HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 60; இந்து மத கலைச்சொல் அகராதி-60 (Post No.15,704)

Rani Mangammal.

Written by London Swaminathan

Post No. 15,704

Date uploaded in London –6 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மந்தபால

மஹாபாரதத்திலுள்ள ஒரு வினோதமான ரிஷியின் கதை. குழந்தைகள் உனக்குப் பிறக்காததால் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்று திருப்பி அனுப்பப்பட்ட ரிஷி இவர். அடுத்த ஜென்மத்தில் அவர் ஆண்பறவையாகப் பிறந்து ஜரிதா என்னும் பெண் பறவையின் மூலம் நான்கு பறவைகளைப் பெற்றார் . பின்னர் ஜரிதாவை விட்டுவிட்டு லபிதா பறவையுடன் வாழ்ந்தார் ; காண்டவ வனத்தை அர்ஜுனனும் கிருஷ்னனும் எரிக்கப்போகும் செய்தியை அறிந்து 4 பறவைக்குழந்தைகளை காப்பாற்றுவதற்காக ஜரிதாவிடம் திரும்பி வந்து காட்டின் வேறு பகுதியில் சுகமாக வாழ்ந்தார் .

***

மாண்டவ்ய ரிஷி  / ஆணி மாண்டவ்ய

பழி ஓரிடத்திலே பாரம் ஒரிடத்திலே என்றும், பாவம் ஓரிடத்திலே என்றும் ஒரு பழமொழி உண்டு. மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி அல்லது சமம் என்று மற்றொரு பழமொழி உண்டு.  இதை விளக்க ஒரு சுவையான கதை இருக்கிறது.

ஆணி மாண்டவ்ய ரிஷி (Mandavya Rishi), அணி மாண்டவ்யர் (Aṇi Māṇḍavya) என்றும் அழைக்கப்படுபவர்  ஒரு முனிவர் ஆவார். அவருடைய கதை  மகாபாரதத்தில் ஆதி பர்வத்தில்  வருகிறது  மாண்டவ்ய ரிஷி இரு கைகளையும் உயரத்  தூக்கியவாறு  தவத்தில் இருந்தார்; அப்போது அரண்மனையில் இருந்து அரசனின் பொருள்களைத் திருடியவர்கள் ஓடி வந்தனர்; பின்னால் சேவகர்கள் துரத்திக்கொண்டு வருவதைப் பார்த்து முனிவர்களின் ஆசிரமத்துக்குள் பொருள்களைப் போட்டுவிட்டு திருடர்கள் ஓடிவிட்டனர்;  திருடர்களைத் தேடி வந்த அரச சேவகர்கள் பல  கேள்விகளைக் கேட்டும் முனிவர் பதில் சொல்லவில்லை ஏனெனில் அவர் மெளன விரதத்தில் இருந்தார் . பின்னர் திருடர்களும் பிடிபட்டனர்; முனிவரிடம் திருட்டுப் பொருள்கள் இருந்ததால் அவரையும் திருடர்களுடன் மன்னர் முன்னால் நிறுத்தினர் ; ராஜாவும் அனைவரையும் கழுமரத்தில் ஏற்றிக்கொல்ல உத்தரவிட்டான் அவரைச் சூலத்தில் (Stake) ஏற்றித் தண்டித்தனர். திருடர்கள் அனைவரும் இறந்தனர் ; அணி மாண்டவ்யர் மட்டும் இறக்கவில்லை ; அவர் நிரபராதி என்று தெரிந்தவுடன் அவரைக் கழு மரத்திலிருந்து இறக்கியபோது கூரான ஆணி முனை ஒட்டிக்கொண்டு இருந்ததால் அவர் பெயருடன் ஆணியும் சேர்ந்து கொண்டது . தன் தவ வலிமையால் சூலத்தில் இருந்தும் உயிருடன் இருந்த அவர், யமதர்மனிடம் (மரண தேவன்) ஏன் தனக்குத் தண்டனை கிடைத்தது என்று கேட்டார். சிறுவயதில் பூச்சிகளைக் கொன்றதற்கான தண்டனை இது என்று யமன் கூறியதைக் கேட்டு, சிறு வயதில் அறியாமையால் செய்யும் தவறுக்கு தண்டனை வழங்கக் கூடாது என்று கூறி, யமனைப் பூமியில் மனிதனாகப் பிறக்கச் சாபமிட்டார். இதன் காரணமாகவே யமன் விதுரராகப் பிறந்தார் அவர் ஒரு பட்டுப்பூச்சியை வெறும் புல்லினால் குத்தி வேடிக்கையை பார்த்ததற்கு கிடைத்த தணடனை கழுமரம்!மண்டியா(கர்நாடகம்) நகரம்: மாண்டவ்ய ரிஷியின் ஆசிரமம் காவேரி நதிக்கரையில் இருந்ததாகவும், அந்த இடமே பின்னர் மண்டியா (Mandya) நகரம் என்று அழைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.

***

மஹாலக்ஷ்மி: லட்சுமியின் பெயர் ; அஷ்ட லெட்சுமிகளின் விவரம் முன்னரே லெட்சுமி என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

***

மஹா கால

சிவனின் பெயர் ; காலம் என்றும் காலன் என்றும் பொருள்; அதாவது எல்லோரின் , எல்லாவற்றின் முடிவுக்கு காரணமானவர் சிவ பெருமான் ; பன்னிரண்டு ஜோதிர்லிங்கத்த தலங்களில் ஒன்றான உஜ்ஜைனி நகரத்திலுள்ளவர் மஹா காலேஸ்வர்அங்குள்ள ஷிப்ரா நதியில் ஸ்நானம் செய்து சிவலிங்கத்தைத் தரிசித்தவர்களுக்கு அஸ்வமேத யாகம்  செய்தபலன் கிடைக்கும் இந்த விவரம் மஹாபாரத வனபர்வத்தில் உள்ளது.

***

மகரிஷி / மஹரிஷி

தற்காலத்தில் ராமணரும் மனம் கடந்த தியான முறையைக் கண்டுபிடித்த மகேஷ் யோகியும் மகரிஷி என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார்கள்.

உலகின் மிகப் பழமையான நூலான ரிக்வேதத்தில் பல இடங்களில் ரிஷி என்ற சொல் பயிலப்படுகிறது. “மந்திரத்தை வாக்கிய வடிவத்தில் சொல்பவர்” — என்று வேதத்தின் சர்வானுக்ரமணி கூறும்.

யாஸ்கர் எழுதிய நிருக்தம் போன்ற நூல்களில் சொற்பிறப்பியல் அடிப்படையில் ரிஷி என்ற சொல்லுக்கு விளக்கம் தரப்படுகிறது:

சாயனர் “ர்ஸ்: என்றால் ‘மேலே செல்’ என்பார். இதிலிருந்து பிறந்தது ரிஷி — ரிக் வேத பாஷ்யத்துக்கு முன்னுரை தருகையில் ‘த்ருஸ்’ என்ற சொல்லையும் காட்டுவார். ‘பார்’ என்பது இதன் மூலம். அதாவது மனிதனின் ஊனக் கண்ணால் காண முடியாததை ஞானக் கண்ணால் கண்டு நமக்கு வேத மந்திரங்களை அளித்தார்கள்.

இந்து மதம் தவிர, உலகிலுள்ள எல்லா மத நூல்களும் ஒரு மதத் தலைவர் சொன்னதை அடிப்படையாகக் கொண்டவை. உலகிலுள்ள எல்லா மதங்களும் ஒரு மனிதனால் தோற்றுவிக்கப்பட்டவை. இந்துக்களின் வேதமோ, இந்து மதமோ மனிதனால் தோற்றுவிக்கப் படவில்லை. அது சநாதனமாக – தோற்றமோ முடிவோ இல்லாத ஒன்றாக— இருந்து வருகிறது. வேத மந்திர ஒலிகளும் இப்படித்தான்.

நாம் ரேடியோவில் ஒரு நிலையத்தைக் கேட்க வேண்டுமானல் ஒரு அலை வரிசயைத் தேர்ந்தெடுக்கிறோம். அது போல ரிஷிகள் மனதை ஒரு முகப்படுத்தி மந்திரங்களைக் கேட்கிறார்கள். எப்படி ஆயிரக் கணக்கான நிலயங்களின் ரேடியோ அலைகள் நம்மைச் சுற்றி இருக்கிறதோ அது போல பிரபஞ்சத்தில் பல்லாயிரக் கணக்கான மந்திர ஒலிகளும் நம்மைச் சுற்றி இருக்கின்றன என்று இந்துக்கள் நம்புவர்.

ரிஷிகள் முக்காலம் உணர்ந்த “த்ரிகால” ஞானிகளும் ஆவர். எப்படி நாம் ஒரு வீடியோ “டேப்”பைப் பார்க்கையில் REWIND ரீவைண்டு, FAST FORWARD பாஸ்ட் பார்வர்ட் என்று முன் பின்னால் உள்ளதைப் பார்க்கிறோமோ அது போல ரிஷிகளும் செய்கின்றனர். மஹாபாரத யுத்தக் காட்சியை கண்ணன் — விஸ்வரூப தரிசனத்தில் — அர்ஜுனனுக்கு பாஸ்ட் பார்வர்ட் செய்து காட்டுவதைப் படிக்கிறோம்.

இதே போல த்ரிகரண சுத்தி என்பதும் ரிஷிகளிடத்தில் உள்ளது.

சதபத ப்ராஹ்மணம் ரிஷி என்பதற்கு “அதிகம் பாடுபடுபவர், கஷ்டப்படுபவர்” — என்று பொருள் சொல்லும். அதாவது தீவிரத் தவம் புரிவோர்.

தைத்ரீய ஆரண்யகம் , “முன்னேறிச் செல், தோன்று” என்று பொருள் காணும்.

தான் மட்டுமின்றி மனித குலத்தையும் முன்னேற்ற விரும்பியதால்தான் அவர்கள் காயத்ரி மந்திரம், மிருத்யுஞ்சய மந்திரம் போன்ற அரிய பெரிய மந்திரங்களை நமக்கு அளிததனர்.

ராஜ ரிஷிகளும் சப்த ரிஷிக்களும்

ஜனகன், புத்தன், ராமன், கிருஷ்ணன் இவர்களை ராஜ ரிஷிகள் என்பர். கண்ணனும் ராஜரிஷி பற்றி கீதையில் (4-2) சொல்கிறான். இன்னும் ஒரு ஸ்லோகத்தில் (10—6) சப்த ரிஷிக்கள் , நான்கு மானச புத்ரர்கள், 14 மனுக்கள் பற்றி கிருஷ்ணன் சொல்லுவான்.

இதற்கு ஸ்ரீ இராமகிருஷ்ண மடம் அண்ணா அவர்கள் எழுதிய உரை மிகவும் அருமையானது. அவர் சொல்வதாவது:–

முன்னவர்களான ஏழு மகரிஷிக்கள்:

1.நீண்ட ஆயுள்

2.மந்திரங்களை காணும் சக்தி

3.ஈசுவரத்தன்மை

4.தெய்வீகப்பார்வை

5.குணத்தாலும், வித்தையாலும், வயதாலும் உயர்வு

6.தருமத்தைப் பிரத்யக்ஷமாக அனுஷ்டித்துக் காட்டல்

7.கோத்ரப் பிரவர்த்தகராக இருத்தல்

இவ்வேழு லக்ஷணங்களும் அமைந்தவர்கள் ரிஷிகள்.

இவர்களில் முக்கியமானவர்கள் ஏழு மகரிஷிகள்; ஒவ்வொரு மன்வந்தரத்திலும் இவர்கள் வெவ்வேறாவர். இந்த கல்பத்தில் முதல் மன்வந்தரத்தில் தோன்றிய ஸப்தரிஷிகள்:–

மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், க்ரது, வசிஷ்டர்.

இப்போது நடக்கும் வைவஸ்வத மன்வந்தரத்துக்கு உரிய ஸப்தரிஷிகள்:

அத்ரி, வசிஷ்டர், விசுவாமித்திரர், ஜமதக்னி, பரத்வாஜர், கௌதமர், காசியபர்

நால்வர்: ஸனகர் ஸநந்தனர் ஸனாதனர் ஸனத் குமாரர்.இதுதவிர ரிஷிக்களை வேறு பல வகைகளிலும் பிரிப்பர்:

ராஜ ரிஷி:

க்ஷத்திய குல அரசர்கள் – ரிஷிகளின் தன்மை பெற்றவர்கள்

பிரம்ம ரிஷி:

பிராமண குலத்தை சேர்ந்த ரிஷி முனிவர்

ஜன ரிஷி:

மக்களிடையே இருந்து ரிஷிகளின் நிலைக்கு உயர்ந்தோர்.

காண்ட ரிஷி:

வேதங்களின் காண்டங்களுக்குப் பொறுபான ரிஷிக்கள்

மஹரிஷி:

ரிஷிகளுக்குள் உயர் நிலை அடைந்தவர். நாம் தலைவர், பெருந்தலைவர் என்று சொல்வது போல

பரம ரிஷி:

மிக உயர்ந்த நிலையிலுள்ள ரிஷி

ச்ருத ரிஷி:

வேத ஒலியைக் கேட்போர்

தவ ரிஷி:

தவத்தில் சிறந்தவர்

சத்ய ரிஷி:

சத்யத்தில் நிலைபெற்றவர்.

தேவ ரிஷி

தெய்வீக நிலைக்கு உயர்ந்தோர்.

பதஞ்சலி பிரிவினை

பாணினி எழுதிய அஷ்டாத்யாயீ என்னும் உலகமே வியக்கும் சம்ஸ்கிருத இலக்கண நூலுக்கு மஹாபாஷ்யம் என்ற அளவிலும் தரத்திலும் பெரிய விளக்கவுரை (பாஷ்யம்) செய்ஹ பதஞ்சலி என்ற ரிஷி. வேறி இரண்டு விளக்கம் தருவார்:

மந்திரத்தைக் கண்டவர்கள் ஒரு வகை. கல்ப சூத்ரம் போன்ற பெரிய நூலகளை எழுதியோர் மற்றொரு வகை. ஆன்மீக எழுத்தாளர்களையும் ரிஷி வகையில் சேர்த்துவிட்டார் பதஞ்சலி.

மஹாபாரதமோ எனில் வேறு வகையில் ரிஷிக்களைப் பிரித்துரைக்கும்:

கிருஹஸ்தாஸ்ரமி: இல்லறம் நடத்தும் ரிஷிமார்கள்.

ரிஷிக்களில் இந்த வகைதான் அதிகம். பெரிய ரிஷிக்கள் அனைவரும் இல்லறத்தை நடத்தியே பெரும் புகழை எய்தினர். வசிட்டர், விசுவா மித்திரர், அகத்தியர் ஆகிய அனைவரும் மனைவியுடன் வாழ்ந்தவர்

ஊர்த்வரேதஸ்: — பிரம்மசர்யம் அனுட்டித்த ரிஷிக்கள்

ஆஸ்ரமவாசிகள்:– கானகம் முதலிய இயற்கைச் சூழ்நிலையில் ஆஸ்ரமம் அமைத்து எளிமையான வாழ்வு வாழ்ந்தோர்.

யாயவரஸ்: நாடோடி ரிஷிக்கள். நாடு விட்டு நாடு சென்று பலருக்கும் உதவியவர்கள்

புரோகித வ்ருத்திகா: — புரோகிதம் செய்த ரிஷிக்கள்

சாதரண வ்ருத்திகா: — சாதாரண வாழ்க்கை நடத்திய ரிஷிக்கள்

சஸ்த்ர அத்யாபகா :– ஆயுதப் (சஸ்த்ரம்) பயிற்சி அளித்த ரிஷிகள்

சாஸ்த்ர அத்யாபகா: — சாத்திரப் பயிற்சி அளித்த ரிஷிகள்

உக்ர தபஸ்வீ: — இவர்கள் சூப்பர் பாஸ்ட் ரயில் போல உக்ரமான தவம் செய்து விரவில் பலன் பெற முயன்றோர்.

சாதரண தபஸ்வீ: இவர்கள் சாதாரண வேகத்தில் செல்லும் ரயில் போல தவம் செய்தோர்.

இந்தப் பிரிவினைகள் அவர்களை வருணிக்கப் பயன்படுத்திய சொற்கள். ஒருவர், ஒரு பிரிவில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல.

( உதவிய நூல்கள்:— பழங்கால இந்தியாவில் ரிஷிமார்கள் – சி.பி. பாண்டே எழுதிய நூல் —- ப்ருகு வம்சம் – ஒரு ஆய்வு, ஜயந்தி பண்டா எழுதிய நூல்—பகவத் கீதை, அண்ணா உரை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை).

****

மஹா வாக்கியங்கள்

மனிதன் என்பவன் இறைவனின் ஒரு அம்சம் ;அவனுக்குள் உறையும் ஆத்மா அழிவில்லாதது ; உடல் மட்டுமே அழியக்கூடியது ; எப்படி பானைக்குள் உள்ள காற்று பானை உடைந்த பின்னர் வெளியேயுள்ள காற்றுடன் கலந்து  ஐக்கியமாகிவிடுகிறதோ அது போல ஆத்மாவும் இறைவன் என்னும் பரப் பிரம்மத்துடன் கலந்துவிடும் . இதை விளக்கும் பொன்மொழிகள் ஒவ்வொரு வேதத்துக்கும் உரிய உபநிஷத்தில் உள்ளது; அவை பின்வருமாறு:

1. प्रज्ञानम् ब्रह्म (ப்ரக்ஞாநம் ப்ரஹ்ம )

உணர்வு / பிரக்ஞை பிரம்மம்

ஐதரேய உபநிஷத்  (3.3)  ரிக் வேதம்,

**

2. अयम् आत्मा ब्रह्म (அயம் ஆத்மா  ப்ரஹ்ம )

உள்ளுக்குள் உறையும் ஆத்மாவே பிரம்மம்

: மாண்டூக்ய உபநிஷத்  (2)  அதர்வ வேதம்

**

3. तत् त्वम् असि (தத் த்வம் அசி )

நீயே அதுவாக இருக்கிறாய்

சாந்தோக்கிய உபநிஷத்  (6.8.7) சாம வேதம்

**

4. अहम् ब्रह्म अस्मि அஹம்  ப்ரஹ்மாஸ்மி

நானே பிரம்மம் ஆக இருக்கிறேன்

பிருஹதாரண்யக  உபநிஷத்  (1.4.10) of the யஜுர் வேதம் .

**

வேறு சில மஹா வாக்கியங்கள்

सर्वं खल्विदं ब्रह्म (சர்வம் கல்விதம் ப்ரஹ்ம ): இங்குள்ள எல்லாம் பிரம்மம்

इशावास्यमिदं सर्वम् (ஈசாவாஸ்யம் இதம் சர்வம் ): உலகம் முழுதும் இறைவனால் வியாபிக்கப்பட்டுள்ளது

***

மஹேந்திர வர்மன்

Music Inscription

Pallava Period Hero Stone for a Dog.

