தரையில் வளராத மரங்களைக் கொண்ட  அதிசயமான ஒகேபெனோகி ஸ்வாம்ப் (Post.15,120)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,120

Date uploaded in London –   26 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 Thanks for the images Shutterstock.com 

4-8-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

உலகின் அதிசய இடங்கள்!

தரையில் வளராத மரங்களைக் கொண்ட  அதிசயமான ஒகேபெனோகி ஸ்வாம்ப் (Okefeenokee Swamp) 

ச. நாகராஜன் 

பார்ப்பதற்கு நல்ல தரையில் வளர்ந்தது போலக் காட்சியளிக்கும், , ஆனால் உண்மையில் சதுப்பு நிலத்தில் வளர்ந்து கம்பீரமாகக் காட்சி அளிக்கும் மரங்களைக் கொண்ட ஒகேபெனோகி ஸ்வாம்ப் (Okefeenokee Swamp) உண்மையிலேயே உலகின் அதிசய இடங்களுள் ஒன்று என்று சொல்லலாம்! 

680 சதுரமைல் பரப்பளவுள்ள அதிசயமான இந்த மிதக்கும் சதுப்பு நிலம் ஜார்ஜியாவின் தென்கிழக்குப் பகுதியிலும் அதன் முனை அ,மெரிக்காவின் ஃப்ளோரிடாவைத் தொட்டுக் கொண்டும் இருக்கிறது! 

முன்னொரு காலத்தில் அட்லாண்டிக் மகா சமுத்திரம் தென்கிழக்கு ஜார்ஜியாவிலிருந்து உள்வாங்கிப் பின்னால் செல்லவே அது உப்பு நீர் நிரம்பிய குறுகிய பகுதி ஒன்றைப் புதிதாக உருவாக்கி விட்டது! களிமண்ணும் சுண்ணாம்பும் அங்கு சேரவே காலப் போக்கில் அது ஒரு பெரிய சதுப்பு நிலமாக மாறி விட்டது. 

மிதக்கும் இந்த நிலத்தின் ஆழம் ஒரு மீட்டர் இருக்கிறது. 

இங்கு ஏராளமான சைப்ரஸ் மரங்கள் வளர்ந்துள்ளன. இவற்றில் ஏராளமானவை 400 வருடங்கள் ஆனவை. இவை 120 அடி உயரமுள்ளவையாகும்! ஆயிரம் வருடங்கள் வரை இந்த மரங்கள் இருக்கும்! பரந்திருக்கும் இந்த மரத்தின் முழு எடையையும் நீரே தாங்கிக் கொள்கிறது.

 பெரிய காடு போல இருக்கும் இந்தப் பகுதியில் பல தீவுகள் மிதந்து கொண்டே இருக்கும்!

இந்த அற்புதமான சூழ்நிலையைப் பார்த்து பல விலங்குகளுக்குக் கொண்டாட்டம் தான்!

 நான்கு அங்குலம் அளவில் விரல் அளவே உள்ளதாக சிறிய முதலைகள் இருக்கும் போது பெரிய முதலைகள் 13 அடி நீளமுள்ளதாக வளர்கின்றன. எடையோ 225 கிலோ ஆகும். இதை அமெரிக்க ராஜ முதலை என்கின்றனர்.

 இந்த பிராந்தியத்திலேயே அதிகமாகச் சத்தம் போடுவது இங்குள்ள மரங்கொத்திப் பறவைகள் தாம்!

பாம்புகளும், பல்லிகளும், விதம் விதமான தவளைகளும் கூட்டம் கூட்டமாக இங்கு வசிக்கின்றன.

 1838ல் அமெரிக்க ராணுவம் ஃப்ளோரிடாவில் இருந்த பழங்குடியினரான செமினோல் இந்தியர்களை விரட்டி அடிக்கவே அவர்கள் இந்தப் பகுதிக்கு வந்து சதுப்பு நிலத்தை விவசாயம் செய்யும் நிலமாக மாற்ற முயன்று அதில் வெற்றியும் பெற்றனர்.

 ஆயிரத்தி எண்ணூற்றுத் தொண்ணூறுகளில் காப்டன் ஹாரி ஜாக்ஸன் என்பவர் இங்கு சதுப்பு நிலத்தில் உள்ள நீரை வெளியேற்றி விட்டு அட்லாண்டிக் பெருங்கடலுடன் இணைக்கும் சுவானி கால்வாய் என்ற ஒரு கால்வாயை அமைக்க முயன்றார். ஆனால் அது வெற்றி பெறாமல் பாதியிலேயே நின்றது. அதற்கு ஜாக்ஸனின் முட்டாள்தனம் (Jackson’s Folly) என்று பெயரிட்டனர்.

 1908 முதல் 1926 முடிய மரக் கம்பெனி ஒன்று இங்குள்ள மரங்களை வெட்டி அழித்தது. அதனால் .வனவிலங்குகள் இந்த இடத்திலிருந்து ஓட ஆரம்பித்தன.

அமெரிக்க அரசு இதைப் பார்த்தது. உடனே இதை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்தது. சைப்ரஸ் மரங்கள் உள்ளிட்ட தாவர வகைகள் அழிவிலிருந்து தப்பித்தன!

 இப்போது இங்கு ஏராளமான உல்லாசப் பயணிகள் இந்த இயற்கை அற்புதத்தைப் பார்த்து வியக்கின்றனர்.

மிதக்கும் நீரில் மரம் வளர்வது ஒரு அதிசயம் தானே!

***

குருக்ஷேத்ரம் பற்றி பத்து சுவையான செய்திகள் (Post No.15,119)

துருவ நாராயணன் கோவிலும் பிரம்ம சரோவரும் 

Written by London Swaminathan

Post No. 15,119

Date uploaded in London –  25 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1

தர்ம க்ஷேத்ரே குருக்ஷேத்ரே என்ற இரண்டு சொற்களுடன் உலகப் புகழ்பெற்ற பகவத்த் கீதை ஏன் துவங்குகிறது?

விடை; அங்கே கிருஷ்ணபகவான் வழிகாட்டுதலின் பேரில் அரக்கர்களை போன்ற குணம் படைத்த துர்யோதானாதிகளை அழித்து தர்மம்  நிலை நாட்டப்பட்டது .

धृतराष्ट्र उवाच |

धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवः |

मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय ||1-1||

(Dhritrashtr uvaach) 

Dharmkshetre, Kurukshetre, samvetaH, yuyutsavH,

MamkaH, PandavaH, ch, ev, kim’, akurvat, Sanjay ||1-1||

***

2

இப்போது குருக்ஷேத்திரம் எங்கே உள்ளது?

ஹரியானா மாநிலத்தில் பிரம்ம ரிஷி தேசம் என்று அழைக்கப்பட்ட பூமியில் உள்ளது  பழங்கால சரஸ்வதி மற்றும் த்ருஷத்வதி நதிக்களுக்கு இடையே அமைந்த இந்த இடம் மிகவும் புனிதமான பிரதேசம்

***

கீதா மந்திர்கள் 

3

குருக்ஷேத்திரத்தில் கோவில்கள் உள்ளனவா?

பல கிருஷ்ணன் கோவில்கள் இருக்கின்றன ஒரே கோவிலில் முன்னூறுக்கும் அதிகமான பகவத் கீதை உரைகளைக் கண்டு மகிழலாம் . துருவ நாராயணன் கோவிலும் , சங்கர் மஹாதேவர் என்ற சிவன் கோவிலும் உள்ளன.

***

4

வேறு எங்கும் இல்லாத சிறப்பு ஏதேனும் உண்டா?

உண்டு. 360 ஏரி, குளங்கள் உள்ளன அத்தனையும் புனிதம் பெற்றவை ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு.

5

மிகவும் புகழ் பெற்ற புனித நீர்நிலை எது?

பிரம்ம சரோவர் என்னும் மிகப்பெரிய ஏரி ஆகும்.

பிரம்ம சரோவர் என்னும் ஏரி மூன்றரை சதுர கிலோமீட்டர் பரப்பு உடையது . 20 லட்சம் பேர் குளிக்கலாம். பெண்களுக்காக தனியாக 20,000 படித்துறைகள் இருப்பதால் , அங்கு ஒரே நேரத்தில் இருபதாயிரம் பேர் புனித ஸ்னானம் செய்யலாம்

6

வேறு புகப்பெற்ற குளம், கிணறுகள் ?

சன்னிஹித குளம், சந்திர கூபம் கிணறு, பீஷ்ம குண்டம், பிர்லா கோவில், தயால்பூர் வன கங்கா  முதலியவற்றை யாத்ரீகர்கள் தரிசனம் செய்கிறார்கள்.

7

அங்குள்ள ஆல மரம் ஏன் புகப்பெற்று விளங்குகிறது ?

அந்த ஆல மரத்தின் கீழ் நின்றுதான் பகவான் கிருஷ்ணன் , பகவத் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தார் அது 5000  ஆண்டு பழமையான மரம். எப்படி புத்தர் ஞானோதயம் பெற்ற அரச மரத்தின் கன்றுகள் இலங்கையின் தென்கோடிவரை சென்றதோ அது போல பழைய ஆல மரத்தின் கன்றுகள் காலம் காலமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது; உலகத்திற்குப் பகவத் கீதையை வழங்க உதவிய ஆல மரத்தை நாம் வணங்குவது சாலப்பொருத்தமே.

8

குருக்ஷேத்திரத்தை யார்  உருவாக்கினார் ?

பிரம்மா இந்த ஊரினை உண்டாக்கியதாகப் புராணங்கள் பகர்கின்றன

9

சூரிய கிரகணத்தின்போது லட்சக் கணக்கான யாத்ரீகர்கள்  குருக்ஷேத்திரத்துக்குச் செல்வதன் ரகசியம் என்ன?

சூரிய கிரகணத்தின்போது அங்குள்ள பிரம சரோவர் ஏரியில் புனிதக் குளியல் செய்தால் ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டுமாம். ஆகவே ஒவ்வொரு கிரகணத்தின்போதும் கூட்டம் அதிகரிக்கிறது.

***

10

பாஸ்கராச்சார்யார் என்ற கணித மேதை செப்பிய ரகசியம் என்ன ?

குருக்ஷேத்திரம் வழியாக முக்கியக்கோடு செல்வதாகவும் இது ரோதக், உஜ்ஜைனி, மதுரா நகரங்களை இணைப்பதாவும் ஒரு புறம் மேரு சிகரத்தினையும் மறுபுறம் இலங்கையையும் தொடுவதாகவும் சித்தாந்த சிரோன்மணி நூல் உரைக்கிறது. அதிசயம் என்னவென்றால் திருமூலரும் இதைப்பாடியுள்ளார்

பல இடங்களுக்கு புனிதத்துவம் ஏற்படுவதற்குக் காரணம் அவை அனைத்தும் சில அதிசயக் கோடுகள் (Lay lines)செல்லும் பாதையில் இருப்பதாக மேலை நாடுகளிலும் ஒரு கருத்து உள்ளது.

