முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 24 (Post No.13,159)

 WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,159

Date uploaded in London – –   20 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

மூலிகை Part 24

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—24

246 . குழந்தைகள் இருமலுக்கு

குண்டுமணி வேரைக்கொண்டுவந்து புது வேராய்ப் பார்த்து இரண்டு அவுன்சு எடுத்து சிதைத்து அரைப்புட்டி ஜலத்தில் போட்டு அரை மணி நேரம் வரை வேகவைத்து வடிகட்டி அதில் எட்டவுன்சு கற்கண்டாவது தேனாவது கலந்து மறுபடியும் அடுப்பேற்றி காய்ச்சி பாகுபதத்தில் இறக்கி வைத்துக்கொண்டு ஒரு வேளைக்கு  தேக்கரண்டி வீதம் ஒரு நாளைக்கு 4-5 வேளை கொடுக்கலாம். இருமல் சாந்தியாகும்  குண்டு மணி வேருக்கு நாட்டு அதிமதுரம் என்ற பெயருமுண்டு.

XXXX

குழந்தைகள் வாய்ப்புண்ணுக்கு

குண்டுமணியின் இலையின் சாற்றை கு ழந்தைகள் வாயில் வெள்ளை நிறமாகக் காணும் புண்களுக்கு கொஞ்சம் தடவி விட்டால் குணமாகும்.

XXXX

குழந்தைகள் மாந்தத்திற்கு

பொதுப் பிரயோகம்

குட்டி விளாம்பாலையை வதக்கி சாறு பிழிந்து ஆமையோடு வசம்பு இரண்டும் சுட்டுக் கரியாக்கி பொடி செய்து கொஞசம் போட்டுக் காய்ச்சி 1 அல்லது 2 சங்கு வீதம் மூன்று வேளை கொடுக்க சகலமும் சாந்தியாகும்

XXXX

கூ

கூந்தல் குதம்பையிலையைப் பாலில் அரைத்துக் கலக்கியுட்கொண்டுவந்தால் குலையைப் பற்றிய ரோகமும் ஜென்னிபத ரோகமும் மகா வைத்த ரோகமும்ஒழு க்கும் பித்தத்தை விருத்தி செய்யும் கிரமப்படி உபயோகித்தால் மண்டூரத்தை செந்தூரிக்கும்

கூழைக் கிழங்கு

மேனியிடும் வாய்க்கு மிருதுவாகு மாக்கியுண்டால்

தானிருமல்  வெப்பதிக தாகமில்லை — யேனிருக்கு

மம் பேரிளங் கிழங்கு யாவருக்கு மாணப்பூங்

கொம்பே கூழைக்கிழங்கைக்  கூறு

கூழைக்கிழங்கை சமைத்து உட்கொண்டுவந்தால் தேக புஷ்டியுண்டாகும் இருமல் , சுரம் தாகம் இவைகளை போக்கும்;  தின்பதற்கு இனிப்பாகவும் வாய்க்கு உணவாகவுமிருக்கும் .

XXXX

கெ


இரத்த வெள்ளைக்கு

கெச்சக்காய் = கழற்சிக்காய்

கெச்சக்காயிலையை இடித்து சாறு பிழிந்து அரைப்பல ம் எடுத்து அரையாழாக்கு தயிரில் கலந்து காலையில் கொடுக்கவும் . சிறு லவங்கப்பட்டையை அரைத்து களஞ்சிக்காயளவு மாலையில் கொடுக்கவும்.

கடும் பத்தியமிருக்கவும் ; இப்படி 3 அல்லது 5 நாள் கொடுக்கவும் .

XXXX

விரை வாதத்திற்கு

கெச்சக்காய் = கழற்சிக்காய்

கெச்சக்காய் பருப்பு 4 எடுத்து கோழிமுட்டை வெள்ளை அம்பில் விட்டு அரைத்து வடைபோல் தட்டி ஒரு பலம் சித்தாமணக்கெண்ணெய் அடுப்பிலேற்றி மேற்படி வடையைப்போட்டு நண்ராய்ச் சிவக்க சுட்டு எடுத்து அதி மாலை யில் அந்த வாடையைத் தின்றுவிட்டு அதில் மிஞ்சியிருக்கும் எண்ணெயைக் குடித்து விடவும். 5-6 விசை பேதியாகும் . இச்சா பத்தியம் . இப்படி மூன்று நாள் கொடுக்கவும் .

XXXX

விரை வீக்கத்திற்கு

கெச்சக்காயிலையை துளி விளக்கெண்ணெய் விட்டு வதக்கி விரையின் மேல் வைத்துக் கட்டி வைக்கவும். காலியில் பே திக்கு சாப்பிடவும் .

கெச்சக்காய் = கழற்சிக்காய்

XXXX

கே

254- கேணி  ஜலம்

ஆசாரக்கேணி நீரருந்த வதிதாகம்

வீசாகச் சூடு பசி மெய்க்காந்தல் — மாசூலை

மெய்யுள் வலிசந்  துளைப்பு வீழ்  மயக்கம் சோகை பி த் தம்

பையவரு மிணையும் பார்

கேணி என்னும் குற்றமில்லாத கிணற்று ஜலத்தை அருந்துவதினால் மிகுந்த தாகம்– உஷ்ணம்– தீபனம் –தேக அழலை—சரீரத்துட்  கடுப்பு– இடுப்பு குடைச்சல் –மயக்கம் — வீக்கம்– பித்தகோஷம் — சுவாசம் இவை நீங்கும்- கண் பிரகாசம் கொடுக்கும் — ஆனால் நீடித்து அருந்த வேண்டும் .