உலகப்புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரும் தொல்பொருட் துறை அறிஞருமான டாக்டர் இரா .நாகசாமி 23, 2014 மயிலை ஆர்கே கன்வென்ஷன் செண்டரில், “பல்லவர் இசையில் மயிலாப்பூர்” என்ற தலைப்பில் நிகழ்த்திய ஒரு உரை தரும் செய்திகள்

டாக்டர் நாகசாமி, காயத்ரி கிரீஷின் இசைத்துணையோடு, உரையாற்றினார்.

“சித்திரக்கார புலி”, “சங்கீர்ணஜாதி”, என்று விருதுகளை கொண்ட மகேந்திர வர்ம பல்லவன், கலைகளில் வல்லவன். புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான்மலையிலும் திருமெய்யத்திலும் மகேந்திரனது இசைக்கல்வெட்டுகள் உள்ளன. “பகவதஜ்ஜுகம்”, “மத்தவிலாச பிரஹசனம்” என்ற சமஸ்கிருத நாட்டிய நாடகங்களை மகேந்திரன் படைத்தான். கேரளத்தில் சில கோயில் திருவிழாவில் இன்றும் மத்தவிலாசம் நடிக்கப்படுகிறது. அதன் ஓலைச்சுவடி நூறாண்டுகளுக்கு முன்னால் திருவிதாங்கூர் ஓரியண்டல் நூலகத்தில் கிடைத்தது. காஞ்சி அருகே மாமண்டூர் குகையில் மகேந்திர பல்லவனின் கல்வெட்டில் இந்நூலை அவன் படைத்த குறிப்பும் அதனால் தனக்கு “மத்தவிலாசன்” என்ற விருதமைந்த குறிப்பும் உள்ளன. இதில், நாந்தி என்றழைக்கப்படும் கடவுள் வாழ்த்தில், “பாஷா வேஷ வபுக்ரியா குணக்ருதான்” என்று வரும் சொற்களை, பரத முனிவர் தன் “நாட்டிய சாத்திரம்’ நூலில், நாட்டியத்தின் நான்கு முக்கிய அம்சங்கள் என்றுளார். பரதமுனிவரின் நாட்டிய சாத்திரத்தை கற்று மகேந்திரன் இந்நாடகத்தை படைத்த சான்று இது எனவும், “திஷது வோ ந்ருத்த கபாலீ ” என்ற வரியில் மயிலை கபாலியை மகேந்திர பல்லவன் வேண்டுகிறான் என்று நாகசாமி விளக்கினார்.மகேந்திரன் காலத்தில் மயிலை வந்த திருஞானசம்பந்தர் பூம்பாவை பதிகத்தை கபாலிக் கோவிலில் பாடியுள்ளார். அதில்

“மைப்பயந்த ஒன்கண் மடநல்லார் மாமயிலை

கைப்பயந்த நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான்

ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள்

துய்ப்பனவும் காணாதே ஓடியோ பூம்பாவாய் ”,

என்ற தேவாரப்பாடலில், ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரதில் நடந்த விழாவையும்;

“மணக்கை மடநல்லார்” என்ற பாடலில் “தொல் கார்த்திகை நாள்” விழாவையும் சொல்லி, மயிலையில் கபாலிச்சுர கோவிலில் 1300 ஆண்டுக்கு முன் மாதாமாதம் நடந்த திருவிழாக்களை நாகசாமி எடுத்துக்காட்டினார்.

செங்கம் வட்டார நடுகற்கள் பற்றிய 1972-ம் நூலில் அப்போதைய தொல்பொருட் துறை இயக்குனரும், வரலாற்று நிபுணருமான டாக்டர் இரா .நாகசாமி நமக்கு இன்னொரு புதுமையான தகவலை அளிக்கிறார். என்சைக்ளோபீடியாக்களில் பார்த்தால் மாமன்னன் மஹேந்திர வர்மன் 30 ஆண்டுகள் மட்டுமே  ஆண்டதாகக் கூறும். ஆயினும் அவனது 39-ஆவது ஆட்சி ஆண்டு கூட ஒரு நடு கல்லில் உளது; அவனது தந்தை சிம்ம விஷ்ணுவின் ஆட்சியின்போதே அவனுக்கும் பட்டாபிஷேகம் செய்விக்கப் பட்டதால் இப்படி ஆட்சி ஆண்டு உள்ளதாக அவர் கூறுகிறார்.

டாக்டர் இரா. நாகசாமி அவர்கள், முதலாம் மகேந்திரவர்மன் பல்லவன் (கி.பி. 590-630) மற்றும் அவனது கலைப்படைப்புகள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட மிகச்சிறந்த தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் அறிஞர் ஆவார் மகேந்திர வர்மன் கி.பி. 600-630 காலகட்டத்தில் ஆட்சி செய்ததை அவர் உறுதிப்படுத்தினார் .

Mamamdur Caves of Mahendra Pallava 

முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 600 – 630)

    சிம்மவிஷ்ணுவின் மகனான மகேந்திரவர்மன், மாவீரனாக வாழ்ந்தான். இவனது ஆட்சிக்காலத்தின் முதற்பகுதியில் சமணம் உயர்நிலையில் இருந்தது. பிற்பகுதியில் சைவம் உயர் நிலைக்கு வந்தது. இப் பேரரசனே சமண சமயத்தை விடுத்து, சைவத்திற்கு மாறினான். திருநாவுக்கரசர் எனும் அப்பரால் மனமாற்றம் அடைந்தவன். சிவன் கோவில்களையும் விஷ்ணு கோவில்களையும் பிறமதத்தினர் ஆக்ரமித்திருந்தனர் ;அவற்றையெல்லாம் மீண்டும் இந்து மதக் கோவில்களாக மாற்றினான் ; இந்தச் செய்திகள் பெரிய புராணம் முதலிய நூல் களிலும் கல்வெட்டுகளிலும் உள. தமிழகக் கலை வரலாற்றில் ஈடிலாப் படைப்புக்களை உருவாக்கியவன். சிறந்த இசைவல்லவன், ஓவியன், நாடக ஆசிரியன். பல்லவர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க புகழ் எய்தியவன்.

பட்டங்கள்

   இப்பேரரசனுக்குப் பல பட்டப் பெயர்கள் இருந்தன. குணபரன், விசித்திர சித்தன், போத்தரையன், சத்ருமல்லன், மத்தவிலாசன் போன்ற பல பட்டப் பெயர்கள் இவனது சாசனங்களில் காணப்பெறுகின்றன.

   புள்ளலூர் எனும் இடத்தில் சாளுக்கிய மன்னன் புலிகேசியையும், கங்கமன்னன் துர்வீநீதனையும் இவன் வென்று தன் வீரத்திற்குப் பெருமை சேர்த்தான்.

மத்தவிலாச பிரகசனம் எனும் நாடகநூல் இப்பேரரசனால் எழுதப் பெற்றதாகும். பல்வேறு சமயங்களைப் பற்றிய செய்திகளையும், நல்லொழுக்கம் பற்றி வலியுறுத்துகின்ற செய்திகளையும் நகைச்சுவை உணர்வோடு இந்நாடகநூல் விவரித்துக் கூறுகின்றது. மகேந்திரவர்ம பல்லவனின் புலமை இந்நூல் வாயிலாக வெளிப்படுகின்றது.

   சிறந்த இசைப்புலவனாக வாழ்ந்த மகேந்திர பல்லவன் ‘சங்கீர்ணஜாதி‘ எனும் இசைப் பண்ணைத் தானே அமைத்துச் சிறப்பெய்தினான். ஒப்பற்ற கவியாகவும் விளங்கினான். திருச்சிராப்பள்ளிக் குடைவரைப் பாடல்கள் இவனால் எழுதப்பெற்றவை என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். சித்திரக்காரப்புலி என்ற பட்டம் புனைந்து, ஓவியக்கலை வளர்ப்பதில் பெரும் பணி புரிந்திருக்கிறான். மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மாமண்டூர், வல்லம், பல்லவபுரம், தளவனூர், திருச்சிராப்பள்ளி போன்ற இடங்களில் மலையைக் குடைந்து, குடை வரைக் கோயில்களை உருவாக்கினான். சுதை, மண், கல், மரம், உலோகம் ஆகியவை இன்றிப் புதுமையான கோயில்களை உருவாக்கியவன் இவன் என அவனது மண்டகப்பட்டுக் கல்வெட்டு கூறுகின்றது.

***

பாண்டிய நாட்டு ராணி மங்கையற்கரசி

Queen Magaiyarkarasi

மங்கையற்கரசி சோழர் குலப் பெண்மணி ; மாபெரும் சிவ பக்தை; பாண்டிய மகாராஜாவுக்கு வாக்குப்பட்டாள்  பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் சைவ சமயத்திலிருந்து சமண சமயத்திற்கு மாறி சமணர்களோடு சேர்ந்தான்.  இதனால் பாண்டிய நாட்டிலிருந்த கோவில்களெல்லாம் பாழாகி சமணர்களின் பள்ளிகளாக மாறலாயின; 

இதையெல்லாம் பார்த்த பாண்டி மாதேவியான மங்கையர்க்கரசியார் மிகவும் வேதனையும் கவலையும் அடைந்தாள்.  அமைச்சராக இருந்த குலச்சிறையாரிடம் ஆலோசனை செய்தாள்.

சைவம் தழைக்க வந்துதித்த திருஞானசம்பந்தர் திருமறைக்கா ட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அவர்கள் அறிந்து தூதர்கள் மூலம் அழைப்புவிடுத்தார்கள் . ஞானசம்பந்தர், நமசிவாய மந்திரத்தை ஜபித்த வண்ணம் சிவிகையில் மதுரை நோக்கிச் சென்றார்.

மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை

வரிவளைக் கைம்மடமானி

பங்கயச் செல்வி பாண்டிமாதேவி

பணி செய்து நாள்தோறும் பரவப்

பொங்கழலுருவன் பூத நாயகன் நால்

வேதமும் பொருள்களும் அருளி

அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த

ஆலவாயாவதும் இதுவே

என்று தொடங்கி பதிகம் பாடினார் அதில் மங்கையர்கரசியின் சிவபக்தியைப் பெரிதும் புகழ்ந்து பாடியிருக்கிறார்.; இதற்குள் சமணர்கள் சம்பந்தர் தங்கிய மடத்தில் தீ வைத்தார்கள். அமணர்கள் இட்ட தீத்தழல் போய் ”பையவே சென்று பாண்டியர்க்காகவே” எனப் பாடினார். சம்பந்தரின் வாக்குப்படியே சமணர்கள் இட்ட தீ மன்னனிடம் வெப்பு நோயாக உருவெடுத்தது.  யாராலும் தீர்க்கமுடியாத நோயை சம்பந்தர் மீனாட்சி கோவில் விபூதி மூலம் தீர்த்துவைத்தார் ; அப்போது அவர் பாடியதே

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு

தந்திரமாவது நீறு, சமயத்திலுள்ளது நீறு

செந்துவர் வாய் உமை பங்கன் திரு

ஆலவாயன் திருநீறே’

பின்னர் நடந்த அனல்வாதம், புனல் வாதப் போட்டிகளில் சம்பந்தர் வென்றார் ; அவைகளில் தோற்றால், கழுமரத்தில் ஏறி உயிர்விடுவோம் என்று 8000 சமணர்கள் வீ ரவசனம் பேசியிருந்தனர் ; சம்பந்தர் வெற்றிபெற்றவுடன் நிறைய சமணர்கள் சைவர்களாக மாறினர்; ஏனையோர் கழுவேறினர் .

பாண்டிய நாட்டிற்கே கேடு வந்த சமயம் மங்கையர்க்கரசியார் மிகவும் சாதுரியமாக முடிவெடுத்து அமைச்சர் குலச்சிறையாருடன் சென்று சம்பந்தர் மூலமாக அக்கேட்டை நீக்கினாள்; மன்னனையும் மீட்டெடுத்தாள். நாட்டையும் வீட்டையும் தக்க சமயத்தில் கைகொடுத்துக் காப்பாற்றினாள். மங்கையர்க்கரசி மங்கையர்க்கு எல்லாம் அரசியாகி 63 நாயன்மார்களில் ஒரு நாயன்மாராகவும் சிறப்பித்துப் பேசப்படுகிறார். பெரிய புராணத்தில் அழகிய செய்யுட்களால் சேக்கிழார் நமக்கு இந்தக்கதையை செப்புகிறார்.

***

மங்கம்மாள்  , ராணி  மங்கம்மாள்

திருச்சியிலிருந்து மதுரையை அரசாண்ட ராணி மங்கம்மாளைப் பற்றி பல கதைகள் உண்டு.    எகிப்திய பேரழகியும் ஆட்சியாளருமான  கிளியோபாட்ராவைப்போலவே இவரும் அழகானவர்;  பல போர் புரிந்தவர். அவரைப் போலவே அழகால், சாதுர்யத்தால் ஆட்சி உரிமை பெற்றவர். மிகவும் திறமையான ஆட்சியாளர். மதுரை நகர் முழுதும் இன்றும் இவர் புகழ் பாடும் கட்டடங்களும் சாத்திரங்களும் சின்னங்களும் இருக்கின்றன மர்மமான முறையில் (சிறையில்?) இறந்தார். ஆனால் இந்தச் செய்திகளில் சில, உறுதிப்படுத்தப் படாத செய்திகள். அவர் காலத்தில் வாழ்ந்த சின்ன வெங்கண்ணா, மங்கம்மாளைக் கிண்டல் செய்து எழுதிய கவிகளில் இருந்து பெறப்பட்ட கிளுகிளு செய்திகள் இதோ :.அவர் சொல்லும் ரகசியம்: மங்கம்மாளின் இயற் பெயர் கனகா; அவர் தந்தை சந்திரகிரி துபாகுல நாயகர். அவர் ஒரு நடன மாது. வேலை தேடி தஞ்சை விஜயராகவரின் அரசவைக்குச் சென்றார். அவர் அந்தப்புரத்தில் சேர்க்க தயாராக இருந்த தருணத்தில் எப்படியோ மதுரை சொக்கநாத நாயகரை (1659-1682)  மணந்தார். மங்கம்மாளின் மகன் முத்துவீரப்ப நாயகர் (1682-1689) சிறிது காலம் ஆண்டு இறந்துவிட்டார். உடனே பேரன் விஜரங்க சொக்கநாத நாயக்கரின் பேரில் 1689-ல் ஆட்சியை ஏற்றுக்கொண்டார்.

.    மதுரை முழுதும் அன்ன சத்திரங்களைக் கட்டினார். கோவில்களுக்கும் பிராமணர்களுக்கும் வாரி வழங்கினார். மதுரை சவுராஷ்டிர சமூகத்துக்குப் பிராமண அந்தஸ்து வழங்கினார். காவிரிப் பிரச்சினை இவர் காலத்தில்தான் துவங்கியது. சிக்கதேவராயன் காவிரி நதியின் குறுக்கே கண்ணம்பாடியில் அணை கட்டி தஞ்சைப் பாசனத்தைத் தடுக்கவே போர்க் குரல் எழுப்பினார். கடவுள் அருளால் பெரு மழை, வெள்ளத்தில் அணை  உடைந்தது. காவிரிப் பிரச்சினையும் தீர்ந்தது. இவர் கடைசி காலத்தில் சிறையில் இறந்ததாக ஒரு செய்தி. எது எப்படியாகிலும் இவரது சத்திரங்களும், கோவில், மசூதி, கிறிஸ்தவ சர்ச்சுகளுக்குக் கொடுத்த தானங்களும், மதுரை தமுக்கம் அரணமனையும் (இப்போது காந்தி மியூசியம்), மீனாக்ஷி கோவில், திருப்பரங்குன்றம் கோவில்களும் இருக்கும் வரை மங்கம்மாளின் புகழ் மங்கவே மங்காது.

மொகலாயப் பேரரசன் அவுரங்கசீப் தனது ஒரு செருப்பை நாடு முழுதும் ஊர்வலம் விட்டான். அஸ்வமேத யாக குதிரை போகும் இடம் எல்லாம் எப்படி பாரதீய சக்கரவர்த்திகளுக்குச் சொந்தமானதோ அதே போல செருப்பு போனமிடம் எல்லாம் கப்பம் கட்டவேண்டும். ராணி மங்கம்மாள் மிகவும் தைரிய சாலி. அவனது படைத் தளபதி அந்த ஒற்றை செருப்பை காலில் மாட்டிக்கொண்டு மற்றொரு செருப்பு எங்கே என்று கேட்டான். ஆனால் பின்னர் ராமநாதபுரத்தின் கிழவன் சேதுபதி, மைசூரின் சிக்க தேவராயா தஞ்சை மன்னன் ஷாஜி, திருவாங்கூர் மன்னன் ரவிவர்மா ஆகியோர் தொல்லை கொடுக்கவே அவுரங்கசீப்புடன் சமரசம் செய்துகொண்டு கப்பம் கட்டினார்.

அழகால் ஆட்சி பெற்றதும், போர் முனைகளில் எதிரிகளைச் சந்தித்ததும், மர்மமான முறையில் இறந்ததும் இவரை கிளியோபாட்ராவுக்கு அருகில் அழைத்துச் செல்கிறது.

***

மாணிக்கவாசகர்

Manikkavasagar

மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூரில் பிராமண குலத்தில் பிறந்த இவரை அரிமர்த்தனன் என்னும் பாண்டியன் அழைத்து அமைச்சர் ஆக்கினான் ; கடற்கரைப் பகுதியில் அராபிய வணிகர்கள் குதிரைகளைக்  கொண்டுவந்திருப்பதை அறிந்த மன்னன், மாணிக்கவாசகரிடம் பொற்காசுகளைக் கொடுத்து அனுப்பினான் ; திருப்பெருந்துறையில் ஒரு புனித குருவினை கண்டவுடன் அவர் வசப்பட்டு அரச பணியை மறந்தார் . மன்னர் இவரை அழைத்து பல தண்டனைகளை கொடுத்தான் பின்னர்தான் மன்னருக்குத் தெரிந்தது – இவர் சிவபக்தர் அதைத் தெரிவிக்கவே நரி -பரி லீலைகள் நடந்தன என்று; அவரை விடுதலை செய்து அனுப்பியவுடன் அவர் யாத்திரை செய்து திருவாசகத்தைப் பாடினார். சிதம்பரத்தில் புத்த பிட்சுக்களை வாதத்தில் வென்ற பின்னர் அங்கே கோவிலில் இறைவன் அடி சேர்ந்தார்

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என்ற நால்வர் சைவ சமயத்தின் மாபெரும் தூண்கள்.

மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம் என்ன? அவருடைய பெயர் என்ன? யாருக்கும் விடை தெரியாத கேள்வி. தேவாரம் பாடிய மூவருக்கு முன்னால் இவர் வாழ்ந்திருந்தால் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் இவர் பெயரைச் சொல்லாதது ஏன்? நாயன்மார்கள் பட்டியலில் இவர் பெயர் இல்லாதது ஏன்? இந்த மூவருக்கும் பின்னால் அவர் வாழ்ந்திருந்தால் திருவாசகத்திலோ, திருக்கோவையாரிலோ மூவரையும் மாணிக்கமாவது குறிப்பிட்டிருப்பாரே! ஏன் குறிப்பிடவில்லை? மதுரை வரை வந்து கூன் பாண்டியனை நின்ற சீர்நெடுமாறனாக்கிய சம்பந்தரை எப்படி மாணிக்கம் மறக்கமுடியும்?

சுருக்கமாகச் சொன்னால் மூவரை மாணிக்கவாசகர் குறிப்பிடவில்லை. ‘மாணிக்கவாசகர்  மூவர் குறிப்பிடவில்லை.  திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவையைப் பாடியவர், திருக்கோவையார் என்னும் நூலையும் அவர் இயற்றியதை அறிஞர் உலகம் ஒப்புக்கொள்கிறது. அதில் சைவத்தில் பற்றுள்ள ஒரு வரகுணனைப் பற்றி ஒரு குறிப்பும் உள்ளது. அதைக் கொண்டு மாணிக்கவாசகர்  ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று பலரும் முடிவு கட்டிவிட்டனர். ஆனால் தற்போதைய ஆராய்ச்சிகள் இது பிழை என்றே காட்டுகின்றன. அப்பர் தேவாரத்திலும், திருவிளையாடல் புராணத்திலுமுள்ள செய்திகள் இவர் தேவார மூவருக்கு முந்தியவர் என்று காட்டுகின்றன மேலும் ‘வரகுண’ என்பது ஒரு அடைமொழி. யாரும் வைத்துக் கொள்ளலாம். உண்மையில் மாணிக்க வாசகரின் இயற்பெயர் எவருக்கும் தெரியாது இவர் பிறந்தது திரு வாதவூர் என்பதால் அந்த ஊரின் கடவுளான சத்ய வாகீஸ்வரர் இவர் பெயர் என்று கருதலாம்  அதையே பின்னர் நமபியாண்டார் நம்பி முதலியோர் பொய் அடிமை இல்லாத புலவர் என்று பாடினார்கள் 

அறுபத்து மூவர் வரலாற்றைக் கூறும் அகஸ்திய பக்த விலாசம் என்ற சம்ஸ்கிருத நூலும் பொய் அடிமை இலாத புலவரை ‘ஒருவர்’ என்றே கூறி அவருடைய பெயர் ஸத்யதாசன் என்றும் குறித்துள்ளது. அவர் வேதபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர், அந்தண குலத்தவர் 12 ஆண்டுப் பரமனைப் பாடிப் பரவி சிவபதம் அடைந்தார்.

மாணிக்க வாசகரின் பெயர் ஸத்தியதாசன். ஏனெனில் மேலே சத்யதாசனுக்குச் சொன்ன எல்லா விஷயங்களும் கச்சிதமாகப் பொருந்துகிறது. அதைவிட முக்கிய விஷயம் வேதபுரம் என்பது திருவாதவூரே! வேதபுர என்பது தமிழில் வாதவூர் என்று எழுதப்படும். திருவாதவூர் சுவாமிக்குப் பெயர் வேதபுரீஸ்வரர்!

–subham—

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 60; இந்து மத கலைச்சொல் அகராதி-60, மாணிக்கவாசகர், ராணி மங்கம்மாள், பாண்டிய ராணி, மங்கையற்கரசி , மகரிஷி, மாண்டவ்யர் , ரிஷி, முனிவர் ஆணி மாண்டவ்ய

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-8;  திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,672)

Written by London Swaminathan

Post No. 15,672

Date uploaded in London –29 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சாரங்கபாணி கோயில் , கும்பகோணம்

திவ்யதேசம்- திருக்குடந்தை / பாஸ்கர க்ஷேத்திரம்  

மூலவர்   – சாரங்கபாணி / ஆராவமுதன் / அபர்யாப்தாம்ருதன் / உத்தானஸாயி / ஆராவமுதாழ்வான்

உத்ஸவர்- ஆராவமுதன்  

தாயார் – கோமளவல்லி / படிதாண்டாப்பத்தினி 

கிடந்த திருக்கோலம்; திசை- கிழக்கு

மூலவர் – ஆதிசேஷசயனம் , திருமழிசையாழ்வாருக்காகக் ‘கிடந்தாவாறெழுந்’ திருக்க முயலும் நிலையிலிருப்பதால் உத்தாநசாயீ’ என்றும் அழைக்கப்படுகிறார்.

***

பாசுரங்கள்- 51  

மங்களாசாசனம்- திருமங்கையாழ்வார் 25; நம்மாழ்வார் 11; திருமழிசையாழ்வார் 7; பெரியாழ்வார் 3;  பூதத்தாழ்வார் 2; பேய் ஆழ்வார் 2; ஆண்டாள் 1

கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து இக்கோவில் சுமார் 1 1/2 மைல் தூரம். பல ஊர்களிலிருந்தும் பஸ்கள் வருகின்றன.

தீர்த்தம் – ஹேமபு ¢ஷகரிணி ‘பொற்றாமரை) , காவிரிநதி, அரசலாறு.

விமானம் – வைதிக விமானம் (வேத வேத விமானம்) .

ப்ரத்யக்ஷம் – ஹேமமஹரிஷி.

விசேஷங்கள் – பெருமாளுக்கெதிரே நதிதேவதைகள் வணங்குகின்றனர். இங்கேதான், ஸ்ரீமந்நாதமுனிகள் “ஆராவமுதே” என்று தொடங்கும் திருவாய்மொழிகளைக் கேட்டு, திவ்யப்ரபந்தத்தையே தொகுக்க ஆரம்பித்தார். ஆழ்வார்கள் அருளிய நாலாயிரம் பாசுரங்களையும் நிலைநிறுத்திய ஸ்ரீ ஆராவமுதப் பெருமாளுக்கு, ஸ்ரீ மந்நாத முனிகள், “ஆராவமுதாழ்வான்” என்ற திருநாமம் சாற்றியருளினார்.

ஹேமரிஷியின் புத்ரியாகத் தோன்றித் தவம் புரிந்த கோமளவல்லித் தாயாரை மணந்ததாக ஐதீஹம்.

பெருமாளின், அழகிய, பெரிய சித்திரைத்தேர் ப்ரஸித்தி பெற்றது. பெருமாள் ஸந்நிதியே தேர் சக்கரங்களுடன் கருங்கல்லால் கட்டப்பட்டிருக்கிறது. தாயாரை மணந்து கொள்ள இத்தலத்துக்கு சுவாமி தேரில் வந்ததால், சுவாமியின் சந்நிதி தேர் அமைப்பில் உள்ளது. ஆயிரம் இதழ் கொண்ட பெற்றாமரை குளத்தின் அருகில் கண்டெடுக்கப்பட்டதால் கோமலவல்லி என்று பெயர் சூட்டினர். திருமால், ஆராவமுதன் என்ற திருநாமத்துடன் யானைகள், குதிரைகள் பூட்டிய தேரில் வைகுண்டத்தில் இருந்து வந்து தாயாரைத் திருமணம் செய்ததாக தல வரலாறு கூறுகிறது.

ராமஸ்வாமி கோவிலும் சக்ரபாணி கோவிலும் இவ்வூரில் உள்ளன. சக்கரபாணி அஷ்ட புஜங்களுடன் விளங்குகின்றார். இவருக்கும் இவரது தமையனாரெனக் கருதப்படும் சாரங்க பாணிக்கும் சேர்ந்து பல உத்ஸவங்கள் நடக்கின்றன.

திருமங்கையாழ்வார் அருளிய பாசுரம் (பெரிய திருமொழி):

“வளரும் வண்மையால் வையம் காக்க நின்ற

வாமனன் என்றும்கோவலன் என்றும்,

கிளரும் நான்மறைப் பொருள்கள் யாவும் ஆனான்

கேடிலான்குடந்தை ஆவியே.”

சக்ரபாணி மற்றும் சாரங்கபாணி ஆகிய இரு கோவில்களும் அருகருகே அமைந்துகுடந்தையின் (கும்பகோணம்) புகழைப் பாடுகின்றன.

பஞ்சரங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படும் இக்கோவில் கருவறையில் கோமளவல்லி தாயார் மற்றும் மகாலட்சுமியுடன் சாரங்கபாணி பெருமாள் அருள்பாலிக்கிறார். நாபியில் பிரம்மதேவர், தலைப் பகுதியில் சூரிய பகவான் உள்ளனர். கருவறையைச் சுற்றி நரசிம்ம அவதார சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.

 கையில் சாரங்கம் என்னும் வில்லினை ஏந்தி வந்ததால் இவருக்கு சாரங்கபாணி (சாரங்கம்- விஷ்ணுவின் வில்; பாணி- கை) என்ற பெயர் உண்டாயிற்று.

 மத்திய ஆலயம் எனப்படும் கருவறை, 100 தூண்கள் கொண்ட மண்டபம் வழியாக அணுகப்படுகிறது. தேரின் வடிவத்தில் உள்ள உள் கருவறை வெளிப்புற நுழைவாயிலை எதிர்கொள்ளும் துவார பாலகர்களால் பாதுகாக்கப்படுகிறது.  

 கோயிலின் மைய ஆலயத்தில், சாரங்கபாணியின் உருவம் பள்ளிகொண்ட தோரணையில் உள்ளது. இங்கு சாரங்கபாணி தலையைத் தனது வலது கையில் வைத்தவாறு, சயனத் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.  

 கருவறைக்கு உத்தராயண வாசல் மற்றும் தட்சிணாயன வாசல் என பெயரிடப்பட்ட இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஆறு மாத காலத்திற்குத் திறந்திருக்கும். ஜனவரி 15 முதல் ஜூலை 15 வரை, உத்தராயண வாசல் திறக்கப்படுகிறது. அதே போல, தட்சினாயண வாசல் ஆண்டின் பிற்பாதியில் திறக்கப்படுகிறது.

  கும்பகோணத்தில் உள்ள வைணவக் கோவில்களில் இக்கோவில் மிகப் பழமை வாய்ந்ததாகும். கலைநயம் மிக்க சிற்பங்கள், தூண்கள், மண்டபங்கள், ராஜ கோபுரங்கள், சோழர்களால் கட்டப்பட்டுள்ளன.

 கோவிலின் ராஜகோபுரம் 11 நிலைகளுடன், 173 அடி (53 மீ) உயரம் கொண்டது. மேலும் 5 சிறிய கோபுரங்கள் உள்ளன. பொற்றாமரைக் குளம் மேற்கு நுழைவாயிலுக்கு வெளியே அமைந்துள்ளது.

 பக்தனுக்கு சிரார்த்தம் செய்யும் பரந்தாமன்: லட்சுமி நாராயணசாமி என்னும் பக்தர் சாரங்கபாணியின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். இறுதிக்காலம் வரையில் சேவை செய்தார். இக்கோயிலின் கோபுரத்தைக் கட்டியவரும் இவரே. அவருக்குக் குழந்தைகள் இல்லை. ஒரு தீபாவளியன்று அவர் பெருமாளின் திருவடி அடைந்தார். சிரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால், நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால், தனக்கு சேவை செய்த தன் பக்தருக்குத் தானே மகனாக இருந்து, இறுதிச்சடங்குகள் செய்தார் சாரங்கபாணி.

இது நடந்த மறுநாள் கோயிலை திறந்து பார்த்தபோது, பெருமாள் ஈரவேட்டியுடனும், மாற்றிய பூணூலுடனும், தர்ப்பைகளுடனும் காரியம் செய்து வந்த கோலத்தில் காட்சியளித்தார். அதாவது பெருமாளே தன் பக்தனுக்கு ஈமக்கிரியை செய்து வைத்து கருணைக்கடலாக விளங்கினார்.

 தீபாவளியன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி, திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது.

 மறைந்து போயிருந்த நாலாயிர திவ்ய பிரபந்தத்தை ஸ்ரீ நாதமுனிகள் இந்தத் தலத்தின் பெருமாளை வேண்டி, அவரது அருளால் பிரபந்தங்களை மீட்டெடுத்தார்.

 .இத்தலத்திற்கு வந்த திருமழிசையாழ்வார், சுவாமியை வணங்கி மங்களாசாசனம் செய்தார். அப்போது அவர், நடந்த கால்கள் வலிக்கிறது என்றா பள்ளி கொண்டிருக்கிறாய்! என்ற பொருளில் பாடினார். அவருக்காக சுவாமி எழுந்தார். திருமாலின் அருளைக்கண்டு மகிழ்ந்த திருமழிசையாழ்வார், அப்படியே காட்சி கொடு! என்றார். சுவாமியும் அவ்வாறே அருளினார். முழுமையாக பள்ளி கொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை உத்தான சயனம் என்பர்.

 நாதமுனி என்பவர் சாரங்கபாணியை வணங்க வந்தார். அப்போது சில பக்தர்கள் சுவாமியின் பெருமையை ஓராயிரத்துள் இப்பத்தும் என்று சொல்லி பாடினர். இதைக்கேட்ட நாதமுனி, இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளதா! என வியந்து மீதி பாடல்களையும் பாடும்படி கேட்டார். ஆனால், அவர்களுக்கு தெரியவில்லை. அப்போது அவரது கனவில் தோன்றிய பெருமாள், ஆழ்வார்திருநகரி (நவதிருப்பதி – தூத்துக்குடி மாவட்டம்) சென்று, நம்மாழ்வரை வணங்க மீதி பாடல்கள் கிடைக்குமென்றார். அதன்படியே அவர் நம்மாழ்வாரை வணங்கினார். ஆயிரம் பாடல்கள் கிடைக்குமென வந்த இடத்தில், நாலாயிரம் பாடல்கள் கிடைத்தது. இவற்றை நாதமுனி தொகுத்தார். ****.

பாதாள சீனிவாசன் மேட்டு சீனிவாசன் :

திருமணத்திற்காக இத்தலம் வந்த பெருமாள், தாயாரிடம் விளையாடுவதற்காக பூமிக்கு கீழே ஒளிந்து கொண்டார். திருமாலைக் காணாத தாயார் கலக்கமடைந்தார். அதன்பிறகு அவள் முன்தோன்றிய சுவாமி, தாயாரை மணந்து கொண்டார். திருமால் ஒளிந்த இடம், பாதாள சீனிவாசர் சன்னதி என்ற பெயரில் உள்ளது. திருமணத்துக்குப் பிறகு, இவர், மேடான இடத்தில், மேட்டு சீனிவாசராக தாயார்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார்.

 ***

முக்கியப் பாசுரங்கள்

நம்மாழ்வார் (திருவாய்மொழி 5.8 – 11 பாசுரங்கள்):

“ஆராவமுதே! அடியேனின்னம் உழல்வேனோ?

நீராயலைந்து கரையுருக்குகின்ற நெடுமாலே!

சீரார் செந்நெல் கவரிவீசுஞ் செழுநீர்த் திருக்குடந்தை

ஏரார் கோலந் திகழக்கிடந்தாய்! கண்டேன் எம்மானே!”

(திருக்குடந்தை ஆராவமுதனின் அழகையும், கருணையையும் கண்டு, இனி இவரைப் பிரிய மனமின்றிப் பாடியது).

திவ்யதேச பாசுரங்கள்

175.  

ஒன்றே உரைப்பான்*  ஒரு சொல்லே சொல்லுவான்*

துன்று முடியான்*  துரியோதனன் பக்கல்*

சென்று அங்குப் பாரதம்*  கையெறிந்தானுக்குக்*

கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா

கடல்-நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா.

188.  

குடங்கள் எடுத்து ஏற விட்டுக்*  கூத்தாட வல்ல எம் கோவே!*

மடம் கொள் மதிமுகத்தாரை*  மால்செய வல்ல என் மைந்தா!*

இடந்திட்டு இரணியன் நெஞ்சை*  இரு பிளவு ஆக முன் கீண்டாய்!*

குடந்தைக் கிடந்த எம் கோவே!*  குருக்கத்திப் பூச் சூட்ட வாராய்.

628.  

பால் ஆலிலையில் துயில் கொண்ட*  பரமன் வலைப்பட்டு இருந்தேனை*

வேலால் துன்னம் பெய்தாற் போல்*  வேண்டிற்று எல்லாம் பேசாதே*

கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க்*  குடந்தைக் கிடந்த குடம் ஆடி*

நீலார் தண்ணந் துழாய் கொண்டு*  என் நெறி மென் குழல்மேல் சூட்டிரே*    

807.  

இலங்கை மன்னன் ஐந்தொடுஐந்து*  பைந்தலை நிலத்துக,*

கலங்க அன்று சென்றுகொன்று*  வென்றிகொண்ட வீரனே,*

விலங்குநூலர் வேதநாவர்*  நீதியான கேள்வியார்,*

வலங்கொளக் குடந்தையுள்*  கிடந்தமாலும் அல்லையே?

991.  

ஊரான் குடந்தை உத்தமன்*  ஒரு கால் இரு கால் சிலை வளையத்*

தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான்*  வற்றா வரு புனல் சூழ் பேரான்*

பேர் ஆயிரம் உடையான்*  பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான்*

தாரா வயல் சூழ்ந்த*  சாளக்கிராமம் அடை நெஞ்சே! 

1078.  

அன்று ஆயர் குலக் கொடியோடு*  அணி மாமலர் மங்கையொடு அன்பு அளவி* 

அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு*  உறையும் இடம் ஆவது*

இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை*  தடம் திகழ் கோவல்நகர்*

நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே.

1450.  

குழல் நிற வண்ண நின்கூறு கொண்ட*  தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்

விழ*  நனி மலை சிலை வளைவு செய்து*  அங்கு அழல் நிற அம்புஅதுஆனவனே!*

ஆண்டாய் உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்*

வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.  

1526.  

பொங்கு ஏறு நீள் சோதிப்*  பொன் ஆழி தன்னோடும்*

சங்கு ஏறு கோலத்*  தடக் கைப் பெருமானை*

கொங்கு ஏறு சோலைக்*  குடந்தைக் கிடந்தானை*

நம் கோனை நாடி*  நறையூரில் கண்டேனே.  (2)

1538.  

கிடந்த நம்பி குடந்தை மேவி*  கேழல் ஆய் உலகை

இடந்த நம்பி*  எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்*

கடந்த நம்பி கடி ஆர் இலங்கை*  உலகை ஈர் அடியால்*

நடந்த நம்பி நாமம் சொல்லில்*  நமோ நாராயணமே. 

2673.  

காரார் வரைகொங்கை கண்ணர் கடலுடுக்கை*

சீரர் சுடர்சுட்டி செங்களுழிப் பெராற்று*

பெரார மார்பின் பெருமா மழைக்குந்தல்*

நீராரவெலி நிலமங்கை என்னும்* இப்

பாரோர் சொலப்பட்ட மூன்னன்றெ*  (2) — அம்மூன்றும்

3310.  

