Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
9-10-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
விண்வெளி ஆதிக்கத்தில் சீனா முந்துகிறதா?
ச. நாகராஜன்
இன்றைய விண்வெளி ஆதிக்கப் போட்டியில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கும் சீனா அமெரிக்காவை முந்தி முதலிடத்தைப் பிடிக்க விழைகிறது!
இரண்டு பிரம்மாண்டமான சாடலைட்டுகளின் தொகுதியை விண்ணிலே அமைத்து வணிகத்தில் முன்னணியில் வந்து உலகத்தின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி முதல் சக்தியாக ஆக சீனா திட்டம் போடுகிறது!
இது மட்டுமல்ல, அமெரிக்க ராணுவத்திற்குப் போட்டியாக ராணுவத்திற்கான சாடலைட்டுகளையும் விண்ணில் ஏவி ராணுவத்திலும் முதலிடத்தை அடையப் பார்க்கிறது சீனா.
இப்போது சீன ஒரு புது விண்வெளிக் கொள்கையை வெளியிட்டிருக்கிறது. இதன்படி பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் பல வணிக மேம்பாட்டிற்கான விண்கலங்கள் செலுத்தப்படும்
2025 ஜனவரியில் டீப் சீக் (DEEP SEEk) என்ற செயற்கை நுண்ணறிவினால் உலகையே பிரமிக்க வைத்தது சீனா.
‘சீனா டெய்லி’ என்ற சீனப் பத்திரிகை மிகுந்த கர்வத்துடன் இந்த டீப் சீக்கினால் அமெரிக்க கர்வத்தை ஒரேயடியாக நொறுக்கி விட்டோம் என்று பெருமை பேசிக் கட்டுரைகளை வெளியிடுகிறது.
ஒரு பேரிடர் நிகழும் போது இப்போது முதலில் உதவிக்கு வருவது சாடலைட் தான்.
2025ல் ஜனவரி 7ம் தேதி திபெத்தில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அதன் மாக்னிட்யூட் அளவு 7.1.
400 பேர்கள் இறந்தனர். பூகம்பம் நிகழ்ந்த சில நொடிகளிலேயே சீன அரசு உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தது. எட்டு சாடலைட்டுகள் பூகம்பம் நிகழ்ந்த இடத்தை ஆய்வு செய்தன. உலகின் இதர பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்ட கிராமங்களுக்கு உடனடியாக சாலைகள் போடப்பட்டு தகவல் தொடர்பும் போக்குவரத்தும் சீரமைக்கப்பட்டது.
1970ல் தனது முதல் சாடலைட்டை விண்ணில் ஏவியது சீனா. பிறகு 40 வருடங்களில் வருடத்திற்கு மூன்று என்ற எண்ணிக்கையில் 131 சாடலைட்டுகளை விண்ணில் ஏவியது. ஆனால் 2021ம் ஆண்டிலிருந்து வருடத்திற்கு சுமார் 100 சாடலைட்டுகளை அது விண்ணில் ஏவி சாதனை படைத்திருக்கிறது. ஆக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன சாடலைட்டுகள் இப்போது விண்ணில் சுற்றுகின்றன!
விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்புவதில் தீவிரம் காட்டுகிறது சீனா. சந்திரனின் மறுபக்கத்திலிருந்து மாதிரிகளை பூமிக்குக் கொண்டு வந்த ஒரே நாடு சீனா தான். இப்போது சந்திரனைத் தவிர செவ்வாய் மீதும் தன் பார்வையைச் செலுத்தி இருக்கிறது சீனா.
ஏராளமான சீன கம்பெனிகள் சாடலைட்டுகளைத் தயார் செய்வதில் மும்முரம் காட்டுகின்றன.
2030ல் சீனா சந்திரனுக்கு விண்வெளி வீரரை அனுப்பும் என்று 2023ம் ஆண்டு சீன அரசு அறிவித்தது. சோதனை ஓட்டங்கள் 2027ல் நிகழும் என எதிர்பார்க்கபப்டுகிறது.
பூமியில் உள்ள எல்லா இடங்களிலும் என்ன நடக்கிறது என்று வேவு பார்ப்பதில் சீனா இப்போது அமெரிக்காவிற்கு இணையாக முன்னணி வகிக்கிறது. இதற்கான சீன சாடலைட்டுகள் ஏராளம் விண்ணில் செயல்படுகின்றன!
சாடலைட் தொழில்நுட்பம் மட்டுமல்ல, எலக்ட்ரிக் கார்களைத் தயார் செய்வதிலும் சீனா தீவிரம் காட்டுகிறது. பசுமைப் புரட்சி, செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் போன்றவற்றிலும் அது தன் தீவிரத்தைக் காட்டுவதால் அமெரிக்கா இப்போது கவலைப்பட ஆரம்பித்திருக்கிறது.
பிற நாடுகளுடன் நல்லிணக்கமாக இருந்து அவர்களின் நல்லெண்ணத்தைப் பெறுவதும் சீனாவின் புது உத்தியாகும்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அவ்வப்பொழுது வெளியிடும் அதிரடிக் கொள்கைகளினால் ரஷியா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன் எப்போதும் இல்லாத அளவில் இணக்கமாக இருப்பதும் குறிப்பிடத்தகுந்த விஷயமாகும்.
சீனாவின் நல்ல மாற்றமானது அது எதிர்பார்க்கும் வெற்றிகளைத் தருமா?
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மந்திரத் தகடுகள் உண்மையான சக்தி படைத்தவைதான்; ஆனால் அதை வைத்து ஏமாற்றுவோர் எண்ணிக்கையே அதிகம். கோவில் கடைகளிலும் கோவிலுக்கு வெளியே தெருவோரக் கடைகளிலும், பல படங்களிலும் இவ்வாறு விற்கப்படும் மந்திர, யந்திரத் தகடுகளை வாங்கி யாரும் ஏமாறக்கூட்டாது என்பதே பாட்டின் கருத்து
இதோ அருணகிரிநாதரின் திருப்புகழ்:–
துயர மறுநின் வறுமை தொலையு
மொழியு மமிர்த …… சுரபானம்
சுரபி குளிகை யெளிது பெறுக
துவளு மெமது …… பசிதீரத்
தயிரு மமுது மமையு மிடுக
சவடி கடக …… நெளிகாறை
தருக தகடொ டுருக எனுமி
விரகு தவிர்வ …… தொருநாளே
உயரு நிகரில் சிகரி மிடறு
முடலு மவுணர் …… நெடுமார்பும்
உருவ மகர முகர திமிர
வுததி யுதர …… மதுபீற
அயரு மமரர் சரண நிகள
முறிய எறியு …… மயில்வீரா
அறிவு முரமு மறமு நிறமு
மழகு முடைய …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
துயரம் அறு(ம்) நின் வறுமை தொலையும் … துன்பமெல்லாம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
We have published Adi Shankara’s Prasnottara malika in the past three month calendars. This book is in Q and A format. We will look at the concluding part of the book this month.
January 1- New Year Day; 3-Arudra Darshan; 7-Thyagabrahma Aradhana at Tiruvaiyaru in Tamil Nadu; 14- Bhogi; 15- Makara Sankranti/ Pongal; 16- Kanu Pongal; 18- Thai Amavasai; 25-Ratha Saptami; 26-Republic Day/ Bhishma Ashtami; 30-Mahatma Gandhi Death Anniversary.
****
January 1 Thursday
Q: Who is a dhanya ? (One who has attained the highest goal of life)?
A: Sanyaasee (One who has broken the shackles which bind him to the samsaara)
***
January 2 Friday
Q: Who is a maanya? (One who commands respect)?
A: One who is learned and at the same time of a saintly character.
***
January 3 Saturday
Q: Who is sevya (one who deserves to be served)?
