ஹென்றி போர்டு  –   ஆர்வம்,  உழைப்பு, பொறுமை இருந்தால் வெற்றி நிச்சயம்! – 1 (Post.13,169)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.169

Date uploaded in London – — 23 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலரில் சமீபத்தில் வெளியான கட்டுரை இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

ஹென்றி போர்டு  –  ஆர்வம்உழைப்புபொறுமை இருந்தால் வெற்றி நிச்சயம்! – 1

ஹிட்லர் புகழ்ந்த ஒரே ஒரு அமெரிக்கர்

கடிகாரத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மீண்டும் அதை அசெம்பிள் செய்து வேடிக்கை பார்த்த ஒரு சிறுவன், உலகின் ஆகப் பெரிய கார் அசெம்பிளி லைனை – 24 விநாடிகளில் கார் பாகங்களை ஒன்று சேர்த்து ஒரு காராக உருவாக்கும் – நுட்பத்தைச் செய்து காட்டினான் என்றால் பிரமிப்பாக இல்லை?

அமெரிக்கர்களையும் பிரிட்டிஷாரையும் வெறுக்கும் ஹிட்லர் தன் வாழ்நாளில் அனைவரும் அறியும்படி “உத்வேகம் ஊட்டுபவர்” என்று கூறிப் புகழ்ந்த ஒரே ஒரு அமெரிக்கர் இவர் தான் என்றால் ஆச்சரியமாக இல்லை?

யார் இவர்?

அவர் தான் ஹென்றி போர்டு.

பிறப்பும் இளமையும்

அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணத்தில் வில்லியம் என்பவருக்கும் மேரி போர்டுக்கும் 1863-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி பிறந்தார் ஹென்றி போர்டு. தாயின் விருப்பதிற்கிணங்க பண்ணையில் வேலை பார்த்த அவர் 1876-ல் தாயார் மறையவே பண்ணையிலிருந்து வெளியே வந்தார்.

தந்தையார் அவருக்கு ஒரு பாக்கட் கடிகாரத்தைப் பரிசாகத் தந்தார். அடுத்த கணமே அதை அக்கக்காகப் பிரித்த போர்டு, மீண்டும் அதை கடிகாரமாக அசெம்பிள் செய்து அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கினார்.

இதிலிருந்து அனைவரது கடிகாரங்களையும் வாங்குவது, பிரிப்பது மீண்டும் அதை பழையபடி ஒன்று சேர்த்து ஓட வைப்பது அவரது பொழுதுபோக்கானது. ரிப்பேர் செய்வதற்கென்றே கடிகாரங்களை அனைவரும் அவரிடம் தர ஆரம்பித்தனர்.

அசெம்பிள் செய்வது என்பது அவரது மனதில் ஆழப் பதிந்து விட்டது.

15 வயதில் முதல் எஞ்ஜின்

1878-ல் தனது 15-ம் வயதில் தனது முதல் நீராவி எஞ்ஜினை அவர் உருவாக்கினார். எடிஸனின் நிறுவனமான எடிஸன் இல்லுமினேடிங் கம்பெனியில் சேர்ந்த அவர் தனது திறமையால் 1893-ல் தலைமைப் பொறியாளராக ஆனார்.

கையில் சிறிது பணம் சேரவே சொந்தமாக தனது கேஸொலைன் எஞ்சின்களைத் தயாரிக்க ஆரம்பித்தார்.

“குதிரை இல்லாமல் ஓடும் வண்டியான”, தனது காரை 1896இல் – 33-ம் வயதில் உருவாக்கினார்; அனவரும் பிரமித்தனர்.  ‘’க்வாட்ரி சைக்கிள்’ என்று அவர் அதற்குப் பெயர் சூட்டினார்.

எடிஸன் மீது அளவில்லாத பக்தி அவருக்கு ஏற்பட்டது. எடிஸன் அவரைக் கார் தயாரிக்குமாறு ஊக்குவித்தார்.

போர்டு மோட்டார் கம்பெனி

1903-ம் ஆண்டு போர்டு மோட்டார் கம்பெனியை 28000 டாலர் முதலீட்டுடன் அவர் தொடங்கினார். ஆனால் உரிய லைசென்ஸ் இல்லாத காரணத்தால் அது மூடப்பட்டது. நீதிமன்றம் சென்ற போர்டு முதலில் தோற்றாலும் 1911-ல் வெற்றி பெற்றார். மீண்டும் தொழிற்சாலை தொடங்கியது.

600 டாலர் விலையில் ‘மாடல் என்’ என்ற ஒரு காரை அவர் அறிமுகப்படுத்தினார். அதன்  விலை கூட என்பதை அவர் உணர்ந்தார். ஆகவே அனைவரும் வாங்கும் விலையில் ஏராளமான கார்களை உற்பத்தி செய்வதற்கான வழியைக் கண்டுபிடிக்க அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

முதலில் 950 டாலருக்கு விற்பனையான அவரது ‘மாடல் டி’ கார்,

1927-ல் கடுமையான உழைப்பு,  ஆர்வம். ஆகியவற்றின் விளைவாக 290 டாலராகக் குறைக்கப்பட்டது.

தனது புதிய செயல் முறையான அசெம்பிளி லைனை அவர் 1913-ல் ஆரம்பித்தார். கார் பாகங்கள் வரிசையாக வைக்கப்பட்டு இருக்க 723 நிமிடங்களில் அதை ஒரு காராக ஆக்கிய அசெம்பிளி லைனை முதலில் அவர் உருவாக்கினார். பின்னர் தனது கடும் உழைப்பால் 93 நிமிடங்களில் ஒரு காரை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்தார். இன்னும் அதிக ஆராய்ச்சியும் , அதிக உழைப்பும் சேர அனைவரும் பிரமிக்கும் வண்ணம் 24 விநாடிகளில் அசெம்பிளி லைனிலிருந்து காரை வெளியே கொண்டு வந்தார்.

உலகமெங்கும் பிரசித்தமான மாடல் டி கார் உருவாகவே அவர் பெயர் பிரபலமானது.

அமெரிக்க சந்தையில் புகுந்த அவர் மக்களிடம் காரை விற்கத் தொடங்கினார். அமெரிக்காவில் பாதி கார்கள் அவர் தயாரித்த கார்களாகவே இருந்தன.

உலகமே அதிசயதித்த அந்த கால கட்டத்தில் ஹிட்லரே அவரை “ஊக்கமூட்டும் ஒருவர்” என்று புகழ்ந்தார்.

மாடல் டி காரின் விற்பனை

மாடல் டி கார் மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. 165 லட்சம் கார்கள் விற்கப்பட்டன.  1908லிருந்து 1927 முடிய தயாரிக்கப்பட்ட இந்தக் கார்கள் 2012ஆம் ஆண்டிலும் கூட அமெரிக்காவின் டாப்-டென் கார்களில் ஒன்றாகத் திகழ்ந்தது.

குடும்பம்

க்ளாரா ஜேன் பைரண்ட் என்பவரை அவர் 1888-ம் ஆண்டு மணந்தார்.

அவருக்கு எட்ஸல் போர்டு என்று ஒரு மகன் உண்டு.

வாழ்நாளில் அவரைத் தேடி ஏராளமான விருதுகள் வந்து குவிந்தன.