ஆரா அமுதே! அடியேன் உடலம்*  நின்பால் அன்பாயே*

நீராய் அலைந்து கரைய*  உருக்குகின்ற நெடுமாலே*

சீர் ஆர் செந்நெல் கவரி வீசும்*  செழு நீர்த் திருக்குடந்தை*

ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய்!*  கண்டேன் எம்மானே!*  

3320.  

உழலை என்பில் பேய்ச்சி முலையூடு*  அவளை உயிர் உண்டான்*

கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட*  குருகூர்ச் சடகோபன்*

குழலின் மலியச் சொன்ன*  ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்*

மழலை தீர வல்லார்*  காமர் மான் ஏய் நோக்கியர்க்கே*. 

—-subham—

Tags-  Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-8;  திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள், சாரங்கபாணி கோயில் , கும்பகோணம்

திருப்புகழில் எழுகூற்றிருக்கை -Part 79 (Post No.15,630)

திருமங்கை ஆழ்வார் திருவெழுகூற்றிருக்கை: கும்பகோணம் சாரங்கபாணி கோயில் .

திருஞானசம்பந்தர் திருவெழுகூற்றிருக்கை: கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் 

79திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 79

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 79

****

Written by London Swaminathan

Post No. 15,630

Date uploaded in London –18 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

I have added Tevaram and Divya Prabandham Ezu Kootrirukkai pictures taken by me in two temples in Kumbakonam .

திருப்புகழில் எழுகூற்றிருக்கை

ஓருரு வாகிய தாரகப் பிரமத்

     தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி

          ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை

இருபிறப் பாளரி னொருவ னாயினை

     ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள்

நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து

          மூவரும் போந்து இருதாள் வேண்ட

               ஒருசிறை விடுத்தனை

ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்

     முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை

நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி

     ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை

ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய

     மும்மதன் தனக்கு மூத்தோ னாகி

          நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்

               அறுகு சூடிக் கிளையோ னாயினை

ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து

     முக்கட் சுடரினை இருவினை மருந்துக்

          கொருகுரு வாயினை

ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி

     முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்

          ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென

               எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை

அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்

     நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்

          டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை

காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த

     ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற

          ஏரகத் திறைவ னென இருந்தனையே.

……… சொல் விளக்கம் ………

ஓருருவாகிய தாரகப் பிரமத்து … ஒரு (1) பொருளாகிய

பிரணவமாம் முழுமுதலின்

ஒருவகைத் தோற்றத்து … (சிவனின் ஐந்து முகங்களோடு

அதோமுகமும் சேர்ந்த) ஒரு (1) வகையான தோற்றத்தில்,

இருமரபெய்தி … சக்தி சிவம் என்னும் இரண்டின் (2) லக்ஷணங்களும்

அமைந்து,

ஒன்றாய் ஒன்றி … அதுவே ஓர் (1) உருவாகச் சேர்ந்து,

இருவரிற் தோன்றி … சக்தி சிவம் என்ற இருவரிடமும் (2) தோன்றி,

மூவாதாயினை … மூப்பே (3) இல்லாது என்றும் இளமையோடு

விளங்குகிறாய்.

இருபிறப்பாளரின் … [உபநயனத்துக்கு முன்னும் பின்னும்] இரு (2)

பிறப்புக்களை உள்ள அந்தணர் குலத்தில்

ஒருவன் ஆயினை … ஒப்பற்ற ஒருவனாக (1) விளங்கிய

திருஞானசம்பந்தராய் அவதரித்தாய்.

ஓராச் செய்கையின் … [ஓரா – இரு பொருள் – ஒன்று (1) மற்றும்

தெரியாமல்] பிரணவத்தின் பொருள் தெரியாமல் விழித்த காரணமாக,

இருமையின் (2) முன்னாள் (3) … [இருமை – இரு பொருள் –

இரண்டு (2) மற்றும் கர்வம்) கர்வத்துடன் பிரம்மா முன்னாளில்

(முன்னாள் = இரு பொருள் – மூன்று (3) மற்றும் முன்பொரு நாள்]

நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து … நான்கு (4)

முகங்களுடைய பிரமனின் குடுமியை கணநேரத்தில் (கைகளால்

குட்டிக்) கலைத்து,

மூவரும் போந்து இருதாள் வேண்ட … அரி, அரன், இந்திரன்

ஆகிய மூவரும் (3) உன்னை அடைந்து உன்னிரு (2) பாதங்களில்

பணிந்து முறையிட்டு வேண்ட,

ஒருசிறை விடுத்தனை … பிரமனை நீ அடைத்த ஒரு (1)

சிறையினின்றும் விடுவித்தாய்.

ஒருநொடியதனில் இருசிறை மயிலின் … ஒரு (1)

நொடிப்பொழுதில் இரண்டு (2) சிறகுகள் உடைய மயிலில் ஏறி,

முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச … மூன்று (3) பக்கங்களிலும் நீர்

உள்ள கடல்களை ஆடையாக உடுத்தியுள்ள, முல்லை, குறிஞ்சி, மருதம்,

நெய்தல் என்ற நால் (4) வகையான நிலம் படைத்த இவ்வுலகமே அஞ்ச

(5) (அஞ்ச என்றால் ஐந்து -5- என்றும் பயப்பட என்றும் இரு பொருள்),

நீ வலம் செய்தனை … நீ உலகை வலம் வந்தாய்.

நால்வகை மருப்பின் … நான்கு (4) விதமான தந்தங்களை

உடையதும் (ஐராவத யானைக்கு நான்கு தந்தங்கள்),

மும்மதத்து … மூன்று (3) வகையான மதம் பிடிக்கக் கூடியதும்,

இருசெவி ஒருகை பொருப்பன் … இரண்டு (2) காதுகளையும், ஒரு

(1) துதிக்கையையும் கொண்ட மலை போன்ற ஐராவதத்தை உடைய

இந்திரனின்

மகளை வேட்டனை … மகளாகிய தேவயானையை மணம் செய்து

கொண்டனை.

ஒருவகை வடிவினில் … ஒரு (1) வகையான யானை வடிவிலே

இருவகைத்து ஆகிய … இள யானை, கிழ யானை என இரு (2)

வடிவிலும் வரவல்லதும்,

மும்மதன் தனக்கு … கன்ன மதம், கை மதம், வாய் மதம் என்ற மும்மத

(3) நீரும் பெருகி வந்த கிழ யானைக்கு

மூத்தோன் ஆகி … மூத்த சகோதரனாக* விளங்கினாய்.

நால்வாய் முகத்தோன் … [நால்வாய் = இரு பொருள் – நான்கு (4)

மற்றும் வாயினின்று] தொங்கும் துதிக்கை முகத்தோனும்,

ஐந்துகைக் கடவுள் … ஐங்கரங்களை (5) (தோளிலிருந்து நான்கு

கரங்களும், துதிக்கையும்) உடைய கடவுளும்,

அறுகு சூடிக்கு … அறுகம் [அறுகம் = இரு பொருள் – ஆறு (6) மற்றும்

அறுகம் (புல்)] புல்லைச் சூடியவனுமான கணபதிக்கு

இளையோன் ஆயினை … இளைய சகோதரன் என விளங்குகிறாய்.

ஐந்தெழுத்து அதனில் … நமசிவாய என்ற பஞ்ச (5) அட்சரத்தின்

மூலமாக

நான்மறை உணர்த்து … நான்கு (4) வேதங்களாலும் இவரே இறைவன்

என்று உணர்த்தப் பெறுபவரும்,

முக்கட் சுடரினை … சூரிய, சந்திர, அக்கினி என்னும் முச்சுடரை (3)

தம் கண்களாக உடையவரும்,

இருவினை மருந்துக்கு … நல்வினை, தீவினை இரண்டிற்கும் (2)

மருந்தாக விளங்குபவரும் ஆகிய சிவபிரானுக்கு

ஒரு குருவாயினை … ஒப்பற்ற ஒரு (1) குருநாதனாக அமைந்தாய்.

ஒருநாள் … முன்பொரு (1) நாள்

உமையிரு முலைப்பால் அருந்தி … உமாதேவியின் இரு மார்பிலும்

சுரந்த ஞானப்பாலைப் பருகி

முத்தமிழ் விரகன் … இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழிலும்

வல்லவனாகி,

நாற்கவி ராஜன் … நால்வகைக் கவியிலும்** அரசனாகி,

ஐம்புலக் கிழவன் … பஞ்ச இந்திரியங்களின் உணர்ச்சிகட்கு

அடிமைப்படாத உரிமையாளனாகி,

அறுமுகன் இவன் என … ஆறு முகங்களை உடைய ஷண்முக

மூர்த்தியே இவன்தான் என யாவரும் கூற

எழில்தரும் அழகுடன் … இளமை ததும்பும் அழகோடு

கழுமலத்து உதித்தனை … சீகாழிப்பதியில் திருஞானசம்பந்தனாகத்

தோன்றினாய்.

அறுமீன் பயந்தனை … கார்த்திகைப் பெண்களாகிய ஆறு

நக்ஷத்திரங்களும் பெற்ற புதல்வனாகினாய்.

ஐம் தரு வேந்தன் … கற்பகம், மந்தாரம், பாரிஜாதம், சந்தானம்,

அரிசந்தனம் என்ற ஐந்து தேவ விருட்சங்கள் இருக்கும்

தேவலோகத்துக்குச் சக்ரவர்த்தியாக விளங்கினாய்.

நான்மறைத் தோற்றத்து … நான்கு மறைகளைப் போன்று மிக

ரகசியமானதும்,

முத்தலைச் செஞ்சூட்டு … மூன்று பிரிவுகளோடு சிவந்த

கொண்டைகளை (சிகரங்களை) உடையதுமான

அன்றிலங் கிரி … அன்றில் பட்சி (கிரெளஞ்சம்) பெயர் கொண்ட

மலையை

இரு பிளவாக … இரண்டு கூறாகப் பிளக்குமாறு

ஒரு வேல் விடுத்தனை … ஒப்பற்ற உன் வேலினைச் செலுத்தினாய்.

காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த … காவிரியின் வட பாகத்தில் விளங்கும் சுவாமிமலையில் இருக்கும்

ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற … சரவணபவ என்னும்

உன் ஷடாக்ஷர மந்திரத்தை ஓதும் அந்தணர்கள் உனது பாத

கமலங்களைப் போற்ற,

ஏரகத்து இறைவன் என இருந்தனையே. … திருவேரகத்தின்

இறைவன் என்ற திருப்பெயருடன் எழுந்தருளி இருக்கின்றாய்.

குறிப்பு:

இந்த சிறப்பான திருவெழுகூற்றிருக்கை என்ற பாடல் தேர்த் தட்டு போல்

அமைந்துள்ளது. 1 முதல் 7 வரை படிப்படியாக கீழிருந்து மேல் பின்பு மேலிருந்து கீழ் என்று தேர் தட்டு மேலே செல்வதும், கீழே செல்வதுமாக அமைந்த அற்புதமான பாடல்.

                                            1

                                         1 2 1

                                      1 2 3 2 1

                                   1 2 3 4 3 2 1

                                1 2 3 4 5 4 3 2 1

                             1 2 3 4 5 6 5 4 3 2 1

                          1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1

                          . . . . . . . . . . . . . . . . . . . . . . .

                              இடையில் தேர் தட்டு

                          . . . . . . . . . . . . . . . . . . . . . . .

                          1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1

                             1 2 3 4 5 6 5 4 3 2 1

                                1 2 3 4 5 4 3 2 1

                                   1 2 3 4 3 2 1

                                      1 2 3 2 1

                                         1 2 1

                                            1

சில தமிழ்ச் சொற்கள் இரு பொருள் படும்படி அமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, மூவாதாயினை என்ற சொல்லுக்கு இரு பொருள் ..

(மூவா = மூன்று மற்றும் மூவா = வயதாகாமல் இளமையாக).

முருகனுக்காக வள்ளியை பயமுறுத்த விநாயகர் கிழ யானையாகி மதம் பெருக வந்தார். அப்படி வந்த யானை முருகனுக்குப் பின்பு தோன்றியதால், முருகன் இங்கு மூத்தவன் ஆகிறான்.

—subham—

Tags- திருப்புகழில் எழுகூற்றிருக்கை , Part 79,

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 40; இந்து மத கலைச்சொல் அகராதி-40 (Post No.15,460)

Written by London Swaminathan

Post No. 15,460

Date uploaded in Sydney, Australia –  27 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆங்கில எழுத்து K- ல் துவங்கும் சொற்கள்

Words beginning with “K”. (Tamil Version is posted here)

காளிதாசன்

காளிதாசன் உலக மகா கவிஞர்களில் ஒருவன். மிகப் பெரிய நாடகாசிரியன். அவனுடைய ஏழு நூல்கள் அவனுக்கு உலகப் உகழை ஈட்டித் தந்துள்ளன. காளிதாசன் உவமை மன்னன். ஆயிரத்துக்கும் அதிகமான உவமைகளை ரத்தினக் கற்கள் போல ஆங்காங்கு பொருத்தமாகப் பயன்படுத்தியுள்ளான். சங்க இலக்கிய நூல்களில் இவனுடைய 1250 உவமைகளில் அல்லது சொற்றொடர்களில் 225 வரை அப்படியே கையாளப்பட்டுள்ளன.

காளிதாசனின் முக்கிய நூல்கள்:

மகா காவியங்கள்:

ரகுவம்சம் (Raghuvamsa)

குமாரசம்பவம் (Kumarasambhava)

கண்ட காவியங்கள்:

மேகதூதம் (Meghaduta)

ருதுசம்காரம் (Ritusamhara)

நாடகங்கள்:

அபிஞான சாகுந்தலம் (Abhijnanashakuntalam)

மாளவிகாக்கினிமித்திரம் (Malavikagnimitram)

விக்ரமோர்வசியம் (Vikramorvashiyam)

இவைதவிர ஏராளமான ஸ்லோககங்களும் சுபாஷிதங்களும் அவர் பெயரில் வெளியாகியுள்ளன.

காளிதாசன் எழுதிய மேகதூதம் உலகின் முதல் பயண நூல் ஆகும். டூரிஸ்ட் கைடு புஸ்தகம் போல மத்திய இந்தியா முதல் இமை யா  மலை வரை வரிசையாக வருணிக்கிறார். மேலும் மேகதூதம் தான் தென் மேற்குப் பருவக்காற்றின் போக்கை வருணிக்கும் உலகத்தின் முதல் வானிலை இயல் நூலும் ஆகும் இதைப் பார்த்துதான்  கபிலர் என்னும் உலகப் புகழ சங்கத் புலவன் குறிஞ்சிப்பாட்டினை எழுதினார் என்று தமிழ்  அறிஞர் ரெவரென்ட்  ஜி யு போப் குறிப்பிட்டுள்ளார்.

காளிதாசனின் காலம்

காளிதாசனின் காலம் குறித்து நீண்ட காலமாக பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தன. கி. மு முதல் நூற்றாண்டு முதல் குப்தர்களின் காலமான நான்காம் நுற்றாண்டு வரை பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் பல தேதிகளைக் குறிப்பிட்டார்கள். ஆனால் அவைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் நல்ல சான்றுகள் சங்கத் தமிழ் இலக்கியத்தில் கிடைத்துள்ளன. இதன் மூலம் காளிதாசனின் காலம் சங்க காலத்துக்கு முன் என்பது தெள்ளத் தெளிவாகிறது. புகழ்பெற்ற வரலாற்று நிபுணரும் கலைத்துறை வல்லுனருமான சிவராம மூர்த்தி போன்றோர் காளிதாசனை விக்ரமாதித்தன் காலத்தில் வைத்தனர். சங்க இலக்கியமும் அவர் காலம் கி.மு முதல் நூற்றாண்டு என்பதை உறுதி செய்கிறது. டில்லி பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி சந்திரா ராஜன் வெளியிட்ட Penguin publication காளிதாசர் நூல்களின் மொழிபெயர்ப்பில் கூட அவரை சங்க காலத்துக்கு முன்னரே வைக்கின்றார்

காளிதாசன் ஒரு மாமேதை. அவன் பேசாத பொருள் இல்லை. அவனுடைய பூகோள அறிவோ மூக்கில் விரலை வைத்து வியக்கும் வண்ணம் உள்ளது. இமய மலையை பூமியை அளக்கவந்த அடிக் கோல் என்கிறார். வரை படம் இல்லாத காலத்தில் 1500 மைல் நீளமுள்ள இமயமலையை அவர் எப்படி இப்படி வருணித்தார் என்பது ஆச்சரியமே.

ஈரான் முதல் இந்தோனேஷியா வரை பல இடங்களை அவர் குறிப்பிடுகிறார். கப்பல் கவிழ்ந்தால் அந்த சொத்துயாருக்குப் போய்ச் சேரும் என்ற சட்ட விசயங்களை அலசுகிறார். ரகு வம்ச காவியத்தில் ஸ்வயம்வரத்துக்கு வந்த மன்னர்களை வருணிக்கையிலும் பாண்டிய மன்னனையும் ஆதித்ய முனிவரையும் குறிப்பீடுகிறார் ; தமிழ் இலக்கியத்தின் அஸ்திவாரமே அகத்தியர்தான்.

காளிதாசனின் வியப்பூட்டும் உவமைப் பட்டியல்!

காளிதாசனின் உவமைகள் உலகப் பிரசித்தி பெற்றவை. எண்ணிக்கையிலும் அதிகம்; தரத்திலும் அதிகம்; அவருடைய ஏழு நூல்களில் எங்கும் மிகப் பொருத்தமான உவமைகளைக் காணலாம். அவற்றில் இரு நூற்றுக்கும் மேலான உவமைகளை சங்கத் தமிழ்ப்புலவர்கள் எடுத்தாண்டதை, நான் எழுதிய  இரண்டு தமிழ், ஆங்கில நூல்கள் மூலமாகவும் அறியலாம் சுமார் 1250 உவமைகளை அவர் பயன்படுத்தியதால் உபமா காளிதாஸஸ்ய – உவமைக்கு காளிதாசன் என்று சம்ஸ்க்ருத மொழியில் ஒரு பொன்மொழி உள்ளது .

 அதனால்தான் அவரை உலக மஹா கவிஞன் என்றும் நாடக ஆசிரியன் என்றும் உவமைச் சக்ரவர்த்தி என்றும் இன்றும் அறிஞர்கள் போற்றுகின்றனர்.

;இந்த உவமைப் பட்டியலிலும் அவர் மன்னர்களை வேத கால தெய்வங்களுடன் ஒப்பிடுவதால் அவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவர் என்று தெளிவாகிறது;  சங்க நூல்களிலும் மன்னர்களை வேத கால தெய்வங்களுக்கும் பின்னர் முருகன் விஷ்ணு போன்ற தெய்வங்களுக்கும் ஒப்பிடுவது காலத்தைக் காட்டும் கண்ணாடியாகத் திகழ்கிறது.