LONGITUDE OF FAMOUS SIVA TEMPLES (Nearly on the same line)

75.5041° E AMARNATH அமர்நாத் பனிலிங்கம்

79.6912° E CHIDAMBARAM சிதம்பரம் நடராஜர் கோவில்

79.8394° E PUTTALAM முன்னேஸ்வரம் சிவன் கோவில்

79.0669° E KEDARNATH  கேதார்நாத் சிவன் கோவில்

81.3119° E MOUNT KAILASH கயிலாயம்

***

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை

கூருமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ்

சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ

டேறுஞ் சுழுனை இவைசிவ பூமியே.- 2701

xxx

இடைபிங் கலையிம வானோ டிலங்கை,

நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுனை

கடவுந் திலைவனங் கைகண்ட மூலம்,

படர்வொன்றி யென்றும்  பரமாம்பரமே“- 2708

நாம் வாழும் பூமியை , புவியியல் அறிஞர்கள்,  கற்பனைக் கோடுகளால் பிரிப்பார்கள். பூமியை 360 பாகைகளாகப் பிரிக்கும் நெடுங்கோடுகளை தீர்க்க ரேகை LONGITUDE என்றும் படுக்கைவாட்டில் பிரிக்கும் 180 கோடுகளை அட்ச ரேகை LATITUDE என்றும் பிரிப்பார்கள்.

தீர்க்க ரேகையை 180 கிழக்குக் கோடுகளாகவும் 180 மேற்குக் கோடுகளாகவும் பிரித்து  லண்டன் அருகிலுள்ள கிரீனிச்சில் பூஜ்ய டிகிரியில் துவங்குவதாகச் சொல்லுவார்கள் இதே போல படுக்கைக்கோடுகளை 90 வட கோடுகளாகவும்  ,90 தென்  கோடுகளாகவும்  பிரிக்கிறார்கள். பூமியின் நடுவில் செல்லும் கோட்டை பூமத்திய ரேகை அல்லது நில நடுக்கோடு (Equator) என்று அழைக்கிறோம்.

இவைகளில் அட்ச ரேகைகளை முதல் முதலில் எகிப்திய வான நூல் அறிஞர் டாலமியின் வரைபடத்தில் காண்கிறோம். கி.பி 150-ல் வாழ்ந்தவர் அவர். ஆனால் தீர்க்க ரேகைகளை 18-ஆவது  நூற்றாண்டில்தான்  காண்கிறோம். இதில் வியப்பு என்னவென்றால் இதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருமூலர் இவற்றை அறிந்திருக்கிறார்.

அவர் இரண்டு திருமந்திர பாடல்களில் மேரு, தில்லை (சிதம்பரம்), இலங்கை மூன்றும் ஒரே நேர் கோட்டில்  இருப்பதாகப் பாடுகிறார்.

–SUBHAM—

Tags- திருமூலர், தீர்க்கரேகை, அதிசயக்கோடு, ஆலமரம், பகவத் கீதை குருக்ஷேத்ரம் , பத்து சுவையான செய்திகள், தர்ம க்ஷேத்ரே குருக்ஷேத்ரே

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL இந்துமத கலைச்சொல் அகராதி– Part 7 (Post.15,118)

Written by London Swaminathan

Post No. 15,118

Date uploaded in London –  25 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆங்கில அரிச்சுவடி வரிசை என்பதால்  அ, ஆ  எழுத்துக்களுக்கு அடுத்ததாக பி சொற்கள் துவங்கும்

அவதாரம்

பூவுலகில் தர்மத்தை நிலைநாட்டவும் அதர்மத்தை அழிக்கவும் விஷ்ணு எடுத்த இருபதுக்கும் மேலான வடிவங்கள் ; பூவுலகத்துக்கு இறங்கிவருவதால் அவதாரம் என்ற சொல் தோன்றியது. கீத கோவிந்தம் என்ற நூலை இயற்றிய ஒரிஸ்ஸா மாநிலப் புலவர் ஜெயதேவர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றிய 24  அஷ்டபதிகளில்  புத்தரையும் அவதாரமாகச் சேர்த்தார்; அதற்கு முன்னர் அந்த இடத்தில் பலராமனின் பெயர் இருந்தது இப்போது உள்ள பத்து அவதார வரிசை பின்வருமாறு :

மத்ஸ்ய (மீன் வடிவம்),

கூர்ம (ஆமை),

வராஹ (காட்டுப்பன்றி),

நரசிம்ம (சிங்க முகம்),

வாமன (குள்ள வடிவம் பின்னர் த்ரிவிக்ரமன்),

பரசுராம,

ராமர் , கிருஷ்ணர் , புத்தர்

கல்கி (இனி வரப்போகும் பத்தாவது அவதாரம்)

Avatar

Avatar means Descent ; Divine Incarnations. Though over twenty Avatars are reported in Bhagavatha Purana, Ten Avatars are more popular. Jayadeva, Odisah poet, included Buddha instead of Balaram in the Ten Avatars in his Gita Govinda (ashtapathi) book.

Ten Avatars- Matsya, Kurma (kuurma), Varaha (varaaha), Narasimha, Vamana (vaamana) (Tri Vikrama), Parasurama, Rama (raama), Krishna, Buddha (instead of Balarama) Kalki (Future Incarnation).

 Purpose of the Avatar : to establish Divine Rule and destroy evil forces.

***

அஷ்டபதி

அஷ்டபதி என்பது சம்ஸ்க்ருதத்தில் உள்ள தெய்வீக கீதங்கள். ஒரிஸ்ஸாவில் (ஒடிஷா) புரி நகரில் வாழ்ந்த ஜெயதேவர் என்னும் கிருஷ்ண பக்தர், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றிய 24 ஸம்ஸ்க்ருதப் பாடல்கள் இவை. ஒவ்வொன்றிலும் எட்டு இரண்டு வரிகளிருப்பதால்  அஷ்டபதி என்று பெயர். சம்பிரதாய பஜனைகளில் பாடப்படும் இந்த  24  பாடல்களில் கிருஷ்ணருக்கும் கோபியருக்கும், குறிப்பாக ராதாவுக்கும், இடையே நிலவிய தெய்வீகக் காதல் போற்றப்படுகிறது

Ashtapathi

The literal meaning of ashtapathi, ‘eight-steps’, refers to the fact that each hymn is made of eight couplets (eight sets of two lines). They are in the book Gita Govindam composed by Sri Jayadeva of Orissa about 1000 years ago. There are 24 Ashtapathis in Sanskrit language usually sung in Sampradaya Bhajans. They describe the beauty of Lord Krishna and the love between Krishna and the Gopis; they are considered a masterpiece in esoteric spirituality and the theme of ‘Divine romance’.

***

அபங்கம்

இவை மராத்தி மொழியில் உள்ள பக்தி கீதங்கள்; இவை ஏகநாதர், நாமதேவ்,  துக்காராம் போன்ற பெரியார்கள் விஷ்ணுவின் வடிவமான பண்டரீபுர பாண்டுரங்கனைத் துதித்த பாடல்கள் இவை பக்திச்  சுவை மிகுந்தவை . தமிழ்நாட்டில் ஆழ்வார்களும், ,நாயன் மார் களும் பாடிப்பரவி பக்தியைப் பரப்பியது போல இவர்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் பக்தியைப் பரப்பினர்

Abhanga

Abhanga is a form of devotional poetry associated with Saint Ekanatha, Tukaram, Namadeva, and other Marathi saints, characterized by its simple diction and rich spirituality, expressing profound devotion and teachings about God through various saints’ perspectives. The religious verses are sung in Marathi language towards Panduranga of Pandharpur. Panduranga is a divine form of Vishnu.

***

அகஸ்தியர்

அகஸ்தியர்,ரிக்வேத காலம் முதல் புகழ்பெற்றவர் ; லோபா முத்ரையை மணந்தவர் ; வடஇந்தியாவில் ஜனத்தொகைப் பெருக்கப்  பிரச்சினை ஏற்பட்டதால் சிவ பெருமான் இவரைத் தமிழ் நாட்டுக்கு அனுப்பினார்; சுமார் 3000  ஆண்டுகளுக்கு முன்னர் 18  குடி மக்களை இவர் தென்னாட்டுக்கு அழைத்து வந்தார் என்பதை நச்சினார்க்கினியர் உரை மூலம் அறிகிறோம். தமிழ் மொழிக்கு இலக்கணம் எழுதவும் சிவ பெருமான் கட்டளை இட்டார்; அவர் எழுதிய அகத்தியம் என்னும் நூல் இப்போது கிடைக்கவில்லை. இவர் செய்த சாதனைகளின் பட்டியலைப் பார்க்கையில் பகீரதன் போல பெரிய இந்து சமய என்ஜினீயர் என்பது தெரிகிறது; பகீரதன் கங்கை நதியைத் திரும்பிவிட்டது போல இவர் காவிரி நதியைத் தமிழ் நாட்டின் பக்கம் திருப்பிவிட்டார். கடல் ஒர பாதை மூலம் தென்னாட்டுக்கு வருவதற்குப் பதிலாக விந்திய மலையை மட்டம் தட்டி மலைச் சாலைகளை அமைத்தார். தமிழ் இந்துக்களைத் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அழைத்துச் சென்று இந்து நாகரீகத்தை 1500  ஆண்டுகளுக்கு ஏழு நாடுகளில் கொடிகட்டிப் பறக்கச் செய்தார் இவருடைய சிலைகள் இல்லாத பெரிய மியூசியங்கள் உலகில் இல்லை; இவருடைய சிலைகள் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கோவில்களில் உள்ளது. இவர் கடைசியாக வசித்த இடம் பொதிய மலை; பிற்காலத்தில் எழுதப்பட்ட மருத்துவ நூல்களை அகத்தியர் எழுதியதாகச் சொல்கிறார்கள். அவர்கள்  இவரது குலத்தில் உதித்தவர்களாக இருக்கலாம்.

Agastya

Agastya is a great Rishi (seer) associated with Rig Veda and Tamil language. He married Lopamudra and his hymns re in the Rig Veda. Lord Shiva sent him to SouthIndia to solve he population explosion in North India. He was also asked by Lord Shiva to codify a grammar for Tamil Language . But his work Agastyam is not available now. He is credited with lot of medical books as well. But their language shows that they are later works. He is also credited with lot of engineering works such as diverting Kaveri River towards Tamil Nadu, levelling the Vindhya hills to lay rods, taking Hindus to seven South East Asian countries to establish Hindu Empire. His statues are seen in major museums in the world and South East Asian Temples. He can be easily recognised by his short stature. Scholars have written that he came to Tamil Nadu with 18 tribes of North India between 1000 and 700 BCE. Pothiya Hills was his last residence.

