சந்திரனில் மறைந்திருக்கும் மலைகளைக் கேள்விப்பட்டிருந்தார் அந்த புதுப் பகுதிகளைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் உள்ள அறிஞரான ஹென்றி ஸ்டான்லி!
கிரேக்கத்தில் வாழ்ந்து வந்த பிரபல கணித மேதையான தாலமி சந்திர மலைகளைப் பற்றிய கதைகளை நிறையவே கூறி இருந்தார். அந்த மலைகளிலிருந்து தான் நைல் நதியே தோன்றியது என்பது அவரது வியாக்கியானம். இதையெல்லாம் படித்து மகிழ்ந்திருந்த ஸ்டான்லி இருண்ட கண்டமான ஆப்பிரிக்காவில் ஆல்பெர்ட் ஏரிக் கரையோரம் நடந்து கொண்டிருந்தார்.
தூரத்தில் ஆகாயத்தில் ஒரே மேக மூட்டம். திடீரென்று அந்த மேகங்கள் சற்று கலைந்து விலகவே அவருக்கு பிரமிக்க வைக்கும் மலைச் சிகரங்கள் கண்ணுக்குத் தெரிந்தன. பிரமித்துப் போனார் அவர். இதுவரை உலகினர் யாரும் அறியாத ருவென்ஜோரி (RUWENZORI)
மலையைக் கண்டு மகிழ்ந்த அவர் உலகத்திற்கு இது பற்றி முதன் முதலாக அறிவித்தார்.
ஆப்பிரிக்காவின் பழங்குடியினரின் மொழியில் உள்ள ருவென்ஜோரி என்ற வார்த்தைக்கு ‘மழையை உருவாக்குபவர்’ என்று அர்த்தம். உண்மை தான், கொட்டு கொட்டென்று கொட்டிய மழையினால் அற்புதமான ஆப்பிரிக்க காடுகள் உருவாகியிருந்தன.
ஹென்றியைத் தொடர்ந்து பின்னால் 1906ம் ஆண்டு இத்தாலியில் அப்ருஜ்ஜியின் டியூக்காக இருந்த ல்யூகி அமடியோ டி சவோயா தைரியமாகத் தன் குழுவினருடன் ருவென்ஜோரி மலையில் ஏறினார். அந்த மலைத்தொடரை வரைபடமாக முதன் முதலாக வரைந்தார்.
ஜைரே- உகாண்டா எல்லையில் இருந்த இந்த மலைத்தொடரில் 16000 அடி உயரமுள்ள ஒன்பது சிகரங்கள் இருந்தன. அதிக உயரமுள்ள மலை 16736 அடி கொண்டதாகும். வருடத்திற்கு முன்னூறு நாட்கள் இந்த மலைச்சிகரங்கள் யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்திருக்கும்!
மீதி நாட்களில் அதிர்ஷ்டம் உள்ளவர்கள் இதைப் பார்ப்பார்கள்.
ருவென்ஜோரி மலைத்தொடர் 75 மைல் நீளமும் 30 மைல் அகலமும் உள்ளது.
இது எரிமலையினால் உண்டான மலை அல்ல. இருபது லட்சம் வருடங்களுக்கு முன்னால் பாறையினால் உருவான மலையாகும்.
ஆறரை அடி உயரமுள்ள கோரைப்புல்களின் வழியே யானைகள் வழியை உருவாக்கிச் செல்லும்.
பாலூட்டி விலங்குகளின் ஒன்றான ஹைரக்ஸ் (HYRAX) என்ற விலங்கை இங்கு காணலாம். பார்ப்பதற்கு முயல் போல இருக்கும் இது பன்றியைப் போல குரல் கொடுக்கும். 7000 அடி உயரத்தில் ருவென்ஜோரியின் ஆதி மிருகமான இது காணப்படுகிறது.
ஐந்து அங்குல நீளமே உள்ள மூன்று கொம்புள்ள பச்சோந்தி இங்கு மட்டுமே காணப்படுகிறது.
தாவர வகைகளில் அரிதான லொபிலியா (LOBELIA) 20 அடி உயரம் வரை வளர்ந்து பார்ப்பவரை மலைக்க வைக்கும்.
ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் இயற்கை ஆர்வலர் ஒருவர் ஏழு கிலோ எடையுள்ள லொபிலியாவை வெட்டவே அதைப் பார்த்த ஆதிவாசிகள் அதைத் தொடக்கூட மறுத்து விட்டனர். அது முடுலும்பு (MUDULUMBU) என்று கூறிய அவர்கள் அதைத் தொட்டால் மரணம் நிச்சயம் என்றனர்.
ருவென்ஜோரி மலைத் தொடரில் உள்ள ஒரு 16042 அடி உயரமுள்ள ஒரு சிகரமானது அதை 19ம் நூற்றாண்டில் ஆய்வு செய்த ஆங்கிலேயரான ஜான் ஹானிங் ஸ்பெக் (JOHN HANNING SPEKE) பெயரால் மவுண்ட் ஸ்பெக் என்று அழைக்கப்படுகிறது.
எப்போதும் மேகத்தால் மறைக்கப்பட்டு மிக அரிதாகவே காணப்படும் ருவென்ஜோரி மலைத் தொடர் உலகில் உள்ள அதிசய மலைகளில் ஒன்றாகும்!
அதிர்ஷ்டம் உள்ளவர்கள் இதை இன்றும் பார்க்கிறார்கள் அது மேகமூட்டத்திலிருந்து வெளியே வந்து தோற்றமளிக்கும் போது!
வசிஷ்டரின் பேரர்; சக்திக்கும் அதஷ்யந்தி என்ற பெண்ணுக்கும் பிறந்த ரிஷி. யமுனை நதியைக் கடக்க சத்யவதி என்ற படகோட்டி உதவியபோது அவள் மீது தீராக்காதல் கொண்டார் ; அதன் விளைவாகப் பிறந்தவரே மஹாபாரதத்தை எழுதிய வியாச மகரிஷி; சத்யவதியின் கன்னித்தன்மை போகாது, நீங்காது என்றும் பராசரர் வரம் அளித்தார்.
மஹாபாரதத்தில் ஜாதிவிட்டு ஜாதியில் கலப்பு மணம் செய்ததும் கடத்தல் திருமணம் செய்ததும் பல கதைகளில் வருகிறது. . இது தவிர பெண்களுக்கு சுயம்வரம் மூலம் கணவனைத் தெரிந்தெடுக்கும் சுதந்திர உரிமையும் இருந்தது.
****
சத்யவதி
இந்த மீனவப் பெண்ணின் வேறு பெயர்கள்- மத்ஸ்ய கந்தா /மீனின் நாற்றம்; யோஜனகந்தா – தொலைதூரம் நாறும் பெண்மணி !
உபரிசாரன் என்ற மன்னனுக்கும் அத்ரிகா என்ற தேவ லோக அழகிக்கும் பிறந்த பேரழகி; ஆனால் தசராஜா என்ற மீனவனால் வளர்க்கப்பட்டாள்; சந்தனு மஹாராஜனுக்கு படகோட்டியபோது யமுனை நதிக்கரையில் காதல் தீ மூண்டது; அவளை மணக்க , சந்தனுவுக்கு காதல் பைத்தியம் பிடித்தது. திருமணம் செய்ய விரும்பியபோது எனக்குப் பிறக்கும் மகன்தான் நாட்டை ஆளவேண்டும் என்று நிபந்தனை போட்டாள்; உண்மையான தகுதி சந்தனுவின் புதல்வன் தேவ விரதனுக்கு இருந்தது; தந்தையின் காதல் பைத்தியத்தையும் சத்யவதியின் குடும்ப நிபந்தனையையும் அறிந்த தேவ விரதன் நான் வாழ் நாள் முழுதும் பிரம்மச்சர்யம் அனுஷ்டிப்பேன்; எனக்கோ இனி வரும் என் சந்ததிக்கோ நாடாளும் உரிமை வேண்டாம் என்று சபதம் செய்தார். ஈரேழு உலகமும் அந்த மகத்தான தியாகத்தைக் கண்டு பீஷ்ம பீஷ்ம என்று ஆனந்தக் கூச்சலிட்டனர். அதி பயங்கர அற்புதம் என்று அந்தச் சொல்லுக்குப் பொருள். அதிலிருந்து அவருக்குப் பீஷ்மர் என்ற பெயரே நிலைத்தது .