–சுபம்–

Tags- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 24, கெச்சக்காய், கழற்சிக்காய், குண்டுமணி, கேணி  ஜலம்

உழுது பயிரிடுதல் நன்று : அனைத்து தெய்வங்களும் உதவிக்கு வரும்! (Post No.13,158)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.158

Date uploaded in London – — 20 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

உழுது பயிரிடுதல் நன்று : அனைத்து தெய்வங்களும் உதவிக்கு வரும்! 

ச.நாகராஜன் 

உழவுத் தொழிலை விட மேலானதொரு தொழில் இல்லை. உழவர் முன்னே சொல்ல அவரைத் தொழுது உண்பவர் எல்லாம்  அவர் பின்னே செல்வர்.

ஆனால் உழுவதற்கு உதவி வேண்டுமே!

இதோ உதவி செய்யத் தயார் என்று ஒரு தெய்வ பட்டாளமே வருகிறது.

யார் யார் பார்ப்போமா?

திருமால் நிலத்தை அளிப்பான்.

சிவபிரானின் தோழனாகிய குபேரன் வித்தையைத் தருவான்.

பலராமன் கலப்பையைக் கொடுத்து  உதவுவான்.

யமன் எருமைக் கடாவைத் தருவான்.

முத்தலை சூலத்தைக் கொழுவாக்கிக் கொள்ளலாம்.

வடக்கயிறு முதலியவற்றை அன்பர் தருவர்.

முருகன் இருக்கிறானே, அவன் மாடு மேய்த்து உதவுவான்.

ஆக இனி உழுது பயிரிடுதலே நன்று.

யாராவது இரந்து யாசித்து உண்ணுவார்களா?

(இது நல்ல காரியம் என்று சொல்லி பரமசிவன் உம்மைக் காக்கக் கடவன்.)

இதை எழுதி அருளியது சிவப்பிரகாச சுவாமிகள்.

பாடலைப் பார்ப்போம்:

அச்சுத தனளிப்பினில முமதுநேயன் வித்தையருளுவன் பலபத்திரன்,

    அலமுதவுவன்சமன் பகடீவனந்தமக் காளதோ ரெருது முண்டே,

முச்சிரவயிற் படையினைக் கொழுவதாக்குவே மொம்புடனிழுத்திறுக்க,

  முந்தியவடகயிற்றுடன்மற்று நமன்தமர் முன்போயிரந்து கொள்வோம்

இச்சையுடை நமதிளைய தனயனாகிய கந்தனி னிமையொடு

    மாடுமேயப்பான்

   இனியுழுது பயிரிடுதல்நன்றுநன் றிதைவிட் டிரந்துண்ப தீனமெனவோ

     கச்சுமுலை மாதுமையுரைத்திடும் புத்தியைக் கைக்கொண்

      டுளத்திலிதுநற்,

காரியமெனக் கருதி  மெத்தக்களித்திடுங் கண்ணுதலுமைக் காக்கவே.

பாடலின் பொருள்:

அச்சுதன் -திருமால்

நிலம் அளிப்பன் – நிலத்தைத் தருவான்

உமதுநேயன்  – உமது தோழனாகிய குபேரன்

வித்தையருளுவன் – வித்தையை அருளுவான்

பலபத்திரன் – பலராமன்

அலம் உதவுவன்  – கலப்பையைக் கொடுத்து உதவுவான்

சமன் பகடு ஈவனன் – யமன் எருமைக் கடாவைக் கொடுப்பான்

நந்தமக்கு ஆளதோர் எருதும் உ\ண்டே, – நமக்கு ஆளாயிருப்பதாகிய எருதும் உண்டே

முச்சிரம் அயில் படையினைக் கொழுவதாக்குவோம் – முத்தலை சூலத்தை கொழுவாக ஆக்கிக் கொள்வோம்

மொம்புடன் இழுத்து இருக்க – வலிமையுடன் இழுத்து இறுக்க

முந்தியவடகயிற்றுடன் – முதன்மையாகிய வடக் கயிற்றுடன்

மற்றும் – மற்று நாம் வேண்டுவன யாவற்றையும்

நமன் தமர் முன்போய் இரந்து கொள்வோம் – நமது அன்பரிடத்துச் சென்று கேட்டு வாங்கிக் கொள்வோம்

இச்சையுடை – விருப்பத்தை உடைய

நமதிளைய தனயனாகிய கந்தன் இனிமையொடு மாடு மேயப்பான் – நமது இளைய குமாரனாகிய கந்தன் இனிதாக மாடு மேய்ப்பான்

இனி உழுது பயிரிடுதல் நன்று நன்று – இனி உழுது பயிரிடுதலே நல்லது, நல்லது

இதை விட்டு இரந்துண்பது ஈனம் – இதை விட்டு யாசித்து உண்பது இழிவே

கச்சு முலை மாது உமை உரைத்திடும் புத்தியை – கச்சணிந்த மார்பகங்களை உடைய உமாதேவி சொல்லும் புத்தியை

கைக்கொண்டு   ஏற்றுக் கொண்டு

உளத்தில் இது நற்,காரியமெனக் கருதி  – மனதில் இது நல்ல காரியம் என்று கருதி

மெத்தக்களித்திடும் – மிகவும்  மகிழ்கின்ற

 கண்ணுதல் – நெற்றிக்கண்ணை உடைய சிவபிரான்

உமைக் காக்கவே – உங்களைக் காக்கக் கடவன்.

விளையாட்டாக ஆரம்பித்து முக்கிய கருத்தை வலியிறுத்தி இறையருளை வேண்டி சிவபிரான், பார்வதியின் அருள் கிடைப்பதை சிவபிரகாச சுவாமிகள் உறுதி செய்யும் விதமே தனி!

***

Magic Sex Tips by Nagarjuna (Post No.13,157)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,157

Date uploaded in London – –   19 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

World famous philosopher cum magician describes many magic sex formulas in his book Yogaratnamala, that was found in China and retranslated into Sanskrit. The book is at least 2000 years old.

