HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-27; இந்துமத கலைச்சொல் அகராதி-27 (Post No.15,307)

Written by London Swaminathan

Post No. 15,307

Date uploaded in London –  25 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

DU , DW words

துர்வாசர்

கந்தல் ஆடை அல்லது அழுக்கு (துர்வாச) ஆடை என்று இந்த கோபக்கார ரிஷிக்குப் பெயர். இவரிடம் சாபம் வாங்கியவர்கள் அதிகம் . அத்ரி – அனசூயாவின் மகன்; அம்பரீஷரைச் சபித்தபோது அது பலிக்காமல் அவரிடமே மன்னிப்புக் கேட்டார்

கண்வ ரிஷி ஆஸ்ரமத்தில் வாசலில் காக்க வைத்ததற்காக சகுந்தலாவுக்குச் சாபம் கொடுத்தார் .இவர் கொடுத்த மாலையை அலட்சியப்படுத்தியதற்காக இந்திரனுக்குச் சாபம் கொடுத்தார். கீழே  விழுந்த சோற்றுப் பருக்கையை கிருஷ்ணன் அகற்றாததால் உனக்கு கால் மூலமே சாவு என்று கிருஷ்ண பரமாத்மாவை சபித்தார் . ஆனால் இவர் குந்தி தேவிக்கு வரம் கொடுத்ததால் அவர் மந்திரம் மூலம் பாண்டவர்களைப் பெற்றாள்.

Durvasa – durvaasas

Meaning of his name is ill clothed. He was noted for his irascible temper and many fell under his curse.A son of Atri and an younger brother of Dattātreya;  an aṃśa of Śiva; appeared before Ambarīṣa who was about to break his dvādasi fast; agreed to accept his hospitality, went to the river for bath and tarried there; finding the muhūrta for pāraṇa (break-fast) drawing to a close, the king broke his fast with some water. Coming to know of this on his return, the sage produced a flaming spirit to attack him. But Hari’s cakra burnt it down and turned towards the sage, who ran for succour to Brahmā, Śiva and Viṣṇu. All of them were unable to help; but Hari advised him to meet Ambarīṣa and apologise to him.3 This he did and was set at liberty. After partaking the meals with him, he returned to Brahmaloka;4 blessed Pṛtha with secret mantras to summon gods.5 Through him Duryodhana planned to destroy the Pāṇḍavas by inciting him to go to them and ask for a feast. But Kṛṣṇa protected them on the occasion.6 In the course of his sojourn he met a Vidyādhara maid with a garland given to her by the Devī; took it from her and presented it to Indra who put it on his elephant, who in turn threw it on the ground and trampled upon it. Enraged at this, the sage cursed him to be lost to all fortune. Healso cursed Sakuntala, wife of Dushyantha.

***

துரியோதனன்

வெற்றி பெறுவதற்குக் கடினம் என்று இவன் பெயருக்குப் பொருள். அதாவது வெல்ல முடியாதவன் .உண்மையைச் சொல்லப்போனால் பொறாமையின் மொத்தவடிவம் அவன் கொடியும் பாம்புக்கொடி. மனதும் விஷப்பாம்பு. 99  சகோதரர்களுடனும் துச்சலா என்ற சகோதரியுடனும் காந்தாரிக்கும் thirutharaashtiranukkumபிறந்தான்  சகுனி மாமா மூலம் கெடுக்கப்பட்ட அவன் எல்லவரியும்  வற்றை இழந்த பாண்டவர்களை அவமானப்படுத்து வதற்காக தம்பி துச்சாதனன் மூலம், மாதவிலக்கில் இருந்த திரெளபதியின் துகிலை பொதுச் சசபையில் உரித்தான் ; ஆனால் கிருஷ்ண பரமாத்மா அவளுடைய மானத்தைக் காப்பாற்றினார் . துரியோதனன் தொடையைக்கிழித்து அந்த ரத்தத்தினை முடியில் தடவும்  வரைக் கூந்தலை முடியமாட்டேன் என்று சபதம் செய்தாள் திரவுபதி ; பாண்டடைவர்களில் ஒருவரான பீமன் துரியோதனனைக் கடைசி நாள் மாபாரதப் போரில் கொன்று பாஞ்சாலி சபதத்தை நிறைவேற்றினான் .

Duryodhana

Duryodhana , meaning of his name is hard to conquer. The eldest son of king Dhritarashtra and leader of the Kauravas. He was born to Gandhari along with 99 brothers. He was very jealous and wanted to destroy his cousins , the Pandavas. When they lost all their kingdom and wealth and even their wife Panchali alias Draupadi in the gambling, Duryodhana using that loss insulted Panadavas. He asked his brother Duschasana to bring Draupadi to assembly and disrobe her. But Krishna protected Draupadi by supplying her clothes by his magical power. Draupadi made a vow to kill Duryodhana and Bhima killed Duryodhana on the last day of Mahabharata war and fulfilled Draupadi’s vow. He was spoiled by his uncle Sakuni.

 ****

 துவைதம்

Dwaita

Dwaita, , refers to the dualistic philosophy established by Sri Madhwa. This approach emphasizes a clear distinction between the individual soul and the Supreme Being (Jeevatma and Paramatma). Dwaita forms a foundational aspect of Madhwa’s teachings, reflecting a perspective that contrasts the unity of the soul with the divine, thereby asserting the individuality of each soul in relation to the Supreme. Madhwa was born in Karnataka near Udupi and there are more followers of his philosophy in Karnataka.

துவைதம் ஆத்மாவும் பிரம்மனும் வேறு வேறு என்று சொல்லும் மார்க்கம். இதை மத்வர் பிரச்சாரம் செய்தார் இதை பின்பற்றுவோர் மாத்வர்  எனப்படுவர் .

ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறுவேறென மத்துவர் கூறினார்; இந்தக் கொள்கைக்கு த்வைதம் என்று பெயர்; த்வி என்றால் இரண்டு என்று பொருள்; இரண்டு விரல்கள் மூலம் இதைக் காட்டுகிறார் மத்வர். இப்போது கர்நாடகத்தில் த்வைதர் /மாத்வர் என்ற பெயரில் அதிகம் பேர் உள்ளனர் . மத்வர் பிறந்ததும் கர்நாடகத்தில்தான் .

***

தூர்வா

தூர்வா  என்பது புனிதம் உடைய புல் ஆகும். மெல்லியதாகவும் கரும் பச்சை நிறத்திலும் இருக்கும். இதன் மிகச் சிறிய பூக்கள் பச்சடி, சிவப்பு ரத்தின்க் கற்கள் போல இருக்கும் என்று புலவர்கள் பாடியுள்ளனர்.

Durva

Duurvaa sacred grass, sleek and dark green; its tiny flowers look like rubies and emeralds.

***

துர்கா தேவி

துர்க் என்றால் கோட்டை ; துர்க்கையை வழிபடுவோரை அவள், அரண் போல வளைத்துக் காப்பாள் ;

தேவி வடிவங்களில் மிகவும் நம்பிக்கையையும் தைரியத்தையும் வெற்றி உணர்வினையும் ஊட்டக்கூடிய தோற்றம் துர்கா தேவி . அவளைப்  பார்த்த மாத்திரத்திலேயே நமக்கு பாசிட்டிவ் எனர்ஜி / ஆக்க பூர்வ சக்தி வந்துவிடும் !

துர்கா தேவியின் மகிஷாசுர மார்த்தனி  சிற்பம்தான்  மிகவும் மனதில் பதியும் வடிவம்.  எருமை முக அசுரனை தேவி வதம் செய்த காட்சி இது. . இவளின் காலடியில் துண்டிக்கப்பட்ட மகிஷனின் கழுத்திலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருப்பது போல் அமைந்திருக்கும். எருமைத் தலையின் மீது தமது இடது காலினையும், தமது வாகனமாகிய சிங்கத்தின் மீது காலை ஊன்றியவாறும் அமைந்திருப்பார்

சங்கத் தமிழ் நூல்களில் பாலை நிலக் கடவுளாகவும், வேட்டைக்கு செல்வோர், போருக்கு செல்வோர், கடவுளாகவும் துர்க்கை வழிபாடு பழக்கத்தில் உள்ளது.  கொற்றவை ,கான் அமர் செல்வி ,பழையோள்  என்ற பெயர்களை தமிழ் நூல்களில்  காண்கிறோம்

லலிதா சஹஸ்ரநாமம் முழுதும் பண்டாசுரனை வதம் செய்த கதை வருகிறது . மந்திர சாஸ்திர நூல்கள்  துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றன. சைலபுத்ரி, பிரம் மசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மஹா கௌரி, சித்திதாத்திரி என ஒன்பது வடிவம் /நவதுர்க்கா வடிவங்கள்.

Durga

Durga is a very popular deity. The general description of Durga given in Kashyapa silpa represents her as having four arms, two eyes, high hips, high breasts and all ornaments. She holds the conch and the discuss in her upper hands, while her right lower hand presents the Abhaya posture and the left lower hand rests the waist. She stands on a lotus pedestal and has a breast band of serpents and a red petticoat.

According to the Silparatna, Mula Durga holds in her lower hands the bow and the arrow. Meaning:

(These are the names of Nava Durgas)

1: First is Shailaputri (Daughter of the Mountain), Second is Brahmacarini (Who wanders in Brahman, a Tapasyi, performer of Penance),

2: Third is Chandraghanta (Bell of Moon), Kushmanda (Glowing substratum of Universal Egg) is Fourth,

3: Fifth is Skandamata (Mother of Skanda), Sixth is Katyayani (Daughter of Katyayana Rishi),

4: Seventh is Kalaratri (Dark Night of Destruction), Mahagauri (Great Shining White Form) is Eighth,

5: And Nighth is Siddhidatri (Bestower of Siddhis or Accomplishments); These are eulogized as Nava Durga (Names of Nine Durgas),

6: These Names were indeed uttered by (none other than) the great-souled Brahma.

From Mahabalipuram comes the figure of a Durga who stands on the buffalo’s head. She has eight arms,

The illustration shows also other figures surrounding the goddess, viz., two male devotees with peculiar head dress kneeling at her feet, two female attendants on either side holding the sword and the bow, two demi gods, one of whom is carrying a chauri, and a lion and a deer.