A: One who gives in charity
***
January 4 Sunday
Q: Who is a dhatha (giver) ?
A: One who satisfies those who beg from him.
***
January 5 Mondy
Q: What is blessing for one who has a body?
A: Health (absence of disease)
***
January 6 Tuesday
Q: Who enjoys the fruits?
A: One who tills the soil (puts in effort)
***
January 7 Wednesday
Q: Who has no sins?
A: One who does japa
***
January 8 Thursday
Q: Who is whole (full)?
A: One who has children
***
January 9 Friday
Q: What is difficult to do for humans?
A: Keeping the mind under control always
***
January 10 Saturday
Q: Who is a brahmachaari?
A: One who has sublimated one’s sex energy
***
January 11 Sunday
Q: Who is paradevata ?
A: The Divine mother, embodiment of pure consciousness
***
January 12 Mondy
Q: Who supports these worlds?
A: The Sun
***
January 13 Tuesday
Q: What is the source of living for all?
A: clouds which give rain.
***
January 14 Wednesday
Q: Who is valiant?
A: One who protects the frightened.
***
January 15 Thursday
Q: Who is the protector?
A: Spiritual teacher
***
January 16 Friday
Q: Who is the teacher for the whole world?
A: Lord Shiva
***
January 17 Saturday
Q: From whom is true knowledge?
A: Only from Lord Shiva
***
January 18 Sunday
Q: From who one gets liberation?
A: From Mukunda
***
January 19 Mondy
Q: What is avidyaa?
A: Forgetting one’s real Self
***
January 20 Tuesday
Q: Who is without sorrow?
A: One who never gets angry
***
January 21 Wednesday
Q: What is happiness?
A: Contentment
***
January 22 Thursday
Q: Who is king?
A: One who keeps his subjects happy.
***
January 23 Friday
Q: Who is a dog?
A: One who serves a mean person.
***
January 24 Saturday
Q: Who is the master of maayaa ?
A: The Lord of all
***
January 25 Sunday
Q: What is indrajaala (the great magic)?
A: The whole of this universe
***
January 26 Mondy
Q: What is dream-like?
A: Whatever is happening in the waking state.
***
January 27 Tuesday
Q: What is Truth?
A: Brahman
***
January 28 Wednesday
Q: What is mithyaa (illusion, non-existent which appears as existent)?
A: That which disappears when true knowledge dawns.
***
January 29 Thursday
Q: What is indefinable?
A: Maayaa
***
January 30 Friday
Q: What is imagined?
A: Duality
***
January 31 Saturday
Q: What is the highest goal?
A: Adwaitam (non-duality)
***
BONUS QUOTES
Q: From whence ignorance?
A: Without beginning
Q: Who is the manifest devataa (God)?
A: Mother
Q: Who deserves worship and is also guru?
A: Father
Q: In whom is manifest all the gods?
A: Brahmana in whom there is true knowledge and who performs vedic karmas, without attachment, as an offering to God.
Q: Whose words never fail to be true and effective?
A: One who is truthful, who keeps silence ( has control over his speech)
and whose mind is tranquil.
Q: What is the cause of birth?
A: Attachment to sensual pleasures
Q: What cannot be avoided?
A: Death.
Q: Where should one place one’s foot?
A: Where one’s eyes tell that the place is clean.
Q: Who is the fit person to receive alms?
A: One who is hungry.
Q: Who is to be worshipped?
A: The incarnations of the Lord (God, Bhagavaan)
Q: Who is Bhagavaan?
A: The one Supreme Lord in whom Shankara and Naraayana are united.
Q: what is the fruit of devotion to God?
A: Attaining the abode of the Lord
Q: What is moksha (liberation)?
A: Liberation from ignorance (the end of avidya)
Q: What is the source of all the Vedas
A: The syllable ‘OM’
–Subham—
Tags- January 2026 Calendar Adi Shankara’s Q and A (Last Part), Sankara statues
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கடந்த மூன்று மாத காலண்டர்களில் ஆதிசங்கரரின் பிரஸ்னோத்தர ரத்ன மாலிகாவில் உள்ள பொன்மொழிகளைக் கண்டோம்; அதன் தொடர்ச்சியை இந்த ஜனவரி மாதக் காலண்டரில் காண்போம். இது அந்த நூலின் க்டைசி பகுதியாகும்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
31-10-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
தமிழர் நிச்சயம் படிக்க வேண்டிய நூல் – தமிழ் விடு தூது!
ச.நாகராஜன்
தமிழின் பெருமையை முழுவதுமாக யாராலும் சொல்ல முடியாது.
ஆனால் அதன் பெருமையைச் சொல்ல முயன்ற நூல்கள் பல;தம்மால் முடிந்த வரையில் தமிழின் பெருமையைக் கூற விழைந்த புலவர்கள் ஏராளம்.
இப்படிப்பட்ட நூல்களில் அரிய ஒரு நூலாகத் திகழ்வது தமிழ் விடு தூது என்னும் தூது நூல்.
இதை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை.
தமிழில் அரிய நூல்களின் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து பல அரிய நூல்களை வெளியிட்ட மகாமகோத்பாயாய ஶ்ரீ உ. வே. சுவாமிநாத ஐயர் அவர்கள் இந்த நூலை 1930ம் ஆண்டு வெளியிட்டார்.
96 வகை பிரபந்தங்களில் தூது என்பதும் ஒரு வகை பிரபந்த நூல்.
268 கண்ணிகளைக் கொண்டது இந்த நூல். ஒரு கண்ணியில் இரண்டு அடிகள் இருக்கும்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் (கண்ணி எண் 151)
என்ற வரிகள் எண்ணி எண்ணி மகிழ்வதற்குரிய வரிகளாகும்,
இந்த நூல் மதுரை சோமசுந்தரக் கடவுளின் மீது காதல் கொண்ட ஒரு தலைவி விரகத்தால் துன்புற்று தமிழை அவர் பால் தூது விடுத்ததாக இயற்றப் பெற்றது.
சிவபிரான் திருக்கோவையார் எழுதி அருளினார்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் தமிழின் மந்திர மகிமையை உணர்த்தும் வண்ணம் ஏராளமான திருவிளையாடல்களை நிகழ்த்தினர்.
தமிழை நோக்கி அவர் கூறுவது இது:
“கபிலர், பரணர், நக்கீரர் உள்ளிட்ட சங்கத்து மேலோரும், ஐயடிகள் காடவர் கோன். கழற்றறிவார் , திருமூலர், தெய்வத் திருவள்ளுவர் உள்ளிட்ட மேலோர் உன் புகழைப் பெருக்கினர்.
இயற்சொல்,திரிசொல், திசைச் சொல், வடசொல் ஆகிய நான்கு சொற்களையும் அகத்திணை ஏழையும் புறத்திணை ஏழையும் நீ கொண்டிருக்கிறாய். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, பாவினம் ஆகிய எட்டையும் முப்பத்தைந்து அலங்காரங்களையும் கொண்டு நீ திகழ்கிறாய்.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெட்டு கீழ்க்கணக்கு உள்ளிட்ட நூல்களைக் கொண்டு இலங்குகிறாய்.
கம்பர், ஒட்டக்கூத்தர், வில்லிப்புத்தூரார் போன்ற மகாகவிகள் உன்னை அலங்கரித்துள்ளனர்.
உனது நூல்கள் மனத்து இருளை மாற்றும் திறன் வாய்ந்தவை.
அகத்தியருக்கு முருகன் அன்றோ தமிழை உணர்த்தி அருளினான்.
சோமசுந்தரக் கடவுளுக்கு நீ பொருளாக வந்தாய். (இறையனார் அகப்பொருள் நூலாக வந்தாய்)
திருவள்ளுவரின் ஈரடிக்குள்ளே உலகமெல்லாம் அடங்கும் அன்றோ!