***

ஆம்பல்

ஆம்பல் இரவில் பூக்கும் மலர்; சந்திரனுடன் இணைத்துப் பேசப்படும் மலர். அல்லி ; குமுதம் என்றும் பெயர்

Ambal – aambal- water lily. Nymphaea lotus

***

அந்தகன் – குருடன்; காலன், யமன் ; கண்களை மூடியவாறு பாரபட்சமின்றி அவரவர் செய்த கருமங்களுக்கு, வினைகளுக்கு ஏற்ப மறு வாழ்வினைத் தருபவன்

Andhaka – a blind person, also the deity of death, Yama . Closing his eyes he executes divine justice without any partiality.  Those who do good will get all the good things in their after life

***

ஆயுர்வேதம் – ஆயுளை நீடிக்கச் செய்ய உள்ள வைத்திய முறை.  முக்கிய நூல்கள் சரகர் ,சுஸ்ருதர் எழுதிய சம்ஹிதைகள்; சம்ஸ்க்ருத மொழியில் உள்ளன. பெரும்பாலும் மூலிகைகளைக் கொண்டு நோய்களைத் தீர்ப்பதை விளக்கும் நூல்கள் அவை; ஆயுள் என்றால் ஒருவரின் வாழ்நாள்.

Ayurveda

The science of extending one’s life in good health. It is a medical system mainly dealing with herbs. Ayur means life span. Two thousand years ago books were written in Sanskrit by ancient scholars Charaka and Susrutha.

****

அம்மன்

அம்மன், அம்பிகை, அம்பாள், அன்னை என்பன பொதுவாக  பார்வதி, உமையைக் குறிக்கும் சொற்கள் ; கிராமப்புற தேவதைகளுக்கும் இப்பெயர் உண்டு மாரியம்மன், காளி அம்மன் என்பன சில .

Amman

Mother Goddess; generally Uma, Parvathi Ambaal – consort of Lord Shiva. Village goddesses are also called Maari Amman, Kaali Amman.

***

அபசாரம்

விதி முறைகளை அலட்சியப்படுத்தல் அல்லது இகழக்கூடிய செய்கை ; பக்தர்களையோ இறைவனையோ அவமதித்தல்; விலக்கப்பட்ட பொருட்களை வழிபாட்டில் பயன்படுத்துவதும் அபசாரம்.

Apachaaram – Blasphemous act ; violating the sanctity or discarding the holy writs. Using unholy thigs or banned products in the worship, insulting divine persons or divine things.

***

அறிதுயில்

அறிதுயில் – இறைவன் இருக்கும் யோக நித்திரை; அதாவது அறிவு குன்றாது உறங்கும் நிலை. பாற்கடலில் பாம்பணை மீது விஷ்ணு பள்ளி கொண்டு இருந்தாலும் மனிதர்களைப்  போல உறங்குவதில்லை.

Arithuyil

Restful alertness or operative rest; it  means sleep in the waking state. Lord Vishnu is on the bed of snake in the middle of the milky ocean in this state.

***

அஷ்ட வீரட்டான தலங்கள்

சிவன் கோபம் கொண்டு எட்டு எதிரிகளை வீழ்த்திய எட்டு புனிதத் தலங்கள்; இறைவனின் வீரத்தக் காட்டும் கோவில்கள் உள்ளன

திருக்கண்டியூர் ,திருக்கடவூர் ,திருவதிகை ,திருக்கோவலூர் ,திருவிற்குடி ,திருக் குறுக்கை ,வழுவூர் ,பறியலூர்

பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் கோயில் – திருக்கண்டியூர்: பிரம்மன் தலையை கொய்ந்த இடம்

வீரட்டேஸ்வரர் கோயில் – திருக்கோவலூர்: அந்தகாகரனைக் கொன்ற இடம்

வீரட்டானேஸ்வரர் கோயில் – திருவதிகை: திரிபுரத்தை எரித்த இடம்

திருப்பறியலூர் வீரட்டானேசுவரர் கோயில் கீழப்பரசலூர் -தட்சனை அழித்த இடம்.

திருவிற்குடி வீரட்டானேஸ்வரர் கோயில்: சலந்தராசுரனை கொன்ற தலம்

திருவழுவூர்: கயமுகாசுரனைக்கொன்று தோலை உரித்துப்போர்த்துக் கொண்ட தலம்

திருக்குறுக்கை: மன்மதனை எரித்த தலம்

திருக்கடவூர்: மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம்.

Ashta Veerattana Sthalas/ Shrines

Eight shrines of Lord Shiva’s Heroic Exploits

Lord shive destroyed eight of his enemies to save his devotees. These shrines are in Tamil Nadu ;there is at least one heroic act or anecdote performed in each of these places. Following are the places and his heroic deeds:

Athikai – Shiva burnt down the Tripuras- Three hanging Metal castles in the air with his third eye.

Kandiyur- Shiva cut off one of the head of Brahma .

Kadavur- Lord Shiva kicked the God of death away to save young boy Markandeya.

Kurukkai – Manmatha was burnt to ashes by Shiva.

Kovalur- Andhakasura was killed here.

Pariyalur- Daksha was killed by Shiva.

Vazuvur- Lord Shiva killed elephant headed Gajamukha Asura and adorned himself with the elephant hide

Virkudi- Chalanthasura was killed here.

***

அலங்காரம்

இறைவனின் சிலை அல்லது விக்கிரகத்தை விலை உயர்ந்த பட்டு முதலிய ஆடைகளை உடுத்தி ஆபரணங்களையும் குங்கும அல்லது சந்தனம் அல்லது விபூ தி பூசியும் பக்தர்களின் தரிசனத்துக்கு வைத்தல்; பொதுவாக இறைவனை அலங்கரிக்கும்போது அர்ச்சகர்கள் திரை போட்டு மூடிவிடுவார்கள்; அலங்காரம் இல்லாத சுவாமியை பக்தர்கள் பார்க்கக்கூடாது .

Alankaram – alankaaram –

Adornment; decoration

Decorating ; gods’ idols or statues are decorated with flowers , sandal paste, kunkumam, Vibhuti etc. in temples . It is done after abishekam/ ritual bathing of God. In Tamil temples they draw the curtain before doing it. Devotees are not allowed to see the idol naked or without ornaments or dress.

***

Image of Rishi Agastya

அழகர் / ன்

Azakan

Handsom God, Handsome man; usually denotes Vishnu; but also applied to any God

***

அரங்கேற்றம்

ஒரு புதிய நூலை அல்லது சங்கீதம் நாட்டியம் போன்ற கலைகளை முதல் தடவையாக அறிஞர் சபையில் படைத்து — அதாவது அரங்கத்தில் ஏற்றி- அவர்களுடைய ஒப்புதலைப் பெறுதல் ; காஞ்சி, மதுரை, தில்லை முதலிய நகரங்களில் பல புனித நூல்கள் அரங்கேற்றப்பட்டன

நூல்கள் அரங்கேறிய இடங்கள் 

கம்ப ராமாயணம்  ஸ்ரீரங்கம் ;

கச்சியப்ப சிவாச்சாரியாரின்  கந்த புராணம்-  காஞ்சியில் உள்ள கந்தகோட்டம்.

சேக்கிழார் எழுதிய  பெரியபுராணம்- சிதம்பரம்

தேவராய சுவாமிகள் இயற்றிய  கந்தசஷ்டி கவசம்- சென்னிமலை முருகன் கோவில்.

Arangetram

Premiere ; debut; first show; first presentation;

Arangam means an assembly of experts or learned people in a particular field . usually it has a raised platform or stage which is also called arangu.  An author or an artiste presents his or her work  before the learned people for their acceptance.  it also means the first performance of an artiste.

Presenting new books before the learned people were a tricky job in the olden days. Scholars used to ask a lot of questions about the new book. Many such events happened in famous temples; Some examples are given below:

Kamba Ramayanam – Srirangam Temple;

Kandapuranam (Skaantham in Tamil)- Kanchipuram Kandakottam Temple;

Periya Puranam-  Chidambaram (Thillai);

Kandasashti Kavacham – Sennimlai Murugan Temple

To be continued…………………..

Part- 7, Hindu Glossary, Tamil and English, Ashta Veerattana Shrine, Arithuyil, Alankar God’s sleep

செத்த குதிரை மீது சவாரி செய்யாதே! (Post No.15,117)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,117

Date uploaded in London –   25 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 4-8-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

MOTIVATION AND CURRENT TREND

செத்த குதிரை மீது சவாரி செய்யாதே!

DON’T RIDE ON A DEAD HORSE!

ச. நாகராஜன் 

மாறிக் கொண்டே இருக்கும் உலகத்தில் மாறாதது மாற்றம் ஒன்றே ஒன்று தான்!

ஓடிக் கொண்டே இருக்கும் உலகத்தில் அதன் வேகத்துடன் ஓடிக் கொண்டே இருப்பவன் தான் வெற்றி பெற முடியும்.

இதைத் தான் இந்து மத சாஸ்திரங்கள் மிக அழகாக ஒரு சூத்திரத்தின் மூலமாக விளக்கின. 

“செத்த குதிரை மீது சவாரி செய்யாதே” என்பது தான் அந்த அற்புதமான சூத்திரம். இதை ஆங்கிலத்தில் மேலாண்மை நிர்வாகத்தில்  “DEAD HORSE THEORY என்பார்கள்.

 குதிரை ஓடவில்லை!

என்ன ஆயிற்று என்று பார்த்தால் அது இறந்து விட்டது. உடனே கீழே இறங்கி விட வேண்டும். இன்னும் அதன் மீது உட்கார்ந்து சவாரி செய்யப் பார்க்காதே! – இது தான் அனுபவம் வாய்ந்த சாஸ்திரத்தின் அறிவுரை.

 உதாரணத்திற்கு கோடக் கம்பெனியை எடுத்துக் கொள்ளலாம். அற்புதமான போட்டோ உலகில் அது முன்னணியில் கம்பீரமாக வலம் வந்தது. ஆனால் இந்தத் துறையில் ஏராளமான நவீன உத்திகள் தோன்றும் போது அது அசட்டையாக இருந்து விட்டது. விளைவு, 2012ல் அது திவாலாக நேர்ந்தது.

 ப்ளாக்பஸ்டர் என்ற வீடியோ கம்பெனி நிலையும் இது போலவே ஆனது. சந்தையில் ஏராளமான நிறுவனங்கள் போட்டிக்கு வரவே இது சந்தையின் நிலைமை புரியாமல் தலைகீழாக விழுந்தது.

 இப்போது பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் நீங்கள் எந்த மளிகை மற்றும் ஸ்டேஷனரி சாமான்களைக் கேட்டாலும் 15 நிமிடத்தில் வீட்டிற்கே வந்து டெலிவரி ஆகிறது – பிக் பேஸ்கட் போன்ற இந்த அதி வேக டெலிவரி சூரன்களால் ஏராளமான சிறிய ஸ்டோர்களும் ஏன் சின்னச் சின்ன மால்களுமே மூடப்பட்டு விட்டன.

 மூடிய கம்பெனிகளும் கடைகளும் செத்த குதிரை மீது சவாரி செய்ததால் ஒரு அடி கூட முன்னேறவில்லை!

 ஆகவே என்ன செய்வது? தொடர்ந்து முன்னேற்றத்திற்கான சோதனைகளைச் செய்தால் தான் முன்னேற முடியும்; முன்னணியில் நிற்க முடியும்.

சற்று குதிரை மெதுவாக ஓடினால் என்ன செய்வது?