In another Mandapa at Mahabalipuram is a sculpture evidently of  the same goddess with the lion and the deer , pairs of demi gods on the sides and devotees at the feet, one of whom is either cutting off his hair or  his neck. The goddess has only four arms and stands on an ordinary pedestal but not on the buffalo’s head.

Images of Durga with four or more arms standing on the head of a buffalo  are generally found placed on the niche of northern wall of the central shrines of Siva temples in south India.

Mahisasuramardini is represented with three broad eyes , a slender waist, heaving breasts, one face and twenty hands. Below her is the buffalo demon with his hand cut off and rolling on the ground. A man emerging from the buffalo’s neck is seen holding a weapon in his hand, abject with fear. Pierced by the trident of the goddess, he is vomiting blood. The lion too on which the goddess rides attack the giant with its mouth while the noose held by the gooses is tightly fastened around his neck. The goddess’ right leg is placed on the lion while the other steps on the body of the demon. This form of Chandi is propitiated by those who wish to destroy their enemies. The ruling family of Mysore has Chamunda – Chandi for its tutelary deity.

The puranas say that Durga was born of Yashoda in order to save the life of Krishna, who was just then  born to Devaki. The children were exchanged under divine intervention. Kamsa, the cruel brother of Devaki , who had vowed to kill all the children of his sister, thought that this female child was Devaki’s and dashed it against a stone. But, then, the child flew into air and assuming the form of Durga/ Maha Maya mocked him and went away. On account of this she is known as the sister of Vasudeva Krishna.

***

–Subham—

Tags-HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-26; இந்துமத கலைச்சொல் அகராதி-26, Durga, Durodhana, Durvasa, துர்வாசர், துரியோதனன்

திருப்புகழில் தொல்காப்பிய பொருள் அதிகாரம்? (Post No.15,306)

Written by London Swaminathan

Post No. 15,306

Date uploaded in London –  25 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

இது அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ் பாடல்களில் மிக முக்கியமான பாடல் . காரணம் என்னவெனில் பல அரைவேக்காடுகள் இப்போது தொல்காப்பிய நூலைச் சிதைத்து வருகின்றனர். த்ருண தூமாக்கினி என்னும் பிராமணன்தான் தொல்காப்பியன் என்று உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் எழுதினார்அதை மறைத்து தொல்காப்பியருக்கு மீசை வைத்து அவரது பூணுலை மறைக்கும் வகையில் ஒரு மேல் துண்டினையும் போட்டு, உலகத் தமிழ் மகாநாட்டு மலர்களில் படம் வரைந்துள்ளன.

அது மட்டும் அல்லாமல் அவரே பொருள் அதிகாரத்தில் பயன்படுத்திய சூத்திரம் என்ற சொல்லிய மறைத்து அவர் நூற்பா செய்ததாக எழுதியும் வருகின்றன ; இதை வீட வேடிக்கை எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் என்பதை மாற்றி , தாமோதரம் பிள்ளை, வையாபுரிப் பிள்ளை போன்றோரை அவமானப்படுத்திடும் வகையில் அதிகாரத்துக்குப் பதில் இயல் என்ற புதிய சொல்லை நுழைத்துள்ளன.

இவர்களுக்கு செமை அடி கொடுக்கிறார் அருணகிரி நாதர்; அவரே 500 ஆண்டுகளுக்கு முன்னர் பொருள் அதிகாரம் பகுதி இருந்ததைப் பாடி அவர்களின் மூக்கை உடைத்துவிட்டார்.

சீரான கோல கால நவமணி

     மாலாபி ஷேக பார வெகுவித

          தேவாதி தேவர் சேவை செயுமுக …… மலராறும்

சீராடு வீர மாது மருவிய

     ஈராறு தோளு நீளும் வரியளி

          சீராக மோது நீப பரிமள …… இருதாளும்

ஆராத காதல் வேடர் மடமகள்

     ஜீமூத மூர்வ லாரி மடமகள்

          ஆதார பூத மாக வலமிட …… முறைவாழ்வும்

ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்

     ஞானாபி ராம தாப வடிவமும்

          ஆபாத னேனு நாளு நினைவது …… பெறவேணும்

ஏராரு மாட கூட மதுரையில்

     மீதேறி மாறி யாடு மிறையவர்

          ஏழேழு பேர்கள் கூற வருபொரு …… ளதிகாரம்

ஈடாய வூமர் போல வணிகரி

     லூடாடி யால வாயில் விதிசெய்த

          லீலாவி சார தீர வரதர …… குருநாதா

கூராழி யால்முன் வீய நினைபவ

     னீடேறு மாறு பாநு மறைவுசெய்

          கோபால ராய னேய முளதிரு …… மருகோனே

கோடாம லார வார அலையெறி

     காவேரி யாறு பாயும் வயலியில்

          கோனாடு சூழ்வி ராலி மலையுறை …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

சீரான கோலகால நவ மணி மால் அபிஷேக பார …

வரிசையானதும், ஆடம்பரமுள்ள ஒன்பது மணிகள் பதிக்கப்பெற்ற

பெருமை பொருந்திய கிரீடங்களின் கனத்தை உடையதும்,

வெகு வித தேவாதி தேவர் சேவை செயு முக மலர் ஆறும் …

பல வகையான தேவாதி தேவர்களெல்லாம் வணங்குவதுமான ஆறு திருமுகங்களையும்,

சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும் … சிறப்பு உற்று

ஓங்கும் வீர லக்ஷ்மி குடிகொண்டிருக்கும் பன்னிரு தோள்களையும்,

நீளும் வரி அளி சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும் …

நீண்ட ரேகைகள் உள்ள வண்டுகள் ஸ்ரீராகம் என்னும் ராகத்தைப் பாடி

ரீங்காரம் செய்யும் கடப்ப மலரின் மணம் வீசும் இரண்டு திருவடிகளையும்,

ஆராத காதல் வேடர் மட மகள் ஜீமூதம் ஊர் வலாரி மட

மகள் … முடிவில்லாத ஆசையை உன் மீது கொண்ட வேடர்களின் இளம்

மகளான வள்ளியும், மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனுடைய அழகிய பெண்ணாகிய தேவயானையும்,

ஆதார பூதமாக வலம் இடம் உறை வாழ்வும் … பக்தர்களின்

பற்றுக் கோட்டின் இருப்பாக வலது பாகத்திலும், இடது பாகத்திலும்

உறைகின்ற உனது திருக்கோல வாழ்க்கையையும்,

ஆராயும் நீதி வேலும் மயிலும் … நன்கு ஆராய்ந்து நீதி செலுத்தும்

உனது வேலையும் மயிலையும்,

மெய்ஞ் ஞான அபிராம தாப வடிவமும் … ஞான ஸ்வரூபியான

கீர்த்தி பெற்ற உனது பேரழகுடைய திருவுருவத்தையும்,

ஆபாதனேனும் நாளும் நினைவது பெற வேணும் … மிகக்

கீழ்ப்பட்டவனாக நான் இருப்பினும், நாள் தோறும் (மேற்சொன்ன

அனைத்தையும்) தியானம் செய்யும்படியான பேற்றைப் பெற

வேண்டுகிறேன்.

ஏர் ஆரும் மாட கூட மதுரையில் மீது ஏறி மாறி ஆடும்

இறையவர் … அழகு நிறைந்த மாட கூடங்கள் உள்ள மதுரையில்,

வெள்ளி அம்பலத்தில் நடன மேடையில் கால் மாறி* ஆடிய இறைவராகிய

சிவ பெருமான் (இயற்றிய ‘இறையனார் அகப் பொருள்’ என்ற நூலுக்கு),

ஏழேழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம் …

நாற்பத்தொன்பது சங்கப் புலவர்கள் பொருள் கூறிய பொருள்

அதிகாரத்தின் உண்மைப் பொருள் இதுதான் என்று கூறுவதற்காக,

ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி … தகுதி உள்ள ஊமைப்

பிள்ளை** போல செட்டி குலத்தில் தோன்றி விளையாடி,

ஆலவாயில் விதி செய்த லீலா விசார தீர வரதர குருநாதா …

ஆலவாய் என்னும் மதுரையில் உண்மைப் பொருளை நிலை நிறுத்திக்காட்டிய திருவிளையாடலைப் புரிந்த தீரனே, வரங்களைக் கொடுப்பவனே, குரு நாதனே,

முன் வீய நினைபவன் ஈடேறுமாறு கூர் ஆழியால் பாநு

மறைவு செய் … முன்பு (பாரதப் போர் நடந்தபோது) இறந்து போவதற்கு

எண்ணித் துணிந்த அர்ச்சுனன் உய்யுமாறு கூர்மையான சக்கரத்தால்

சூரியனை மறைத்து வைத்த

கோபாலராய நேயம் உள திரு மருகோனே … கோபாலர்களுக்கு

அரசனாகிய கிருஷ்ணன் அன்பு வைத்த அழகிய மருகனே,

கோடாமல் ஆரவார அலை எறி காவேரி ஆறு பாயும்

வயலியில் … தவறுதல் இன்றி பேரொலியுடன் அலைகளை வீசி வரும்

காவேரி ஆறு பாய்கின்ற வயலூரிலும்,

கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே. …

கோனாடு*** என்னும் நாட்டுப் பகுதியில் உள்ள விராலி மலையிலும்

வீற்றிருக்கும் பெருமாளே.

*****

* ஒருமுறை பாண்டியன் ராஜசேகரன் நடராஜப் பெருமான் எப்போதும் இடது

திருவடியைத் தூக்கி நடனமாடுவது அவருக்கு எவ்வளவு அயர்ச்சி தரும் என்று

எண்ணி வருந்தி, இறைவனை கால் மாறி வலது பாதத்தைத் தூக்கி ஆடும்படி

வேண்டினான். அதற்கு இணங்கி மதுரையில் சிவபிரான் கால் மாறி ஆடினார் – திருவிளையாடல் புராணம்.

** மதுரையில் 49 சங்கப்புலவர்கள் இறையனார் அகப் பொருளுக்கு உரை எழுதினர். சிறந்த உரை எது என்பதில் விவாதம் ஏற்பட, மதுரை செட்டி குலத்தில் ஊமைப்பிள்ளை ருத்திரஜன்மன் என்ற பெயரில் அவதரித்த முருகன் அனைவரது உரையையும் கேட்டு, நக்கீரன், கபிலன், பரணன் ஆகிய புலவர்களின் உரைகளைக் கேட்கும்போது மட்டும் வியப்பையும், கண்ணீரையும் காட்ட, இம் மூவரின் உரையே உண்மைப் பொருள் என்று புலவர்கள் உணர்ந்து கலகம் தீர்த்தனர்.