ஞானசம்பந்தருக்காக ஆண் பனையைப் பெண் பனை ஆக்கினையன்றோ!
திலகவதியாருடன் திருநாவுக்கரசரைப் பிறப்பித்தாய்.”
இப்படி வரிசையாக பல தமிழ் பெரியார்களின் அரும்செயல்களை நூல் குறிப்பிடுகிறது.
காவிரிப்பூம்பட்டினம், திருவாரூர், திருவையாறு, மதுரை உள்ளிட்ட பதினைந்து பெருநகரங்களை நூல் குறிப்பிடுகிறது.
ஊமை தமிழை அறிவித்தது, இரசவாதம் செய்தது உள்ளிட்ட முப்பதுக்கு மேற்பட்ட திருவிளையாடல்களை நூல் விளக்குகிறது.
சுமார் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நாயன்மார்கள், பெரியார்களின் வரலாற்றை நூல் சுட்டிக் காட்டுகிறது.
தமிழின் அருமையை சுவைபட நூல் சொல்லும் போது வியந்து பிரமிக்கிறோம்.
தமிழின் அருமை பெருமைகளை புலவர் இப்படிக் கூறுகிறார்”
“தேவர்களுக்கு உரிய குணங்கள் சத்துவம், இராசதம், தாமதம் ஆகிய மூன்று குணங்கள் மட்டுமே தான் உள்ளன. உனக்கோ அறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம்,வலி, சமாதி என்னும் பத்துக் குணவணிகள் அன்றோ உள்ளன!
ஆக, தேவர்களை விட நீ உயர்ந்தல்லவா இருக்கிறாய்!
வெண்மை, செம்மை, கருமை, பொன் நிறம். பசுமை என்று வண்ணங்கள் மொத்தம் ஐந்து தான். உனக்கோ வண்ணங்கள் நூறு உள்ளன.
கசப்பு, புளிப்பு, துவர்ப்பு உள்ளிட்ட சுவைகள் உணவிற்கு ஆறே தான் உள்ளன.
உனக்கோ ஒன்பது சுவைகள் உள்ளன.
உனக்கு அழகு எட்டு அழகுகள் உள்ளன. அம்மை, அழகு. தொன்மை. தோல், விருந்து, இயைபு, புலன், இழை ஆகிய எட்டு வனப்பு உனக்கு உண்டு அல்லவா?”
இப்படி தமிழின் அழகை நூல் வர்ணித்து நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.
தமிழ் ஆர்வலர்களும், தமிழர்களும், தமிழை கற்க ஆசையுடன் வரும் அயல் மொழி வல்லுநர்களும் தவறாது படித்து மகிழ வேண்டிய நூல்களுள் முதல் இடத்தைப் பிடிக்கிறது தமிழ் விடு தூது.
படிப்போம்; தமிழின் பெருமையை உலகெங்கும் பரப்புவோம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
DU , DW words
துர்வாசர்
கந்தல் ஆடை அல்லது அழுக்கு (துர்வாச) ஆடை என்று இந்த கோபக்கார ரிஷிக்குப் பெயர். இவரிடம் சாபம் வாங்கியவர்கள் அதிகம் . அத்ரி – அனசூயாவின் மகன்; அம்பரீஷரைச் சபித்தபோது அது பலிக்காமல் அவரிடமே மன்னிப்புக் கேட்டார்
கண்வ ரிஷி ஆஸ்ரமத்தில் வாசலில் காக்க வைத்ததற்காக சகுந்தலாவுக்குச் சாபம் கொடுத்தார் .இவர் கொடுத்த மாலையை அலட்சியப்படுத்தியதற்காக இந்திரனுக்குச் சாபம் கொடுத்தார். கீழே விழுந்த சோற்றுப் பருக்கையை கிருஷ்ணன் அகற்றாததால் உனக்கு கால் மூலமே சாவு என்று கிருஷ்ண பரமாத்மாவை சபித்தார் . ஆனால் இவர் குந்தி தேவிக்கு வரம் கொடுத்ததால் அவர் மந்திரம் மூலம் பாண்டவர்களைப் பெற்றாள்.
Durvasa – durvaasas
Meaning of his name is ill clothed. He was noted for his irascible temper and many fell under his curse.A son of Atri and an younger brother of Dattātreya; an aṃśa of Śiva; appeared before Ambarīṣa who was about to break his dvādasi fast; agreed to accept his hospitality, went to the river for bath and tarried there; finding the muhūrta for pāraṇa (break-fast) drawing to a close, the king broke his fast with some water. Coming to know of this on his return, the sage produced a flaming spirit to attack him. But Hari’s cakra burnt it down and turned towards the sage, who ran for succour to Brahmā, Śiva and Viṣṇu. All of them were unable to help; but Hari advised him to meet Ambarīṣa and apologise to him.3 This he did and was set at liberty. After partaking the meals with him, he returned to Brahmaloka;4 blessed Pṛtha with secret mantras to summon gods.5 Through him Duryodhana planned to destroy the Pāṇḍavas by inciting him to go to them and ask for a feast. But Kṛṣṇa protected them on the occasion.6 In the course of his sojourn he met a Vidyādhara maid with a garland given to her by the Devī; took it from her and presented it to Indra who put it on his elephant, who in turn threw it on the ground and trampled upon it. Enraged at this, the sage cursed him to be lost to all fortune. Healso cursed Sakuntala, wife of Dushyantha.
***
துரியோதனன்
வெற்றி பெறுவதற்குக் கடினம் என்று இவன் பெயருக்குப் பொருள். அதாவது வெல்ல முடியாதவன் .உண்மையைச் சொல்லப்போனால் பொறாமையின் மொத்தவடிவம் அவன் கொடியும் பாம்புக்கொடி. மனதும் விஷப்பாம்பு. 99 சகோதரர்களுடனும் துச்சலா என்ற சகோதரியுடனும் காந்தாரிக்கும் thirutharaashtiranukkumபிறந்தான் சகுனி மாமா மூலம் கெடுக்கப்பட்ட அவன் எல்லவரியும் வற்றை இழந்த பாண்டவர்களை அவமானப்படுத்து வதற்காக தம்பி துச்சாதனன் மூலம், மாதவிலக்கில் இருந்த திரெளபதியின் துகிலை பொதுச் சசபையில் உரித்தான் ; ஆனால் கிருஷ்ண பரமாத்மா அவளுடைய மானத்தைக் காப்பாற்றினார் . துரியோதனன் தொடையைக்கிழித்து அந்த ரத்தத்தினை முடியில் தடவும் வரைக் கூந்தலை முடியமாட்டேன் என்று சபதம் செய்தாள் திரவுபதி ; பாண்டடைவர்களில் ஒருவரான பீமன் துரியோதனனைக் கடைசி நாள் மாபாரதப் போரில் கொன்று பாஞ்சாலி சபதத்தை நிறைவேற்றினான் .
Duryodhana
Duryodhana , meaning of his name is hard to conquer. The eldest son of king Dhritarashtra and leader of the Kauravas. He was born to Gandhari along with 99 brothers. He was very jealous and wanted to destroy his cousins , the Pandavas. When they lost all their kingdom and wealth and even their wife Panchali alias Draupadi in the gambling, Duryodhana using that loss insulted Panadavas. He asked his brother Duschasana to bring Draupadi to assembly and disrobe her. But Krishna protected Draupadi by supplying her clothes by his magical power. Draupadi made a vow to kill Duryodhana and Bhima killed Duryodhana on the last day of Mahabharata war and fulfilled Draupadi’s vow. He was spoiled by his uncle Sakuni.