நல்ல சவுக்கை வாங்கி அடிக்க வேண்டும்.

சவாரி செய்பவரை மாற்ற வேண்டும்.

குதிரையையே விலக்கி ஓரங்கட்ட வேண்டியது தான்.

 ஒரு கமிட்டியை நியமித்து குதிரை மற்றும் சவாரிக்காரரைப் பற்றி ஆராய வேண்டியது தான்.

மற்ற குதிரை சொந்தக்காரர்கள் என்ன செய்கிறார்கள் என்று உன்னிப்பாகப் பார்த்துப் பாடம் கற்கலாம்.

குதிரை சவாரியையே காண்ட்ராக்டுக்கு விட்டு விடலாம்.

குதிரைக்குச் சத்துள்ள உணவு போட்டு ஊக்குவிக்கலாம்.

குதிரைக்கு மேனேஜர் பிரமோஷன் கொடுத்து அதை உட்கார வைத்து விட்டு சின்ன இளமையான குதிரைகளை ஓட்டலாம்.

இது தான் இன்றைய மேலாண்மை நிர்வாகத்தின் பொதுவான சிந்தனைப் போக்கு!

 நிறுவனங்கள் அனைத்துமே பொதுவாக செத்த குதிரை மீது சவாரி செய்வதை விரும்புவதில்லை – இந்த நவீன போட்டி மயமான உலகில்.

 சரி, இது நிறுவனங்களுக்கு மட்டுமான உவமானமா? இல்லை. ஒவ்வொரு வீட்டிற்கும் அதில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் இது பொருந்தும்.

அன்றாடம் வீட்டை விட்டு வெளியில் வந்து குதிரையின் மீது ஏறும் போது – அது தான் சார்,  வெளியில் வந்து காலை வைக்கும் போது – கண்களை அகல விரித்துப் பார்க்க வேண்டும். செவிகளை உன்னிப்பாக வைத்துக் கேட்க வேண்டும். பார்க்கும் காட்சிகளை மனதால் அலசி ஆராய வேண்டும். தனது குதிரை உயிரோட்டமுள்ள குதிரையா அல்லது செத்த குதிரையா என்று பார்த்து விட்டு,  அதன் மீது சவாரி செய்வதைப் பற்றி உடனுக்குடன் முடிவு எடுக்க வேண்டும்.

இது தான் இன்றைய உலகில் வெற்றிகரமாக வாழ ஒரே வழி!

 அடடா!, உங்களுடன் பேசிக் கொண்டே இருந்ததில் நீங்கள் சற்று முன்னால் போவதைக் கவனிக்கிறேனே!. இருங்கள் என் குதிரையை கழட்டி விட்டு வேறு குதிரை மீது சவாரி செய்து உங்களை முந்துகிறேன்!

***

Dharma Kshetre Kurukshetre 360 Sacred Tanks! (Post No.15,116)

Written by London Swaminathan

Post No. 15,116

Date uploaded in London –  24 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 I read a book about Kurukshetra which is full of interesting details. All of us know that the great Mahabharata war took place in Kurukshetra, a town in Haryana state.

Kurukshetra is in the North Eastern part of Haryana State. It is surrounded by four districts of Haryana (Ambala, Yamuna Nagar, Karnal & Kaithal) in the East, South, North and Patiala district of Punjab in the North West.

Bhagavad Gita begins with

धृतराष्ट्र उवाच |

धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवः |

मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय ||1||

(Dhritrashtr uvaach)

Dharmkshetre, Kurukshetre, samvetaH, yuyutsavH,

MamkaH, PandavaH, ch, ev, kim’, akurvat, Sanjay ||1||

Dhritarashtra said: O Sanjay, after gathering on the holy field of Kurukshetra, and desiring to fight, what did my sons and the sons of Pandu do? (BG 1-1)

Even now people are visiting this holy place.

Kurukshetra is the cradle of Indian civilization. Lying in the easterly region, called Brahma rishi desa in Vedic literature between the rivers Sarasvati and Drsadvati. The fate of India has been settled here from the days of Mahabharata to those of the battles of Panipat. All literature on Kurukshetra-give only fitful glimpses of its religious and cultural significance. 

Muztar’s study is the first full length of the region from ancient times to the present. Kuru- Paanchaalas figure in Vedic literature as the best representative of Vedic culture. But the hostility as mentioned in the Mahabharata is not mentioned in the Vedic scriptures.

The vicissitudes through which the area passed under the Guptas Mughals and the British, including the successive revolts of the people of the region against the British rule have been traced; and for the first time all the 360 tirthas associated with the region have been identified.

PICTURES OF DHRUV NARAIN TEMPLE AND BRAHMASAROVAR

This is the sacred place where Krishna addressed Arjuna before the war began; and we got the Bhagavad Gita . there is a temple in Kurukshetra which contains over 300 commentaries on Gita of varying periods.

According to Puranas, Brahma created this place and Hindus have settled here at the dawn of civilization .

Among the hundreds of holy places, Brahma Sarovar, Sannehit Tank,Sarveshvara Mahadeva Temple, Chandra Kupa, Bhishma Kund (Ban Ganga), Dalyapur Ban Ganga, Kamal Nabh, Birla Temple and Apag Tirtha are the places most visited by the people.

Brahma Sarovar is among the chief attractions for pilgrims. It has a surface area of 3.5 Kilometre and about 15 lakh people can take a holy dip in the sarovar. There are 20,000 Ghats where about 20,000 women can bathe at a time.

The Sannehit tank is about 500 metres in length and about 100 metres in width. On one side of it there is a temple dedicated to Dhuv Narayan. There are idols of Lord Vishnu, Dhruva, Hanuman and goddess Durga.

Banyan Tree

A banyan tree said to be 5000 years old and from where Lord Krishna delivered the holy message of the Gita is still there.

Kurukshetra attracts huge crowd during solar eclipse. It is believed that anyone who bathes in the Brahma Sarovar during the solar eclipse gets the benefit of 1000 Asvamedha Yagnas. Lakhs of pilgrims come here during every eclipse. This is because Bhakaracharya believed that Kurukshetra was on the central meridian, it occupied a pivotal position for astronomical calculations. His book Siddhanta Sironmani talks of a straight line dividing the earth through Kurukshetra. On it were situated Rohtak, Ujjain and Mathura. It joined Lanka with Meru Parvat This view is corroborated by Albiruni. (Tamil  saint Tirumular also sung about Maeru’s link with Lanka)

Al Biruni pointed out, “hallowed in history Kurukshetra is among the greatest pilgrim centres in the country. It was also the birthplace of the systematised agriculture through King Kuru’s ploughing.

We have more evidence from Balarama, Krishna’s brother. He carried a plough on his shoulder and spread agriculture throughout India. During the war he went on a pilgrimage to do this.

Pictures of Gita Mandirs

Source

Kurukshetra- Political and Cultural History by B K Muztar, D K Publishers, Delhi, Year 1978

Bhagavad Gita Word  Index by R J Venkateswaran

–subham—

Tags- Kurukshetra, 360 Tirthas, holy tanks, Brahma sarovar, Mahabharata, Banyan Tree. Bhagavad Gita, Bhakaracharya

GNANAMAYAM 26th October 2025 BROADCAST PROGRAMME

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 12 GMT

Indian Time 5-30 pm (evening)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer –

***

NEWS BULLETIN

VAISHNAVI ANAND and LATHA YOGESH from London present World Hindu News in Tamil

****

ALAYAM ARIVOM TALK ON

KATHIRKAMAM TEMPLE IN SRI LANKA

****

***

SPECIAL EVENT-

Significance of Famous Singer P Susila’s Devotional Songs -Presentation

By

Ms.Nithya Sowmy, London

(Active Social Worker, Producing Programs for Tamil and South Indian Organizations in Britain)

 ******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 26 October 2025

நேரில் காணலாம்; கேட்கலாம் 

via Zoom, Facebook and You Tube at the same time.

***

இறைவணக்கம் —

***

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்,

லதா யோகேஷ் வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் —

சொற்பொழிவு– தலைப்பு  இலங்கை கதிர்காமம் முருகன் கோவில்,

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

பிரபல பாடகி பி.சுசீலாவின் பக்தி கீதங்கள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி

பக்தி கீதங்களின் சிறப்பினை விளக்கிப் பேசுபவர்

லண்டன் நித்யா ஸெளமி ,

(சமூக ஆர்வலர்தமிழ்தென் இந்திய சங்கங்களில் தீவிர ஈடுபாடும் பங்களிப்பும் வழங்குபவர் )

—subham—

Tags-Gnanamayam Broadcast, 26-10- 2025, programme,

லலிதா சஹஸ்ரநாமத்தில் நவரத்தினங்கள்  Part 2 (Post No.15,115)

Written by London Swaminathan

Post No. 15,115

Date uploaded in London –  24 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

முத்தும் பவளமும் எல்லாக் கடவுளரின் அணிகலன்களிலும் இடம்பெறுகிறது . மதுரை, ஸ்ரீரங்கம் முதலிய கோவில்களில் உள்ள முத்து அங்கிகள் மிகவும் பிரபலமானவை .

ரத்ன க்ரைவேய சிந்தாக லோல முக்தா பலன்விதா என்பது லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் ஒரு நாமம்.

இதைத் தொடர்ந்து காமேச்வர ப்ரேம ரத்னமணி ப்ரதிபணஸ்தனீ  என்ற நாமம் வருகிறதுவருணிக்கும்போது பக்தர்கள் கேசாதி பாதம், அதாவது முட்டிமுதல் அடிவரை பாடுவார்கள் . ஆகையால் அம்பாளின் கழுத்தில் அணிந்த முத்துமாலையை முதல் நாமம் வருணிக்கிறது

ரத்ன க்ரைவேய – இரத்தின மாலை அணிந்த கழுத்து;

சிந்தாகம்- பதக்கம்;

லோல – ஆடிக்கொண்டிருக்கிறது;

முக்தா – முத்து /மாலை

தமிழிலும் சம்ஸ்க்ருதத்தில் முத்துக்கு ஒரே ஒலி/ சப்தம் இருப்பதைக் கவனிக்க வேண்டும்

பாரத நாட்டைப் பொருத்த வரையில் முத்து என்றால் தமிழ்நாட்டிலுள்ள பாண்டிய நாடுதான் . 2400 ஆண்டுகளுக்கு முன்னரே பாண்டிய கவாடம் என்ற முத்தினை அர்த்தசாஸ்திரம் குறிப்பிடுகிறது இது இரண்டாவது தமிழ்ச் சங்கம் இருந்த கபாட புரத்திலிருந்து சென்ற முத்து ஆகும்.

வராஹமிஹிரரும் பலவகையான முத்து வடங்களை வெவ்வேறு பெயர்களுடன் குறிப்பிடுகிறார் . இன்றும் பல கோவில் நகைகளில் இவற்றைக்காண முடிகிறது.