– திருவிளையாடல் புராணம்.

****

தவறுகளைத் திருத்துவோம் : எனது கருத்து

மேலே கூறிய இறையனார் அகப்பொருள் , திருப்புகழ் பாடல் வரியிலும் இல்லை; திருவிளையாடல் புராணப்பாடல்களிலும் இல்லை; அத்தோடு காலத்துக்குப் பொருந்தாத காலவழுவமைதியும் உள்ளது; கபிலர், பரணர், நக்கீரர் பாடிய காலத்தில்– அதாவது சங்க காலத்தில்- இறையனார் அகப்பொருள் உரை இல்லை. அப்படி ஒரு நூலினை சங்க காலத்தில் எவரும் அறியார் ; அக்காலத்தில் உரைநடையும் இல்லை.

****

இறையனார் அகப்பொருள் உரை

இந்த நூல்  ஏழாம் நூற்றாண்டு CE வாக்கில் தோன்றியிருக்கலாம். இந்த நூலுக்கு உரை எழுதிய நக்கீரர் தமது உரைக்கு மேற்கோளாகப் பாண்டிக்கோவை நூலிலுள்ள பாடல்களைத் தந்துள்ளார். பாண்டிக்கோவை CE எட்டாம் நூற்றாண்டு நூல். கட்டளைக் கலித்துறை இலக்கணம் கொண்ட பாடல்கள் முதலில் தோன்றிய காலம்.

****

ஆகவே இதில் குறிப்பிடும் நக்கீரர் சங்க கால நக்கீரர் இல்லை சைவத் திருமுறைகளில் நக்கீரர், கபிலர் பரணர் என்ற மூவர் உள்ளார்கள் அவர்களில் ஒருவராக இருக்கலாம் .

இன்னொரு கேள்வி எழலாம் .

திருப்புகழ் பாடலில் தொல்காப்பியம் என்ற சொல் அல்லது நூலின் பெயர் இல்லையே என்று. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான நூல்களில் எல்லாம் பொருள் அதிகாரம் என்ற சொல் தொல்காப்பியத்தில் மட்டுமே வந்துள்ளது எல்லாவற்றுக்கும்மேலாக திருவிளையாடல் புராணத்தில் சங்கப்  புலவர்களிடையே எழுந்த வாதம் அவர்களுடைய பாடல்களைப்  பற்றியதே ; இதைப்  பரஞ்சோதி முனிவர் அழகாகப் பாடியுள்ளார் . அவர்கள் இறையனார் அகப்பொருள் உரை பற்றி சண்டையிட்டனர் என்ற செய்தி தி. வி.பு ராணத்தில் இல்லை. இதோ ஒரிஜினல் பாடல்கள்:

திருவிளையாடல் புராணம் 

55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம் (2597 -2610 )

2597. காமனைப் பொடியாக் கண்ட கண் நுதல் தென் நூல் கீர

நாம நல் புலவற்கு ஈந்த நலம் இது பொலம் பூம் கொன்றைத்

தாமனச் சங்கத்து உள்ளார் தலை தடுமாற்றம் தேற

ஊமனைக் கொண்டு பாடல் உணர்த்திய ஒழுக்கம் சொல்வாம்.

2598. அந்தம் இல் கேள்வி ஓர் எண் அறுவரும் வேறு வேறு

செந்தமிழ் செய்து தம்மில் செருக்குறு பெருமை கூறித்

தந்தமின் மாறாய்த் தத்தந் தராதரம் அளக்க வல்ல

முந்தை நூல் மொழிந்த ஆசான் முன்னர் வந்து எய்தினாரே.

2599. தொழுதனர் அடிகள் யாங்கள் தொடுத்த இப் பாடல் தம் முள்

விழுமிதும் தீதும் தூக்கி வேறுபாடு அளந்து காட்டிப்

பழுதறுத்து ஐயம் தீரப் பணிக்க எனப் பணிந்தார் கேட்டு

முழுது ஒருங்கு உணர்ந்த வேத முதல்வனாம் முக்கண் மூர்த்தி.

2600. இருவரும் துருவ நீண்ட எரி அழல் தூணில் தோன்றும்

உரு என அறிவான் அந்த உண்மையால் உலகுக்கு எல்லாம்

கரு என முளைத்த மூல இலிங்கத் துணின்றும் காண்டற்கு

அரிய தோர் புலவனாகித் தோன்றி ஒன்று அருளிச் செய்வான்.

2601. இம் மா நகர் உள்ளான் ஒரு வணிகன் தனபதி என்று

அம் மா நிதிக் கிழவோன் மனை குண சாலினி அனையார்

தம் மாதவப் பொருட்டால் வெளிற்று அறிவாளரைத் தழுவும்

பொய் மாசு அறவினன் போல அவதரித்தான் ஒரு புத்தேள்.

2602. ஓயா விறல் மதனுக்கு இணை ஒப்பான் அவன் ஊமச்

சேய் ஆம் அவன் இடை நீர் உரை செய்யுள் கவி எல்லாம்

போய் ஆடுமின் அனையானது புந்திக்கு இசைந்தால் நன்று

யாவரும் மதிக்கும் தமிழ் அதுவே என அறைந்தான்.

2603. வன் தாள் மழ விடையாய் அவன் மணி வாணிகன் ஊமன்

என்றால் அவன் கேட்டு எங்கன் இப்பாடலின் கிடக்கும்

நன்று ஆனவும் தீது ஆனவும் நயந்து ஆய்ந்து அதன் தன்மை

குன்றா வகை அறைவான் என மன்று ஆடிய கூத்தன்.

2604. மல்லார் தடம் புய வாணிக மைந்த தனக்கு இசையக்

சொல் ஆழமும் பொருள் ஆழமும் கண்டான் முடி துளக்காக்

கல்லார் புயம் புளகித்து உளம் தூங்குவன் கலகம்

எல்லாம் அகன்றிடும் உங்களுக்கு என்று ஆலயம் சென்றான்.

2605. பின் பாவலர் எலாம் பெரு வணிகக் குல மணியை

அன்பால் அழைத்து ஏகித் தமது அவையத்து இடை இருந்தா

நன் பால் மலர் நறும் சாந்து கொண்டு அருச்சித்தனார் நயந்தே

முன்பால் இருந்து அரும் தீம் தமிழ் மொழிந்தார் அவை கேளா.

2606. மகிழ்ந்தான் சிலர் சொல் ஆட்சியை மகிழ்ந்தான் சிலர்

        பொருளை

இகழ்ந்தான் சிலர் சொல் வைப்பினை இகழ்ந்தான் சிலர்

        பொருளைப்

புகழ்ந்தான் சிலர் சொல் இன்பமும் பொருள் இன்பமும்

        ஒருங்கே

திகழ்ந்தான் சிலர் சொல் திண்மையும் பொருள் திண்மையும்

        தேர்ந்தே.

2607. இத் தன்மையன் ஆகிக் கலை வல்லோர் தமிழ் எல்லாம்

சித்தம் கொடு தெருட்டும் சிறு வணிகன் தெருள் கீரன்

முத் தண் தமிழ் கபிலன் தமிழ் பரணன் தமிழ் மூன்றும்

அத் தன் மையன் அறியும் தொறும் அறியும் தொறும் எல்லாம்.

2608. நுழைந்தான் பொருள் தொறும் சொல் தொறும் நுண் தீம்

        சுவை உண்டே

தழைந்தான் உடல் புலன் ஐந்தினும் தனித்தான் சிரம்

        பனித்தான்

குழைந்தான் விழிவிழி வேலையுள் குளித்தான் தனை

        அளித்தான்

விழைந்தான் புரி தவப் பேற்றினை விளைத்தான் களி

        திளைத்தான்.

2609. பல் காசொடு கடலில் படு பவளம் சுடர் தரளம்

எல்லாம் நிறுத்து அளப்பான் என இயல் வணிகக் குமரன்

சொல் ஆழமும் பொருள் ஆழமும் துலை நா எனத் தூக்க

நல்லாறு அறி புலவோர்களும் நட்டார் இகல் விட்டார்.

2610. உலகினுட் பெருகி அந்த ஒண் தமிழ் மூன்றும் பாடல்

திலகமாய்ச் சிறந்த வாய்ந்த தெய்வ நாவலரும் தங்கள்

கலகமா நவையில் தீர்ந்து காசு அறு பனுவல் ஆய்ந்து

புலம் மிகு கோட்டி செய்து பொலிந்தனர் இருந்தார் போலும்.

*****

இது ஒரு புறமிருக்க அதிகாரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் திருக்குறளிலும், சிலப்பதிகாரத்திலும் தொல்காப்பியத்திலும் மட்டுமே உள்ளன; இவை மூன்றும் சங்க காலத்துக்குப் பின்னர் ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் தொகுக்கப்பட்டவை ; நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்; தொல்காப்பியர் என்னும் த்ருண தூமாக்கினி முனிவர் , அகத்தியர்- ராமபிரான்- ராவணன் காலத்தில் வாழ்ந்திருக்கலாம்; அவர் சொன்ன இலக்கண விதிகளை யாரோ ஒருவர் அவர் பெயரில் தொகுத்து பிற்காலத்தில் நமக்குத் தந்துள்ளார் ; இது சிலப்பதிகாரத்துக்கும் பொருந்தும் ; சேரன் செங்குட்டுவன், சங்க கால மன்னன் என்பதில் ஐயமில்லை அவன் காலக் கதையைச் சொல்லும் நூல் சிலப்பதிகாரம் சுமார் 500  ஆண்டுகளுக்குப் பின்னர் எழுந்தது .

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய எல்லா நூல்களிலும் திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் சங்க காலத்துக்குப் பின்னரே வைத்துள்ளனர் என்பதையும் நினைவிற்கொள்ளவேண்டும்.

—subham—Tags:திருப்புகழ் ,  தொல்காப்பியம்,  பொருள் அதிகாரம், அருணகிரி

ஒரு காலை இழந்த மங்கை எவரெஸ்ட் சிகரம் ஏறிப் படைத்த சாதனை! (Post No.15,305)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,305

Date uploaded in London –   25 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

6-10-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

ஒரு காலை இழந்த மங்கை எவரெஸ்ட் சிகரம் ஏறிப் படைத்த சாதனை! 