All the following tips look like practical jokes; but the Chinese took the book in translation before 2000 years. Nagarjuna was the Vice Chancellor of Nalanda University in Bihar at that time. Later the Muslims burnt down the university along with its huge library. That was burning for 7 days according to historians.

All the 140 slokas were translated into English by Dr Pushpendra Kumar of Sanskrit Department of Delhi University. Book Title- Nagarjuna’s Yogaratnamala.

(Better not practise these without proper supervision; but research is welcome to find out the truth. Famous Tamil hymn — S/Kanda Sashti Kavacham, Atharvana Veda etc also confirm the existence of Voodoo procedures)

xxxx

Keeping in mind the couple on cohabitation, if a man puts a piece of the inside bone of a dead man into the hole of a throat bone of a camel, the organ of the male does not come out from the uterus of the female. On removal of the bone from the hole, the organ comes out from the uterus.

xxxx

Contraction of Uterus

pounder together Girikarnika, Indragopa (Thampala Poochi in Tamil), Satapadika, Sahasrapadika (Centipedes, Millepedes) and Arka. On application of this powder, the uterus becomes healed and contracted.

Xxxx

Widening of Uterus

On application of the dust that has dropped from the horns of a moving cow, the organ of a female becomes contracted and inaccessible. But on the paste prepared out of the rising horns of the cow, the organ becomes accessible.

xxxx

Fall of uterus

On crossing the urine (of woman??) mixed with the blood of a bimouthed snake, the uterus of the woman falls down and blood begins to flow continuously

(Bimouthed Snake- throughout the book Nagarjuna mentioned this Bimouthed Dundhuba snake. What is it? Snakes have split tongue. But Nagarjuna may mean creatures like Burmese Python which can devour whole deer, crocodiles etc. Their jaws open up to 76 cms)

xxxx

Collect the mud from both sides of a river and the hairs of a dog and a bitch that are on cohabitation. Then prepare pill out of those two. On thinking a person in mind, if this pill is put into the oil of Ankola tree (Azinjil in Tamil), then the man stands confined to that particular place wherever he stands at that time. On removal of that pill from the oil, he moves.

xxxx

Tiger! Tiger!!

Collect blood of a tiger, pieces of flesh of a tiger, Bhramara (bee), curd and lotus flower. Then preserve them in water pot for  seven days. On the seventh day a couple of tiger looking apparently, six month cubs , will come out.

xxxx

Collect the dung, blood, sperm and the bad substances of ear of a man and woman. Preserve this in water pot for 21 days. Cover it with the skin of a monkey. On the 21st day there appear a couple of man and woman.

xxxx

On putting a pot with Krikalasa under the ground near  the gate of a cowshed, the cows of that cow pen do not move and remain inactive even if they are beaten severely. On removal of the pot they rise and move.

Krikalasa= chameleon, garden lizard

xxxx

Trouble from Crows

Write the name of a person on a wing of a crow in the blood of a heart of a crow and with the wing as a pen  and keep this wing inside the faeces of a person. The man faces the disturbance caused by crows. On removal of this wing from the faeces that person gets relief .

Write the name of a person on a leaf of mango in the blood of a heart of a crow and keep this wing inside the faeces of a person. The crows disturb the person like anything. On removal of this leaf from the faeces he gets relief .

xxxx

Protecting earthen lamp

If you light a wick with the oil  extracted from the seeds of  mangoes , it burns very bright just like a gem and does not extinguish even though the wind blows in gale force.

— subham—

Tags- sex magic, Nagarjuna, tiger, lamp , crow trouble, Uterus, male organ, Tips

திருவனந்தபுரம் பாலஸ் மியூசிய அதிசயங்கள் – 5 (Post No.13,156)

விசாகம் திருநாள் ராம வர்மா துலா பாரம்; எடைக்கு எடை பொற்காசுகள் துலா பாரம் செய்தார் 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,156

Date uploaded in London – –   19 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 Palace Museum, Thiruvananthapuram & Marthandavarma Chitralayam – Rare Pictures 5 , திருவனந்தபுரம், பாலஸ் மியூசியம், அதிசயங்கள் -5

xxxx

 Maharajas of Travancore

Chitra Tirunal Balarama Verma

Moolam Tirunaal Maharaja

Maharani Sethu Lakshmi Bhayi

TAGS—

பாலஸ் மியூசியம், அதிசயங்கள், ஐம்பொன் , பஞ்சலோக , விக்கிரகங்கள், கணபதி, சிவன், விஷ்ணு, கஜலட்சுமி   விசாகம் திருநாள் ராம வர்மா,  துலா பாரம்

மேலும் மூன்று ராமாயண அதிசயங்கள்- பகுதி 2 (Post No.13,155)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,155

Date uploaded in London – –   19 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

பகுதி 2

நேற்று இதன் முதல் பகுதி வெளியானது

பெங்களூரில் அரிய ராமாயண படங்கள்

கர்நாடக மாநில தலைநகரமான பெங்களூரில் ‘மேப்’ Museum of Art & Photography (MAP) என்னும் மியூசியம் உள்ளது. அங்கு காஞ்சன (தங்கம்) சித்திர ராமாயணம் என்னும் புஸ்தகத்தில் எண்பது பக்கங்களை மட்டும் காட்சிக்கு வைத்துள்ளனர். அது பற்றிய விளக்கங்களை ஆடியோ /ஒலி மூலம் கேட்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