சத்யவதிக்கு விசித்திர வீரியன், சித்ராங்கதன் என்ற இரண்டு புதல்வர்கள் பிறந்தனர்; இருவரும் குழந்தை இல்லாமல் இறந்தனர். அந்தக் காலத்தில் வம்ச விருத்திக்காக மற்றவர்களுடன் குழந்தைபெற்று ராஜ்யத்தை நடத்தும் வழக்கம் இருந்தது. அதன்படி விசித்திர வீர்யனின் மனைவி அம்பாலிகா மற்றும் அம்பிகா மூலம் பாண்டு திருதராஷ்ட்ரன் பிறந்தனர் ;ராஜ மாதாவாக காலம் கடத்திய சத்யவதி, வானப்பிரஸ்த வாழ்க்கைக்காக அம்பிகா, அம்பாலிகாவுடன் கானகம் சென்று உயிர்நீத்தார்
SATYAVATI
Smelly fisher woman; though born to King Uparichara and Apsaras beauty Adrika, she was brought up by Fishermen leader Dashraja. Though terribly smelly, she was a beauty. When she helped King Shantanu, to cross River Yamuna Shantanu madly fell in love and wanted to marry her. Like any clever woman, she put a condition that her son only must rule the kingdom. Devavrata, Shantanu’s son was the legal heir; Knowing his father’s predicament he declared publicly that he would never marry and remain a Brahmachari. Whole world was wonder struck on hearing his vow; they shouted in ecstasy Bhishma! Bhishma! Meaning Terrific, Wonderful vow!
Satyavati gave birth to two sons Vichitraveeya and Chitrangatha; both died without children. In those days queens or princesses are allowed to produce children through Brahmins or Rishis just to continue the Vamsa/lineage. Thus Ambalika gave birth to Pandu and Ambika to Dhritarashtra through Vyasa.
Satyavati was Rajamata for a long time and went to forest with Ambika and Ambalika to spend her last days.
****
பாண்டு
பஞ்ச பாண்டவர்களின் தந்தை; விசித்திர வீர்யன் இறந்த பிறகு அவருடைய மனைவி அம்பாலிகாவுக்கும் வியாசருக்கும் பிறந்தவர் . தாத்தா சந்தனுவுக்குப் பின்னர் ஹஸ்தினாபுரத்தை ஆண்டார்; குந்தி, மாத்ரி என்ற இருவரை மணந்து காலம் கடத்துகையில் காட்டில் மான் தோல் அணிந்த கிண்டம ரிஷியையையும் அவரது மனைவியையும் தவறுதலாகக் கொன்றார்; தன்னைப்போல கலவி இன்பம் அனுபவித்தால் அவர் இறந்துவிடுவார் என்று கிண்டம ரிஷி சபித்தார். இதனால் வருத்தமுற்ற பாண்டு கானக வாழ்க்கையை நடத்துவதற்கு காட்டிற்குச் சென்றார். பிராமண ரிஷிகள் மூலம் அவர்கள் இருவரும் குழந்தை பெற்று வம்ஸத்தை விருத்தி செய்யவேண்டும் என்று பாண்டு சொன்னபோது குந்திக்குத் துர்வாச முனிவர் அளித்த வரங்கள் நினைவுக்கு வந்தன அந்த மந்திரம் மூலம் யமன், வாயு, இந்திரன் ஆகியோரை வரவழைத்து அவர்கள் மூலம் தர்மன் என்னும் யுதிஷ்டிரன் பீமன், அர்ஜுனன் ஆகியோரைப் பெற்றாள்; மாத்ரிக்கும் மந்திரத்தைச் சொல்லித் தரவே அவள், அஸ்வினி குமாரர் என்ற இரட்டையர் மூலம் நகுல சகாதேவன் என்னும் இரட்டையரைப் பெற்றாள் .இதற்குப் பின்னர் ஒரு நாள் மாத்ரியை நெருங்கி இன்பம் துய்க்க முயன்றபோது கிண்டம ரிஷியின் சாபத்தை மாத்ரி நினைவுபடுத்தியும் கூட பாண்டு கலவியில் ஈடுபடவே இறந்தார்.
PANDU
Born to Ambalika and Vyasa , Pandu ruled Hasinapuram for a long time. During a hunting expedition he killed Kindama Rishi and his wife mistaking them for mating deer. Kindama cursed Pandu that he would also die the moment he attempted to enjoy conjugal bliss.
Pandu felt very sad and went to forest to lead a Vanaprastha life. Kunti and Madri his two wives accompanied him. Both of them used the boon given by Durvasa and produced Five Children – Pandavas Yuthisthira, Bhima, Arjuna, twins Nakula, Sahadeva–through Yama, Vayu, Indra and Ashvini Devas.
One day he wanted to enjoy conjugal bliss with Madri, in spite of her warning about Kindama’s curse. But he did not listen to her and died.
****
திருதராஷ்டிரன்
பிறவியிலேயே குருடர்; அவரை மணந்த ஆப்கானிஸ்தான் நாட்டு காண்டஹார் நகர பெண் காந்தாரியும் வாழ்நாள் முழுதும் கண்களைக் கட்டிக்கொண்டு வாழ்க்கையைத் தியாகம் செய்தார் .அவர்களுக்கு துரியோதணன் முதலிய 99 பிள்ளைகளும் துஸ் சலா என்ற பெண்ணும் பிறந்தனர். அவர்கள் அனைவரும் பொறாமையின் சின்னமாக விளங்கினர் அதைத் தாயும் தந்தையும் தடுக்காததால் குலமே போரில் நாசம் அடைந்தது
அம்பிகாவுக்கும் வியாசருக்கும் பிறந்தவர்; பாண்டு மற்றும் திருதராஷ்டிரன் ஆகிய இருவரில், பாண்டு ராஜ்யத்தை ஆண்டார் ; அந்தகர் என்பதால் திருதராஷ்டிரன் ஆளமுடியவில்லை. தனது இறந்த மகன்களை ஒரு முறையாவது காணவேண்டும் என்று ஆவல் தெரிவித்தவுடன் வியாசர் அவருக்கு ஒரு நொடி நேரம் கண் களைக் கொடுத்தார் போருக்குப் பின்னர், யுதிஷ்டிரர் ஆண்ட காலத்தில், அவருக்கு சகல மரியாதையும் கிடைத்தது. இறுதியில் அந்தக் கால வழக்கப்படி வானப்பிரஸ்தம் என்னும் கானக வாழ்வினை ஏற்க குந்தி, காந்தாரி, திருத ராஷ்டிரன் ஆகிய மூவரும் காட்டுக்குச் சென்றனர்; அங்கு ஏற்பட்ட பயங்கரத் தீயில் தப்பி ஓடாமல் மூவரும் ஒருவர் ஒருவரின் கையைப் பிடித்துக்கொண்டு ஆனந்தமாக தீயில் கருகி உயிர் நீத்தனர். அவர்களுடன் சென்ற சஞ்சயன் மட்டும் ஒடிப்போய் உயிர்தப்பினார்.
***
Dhritarashtra
Dhritarashtra born to Ambika and Vyasa was blind from his birth. He married Gandhari from Afghanistan and she also lived like a blind folded woman throughout her life. Pandu ruled the kingdom because of his brother’s blindness. Gandhari gave birth to 99 sons and one daughter. All of them were symbol of jealousy. Both Dhritarashtra and Gandhari never corrected their mistakes and thus they brought their own destruction in the Mahabharata war. After the war he wanted to see his dead sons. Vyasa gave him momentary eyesight to see Duryodhana and his brothers. After the war, Yuthisthira ruled Hastinapura for 36 years. Both Gandhari and Dhritarashtra were looked after well. When they were very old accompanied by Kunti they went to the forest for Vanaprasta life. There they died in big forest fire. They joined hands with one another and died happily in the roaring fire. Sanjaya escaped from the forest fire.
துஷ்சாசனன்
****
துஷ்சாசனன்
துரியோதண சகோதரர்களில் மூத்தவர்; சகுனி, கர்ணனுடன் சேர்ந்து பாண்டவர்களை எதிரிகளாகப்ப் பாவித்தார் ; சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்களின் மனைவியான திரெளபதியின் புடவையை சபையில் உருவ முயன்றார் ; திரெளபதியைக் கண்ணன் காப்பாற்றினார். துரியோதனன் தோல்வியில் துவண்டபோது தற்கொலை செய்துகொள்ள இருந்ததைத் தடுத்தார். மகாபாரத யுத்தத்தில் பீமன் அவரைக் கொடுரமாகக் கொன்றார். துஷ்சாசனனின் கையைப் பிய்த்து அதனாலேயே அடித்துக்கொன்று இருதயத்தைப் பிடுங்கி எறிந்தார். ஒரு பெண்ணின் மீது பட்ட துஷ்சாசனனின் கரம் அவ்வளவு சித்திரவதைக்கு உள்ளானது!!