ச. நாகராஜன் 

மனித மனதின் ஆற்றலுக்கு ஒரு எல்லையே இல்லை. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது பழமொழி.

ஆனால் ஒரு கால் இல்லாத போதும் மார்க்கம் உண்டு என்பதையும் அந்த மார்க்கமானது இமயமலையின் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்திற்கும் இட்டுச் செல்லும் என்பதையும் நிரூபித்தார் ஒரு இருபத்தாறே வயதான இள மங்கை.

அந்த வீராங்கனையின் பெயர் அருணிமா சின்ஹா.

உத்தர பிரதேசத்தில் லக்னோவிலிருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அம்பேத்நகர் மாவட்டத்தில் 1988ம் ஆண்டு பிறந்தார் அருணிமா. அவரது தந்தை ராணுவத்தில் ஒரு எஞ்ஜினியர். தாயார் க்யான் பாலா அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் ஒரு சூபர்வைஸர். தன் தந்தையை மூன்றாம் வயதில் இழந்தார் அவர். அவரையும் அவரது தமக்கை லக்ஷ்மியையும் தம்பி ராகுலையும் மாமனான  ஓம் பிரகாஷ் வளர்க்க ஆரம்பித்தார்.

சிறுவயதிலிருந்தே விளையாட்டுத் துறையில் ஆர்வமுடன் இருந்தார் அருணிமா. சட்டம் படித்து அதில் தேர்ந்தார் அவர்.

அவரது பிறந்த தேதி தவறாக  செண்ட்ரல் இண்டஸ்ட்ரியல் செக்யூரிடி ஃபோர்ஸின் அழைப்பில் குறிப்பிடப்பட்டிருந்ததைத் திருத்த அவர் டெல்லி செல்ல வேண்டி இருந்தது.

அப்போது தான் விதி சதி செய்து அவரது வாழ்க்கையில் விளையாடியது.

2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் நாள். பத்மாவத் எக்ஸ்பிரஸில் அவர் லக்னோவிலிருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இரவில் கொள்ளைக்காரர்கள் அவரைத் தாக்கி அவரது தங்க சங்கிலியைப் பிடுங்க முயன்றனர். அந்த சங்கிலி அவருக்கு அவர் தாயார் அளித்தது. அவர்களை அவர் கடுமையாக எதிர்த்தார்.

அவரது விளையாட்டுத் துறை பயிற்சி அவர்களைத் தடுக்க உதவி செய்தது. ரயிலில் இருந்த யாரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. அந்தக் கொள்ளையர்கள் அவரை ரயிலிலிருந்து தூக்கி வெளியே போட்டனர். எதிரிலிருந்த தண்டவாளத்தில் அவர் விழவே அப்போது அதில் வந்த ரயில் அவரது காலின் மீது ஏறியது. அவர் ஒரு காலை இழந்தார். 49 ரயில் வண்டிகள் தாண்டிச் செல்லும் வரையில் அவர் அதே இடத்தில் கிடந்தார்.

அடுத்த நாள் காலையில் தான் அங்கு வந்த சில கிராமத்தார்கள் அவரைத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது இடது கால் துண்டிக்கப்பட்டது.

அந்த மருத்துவமனையின் நிலையோ மகா மோசம். அவரது துண்டிக்கப்பட்ட காலை மறுநாள் காலையில் அங்கு வந்த தெருநாய் ஒன்று சுவைக்க ஆரம்பித்தது,

இது எல்லா செய்தித்தாள்களிலும் சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சியிலும் பெரும் பரபரப்புடன் பேசப்பட்ட பேசு பொருளானது.

உடனடியாக அவரை ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிகல் ஸயின்ஸஸ் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர்.

ஒரு காலை இழந்த அவரை இப்போது சமூகம் பரிதாபத்துடன் பார்க்க ஆரம்பித்தது.

இந்த சோகத்திலிருந்து மீண்டு எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஒரு ஊக்கம் அவர் மனதில் பிறந்தது.

எவரெஸ்டைப் பற்றிப் படிக்க ஆரம்பித்தார் அவர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏற 15 பாதைகள் உள்ளன. அதில் சிகரத்தை ஏறி வெல்லத் துடிக்கும் சாதனையாளர்களால் 14 பாதைகள் முயன்று பார்க்கப்பட்டவை. 15வது பாதையை அவர் தேர்ந்தெடுத்தார்.

செயற்கைக் கால் ஒன்றை அவர் பொருத்திக் கொண்டார்.

டாக்டர்களிடம் தனது எவரெஸ்ட் சிகரம் மீது ஏறும் எண்ணத்தைச் சொன்ன போது அவர்கள் சிரித்தனர். சிலரோ அவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று கூறினர். 

முதன் முதலாக எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய பெண்மணியான பசேந்திர பாய் என்பவர் ஜாம்ஷெட்பூரில் இருந்தார் அவரைச் சென்று சந்தித்தார் அருணிமா. அவர் ஒருவர் தான் அனுதாபத்துடன் இவர் கூறியதைக் கேட்டு ஊக்கமும் அளித்தார். அங்கேயே தங்கி பயிற்சி பெற ஆரம்பித்தார் அவர். 

18 மாதங்கள் கடுமையான பயிற்சியைப் பெற்றார் அவர்.

2013ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி தனது சாதனையை ஆரம்பித்த அவர் 52 நாட்களுக்குப் பிறகு  மே 21ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி நின்றார். 

அவர் சாதனையை அறிந்து உலகம் பிரமித்தது.

2015இல் இந்திய அரசு அவரைப் பாராட்டி பத்ம ஶ்ரீ விருது அளித்து கௌரவித்தது.

 உடல் ஊனம் ஒரு பொருட்டல்ல, மனதில் தைரியம் இருந்தால் மலையையும் வெல்லலாம் என்ற வழக்கு மொழியை வாழ்ந்து காட்டி மங்கையருக்கெல்லாம் ஒரு ஆதர்ச பெண்மணியாக அவர் திகழலானார்.

 இந்த வெற்றிக்குப் பின்னர் ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ மலை, ஐரோப்பாவின் எல்பராஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் கொள்கியஸ்கோ மலை ஆகியவற்றின் மீதும் ஏறி அவர் சாதனை படைத்தார்.

 உங்களை ஊக்குவித்தது எது என்று அவரைக் கேட்ட போது அவர் பதிலாகக் கூறியது இது தான்:

“ஸ்வாமி விவேகானந்தரே எனக்கு உத்வேகம் ஊட்டியவர். அவரது எழுமின் விழிமின், குறிக்கோளை அடையும் வரை தளராது செல்மின் என்ற வார்த்தைகளே இந்த சாதனையைப் படைக்க வைத்தது” என்றார் அவர்.

 சிறுவர் சிறுமியர்களுக்கு விளையாட்டில் பயிற்சி அளிக்க ஒரு அகாடமியை இவர் நிறுவி அவர்களுக்கு இப்போது  பயிற்சி அளித்து வருகிறார்.

 அவர் தனது வாழ்க்கையை “Born Again on the Mountain: A Story of Losing Everything and Finding it Back” என்ற நூலில் விளக்கமாகத் தந்துள்ளார்.

 உங்கள் குறிக்கோளை அடைய தளராது உழைத்து வெற்றி பெறுங்கள் என்பதே அவர் உலகத்தினருக்குத் தரும் அனுபவ மொழி!

**

Hinduism through 500 Pictures in Tamil and English-35; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-35 (Post.15,304)

Written by London Swaminathan

Post No. 15,304

Date uploaded in London –  24 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

The more popular forms of Vishnu, worshipped in temples, generally refer to numerous avatars or incarnations. There are ten such Avataaraas (Dasaavataar) recognised as of primary importance; but more popular in the temples are five incarnations; they are

Varaaha – the boar incarnation.

Narasimha- the man lion incarnation.

Vaamana – the dwarf incarnation developing eventually developing into Trivikrama.

Rama-the hero Raamaayana and

Krishna, the pastoral god and the chief actor in the great war of Mahabharata.

The other five incarnations of Vishnu, i.e. are

Fish, the Tortoise, Parasuraman, Balarama and Kalki though represented largely on walls, pillars, ceilings of temples, being either carved or painted, are not generally worshipped as the chief deity in a temple.

Varaha Avatara – varaaha avataara-, also known as

Aadi Varaaha or Bhuuvaraaha, is beautifully illustrated by the image in the cave temple at Mahabalipuram. Here the boar faced Visnu is seen standing with his right foot resting on the hood of the serpent god Sesha. On his right thigh is seated goddess earth, supported in position by the two lower arms of the god. He wears a high crown and has in his two upper hands the discus and the conch. Another Varaha Avatar statue is found in another rock cut mandapa in the shrine of Varaha Perumal cave temple.

The scene depicts the primeval boar rescuing from the depths of the ocean the goddess earth who had been kidnapped by the demon Hiranyaksha, an enemy of the gods.

Sesha on whose widespread hoods the earth is generally supposed to rest is also represented as rising from the ocean along with the boar god. He is folding his hands in the attitude of worship. The devas worshipping the god from above, the sages on the right and Brahma and Siva on the left indicate the joy felt by the entire universe on the occasion.

Figures of the man-boar in meditation or of a full boar digging the earth in the midst of many demons, are also sometimes represented.

This incarnation was a favourite of the Western Chalukya kings. A fine sculpture of Varaha carrying the goddess earth is found in the rock cut temple of Badami cave. In later times, the Kakatiyas, the Reddis of Kondavidu and the Hindu sovereigns of Vijayanagar paid reverence  to Varaha adopting the boar as their royal emblem.

At Srimushnam in South Arcot is a beautiful big temple dedicated to the god and so also another at Tiuvadaddai near Mahabalipuram.

Ten Avatars

420. His forms are a shining fish, a turtle, a boar, a lion,

a dwarf, Parasurāman, Balarāman, Rāma, Kaṇṇan

and Kalki, the form that will end the world.

His Thiruppadi is Srirangam surrounded with rippling water

where a male swan with its mate climbs on a lovely lotus,

swings on it and jumps on a flower bed,

plunging into it and playing in the beautiful pollen.

***

ஒரே பாட்டில் பத்து அவதாரங்கள்!