****
துவைதம்
Dwaita
Dwaita, , refers to the dualistic philosophy established by Sri Madhwa. This approach emphasizes a clear distinction between the individual soul and the Supreme Being (Jeevatma and Paramatma). Dwaita forms a foundational aspect of Madhwa’s teachings, reflecting a perspective that contrasts the unity of the soul with the divine, thereby asserting the individuality of each soul in relation to the Supreme. Madhwa was born in Karnataka near Udupi and there are more followers of his philosophy in Karnataka.
துவைதம் ஆத்மாவும் பிரம்மனும் வேறு வேறு என்று சொல்லும் மார்க்கம். இதை மத்வர் பிரச்சாரம் செய்தார் இதை பின்பற்றுவோர் மாத்வர் எனப்படுவர் .
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறுவேறென மத்துவர் கூறினார்; இந்தக் கொள்கைக்கு த்வைதம் என்று பெயர்; த்வி என்றால் இரண்டு என்று பொருள்; இரண்டு விரல்கள் மூலம் இதைக் காட்டுகிறார் மத்வர். இப்போது கர்நாடகத்தில் த்வைதர் /மாத்வர் என்ற பெயரில் அதிகம் பேர் உள்ளனர் . மத்வர் பிறந்ததும் கர்நாடகத்தில்தான் .
***
தூர்வா
தூர்வா என்பது புனிதம் உடைய புல் ஆகும். மெல்லியதாகவும் கரும் பச்சை நிறத்திலும் இருக்கும். இதன் மிகச் சிறிய பூக்கள் பச்சடி, சிவப்பு ரத்தின்க் கற்கள் போல இருக்கும் என்று புலவர்கள் பாடியுள்ளனர்.
Durva
Duurvaa sacred grass, sleek and dark green; its tiny flowers look like rubies and emeralds.
***
துர்கா தேவி
துர்க் என்றால் கோட்டை ; துர்க்கையை வழிபடுவோரை அவள், அரண் போல வளைத்துக் காப்பாள் ;
தேவி வடிவங்களில் மிகவும் நம்பிக்கையையும் தைரியத்தையும் வெற்றி உணர்வினையும் ஊட்டக்கூடிய தோற்றம் துர்கா தேவி . அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே நமக்கு பாசிட்டிவ் எனர்ஜி / ஆக்க பூர்வ சக்தி வந்துவிடும் !
துர்கா தேவியின் மகிஷாசுர மார்த்தனி சிற்பம்தான் மிகவும் மனதில் பதியும் வடிவம். எருமை முக அசுரனை தேவி வதம் செய்த காட்சி இது. . இவளின் காலடியில் துண்டிக்கப்பட்ட மகிஷனின் கழுத்திலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருப்பது போல் அமைந்திருக்கும். எருமைத் தலையின் மீது தமது இடது காலினையும், தமது வாகனமாகிய சிங்கத்தின் மீது காலை ஊன்றியவாறும் அமைந்திருப்பார்
சங்கத் தமிழ் நூல்களில் பாலை நிலக் கடவுளாகவும், வேட்டைக்கு செல்வோர், போருக்கு செல்வோர், கடவுளாகவும் துர்க்கை வழிபாடு பழக்கத்தில் உள்ளது. கொற்றவை ,கான் அமர் செல்வி ,பழையோள் என்ற பெயர்களை தமிழ் நூல்களில் காண்கிறோம்
லலிதா சஹஸ்ரநாமம் முழுதும் பண்டாசுரனை வதம் செய்த கதை வருகிறது . மந்திர சாஸ்திர நூல்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றன. சைலபுத்ரி, பிரம் மசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மஹா கௌரி, சித்திதாத்திரி என ஒன்பது வடிவம் /நவதுர்க்கா வடிவங்கள்.
Durga
Durga is a very popular deity. The general description of Durga given in Kashyapa silpa represents her as having four arms, two eyes, high hips, high breasts and all ornaments. She holds the conch and the discuss in her upper hands, while her right lower hand presents the Abhaya posture and the left lower hand rests the waist. She stands on a lotus pedestal and has a breast band of serpents and a red petticoat.
According to the Silparatna, Mula Durga holds in her lower hands the bow and the arrow. Meaning:
(These are the names of Nava Durgas)
1: First is Shailaputri (Daughter of the Mountain), Second is Brahmacarini (Who wanders in Brahman, a Tapasyi, performer of Penance),
2: Third is Chandraghanta (Bell of Moon), Kushmanda (Glowing substratum of Universal Egg) is Fourth,
3: Fifth is Skandamata (Mother of Skanda), Sixth is Katyayani (Daughter of Katyayana Rishi),
4: Seventh is Kalaratri (Dark Night of Destruction), Mahagauri (Great Shining White Form) is Eighth,
5: And Nighth is Siddhidatri (Bestower of Siddhis or Accomplishments); These are eulogized as Nava Durga (Names of Nine Durgas),
6: These Names were indeed uttered by (none other than) the great-souled Brahma.
From Mahabalipuram comes the figure of a Durga who stands on the buffalo’s head. She has eight arms,
The illustration shows also other figures surrounding the goddess, viz., two male devotees with peculiar head dress kneeling at her feet, two female attendants on either side holding the sword and the bow, two demi gods, one of whom is carrying a chauri, and a lion and a deer.
In another Mandapa at Mahabalipuram is a sculpture evidently of the same goddess with the lion and the deer , pairs of demi gods on the sides and devotees at the feet, one of whom is either cutting off his hair or his neck. The goddess has only four arms and stands on an ordinary pedestal but not on the buffalo’s head.
Images of Durga with four or more arms standing on the head of a buffalo are generally found placed on the niche of northern wall of the central shrines of Siva temples in south India.
Mahisasuramardini is represented with three broad eyes , a slender waist, heaving breasts, one face and twenty hands. Below her is the buffalo demon with his hand cut off and rolling on the ground. A man emerging from the buffalo’s neck is seen holding a weapon in his hand, abject with fear. Pierced by the trident of the goddess, he is vomiting blood. The lion too on which the goddess rides attack the giant with its mouth while the noose held by the gooses is tightly fastened around his neck. The goddess’ right leg is placed on the lion while the other steps on the body of the demon. This form of Chandi is propitiated by those who wish to destroy their enemies. The ruling family of Mysore has Chamunda – Chandi for its tutelary deity.
The puranas say that Durga was born of Yashoda in order to save the life of Krishna, who was just then born to Devaki. The children were exchanged under divine intervention. Kamsa, the cruel brother of Devaki , who had vowed to kill all the children of his sister, thought that this female child was Devaki’s and dashed it against a stone. But, then, the child flew into air and assuming the form of Durga/ Maha Maya mocked him and went away. On account of this she is known as the sister of Vasudeva Krishna.
***
–Subham—
Tags-HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-26; இந்துமத கலைச்சொல் அகராதி-26, Durga, Durodhana, Durvasa, துர்வாசர், துரியோதனன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இது அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ் பாடல்களில் மிக முக்கியமான பாடல் . காரணம் என்னவெனில் பல அரைவேக்காடுகள் இப்போது தொல்காப்பிய நூலைச் சிதைத்து வருகின்றனர். த்ருண தூமாக்கினி என்னும் பிராமணன்தான் தொல்காப்பியன் என்று உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் எழுதினார்; அதை மறைத்து தொல்காப்பியருக்கு மீசை வைத்து அவரது பூணுலை மறைக்கும் வகையில் ஒரு மேல் துண்டினையும் போட்டு, உலகத் தமிழ் மகாநாட்டு மலர்களில் படம் வரைந்துள்ளன.