DUSHASANA
Dushasan -Eldest of the Gandhari’s sons. They were called Kauravas. With the bad company of Shakuni , he spoiled all peace attempts between the Kauravas and Pandavas. He dragged Draupadi, wife of five Pandavas in the assembly and publicly disrobed her. But Lord Krishna with his magical power made her garment a never ending longer and longer garment. In the war Bhima cut that hand and with that hand beat him to death. He used the same hand to pluck out his hearth and threw I out. It served as a lesson to trouble makers
துரியோதன
,நகுல, சஹாதேவ
To be continued………………………
Tags- Hinduism through 500 Pictures , Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம், கற்போம்-13, வயங் பொம்மலாலட்டம், மகாபாரதம் , பராசர, சத்யவதி, வேத வியாச, திருத ராஷ்ட்ர, பாண்டு, , நகுல, சஹாதேவ ,கர்ணன், பஞ்ச பாண்டவர்கள் , குந்தி
FOLLOWING TWO BOOKS ARE JUST RELEASED BY PUSTAKA.CO.IN
THE ABOVE PUBLISHER HAS RELEASED MY 153 BOOKS SO FAR.
I HAVE PUBLISHED TW0 MORE NEW BOOKS,
ABOUT THE BOOK AND THE AUTHOR
Title – Sayings of Great Saints: From Bhartruhari to Vidura
(also Chanakya, Confucius, Kabir, Mira Bhai, Tulsidas, Tyagaraja)
Author – London Swaminathan (Santanam Swaminathan)
Language- English
Published – October 2025
Subject – Culture
xxx
AUTHOR’S PROFILE
Santanam swaminathan (London swaminathan)
Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)
Higher Diploma in French and Sanskrit
DOB 6-11-1948
Work Experience- Now retired.
Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,
BBC Tamil Producer in London 1987-1991,
Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,
Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.
Living with his wife and two sons in London from 1987.
xxx
Blog Details
tamilandvedas.com
swamiindology.blogspot.com
xxx
Contact Details
swami_48@yahoo.com
swaminathan.santanam@gmail.com
Mobile Number in London
07951 370 697
Published Works
Over 10,000 articles in English and Tamil and over 150 Tamil and English Books.
Visited 16 Countries
India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malaysia, Singapore, Italy and Greece
*****
Contents
1.Beautiful Quotations on Upanishads
2.Ma Anandamayi’s Quotations
3.Tiru Valluvar’s Sayings!
4.Sanskrit Quotations from Niti Vakyamritam
5.Quotations from Rabindranath Tagore
6.Sayings from Arthasastra of Chanakya
7.More Maxims of Chanakya
8.Gandhi’s Quotations on Hinduism
9.Sayings of Confucius
10.Quotes from Bhartruhari’s Niti Sataka
11.More Quotations on Guru!
12.Quotations from Garuda Purana
13. Quotations on Vedic God Varuna
14. Quotations from Vidura Neeti
15.Saint Purandaradasa’s Quotations
16. Saint Mirabai’s Quotes
17.Quotations from Saint Tyagaraja Keertanas
18.Sayings of Tulsidas
19.Quotes by Jawaharlal Nehru
20. Tamil Quotes on Wisdom and Knowledge
21.Saint Kabir’s Quotations
22.Quotations on Mind
***
Foreword
One more quotation book! Quotation books are many, but each one is unique. This is my second quotation book in English. I posted sayings of great people in my blogs in monthly calendars. I covered mostly Hindu saints and poets. This time I included Chinese philosopher Confucius also. I have covered certain topics such as Guru, wisdom and mind. Vedas and Upanishads are also used.
These books would help public speakers, writers and students. Any man who seeks knowledge from Hindu scriptures would also find it useful.
I have included 22 topics in this book.
For Tamil readers ,I have already published two quotations books in Tamil.
Title – காளிதாசன் நூல்களிலும் சங்க இலக்கியத்திலும்
அற்புத ஒற்றுமை!
Author – London Swaminathan (Santanam Swaminathan)
Language- Tamil
Published – October 2025
Subject – Literature
xxx
AUTHOR’S PROFILE
Santanam swaminathan (London swaminathan)
Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)
Higher Diploma in French and Sanskrit
DOB 6-11-1948
Work Experience- Now retired.
Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,
BBC Tamil Producer in London 1987-1991,
Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,
Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.
Living with his wife and two sons in London from 1987.
xxx
Blog Details
tamilandvedas.com
swamiindology.blogspot.com
xxx
Contact Details
swami_48@yahoo.com
swaminathan.santanam@gmail.com
Mobile Number in London
07951 370 697
Published Works
Over 9500 articles in English and Tamil and over 150 Tamil and English Books.
Visited 16 Countries
India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malaysia, Singapore, Italy and Greece
*****
பொருளடக்கம்
காளிதாசன் நூல்களிலும் சங்க இலக்கியத்திலும்
அற்புத ஒற்றுமை! BOOK TITLE
1.சங்க இலக்கியத்தில் பிள்ளையார், கொழுக்கட்டை, மோதகம்!
2 காளிதாசன் நூல்களிலும் சங்க இலக்கியத்திலும் கடவுள் வாழ்த்து
3. நற்றிணையில் விஷ்ணு பற்றி கடவுள் வாழ்த்து
4.சங்க இலக்கியத்தில், காளிதாசன் நூல்களில் சூரியன் வழிபாடு-1
5.சூரியன் வழிபாடு-2
6.சூரியன் வழிபாடு-3
7.சூரிய எப்படி ஹீலியோஸ் என்று மாறியது?
8.காளிதாசன் காவியங்களில் மஹா விஷ்ணு; சங்க இலக்கியத்துடன் ஒப்பீடு
9. ராமனும் கடல், ராவணனும் கடல்!
10. விஷ்ணு ! சொல்லினுள் வாய்மை நீ, அறத்தினுள் அன்பு நீ !
11. விஷ்ணு அவதாரங்கள்!
12.காளிதாசன் காவியங்களில் கொடி, வாகனம்!
13. ஆதி சேஷன், பிரம்மா!
14.காளிதாசன் காவியங்களிலும் சங்கத் தமிழ் நூல்களிலும் பிரம்மா!
15.காளிதாசன் காவியங்களில் இந்திரன்!
16.இந்திரன் ஒப்பீடு –2
17.இந்திரன் ஒப்பீடு! -3
18.சங்க இலக்கியத்திலும் காளிதாசன் நூல்களிலும் உமா
19. பிறை வழிபாடு
20 .காளிதாசன் நூல்களிலும் சங்கத் தமிழ் நூல்களிலும் சங்கீதம் -1
21.சங்கீதம் –2
22. சங்கீதம்—3
23. அவுணர்கள், அரக்கர்கள் -Part 1
24.அசுரர்கள், ராக்ஷஸர்கள் –2
25. சுராங்கனி, அசுரர்கள், ராக்ஷஸர்கள், அணங்கு –3
26.சங்க இலக்கியத்தில் தர்ம, அர்த்த, காம மோக்ஷ!