ஒரிஸ்ஸாவில் பிறந்து அஷ்டபதிகளைக் கொண்ட கீத கோவிந்தம் என்ற நூலினை நமக்கு அளித்த ஜெயதேவர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்  புத்தரையும் ஒரு அவதாரமாகச் சேர்த்தார். அதற்கு முன்னுள்ள அவதாரங்களை மட்டுமே நாம் ஆழ்வார் பாடல்களில் காண்கிறோம் ; பாகவதம் உதலிய நூல்களில் இருபதுக்கும் மேலான அவதாரங்களை கள் குறிப்பிடப்பட்டாலும் தசாவதாரம் என்ற பத்து அவதாரக் கணக்கு ஆழ்வார் பாசுரங்களிலேயே வந்துவிட்டன .

பத்து  அவதாரம்  பாசுரம்

419       தேவு உடைய மீனமாய் ஆமையாய் ஏனமரி

      குறளும் ஆகி

மூ-உருவில் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய்

      முடிப்பான் கோயில்

சேவலொடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி

      ஊசல் ஆடிப்

பூ-அணைமேல் துதைந்து எழு செம்பொடி ஆடி விளையாடும்

      புனல் அரங்கமே            (9)

அவை: மத்ஸ்யாவதாரம் (மீன்), கூர்மாவதாரம் (ஆமை) , வராஹாவதாரம் (காட்டுப்பன்றி), வாமன அவதாரம் (த்ரிவிக்ரமன்), நரசிம்மாவதாரம் (சிங்கமுக விஷ்ணு) , பரசுராமாவதாரம், ராமாவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ணாவதாரம், இனி வரப்போகும் கல்கி அவதாரம்

பத்து அவதாரங்கள் பட்டியல்

சோமுகாசுரனை வதைத்து, தேவர்களின் துயர் நீக்கி, வேதங்களை எடுத்துவந்த மச்சா வதாரம், தேவர்களுக்கு அமுது கிடைப்பதற்காக எடுத்த ஆமை /கூர்ம அவதாரம் , பெரிய பூமியைப் பாய்போல சுருட்டிச் சென்ற இரண்யாக்ஷனை அழித்தது வராஹாவதாரம் , பொல்லாத கனகன் எனும் இரணியனை வென்றது  நரசிம்மாவதாரம், ஓங்கி உலகை அளந்தது புனிதமான  வாமனாவதாரம் , களிப்புடன் கூத்தாடிய இராவணனை வென்றது ஸ்ரீ ராமாவதாரம் , சூர்ய குல அரசர்களை வேரறுத்த பரசுராம  அவதாரம், உலகத்தின் பயம் நீக்க வந்த கண்ணனும் அவனுடன் அவதரித்த பலராமனும் இரண்டு அவதாரங்கள், இனி வரப்போகும் கல்கி அவதாரம் ஆகிய பத்தும்  அவதாரங்களாம் .

ஜெயதேவர் சம்ஸ்க்ருதத்தில் எழுதிய அஷ்டபதியில் பலராமனுக்குப் பதிலாகப் புத்தரைச் சேர்த்திருந்தாலும் எல்லோரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

***

வராக அவதாரம்

மகாவிஷ்ணு, வராக (காட்டுப்பன்றி) அவதாரம் எடுத்து, இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமியை மீட்டார். கடலுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பூமியை, தன்னுடைய இரண்டு கோரைப் பற்களில் தாங்கியபடி மேல் எழுந்து வந்து, மீண்டும் வான்வெளியில் நிலைபெறச் செய்தார் என்பது புராண வரலாறு.

ஸ்ரீமுஷ்ணம் பூவராகர் கோவிலில், வராக மூர்த்தியாக இரண்டு கரங்களுடன், அதுவும் இடுப்பில் கையை வைத்தபடி எழிலான தோற்றத்துடன் காணப்படுகிறார். அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருப்பது மேலும் சிறப்பானதாகும். இங்குள்ள மூலவரின் திருமேனி, முழுவதும் சாளக் கிராமத்தினால் ஆனது. பன்றிக்கு மிகவும் விருப்பமானதான கோரைக் கிழங்கு இப்பெருமாளுக்குச் சிறப்பு பிரசாதமாக நிவேதனம் செய்யப்படுகிறது. ஸ்ரீ பூவராக சுவாமி மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். முகம் மட்டும் தெற்கு நோக்கி உள்ளது. அசுரர்களை வென்றதால் ஏற்பட்ட வெற்றிப் பெருமித உணர்ச்சியில் இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு முகத்தை நிமிர்த்தி கம்பீரமாக பார்க்கிறார்

To be continued………………….

Tags- வராக அவதாரம்,பூவராகன் கோவில் ஸ்ரீமுஷ்ணம்

ஆதிவராக குகை மஹாபலிபுரம் Hinduism through 500 Pictures in Tamil and English-35; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-35 ,ஒரே பாட்டில் பத்து அவதாரங்கள்!

BEAUTIFUL CARTOONS FROM DECCAN CHRONICLE UPTO 24 12 2025

BEAUTIFUL  CARTOONS FROM DECCAN CHRONICLE UPTO 24 12 2025.

POSTED BY LONDON SWAMINATHAN.

U GET GOOD CARTOONS EVERY DAY IN DECCAN CHRONICLE.

READ IT EVERYDAY

–SUBHAM- 

TAGS-  DECCAN CHRONICLE,  CARTOONS UPTO 24 12 2025.

‘அகர முதல் 51 அக்ஷரம்’ :அருணகிரி தரும் சுவையான செய்திகள் (Post.15,303)

Written by London Swaminathan

Post No. 15,303

Date uploaded in London –  24 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தமிழ் மொழியை முருகப்பெருமானுடனும் அகத்திய முனிவருடனும் தொடர்புபடுத்தும் இடங்கள் திருப்புகழில் ஏராளம் உள்ளன !

இவ்வாறு மொழியைக்  கடவுளிடம் இணைக்கும் அற்புதத்தை இந்து மதத்தில் மட்டுமே காண முடியும். 

இந்தத் தொடர்பு ரிக்வேத காலத்திலேயே ஏற்பட்டுவிட்டது . பெருக்கெடுத்து ஓடும் சரஸ்வதி நதிக்கும் வாக் தேவிக்கும் ஒரே பெயர் ; இது தவிர வாக் தேவிக்கே துதிகளும் உள்ளன ஆக வேதகாலம் முதல் பாரதி  காலம் வரை சரஸ்வதி- மொழி- வாணி- அகத்தியன்-தமிழ் இணைப்பினைக் காண்கிறோம்.

 தமிழ்த்தாய்

ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

முன்று குலத்தமிழ் மன்னர் – என்னை

மூண்ட நல்லன்போடு நித்தம் வளர்த்தார்,

ஆன்ற மொழிகளினுள்ளே – உயர்

ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்.— பாரதியார் பாடல்

****

சம்ஸ்க்ருதத்தில் அ–  முதல் க்ஷ வரை 51  எழுத்துக்கள் இருப்பதால் அ  to க்ஷ=  அக்ஷரம் என்று பெயர். (ALPHA+BETA= ALPHABET)

இவைகளை தேவியின் சொரூபம் என்றும் தேவியானவள் எழுத்துக்களையே மாலையாக அணிந்து இருப்பதாகவும் திருமூலர் முதல் பாரதி வரை தமிழில் பாடினர். சம்ஸ்க்ருதத்தில் ஆதிசங்கரர் முதல் லலிதா சஹஸ்ரநாம ஹயக்ரீவர் வரை பலரும் பாடியுள்ளார் கள்.

****

1

அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்

  அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்

    அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை …… எப்பொருளுமாய

அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய

  முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய

    அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு …… மற்றதொருகாலம்

நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை

  நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை

    நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ …… ரித்தபெருமானும்

நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு

  பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய

    நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது …… ணர்த்தியருள்வாயே

தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு

  டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு

   தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத …… தத்ததகுதீதோ

தனதனன தனதனன தந்தந்த னத்ததன

  டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு

   தரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு …… டுக்கையுமியாவும்

மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்

  அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட

    முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக …… ளத்திலொருகோடி

முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி

  நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட

    முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச …… ளித்தபெருமாளே.

BY SRI GOPALASUNDARAM IN KAUMARAM.COM

……… சொல் விளக்கம் ………

அகரமுத லெனவுரைசெய் … அகரம் முதல் எழுத்தாக கூறப்படுகின்ற

ஐம்பந்தொர் அக்ஷரமும் … (வட மொழியிலுள்ள) ஐம்பத்தி ஒன்று

எழுத்துக்களும்,

அகிலகலைகளும் … உலகத்திலுள்ள எல்லாக் கலைகளும்,

வெகுவிதங்கொண்ட தத்துவமும் … பலதரப்பட்ட (96)

தத்துவங்களும்*,

அபரிமித சுருதியும் … அளவிட முடியாத வேதங்களும்,

அடங்குந்தனிப்பொருளை … தனக்குள் அடக்கிக் கொண்டுள்ள

ஒப்பற்ற பரம்பொருளை,

……………………………………………………. என்ற வரிகளால் அறியலாம்.