அது மட்டும் அல்லாமல் அவரே பொருள்அதிகாரத்தில் பயன்படுத்திய சூத்திரம் என்ற சொல்லிய மறைத்து அவர் நூற்பா செய்ததாக எழுதியும் வருகின்றன ; இதை வீட வேடிக்கை எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் என்பதை மாற்றி , தாமோதரம் பிள்ளை, வையாபுரிப் பிள்ளை போன்றோரை அவமானப்படுத்திடும் வகையில் அதிகாரத்துக்குப் பதில் இயல் என்ற புதிய சொல்லை நுழைத்துள்ளன.
இவர்களுக்கு செமை அடி கொடுக்கிறார் அருணகிரி நாதர்; அவரே 500 ஆண்டுகளுக்கு முன்னர் பொருள் அதிகாரம் பகுதி இருந்ததைப் பாடி அவர்களின் மூக்கை உடைத்துவிட்டார்.
சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக …… மலராறும்
சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள …… இருதாளும்
ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட …… முறைவாழ்வும்
ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானாபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது …… பெறவேணும்
ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர்
ஏழேழு பேர்கள் கூற வருபொரு …… ளதிகாரம்
ஈடாய வூமர் போல வணிகரி
லூடாடி யால வாயில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதர …… குருநாதா
கூராழி யால்முன் வீய நினைபவ
னீடேறு மாறு பாநு மறைவுசெய்
கோபால ராய னேய முளதிரு …… மருகோனே
கோடாம லார வார அலையெறி
காவேரி யாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
சீரான கோலகால நவ மணி மால் அபிஷேக பார …
வரிசையானதும், ஆடம்பரமுள்ள ஒன்பது மணிகள் பதிக்கப்பெற்ற
பெருமை பொருந்திய கிரீடங்களின் கனத்தை உடையதும்,
வெகு வித தேவாதி தேவர் சேவை செயு முக மலர் ஆறும் …
பல வகையான தேவாதி தேவர்களெல்லாம் வணங்குவதுமான ஆறு திருமுகங்களையும்,
சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும் … சிறப்பு உற்று
ஓங்கும் வீர லக்ஷ்மி குடிகொண்டிருக்கும் பன்னிரு தோள்களையும்,
நீளும் வரி அளி சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும் …
நீண்ட ரேகைகள் உள்ள வண்டுகள் ஸ்ரீராகம் என்னும் ராகத்தைப் பாடி
ரீங்காரம் செய்யும் கடப்ப மலரின் மணம் வீசும் இரண்டு திருவடிகளையும்,
ஆராத காதல் வேடர் மட மகள் ஜீமூதம் ஊர் வலாரி மட
மகள் … முடிவில்லாத ஆசையை உன் மீது கொண்ட வேடர்களின் இளம்
மகளான வள்ளியும், மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனுடைய அழகிய பெண்ணாகிய தேவயானையும்,
ஆதார பூதமாக வலம் இடம் உறை வாழ்வும் … பக்தர்களின்
பற்றுக் கோட்டின் இருப்பாக வலது பாகத்திலும், இடது பாகத்திலும்
உறைகின்ற உனது திருக்கோல வாழ்க்கையையும்,
ஆராயும் நீதி வேலும் மயிலும் … நன்கு ஆராய்ந்து நீதி செலுத்தும்
உனது வேலையும் மயிலையும்,
மெய்ஞ் ஞான அபிராம தாப வடிவமும் … ஞான ஸ்வரூபியான
கீர்த்தி பெற்ற உனது பேரழகுடைய திருவுருவத்தையும்,
ஆபாதனேனும் நாளும் நினைவது பெற வேணும் … மிகக்
கீழ்ப்பட்டவனாக நான் இருப்பினும், நாள் தோறும் (மேற்சொன்ன
அனைத்தையும்) தியானம் செய்யும்படியான பேற்றைப் பெற
வேண்டுகிறேன்.
ஏர் ஆரும் மாட கூட மதுரையில் மீது ஏறி மாறி ஆடும்
இறையவர் … அழகு நிறைந்த மாட கூடங்கள் உள்ள மதுரையில்,
வெள்ளி அம்பலத்தில் நடன மேடையில் கால் மாறி* ஆடிய இறைவராகிய
சிவ பெருமான் (இயற்றிய ‘இறையனார் அகப் பொருள்’ என்ற நூலுக்கு),
ஏழேழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம் …
நாற்பத்தொன்பது சங்கப் புலவர்கள் பொருள் கூறிய பொருள்
அதிகாரத்தின் உண்மைப் பொருள் இதுதான் என்று கூறுவதற்காக,
ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி … தகுதி உள்ள ஊமைப்
பிள்ளை** போல செட்டி குலத்தில் தோன்றி விளையாடி,
ஆலவாயில் விதி செய்த லீலா விசார தீர வரதர குருநாதா …
ஆலவாய் என்னும் மதுரையில் உண்மைப் பொருளை நிலை நிறுத்திக்காட்டிய திருவிளையாடலைப் புரிந்த தீரனே, வரங்களைக் கொடுப்பவனே, குரு நாதனே,
முன் வீய நினைபவன் ஈடேறுமாறு கூர் ஆழியால் பாநு
மறைவு செய் … முன்பு (பாரதப் போர் நடந்தபோது) இறந்து போவதற்கு
வயலியில் … தவறுதல் இன்றி பேரொலியுடன் அலைகளை வீசி வரும்
காவேரி ஆறு பாய்கின்ற வயலூரிலும்,
கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே. …
கோனாடு*** என்னும் நாட்டுப் பகுதியில் உள்ள விராலி மலையிலும்
வீற்றிருக்கும் பெருமாளே.
*****
* ஒருமுறை பாண்டியன் ராஜசேகரன் நடராஜப் பெருமான் எப்போதும் இடது
திருவடியைத் தூக்கி நடனமாடுவது அவருக்கு எவ்வளவு அயர்ச்சி தரும் என்று
எண்ணி வருந்தி, இறைவனை கால் மாறி வலது பாதத்தைத் தூக்கி ஆடும்படி
வேண்டினான். அதற்கு இணங்கி மதுரையில் சிவபிரான் கால் மாறி ஆடினார் – திருவிளையாடல் புராணம்.
** மதுரையில் 49 சங்கப்புலவர்கள் இறையனார் அகப் பொருளுக்கு உரை எழுதினர். சிறந்த உரை எது என்பதில் விவாதம் ஏற்பட, மதுரை செட்டி குலத்தில் ஊமைப்பிள்ளை ருத்திரஜன்மன் என்ற பெயரில் அவதரித்த முருகன் அனைவரது உரையையும் கேட்டு, நக்கீரன், கபிலன், பரணன் ஆகிய புலவர்களின் உரைகளைக் கேட்கும்போது மட்டும் வியப்பையும், கண்ணீரையும் காட்ட, இம் மூவரின் உரையே உண்மைப் பொருள் என்று புலவர்கள் உணர்ந்து கலகம் தீர்த்தனர்.
– திருவிளையாடல் புராணம்.
****
தவறுகளைத் திருத்துவோம் : எனது கருத்து
மேலே கூறிய இறையனார் அகப்பொருள் , திருப்புகழ் பாடல் வரியிலும் இல்லை; திருவிளையாடல் புராணப்பாடல்களிலும் இல்லை; அத்தோடு காலத்துக்குப் பொருந்தாத காலவழுவமைதியும் உள்ளது; கபிலர், பரணர், நக்கீரர் பாடிய காலத்தில்– அதாவது சங்க காலத்தில்- இறையனார் அகப்பொருள் உரை இல்லை. அப்படி ஒரு நூலினை சங்க காலத்தில் எவரும் அறியார் ; அக்காலத்தில் உரைநடையும் இல்லை.