காசியில் உதித் நாராயணன் என்ற மன்னர் (Maharaja Udit Narayan Singh of Banaras) சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சன சித்திர ராமாயணத்தை புகழ்பெற்ற தங்க வினைஞர்கள் மூலம் உருவாக்கினார். ஏராளமான தங்கத்தையும் நீலக் கற்களையும் கொண்டு பக்கம் பக்கமாக அரிய  ராமாயணக் காட்சிகளை தத்ரூபமாக உருவாக்கினார். இதிலுள்ள பக்கங்கள் 500 க்கு மேல். ஆயினும் இதன் மதிப்பை  அறியாத பணத்தாசை பிடித்தவர்கள் அதை பக்கம் பக்கமாகப் பிரித்து விற்று வந்தனர். நல்ல வேளையாக  ரிச்சர்ட் சிக்னெர் என்ற நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் 1970ம் ஆண்டுகளில் புஸ்தகம் முழுவதையும் The book was documented in its entirety in the 1970s by Prof Richard Schechner of New York University, IN 1970s)

(எல்லா பக்கங்களையும ப டம் எடுத்து வைத்திருந்தார். இப்பொழுது மேப் M.A.P மியூசியம் அவற்றில் 80 பக்கங்களைக் காட்சிக்கு  வைத்துள்ளது.

இதன் சிறப்பினை அறிய உதவும் சில தகவல்கள்

ராஜஸ்தானில் மேவார் மஹாராஜா மஹாராணா ஜகத் சிங் இதே போல மேவார் ராமாயணாவை 17-ம் நூற்றாண்டில்  உருவாக்கினார் அதில் 450 ஓவியங்கள்தான் இருந்தன. ஆனால் காஞ்சன சித்திர ராமாயணத்திலோ 548 பக்கங்களில் ஓவியங்கள் உள்ளன. மேலும் ஒவ்வொரு பக்கத்திற்கும் எதிராக ராமாயணக் கதையும் எழுதப்பட்டுள்ளது .

இதை காக பூசுண்டி முனிவர் கருடனுக்குச் சொல்லுவது போல எழுதியுள்ளனர்.

ஒரு எடுத்துக்காட்டை  பாருல் சிங் எடுத்துக் காட்டுகிறார். அவரும் கவிதா சிங்கும் இந்தப் புஸ்தகத்தை  மேப் மியூசியம் மூலமாக 2023ல்  வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தினார்கள் . மேப் மியூசியத்தில் இதைக் கட்சியாக உருவாக்கிய கவிதா சிங் புற்றுநோயில் இறந்துவிட்டார். அவருக்கு உறுதுணையாக நின்றவர் , பிஎச். டி . மாணவர் பாருல்  சிங் .

ராவணனும் அங்கதனும் ஒருவருக்கு ஒருவர் சவால் விடுவதையும் ஏச்சுப்பேச்சு பேசுவதையும் 9 பக்கங்களில் படமாக வரைந்துள்ளனர். அதில் அவர்களுடைய முக பாவங்கள் எப்படி மாறுகின்றன என்பதைக் கண்டால் அவை எவ்வளவு தத்ரூபமானவை என்பது விளங்கும் என்கிறார் பாருல் சிங்.

இந்த நூலில் வர்ணனை உள்பட 1100 பக்கங்கள் உள்ளன. இதை 1796 முதல் 1814 வரை 18 ஆண்டுகளில் பல்வேறு கலைஞர்கள் வரைந்துள்ளனர் . வரிக்கு வரி தங்க வரிகள். தங்கத்தை அள்ளித்  தெளிக்க சிறிதும் தயங்கவில்லை . கலைஞர்களும் பல்வேறு பாணியைப் பின்பற்றுவோர் ஆவார்கள். இதனால் பலர் கைவண்ணத்தைக் காணமுடிகிறது .

இந்த நூல் துளசிதாஸ் எழுதிய ராமசரித மனஸ் நூலை அடிப்படையாகக்கொண்டு வரையப்பட்டுள்ளது.

மியூசியத்திலுள்ள படங்கள் 80ம், ஒரிஜினல் புஸ்தகத்திலிருந்த 548 படங்களிலிருந்து கிடைத்தவையாகும். இவைகளை விளக்கங்களுடன் புஸ்தகமாகவும் வெளியிட்டுள்ளது மேப் மியூசியம் பல்வேறு பாணியைப் பின்பற்றும் கலைஞர்கள் ஒன்றுகூடி இந்த புஸ்தகத்தை வரைந்தால் கலைஞர்களின் பார்லிமென்ட் உருவாக்கிய நூல் இது என்று கூறுகின்றனர் . கலைஞர்களின் பெயர்கள் இல்லையென்றாலும் படங்களை பார்த்தமாத்திரத்தில் அவை அவந்தி ஜெய்ப்பூர், மூர்ஷிதாபாத், டில்லி, லட்சுமணபுரி பகுதியிலிருந்து வந்தவர்கள் என்பது தெரிகிறது.

போர்க்களத்தில் லெட்சுமணன் மூர்ச்சையாகி விழுந்தவுடன் அனுமன், சஞ்சீவினி மூலிகையைக் கொண்டுவரும் காட்சி ஒரே படமாக வரையப்பட்டுள்ளது. பல ஓவியங்களில் நூற்றுக் கணக்கான கதா பாத்திரங்களையும் காணலாம். 18 ஆண்டுகளில் உருவான இந்தப் புஸ்தகத்துக்கு அந்தக் கால பணத்தில் ரூ 150,000 செலவழிந்தது. இந்தக் காலக் கணக்கில் அது பல கோடிகளாகும் . இந்த புஸ்தகம் வெளியானவுடன் மேலும் பல புஸ்தகங்களை, ஓவியங்களை அச்சிட பலரும் முயற்சித்தனர். ஆயினும் காஞ்சன ராமாயணத்தை  மிஞ்ச எவராலும் இயலவில்லை.