***

2

இதோ இன்னும் ஒரு திருப்புகழ் ; இதுவும் அருணகிரிநாதர் பாடியது

ஐந்து பூதமு மாறு சமயமு

     மந்த்ர வேதபு ராண கலைகளும்

          ஐம்ப தோர்வித மான லிபிகளும் …… வெகுரூப

அண்ட ராதிச ராச ரமுமுயர்

     புண்ட ரீகனு மேக நிறவனும்

          அந்தி போலுரு வானு நிலவொடு …… வெயில்காலும்

சந்த்ர சூரியர் தாமு மசபையும்

     விந்து நாதமு மேக வடிவம

          தன்சொ ரூபம தாக வுறைவது …… சிவயோகம்

தங்க ளாணவ மாயை கருமம

     லங்கள் போயுப தேச குருபர

          சம்ப்ர தாயமொ டேயு நெறியது …… பெறுவேனோ

……………………………………

……… சொல் விளக்கம் ………

ஐந்து பூதமும் … மண், நீர், தீ, காற்று, வெளி ஆகிய ஐந்து பூதங்களும்,

ஆறு சமயமு … சைவம், வைணவம், காணாபத்யம், கெளமாரம், சாக்தம், செளரம் என்ற ஆறு சமயங்களும்,

மந்த்ர வேத புராண கலைகளும் … மந்திரங்களும், வேதங்களும்,

புராணங்களும்*, கலைகளும்,

ஐம்பதோர்விதமான லிபிகளும் … ஐம்பத்தொரு விதமான

எழுத்துக்களும்,

வெகுரூப அண்டர் ஆதி சராசரமும் … அனேக உருவங்களுடன்

கூடிய தேவர்கள் முதல் அசைகின்ற, அசையாத உயிர்கள் யாவும்,

உயர் புண்டரீகனு மேக நிறவனும் … உயர்ந்த பிரமனும், கார்மேக

நிறத்துத் திருமாலும்,

அந்தி போலுருவானு … அந்தி வானம் போன்ற செம்மேனியை

உடைய ருத்திரனும்,

நிலவொடு வெயில்காலும் … நிலவோடு வெயிலை வீசுகின்ற

சந்த்ர சூரியர் தாமும் … சந்திரனும், சூரியனும்,

அசபையும் … அம்ச மந்திரமும்**

விந்து நாதமும் … சுக்கில சுரோணிதமாக விளங்கும் சிவ சக்தியும்,

ஏக வடிவம் … இவை அனைத்தும் கலந்து இருப்பது ஒரே வடிவமாகும்.

…………………………………………..

** அசபை என்ற அம்ச மந்திரம் வடமொழியில் ஸோஹம் என்பது. ஸ + அஹம்,அதாவது அவனே நான் என்ற, பரமாத்மா – ஜீவாத்மா ஐக்கியத்தைக் குறிப்பிடும் மந்திரம்.

*****

3

அக்ஷர தேவி

மூன்றாவது  திருப்புகழ் பாடலைக் காண்போம் –

அப்படி யேழு மேழும்வ குத்துவ ழாது போதினி

     னக்ரம்வி யோம கோளகை …… மிசைவாழும்

அக்ஷர தேவி கோவின்வி திப்படி மாறி மாறிய

     னைத்துரு வாய காயம …… தடைவேகொண்

டிப்படி யோனி வாய்தொறு முற்பவி யாவி ழாவுல

     கிற்றடு மாறி யேதிரி …… தருகாலம்

எத்தனை யூழி காலமெ னத்தெரி யாது வாழியி

     னிப்பிற வாது நீயருள் …… புரிவாயே

கற்பக வேழ மேய்வன பச்சிள ஏனல் மீதுறை

     கற்புடை மாது தோய்தரு …… மபிராம

கற்புர தூளி லேபன மற்புய பாக சாதன

     கற்பக லோக தாரண …… கிரிசால

விப்ரச மூக வேதன பச்சிம பூமி காவல

     வெட்சியு நீப மாலையு …… மணிவோனே

மெத்திய ஆழி சேறெழ வெற்பொடு சூர னீறெழ

     விக்ரம வேலை யேவிய …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

அப்படி ஏழும் ஏழும் வகுத்து வழாது போதினின் அக்ரம …

அவ்வாறாக பதினான்கு உலகங்களும்* தவறில்லாமல் படைத்து,

தாமரை மலரில் அமர்ந்து முதன்மை ஸ்தானம் வகிப்பவரும்,

வியோம கோளகை மிசை வாழும் … அண்ட கோளத்திலும்

வாழ்கின்றவரும்,

அக்ஷர தேவி கோவின் விதிப்படி மாறி மாறி … சரஸ்வதி

தேவியின் கணவனுமான பிரமதேவன் எழுதியுள்ள விதியின்படி,

(பிறப்புக்கள்) மாறி மாறி,

அனைத்து உரு ஆய காயம் அது அடைவே கொண்டு …

எல்லா உருவங்களையும் கொண்ட உடல்களை முறையே நான் எடுத்து,……………………………………………………..

***

4

இதோ நான்காவது திருப்புகழ் !

மாத்ருகா புஷ்ப மாலை

ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம

     மானபூ வைத்து …… நடுவேயன்

பானநூ லிட்டு நாவிலே சித்ர

     மாகவே கட்டி …… யொருஞான

வாசம்வீ சிப்ர காசியா நிற்ப

     மாசிலோர் புத்தி …… யளிபாட

மாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ர

     வாளபா தத்தி …… லணிவேனோ

மூசுகா னத்து மீதுவாழ் முத்த

     மூரல்வே டிச்சி …… தனபார

மூழ்குநீ பப்ர தாபமார் பத்த

     மூரிவே ழத்தின் …… மயில்வாழ்வே

வீசுமீ னப்ப யோதிவாய் விட்டு

     வேகவே தித்து …… வருமாசூர்

வீழமோ திப்ப ராரைநா கத்து

     வீரவேல் தொட்ட …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

ஆசைகூர் பத்தனேன் … உன் மீது ஆசை மிகுந்த பக்தியை

உடைய நான்

மனோ பத்மமானபூ வைத்து … மனம் எனப்படும் தாமரை மலரை

வைத்து,

நடுவேயன்பானநூலிட்டு … இடையில் அன்பு என்னும் நாரைக்

கொண்டு,

நாவிலே சித்ரமாகவே கட்டி … நாக்கு என்னும் இடத்திலே அழகான

ஒரு மாலையைத் தொடுத்து,

ஒருஞான வாசம்வீசி … அந்த மாலையின் மீது ஒப்பற்ற ஞானம்

என்னும் நறுமணத்தைத் தடவி,

ப்ரகாசியா நிற்ப … அந்த மாலை மிக்க ஒளியுடன் விளங்கவும்,

மாசிலோர் புத்தி யளிபாட … அதைச் சுற்றி குற்றமற்ற ஒரு அறிவு

என்ற வண்டு மொய்த்துப் பாடவும்,

மாத்ருகா புஷ்ப மாலை … மாத்ருகா மந்திர* மாலையான இந்தப்

பூமாலையை

கோல ப்ரவாள பாதத்தில் அணிவேனோ … அழகிய பவளம்

போல் சிவந்த திருவடிகளில் அணிவிக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ?

………………………………………..

* வடமொழியில் அ முதல் க்ஷ முடிய உள்ள 51 அக்ஷரங்களைக் கொண்ட மாத்ருகா புஷ்ப மாலை.

சுப்ரமண்ய பராக்ரமம் என்ற நூலில் வரும் இந்தமந்திரம், முருகன் 51 அக்ஷர உருவில் இருப்பதை விளக்குகிறது.

–subham—

TAGS- முருகன், மாத்ருகா புஷ்ப மாலை, அக்ஷர தேவி, ‘அகர முதல், 51 அக்ஷரம்’, அருணகிரி நாதர், சுவையான செய்திகள்

வெற்றிக்கான இருபது குணங்களைக் காட்டும் சிங்கம், கொக்கு, சேவல்,காக்கை, நாய், கழுதை! (Post No.15,302)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,302

Date uploaded in London –   24 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

MOTIVATION 

வெற்றிக்கான இருபது குணங்களைக் காட்டும் சிங்கம்கொக்குசேவல்,காக்கைநாய்கழுதை!

 ச. நாகராஜன் 

நமது அற நூல்கள் எங்கிருந்தாலும் யாரிடமிருந்தும் நல்லனவற்றைக் கற்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

அன்றாட வாழ்க்கையில் வெற்றி பெற நாம் கடைப்பிடிக்க வேண்டிய குணங்களை மிருகங்களிடமிருந்தும் பறவைகளிடமிருந்தும் கூடக் கற்கலாம்.

இப்படி இருபது குணங்களை நமது அறநூல் பட்டியலிடுகிறது. 

சிங்கத்திடமிருந்து ஒரு குணத்தையும், கொக்கிடமிருந்து ஒரு குணத்தையும், சேவலிடமிருந்து நான்கு குணங்களையும் காக்கையிடமிருந்து ஐந்து குணங்களையும், நாயிடமிருந்து ஆறு குணங்களையும் கழுதையிடமிருந்து மூன்று குணங்களையும் நாம் கற்கலாம்.

 சிங்கத்திடமிருந்து கற்க வேண்டிய ஒரு குணம்

ஒரு வேலை சிறியதாக இருந்தாலும் சரி அல்லது பெரியதாக இருந்தாலும் சரி, அதை முடிக்க உங்கள் முழு பலத்தையும் உபயோகப்படுத்த வேண்டும். இது தான் சிங்கத்திடமிருந்து ஒருவர் கற்க வேண்டிய ஒரு குணமாகும்.

 கொக்கிடமிருந்து கற்க வேண்டிய ஒரு குணம்

புத்திசாலியான ஒருவன் நேரமும் காலமும் இடமும் நமக்கு ஒத்து இருக்கும் போது தான் நமது குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும்.

இப்படி நமக்கு வெற்றி தரும் தருணத்தைக் காத்திருந்து பெற்று வெற்றி அடைவதைக் கொக்கிடமிருந்து கற்க வேண்டும்.

 ஔவையார் மூதுரையில் கூறும் அறிவுரை இது:

அடக்கம் உடையார் அறிவிலர்என் றெண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில்

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்

வாடி இருக்குமாம் கொக்கு.

 சேவலிடமிருந்து கற்க வேண்டிய நான்கு குணங்கள்

காலையில் சீக்கிரமே எழுந்திருப்பது, எதிரியுடன் சண்டை போடத் தயாராக இருப்பது, தனக்குக் கிடைத்த ஆதாயங்களை புதிதாக வருபவருடன் பகிர்ந்து கொள்வது, சந்தோஷத்தை வலியப் பெற்று அனுபவிப்பது ஆகிய இந்த நான்கு குணங்களையும் சேவலிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

 காக்கையிடமிருந்து கற்க வேண்டிய ஐந்து குணங்கள்

உடலுறவில் ரகசியத்தைப் பாதுகாப்பது, தைரியமாக இருப்பது, பரபரப்பு அல்லது மனநடுக்கம் கொள்ளாமல் இருப்பது, எதிர்காலத்திற்குச் சேமித்து வைத்துக் கொள்வது, எந்த ஒன்றையும் உடனடியாக அல்லது அவசரம் அவசரமாக நம்பாமல் இருப்பது ஆகிய இந்து ஐந்து குணங்களையும் காக்கையிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

 நாயிடமிருந்து கற்க வேண்டிய ஆறு குணங்கள்

நிறைய உண்பது. குறைவாகவே கிடைத்தாலும் அதில் திருப்தி அடைவது, உடனடியாக தூக்கம் அடைவது, நல்ல தோழனாக இருப்பது, நம்பிக்கைக்குரிய பணியாளனாகவும் இருப்பது, அதிக தைரியத்துடன் இருப்பது ஆகிய இந்த ஆறு குணங்களையும் நாயிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

 கழுதையிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய மூன்று குணங்கள்

எவ்வளவு களைத்திருந்தாலும் சுமையைச் சுமந்து செல்வது,  மழையோ வெய்யிலோ அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வேலையைச் செய்து முடிப்பது, திருப்தியுடன் செல்வது ஆகிய இந்த மூன்று குணங்களையும் கழுதையிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

 ஆக இப்படி இருபது குணங்களை சிங்கம், கொக்கு, சேவல், காக்கை, நாய், கழுதை ஆகியவற்றிடமிருந்து நாம் கற்றுக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடித்தால் ஒரு நாளும் நமக்குத் தோல்வியே கிடையாது.