****
இறையனார் அகப்பொருள் உரை
இந்த நூல் ஏழாம் நூற்றாண்டு CE வாக்கில் தோன்றியிருக்கலாம். இந்த நூலுக்கு உரை எழுதிய நக்கீரர் தமது உரைக்கு மேற்கோளாகப் பாண்டிக்கோவை நூலிலுள்ள பாடல்களைத் தந்துள்ளார். பாண்டிக்கோவை CE எட்டாம் நூற்றாண்டு நூல். கட்டளைக் கலித்துறை இலக்கணம் கொண்ட பாடல்கள் முதலில் தோன்றிய காலம்.
****
ஆகவே இதில் குறிப்பிடும் நக்கீரர் சங்க கால நக்கீரர் இல்லை சைவத் திருமுறைகளில் நக்கீரர், கபிலர் பரணர் என்ற மூவர் உள்ளார்கள் அவர்களில் ஒருவராக இருக்கலாம் .
இன்னொரு கேள்வி எழலாம் .
திருப்புகழ் பாடலில் தொல்காப்பியம் என்ற சொல் அல்லது நூலின் பெயர் இல்லையே என்று. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான நூல்களில் எல்லாம் பொருள் அதிகாரம் என்ற சொல் தொல்காப்பியத்தில் மட்டுமே வந்துள்ளது எல்லாவற்றுக்கும்மேலாக திருவிளையாடல் புராணத்தில் சங்கப் புலவர்களிடையே எழுந்த வாதம் அவர்களுடைய பாடல்களைப் பற்றியதே ; இதைப் பரஞ்சோதி முனிவர் அழகாகப் பாடியுள்ளார் . அவர்கள் இறையனார் அகப்பொருள் உரை பற்றி சண்டையிட்டனர் என்ற செய்தி தி. வி.பு ராணத்தில் இல்லை. இதோ ஒரிஜினல் பாடல்கள்:
திருவிளையாடல் புராணம்
55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம் (2597 -2610 )
2597. காமனைப் பொடியாக் கண்ட கண் நுதல் தென் நூல் கீர
நாம நல் புலவற்கு ஈந்த நலம் இது பொலம் பூம் கொன்றைத்
தாமனச் சங்கத்து உள்ளார் தலை தடுமாற்றம் தேற
ஊமனைக் கொண்டு பாடல் உணர்த்திய ஒழுக்கம் சொல்வாம்.
2598. அந்தம் இல் கேள்வி ஓர் எண் அறுவரும் வேறு வேறு
செந்தமிழ் செய்து தம்மில் செருக்குறு பெருமை கூறித்
தந்தமின் மாறாய்த் தத்தந் தராதரம் அளக்க வல்ல
முந்தை நூல் மொழிந்த ஆசான் முன்னர் வந்து எய்தினாரே.
2599. தொழுதனர் அடிகள் யாங்கள் தொடுத்த இப் பாடல் தம் முள்
விழுமிதும் தீதும் தூக்கி வேறுபாடு அளந்து காட்டிப்
பழுதறுத்து ஐயம் தீரப் பணிக்க எனப் பணிந்தார் கேட்டு
முழுது ஒருங்கு உணர்ந்த வேத முதல்வனாம் முக்கண் மூர்த்தி.
2600. இருவரும் துருவ நீண்ட எரி அழல் தூணில் தோன்றும்
உரு என அறிவான் அந்த உண்மையால் உலகுக்கு எல்லாம்
கரு என முளைத்த மூல இலிங்கத் துணின்றும் காண்டற்கு
அரிய தோர் புலவனாகித் தோன்றி ஒன்று அருளிச் செய்வான்.
2601. இம் மா நகர் உள்ளான் ஒரு வணிகன் தனபதி என்று
அம் மா நிதிக் கிழவோன் மனை குண சாலினி அனையார்
தம் மாதவப் பொருட்டால் வெளிற்று அறிவாளரைத் தழுவும்
பொய் மாசு அறவினன் போல அவதரித்தான் ஒரு புத்தேள்.
2602. ஓயா விறல் மதனுக்கு இணை ஒப்பான் அவன் ஊமச்
சேய் ஆம் அவன் இடை நீர் உரை செய்யுள் கவி எல்லாம்
போய் ஆடுமின் அனையானது புந்திக்கு இசைந்தால் நன்று
யாவரும் மதிக்கும் தமிழ் அதுவே என அறைந்தான்.
2603. வன் தாள் மழ விடையாய் அவன் மணி வாணிகன் ஊமன்
என்றால் அவன் கேட்டு எங்கன் இப்பாடலின் கிடக்கும்
நன்று ஆனவும் தீது ஆனவும் நயந்து ஆய்ந்து அதன் தன்மை
குன்றா வகை அறைவான் என மன்று ஆடிய கூத்தன்.
2604. மல்லார் தடம் புய வாணிக மைந்த தனக்கு இசையக்
சொல் ஆழமும் பொருள் ஆழமும் கண்டான் முடி துளக்காக்
கல்லார் புயம் புளகித்து உளம் தூங்குவன் கலகம்
எல்லாம் அகன்றிடும் உங்களுக்கு என்று ஆலயம் சென்றான்.
2605. பின் பாவலர் எலாம் பெரு வணிகக் குல மணியை
அன்பால் அழைத்து ஏகித் தமது அவையத்து இடை இருந்தா
நன் பால் மலர் நறும் சாந்து கொண்டு அருச்சித்தனார் நயந்தே
முன்பால் இருந்து அரும் தீம் தமிழ் மொழிந்தார் அவை கேளா.
2606. மகிழ்ந்தான் சிலர் சொல் ஆட்சியை மகிழ்ந்தான் சிலர்
பொருளை
இகழ்ந்தான் சிலர் சொல் வைப்பினை இகழ்ந்தான் சிலர்
பொருளைப்
புகழ்ந்தான் சிலர் சொல் இன்பமும் பொருள் இன்பமும்
ஒருங்கே
திகழ்ந்தான் சிலர் சொல் திண்மையும் பொருள் திண்மையும்
தேர்ந்தே.
2607. இத் தன்மையன் ஆகிக் கலை வல்லோர் தமிழ் எல்லாம்
சித்தம் கொடு தெருட்டும் சிறு வணிகன் தெருள் கீரன்
முத் தண் தமிழ் கபிலன் தமிழ் பரணன் தமிழ் மூன்றும்
அத் தன் மையன் அறியும் தொறும் அறியும் தொறும் எல்லாம்.
2608. நுழைந்தான் பொருள் தொறும் சொல் தொறும் நுண் தீம்
சுவை உண்டே
தழைந்தான் உடல் புலன் ஐந்தினும் தனித்தான் சிரம்
பனித்தான்
குழைந்தான் விழிவிழி வேலையுள் குளித்தான் தனை
அளித்தான்
விழைந்தான் புரி தவப் பேற்றினை விளைத்தான் களி
திளைத்தான்.
2609. பல் காசொடு கடலில் படு பவளம் சுடர் தரளம்
எல்லாம் நிறுத்து அளப்பான் என இயல் வணிகக் குமரன்
சொல் ஆழமும் பொருள் ஆழமும் துலை நா எனத் தூக்க
நல்லாறு அறி புலவோர்களும் நட்டார் இகல் விட்டார்.
2610. உலகினுட் பெருகி அந்த ஒண் தமிழ் மூன்றும் பாடல்
திலகமாய்ச் சிறந்த வாய்ந்த தெய்வ நாவலரும் தங்கள்
கலகமா நவையில் தீர்ந்து காசு அறு பனுவல் ஆய்ந்து
புலம் மிகு கோட்டி செய்து பொலிந்தனர் இருந்தார் போலும்.