அமெரிக்காவை உருவாக்கிய  முக்கியமான ஒருவராக அவர் கருதப்பட்டார். 1999-ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், மார்டின் லூதர் கிங், மதர் தெரஸா ஆகியோர் அடங்கிய 18 பேர் பட்டியலில் அவரும் ஒருவராக அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் உருவம் பொறித்த தபால்தலை அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.

மனிதப் பண்புகள்

தனது நிறுவனத்தில் 20% பணியை மாற்றுத்திறன் கொண்ட ஊனமுற்றோருக்காக அவர் தந்தார்;

அந்தக் காலத்தில் மற்றவர்கள் தரும் சம்பளத்தை விட இரு மடங்கு ஊதியத்தை அவர் தனது தொழிலாளர்களுக்கு வழங்கியதோடு, நிறுவனத்தில் தனக்குக் கிடைத்த லாபத்தை ஆறுமாதத்திற்கும் மேலாகப் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் அவர் பிரித்துக் கொடுத்தார்.

to be continued……………………………..

பீரங்கிக் கடிகாரம்; திருவனந்தபுரம் பாலஸ் மியூசிய அதிசயங்கள்– 8 (Post No.13,168)

 WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,168

Date uploaded in London – –   22 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

 திருவனந்தபுரம் பாலஸ் மியூசிய அதிசயங்களில்  இன்னுமொரு குறிப்பிடத்தக்க பொருள் பீரங்கிக் கடிகாரம் ஆகும். அந்தக் காலத்தில் ஐரோப்பாவில் நண்பகல் நேரத்தைக் குறிக்க இதை பயன்படுத்தியதால் இதை நண்பகல் பீரங்கி NOON CANON என்றும் அழைத்தனர். இது சூரிய ஒளியால் இயங்குவது. சூரியஒளியானது நடுப்பகல் நேரத்தில் லென்ஸ் என்னும் பூதக்கண்ணாடி மீது விழும் வகையில் ஆடிகள் இருக்கும். அப்பொழுது விழும் ஒளி குவியும் இடத்தில் வெப்பம் அதிகரிக்கும். அது பீரங்கிக் குண்டு மீது விழுந்து அதை வெடிக்கச் செய்யும் (படத்தில் காண்க )

அங்குள்ள மார்பிள் / சலவைக்கல் சிலைகளும் அழகானவை . நம்முடைய நவராத்ரி கொலு பொம்மைகளைப் போல காட்சி தருகின்றன. அரண்மனை முழுதும் காணப்படும் மரவேலைகளைப் பார்த்து ரசிக்கும்போது, இவைகளை செய்ய எவ்வளவு ஆண்டுகள் ஆகியிருக்கும் என்பதை ஊகித்தறியலாம்.

பலவிதமான விளக்குகளும் காட்சியில் உள்ளன. இவைகளைப் பார்த்தபோது கொழும்பு மியூசியம் என் நினைவுக்கு வந்தது . இப்பொழுதும் மலையாளக்  கோவில்களில் தீபங்கள் மிகவும் புகழ்பெற்றவை. கோவில் வாசலில் விளக்குகள் இருப்பதோடு பிரகார சுவர்களிலும், மரச் சட்டங்களிலும் விளக்குகளை வைத்து லட்ச தீப விழாக்களைக் கொண்டாடுகிறார்கள் .

காட்சிக்கு வைத்துள்ள அரண்மனை மியூசியம் தவிர உண்மையில் மன்னர் குடும்பம் வசிக்கும் அரண்மனைகளும் உள்ளன. அவை திருவனந்தபுரம் கோவில் ரகசியங்கள் போல மறைந்து இருக்கின்றன.

தற்காலத்தில் தந்தத்திலான பொருட்கள் தடை செய்யப்பட்டுவிட்டன. யானைகள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க உலக நாடுகள் இதை அமல்படுத்தியுள்ளன. ஆயினும் அரண்மனை மியூசியத்தில் பழங்கால தந்தங்களும், தந்த சிம்மாசனங்களும் அப்படியே இருக்கின்றன. சங்கத் தமிழ் இலக்கியம், காளிதாசன் காவியங்களில் தந்த சிம்மாசனம், தந்த உலக்கை பற்றியெல்லாம் காணலாம்.

விக்ட்டோரியா மஹாராணிக்கு திருவாங்கூர் மன்னர் தந்த சிம்மாசனம் ஒன்றை அனுப்பினார்.

—subham—

Tags- பாலஸ் அதிசயங்கள் 8 , மார்பிள் சிலைகள் , பீரங்கிக் கடிகாரம், தந்த சிம்மாசனம், Palace Museum, Rare objects, Part 8, Thiruvananthapuram, Ivory, Noon Canon

பாம்புக் கடியைத் தீர்க்க உதவும்  200 மூலிகை மருந்துகள் -2 (Post.13,167)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,167

Date uploaded in London – –   22 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

பகுதி 2 Part Two

அகிரான்தஸ் வகை தாவரங்கள் நாயுருவிச் செடியின் பிரிவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்  தக்கது.

11. Achyranthes bidentata Blume 

அகிரான்தஸ்  பைடென்டேடா

கார்வால் இமயமலைப் பகுதி மக்கள் கோல்டா  என்ற பெயரில் இந்த தாவரத்தின் வேர்களைப் பயன்படுத்துகின்றனர் .

XXXX

12. Achyranthes porphyristachya Wall. ex Moq.

அகிரான்தஸ்  போர்பிரிஸ்தாக்கியா

மத்திய இந்தியாவில் சஹாரிய இன மக்கள்,  தாவர வேரை பாம்புக்கடிக்கு பயன்படுத்துகின்றனர்

XXXX

13. Aerva lanata (L.) Juss. ex Schult.

ஏர்வா  லானாடா

ராஜஸ்தான் உதய்ப்பூர் மாவட்டத்தில் இதன் வேரைப் பொடி செய்து உள்ளுக்கு கொடுக்கின்றனர்

XXXX

கீரை வகைகள்

14. Amaranthus blitum L.

அமரான்தஸ் ப்ளிடம்

மத்திய இந்தியாவிலும் உத்தர பிரதேசத்திலும் இதன் வேரைப் பயன்படுத்துகின்றனர்

XXXX

15. Amaranthus Spinosus L.முள்ளுக்கீரை, முட்கீரை

அமரான்தஸ் ஸ்பைனோஸஸ்

ஒரிஸ்ஸா மற்றும் உத்தர பிரதேச மக்கள் இந்தக் கீரையின் சாற்றை காயங்களில் தடவுகின்றனர்

XXXX

16. Amaranthus viridis L.  முளைக்கீரை

அமரான்தஸ் விரிடிஸ்

பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இந்தக் கீரையின் சாற்றைப் பாம்புக்கடிக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

XXXX

17. Chenopodium album L.

சீனோபோடியும் ஆல்பம்

பாகிஸ்தான் மலைவாழ் மக்கள்  இதை உபயோகிக்கின்றனர்.