–subham—

Tags- மேப்’ மியூசியம் , Museum of Art & Photography (MAP) , காஞ்சன சித்திர ராமாயணம், ராமசரித மனஸ், காக பூசுண்டி முனிவர், மன்னர் உதித் நாராயணன், தங்கத்தில் ராமாயணம்

புராணத் துளிகள்! – 1; புராணங்கள் கூறும் வாழ்க்கை நெறிகள்(Post No.13,154)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.154

Date uploaded in London – — 19 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

புராணத் துளிகள்! – 1

ச. நாகராஜன்

புராணங்கள் கூறும் வாழ்க்கை நெறிகள் அபாரமானவை.

அவற்றில் சில:

 மத்ஸ்ய புராணம்

 இந்த லோகத்தில்  நல்ல குணம் மற்றும் செல்வத்தில் மேல் நிலை  ஒருவருக்கு மாத்ரு பக்தியினால் (தாயாரிடம் பக்தி செலுத்துவதால்) உண்டாகிறது.

 மத்யம லோகம் என்று சொல்லப்படும் அந்தரிக்ஷ லோகத்தில் உயர்வு

பித்ரு பக்தியினால் (தந்தையிடம் பக்தி செலுத்துவதால்) உண்டாகிறது.

ப்ரம்ம லோகத்தில் உயர்வு குரு பக்தியினால் உண்டாகிறது.

 அக்னி புராணம்

கோடி பசுக்களை தானம் செய்யும் பலன் ஒருவருக்கு மூன்றே மூன்று தினங்கள் ஸ்நானம் செய்வதால் ஏற்படும். ஆனால் இந்த மூன்று தினங்களும் ஸ்நானம், மாசி (மாக) மாதத்தில் ப்ரயாகையில் செய்யப்பட வேண்டும்.

 விஷ்ணு புராணம்

 எந்த ஒருவன் மனதாலும் வாக்காலும் செயலாலும் மற்றவருக்குக் கெடுதல்களை விளைவிக்கிறானோ அவன் அநேக அசுப ஜன்மங்களை எடுத்துக் கஷ்டப்படுவான். (மோசமான ஜன்மங்கள், மோசமான பலன்கள் உறுதி)

பவிஷ்ய புராணம்

 ஹே, சிவ,  

ராமாயணம் என்ற பெயரைக் கொண்ட புத்தகத்தை ஒருவன் தானம் செய்தால் அவன் வாஜ்பேய யாகம் செய்த புண்ணியத்தை அடைவான். அவன் விஷ்ணு லோகம் அடைவான்.

 கருட புராணம்

மனிதனுக்கு ஆயுள் நூறு வருடங்கள். அதை விட குறைவாகவே இருக்கும்.

அதில் பாதி இரவில் கழிந்து விடுகிறது. 

அதிலும் பாதி இளமைப்பருவத்தில் கழிந்து விடுகிறது.

அதிலும் வியாதி, சோகம், மூப்பு, ஆகியவற்றில் கழிந்து விடுகிறது.

வாயு புராணம்

பாதையை (நேராகப்) பார்த்து வழி நடக்க வேண்டும்,

நீரை ஆராய்ந்து பரிசோதித்த பின்னர் குடிக்க வேண்டும்.

பேச்சை சத்யமாகப் பேச வேண்டும்.

இதுவே தர்ம சாஸ்திர சம்மதமாகும்.

பத்ம புராணம்

தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் எதுவாக இருந்தாலும் சரி, அது இருக்கிறதோ இல்லையோ, – சாஸ்திரம் விதிக்கின்ற ரூபத்திலேயே பலன் உண்டாகிறது. வேறு விதத்தில் அல்ல!

 மார்கண்டேய புராணம்

எங்கு ஒரு புத்ரனானவன் தந்தை, தேவதைகள், ஆகியவர்களை பூஜிக்கிறானோ எங்கு ஒரு பத்தினியானவள் தனது கணவனுக்கு சேவை செய்கிறாளோ அங்கு தரித்திரம் இருக்காது.

பாகவத புராணம்

எவன் ஒருவனின் சிரவணமும் கீர்த்தனமும் புண்யமயமாக இருக்கிறதோ, அவனை கிருஷ்ணன் தனது ஹிருதயத்தில் வைத்துக் கொள்கிறான். அவனது துர்வாசனைகள் அனைத்தும் அழிந்துபடுகின்றன. ஏனெனில் கிருஷ்ணன் சஜ்ஜனங்களின் இதயத்தில் இருப்பவன்.

 கூர்ம புராணம்

அனாசக்தி பாவத்துடன் செய்யப்படும் கர்மங்களால் (செயல்கள்) சென்ற ஜன்மத்தில் செய்த பாவம் இந்த ஜன்மத்தில் செய்த பாவம் ஆகிய அனைத்தும் அழிந்து போகின்றன. மனம் நிர்மலம் ஆகிறது. மனிதன் ப்ரஹ்மவித் ஆகி விடுகிறான்.

 ப்ரஹ்ம புராணம் 

பாரதத்தில் ஜன்மம் எடுத்த ஒரு உத்தமன் சிறந்தவன் (தன்யன்) அவனுக்கு, தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோக்ஷம் ஆகிய அனைத்து புருஷார்த்தங்களும் சித்திக்கின்றன

 வராஹ புராணம்

குருவானவர் வித்வானோ அல்லது வித்வான் இல்லையோ சிஷ்யனுக்கு அவரே ஜனார்தனன் ஆகிறார்.

 ப்ரஹ்மவைவர்த புராணம்

எவன் ஒருவன் குருவின் ஆக்ஞையை பாலனம் செய்கிறானோ அவனே பண்டிதன், அவனே ஞானி. அவனே கல்யாண்வான். அவனே

புண்யசாலி. அவனது ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் நல்லதே நடக்கும்.

வ்ருஹநாரதீய புராணம்

மூன்று தானங்கள் உத்தமமானவை.

1.      கோ தானம் 2. பூமி தானம் 3. வித்யா தானம்

இந்த மூன்றும் ஒருவனை நரகத்திலிருந்து விடுவிக்கிறது. இந்த மூன்றில் வித்யாதானம் இன்னும் சிறந்தது.