***

கல்பம்

வேதப் படிப்பினைப் படிப்போருக்கு வேதங்களோடு ஆறு துணைப்பாடங்களையும் கற்க வேண்டும் என்று ஆயிரக்கண ஆண்டுகளுக்கு முன்னர் சிலபஸ் வகுத்துள்ளனர் . அவைகளில் ஒன்று கல்பம் . ஆறு பாடங்களை ஷட் அங்கம் என்று சொல்லுவார்கள். இதிலிருந்து சடங்கு என்ற தமிழ்ச் சொல் உண்டாக்கியது .

இன்னும் ஒரு பொருள் காலம் பற்றியது .

பிரம்மாவின் நூறு வயதில் ஒரு நாள் கல்பம் ஆகும்

இது 14 மன்வந்தரங்களைக் கொண்ட மிக நீண்ட கால அளவாகும்.

ஒரு கல்பம் என்பது 1,000 மகாயுகங்கள் அல்லது 14 மன்வந்தரங்கள், இது பிரம்மனுக்கு ஒரு நாள் (சுமார் 4.32 பில்லியன் மனித ஆண்டுகள்) ஆகும்.

வேதாங்கம்: வைதீகக் கர்மாக்கள், யாகம், திருமணம் போன்ற சடங்குகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற நெறிமுறைகளை (கல்ப சூத்திரங்கள்) விளக்கும் நூல்.

***

கற்பக விருட்சம்

இது  தேவலோகத்தில் உள்ளது;  கேட்டதையெல்லாம் வாரி வழங்கும் தெய்வீக மரம்  கல்பதரு மரம் ஆகும். பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய இது, செல்வத்தையும், நினைத்ததெல்லாவற்ரையும் தரும்  இதன் இன்னுமொரு பெயர் கல்பதரு.

பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது, காமதேனுவுடன் சேர்ந்து இந்த மரமும் தோன்றியது. இந்திரன் இந்த மரத்தைத் தனது தேவலோகத்திற்கு (சொர்க்கம்) எடுத்துச் சென்றான்

பாரிஜாதம்ஹரிசந்தனம்சந்தனம்மந்தாரம்கற்பக விருட்சம் ஆகிய ஐந்தும் தேவலோக மரங்கள்.

***

காம

ஆசை, விருப்பம் என்பது பொதுவான அர்த்தம் ஆயினும் பிற்காலத்தில் உடல் தொடர்பான காம உணர்வு என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டது சங்க இலக்கியம்திருக்குறள் முழுவதிலும் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லைக் காணலாம் அமோரஸ் AMOROUS என்ற ஆங்கிலச் சொல், இதிலிருந்து பிறந்தது .

***

காம சூத்திரம்

உலகின் முதல் உடலுறவு பற்றிய செக்ஸ் புஸ்தகம்  இது . வாத்ஸ்யாயனர் என்ற ரிஷி சம்ஸ்க்ருதத்தில் இந்த நூலினை சுமார் 2000  ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினார் இதில் உலகத்தில் முதல் முதலில் பெண்கள்  கல்வி பற்றிய சிலபஸ் உள்ளது 64  கலைகளையும் பெண்கள் கற்க வேண்டும் என்று இவர் பட்டியலிட்டுள்ளார் அவை சரஸ்வதேவியிடமிருந்து தோன்றிய கலைகள் பிற்காலத்தில் எல்லாப் புலவர்களும் ஆய கலைகள்64  என்று எழுதினர் வெறும் உடலுறவுபற்றி மட்டும் சொல்லாமல் அழகு  சாதனங்கள், காய கல்ப மூலிகைகள் பற்றியும் வாத்ஸ்யாயனர் எழுதியுள்ளார்.

***

காமன்

மன்மதனின் பெயர் .

***

காமதேனு

பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய  தெய்வீகப் பசு காமதேனு . இது வசிஷ்ட மகரிஷியிடம் இருந்தது ; கற்பக விருட்சம் என்ற மரம் போலவே நினைத்தை எல்லாம் உண்டாக்கும். காமதேனுவிற்கு சுரபி என்றும் நந்தினி என்றும் வேறு பெயர்களும் உண்டு. இதன் உடலில் தேவர்கள் அனைவரும் வசிப்பதாக ஐதீகம்; கோவில்களிலும் வீடுகளிலும் வாகனமாகவும் சிலையாகவும் விக்ரகமாகவியம் வழிபாட்டில் உள்ளது .

***

கர்மாவினை

வினைப் பயனை கர்மா என்பார்கள் இந்துமதம், பெளத்த மதம், சமண மதம் ஆகியன கர்ம வினைப்பயனிலும் மறுபிறப்பிலும் நம்பிக்கை வைத்துள்ளன

பல்லக்கினைச் சுமந்து செல்கின்றவனையும் பல்லக்கில் அமர்ந்து செல்பவனையும் பார்த்த உடனேயே தெரியும்- அறத்தின் பயன் என்ன என்று. புண்ணியம் செய்தவன் பல்லக்கில் பவனி வருவான். இது பரிமேல் அழகர் எழுதிய திருக்குறள் உரை.

ஒருவர் செய்த நல்லதும் கெட்டதும் ஏழு பிறப்புக்கும் தொடர்ந்து வரும் என்பது இந்த மூன்று மதங்களின் நம்பிக்கை

வினைகளை வெல்லலாம் என்று மாணிக்க வாசகர், திருமூலர் போன்றோர் பாடியுள்ளனர்

வினைகளை இந்துக்கள் மூன்றாக வகுத்துள்ளனர் அவை சஞ்சிதம்பிராரப்தம் ஆகாமியம் எனப்படும்.

சஞ்சிதம் (கடந்தகால சேமிப்பு)பிராரப்தம் (தற்போதைய அனுபவம்)மற்றும் ஆகாமியம் (எதிர்கால வினை) 

ஒருவன் செய்த செயல்கள் என்ன செய்யும் என்பதற்கான இந்துமத உவமையை  திருவள்ளுவர் அளித்தார்.

புத்தமத உவமையை கவுதம புத்தர் அளித்தார்.

வள்ளுவர் சொன்னார்,

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை

வீயாது அடிஉரைந்தற்று (குறள் 208)

பொருள்

தீய செயல்களைச் செய்தவர்கள் தீச்செயலின் பயனை அனுபவித்து அழிவது உறுதி. இது ஒருவனுடைய நிழல் அவனோடு பின் தொடர்ந்து சென்று அவன் அடியில் இருப்பது போன்றது.

ஒருவனுடைய நிழல் ஒருவனை எப்படித் தொடர்கிறதோ அப்படி அவன் செய்த செயல்களும் அவனுடன் வரும்.

புத்தர் சொன்னார்

ஒருவன் கெட்ட எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்குத் துன்பம், வண்டி மாட்டின் மீது அந்த வண்டிச் சக்கரங்கள் எப்படி தொடர்ந்து வருகின்றனவோ அப்படி வரும்.

 ஒருவன் நல்ல எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்கு இன்பம், ஒருவனுடைய நிழல் எப்படி அவனைத் தொடர்ந்து வருகின்றதோ அப்படி வரும்.- தம்மபதம் 1,2

வினை பற்றி சமணர்கள் -ஆயிரம் பசு உவமை !

இந்துக்கள் கர்ம பலனில் நம்பிக்கை கொண்டாலும் அதை நமக்கு அளிக்கும் ஆண்டவன் ஒருவன் உளன் என்று நம்புகின்றனர். சமணர்களோ ஒரு பசுக்கூட்ட உவமையைச்  சொல்லுவார்கள் ; ஆயிரம் பசுக்கள் இருந்தாலும் ஒரு கன்றுக்குட்டி எப்படி தாய்ப் பசுவைக் கண்டு  பிடிக்கிறதோ அப்படி ஒருவன் செய்த வினை, அவனைக் கண்டுபிடித்துவிடும் என்பது அவர்கள் கூற்று; சமணர்கள் இயற்றிய நாலடியாரில் இந்தப்   பாட்டு வருகிறது :

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று

வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்

பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த

கிழவனை நாடிக் கொளற்கு.—நாலடியார்

(பொ-ள்.) பல ஆ (பசு)க்களின் இடையில் செலுத்திவிடப்பட்டாலும் ;  இளைய ஆன்கன்று,  தன் தாய் ஆ(பசு)வினைத் தேடித் தெரிந்தடைதலை, போன்ற தாகும்; பிறப்புக்கள் தோறும் தொன்று தொட்டுவரும் பழவினையும்,  தன்னைச் செய்த உரிமையாளனைத் தேடி அடையும் வகையில், அத்தகைய தன்மையுடையதேயாகும்.

(க-து.) பழவினை தனக்குரியவனைத் தவறாது சென்று பற்றும்.

***

கர்மேந்திரியங்கள்

கர்மேந்திரியங்கள் (செயற்கருவிகள்) என்பவை மனித உடல் செயல்களைச் செய்ய உதவும் ஐந்து முக்கிய உறுப்புகள் ஆகும். வாக்கு, கைகள், கால்கள், மலத்துழை, மற்றும் பிறப்புறுப்பு ஆகிய ஐந்தும் கர்மேந்திரியங்கள் ஆகும், அவை முறையே பேசுதல், கையாளுதல், நடத்தல், கழிவகற்றல் மற்றும் இன்புறுதல் ஆகிய செயல்களைச் செய்கின்றன

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவை ஐம்புலன்களின் மூலம் அறியப்படும் ஐந்து உணர்வுகளாகும். இவை முறையே நாவினால் சுவைத்தல், கண்ணால் பார்த்தல், உடலால் தொடுதல், காதால் கேட்டல், மூக்கால் முகர்தல் ஆகியவற்றைக் குறிக்கின்றன. இவற்றை ஆராய்ந்து கட்டுப்படுத்துபவன் அறிவில் உலகம் அடங்கும் என்பது திருவள்ளுவரின் குறள் (27) கருத்தாகும்.

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு-27

***

கர்த்தா

கர்த்தா (Karta) என்பது ஒரு செயலைச் செய்பவர், படைப்பவர், அல்லது மூல காரணத்தைக் குறிக்கும் சொல்லாகும். ஆன்மீகத்தில் இது கடவுள், இறைவன், அல்லது தலைவனைக் குறிக்கப் பயன்படுகிறது.

சம்ஸ்க்ருத இலக்கணத்தில் (வ்யாகரணம்), கர்த்தா (Karta – कर्ता) என்பது ஒரு வாக்கியத்தில் வினையைச் செய்பவரை (Subject/Doer) குறிக்கும். இது காரகங்களில் (Karaka – வேற்றுமைப் பொருட்கள்) முதன்மையானது. 

***

காவியம்

தமிழ் இலக்கியத்தில் ஐம்பெரும் காப்பியங்கள்: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.

ஐஞ்சிறு காப்பியங்கள்: சூளாமணி, நீலகேசி, உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதா காவியம்.

சம்ஸ்க்ருத மஹா காவியங்கள்

வால்மீகி ராமாயணம் ஆதிகாவியமாகப் போற்றப்படுகிறது

குமாரசம்பவம், ரகுவம்சம், கிராதார்ஜுனீயம், சிசுபாலவதம், மற்றும் நைஷதசரிதம் ஆகியவை ஸம்ஸ்க்ருதத்தின் பஞ்ச மஹா காவியங்கள்

ஹேமசந்திரரின் சூத்திரம்

காவ்யமானந்தாய யஷஸ்ச காந்தாதுல்யதயோபதேஷாய ச I

(ஆனந்தம் – மகிழ்ச்சி; யஷஸ் –புகழ்; காந்தா – மனைவி; துல்யம் – சமமாக;

உபதேசம் – அறிவுரை)

இப்படி ஹேமசந்திர்ர் காவ்யானுசாஸனத்தில் ( I -3) காவியத்தின் பிரயோஜனத்தை ஒரு சூத்திரமாகக் கூறுகிறார்.

ஹேமசந்திரர் கூறிய மூன்றைத் தவிர, ஆசார்ய மம்மட பட்டர் என்னும் புகழ்பெற்ற அறிஞர், செல்வம், பண்பாடு மற்றும் அறிவு, தீமையை அறவே நீக்கிக் கொள்ளும் பண்பு ஆகிய இன்னும் மூன்றையும் ஒரு காவியம் தருகிறது என்கிறார். இந்த உரைகல்லில் தேருகின்றவையே காவியம். 

***

கதிர  மரம் / கருங்காலி

Khadira (खदिर) is a Sanskrit word referring to the “Catechu tree” tree from the Fabaceae family, and is used throughout Ayurvedic literature such as the Caraka-saṃhitā.

சரக சம்ஹிதை முதலிய ஆயுர்வேத நூல்கள்  கருங்காலி மரத்தின் மருத்துவப் பயன்களை எடுத்துரைக்கின்றன சம்ஸ்க்ருதத்தில் கதிர என்றும் தாவரவியலில் Acacia catechu அக்கேசியா கடேச்சு என்றும் சொல்லுவார்

திருவாதிரை நட்சத்திரத்தின் விருட்சம் கருங்காலி. செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்தது. கருங்காலி மரம் (Ebony Tree) மருத்துவ மற்றும் ஆன்மீக நன்மைகள் கொண்ட, மிகவும் உறுதியான மரமாகும்.

***

கரகம் காவடி

இவை இரண்டும் தமிழ்நாட்டின் கிராமீய நடனங்கள் ஆகும்

காவடி எடுக்கும் வழக்கத்தை நாம் எல்லோரும் அறிவோம். முருகனுக்கு காவடி எடுப்பதைப் பார்க்கிறோம். இதே போல காவடி பட எழுத்து சிந்து சமவெளி முத்திரையிலும் கிடைத்திருகிறது. உடனே இதை தமிழ் வழக்காகவும் ஆகையால் சிந்து சமவெளியினர் திராவிடரே என்றும் இனபேதம் காட்டி கட்டுரை எழுதிவிட்டார்கள். உண்மையில் இது பாரதம் முழுதும் உள்ள வழக்கம். சொல்லப்போனால் காவடி என்பது உலகம் முழுதும் இருக்கிறது.

நம் தமிழர்கள் ஆண்டுதோறும் முருகனுக்குக் காவடி எடுப்பதுபோலவே வடக்கேயுள்ள ஹிந்துக்கள் சிவபெருமானை வழிபட ஹரித்வாருக்கு லட்சக் கணக்கில் காவடி எடுக்கிறார்கள். ஹரித்வாரில் கங்கை நதியை வணங்கிவிட்டு இரு புறமும் தொங்கும் பானைகளில் கங்காஜலம் கொண்டு போகிறார்கள். இப்படி காவடியில் தண்ணீர் கொண்டு போகும் வழக்கம் இதாலி, மேரற்கிந்தியத் தீவுகள், சீனா போன்ற பல நாடுகளில் இருந்திருக்கிறது. சாலைப் போகுவரத்து மற்றும் வாஹன வசதிகள் இல்லாத இடங்களில் காவடி இருப்பது சகஜம்.

மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் சீஷெல்ஸ் போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தைப்  பூசம் முதலிய நாட்களில் காவடி எடுத்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர் மலேசியா பத்துமலை முருகனைத் தரிசிக்க லட்சக்கணக்கில் செல்வதால் அன்று அரசாங்கம் விடுமுறை அறிவித்துள்ளது

தமிழ் நாட்டில் முருகனுக்கு விசேஷமான தினங்களில் பக்தர்கள் காவடி எடுக்கின்றனர் ஏதேனும் வேண்டுதலை நிறைவேற்றவோ நேர்த்திக் கடனாகவோ காவடி எடுக்கிறார்கள் அப்போது பலரும் பரவச நிலையை அடைகின்றதனார் வெற்றி வேல்  என்ற கோஷமும் அரோஹரா என்ற கோஷமும் விண்ணதிர முழங்கப்படும்.

காவடிகளில் பல வகை உண்டு அப்போது முதுகில் கொக்கியைக் குத்தி க்கொண்டும் வாயில் வேலைக்குத்திக்கொண்டும் காவடி எடுக்கிறார்கள்

***

கரகம்

தமிழ் நாட்டில் ஆண்களும் பெண்களும் கரகம் ஆடுகிறார்கள் ; அப்போது தலையில் குடம் அல்லது மார்க் கம்பத்தை வைத்துக்கொண்டு அதைக் கீ ழே விழாமல் ஆடுவர் இது தவிர கீழே  உருளும்  மரக்கட்டையிலும் ஆணிகளிலும் நின்றும் கூட ஆடுகின்றனர்  கோவில் திருவிழாக்களில் மட்டுமின்றி பெரிய ஊர்வலங்களிலும் கரகாட்டத்தை  ஏற்பாடு செய்கிறார்கள். 

–subham—

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 40; இந்து மத கலைச்சொல் அகராதி-40  , காளிதாசன், காவியம், கரகம் காவடி, கர்மா, வினைகளின் வகைகள், pictures

நோய்கள், காசு பறிக்கும்  டாக்டர்கள் பற்றி அருணகிரிநாதர்!-9 (Post.15,388)


Written by London Swaminathan

Post No. 15,388

Date uploaded in Sydney, Australia –  3 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அரிய செய்திகள்- 9

அருணகிரி நாதர் சொல் அழகும்பொருள் வளமும்- Part 9

அறமும் நிறமும் அயிலும் மயிலும் … தர்மமும், செந்நிறமும்,

வேலும், மயிலும்,

அழகும் உடைய பெருமாளே. … அழகும் உடைய பெருமாளே.