 இரண்டாவது நாமத்தில் சிவபெருமானுடைய அன்புக்கும் தேவியின் அன்புக்கும் ரத்தினங்கள் உவமையாக்கப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு ரத்தினைக் கற்கள் உயர்ந்தவை! காமேஸ்வரனின் பிரேமை /அன்பு என்ற ரத்தினத்துக்கு மாறறாகத் தன்னுடைய மார்பகங்கள் என்ற ரத்தினத்தை அளிப்பவள் லலிதாம்பாள்.

முத்துமாலை பற்றிய இணைப்புக் கட்டுரைகள் கீழே உள்ளன .

***

அடுத்த நாமம் சிந்தாமணி க்ருஹ அந்தஸ்ததா;

இதன் பொருள்  சிந்தாமணிக் கற்களாலான கிருஹத்தில்/ இல்லத்தில் அமர்ந்து இருப்பவள். அற்புதமான கற்பனை !

சிந்தாமணி என்பது கேட்டதையெல்லாம் கொடுக்கக்கூடிய ரத்தினக் கல் . அந்த கற்களாலான வீட்டில் வசிப்பவள் அன்னை ! நாம் எல்லோரும் செங்கற்களால் அல்லது கான்க்ரீட்டினால் ஆன வீட்டில்தான் வசிக்கிறோம், ஆனால் இறைவியோ சிந்தாமணிச் செங்கற்களால் ஆன வீட்டில் வசிக்கிறாள்! இந்த ரூபத்தில் தேவியை மனைத்தில் நிறுத்தி தியானிப்போருக்கு வீட்டில் ரத்தினக் கல் மழை பொழியும்!  ஆனால் ஒரு பெரிய நிபந்தனை; மனம் மொழி மெய் – மனோ வாக் காயம்- ஆகிய மூன்றிலும் தூய்மை  இருக்க வேண்டும் இந்த நிபந்தனையை நிறைவேற்றுபவர் கோடியில் ஒருவர்தான்!

பத்மராகக் கல் பற்றிய ஒரு நாமத்தில் தேவியை ஹயக்ரீவர் (குதிரைக் கழுத்துக் கடவுள்),

பத்மராக ஸமப்ரபா என்று வருணிக்கிறார் . அவள் பத்மராகம் தரக்கூடிய பிரகாசத்தை உடையவள் என்பது பொருள். இதை நாம் சொல்லும்போது கோடி பத்மராக கற்கள் என்று கற்பனை செய்தால்தான் நமது சிற்றறிவுக்கு அம்பாளின் பெருமை விளங்கும் .

ஏனெனில் விநாயாகரை நாம் வணங்கும்போது

வக்ரதுண்ட மஹா காய சூர்யகோடி ஸம்ப்ரபா

நிர்விக்னம் குருமேதேவா ஸர்வகார்யேஷு ஸர்வதா –

என்று கோடி சூரியன்களை நினைக்கிறோம் பகவத் கீதையில் இறைவனின் விஸ்வரூபத்தை வருணித்த சஞ்சயன் திவி சூர்ய சஹஸ்ரஸ்ய — ஆயிரம் சூரியன்கள உதித்தாற்போல இருக்கிறது என்கிறார் . அமெரிக்கப் பாலைவனம் ஒன்றில் முதல் அணுகுண்டு சோதனை நடத்தியத்தைக் கண்ட அணுகுண்டின் தந்தை ராபர்ட் ஓப்பன்ஹீமர் “father of the atomic bomb J. Robert Oppenheimer (1904-1967) அந்தக் காட்சியைத் தொலைதூரத்தினில் கண்டபோதே அவருக்கு அந்த பகவத் கீதை ஸ்லோகம்தான் நினைவுக்கு வந்தது என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

***

மீண்டும் முத்து குறித்து ஒரு நாமம்  வருகிறது

ஸகல ஆகம ஸந்தோஹ சக்தி ஸம்புட மெளக்திகா

சம்படம் அல்லது சம்புடம் என்பது மூடியுள்ள பாத்திரம் . மெளக்திகா  என்பதை முத்துவினால் ஆன மூக்குத்தி என்று சொல்லலாம் .

முதல் பொருள் – முத்துச் சிப்பிக்குள் முத்து இருப்பது போல வேதங்களாகிற , ஆகமங்களாகிற , முத்துச் சிப்பிக்குள் அம்பாளுடைய முத்து மூக்குத்தியானது இருப்பதாகச் சொல்லப்பட்டது

இரண்டாவது பொருள் –   வேதங்களாகிற முத்துச் சிப்பிக்குள் இருக்கும் முத்து மாதிரி இருப்பவள்.

மூன்றாவது பொருள் – இதற்கு முந்திய நாமத்துடன் சேர்த்துப் பார்க்கையில் நான்கு ஜாதியாராலும் வணங்கப்படுபவள் என்றும் பாஸ்கரராயர் உரை கூறுகிறது.

***

சர்வ வர்ண உப சோபிதா = சர்வவர்ணோப சோபிதா

என்ற நாமத்தில் தேவியின் கலர்கள் வருகின்றன ; சித்ர வர்ணமாக , அதாவது எல்லா நிறங்களுடன் ஒளிவீசுபவள் என்பது ஒருபொருள்.

உப என்றால் சமீபத்தில் அல்லது மேல் என்று பொருள் ; UPPER அப்பர் என்ற ஆங்கிலச் சொல் ஊபர் என்ற ஹிந்தி சொல் ஆகியன இதிலிருந்தே பிறந்தன.

வர்ணம் என்பதை அக்ஷரம்/ எழுத்து என்று பொருள் கொண்டால் அக்ஷர யோகினிகளுக்கு அருகில் அல்லது மேல் இருப்பவள்; கலர் என்று பொருள் கொண்டால் அவைகளுக்கும் மேலானவள்; எல்லா வர்ணங்களும் உள்ள வட்டத்தைக்/ காற்றாடியைச் சுற்றினால் நாம் காண்பது வெண்மை நிறம் ; அதாவது ஸ்படிக நிறம்.

ரத்தினங்கள் பல கலர்களைக் கொண்டவை ; ஸ்படிகம் என்னும் ரத்தினம் நிறம் வெண்மை ; நாம் எல்லோரும் ஸ்படிக மாலையை அணிந்திருக்கும் பெரியோர்களைப் பார்த்து இருப்போம் அதன் குணம் அதன் அருகிலுள்ள பொருளின் நிறத்தை ஏற்பதாகும் . சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் கடவுள் எல்லா நிறத்திலும் இருப்பதாக நாம் பாவனை செய்து மகிழலாம்; நிறங்களுக்கு மேலானவர் என்று தியானித்தும் மகிழலாம் . மதுரை மீனாட்சி கோவில் காசி விசாலாக்ஷி சமேத விச்வநாதர்கோவிலுக்குச்சென்றால் ஸ்படிக நிற சிவபெருமானைத் (மூல விக்ரஹத்தைச் சொல்லவில்லை ) தரிசிக்கலாம் ஆனால் அவரையே நாம் ஐந்து நிறங்கள் என்று சொல்லி திருவாசகம் ஒதுகிறோம் .

தேவியின் நிறம் பொதுவாக சிவப்பு என்று வருணிக்கப்பட்டாலும் அர்த்தநாரி, நாராயணி, ஹரிணி என்று அழைக்கும்போது பச்சை அல்லது நீல வர்ணம் வந்துவிடுகிறது. கடவுளுக்கு எல்லா நிறங்களும் பொருந்தும் ; நிறமில்லாத ஸ்படிக நிறமும் பொருந்தும் என்பது இந்து தெய்வங்களின் நாமாவளிகளைச் செல்வோருக்கு நன்கு தெரியும் . மாணிக்கவாசகர் சிவபெருமானை நிறங்களோர் ஐந்துடையாய் என்பார்; சிவ பெருமானுக்கு ஐந்து நிறங்கள்  ,

கிழக்கு முகமான தத்புருஷம்- பொன்நிறம், தெற்கு முகமாகிய அகோரம்- கருமை, வடக்கு முகமாகிய வாமதேவம்-சிகப்பு, மேற்கு முகமான சத்யோஜாதம்-வெண்மை என ஆதி சிவனுக்கு நிறங்களும் ஐந்தே.

***

பவளக்கொடி

வித்ருமாபா என்பது லலிதாவின் இன்னும் ஒரு நாமம்; வித்ரும என்றால் பவளம் CORAL ;வித்ருலதா  என்றால் பவளக்கொடி முத்தும் பவளமும் கடலில் கிடைப்பவை

வித்ரும ரூபா = பவழமாக   — செந்நிறத்தில் — ஒளிர்பவள் .

இதையே வித் +த்ரும  = ஞான மரம் = விஸிடம் ட்ரீ ஸ் – என்றும் உரைகாரர்கள்  காண்கிறார்கள் (தரு என்ற சொல்லும் ட்ரீ என்ற ஆங்கிலச் சொல்லும் த்ரும  என்பதிலிருந்து பிறந்த சொற்கள் ஆகும் )

***

முத்து பற்றிய 6 பழமொழிகள்

1.முத்தால் நத்தை பெருமைப்படும் மூடர்  எத்தாலும் பெருமைப்படார்.

2.முத்தைத் தெளித்தாலும் கலியாணந்தான் ,மோரைத் தெளித்தாலும் கலியாணந்தான்.

3.முத்துக்கு முத்தாயிருக்கிறது.

4.முத்தை அளக்கிறவளும்  பெண்பிள்ளைதான் ,மூசப்பயறு அளக்கிறவளும்  பெண்பிள்ளைதான்.

5.முத்தளந்த கையினாலே மோர் விற்கிறதா?

6.முத்திலும் சொத்தை உண்டு,பவழத்திலும் பழுது உண்டு.

***

முத்து பிறக்கும் இடங்கள் இருபது (Post No.3524)

தந்தி வராக மருப்பிப்பி பூகந்தழை கதலி

நந்து சலஞ்சலம் மீன்றலை கொக்கு நளினமின்னார்

கந்தரஞ்சாலி கழைகன்ன லாவின் பல்கட்செவிக்கார்

இந்துவுடும்புகரா முத்தமீனுமிருபதுமே

—–உவமான சங்கிரகம், இரத்தினச் சுருக்கம்

யானைக் கொம்பு, பன்றிக்கொம்பு, முத்துச்சிப்பி, பாக்குமரம், வாழைமரம், நத்தை, சலஞ்சலம் (வலம்புரிச் சங்கு), மீ ன் தலை, கொடுக்குத் தலை, தாமரை, பெண்கள் கழுத்து, நெல், மூன்கில், கரும்பு, மாட்டுப்பல், பாம்பு, முகில், கர்ப்பூரம், முடலை, உடும்பு என்னும் இருபது இடங்களில் முத்து பிறக்கும்.

இந்த இருபது வகைகளில் கடலில் கிடைக்கும் முத்து ஒன்றுதான் அணிவரும் அணியும் முத்து.