—SUBHAM–
நூல் அட்டையில் சிவபெருமான் படம் உள்ளது
முன்னுரை
இந்து மதக் கடவுள்களான சிவன், விஷ்ணு, பிரம்மா , இந்திரன் முதலியோர் குறித்து சங்க இலக்கிய நூல்களும் காளிதாசனின் ஏழு நூல்களும் ஒருமித்த குரலில் பேசுகின்றன என்று நான் எழுதிய கட்டுரைத் தொடர்களின் தொகுப்பே இந்த நூல் . முருகன் பற்றியும் மன்மதன் பற்றியும் ஏற்கனவே வெளியான நூலில் எழுதிவிட்டதால் இங்கே சேர்க்கவில்லை. அதே போல இமய மலை பற்றி சங்க இலக்கியமும் காளிதாசனும் என்ன சொன்னார்கள் என்பதையும் வேறு ஒரு நூலில் கொடுத்துவிட்டேன் . அசுரர்கள், அணங்குகள் பற்றியும் கூட இரு இலக்கியங்களும் ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்டுள்ளன; சங்கீதம் பற்றியும் ஒரே அணுகுமுறை உள்ளது; அதையும் இந்த நூலில் காணலாம். இமயம் முதல் குமரி வரை ஒன்று என்ற கருத்து சங்க காலத்துக்கும் முன்னரே நிலவியதையும் இக்கட்டுரைகள் மூலம் உய்த்து உணரலாம் . கடவுளரின் கொடிகள், வாஹனங்கள் பற்றியும் கூட அவைகள் பேசுகின்றன. ஆகவே இந்துமத்தின் புராண, இதிஹாசங்கள் தமிழர்களுக்கு அத்துப்படி என்பதை என்னுடைய ஆங்கில, தமிழ் நூல்களை படிப்போர் உறுதிபட அறியலாம்.
கடவுள் தொடர்பில்லாத இயற்கை வருணனை, பெண்கள் வருணனை, உவமைகள் முதலிய விஷயங்களை நான் பல நூல்களில் கொடுத்துள்ளேன்; இந்த நூலில் கடவுள் வாழ்த்து முதல் அரக்கர்கள் அழிவு வரை காணலாம்.
வெள்ளைக்காரன் வந்துதான் இந்தியா என்ற முழுத் தோற்றத்தை நமக்கு கற்றுக் கொடுத்தான் என்று உளறும் அரைவேக்காடுகளுக்கு, சான்றுகளுடன் பதில் தருவதற்கு இந்த நூல் உதவும் என்பதில் ஐயமில்லை.
1.KALIDASA’S SIMILES IN SANGAM TAMIL LITERATURE: NEW CLUE TO FIX HIS AGE
2.சங்கத் தமிழ் நூல்களில் காளிதாசன் உவமைகள்
இவை இரண்டும் முன்னரே புஸ்தக.காம் வெளியிட்ட என்னுடைய நூல்கள் ஆகும். இமயமலை பற்றி பழமொழிகள் தொடர்பான என்னுடைய ஆங்கில நூலில் ஒரு விரிவான பகுதியைச் சேர்த்துள்ளேன்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Akananuru wonders continued……………
127
அகநானூறு அதிசயங்கள்
Perumpanatruppadai, one of the 18 major books of Sangam age described the vegetarian food available in a Brahmins house. That shows Brahmins have been vegetarians for at least 2000 years. Half baked Dravidians and Marxists are spreading a lie that vegetarianism came to Tamil Nadu from Jainism. It is true that Jains are very good vegetarians even today. But Brahmins have been vegetarians even before that. Lord Krishna explained what is Sattwik (good food for a devotee) food in Bhagavad Gita.
More over we never see Gautama Buddha or Mahavira in 30,000 lines in Sangam literature. The ungrammatical one line or two lined Brahmi inscriptions with Prakrit words show that Jain ascetics have just entered Tamil Nadu. Only in Post Sangam Tamil epic Silappadikaram we read more about Jains. Another proof is Tamils never stopped killing each other in the name of heroism. Wars and destructions continued according to Sangam literature. Killing people is not approved in Jainism and Buddhism.
***
Akam verse 37 gives information about what farmers in the villages had as food. It is mostly vegetarian food. They drank toddy a lot. they plucked parrot beak shaped mangoes and placed them in the mud pot. When there was a good brezze from the south they drank the sour liquid that came from the mangoes. They used cups made up of palm leaves. Then they consumed rice gruel that was prepared in boiled milk with horse gram and moong dhal.
Oh Lord Skanda! Save my daughter who eloped with a man
தெய்வத்திற்குப் (to the deity) பரா அயது (pray; praarthi )
In Akam verse 35, a mother is praying to Lord Muruga (Skanda) to save her daughter who ran away with a man.
Here we get a few interesting points.
The Tamil word for prayer is in English too!
Praarthi in Sanskrit is corrupted in English as pray . in Tamil the word for pray is PARAA AYA; closer to English word ‘Pray’.
Another interesting point is the description of the arid land (Paalai in Tamil) by poet Kudavayil Keeraththanaar.
In that land, the Maravar community sacrifice a lamb or goat, drink toddy and dance beating the kettle drum in front of a hero stone. The hero stone is erected with the inscribed name of a hero who was killed in recovering the cows from the enemy. The stone has peacock feathers. Maravas worshipped it This is how Hindus start a war which is in Mahabharata and Rig Veda. They invade a country after stealing cows from enemy territory.
So not only we found Sanskrit Praarthana as Paraaya in Tami but also Stealing cows from the enemy territory. it is called “Aa nirai Kavarthal and Aa Nirai Meettal” in Tamil.
The third interesting point is mother praying to Lord Muruga in the house. Actually Muruga is mentioned only by the commentator. The commentators take this liberty, based on similar poems.
Another interesting point is historical details in the poem. The poet says that the eloped girl had very dark hair like the dark sands of Pennai River in the village Kodungkaal ruled by Malaiya maan Tirumudikkaari of Tirukkovilur.
The last interesting point the mother wishes that the man must adorn her daughter with flowers and keep her face in his bosom so that she sleeps happily.
It is interesting to see so much historical and geographical information used in a simple love poem.
ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்,
வான்தோய் இஞ்சி நன்னகர் புலம்பத்-
தனிமணி இரட்டும் தாளுடைக் கடிகை
நுழைநுதி நெடுவேல், குறும்படை மழவர்
முனைஆத் தந்து முரம்பின் வீழ்த்த 5
வில்ஏர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல்ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்;
நடுகல் பீலி சூட்டித்; துடிப்படுத்துத்,
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்
போக்குஅருங் கவலைய புலவுநாறு அருஞ்சுரம் 10
துணிந்து பிறள் ஆயினள் ஆயினும், அணிந்து அணிந்து,
ஆர்வ நெஞ்சமொடு ஆய்நலன் அளைஇத், தன்
மார்பு துணையாகத் துயிற்றுக தில்ல-
துஞ்சா முழவிற் கோவற் கோமான்
நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்துறை, 15
பெண்ணையம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும்
நெறிஇருங் கதுப்பின்என் பேதைக்கு,
அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே! –Akanaanuuru verse 35.
My old article
Krishna’s Restaurant in Dwaraka – Hot Satwic Food Sold!
உலகமே கண்டிராத ஒரு அதிசய ஆற்றலைக் கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பார்த்து உலகமே அதிசயித்தது.
அந்தப் பெண்ணின் பெயர் ஆஞ்சலிக் காடின்.
பிரான்ஸ் நாட்டில் போவிக்னி (BOUVIGNY) என்ற கிராமத்தில் 1832ம் ஆண்டு அந்தப் பெண் பிறந்தாள்.
1846ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி அவளுக்கு 14 வயது இருக்கும் போது ஒரு அதிசய சம்பவம் நடந்தது.
மற்ற பெண்களுடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தில் ஓக் மரத்தினால் செய்யப்பட்ட சட்டம் ஒன்றில் பட்டு க்ளவ்ஸ்களை அவள் நெய்து கொண்டிருந்தாள்.
திடீரென்று உயிர் பெற்றது போல அந்தச் சட்டம் மேலும் கீழும் குதிக்க ஆரம்பித்தது. அதை நிறுத்தப் பார்த்தார்கள் முடியவில்லை. அந்தச் சட்டத்தில் இருந்த ஒரு உருளை திடீரென விடுபட்டுப் பறந்து சற்று தூரத்தில் போய் விழுந்தது. அலறி அடித்துக் கொண்டு ஒவென்று கத்தியவாறே பெண்கள் அங்கிருந்து ஓடினர்.
உடனே அந்த சட்டம் பழைய நிலைக்கு வந்தது. பெண்கள் அருகே வந்தனர். மறுபடியும் ஒரு ஆட்டம்!
தொடர்ந்து அலறல். பெண்களின் ஓட்டம். இது பல முறை நடந்தது. அனைவரும் திகைத்தனர்.
பின்னர் தான் அவர்கள் ஒரு விஷயத்தைக் கவனித்தனர்.
ஆஞ்சலிக் அந்த சட்டத்தை நெருங்கும் போது தான் அது ஆட ஆரம்பிக்கிறது என்றும் அவள் நகர்ந்தால் அது தனது இடத்தில் அமர்ந்து விடுகிறது என்றும் அவர்கள் கண்டுபிடித்தனர்.