*****
இது ஒரு புறமிருக்க அதிகாரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் திருக்குறளிலும், சிலப்பதிகாரத்திலும் தொல்காப்பியத்திலும் மட்டுமே உள்ளன; இவை மூன்றும் சங்க காலத்துக்குப் பின்னர் ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் தொகுக்கப்பட்டவை ; நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்; தொல்காப்பியர் என்னும் த்ருண தூமாக்கினி முனிவர் , அகத்தியர்- ராமபிரான்- ராவணன் காலத்தில் வாழ்ந்திருக்கலாம்; அவர் சொன்ன இலக்கண விதிகளை யாரோ ஒருவர் அவர் பெயரில் தொகுத்து பிற்காலத்தில் நமக்குத் தந்துள்ளார் ; இது சிலப்பதிகாரத்துக்கும் பொருந்தும் ; சேரன் செங்குட்டுவன், சங்க கால மன்னன் என்பதில் ஐயமில்லை அவன் காலக் கதையைச் சொல்லும் நூல் சிலப்பதிகாரம் சுமார் 500 ஆண்டுகளுக்குப் பின்னர் எழுந்தது .
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய எல்லா நூல்களிலும் திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் சங்க காலத்துக்குப் பின்னரே வைத்துள்ளனர் என்பதையும் நினைவிற்கொள்ளவேண்டும்.
—subham—Tags:திருப்புகழ் , தொல்காப்பியம், பொருள் அதிகாரம், அருணகிரி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
6-10-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
ஒரு காலை இழந்த மங்கை எவரெஸ்ட் சிகரம் ஏறிப் படைத்த சாதனை!
ச. நாகராஜன்
மனித மனதின் ஆற்றலுக்கு ஒரு எல்லையே இல்லை. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது பழமொழி.
ஆனால் ஒரு கால் இல்லாத போதும் மார்க்கம் உண்டு என்பதையும் அந்த மார்க்கமானது இமயமலையின் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்திற்கும் இட்டுச் செல்லும் என்பதையும் நிரூபித்தார் ஒரு இருபத்தாறே வயதான இள மங்கை.
அந்த வீராங்கனையின் பெயர் அருணிமா சின்ஹா.
உத்தர பிரதேசத்தில் லக்னோவிலிருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அம்பேத்நகர் மாவட்டத்தில் 1988ம் ஆண்டு பிறந்தார் அருணிமா. அவரது தந்தை ராணுவத்தில் ஒரு எஞ்ஜினியர். தாயார் க்யான் பாலா அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் ஒரு சூபர்வைஸர். தன் தந்தையை மூன்றாம் வயதில் இழந்தார் அவர். அவரையும் அவரது தமக்கை லக்ஷ்மியையும் தம்பி ராகுலையும் மாமனான ஓம் பிரகாஷ் வளர்க்க ஆரம்பித்தார்.
சிறுவயதிலிருந்தே விளையாட்டுத் துறையில் ஆர்வமுடன் இருந்தார் அருணிமா. சட்டம் படித்து அதில் தேர்ந்தார் அவர்.
அவரது பிறந்த தேதி தவறாக செண்ட்ரல் இண்டஸ்ட்ரியல் செக்யூரிடி ஃபோர்ஸின் அழைப்பில் குறிப்பிடப்பட்டிருந்ததைத் திருத்த அவர் டெல்லி செல்ல வேண்டி இருந்தது.
அப்போது தான் விதி சதி செய்து அவரது வாழ்க்கையில் விளையாடியது.
2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் நாள். பத்மாவத் எக்ஸ்பிரஸில் அவர் லக்னோவிலிருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இரவில் கொள்ளைக்காரர்கள் அவரைத் தாக்கி அவரது தங்க சங்கிலியைப் பிடுங்க முயன்றனர். அந்த சங்கிலி அவருக்கு அவர் தாயார் அளித்தது. அவர்களை அவர் கடுமையாக எதிர்த்தார்.
அவரது விளையாட்டுத் துறை பயிற்சி அவர்களைத் தடுக்க உதவி செய்தது. ரயிலில் இருந்த யாரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. அந்தக் கொள்ளையர்கள் அவரை ரயிலிலிருந்து தூக்கி வெளியே போட்டனர். எதிரிலிருந்த தண்டவாளத்தில் அவர் விழவே அப்போது அதில் வந்த ரயில் அவரது காலின் மீது ஏறியது. அவர் ஒரு காலை இழந்தார். 49 ரயில் வண்டிகள் தாண்டிச் செல்லும் வரையில் அவர் அதே இடத்தில் கிடந்தார்.
அடுத்த நாள் காலையில் தான் அங்கு வந்த சில கிராமத்தார்கள் அவரைத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது இடது கால் துண்டிக்கப்பட்டது.
அந்த மருத்துவமனையின் நிலையோ மகா மோசம். அவரது துண்டிக்கப்பட்ட காலை மறுநாள் காலையில் அங்கு வந்த தெருநாய் ஒன்று சுவைக்க ஆரம்பித்தது,
இது எல்லா செய்தித்தாள்களிலும் சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சியிலும் பெரும் பரபரப்புடன் பேசப்பட்ட பேசு பொருளானது.
உடனடியாக அவரை ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிகல் ஸயின்ஸஸ் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர்.
ஒரு காலை இழந்த அவரை இப்போது சமூகம் பரிதாபத்துடன் பார்க்க ஆரம்பித்தது.
இந்த சோகத்திலிருந்து மீண்டு எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஒரு ஊக்கம் அவர் மனதில் பிறந்தது.
எவரெஸ்டைப் பற்றிப் படிக்க ஆரம்பித்தார் அவர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏற 15 பாதைகள் உள்ளன. அதில் சிகரத்தை ஏறி வெல்லத் துடிக்கும் சாதனையாளர்களால் 14 பாதைகள் முயன்று பார்க்கப்பட்டவை. 15வது பாதையை அவர் தேர்ந்தெடுத்தார்.
செயற்கைக் கால் ஒன்றை அவர் பொருத்திக் கொண்டார்.
டாக்டர்களிடம் தனது எவரெஸ்ட் சிகரம் மீது ஏறும் எண்ணத்தைச் சொன்ன போது அவர்கள் சிரித்தனர். சிலரோ அவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று கூறினர்.
முதன் முதலாக எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய பெண்மணியான பசேந்திர பாய் என்பவர் ஜாம்ஷெட்பூரில் இருந்தார் அவரைச் சென்று சந்தித்தார் அருணிமா. அவர் ஒருவர் தான் அனுதாபத்துடன் இவர் கூறியதைக் கேட்டு ஊக்கமும் அளித்தார். அங்கேயே தங்கி பயிற்சி பெற ஆரம்பித்தார் அவர்.
18 மாதங்கள் கடுமையான பயிற்சியைப் பெற்றார் அவர்.
2013ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி தனது சாதனையை ஆரம்பித்த அவர் 52 நாட்களுக்குப் பிறகு மே 21ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி நின்றார்.
அவர் சாதனையை அறிந்து உலகம் பிரமித்தது.
2015இல் இந்திய அரசு அவரைப் பாராட்டி பத்ம ஶ்ரீ விருது அளித்து கௌரவித்தது.
உடல் ஊனம் ஒரு பொருட்டல்ல, மனதில் தைரியம் இருந்தால் மலையையும் வெல்லலாம் என்ற வழக்கு மொழியை வாழ்ந்து காட்டி மங்கையருக்கெல்லாம் ஒரு ஆதர்ச பெண்மணியாக அவர் திகழலானார்.
இந்த வெற்றிக்குப் பின்னர் ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ மலை, ஐரோப்பாவின் எல்பராஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் கொள்கியஸ்கோ மலை ஆகியவற்றின் மீதும் ஏறி அவர் சாதனை படைத்தார்.