1.தந்தி 2.வராகம் மருப்பு= யானை, பன்றி இவைளின் கொம்புகள்

3.இப்பி = முத்துச் சிப்பிகளும்

4.பூகம் = கமுகங்காய் குல்லைகள்

5.தனி கதலி = ஒப்பற்ற வழைக்குலைகள்

6.நந்து = சங்கும்

7.சலஞ்சலம் = விசேஷ /அபூர்வ வலம்புரிர்ச்சங்கு

8.மீன்றலை = மீன் தலை

9.கொக்கு= கொக்கின் தலை

10.நளினம் = தாமரை

11.மின்னார் கந்தரம் = பெண்களின் கழுத்து

12.சாலி = செந்நெற் கதிர்க்குலை

13.கழை = மூங்கில்

14.கன்னல் = கரும்பு

15.ஆவின் பல் = பசுமாட்டின் பல்

16.கட்செவி = பாம்பு

17.கார் = மேகம்

18.இந்து = சந்திரன்

19.கரா =முதலை

20.உடும்பு= உடும்பின் தலை

***

காளிதாசனும் இதையே சொல்கிறான்:

ஆரிய திராவிட வாதம் பொய் என்பதும், பாரதம் முழுதும் ஒரே கலாசாரம்தான் இருந்தது என்பதும் காளிதாசனின் 1250 உவமைகளையும் சங்கத் தமிழ் இலக்கிய உவமைகளையும் ஒப்பிட்டால் நன்கு விளங்கும். உலகில் வேறு எந்த கலாசாரத்திலும் அத்தகைய உவமைகளைக் காணவும் முடியாது; தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் உள்ள அடிப்படை ஒற்றுமை போல வேறு எந்த மொழியிலும் காணவும் முடியாது!

முத்துச் சரம், அறுந்த முத்து மாலை பற்றி “சூத்ர மணிகணா இவ” என்னும் பகவத் கீதை உவமை சங்க இலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் இருப்பதை சென்ற வாரம் எழுதினேன். அதற்கு முன் முத்து பற்றி பல கட்டுரைகள் எழுதினேன். மிகச் சுருக்கமாக:-

சுவாதி நட்சத்திரத்தன்று பெய்யும் மழை சிப்பியின் வாய்க்குள் புகுந்து முத்து ஆகிறது என்று பர்த்ருஹரி சொன்னது கருவூர் கதப்பிள்ளையின் புறம் 380 பாடலில் உள்ளது.

காளிதாசனின் மாளவிகாக்னிமித்ரத்தில் உள்ளது (1-6)

யானைத் தந்தத்திலுள்ள முத்து பற்றி காளிதாசன் குறிப்பிடும் இடங்கள்:_ குமாரசம்பவம் — 1-6; ரகுவம்சம் 9-65;

தமிழ் இலக்கியத்தில் யானை முத்து, மூங்கில் முத்து பற்றி வரும் இடங்கள்:-

முருகு-304; மலைபடு-517; கலி 40-4; புறம் 170; ப.பத்து- 32; நற்.202; குறிஞ்சி 36; அகம் 282; 173

காளிதாசனுக்குப் பிடித்த உவமைகளில் முத்து மாலையும் ஒன்று.

பறவைகள் குடியேறும் போது (Please read my article on Bird Migration) பறந்து செல்லுவது முத்துமாலை போல உள்ளது என்றும் நதிகளை மலை உச்சியிலிருந்து பார்க்கையில் அவை முத்துமாலை போலத் தென்படும் என்றும் (ரகு.13-48; மேகதூதம் 49) கூறுகிறான்.

வராஹமிகிரர் எழுதிய பிருஹத் ஜாதகம் என்னும் அற்புத சம்ஸ்கிருத கலைக்களஞ்சியத்தில் “பெர்fயூம் செய்வது எப்படி?” என்பது உள்பட 106 தலைப்புகளில் எழுதியுள்ள அரிய பெரிய விஷயங்களைக் கடந்த சில நாட்களில் கண்டீர்கள். இன்று முத்துக்கள் பற்றிப் பார்ப்போம்.

முத்துக்கள் உற்பத்தியாகும் எட்டு இடங்கள்:

த்விப: புஜக: சுப்தி: சங்க: அப்ர: வேணு: திமி: சூகர: சூதானி

முக்தா பலானி ஏஷாம் பஹூ சாது ச சுப்திஜம் பவதி

——-பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 81

பொருள்: யானை, பாம்பு, முத்துச் சிப்பி, சங்கு, மேகம், மூங்கில், திமிங்கிலம், காட்டுப் பன்றி ஆகிய இடங்களில் முத்து கிடைக்கும்.

வராக மிகிரர் இப்படிச் சொன்னாலும் விஞ்ஞானிகள் அறிந்த முத்துக்கள் கடலிலும் சில இடங்களில் ஆறுகளிலும்  கிடைக்கும் முத்துக்கள் மட்டுமே. மற்றவை எல்லாம் இதுவரை நிரூபிக்கப்படாதவையே. வராஹ மிகிரரும் தனக்கு முன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வரும் கருத்துக்களைத் தான் தொகுத்திருப்பதாகவே கூறுகிறார். அதனால் தன் நூலுக்கே சம்ஹிதை=தொகுப்பு எனப் பெயரிட்டுள்ளார்.

***

கடல் தரும் ஐந்து செல்வங்கள்

ஓர்க்கோலை சங்கம் ஒளிர்பவளம் வெண்முத்தம்

நீர்ப்படும் உப்பினோடைந்து

இவை ஐந்தும் கடல் தரும் செல்வம் என்று பழைய செய்யுள் கூறும்

ஒர்க்கோலை – அம்பர், அம்பர் க்ரிஸ் என்று அழைக்கப்படும் இது ஸ்பெர்ம் வேல் எனப்படும் திமிங்கிலத்திலிருந்து கிடைக்கிறது. மரத்திலிருந்து வெளியேறும் கோந்து போன்ற பிசினும் ஓர்க்கோலை என்று அழைக்கப்படும். மற்ற நான்கு: சங்கு,   பவளம், முத்து, உப்பு என்பன.

அம்பர் அம்பர்க்ரிஸ் என்பது திமிங்கிலத்தின் குடலில் சுரக்கப்படும் ஒரு திரவம் கெட்டியாகி அதன் மலத்துடன் வெளியே தள்ளப்படும். உடலுக்குப் பூசும் வாசனைப் பொருட்களில் (செண்ட், பெர்ஃயூம்) அந்த நறுமணத்தை நீடிக்க வைக்க இது உதவும். மரத்திலிருந்து கிடைக்கும் பிசினைக் கொண்டு அலங்காரப் பொருட்களைச் செதுக்குவர். அதற்குள் ஏதேனும் பூச்சி, புழுக்கள் சிக்கியிருந்தால் அது ஆராய்ச்சிக்கு உதவுவதோடு அதன் மதிப்பும் அதிகரிக்கிறது.

***

ரத்தினங்களை அணிவதால் என்ன கிடைக்கும்வராஹமிகிரர் பதில்!!

ஆராய்ச்சிக் கட்டுரை எண் 1645; தேதி 12 பிப்ரவரி 2015

ரத்னங்களின் குணங்கள்

ஸ்னிக்த: ப்ரபானுலேபி ஸ்வச்சோ அர்சிஷிஷ்மான் குரு: சுசம்ஸ்தான:

அந்த: ப்ரபோ அதிராகோ மணிரத்னகுணா: சமஸ்தானாம்

—–(பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 82)

ரத்தினக் கற்களின் சிறப்புத் தன்மை என்ன? ஒரு கல் சிறப்பானதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது:- அது ம்ருதுவாக வழுவழுப்பானதாக இருக்கவேண்டும். தடவிப்பார்த்தால் கையில் எதுவும் நெருடக் கூடாது. கல்லுக்குள் மாசு, மரு, குற்றம், குறை இருக்கக் கூடாது. மின்னல் (டால்) அடித்து பளபளக்க வேண்டும்; ஒளிவீச வேண்டும்.  கனமாகவும் நல்ல வடிவத்திலும் இருக்க வேண்டும். மாணிக்கக் கல்லானால் நல்ல சிவப்பு வர்ணத்தில் இருக்கவேண்டும்.

என்ன கிடைக்கும்?

ஏதானி சர்வானி மஹா குணாணி சுதார்த்த சௌபாக்ய யசஸ்கரானி

ருக்சோக ஹந்த்ருனி ச பார்த்திவானாம் முக்தாபலானி ஈர்ச்சித காமதானி — (பிருஹத் சம்ஹிதாஅத்தியாயம் 81)

இந்த ஸ்லோகம் முத்து பற்றிய அத்தியாயத்தில் வருகிறது. இது எல்லா ரத்தினக் கற்களுக்கும் பொருந்தும் என்பது உரைகாரர்களின் கருத்து.

இதன் பொருள் என்ன? எல்லா வகை முத்துக்களும் மிகவும் மதிப்பு மிக்கவை. இவைகளை அணிவோருக்கு புத்ர (மகன்கள்) பாக்கியம், பணம், புகழ், செல்வாக்கு ஆகியன வந்து குவியும்; நோய்களையும் துக்கத்தையும் அழிக்கும்; அரசர்கள் அணிந்தாலோ இஷ்டப்பட்டது எல்லாம் கிடைக்கும்.

குறையுள்ள வைரங்கள் படுகொலைகளை உருவாக்கும் என்பதால் கிருஷ்ண பரமாத்மாவே சியமந்தக மணியை கொடுத்துவிட்டதையும் அது இப்பொழுது அமெரிக்காவில் மியூசியத்தில் முடங்கிக் கிடப்பதையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏற்கனவே எழுதிவிட்டேன்:

அம்மனுக்கு முத்து அங்கி

தென் இந்தியக் கோவில்களில் முத்து மாலை, முத்து அங்கி போட்டு சுவாமியையும் அம்மனையும் அலங்கரிப்பது விஷேசமான ஒன்று. இதைக் காண பெண்கள் அணி திரண்டு படை படையாகச் செல்வர். எங்கள் ஊர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முத்து அங்கி, ஸ்ரீரங்கம் பெருமாள் முத்து அங்கி சேவை, திருப்பதி பாலாஜி கோவில் முத்து ஆபரணங்கள் மிகவும் பிரபலமானவை. இது வராகமிகிரர் காலத்துக்கும் முன்னரே இருந்திருப்பது அவர்தம் ஸ்லோகங்களில் இருந்து வெள்ளிடை மலை போல விளங்குகிறது.

அவர் 17 வகை முத்து மாலைகளை வருணிக்கிறார். இதை கோவிலில் உள்ள நகைகளும் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய கற் சிற்பங்களில் உள்ள நகைகளும் மெய்ப்பிக்கின்றன; யக்ஷி, யக்ஷர் சிலைகளில் உள்ள நகைகள் ப்ரமிப்பூட்டுகின்றன. அஜந்தா, சிகிரியா (இலங்கை) ஓவியங்களும் இந்த நகைகளைக் காட்டும்.