ஆஞ்சலிக்கின் வீட்டார் அரண்டு போயினர்.
தங்கள் பெண்ணுக்கு பேய் பிடித்திருக்கிறது என்று சந்தேகப்பட்ட அவர்கள் ஆஞ்சலிக்கை உள்ளூர் சர்ச்சுக்கு அழைத்துச் சென்றனர் – பேயை ஒட்ட!
சர்ச்சில் இருந்த பாதிரியார் அவளை ஒரு மருத்துவரிடமும் காண்பிக்குமாறு ஆலோசனை கூறவே பிரபல மருத்துவரான டாக்டர் டாஞ்சோவிடம் (Dr Tanchou) அவளை அழைத்துச் சென்றனர்.
இப்போது அவள் சக்தி இன்னும் வீரியம் கொண்டது.
இந்தச் சம்பவம் அனைத்து செய்தித்தாள்களிலும் வரவே பிரான்ஸே அல்லோலகல்லோலப்பட்டது.
அவள் அருகே சென்றவர்களுக்கும் ஒரு எலக்ட்ரிக் ஷாக் அனுபவம் கிடைத்தது. நேராக இருக்கும் ஊசி அவள் அருகே வந்தால் ஆட ஆரம்பித்தது.
டாக்டர் டாஞ்சோவும் அவளது பெற்றோரும் அவளை பாரிஸில் உள்ள பாரிஸ் அகாடமி ஆப் ஸயின்ஸஸுக்கு அழைத்துச் சென்றனர்.
பிரான்ஸ் நாட்டின் பிரபல விஞ்ஞானியும், அரசியல்வாதியும், வானவியல் நிபுணருமான பிராங்கோயிஸ் அராகோ (Francois Arago) அவளைத் தன் சோதனைச்சாலைக்கு அழைத்துச் சென்றார். இதை ஆராய ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டது.
மேஜையின் மீது பேனா, பேப்பர் உள்ளிட்ட எந்தப் பொருளும் ஆஞ்சலிக் அருகில் வந்தவுடனே நகர்ந்து பறக்க ஆரம்பித்தது.
விஞ்ஞானி அதிசயித்தார். மாலை ஏழு மணியிலிருந்து ஒன்பது மணி வரை இந்த சக்தி தீவிரம் அடையும். அப்போது அவளது உடலின் இடது பக்கம் சூடாக இருக்கும்.
ஒரு நாற்காலியில் அரைபாகத்தில் விஞ்ஞானி உட்கார, அடுத்த அரை பாகத்தில் ஆஞ்சலிக்கை உட்கார அவர் அழைத்தார். அவள் உட்கார்ந்தவுடன், அவ்வளவு தான், அவரைத் தள்ளி விட்டு நாற்காலி நகர்ந்தது. இப்படி ஒரு சக்தி அவளிடம் இருக்கிறது என்பதை அராகோ உறுதிப் படுத்தினார்.
பத்து வாரங்கள் இந்த மின்சக்தி அவள் உடலில் இருந்தது. பின்னர் அவளை விட்டு அகன்றது.
அவள் பூப்புப் பருவம் அடைவதை ஒட்டி இந்த சக்தி அவள் உடலில் புகுந்திருக்குமோ என்ற ஊகத்தை ஒருவர் கிளப்பினார்.
ஆனால் யாராலும் காரணம் கண்டுபிடிக்க முடியாத ஒரு அபூர்வ சக்தி அவளிடம் வந்தது; அது தானே போனது! உலகில் இப்படி ஒரு விவரிக்க முடியாத அதிசய மின்சக்தி கொண்டிருந்த பெண் ஆஞ்சலிக் ஒருத்தி தான் என்பதை வரலாறு கூறுகிறது!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இன்றைய படங்கள் பராசர, சத்யவதி, வேத வியாச, திருத ராஷ்ட்ர , பாண்டு
வேத வியாச,
பராசர,
நேற்று வெளியான படங்கள் தொடர்பான மஹாபாரத கதாபாத்திரங்களைச் சுருக்கமாகக் காண்போம் :க்ருப, த்ருஷ்டத்யும்ன, திரெளபதி, சகுனி, கடோத்கச, சிகண்டி.
இந்தோனேஷியா வயங் பொம்மலாட்டம் WAYANG PUPPET SHOW FROM INDONESIA CONTINUED…………………
Part 12
KRIPACHARYA –Twin sister’s name KRIPI
Shantanu found both in a forest and brought them up in Hastinapura.
Kripa learnt warfare along with Shantanu. After the war he accompanied Aswaththama and set fire to Pandava camps killing all the sons of Draupadi.
கிருபன் , கிருபி
இருவரும் காட்டில் கைவிடப்பட்ட இரட்டையர் ; அந்த ஆண், பெண் குழந்தைகளை சந்தனு எடுத்துவந்து ஹஸ்தினாபுரத்தில் வளர்த்தான் கிருபன் சந்தனுவுடன் சேர்ந்து போர்க்கலையைப் பயின்றான்; கெளரவ சேனையில் பதினோரு தளபதிகளில் ஒருவனாக நின்று போரிட்டுப் பல வெற்றிகளை பெற்றான் ; இறுதியில் அஸ்வத்தாமனுடன் சேர்ந்து பாண்டவர் கூடாரத்துக்குத் தீ வைத்து திரெளபதியின் புதல்வர்களை அழித்தான்.
***
DRAUPADI-her other names – PANCHALI, YAJNASENI
Drupada of Paanchaala (Punjab) performed a yagna and Draupadi and her bother Dhristhtadyumna were born in Yaga fire.
Draupadi married all the five Pandava brothers. When Yuthisthira lost her in a game of dice Duryodhana’s brother Dushasana dragged her in open court and pulled the single garment she was wearing. Krishna saved her modesty by making her garment longer and longer through his divine power.
During 13 year stay in the forest, she worked as a servant maid in the palace of king Vrata pf Matsya desa. Her children were killed by Aswaththama at the end of the war. But he ruled as the queen of Hastinapura for 36 years with her husband Yuthisthira. She walked towards Himalaya along with her five husbands and died.
திரெளபதி
பாஞ்சாலி என்றும் யக்ஞ சேணி என்றும் பெயர்கள் . த்ருபத மன்னன் நடத்திய யாகத்தில் சகோதரன் த்ருஷ்டத்யும்னனுடன் தீயில் அவதரித்த பேரழகி; பாண்டவர் ஐவரையும் மணந்தாள் ; சகுனினியின் விஷமத்தால் பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்றபோது திரௌபதியையும் பணயம் வைக்கத் தூண்டினான். யுதிஷ்டிரன் தோற்றுப்போனபோது சபையோர் சொன்ன புத்திமதியைப் புறக்கணித்து திரெளபதியின் புடவையை துசசாசனன் மூலம் அவிழ்த்தனர் கண்ணன் கிருபையால் அவள் புடவை வளரவே கெளரவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை பதிமூன்றாவது ஆண்டு அஞ்ஞாதவாசத்தின்போது மத்ஸ்ய தேச மன்னன் விராடனிடம் சைரந்த்ரி என்ற பணிப்பெண்ணாகப் பணியாற்றினாள் அங்கு அவளைத் துன்புறுத்திய கீசகனை பீமன் வதம் செய்தான். தன்னை அவமத்தித்த துரியோதனின் தொடையைப் பிளந்து ரத்தத்தை எடுத்து கூந்தலில் தடவும்வரை கூந்தலை அலங்கரிக்க மாட்டேன் என்று சபதம் செய்தாள்; அந்த சபதத்தை நிறைவேற்ற பீமன் உதவினான். ஆயினும் போர் முடிந்த நாள் இரவில் அஸ்வத்தாமன் கும்பல் பாண்டவர் கூடாரங்களுக்குத் தீ வைத்ததில் அவளுடைய புத்திரர்கள் அனைவரும் இறந்தனர் . கடைசி காலத்தில் பாண்டவர் ஐவருடன் வடதிசை நோக்கி நடந்து ஒவ்வொருவராக உயிர் நீத்தனர்.
***
DHRISHTADYUMNA
See above for his birth. He was appointed as the supreme commander of the Pandava army. In the war he beheaded Dronacharya. But at the end of war, he was killed in the arson attack of Aswaththama .