உங்களை ஊக்குவித்தது எது என்று அவரைக் கேட்ட போது அவர் பதிலாகக் கூறியது இது தான்:
“ஸ்வாமி விவேகானந்தரே எனக்கு உத்வேகம் ஊட்டியவர். அவரது எழுமின் விழிமின், குறிக்கோளை அடையும் வரை தளராது செல்மின் என்ற வார்த்தைகளே இந்த சாதனையைப் படைக்க வைத்தது” என்றார் அவர்.
சிறுவர் சிறுமியர்களுக்கு விளையாட்டில் பயிற்சி அளிக்க ஒரு அகாடமியை இவர் நிறுவி அவர்களுக்கு இப்போது பயிற்சி அளித்து வருகிறார்.
அவர் தனது வாழ்க்கையை “Born Again on the Mountain: A Story of Losing Everything and Finding it Back” என்ற நூலில் விளக்கமாகத் தந்துள்ளார்.
உங்கள் குறிக்கோளை அடைய தளராது உழைத்து வெற்றி பெறுங்கள் என்பதே அவர் உலகத்தினருக்குத் தரும் அனுபவ மொழி!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
The more popular forms of Vishnu, worshipped in temples, generally refer to numerous avatars or incarnations. There are ten such Avataaraas (Dasaavataar) recognised as of primary importance; but more popular in the temples are five incarnations; they are
Varaaha – the boar incarnation.
Narasimha- the man lion incarnation.
Vaamana – the dwarf incarnation developing eventually developing into Trivikrama.
Rama-the hero Raamaayana and
Krishna, the pastoral god and the chief actor in the great war of Mahabharata.
The other five incarnations of Vishnu, i.e. are
Fish, the Tortoise, Parasuraman, Balarama and Kalki though represented largely on walls, pillars, ceilings of temples, being either carved or painted, are not generally worshipped as the chief deity in a temple.
Varaha Avatara – varaaha avataara-, also known as
Aadi Varaaha or Bhuuvaraaha, is beautifully illustrated by the image in the cave temple at Mahabalipuram. Here the boar faced Visnu is seen standing with his right foot resting on the hood of the serpent god Sesha. On his right thigh is seated goddess earth, supported in position by the two lower arms of the god. He wears a high crown and has in his two upper hands the discus and the conch. Another Varaha Avatar statue is found in another rock cut mandapa in the shrine of Varaha Perumal cave temple.
The scene depicts the primeval boar rescuing from the depths of the ocean the goddess earth who had been kidnapped by the demon Hiranyaksha, an enemy of the gods.
Sesha on whose widespread hoods the earth is generally supposed to rest is also represented as rising from the ocean along with the boar god. He is folding his hands in the attitude of worship. The devas worshipping the god from above, the sages on the right and Brahma and Siva on the left indicate the joy felt by the entire universe on the occasion.
Figures of the man-boar in meditation or of a full boar digging the earth in the midst of many demons, are also sometimes represented.
This incarnation was a favourite of the Western Chalukya kings. A fine sculpture of Varaha carrying the goddess earth is found in the rock cut temple of Badami cave. In later times, the Kakatiyas, the Reddis of Kondavidu and the Hindu sovereigns of Vijayanagar paid reverence to Varaha adopting the boar as their royal emblem.
At Srimushnam in South Arcot is a beautiful big temple dedicated to the god and so also another at Tiuvadaddai near Mahabalipuram.
Ten Avatars
420. His forms are a shining fish, a turtle, a boar, a lion,
a dwarf, Parasurāman, Balarāman, Rāma, Kaṇṇan
and Kalki, the form that will end the world.
His Thiruppadi is Srirangam surrounded with rippling water
where a male swan with its mate climbs on a lovely lotus,
swings on it and jumps on a flower bed,
plunging into it and playing in the beautiful pollen.
***
ஒரே பாட்டில் பத்து அவதாரங்கள்!
ஒரிஸ்ஸாவில் பிறந்து அஷ்டபதிகளைக் கொண்ட கீத கோவிந்தம் என்ற நூலினை நமக்கு அளித்த ஜெயதேவர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் புத்தரையும் ஒரு அவதாரமாகச் சேர்த்தார். அதற்கு முன்னுள்ள அவதாரங்களை மட்டுமே நாம் ஆழ்வார் பாடல்களில் காண்கிறோம் ; பாகவதம் உதலிய நூல்களில் இருபதுக்கும் மேலான அவதாரங்களை கள் குறிப்பிடப்பட்டாலும் தசாவதாரம் என்ற பத்து அவதாரக் கணக்கு ஆழ்வார் பாசுரங்களிலேயே வந்துவிட்டன .
சோமுகாசுரனை வதைத்து, தேவர்களின் துயர் நீக்கி, வேதங்களை எடுத்துவந்த மச்சா வதாரம், தேவர்களுக்கு அமுது கிடைப்பதற்காக எடுத்த ஆமை /கூர்ம அவதாரம் , பெரிய பூமியைப் பாய்போல சுருட்டிச் சென்ற இரண்யாக்ஷனை அழித்தது வராஹாவதாரம் , பொல்லாத கனகன் எனும் இரணியனை வென்றது நரசிம்மாவதாரம், ஓங்கி உலகை அளந்தது புனிதமான வாமனாவதாரம் , களிப்புடன் கூத்தாடிய இராவணனை வென்றது ஸ்ரீ ராமாவதாரம் , சூர்ய குல அரசர்களை வேரறுத்த பரசுராம அவதாரம், உலகத்தின் பயம் நீக்க வந்த கண்ணனும் அவனுடன் அவதரித்த பலராமனும் இரண்டு அவதாரங்கள், இனி வரப்போகும் கல்கி அவதாரம் ஆகிய பத்தும் அவதாரங்களாம் .
ஜெயதேவர் சம்ஸ்க்ருதத்தில் எழுதிய அஷ்டபதியில் பலராமனுக்குப் பதிலாகப் புத்தரைச் சேர்த்திருந்தாலும் எல்லோரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
***
வராக அவதாரம்
மகாவிஷ்ணு, வராக (காட்டுப்பன்றி) அவதாரம் எடுத்து, இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமியை மீட்டார். கடலுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பூமியை, தன்னுடைய இரண்டு கோரைப் பற்களில் தாங்கியபடி மேல் எழுந்து வந்து, மீண்டும் வான்வெளியில் நிலைபெறச் செய்தார் என்பது புராண வரலாறு.
ஸ்ரீமுஷ்ணம் பூவராகர் கோவிலில், வராக மூர்த்தியாக இரண்டு கரங்களுடன், அதுவும் இடுப்பில் கையை வைத்தபடி எழிலான தோற்றத்துடன் காணப்படுகிறார். அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருப்பது மேலும் சிறப்பானதாகும். இங்குள்ள மூலவரின் திருமேனி, முழுவதும் சாளக் கிராமத்தினால் ஆனது. பன்றிக்கு மிகவும் விருப்பமானதான கோரைக் கிழங்கு இப்பெருமாளுக்குச் சிறப்பு பிரசாதமாக நிவேதனம் செய்யப்படுகிறது. ஸ்ரீ பூவராக சுவாமி மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். முகம் மட்டும் தெற்கு நோக்கி உள்ளது. அசுரர்களை வென்றதால் ஏற்பட்ட வெற்றிப் பெருமித உணர்ச்சியில் இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு முகத்தை நிமிர்த்தி கம்பீரமாக பார்க்கிறார்
To be continued………………….
Tags- வராக அவதாரம்,பூவராகன் கோவில் ஸ்ரீமுஷ்ணம்
ஆதிவராக குகை மஹாபலிபுரம் Hinduism through 500 Pictures in Tamil and English-35; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-35 ,ஒரே பாட்டில் பத்து அவதாரங்கள்!