 ஸ்கந்த புராணம் 

பாரதத்தில் ஜன்மம் எடுப்பது, சிவனுக்கு பூஜை செய்வது, கங்கையில் ஸ்நானம் செய்வது, சிவ பக்தி ஆகியவை துர்லபமானவை. (எளிதில் கிடைக்காதவையாகும்)

—subham—

Nagarjuna Magic to attract Fish and Conch shells (Post No.13,153)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,153

Date uploaded in London – –   18 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Yogaratnamala of Philosopher cum Magician Nagarjuna gives Interesting Tips to attract Fish.

Prepare a paste out of the womb of an ass, ginger (sunthi), Pippali (Piper longhum) and Maricha (Piper nigrum) and apply the paste to left foot. By breaking a tree with this foot, the tree bears fruits and flowers.

xxxx

Prepare a paste out of the womb of a bitch, ginger (sunthi), Pippali (Piper longhum) and Maricha (Piper nigrum) and apply the paste to the hand. On touching a tree by that hand, a tree produces fruits and flowers abundantly.

xxxx

Creating life in the Dead Fish

By putting the dried dead fish after applying the juice of the Bhallataka (Semecarpus anacardium) சேங்கொட்டை , சோம்பலம் , காலகம், சேராங் கொட்டை, the dead fish become alive.

xxxx

Production of Light

If a devotee concentrates his eyes on a moon like round point where the rays of both the eyes combine together, and goes on practising for an ample time, his inner sight is revealed even in the presence of darkness. Thus if the man carries on his concentration on the immortal point of meditation, an inner brilliance comes out.

xxxx

Attracting Conch shell

Prepare a paste out of Vatsanabha (Aconite) அதிவிடயம் (Aconitum heterophyllum) மலைப்பகுதிகளில் வளரும் ஒரு குறுஞ்செடியாகும், flower of Parijata (the coral tree), Haritala (Dioxide of Arsenic), tail of a snake with water. Apply the paste to your hand. With the touching of the hand conch shells etc attracted.

Xxxx

Making objects Invisible

Keep a peacock starved for seven days (without food). On the ighth day give it Harital and Manashila and collect its dung. On application of this dung to any substance, it becomes invisible.

Keep a Krikalasa starved without any food for three days and give Haritala (arsenic dioxide) as food. Then collect the dung of it and apply it to your hand. Anything placed on your hand now becomes invisible to others.

Get a piece of cloth wet with the juice of the bark of an Asvatta tree (Arasa Maram in Tamil) and get it dried in the sun. apply an incense prepared out of Guggulu  குங்கிலியம் and Vanalochana (Bamboo mamma). The piece of cloth becomes invisible even to the Gods, Kinnaras and demons. On getting it wet by water it becomes visible.

xxxx

Spread barley seeds on a skeleton of a person that had diedby  a weapon or a spear. Grow them wit goat’s milk. When they bear fruits collect them and make a garland out of them. On putting this garland, the man becomes invisible to others.

—subham—-

tags- Nagarjuna, magic, sea shells, dead fish, alive, invisible, making disppear, conch

திருவனந்தபுரம் பாலஸ் மியூசிய அதிசயங்கள்- 4 (Post No.13,152)

ஸ்படிக சிம்மாசனம் CRYSTAL THRONE

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,152

Date uploaded in London – –   18 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Palace Museum, Thiruvananthapuram & Marthandavarma Chitralayam – Rare Pictures 4 , திருவனந்தபுரம், பாலஸ் மியூசியம், அதிசயங்கள் -4

பாலஸ் மியூசியம், அதிசயங்கள், சுவாதி திருநாள் மஹாராஜா, சங்கீத மேதை, தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம், அற்புத மர  வேலைப்பாடுகள், ஸ்படிக சிம்மாசனம் , தந்த சிம்மாசனம் 

WOODEN WONDERS

THANJAVUR GLASS PAINTING

IVORY THRONE 

IVORY THRONE GIFTED TO QUEEN VICTORIA

—subham—

Tags- பாலஸ் மியூசியம், அதிசயங்கள், சுவாதி திருநாள் மஹாராஜா, சங்கீத மேதை, தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம், அற்புத மர  வேலைப்பாடுகள், தந்த சிம்மாசனம் 

மேலும் மூன்று ராமாயண அதிசயங்கள் !- Part 1 (Post No.13,151)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,151

Date uploaded in London – –   18 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

அயோத்தியில் ஜனவரி மாதம் (2024)  ராமர் கோவில் திறக்கப்பட்ட திலிருந்து ராமாயணம் பற்றி சுவையான செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இப்பொழுது மேலும் பல விஷயங்கள்  மக்களைக் கவர்ந்து வருகின்றன ; அவைகளில் குறிப்பிடத்தக்கவை :

1.ராம நவமி அன்று அயோத்தி ராமர் விக்ரகம் மீது சூரிய பகவான் (சூரிய கிரணங்கள்) பொட்டு / திலகம் வைத்ததாகும் . ஆ னால் இது நவீன கால, விஞ்ஞானிகள் உருவாக்கிய அதிசயம். தமிழ் நாட்டிலோ 1000 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்துக்கள் கட்டிய கோவிலில் சூரிய ஒளி, சந்நிதிக்குள் புகுந்து விக்கிரகத்தை அலங்கரிப்பதை, ஆராதிப்பதைக் காண்கிறோம்  அப்போது நவீன கால கருவிகளே இல்லாமல் இந்து சமய சிற்பிகள் அந்த அதிசயத்தைச் செய்துகாட்டினார்கள்.. இந்து கட்டிடக் கலையின் உன்னத நிலைக்கு அது ஒரு சான்று.