த்ருஷ்டத்யும்னன்
திரெளபதியுடன் பிறந்தவன் ;போரில் பாண்டவர் சேனைத் தளபதிகளில் ஒருவனாக இருந்து பல வெற்றிகளைப் பெற்றான் . போரில் துரோணரின் தலையைத் துண்டித்தான்; ஆயினும் அஸ்வத்தாமன் பாண்டவர் கூடாரங்களுக்குத் தீ வைத்ததில் உயிர் இழந்தான்
***
GADOTHKACHA
Ghatotkacha means Pot Headed.
As the head of one of the commanders in the Pandava side in the Kurukshetra war he killed many demons like Alambusha, Alayudha, and many gigantic Asuras. He was specifically called out as the warrior who forced Karna to use his Vasavi Shakti weapon, and courted a hero’s death in the great war.
கடோத்கசன்
கடோத்கசன் என்றால் பானைத் தலையன் என்று பொருள்; பாண்டவர் சேனையில் வீர தீரச் செயல்கள் புரிந்து எதிர்த் தரப்பில் போரிட்ட பல ராக்கதர்களை அழித்தான்; போரில் வீரனாக இறந்தான்.
***
SHAKUNI
Wicked brother of Gandhari, wife of Dhritarsahtra, He was an expert in the game of dice, but was very crafty. His evil influence over Kauravas was one of the reasons of Mahabharata war. Bhisma, Drona and Vidura suggested to make peace with Pandavas. But he and his supporters rejected all peace deals. In the last day of 18 day war, Sahadevan killed him.
சகுனி
காந்தாரியின் சகோதரன்; தாயக் கட்ட சூதாட்டத்தில் வல்லவன். ஆனால் விஷம் நிறைந்த மனத்தினன் . பீஷ்மர், விதுரர் போன்றோர் சொன்ன சமாதான திட்டங்களை துர்யோதனாதிகள் நிராகரித்ததற்கு சகுனி ஒரு காரணம் . இறுதியில் போரில் அவனும் அவனது மகன்களும் ஸஹதேவனால் கொல்லப்பட்டனர்.
***
SHIKANDI
Drupada’s daughter was Shikandini. Through a sex change surgery, he became a male and was called Shikandi. in his previous birth he was Amba who vowed to kill Bhishma. In the ancient Hindu warfare women were not involved, because killing a woman was considered a great sin. in the Mahabharata war Bhisma refused to fight Shikandi saying he was a woman. He was one of the seven commanders of the Pandava army, because he learnt the art of warfare from Drona, he tried to kill Bhishma but unable to pierce his armour. Bhishma did not use any weapons. At Krisna’s suggestion Arjuna stood behind Shikandi and killed Bhisma.
சிகண்டி
த்ருபத மன்னனுக்கு பெண்ணாகப் பிறந்தான் ; செக்ஸ் சேஞ்ச் ஆபரேஷன் மூலம் ஆணாக மாறி துரோணரிடம் போர்க்கலை பயின்றான். பூர்வ ஜன் மத்தில் பீஷ்மரால் அவமானமுற்ற அம்பா, அடுத்த ஜென்மத்தில் பிறந்து பீஷ்மரைக் கொல்வேன் என்று சபதம் செய்திருந்தாள். அந்தக் காலத்தில் இந்துப் பெண்கள் போரில் பங்கேற்கமாட்டார்கள் ஏனெனில் பெண்களைக் கொல்வதை இந்து மதம் அனுமதிக்காது. பீஷ்மரும் சிகண்டி/னி பிறவியில் பெண் என்பதால் அவனுடன் சண்டை போட மாட்டேன் என்று அறிவித்திருந்தார்; ஏழு பாண்டவ தளதிகளில் ஒருவனான சிகண்டி/னி விட்ட அம்புகள் பீஷ்மரின் கவசத்தைத் துளைக்க முடியவில்லை அவன் பெண் என்பதால் பீஷ்மர் ஏதும் செய்யவில்லை; கண்ணன் சொன்னதன் பேரில் அர்ஜுனன் சிகண்டிக்குப் பின்னால் நின்று வஞ்சகமாக பீஷ்மரை வீழ்த்தினான்; அவர் பின்னர் அம்புப் படுக்கையில் இரண்டு மாதம் படுத்திருந்து உயிர்நீத்தார் .போருக்குப்பின்னர் அஸ்வத்தாமன் வைத்த தீயில் எரிந்து இறந்தான் சிகண்டி.
திருத ராஷ்ட்ர
பாண்டு
To be continued……………………..
Tags- Hinduism through 500 Pictures, Tamil and English, படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-12 , சிகண்டி,சகுனி ,கடோத்கசன், திரெளபதி கிருபன் , கிருபி இந்தோனேஷியா, வயங் ,பொம்மலாட்டம் WAYANG PUPPET SHOW FROM INDONESIA
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பகவத் கீதை
மஹாபாரத நூலில் உளது; போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் அருளிய உபதேசம் ; உலகம் முழுதும் உள்ள அறிஞர்கள் கொண்டாடும் நூல். வேதத்தின், உபநிஷதங்களின் சாரத்தை 18 அத்தியாயங்களில் 700 ஸ்லோகங்களில் சம்ஸ்க்ருத மொழியில் கொடுக்கும் அற்புத நூல். அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் ஆகிய மூன்று பிரிவினரும் ஏற்கும் நூல். கர்மயோகம், பக்தியோகம், ஞான யோகம் என்ற மூன்று விஷயங்களை விளக்கும் நன்னூல். இந்து மதத்தின் வற்றாத ஜீவ ஊற்று இது.
BHAGAVAD GITA:
Bhagavad Gita means Divine Song. It is in Sanskrit in the epic Mahabharata It gives the gist of Hindu philosophy in 700 Slokas/couplets n 18 chapters . it deals with Karma, Bhakti, Jnana yogas. Krishna delivered it to Arjuna in the b\attlefield. Alduous Huxley said, “ Gita is one of the clearest and most comprehensive summaries of perennial philosophy ever to have been made.” Gita restates the central teachings of the Upanishads.
***
பக்தி – இறைவனி டத்தில் ஒருவர் காட்டும் எல்லையற்ற அன்பு, நம்பிக்கை பக்தி ஆகும். இதைப் பாடலின் மூலமோ ஆடலின் மூலமோ கவிதைகளின் வாயிலாகவோ வெளிப்படுத்தலாம் . சங்கரர், அருணகிரிநாதர், அபிராமி பட்டர் ஆகியோரின் துதிப்பாடல்கள் பக்திக்கு எடுத்துக் காட்டாகும். சைதன்யர் போன்ற மகான்களின் செயல்களும் பக்திக்கு எடுத்துக்காட்டு. அப்பரின் தேவாரமும் நாரத பக்தி சூத்திரமும் பக்தியில் மூழ்கிய ஒருவரின் நிலையை அழகாக வருணிக்கின்றன.
அப்பர் தேவாரம்
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னம் அவளுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்;
அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தே ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள்
தலைப் பட்டாள் நங்கை தலைவன் றாளே
—–தேவாரம், ஆறாம் திருமுறை, பாடல் 258
பொருள்:-
ஒரு பெண்ணை நினைத்த்ல், அவளைப் பற்றிப் பிதற்றல், அவளுடன் விளையடல், அவளைப் பார்த்தல் (அடிக்கடி), அவளுடன் கிசுகிசு ரஹசியம் பேசல் (மொபைல்போன், பேஸ்புக், ஈ மெயில் மூலம்), அவளுடன் அனுபவிக்க வேண்டியது பற்றி எண்ணுதல்/ கனவு காணுதல், அவைகளை அடைய திட்டமிடல்/ முயற்சி செய்தல், இதன் காரணமாக செய்ய வேண்டிய கடமைகளை மறந்துபோதல் என்ற எட்டு வகைச் செயல்கள் பக்தனின் நிலை ஆகும்
DEVOTION- Extreme love towards God is called Bhakti in Sanskrit. A devotee shows it by singing, dancing, composing verses, serving the devotees etc. The physical and mental state of such a devotee are explained in books like Narada Bhakti Sutra, Bhagavata purana and other devotional verses of Alvars and Nayanmars. One Sanskrit couplet narrates the qualities of a devotee.