XXXX

குடும்பம் F4. Family: Amaryllidaceae அமரில்லிட்டேசி

18. Allium cepa L.

Common name: Onion • Hindi: प्याज़ Pyaz • Kannada: ಈರುಳ್ಳಿ Eerulli, ನೀರುಳ್ಳಿ Neerulli, ಉಳ್ಳಿಗೆಡ್ಡೆ Ulligedde, ಉಳ್ಳಾಗೆಡ್ಡೆ Ullaagedde • Manipuri: ꯇꯤꯜꯍꯧ Tilhou • Mizo: Purunsen • Sanskrit: सुकन्दक Sukandaka • Tamil: வெங்காயம் Vengayam • Tangkhul: Tarui

ராஜஸ்தானிலும் மத்திய இந்தியாவிலும் வெங்கயச் சாற்றுடன் கடுகு எண்ணெயைக் கலந்து 2 ஸ்பூன் கொடுக்கின்றனர். இதன் மூலம் வாந்தி ஏற்பட்டு, நிவாரணம் கிடைக்கிறது

XXXX

F5. Family: Anacardiaceae குடும்பம் அனகார்டியேசி

19. Buchanania lanzan Spreng.பூச்சநானியா லாஞ்சன் ஸ்ப்ரெங்

தமிழ்நாட்டின் கல்ராயன் , சேர்வராயன் மலைப்பகுதி மக்கள் கோலமாவு மரத்தின் பட்டையை

Vernacular names: Kolamavu (Kalrayan and Shervarayan hills, Eastern Ghats, Tamil Nadu, India); பட்டையைப் பாம்புக்கடிக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்

XXXX

20. Mangifera indica L.

மாக்னீபெரா இண்டிகா  (மா மரம்)

உத்தர பிரதேச தேராய் காட்டுவாசிகள் மா மரப் பூவை அரைத்து கைகளில் தடவிக்கொள்கின்றனர். இதனால் பாம்பு கடிக்காது என்பது அவர்கள் நம்பிக்கை

XXXX

21. குடும்பம்- அந்நோனேசி

F6. Family: Annonaceae

 21. Annona squamosa L.அன்னோனா ஸ்க்வாமோசா

நிகோபார், கார் நிகோபார் தீவு மக்கள், பாம்பு கடித்த இடத்தை  இந்த தாவரத்தின் சாற்றைக்  கொண்டு கழுவி சுத்தப்படுத்திவிட்டு, கரு  ஊமத்தை வகை தாவரத்தின்  Datura metel leaf paste இலைப்பசையை அப்புகின்றனர்

IXXXX

 22. Miliusa eriocarpa Dunn.மிலியுசா எரியோ கார்பா  (சாக்கடை மரம் என்றும் அழைக்கிறார்கள் )

திருநெல்வேலி பகுதியில் இதை கரு நாரை என்று அழைப்பார்கள் இதன் இலையை கஷாயம் வைத்து அத்தோடு தான்றிக்காய்கொ ட்டை இலந்தை கருவேப்பிலை மரப்பட்டை ஆகியவற்றுடன் கொதிக்கவைத்து பாம்பு கடித்தோரைக் குடிக்கவைக்கினறனர்

Vernacular name: Karu naarai (Tirunelveli hills, Tamil Nadu, India)

Leaf decoction along with stem bark of Murraya koenigii, leaves of Terminalia bellirica and Zizyphus xylopyra is heated first and then taken internally to treat snakebite by the tribals of Tirunelveli hills, Tamil Nadu, India (Ayyanar and Ignacimuthu, 2005).

XXXX

குடும்பம் அபோசயனேசி Family: Apocynaceae

23. Alstonia scholaris (L.) R. Br.ஆல்ஸ்டோனியா ஸ்காலரிஸ்

கர்நாடக சிக்மகளூர் வட்டார மக்கள் இதன் மரப்பட்டையை கடித்து மெல்லச் செய்கின்றனர் .

XXXX

எருக்கஞ்செடி

24. Calotropis gigantea (L.) R.Br. கலடிராபிஸ் ஜைகாண்டியா

எருக்கஞ்செடி (அர்க்க) நீல எருக்கு

ஒரிஸ்ஸா மாநில சுந்தர்கர் வட்டார மக்கள் எருக்கஞ்செடியின் பச்சைவேரை பசும்பாலில் அரைத்து அதை அப்படியே சாப்பிடச் சொல்கின்றனர்.

XXXX

25. Calotropis procera (Aiton) W.T. Aiton வெள்ளெருக்கு

கலடிராபிஸ் ப்ரொசீரா

இதன் பாலை பாம்பு கடித்த இடத்தில் விட்டு ரத்தத்தை வெளியேற்றுகின்றனர்  . இதை இந்திய, பாகிஸ்தான், வங்கதேச மக்கள் பயன்படுத்துகின்றனர்

சேலம் ஜில்லா குமரகிரியில் போதைப்பொடி செய்து மிளகுடன் தருகின்றனர் . இதன் வேர், இலைகளை மற்ற பல இடங்களில் பயன்படுத்துகினறனர்

XXXX

26. Cryptolepis buchananii Schult.

கிரிப்டோலெனிஸ் பூச்சநானி

உத்தர கன்னட மக்கள் இதை கரி பந்தன பல்லி என்பர். ஆடு மாடுகளைப் பாம்புக்கடித்தால் 100 கிராம் இலையை மோரில் அரைத்து இரண்டு முறை கொடுக்கிறார்கள்

xxxx

27. Ervatamia coronaria (Jacq.) Stapf

27. ஏர்வடாமியா கரோனரியா

மேற்குத் தொடர்ச்சி மலை மலாண்ட் வட்டார மக்கள் இந்த மரத்தின் வேரையும் பட்டையையும் கஷாயம் வைத்து வேறு மூன்று பட்டை வேர் இலைகள் , வெண்ணெய், பால் ஆகியவற்றுடன் கலந்து வடிகட்டி மருந்தாகக் கொடுக்கின்றனர்

Root and bark infusion of the plant and Leucas aspera  தும்பைl  eaves with roots of Ocimum adscendens நாய்த்துளசி, புனத்துளசி, கஞ்சங்குல்லை, குல்லை ( and bark of Artocarpusபலாவினக்காய் mixed with milk and butter are filtered and used in snakebite by the local medicine men of Bhadra wildlife sanctuary, Maland region of Western Ghats, India (Parinitha et al., 2004).

xxxx

28. Hemidesmus indicus (L.) R. Br.

28 ஹெமிடெஸ்மஸ்இன்டிகஸ்

மேற்கு வங்க புரூலியா வட்டார மக்கள் அனந்த மூல என்ற பெயரில் இதன் வேரை அரைத்து பயன்படுத்துகிறார்கள் காயம்பட்ட இடத்தில் அதை அப்புகிறார்கள்

xxxx

29. Holarrhena antidysenterica (L.) Wall. ex A. DC.

29. ஹோலரீனா ஆன்டிடீசென்ட்ரிகா

ஒரிஸ்ஸா மாநில சுந்தர்கர் வட்டார மக்கள் இதன்பட்டையைப் பயன்படுத்துகிறார்கள்..இன்னும் சிலர் இதன் வேரை அரைத்து உள்ளுக்கும் கொடுத்துவிட்டுப் பாம்பு கடித்த இடத்திலும் அப்புகிறார்கள்

Vernacular name: Kurai (Sundargarh District, Orissa, India)

xxxx

30. Nerium indicum Mill.

30 அரளிச் செடி = நீரியம் ஒடோரம் நீரியம் ஒலியாண்டர் ,நீரியம் இண்டிகம்

ஹிமாச்சல , உத்தர பிரதேச மக்கள் இலைகளையும் வேரையும் பாம்புக்கடிக்கு சிகிச்சையாக தருகிறார்கள்.

31. Nerium oleander L. அரளிச் செடி

பாகிஸ்தானில் பாம்புக்கடிக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்

32. Nerium odorum Sol. அரளிச் செடி

பாகிஸ்தானில் பாம்புக்கடிக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

To be continued…………………………………..