***

நோய்கள், டாக்டர்கள் பற்றி

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்

     விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு

          சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி …… யணுகாதே

தலமிசை யதற்கான பேரோடு கூறியிது

     பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்

          சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் …… விதியாதே

உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்

     வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண

          முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க …… ளிருபாதம்

உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்

     வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ

          உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை …… வரவேணும்

அலைகட லடைத்தேம காகோர ராவணனை

     மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை

          அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு …… மருகோனே

அறுகினை முடித்தோனை யாதார மானவனை

     மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்

          அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் …… வருவோனே

பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை

     யிருசர ணவித்தார வேலாயு தாவுயர்செய்

          பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு …… மணவாளா

பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள் துயில்

     வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்

          பழநிவ ருகற்பூர கோலாக லாவமரர் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

டயாபடீஸ் நோய் வரக்கூடாது

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம் … தலைவலிவசிய

மருந்தால் வரும் நோய், மஞ்சட்காமாலை, ரத்தசோகை, ஜுரம்,

விழிவலி வறட்சூலை காயாசு வாசம் … கண்வலிவறள் என்ற

வயிற்றுவலி, காசநோய், மூச்சுப்பிடிப்பு,

வெகுசலமிகு விஷப்பாக மாயாவி காரபிணியணுகாதே …

நீரிழிவு, கொடிய விஷ நோய்கள், உலகமாயையால் வரும்

விகாரமான பிணிகள் முதலியவை என்னை அணுகாதவண்ணம்,

காசு பறிக்கும் டாக்டர்கள்

தலமிசை யதற்கான பேரோடு கூறி … பூமியில் அந்த நோய்கள்

நீங்குவதற்காக சில வைத்தியர்களிடம் சொல்லி,

யிது பரிகரி யெனக்காது கேளாது போலுமவர் … இது

நீங்குவதற்குப் பரிகாரம் யாதெனக் கேட்டால், காது கேளாததுபோலச் செல்பவர் சிலர்,

சரியும் வயதுக்கேது தாரீர்சொலீரெனவும் விதியாதே …

சாகப்போகும் வயதாகிவிட்டதே உமக்கு, எவ்வளவு பணம் தருவீரெனக் கேட்பவர் சிலர் என்று பிறர் கூறும்படியான விதியை என் தலையில் எழுதாமல்,

****

உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர் … ஊக்கக்குறைவு

இன்றி, விருப்பமுடன் பெரிய பூந்தோட்டத்தில் பூத்த மணமுள்ள

மலர்களை,

வகைவகை யெடுத்தே தொடா மாலிகாபரணம் … விதவிதமாகப்

பறித்துத் தொடுத்து மாலை வகைகளில் ஆபரணங்கள் போல் அமைத்து

உனதடியி னிற்சூடவேநாடு மாதவர்கள் இருபாதம் …

உன்னடியில் சூட்டுதற்கு விரும்பும் சிறந்த தவசிரேஷ்டர்களின் இரு

பாதங்களையும்

உளமது தரித்தே வினாவோடு பாடியருள் … மனத்தினில்

தரித்தே, ஆய்ந்த அறிவுடன் பாடி, உன்னருளால்

வழிபட எனக்கே தயாவோடு தாளுதவ … உன்னை

வழிபடுவதற்கு, என்மீது அன்பு கூர்ந்து, உன் திருவடிகளைத் தந்துதவ

உரகமது எடுத்தாடு மேகார மீதின்மிசை வரவேணும் …

பாம்பைத் தூக்கி எறிந்து ஆடும் மயிலின் மீது வந்தருள வேண்டும்.

*****

மஹா கோர ராவணன்

அலைகடல் அடைத்தே மகாகோர ராவணனை … அலைகடலை

அணையிட்டு அடைத்து, மகா கோரமான ராவவணனுடைய

மணிமுடி துணித்து ஆவியேயான ஜானகியை … மணிமுடிகளை

அறுத்துத்தள்ளி, உயிருக்கு ஒப்பான சீதாதேவியை

அடலுடன் அழைத்தேகொள் மாயோனை மாமனெனு

மருகோனே … தன் தோள்வலியால் அழைத்துக்கொண்ட மாயவனான திருமாலை மாமன் என்று அழைக்கும் மருகனே,

****

அறுகினை முடித்தோனை யாதார மானவனை … அறுகம்புல்லை

சடையில் முடித்தவனும், உயிர்கட்கெல்லாம் ஆதாரமானவனும்,

மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம் … மழு, மான்

இவைகளை ஏந்தியவனும், மகா காளி வெட்கும்படியாக முன்னர்

அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும்

வருவோனே … சபைதனிலே நடனம் ஆடியவனான சிவபிரானை,

சிறந்த தந்தையே என்றழைக்கவும் வந்தவனே,

****

பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை … பல கலைகளைப்

படித்து ஓதும் கவிஞர்களின் நாவிலே வாசம் செய்கின்ற

இருசரண வித்தார வேலாயுதா … இரு திருவடிகளை உடைய

வித்தகனே, வேலாயுதனே,

உயர்செய் பரண்மிசை குறப்பாவை … உயரத்தில் கட்டப்பட்ட

பரணின் மீது இருந்த குறப்பெண் வள்ளியின்

தோள்மேவ மோகமுறு மணவாளா … தோள்களைத் தழுவ மிக்க

ஆசை கொண்ட மணவாளனே,

பதுமவயலிற் பூகமீதே வரால்கள் துயில் வருபுனல்

பெருக்காறு … தாமரை மலர்கின்ற வயலிலும், பாக்கு மரங்களின் மீதும், வரால் மீன்கள் உறங்கும்படி வரும் நீர்ப்பெருக்கை உடைய ஆறாகிய

திருப்புகழில் பூகோள பாடம்

காவேரி சூழவளர் பழநிவரு … காவேரி சூழ விளங்கும் பழநியில் எழுந்தருளிய,

****

பழனி மலையைச் சுற்றி ஓடும் நதி

பழனி மலையைச் சுற்றி ஓடும் முக்கிய நதி சண்முக நதி ஆகும். இது அமராவதி ஆற்றின் துணையாறாகும், மேலும் இந்த நதி பழனி மலைச் சரிவுகளில் உற்பத்தியாகி, பழனி நகரத்திற்கு அருகில் உள்ள சக்தி கிரி மற்றும் சிவகிரி மலைகளுக்கு அருகில் பாய்கிறது.

நதியின் பெயர்: சண்முக நதி (Shanmuganathi).

உற்பத்தி: பழனி மலைச் சரிவுகள் (Palani Hills).

இது அமராவதி ஆற்றின் ஒரு துணையாறு அது  இறுதியில் காவிரியில் கலக்கிறது.

பாயும் இடம்: பழனி முருகர் கோயில் அமைந்துள்ள அடிவாரத்தில் இந்த நதி பாய்கிறது.

மேலும், பழனி மலைப்பகுதிகள் Vaigai மற்றும் Amaravathi ஆறுகளின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதியாகவும் விளங்குகிறது

****

கற்பூர கோலாகலா அமரர் பெருமாளே. … பச்சைக் கற்பூர மணம்

கமழும் அலங்கார ஆடம்பரனே, தேவர்களின் பெருமாளே.

***

பெரிய புராணக் கதை , சோழநாட்டின் பெருமை

நாத விந்து கலாதீ நமோநம … லிங்கம், பீடம் (சிவ சக்தி) ஆகிய

தத்துவங்களுக்கு மூலப்பொருளே, போற்றி, போற்றி,

வேத மந்த்ர சொரூபா நமோநம … வேதங்கள், மந்திரங்கள்,

இவற்றின் உருவமாக விளங்குபவனே, போற்றி, போற்றி,

ஞான பண்டித ஸாமீ நமோநம … பேரறிவுக்குத் தலைவனான

தெய்வமே, போற்றி, போற்றி,வெகு கோடி நாம சம்பு குமாரா நமோநம … பல கோடிக்கணக்கான திருப்பெயர்களைக் கொண்ட சிவனின் புதல்வனே, போற்றி, போற்றி

போக அந்தரி பாலா நமோநம … (அனைத்து உயிர்களுக்கெல்லாம்)

இன்பங்களை அளிக்கும் பார்வதியின் குமாரனே, போற்றி, போற்றி

நாக பந்த மயூரா நமோநம … தன் காலினால் பாம்பை அடக்கிக்

கட்டியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே, போற்றி, போற்றி,

பரசூரர் சேத தண்ட விநோதா நமோநம … எதிரிகளான

சூரர்களை தண்டித்து அழிக்கும் திருவிளையாடல் புரிந்தவனே, போற்றி, போற்றி,

கீத கிண்கிணி பாதா நமோநம … இசை ஒலி எழுப்பும்

சதங்கைகளை உடைய திருப்பாதங்களைக் கொண்டவனே, போற்றி,

போற்றி

தீர சம்ப்ரம வீரா நமோநம … மிகவும் பராக்ரமசாலியான

போர்வீரனே, போற்றி, போற்றி,

கிரிராஜ … மலைகளுக்கெல்லாம் அரசனே,

தீப மங்கள ஜோதீ நமோநம … திருவிளக்குகளின் மங்களகரமான

ஒளியேபோற்றிபோற்றி,

தூய அம்பல லீலா நமோநம … பரிசுத்தமான பரவெளியில் லீலைகள்புரிபவனே, போற்றி, போற்றி,

தேவ குஞ்சரி பாகா நமோநம … தேவயானையை மணாட்டியாகப்

பக்கத்தில் கொண்டவனே, போற்றி, போற்றி,

அருள்தாராய் … உனது திருவருளைக் கொடுத்து அருள்வாயாக.

சோழநாட்டின் பெருமை

ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார

நீதியும் … தானம், பல சிறப்பான பூஜைகள் செய்தல், நல்ல நூல்களைப் படித்தல், சற்குணம், ஒழுக்கம், நியாயம்,

ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத … கருணை, குருவின்

திருப்பாதங்களைச் சேவித்தல் ஆகியவற்றை மறவாமல் கடைப்பிடிக்கும் (சோழமண்டலத்தில்),

ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை … ஏழு உலகங்களில்

உள்ளோரும் மெச்சுகின்ற காவேரி நதியால் செழித்து வளமுறும்

சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடாளும்

நாயக … சோழ மண்டலத்தில், மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்

ராஜகெம்பீரம் என்னும் நாட்டை* ஆளுகின்ற அரசனே,

வயலூரா … வயலூருக்குத் தலைவா,

ஆதரம் பயில் ஆரூரர் தோழமை … தன்மீது அன்புவைத்த

திருவாரூராரின் (சுந்தரமூர்த்திப் பெருமானது) நட்பை

சேர்தல் கொண்டவரோடே முனாளினில் … நாடியவராய்,

அவருடன் முன்பொருநாள்,

ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி … ஆடலில் சிறந்த,

விரும்பத்தக்க குதிரை மீது ஏறி கயிலை மாமலைக்குப் போய் (அங்கே)

ஆதி அந்தவுலாவாசு பாடிய … ஆதி உலா எனப்படும் அழகிய

(கயிலாய ஞானக்) கலிவெண்பாவை பாடலாகப் பாடிய

சேரர் கொங்குவை காவூர் நனாடதில் … சேரர் பெருமானாம்

சேரமான் பெருமான்** நாயனாருக்கு உரித்தான கொங்கு மண்டலத்து

வைகாவூர் என்னும் சிறந்த நாட்டுப் பகுதியில் இருக்கும்

ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே. … திரு

ஆவினன்குடி (பழநிமலையின் அடிவாரம்) என்னும் தலத்தில் வாழ்வு

கொண்டிருக்கும், தேவர்களின் பெருமாளே.

இது திருக்கற்குடி‘ அல்லது உய்யக்கொண்டான்‘ என்று வழங்கப்படும். திருச்சிக்கு அருகில் வயலூருக்குப் போகும் வழியில் உள்ளது.

** கொங்கு நாட்டின் மன்னனாக 1,150 ஆண்டுகளுக்கு முன்பு சேரமான் பெருமான் ஆண்டார். அவர் சைவக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரரின் நண்பர். சிவபிரான் சுந்தரரை கயிலைக்கு அழைத்தபோதுசுந்தரர் தமது நண்பரும் உடன்வர வேண்டுமென விரும்பினார். சேரமான் குதிரையில் ஏறி கயிலைக்கு விரைந்து சென்றார். சுந்தரர் இன்னும் வராததால் கயிலையின் கதவு அடைக்கப்பட்டிருந்தது. அப்போது சேரமான் ஆதி உலா‘ என்ற பாடலைப் பாடகயிலையின் கதவுகள் திறந்தன. சுந்தரருடன் சேரமான் கயிலைப் பதம் சேர்ந்தார். – பெரிய புராணம்.

***

பல்லக்கில் பவனி வரும் போலிப் புலவர்களின் தோற்றம் !

நிகமம் எனில் ஒன்றும் அற்று நாள்தொறு(ம்) நெருடு கவி

கொண்டு வித்தை பேசிய … வேதப் பொருள் என்றால் ஒரு சிறிதும்

தெரியாமல், தினமும் (அங்குமிங்கும் கற்ற) மொழிகளைத் திரித்து இயற்றிய

நிழலர் சிறு புன் சொல் கற்று வீறு உள பெயர் கூறா … போலிக்

கவிகள் சில அற்பச் சொற்களைக் கற்று, ஆடம்பரமான பட்டப் பெயர்களை வைத்துக்கொண்டு,

நெளிய முது தண்டு சத்ர(ம்) சாமர(ம்) நிபிடம் இட வந்து …

(தூக்குவோர்களுடைய முதுகு) நெளியத் தக்கக் கனத்த பல்லக்கு, குடை, சாமரம் (இவைகள் பரிசாகப் பெற்று) நெருங்கும்படியாக (உலவிக் கொண்டு) வந்து,

கைக்கு மோதிர நெடுகி அதி குண்டல ப்ரதாபமும்

உடையோராய் … கையில் மோதிரமும், (காதில்) நீண்டு தொங்கும் ஒளி மிக்க குண்டலங்களைத் தாங்கிய சிறப்பும் உடையவர்களாய்,

முகம் ஒரு சம்பு மிக்க நூல்களும் முது மொழியும் வந்து

இருக்குமோ எனில் … அவர்களது முகமானதுஒரு செய்யுளும்

வசனமும் கலந்த நூல்களும், திருக்குறள் போன்ற பழைய நூல்களும் விளக்கக் கூடுமோ என்று கேட்டால்,

முடிவில் அவை ஒன்றும் அற்று வேறொரு நிறமாகி முறியும்

அவர் தங்கள் வித்தை தான் இது … அவை ஒன்றும் தெரியாததால்

வெட்கத்தால் (முகம்) வெளுத்து, இறுதியில் மனம் குலைந்து

போனவர்களுடைய வித்தைதான் இக்கல்வி எல்லாம்.

முடியவு(ம்) உனை நின்று பத்தியால் மிக மொழியும் வளர்

செம் சொல் வர்க்கமே வர அருள்வாயே … (இத்தகைய கல்வி

போதும்,) இது முடிவதாக (இனியேனும்) உன்னை மனம் ஒரு வழியில்நின்ற பக்தியுடன் நிரம்பத் துதிப்பதற்கு, மேலும் மேலும் எழுகின்ற செவ்விய சொற்களின் பெருக்கே எனக்கு வரும்படி அருள்வாயாக.

To be continued……………………………

Tags- திருப்புகழில் ,அருணகிரி நாதர், சொல் அழகும்பொருள் வளமும்- Part 9, அரிய செய்திகள்-டாக்டர்கள்நோய்கள்காவேரிசோழநாடுபோலிப்  புலவர்கள்

அப்பர் தேவாரத்தில் புவியியல்: நதிகள், மலைகள், கடல்கள்! (Post 15,163)

Written by London Swaminathan

Post No. 15,163

Date uploaded in London –  8 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

அப்பர் தேவாரத்தில் நவரத்தினங்களைக் கண்டோம் . இதோ மேலும் ஒரு கட்டுரை

நால்வர் என்று போற்றப்படும் அப்பர் (திருநாவுக்கரசர்), சம்பந்தர், சுந்தரர் ,மாணிக்க வாசகர் ஆகியோரில் அதிகம் பயணம் செய்தவர் அப்பர் சுவாமிகள்தான். ஏனைய மூவரும் அந்தக் காலத் தமிழ் நாட்டுக்குள்ளேயே வலம் வந்தவர்கள் தான். சமண மதத்தைத் தழுவியதால் அப்பர், பீஹார் மாநிலத்திலுள்ள பாட்னா (பாடலிபுத்திரம்) வரை  சென்றிருக்கிறார். இதை அவரது பாடல்களில் காண முடிகிறது.

அடைவுத் திருத்தாண்டகம்  என்ற அற்புதமான பாடலில் அப்பர் தரும் விஷயங்களை வைத்து மட்டுமே தனியான புஸ்தகம் எழுதலாம். அவ்வளவு விஷயங்களை அடுக்கடுக்காகப்   பாடுகிறார். சிவன் தொடர்பான ஊர்களே இவ்வளவு இருக்குமானால்  சக்திக் கேந்திரங்கள் திருமால் திவ்ய க்ஷேத்ரங்கள் என்பன எவ்வளவு என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்

அப்பரின் புவியியல் அறிவுக்கு ஈடு இணை இல்லை! புவியியல் விஷயங்களை ,செய்திகளை மட்டும் காண்போம்

ஆறாம் திருமுறையை மட்டும் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டு பூகோள வர்ணனைகளைக் காண்போம்.

1

 திருநாவுக்கரசர்   தேவாரம்

பொது -அடைவுத் திருத்தாண்டகம் – திருத்தாண்டகம்

பள்ளி என்று முடியும் ஊர்ப்  பெயர்களையும் , வீரட்டானத் தலங்களையும்,  குடி , ஊர் என்று முடியும் ஊர்ப்  பெயர்களையும் தந்த பின்னர் காடுகளின் பெயர்களை பாடுகிறார் :

மலையார் தம் மகளொடு மாதேவன் சேரும் மறைக்காடு; வண்பொழில் சூழ் தலைச்சங்காடு;

தலையாலங்காடு; தடங்கடல் சூழ் அம் தண் சாய்க்காடு; தெள்ளு புனல் கொள்ளிக்காடு;

பலர் பாடும் பழையனூர் ஆலங்காடு; பனங்காடு; பாவையர்கள் பாவம் நீங்க,

விலை ஆடும் வளை திளைக்க, குடையும் பொய்கை வெண்காடும்; அடைய வினை வேறு ஆம் அன்றே.

பின்னர் வாயில், ஈச்வரம் என்று முடியும் ஊர்ப்  பெயர்களையும் தந்துவிட்டு மலைகளையும், ஆறுகளையும்  பாடுகிறார்

****

2

கந்த மாதனம், கயிலைமலை, கேதாரம், காளத்தி, கழுக்குன்றம், கண் ஆர் அண்ணா,

மந்தம் ஆம் பொழில் சாரல் வடபர்ப்பதம், மகேந்திர மா மலை நீலம், ஏமகூடம்

விந்த மா மலை, வேதம், சையம், மிக்க வியன் பொதியில் மலை, மேரு, உதயம், அத்தம்,

இந்து சேகரன் உறையும் மலைகள் மற்றும் ஏத்துவோம், இடர் கெட நின்று ஏத்துவோமே.

***

3

நள்ளாறும், பழையாறும், கோட்டாற்றோடு, நலம் திகழும் நாலாறும், திரு ஐயாறும்,

தெள்ளாறும்; வளைகுளமும், தளிக்குளமும், நல் இடைக்குளமும், திருக்குளத்தோடு; அஞ்சைக்களம்,

விள்ளாத நெடுங்களம், வேட்களம்; நெல்லிக்கா, கோலக்கா, ஆனைக்கா, வியன் கோடி(க்)கா;

கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும், குளம், களம், கா, என அனைத்தும் கூறுவோமே.

***

4

பின்னர் துறைகளைப்பாடுகிறார்

கயிலாயமலை எடுத்தான் கரங்களோடு சிரங்கள் உரம் நெரியக் கால்விரலால் செற்றோன்

பயில்வு ஆய பராய்த்துறை, தென்பாலைத் துறை, பண்டு எழுவர் தவத்துறை, வெண்துறை, பைம்பொழில்

குயில் ஆலந்துறை, சோற்றுத்துறை, பூந்துறை, பெருந்துறையும், குரங்காடு துறையினோடு,

மயிலாடுதுறை, கடம்பந்துறை, ஆவடுதுறை, மற்றும் துறை அனைத்தும் வணங்குவோமே.