श्रीप्रह्राद उवाच
श्रवणं कीर्तनं विष्णो: स्मरणं पादसेवनम् ।
अर्चनं वन्दनं दास्यं सख्यमात्मनिवेदनम् ॥ २३ ॥
इति पुंसार्पिता विष्णौ भक्तिश्चेन्नवलक्षणा ।
क्रियेत भगवत्यद्धा तन्मन्येऽधीतमुत्तमम् ॥ २४ ॥
śrī-prahrāda uvāca
śravaṇaṁ kīrtanaṁ viṣṇoḥ smaraṇaṁ pāda-sevanam
arcanaṁ vandanaṁ dāsyaṁ sakhyam ātma-nivedanam
iti puṁsārpitā viṣṇau bhaktiś cen nava-lakṣaṇā
kriyeta bhagavaty addhā tan manye ’dhītam uttamam
śrī-prahrādaḥ uvāca — Prahlāda Mahārāja said; śravaṇam — hearing; kīrtanam — chanting; viṣṇoḥ — of Lord Viṣṇu (not anyone else); smaraṇam — remembering; pāda-sevanam — serving the feet; arcanam — offering worship (with ṣoḍaśopacāra, the sixteen kinds of paraphernalia); vandanam — offering prayers; dāsyam — becoming the servant; sakhyam — becoming the best friend; ātma-nivedanam — surrendering everything, whatever one has; iti — thus; puṁsā arpitā — offered by the devotee; viṣṇau — unto Lord Viṣṇu (not to anyone else); bhaktiḥ — devotional service; cet — if; nava-lakṣaṇā — possessing nine different processes; kriyeta — one should perform; bhagavati — unto the Supreme Personality of Godhead; addhā — directly or completely; tat — that; manye — I consider; adhītam — learning; uttamam — topmost.-Bhagavatam 7.5.23-24
***
சைதன்யம் – அறிவு கடவுள், தத்துவ ஞானம் ; இத்தகைய உணர்ச்சிகளின் வெளிப்பாடு
CAITANYA – Spirit, Vitality, life.
***
சித் -சத் சித் ஆனந்த = சச்சிதானந்த
உண்மை ஏன்னு கடவுள் (சத்) , சித்( விழிப்புணர்வு , நான் யார் என்ற அறிவு ) ஆனந்த ( உலப்பிலா ஆனந்தம் ; அதாவது இறைவனை உணர்ந்த பேரானந்தம்).
CIT- citta- Consciousness , Mind
***
செளலம்- முடி இறக்குதல்; முதல் தடவை குழந்தைக்கு முடிவெட்டுவது சூடாக்கர்ம என்றும் சொல்லப்படும் ; சூடா என்பது குடுமி. அதை வைத்துவிட்டு சிகையை மழித்தல்; இந்துக்களின் நாற்பது ஸம்ஸ்காரங்களில் ஒன்று.
CAULA- CUUDAAKARMA- The first cutting of the hair on the head of a child, leaving a CUUDAA or lock of hair (sikhaa), the remaining part being shaved.
***
சந்தஸ் – வேதம்; வேதப் பாடல்களின் யாப்பிலக்கணம்
CHANDAS- The Vedas; prosody
***
சதுர்த்தி – அமாவாசை அல்லது பெளர்ணமியை அடுத்துவரும் நாலாவது நாள்/திதி. விநாயகருக்குப் பிரியமான நாள் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி-சங்கடஹர சதுர்த்தி.
CHATURTHY- Fourth Day following New moon day or Full moon day. Sankatahara Chaturthy is the Krishnapaksha Chaturthy when Lord Ganesh is worshipped for removal of obstacles.
***
தட்சிணை – தக்ஷிணா- பூஜை அல்லது வேள்வியை நடத்திக் கொடுத்தவருக்கு வழங்கப்படும் தொகை அல்லது பரிசுப்பொருள்.
DAKSHINAA- Fee or gift or present given to the priest who performed a Puja or Homa .
****
தட்சிணாயணம்-சூரியனின் தென் திசைப்பயணம் – ஆடி மாதம் துவங்கி ஆறு மாதங்கள் தட்சிணாயண காலம்- எனப்படும். உத்தராயண காலம் அதிகம் புண்ணியம் படைத்ததாக கருதப்படுகிறது.
DAKSHINAAYANA- Dakshina means South. Sun’s apparent southward journey time. It is six months from Mid July and Mid January. Uttarayana is from Mid January to Mid July. Uttarayana is considered holier than Daksinayana.
To be continued………………………..
Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL இந்துமத கலைச்சொல் அகராதி, Part 4 , தட்சிணாயணம், Uttarayanam, சந்தஸ், சங்கடஹர சதுர்த்தி.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் (12 10 2025)உலக இந்து செய்திமடல்
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்.
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் மாதம் 12-ம் தேதி 2025-ம் ஆண்டு
****
முதலில் சபரி மலை கோவில் செய்தி
சபரிமலை கோவில் தங்கம் மாயமான விவகாரத்தில் வெளியான இ-மெயில் கடிதத்தால் புதிய திருப்பம்!; கோர்ட் அதிர்ச்சி
சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசத்தின் எடை குறைந்ததாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க, கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது.
சபரிமலை தங்கம் கொள்ளை தொடர்பான விசாரணையை சிறப்பு புலனாய்வு பிரிவு ஆறு வாரங்களுக்குள் முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலின் தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரத்தை எழுப்பி, கேரள சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
சபரிமலை அய்யப்பன் கோவில் தங்கம் மாயமான விவகாரத்தில், ‘தங்கக் கவசம் செப்பனிடும் பணிக்குப் பின், மிச்சமான தங்கத்தை உதவி தேவைப்படும் பெண்ணின் திருமணத்திற்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என, தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி தேவசம் போர்டுக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் தொழிலதிபருக்கும், தேவசம் போர்டு அதிகாரிகளுக்கும் முறைகேட்டில் தொடர்பு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இம்மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் கருவறையின் வாயிலில், இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கவசங்கள், 2019ல் கழற்றப்பட்டு, செப்பனிடுவதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
செப்பனிடும் பூசும் செலவை பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, சென்னையில் உள்ள அவரது ‘ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்’ என்ற நிறுவனத்தில் செப்பனிடும் பணி நடந்தது.
இதற்காக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு கவசங்களை ஒப்படைத்தபோது, அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அதை செப்பனிட்டப் பின், சென்னை நிறுவனம் மீண்டும் ஒப்படைத்தபோது, அதன் எடை 38 கிலோவாக குறைந்திருந்தது.
அதாவது தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில் இருந்து 4.54 கிலோ அளவுக்கு தங்கம் மாயமாகி இருந்தது.
பக்தர்கள் மத்தியில் இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உண்மையை கண்டறிய கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த 2019, ஆக., 11ம் தேதி செப்பனிடப்பட்ட கவசங்களை துவாரபாலகர்கள் சிலைகளுக்கு அணிவித்த பின், தொழிலதிபர் உன்னிகிருஷ்ணனிடம் இருந்து, ‘இ – மெயில்’ வாயிலாக கடிதம் ஒன்று தேவசம் போர்டுக்கு அனுப்பப்பட்டது. அது குறித்த ஆதாரம் கேரள உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், உன்னிகிருஷ்ணன் போத்தி கூறியிருப்பதாவது:
சபரிமலையின் கருவறை கதவு மற்றும் துவாரபாலகர்கள் சிலைகளுக்கு தங்க முலாம் பூசும் பணிகள் முடிந்த நிலையில், என்னிடம் தங்கம் மிச்சம் இருக்கிறது.
உதவி தேவைப்படும் ஒரு பெண்ணின் திருமணத்திற்கு, தேவசம் போர்டு ஒத்துழைப்புடன் அந்த தங்கத்தை பயன்படுத்திக் கொள்ளலாமா? இது தொடர்பாக உங்களது மேலான கருத்துகளை வரவேற்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இதை படித்து பார்த்து கேரள உயர் நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
‘இந்த செயல் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. தேவசம் போர்டு அதிகாரிகளுக்கும், உன்னிகிருஷ்ணனுக்கும் இடையேயான கூட்டு எச்சரிக்கை மணி போல ஒலிக்கிறது.
‘கோவில் சொத்து மீதான புனிதத்தை கெடுத்து, பக்தர்களின் நம்பிக்கைகளுக்கும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது’ என, நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
காணாமல் போனதாக கூறப்பட்ட துவாரபாலகர்கள் தங்கபீடமும், நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் போத்தியின் உதவியாளரிடம் இருந்து மீட்கப்பட்டது.