Tags-  பாம்புக்கடிக்கு மருந்து, அரளிச் செடி , எருக்கஞ்செடி,  200 மூலிகைகள், பகுதி 2 Snake Bite Cure, Herbs ,Part Two

பெண்களே அழகுடன் முன்னேறுங்கள், சமுதாயத்தை முன்னேற்றுங்கள்! – 2 (Post No.13,166)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.166

Date uploaded in London – — 22 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலரில் சமீபத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

மேரி  கே ஆஷ் – பெண்களே அழகுடன் முன்னேறுங்கள்சமுதாயத்தை முன்னேற்றுங்கள்! – 2

ச. நாகராஜன்

அழகுக்கு அழகூட்டுங்கள்

பெண்கள் எப்போதுமே இல்லத்திலும் சரி, வெளியிலும் சரி அழகுடன் விளங்க வேண்டும் என்று நமது நூல்கள் சொல்கின்றன. பகட்டிற்காகவோ அல்லது ஆடம்பரத்திற்காகவோ அல்ல; அது ஒரு உற்சாகமான மேம்பாடுடன் கூடிய சமுதாயத்தின் அடையாளம் என்பதற்காக!

சௌந்தரியம் எனப்படும் அழகு என்பது தான் என்ன? கணம் தோறும் கணம் தோறும் புதுமையைக் கொள்வது சௌந்தர்யம்.- கணம் தோறும் வியப்பு! கணம் தோறும் புதுமை. இதுவே சௌந்தர்யம்!

இதை இயற்கை முறையில் எளிமையாக அதிகம் செலவின்றி செய்ய உதவுவது காஸ்மெடிக்ஸ் எனப்படும் ஒப்பனைப் பொருள்கள் –

பெண் என்பவள் யார்? அன்றாடம் குளித்து, அழகிய ஆடை அணிந்து, நெற்றியில் சித்திரம் கூடிய திலகம் இட்டு, கண்ணுக்கு மை ‘எழுதி’, காதணி பூட்டி, மூக்கணி புனைந்து, கூந்தலைச் சீவி சிங்காரித்து மலர் சூடி, அழகுற உடை அணிந்து,   கால் ஆபரணம் அணிந்து, உடலுக்கு சுகந்த வாசனை சேர்த்து, அழகிய வளையல்களை அணிந்து, பாதங்களுக்குச் செம்பஞ்சுக் குழம்பு தீட்டி, மேகலை அணிந்து, வாய் சிவக்க தாம்பூலம் தரித்து, மோதிர விரலில் மோதிரம் அணிந்து, சாதுரியத்துடன் இதர அலங்கார வகைகளையும் செய்து கொண்டு இல்லத்திற்கும் சமுதாயத்திற்கும் நலம் சேர்த்து அனைவரையும் மேலே உயர்த்துபவளே பெண் என்று நம் நூல்கள் பெருமையுறக் கூறுகின்றன!

மேரி காஸ்மெடிக்ஸ் தயாரிப்புகள்

இந்த வகையில் பெண்களுக்குரிய லிப்ஸ்டிக், மேனி பளபளப்பாக இருக்க உதவும் க்ரீம்கள், சருமத்தை மென்மையாகக் காட்ட வல்ல ஒப்பனைப் பொருள்கள் என ஏராளமானவற்றைத் தயாரித்தார் மேரி.

உலகில் பெண்களுக்கான பத்து சிறந்த கம்பெனிகளுள் ஒன்று என்ற பாராட்டைப் பெறும் அளவில் தன் நிறுவனத்தை உயர்த்தினார் மேரி. இன்று மேரி காஸ்மெடிக்ஸ் 200 தயாரிப்புகளைக் கொண்டுள்ளது.

அதை விற்பதற்கென உலகெங்கும் 30 லட்சம் பெண்கள் ஆலோசகர்களாக உள்ளனர்.

ஆலோசகர்கள் இரு விதமாக சம்பாதிக்க முடியும். ஒன்று தன்னால் சில பெண்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களையும் விற்பனை ஆலோசகர் ஆக்குவது. இன்னொன்று – பொருள்களை விவரித்து அதை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து அதன் லாபத்தில் ஒரு பகுதியைப் பெறுவது.

ஊக்கமூட்டும் பரிசுகள்

தனது நிறுவனத்தில் வேலை பார்த்தோருக்கு வெறும் சம்பளத்தை மட்டும் தரவில்லை மேரி. ஜெனரல் மோட்டார்ஸ் தனது நிறுவனத்திற்கென பிரத்யேகமாக தயாரித்த அழகிய கார்களையே பரிசாக வழங்கினார். 1969இல் அதன் விலை 5900 டாலர்கள். ஐந்து பேருக்கு ஐந்து கார்களை பரிசாக வழங்கினார் அவர்.

தனது பையில் கொண்டு செல்லும் வண்ணத்தட்டின் வண்ணத்தையும், உதட்டுச் சாய வண்ணமான இளஞ்சிவப்பையும் தனது நிறுவனத்தின் சார்பில் வாங்கும் கார்களுக்கு வண்ணமாகப் பூசச் செய்தார்.

கெடில்லாக், செவர்லெட் கார்களில் மூன்று மாடல்களை உருவாக்கி அந்த மூன்று வகை கார்களை அவரவர் விற்பனை சாதனைக்குத் தக்கபடி பரிசளிக்க ஆரம்பித்தார் மேரி. சாலைகளில் இந்தக் கார்கள் அடிக்கடி ஓடும் போது அது அனைவருக்கும் பரவசத்தை ஊட்டியது. இந்தப் பரிசளிப்பு இன்றளவும் தொடர்கிறது. 2016ஆம் ஆண்டு வரை விலை மதிப்புள்ள 6032 கார்கள் பரிசாக அளிக்கப்பட்டிருப்பதிலிருந்தே இந்த நிறுவனத்தின் சாதனையை புரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமின்றி விற்பனை சாதனையாளர்கள் அனைவருக்கும் தாராளமாக வைர மோதிரங்கள், மேலே அணியும் கோட்டுகள் உள்ளிட்ட பல  பரிசுப் பொருள்கள் அவரால் வழங்கப்பட்டன. இவரது நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 150 பெண்மணிகள் பத்து லட்சம் டாலருக்கு மேல் சம்பாதித்து மற்றவரை வியக்க வைத்தனர்.

சுற்றுப்புறச் சூழல் மேம்பாடு

தான் வாழ்கின்ற சமுதாயத்திற்கென என்ன செய்வது என்று யோசித்த மேரி, சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டிற்காக முதன் முதலாக மறு சுழற்சிப் பொருள்களைத் தயாரிக்க ஆரம்பித்தார்.

1995ஆம் ஆண்டு தனது நிறுவனத்தின் உலகத் தலைமையகத்தை டெக்ஸாஸில் அவர் கட்டி முடித்தார். 34 ஏக்கர் பரப்பளவில் ஆறு லட்சம் சதுர அடியில் 13 மாடிக் கட்டிடமாக அமைந்த இதை அண்ணாந்து பார்த்து அனைவரும் வியந்தனர்!

அறக்கட்டளை

பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தனி ஒரு அறக்கட்டளையை தன் செலவில் மேரி ஆரம்பித்தார். இது பெண்களை இல்லங்களில் கொடுமைப்படுத்துவதிலிருந்து காப்பதற்கும் பெண்கள் கான்ஸரால் பாதிக்கப்பட்ட போது உதவுவதற்கும் முன் வந்தது.