துறை என்பது ஆற்றில் புனித நீராடும் கட்டங்களாகும்

***

5

இவ்வாறு ஒருவர் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே மூச்சில் பாட வேண்டும் என்றால் அவருக்கு அபார பூகோள அறிவு இருக்க வேண்டும் .

கேதார்நாத் முதல் இலங்கையிலுள்ள  கேதீச்வரம் வரை பாடுவதால் அவர் மனக் கண்களுக்கு  முன்னால் ஏக பாரதம்– அகண்ட பாரதம் –தெரிந்திருக்க வேண்டும்  இமயம் முதல் குமரி வரை பாரதம் ஒன்றே என்பதை பறைசாற்ற இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்

ஆறாம் திருமுறை திருவீழிமிழலை பதிகம்

பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர்

            பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர்

கேதிசர மேவினார் கேதா ரத்தார்

            கெடில வடவதிகை வீரட் டத்தார்

மாதுயரந் தீர்த்தென்னை உய்யக் கொண்டார்

            மழபாடி மேய மழுவா ளனார்

வேதி குடியுளார் மீயச் சூரார்

            வீழி மிழலையே மேவி னாரே.  2

***

6

நாவலந்தீவு

நாவலந்தீவு பற்றி சங்க இலக்கியப்பாடல்களிலும் அதற்கு முன்னர் காளிதாசன் கவிதைகளிலும் குறிப்புகள் உள்ளான . இதுபற்றியம்  அப்பரும் தேவாரத்தில் பாடியுள்ளார்

மூவுருவின் முதலுருவாய் இருநான் கான

                மூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர்

தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்துஞ்

                செம்பவளத் திருமேனிச் சிவனே யென்னும்

நாவுடையார் நமையாள வுடையா ரன்றே

                நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான

காவலரே யேவி விடுத்தா ரேனுங்

                கடவமலோங் கடுமையொடு களவற் றோமே. 

அவர் வங்காளத்தில் ஆயிரம் கிளைகளாக பிரிந்து கங்கை நதி, வங்காள விரிகுடாவில் விழும் செய்தியோடு நாவலம் தீவு – ஜம்பூத்வீபம் , போகும் வழியிலுள்ள கோதாவரி முதலிய நதிகளையும் குறிப்பிடுகிறார். 

***

7

கங்கை நதிக் குறிப்புகள்:–

இதோ அப்பரின் ஆறாம் திருமுறையில் உள்ள கங்கை நதிக் குறிப்புகள்:–

திருப்பூவணம்

ஆறாம் திருமுறை , பாடல்

மயல் ஆகும் தன்  அடியார்க்கு  அருளும் தோன்றும் ;

மாசு இலாப் புன்சடை மேல் மதியம் தோன்றும்;

இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் ;

இருங்கடல் நஞ்சு உண்டு  இருண்ட கண்டம் தோன்றும் ;

கயல் பாய கடுங்கலுழிக் கங்கை நங்கை

ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் -தோன்றும்

புயல் பாய்ச சட்டை விரித்த பொற்புத் தோன்றும்

பொழில் திகழும் பூவணத்து  எம் புனிதனார்க்கே

***

8

பல்வகைத் திருத்தாண்டகத்திலும்  இது போன்ற குறிப்பு வருகிறது

நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக்  கண்டு

நிலை தளர ஆயிரமாமுகத்தினோடு

பாய்ந்து ஒருத்தி படர்சடைமேல் பயிலக்கண்டு

பட அரவும் பனிமதியும்  வைத்த செல்வர்

தாம் திருத்தித் தம் மனத் தை  ஒருக்காத் தொண்டர்

தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் பூந்துருத்தி என்பீராகில்

பொல் லால்புலால்  துருத்தி போக்கல் ஆமே –பாடல் 909

***

9

கோதாவரி பற்றிய அப்பர் பாடல்

உருத்திர தாண்டகம் – பாடல் 7, ஆறாம் திருமுறை

மாதா பிதாவாகி மக்க ளாகி

மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்

கோதா விரியாய்க் குமரி யாகிக்

கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்

போதாய மலர்கொண்டு போற்றி நின்று

புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி

யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி

அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே

***

10

கங்கை — காவிரி

கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்

கொங்கு தண்குமரித் துறை ஆடிலென்

ஓங்கு மாகடல் ஓத நீர் ஆடிலென்

எங்கும் ஈசன் என்னாதவர்க்கு இல்லையே (5-99-2)

ஏழ்  கடலும் ஏழ் மழையும் என்றும் பல பாடல்களில் குறிப்பிடுகிறார்

கேதீச்வரம் முதல் கேதாரம் வரை உள்ளானை திருவீழிமலைப் பதிகத்தில் பாடுகிறார்

இங்கு கொடுத்தவை ஒரு சாம்பிள்தான் இது போல அப்பர் பாடிய மூன்று திருமுறைகளையும் நிறையா பாடல்கள் உள்ளன.

–subham—

Tags- அப்பர், புவியியல், பூகோள, அறிவு, மலைகள், காடுகள், கங்கை, கோதாவரி நதிகள், கேதார்நாத், கேதீச்வரம்

Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-7 (Post.15,067)

Hanuman Sculptures in Indonesia.

Written by London Swaminathan

Post No. 15,067

Date uploaded in London –  8 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 மனோஜவம் மாருத துல்ய வேகம் 

ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |

வாதாத்மஜம் வானரயூத முக்யம் 

ஸ்ரீ ராமதூதம் சிரஸா நமாமி ||

மனத்தின் வேகமுடையவர் ; காற்றுக்கு இணையாக வேகம் கொண்டவர் ; புலன்களை வென்றவர்;புத்திமான்களில் மிகச் சிறந்தவர்; வாயுவின் மகன்; வானர சேனைகளின் முக்கியத் தலைவன்; ஸ்ரீ ராம தூதனான அவனை தலையால் வணங்குகிறேன்.

ஐன்ஸ்டைன் சொன்ன ஒளியின் வேகத்தை விட வேகமாகச் செல்லக்கூ டியது மனம்; மனத்தின் சக்தியை அறியாத வெள்ளைக்காரர்களுக்கு இது புரிய இன்னும் கொஞ்ச  காலம் ஆகும் .நாரதர் போல பிரபஞ்சம் சுற்றும் பயணிகளை அவர்கள்  அறியவில்லை!  

ராமாயணத்தின் மிக முக்கியமான பாத்திரம் அனுமன்.அவனைப் பற்றிய கம்பனின் அருமையான பாடல் ஒன்று உண்டு.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்

இதன் பொருள்:-

அஞ்சிலே ஒன்று பெற்றான் – ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்

அஞ்சிலே ஒன்றைத் தாவி – ஐந்து பூதங்களில் ஒன்றான நீர்ப்பரப்பான கடலைத் தாண்டி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி – ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஶ்ரீராமனுக்காக சென்று

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்  –ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாபிராட்டியை இலங்கையில் கண்டு

அஞ்சிலே ஒன்றை வைத்தான் – அங்கு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை வைத்தான்

அவன் எம்மை அளித்துக் காப்பான் – அவன் எம்மை அனைத்து நலன்களும் அளித்துக் காப்பான்

****

Vali- Sugriva fighting; Rama shooting with an arrow from behind the tree

யார் கொலோ சொல்லின் செல்வன் !!

கம்ப ராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில்தான் அனுமன் என்னும் கதாபாத்திரம் அறிமுகமாகிறான். அதைத்தொடர்ந்து அனுமன்– ராமன் சந்திப்பும், சுக்ரீவன் — ராமன் சந்திப்பும் நடைபெறுகிறது. இதை சுவையாக வருணிக்கிறான் கம்பன்.

அஞ்சனைக்கு ஒரு சிறுவன் அஞ்சனக் கிரி அனைய

மஞ்சனைக் குறுகி ஒரு மாணவப் படிவமொடு” –

(அஞ்சனையின் மகனான அனுமன் ஒரு பிரம்மச்சாரி வடிவம் கொண்டு இராம, இலக்குவர் இருக்கும் இடம் செல்கிறான்).

இராம இலக்குவரை மறைவில் நின்று பார்த்து “கருணையின் கடல் அனையர்” என்று மதிப்பிடுகிறான். பின்னர் அவன் மனதில் தோன்றியதை கம்பன் வருணிக்கும் அழகே தனி:-

சதமன் அஞ்சுறு நிலையர்

தருமன்  அஞ்சுறு சரிதர்

மதனன்  அஞ்சுறு வடிவர்

மறலி அஞ்சுறு விறலர்”

பொருள்:–

இந்திரனும் (சதமன்) அஞ்சும் தோற்றத்தை உடையவர்,

தருமதேவனும் கண்டு அஞ்சும் ஒழுக்கம் உடையவர்,

மன்மதனும் (மதனன்) இவர்கள் முன் நிற்க அஞ்சும் அழகர்கள்,

யமனும் (மறலி) அஞ்சும் வீரர்கள்.

என்ன அழகான வருணனை!

அடுத்த ஒரு பாடலில் வள்ளுவன், கடவுளுக்குத் தரும் ‘தனக்குவமை இலாதான்’ என்ற  அடைமொழியை கம்பன், அனுமனுக்குச் சூட்டி மகிழ்கிறான். அனுமனை ” தன் பெருங் குணத்தால் தன்னைத் தான் அலது ஒப்பு இலாதான் – என்கிறான் கம்பன் .

 Vaanara Sena acceptedd Rama only after testing his strength; Rama was asked to pierce throuh seven strongest trees in Kishkinda (Now Hampi in Karnataka)

ராமனையும் லட்சுமணனையும்  நேரில் பார்த்த அநுமன்

“வெல்கம் டு கிஷ்கிந்தா” – என்கிறான். அதாவது “கவ்வை இன்றாக நுங்கள் வரவு” (உங்கள் வரவு துன்பமில்லாத நல் வரவு ஆகுக) என்கிறான்.

இப்படி ஒரு பிரம்மச்சாரிப் பையன் (அனுமன்) வரவேற்றவுடன் ராமலெட்சுமணருக்கு பெரு மகிழ்ச்சி. நீ யார் என்று ராமன் வினவுகிறான்..

உடனே அனுமன்,

யான் காற்றின் வேந்தற்கு

அஞ்சனை வயிற்றில் வந்தேன், நாமமும் அனுமன் என்பேன் ” என்று பதில் தருகிறான்.

உடனே ராமனும் அனுமனை எடை போட்டு விடுகிறான். அப்பொழுது ராமன் சொன்ன சொற்கள் அனுமனுக்குக் கிடைத்த மிகப் பெரிய பட்டம் ஆகும்!

இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூரக்

கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி

சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்கொல் இச் சொல்லின் செல்வன்

வில்லாஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ

இந்த உலகத்தில் எங்கும் புகழ் பரவும்படி (இசை=புகழ்),

இந்த அனுமன் கற்காத கலைகளும் கடல் போலப் பரந்த வேதங்களும், உலகில் எங்கும் இல்லை என்று கூறும் அளவுக்கு வனுக்கு அறிவு இருக்கிறது. இது அவன் பேசிய சொற்களால் தெரிந்துவிட்டது அல்லவா?

வில்லையுடைய தோளுடைய வீரனே! இனிய சொற்களைச் செல்வமாக உடைய இவன் யாரோ? நான்முகனோ (விரிஞ்சன்)? அல்லது காளையை வாஹனமாக உடைய சிவனோ (விடைவலான்)?

இதன் காரணமாக அனுமனுக்குச் சொல்லின் செல்வன் என்ற பட்டம் கிடைத்தது. அதுவும் ராமன் வாயினால் கிடைத்த பட்டம்!

***

அனுமனின் சொல்லாற்றல்

அனுமனின் சொல்லாற்றலால் அவனை ‘சொல்லின் செல்வன்’ என்று போற்றுவார் கவிச் சக்ரவர்த்தி கம்பர்.

ராமனின் குண நலன்களை வருணிக்கும் வால்மீகியோ, ராமனை

மித பாஷி= (குறைவாகப் பேசுபவன்);

ஹித பாதி= ( மற்றவர்களுக்கு மகிழ்ச்சி தருவதை சொல்பவன்);

ஸ்ருத பாஷி= (உண்மையே பேசுபவன்);

பூர்வ பாஷி (தலைக் கனம் கொஞ்சமும் இல்லாமல் நதானே போய் முதலில் பேசுபவன்);

என்று நான்கு அடைமொழிகளால் வருணிப்பார். இந்த நான்கு குணங்களும் இருந்தால் அவனை யார் வெல்ல முடியும்?

அனுமனின் சொல்லாற்றலுக்கு எடுத்துக் காட்டு, சீதையைக் கண்டு பேசிவிட்டு, முதல் முதலில் ராமனைச் சந்தித்தவுடன்,

கண்டெனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்

தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்

அண்டர் நாயக இனி துறத்தி ஐயமும்

பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்

சுந்தர காண்டம், திருவடி தொழுத படலம், கம்ப ராமாயணம்

இந்தக் காலத்தில் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தி போடுவது போல கண்டேன் கற்பினுக்கு அணியை (சீதையை) என்று சொல்லிவிட்டு என் கண்களால் பார்த்தேன் என்றும் சேர்க்கிறான். இக்காலப் பத்திரிக்கைகள் போல சொல்லப்படுகிறது, அறியப் படுகிறது, நம்பப்படுகிறது என்றெல்லாம் சொல்லாமல் என் கண்களால் கண்டேன் என்கிறான். இங்கே அனுமனின் சொல்லாற்றலையும் கம்பனின் கவி புணையும் ஆற்றலையும் ஒருங்கே காண்கிறோம்.

இதனால்தான் ராமன் – அனுமன் முதல் சந்திப்பின் போதே

இல்லாத உலகத்து எங்கும் ஈங்கிவன் இசைகள் கூறக்

கல்லாத கலையும் வேதக் கடலுமே – என்னும் காட்சி

சொல்லாலே தோன்றிற் றன்றே! யார் கொல் இச் சொல்லின் செல்வன்!

வில்லார் தோள் இளைய வீர! விரிஞ்சனோ! விடைவலானோ!

இந்தச் சொல்லின் செல்வன் நான்மறைகளை நாலு வாயாலும் சொல்லும் பிரம்மாவா? மொழிகளுக்கு எல்லாம் மூல முதல்வனான விடை ஏறு சிவ பிரானா? என்று வியக்கிறான் ராமன். காரணம் முதலில் அனுமன் தன்னைப் பணிவுடன் அறிமுகப் படுத்திக் கொண்ட முறை!!

ஆக பொது இடங்களில் பேசுவது எப்படி என்பதில் ஆதி சங்கரரரும் வள்ளுவரும் ஒன்றிப்போவதைக் கண்டு சுவைத்து மகிழலாம்.

***

பணிவுக்கும் துணிவுக்கும் மட்டும் பெயர் எடுத்தவர் ஆஞ்சனேயர் என்று எண்ணிவிடக்கூடாது; கண்மூடித்தனமான பக்திக்கும் அவர் எடுத்துக்காட்டு இதை தாஸ்ய பக்தி என்பர். ராமதாஸனாக  விளங்கும் அவரை கிஷ்கிந்தா காண்டத்திலும், சுந்தர காண்டத்திலும் , யுத்த காண்டத்திலும் காணலாம்

இதோ ஒரு கதை :

ஜாம்பவான் மூலம் அனுமனின் பக்தியையும் அளவுகடந்த திறமையையும் அறிகிறோம்; பிராம்மாஸ்த்திரத்தின் தாக்குதலால் , போர்க்களத்தில்  லெட்சுமணன் உளப்பட அனைவரும் மூர்ச்சசையாகி இருக்கின்றனர்; ஆனால் விபீஷணன் பாதிக்கப்படவில்லை; அவர் ஒவ்வொருவர் அருகிலும் வந்து உடல்நிலையைச் சோதிக்கிறார். ஜாம்பவான் அருகில் வந்தவுடன் அவர் கேட்ட முதல் கேள்வி :

ஆஞ்சனேயர் உயிருடன் இருக்கிறாரா ?

விபீஷணனுக்கு ஒரு அதிர்ச்சி. ராமர், லட்சுமணர், சுக்ரீவன், அங்கதன் முதலியோர் பற்றிக் கேட்காமல் ஏன் அனுமன் பற்றி மட்டும் விசாரிக்கிறீர்?

என்று வினவினார் விபீஷணன் ..

ஜாம்பவான் பதில் சொல்கிறார் :

அனுமன் ஒருவன் உயிரோடு இருந்தால் அனைவரும் பிழைத்துவிடுவார்கள் அவன் புத்திமான்; பலவான்; காற்றினும் கடுகிச் செல்பவன் அவன் எல்லோருக்கும் உயிர்ப்பிச்சை அளிக்க  முடியும் . இதை ராமாயணக் கதையிலும் காண்கிறோம்; சஞ்சீவி பர்வதத்தையே பெயர்த்து எடுத்து வந்து — ஆக்சிஜன் சிலிண்டர்  பொருத்தியது போல– அனைவருக்கும் உயிர்மூச்சினை உண்டாக்கினார்

***

சிவ பெருமானின் அவதாரம் தான் ஹனுமான் என்பதற்கு குறைந்தது மூன்று இலக்கிய ஆதாரங்கள்  இருக்கின்றன.

அதில் ஒரு ஆதாரம் , முருகன் புகழ் பாடிய திருப்புகழில்  கிடைக்கிறது. இந்த 3 ஆதாரங்களும்   ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமையானது ; வால்மீகி சம்ஸ்க்ருதத்தில் எழுதிய ராமாயணம்தான் மிகவும் பழமையானது என்றாலும்  பரந்த பாரத பூமியில் செவி வழியாக வந்த எவ்வளவோ செய்திகள் 3000 ராமாயணங்களிலும் ராமன் பற்றிய பாடல்களிலும் கிடைக்கின்றன. இவைகளை எல்லா மொழிகளிலும் இருந்தும் தொகுத்து புஸ்தகமாக வெளியிட்டால் அவை பல தொகுதிகளாக, ஒருவேளை பல நூறு தொதகுதிகளாக வர வேண்டியிருக்கும். கடல் அளவுக்குப் பெருகியது ராமாயணம்; தென்கிழக்கு ஆசியாவுக்குப் பயணம் செய்தால் அங்குள்ள அதிசய வினோத ராமாயணங்களில் நாம் அறியாத புதிய கதைகளைக் கேட்டு ரசிக்கலாம்; அதில் வியப்பில்லை. நம்முடைய சம்ஸ்க்ருத பெயர்கள்,  இந்தியாவுக்கு வெளியே எத்ததனை விதமான ஸ்பெல்லிங்க்குகளில் எழுதப்படுகிறது என்ற விநோதத்தைக் கண்டால் ,  இன்னும் வியப்பாக இருக்கும்;

அனுமனின் தாயின் பெயர் அஞ்சனா (அஞ்சனை ); தந்தையின் பெயர் கேசரி . அஞ்சனா என்ற பெண்மணி , சிவபெருமானை வேண்டி பெற்றபிள்ளை அனுமன் என்று பாவார்த்த  ராமாயணம் கூறுகிறது. இதை எழுதியவர் மராட்டிய பூமியில் அவதரித்த மஹான் ஏக நாதர் .