துவாரபாலகர்கள் தங்கக் கவசம் குறித்த முறைகேடுகள் தொடர்பாக தேவசம் போர்டில் பணியாற்வந்த மூத்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
****
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது..
ஐகோர்ட் மதுரை கிளையில், ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம். மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்காவிற்கு தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையிலுள்ள பிற பகுதிகள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானவை என ஆங்கிலேயர் ஆட்சியின்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
ஹிந்து மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் ராமலிங்கம், ‘பக்ரீத் பண்டிகையையொட்டி கோயிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தர்கா நிர்வாகிகள், முஸ்லிம்கள் முயற்சிக்கின்றனர். தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்,’ என பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்குகளை ஏற்கனவே நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த ஜூன் 24 ல் நீதிபதி ஜெ.நிஷாபானு பிறப்பித்த உத்தரவில் ‘ அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்கிறேன்’ என்றார்.
இதிலிருந்து நீதிபதி எஸ்.ஸ்ரீமதி மாறுபட்டு சில மனுக்களை அனுமதித்தும், சில மனுக்களை தள்ளுபடி செய்தும் ஒரு மனுவை பைசல் செய்தும் உத்தரவிட்டார். இந்த சட்டப் பிரச்னையில் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு தகுந்த உத்தரவு பிறப்பிப்பதற்காக இந்த வழக்கு 3வதாக நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி விஜயகுமார், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அதனைப் பலியிடத் தடை விதித்து உத்தரவிட்டார். அந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும் எனவும் உத்தரவில் கூறியுள்ளார்.
***********************
கோவில் சொத்துக்களை பத்திரப்பதிவு செய்யும் அரசாணைக்கு ஐகோர்ட் தடை
கோவில் சொத்துக்களை பத்திரப்பதிவு செய்யும் வகையில் வெளியான அரசாணைக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது.
சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: கோவில்களுக்கு சொந்தமான பல சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவை நீதிமன்ற உத்தரவுப்படி மீட்கப்பட்டு வருகின்றன. கோவில் சொத்துக்களை பத்திரப் பதிவு செய்யும் வகையில், தமிழக வருவாய்த்துறை, புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பதிவுத்துறையில் பூஜ்ஜியம் மதிப்பில் பதிவேற்றம் செய்ய, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை கொண்ட குழு அமைத்து அரசாணை பிறப்பிக்க, அத்துறைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
பட்டா நிலம், மானிய நிலம், ஊழியம் நிலம் என்ற வகைப்பாடுகளில் கோவில் நிலம் உள்ளது. புது அரசாணை மூலம் கோவில் சொத்துக்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. தமிழக வருவாய்த்துறை, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை, ஹிந்து சமய அறநிலையத்துறை செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.
****
திருப்பதி போல தமிழக கோவில்களில் ஆன்லைன் முன்பதிவு தரிசனம் வசதி; அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழக கோவில்களின் நிலத்தை மீட்க, கோவில் சொத்துக்களில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரிகள், அறிவு ஜீவிகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களை கொண்ட குழுவை அமைக்க வேண்டும்.
கோவில் நில வாடகை, குத்தகை, மக்கள் செலுத்தும் பூஜை கட்டணத்தை ஆன்லைனில் வசூலிக்க வேண்டும். கோவில் நிலம் மற்றும் சொத்துக்களை தனி நபர்களின் பெயருக்கு சாதகமாக மாற்றக்கூடாது.கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. நெரிசல் ஏற்படுகிறது. சபரிமலை, திருப்பதி கோவில்களில் உள்ள தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு முறை மூலம் எவ்வித தொந்தரவும் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்யலாம்.
ஊழியர்கள் பணம் வசூலித்து தரிசனம் செய்ய அனுமதிக்கும் முறைகேடுகளை தவிர்க்கலாம். தமிழகத்தின் முக்கிய கோவில்களில் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆஜரானார். நீதிபதிகள் தமிழக அறநிலையத்துறை செயலர், கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, நவ., 12க்கு ஒத்திவைத்தனர்.
****
அடுத்ததாக ரஜினி காந்த் பயணச் செய்தி
ரஜினிகாந்த் இமயமலை பயணம் – புகைப்படங்கள் வைரல்!
நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணம் மேற்கொண்டது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
நடிகர் ரஜினிகாந்த், தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
, ரஜினிகாந்த் ஒரு வார கால ஆன்மிகப் பயணமாக இமயமலை சென்றுள்ளார். பாபா குகைக்குச் செல்லவுள்ள ரஜினிகாந்த் ஒரு வாரம் அங்குத் தங்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ரிஷிகேஷ் ஆசிரமத்தில் இருந்து ரஜினிகாந்த், பத்ரிநாத் செல்லும் வழியில் எடுக்கப்பட்ட படங்கள், இணையத்தில் வைரலாகி வருகின்றன.
****
சமயபுரம் கோயிலில் பக்தர்களை அவமதித்த பெண் ஊழியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியன் வலியுறுத்தல்!
திருச்சி சமயபுரம் கோயிலில் பக்தர்களை அவமதித்த பெண் ஊழியரை பணிநீக்கம் செய்ய வேண்டுமென இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்காக 100 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், கோயில் பெண் ஊழியர் 400 ரூபாய் கொடுத்தால் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்க முடியும் எனக் கூறி பக்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி வெளியாகி உள்ளதாகத் தெரிவித்தார்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இதுபோன்ற நிர்வாகச் சீர்கெடுகளும், பக்தர்களை மிரட்டும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடைபெறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பக்தியை பணமாக்குவது மட்டுமே அறநிலையத்துறையின் முழு நேர வேலையாக உள்ளது எனக் கூறியுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியன், மன நிம்மதிக்காகக் கோயிலுக்கு வரும் பக்தர்களை கோயில் ஊழியர்கள் அவமதிப்பது என்பது எந்த மாநிலத்திலும் நடக்காத செயல் எனக் கூறியுள்ளார்.
அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எந்தக் கோயில்களிலும் இனி இது போன்ற ஊழல்களும் பக்தர்களின் அவமதிப்பு செயல்களும் நடைபெறக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இந்து பண்டிகையைச் சீர்குலைக்க இத்தனை சதி? – காடேஸ்வரா சுப்ரமணியம்
இந்து பண்டிகையைச் சீர்குலைக்க இத்தனை சதிகளா என்றும், இந்துக்கள் விழிப்புடன் செயல்பட்டு சதிகளை முறியடிக்க வேண்டும் எனவும் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டடுள்ள அறிக்கையில், இனிப்பு மற்றும் பலகாரங்களுக்குக் கட்டுப்பாடுகளை புதிதாக அறிவித்து உணவு கட்டுப்பாட்டுத்துறை மிரட்டுகிறது எனக் கூறியுள்ளார்
இந்துக்களின் பண்டிகையின்போது அரசு அதிகாரிகள் அறிவுரை, எச்சரிக்கை விடுக்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் அரசு பட்டாசு வெடிக்க அறிவித்திருக்கும் கட்டுப்பாடு, தமிழக பட்டாசு உற்பத்தி தொழிலை பாதிக்கும் என்பதை முதலமைச்சர் உணர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க நடக்கும் திட்டமிட்ட சதிகளை முறியடிக்க மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும், தமிழக அரசும் மக்களின் உணர்வுகளை மதித்துச் செயல்பட வேண்டும் எனவும் காடேஸ்வரா சுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
****
அமெரிக்காவில் மேலும் ஒரு மாநிலம் தீபாவளியை விடுமுறை நாளாக அறிவித்தது
கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி விடுமுறை!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி தினம், இனி விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படுவதாக அம்மாகாண கவர்னர் கவின் நியூசம் அறிவித்துள்ளார்.
இது இந்தியாவின் தீபாவளி பண்டிகையை, விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த அமெரிக்காவின் மூன்றாவது மாகாணமாகும்.
ஏற்கனவே பென்சில்வேனியா, கனெடிகட் மாகாணங்கள் தீபாவளியை அரசு விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்திருந்தன.
தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவிக்கும் ஏபி 268 என்ற மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அங்குத் தீபாவளி பொது விடுமுறையாகியுள்ளது.
*****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு அக்டோபர் மாதம் 19 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tags – World Hindu News, 12-10-2025, Gnanamayam, Broadcast, Vaishnavi