என்றுமே வெற்றி தான்! எதிலுமே வெற்றி தான்! 

**

மனு நீதி சாஸ்திரம் பற்றி அருணகிரிநாதர் தரும் புதிய தகவல்! (Post No.15,301)

Written by London Swaminathan

Post No. 15,301

Date uploaded in London –  23 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சரஸ்வதி நதி தீர வயிரவி வனம் முருகன் கோவில் பற்றி அருணகிரிநாதர் பாடினார் ; இதுவரை நம்மால் அந்த ஊரினைக் கண்டுபிடிக்க முடியவில்லை ; திருப்பதி மலை மீது முருகன் இருப்பது  பற்றியும் பாடினார்; அது பாலாஜி கோவிலா அல்லது வேறு ஒரு முருகன் கோவில் இருந்ததா என்றும் தெரியவில்லை ; பழனி பற்றிய கதையில் மாம்பழம் பற்றி நாம் அறிவோம் ; ஆனால் அருணகிரியோ மாதுளம் கனி பற்றிப் பாடுகிறார் அந்தப் புதிரும் விடுபடவில்லை இப்போது சிதம்பரம் திருப்புகழில் முருகப்பெருமான்தான் மனு ஸ்ம்ருதி நூலினைக் கொடுத்தார் என்று பாடி மேலும் ஒரு புதிர் போடுகிறார்! 

****

சந்திரவோலைகுலாவ -சிதம்பரம் திருப்புகழ்

சந்திர வோலைகு லாவ கொங்கைகள்

     மந்தர மாலந னீர்த தும்பநல்

          சண்பக மாலைகு லாவி ளங்குழல் …… மஞ்சுபோலத்

தண்கயல் வாளிக ணாரி ளம்பிறை

     விண்புரு வாரிதழ் கோவை யின்கனி

          தன்செய லார்நகை சோதி யின்கதிர் …… சங்குமேவுங்

கந்தரர் தேமலு மார்ப ரம்பநல்

     சந்தன சேறுட னார்க வின்பெறு

          கஞ்சுக மாமிட றோதை கொஞ்சிய …… ரம்பையாரைக்

கண்களி கூரவெ காசை கொண்டவர்

     பஞ்சணை மீதுகு லாவி னுந்திரு

          கண்களி ராறுமி ராறு திண்புய …… முங்கொள்வேனே

இந்திர லோகமு ளாரி தம்பெற

     சந்திர சூரியர் தேர்ந டந்திட

          எண்கிரி சூரர்கு ழாமி றந்திட …… கண்டவேலா

இந்திரை கேள்வர்பி தாம கன்கதி

     ரிந்துச டாதரன் வாச வன்தொழு

          தின்புற வேமனு நூல்வி ளம்பிய …… கந்தவேளே

சிந்துர மால்குவ டார்த னஞ்சிறு

     பெண்கள்சி காமணி மோக வஞ்சியர்

          செந்தினை வாழ்வளி நாய கொண்குக …… அன்பரோது

செந்தமிழ் ஞானத டாக மென்சிவ

     கங்கைய ளாவும காசி தம்பர

          திண்சபை மேவும னாச வுந்தர …… தம்பிரானே.

……… சொல் விளக்கம் ………

(By Sri Gopalasundaram in kaumaram.com)

சந்திர ஓலை குலாவ கொங்கைகள் மந்தரம் ஆல நல் நீர்

……….., அவர்களுடன்

மெத்தை மீது குலவி விளையாடினும், உனது அழகிய பன்னிரண்டு

கண்களும், பன்னிரண்டு வலிய திருப்புயங்களும் என் மனதில் கொண்டு உன்னைத் தியானிப்பேன்.

இந்திர லோகம் உளார் இதம் பெற சந்திர சூரியர் தேர்

நடந்திட எண் கிரி சூரர் குழாம் இறந்திட கண்ட வேலா …

இந்திர லோகத்தில் இருக்கும் தேவர்கள் இன்பம் பெறவும், சந்திர

சூரியர்களுடைய தேர்கள் நன்கு உலாவி வரவும், எட்டு மலைகளில்

இருந்த அசுரர் கூட்டங்கள் அழியும்படியாகக் கண்ட வேலனே,

இந்திரை கேள்வர் பிதா மகன் கதிர் இந்து சடாதரன் வாசவன்

தொழுது இன்புறவே மனு நூல் விளம்பிய கந்த வேளே …

லக்ஷ்மியின் கணவராகிய திருமாலும், பிரமனும், ஒளி வீசும் சந்திரனைச்  சடையில் தரித்த சிவபெருமானும், இந்திரனும் தொழுது இன்பம் பெறவே,

மனு நூல் (தரும சாஸ்திரத்தை) எடுத்து ஓதிய கந்த வேளே.

சிந்துர(ம்) மால் குவடு ஆர் தனம் சிறு பெண்கள் சிகா மணி

மோக வஞ்சியர் செம் தினை வாழ் வ(ள்)ளி நாயக … செங்

குங்குமம் அணிந்து பெரிய மலை போன்ற மார்பகங்களைக் கொண்ட சிறு

பெண்களுக்கு எல்லாம் முதன்மையானவளாய், உன் ஆசைக்கு உகந்த

வஞ்சிக் கொடி போன்றவளாய், செவ்விய தினைப் புனத்தில் வாழ்ந்த

வள்ளிக்கு நாயகனே,

ஒண் குக அன்பர் ஓதுசெந்தமிழ் ஞான தடாகம் என் சிவ

கங்கை அளாவும் மகா சிதம்பர திண் சபை மேவும் ம(ன்)னா

சவுந்தர தம்பிரானே. … செந்தமிழ் ஞானத் தீர்த்தமாகிய சிவகங்கை

என்னும் தடாகம்* விளங்கும் சிறந்த சிதம்பரம் என்னும் தலத்தில்,

திண்ணிய கனக சபையில் விளங்கி நிற்கும் அரசனே, அழகிய தம்பிரானே.

* இத் தீர்த்தத்தில் நீராடினால் செந்தமிழ் ஞானம் பெறலாம்.

***

மனு நூல் என்பதை பொதுவில் தர்ம சாஸ்திரம் என்று திரு கோபால சுந்தரம் எழுதியுள்ளார் . மனு முதலான தர்ம சாஸ்திரங்கள் என்று பொருள் கொள்வதில் தவறில்லை. ஏனெனில் இந்துக்கள் காலத்துக்கும் இடத்துக்கும் சூழ்நிலைக்கும் தக்கவாறு சட்ட விதிகள் மாறும் என்று எண்ணி மனுவுக்குப் பின்னர் சுமார் 20 ஸ்ம்ருதிகளை/ சட்டப்  புஸ்தககங்களை எழுதியுள்ளனர்; இப்போது இந்தியர்கள் பின்பற்றுவது இந்திய அரசியல் சட்டம் எனப்படும் சட்டம் ஆகும் . அதையும் கூட நாம் அவ்வப்போது திருத்தி வருகிறோம். சங்க காலம் முதல் மஹாத்மா காந்தி காலம் வரை மனு ஸ்ம்ருதியைப் பாராட்டியதால் நாமும் மனு நீதி சோழனுக்குப்  பல இடங்களில் சிலை வைத்தோம்.

கல்வெட்டுகளிலும் செப்புப் பட்டயங்களிலும், மன்னர்கள் மனு நீதிப்படி ஆட்சி செய்ததாகப் புகழ்ந்துரைத்துள்ளனர் . அருணகிரிநாதரும் அவ்வாறே கருதி முருகன் மீது மனு தர்ம நூலை ஏற்றிவிட்டார் போலும்!

–subham—

Tags– மனு நீதி சாஸ்திரம்,முருகன் கொடுத்தது, அருணகிரிநாதர், புதிய தகவல்

Purananuru Wonders 4- Ancient Tamil Encyclopaedia Part 44 (Post.15,300)

TAMIL POET LOOKED LIKE A FOX.

Written by London Swaminathan

Post No. 15,300

Date uploaded in London –  23 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Ancient Tamil Encyclopaedia 44; One Thousand Interesting Facts -Part 44

***

Item 278

புறநானூறு 4பாடியவர்: பரணர்பாடப்பட்டோன்: சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி,

In Purananuru verse 4 composed by Paranar, we see a metaphor describing the king in  the battlefield.

Blood stained sword of the Choza king- red sky;

Anklets- horns of the bull;

Shield with the holes- targets ;

Horses with red mouth- tiger that killed a deer;

Elephants- Yama, God of death;

The king riding a chariot- sun rising in the blue sea.

***

279

தாயில் தூவாக் குழவி போல
ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே

There is a beautiful simile as well.

The countries conquered by you are wailing, crying like a motherless child.

Poet Paranar is famous for his similes and metaphors.

***

280

Very interesting story about fox headed poet

புறநானூறு 5பாடியவர்: நரிவெரூஉத்தலையார்பாடப்பட்டோன்: சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல்

There are two interpretations. 1.He is from a town named Nariverūuthalai which is not correct.

2.He has a disgusting head like a fox which was cured by the king.

Here also there are two interpretations.

As soon as he saw the king, his head disease was cured by a MIRACLE. And he got normal face with normal head.

In those days kings were considered Gods. People believed that just kings could do miracles. Even Tiruvalluvar talks about such miracles. If the king rules justly, the fields will yield tremendous harvest without any effort, he said.