2.சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ராமாயண ஓவியங்களை வரைந்து புஸ்தகம் வெளியிட்டனர். அந்த 70 படங்களை நான் இரு முறை இந்த பிளாக்கில் வெளியிட்டேன். இதைவிட அதிசயமான தங்கம்- நீலக்கல் (GOLD- LAPIZ LAZULI) பதித்த அதிசய  ராமாயணத்தைக் காசி மன்னர்  200 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கினார். அதன் மதிப்பு தெரியாத திருடர்கள், அந்த தங்க ராமாயணத்தை பக்கம் பக்கமாகப் பிரித்து ஏலம்  விட்டுவந்தனர். தகவலறிந்த நல்லஎண்ணம் படைத்தோர் கிடைத்த பக்கங்களை மீட்டு பெங்களூர் மியூசியத்தில் வைத்துள்ளனர் .

3.இதனிடையே ராம பக்தர்கள் இருவர் , வட இந்தியா முழுதும் வீடுதோறும் முழங்கும் துளஸிதாஸ் ராமாயணத்தை தங்கத் தகடுகளில் எழுதி ராமர் பாதங்களில் அர்ப்பணித்துவிட்டனர் .

இதோ விவரங்கள்:–

தங்கத் தகடுகளில் ராம சரித மனஸ் (துளசிதாஸ்  ராமாயணம்)

முன்னாள் ஐ. ஏ .எஸ் . அதிகாரி சுப்ரமணியன் லக்ஷ்மி நாராயணன் சிறந்த ராம பக்தர். அவரும் அவருடைய மனைவி ஸரஸ்வதியும் (an ex-IAS officer, Subramanian Lakshminarayanan and his wife Saraswathy) இந்த பொக்கிஷத்தை ராமர் காலில் சமர்ப்பித்தனர் .

இதன் மதிப்பு சுமார் ஐந்து கோடி ரூபாய் ; இந்தப் புஸ்தகத்தில் எடை 151 கிலோ.மொத்தமுள்ள 10,902 பாடல்களையும் தங்க எழுத்துக்களில் பொறித்துள்ளனர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் லக்ஷ்மி நாராயணன், தனது வாழ்நாளில் சேகரித்த பணம் அனைத்தையும் இதில் செலவிட்டுவிட்டார் ; வரலாற்றில் அலையாத இடமும் பெற்றுவிட்டார் ; அவரது மனைவி ஸரஸ்வதி இதற்கு உறுதுணையாக நின்றார்.

ராமசரித மனஸ் புஸ்தகத்தில் 480 முதல் 500 தங்கப் பக்கங்கள் இருக்கின்றன. இதைத் தயாரிப்பதில் 24 காரட் தங்கமும், தாமிரமும் பயன்படுத்தப் பட்டது. புஸ்தகம் செய்யும் பணியை  அந்தத் தம்பதியினர் சென்னையிலுள்ள உம்மிடி பங்காரு நகைக்கடைஇடம் ஒப்படைத்திருந்தனர் .

தமிழ் நாட்டில் கம்ப ராமாயணம் புகழ்பெற்ற மாதிரி, வட இந்தியா முழுதும் ராமா சரிதா மனாஸ் என்ற பெயரில் துளசிதாஸ் கோசுவாமி எழுதிய ராமாயணம் புகழ்பெற்றதாகும். இதை அவர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் அவந்தி (பேச்சு வழக்கு வட்டார இந்தி) மொழியில் எழுதினார்

இதிலும் ஆறு காண்டங்கள் —  பால அயோத்தியா, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, உத்தர காண்டங்கள் இருக்கின்றன. புஸ்தகத்தின்  மொத்த எடையில் 140 கிலோ தாமிரமும் சுமார் ஏழு கிலோ தங்கமும் அடக்கம்.எழுத்துக்கள் 24  காரட் தங்கத்தல் இருக்கும்.

XXXX

சூரிய திலகம்

ராம நவமி விழாவின் முக்கிய நிகழ்வாக,  அயோத்தி ராமர் கோவில் கருவறையில் உள்ள பால ராமரின் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. இந்த அபூர்வ நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு வியந்தனர்.

அசாமில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, இராமர் சிலையின் நெற்றியில் சூரிய திலகம் விழும் நிகழ்வை தனது ‘டேப்’ TAB மூலம் கண்டு களித்தார். பால ராமரின் சிலையின் நெற்றியில் விழும் சூர்ய திலகம் நம் வாழ்வில் ஆற்றலைக் கொண்டு வரட்டும் எனப் பாரதப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராம நவமி கொண்டாட்டத்தின் சிகர நிகழ்வான சூரிய அபிஷேக மகோத்சவம் இன்று (17-4-2024) நடைபெற்றது. நண்பகல் 12.01 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. பால ராமரின் நெற்றியில் சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு சூரிய ஒளிக்கதிர் விழுந்து திலகமிட்டது. நெற்றித் திலகத்தின் அளவு 58 மி.மீ. அளவுக்கு இருந்தது. பக்தர்கள் தெளிவாக காணும் வகையில் நகரம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. அயோத்தி ராமர் கோவிலின் கருவறைக்குள் சூரிய ஒளி நேரடியாக நுழைய வழி இல்லை. இதனால், கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்கள் அடங்கிய ஒரு விரிவான வடிவமைப்பு மூலம் பால ராமராமரின் நெற்றியில் சரியாக விழும் வகையில் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் வானியற்பியல் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து, ரூர்க்கியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த அமைப்பை உருவாக்கி உள்ளனர

ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி அன்று பால ராமரின் சிலையின் நெற்றியில் சூரியனின் கதிர்களை துல்லியமாக விழச்செய்யும் வகையில் ஆப்டோமெக்கானிக்கல் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரியனின் திசையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்களில் சிறிய மாற்றங்கள் செய்யவேண்டியிருக்கும்.