மறைவு

வயது மூப்பின் காரணமாக 83ம் வயதில் டெக்ஸாஸில் தனது இல்லத்தில் 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் நாள் அவர் மறைந்தார்.

வாழ்ந்த காலத்திலும், வாழ்நாளுக்குப் பிறகும் அவரைத் தேடி பல விருதுகள் வந்து குவிந்தன.

ஊக்கமூட்டும் பொன்மொழிகள்

அவரது ஊக்கமூட்டும் பொன்மொழிகள் பெண்களுக்கு புது வாழ்வையே காண்பித்தது.

அவற்றில் சில:

ஒப்பனைப் பொருள்களை விற்பதை மட்டும் நாம் செய்யவில்லை. நாம் வாழ்க்கையையே மாற்றுகிறோம்.

ஒவ்வொருவரும் மற்றவர் கண்ணுக்குத் தெரியாதபடி, “என்னை முக்கியமானவனாக உணரச் செய்யுங்கள்’’ என்று பொறிக்கப்பட்ட ஒரு போர்டைத் தன் கழுத்தில் அணிந்து கொண்டிருக்கிறார். மற்றவருடன் பணியாற்றும் போது இதை மறந்து விடாதீர்கள்.

வெற்றியாளருக்கும் மற்றவருக்கும் உள்ள வித்தியாசம் அசாதாரணமான மன உறுதி தான்!

கடவுள் உன்னைத் திறனுடையவரா அல்லது திறனற்றவரா என்று கேட்கவில்லை. நீ செயல்புரியத் தயாராக இருக்கிறாயா என்று தான் கேட்கிறார்.

உலகில் மூன்று விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒரு காரியத்தை முடிப்பவர், ஒரு காரியம் முடிக்கப்படுவதைப் பார்ப்பவர், அட, அது எப்படி முடிந்தது என்று வியப்பவர்! இந்த மூவரில் நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள் என்பதை நீங்களே தேர்ந்தெடுங்கள். நான் முதலாவது வகையைச் சேர்ந்தவளாக இருக்கத் தீர்மானித்தேன்.

ஒருபோதும் மனம் தளர்ந்து பாதியில் விட்டு விடாதீர்கள். அடுத்த முயற்சி வெற்றியைத் தரும் ஒன்று தான் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.

பாரதியார் காட்டிய பெண்!

“திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்

 தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்”

என்ற மகாகவி பாரதியாரின் வார்த்தைகளை மெய்ப்பித்தவர் மேரி ஆஷ் கே என்றால் அது மிகையாகாது!

*****

My visit to Tallest Siva linga,Largest Shiva Statue and Beautiful Light House in Kerala (Post.13,165)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,165

Date uploaded in London – –   21 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

During my visit to India in March- April 2024, I had a busy Wedding schedule. I attended one wedding in Chennai and celebrated another wedding in Kovalam beach near Thiruvananthapuram in Kerala.

Though I was not supposed to enter temples before December 2024, I made it a point to take pictures from outside without entering the temple. This way I covered the Richest Temple in the world of Sri Ananthapadmanabha Swami in Thiruvananthapuram, Azhimala Shiva Temple, Chenkal Shivalinga on 31st March and 5th April, 2024. Car driver gave us a bonus by taking us to Light House in Vizinjam. Adani is developing the port to beat Singapore Harbour.

(Since I have written about all these temples in my TAMIL book 108 Famous Temples in Kerala, I give the details only in English)

Tallest Shivalinga Near Trivandrum (Thiru Anantha Puram)

It is very near Thiruvananthapuram city.

Located in: Chenkal Maheswaram Sri Shiva Parvathy Temple

Address939X+72R, Chenkal, Kerala 695132, India

Hours

Closes at⋅ 8 pm ⋅ Opens 8 am

Phone: +91 94963 66316

Kerala now has one of  the tallest Shiva lingams in the country after the India Book of Records certified the 111.2-feet structure of Maheshwaram Sri Shiva Parvathy Temple at Chenkal in Thiruvananthapuram district.

The cylindrical structure has eight floors, six of which represent chakras or energy centres of the human body. Temple authorities are now hoping the shiva lingam will enter the Limca and Guinness Book of Records.

Pilgrims would be able to see a ‘kailasam’, a replica of Himalayas, and idols of Shiva and Parvati from the top of the shiva lingam. The pathway is adorned with murals and statues with 108 shiva lingams on the base floor.

It is the only temple in the world, where devotees can worship 12 Jyothirlingam of Lord Shiva and 32 forms of Lord Ganesha at one place.

(Which is the tallest Shivalinga in the world?

Maha Mrityunjay Temple is a Hindu Temple dedicated to Hindu God Shiva, situated in Nagaon, Assam, India. This Temple is special in its architectural sense as it is built in a form a Shivling. It is the World’s largest Shivalinga, at the height of 126 foot.)

xxxx

Aazhimala Shiva Temple

The Aazhimala Shiva Temple is a Hindu temple located on the coast of the Arabian Sea near Vizhinjam in the Thiruvananthapuram district of Kerala, India. Dedicated to Shiva, the temple is known for the 18 m tall Gangadhareshwara sculpture, which is the tallest Shiva sculpture in Kerala

AddressMulloor PO, Poovar to vizhinjam road before Pulinkudi jn then, Azhimala Temple Road, Kerala 695501, India

Hours

Closes  ⋅ 8 pm ⋅ Opens 5:30 am Mon

Updated by this business 3 weeks ago

District: Thiruvananthapuram

Phone: +91 471 226 8422

The temple is dedicated to Lord Shiva and is believed to have mythological connections with the Pandavas. According to local beliefs, this was the place where the Pandavas, the five brothers from the Indian epic Mahabharata, spent some time during their exile.

 According to folklore, when Panchali was thirsty, Bheema created a freshwater stream by making a hole in a rock with his knees to quench her thirst.

The massive structure with Shiva’s hair flowing in the wind and holding Goddess Ganga has a charm of its own and lends a magnificent appeal to the temple. The sculpture was created by a 29-year-old artist P. S. Devadathan who is a native of Azhimala.

The sculpture of Lord Shiva in the Gangadhareshwara figure, with his hair flying in the wind and holding Goddess Ganga, in the Azhimala Siva Temple in the district of Thiruvananthapuram is a sight to behold.

The temple is noted for its 58-ft-tall statue of Lord Shiva in the Gangadhareswara form, all made in concrete. Construction of the sculpture started on 2 April 2014 and was completed and opened to the public on 31 December 2020

xxxx

Vizhinjam Lighthouse (Kovalam Lighthouse)

Vizhinjam Lighthouse or Trivandrum Lighthouse is situated near Kovalam beach in Kerala. It started functioning on 30 June 1972. Vizhinjam was a busy seaport in the eighteenth and nineteenth centuries. Before the current light was installed, there were no lighthouses at this location.

Potential to compete with Singapore’: How Adani Group’s Vizhinjam Port is a maritime game changer for India

The port can handle megamax container ships with a capacity of over 24,000 TEUs that are used for long-haul international shipping routes

The tower is cylindrical with a height of 36 meters. The paint markings are red and white bands. The lighthouse is equipped with metal halide lamps and direct drive mechanism.[4] The light source was modified on 30 April 2003.

  • Vizhinjam Port is set to transform the country’s port infrastructure by creating the capacity to handle ultra-large ships.
  • Currently, the major transshipment hubs are the ports of Singapore, Shanghai, Busan, and Jebel Ali near Dubai
  • In 2022–23, India’s exports reached $770.18 billion, with imports at $892.18 billion.