17 வகை முத்து மாலைகளில் சில:

1008 வடம் (நாலு முழ நீளம்) = இந்து சந்தா (கடவுளுக்கானவை)

504 வடம் (இரண்டு முழ நீளம்) = விஜய சந்தா

108 வடம் (இரண்டு முழ நீளம்) = ஹாரம் (மாலை)

81 வடம் = தேவ சந்தா

64 வடம் = அர்த்த ஹார

54 வடம் = ரஸ்மி கலாப

32 வடம் = குச்ச

20 வடம் = அர்த்த குச்ச

16 வடம் = மாணவக

12 வடம் = அர்த்த மாணவக

எட்டு வடம் = மந்தர

ஐந்து வடம் = ஹார பலக

27 முத்துக்கள் கொண்ட மாலை (ஒரு முழ நீளம்) = நட்சத்திர மாலா

இவ்வாறு முத்துக்களின்  பெருமைகளை 36 பாடல்களில் பாடிப் பரவியுள்ளார்.

***

எடைகள் பற்றிய வாய்ப்பாடு

ரத்தினக் கல் வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு சின்னச் சின்ன எடைக் கற்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

1500 ஆண்டுகளுக்கு நாம் பயன் படுத்திய எடைகள், பணம், காசு முதலியன பற்றியும் அந்தக் காலத்தில் ரத்தினக் கற்களின் விலை பற்றியும் வராக மிகிரர் விரிவாக எடுத்துரைக்கிறார். இதோ வாய்ப்பாடு:

விம்சதி: ஸ்வேதிகா: ப்ரோக்தா: காகின்யேகா:

விசக்ஷணை: தத் சதுஷ்கம் பண: இதி சதுர்த்தம் தத் சதுஷ்டயம்

சதுர்த்தக சதுஷ்கம் து புராண: இதி கத்யதே

கார்ஷா பண; சஹ ஏவ உக்த: க்வசித் து பண விம்சதி:

20 வெள்ளிக் காசு= ஒரு காகினி

4 காகினி = ஒரு பணம்

4 பணம் = ஒரு சதுர்த்தம்

4 சதுர்த்தம் = ஒரு புராண அல்லது கார்ஷா பணம்

80 வெள்ளிக்காசு =ஒரு பணம்

20 பணம் = ஒரு கார்ஷா பணம்

8 வெள்ளைக் கடுகு (ஐயவி)= ஒரு அரிசி

20 அரிசி எடை வைரம் = 2 லட்சம் கார்ஷா பணம்

14 அரிசி அடை= 1 லட்சம் கார்ஷா பணம்

முத்து விலை

5 குந்து மணி (ரத்தி/குஞ்சா/கிருஷ்ணல) = 1 மாச

16 மாச = 1 சுவர்ண

4 சுவர்ண = ஒரு பல

அரை பல = தரண அல்லது சுவர்ண

4 மாசக எடை (16 குந்துமணி) முத்து= 53,000 கார்ஷா பணம்

ஒரு மாசக எடை முத்து = 135 கார்ஷா பணம்

இப்பொழுது அவர் சொல்லும் ரத்தினக் கற்களின் விலை பொருள் உடைத்து அல்ல. ஆயினும் அவைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் மதிப்பை அறிய முடியும். இடம், நேரம் ஆகியவற்றின் அருமை கருதி, இங்கே எல்லாவற்றையும் தர இயலவில்லை.

—-subham —

Tags- லலிதா, சஹஸ்ரநாமத்தில்,  நவரத்தினங்கள், Part 2 ,முத்து

படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்க மூன்று வழிகள்! (Post.15,114)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,114

Date uploaded in London –   24 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

8-8-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! Creativity /Motivation 

படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்க மூன்று வழிகள்! 

ச. நாகராஜன் 

நமக்கு க்ரியேடிவிடி ஆற்றலே (CREATIVITY  – படைப்பாற்றல்) – இல்லையே என்று யாரும் வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை.

படைப்பாற்றலை ஊக்குவிக்க மூன்று வழிகள் உள்ளன. 

முதலாவது வழி : மெதுவாக சுவாசத்தை உள்ளிழுத்துப் பின் சில கணங்கள் அதை நிறுத்திப் பின் மெதுவாக வெளியே விடுதல்.

மூச்சை உள்ளே நிறுத்தி வைப்பதால் மூளைக்கு நிறைய ஆக்ஸிஜன் சென்று சேர்கிறது. இதனால் அதிக தெளிவு ஏற்படுகிறது. ஆழ்ந்த சுவாசமானது ஆல்பா மூளை அலைகளை ஊக்குவிப்பதோடு உடலையும் மனதையும் நல்ல ஓய்வான நிலையில் இருக்க வைக்கிறது.

 இரண்டாவது வழி:மூச்சு விடுவதை நாசித் துவாரங்களில் ஒன்று விட்டு ஒன்றின் மூலம் செய்வது. சூரிய நாடி, சந்திர நாடி என்று இரு நாடிகள் இரண்டு நாசித் துவாரங்களைக் குறிக்கும்.

இதில் நம்மை அறியாமலேயே மூச்சு தானே மாறி மாறி இந்த இரு நாடிகளின் ஒன்றின் வழியே செல்லும். இந்தியர்களும் சீனர்களும் இந்த இரு நாடிகளுக்கும் மூளையின் பாகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அறிந்தனர்.

எந்த நாசி துவாரம் வழியாக நீங்கள் மூச்சு விடுகிறீர்களோ அது மூளையின் எந்தப் பக்கத்தை – இடது பக்க மூளையையா அல்லது வலது பக்க மூளையையா, எதை – நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைக் குறிக்கும்.

இன்னொன்றும் செய்யலாம். ஒரு நாசி துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து ஐந்து வினாடிகள் அதை நிறுத்தி வைத்து இன்னொரு நாசி துவாரத்தின் வழியே விடுவது நலம் தரும்.

அட, நமது பிராணாயாமம் போல இருக்கிறதே என்றால் அதுவும் சரிதான்! தினமும் பத்து நிமிடம் இந்தப் பயிற்சியைச் செய்தால் மனத் தெளிவு கூடும். உங்கள் மூளை அலைகளை பீட்டா நிலையிலிருந்து ஆல்பா நிலைக்குக் கொண்டு வர முடியும். இதனால் உணர்வூக்கம் அதிகமாகும். உள்ளுணர்வு கூடும்.

ஆல்பா அலைகள் ஓய்வையும் அமைதியான நிலையையும் கவனக் குவிப்புடன் கூடிய மனத்தையும் குறிக்கும். பீட்டா அலைகளோ விழிப்புடன் இருக்கும் தன்மையும், கூரிய சிந்தனையையும் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனையும் குறிக்கும்.

 மூன்றாவது வழி: எவ்வளவு நேரம் உங்களால் முடியுமோ அவ்வளவு நேரம் மூச்சை உள்ளிழுத்து நிறுத்துவது தான்.

மிகப் பெரிய ஜப்பானிய கண்டுபிடிப்பாளரான யோஷிரோ நகாமட்ஸ் (YOSHIRO NAKAMATS) தனது படைப்பாற்றலின் அதீத திறனுக்கு தான் நீருக்கடியில் நீந்துவது தான் காரணம் என்று கூறுகிறார். எடிஸனை விட அதிகம் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து உலகை ஆச்சரியப்பட வைத்தவர் இவர். நீருக்கடியில் ஒரு தனித்துவம் கொண்ட மெடல் நோட்புக்கையும் ஒரு விசேஷ பேனாவையும் எடுத்துக் கொண்டு சென்று தனது படைப்பாற்றல் மூலம் வரும் யோசனைகளைக் குறித்துக் கொள்வது இவர் வழக்கம்.

இந்தப் பயிற்சி கார்பன்/ ஆக்ஸிஜன் சமச்சீர்தன்மையை மூளையில் ஏற்படுத்துகிறது.

 இந்த மூச்சுப் பயிற்சியை பிராணாயாமத்தில் தேர்ந்த ஒரு குரு மூலமாகக் கற்றுக் கொள்ள வேண்டும். பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாமல் இருக்கும் படி ஒரு யோகா மாஸ்டர் பார்த்துக் கொள்வார்.

 ஆக நமது நாசியின் சுவாசத்தில் இருக்குது நல்ல படைப்பாற்றலைப் பெறுவது! 

 **

லலிதா சஹஸ்ரநாமத்தில் நவரத்தினங்கள் – Part 1 (Post No.15,113)

Written by London Swaminathan

Post No. 15,113

Date uploaded in London –  23 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ரத்தினக் கற்களுக்கு உண்மையிலேயே நல்ல பலன்களைத் தரும் அற்புத சக்தி உண்டு என்பதை இந்துமத சாஸ்திரங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சொல்லி வருகின்றன . ரத்தினங்களைக் குறிக்கும் மணி என்ற சொல் வேதங்களிலேயே உள்ளது. தமிழ் இலக்கியத்திலும் அதே பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வாராகமிஹிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதை நூலில் பல அத்தியாயங்களில் ரத்தினைக் கற்கள் பற்றிய சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் இருக்கின்றன.

அகஸ்தியர் எழுதிய லலிதா நவரத்ன மாலை போல பாரதியாரும் பாரத மாதா நவரத்ன மாலை எழுதியிருப்பது இன்றுவரை அந்த நம்பிகை இருந்து வருவதற்குச் சான்றாக அமைகிறது

லலிதா நவரத்ன மாலையில் நவரத்தினங்களை வைரத்தில் தொடங்கி வைடூரியத்தில் முடிகிறது

1-வைரம்

2-நீலம்

3-முத்து

4-பவளம்

5-மாணிக்கம்

6-மரகதம்

7-கோமேதகம்

8-பதுமராகம்

9-வைடூரியம்

பாரதியாரும் இதே வரிசையில் பாரத மாதா நவரத்ன மாலையைப் பாடியுள்ளார்!

சுமார் 2300 ஆண்டுகள் பழமையான கற்சிலைகளில் முடி முதல் அடி வரை ஆண்களும் பெண்களும் அணிந்த நகைககளைப் பார்க்கையில் முத்தும் பவளமும் ரத்தினக் கற்களும் இருப்பதைக் காண்கிறோம்..

கற்பக தரு என்னும் மரம் போலவும், காமதேனு என்னும் பசு மாடு போலவும் நினைத்தையெல்லாம் நல்கும் சிந்தாமணி என்னும் ரத்தினம் சீவக சிந்தாமணி என்ற நூலுக்கு தலைப்பாகவே உள்ளது. சிலப்பதிகாரம் என்னும் தமிழ்க் காவியமே ரத்தினக் கற்கள் பொதிந்த சிலம்பின் அடைப்படையில் இருப்பதையும் எல்லோரும் அறிவர். பாகவத புராணத்தில் வரும் ஸ்யமந்தகம் என்ற கல்லின் கதை மிக மிக நீண்டது அதுமட்டுமல்லடயமண்ட் என்ற சொல்லே ஸ்யமந்த என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து பிறந்தே என்றும் ஆராய்ச்சியில் தெரிகிறது

லலிதா சஹஸ்ரநாமம் போன்ற துதிகளை லட்சக் கணக்கானோர் நாள்தோறும் படித்தும் கேட்டும் வருகின்றனர் ஆயினும் அவர்கள் பக்திக்கடலில் மூழ்கி அதைத் துதிக்கும்போது அதிலுள்ள ரத்தினைக் கற்களை அவர்கள் மனத்தில் நினைப்பதில்லை . ஆயினும் இவைகளை ஆழ்ந்து நோக்கினால் அந்தக் காலத்திலேயே கடவுள் கூடரத்தினைக் கற்களை அணிந்தது தெரிகிறது; இதே செய்தி  ஆதி சங்கரரின் செளந்தர்ய லஹரி நூலிலும் இருக்கிறது;

“தாயே இந்திரனின் ரத்தினைக் கிரீடம் பதிந்த தலை உங்கள் கால்களில் நம ஸ்காரம் செய்கிறது. அதில் இடறி விழாமல் வாருங்கள்” என்று சங்காரச்சார்யார் பாடுகிறார்.