தசரதன், புத்ர காமேஷ்டி யாகம் செய்த பின்னர் யாக குண்டத்திலிருந்து வந்த பாயசத்தை மூன்று மனைவியருக்கும் பிரித்துத் தந்ததை வால்மீகி நமக்குச் சொன்னார். அதில் கீழே சிந்திய ஒரு பகுதியை கருடன் எடுத்துச் செல்லவே , அது அஞ்சனை தவம் செய்த காட்டில் விழுந்தது; அதை வாயு பகவான் அஞ்சனை இடம் தந்தான். அவளும் சிவனை நினைந்து அதை அருந்தவே கர்ப்பம் அடைந்து வாயுகுமாரனைப்  பெற்றாள் . பிறந்த குழந்தை சிவனுடைய அம்சத்துடன் பிறந்தது .

***

இன்னுமொரு கதை :

ராமன் என்னும் அவதாரம் ராவணன் என்னும் ராட்சசனை அழிக்க வந்தது ; அப்போது வைகுண்டத்தில் அல்லது சொர்க்கத்தில்  இருந்த ஒவ்வொருவரும் பூமியில் வெவ்வேறு பெயர்களில் தோன்றினார்கள். தேவர்கள் வானரங்களாகவும், சிவ பெருமான் அனு மானாகவும் அவதரித்து ராவண ஸம்ஹரத்தில் உதவினார்.

இதை ஏகநாதர் பாடல்களும் , அருணகிரி நாதரின் திருப்புகழும் , துளசிதாஸரின் ஹனுமான் சாலீசாவும் சொல்கினறன.

அனுமன் சிவனின் அவதாரம்

கரு அடைந்து பத்துற்ற திங்கள் வயிறு இருந்து முற்றி பயின்று

கடையில் வந்து உதித்து குழந்தை வடிவாகி

கழுவி அங்கு எடுத்து சுரந்த முலை அருந்துவிக்க கிடந்து

கதறி அங்கை கொட்டி தவழ்ந்து நடமாடி

அரை வடங்கள் கட்டி சதங்கை இடு குதம்பை பொன் சுட்டி தண்டை

அவை அணிந்து முற்றி கிளர்ந்து வயது ஏறி

அரிய பெண்கள் நட்பை புணர்ந்து பிணி உழன்று சுற்றித்திரிந்தது

அமையும் உன் க்ருபை சித்தம் என்று பெறுவேனோ

இரவி இந்தரன் வெற்றி குரங்கின் அரசர் என்றும் ஒப்பற்ற உந்தி

இறைவன் எண்கு இன கர்த்தன் என்றும் நெடு நீலன்

எரியது என்றும் ருத்ரற் சிறந்த அநுமன் என்றும் ஒப்பற்ற அண்டர்

எவரும் இந்த வர்க்கத்தில் வந்து புனம் மேவ

அரிய தன் படை கர்த்தர் என்று அசுரர் தம் கிளை கட்டை வென்ற

அரி முகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும் புடைத்து சினந்து உலகமும் படைத்து பரிந்து

அருள் பரங்கிரிக்குள் சிறந்த பெருமாளே

பொருள்–

கருவிலே சேர்ந்து பத்து மாதங்கள் தாயின் வயிற்றில் இருந்து

கரு முற்றிப் பக்குவம் அடைந்து கடைசியில் பூமியில் வந்து பிறந்து

குழந்தையின் வடிவத்தில் தோன்றி, குழந்தையை அங்கு கழுவியெடுத்து,  சுரக்கும் முலைப்பாலை ஊட்டுவிக்க தரையிலே கிடந்தும், அழுதும், உள்ளங்கையைக் கொட்டியும், தவழ்ந்தும், நடை பழகியும், அரைநாண் கட்டியும், காலில் சதங்கையும், காதில் இட்ட அணியும்,  பொன் கொலுசு, தண்டை அவைகளை அணிந்தும், முதிர்ந்து வளர்ந்து வயது ஏறி,அருமையான பெண்களின் நட்பைப் பூண்டு,

நோய்வாய்ப்பட்டு அலைந்து திரிந்தது போதும். (இனிமேல்)

உனது அருள் கடாட்சத்தை எப்போது பெறுவேனோ?

சூரியன் (அவன் அம்சமாக சுக்ரிவன்), இந்திரன் (அவன் அம்சமாக வாலி) வெற்றி வானர அரசர்களாகவும், ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த பிரமன் கரடி  இனத் தலைவன் (ஜாம்பவான்) ஆகவும், நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும், ருத்திர அம்சம் அநுமன் என்றும், ஒப்பில்லாத தேவர்கள் யாவரும் இன்னின்ன வகைகளிலே வந்து இப் பூமியில் சேர்ந்திட, (இவர்களே) தன் அரிய படைக்குத் தலைவர் எனத் தேர்ந்து, அசுரர்களின் சுற்றமென்னும் கூட்டத்தை வெற்றி கொண்ட ஹரிமுகுந்தனாம் ஸ்ரீராமன் புகழும் குணம் வாய்ந்த  மருமகனே, பிரம்மாவையும் கோபித்து,  (பிரம்மனைச் சிறையிட்ட பின்) உலகத்தையும் அன்புடன் அருள் பாலிக்கும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

***

ஹனுமான்  சாலீசா

ஶங்கர ஸுவன கேஸரீ நன்த³ன ।

தேஜ ப்ரதாப மஹாஜக³ வன்த³ன ॥ 6 ॥

வித்³யாவான கு³ணீ அதி சாதுர ।

ராம காஜ கரிவே கோ ஆதுர ॥ 7 ॥

பொருள்

. நீங்கள் சிவபெருமானின் அவதாரம் பரிசுத்தமான, ஏகாந்தமான, அழகான கைலாச பர்வதத்தில் அமர்ந்து ராம நாம ஜபம் செய்கிறீர்கள் ; உங்களுடைய இருதயம் என்னும் காட்டில் ராமன் எபோதும் உலவிக்கொண்டு இருக்கிறார். ராமாவதார நோக்கத்தை நிறைவேற்ற நீங்களே கேசரி மைந்தனாக அவதரித்தீர்கள் புகழ் ஒளியாலும் , வீரத்தாலும் உயர்ந்த உங்களை உலகமே தொழுது நிற்கிறது என்று உரைகாரர்கள்  விளக்கியுள்ளனர்.

8.ஆழம் காண முடியாத அறிவுடையவர் நீங்கள்; நற்குணங்களும் செயலாற்றுவதில் பெரும் திறமையும் வாய்க்கப் பெற்றவர் .ராமனுக்குப் பணி செய்வதையே குறிக்கோளாக உடையவர்.

ஆக துளசிதாஸர் , ஏகநாதர் , அருணகிரி நாதர் மூவரும் அனுமனை சிவனின் அம்சமாகவே கருதுகின்றனர்.

 to be continued………………….

tags–Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-7, Part Seven, அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி,கண்டெனன் கற்பினுக்கு அணியை, சொல்லின் செல்வன் 

SUO MOTU CASE PLEASE! SAVE OUR ANTIQUES! வரலாற்றை அழிக்கும் திராவிடர்களை எதிர்த்து வழக்குப் போடுங்கள் !(Post 10,156)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,156

Date uploaded in London – 30 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

LONDON SWAMINATHAN’S REQUEST TO MADRAS HIGH COURT AND SUPREME COURT TO TAKE SUO MOTU ACTION IN THE ISSUE OF TEMPLE GOLD JEWELS MELTING SCHEME OF THE TAMIL NADU GOVERNMENT. IT IS DONE BY WHO DOES NOT KNOW HISTORICAL VALUE OF ANTIQUES AND WHO DOES NOT BELIVE IN TEMPLE RITUALS. THE JEWELS ARE GIVEN BY INDIVIDUALS WITH A PURPOSE. THEY CANT VIOLATE THAT. IF WE DON’T USE THEM FOR THE PURPOSES MEANT BY THE DONORS, IT IS OUR FAULT. MOST OF THEM CARRY MORE ANTIQUE VALUE THAN FACE VALUE.

THANKS TO THE FRENCH INSTITUE OF PONDICHERY, WE RECOVERED LOT OF STOLEN ARTICLES WITH THEIR BLACK AND WHITE PICTURES OF OUR IDOLS. EVEN A COPPER COIN IN THE PADMANABHA SWAMI TEMPLE  VAULT OF THIRU ANANTHA PURAM WILL BE NOUGHT FOR A BIG PRICE BY FOREIGN MUSEUMS.

I PAID MONEY TO SEE JEWELS OF BRITISH QUEEN IN LONDON, NAPOLEON’S SHOES IN VERSAILLE IN FRANCE AND CROWNS OF SWEEDISH KINGS IN STOCKHOLM. EVEN ANTI GOD COMMUNIST GOVERNMENTS ARE KEEPING ALL BUDDHA STATUES AND THE JEWELS IN MUSEUMS. COURTS MUST CONSULT GREAT HISTORIANS AND ARCHEOLOGISTS LIKE DR R NAGASWAMY IN THIS MATTER. ARCHAEOLOGY DEPARTMENT SHOULD PHOTOGRAPH ALL GEMS AND GOLDS BEFORE TAKING ANY DECISION. THE PICTURES MUST BE MADE PUBLIC.

 QUEEN VICTORIA REQUESTED A GEM FROM MADURAI MEENAKSHI TEMPLE 200 YEARS AGO. THAT WAS SENT TO LONDON AND ‘RETURNED’. NOBODY KNEW WHETHER IT WAS THE ORIGINAL SHE SENT BACK . I DOUBT IT. IT IS IN MY ARTICLE WRITTEN 10 YEARS AGO ‘THE WONDER THAT IS MEENAKSHI TEMPLE’. COURTS MUST TAKE IMMEDIATE ACTION. HINDU ORGANISATIONS MUST TAKE ACTION IMMEDIATELY.

SEVERAL GEMS AND JEWELS OF TAMIL TEMPLES ARE ALREADY PLUNDERED AND FAKE GEMS ARE INSTALLED. THE BOOGOLAM AND KAGOLAM ORIGINAL MAPS IN CLOTH AT MEENAKSHI TEMPLE KALYANA MANDAPAM WERE STOLEN AND TAKEN TO FOREIGN COUNTRY. SAVE OUR TEMPLES; SAVE OUR ANTIQUES.

The Wonder that is Madurai Meenakshi Temple – Tamil and …

https://tamilandvedas.com › 2013/09/29 › the-wonder-t…

29 Sept 2013 — Madurai Meenakshi Temple is an architectural wonder. When one climbs to the top of the South Tower to have a bird’s eye view of Madurai,

கோவில் தங்கத்தை உருக்குவோர் வரலாறு அறியாத முட்டாள்கள். சாபத்திற்கு உள்ளாகி அழியப்போகும் வஸ்துக்கள் . நாங்கள் இங்கு லண்டனில் 25 பவுன் கொடுத்து மஹாராணி நகைகளையும் மோதிரங்களையும் , கிரீடங்களையும் பார்க்கிறோம். பாரிசுக்கு வெளியே வெர்சாய் அரண் மனையில் நெப்போலியன் பயன்படுத்திய செருப்பு, மேஜை கூட காட்சிக்கு வைத்து இருக்கிறார்கள். அதையும் காசு கொடுத்து பார்த்தேன். சுவீடனில் ஸ்டாக்ஹோம்  மியூசியத்தில் மன்னர் கிரீடங்களை காசு கொடுத்து பார்த்தேன். மீனாட்சி கோவில் நகைகள் பல கோடி ரூபாய் மதிப்புடையவை. அவற்றின் பழங் கலைப் பொக்கிஷ மதிப்பு- அதாவது ஆன்ட்டிக் வால்யூ ANTIQUE VALUE – கோடி மடங் அதிகம்.

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷத்தில் உள்ள செப்புக்காசுக்கும் ஆன்ட்டிக் வால்யூ அதிகம். கோவில் நகைகளில் பல மிகப்பழமையானவை . அவைகளை உருக்கக்கூடாது. தொல்பொருட் ததுறையினர் மூலம் விலைமதிப்பிட வேண்டும்.. பல நகைகள் சுவாமி, அம்மன், பெருமாள் மீது போடுவதற்காக கொடுக்கப்பட்டிருக்கலாம். அவைகளை துஷ்பிரயோகம் செய்வோர் மீது சாபங்கள் உள்ளன. இதை எல்லா தமிழக கல்வெட்டுகளின் கடைசி வரியில் காணலாம். ஆக அந்த சாபங்கள திராவிடர்களை அடியோடு அழித்துவிடும். மத நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்ட் நாடுகள்  கூட  தங்க புத்த விக்கிரகங்களையும் நகைகளையும் அப்படியே வைத்திருக்கின்றன. மீனாட்சி அம்மனின் நீலக்கல் லண்டன் வந்து அதை விட்ட்டோரியா மஹாராணி திருடி வைத்துக் கொண்டு  வேறு கல்லை அனுப்பிய செய்தியை 2011ல் எனது பிளாக் கட்டுரையில் பதிவு செய்துள்ளேன். அதுபோல நகைகளில் உள்ள விலையுயர்ந்த ரத்தினங்களை திராவிடர்கள் கொள்ளையிட வாய்ப்பு கொடுக்கக் கூடாது. தயவு செய்து இதை கோர்ட்டாரே SUO MOTU வழக்காக எடுத்து மறு பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் . புதுக் சேரியிலுள்ள பிரென்ச் இன்ஸ்டிட்யூட் பழைய கோவில் விக்ரகங்களை கருப்பு வெள்ளை போட்டோ எடுத்து வைத்திருந்ததால்தான் டாக்டர் நாக சாமி போன்ற அறிஞர்கள் அவைகளை வெளிநாட்டு மியூசியங்களில் இருந்து மீட்டார்கள் . ஆகையால் தொல்பொருட் துறை முதலில் எல்லாவற்றையும் வெளிநாட்டு மியூசியங்களில் இருந்து புகைப் படம் எடுக்கவேண்டும். அந்த நகைகளின் பழமை குறித்து மதிப்பிடவேண்டும்.

suo moto

(with reference to an action taken by a court) without any request by the parties involved.

“the court has, suo motu, decided to add the divisional commissioner as a respondent to the petition”

என் வேண்டுகோளை  சுவோ மோட்டோ வழக்காக சென்னை ஹைகோர்ட்டும் சுப் ரீம் கோர்ட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உலகப் பேரறிஞர் , சிவபுரம் நடராஜர் சிலை மீட்ட செம்மல் டாக்டர் இரா.நாகசாமி போன்றோர் கருத்தை முதலில் கேட்க வேண்டும்.

XXX SUBHAM XXX

tags –கோவில் நகை, தங்கம், உருக்கும் திட்டம், வரலாறு, திராவிடர் , வழக்கு, temple gold, melting, suo motu

யாழ்ப்பாணம் பற்றிய சுவையான நூல்

IMG_6160 (2)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Compiled  by London swaminathan

Date: 29  September 2015

Post No: 2197

Time uploaded in London :– 8-09 am

(Thanks  for the pictures) 

லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரியில் யாழ்ப்பாணம் பற்றிய, 1915 ஆம் ஆண்டு வெளியான, நூல் ஒன்று கண்டேன். 156 பக்கங்களுக்கு மேலுள்ள இந்த நூலில் பல அரிய தகவல்கள் உள்ளன. இத்தகைய நூல் இன்று இலங்கையில் கிடைக்காவிடில் இதை மீண்டும் அச்சிடுவது நல்லது. இதை எழுதியவர் முத்துத்தம்பிப் பிள்ளை. புத்தக முடிவில் அந்தக் கால வழக்கப்படி ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு வாழ்த்துக் கூறியிருப்பது அக்கால மனநிலையை உண்ர முடிகிறது. விக்டோரியா ராணியாரையும், மன்னரையும் வாழ்த்துவது அக்கால கட்டங்களில் வெளியான நூல்களில் காணமுடிகிறது.

யாழ்ப்பாண நில அமைப்பு, குடியேறிய ஜாதிகள் விவரம் முதலியனவும் புத்தகத்தின் இறுதியில் பட்டியலிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணர் படம் ஒன்றும் நூலில் இருக்கிறது.

IMG_6161 (2)

IMG_6162

IMG_6163 (2)

IMG_6164 (2)

IMG_6165 (2) - Copy

IMG_6166 (2)

IMG_6167 (2)

IMG_6168

IMG_6169 (2)

IMG_6170 (2)

jaffna_map

Last few pages are given below:——————

IMG_6171 (2)

IMG_6172 (2)

IMG_6173 (2)

IMG_6174 (2)

IMG_6175 (2)

IMG_6177 (2)

(Jaffna map is NOT from the old book.)

–Subham–

சௌராஷ்ட்ரா சமூகம் பற்றி சுவையான விஷயங்கள்

IMG_3245 (2)

Article No. 2081

by London swaminathan

Date : 18 August  2015

Time uploaded in London :–  காலை 8-21

மதுரை, பரமக்குடி, சேலம் முதலிய பல ஊர்களில் வசிக்கும் சௌராஷ்ட்ரா சமூகத்தினர் குஜராத்திலுள்ள சௌராஷ்ட்ரா பிரதேசத்திலிருந்து வந்தனர். இவர்கள் பெரும்பாலும் பட்டு நூல், சேலை தயாரிக்கும் நெசவு வேலைகளில் ஈடுபட்டதாலும், அக்கலையில் கை தேர்ந்தவர்கள் என்பதாலும் இவர்களை பாமர ஜனக்கள் ‘பட்டுநூல் காரர்கள்’ என்று அழைப்பர். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் இவர்களில் ஒரு பிரிவினர் பிராமணர்கள் என்று உரிமை கொண்டாடியவுடன் ஒரு விவகாரம் தலை எடுத்தது. அதை ஸ்ரீரங்கம் பட்டாசார்யார்கள், எப்படி தீர்த்துவைத்தனர் எனபனவெல்லாம் பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்த கீழ்கண்ட பழைய புத்தகத்தில் உள்ளது. படித்து மகிழ்க.

IMG_3246 (2) IMG_3247 (2) IMG_3248 (2) IMG_3249 (2) IMG_3250 (2) IMG_3251 (2) IMG_3252 (2)IMG_3253 (2) IMG_3254 (2) IMG_3255 (2) IMG_3256 (2)IMG_3257 (2)IMG_3258 (2)IMG_3259 (2)IMG_3260 (2)IMG_3261 (2)IMG_3262 (2)IMG_3263 (2)IMG_3264 (2)

IMG_3265 (2)

IMG_3266 (2)

IMG_3261 (2)

IMG_3267 (2)IMG_3269 (2)IMG_3270 (2)

IMG_3272 (2)

IMG_3271 (2)

IMG_3274 (2)

IMG_3273 (2)

IMG_3276 (2)

IMG_3275 (2)

IMG_3278 (2)

IMG_3277 (2)IMG_3280 (2)

IMG_3279 (2)

IMG_3281 (2)