—subham—

Tags- My visit, Chenkal, Tallest Shivalinga, Azhimala, Large Shiva statue, Vizhinjam, Light House, Thiruvanantha puram, Temple, Kerala visit, Adani port

ஆளுயர சந்தன அனுமார்! திருவனந்தபுரம் பாலஸ் மியூசிய அதிசயங்கள்- 7 (Post. 13,164)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,164

Date uploaded in London – –   21 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ஆளுயர சந்தன அனுமார், 

 Choza Bronzes,ஐம்பொன் சிலைகள், பஞ்ச லோக விக்கிரகங்கள் 

, மார்பிள் , பளிங்கு சிலைகள்,

—subham—

tags– திருவனந்தபுரம்,  பாலஸ் மியூசிய அதிசயங்கள்- 7, மார்பிள் , பளிங்கு சிலைகள், ஐம்பொன் சிலைகள், பஞ்ச லோக விக்கிரகங்கள் , Choza Bronzes, Idols, Marble statues,

பாம்புக் கடியைத் தீர்க்க உதவும்  200 மூலிகை மருந்துகள் -1 (Post No.13,163)

Acorus calamus- VASAMBU in Tamil

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,163

Date uploaded in London – –   21 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

உலகம் முழுதும் பாம்புக் கடியால் இறக்கும் மனிதர்கள் பல்லாயிரம் பேர் என்றாலும் இந்தியாவில்தான் அதிகம் பேர் பாம்புக்கு கடி விஷத்தால் இறக்கின்றனர். ஆண்டு தோறும் 11,000 பேர் இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.ஆனால் கடிபடும் மனிதர்கள் எண்ணிக்கை 81,000; அத்தனை பேரும் இறப்பதில்லை; ஏனெனில் பெரும்பாலோர் விஷமில்லாத பாம்புகளால்தான் கடிக்கப் படுகின்றனர். ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் , பாம்புக் கடியை முக்கியமாக எடுத்துக்கொண்டு பல சிகிச்சை முறைகளை எழுதியுள்ளன . சரக சம்ஹிதை என்னும் சம்ஸ்க்ருத நூலில்தான் அதிக விஷயங்கள் கிடைக்கின்றன. சரகர் 24 சிகிச்சை முறைகளைக் கூறுகிறார்

பாம்புக்கடி சிகிச்சை முறைகளைக் கூறும் ஏனைய நூல்கள் -சுஸ்ருத சம்ஹிதை, அஷ்டாங்க சம்கிரக , அஷ்டாங்க ஹ்ருதய . 

வாக் பட்டர் எழுதிய அஷ்டாங்க சம்க்ரஹ நூலில் பாம்புகளை திவ்ய, பெளம என்ற இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார். வாசுகி, தக்ஷ என்பனவெல்லாம் திவ்ய/ தெய்வீக  பாம்பு வகைகள் .

பெளம பாம்பு வகைகளை சுஸ்ருதர் மேலும் ஐந்து துணை/ உப வகைகளாகப் பிரிக்கிறார் ; நவீன காலத்தில் இரண்டே பிரிவுகள்தான்- விஷமுள்ள பாம்புகள், விஷமற்ற பாம்புகள் .

ஆயுர்வேதத்தில் எட்டு அங்கங்கள் (பிரிவுகள் ) உண்டு. அதில் அகத் தந்திரம் என்ற பகுதி பாம்பு, தேள், பூச்சிகள் விஷக்கடி பற்றி விளம்புகின்றது.

xxxx

உலகத்தில் 3150 பாம்பு வகைகள் இருக்கின்றன. இவைகளில் 600 மட்டுமே விஷப்பாம்புகள் . இந்தியாவில் 216 பாம்பு வகைகள் இருக்கின்றன. அவற்றில் 60 மட்டுமே விஷத் தன்மை கொண்டவை. உலகம் முழுதும் ஆண்டு தோறும் பாம்பு  கடித்ததனால் இறப்பவர்கள் எண்ணிக்கை 1,25,000. இந்த புள்ளி விவரங்களை உலக சுகாதார ஸ்தாபனம் தொகுத்து,  இந்தப் பிரச்சினை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது . பெரிய நகரங்களில் பாம்புக்கடிக்கு சிகிச்சை தரும் நவீன மருந்துகள் கிடைக்கின்றன. ஆயினும் பாம்புக்கடி நிகழ்வதோ கிராமப்புறங்களில்தான்.

இந்தியா , நேபாளம் , இலங்கை மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் மூலிகைகள் அதிகம் பயன்படுகின்றன. இவற்றில் சுமார் 70 மூலிகைகள் அறிவியல் ரீதியிலும் நிரூபிக்கப்பட்டுள்ளன

மூலிகை மருந்துகள் சிகிச்சை தருவதோடு, கடிபட்ட மக்களுக்கு மனத் தெம்பையும் நம்பிக்கையையும் உண்டாக்குகின்றன. ஏனெனில் கடித்த  பாம்பு விஷப் பாம்பா இல்லையா என்று அறியாமல் பீதியாலும் பயத்தாலும் பலரும் திகைத்து கண்டபடி செயல்படுகின்றனர் . முறையான வைத்தியர்கள் இருந்தால், முதலில் விஷம் உடலில் பரவாமல் தடுக்க துணிக்கட்டு போடுகின்றனர். பின்னர் விஷத்தை உறிஞ்சி எடுக்க பல்வேறு முறைகளைக் கையாளுவர் .

இந்தக் கட்டுரையில் உலகம் முழுதும் பயன்படும் விஷக்கடி மூலிகைகளின் பட்டியலைக் காண்போம்.

xxxxxx

 நாயுருவி

Angiosperms பூக்கும் தாவரங்கள்

குடும்பம் – அகாந்தேசி ; தாவரத்தின் பெயர் அகாந்தஸ் இலிசிபோலியஸ்

1. Family: Acanthaceae 1. Acanthus ilicifolius L.

தமிழில் கழி முள்ளி ; பிச்சாவரம் பகுதிகளில் விளைகிறது. ; ஒரிஸ்ஸாவில் இதை ஹரகாஞ்ச என்பர்

பிச்சாவரம் மக்கள் இந்த தாவரத்தின் பழங்களை நசுக்கி பாம்பு கடித்த இடத்தில் வைத்து கட்டுகின்றனர்

xxxx

ஆடாதோடா வசிகா

2. Adhatoda vasica Nees (Justicia adhatoda L.)

பாகிஸ்தானில் இதை கொல் யார் சாக் என்கிறார்கள் .

ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என மருவி பெயர் பெற்றுள்ளது. இதை மலபார் நட்  என்றும் அழைப்பர்

xxxx

3. Andrographis paniculata (Burm. f.) Wall. ex Nees

ஆண்ட்ரோ கிராபிஸ் பணிக்குலேட்டா

அருணாசல பிரதேச மக்கள் இதை ஹிரோடா என்கிறார்கள்

இதை மத்திய இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் வேறு சில மூலிகைகளுடன் சேர்த்து பயன்படுத்துகின்றனர் .விட்டுணுக்கிராந்தி ஈச்சுரமூலி ishvara-muli, மாம்பாஞ்சான் mampancan, பெருமருந்து peru-maruntu •என்னும் அரிஷ்டலோகியா இன்டிகாவுடன் பயன்படுத்துகிறார்கள் . இலைகளைப் பொடித்து உண்ண வைக்கிறார்கள்; மத்திய இந்தியாவில் பொடிகள் சேர்த்து அரைத்து களிம்பை கடித்த இடங்களில் வைத்துக் கட்டுகிறார்கள் சர்ப்பகந்தி, கருடக்கொடி மூலிகைகளையும் சேர்த்துக் கொள்ளுவர்

xxxx

பார்லேரியா கிறிஸ்டாடா

 4. Barleria cristata L.

Vernacular names: Tadrelu, Bansa siyah (Margallah Hills National Park, Islamabad, Pakistan)

பாகிஸ்தானில் அதிகம் உபயோகிக்கின்றனர்

xxxx

5. Elytraria acaulis (L. f.) Lindau

எலித்ராரிய அகாலிஸ்

மத்திய பிரதேச சித்திரகூட மக்கள் இதை சஹஸ்மூரிய  என்று சொல்கிறார்கள் பழங்குடி மக்கள் இந்த தாவரத்தின் வேரை மிளகுடன் சேர்த்து அரைத்து பசையாக்கி  கடிபட்ட காயங்களில் வைத்துக் கட்டுகின்றனர் .

Vernacular name: Sahasmuria (Chitrakoot, Madhya Pradesh, India)

xxxxx

6. Lepidagathis cristata Willd.

லெபிடாகதிஸ்  க்ரிஸ்டாடா

Vernacular name: Siyarbethca (Chitrakoot, Madhya Pradesh, India)

மத்தயப் பிரதேச சித்திர கூடம் பழங்குடி மக்கள் இதை மயில்துத்தம் என்னும் காப்பர் சல்பேட்டுடன் இலையின் ரசத்தைக் கொடுக்கின்றனர். இதை மூர்ச்சை தெளிவிக்க பயன்படுத்துகிறார்கள்.

xxxxx

7. Peristrophe paniculata (Forssk.) Brummitt

பெரிஸ்ட்ரோப்  பணிக்குலேடா

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆள்வார் ஜில்லா மக்கள் செடி முழுதையும் மசித்து சோற்றுடன் உண்ணுகிறார்கள்

This plant (common name: Atrilal) அத்ரிலால் என்பது வட்டார பெயர்

xxxxx

8. Thunbergia grandiflora Roxb.

துன்பெர்ஜியா க்ராண்டிப்லோரா

To treat snakebites, this plant is used with other plants by the Karbi tribes of Assam, India (Teron, 2005).

அஸ்ஸாமின் கரீபி இன மக்கள் இதைப் பாம்புக்கடி சிகிச்சையில்  உபயோகிக்கின்றனர்

xxxx

9.குடும்பம் — அகோரேசி / வசம்பு

F2. Family: Acoraceae 9. Acorus calamus L.

Vernacular name: Skha waja (Buner, NWFP, Pakistan)

வசம்பு (Acorus calamus, Sweet Flag அல்லது Calamus) .இது பேர் சொல்லா மருந்து, பிள்ளை வளர்த்தி, மற்றும் உரைப்பான் என்றும் அழைக்கப்படுகிறது.

பாகிஸ்தான், மற்றும் இந்தியாவில் கோண்ட் மற்றும் கோர்க்கு இன மக்கள் வசம்பை பயன்படுத்துகின்றனர்

xxxx

10.குடும்பம் – அமராந்தேசி / நாயுருவி

F3. Family: Amaranthaceae 10. Achyranthes aspera L.

அகிரான்தஸ் ஆஸ்பெரா

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம்  முழுதும் இந்தத் தாவரம் எதாவது ஒருவகையில் பயன்படுத்தப்படுகிறது

Inflorescence and seed paste is applied on the wounds by the rural people of Kanyakumari district, Tamil Nadu, India (Jeeva et al., 2006a).

கன்யாகுமரி மாவட்ட மக்கள் பூங்கொத்து, விதைகள் முதலியவற்றால் பசைபோல களிம்பு செய்து பாம்பு கடித்த இடங்களில் அப்புகின்றனர்

தொடரும்

—-subham—

Tags– பாம்புக்கடி, சிகிச்சை, 200 மூலிகைகள், சரக சம்ஹிதை, வாக்பட்டர் , அஷ்டாங்க சம்க்ரஹ

பெண்களே அழகுடன் முன்னேறுங்கள், சமுதாயத்தை முன்னேற்றுங்கள்!-1 (Post.13,162)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.162

Date uploaded in London – — 21 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலரில் சமீபத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

மேரி கேஆஷ் – பெண்களே அழகுடன் முன்னேறுங்கள்சமுதாயத்தை முன்னேற்றுங்கள்! – 1

ச. நாகராஜன்

 பெண்களை முன்னேற்றியவர்!

ஆணாதிக்கம் நிறைந்த சமுதாயத்தில் பெண்களும் முன்னேற வேண்டும் என்ற கூச்சலை நிறையப் பார்க்கிறோம்; ஆனால் பெண்கள் இன்னும் ஆணுக்கு நிகராக சம உரிமையை உலகளாவிய விதத்தில் எல்லா நாடுகளிலும் பெறவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

பெண்களின் அழகுக்கு அழகூட்டி, மெருகை ஏற்றி அவர்களது தன்னம்பிக்கையை மேம்படுத்தி லட்சக்கணக்கானோரை ஆயிரக் கணக்கில் சம்பாதிக்க வைத்த பெருமை ஒரு பெண்மணியைச் சேரும். அதுவும் இந்த மகத்தான காரியத்தை அவர் ஓசைப்படாமல் செய்தார். அவர் தான் மேரி கே ஆஷ்.

பிறப்பும் இளமையும்

மேரி அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஹாட் வெல்ஸ் என்ற இடத்தில் 1918ஆம் ஆண்டு மே மாதம் 12ம் நாள் பிறந்தார்.

தந்தை எட்வர்ட் அலெக்ஸாண்டர். தாயார் லுலா வெம்பெர் ஹேஸ்டிங்ஸ் வாக்னர்.

லுலா ஒரு சிறந்த நர்ஸ். பின்னால் பெரிய உணவு விடுதி ஒன்றின் மேலாளராக ஆனார். ஹூஸ்டனில் படித்த மேரி பட்டம் பெற்றார். 17ஆம் வயதிலேயே மணம் முடித்து மூன்று குழந்தைகளையும் பெற்றார். இரண்டாம் உலகப் போரில் பணி புரிந்த அவரது கணவர் போர் முடிந்தவுடன் திரும்பி வந்தார். விவாக ரத்து ஆனது. பின்னர் அவர் ஜார்ஜ் என்பவரை மணந்தார்.

முதலில் வீடு வீடாகச் சென்று புத்தகங்களை விற்க ஆரம்பித்தார் அவர். பின்னர் வீடுகளுக்குத் தேவையான தயாரிப்புகளை வீடு வீடாகச் சென்று விற்கலானார்.

சோதனை வந்தது

ஒரு நாள் அவரை ஒதுக்கி விட்டு அவரால் பயிற்சி கொடுக்கப்பட்ட ஒருவருக்கு பதவி உயர்வு தரப்படவே மனம் வெறுத்துப் போனார் அவர். அப்போது அவருக்கு வயது 45.

1963இல் கம்பெனியை விட்டு வெளியேறிய அவர், பெண்கள் வணிகத்தில் எப்படி முன்னேறலாம் என்று ஒரு புத்தகத்தை எழுதினார்.