இப்போது லலிதா சஹஸ்ர  நாமத்தில் உள்ள நாமாவாளிகளில் ரத்தினக்  கற்களைக் காண்போம்.

குருவிந்த மணிச்ரேணி கனத் கோடீர மண்டிதா

என்பது இறைவியைத் துதிக்கும் ஒரு நாமம் .குருவிந்தம் என்பது பத்மராகக் கல். இதன் நிறம் சிவப்பு.  இதிலிருந்துதான் கொரண்டம் Corundum என்ற ஆங்கிலச் சொல்லும் பிறந்தது .

பேர்ல் PEARL  என்னும் முத்து தொடர்பான ஆங்கிலச் சொல்லும் பரல் என்ற தமிழ்த் சொல்லில் இருந்தே பிறந்தது . ப்ரவாள என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்தே பவளம் என்ற சொல் பிறந்தது ஷியமந்தகம் என்ற கிருஷ்ணனின் வைர மணியில் இருந்து டயமண்ட் வந்தது இதற்குப் பெரிய சான்று உலகின் புகழ்பெற்ற கோஹினூர் முதல் எல்லா வைரங்களும் பாரத நாட்டிலிருந்தே போயின; தென் ஆப்ரிக்கா முதலிய நாடுகளில் வைரம் கிடப்பது சில நூற்றாண்டுக்குட்பட்டது; பாரத வைரங்களோ ஆதி காலத்திலிருந்தே புகழ் பரப்பி வருகின்றன.

வஜ்ரம் என்ற ஆயுதம் இந்திரனின் ஆயுதம். உலகிலேயே கடினமான பொருள் வைரம் என்று இன்று பெளதீக நூல்கள் இயம்பும். ஆனால் வஜ்ரம் கடினமானது என்பதை இந்திரன் மூலம் வேத காலம் முதல் இந்துக்கள் பகர்கிறார்கள். வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும் முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்ற பழமொழிகள் சஸ்கிருத, தமிழ்ப் பழமொழிப் புஸ்தகங்களில்  உள்ளன ஆகையால் வைரம் என்றால் பாரத நாடு என்பதே பழங்காலச் செய்தி..

பழங்காலச் சிலைகளையும் கோவிலில் உள்ள கிரீடங்களையும் பார்த்தால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு வகையில் கிரீடங்கள் செய்யப்பட்டிருப்பதைக் காணலாம் இதற்கு காரணம் பெண்களின் அடர்ந்த கூந்தல் ஆகும். இந்த நாமாவளியில் வரும் கோடீரம் என்பது பெண்கள் அணியும் முடி/ கிரீடம் ஆகும் . இதை அணிந்த உருவத்தில் அமலாபாலை  தியானிப்பதால் நல்ல பலன்கள் கிட்டும் என்பதால் ஹயக்ரீவர் அகஸ்திய முனிவருக்கு அருளிய லலிதா சஹஸ்ரநாமத்தில் இதைக் காண்கிறோம்.

***

What is Corundum? What is Ruby?

Corundum குருவிந்தம், native Aluminium Oxide, the hardest naturally occurring mineral known apart from diamond (Corundum rates 9 on Mohs scale of hardness); lack of cleavage also increases its durability; its crystals are barrel shaped prisms of trigonal system varieties of gem quality Corundum is RUBY. (red) and SAPPHIRE (usually blue).

Poorer quality and synthetic Corundum are used in industry

***

RUBY ரூபி

The red transparent variety of the mineral Corundum, aluminium oxide . small amounts of Chromium oxide, substituting Aluminium Oxide, give ruby its colour. Natural rubies are found in Myanmar/Burma, Sri Lanka and other countries.

Rubies can also be produced artificially, and such synthetic stones are used in lasers.

***

இதிலுள்ள செய்தி என்னவென்றால் ,

குருவிந்தமும் ரூபியும்/மாணிக்கமும் சகோதரிகள் .இராண்டும் அலுமினியம் ஆக்சைட். கொஞ்சம் குரோமியம் ஆக்சைட் சேர்ந்தால் அது மாணிக்கம்/ ரூ பி ஆகிவிடும் . இந்த விஷயம் இந்துக்களுக்கு முன்னரே தெரியும் ஆதலால் இரண்டையும் தொடர்புபடுத்தியே பேசுவர். இரண்டும் சிவப்பு நிறம். வைரத்துக்கு அடுத்தபடியான கடினத் தன்மை கொண்ட    தாது குருவிந்தம். மேலும் ரூ பி எனப்படும் மாணிக்கம் லேசர் முதலிய கருவிகளில் பயன்படுவது அதன் அபார சக்தியைக் காட்டுகிறது.

இதை மாணிக்கத்தின் இரண்டாவது சாதி, ஜாதிலிங்கம் பதுமராகம் என்று தமிழ் அகராதி விளக்கும்.

அடுத்த நாமம் பத்மராக சிலாதர்ச பரிபாவி கபோல பூஹு

இதன் பொருள் , பத்மராகத்தால் செய்யப்பட கண்ணாடி போன்று பளபளக்கும் கன்னங்களை உடையவள்; அதாவது சிவந்த கன்னங்கள் என்று வருணிக்கிறார் ஹயக்ரீவர்.

இதை செளந்தர்ய லஹரி (62) ஸ்லோகத்துடன் ஒப்பிடலாம்

அங்கே தேவியின் உதடுகள் பவள நிறத்தில் உள்ளதாக ஆதி சங்கரர் துதி பாடுகிறார்.

To be continued……………………..

Tags- லலிதா சஹஸ்ரநாமம்  நவரத்தினங்கள், Part 1, பாரதியார், அகஸ்தியர் ,நவரத்ன மாலை,

அதிசய மனிதர் அப்பே அலெக்ஸிஸ் மெர்மட் நிகழ்த்திய அதிசயங்கள்! (Post.15,112)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,112

Date uploaded in London –   23 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

2-8-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை! 

அதிசய மனிதர் அப்பே அலெக்ஸிஸ் மெர்மட் (ABBE ALEXIS MERMET) நிகழ்த்திய ரேடிஸ்தீசியா அதிசயங்கள்! 

ச. நாகராஜன் 

உலகையே வியக்க வைத்த அப்பே அலெக்ஸிஸ் மெர்மட் (Abbe Alexis Mermet) என்னும் ஒரு அதிசய மனிதர் தனது பெண்டுலத்தை வைத்துக் கொண்டு பல சாதனைகளைச் செய்து காட்டியவர் ஆவார்.

 பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர் ஒரு கத்தோலிக்க பாதிரியார்.

 இவர் 1866ம் ஆண்டு நவம்பர் மாத்ம் 11ம் தேதி பிறந்தார்.

இவர் தனது பெண்டுலத்தை வைத்துக் கொண்டு அதிசயமான சாதனைகளைச் செய்து காட்டினார்.

 எடுத்துக் காட்டாக போலீஸாருக்கு இவர் செய்த உதவியைச் சொல்லலாம். யாரைக் கண்டுபிடிக்க வேண்டுமோ அவர் பயன்படுத்திய ஒரு பொருளை இவர் கையில் கொடுத்தால் போதும், அவர் எங்கு இருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து உடனே சொல்லி விடுவார். அந்தப் பொருளானது அவரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும், அவ்வளவு தான்!

 தனது இந்தக் கலைக்கு அவர் ரேடிஸ்தீசியா (RADIESTHESIA) என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.

 அதாவது ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு ரேடியேஷன் எனப்படும் கதிர் இயக்க அலை இருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் இவர் அதை வைத்து சுலபமாக

எதையும் கண்டுபிடித்து விடலாம் என்று கூறுவார்.

 வியாதி உள்ள ஒருவர் இவரிடம் வந்தால் அவரது அங்கத்தின் மீது தன் பெண்டுலத்தைப் பயன்படுத்தி அவரது வியாதி என்ன என்பதைத் துல்லியமாகக் கூறி விடுவார். அதற்குத் தக சிகிச்சை அமையும்.

இவரது ரேடிஸ்தீசியா முறை இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளிலும் பின்பற்றப்பட்டது.. இவர் புகழ் ஐரோப்பா முழுவதும் பரவியது.

 இவரது அதிசயிக்கத் தக்க சாதனைகளுள் ஒன்று பெட்ரோல் எங்கு இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தது.

நிலத்தடியில் உள்ள நீரைக் கண்டுபிடிப்பது பலரும் அறிந்த ஒன்று,

இவர் ஒரு பெரிய நதியையே கண்டுபிடித்தார்.

 பிரான்ஸ்- இத்தாலி எல்லையில் உள்ள மிகப் பெரிய மலையான மாண்ட் ப்ளாங்க் பகுதியில் நிமிடத்திற்கு 50000 காலன் நீர் பாயும் ஒரு பெரிய நதியையே இவர் கண்டுபிடித்தார்.  சலீவ் மற்று ஜுரா ஆல்ப்ஸ் மலைகளுக்கு இடையே இது பாய்கிறது. இதற்கு இயக்ஸ – பெல்லஸ் (EAUX-BELLES) என்று பெயர் சூட்டப்பட்டது. மலைக்கு அடியில் 75 முதல் 150 அடி ஆழத்தில் இருந்த இந்த நதியை இவர் கண்டு உலகிற்கு அறிவித்தது பெரும் பரபரப்பை ஊட்டியது.

 காலம் காலமாக dowser என்று சொல்லும் நிலத்தடி நீர் கண்டுபிடிப்பாளர்களுக்கு இவர் ஒரு புதிய அந்தஸ்தை ஏற்படுத்தித் தந்தார்.

நிலத்தடியில் புதைந்திருக்கும் கனிவளத்தைக் காண இவரது ஆற்றல் பெரிதும் உதவியது.

முதல் உலகப்போர் முடிந்தவுடன் இவரை நாடி ஏராளமானோர் வந்து தங்கள் டெபாசிட் எங்கிருக்கிறது என்றும் காணாமல் போன தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பலரைப் பற்றியும் கேட்க ஆரம்பித்தனர். தூரத்தில் உள்ளதைப் பார்க்கும் டெலி ரேடிஸ்தீசியா என்பதைப் பயன்படுத்தி இவர் அனைவருக்கும் உதவி வந்தார்.

இவர் Principles and Practice of Radiesthesia என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

 1937ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் நாளன்று இவர் மறைந்தார்.

உலகம் கண்ட அதிசய மனிதர்களுள் அப்பே மெர்மட் சற்று வித்தியாசமானவர் தான்!

**