Second interpretation is the king helped him to get proper medical treatment.

***

281

காவல் குழவி கொள்பவரின் ஓம்புமதி,

He is also using a simile about children.

I have to tell you
something!  Protect your country like you
would guard an infant
.

****

Full of Hindu Puranic Details!

Puranānūru 6, Poet Kāri Kizhār sang to Pandiyan Palyākasālai Muthukudumi Peruvazhuthi 

282

From Himalayas to Kanyakumari

Poet Kaarikizaar gives us very important details:

Eka Bharat- One India. From North to South and from East to West, One India.

Still there are some ignorant people in India who has been writing that British rule united India. But Hindu scriptures have been writing Aa Setu Himachala—From Dhanushkoti to Himalayas—

புறநானூறு 6பாடியவர்: காரிகிழார்பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி


வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும்,
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும்,

***

283

Saluted Brahmins and Lord Shiva!

Pandya King Mudykudumi Peruvazuthi bows his head only on two occasions. When he is going around the Shiva Temple and when Brahmins bless him reciting the Four Vedas.


முனிவர் முக்கண் செல்வர் நகர் வலஞ் செயற்கே,
இறைஞ்சுக பெரும நின் சென்னி! சிறந்த
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே

The word Shiva never occurs in Tamil until very late period like sixth century CE. But the poets used Blue throated, Three Eyed/Trayambaka god to mention Lord Siva. Here three eyed god is used.

***

284

Throughout Sanskrit literature particularly, Kalidasa works, we see the kings are compared to Pancha Bhutas/five elements, Dik Palakas/Eight Vedic Gods of Eight Directions and Sun and Moon. Even in Purushasukta of Rig Veda tenth Mandala we see Sun and Moon are associated with the all-pervading God.

Here the poet compared the king with sun and moon.
தண்கதிர் மதியம் போலவும், தெறு சுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்,
மன்னிய பெரும, நீ நிலமிசையானே!

Comparison with Kalidasa

Raghuvamsa – 1-29;2-75; 3-27; 4-11, 12; 6-31, 32.

In 4-11,12 and 6-31,32 we see Moon and Sun comparison to kings in Kaldasa.

***

285 Go Loka

It looks like the poet was thorough with Hindu scriptures

He mentioned Yama;

He mentioned Go Loka (World of Cows)

He mentioned also the Sea Dug by Sagaras; that is why ocean is called Saagaram in Sanskrit

முப்புணர் அடுக்கிய Three Layers Bhur Bhuva Suvaha ; தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும் Ancient ocean; ஆனிலை உலகத்தானும் Go LOka –, தெரிகோல் ஞமன் போல Yama with Balance to weigh the Papa and Punya

***
286

Sanskrit words used by the poet

Nagar- Temple

Gnaman -Yama

Yaagasaalaa – Firepit Sacrifice Shed

Ulakam – lokam

Desam- theyam

Muni- munivar

(Naan marai – four vedas)

***

287

Dharma, Artha Kama, Moksha 

Four Hindu values are mentioned in Tolkappiam and Tirukkural; in fact Kural is named (Muppaal in Tamil) Dharma, Artha, Kama in the same order.

Here the commentators add one more interesting interpretation. Poet Karikizar mentioned Mokha by mention the King Circumambulating temple, mentioned Dharma by the mention of Bowing to Brahmins in Yaga sala, Kama by referring to Let your anger disappear when you see family women, and Artha by mentioning conquering enemy lands. 

To be continued………… 

Tags- Purananuru Wonders 4, Go loka, Hindu Values, Yaga Sala, bowing to Brahmins, Going round temple, Ancient Tamil Encyclopaedia 44, One Thousand Interesting Facts -Part 44

ஷீர்டி சாயிபாபாவுக்கு வந்த கோர்ட் சம்மன்! (Post No.15,299)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,299

Date uploaded in London –   23 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

4-10-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

ஷீர்டி சாயிபாபாவுக்கு வந்த கோர்ட் சம்மன்!

ச. நாகராஜன்

துலியா நகர் மாஜிஸ்ட்ரேட்டிற்கு முன்னால் ஒரு விசித்திர வழக்கு விசாரணைக்கு வந்தது.

ஒருவன் நகைகளைத் திருடி விட்டான் என்பதே அந்த வழக்கு.

அந்த நகைகளை வைத்திருந்தவனோ அவற்றை ஷீர்டி சாயிபாபா தான் தனக்குக் கொடுத்தார் என்றான்.

“அவரையே கேட்டுப் பாருங்கள். அவர் தான் இதற்கு சாக்ஷி” என்றான் அவன். அனைவரும் திகைத்தனர்.

மாஜிஸ்ட்ரேட்டிற்கு வேறு வழி இல்லை.

அவர் ஷீர்டி சாயிபாபாவிற்கு சம்மனை அனுப்பினார்.

கான்ஸ்டபிள் ஒருவன் சம்மனைக் கொண்டு வந்து ஷீர்டி சாயிபாபாவிடம் கொடுக்க முனைந்தார்.

“அதை அந்தத் தீயில் போடு” என்றார் பாபா.

அங்கிருந்த சீடர் ஒருவர் அதை வாங்கித் தீயில் போட்டார்.

இது கோர்ட்டுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டது என்பது தெரிந்தும் அவர் வராமல் இருந்ததற்காக  அவருக்கு பிடி வாரண்ட் அனுப்பப்பட்டது.

கண்பத்ராம் என்ற கான்ஸ்டபிள் பாபாவிடம் வந்து, “பாபா, அவர்கள் வாரண்டை அனுப்பி இருக்கிறார்கள்’ என்றார்.

“என்னுடன் தயவு செய்து துலியாவிற்கு வர முடியுமா?” என்று அவர் பணிவுடன் கேட்டார்.

“அதைத் தூக்கி எறி” என்றார் பாபா.

அவர் திகைத்துப் போனார்.

அங்கிருந்த சீடர் என்.ஜி. சந்தோர்கர் ஒரு யோசனை கூறினார். அதன் படி ஒரு மகஜர் தயாரிக்கப்பட்டது. அதில் பாபா ஏராளமான பக்தர்களால் வணங்கப்படுபவர் என்றும். இப்படி வாரண்ட் அனுப்புவது முறையற்றது என்றும் சாட்சியம் நிச்சயம் தேவைப்பட்டது என்றால் ஒரு கமிஷனரை அனுப்பலாம் என்றும் மகஜரில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி முதல் வகுப்பு மாஜிஸ்ட்ரேட்டான நானா ஜோஷி கமிஷனராக ஷீரடிக்கு வந்தார்.

விசாரணை ஆரம்பமானது.

கமிஷனர்: உங்கள் பெயர் என்ன?

பாபா: என்னை எல்லோரும் சாயி பாபா என்று அழைக்கிறார்கள்.

கமிஷனர்: உங்களுடைய தந்தையின் பெயர் என்ன?

பாபா: அவர் பெயரும் சாயிபாபா தான்.

கமி: உங்கள் குருவின் பெயர் என்ன?

பாபா: வெங்கூசா

கமி: அவரதி ஜாதி, மதம் என்ன?

பாபா: கபீர்

கமி: ஜாதி? இனம் என்ன?

பாபா : பரவார்திகர் (இந்தச் சொல்லுக்கு கடவுள் என்று அர்த்தம்)

கமி: வயது என்ன?

பாபா: பல லட்சம் வருஷங்கள்.

கமி: நீங்கள் சொல்வதெல்லாம் சத்தியம் என்று சத்தியம் செய்வீர்களா?

பாபா: நான் சொல்வதெல்லாம் சத்தியமே.

கமி: உங்களுக்கு குற்றம் சாட்டப்பட்டவரைத் தெரியுமா?

பாபா; தெரியும். எனக்கு எல்லோரையும் தெரியும்.

கமி: அந்த குற்றம் சாட்டப்பட்டவர் உங்களது பக்தன் என்று தன்னைச் சொல்லிக் கொள்கிறார்.  அது உண்மையா?

பாபா : ஆம், நான் ஒவ்வொருவருடனும் இருக்கிறேன். அனைவரும் என்னுடையவரே.

கமி: நீங்கள் அந்த நகைகளைக் கொடுத்ததாக அவர் சொல்கிறார். கொடுத்தீர்களா?

பாபா; ஆம். நான் கொடுத்தேன். யார் யாருக்குக் கொடுக்கிறார்கள்?

கமி: நீங்கள் அவற்றை அவருக்குக் கொடுத்தீர்கள் என்றால், அவை உங்களுக்கு எப்படிக் கிடைத்தது? அதை எப்படி உங்கள் வசம் நீங்கள் வைத்திருந்தீர்கள்?

பாபா: இதெல்லாம் என்ன? இந்த சனியனோடு எனக்கு என்ன தொடர்பு?

கமிஷனர் திகைத்தார். பிறகு அனைவரும் கூடி யோசித்தனர்.

கிராமத்திலிருந்த குறிப்புகளைக் கொண்டு வருமாறு அனைவரும் கூறினர். அதில் கிராமத்தைச் சேராத அந்நியர்கள் வந்ததற்கான குறிப்புகளை எடுத்தனர்.

அதில் நகைகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் அந்த கிராமத்திற்கு அந்து குறிப்பிட்ட தேதியில் பாபாவைச் சந்தித்தற்கான எந்த வித குறிப்பும் பதிவாகியிருக்கவில்லை.

பாபா கிராமத்தை விட்டு எங்கும் செல்பவர் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இவற்றையெல்லாம் கமிஷனர் எழுதி பாபாவிடம் காட்டினார்.

பாபா அவை உண்மை தான் என்றார்.

கமிஷனர் ஒருவாறாக தனது அறிக்கையைத் தயார் செய்தார்.

பாபாவிடம் கையெழுத்து கேட்கவில்லை கமிஷனர்.

அங்கிருந்து அவர் சென்றார். சாட்சியம் இப்படியாக முடிந்தது.

பாபா எந்த ஒரு காலத்திலும் எந்த ஒரு பேப்பரிலும் தன் கையெழுத்தை இட்டதே இல்லை.

விசித்திரமான இந்த வழக்கு இப்படியாக முடிந்தது!

ஆதாரம்: Sri Sai Baba’s Charters and Sayings – B.V. Narasimhaswami

Chapter Baba’s independence

***