ஆனால் ஆச்சரியப்படும் விதத்தில் அந்தப் புத்தகம் அவருக்கே வணிகத்தை ஆரம்பிக்க உத்திகளைக் கற்றுக் கொடுத்தது; அவர் கணவர் ஜார்ஜுடன் ப்யூடி பை மேரி கே என்ற நிறுவனத்தை 1963இல் ஆரம்பித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கணவர் மாரடைப்பினால் அதே வருடம் மரணமடைந்தார். மேரி தனது மூத்த பையன் பென் ரோஜர்ஸிடமிருந்து 5000 டாலர் வாங்கினார்.

மேரி கே காஸ்மெடிக்ஸ்

மேரி கே காஸ்மெடிக்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவி

துணிந்து தனது விற்பனையை ஆரம்பித்தார். பெண்களுக்கான ஒப்பனைப் பொருள்களை அவரே தயாரித்தார். அத்தோடு பெண்களை உயரிய நிலைக்கு உயர்த்த வேண்டும் என்பதும் அவரது திட்டமாக ஆனது.

ஆகவே விற்பனையில் தனக்கென ஒரு புதிய உத்தியை அவர் மேற்கொண்டார். நேரடி விற்பனை முறை தான் அது! வீடு வீடாகச் சென்று வாடிக்கையாளர்களைச் சந்தித்து அவருக்கே உரித்தான படி அழகு சாதனப் பொருள்களைச் சுட்டிக் காட்டி அவர்களை அலங்கரித்து பின்னர் விருப்பமிருந்தால் தனது பொருள்களை அவர்களை வாங்க வைப்பது தான் அவரது வழி!

தனது ஒப்பனைப் பொருள்களை விற்பதற்கு பல பெண்களை அவர் பயிற்றுவித்தார். அவர்களை தனது சொந்த மகள்களாகவே அவர் பாவித்து அனைத்தையும் கற்றுக் கொடுத்தார்.

தாய் தந்த ஊக்கம்

கடுமையான போட்டி மிகுந்த சந்தையில் அவருக்கு ஏற்பட்ட சோதனைகள் பல. ஆனால் அப்போதெல்லாம் அவர் தனது தாயார் தன்னிடம் கூறிய சொற்களை நினைவு கூர்வார் மேரி.

அவர் தாயார் அவரிடம் கூறிய சொற்கள் : “உன்னால் முடியும் மேரி!”

மெல்ல மெல்ல வளர்ந்த நிறுவனம் அவருக்கு 980லட்சம் டாலரை ஈட்டித் தந்தது. 120 கோடி டாலருக்கும் மேலாக விற்பனை அதிகரித்தது. 80000 பேர் அவரிடம் வேலை பார்த்து முன்னேறினர்.

இன்று 46 நாடுகளில் அவரது தயாரிப்புகள் பெருமளவில் விற்பனை ஆகின்றன. (அமெரிக்க டாலரின் இன்றைய மதிப்பு ஒரு டாலர் = சுமார் 83 ரூபாய்)

To be continued………………………

அரிய எம் எஸ் புகைப்படம்; திருவனந்தபுரம் பாலஸ் மியூசிய அதிசயங்கள்- 6 (Post No.13,161)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,161

Date uploaded in London – –   20 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

1942ம் ஆண்டில் திருமதி எம். எஸ். சுப்புலெட்சுமியும் அவருடைய கணவரும் கெளடியார் அரண்மனைக்கு விஜயம் செய்தனர் 

xxxx

சீன தத்துவ   ஞானி கன்பூசியஸ், Confucius 
—subham—-

tags-  MS rare picture, Palace Museum, Thiruvananthapuram & Marthandavarma Chitralayam – Rare Pictures 6 , திருவனந்தபுரம், பாலஸ் மியூசியம், அதிசயங்கள் 6

பாலஸ் அதிசயங்கள் , பஞ்ச லோக விக்கிரகங்கள் , ஐம்பொன் சிலைகள், எம் எஸ் சுப்புலட்சுமி , அரிய  புகைப்படம்  ,, சீன தத்துவ   ஞானி கன்பூசியஸ்,

Cure for Scorpion Bites! (Post No.13,160)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,160

Date uploaded in London – –   20 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Magician , Father of Chemistry, Mahayana Buddhism Founder, Philosopher and author of many books, Nagarjuna, in his work Yogaratnamala deals with scorpion bites and malarial fever. We were lucky to get all his books from China, because Chinese students of Nalanda University translated them into Chinese 2000 years ago. Nagarjuna was the V C of the university at that time. Muslims burnt down the Nalanda University and its huge library 1300 years ago and Hindus lost all its literary treasures. Now we are translating them back into Sanskrit and English.

xxx

To cure Malaria

On tying to hand or wrist by a string oven by an unmarried girl, seven pieces of the root of Bala collected as per the previous terms, the chaturthaka fever appearing on every fourth day disappears.

xxxx

As per the previous terms , collect the roots of Gojihva (Onasma bracheutum) at the time of midday on 14th day of dark fortnight (Krishnapaksha Chaturdasi) and take it with butter milk, the chaturdak fever eventhough it may be most severe soon disappears.

Onosma bracteatum – Wall.

Common Name 
FamilyBoraginaceae
USDA hardinessComing soon
Known HazardsNone known
HabitatsRocky slopes in dry areas, 3300 – 5000 metres[51].
RangeE. Asia – Himalayas from Uttar Pradesh to C. Nepal. Xxxxx  

Scorpion bites

On application of the paste prepared out of the insects of Arka (calotropis ; Erukku in Tamil), the dung of a house iguana/lizard, Manashila (Dioxide of Arsenic), Haritaki (Terminalia chabula; Kadukkay in Tamil), with oil, the poison of a scorpion disappears.

xxxx

Apply the milk of Arka (Calotropis; Erukkam in Tamil) to the seeds of Palasa (Butea Hrondosa; kalyana murungai in Tamil) 21 times and get the seeds powdered. On application of this paste with oil the poison of a scorpion disappears.

xxxx

Prepare a pill out of the root of the northern part of a pomegranate tree and beef with water, on touching the affected part with this pill the poison of a scorpion disappears.

Mix together the root and oil of Ankola (Alanghium; Azinjil tree in Tamil), root and oil of Pomegranate tree, the root of Jambhu tree (Naaval in Tamil)  and oil with equal quantity of honey and sugar and prepare a pill out of these. By touching this pill the poison of a scorpion disappears.

xxxx

Note – one should bear in mind that the mention of Ankola (Alangium) oil, Pomegrantae oil, Jambu oil is made here, but the process of their preparation is not found in the book. Therefore one should always take care to prepare them in accordance with the general process made in Ayurveda. Take one fourth of the ingredients with sixteen times water and prepare the required oil with their paste and the decoction. And with this method, all sorts of oils are to be prepared.

xxxx

Wet clothes

Mix the ashes that are available in the forest and the powder of the seeds of the Sravanika(Mundee) with water and prepare a lepa. On application of this lepa to the body,  a man can travel in rains without being affected by water. I.e. he does not become wet.

xxxx

Making the effaced letters visible

if you write letters on a picture with a paint prepared out of the juice of the Asvatta or Arka (Arsa maram or Erukku in Tamil) on a picture and let them dry. The letters are not visible to others. They become visible only when you pour water over them.

—Subham—

Tags- Scorpion, bites, cure, malaria, Nagarjuna, yogaratnamala