோடி(க்)கா;

கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும், குளம், களம், கா, என அனைத்தும் கூறுவோமே.

***

4

பின்னர் துறைகளைப்பாடுகிறார்

கயிலாயமலை எடுத்தான் கரங்களோடு சிரங்கள் உரம் நெரியக் கால்விரலால் செற்றோன்

பயில்வு ஆய பராய்த்துறை, தென்பாலைத் துறை, பண்டு எழுவர் தவத்துறை, வெண்துறை, பைம்பொழில்

குயில் ஆலந்துறை, சோற்றுத்துறை, பூந்துறை, பெருந்துறையும், குரங்காடு துறையினோடு,

மயிலாடுதுறை, கடம்பந்துறை, ஆவடுதுறை, மற்றும் துறை அனைத்தும் வணங்குவோமே.

துறை என்பது ஆற்றில் புனித நீராடும் கட்டங்களாகும்

***

5

இவ்வாறு ஒருவர் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே மூச்சில் பாட வேண்டும் என்றால் அவருக்கு அபார பூகோள அறிவு இருக்க வேண்டும் .

கேதார்நாத் முதல் இலங்கையிலுள்ள  கேதீச்வரம் வரை பாடுவதால் அவர் மனக் கண்களுக்கு  முன்னால் ஏக பாரதம்– அகண்ட பாரதம் –தெரிந்திருக்க வேண்டும்  இமயம் முதல் குமரி வரை பாரதம் ஒன்றே என்பதை பறைசாற்ற இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்

ஆறாம் திருமுறை திருவீழிமிழலை பதிகம்

பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர்

            பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர்

கேதிசர மேவினார் கேதா ரத்தார்

            கெடில வடவதிகை வீரட் டத்தார்

மாதுயரந் தீர்த்தென்னை உய்யக் கொண்டார்

            மழபாடி மேய மழுவா ளனார்

வேதி குடியுளார் மீயச் சூரார்

            வீழி மிழலையே மேவி னாரே.  2

***

6

நாவலந்தீவு

நாவலந்தீவு பற்றி சங்க இலக்கியப்பாடல்களிலும் அதற்கு முன்னர் காளிதாசன் கவிதைகளிலும் குறிப்புகள் உள்ளான . இதுபற்றியம்  அப்பரும் தேவாரத்தில் பாடியுள்ளார்

மூவுருவின் முதலுருவாய் இருநான் கான

                மூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர்

தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்துஞ்

                செம்பவளத் திருமேனிச் சிவனே யென்னும்

நாவுடையார் நமையாள வுடையா ரன்றே

                நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான

காவலரே யேவி விடுத்தா ரேனுங்

                கடவமலோங் கடுமையொடு களவற் றோமே. 

அவர் வங்காளத்தில் ஆயிரம் கிளைகளாக பிரிந்து கங்கை நதி, வங்காள விரிகுடாவில் விழும் செய்தியோடு நாவலம் தீவு – ஜம்பூத்வீபம் , போகும் வழியிலுள்ள கோதாவரி முதலிய நதிகளையும் குறிப்பிடுகிறார். 

***

7

கங்கை நதிக் குறிப்புகள்:–

இதோ அப்பரின் ஆறாம் திருமுறையில் உள்ள கங்கை நதிக் குறிப்புகள்:–

திருப்பூவணம்

ஆறாம் திருமுறை , பாடல்

மயல் ஆகும் தன்  அடியார்க்கு  அருளும் தோன்றும் ;

மாசு இலாப் புன்சடை மேல் மதியம் தோன்றும்;

இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் ;

இருங்கடல் நஞ்சு உண்டு  இருண்ட கண்டம் தோன்றும் ;

கயல் பாய கடுங்கலுழிக் கங்கை நங்கை

ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் -தோன்றும்

புயல் பாய்ச சட்டை விரித்த பொற்புத் தோன்றும்

பொழில் திகழும் பூவணத்து  எம் புனிதனார்க்கே

***

8

பல்வகைத் திருத்தாண்டகத்திலும்  இது போன்ற குறிப்பு வருகிறது

நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக்  கண்டு

நிலை தளர ஆயிரமாமுகத்தினோடு

பாய்ந்து ஒருத்தி படர்சடைமேல் பயிலக்கண்டு

பட அரவும் பனிமதியும்  வைத்த செல்வர்

தாம் திருத்தித் தம் மனத் தை  ஒருக்காத் தொண்டர்

தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் பூந்துருத்தி என்பீராகில்

பொல் லால்புலால்  துருத்தி போக்கல் ஆமே –பாடல் 909

***

9

கோதாவரி பற்றிய அப்பர் பாடல்

உருத்திர தாண்டகம் – பாடல் 7, ஆறாம் திருமுறை

மாதா பிதாவாகி மக்க ளாகி

மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்

கோதா விரியாய்க் குமரி யாகிக்

கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்

போதாய மலர்கொண்டு போற்றி நின்று

புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி

யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி

அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே

***

10

கங்கை — காவிரி

கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்

கொங்கு தண்குமரித் துறை ஆடிலென்

ஓங்கு மாகடல் ஓத நீர் ஆடிலென்

எங்கும் ஈசன் என்னாதவர்க்கு இல்லையே (5-99-2)

ஏழ்  கடலும் ஏழ் மழையும் என்றும் பல பாடல்களில் குறிப்பிடுகிறார்

கேதீச்வரம் முதல் கேதாரம் வரை உள்ளானை திருவீழிமலைப் பதிகத்தில் பாடுகிறார்

இங்கு கொடுத்தவை ஒரு சாம்பிள்தான் இது போல அப்பர் பாடிய மூன்று திருமுறைகளையும் நிறையா பாடல்கள் உள்ளன.

–subham—

Tags- அப்பர், புவியியல், பூகோள, அறிவு, மலைகள், காடுகள், கங்கை, கோதாவரி நதிகள், கேதார்நாத், கேதீச்வரம்