கட்டுரையின் அடுத்த பகுதியில் பெங்களூரு மியூஸிய ராமாயணத்தைக் காண்போம் .

தொடரும் ……………….

—SUBHAM—

TAGS– அயோத்திராமர் கோவில்தங்கத்தில் ராமாயணம்துளசி ராமாயணம் தங்கத்தில் ராமசரித மனஸ்இராமர் நெற்றியில் சூரிய திலகம்

முருகன் மீது விநாயகனின் புகார்! (Post No.13,150)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.150

Date uploaded in London – — 18 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

முருகன் மீது விநாயகனின் புகார்!

ச.நாகராஜன்

விநாயருக்கு ஒரு புகார்.

யார் மீது?

முருகன் மீது!

நேராக தந்தையான சிவபிரானிடம் வந்தார்.


“ஐயனே! எனது காதை ஆறுமுகன் கிள்ளினான்” என்று புகார் செய்தார்.

சிவபிரான் விநாயகர் சிணுங்குவதைப் பார்த்து, முருகனிடம், “ஏன் இப்படிச் செய்தாய்?” என்று கேட்டார்.

முருகனோ, ”அண்ணன் என் கண்களை எண்ணி கணக்கிட்டுப் பார்க்கிறான்.” என்று பதில் கூறினார்.

சிவபிரான் விநாயகரை நோக்கி,  “இப்படி நீ ஏன் விகடம் பண்ணியாய்?” என்று கேட்டார்.

அதற்கு விநாயகர், “தம்பி என் துதிக்கையை முழம் போட்டான், அதனால் தான்!” என்றார்.

முருகன் சிரித்தவாறு நின்றார்.

சிவபிரான் பார்வதியை நோக்கி, “உன் பிள்ளைகளைப் பாராய்” என்று கூறினார்.

உடனே பல அண்டங்களை கர்ப்பமாய் பெற்ற உமா தேவி கணபதியை அருகிலே அழைத்தாள். மனமகிழ்ச்சி கொண்டாள்.

இப்படிப்பட்ட்ட உமா தேவி உம்மைக் காக்கக் கடவது.

இதை இயற்றியவர் சிவப்பிரகாச சுவாமிகள்.

பாடலைப் பார்ப்போம்:

அரனவ னிடத்திலே யைங்கரன் வந்துதா னையவென் செவியை மிகவும்.

   அறுமுகன் கிள்ளினா னென்றே சிணுங்கிடவு மத்தன்வே லவனை   

       நோக்கி,

விரைவுடன் வினவவே யண்ணனென் சென்னியில் விளங்குகண்   

        ணெண்னினனென,

   வெம்பிடும் பிள்ளையைப் பார்த்து நீயப்படி விகடமேன்  

     செய்தாயென,

மருவுமென் கைந்நீளமுழ மளர்ந்தானென்ன மயிலவனகைத்து நிற்க,

       மலையரையனுதவவரு முமையவளைநோக்கிநின் மைந்தரைப்

        பாராயெனக்,

கருதரியகடலாடை யுலகுபலவண்டங் கருப்பமாய்ப்பெற்றகன்னி,

    கணபதியை யருகழைத் தகமகிழ்வு கொண்டனள்  

    களிப்புடனுமைக் காக்கவே

பாடலின் பொருள் :

அரனவன் இடத்திலே – சிவபிரானிடத்தில்

ஐங்கரன் வந்து  – விநாயகன் வந்து

ஐய – ஐயனே

என் செவியை – எனது காதுகளை

மிகவும் – மிகுதியாக

அறுமுகன் கிள்ளினான்  என்றே சிணுங்கிடவும் – முருகன் கிள்ளினான் என்று சிணுங்கிடவும்

 அத்தன் வேலவனை நோக்கி –  சிவபிரான் வேலவனை நோக்கி

விரைவுடன் வினவவே – (அப்படி ஏன் செய்தாய் என்று) விரைவுடன் கேட்கவும்

அண்ணன் என் சென்னியில் விளங்கு கண் எண்ணினன் என – அண்ணன் என் முகத்தில் விளங்குகின்ற கண்களை எண்ணினான் என்று பதில் கூற

வெம்பிடும் பிள்ளையைப் பார்த்து – வருந்துகின்ற பிள்ளையைப் பார்த்து சிவபிரான்

நீ அப்படி விகடமேன்  செய்தாய் என – நீ அப்படி விகடம் ஏன் செய்தாய் என்று கேட்க

,

மருவும் என் கைந்நீளம் , – பொருந்துகின்ற என் துதிக்கையின் நீளத்தை

முழம் அளர்ந்தான் என்ன – முழம் போட்டான் அவன் என்று சொல்ல

மயிலவன் நகைத்து நிற்க – வேலவன் சிரித்தவாறு நிற்க

மலையரையன் – பர்வதராஜன்

உதவ வரும் – பெற வந்த

உமையவளை நோக்கி – உமாதேவியை நோக்கி

நின் மைந்தரைப் பாராய் என – உனது பிள்ளைகளைப் பாராய் என்று கூற

கருதரிய – நினைத்தற்கும் அரிய

கடலாடை – கடலை ஆடையாகத் தரித்த

உலகு பல அண்டங் கருப்பமாய்ப் பெற்ற கன்னி,-  உலகத்தையும் பல அண்டங்களையும் கருப்பமாகப் பெற்ற என்றும் இளையவளாய் இருக்கும் பார்வதி தேவி

கணபதியை அருகழைத்து அகமகிழ்வு கொண்டனள்   – கணபதியை அருகில் அழைத்து அகம் மிக மகிழ்ந்தான்

களிப்புடன் உமைக் காக்கவே – மகிழ்வாகி அவள் உம்மைக் காக்கக் கடவது!

எப்படி இந்தப் பாடல்!

***